-மஸ்கெலியா நிருபர்-
நாட்டில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் அடை மழை காரணமாக, மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட ரிக்காடன் பகுதியில் பாரிய மரம் ஒன்று குடியிருப்பு மீது வீழ்ந்ததில் வீடு முற்றாக சேதமடைந்துள்ளது.
சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

தொடர் மழையால் மண் தளர்வடைந்த நிலையில், வீட்டின் அருகில் இருந்த மரம் வேரோடு சாய்ந்து வீட்டின் மேல் வீழ்ந்துள்ளது.
இதனால் வீட்டின் கூரை, சுவர்கள் மற்றும் வீட்டு உபகரணங்கள் பலத்த சேதமடைந்துள்ளன.
அதிஷ்டவசமாக வீட்டில் இருந்தவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை, என தெரிய வருகின்றது.
