# Minnal 24 News > Batticaloa News ## Posts - [கிளிநொச்சியில் கொலை முயற்சி : பாதிக்கப்பட்டவர் கவலைக்கிடமான நிலையில்](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8a%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%af%e0%ae%b1/): -கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி கனகபுரம் வீதியில் நபர் ஒருவரை கும்பல் ஒன்று வாகனத்தால் மோதி கொலை செய்ய முயன்ற நிலையில் பாதிக்கப்பட்டவர் ஆபத்தான நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அந்த வாகனத்திலிருந்து காயத்துடன் காணப்பட்ட நபர் தப்பி ஓடுவதற்கு முயன்று வீதியில் குதித்து ஓடியுள்ளார். இரண்டு தடவைகள் அவர் முயன்று இரண்டாவது தடவை குறித்த வாகனத்தையே செலுத்தி அந்த நபரை கடத்தல் காரர்கள் என்று நம்பப்படும் நபர்கள் மோதியுள்ளனர். சம்பவத்தினால் குறித்த நபர் படுகாயம் அடைந்துள்ளார். அதேவேளை வாகனமும் விபத்துக்குள்ளாகியுள்ளது. சம்பவத்தை அடுத்து வாகனத்தில் வந்த மூவரும் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணையினை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர். - [விக்னேஸ்வரன் கூட்டணியில் இணைந்தாரா மணிவண்ணன்?](https://minnal24.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%a9%e0%af%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2/): -யாழ் நிருபர்- மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் தமிழ் மக்கள் தேசிய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி. வி. விக்னேஸ்வரன் மற்றும் யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி. மணிவண்ணன் ஆகியோர் ஒன்றாக  கலந்து கொண்டுள்ளனர். ‘கல்விக்கு கரம் கொடுப்போம், பெண் தலைமைத்துவத்தை ஊக்குவிப்போம்’ எனும் தொனிப்பொருளில் இன்று சனிக்கிழமை வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு, மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடிப் பிரதேசத்தில் உள்ள சீனிப்போடியார் ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக முன்னாள் வடமாகாண முதலமைச்சரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறப்பினருமாகிய க.வி.விக்கினேஸ்வரன் , கௌரவ விருந்தினராக, யாழ். மாநகர முதல்வரும் சட்டத்தரணியுமாகிய விஸ்வலிங்கம் மணிவண்ணன்  மற்றும் செங்கலடிப் பிரதேச சபைத் தவிசாளர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். - [நாவாந்துறை குருசடித்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b1%e0%af%88-%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%9a%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%80%e0%ae%b5/): -யாழ் நிருபர்- வரலாற்று சிறப்பு மிக்க நாவாந்துறை குருசடித்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் கூட்டுத்திருப்பலியுடான திருச்சூருவப்பவனி இன்று சனிக்கிழமை சிறப்பாக இடம்பெற்றது. கோடி அற்புதராம் குருசடித்தீவு புனித அந்தோனியாரின் ஆலயத்தின் திரு உருவ அந்தோனியாருக்கு விசேட திருப்பலி இடம்பெற்றதுடன் மேலும் பக்தர்களுக்கான விசேட கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. இவ் கூட்டுத்திருப்பலியுடான திருச்சூருவப்பவனியினை யாழ். மறைமாவட்ட பங்குகுரு முதல்வர் ஜெபரட்ணம் அடியார் தலைமையிலான பங்குதந்தையினர்கள் ஒப்பு கொடுத்தனர். இதனை தொடர்ந்து திருச்சூருவபவனி இடம்பெற்றதுடன் திருவிழாவின் கொடியிறக்கமும் இடம்பெற்றது. திருவிழாவின் கொடியேற்றம் கடந்த 23.03.2022 இடம்பெற்று நான்காம் நாள் திருவிழாவில் இனிதே நிறைவடைந்தது இவ்வாலயத்தில் கடந்த இரண்டு வருடங்களாக நாட்டில் எற்பட்ட கொரோனா தொற்று நிலைமை காரணமாக இடம்பெறவில்லை என்பதுடன் இவ்வாண்டு சுகாதார நடைமுறைகளை பின்பற்றி சிறப்பாக இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. குருநகர், பாசையூர், நாவாந்துறை, கொழும்புத்துறை ஆகிய இடங்களில் இருந்து கடல் வழி மூலமாக வருகை தந்த கிறிஸ்தவ பக்தர்கள் […] - [மீனவர்கள் தொடர்பான இலங்கை - இந்திய இணைக்குழுவின் 5வது கூட்டம்](https://minnal24.com/%e0%ae%ae%e0%af%80%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95/): மீனவர்கள் தொடர்பான இலங்கை – இந்திய இணைக்குழுவின் 5வது கூட்டம் தொலைகாணொளி ஊடாக நேற்று இடம்பெற்றுள்ளது. கடற்றொழில் அமைச்சின் செயலாளர் மற்றும் இந்திய மீன்பிடி அமைச்சின் அதிகாரிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர். 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இடம்பெற்ற இறுதி கலந்துரையாடலை அடுத்து ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டுள்ளது. மீன்பிடி படகுகளை தடுக்கும் போது எந்தவித உயிரிழப்பும் ஏற்படாத வகையில் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு சம்பந்தப்பட்ட இலங்கை அதிகாரிகளை இந்திய தரப்பு கோரியுள்ளது. அத்துடன் மனிதாபிமான அணுகுமுறையின் அடிப்படையில் மீன்படி பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு இந்திய தரப்பினர் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளனர். இரு நாட்டு மீனவர்களினதும் நல்வாழ்வு மற்றும் பாதுகாப்பு என்பன குறித்து இருதரப்பும் மீண்டும் வலியுறுத்தியுள்ளன. - [வேகக்கட்டுப்பாட்டை இழந்து கடையினுள் புகுந்த பிக்கப்](https://minnal24.com/%e0%ae%b5%e0%af%87%e0%ae%95%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%87%e0%ae%b4%e0%ae%a8-2/): -கிளிநொச்சி நிருபர்- பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பளை நகர பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்த பிக்கப் ரக வாகனம் ஒன்று கடைத்தொகுதியுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது. பளை நகரப்பகுதியில் ஏ9வீதியில் கிளிநொச்சி நோக்கி சென்றுகொண்டிருந்த பேரூந்து ஒன்று பளை பேரூந்து தரிப்பிடத்திற்கு திரும்பியுள்ளது. இதனை அவதானிக்காமல் யாழ் நோக்கி வந்த பிக்கப் வாகனம் வேககட்டுப்பாட்டை இழந்து பளை நகரப்பகுதியில் அமைந்துள்ள புத்தக கடை ஒன்றினை உடைத்து உட்சென்றுள்ளது. குறித்த விபத்தில் கடைத்தொகுதியின் ஒரு பகுதி முற்றாக சேதமடைந்தது. விபத்தில் எவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை எனவும் விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். - [சதொச கிளைகளில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இல்லை](https://minnal24.com/%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9a-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b3%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%9a/): சதொச கிளைகளில் பல அத்தியாவசிய உணவுப் பொருட்கள் கிடைக்கவில்லையென நுகர்வோர் குற்றம் சுமத்துகின்றனர். அரிசி, சிவப்பு பருப்பு மற்றும் சீனி விற்பனைக்கு சதொச நிறுவனம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. - [பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை](https://minnal24.com/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8b%e0%ae%a4%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95-2/): கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் காலாவதியான உணவுகளை விற்பனை செய்த 407 விற்பனையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்க தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார். மின்வெட்டு காரணமாக விற்பனை நிலையங்களில் குளிர்சாதனப் பெட்டிகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்கள் குறிப்பிட்ட திகதிக்கு முன்னர் காலாவதியாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். எனவே, குளிர்சாதனப் பெட்டிகளில் சேமித்து வைக்கப்படும் உணவுப் பொருட்களை கொள்வனவு செய்யும் போது பொதுமக்கள் அதிக கவனம் செலுத்துமாறு உபுல் ரோஹன கேட்டுக் கொண்டுள்ளார். - [பெற்றோலியக் கூட்டுத்தாபன எரிபொருள் விலை அதிகரிக்க மாட்டாது](https://minnal24.com/%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%8b%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa/): லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தினால். மீளவும் பெற்றோல் விலை அதிகரிக்கப்பட்டமை பிரச்சினைக்குரியதாகும் என வலுசக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார். லங்கா ஐ.ஓ.சி நிறுவனம், நேற்று நள்ளிரவு முதல்இ தமது சகல விதமான பெற்றோல் வகைகளின் விலைகளையும், 49 ரூபாவினால் அதிகரித்துள்ளது. இதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விற்பனை விலை 303 ரூபாவாகும். அத்துடன், ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விற்பனை விலை 332 ரூபாவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே, கடந்த முறை லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் எரிபொருட்களின் விலையை அதிகரித்தபோது, அதன் அதிகாரிகளை அழைத்து, பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் விலையுடன் அதனை சமப்படுத்துமாறு கூறியதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், அது தொடர்பான ஒப்பந்தத்தை ஆராய்ந்து, அதில் தங்களுக்கு எவ்வாறு அழுத்தம் கொடுக்க முடியும் என்பது குறித்து ஆராயுமாறு தமது செயலாளருக்கு அறியப்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். […] - [இந்திய  வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கைக்கு விஜயம்](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%9a%e0%af%8d/): இந்திய  வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர்  இம்மாதம் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸின் அழைப்பின் பேரில் இந்திய வெளிவிவகார அமைச்சர் இந்த உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 28 – 30 ஆம் திகதிகளில் வெளிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயம் அமையவுள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் இந்த விஜயத்தின்போது, கொழும்பில் நடைபெறும் BIMSTEC மாநாட்டிலும் பங்கேற்கவுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. - [கோறளைப்பற்று நாசிவன் தீவு கிராமத்தில் திண்மக்கழிவு முகாமைத்துவ திட்டம்](https://minnal24.com/%e0%ae%95%e0%af%8b%e0%ae%b1%e0%ae%b3%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b5/): -வாழைச்சேனை நிருபர்- மட்டக்களப்பு கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையின் நிர்வாகத்துக்குட்பட்ட நாசிவன் தீவு கிராமத்தில் வளர்பிறை சனசமுக நிலையத்தின் ஏற்பாட்டில் சமூக பங்கேற்புடனான திண்மக்கழிவு முகாமைத்துவதிட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது வாழைச்சேனை வேல்ட் விஷன் நிறுவனத்தின் நிதி உதவியுடன் கோறளைப்பற்று பிரதேச சபையின் மேற்பார்வையின் கீழ் இத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இத் திட்டத்தின் ஓர் அங்கமாக பொதுமக்களுக்கான விழிப்புணர்வும் கழிவுகளை தரம் பிரித்து சேகரிப்பதற்கான பைகள் வழங்கும் நிகழ்வும் தவிசாளர் சோபா ஜெயரஞ்சித் தலைமையில் நடைபெற்றது. பிரதேச சபையின் செயலாளர் ச.நவநீதன் சனசமூக நிலையத்தின் செயலாளர் ந.சுதர்சன் மற்றும் வேல்ட்விக்ஷன் நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள் சனசமூக நிலைய உறுப்பினர்கள் மாதர் சங்க உறுப்பினர்கள் அனைவரின் பங்கேற்புடன் இடம்பெற்றது இதன் பிரதான வளவாளராக கோறளைப்பற்று பிரதேச சபையின் சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் அப்துல்லாஹ் ஹாரூன் ஆகியோர்கள் கலந்துகொண்டு இத்திட்டத்தின் நோக்கம் கழிவுகளை எவ்வாறு தரம் பிரித்தல் கழிவுகளின் வகைகள் அன்றாட வாழ்வில் கழிவுகளை எவ்வாறு குறைத்தல் […] - [சர்வதேச நாணய நிதியத்துடன் நெருங்கி செயற்படத் தயார் - மத்திய வங்கி](https://minnal24.com/%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a3%e0%ae%af-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9/): சர்வதேச நாணய நிதிய அறிக்கையின் சில பரிந்துரைகளை, இலங்கை ஏற்கனவே அமுல்படுத்தியுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. அத்துடன், பொதுமக்கள், வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு நேரடியாக பிரதிபலன் கிடைப்பதற்காக, சர்வதேச நாணய நிதியத்துடன் நெருங்கி செயற்படத் தயார் என்றும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தொடர்பான ‘உறுப்புரை 4’ ஆலோசனை மற்றும் பணிக்குழாம் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய வங்கி தமது நிலைப்பாட்டை அறியப்படுத்தியுள்ளது. - [நாட்டை வந்தடையவுள்ள 7, 500 மெட்ரிக் டன் எரிபொருள் தாங்கிய கப்பல்](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%ae%b5%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3-7-500-%e0%ae%ae%e0%af%86%e0%ae%9f/): 7, 500 மெட்ரிக் டன் எரிபொருள் தாங்கிய கப்பல் ஒன்று நாளை மறுதினம் நாட்டை வந்தடையவுள்ளது. அத்துடன், குறித்த அளவான எரிபொருள் தாங்கிய மற்றுமொரு கப்பல் ஏப்ரல் மாத முதல் வாரத்தில் நாட்டுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேநேரம், நாட்டை வந்தடைந்துள்ள எரிபொருள் கப்பலில் இருந்து, 40 ஆயிரம் மெட்ரிக் டன் டீசல் மற்றும் விமான எரிபொருள் என்பவற்றை தரையிறக்கும் பணிகள் நேற்று வெள்ளிக்கிழமை  மாலை ஆரம்பிக்கப்பட்டதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதேநேரம், இன்று சனிக்கிழமை 3,650 மெற்றிக் டன் எரிவாயு அடங்கிய கப்பலொன்று நாட்டை வந்தடைய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. - [நீரில் மூழ்கிய பெண்ணை காப்பாற்ற சென்ற இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு](https://minnal24.com/%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%82%e0%ae%b4%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%88-%e0%ae%95%e0%ae%be/): நீராடச் சென்று நீரில் மூழ்கிய பெண்ணை காப்பாற்ற சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை அவிசாவளை – தெஹியோவிட்ட, சீதாவக்க ஆற்றின் யோகம பாலத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது. யாத்திரை குழுவொன்றைச் சேர்ந்த இரு இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அக்குழுவைச் சேர்ந்த பெண்ணொருவர் நீராடச் சென்றிருந்த வேளையில் நீரில் மூழ்கியுள்ளார். அவரை காப்பாற்ற முற்பட்ட போதே இவ்விருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர்கள் ராஜகிரிய மற்றும் கொழும்பு 12 ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 20 மற்றும் 21 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது. இதேவேளை நீரில் மூழ்கிய பெண் பிரதேசவாசிகளால் உயிருடன் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். - [பொருளாதாரச் சீரழிவிற்கு எதிரான ஆர்ப்பாட்டம்](https://minnal24.com/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%80%e0%ae%b0%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81/): -யாழ் நிருபர்- பொருட்களின் விலையேற்றத்திற்கும் பொருளாதாரச் சீரழிவிற்கும் எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று காலை 10.15 மணியளவில் யாழ். பேரூந்து நிலையம் முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் பதாதைகளை ஏந்தி கோஷமிட்டவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் த.தே.ம.முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன், கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர். - [தமிழகம் செல்லும் இலங்கை அகதிகளுக்கான குடியிருப்பு வசதிகள் மண்டபம் முகாமில் தயார்](https://minnal24.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88/): இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக தமிழகத்துக்கு அகதிகளாக செல்பவர்களுக்கு, மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்வதற்காக மண்டபம் முகாமில் உள்ள 147 குடியிருப்புகளில் அடிப்படை வசதிகள் செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன. இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக உணவுப்பொருள்கள் 10 மடங்கு விலை உயா்ந்துள்ளது. இதைத்தொடா்ந்து இலங்கை மன்னாா், வவுனியா உள்ளிட்ட பகுதிகளிலிருந்து தமிழா்கள் 16 போ் கடந்த 22 ஆம் தேதி அகதிகளாக தனுஷ்கோடி சென்றனா். அவா்கள் மண்டபம் முகாமில் உள்ள தனிமைப்படுத்தப்படும் பகுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். மேலும் ஆயிரக்கணக்கான இலங்கைத் தமிழா்கள், தமிழகம் செல்லத் தயாராக உள்ளதாகவும் அவா்கள் தெரிவித்தனா். இதைத்தொடா்ந்து, மனிதாபிமான அடிப்படையில் அவா்களுக்கு வசதிகள் செய்து கொடுக்கும் வகையில் மண்டபம் மறுவாழ்வு முகாமில் உள்ள 147 வீடுகளின் மறு சீரமைப்புப் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்த வீடுகளில் மின் இணைப்பு, குடிநீா், கழிவறை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், இலங்கை தமிழா்கள் மறுவாழ்வு முகாம் […] - [எரிவாயு கொள்வனவிற்காய் மைதானத்தில் நீண்ட வரிசை](https://minnal24.com/%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%af%81-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%ae/): காரைதீவு கனகரத்தினம் மைதானத்தில் எரிவாயு கொள்வனவு செய்வதற்காக இன்று அதிகாலை முதல் மக்கள் நீண்ட கியூ வரிசையில் காத்திருக்கின்றனர். எரிபொருள் மற்றும் எரிவாயு ஆகியவற்றின் விநியோகம் இவ்வாரம் முதல் வழமைக்குத் திரும்பும் என இலங்கை அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் கடந்த வாரம்  தெரிவித்துள்ள போதிலும் எரிபொருள் மற்றும் எரிவாயு ஆகியவற்றிற்கான விநியோகம் இன்னும் வழமைக்குத் திரும்பவில்லை. இதனால் மக்கள் எரிவாயு மற்றும் எரிபொருள் ஆகியன வந்து சேரும் என எதிர்பார்த்து வீதிகளிலும் எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் கியூவில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய அவல நிலைமை ஏற்பட்டுள்ளது.  இதுவரை எரிபொருள் கொள்வனவுக்காக நின்ற பலர் உயிரிழந்துள்ள சம்பவமும் இலங்கையில் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இதேநேரம் மாளிகைக்காடு, ,சாய்ந்தமருது, கல்முனை, காரைதீவு, மாவடிப்பள்ளி பிரதேசத்தில் உள்ள மக்களின் வரிசையானது சுமார் 400 மீட்டர் தூரம் நீண்டு சென்றுள்ளது. இருந்த போதும் இந்த இடத்திற்கு எரிவாயு காலை 8.00 மணிக்கு பின்னரே வந்து […] - [உருளைக்கிழங்கு செய்கையின் அறுவடை நிகழ்வு](https://minnal24.com/%e0%ae%89%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf/): -யாழ் நிருபர்- யாழ் மாவட்டத்தில் நவீன முன்மாதிரி முறையில் மேற்கொள்ளப்பட்ட உருளைக்கிழங்கு செய்கையின் அறுவடை நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை புன்னாலைக்கட்டுவன், ஈவினை மத்தி கிராமத்தில் இடம்பெற்றது. நிகழ்வில், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ அங்கஜன் இராமநாதனின் இணைப்புச் செயலாளர் குலேந்திரன் சிவராம் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார். சொட்டு நீர்ப்பாசனம், உயர் பாத்தி மற்றும் பொலித்தீன் மூடுபடை தொழில்நுட்பத்தின் கீழ் இந்த முன்மாதிரி உருளைக்கிழங்கு பயிர்ச்செய்கையானது மேற்கொள்ளப்பட்டது. கடந்த 01.01.2022 அன்று 8 பரப்பு விஸ்தீரண காணியில் 45cm * 30cm நடுகை இடைவெளியில் ‘சசி’ இன உருளைக்கிழங்குகள் இச்செயற்றிட்டத்தின்கீழ் பயிரிடப்பட்டன. இந்த அறுவடை நிகழ்வில் உரையாற்றிய குலேந்திரன் சிவராம் அவர்கள், விவசாய பிரதி அமைச்சராக அங்கஜன் இராமநாதன் சேவையாற்றிய காலத்தில், உருளைக்கிழங்கு பயிர்ச்செய்கையாளர்களுக்கு மானியம் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொண்டிருந்தார். அதன்படி, நவீன முன்மாதிரி முறையில் யாழ் மாவட்டத்தில் […] - [சீனாவிடமிருந்து இலங்கைக்கு 2000 மெட்ரிக் டன் அரிசி](https://minnal24.com/%e0%ae%9a%e0%af%80%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95/): சீனா-இலங்கைக்கு இடையிலான இறப்பர்-அரிசி ஒப்பந்தத்தின் 70வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இலங்கைக்கு அவசரகால உணவு உதவியாக சுமார் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 2,000 தொன் அரிசியை சீனா வழங்கவுள்ளது. - [இன்று ஆரம்பமாகிறது ஐ.பி.எல் போட்டிகள்](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%86%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a4%e0%af%81-%e0%ae%90-%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%8e/): 15 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் மும்பையில் இன்று ஆரம்பமாகிறது. குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் புதிதாக அறிமுகமாகியுள்ள நிலையில் இம்முறை தொடரில் பங்கேற்கும் அணிகள் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. இதனால் அணிகள் மோதும் முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதிக தடவை ஐ.பி.எல். கிண்ணத்தை வென்ற அணிகள், அதிக முறை இறுதி சுற்றுக்குள் நுழைந்த அணிகள் என்ற அடிப்படையில் அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கெப்பிட்டல்ஸ், லக்னோ சுப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளும், ‘பி’ பிரிவில் 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகளும் இடம் பிடித்துள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். எதிர்பிரிவில் […] - [எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீ குளிக்க முயன்ற குடும்பஸ்தர்](https://minnal24.com/%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%af-3/): குடும்ப தகராறு காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீ குளிக்க முயன்ற குடும்பஸ்தர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கைதடி எரிபொருள் நிரப்பு நிலையத்தில்  இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது , யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியை சேர்ந்த 37 வயதுடைய நபர் ஒருவர் மதுபோதையில், கையில் பெற்றோல் போத்தல் ஒன்றுடன் வந்து , தனக்கும் மனைவிக்கும் இடையில் முரண்பாடு என்றும் அதனால் தான் மனமுடைந்துள்ளதாக கூறி , தான் எரிபொருள் நிரப்பு நிலையத்தினை தீயிட்டு கொளுத்தி , தானும் உயிர் மாய்க்க போறேன் என்றுள்ளார். அவரை எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் , அங்கிருந்தவர்கள் சமாதானப்படுத்த முயன்ற போது , அவர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு அட்டகாசம் புரிந்துள்ளார். அது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் அவரை கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.   - [கொழும்பு ஹைட்பார்க்கில், சத்தியாக்கிரக போராட்டம்](https://minnal24.com/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%b9%e0%af%88%e0%ae%9f%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/): அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம், எரிபொருட்கள் உள்ளிட்ட சமையல் எரிவாயு ஆகியவற்றுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு, அரசாங்கத்தின் இயலாமை ஆகியவற்றை கண்டித்து, ஐக்கிய தேசியக் கட்சியினரால், கொழும்பு ஹைட்பார்க்கில், சத்தியாக்கிரக போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இதில், கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்களும் ஆதரவாளர்களும் அணிதிரண்டு பங்கேற்றுள்ளனர் - [நாட்டின் பொருளாதார வீழ்ச்சியை ஈடு செய்ய புலம்பெயர் தமிழருக்கு அழைப்பு](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b4%e0%af%8d%e0%ae%9a/): புலம்பெயர் தமிழருக்கான அழைப்புக்கு முன் நல்லெண்ண வெளிப்பாடு என்ன?, என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இலங்கை அரசாங்கம் நாட்டின் பொருளாதார வீழ்ச்சியை ஈடு செய்ய புலம்பெயர்ந்த தமிழருக்கு அழைப்பு விடுத்துள்ளது. குறிப்பாக முதலீடுகளை வரவழைப்பதற்காக இந்த முயற்சியை எடுத்துள்ளனர் இதனை யாரும் எதிர்க்கப்போதில்லை. ஆனால் புலம்பெயர் தமிழ் முதலீட்டாளர்களை அழைப்பதற்கு முன்னர் அவர்களுக்கான தடை தொடர்பில் இலங்கை அரசாங்கம் எடுத்த நடவடிக்கை என்ன? தடைசெய்யப்பட்ட அமைப்புக்களின் தடைகளை நீக்கி நல்லெண்ண சமிக்கையை மேற் கொள்ளாது முதலீடு செய்ய வாருங்கள் என அழைப்பது வேடிக்கையாக உள்ளது. உண்மையிலே புலம்பெயர் தமிழர்களின் அமைப்புக்களுக்கான தடைகளை நீக்கி நல்லெண்ண வெளிப்பாட்டின் மூலம் தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வை முன்வைத்து அதனை உறுதி செய்வதன் மூலமே ஆரோக்கியமான முதலீடுகளை நாட்டிற்குள் கொண்டுவர முடியும். இந்த பேரப்பலத்தை புலம்பெயர்ந்த அமைப்புக்கள் ஒற்றுமையாக கையாள வேண்டும் இது காலத்தின் கட்டாயம், என […] - [முன்னாள் இராஜாங்க அமைச்சர் உள்ளிட்ட நான்கு பேர் கைது](https://minnal24.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a/): ‘கஜ முத்து’ விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பண்டு பண்டாரநாயக்க உள்ளிட்ட நான்கு பேர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்தது. இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் அம்பாறை பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக அம்பாறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். - [தொழில் முயற்சியாளர்களுக்கு துரித கடன் வழங்கும் செயற்திட்டம் ஆரம்பம்](https://minnal24.com/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95/): -கல்முனை நிருபர்- அம்பாறை, இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட சமுர்த்தி வங்கியின் அங்கத்தவர்களாகவுள்ள தொழில் முயற்சியாளர்களுக்கு துரித கடன் வழங்கும் செயற்திட்டம் சிரேஷ்ட ஊடகவியலாளரும், வங்கியின் முகாமையாளருமான ரீ.கே.றஹ்மத்துல்லா தலைமையில் ஆரம்பம் செய்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில், பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம்.றஸ்ஸான் மற்றும் சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எம்.சி.எம்.தஸ்லீம் ஆகியோரினால் பல்வேறுபட்ட தொழில் துறை முயற்சியாளர்களுக்கு இத்துரித கடன் சேவை வழங்கி ஆரம்பம் செய்து வைக்கப்பட்டது. சமுர்த்தி, வதிவிடப் பொருளாதார நுண்நிதிய, சுயதொழில் மற்றும் வியாபார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் வழிகாட்டலுக்கமைய சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் சௌபாக்கியா இவ்வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாக பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம்.றஸ்ஸானின் வழிகாட்டல் ஆலோசனையுடன் பல்வேறுபட்ட நலனுதவி வேலைத்திட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.   - [10 மணித்தியால மின்தடை இல்லை](https://minnal24.com/10-%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b2-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a4%e0%ae%9f%e0%af%88-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2/): அடுத்த வாரத்தில் மின் துண்டிப்பு நேரம் நீடிக்கப்படமாட்டாது என இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது. மின்னுற்பத்திக்கு தேவையான எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் இன்று அறிவித்தார். இதனையடுத்து அடுத்த வாரம் மின் துண்டிப்பு நேரம் நீடிக்கப்பட மாட்டாது இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தற்போது ஆறரை மணித்தியாலங்களுக்கு அமுலாக்கப்படும் மின்தடை அடுத்த வாரத்தில் 10 மணித்தியாலங்களாக அதிகரிக்கும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். - [உக்ரைன் போரில் 90 சிறுவர்கள் உட்பட 1,035 பொதுமக்கள் பலி](https://minnal24.com/%e0%ae%89%e0%ae%95%e0%af%8d%e0%ae%b0%e0%af%88%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-90-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95/): உக்ரைன் போரினால், 90 சிறுவர்கள் உட்பட 1,035 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் 1,650 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. உக்ரைன் மீதான போரில் ரஷ்யா இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துமாயின், நேட்டோ அதற்குப் பதிலளிக்கும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார். பெல்ஜியம் தலைநகர் ப்ரஸல்ஸில் இடம்பெற்ற நேட்டோ தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். அதேநேரம், ஜி-20 அமைப்பில் இருந்து ரஷ்யா வெளியேற வேண்டும் என்றும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ரஷ்யாவை ஜி-20 அமைப்பில் இருந்து நீக்குவதை அமெரிக்கா விரும்புவதாகவும், இந்தோனேஷியா மற்றும் பிற நாடுகள் ரஷ்யாவை நீக்குவதில் உடன்படவில்லை என்றால், உக்ரைனை கூட்டங்களில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்றும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். - [ஐஸ் போதைப்பொருளுடன் 17 வயது இளைஞன் கைது](https://minnal24.com/%e0%ae%90%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-17-%e0%ae%b5%e0%ae%af%e0%ae%a4/): -மன்னார் நிருபர்- தலைமன்னார் கிராம பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இன்று வெள்ளிக்கிழமை காலை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது 220 கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. மன்னார் இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து   தலை மன்னார் கிராம பகுதியில் உள்ள வீடு ஒன்றில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போது குறித்த வீட்டில் இருந்து 220 கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. இதன் போது 17 வயதுடைய இளைஞர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருள் மற்றும் கைது செய்யப்பட்ட இளைஞன் தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். தலைமன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். - [நாட்டை கட்டியெழுப்புவதற்கு ஒன்றிணையுமாறு "தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு" - ஜனாதிபதி அழைப்பு](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%86%e0%ae%b4%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b5%e0%ae%a4%e0%ae%b1/): “நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணைந்து செயற்படுவோம்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் இன்று வெள்ளிக்கிழமை நேரில் அழைப்பு விடுத்துள்ளார். நாட்டு மக்கள் அனைவரினதும் தலைவராக, அனைத்து மக்களையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்ப்பதாகவும் ஜனாதிபதி தமிழ் தேசிய கூட்டமைப்பினரிடம் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இதனை தெரிவித்துள்ளார். 1.நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களை விடுவித்தல். 2.குற்றஞ்சாட்டப்பட்டு வழக்குத் தொடரப்படாத சந்தேக நபர்கள் தொடர்பில்       எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுத்தல். 3.உண்மையைக் கண்டறியும் பொறிமுறையை ஆரம்பித்தல். 4.பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை மறுசீரமைத்தல் காணாமற்போனோர் தொடர்பான பிரச்சினைகளுக்கான தீர்வுகள் உள்ளிட்ட  பல விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் செயற்பட்டு வருவதனையும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம், வடக்கு – கிழக்கு உட்பட நாட்டின் அனைத்து மக்களின் நோக்கங்களையும் நிறைவேற்றி, நாட்டை அபிவிருத்தியை நோக்கி நகர்த்த முடியும் என்பதனையும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். […] - [மன்னார் 'சதொச' மனித புதைகுழி அகழ்வு பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும்](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9a-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%af%81/): -மன்னார் நிருபர்- மன்னார் ‘சதொச’ மனித புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்பட்டு ஏற்கனவே அகழ்வு செய்யப்பட்ட மனித எலும்புகள், மற்றும் சம்பந்தப்பட்ட ஏனைய எச்சங்கள் தொடர்பான பிரித்தெடுத்தல் நடவடிக்கை அல்லது அகழ்வு பணி சம்பந்தமாக கலந்தாலோசனையின் அடிப்படையில் புதைகுழி வழக்கு மீண்டும் ஆரம்பிக்கப்படும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சார்பாக மன்றில் முன்னிலையான சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் தெரிவித்தார். மன்னார் சதொச மனித புதைகுழி தொடர்பான வழக்கில் ஆஜராகும் சட்டத்தரணிகளுக்கான அறிவித்தல் ஒன்று அனுப்பப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் சட்டத்தரணிகள் ஆஜராகி இருந்தனர். இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் மன்னார் சதொச மனித புதைகுழி வழக்கு விசாரணை இடம் பெற்று வந்த நிலையில், கடந்த 10-03-2020 அன்று மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சார்பில் சட்டத்தரணிகள் […] - [டீசல் இல்லாமையினால் சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்ட சபை அமர்வு](https://minnal24.com/%e0%ae%9f%e0%af%80%e0%ae%9a%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%bf/): -யாழ் நிருபர்- டீசல் இயந்திரத்திற்கு போதிய அளவு டீசல் இல்லாத காரணத்தினால் யாழ்ப்பாண மாநகர சபையின் அமர்வு மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனினால் அரைமணித்தியாலயம் ஒத்தி வைக்கப்பட்டது. யாழ்ப்பாண மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்று காலை சபை மண்டபத்தில் மாநகர முதர்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது யாழ் மாநகர சபையின் 27 வட்டாரங்களில் குருக்குவீதிகள் சிறிய வீதிகளில் தெருவிளக்குகள் ஒளிரசெய்தல் தொடர்பான விவாதம் இடம்பெற்றது. இது தொடர்பான கருத்துக்களை மாநகர சபை உறுப்பினர்களினால் முன்வைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் போது அதில் தீடிரென மின்சாரம் இல்லாமல் போனது. இதனால் டீசல் இயந்திரத்திற்கு போதிய அளவு டீசல் இல்லாத காரணத்தினால் சபை அமர்வு சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. - [துவிச்சக்கர வண்டியை திருடிய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது](https://minnal24.com/%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81/): -யாழ் நிருபர்- கோப்பாய் பகுதியை சேர்ந்த 27 வயதான இளைஞர் ஒருவர் நேற்று வியாழக்கிழமை மாலை யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலைக்கு முன்பாக சந்தேகத்திற்கு இடமான முறையில் துவிச்சக்கர வண்டி ஒன்றினை குறித்த இளைஞன் எடுத்து சென்ற போது, அப்பகுதியில் கடமையில் இருந்த யாழ்ப்பாண பொலிஸார் இளைஞனை மறித்து விசாரணைகளை முன்னெடுத்த போது, துவிச்சக்கர வண்டியினை இளைஞன் திருடி செல்வதனை அறிந்து இளைஞனை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இளைஞன் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார். அதேவேளை யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை பார்வையிட துவிச்சக்கர வண்டியில் வருவோர், வைத்திய சாலை சூழலில் தமது துவிச்சக்கர வண்டிகளை நிறுத்தி விட்டு செல்லும் போது அவை களவாடப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. அது தொடர்பில் பல முறைப்பாடுகள் யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் பொலிஸார் வைத்தியசாலை சூழலில் தமது கண்காணிப்பை […] - [நிந்தவூர் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் கெளரவிப்பு நிகழ்வு](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b5%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8f/): -கல்முனை நிருபர்- நிந்தவூரில் உலமாக்களைக் கொண்ட அமைப்பாக இயங்கி வருகின்ற நிந்தவூர் கதீப் பேஸ் இமாம் சம்மேளனத்தின் ‘வாழும் போதே வாழ்த்துவோம்’ எனும் தொனிப் பொருளினடிப்படையில் நிந்தவூர் பிரதேசத்தில் மூன்று முறை தவிசாளராகவும், மக்கள் பணியே தன் பணியென நீண்ட காலமாக சமூக சேவைகளில் ஈடுபட்டு மக்கள் பணியாற்றி வருகின்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளரும் நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளருமான எம்.ஏ.எம். அஸ்ரப் தாஹிர் பாராட்டி கெளரவிக்கப்பட்டார். அண்மைக்காலமாக நிந்தவூர் பிரதேசத்தில் மக்களுக்காக பணியாற்றி வருகின்ற சமூக சேவையாளர்களை இனங்கண்டு ‘வாழும் போதே வாழ்த்துவோம்’ என்ற அடிப்படையில் கதீப் பேஸ் இமாம் சம்மேளனமானது கெளரவிப்பு நிகழ்வுகளை ஏற்பாடு செய்து நடைமுறைப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இவ்வாறான நிகழ்வுகள் சமூகப்பணியாற்றுகின்றவர்களுக்கு ஓர் ஊக்குவிப்பாகவும் ஏனையவர்களுக்கு சமூகப்பணியாற்ற தூண்டுகோலாகவும் அமையுமென்பதில் ஐயமில்லையெனவும் எதிர் காலத்தில் இந்த நிகழ்வுகளில் ஆன்மீக கல்வி கற்று அதனூடாக மார்க்க போதனைகளைச் செய்து வருகின்ற […] - [பகல் 1.30 மணி வரை நீடித்த சந்திப்பு](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d-1-30-%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%88-%e0%ae%a8%e0%af%80%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4/): நீண்ட நாட்களாக ஒத்திவைக்கப்பட்ட ஜனாதிபதி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. ஜனாதிபதி செயலகத்தில் காலை 10.30 மணிக்கு ஆரம்பமான குறித்த சந்திப்பு பகல் 1.30 மணி வரை நீடித்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் சேனாதிராசா, நாடாமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன், த.சித்தாத்தன், சி.சிறிதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், இத.கலையரசன் ஆகியோர் குறித்த சந்திப்பில் பங்கேற்றிருந்தனர். - [வாழைச்சேனையில் உலக காசநோய் தினம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு](https://minnal24.com/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%87%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95-%e0%ae%95%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8b/): -வாழைச்சேனை நிருபர்- ‘உலக காசநோய் தினம் மார்ச்-24’ தொடர்பான விழிப்புணர்வு நிழகழ்வுகள் மட்டக்களப்பு வாழைச்சேனை அதார வைத்தியசாலையில் நடைபெற்றது. வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் காசநோய் கட்டுப்பாட்டு பிரிவு ஓட்டமாவடி, மற்றும் கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்கள் ஆகியன இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தன. இதன்போது காசநோயில் இருந்து மக்களை பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வாழைச்சேனை மீன் பிடித் துறைமுகப் பகுதியில் இருந்து பிரதான வீதி வழியாகவும் மற்றையது ஓட்டமாவடி பிரதான வீதி வழியாக வந்து வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையை சென்றடைந்தது. ஊர்வலத்தில் கலந்து கொண்டோர் “காசநோய் என் வாழ் நாளில் இல்லாது ஒழிப்போம்” என்பன போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை கையில் ஏந்தியிருந்தனர். அத்துடன் காச நோயில் இருந்து மக்கள் பாதுகாப்பு பெறுவது தொடர்பான அறிவித்தல் ஒலி பெருக்கி சாதனத்தின் மூலம் அறிவிக்கப்பட்டது. இவ் ஊர்வலத்தில் பிரதேச வைத்தியர்கள், பொதுச் சுகாதார […] - [இன்றைய நாணய மாற்று விகிதங்கள்](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%88%e0%ae%af-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a3%e0%ae%af-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a4-3/): இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 294 ரூபா 99 சதமாக பதிவாகியுள்ளதுடன் கொள்முதல் பெறுமதி 317 ரூபா 30 சதமாக பதிவாகியுள்ளது. அத்துடன், ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 376 ரூபா 95 சதம். விற்பனை பெறுமதி 391 ரூபா 25 சதம். யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 328 ரூபா 50 சதம் விற்பனை பெறுமதி 321 ரூபா 51 சதம். ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 33 சதம் விற்பனை பெறுமதி 2 ரூபா 44 சதம். - [தமிழகத்தில் புகலிடம் கோரி சென்ற இலங்கையர் ஐவருக்கு பிணை](https://minnal24.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b0/): இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு புகலிடம் கோரிச் சென்ற நிலையில், கைதுசெய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 5 பேருக்கும் இராமேஸ்வரம் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. இலங்கையிலிருந்து கடந்த 22 ஆம் திகதி 16 பேர் தமிழகம் சென்றிருந்த நிலையில், அவர்களில் ஐவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, புழல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டனர். ஏனைய 11 பேரும், மண்டபம் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், குறித்த ஐந்து இலங்கைத் தமிழர்களுக்கும் பிணைகோரி தமிழக அரசின் சார்பில், இராமேஸ்வரம் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கமைய, அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை அழைத்துவர கடலோர பாதுகாப்புக் குழு பொலிஸார் சென்னை சென்றுள்ளனர். அவர்கள் அழைத்து வரப்பட்டதும் மண்டபம் முகாம் இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் பாதுகாப்புடன் தங்க வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். - [மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%95%e0%af%8c%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%bf/): -கல்முனை நிருபர்- கல்முனை கமு/கமு/றோயல் வித்தியாலயத்திலிருந்து இம்முறை புலமைப்பரிசில் பரீட்சையில் தேர்வாகிய மற்றும் சிறப்பு புள்ளிகளை பெற்ற மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு வியாழக்கிழமை காலை பாடசாலை முன்றலில் அதிபர் எம்.எச்.எம். அன்சார் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்முனை கல்வி மாவட்ட பிரதம பொறியியலாளர் ஏ.எம்.சாஹீர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். - [முஸ்லிம் எம்.பிக்களின் வேண்டுகோளையடுத்து பேரீச்சம்பழ இறக்குமதிக்கு வரிவிலக்கு](https://minnal24.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5/): -கல்முனை நிருபர்- எதிர்வரும் புனித நோன்புகாலத்தில் முஸ்லிங்களின் இஸ்லாமிய கடமைகளை நிறைவேற்றும் தேவைகளுக்காக அதிகளவிலான பேரீச்சம்பழ தேவைகள் இருக்கின்ற சூழ்நிலையில் பேரீச்சம்பழ இறக்குமதிக்காக விதிக்கப்பட்டுள்ள 200 சதவீதவரியை நீக்குமாறு கோரி நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஸவுடனான கலந்துரையாடலொன்று நேற்று பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவுக்கும் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஸவுக்குமிடையே இடம்பெற்றது. இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், இசாக் ரஹ்மான், அலி சப்ரி ரஹீம், சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப் ஆகியோர் இவ்விடயம் தொடர்பில் எடுத்துரைத்து பேரீச்சம்பழ இறக்குமதிக்கான வரியை நீக்கவேண்டிய தேவைகள் குறித்து நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஸவுக்கு விளக்கினார். விடயங்களை கேட்டறிந்த அமைச்சர் திறைசேரி செயலாளருக்கு வரியை நீக்குவது தொடர்பில் பணிப்புரை விடுத்தார். மட்டுமின்றி புனித நோன்புகாலம் இஸ்லாமியர்கள் நிம்மதியாக நோன்பை நோற்க புனித நோன்புகாலம் முடியும் வரை இந்த வரிசலுகையை அமுலில் வைத்திருப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவினருக்கு அமைச்சர் இதன் போது உறுதியளித்தார். - [16 மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம்](https://minnal24.com/16-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%af/): -மன்னார் நிருபர்- இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட இராமேஸ்வரம் மற்றும் மண்டபம் மீனவர்கள் 16 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று வெள்ளிக்கிழமை காலை முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இராமேஸ்வரம் மற்றும் மண்டபம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 800க்கும் மேற்பட்ட விசைப்படகில் 3500க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி அனுமதி டோக்கன் பெற்று கொண்டு கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். வழக்கம் போல கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு பகுதிகளுக்கு அருகே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் 1 விசைப்பலகையும் அதில் இருந்த மீனவர்கள் 12 பேரையும், அதேபோல மண்டபம் பகுதியை சேர்ந்த ஒரு விசைப்படகு மற்றும் 4 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்து காரை நகர் மற்றும் முழங்காவில் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இரு வேறு துறை மீன்வளத் துறை அதிகாரிகள் […] - [நிந்தவூர் வைத்தியசாலை வீதியில் எரிவாயு கொள்வனவிற்காக நீண்ட வரிசை](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b5%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%af%88-%e0%ae%b5%e0%af%80/): -கல்முனை நிருபர்- நிந்தவூர் வைத்தியசாலை வீதியில் எரிவாயு கேஸ் கொள்வனவு செய்வதற்காக இன்று அதிகாலை முதல் மக்கள் நீண்ட கியூ வரிசையில் காத்திருக்கின்றனர். எரிபொருள் மற்றும் எரிவாயு ஆகியவற்றின் விநியோகம் இவ்வாரம் முதல் வழமைக்குத் திரும்பும் என இலங்கை அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் கடந்த வாரம் தெரிவித்துள்ள போதிலும் எரிபொருள் மற்றும் எரிவாயு ஆகியவற்றிற்கான விநியோகம் இன்னும் வழமைக்குத் திரும்பவில்லை. இதனால் மக்கள் எரிவாயு மற்றும் எரிபொருள் ஆகியன வந்து சேரும் என எதிர்பார்த்து வீதிகளிலும் எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் கியூவில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய அவல நிலைமை ஏற்பட்டுள்ளதுடன், இதுவரை எரிபொருள் கொள்வனவுக்காக நின்ற பலர் உயிரிழந்துள்ள சம்பவமும் இலங்கையில் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இதேநேரம் நிந்தவூர் பிரதேசத்தில் நிந்தவூர் ஆதார வைத்தியசாலைக்கு அருகில் இருந்து ஆரம்பித்துள்ள எரிவாயு கொள்வனவு காண வரிசை கடற்கரை வீதியில் சென்று சுமார் 200 மீட்டர் தூரம் நீண்டு சென்றுள்ளது. இருந்த […] - [எதிர்வரும் வாரத்தில் இருந்து 10 மணித்தியாலங்கள் மின்வெட்டு?](https://minnal24.com/%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81/): மின் உற்பத்தி நிலையங்களுக்கு, மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருள் மற்றும் நீர் என்பன பற்றாக்குறையாக உள்ளமையின் காரணமாக, மின்வெட்டு நேரங்கள் நீடிக்கப்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது அதற்கமைய தற்போது அமுலாக்கப்படும் ஆறரை மணித்தியால மின்வெட்டு எதிர்வரும் வாரத்தில் இருந்து 10 மணித்தியாலங்கள் வரை நீடிக்கப்படக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. - [குடும்ப அட்டை, உணவகங்களுக்கான அனுமதிப்பத்திரம் உள்ளவர்களுக்கு மாத்திரமே சமையல் எரிவாயு](https://minnal24.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa-%e0%ae%85%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%95%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81/): -கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி மாவட்டத்தில்  குடும்ப அட்டை, உணவகங்களுக்கான அனுமதிப்பத்திரம் ஆகியவை உள்ளவர்களுக்கு மாத்திரமே சமையல் எரிவாயு வழங்கப்பட்டு வருவதாக மக்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் அதிகாலை 3.00 மணிக்கு வருகை தந்தால் சமையல் எரிவாயுவினை பெறமுடிந்தது எனவும் தெரிவித்தனர். இன்று வெள்ளிக்கிமை கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள சமையல் எரிவாயு விநியோக நிலையத்தின் முன்பாக காத்திருந்த பலர் சமையல் எரிவாயுவினை பெற்றுக் கொள்ள முடியாமல் திரும்பிசென்றமை குறிப்பிடத்தக்கது. - [பளை பிரதேசத்தில் இன்று மண்ணெண்ணெய் விநியோகம்](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%b3%e0%af%88-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%ae/): -கிளிநொச்சி நிருபர்- பளை பிரதேசத்தில் நேற்று முன்தினம், நேற்று மற்றும் இன்று மண்ணெண்ணெய் விநியோகம் இடம்பெற்றிருந்தது. குடும்ப பங்கீட்டு அட்டைக்கே மண்ணெண்ணெய் வழங்கப்பட்டிருந்தது. பளை பிரதேச செயலக உத்தியோகத்தரின் கண்காணிப்பில் ஆள் அடையாள அட்டை மற்றும் குடும்ப பங்கீட்டு அட்டை பதிவு செய்தே குறித்த மண்ணெண்ணெய் வழங்கப்பட்டது. குறித்த எரிபொருள் நிலையத்தில் இராணுவம் பாதுகாப்பு கடமையில் உள்ளமையும் அவதானிக்க முடிந்தது. - [மன்னாரை சேர்ந்த சச்சிதானந்தன் சுதர்சன் அகில இலங்கை சமாதான நீதவானாக சத்தியப்பிரமாணம்](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b0%e0%af%88-%e0%ae%9a%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%9a%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9/): -மன்னார் நிருபர்- மன்னார் மூர் வீதியைச் சேர்ந்த சச்சிதானந்தன் சுதர்சன் அகில இலங்கை சமாதான நீதவானாக மன்னார் நீதவான் பி.சிவகுமார் முன்னிலையில் நேற்று வியாழக்கிழமை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். இவர் யாழ்ப்பாணம் அச்சுவேலியை பிறப்பிடமாகவும், மன்னார் மூர்வீதியை வதிவிடமாகவும் கொண்டவர். அச்சுவேலி புனித திரேசா கல்லூரியில் ஆரம்ப கல்வியும், அச்சுவேலி மத்திய கல்லூரி, அடம்பன் மத்திய மகா வித்தியாலயம் மற்றும் மன்னார் சித்திவிநாயகர் இந்து கல்லூரி உள்ளிட்ட பாடசாலைகளில் உயர் கல்வியையும் தொடர்ந்தார். இவர் நானாட்டான் பிரதேச  செயலகத்தின் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றுகின்றார். மன்னார் மாவட்டத்தில் சிறந்த சமூக சேவையாளராகவும் திகழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. - [யாழ்.மாவட்ட காணிப் பயன்பாட்டு திட்டமிடல் குழுக்கூட்டம்](https://minnal24.com/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa/): -யாழ் நிருபர்- யாழ்ப்பாண மாவட்ட காணிப்பயன்பாட்டு திட்டமிடல் குழுக்கூட்டமானது மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் நேற்று வியாழக்கிழமை மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் மாவட்ட காணிப்பயன்பாட்டு வலயமாக்கல் தயாரித்தல் செயற்திட்டத்தின் (2021) வரைபு திட்டத்தில் பங்குதாரர்களின் கருத்துக்கள் பெறப்பட்டதோடு, மேலும் காணிகளை குத்தகைக்கு வழங்குதல், மருதங்கேணி J/428 பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தை அதன் சிறப்புக்களின் அடிப்படையில் காணிப்பயன்பாட்டு வலயமாக்கல் வரைவு மாதிரி தொடர்பான விடயங்கள், சுரமுகி கங்கா திட்டம், ஒரு இலட்சம் காணித்துண்டுகளை வழங்குவதற்கான ஏற்பாடுகள் மற்றும் இளம் தொழில் முயற்சியாளர்களுக்கு காணிகளை பிரித்து வழங்குதல் ஆகியன தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன. இக் கலந்துரையாடலில், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), மாவட்டச் செயலக திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட விவசாயப் பணிப்பாளர், உதவி மாவட்டச் செயலாளர், பிரதேச செயலாளர்கள், காணித் திட்டமிடல் உத்தியோகத்தர்கள் மற்றும் துறைசார் உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள். - [கல்முனை றோயல் பாடசாலைக்கு இலவச குடிநீர் தாங்கியும் நீர் வசதியும் வழங்கி வைப்பு](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%88-%e0%ae%b1%e0%af%8b%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/): -கல்முனை நிருபர்- குவைத் நாட்டின் அந்-நஜாத் சர்வதேச தொண்டு நிறுவன நிதி அனுசரணையில் இலங்கை அந்நூர் சேரிட்டி சமூக அமைப்பினால் கல்முனை கமு/கமு/றோயல் வித்தியாலயத்திற்கு இலவச குடிநீர் தாங்கி நிர்மாணித்து இலவச நீர் இணைப்பை பெற்றுக்கொடுக்கும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை காலை பாடசாலை முன்றலில் நடைபெற்றது. அரச காரியாலயங்கள், பாடசாலைகள், மதஸ்தலங்களுக்கு இலவச குடிநீர் வழங்குதல் மற்றும் பல சமூக நல வேலைத்திட்டங்களை அந்நூர் சமூக அமைப்பு மக்களுக்காக தொடர்ந்தும் நாடாளாவிய ரீதியில் செய்து வருகின்றது. அவர்களின் வேலைத்திட்டத்தின் ஒரு கட்டமாக அந்நூர் சமூக அமைப்பின் பிரதேச இணைப்பாளர் ஐ.எல். றிசாட் (றஸ்மி) கமு/கமு/றோயல் வித்தியாலய மாணவர்களுக்காக இவ்வேலைத்திட்டத்தை பாடசாலை நிர்வாகிகளிடம் உத்தியோகபூர்வமாக நேற்று கையளித்தார். கமு/கமு/றோயல் வித்தியாலய அதிபர் எம்.எச்.எம். அன்சார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்முனை கல்வி மாவட்ட பிரதம பொறியியலாளர் ஏ.எம். சாஹீர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். - [வாழைச்சேனை கமநலசேவை நிலையத்தில் சேவை நலன் பாராட்டு விழா](https://minnal24.com/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%87%e0%ae%a9%e0%af%88-%e0%ae%95%e0%ae%ae%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%9a%e0%af%87%e0%ae%b5%e0%af%88-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88/): -வாழைச்சேனை நிருபர்- மட்டக்களப்பு வாழைச்சேனை கமநலசேவை நிலையத்தில் சேவை நலன் பாராட்டு விழா கமநலகேந்திர நிலையத் தலைவர் க.நடேசன் தலைமையில் நடைபெற்றது. இவ் நிலையத்தில் பெரும்பாக உத்தியோகத்தராக கடமையாற்றிய எம்.ஏ.ரசீட் இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளமையை அடுத்து அவர் பிரதேச விவசாயிகளுக்கு ஆற்றிய சேவையை பாராட்டி கௌரவிக்கும் முகமாக இவ் சேவை நலன் பாராட்டு கமநல அமைப்புக்களினால் ஏற்பாடு செய்யப்பட்டது. அவர் ஆற்றிய சேவை தொடர்பாக நினைவு கூறப்பட்டதுடன், பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டு வாழ்த்து மடல் மற்றும் நினைவுச்சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டார். இந் நிகழ்வில் மட்டக்களப்பு கமநல கேந்திர உதவி ஆணையாளர் கே.ஜெகநாத், வாகநேரி திட்ட முகாமையாளர் எம்.தீபக்காந், வாழைச்சேனை பெரும்பாக உத்தியோகஸ்த்தர் கே.ஜெயக்காந்தன், வாகநேரி நிர்பாசன திட்ட முகாமைத்துவ தலைவர் சி.