உலகின் மிகச்சிறந்த உணவு நகரங்களுக்கான 2026ஆம் ஆண்டுக்கான புதிய தரவரிசைப் பட்டியலை சர்வதேச பயண சஞ்சிகையான ‘டைம் அவுட்’ வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில் பெரு நாட்டின் கடலோரப் பெருநகரமான லீமா முதலிடத்தைப் பிடித்துள்ளது.
உலகெங்கிலும் உள்ள 150 நகரங்களைச் சேர்ந்த 24,000 குடியிருப்பாளர்களிடம் உணவகங்களின் தரம், மலிவு விலை மற்றும் உணவு கலாசாரம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வின் மூலமே இந்தத் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக இரண்டாவது வருடமாக பேங்கொக் நகரம் இரண்டாவது இடத்தை தக்கவைத்துள்ளது.
பொதுவாக 5 டொலருக்கும் குறைவான விலையில் கிடைக்கக்கூடிய இனிப்பு, காரம், புளிப்பு மற்றும் உவர்ப்பு சுவைகள் நிறைந்த தனித்துவமான தெரு உணவு கலாசாரத்திற்காக இந்த நகரம் பாராட்டப்பட்டுள்ளது.
அதன்படி,
- லீமா, பெரு
- பேங்காக், தாய்லாந்து
- மெக்சிகோ சிட்டி, மெக்சிகோ
- லண்டன், பிரித்தானியா
- பார்சிலோனா, ஸ்பெயின்
- ஹோ சி மின் சிட்டி, வியட்நாம்
- மெல்போர்ன், அவுஸ்திரேலியா
- பெய்ஜிங், சீனா
- ஏதென்ஸ், கிரீஸ்
- லிஸ்பன், போர்த்துகல்
- கேப் டவுன், தென்னாப்பிரிக்கா
- ஒசாகா, ஜப்பான்
- பெங்களூர், இந்தியா
- நேப்பிள்ஸ், இத்தாலி
- நியூயார்க் சிட்டி, அமெரிக்கா
- ஹொங்கொங்
- பியூனஸ் அயர்ஸ், அர்ஜென்டினா
- மார்சேயில், பிரான்ஸ்
- கோபன்ஹேகன், டென்மார்க்
- மெடலின், கொலம்பியா
இந்த பட்டியலில் இந்தியாவிலிருந்து பெங்களூரு நகரம் 13ஆவது இடத்தைப் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.