மஹரகம நகரில் கத்திக்குத்து: ஒருவர் கைது

கொழும்பு மஹரகம நகரில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபரொருவரை கொலை செய்ய முயன்றவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

மஹரகம பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மஹரகம பொதுச் சந்தைக்கு முன்பாக சந்தேகநபர் மற்றுமொருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கியதையடுத்து, விசேட அதிரடிப்படை அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.

கத்திக்குத்து இலக்கான நபர், களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை சந்தேகநபரிடம் இருந்து சில போதை மாத்திரைகள் மற்றும் கூரிய ஆயுதம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹரகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்