புஸ்பாகரன் ஆகியோர்கள் அதிதிகளாக கலந்து கொண்டனர். - [அராலி 13ம் வட்டார உறுப்பினரால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரிய பிரேரணை சமர்ப்பிப்பு](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf-13%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b0-%e0%ae%89%e0%ae%b1%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9/): -யாழ் நிருபர்- பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரிய பிரேரணை நேற்று வியாழக்கிழமை அராலி 13ம் வட்டார உறுப்பினர் இலங்கேஸ்வரனால் வலிகாமம் மேற்கு பிரதேச சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. அப் பிரேரணையில், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க கோரும் பிரேரணை இந்த நாட்டில் உள்ள 1979 ம் ஆண்டில் 8 ம் இலக்க பயங்கரவாத தடைச்சட்டம் மனித குலத்திற்கு எதிரான அநீதியாகும். 1979 ம் ஆண்டில் தற்காலிகமாக ஆறுமாத காலத்திற்கு மட்டும் செல்லுபடியாகும் முகமாக கொண்டு கொண்டு வரப்பட்ட இச்சட்டம் இன்றுவரை 42 ஆண்டுகளக நீடித்து வருகிறது. இச்சட்டத்தின் விதிகள் நமது நாட்டின் குற்றவியல் சட்டத்தின் அடிப்படை மூலாதாரங்களிற்கு முற்றிலும் எதிரானது. ஒப்புதல் வாக்குமூலங்கள் தடுப்புக்காவல் மற்றும் பினையில்லாத காவலில் வைத்தல் ஆகியவை சித்திரவதைகளை அதிகரிக்கும் ஆபத்தான விதிகளாகும். நாட்டின் பாதுகாப்பிற்கானது என்ற போர்வையில் அமுலாக்கப்பட்ட இச்சட்டம் நீண்டகாலமாக உரிமைக்காக போராடும் தமிழினத்தை குறிவைத்து பாயவிடப்பட்டு வருகிறது. இதன்மூலம் எண்ணற்ற தமிழ் இளைஞர் யுவதிகள் […] - [அசிங்கமான அமெரிக்கரை வைத்துக்கொண்டு இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியாது](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%85%e0%ae%ae%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%af%88-%e0%ae%b5%e0%af%88%e0%ae%a4/): ‘அசிங்கமான அமெரிக்கரை வைத்துக்கொண்டு இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியாது. எனவே, அரசின் சாதாரண பெரும்பான்மை பலத்தையும் விரைவில் இல்லாமல் செய்வோம்.’ – என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ தெரிவித்தார். 11 கட்சிகளின் பிரதி நிதிகள் கண்டிக்கு சென்று வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்டனர். இதன்பின்னர் மகாநாயக்க தேரர்களை சந்தித்து, தமது வேலைத்திட்டத்தை கையளித்ததன். பின்னர் செய்தியாளர்களுக்குக் கருத்து வெளியிட்ட விமல் வீரவன்ஸ, ‘நாட்டை கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டத்தை நாம் முன்வைத்தோம். அமைச்சரவையில் இருந்து எம்மை நீக்கினர். ஆனால், நாம் வேலைத்திட்டத்தை கைவிடமாட்டோம். அதனை தொடர்ந்து முன்னெடுப்போம். நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ மிக மோசமானவர், அவருக்கு எப்படி கதைப்பதென்றுகூட தெரியாது. அது நேற்றைய சர்வகட்சி மாநாட்டில் புலனானது. எனவே, இந்த அசிங்கமான அமெரிக்கரை வைத்துக்கொண்டு பயணிக்க முடியாது. விரைவில் அரசின் சாதாரண பெரும்பான்மையையும் இல்லாமல் செய்வோம்.’ – என்றார். - [திட்டமிட்டபடி மே மாதம் சாதாரண தர பரீட்சைகள் இடம்பெறும்](https://minnal24.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%87-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87/): கடந்த ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதரபத்திர சாதாரண தர பரீட்சைகள் திட்டமிட்டபடி மே மாதம் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா இந்த விடயத்தைக் குறிப்பிட்டார். 2022ஆம் கல்வி ஆண்டுக்கான பாடப் புத்தகங்களில் 38 மில்லியனுக்கும் அதிகமானவை அச்சிடப்பட்டு பிரதான களஞ் சியசாலைகளில் வைக்கப்பட்டுள்ளதுடன் பாடசாலைகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. இவ்வாண்டுக்கான முதலாம் தவணை ஆரம்பமாகும்போது முழுமையாக பாடப் புத்தகங்கள் வழங்கும் பணிகள் நிறைவடையும் எனவும் அவர் கூறினார். - [கூட்டமைப்பை இன்று சந்திக்கவுள்ளார் ஜனாதிபதி](https://minnal24.com/%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%88-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95/): ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு சந்தித்துப் பேச்சு நடத்துவர். ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறும் இந்த சந்திப்பில் தமிழத் தேசி யக் கூட்டமைப்பின் தமிழ் அரசுக் கட்சி, புளொட் ஆகிய கட்சிகளின் தலைவர்களும் பாராளுமன்ற உறுப்பினர் களுமே பங்கேற்பர். மற்றொரு பங்காளிக் கட்சியான ரெலோ கட்சியில் இந்த சந்திப்பில் பங்கேற்க மாட்டார்கள் என்று முன்னரே அறி வித்திருந்தது. ஜனாதிபதி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் இந்த சந்திப்பு கடந்த 15ஆம் திகதி இடம்பெறுவதாக இருந்தது. ஆனால், எதிர்க்கட்சி நடத்திய போராட்டம் காரணமாக இன் றைய தினத்துக்கு சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டது. - [மே இறுதி வரை தொடரும்](https://minnal24.com/%e0%ae%ae%e0%af%87-%e0%ae%87%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%88-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/): தற்போதைய 5 மணி நேர மின்வெட்டு மே இறுதி வரை தொடர வாய்ப்புள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுத் தலைவர் தெரிவித்தார். எவ்வாறாயினும் புத்தாண்டு தினங்களில் மின் வெட்டு ஏற்பட வாய்ப்பில்லை. அனல் மின் நிலையங்கள் முழுமையாக எரிபொருளைப் பெற்றபோதிலும், தண்ணீர் பற்றாக்குறை காரணமாக மே மாதம் வரை குறைந்தது இரண்டு மணி நேரம் மின்சாரம் தடைப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். - [சிறைச்சாலையில் காதலியின் கரம் பிடித்தார் ஜூ லியன் அசேஞ்](https://minnal24.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9/): விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூ லியன் அசேஞ் தனது நீண்ட கால காதலியான ஸ்டெல்லா மோரிஸை தென்கிழக்கு லண்டனில் உள்ள உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் திருமணம் செய்துகொண்டார். 2019ஆம் ஆண்டு முதல் தென்கிழக்கு லண்டனில் உள்ள உயர் பாதுகாப்பு பெல்மார்ஷ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 50 வயதான ஜூலியன் அசேஞ், சிறைச்சாலையில் கைதிகளை பார்வையாளர்கள் பார் வையிடும் நேரத்தில் திருமண பந்தத்தில் இணைந்தார். சிறைச்சாலையில் நடந்த திருமணத்தில் 4 விருந்தினர்கள் மற்றும் இரண்டு சாட்சிகள் கலந்து கொள்ள அனுமதிக்கப் பட்டதாக அசேஞ்சின் ஆதரவாளர்கள் தெரிவித்தனர். - [உடனடியாக அனுமதி வழங்குமாறு கோரிக்கை](https://minnal24.com/%e0%ae%89%e0%ae%9f%e0%ae%a9%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%95-%e0%ae%85%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%ae%be/): சிகப்பு சீனியை இறக்குமதி செய்ய உடனடியாக அனுமதி வழங்குமாறு வர்த்தக அமைச்சு நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது. எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய 1,500 கொள்கலன்கள் கட்டணம் செலுத்தப்படாமல் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. - [ரணிலுடன் இணையவுள்ள 10 பாராளுமன்ற உறுப்பினர்கள்](https://minnal24.com/%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a3%e0%af%88%e0%ae%af%e0%ae%b5%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3-10-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%be/): எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களின் 10 பேர், விரைவில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணையவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே  பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த 10 பாராளுமன்ற உறுப்பினர்கள் இது குறித்து ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளதாகவும், அவர்கள் ரணிலுடன் இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாக அவர் கூறியுள்ளார். நாட்டில் நிலவும் உணவுப் பிரச்சினை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பிய போதே அளுத்கமகே இவ்வாறு தெரிவித்துள்ளார். - [சங்ககாரவின் சாதனையை முறியடித்தார் ஸ்டீவ் ஸ்மித்](https://minnal24.com/%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%ae%bf/): அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித்  குறைந்த டெஸ்ட் இன்னிங்ஸ்களில் 8,000 ஓட்டங்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். 8,000 ஓட்டங்களை ஸ்மித் தனது 151 ஆவது இன்னிங்ஸ்களில் எட்டியிருந்தார். இதற்கு முன்னர் இலங்கையின் தலைசிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான குமார் சங்கக்கார இந்த சாதனையை படைத்திருந்தார். 8000 ஓட்டங்களை எட்டுவதற்கு அவருக்கு 152 டெஸ்ட் இன்னிங்ஸ்கள் தேவைப்பட்டன. இந்நிலையில், அவுஸ்திரேலிய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெறும் மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் தொடரில், இந்த சாதனையை ஸ்டீவ் ஸ்மித் முறியடித்தார். பாகிஸ்தானின் லாகூரில் உள்ள கடாபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் ஸ்டீவன் ஸ்மித் 17 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இதுவரை 85 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்டீவன் ஸ்மித், 60.10 என்ற சராசரியில் 8,010 ஓட்டங்களை பெற்றுள்ளார். அவர் இதுவரையில் 27 டெஸ்ட் சதங்கள் பதிவுசெய்துள்ளார். மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும் செய்திகள் […] - [சர்வதேச நாடாளுமன்ற சங்கத்தின் பேச்சாளராக பங்கேற்ற முதல் இலங்கையர் சாணக்கியன்](https://minnal24.com/%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4/): சர்வதேச நாடாளுமன்ற சங்கத்தின் காலநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் பேச்சாளராக பங்கேற்ற முதல் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பெருமையினை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பெற்றுள்ளார் இந்தோனோஷியாவின் பாலியில் சர்வதேச நாடாளுமன்ற சங்கத்தின் 144ஆவது அமர்வு இடம்பெற்று வருகின்றது. இந்தநிலையில் குறித்த அமர்வில் காலநிலை மாற்றம் தொடர்பில் இன்று வியாழக்கிழமை மாநாடு ஒன்று நடைபெற்றிருந்தது. சர்வதேச நாடாளுமன்ற சங்கத்தில் 178 நாடுகள் உறுப்பு நாடுகள் உள்ள நிலையில், பிரித்தானியா, ஒஸ்ரியா, இந்தோனேசியா மற்றும் இலங்கையினை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஆகியோர் பேச்சாளர்களாக கருத்துக்களை வெளியிட்டிருந்தனர். இதன்போது அங்கு  கருத்து வெளியிட்ட அவர், இலங்கையில் சுற்றுசூழலினை அரசாங்கமே அழிக்கின்றது. அப்படியான நேரத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, கிளஸ்கோ மாநாட்டில் தெரிவித்த கருத்துக்கள் இலங்கையில் 100 சதவீதம் நடைமுறையில் இல்லை. அவை நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா என்பதனை சர்வதேச நாடுகள் கண்காணிக்க வேண்டும், எனக் […] - [பொன்னாலை இந்து மயானத்தை புனரமைக்கும் பணிகள் ஆரம்பம்](https://minnal24.com/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b2%e0%af%88-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88/): -யாழ் நிருபர்- பொன்னாலை இந்து மயானத்தை புனரமைக்கும் செயற்பாட்டில், எல்லைக் கட்டைகள் இடுகின்ற பணி ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. பொன்னாலை இந்து மயானம் சேதமடைந்து பற்றைகள் சூழ்ந்து காணப்பட்டது. இதைப் புனரமைக்க உதவுமாறு முகப்புத்தகம் வாயிலாக விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக காரைநகர் கருங்காலியை சேர்ந்த அமரர் கணேசமூர்த்தி இராஜேஸ்வரி அவர்களின் நினைவாக புலம்பெயர் தேசத்தில் உள்ள அவரது உறவினர் லோ.ஸ்ரீகாந்தன் அனுப்பிய முதற்கட்ட நிதியுடன் இப்புனரமைப்பு 2022 ஜனவரி 30 ஆம் திகதி முதற்கட்ட பணி ஆரம்பமாகியது. - [இராணுவ பாதுகாப்புடன் எரிபொருள் விநியோகம்](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a3%e0%af%81%e0%ae%b5-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf/): -கிளிநொச்சி நிருபர்- துணுக்காய் ப.நோ.கூட்டுறவுச் சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இராணுவப் பிரசன்னத்துடனேயே எரிபொருள் விநியோகம் இன்று இடம்பெற்று வருகிறது. இன்று அதிகாலை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற 6600 லீற்றர் டீசலானது, ஒவ்வொரு வாகனங்களுக்கும் தலா 5000 ரூபாய் வீதமே எரிபொருள் வழங்கப்பட்டு வருகிறது. இதே வேளை வாகனங்களுக்கு வழங்கப்படும் எரிபொருளானது வாகனங்களுக்கு இலக்கங்கள் வழங்கப்பட்டு, அதே நேரத்தில் இராணுவத்தினராலும் வாகன இலக்கத்தகடுகள் பதியப்பட்ட பின்னரே வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் எரிபொருளை பெற்றுக்கொள்ள நீண்ட வரிசையில் வாகனங்கள் தரித்து நின்றிருந்தன குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோல் இல்லை எனும் பதாகை கடந்த இரு நாட்களாக காணப்பட்ட போதும் மண்ணெண்ணை விநியோகமும் ஒரு குடும்ப அட்டைக்கு தலா 500 ரூபாய் வீதமே வழங்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது. - [சினிமா திரையரங்கு முன்பாக தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட நபர்](https://minnal24.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be/): -யாழ் நிருபர்- இச்சம்பவம் யாழ். நகர் கஸ்தூரியார் வீதியில் உள்ள மத்திய பிரதான உணவுக்களஞ்சிய பகுதியின் ராஜா சினிமா திரையரங்கு முன்பாக இடம்பெற்றது. குடும்ப உறவினர்களுக்கு கடந்த 19.03.2022 அன்று வேலைக்கு போய்வருவதாக கூறி விட்டு சென்று இரவு வரை வராத காரணத்தினால் தமது முறைப்பாட்டினை பொலிஸ் நிலையத்தில் குடும்ப உறவினர்கள் முறைப்பாட்டினை செய்துள்ளனர் அதன் படி குறித்த சம்பவத்தில் இன்று மாலை 05.30 மணியளவில் யாழ். நகர் மத்திய உணவுக்களஞ்சிய பகுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்யப்பட்டு நிலையில் அவரின் உடலம் காணப்பட்டுள்ளது. இவ் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணையினை யாழ்ப்பாண பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர். - [அதிக விலைக்கு எரிவாயு விற்கப்பட்டதால் அமைதியின்மை](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf-2/): -நுவரெலியா நிருபர்- கொட்டகலை நகரில் உள்ள எரிவாயு வர்த்தக நிலையமொன்றில் லிட்ரோ எரிவாயு சிலிண்டர் ஒன்றினை 4200 ரூபாவுக்கு விற்பனை செய்ததனையடுத்து குறித்த பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. குறித்த வர்த்தக நிலையத்திற்கு இன்று 70 லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் வந்துள்ளதாகவும், குறித்த சிலிண்டர் ஒன்று 2800 ரூபாவுக்கு விற்பனை செய்யவிருந்த போதிலும் சிலிண்டரினை 4200 ரூபாவுக்கு விற்பனை செய்ததனாலும், எரிவாயுவினை வைத்துகொண்டு முடிந்துவிட்டது என தெரிவித்ததனாலும் இந்த அமைதியின்மை ஏற்பட்டதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். அதனை தொடர்ந்து கொட்டகலை நகரில் மக்கள் கொட்டகலை நுவரெலியா பிரதான வீதியினை மறித்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டனர். அதனை தொடர்ந்து கொட்டகலை வர்த்தகம் சங்கம் தலையீட்டு குறித்த கடையில் எஞ்சியிருந்து எரிவாயு சிலிண்டர்களை பொது மக்களுக்கு தற்போது உள்ள விலையில் விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலதிக விலைக்கு விற்கப்பட்டவர்களுக்கு மீதி பணத்தினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொட்டகலை வர்த்தக சங்கத்தின் தலைவர் புஸ்பா விஸ்வநாதன் தெரிவித்தார். […] - [மட்டு.சந்திவெளியில் விபத்து : இளம் குடும்பஸ்த்தர் பலி](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4/): -வாழைச்சேனை நிருபர்- மட்டக்களப்பு சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிவேம்பு பண்ணை வீதியில் இன்று  பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் குடும்பஸ்த்தர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் மாவடிவேம்பு பகுதியை சேர்ந்த  சிவலிங்கம் பவாநந்தகுமார் (வயது32) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். துவிச்சக்கர வண்டியில் வந்தவரை மாவடிவேம்பு – பண்ணை வீதி வழியாக வீதி அபிவிருத்தி வேலைக்காக கற்கல் ஏற்றிச் சென்ற கனரக வாகனம் மோதியதால் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. இவ் விபத்து தொடர்பாக பிரதேச மக்கள் தமது எதிர்ப்பை தெரிவித்து கலகத்தில் ஈடுபட்டனர். இதனால் அமைதியின்மை ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு சந்திவெளி பொலிஸார் வருகை தந்து விசாரனைகளை மேற்கொண்டிருந்தனர். சடலம் சந்திவெளி பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. டிப்பர் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் விபத்தை ஏற்படுத்திய வாகனம் சந்திவெளிப் பொலீஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த விபத்து தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். - [அரச காணியில் சட்டவிரோத மணல் அகழ்வு](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8b%e0%ae%a4-%e0%ae%ae/): -மன்னார் நிருபர்- மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஆத்திமோட்டை கிராம பகுதியில் உள்ள அரச காணியில் தனி நபர்கள் முறையற்ற விதத்தில் மணல் அகழ்வுக்கான அனுமதிப் பத்திரங்களை பெற்று மணல் அகழ்வில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று வியாழக்கிழமை காலை ஆத்திமோட்டை பகுதியில் இடம் பெற்று வரும் மணல் அகழ்வை நிறுத்தக் கோரி ஆத்திமோட்டை கமக்கார அமைப்பினரால் அப்பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபட்ட டிப்பர் வாகனங்கள் இடை மறித்து தமது எதிர்ப்பை தெரிவித்தனர். இதனால் சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்டவர்களுக்கும்இ ஆத்திமோட்டை கமக்கார அமைப்பினருக்கும் இடையில் தர்க்க நிலை ஏற்பட்டது. குறித்த மண் அகழ்வின் காரணமாக கள்ளியடி- ஆத்திமோட்டை வீதி கடந்த 10 வருடங்களுக்கு மேலாக மாந்தை மேற்கு பிரதேச சபையினால் புனரமைப்பு நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை என ஆத்திமோட்டை கமக்கார அமைப்பினர் விசனம் தெரிவித்துள்ளனர். குறித்த வீதியூடாக மக்கள் பயணம் செய்ய முடியாத நிலையில், பல்வேறு பிரச்சனைகளுக்கு […] - [கொரோனா இடைத்தங்கல்  முகாமில் பல லட்சம் ரூபா மோசடி](https://minnal24.com/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b0%e0%af%8b%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%87%e0%ae%9f%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%be/): -யாழ் நிருபர்- யாழ் மாவட்டத்தில் அமைக்கப்பட்ட மூன்று கொரோனா இடைத்தங்கல்  முகாமில் இருந்த பல லட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள்  கணக்கு அறிக்கையில் இடம் பெறாமல் மாயமாக சென்றுள்ளது. யாழ் மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்த காலப்பகுதியில் தனிமைப்படுத்தி சிகிச்சை வழங்குவதற்கும் பிற மாவட்டங்களிலிருந்து கொரோனா என இனங்காணப்பட்டவர்களை தனிமைப் படுத்துவதற்காக மருதங்கேணியில் நாவற்குழி மற்றும் வட்டுக்கோட்டை தனிமைப்படுத்தல் நிலையம் அமைக்கப்பட்டது  வடமாகாண சுகாதார அமைச்சு மற்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோரின் கண்காணிப்பில்  குறித்த  கொரோனா  இடைத்தங்கல் சிகிச்சை நிலையங்கள்  செயற்படுத்தப்பட்டன. இவ்வாறான நிலையில் குறித்த  மருதங்கேணி தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு தொலைக்காட்சிகள், குளிர்சாதனப் பெட்டிகள், சலவை இயந்திரம் என பல  பொருட்கள் பல மில்லியன் ரூபா செலவில் வழங்கப்பட்டது. இந்நிலையில் யாழில் கொவிட் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்த நிலையில் இடைத்தங்கல் நிலையங்கள் அகற்றப்பட்டது.  குறித்த இடைத்தங்கல் நிலையங்கள் அமைக்கப்பட்ட போது வழங்கப்பட்ட பல மில்லியன் ரூபா பொருட்கள் அதனை […] - [வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் நடாத்திய முயற்சியாளர் கௌரவிப்பு நிகழ்வு](https://minnal24.com/%e0%ae%b5%e0%ae%9f%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a/): வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் நடாத்திய சர்வதேச மகளிர் தினமும் தொழில் முயற்சியாளர் கௌரவிப்பு நிகழ்வும் இன்று வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் கு.பிரபாகரமூர்த்தி  தலைமையில் வடமராட்சி கிழக்கு பிரதேச கலாசார நிலையத்தில் இடம்பெற்றது. காலை 11 மணியளவில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம,சிறப்பு,கௌரவ  விருந்தினர்கள் மங்கள விளக்கேற்றி ஆரம்பித்து வைத்ததுடன் தமிழ்மொழி வாழ்த்தும் இடம் பெற்றதை தொடர்ந்து செம்பியன்பற்று மகளிர் விவகார குழுவினரின் ஏற்பாட்டில் வரவேற்பு நடனமும் அதனை தொடர்ந்து வரவேற்புரை, இடம் பெற்றது.  தொடர்ந்து தலைமை  உரையினை வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் கு.பிரபாகரமூர்த்தி நிகழ்த்தினார்.  தொடர்ந்து சிறப்புரைகளை  சட்ட உதவி உத்தியோகத்தர் ந.ரோபின்சா, வடக்கு மாகாண தொழில்துறை திணைக்கள பணிப்பாளர் செ.வனஜா, யாழ்ப்பாணம் செயற்பாட்டு நிறுவன இணைப்பாளர் ச.சுகிர்தராஜ், சொலிடாறிரி நிறுவன இணைப்பாளர்  க.கிருசாந், உட்பட பலரும் ஆற்றினர். தொடர்ந்து வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட மூன்று பெண் தொழில் முயற்சியாளர்களகளான அம்பன் கிராம சேவகர் பிரிவை சேர்ந்த  […] - [யாழில் கடந்த வருடம் பெண்களுக்கு எதிரான 13 வன்முறை சம்பவங்கள் பதிவு](https://minnal24.com/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d/): யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த வருடம் 13 பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்பில் மாவட்ட பெண்கள் அபிவிருத்தி திணைக்களத்திற்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார் யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் பெண்கள் விவகார இராஜாங்க அமைச்சின் ஏற்பாட்டில் பொதுப்போக்குவரத்து பேருந்துகளில் பெண்களுக்கு இடம்பெறும் வன்முறை சம்பவங்களை இல்லாதொழிப்பதற்கான விழிப்புணர்வு செயற்பாட்டில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நாடு பூராகவும் இடம்பெற்று வருகின்றன அதனை கட்டுப்படுத்தும் முகமாக பெண்கள் விவகார அமைச்சினால் ஒரு விழிப்புணர்வு செயற்பாடு நாடு பூராகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதன் ஒரு அங்கமாக யாழ்ப்பாண மாவட்டத்திலும் இன்றைய தினம் முன்னெடுக்கப்படுகிறது இந்த வன்முறைச் சம்பவங்களை இல்லாதொழிப்பதற்கு அனைவரின் ஒத்துழைப்பும் மிக அவசியமாகும். குறிப்பாக பெண்கள், இளைஞர்கள் மற்றும் மூத்த பிரஜைகள் இந்த விடயத்தில் மிகவும் ஒத்துழைப்போடு செயற்படுவதன் […] - [யாழ்.அச்சுவேலி மத்திய கல்லூரியில் கணினி உபகரணங்கள் திருட்டு](https://minnal24.com/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%85%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%b2/): -யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் – அச்சுவேலி மத்திய கல்லூரியில் உள்ள கணினி உபகரணங்கள் இனந்தெரியாதோரால் திருடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலையின் பரீட்சைகள் ஆரம்பித்துள்ள நிலையில் நேற்றிரவு ஏற்பட்ட மின் வெட்டினை வாய்ப்பாகப் பயன்படுத்தி பாடசாலையின் கதவு, ஜன்னல் உடைக்கப்பட்டு கணினி உபகரணங்கள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. பாடசாலையின் கண்காணிப்பு கமரா மின் துண்டிப்பினால் இயங்காதிருந்த நேரம் அதனை வாய்ப்பாகப் பயன்படுத்தி இனந்தெரியாதோர் திருட்டில் ஈடுபட்டுள்ளனர். கடந்த கொவிட் காலத்தின் போதும் பாடசாலையில் தங்கியிருந்து சிலர் அங்குள்ள பொருட்களைச் சூறையாடிச் சென்றனர். இருப்பினும் அது தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில் நேற்று மாலை குறித்த திருட்டு இடம்பெற்றுள்ளது. திருட்டு இடம்பெற்ற பாடசாலையின் வளாகத்தினுள் பொலிஸாரின் மோப்ப நாய் மற்றும் தடயவியல் பொலிஸார் உள்ளிட்டோர் தடயங்களைச் சேகரித்தனர். குறித்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். - [சக்திவாய்ந்த வெடிமருந்து கடத்தல்காரர் ராணுவ புலனாய்வு பிரிவினரால் கைது](https://minnal24.com/%e0%ae%9a%e0%ae%95%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%b5%e0%af%86%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4/): -கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி பரந்தனைச் சேர்ந்த சிவலிங்கம் யுவராஜ் (வயது 25) என்பவர் கடந்த 05.12.2021 அன்று கிரைண்டர் மூலம் வெடிமருந்துகளை வெட்டிக் கொண்டிருந்த போது மோட்டார் குண்டு வெடித்ததில் அவரது இளைய சகோதரர் சிவலிங்கம் திலகரிஷன் படுகாயமடைந்தார். இத்தாவில் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்ற கபிரியேல் முத்துலிங்கம் என்பவரின் அறிவுறுத்தலின் பேரில், பாதிக்கப்பட்ட நபர், ரமேஷுக்கு வெடிமருந்துகளை வெட்டி விற்பனை செய்துள்ளார். யுவராஜ் இறந்ததையடுத்து, ரமேஷ் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இந்த நிலையில் 23.03.2022 அன்று இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம், பளை பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்கு இரகசியமாகச் சென்ற வேளையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளுக்காக அவர் பயங்கரவாத தடுப்பு பிரிவு மற்றும் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.   - [வடக்கு கல்விப்பணிப்பாளர் மீது இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு](https://minnal24.com/%e0%ae%b5%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0/): -யாழ் நிருபர்- வடமாகாண கல்வி அதிகாரிகளின் பக்கச்சார்புகளுக்கு வெளிமாவட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் பாதிக்கப்படுவதை அனுமதிக்க மாட்டோம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நேற்று புதன்கிழமை வடமாகாண கல்வி அமைச்சில் ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பான கூட்டம் நடைபெற்ற நிகழ்ச்சியில் அது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், குறித்த கூட்டம் தொடர்பாக, இலங்கை ஆசிரியர் சங்கத்திற்கு உரிய முறையில் தகவலெதுவும் வழங்கப்பட்டிருக்கவில்லை. இலங்கை ஆசிய சங்கத்தை திட்டமிட்டு புறக்கணித்து எடுக்கப்பட்டுள்ள பக்கச் சார்புடைய எந்தவொரு ஒரு தீர்மானங்களுக்கும் இலங்கை ஆசிரியர் சங்கம் உடன்படப்போவதில்லை . வடமாகாண கல்விப் பணிப்பாளரின் பொறுப்பேற்ற, திட்டமிடப்படாத, பக்கச் சார்பான இடமாற்ற நடைமுறைகளால் பல சிக்கல்கள் எழுந்துள்ளது. இடமாற்ற நடைமுறைகளுக்கு வெளிமாவட்டத்தில் பணியாற்றும் ஆசிரியர்களை மட்டும் பலிக்கடாவாக்கும் செயற்பாடுகளுக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் அனுமதிக்கப் போவதில்லை. வடமாகாண கல்விப் பணிப்பாளராக ஏழு வருடங்கள் பூர்த்தி […] - [பல ஆயிரம் கோடி ரூபாயை பெற்று கொண்டு கைமாறாக தமிழக மீனவர்களை கைது செய்கிறது இலங்கை அரசு](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%b2-%e0%ae%86%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b0%e0%af%82%e0%ae%aa%e0%ae%be%e0%ae%af%e0%af%88-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1/): -மன்னார் நிருபர்- இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீண்டு வர பல ஆயிரம் கோடி ரூபாவை நிதி உதவியாக இந்திய அரசிடம் பெற்றுக் கொண்ட இலங்கை அரசு, அதற்கு கைமாறாக தமிழக மீனவர்கள் 16 பேரை சிறைபிடித்துள்ளதாக ராமேஸ்வரம் மீனவ சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், இலங்கை கடற்படையின் இந்த கைது நடவடிக்கையை கண்டித்து நாளை வெள்ளிக்கிழமை  முதல் ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று வியாழக்கிழமை காலை இராமேஸ்வரத்தில் நடத்திய அவசர ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றியுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் மீன்பிடி துறை முகங்களில் இருந்து அரசு மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று நேற்று காலை மீன் பிடிக்க கடலுக்குள் சென்ற ராமேஸ்வரத்தை சேர்ந்த 12 மீனவர்களையும், மண்டபத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் என மொத்தமாக 16 மீனவர்களை எல்லை தாண்டி மீன் […] - [குடும்ப பங்கீட்டு அட்டை , அடையாள அட்டை பிரதிக்கு ஒரு எரிவாயு சிலிண்டர்](https://minnal24.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa-%e0%ae%aa%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%85%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88/): -யாழ் நிருபர்- நாட்டில் தற்போது எரிவாயு, எரிபொருட்கள் உள்ளிட்ட பெரும்பாலான பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றது. அந்த வகையில், யாழ்ப்பாணம் – சாவகச்சேரியில் உள்ள Laugfs Gas  பிரதான விநியோக நிலையத்தில், பல வாரங்களின் பின்னர் குடும்ப பங்கீட்டு அட்டை மற்றும் அடையாள அட்டை பிரதிக்கு ஒரு எரிவாயு சிலிண்டர் வழங்கப்பட்டு வருகின்றது. இதனால் மக்கள் வெற்று எரிவாயு சிலிண்டர்களும் நீண்ட வரிசையில் நிற்பதனை அவதானிக்க முடிந்தது. - [வவுனியாவை சேர்ந்த 10 பேரையும் அகதிகள் முகாமில் தங்க வைக்க உத்தரவு](https://minnal24.com/%e0%ae%b5%e0%ae%b5%e0%af%81%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%af%88-%e0%ae%9a%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-10-%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%af%88%e0%ae%af/): -மன்னார் நிருபர்- தலைமன்னாரில் இருந்து படகு மூலம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு ராமேஸ்வரத்திற்கு சென்ற 10 பேரையும் மண்டபம் இலங்கை தமிழர் அகதிகள் முகாமில் தங்க வைக்க ராமேஸ்வரம் நீதிமன்றம் நேற்று புதன்கிழமை மாலை உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் உள்ள மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ் மக்கள் 16 பேர் தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர். செவ்வாய்க்கிழமை  அதிகாலை 6 பேர் அகதிகளாக வந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு ஒரு படகில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் அகதிகளாக தனுஷ்கோடி பகுதிக்கு சென்றுள்ளனர். தனுஷ்கோடி மீனவர்கள் கடலோர காவல் குழும அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அரசுத்துறை அதிகாரிகள் அவர்களை மீட்டு விசாரணை மேற்கொண்டதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு சிறுவர்கள் உள்ளடங்களாக 10 பேர் இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழகத்திற்கு தஞ்சம் புகுந்ததாக […] - [வாகரையில் பன்றிக்கு வைக்கப்பட்டிருந்த மின்சாரத்தில் சிக்குண்டு குடும்பஸ்த்தர் உயிரிழப்பு](https://minnal24.com/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5%e0%af%88%e0%ae%95%e0%af%8d/): -வாழைச்சேனை நிருபர்- மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோமத்லாவெளி கிராம சேவகர் பிரிவில் பன்றிக்கு வைக்கப்பட்டிருந்த மின்சாரத்தில் சிக்குண்டு குடும்பஸ்த்தர் உயிரிழந்துள்ளார் என வாகரை பொலிஸார் தெரிவித்தனர். கோமத்தலாவெளி கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சந்திரசேகரன் யோகேஸ்வரன் (வயது 32) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, உயிரிழந்த நபர் வத்தவப் பழப் பயிர் செய்கையில் ஈடுபட்டு வருபவர். தன்னுடைய தோட்டத்துக்கு மின்சார சபையில் முறையாக மின்சாரம் பெறப்பட்டிருந்த நிலையில், தோட்டத்துக்குள் பன்றி மற்றும் காட்டு மிருகங்கள் வருவதினால் அவற்றில் இருந்து பயிர்களை பாதுகாப்பதற்காக முறையற்ற விதத்தில் மின்சாரத்தினை பயன்படுத்தியுள்ளார், என பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது. முறையற்ற விதத்தில் மின்சாரத்துடன் கம்பி இணைக்கப்பட்டதினால் மின்சாரம் தாக்கி இவ் உயிரிழப்பு இடம்பெற்றுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவிகின்றனர். சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டள்ளது.   - [ஆலயத்திற்கு வழிபட வந்தவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு](https://minnal24.com/%e0%ae%86%e0%ae%b2%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%9f-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b0/): -யாழ் நிருபர்- இன்று, திருநெல்வேலி அம்மன் ஆலயத்திற்கு வழிபட வந்த ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 55 வயதுடைய ஆண் ஒருவர் ஆலயத்தை வழிபட ஆலயத்துக்குள் நுழைந்த போது திடீரென மயங்கி விழுந்தால் அப்பகுதியில் நின்றவர்கள் உடனடியாக அம்புலன்ஸ் வண்டிக்கு அழைப்பை ஏற்படுத்தி தகவல் வழங்கினர். அம்புலன்ஸ் வண்டியில் வந்த வைத்தியர், மயங்கி விழுந்த நபரை பரிசோதித்த போது அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தார். குறித்த விடயம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். - [அரசாங்கத்தின் செயற்பாடுகளை எதிர்த்து மொட்டையடித்தார் ஈசன்](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%81/): -பதுளை நிருபர்- ஐக்கிய மக்கள் சக்தியின் பசறை பிரதேச சபை  உறுப்பினரான ஈசன்,  தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு வித்தியாசமான முறையில் தனது எதிர்ப்பை தெரிவித்து வருகிறார். அண்மையில், ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தில், யாசகம் செய்து தனிமனித எதிர்ப்பை வெளியிட்டிருந்த குறித்த உறுப்பினர், இன்று பசறை பிரதேச சபைக்கு எதிராக மொட்டையடித்து எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். அத்துடன், புண்ணாக்கையும்  சமைக்கப்படாத இறைலையும் உண்டு அரசாங்கத்துக்கான எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதி மற்றும்   அரசாங்கத்தினால் நாடு மொட்டை அடிக்கப்பட்டுள்ளதாகவும்  இதனை உணர்த்தும் வகையிலேயே தான்  மொட்டையடித்ததாகவும் தெரிவித்துள்ளார். - [எரிவாயுக்காக வரிசையில் காத்திருந்த முதியவர் மயங்கி விழுந்தார்](https://minnal24.com/%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95/): தெஹிவளையில் எரிவாயு பெறுவதற்காக வரிசையில் காத்திருந்த முதியவர் ஒருவர் எரிவாயு சிலிண்டர்கள் மீது விழுந்து மயங்கி விழுந்துள்ளார். சம்பவ இடத்தில் இருந்த தெஹிவளை பொலிஸார் குறித்த முதியவரை கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். இன்று காலை முதல் தெஹிவளை காலி வீதி, வைத்தியசாலைக்கு அருகில் உள்ள எரிவாயு விற்பனை நிலையத்தில் எரிவாயு எடுக்க வந்த மக்களின் நீண்ட வரிசை காணப்பட்டதுடன், வரிசையில் காத்திருந்த முதியவர் மயங்கி விழுந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். - [தீ பரவலிற்கான காரணம் கண்டறியப்பட்டது](https://minnal24.com/%e0%ae%a4%e0%af%80-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f/): கட்டுகஸ்தோட்டை-பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாப்புகட வத்த பிரதேசத்தில் மூன்று பேரை பலியெடுத்த தீ விபத்துக்கான காரணம் தெரியவந்துள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவத்தில் உயிரிழந்த யுவதிக்கும்  இளைஞருக்குமிடையிலான காதல் தொடர்பே இந்த தீபரவலக்கான காரணம் என்றும், இச்சம்பவத்தில் உயிரிழந்த இளைஞனே தீயை வைத்திருப்பதாக ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று வியாழக்கிழமை அதிகாலை குறித்த வீட்டுக்கு வருகைத் தந்த இளைஞன், வீட்டுக்குள் எவருக்கும் செல்ல முடியாத வகையில் கதவுகளை பூட்டி, தீயை வைத்துள்ளமை தெரிய வந்துள்ளது. அத்துடன் குறித்த இளைஞன் ஏதோ ஒருவகையான திரவத்தை வீட்டுக்குள் வீசியுள்ளதாக வைத்தியசாலையில் தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ள யுவதியின் தாய் வாக்குமூலமளித்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை இச்சம்பவத்தில் குறித்த இளைஞன், யுவதி மற்றும் யுவதியின் தந்தை ஆகியோர் உயிரிழந்துள்ளதுடன், தாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். - [சங்கானை கூட்டுறவு சங்கம் இலஞ்சம் பெறுவதாக குற்றச்சாட்டு](https://minnal24.com/%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9%e0%af%88-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/): -யாழ் நிருபர்- சங்கானை பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தினர் இலஞ்சம் பெறுவதாக அந்த சங்கத்தின் அங்கத்தவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் வடக்கு, மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர், யாழ். மாவட்ட கூட்டுறவு உதவி ஆணையாளர் ஆகியோருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். அங்கத்தவர்கள் இதுதொடர்பாக கருத்து தெரிவிக்கையில், நாங்கள் சங்கானை பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கத்தின் அங்கத்தவர்களாக நீண்ட காலமாக உள்ளோம். எமது தொழிலை நேர்த்தியாக செய்வதற்கு ஒவ்வொரு ஆண்டும் எமக்கான அனுமதிப்பத்திரங்கள் கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தினால் வழங்கப்படுகின்றது. இந்த அனுமதிப்பத்திரங்கள் அந்தந்த பகுதி ப.தெ.வ.அ கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கப்பட்டு, அவர்கள் ஊடாகவே அங்கத்தவர்களுக்கு வழங்கப்படுகின்றன. அந்த வகையில் இந்த அனுமதிப்பத்திரங்களை எமக்கு வழங்கும் போது கடந்த காலங்களில் சங்கத்தால் 250 ரூபா எம்மிடமிருந்து கையூட்டாக பெறப்பட்டது. இந்த ஆண்டு ஒவ்வொரு அங்கத்தவர்களிடமிருந்தும் 400 ரூபா இவ்வாறு பெறப்பட்ட பின்னரே அனுமதிப்பத்திரங்கள் […] - [டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு](https://minnal24.com/%e0%ae%9f%e0%af%86%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a8%e0%af%8b%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a3%e0%af%8d-2/): டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் கடந்த வாரத்தில் துரித அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. அதன்படி, கடந்த வாரத்தில் 733 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அதற்கு முந்தைய வாரம் பதிவாகிய நோயாளர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இது 19.6 வீத அதிகரிப்பாகும் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, கடந்த வாரம் பதிவான டெங்கு நோயாளர்களில் 44.5% பேர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. - [பல தூதரகங்களுக்கு பூட்டு](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%b2-%e0%ae%a4%e0%af%82%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%95%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%aa%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81/): டொலர் பிரச்சினையைக் காரணங்காட்டி உலக நாடுகள் பலவற்றில் உள்ள இலங்கை தூதரகங்களை அரசாங்கம் மூடி வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸமன் கிரியெல்ல தெரிவித்தார். ஈராக், நோர்வே, சைப்பிரஸ் ஆகிய நாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களை தற்போதைய அரசாங்கம் மூடியுள்ளது. சைப்பிரஸில் ஆயிரக்கணக்கான இலங்கையர்கள் வாழ்கிறார்கள். இவ்வாறான நிலையில் அங்குள்ள தூதரகத்தையும் அரசாங்கம் மூடியுள்ளதாக சற்றுமுன்னர் பாராளுமன்றத்தில் உரையாற்றும்போதே அவர் மேலும் தெரிவித்தார். - [தேவையானளவு எரிபொருள் இருப்பில் உள்ளது](https://minnal24.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b3%e0%ae%b5%e0%af%81-%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81/): நாட்டை வந்தடைந்துள்ள எரிபொருள் தாங்கிய கப்பலில் இருந்து தரையிறக்கப்பட்ட 3,500 மெட்ரிக் டன் எரிவாயுவை நாடு முழுவதிலும் விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அதேநேரம், தேவையான அளவு சமையல் எரிவாயு கையிருப்பில் உள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் 10 நாட்களில் 10 இலட்சம் எரிவாயு கொள்கலன்களை நாடுமுழுவதிலும் விநியோகிக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். மேலும் 12,000 மெட்ரிக் டன் எரிவாயு எதிர்வரும் நாட்களில் நாட்டை வந்தடையவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க குறிப்பிட்டுள்ளார். - [வீட்டில் எரிபொருளை சேமித்து வைப்பது ஆபத்து](https://minnal24.com/%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%88-%e0%ae%9a%e0%af%87%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a4/): வீட்டில் எரிபொருளை சேமித்து வைப்பது ஆபத்து நாட்டில் நிலவும் நெருக்கடிக்கு மத்தியில் மக்கள் வீட்டில் எரிபொருளை சேமித்து வைப்பதால் எரிபொருள் தொடர்பான விபத்துக்கள் அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் இலங்கை தேசிய வைத்தியசாலையின் பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் கயான் முனசிங்க ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், தீ விபத்துக்கள் மற்றும் எரிபொருள் தொடர்பான விபத்துக்கள் காரணமாக நாடு ஆபத்தான சூழ்நிலையை எதிர்நோக்கியுள்ளது. வீடுகளில் எரிபொருள் சேமிப்பு வசதிகள் இல்லாததாலும், எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் இல்லாததாலும் பெற்றோல் போன்ற எரிபொருளை சேமித்து வைப்பது ஆபத்தானது என தெரிவித்தார். எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மற்றும் எரிபொருள் சேமிப்புக் கிடங்குகளின் பாதுகாப்பு தன்மையை சுட்டிக்காட்டிய அவர், கடந்த சில நாட்களாக எரிபொருள் தொடர்பான விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், பல வீடுகள் தீப்பிடித்து எரிந்தன. ஜனவரி மாதம் வரை நாளாந்தம் ஒன்று அல்லது இரண்டு பெற்றோல் தொடர்பான தீக்காய […] - [தங்கத்தின் விலை தொடர் அதிகரிப்பு : நகை கடை உரிமையாளர்கள் பாதிப்பு](https://minnal24.com/%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4/): -மன்னார் நிருபர்- நாட்டில் தொடர்ச்சியாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் பண வீக்க அதிகரிப்பின் காரணமாக மன்னார் மாவட்டத்தில் நடுத்தர மற்றும் சிறு நகை கடை உரிமையாளர்கள் உள்ளடங்களாக நகை தொழிலகங்களில் பணிபுரியும் ஊழியர்களும் விற்பனை இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர். விலைவாசி அதிகரிப்பு, பொருட்களுக்கான தட்டுப்பாடு, வருமானம் இன்மையால் மக்கள் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதில் அதிக ஆர்வம் காட்டுவதாகவும் தங்கத்தின் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றமையால் நகை கொள்வனவுகள் பாரிய அளவில் குறைவடந்துள்ளதாகவும் மன்னார் நகைக்கடை உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் கவலை தெரிவித்துள்ளனர். குறிப்பாக இந்த மாத ஆரம்பத்தில் இருந்து 24 கரட் தங்கம் ஒரு லட்சத்து ஐம்பத்து எட்டாயிரம் தொடக்கம் ஒரு லட்சத்து அறுபதாயிரம் வரையில் அதிகரித்துள்ளமையினால் மக்கள் நகை கொள்வனவுகளில் ஆர்வம் காட்டுவதை தவிர்த்து வருவதாகவும் இதனால் விற்பனை சடுதியாக குறைந்துள்ளதாகவும் நகை விற்பனை நிலைய உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அதே நேரம் தொடர்ச்சியாக விற்பனை நடவடிக்கை குறைந்து […] - [கிளிநொச்சி நீர் வழங்கல் சபையால் இரத்ததான நிகழ்வு](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8a%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d/): -கிளிநொச்சி நிருபர்- சர்வதேச நீர் வழங்கல் தினமான மார்ச் 22 தினத்தை முன்னிட்டு தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் வட பிராந்திய ஊழியர் தொழிற்சங்கத்தின்ஏற்பாட்டில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின்  கிளிநொச்சிமுல்லைத்தீவு மாவட்ட அலுவலங்களின் ஊழியர்கள் நேற்று புதன்கிழமை இரத்த தானம்வழங்கியுள்ளனர். நேற்று காலை கிளிநொச்சி மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில்கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் இரத்த வங்கி கிளைக்கு சுமார் 30வரையான ஊழியர்கள் இரத்த தானம்  வழங்கியிருந்தார்கள். மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும் செய்திகள் நிகழ்வுகள் உலக செய்திகள் Videos - [பேத்தாழை கலைமகள் முன்பள்ளியின் கலை விழா](https://minnal24.com/%e0%ae%aa%e0%af%87%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b4%e0%af%88-%e0%ae%95%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b3%e0%af%8d/): -வாழைச்சேனை நிருபர்- மட்டக்களப்பு வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபை நிர்வாகத்திற்குட்பட்ட பேத்தாழை கலைமகள் முன்பள்ளியின் கலை விழா ஆசிரியை கேமலதா யேசுரெட்ணம் தலைமையில் நடைபெற்றது. இப்  பாடசாலையில் கல்வி கற்று தரம் 1 இற்கு வகுப்பேற்றம் பெற்று செல்லும் மாணவர்களினை கௌரவிப்பதுடன் புதிய மாணவ்களை வரவேற்க்கும் நிகழ்வும் இடம்பெற்றது. அதிதிகள் மலர் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டதுடன் மாணவ்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றது. இதன்போது மாணவர்களுக்கு நினைவுச் சின்னங்கள் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். அதிதிகளாக கோறளைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் சோபா ஜெயரஞ்சித், செயலாளர் ச.நவநீதன்,சனசமூக அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர் அப்துல்லாஹாருன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர். - [இலங்கையின் இலக்கை அமெரிக்கா வரவேற்றது](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%85%e0%ae%ae%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95/): சர்வதேச நாணய நிதியத்திடம் (ஐஎம்.ஃஎப்) செல்வதற்கு இலங்கை மேற்கொண்டுள்ள தீர்மானத்தை வரவேற்பதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அரசியல் நடவடிக்கைகள் தொடர்பான உப செயலாளர் விக்டோரியா நூலண்ட் தெரிவித்தார். கொழும்பில்   நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார். மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கும் ஜனநாயக இடைவெளியை விரிவாக்கம் செய்யவும் இலங்கையை அமெரிக்கா ஊக்குவிப்பதாகக் குறிப்பிட்ட அவர், பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மிக நெருக்கடியான நிலையில், தமது நாடு இலங்கையுடன் இருக்கும் என்று குறிப்பிட்டார். 2030 ஆம் ஆண்டளவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் இருந்து 70 வீத மின்சாரத்தை உற்பத்தி செய்யும் இலங்கையின் இலக்கை அமெரிக்கா வரவேற்றது. நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளுக்கான கடப்பாடுகளில் தொடர்ந்து முன்னேறுமாறு இலங்கையை அமெரிக்கா ஊக்குவித்தது.. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகளை விடுவித்தல், நீதி சீர்திருத்த நிகழ்ச்சி நிரல் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளுடனான ஈடுபாடு ஆகியவற்றையும் அமெரிக்கா வரவேற்றது. […] - [அனைத்து புகையிரத கட்டணங்களும் அதிகரிப்பு](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%a9%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a3%e0%ae%99%e0%af%8d/): அனைத்து புகையிரத கட்டணங்களும் நேற்று புதன்கிழமை நள்ளிரவுடன்  அதிகரிப்பட்டுள்ளன. அந்த வகையில் கட்டண அதிகரிப்பு தொடர்பான விபரங்கள் பின்வருமாறு… A/C முதலாம் வகுப்பு ஆசன முற்பதிவு யாழ்- கொழும்பு. 2000.00 பொல்கஹவெலை 2000.00 யாழ்- குருணாகல் 1800.00 யாழ்- அனுராதபுரம். 1500.00 வவுனியா. 1500.00 யாழ்- கிளிநொச்சி 1300.00 இரண்டாம் வகுப்பு- ஆசன முற்பதிவு யாழ்- கொழும்பு. 1500.00 பொல்கஹவெலை 1500.00 யாழ்- குருணாகல் 1300.00 யாழ்- அனுராதபுரம். 1000.00 வவுனியா. 1000.00 யாழ்- கிளிநொச்சி 800.00 மூன்றாம் வகுப்பு ஆசன முற்பதிவு யாழ்- கொழும்பு. 1200.00 பொல்கஹவெலை 1200.00 யாழ்- குருணாகல் 1000.00 யாழ்- அனுராதபுரம். 700.00 வவுனியா. 700.00 யாழ்- கிளிநொச்சி 500.00 சாதாரண பிரயாண கட்டணங்களும் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. - [அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 16 இந்திய மீனவர்கள் கைது](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%80%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%88/): இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 16 இந்திய மீனவர்கள் 2 பகுதிகளில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று நெடுந்தீவு அருகே இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் ஒரு படகையும் அதிலிருந்த 4 மீனவர்களையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை மயிலிட்டி துறைமுகம் அழைத்து வந்து கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேபோல இரணைத்தீவு அருகே அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் முழங்காவில் கடற்படை முகாமிற்கு அழைத்து வந்து கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. - [வீடு ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீயினால் தந்தை, மகள் , மருமகன் பலி](https://minnal24.com/%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%81-%e0%ae%92%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8f%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f/): மெனிக்கும்புர – கட்டுகஸ்தொட்ட பிரதேசத்தில் வீடு ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். குறித்த தீ விபத்து இன்று வியாழக்கிழமை அதிகாலை ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இதில், தந்தை, மகள் மற்றும் மருமகன் உயிரிழந்ததுடன், தாய் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் சம்பவத்தில் 4 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் விரைந்துள்ளதுடன், பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். - [கடல் வளத்தை பாதுகாக்க விசேட வேலைத்திட்டம் உருவாக்கப்படும்: அமைச்சர் சந்திரசேகரன்](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%bf/): -யாழ் நிருபர்- கடல் வளத்தை பாதுகாக்க விசேட வேலைத்திட்டம் உருவாக்கப்படும்: அமைச்சர் சந்திரசேகரன் எமது நாட்டுக்குரிய கடல் வளம் நிச்சயம் பாதுகாக்கப்படும் எனவும், அதற்கான விசேட வேலைத்திட்டமொன்று உருவாக்கப்படும் எனவும் கடற்றொழில் மற்றும் நீரியல்வளைத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். யாழ். அல்லைப்பிட்டிய பகுதியில் வெண்புரவி புனித அந்தோனியார் கடற்றொழில் கிராமிய அமைப்பின் ஏற்பாட்டில், அமைச்சருக்கான வரவேற்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் பங்கேற்றிருந்த அமைச்சருக்கு மக்களால் அமோக வரவேற்பளிக்கப்பட்டது. மக்களுடன் கலந்துரையாடிய அமைச்சர், அவர்களின் குறை நிறைகளையும் கேட்டறிந்துகொண்டார். இதன்போது தமது பகுதியில் கடல் அரிப்பை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் மீனவர்கள் இளைப்பாறுவதற்கு உரிய வசதிகள் இல்லை எனவும், உரிய வகையில் நங்கூரமிடும் ஏற்பாடு உட்பட கடற்றொழிலை உரிய வகையில் முன்னெடுப்பதற்குரிய ஏற்பாடுகளை செய்து தருமாறு அமைச்சரிடம் கடற்றொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கை, ரோலர் படகு பயன்பாடு உள்ளிட்டவற்றால் […] - [மீட்கப்பட்ட கைக்குண்டு தொடர்பில் நீதிமன்றத்தின் அறிவிப்பு](https://minnal24.com/%e0%ae%ae%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a4/): பொரளை சர்வ புனிதர்கள் தேவாலயத்தில் அண்மையில் கண்டெடுக்கப்பட்ட கைக்குண்டை அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி, அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான விசாரணை கொழும்பு மேலதிக நீதவான் ரஜிந்தா ஜயசூரிய முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, விசாரணைகளை முன்னெடுக்கும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குறித்த கைக்குண்டை நீதிமன்றில் சமர்ப்பித்ததுடன், அது தொடர்பான அரச இரசாயன பகுப்பாய்வு அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக உத்தரவிடுமாறு கோரியிருந்தனர். அதனை ஆராய்ந்த நீதவான், குறித்த கைக்குண்டை அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி, அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார் - [வெப்பமான காலநிலையினால் அவதானமாக இருக்கவும்](https://minnal24.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85/): நாட்டில் நிலவும் வெப்பமான காலநிலையை அடுத்து, மக்கள் தேவையில்லாமல் வெயிலில் செல்வதை தவிர்ப்பதுடன், அடிக்கடி நிறைய தண்ணீர் குடிப்பது நல்லது என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர்  டாக்டர்.சிரோமணி ஜெயவர்தன தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வெப்பமான காலநிலையாக இருப்பது இயல்பானது. எவ்வாறாயினும், சூரிய ஒளியில் அதிகமாக இருப்பதை தவிர்க்கவும், முடிந்தவரை நிழலில் இருக்கவும் அவர் மக்களை வலியுறுத்தினார் - [ரயில் கட்டணங்கள் 58 சதவீதத்தால் அதிகரிப்பு](https://minnal24.com/%e0%ae%b0%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a3%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-58-%e0%ae%9a%e0%ae%a4%e0%ae%b5%e0%af%80%e0%ae%a4%e0%ae%a4/): ரயில் கட்டண திருத்தத்தின் போது கட்டணங்கள் 58 சதவீதத்தால் அதிகரிக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். முதல் 10 கிலோமீற்றருக்கு, கிலோமீற்றருக்கு 1 ரூபாய் 30 சதமாக இருந்த மூன்றாம் வகுப்பு ரயில் டிக்கெட்டின் விலை 2 ரூபாயாக அதிகரிக்கப்படும்  எனவும் அதற்கமைய 10 கிலோமீற்றருக்கான டிக்கெட்டின் விலை 20 ரூபாயாக உயரும் என்றும் தெரிவித்தார். அண்மைக்காலமாக நான்கு தடவைகள் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டார். - [குற்றத்தை ஒப்புக்கொண்ட பணிப்பாளருக்கு அபராதம்](https://minnal24.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%92%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%aa/): மதுபாதையில் வாகனம் செலுத்தியதாக ஒத்துக்கொண்ட நுவரெலியா மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளரிடம் 1,500 ரூபாய் அபராதத் தொகையை செலுத்துமாறு, நுவரெலியா நீதவான் ஜீ.ஜீ.பிரதீப ஜயசிங்க இன்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டதுடன், கடுமையான எச்சரிக்கையின் பின்னர், அவரது சாரதி அனுமதிப்பத்திரமும் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் 27ஆம் திகதி தனது உத்தியோகப்பூர்வ வாகனத்தில் அதிக மதுபோதையில் , ஹட்டன் – குடாகம பகுதியில் உள்ள ஹோட்டலொன்றுக்குச் சென்று, அங்குள்ள பணியாளர்கள் மதுபோதையில்  இருக்கின்றார்களா என பரிசோதிக்க வந்ததாகவும் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இதன்போது, தமது பணியாளர்கள் எவரும் மதுபோதையில் இல்லை என்றும் அதனை பரிசோதிக்க வருகைத் தரும் பணிப்பாளர்,  மதுபோதையில் வரவேண்டாம் என ஹோட்டல் முகாமையாளர் எச்சரித்ததால், அங்கிருந்து வெளியேறிய சுகாதார சேவை பணிப்பாளர், நுவரெலியா நோக்கி தனது வாகனத்தில் பயணித்துள்ளார். இதன்போது, அவரது வாகனத்துக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர், குறித்த அதிகாரி மதுபோதையில் வாகனம் செலுத்துவதாக தலவாக்கலை பொலிஸாருக்கு அறிவித்த்தையடுத்து, பணிப்பாளர் தலவாக்கலை […] - [ரயில் கட்டண திருத்தம் : ரயில் இயந்திர சாரதிகள் சங்கம் அதிருப்தி](https://minnal24.com/%e0%ae%b0%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a3-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%af/): ரயில் கட்டண திருத்தம் உட்பட சில காரணங்களை முன்வைத்து, நாளை புதன்கிழமை முதல்   மேலதிக நேர சேவையில் இருந்து விலகுவதாக ரயில் இயந்திர சாரதிகள் சங்கம் தெரிவித்தது. அத்துடன், ரயில் நிலைய அதிபர்கள் சங்கமும் கட்டண திருத்தத்துக்கு அதிருப்தி வெளியிட்டுள்ளதுடன், கட்டணத்தை அதிகரிக்காமல் வேறு பல்வேறு வழிகளில் தமது நட்டத்தை ரயில்வே திணைக்களம் குறைக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளது. தற்போதைய பொருளாதாரச் சூழல் மற்றும் அண்மைய எரிபொருள் அதிகரிப்பைத் தொடர்ந்து திணைக்களத்துக்கு ஏற்பட்டுள்ள நட்டங்களைக் கருத்திற்கொண்டும் ரயில் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை,  அங்கிகாரம் வழங்கியுள்ளது. பெயரளவிலான கட்டண திருத்தத்தை தாங்கள் எதிர்க்கவில்லை என்று தெரிவித்த நிலைய அதிபர் சங்கம், தற்போதைய சூழ்நிலையில் பாரிய அதிகரிப்பு பொதுமக்களுக்கு மேலும் சுமையை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளது. திணைக்களத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்காக தாம் பல யோசனைகளை முன்வைத்துள்ளபோதும், அத்தகைய யோசனைகள் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டு வருவாகவும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை, திறமையற்ற முகாமைத்துவத்துக்கு எதிராகவே தொழிற்சங்க நடவடிக்கை […] - [புத்தாண்டுக்குப் பின் பாராளுமன்ற அமைப்பில் மாற்றம்](https://minnal24.com/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be/): சிங்கள, தமிழ் புத்தாண்டுக்குப் பின் பாராளுமன்ற அமைப்பில் மாற்றம் ஏற்படலாம் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை மக்கள் திறமையான மனிதராகப் பார்ப்பதன் காரணமாகவே இன்று அவர் மீது வதந்திகள் பரப்பப்படுகின்றன. தற்போதைய பொருளாதார நெருக்கடியை அவரால் தீர்க்க முடியும் என மக்கள் நினைக்கத் தொடங்கிவிட்டனர். சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்குப் பின்னர் பாராளுமன்றத்தின் அமைப்பில் மாற்றம் ஏற்படலாம் என நான் நம்புகிறேன் என்று அவர் குறிப்பிட்டார் - [வீதியை கடந்த பெண் மீது அம்பியூலன்ஸ் மோதி விபத்து](https://minnal24.com/%e0%ae%b5%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a4%e0%af%81-%e0%ae%85%e0%ae%ae/): -பதுளை நிருபர்- பதுளை- பசறை வீதியின் 5ஆம் கட்டைப் பகுதியில் அம்பியூலன்ஸ் வண்டியொன்றில் மோதுண்ட பெண்ணொருவர், கடும் காயங்களுடன் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை காலை  மணியளவில் பாடசாலைக்குச் செல்லும் தனது மகளை பஸ்ஸில் ஏற்றுவதற்காக, வீதியை கடந்த போது, மொனராகலையிலிருந்து பதுளைக்கு நோயாளி ஒருவருடன் பயணித்த அம்பியூலன்ஸ் வண்டியில் குறித்த பெண் மோதியுள்ளார். இதன் போது பதுளை- வேவெஸ்ஸ தோட்டத்தைச் சேர்ந்த 38 வயதுடைய பெண் படுகாயமடைந்துள்ளதுடன், அம்பியூலன்ஸ் வண்டியின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார் என பதுளை பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை விபத்துக்குள்ளான பெண்ணின் நிலைமை மோசமாக உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன. - [மலசலகூட குழியில் இருந்து யுவதி ஒருவரின் சடலம் மீட்பு](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%b2%e0%ae%9a%e0%ae%b2%e0%ae%95%e0%af%82%e0%ae%9f-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81/): பாணந்துறை சுற்றுலா விடுதியொன்றின் மலசலகூட குழியில் இருந்து யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், பாணந்துறை மேலதிக நீதவான் லஹிரு என் சில்வா முன்னிலையில் குழியைத் திறந்து பார்த்த போது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில்  40 மற்றும் 45 வயதுடைய பிலியந்தலை மற்றும் பொரலஸ்கமுவ பிரதேசத்தை சேர்ந்த ஹோட்டல் ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்துடன் தொடர்புடைய வீரகெட்டிய பிரதேசத்தில் வசிக்கும் ஹோட்டல் முகாமையாளர் இன்று காலை ஹோட்டலில் இருந்து தப்பிச் சென்றுள்ளதுடன், அவரைக் கண்டுபிடிக்க விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். - [நாளை தொடர்ச்சியாக 10 மணிநேரம் மின்துண்டிப்பு](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%88-0-%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b5%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81/): இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய நாளை  நாடளாவிய ரீதியில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு  அறிவித்துள்ளது. அதற்கமைய ஏ முதல் எல் மற்றும் பி முதல் டபிள்யூ வரையான பிரிவுகளில் காலை 8 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரையான காலப்பகுதியில் கட்டங்கட்டமான 10 மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அதேவேளை, எம்,என், ஓ,எக்ஸ், வை, இஸட் பிரிவுகளுக்கு காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரை தொடர்ச்சியாக 10 மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. - [ஐ போனும் ஐயாயிரம் பணமும் திருட்டு](https://minnal24.com/%e0%ae%90-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%90%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/): அராலி செட்டியார் மடத்தில் உள்ள வீடு ஒன்றில் இன்று செவ்வாய்க்கிழமை ஐ போன் (I phone) ஒன்றும் ஐயாயிரம் ரூபா பணமும் திருட்டு போயுள்ளது. இன்று பகல் குறித்த வீட்டில் உள்ளவர்கள் வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து பார்த்தவேளை வீடு திறந்து மேற்குறிப்பிட்டவை திருடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். - [பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மீது தாக்குதல்](https://minnal24.com/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%af%8b%e0%ae%95%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/): -யாழ் நிருபர்- நீதிமன்ற பிடியாணையை நிறைவேற்ற சென்ற பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட யோகபுரம் பகுதியை சேர்ந்த இருவருக்கு நீதிமன்ற வழக்கு விசாரணைகளுக்கு செல்ல தவறியமையால் நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு இருந்தது. நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த சென்ற கோப்பாய் பொலிஸ் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் இருவரையும் கைது செய்ய முயன்ற போதுஇ அங்கு நின்ற கும்பல் ஒன்று இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்ததுடன், அவர்கள் மீதும் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். அதனை அடுத்து அங்கிருந்து விலகி இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் பொலிஸ் நிலையம் திரும்பியுள்ளனர். இந்நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளனர். - [பயனாளிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கும் ஆரம்ப நிகழ்வு](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%af%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81/): -யாழ் நிருபர்- ‘வரவு செலவு திட்டத்தின் கீழ் ஒரு இலட்சம் பணிகள்’ என்னும் தலைப்பின் கீழ் ‘பசுமையான நாடு ஆரோக்கியமான நாளை’ என்னும் தொனிப்பொருளில், பயனாளிகளுக்கு மரக்கன்றுகள் வழங்குகின்ற ஆரம்ப நிகழ்வானது, இன்று சங்கானை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/160 கிராம சேவகர் பிரிவில் நடைபெற்றது. இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிலும் 156 மரக்கன்றுகள் இவ்வாறு வழங்கி வைக்கப்படவுள்ளன. இதன்போது கத்தரி, வெண்டி, தக்காளி மற்றும் மிளகாய் ஆகிய பயன்தரு மரக்கறி கன்றுகள் இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டதுடன் வீட்டுத்தோட்டம் அமைப்பதன் அவசியம் தொடர்பான துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன. அதன்பின்னர் பயனாளி ஒருவரது வீட்டில், பிரதேச செயலரால் மரக்கன்றுகள் நாட்டியும் வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் சங்கானை பிரதேச செயலர் பொ.பிரேமினி, சங்கானை பிரதேச செயலக உதவித்திட்டப் பணிப்பாளர், வலி. மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் க.இலங்கேஷ்வரன், ஜே/160 கிராம சேவகர் பிரிவின் கிராம செயலாளர் சிந்துயன், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் […] - ['நமது வீட்டுத் தோட்டத்தில் ஆரம்பிப்போம்' எனும் தேசிய செயற்றிட்டம்](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/): -யாழ் நிருபர்- சுபீட்சத்தின் நோக்கு வேலைத் திட்டத்திற்கு அமைய பசுமை புரட்சியை நோக்காக் கொண்ட ‘நமது வீட்டுத் தோட்டத்தில் ஆரம்பிப்போம்’ எனும் தேசிய செயற்றிட்டம் இன்று கிளிநொச்சி மாவட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் 20,074 சமுர்த்தி பயனாளர்கள் தெரிவு செய்யப்பட்டு, ஒவ்வொரு பயனாளர்களுக்கும் தலா 40 வீட்டுத் தோட்ட மரக் கன்றுகள் வழங்கி வைக்கப்படவுள்ளன. - [கடந்த 24 மணிநேரத்தில் 6 பேர் பலி](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%9f%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-24-%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-6-%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%af%8d/): கடந்த 24 மணிநேரத்தில் ஏற்பட்ட வாகன விபத்துக்களால் 6 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 19 வயதான இளைஞர் ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். - [19 மணி 45 நிமிடத்தில் நீந்தி கடந்து 14 வயது சிறுவன் சாதனை](https://minnal24.com/19-%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf-45-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%95/): -மன்னார் நிருபர்- தேனியை சேர்ந்த 14 வயதுடைய சிறுவன் தனுஸ்கோடி முதல் இலங்கையின் தலைமன்னார் வரையில் நீந்தி பின் தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி அரிச்சல் முனை வரையிலான பாக் ஜலசந்தி கடல் பகுதியை 19.45 மணி நேரத்தில் நீந்தி கடந்து சாதனை படைத்துள்ளார். தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் நீதிராஜன் அவரது மனைவி அனுசர இவர்களது மகன் சினேகன் (வயது 14). சிறுவன் சினேகன் 2019 ஆம் ஆண்டு கோவாவில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்றுள்ளார். அதே போல் கர்நாடக மாநிலம் தொன்னுரில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு வெங்கல பதக்கம் வென்றுள்ளார். இந்நிலையில் தனுஷ்கோடி அரிச்சல் முனையில் முதல் இலங்கை தலைமன்னார் வரை நீந்தி கடந்து பின் தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி அரிச்சல் முனை வரை பாக் ஜலசந்தி கடற்பகுதியை நீந்தி கடப்பதற்காக கடந்த மாதம் டெல்லியில் உள்ள வெளியுறவுத்துறை, பாதுகாப்பு துறை அமைச்சகங்கள் மற்றும் […] - [விபத்துக்களை தடுக்க புதிய பொறிமுறையை கண்டுபிடித்த நபர்](https://minnal24.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%a4%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf/): -யாழ் நிருபர்- தலைக்கவசம் இல்லாமல் மோட்டார் வண்டிகளை செலுத்துவதால் ஏற்படும் விபத்துக்கள் தடுப்பதற்காக முன்மாதிரியான ஒரு பொறிமுறையொன்றை யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் வடிவமைத்துள்ளார். 30 வருடங்களாக மோட்டார் வாகன திருத்துநராக இருக்கும் கொழும்புத்துறை பகுதியைச் சேர்ந்த எட்வின் மொரிஸ் என்பவரே இந்த பொறிமுறையை வடிவமைத்துள்ளார். இதன்படி தலைக்கவசம் போடாமல் மோட்டார் வண்டியை இயக்க முடியாது. அதேவேளை தலைக்கவசத்தை போட்டாலும் தலைக்கவசத்தின் கொழுக்கிகளை மாட்டினால் மாத்திரமே மோட்டார் வண்டி இயங்குமாறு அந்த பொறிமுறை வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் தலைக்கவசத்தின் கொழுக்கிகளை கழற்றும் போது மோட்டார் வாகனம் நின்றுவிடுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. மேற்படி பொறிமுறையில் சில பின்னடைவுகள் காணப்பட்டாலும் கூட இவ்வாறான ஒரு முன்மாதிரியான முயற்சியை வரவேற்பது அவசியமாகும். தலைக்கவசம் போடாமல் ஏற்படுகின்ற மோட்டார் வாகன விபத்துகளை தவிர்ப்பதற்காக தான் இதனை ஐந்து வருடங்களுக்கு மேலாக முயற்சி செய்ததாகவும் தற்போது இதனை வெற்றிகரமாக செய்ய முடிந்ததாகவும், இந்த பொறிமுறையை வடிவமைத்த எட்வின்  தெரிவித்தார். அதேவேளை ஏனைய மோட்டார் […] - [கடலட்டைப் பண்ணை தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல்](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%88-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95/): -யாழ் நிருபர்- கடலட்டைப் பண்ணைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில், பண்ணைகளுக்கான கடலட்டைக் குஞ்சுகளை பெற்றுக் கொள்வதற்கான வழிவகைகள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கடற்றொழில் அமைச்சில் நேற்று நடைபெற்றது. கடற்றொழில் திணைக்களம், நக்டா மற்றும் நாரா நிறுவனங்களின் அதிகாரிகள் கலந்துகொண்ட இக்கலந்துரையாடலில், அரச மற்றும் தனியார் கடலட்டை குஞ்சு இனப்பெருக்க நிலையங்களில் இருந்து பெற்றுக் கொள்ளக் கூடியளவு கடலட்டை குஞ்சுகளை பெற்றுக் கொள்வதுடன், மேலதிக தேவைகளுக்கு கடலில் இருந்து பெற்றுக் கொள்வதற்கு, வரையறைகளுடன் கூடிய பொறிமுறை ஒன்றை உருவாக்குவது தொடர்பாக ஆராயப்பட்டது. - [பகல் வேளையில் வீட்டை உடைத்து நகை திருட்டு : திருடியவர் கைது](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b3%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%89%e0%ae%9f%e0%af%88/): -யாழ் நிருபர்- சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குழி பகுதியில் அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டில் பகல் வேளையில் வீட்டை உடைத்து 7 பவுண் தங்க நகை திருடிய சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது. நிலையில் குறித்த திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர் இன்றைய தினம் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது திருடப்பட்ட நகையும் மீட்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்தும் நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். - [மூதாட்டி ஒருவரை காணவில்லை : கண்டால் அறிவிக்கும்படி வேண்டுகோள்](https://minnal24.com/%e0%ae%ae%e0%af%82%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%88-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2/): -யாழ் நிருபர்- யாழ் – கொக்குவில் பகுதியில் மூதாட்டி ஒருவரை காணவில்லை என யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. கொக்குவில் – தலையாழி – சேர் பொன்னம்பலம் வீதியில் வசித்துவந்த கந்தையா தனபாக்கியம் (வயது – 65) என்ற மூதாட்டியே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக அவரது மருமகளினால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், இரத்தினபுரி – பாலங்கொடை – ரக்வானை பிதேசத்தை சேர்ந்த இவர் கடந்த வாரமே தனது மருமகள் வீட்டிற்கு வருகை தந்துள்ளார். நேற்று மாலை வேளை கடைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாத நிலையில், அவரைத் தேடியபோது, காணாத நிலையில் யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளனர். இது தொடர்பில் யாழ்ப்பாணம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். மேலும், இவரைக் கண்டால் 0755305587 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் வழங்குமாறு அவரது உறவினர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். - [விஞ்ஞான வினா விடை நூல் வெளியீட்டு நிகழ்வு](https://minnal24.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9e%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%88-%e0%ae%a8%e0%af%82%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86/): -கல்முனை நிருபர்- விஞ்ஞான பாடத்தை கற்கும் மாணவர்களுக்கு இலகு முறையில் கற்றுக்கொள்ளும் வகையில் சாய்ந்தமருது கமு/கமு/லீடர் எம்.எச்.எம். அஷ்ரப் வித்தியாலய விஞ்ஞான பாட ஆசிரியர் எம்.எம்.எம்.உவைஸ் எழுதிய மாணவர்களுக்கான விஞ்ஞான வினா விடை தொகுப்பு அடங்கிய விஞ்ஞான தேனருவி தரம்-06, விஞ்ஞான தேன் கிண்ணம் தரம்-07, விஞ்ஞான தேனருவி தரம்-09 ஆகிய 03 விஞ்ஞான நூல்கள் வெளியீடு, லீடர் அஷ்ரப் வித்தியாலய ஆசிரியர் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் பாடசாலை பிரதி அதிபர் ஏ.எம். நிசார் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் திங்கட்கிழமை இடம்பெற்றது . இதன் போது, பிரதம அதிதியாக சாய்ந்தமருது கோட்டக் கல்வி அதிகாரி என்.எம்.ஏ.மலிக் கலந்து கொண்டு நூலை வெளியிட்டு வைத்தார். இந்நிகழ்வில் சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் எம்.எஸ்.சஹ்துல் அமீன் விசேட அதிதியாகவும், கெளரவ அதிதிகளாக பாடசாலை அதிபர் எம்.ஐ. சம்சுதீன், சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ். வித்தியாலய அதிபர் எம்.ஐ.இல்யாஸ் கல்முனை அஸ்ஸுஹரா வித்தியாலய அதிபர் எம்.எச்.எஸ்.ஆர். மஜீதியா, சாய்ந்தமருது அல் […] - [மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%85%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%87%e0%ae%b4%e0%af%88%e0%ae%95/): மாணவர்களுக்கு வழங்கப்படும் போசாக்கு உணவுத்திட்டத்தில் உணவின் அளவை குறைப்பதற்கு பதிலாக அதற்காக செலுத்தப்படும் கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. பாடசாலைகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் போசாக்கு உணவு திட்டத்தில் உணவின் அளவை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டமையின் ஊடாக மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக அந்த சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். - [பள்ளிவாசல் என்ற போர்வையில் மக்களை ஏமாற்ற வேண்டாம் - யஹியாகான்](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9a%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%ae%bf/): -கல்முனை நிருபர்- சாய்ந்தமருது நகரசபை விடயம் கால ஓட்டத்தில் நடைமுறைக்கு வரும் – என்ற தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லாவின் கருத்து நகைப்புக்குரியது என்று பிரதிப் பொருளாளர் ஏ.சி.யஹியாகான் தெரிவித்துள்ளார். ஏ.எல்.எம். அதாவுல்லா நடத்திய ஊடக மாநாட்டில் சிறு பிள்ளைத்தனமாக கருத்துக்களை கூறியது மட்டுமன்றி சாய்ந்தமருது நகரசபை விடயத்தை ஒரு விளையாட்டாக – அலட்சிய தோரணையில் கருத்துக் கூறியிருப்பது கண்டனத்துக்குமுரியது என்றும் யஹியாகான் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் அவர் கூறியிருப்பதாவது, சாய்ந்தமருது நகர சபை கோரிக்கையை வைத்து – பாராளுமன்றத்துக்கு தெரிவான தேகா தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லாவினால் இனி அவ்வாறானதொரு சபையை பெற்றுத்தர முடியாது என்பது ஊர்ஜிதமாகிவிட்டது. அவ்வாறு இருக்கும் போது கால ஓட்டத்தில் நடைமுறைக்கு வரும் என்று அதாவுல்லா கூறியிருப்பது வெறும் வெற்றுக் கதை மட்டுமன்றி பொய் பிரச்சாரமும் கூட. தே.கா தலைவர் எங்கு , எந்த இடத்திலும் சாய்ந்தமருது நகர சபை விடயமாக பேசத் தேவையில்லை. பேச வேண்டிய […] - [இந்திய வெளிவிவகார அமைச்சர் - டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%9a%e0%af%8d-2/): -யாழ் நிருபர்- இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெயசங்கர் மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று நடைபெற்றது. பருத்தித்துறை உட்பட வடக்கு கிழக்கு பகுதிகளில் மீன்பிடித் துறைமுகங்களை அமைத்து தருவதற்கு ஏற்கனவே இந்தியா சம்மதம் தெரிவித்துள்ள நிலையில், இலங்கை கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அவற்றை தீர்ப்பதற்கு இந்தியாவினால் மேற்கொள்ளக் கூடிய நடவடிக்கைகள் தொடர்பாக இரண்டு நாடுகளினதும் அமைச்சர்கள் நேற்றைய சந்திப்பின் போது விரிவாக ஆராய்ந்தனர். குறிப்பாக, இந்திய கடற்றொழிலாளர்கள் அத்துமீறி எல்லை தாண்டி வந்து இலங்கை கடல் பரப்பில் சட்ட விரோத தொழில் முறைகளைப் பயன்படுத்துவதை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயப்பட்டது. இதன்போது, இரண்டு நாட்டு கடற்றொழிலாளர்களுக்கும் இடையில் புரிந்துணர்வை ஏற்படுத்தும் வகையில் கச்சதீவில் ஏற்பாடு செய்யப்பட்ட சந்திப்பு தொடர்பாக எடுத்துரைத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அண்மையில் இடம்பெற்ற அதிகாரிகள் மட்டக் கலந்துரையாடலும் பயனுள்ளதாக அமைந்திருந்தமையை சுட்டிக்காட்டினார். இவ்வாறான பேச்சுவார்த்தைகளை வினைத்திறனாக […] - [எரிபொருள் இன்மையால் மீன்பிடி மற்றும் கருவாடு உற்பத்தி பாதிப்பு](https://minnal24.com/%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a9%e0%af%8d/): –மன்னார் நிருபர்– நாட்டில் தொடர்ச்சியாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மன்னார் மாவட்டத்தில் மீன்பிடி மற்றும் அதனுடன் தொடர்புபட்ட கருவாடு உற்பத்தி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தேவையான மண்ணெண்ணை உரிய விதத்தில் தேவையான அளவு கிடைக்காமையினால் மன்னார் மாவட்டத்தில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதே நேரம் நீண்ட வரிசையில் நின்று மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே மண்ணெண்ணை கொள்வனவு செய்ய வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. மீன்பிடி இன்மையால் மீன்களின் விலை அதிகரித்துள்ளமையினால் கருவாடு உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் கருவாடுகளின் விலைகளும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மக்கள் தற்போது கருவாடுகளை கூட கொள்வனவு செய்ய முடியாத நிலை நிலவி வருகின்றது. கடந்த மாதம் 900 ரூபா விற்பனை செய்யப்பட்ட நெத்தலி கருவாடு தற்போது 1150 ரூபாயாகவும், கடந்த மாதம் 1100 ரூபா விற்பனை செய்யப்பட்ட கட்டா கருவாடு […] - [நிந்தவூர் பிரதான வீதியில் விபத்து : சிறுமி உட்பட நால்வர் பலத்த காயம்](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b5%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%b5%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2/): -கல்முனை நிருபர்- அம்பாறை, நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நிந்தவூர் பிரதான வீதியில் திங்கட்கிழமை இரவு 10.20 மணி அளவில் எரிபொருள் தாங்கி (பவுசர்) ஒன்றுடன் ஆட்டோ ஒன்று விபத்துக்குள்ளாகி உள்ளது. அக்கரைப்பற்றில் இருந்து சம்மாந்துறை நோக்கி சென்று கொண்டிருந்த ஆட்டோவுடன் கல்முனையில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி சென்று கொண்டிருந்த  எரிபொருள் தாங்கி (பவுசர்) ஒன்றும் நேருக்கு நேர் மோதியதிலையே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. இதன்போது ஆட்டோ பலத்த சேதத்திற்கு உள்ளாகி உள்ளதுடன், ஆட்டோவில் பயணித்த சிறுமி உட்பட நால்வர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை நிந்தவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.   - [குறுகிய காலத்தில் 5 ஆயிரம் கிலோ கிராம் தங்கம் விற்பனை](https://minnal24.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-5-%e0%ae%86%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae/): இலங்கையின் தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த போது இலங்கை மத்திய வங்கியின் கையிருப்பில் இருந்த 19 ஆயிரம் கிலோ கிராம் தங்கம் தற்போது ஆயிரம் கிலோ கிராமாக குறைந்துள்ளதாக தெரிய வருகிறது. தற்போதைய அரசாங்கத்தின் காலத்தில் 18 ஆயிரம் கிலோகிராம் தங்கம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அஜித் நிவாட் கப்ரால் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக பதவிக்கு வந்து குறுகிய காலத்தில் 5 ஆயிரம் கிலோ கிராம் தங்கம் விற்பனை செய்யப்பட்டுள்ளது என இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் கலாநிதி டப்ளியூ.ஏ. விஜேவர்தன தெரிவித்தார். தங்கத்தை விற்பனை செய்த போது ஒரு அவுன்ஸ் தங்கத்தை ஆயிரத்து 600 டொலர்களுக்கு விற்பனை செய்துள்ளனர். இந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்ட தினத்திற்கு அண்மைய தினத்தில் உலக சந்தை யில் ஒரு அவுன்ஸ் தங்கம் ஆயிரத்து 700 டொலர் என்ற வீதத்தில் அதிகரித்து காணப்பட்டது எனவும் விஜேவர்தன கூறினார். - [பாடசாலைகளுக்கு போசாக்கு உணவை தொடர்ச்சியாக வழங்குவதில் சிக்கல்](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9a%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/): விலை அதிகரிப்பு காரணமாக 200க்கும் குறைந்த மாணவர் எண்ணிக்கையை கொண்ட பாடசாலை களுக்கு போசாக்கு உணவை தொடர்ச்சியாக வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. போசாக்கு உணவை பாடசாலைகளுக்கு விநியோகித்து வரும் சமூர்த்தி பெறும் குடும்பத்தினர் இதனைத் தெரிவித் தனர். சமூர்த்தி பெறும் குடும்பங்கள் தமது பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக, பாடசாலைகளுக்கு போசாக்கு உணவை விநியோகிப்பதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக அவர்களுக்கு உணவு பொதியொன்றுக்கு 30 ரூபா வழங்கப்படுகின்றது. சுகாதார அமைச்சின் பரிந்துரையின் அடிப்படையில் வாராந்தம் இரண்டு தடவைகள் முட்டை வழங்கப்பட வேண்டும் என்பதுடன் அனைத்து நாட்களிலும் ஏதேனும் பழவகையும் கட்டாயம் வழங்க வேண்டும் என கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. விலை அதிகரிப்பு காரணமாக சில விநியோகத்தர்கள் ஒரு முட்டைக்கு பதிலாக அரைவாசி முட்டையை மாணவர்களுக்கு வழங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. தமது பொருளாதாரத்தை வலுப்படுத்த வழங்கப்பட்ட இந்த சந்தர்ப்பமானது, மேலும் வாழ்க்கை சுமையினை அதிகரித்துள்ளதாக சமுர்த்தி பெறும் குடும்பத்தினர் குறிப்பிட்டுள்ளனர். அதேநேரம், குறைந்த வருமானம் […] - [அதிக விலைக்கு விற்றால் 1311 அழைக்கவும்](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-1311-%e0%ae%85/): சந்தையில் நிர்ணயிக்கப்பட்ட விலையைவிடவும் அதிக விலைக்கு ‘லிற்றோ கேஸ்’ விற்பனை செய்யப்படுமானால் அது தொடர்பில் முறைப்பாடு செய்யுமாறு லிற்றோ நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது. 1311 என்ற இலக்கத்துக்கு தொடர்பை ஏற்படுத்தி இது தொடர்பில் முறையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, அதிக விலைக்கு கேஸ் விற்பனை செய்யும் முகவர்களின் அனுமதி பத்திரம் இரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. - [ஆபிரிக்காவின் முகமூடி பிரான்ஸில் ஏலம்](https://minnal24.com/%e0%ae%86%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%ae%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%aa/): 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மத்திய ஆபிரிக்காவின் முகமூடி ஒன்று பிரான்ஸில் 4.2 மில்லியன் யூரோவுக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. இந்த முகமூடியை திரும்பத் தரும்படி கபோன் அரசு கடும் எதிர்ப்பை வெளியிட்டு வந்த நிலையிலேயே கடந்த சனிக்கிழமை இந்த ஏலம் இடம்பெற்றது. மிக அரிதான மரப்பலகையால் செதுக்கப்பட்ட “நிகில்” என்ற இந்த முகமூடி கபோனின் பங் இன மக்கள் தமது சடங்குகளில் பயன்படுத்தி வந்ததாகும். தெற்கு பிரான்ஸ் நகரான மொன்டபில்லியல் நகரில் இடம்பெற்ற ஏலத்தில் 300,000 தொடக்கம் 400,000 யூரோவுக்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் அது எதிர்பார்க்கப்பட்டதை விட அதிக விலை போனது. 2006 ஆம் ஆண்டு பாரிஸில் இடம்பெற்ற ஏலம் ஒன்றில் இது போன்ற ஒரு முகமூடி 2.09 மில்லியன் யூரோவுக்கு ஏலம் போனமை குறிப்பிடத்தக்கது. - [இது வரையான காலப்பகுதியில் 7 ஆயிரத்து 947 டெங்கு நோயாளர்கள்](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2/): இலங்கையில் இந்த வருடத்தின் இது வரையான காலப்பகுதியில் 7 ஆயிரத்து 947 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த மூன்று மாதங்களில் அதி கூடிய டெங்கு நோயாளர்கள் ஜனவரி மாதத்தில் 5 ஆயிரத்து 397பேராகப் பதிவாகியுள்ளனர். பெப்ரவரி மாதத்தில் 1,826 நோயாளர்களும், மார்ச் மாதத்தில் 725 நோயாளர்களும பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதுவரையில் கொழும்பு மாவட்டத் தில் அதிகூடிய டெங்கு நோயாளர்கள் பதி வாகியுள்ளனர். அதற்கமைய 1,433 பேர் கொழும்பு மாவட்டத்திலும் கம்பஹா மாவட்டத்தில் 93 பேரும யாழ்ப். மாவட்டத்தில் 83 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். குருநாகலில் 761 பேரும் புத்தளத்தில் 538 பேரும் களுத்துறையில் 499 பேரும், காலி மாவட்டத்தில் 456 பேரும் பதிவாகியுள்ளதாக என்றும் தொற்று நோயியல் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. - [சிறந்த நடிகருக்கான ஒஸ்கார் விருதை வென்றார் வில் ஸ்மித்](https://minnal24.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%92%e0%ae%b8%e0%af%8d%e0%ae%95%e0%ae%be/): கிங் ரிச்சர்ட் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான ஒஸ்கார் விருதை வில் ஸ்மித் வென்றார். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 94ஆவது ஒஸ்கார் விருது வங்கும் விழா நடைபெற்று வருகிறது. அதில் அமெரிக்கத் திரைப்படமான டியூன் திரைப்படத்திற்கு 6 விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. ஒளிப்பதிவு, இசை, விஷூவல் எஃபெக்ட்ஸ், ஒரிஜினல் ஸ்கோர், படத்தொகுப்பு, புரொடக்சன் டிசைனிங் ஆகிய பிரிவுகளில் இந்த விருதுகளை தட்டிச் சென்றுள்ளது. மேலும் சிறந்த நடிகருக்கான விருதை வில் ஸ்மித்தும், சிறந்த துணை நடிகருக்கான விருதை டிராய் கோட்சூரும் வென்றனர். கிங் ரிச்சர்ட் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக வில் ஸ்மித்துக்கு ஒஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த நடிகைக்கான விருதை ஜெஸ்ஸிகா கேஸ்டைன் தட்டிச் சென்றார். தி ஐஸ் ஆஃப் டாமி ஃபேய் என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக ஜெஸிகா கேஸ்டைனுக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்துள்ளது. - [சர்வதேச ஊடகங்களுக்கு தலிபான் அரசு தடை](https://minnal24.com/%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a-%e0%ae%8a%e0%ae%9f%e0%ae%95%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%bf/): ஆப்கனில் பிபிசி, வாய்ஸ் ஆப் அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச ஊடகங்களுக்கு தலிபான் அரசு தடை விதித்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றினர். அதன்பின்னர் அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக பெண்களுக்கு கல்வி, வேலை மற்றும் ஊடகங்களுக்கு கட்டுப்பாடுகள் அதிகம் இருந்து வருகின்றன. இதற்கு உலக நாடுகளும் கண்டனம் விதித்து வருகின்றன. ஏற்கெனவே ஊடகங்களைப் பொருத்தவரை 40% வரையிலான ஊடகங்கள் ஆப்கனில் மூடப்பட்டு விட்டன. இந்நிலையில், பிபிசி, வாய்ஸ் ஆப் அமெரிக்கா, ஜெர்மன் (German Deutsche Welle), சீன(China Global Television Network) ஊடகங்களுக்கு அங்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் ஊடகங்கள் மூலமாக ஒளிபரப்பப்படும் அனைத்து சர்வதேச ஊடகங்களின் நிகழ்ச்சிகளும் நிறுத்தப்பட்டுள்ளன. பெர்ஷியன், பாஸ்தோ, உஸ்பெக் மொழி நிகழ்ச்சிகளுக்கு சுமார் 60 லட்சம் பார்வையாளர்கள் இருப்பதால் தலிபான் அரசு இந்த தடையை நீக்க வேண்டும் என்று பிபிசி வலியுறுத்தியுள்ளது. தற்போதுவரை 40% ஊடகங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் 6,400 […] - [சக நடிகரை ஓங்கி அறைந்த வில் ஸ்மித்](https://minnal24.com/%e0%ae%9a%e0%ae%95-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0%e0%af%88-%e0%ae%93%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%b1%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%b5%e0%ae%bf/): அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வரும் ஒஸ்கார் விருது வழங்கும் விழாவில், தனது மனைவியின் கூந்தல் பற்றி கிண்டலாக பேசிய நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக்கை, சிறந்த நடிகருக்கான ஒஸ்கார் விருது வென்ற வில் ஸ்மித் மேடையில் ஏறி ஓங்கி அறைந்தார். இந்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.   - [தமிழ் கட்சிகளை சந்தித்தார் ஜெய்சங்கர்](https://minnal24.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be/): இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகியவற்றை கொழும்பில், நேற்று திங்கட்கிழமை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ் முற்போக்குக் கூட்டணியின் மனோ கணேசன், திகாம்பரம், வி. ராதாகிருஷ் ணன், உதய குமார் ஆகியோரையும் சந்தித்து, இந்திய வம்சாவளி தமிழ் சமூகத்தின் சமூக-பொருளாதார பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடியுள்ளதுடன், இந்திய வம்சாவளி தமிழ் சமூகத்தின் அபிவிருத்திக்கு இந்தியா உறுதிபூண்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். இதேவேளை, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் செந்தில் தொண்டமான் ஆகியோருடன், மலையகத்தில் இந்தியாவின் வளர்ச்சி ஈடுபாட்டை மீளாய்வு செய்ததுடன், இந்தியாவின் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து கருத்துப் பரிமாற்றம் செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.   - [ஒரு ரூபாய் நாணயங்களை கொடுத்து பைக் வாங்கிய இளைஞன்](https://minnal24.com/%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%b0%e0%af%82%e0%ae%aa%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a3%e0%ae%af%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f/): பட்டதாரி இளைஞர் மக்களிடம் சேமிப்பின் அவசியத்தை உணர்த்தும் வகையில் வித்தியாசமான முயற்சியில் ஈடுபட்டார். சேலம் மாவட்டம் அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பூபதி என்பவரே இவ்வாறு பைக் வாங்கியுள்ளார். இவருக்கு நீண்ட நாட்களாக ஒரு பைக் வாங்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ரூ.2 இலட்சத்து 60 ஆயிரம், ஒரு ரூபாய் நாணயங்களை மட்டுமே கொடுத்து பைக் வாங்க திட்டமிட்டார். இதற்காகச் சில்லறை நாணயங்களை முதலில் பூபதி சேமித்து வந்தார். ரூ.10 ஆயிரம் வரை சில்லறை நாணயங்களை சேமிக்க முடிந்தது. மீதம் கையில் இருந்த பணத்தை பழனி உள்ளிட்ட பெரிய கோவில்களில் கொடுத்து அதை சில்லறையாக மாற்றினார். இந்த சில்லறைப் பணத்தை கொண்டு, ஒரு ரூபாய் நாணயங்களை மட்டுமே ரூ.2 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் சேமித்து பைக் வாங்கினார்.   - [கடன் வழங்குகிறது அமெரிக்கா](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a4%e0%af%81-%e0%ae%85%e0%ae%ae%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d/): புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திட்டங்களுக்கு சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் நிறுவனம் (USAID) மூலம் கடன் வசதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்தார். ஜூலி சங்குக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையில்  ஜனாதிபதி அலுவலகத்தில்  இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் திருமதி விக்டோரியா நூலண்ட் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோது அரசாங்கம் வழங்கிய ஒத்துழைப்பை தூதுவர் பாராட்டினார். அண்மைக்காலமாக இலங்கைப் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தமைக்கான காரணங்களை விளக்கிய ஜனாதிபதி, சர்வதேச நாணய நிதியத்தை அணுகும் விடயத்தில் அமெரிக்காவின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்துக்கு செல்வதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்தை பாராட்டிய திருமதி ஜூலி சங், இது நீண்டகால அடிப்படையில் இந்நாட்டுக்கு முக்கியமானதொன்றாகும் எனவும் சுட்டிக்காட்டினார். எந்தவித பொருளாதார சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டாலும், குறைந்த வருமானம் பெறுவோருக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி […] - [மீண்டும் 5 ஆயிரம் ரூபா](https://minnal24.com/%e0%ae%ae%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-5-%e0%ae%86%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b0%e0%af%82%e0%ae%aa%e0%ae%be/): குறைந்த வருமானம் பெறும் 3.1 மில்லியன் குடும்பங்களுக்கு 5,000 ரூபாய் விசேட கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது இதன்படி, ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மாத்திரம் இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். - [ஞானசார விவகாரம் மே மாதத்திற்கு ஒத்திவைப்பு](https://minnal24.com/%e0%ae%9e%e0%ae%be%e0%ae%a9%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%87-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a4%e0%af%8d/): பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசாரதேரருக்கு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு வழங்கியமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள இரண்டு அடிப்படை உரிமை மனுக்களையும் மே 17ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம், நேற்று திங்கட்கிழமை  தீர்மானித்தது. மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம் மற்றும் காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட ஆகியோரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. தற்போதைய ஜனாதிபதியின் செயலாளருக்கு பிரதிவாதியாக சேர்க்கப்படுவதற்கான நோட்டீஸ் கிடைக்காமல் போயிருக்கலாம் என்பதால் வழக்கை ஒத்திவைப்பதே நல்லது என்று சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே, மன்றுக்கு அறிவித்தார். எவ்வாறாயினும், தாங்கள் ஏற்கெனவே நோட்டீஸ் கொடுத்துள்ளதாகவும், அதற்கான ஆதாரம் இருப்பதாகவும் மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். 2019ஆம் ஆண்டு முதல் இந்த வழக்கு நிலுவையில் உள்ளதாக நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்த அவர்கள், இந்த வழக்கின் விசாரணையை […] - [அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம் குறித்து தெளிவுபடுத்தும் கூட்டம்](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%86/): -நுவரெலியா நிருபர்- தலவாக்கலை நகரில் எதிர்வரும் ஏப்ரல் 3ஆம் திகதி நடைபெற உள்ள அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்தும் கூட்டம் ஒன்று அக்கரப்பத்தனையில் இடம்பெற்றது. தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் ஆலோசனையின் பேரில் அவரது செயலாளர் பழனி விஜயகுமாரின் ஏற்பாட்டில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் நிர்வாக செயலாளருமாகிய பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் தலைமையில் இக்கூட்டம் இடம்பெற்றது. தொழிலாளர் தேசிய சங்கத்தின் அக்கரப்பத்தனை பிரதேச அமைப்பாளர்கள் ஒருங்கிணைப்பு செய்த கூட்டத்தில் தோட்ட கமிட்டி தலைவர்கள் முக்கியஸ்தர்கள் இளைஞர்கள் யுவதிகள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். இந்த நாட்டுக்கு தற்போது அழிவை ஏற்படுத்தி இருக்கும் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவது தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு இதன்போது தெளிவுபடுத்தப்பட்டது. - [மலையகத்தில் சதொச விற்பனை நிலையங்களில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9a-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a9%e0%af%88/): -நுவரெலியா நிருபர்- மலையக நகரங்களில் உள்ள சதொச விற்பனை நிலையங்களில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். ஹட்டன், கொட்டகலை, தலவாக்கலை, அக்கரபத்தனை உள்ளிட்ட பல சதொச விற்பனை நிலையங்களில் அரசி, மா, சீனி, பருப்பு உள்ளிட்ட பல பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த பொருட்களை கொள்வனவு செய்வதற்காக சதொச நிலையங்களுக்கு செல்லும் பெரும்பாலான மக்கள் ஏமாற்றத்துடன் திருப்புவதாக தெரிவிக்கின்றனர். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினை தொடர்ந்து அத்தியாவசிய பொருட்களின் விலை வானளவு உயர்ந்துள்ளது. இதனால் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் நியாயமான விலையில் சதொச நிலையங்களில் கிடைப்பதனால் இந்நிலையங்களை நோக்கி தூர பிரதேசங்களிலிருந்து பொருட்களை கொள்வனவு செய்வதற்கு வருவதாகவும் இந்நிலையங்களில் போதியளவு பொருட்கள் இல்லாததன் காரணமாக மக்கள் ஏமாற்றத்துடன் செல்வதாகவும் தெரிவிக்கின்றனர். - [எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்னால் போராட்டம்](https://minnal24.com/%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%af-4/): -நுவரெலியா நிருபர்- நுவரெலியா எரிபொருள் நிலையத்திற்கு முன்னால் பொது மக்களும், சாரதிகளும் போராட்டத்தில் ஈடுப்பட்டதால் அப்பகுதியில் இன்று பரபரப்பு ஏற்பட்டது. வாகனத்திற்கு தேவையான எரிபொருள் பெறுவதற்கு சாரதிகளும், மண்ணெண்ணெய் பெறுவதற்கு பொது மக்களும் இன்று காலை முதல் எரிபொருள் நிலையத்தை சூழ காத்திருந்தனர். எனினும், எரிபொருள் மற்றும் மண்ணெண்ணெய் வழங்கப்படவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே வாகன சாரதிகளும், மக்களும் எரிபொருள் நிலையத்திற்கு முன்னால் உள்ள சுற்றுவட்டத்தை மறைத்து சுமார் ஒரு மணித்தியாலயம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது. பாதுகாப்பு கடமையில் ஈடுப்பட்டிருந்த பொலிஸார் கடும் பிரேயத்தனத்திற்கு மத்தியில் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதன்படி, எரிபொருள் வாங்குவதற்காக கொள்கலன்கள் எடுத்து வந்தவர்களுக்கு ஆயிரம் ரூபாவுக்கும், வாகனங்களுக்கு 3500 ரூபாவும் டீசல் வழங்கப்பட்டது. அதேபோல பொது மக்களுக்கு மாலை 6.00 மணிக்கு பிறகு மண்ணெண்ணெய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. - [கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்பட்ட தரமற்ற அரிசி](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3-3/): -மன்னார் நிருபர்- மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் ஊடாக ‘கர்ப்பிணித் தாய்க்கு உத்தம பூஜா’ எனும் வேலைத்திட்டத்தின் கீழ் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 20,000 ரூபாய் பெறுமதியான போசாக்கு கொடுப்பனவு வழங்கும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தற்போது வழங்கப்பட்ட உலர் உணவு பொதியில் தரமற்ற அரிசி பகிர்ந்தளிக்க பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். இவ்விடயம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கர்ப்பிணி தாய்மார்கள் கடந்த கார்த்திகை மாதத்திற்காக 2 ஆயிரம் ரூபாய் பெறுமதியான போசாக்கு உலர் உணவுப் பொருட்களை மன்னார் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தில் பெற்றுக் கொண்டுள்ளனர். குறித்த 2 ஆயிரம் ரூபாய் பொதியில் 6 கிலோ அரிசி, 1/2 கிலோ பருப்பு, 1/2 கிலோ கடலை மற்றும் 1 மீன் டின் ஆகியவை உள்ளடக்கப்படுகின்றது. எனினும் […] - [ஆயுர்வேத வைத்திய சபைக்கு இருபது மில்லியன் ரூபாய் நட்டம்](https://minnal24.com/%e0%ae%86%e0%ae%af%e0%af%81%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%87%e0%ae%a4-%e0%ae%b5%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%9a%e0%ae%aa%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/): ஆயுர்வேத வைத்திய சபைக்கு இருபது மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. சுமார் 15,996 பாரம்பரிய வைத்தியர்கள் தமது பதிவை புதுப்பிக்காமை காரணமாக குறித்த நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. ஆயுர்வேத வைத்தியசபையில் பதிவு செய்யப்பட்ட சகல வைத்தியர்களும் 5 வருடத்துக்கு ஒரு தடவை தமது பதிவை மீள்புதுபிக்கப்பட வேண்டும். எனினும் அவ்வாறு தமது பதிவை புதுப்பிப்பதற்கு ஆயுர்வேத  வைத்திய சபையில் முறையான செயல்முறைகள் அடையாளம் கண்டு செயற்படுத்தப்படவில்லை என்றும் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை ஆயுர்வேத வைத்திய சபையின் 2018 மற்றும் 2019 ஆம் வருடங்களுக்கான வருடாந்த அறிக்கை இதுவரை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. - [நாளைய மின் தடை விபரம் ](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%88%e0%ae%af-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%9f%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/): நாடளாவிய ரீதியில் நாளை  செவ்வாய்க்கிழமை  சுழற்சி முறையில் மின் தடையை அமுலாக்கப்பட உள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. மின் துண்டிப்பு தொடர்பில், இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L முதலான வலயங்களில் காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதிக்குள் 5 மணித்தியாலமும், மாலை 6 மணி முதல் இரவு 11 மணிவரையான காலப்பகுதிக்குள் 2 மணித்தியாலமும் 30 நிமிடமும் மின்தடை அமுலாக்கப்படவுள்ளது. அத்துடன், P, Q, R, S, T, U, V, W முதலான வலயங்களில், காலை 8.30 மணிமுதல் மாலை 6.30 மணிவரையான காலப்பகுதிக்குள் 5 மணிநேரமும், மாலை 6.30 மணி முதல் இரவு 11 மணிவரையான காலப்பகுதிக்குள் 2 மணித்தியாலமும் 15 நிமிடமும் மின்தடை அமுலாக்கப்படவுள்ளது. - [இரண்டரை வருடங்களுக்கு ஜனாதிபதியால் கூட கலைக்க முடியாது](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%af%88-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%9c%e0%ae%a9/): இரண்டரை வருடங்களுக்கு ஜனாதிபதியால் கூட பாராளுமன்றத்தை கலைக்க முடியாது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். மாத்தறை-பலடுவ பௌத்த விகாரையில்  இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அரசியலமைப்பின் பிரகாரம் பாராளுமன்றத்தை கலைக்க வழி உள்ளது. அதனை தவிர பாராளுமன்றத்தை எவராலும் கலைக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். - [இந்தியாவிடம் மேலும் ஒரு பில்லியன் டொலர் கடன்?](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%87%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81/): இலங்கை தற்போது பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வரும் நிலையில், அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய இந்தியாவிடம் மேலும் ஒரு பில்லியன் டொலர்களை கடனாக கேட்டுள்ளதாக தெரியவருகிறது. இதனை இரண்டு தரப்புகள் இன்று உறுதி செய்துள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் இதுவரை இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பானது 70 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. அத்தியவசிய உணவு பொருட்கள் மற்றும் எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு தேவையான பணத்தை செலுத்த முடியாத நிலைமையை இலங்கை எதிர்நோக்கி வருகிறது. இதன் காரணமாக இலங்கை ரூபாயின் பெறுமதியும் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. இலங்கை ஏற்கனவே அத்தியவசிய பொருட்கள், மருந்து மற்றும் எரிபொருளை இறக்குமதி செய்ய இந்தியாவிடம் இருந்து 1.4 பில்லியன் டொலர்களை கடனாக பெற்றுக்கொண்டுள்ளது. - [அதிக விலையில் எரிவாயு விற்பனை செய்த தம்பதி கைது](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf/): பிலியந்தலையில் லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களை அதிக விலைக்கு விற்பனை செய்த தம்பதி உட்பட மூவரை பிலியந்தலை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சந்தேகநபர்களிடம் இருந்து 12.5 கிலோ எடையுள்ள 20 எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் 5 கிலோ எரிவாயு சிலிண்டர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தையில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட 500 ரூபா அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக பிலியந்தலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில், மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் - [அதிக விலைக்கு விற்கும் இடங்களை கண்டறிய விஷேட நடவடிக்கை](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87/): பதுக்கப்பட்டுள்ள எரிவாயு இருப்புக்கள் மற்றும் அதிக விலைக்கு எரிவாயு விற்பனை செய்யும் இடங்களைக் கண்டறிய நுகர்வோர் விவகார அதிகாரசபை விசேட நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. சில பகுதிகளில் எரிவாயு விற்பனை முகவர்கள் எரிவாயு கொள்கலன் கையிருப்பை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாக நுகர்வோர் முறைப்பாடு தெரிவித்துள்ளனர். மேலும் சில எரிவாயு விற்பனை முகவர்கள் எரிவாயு அடங்கிய கொள்கலன்களை 4,500 ரூபாவுக்கு அதிகமாக விற்பனை செய்வதாகவும் முறைப்பாடுகள் தெரிவிக்கப்படுகின்றன. அதன்படி, நுகர்வோர் விவகார அதிகாரசபை நாடளாவிய ரீதியில் விசேட நடவடிக்கையொன்றை ஆரம்பித்துள்ளது. சில எரிவாயு விநியோகஸ்தர்களின் அனுமதிப்பத்திரத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கும் எரிவாயு நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. - [ஜெய்சங்கர் - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ சந்திப்பு](https://minnal24.com/%e0%ae%9c%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%aa%e0%ae%af-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d/): மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று திங்கட்கிழமை இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை சந்தித்துள்ளார். முன்னதாக அவர், நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸவை முற்பகல் சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்து இதன்போது கூடுதல் அவதானம் செலுத்தப்பட்டிருந்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், நாளைய தினம் கொழும்பில் இடம்பெறவுள்ள பிம்ஸ்டெக் அமைச்சர்கள் மட்ட மாநாட்டில் இவர் பங்கேற்கவுள்ளார் - [வெங்காய வெடியை உட்கொண்ட யானைக்குட்டி உயிரிழப்பு](https://minnal24.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%af-%e0%ae%b5%e0%af%86%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%89%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f/): வாய்ப் பகுதியில் காயங்களுடன் காணப்பட்ட யானைக்குட்டி ஒன்று, வவுனியா, ஆச்சிபுரம் பகுதி பப்பாசித் தோட்டத்தில் இன்று திங்கட்கிழமை இறந்துள்ளது. குறித்த தோட்டத்துக்குள் நுழைந்த 6 வயது மதிக்கத்தக்க யானைக்குட்டி  உணவருந்த முடியாத நிலையில், தோட்டத்தில் இருந்து வெளியே செல்ல முடியாத நிலையில் காணப்பட்டுள்ளது. அதேவேளை, யானைக்குட்டியைப் பார்வையிடச் சென்ற மக்களைத் துரத்தி அச்சமடைய வைத்துள்ளது. இதனை தொடர்ந்து பிரதேச வாசிகளால் வவுனியா மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு தகவல் வழங்கப்பட்டது. குறித்த திணைக்களத்தினரால்  வட மாகாண கால்நடை வைத்தியர் கிரிதரனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்துக்குச் வைத்தியர் தலைமையிலான குழுவினர், வெங்காய வெடியை உட்கொண்டதனாலையே   யானைக்குட்டி  உணவை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். அத்தோடு, யானைக்குட்டிக்கான சிகிச்சையையும் மேற்கொண்டிருந்தார். எனினும், சிகிச்சை பலனின்றி யானைக்குட்டி இன்று இறந்துள்ளது. - [53 பேருக்கும் பிணை](https://minnal24.com/53-%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a3%e0%af%88/): சோமாவதி தேசிய பூங்காவுக்குள் நுழைந்து விறகு வெட்டியக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 53 பேருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது. தலா ஒருவருக்கு 53 இலட்ச ரூபாய் சரீரப் பிணையில் 53 பேரையும் பிணையில் விடுதலை செய்வதற்கு கந்தளாய் பதில் நீதவான் ஷானிக பெரேரா உத்தரவிட்டுள்ளார். 7 டிராக்டர்களில் 16 முதல் 60 வயதிற்குட்பட்ட 53 பேர் குறித்த வனப் பகுதிக்குள் நுழைந்து மரம் வெட்டியக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தனர். - [பைசர் தடுப்பூசி தொடர்பில் புதிய அறிவிப்பு](https://minnal24.com/%e0%ae%aa%e0%af%88%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2/): பைசர் தடுப்பூசியை முதலாவது, இரண்டாவது டோசாகப் செலுத்திக்கொள்வதற்கு மக்களுக்குப் புதிய வாய்ப்பு வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப சேவையின் பணிப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்தார். குழந்தைகளுக்கு மாத்திரமே பைசர் தடுப்பூசி முதலாவது டோசாக வழங்கப்படுகிறது. ஏனையோருக்கு பைசர் மூன்றாவது (பூஸ்டர்) டோசாகவே செலுத்தப்படுகிறது. இதேவேளை சில நாடுகளுக்கு செல்லும்போது பைசர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்பதால், அவ்வாறானவர்களுக்குப் இப்புதிய வாய்ப்பு பெரும்பலன் உள்ளதாக அமையும் எனவும் தெரிவித்தார். இதேவேளை சுகாதார அமைச்சின் வசமுள்ள பைசர் டோஸ்களில் பெரும்பலானவை எதிர்வரும் ஆகஸ்ட் மாதமளவில் காலாவதியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டின் மொத்த சனத்தொகையில் ஒருகோடியே 40 இலட்சத்துக்கு அதிகமானவர்கள் இதுவரையில் முதலாவது இரண்டாவது தடுப்பூசியை செலுத்திகொண்டுள்ளதாக தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது. பூஸ்டர் தடுப்பூசியை 76 இலட்சம் பேர் இதுவரையில் செலுத்திக்கொண்டுள்ளனர். - [களமிறங்கினார் ஜெய்சங்கர்](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%b3%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9c%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0/): இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவை இன்று திங்கட்கிழமை காலை சந்தித்தார். அதன்பின்னர், கொழும்பில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு களவிஜயமொன்றை மேற்கொண்டார். லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்துக்குச் சொந்தமான, எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கே அவர் சென்றிருந்தார். - [பேரீச்சம்பழத்துக்கு வரி குறைப்பு](https://minnal24.com/%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%af%80%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf/): இறக்குமதி செய்யப்படும் பேரீச்சம்பழம் ஒரு கி​லோ கிராமுக்கான சிறப்பு பண்ட வரி, 199 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இந்த வரி, கிலோ கிராம் ஒன்றுக்கு 200 ரூபாயாக அறவிடப்பட்டது. ரமழான் காலத்தில் முஸ்லிம்களுக்கு நிவாரணம் வழங்கு வகையிலேயே பேரிச்சம்பழத்துக்கான வரி குறைக்கப்பட்டுள்ளது. இது  இன்று திங்கட்கிழமை முதல் அமுலுக்கு வருகிறது. - [எரிபொருள் வரிசையில் காத்திருந்த ஒருவர் உயிரிழப்பு](https://minnal24.com/%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d/): அத்துருகிரிய பிரதேசத்தில் எரிபொருள் வரிசையில் பல மணிநேரம் காத்திருந்த நபரொருவர் உயிரிழந்துள்ளார். கடந்த சனிக்கிழமை எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருந்த 85 வயதான குறித்த நபர் திடீரென மயக்கமடைந்து வீழ்ந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும், அவர் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் மரணத்திற்கான காரணம் மாரடைப்பு எனவும் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். - [நுவரெலியா- பதுளை வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்](https://minnal24.com/%e0%ae%a8%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%86%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-%e0%ae%aa%e0%ae%a4%e0%af%81%e0%ae%b3%e0%af%88-%e0%ae%b5%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%ae/): எரிபொருள் கோரி,  இன்று திங்கட்கிழமை நுவரெலியா- பதுளை வீதியை மறித்து, மக்கள் ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர். இதனால் குறித்த வீதியுடனான போக்குவரத்து சுமார் இரண்டு மணித்தியாலயம் தடைப்பட்டதுடன், அங்கு பதற்றமான நிலையும் ஏற்பட்டது. இதனையடுத்து, நுவரெலியா பொலிஸார், அத்தியாவசிய தேவைக்காக வைக்கப்பட்டிருந்த டீசலை,  எரிபொருள் நிரப்பு நிலைய  உரிமையாளருடன் கலந்துரையாடி, வரிசையில் நின்ற வாகனங்களுக்கும் , பொதுமக்களுக்கும் விநியோகித்ததையடுத்து, ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது. - [ஸ்ரீ லங்கன் விமானச் சேவை இடைநிறுத்தம்](https://minnal24.com/%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af%80-%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%87%e0%ae%b5%e0%af%88/): ஸ்ரீ லங்கன் விமானச் சேவையானது, இலங்கைக்கும் ரஷ்யாவின் மொஸ்கட் நகரத்துக்கும் இடையில் நடத்திய விமானச் சேவையை, இன்றிலிருந்து இடைநிறுத்தியுள்ளது. நிர்வகிக்க முடியாத காரணத்தால் இந்தத் தீர்மானத்தை எடுத்ததாக, ஸ்ரீ லங்கான விமான நிறுவனம் அறிவித்துள்ளது. ரஷ்யாவின் நிலைமை வழமைக்குத் திரும்பியதன் பின்னர், அந்த சேவையை மீளவும் ஆரம்பிப்பதற்கு நிறுவனம் எதிர்பார்க்கின்றது என்று நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கன் விமானச் சேவை, ​கட்டுநாயக்க மற்றும் மொஸ்கட் நகரத்துக்கு இடையில், வாரத்தில் இரண்டு தடவைகள் விமானச் ​சேவைகளை நடத்துகின்றமை குறிப்பிடத்தக்கது. - [பிரதமர் பதவியில் மாற்றமா?](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%ae%e0%ae%be/): பிரதமர் பதவியில் மாற்றங்கள் ஏற்படக்கூடுமென, அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நாடு  தற்போது முகங்கொடுத்துக் கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், தற்போதைய அரசாங்கத்தினால் அரசியல் ரீதியில் பாரிய மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. அதனடிப்படையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் பதவியை துறப்பார் என்றும் அதன்பின்னர், அரசியல் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல, தேசிய அரசாங்கமொன்றை நிறுவி, பிரதமர் பதவியை ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்குவதற்கும் கலந்துரையாடப்படுவதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு தற்போது முகங்கொடுத்துக் கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், அரசியல் ரீதியில் மாற்றங்களை   சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில்,  மேற்கொள்ளவேண்டும் என்ற கோரிக்கைக்கு அமையவே, அரசியல் மாற்றம் செய்யப்படவிருப்பதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்படுகின்றது. - [இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf-2/): இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 298 ரூபா 99 சதமாக பதிவாகியுள்ளதுடன் கொள்முதல் பெறுமதி 288 ரூபா 74 சதமாக பதிவாகியுள்ளது. அத்துடன், ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 380 ரூபா 66 சதம். விற்பனை பெறுமதி 330 ரூபா 75 சதம். யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 319 ரூபா 50 சதம் விற்பனை பெறுமதி 321 ரூபா 51 சதம். ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 35 சதம் விற்பனை பெறுமதி 2 ரூபா 45 சதம் - [எரிவாயு தரையிறக்கும் பணிகள் இன்றிரவு ஆரம்பம்](https://minnal24.com/%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%af%81-%e0%ae%a4%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf/): நாட்டை வந்தடைந்துள்ள எரிவாயு தாங்கிய கப்பலில் உள்ள எரிவாயுவினை தரையிறக்கும் பணிகள் இன்றிரவு இடம்பெறவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. 3,500 மெட்ரிக் டன் எரிவாயு தாங்கிய கப்பல் நேற்றிரவு நாட்டை வந்தடைந்தது. இதன்படி, நாட்டை வந்தடைந்துள்ள எரிவாயுவினை விரைவில் நாடு முழுவதிலும் விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக லிட்ரோ நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார். இதேவேளை, தற்போது வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எரிவாயு, எரிபொருள் மற்றும் ஏனைய பொருட்களின் தரம் தொடர்பில் ஆராயுமாறு சில சிவில் அமைப்புகள் இணைந்து கோரிக்கை விடுத்துள்ளன. - [ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கி](https://minnal24.com/%e0%ae%86%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b/): -யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் எல்லா வகை குருதிக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் நோயாளர்களுக்கு தேவையான குருதியை வழங்க முடியாத ஆபத்தான நிலையில் இரத்த வங்கி இருக்கின்றதாக தெரிவிக்கப்படுகிறது. இரத்த வங்கியில் சராசரியாக இருக்க வேண்டிய குருதியின் அளவு 330 பைந்த் ஆகும். ஆனால் தற்போது இரத்த வங்கியில் 167 பைந்த் குருதி மட்டுமே இருக்கின்றது. இது இன்னும் நான்கு நாட்களில் முடிந்துவிடும். சராசரியாக நாளொன்றிற்கு 35 – 40 பைந்த் குருதி நோயாளர்களுக்கு இரத்த வங்கியிலிருந்து விநியோகிக்கப்படுகின்றது. திட்டமிட்டபடி நடக்கவிருந்த இரத்ததான முகாம்கள் தவிர்க்க முடியாத காரணங்களினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதனால் எதிர்பார்க்காத வகையில் எல்லா வகை குருதிக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நடைபெற்ற இரத்ததான முகாம்களிலும் தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு காரணமாக குறைந்தளவு குருதிக்கொடையாளர்கள் மட்டுமே இரத்ததானம் செய்கின்றார்கள். ஆகவே இரத்த வங்கியில் அல்லது இரத்ததான முகாம்களில் ஏற்கனவே இரத்ததானம் செய்து நான்கு மாதங்கள் பூர்த்தியானவர்களும் புதிதாக இரத்ததானம் செய்யக்கூடியவர்களும் […] - [நற்பிட்டிமுனை விளையாட்டுக்கழகம் நடத்திய லீடர் கிண்ண கிரிக்கட் சுற்றுப்போட்டி](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b3%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f/): -கல்முனை நிருபர்- நற்பிட்டிமுனை விளையாட்டுக்கழகம் நடத்திய அணிக்கு 11 பேர் 20 ஓவர்கள் கொண்ட T-20 லீடர் சம்பியன்ஸ் கிண்ண கடினபந்து கிரிக்கட் சுற்றுப்போட்டியின் சம்பியனாக சாய்ந்தமருது பைன் ஸ்டார் விளையாட்டு கழகம் தெரிவானது. கடந்த சில வாரங்களாக நற்பிட்டிமுனை அஸ்ரப் பொது மைதானத்தில் நடைபெற்ற கிரிக்கட் சுற்றுப்போட்டியில் தனது குழுவில் மோதிய சகல அணிகளையும் வீழ்த்தி சாய்ந்தமருது பைன் ஸ்டார் விளையாட்டு கழகம் இறுதிப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டது. மறுமுனையில் தனது குழுவில் போட்டியிட்ட சகல அணியினரையும் வீழ்த்தி வெற்றி பெற்ற மருதமுனை மறுகேப்பிட்டல் விளையாட்டுக் கழக அணி இறுதி போட்டியில் பைன் ஸ்டார் விளையாட்டுக்கழகத்துடன் மோதியது . நற்பிட்டிமுனை அஸ்ரப் பொது மைதானத்தில் நடைபெற்ற இவ்விறுதி போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய சாய்ந்தமருது பைன் ஸ்டார் விளையாட்டு கழகம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 19.2 பந்துவீச்சு ஓவர்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்து 141 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. […] - [சாய்ந்தமருதில் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி](https://minnal24.com/%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4/): -கல்முனை நிருபர்- சாய்ந்தமருது பிரதேசத்திற்குட்பட்ட பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் சாய்ந்தமருது பிளாஸ்டர் விளையாட்டுக்கழகம் சம்பியன் பட்டத்தை தனதாக்கி கொண்டது. நடப்பு சம்பியன் என்பதால் நேரடியாக அரையிறுதிக்கு தகுதி பெற்று, சாய்ந்தமருது ஹோலி ஹீரோஸ் விளையாட்டு கழகத்தை எதிர்த்தாடி பிளாஸ்டர் விளையாட்டுக்கழக வீரர் அப்லால் காரியப்பரின் அபார அதிரடியாட்டத்தினால் வெற்றியடைந்து இறுதிப்போட்டியில் சாய்ந்தமருது பிளையிங் ஹோர்ஸ் விளையாட்டுக்கழகத்துடன் மோதி அதிலும் ஓர் இலகு வெற்றியை பதிவு செய்து 2022 சம்பியனாக மகுடத்தை சாய்ந்தமருது பிளாஸ்டர் விளையாட்டுக்கழகம் சூடிக்கொண்டது. - [கல்முனையில் போஷாக்கு மற்றும் நலவாழ்வு தொடர்பிலான கருத்தரங்கு](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b7%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%8d/): -கல்முனை நிருபர்- கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை ஏற்பாட்டில் மதத்தலைவர்கள் மற்றும் திருமண பதிவாளர்களுக்கான போஷாக்கு மற்றும் நலவாழ்வு தொடர்பிலான கருத்தரங்கொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்த கருத்தரங்கில் மதத்தலைவர்கள், திருமண பதிவாளர்கள், மருத்துவ மாதுக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்ததுடன் இங்கு வளவாளராக கலந்துகொண்டு பேசிய கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஐ.எல்.எம். றிபாஸ் திருமண பந்தங்கள் தொடர்பிலும் உணவு பழக்கவழக்கங்கள் தொடர்பிலும் தெளிவுபடுத்தினார். நாட்டில் இப்போது வேகமாக வளர்ந்துவரும் ஆரோக்கியமற்ற வேகமான உணவுகள் தொடர்பில் கருத்துரைத்த வைத்தியர் ஐ.எல்.எம். றிபாஸ் அந்த உணவுகளினால் ஏற்படும் பக்கவிளைவுகள் பற்றி ஆழமாக தெளிவுபடுத்தியதுடன் குழந்தைகள் வளர்ப்பு, முறையற்ற உணவுப்பாவனைகளினால் இளவயது கர்ப்பிணிகள் சமகாலத்தில் அனுபவிக்கும் நோய் நிலைகள் அதற்கான தீர்வுகள் பற்றி விளக்கினார். இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை வைத்தியர்கள் பலரும் […] - [ஆசிரியர் எம்.எம்.எம்.உவைஸ் எழுதிய மூன்று நூல்களின் வெளியீட்டு விழா](https://minnal24.com/%e0%ae%86%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b5%e0%af%88%e0%ae%b8/): -எம்.எஸ்.எம்.ஸாகிர்- விஞ்ஞான பாட ஆசிரியர் எம்.எம்.எம். உவைஸ் எழுதிய மூன்று நூல்களின் வெளியீட்டு விழா இன்று திங்கட்கிழமை சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஷ்ரப் வித்தியாலயத்தில் காலை 10.30 மணிக்கு நடைபெறும். பாடசாலையின் பிரதி அதிபர் ஏ.எம். நிசார் தலைமையில் நடைபெறும் இந்நூல் வெளியீட்டு விழாவில், சாய்ந்தமருது கோட்டக்கல்விப்பணிப்பாளர் என்.எம்.ஏ. மலிக் பிரதம அதிதியாகக் கலந்து கொள்கிறார். சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஷ்ரப் அதிபர் எம்.ஐ.சம்சுதீன், சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ். அதிபர் எம்.ஐ. இல்லியாஸ், கல்முனை அல்-ஸுஹறா அதிபர் எம்.எச்.எஸ்.ஆர். மஜீதிய்யா, லீடர் எம்.எச்.எம். அஷ்ரப் பிரதி அதிபர் எஸ்.எம்.சுஜான் ஆகியோர் இந்நிகழ்வில் கௌரவ அதிதிகளாகக் கலந்து கொள்வதோடு, சேவைக்கான ஆசிரிய ஆலோசகர் (விஞ்ஞானம்) எம்.எஸ். சஹ்துல் அமீன் விசேட அதிதியாகவும் கலந்து சிறப்பிக்கிறார். - [இன்றைய மின் துண்டிப்பு அறிவிப்பு](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%88%e0%ae%af-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%85/): இன்று மின்துண்டிப்பை மேற்கொள்வது தொடர்பில் மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய, A முதல் L வரையான வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு இன்று காலை 8.00 மணிமுதல் மாலை 6.00 மணிவரையான காலப்பகுதியினுள் 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும், மாலை 6.00 மணிமுதல் இரவு 11.00 மணிவரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலமும் 40 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது. அவ்வாறே P முதல் W வரையான வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு காலை 8.30 மணிமுதல் மாலை 5.30 மணிவரையான காலப்பகுதியினுள் 2 மணித்தியாலங்களும் 15 நிமிடங்களும், மாலை 5.30 மணிமுதல் இரவு 11.00 மணிவரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலமும் 50 நிமிடங்களும், மின்துண்டிப்பினை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. - [நாட்டின் சில பகுதிகளில் மழையுடனான வானிலை](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%aa%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-5/): மேல், வடமேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகும். மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுகிறது. - [தந்தை செல்வா நற்பணி மன்றத்தினால் விருது வழங்கும் நிகழ்வு](https://minnal24.com/%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1/): -யாழ் நிருபர்- பண்டத்தரிப்பு தந்தை செல்வா நற்பணி மன்றத்தினால் சாதனையாளர்களுக்கு விருது வழங்கி கௌரவித்தலும் மூக்குக் கண்ணாடி வழங்கும் நிகழ்வும் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதன்போது ஊடக ஆசிரியர்கள், மூத்த ஊடகவியலாளர்கள், கலைஞர்கள், அதிபர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு இவ்வாறு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன. இதன்போது, தெரிவு செய்யப்பட்ட 99 பயனாளிகளுக்கு தந்தை செல்வா நற்பணி மன்றத்தினால் மூக்கு கண்ணாடிகளும் வழங்கி வைக்கப்பட்டன. தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா  பிரதம விருந்தினராக கலந்து கொண்ட இந்நிகழ்வில், முன்னாள் வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் கஜதீபன், வலி. தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் ஜெபனேசன், பிரதேச சபை உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர். - [இலங்கைக்கு கடல் அட்டைகளை கடத்த முயன்ற மூவர் கைது](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%88/): -மன்னார் நிருபர்- ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே புதுப்பட்டிணம் கடற்கரை பகுதியில் கடல் வழியாக கடல் அட்டைகளை படகு மூலம் இலங்கைக்கு கடத்த இருந்த நிலையில் கடல் அட்டையுடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே புதுப்பட்டிணம் கடற்கரை பகுதியில் கடல் வழியாக கடல் அட்டைகளை படகு மூலம் இலங்கைக்கு கடத்தப்படுவதாக சுங்கத் துறையினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, சுங்கத்துறை கண்காணிப்பாளர்கள் கோகுல், சத்தியநாராயணன் உட்பட சுங்கத்துறை அதிகாரிகள் கடற்கரை பகுதிக்கு சென்ற பொழுது படகில் கடல் அட்டை மூடை ஏற்றிக் கொண்டிருந்த போது குறித்த படகை கைப்பற்றினர். இதன் போது குறித்த படகிலிருந்த கடல் அட்டைகளையும் கடத்த முயன்ற தேவிபட்டிணத்தைச் சேர்ந்த மூவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் சுங்கத்துறை அலுவலகத்தில் தடுத்து வைத்து நடத்திய விசாரணையில் கடல்வழியாக படகு மூலம் இலங்கைக்கு 700 கிலோ கடல் அட்டைகளை கடத்த இருந்தமை தெரிய […] - [போதைப் பொருள் சுற்றிவளைப்புகளில் 95 ஆயிரம் பேர் கைது](https://minnal24.com/2021%e0%ae%86%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2-95%e0%ae%86%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0/): 2021ஆம் ஆண்டு முதல் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் இணைந்து மேற்கொண்ட போதைப் பொருள் சுற்றிவளைப்புகளில் 95 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பிரதி பொலிஸ்மா அதிபரும் சிரேஷட பொலிஸ் ஊடக பேச்சாளருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். விசேட காணொளிப் பதிவிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும், ‘இதன்போது 1,630 கிராம் ஹெரோய்ன், 15,000 கிலோ கஞ்சா என்பவை கைப்பற்றப்பட்டுள்ளன. இதேபோன்று 377 கிலோ நிறையுடைய ஏனைய போதைப் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த வருடத்தில் ஜனவரி முதலாம் திகதி முதல் இது வரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட போதைப் பொருள் சுற்றிவ ளைப்புகளில் 800 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்துடன், 360கிராம் ஹெரோயின், 2,100 கிலோ கஞ்சா, 18 கிலோ நிறையுடைய ஏனைய போதைப் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என்றார். - [55 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் ஆரம்பம்](https://minnal24.com/55-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%b0/): சுமார் 55 வருட இடைவெளிக்குப் பின்னர் கொழும்பு – இரத்மலானை விமான நிலையத்தில் இருந்து சர்வதேச விமான சேவை நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மாலைதீவு எயர் நிறுவனத்தின் கியூ2944 விமானம் நேற்று காலை இரத்மலானை விமான நிலையத்தில் தரையிறங்கியது. இலங்கையில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் மற்றும் மாலைதீவைச் சேர்ந்த மற்றொரு நிறுவனத்தால் இங்கிருந்து விமானங்கள் இயக்கப்படும். இரத்மலானை விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்கும் மற்றும் விமான தரிப்பு கட்டணத்தை குறைக்க அரசாங்கம் சமீபத்தில் முடிவு செய்தது. இந்த விமான நிலையத்தை குறைந்த செயலில் இயக்கப்படும் விமான நிறுவனங்களின் மையமாக செயற்படுத்த அரசாங்கம் திட்டங்களை வகுத்துள்ளது. இரத்மலானை சர்வதேச விமான நிலையம் 1938 இல் திறக்கப்பட்டது. 1968 இல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் இரத்மலானையில் இருந்து சர்வதேச விமான சேவைகள் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. - [சர்வதேச புவி தினத்தில் 10 ஆயிரம் விளக்குகள்](https://minnal24.com/%e0%ae%aa%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-10-%e0%ae%86%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf/): சர்வதேச புவி தினத்தன்று 10 ஆயிரம் விளக்குகள் ஏற்றும் விசேட நிகழ்வு ஒன்று கிளி நொச்சியில் நடைபெற்றது. இந்த நிகழ்வு விடியல் ஆடை தொழிற்சாலையின் ஏற்பாட்டில் கிளிநொச்சி பசுமை பூங்காவில் இடம்பெற்றது. புவி மணித்தியாலமான இரவு 8.30 – 9.30 மணி வரை யான காலப்பகுதியில் அனைத்து மின்விளக்குகளும் அணைக் கப்பட்டு புவிக்கு மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்வில் சர்வமத தலைவர் கள், கரைச்சி பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர் கள், ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர். இதன் போது 10ஆயிரம் சிட்டி விளக்குகள் ஏற்றப்பட்டு அப்பகுதி அழகாக காட்சியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது - [பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும்](https://minnal24.com/%e0%ae%8f%e0%ae%aa%e0%af%8d%e0%ae%b0%e0%ae%b2%e0%af%8d-30-%e0%ae%86%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%ae/): ஏப்ரல் 30 ஆம் திகதி முதல், பூரணமாக தடுப்பூசி செலுத்திக் கொண்டமைக்கான அத்தாட்சி அட்டை கட்டாயமாக வைத்திருக்க வேண்டிய பொது இடங்களின் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், எதிர்வரும் தமிழ் – சிங்கள புத்தாண்டுக்கு முன்னதாக அடுத்த 2 வாரங்களுக்குள் பூஸ்டர் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளுமாறு தொற்று நோய் பிரிவின் பிரதம தொற்று நோய் நிபுணர் மருத்துவர் சமித்த கினிகே அறிவுறுத்தியுள்ளார். இதேவேளை, ஏப்ரல் 30ஆம் திகதி முதல் பொது இடங்களுக்கு மூன்று தடுப்பூசிகளையும் ஏற்றாதவர்கள் செல்ல முடியாது என்றும் அவர் தெரிவித்தார். - [மதுபோதையில் வாகனம் செலுத்திய சுகாதார பணிப்பாளர் கைது](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%81-4/): மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் நுவரெலியா மாவட்ட சுகாதார பணிப்பாளர், தலவாக்கலை பொலிஸாரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார் என, நுவரெலியா பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சுகாதாரப் பணிப்பாளர் தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு நாளை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுவார் என அவர் மேலும் தெரிவித்தார். சுகாதாரப் பணிப்பாளர், விருந்தொன்றில் கலந்து கொண்டு வீடு திரும்பும் போதே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். - [விடுமுறைக்காலத்தில் சமூக ஊடகங்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை](https://minnal24.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%82/): விடுமுறை காலத்தில் மேற்கொள்ளும் பயணங்கள் குறித்து, சமூக ஊடகங்களில் பதிவிடுவதை தவிர்க்குமாறு சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார்.  விடுமுறையில் செல்லும் நபர்கள், சமூக ஊடகங்களில் தகவல்களை வெளியிடுவதால் அதைப் பயன்படுத்தி, மோசடி செய்பவர்கள் அதை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வர் எனவும் எச்சரித்தார். வீடுகளில் யாரும் இல்லாததை இதன் மூலம் அறிந்துகொள்ளும் குற்றவாளிகள்,  வீடுகளை உடைத்து உள்நுழையப் பார்க்கிறார்கள் என்று அவர் விளக்கியதுடன், எனவே தமது பயணங்கள் முடியும் வரை பொறுமையாக இருக்குமாறு வலியுறுத்தினார். தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு போதைப்பொருள் சோதனைகள் அதிகரிப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், போதைப்பொருள் வர்த்தகம் குறித்த மதிப்புமிக்க தகவல்களை வழங்குபவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். - [சாணக்கியனால் எவர்கிறீன் கழகத்திற்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு](https://minnal24.com/%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%80%e0%ae%a9%e0%af%8d/): மட்டக்களப்பு மாவட்ட மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் உட்பட்ட கழகங்களுக்கு இடையில் நடத்தப்பட்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்ற இருதயபுரம் எவர்கிரீன் அணியினருக்கு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் சுமார் 70,000 ரூபாவிற்கு மேற்பட்ட விளையாட்டு உபகரணங்களும், பாதணிகளும் வழங்கினார். குறித்த விளையாட்டு உபகரணங்கள் பாராளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியனின் மட்டக்களப்பு மாவட்ட தொகுதி இணைப்பாளர் தினேஷ் குமாரினால் எவர்கிரீன் விளையாட்டுக்கழக தலைவர் சி.டிலுக்சனிடம் கையளிக்கப்பட்டது. இந் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணியளவில் எவர்கிரீன் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. மேலும், பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் எவர்கிறீன் விளையாட்டு கழகத்திற்காக 50,000 ரூபா நிதி ஒதுக்கீட்டையும் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியனின் மட்டக்களப்பு மாவட்ட தொகுதி இணைப்பாளர் தினேஷ் குமார், எவர்கிரீன் அணியின் விளையாட்டு மூத்த உறுப்பினர்கள், விளையாட்டு வீரர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.   - [நீர் மின் உற்பத்தி இன்னும் 20 நாட்களுக்கு மாத்திரமே](https://minnal24.com/%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%81/): நீர்த்தேக்கங்களில் உள்ள நீரைக் கொண்டு இன்னும் 20 நாட்களுக்கு மாத்திரமே நீர் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என இலங்கை மின்சார சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடும் வரட்சி காரணமாக மின் உற்பத்தி நிலையங்களுடன் தொடர்புடைய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 28 சதவீதத்தை விடக் குறைவடைந்துள்ளதாகவும் இலங்கை மின்சார சபை தரவுகள் தெரிவிக்கின்றன. கொத்மலை நீர்த்தேக்கத்தில் 21%, காசல்ரீ நீர்த்தேக்கத்தில் 12%, மவுஸ்ஸாகலை நீர்த்தேக்கத்தில் 29%, சமனல நீர்த்தேக்கத்தில் 14% மற்றும் ரந்தெனிகல நீர்த்தேக்கத்தில் 56% என்ற சதவீதத்தில் நீர்மட்டம் குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டின் மின்சார உற்பத்தியில் 80 சதவீதமானவை நீரின் மூலம் பெறப்பட்டிருந்த நிலையில், தற்போது அது சுமார் 20 சதவீதமாக குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. - [நாளை வருகிறார் ஜெயசங்கர்](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%88-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9c%e0%af%86%e0%ae%af%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d/): இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் நாளை திங்கட்கிழமை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸின் அழைப்பின் பேரில் இந்திய வெளிவிவகார அமைச்சர் இந்த உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். நாளை 28முதல் 30ஆம் திகதிகளில் வெளிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயம் அமையவுள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் இந்த விஜயத்தின்போது, 29ஆம் திகதி கொழும்பில் நடைபெறும் BIMSTEC அமைச்சர்கள் மட்ட கூட்டத்தில் பங்கேற்கவுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வெளிவிவகார் அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர், இலங்கை பயணத்தின்போது மேற்கொள்ளும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில், இலங்கை இந்தியாவிடம் எதிர்பார்க்கும் முக்கிய விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்படுமென இந்திய வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, இலங்கை விஜயத்துக்கு முன்னதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலைதீவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை முன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.   - [மீன் வலையில் சிக்கிய ஐந்தடி நீளமுடைய முதலை](https://minnal24.com/%e0%ae%90%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b3%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%af%88%e0%ae%af-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b2%e0%af%88/): திருகோணமலை, சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிராமத்துக்குள் புகுந்து பரபப்பை ஏற்படுத்திய ஐந்தடி நீளமுடைய முதலை ஒன்று, நேற்று சனிக்கிழமை மாலை மடிக்கிப் பிடிக்கப்பட்டுள்ளது. சீனக்குடா, கொட்பே பகுதியில் உள்ள மீனவர் ஒருவரின் மீன்பிடி வலையில் இம்முதலை சிக்கியது. உடனடியாக சீனக்குடா பொலிஸாருக்கும், பிராந்திய வன ஜீவராசி பகுதியினருக்கும் தகவல் வங்கப்பட்டு, வன ஜீவராசி பாதுகாப்பு அதிகாரிகளால் மடிக்கிப் பிடிக்கப்பட்டமுதலையை, திருகோணமலை வனப் பகுதியில் அதிகாரிகள் விடுவித்தனர். - [சாய்ந்தமருதில் சர்வதேச காசநோய் தின விழிப்புணர்வு நடைபவணியும் வீதி நாடக நிகழ்ச்சியும்](https://minnal24.com/%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a-%e0%ae%95/): -கல்முனை நிருபர்- சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை, சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துடன் இணைந்து நடாத்திய சர்வதேச காசநோய் தின விழிப்புணர்வு நடைபவணியும் வீதி நாடக நிகழ்ச்சியும் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலைக்கு முன்னால் இருந்து ஆரம்பமான நடை பவணி மாளிகா வீதி ஊடாக சென்று கடற்கரைப் பிரதேசத்தை அடைந்ததுடன் அங்கு விழிப்புணர்வு நிகழ்வும் இடம்பெற்றது. அதில் சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர் எம் எச் கே சனூஸ், சாய்ந்தமருது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யூ எல் எம் நியாஸ், பல் வைத்திய நிபுணர் டாக்டர் எம் ஐ எம் நௌசாட், பொதுச்சுகாதார பரிசோதகர் எம்.எம்.எம். பைசால், தாதிய மேற்பார்வை உத்தியோகத்தர் பி எம் நஸ்ருதீன், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் ஏ புஹாது உட்பட பெருந்தொகையான பொதுமக்களும் சுகாதார சேவை உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் கலந்து கொண்டனர் இதன்போது தொடர்ச்சியாக இரு வாரங்களுக்கு […] - [புலம்பெயர் தமிழர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு?](https://minnal24.com/%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/): புலம்பெயர் தமிழர்கள், அவர்களின் தாய்நாடான இலங்கையில் முதலீடு செய்யலாம். கடந்த காலங்களில் அவர்கள் இங்கு வந்து முதலீடு செய்ய முயன்று அவர்களுக்கு பாதுகாப்போ அல்லது இதர பிரச்சினைகளோ எதுவும் இருந்து, வராமல் போயிருந்தால் அவர்களை இலங்கை வருமாறு நான் அழைப்பு விடுக்கிறேன். அவர்களின் பாதுகாப்பை எமது அரசாங்கம் உறுதி செய்யும். இவ்வாறு நேற்றுத் தமிழன் பத்திரிகையிடம் கருத்துத் தெரிவிக்கும்போது குறிப்பிட்டார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ. தமிழ் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பின்போது, வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கான விசேட நிதியமொன்று உருவாக்கம் குறித்து பிரஸ்தாபிக்கப்பட்டமை பற்றி கேட்டபோதே மேற்கண்டவாறு கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியதாவது, புலம்பெயர் தமிழர்களின் உதவியுடன் இந்த நிதியம் உருவாக்கப்படுதல் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யோசனையொன்றை முன்வைத்துள்ளது. இதனைப் பற்றி தொடரந்து பேசி தீர்மானமொன்றை மேற்கொள்ள வேண்டும். புலம்பெயா் தமிழர்கள் எமது நாட்டில் பிறந்தவர்களே. அவர்களுக்கு இந்த நாட்டில் எதனையும் மேற்கொள்ள உரிமையுண்டு. அவர்கள் இங்கு வருறவதற்கோ அல்லது […] - [இ.தொ.க.விற்கு புதிய தலைவர்?](https://minnal24.com/%e0%ae%87-%e0%ae%a4%e0%af%8a-%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d/): இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமைப் பதவி ஆறுமுகன் தொண்டமானின் மறைவுக்குப் பின்னர் வெற்றிடமாக இருந்துவருகின்ற நிலையில், புதிய தலைவரை தெரிவுசெய்வதற்காக அக்கட்சியின் பொதுச்சபை எதிர்வரும் 30 ஆம் திகதி புதன்கிழமை கூடவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அக்கட்சியின் தலைவராக செயற்பட்ட ஆறுமுகன் தொண்டமான் 2020 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் திகதி காலமானார். அதன் பின்னர் தலைமைப் பதவியை யாருக்கு வழங்குவது என்பது தொடர்பில் பல்வேறு கருத்தாடல்கள் இருந்தபோதும், இதுவரை அப்பதவிக்கு யாரும் நியமிக்கப்படவில்லை. எதிர்வரும் 30 ஆம் திகதி கொட்டகலை சி.எல்.எப்பில் கூடவுள்ள பொதுச்சபையில் ஏனைய பதவிக்குரிய உறுப்பினர்களும் தெரிவுசெய்யப்படவுள்ளனர். - [சாரதி கொலை ; மாணவன் கைது](https://minnal24.com/%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%88-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%88%e0%ae%a4%e0%af%81/): வலுசக்தி அமைச்சர் காமினி லொகுகேவின் சாரதி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இம்முறை உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிவிட்டு பெறுபேறுகளுக்காக காத்திருக்கும் 19 வயதுடைய மாணவனே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர். கொலை இடம்பெற்ற அன்று இந்த மாணவனும் மோட்டார் சைக்கிளில் சம்பவ இடத்துக்கு வந்திருந்ததாகவும், கொலை சம்பவத்தோடு இவருக்கும்  தொடர்புள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதேவேளை இக்கொலை சம்பவத்துடன் இந்த மாணவனின் தாய், தந்தை உள்ளிட்ட ஐவர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர். - [நாளை மின்வெட்டு அறிவிப்பு](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b5%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa/): நாளை, A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு  காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியினுள் 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும், மாலை 6 மணிமுதல் இரவு 11 மணிவரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலமும் 40 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது. அவ்வாறே P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு காலை 8.30 மணிமுதல் பிற்பகல் 5.30 மணிவரையான காலப்பகுதியினுள் 2 மணித்தியாலங்களும் 15 நிமிடங்களும், மாலை 5.30 மணிமுதல் இரவு 11 மணிவரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலமும் 50 நிமிடங்களும், மின்வெட்டினை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. - [நாமல் ராஜபக்ஸ இராஜினாமா?](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%aa%e0%ae%95%e0%af%8d%e0%ae%b8-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%be%e0%ae%ae%e0%ae%be/): முன்மாதிரியாகத் தேவையென்றால் தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்யவும் தயார் என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே விளையாட்டுத்துறை அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  “முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசாங்கத்தின் அமைச்சர்களின் எண்ணிக்கையை குறைக்க முன்வந்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு கிடைத்துள்ள அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்வதன் மூலம் முன்னுதாரணமாக இருக்க முடியும்” என்றும் அவர் கூறினார். “ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து அவர்களால் முன்மாதிரியாக இருக்க முடிந்தால், நான் அவர்களுடன் சேர்ந்து எனது பதவியை இராஜினாமா செய்யவும் தயாராக இருக்கிறேன். எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை” என்று அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். - [ரணிலின் கோரிக்கையை ஏற்றது அரசாங்கம்](https://minnal24.com/%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%af%88-%e0%ae%8f%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%a4/): ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்க, அதிரடியான கோரிக்கையொன்றை விடுத்துள்ளார். சர்வதேச நாணய நிதியம் (IMF) தொடர்பில் பாராளுமன்றத்தில் அவசர விவாதமொன்றை நடத்தவேண்டும் என்றே அவர் கோரியுள்ளார். ரணில் கோரிக்கைக்கு பதிலளித்துள்ள அரசாங்கத்தின் பிரதம கொறடாவும் அமைச்சருமான ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ புள்ளே, சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை தொடர்பில், ஏப்ரல் முதல்வாரம் பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது என்றார். - [3,500 மெற்றிக் தொன் எரிவாயு தரையிறக்கம்](https://minnal24.com/3500-%e0%ae%ae%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%af%81-%e0%ae%a4%e0%ae%b0/): ஓமான் அரசாங்கத்தால் இலங்கைக்கு கடனுதவியாக வழங்கப்பட்ட 3,500 மெற்றிக் தொன் எரிவாயு, இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கப்பலிலிருந்து தரையிறக்கப்பட்டதாக லிட்ரோ காஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார். லிட்ரோ நிறுவனத்திடம் போதியளவு எரிவாயு கையிருப்பு இருப்பதால், நாளொன்றுக்கு 100,000 சிலிண்டர்கள் வீதம் எதிர்வரும் நாட்களில் தொடர்ந்து எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு வழங்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். கெரவலப்பிட்டி எரிவாயு முனையத்தில் உற்பத்தி, இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சாதாரணமாக இல்லாவிட்டாலும், பிற்பகலுக்குள் சுமார் 100,000 எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்தார். எரிவாயுவைத் தொடர்ந்து விநியோகம் செய்வதன் மூலம் இந்த சர்ச்சையை விரைவில் முடிவுக்கு கொண்டு வர லிட்ரோ திட்டமிட்டுள்ளதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார். - [உழவு இயந்திரங்கள் மாயம்](https://minnal24.com/%e0%ae%89%e0%ae%b4%e0%ae%b5%e0%af%81-%e0%ae%87%e0%ae%af%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d/): முல்லைத்தீவு – நட்டாங்கண்டல் பொலிஸ் நிலையத்தில் இருந்து உழவு இயந்திரங்கள் இரண்டு மாயமாகியுள்ளன. முல்லைத்தீவு  மாந்தை கிழக்கு  பறங்கியாற்றில் சட்டரீதியற்ற முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட  குற்றச்சாட்டில் கடந்த 25ஆம் திகதி நட்டாங்கண்டல் பொலிஸாரால் பிடிக்கப்பட்டு, பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்ட சான்றுப் பொருள்களான இரு உழவு இயந்திரங்களே  மாயமாகியுள்ளன. 25ஆம் திகதி ஏற்பட்டிருந்த மின்சாரத் தடையைப் பயன்படுத்தி நல்லிரவில் இப்பொருள்கள் திருடப்பட்டிருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பில் வினவியபோது “தவறொன்று நடந்துள்ளது“ என நட்டாங்கண்டல் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார். - [தேசிய மட்ட சதுரங்க போட்டியில் விளையாட சாய்ந்தமருது சிறுமி தெரிவு](https://minnal24.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%ae%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%9a%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f/): -கல்முனை நிருபர்- இலங்கை சதுரங்க சம்மேளனம் நடாத்திய போட்டியில் சாய்ந்தமருது கமு/கமு/அல்-ஹிலால் வித்தியாலயம் சார்பாக பங்குபற்றிய சாய்ந்தமருது சபிலுல் லமா அடுத்த சுற்றான கொழும்பில் நடக்கவிருக்கும் தேசிய மட்டத்தில் விளையாட தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கை சதுரங்க சம்மேளனம் நடாத்திய இவ் சதுரங்க போட்டித்தொடர் இன்று சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் இடம்பெற்றது. 08 வயதுக்குட்பட்ட பெண்களுக்காக நடாத்தப்பட்ட இப்போட்டிகளில் கலந்து கொண்டு சபிலுல் லமா முதலாமிடத்தைப் பெற்றுக்கொண்டார் இவர் சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தில் தரம் 1 யில் கல்வி பயில்கிறார். இவர் இப் போட்டித் தொடருக்கு தெரிவு செய்யப்பட்ட முதல் அம்பாரை மாவட்ட சிறுமி ஆவார். - [மசகு எண்ணெய் விலை மீண்டும் கடுமையாக உயர்வு](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%9a%e0%ae%95%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%86%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81/): உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் கடுமையாக உயர்ந்துள்ளது. ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு மீது மேற்கத்தேய நாடுகள் விதித்த தடை மற்றும் சவூதி அரேபியாவில் உள்ள எண்ணெய்க் கிடங்கு மீதான தாக்குதல் என்பவற்றினால் இந்த விலை அதிகாிப்பு ஏற்பட்டுள்ளது. அதன்படி, பிரெண்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை முறையே 120 டொலர்களாக உயர்ந்துள்ள அதேவேளை, WTI மசகு எண்ணெய் விலை 114 டொலராக உயர்வடைந்துள்ளது - [யாழ்ப்பாணத்தை சேர்ந்த நான்கு ஈழத்தவருக்கு தமிழகத்தில் கிடைத்த உயர்விருது](https://minnal24.com/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%9a%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a8%e0%ae%be/): -யாழ் நிருபர்- திருக்கடவூர் ஸ்ரீ அபிராமி அம்பாள் சமேத ஸ்ரீ அமிர்தகடேஸ்வர சுவாமி மகாகும்பாபிஷேகப் பெருவிழாவில், தருமை ஆதீனம் நட்சத்திர குருமணிகள் ஸ்ரீலஸ்ரீ கயிலை குருமகாசந்நிதானம் அவர்கள் நான்கு இலங்கை ஆளுமைகளுக்கு கௌரவ கலாநிதி விருது வழங்கி வாழ்த்தினார். இந்நிகழ்வில் ‘சிவாகம கலாநிதி’ என்னும் விருது மரியாதைக்குரிய யாழ்ப்பாணம் நயினாதீவு சிவஸ்ரீ. ஐ.கை.வாமதேவ சிவாச்சாரியார் அவர்களுக்கு வழங்கப்பட்டது. “திருமுறைக் கலாநிதி” என்னும் விருது ஓய்வு பெற்ற யாழ்ப்பாணப் பல்கலக்கழகப் பேராசிரியர். நா.வி.மு நவரத்தினம் ஓதுவார் (நயினை) அவர்களுக்கு வழங்கப்பட்டது. “பல்கலை வித்தகக் கலாநிதி” என்னும் விருது பலவழிகளிலும் ஊக்குவிப்பவரும் தமிழ்- திருமுறை பதிப்பிலும் Thevaram.org தளம் வழி பெரும் சைவப்பணி செய்பவருமான காந்தளகம் மறவன்புலவு க.சச்சிதானந்தம் (சிவசேனை) அவர்களுக்கு வழங்கப்பட்டது. “நாதஸ்வரக் கலாநிதி” என்னும் விருது உலகளாவிய நிலையில் தன்னிகரில்லா ஆளுமையும், எளிமையான பண்புநலனும் ஒருங்கே பெற்ற  ஈழ நல்லூர் பாலமுருகன் அவர்களுக்கு தரப்பட்டது. - [நடமாடும் தடுப்பூசி நிகழ்வுகள்](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%ae%e0%ae%be%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b4/): -கல்முனை நிருபர்- நடமாடும் தடுப்பூசி வழங்கும் நிகழ்வுகள் பகல், இரவு நேரம் பாராமல் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்ஸீமா வசீர் தலைமையில் காரைதீவு, மாளிகைக்காடு, மாவடிப்பள்ளி பிரதேசத்தில் நடைபெற்று வருகிறது. சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பொது சுகாதார பரிசோதகர்கள், குடும்ப நல உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், நுளம்பு கள தடுப்பு பிரிவினர்கள், MDTF இணைந்து நடமாடும் தடுப்பூசி வழங்கும் நிகழ்வுகளை முன்னெடுத்து வருகின்றனர். - [தங்கத்தின் விலை மேலும் அதிகாிப்பு](https://minnal24.com/%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%ae%e0%af%87%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85-2/): உக்ரைன் போர் மற்றும் எரிசக்தி நெருக்கடி காரணமாக, உலக சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. அதன்படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை தற்போது 1,958 அமெரிக்க டொலர்களாக உள்ளது. வார இறுதியில் தங்கத்தின் விலையில் சிறிது சரிவு இருந்தாலும், கடந்த 30 நாட்களில் தங்கத்தின் விலை சுமார் 3 சதவீதம் அதாவது 56 டொலரினால் உயர்ந்துள்ளது. இதேவேளை, கடந்த ஒரு வருடத்தினுள் தங்க விலையின் அதிகாிப்பு 13 சதவீதம் அதாவது 230 டொலராக பதிவாகியுள்ளது. இதேவேளை, கொழும்பு செட்டியார் தெருவில் 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 180,000 ரூபாவாக அதிகரித்துள்ளது. 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 160,000 ரூபாவாகும்.   - [மோட்டார் சைக்கிள்களில் வந்த நால்வர் வீடொன்றின் மீது தாக்குதல்](https://minnal24.com/%e0%ae%ae%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5/): -யாழ் நிருபர்- மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, சுதுமலை தெற்கு, இரும்புக்காரன் வீதியைச் சேர்ந்த சிவானந்தன் சஜிரதன் என்பவர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், இன்று ஞாயிற்றுக்கிழமை அன்று அதிகாலை 02.30 மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நால்வர், அவரது வீட்டுக்குள் உள்நுழைந்து இவ்வாறு தாக்குதல் நடாத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். - [உந்துருளி-நோயாளர் காவு வண்டி மோதி விபத்து : 17 வயது மாணவி பலி](https://minnal24.com/%e0%ae%89%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%a8%e0%af%8b%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%af%81-%e0%ae%b5/): -பதுளை நிருபர்- தியத்தலாவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தியத்தலாவ நில அளவை காரியாலயத்திற்கு முன்னால் உந்துருளியும், நோயாளர் காவு வண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில் 17 வயதுடைய மாணவி தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உந்துருளியை செலுத்திய 29 வயதுடைய நபர் தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. பண்டாரவளை வைத்தியசாலையில் இருந்து நோயாளியை ஏற்றிக்கொண்ட காவு வண்டி தியத்தலாவை வைத்தியசாலைக்கு சென்று கொண்டிருக்கையில் அக்காவுவண்டியை உந்துருளி முந்திசெல்ல முற்பட்ட போதே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. காவு வண்டியின் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதோடு இன்று நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். - [ரஷ்யாவில் தனது பணியினை நிறுத்தியது Spotify](https://minnal24.com/%e0%ae%b0%e0%ae%b7%e0%af%8d%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88-%e0%ae%a8/): சுவீடன் நாட்டு இசை கலைத்துறை நிறுவனமான Spotify தனது பணியினை ரஷ்யாவில் உடன் அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தம் செய்கின்றது. ரஷ்யாவில் தற்போது காணப்படுகின்ற சர்வாதிகார நடைமுறைச் சட்டங்களை விமர்சித்தே மேற்படி நிறுவனம் தனது வெளிநாட்டு இசைத் துறை பணியாளர்களை ரஷ்யாவிலிருந்து வெளியேறுமாறு பணித்துள்ளமை குறிப்பிட்த்தக்கது. அதேவேளை Netflix மற்றும் TikTok போன்ற பொழுது போக்கு சமூக வலைத்தள நிறுவனங்களும் இந்த மாத தொடக்கத்தில் இருந்து ரஷ்யாவினால் தடை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. - [இனி அனுமதியில்லை](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88/): பாதுகாப்பு அமைச்சின் விசேட அனுமதியின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்கு அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு ஹெலிகொப்டர்கள் அல்லது விமானங்களை வழங்குவதை நிறுத்தியுள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது. ​​எரிபொருள் பிரச்சினை உள்ளிட்ட பல காரணிகளை அடிப்படையாக கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் குரூப் கெப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்தார். எவ்வாறாயினும், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிநாட்டு அரச தலைவர்களின் விஜயங்களுக்கு ஹெலிகொப்டர்கள் அல்லது விமானங்களை வழங்குவதற்கு இலங்கை விமானப்படை அர்ப்பணிப்புடன் இருப்பதாக குறிப்பிட்டார். - [ரயில் கட்டணங்களில் திருத்தங்கள்](https://minnal24.com/%e0%ae%b0%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a3%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4/): ரயில் கட்டணங்களில் திருத்தங்கள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை  முதல் மேற்கொள்ளப்படும் என போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் அறிவித்ததன் பின்னரே திருத்தம் குறித்து அறிவிக்கப்படும் என்றார். எனினும், பஸ் கட்டணங்களுக்கு நிகராக ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்பட மாட்டாது எனவும் அமைச்சர் தெரிவித்தார். - [வீடொன்றிலிருந்து உள்ளூர் துப்பாக்கி மீட்பு : ஒருவர் கைது](https://minnal24.com/%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%82%e0%ae%b0/): -பதுளை நிருபர்- பசறை பரமாங்கடை பகுதியில் வீடொன்றில் சூட்சுமமான முறையில் மறைத்து வைத்திருந்த உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றை பதுளை பிராந்திய குற்றத்தடுப்பு பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. பதுளை பிராந்திய குற்றத்தடுப்புப் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து சந்தேகத்திற்கு இடமான இடத்தினை சுற்றிவளைத்து தேடுதலை மேற்கொண்ட போது உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றினை கைப்பற்றியதோடு 70 வயதுடைய நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபரை நாளை பதுளை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். - [தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து ரெலோ வெளியேற வேண்டும் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்](https://minnal24.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2/): -யாழ் நிருபர்- 13ம் திருத்தத்தை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கின்ற ரெலோ, ஜனாதிபதியுடனான சந்திப்பை ஏன் புறக்கணித்தார்கள் என்பது கேள்விக்குறியே, அவ்வாறெனில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து ரெலோ வெளியேற வேண்டும், என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதியுடனான தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சந்திப்பு நடைபெற்ற போதும் கூட இனப்பிரச்சினைக்கான இறுதித் தீர்வு தொடர்பில் எந்தவிதமான பேச்சுவார்த்தைகளும் நடக்கவில்லை என்பது ஊடகங்கள் மூலம் உறுதியாகின்றது. அதேசமயம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பக்கத்திலிருந்து 13ஆம் திருத்தத்தை அமல்படுத்துவதற்கான அழுத்தங்கள் அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டதாகவும் செய்திகள் வெளிப்படுத்துகின்றன. இது சம்பந்தமாக நாம் தெரிவித்து வந்த கருத்துக்களானது மீண்டும் மீண்டும் உறுதியாவதாகவே கருதுகிறோம். கடந்த காலங்களில் புலம்பெயர் தமிழர்களை தடை செய்த அரசு தற்போது […] - [மீரிஹானையில் தொடர்ந்து களனியிலும்](https://minnal24.com/%e0%ae%ae%e0%af%80%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b9%e0%ae%be%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95/): மீரிஹானையில் இடம்பெறும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து, பொது மக்கள் களனியிலும் பொருட்களின் விலை வாசி உயர்வு, தட்டுப்பாடு, மின் வெட்டு போன்றவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஜனாதிபதியை பதவி துறக்குமாறு கோரும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. களனி தலுகம பகுதியில் கண்டி வீதியின் குறுக்கே பலகைகளையும் ரயர்களையும் இட்டு கொழுத்தி மக்கள் வீதியின் இரு மருங்கிலும் நின்று தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனால் கொழும்பு – கண்டி வீதியூடான போக்குவரத்து களனி தலுகம பகுதியில் தடைப்பட்டுள்ளது. - [பதற்றநிலை கட்டுப்பாட்டில் உள்ளது – பொலிசார் தகவல்](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf/): மிரிஹான பகுதியில் பகுதியில் கடந்த பல மணித்தியாளங்களாக காணப்பட்ட பதற்றமான சூழ்நிலை தற்போது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். மிரிஹான பகுதியில் பகுதியில் இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பல பொதுச் சொத்துக்கள் சேதமாக்கப்பட்டுள்ள நிலையில், சேதவிபரங்கள் குறித்து இதுவரை எவ்வித தகவல்கள் தெரியவரவில்லை என எமது கொழும்பு செய்தியாளர் தெரிவித்தார். - [ஆர்ப்பாட்டத்தின் போது ஊடகவியலாளர்கள் உட்பட 10 பேர் காயம்](https://minnal24.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81-%e0%ae%8a%e0%ae%9f/): மிரிஹான பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் விசேட அதிரடிப்படையினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் இதுவரை 6 பேர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நான்கு நோயாளிகள் களுபோவில கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் ஆண்கள் என்றும் இவர்களில் பலர் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்கள் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.   - [உடன் அமுலுக்கு வரும் பொலிஸ் ஊரடங்கு - மேலதிக இணைப்பு](https://minnal24.com/%e0%ae%89%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%ae%e0%af%81%e0%ae%b2%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b2/): ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட இல்லத்திற்கு வெளியே இன்று வியாழக்கிழமை மாலை ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை காரணமாக கொழும்பு வடக்கு, தெற்கு, கொழும்பு மத்திய மற்றும் நுகேகொட பொலிஸ் பிரிவுகளில் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ளது. மேலும், களனி மற்றும் கல்கிசை பொலிஸ் பிரிவுகளிலும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பொலிஸ் பகுதிகள் கொழும்பு மத்திய பொலிஸ் பிரிவு புறக்கோட்டை கெசல்வத்த டம் வீதி வுல்ப்எண்டால் வீதி கோட்டை மருதானை மாளிகாவத்தை கொழும்பு வடக்கு பொலிஸ் பிரிவு கொழும்பு துறைமுகம் முன் கரை வீதி மோதர கொட்டாஞ்சேனை மட்டக்குளி புளுமெண்டல் கிராண்ட்பாஸ் தெமட்டகொட கொழும்பு தெற்கு பொலிஸ் பிரிவு கொள்ளுப்பிட்டி பம்பலப்பிட்டி கிருலப்பனை வெள்ளவத்தை நாரஹேன்பிட்டி பொரளை கறுவாத்தோட்டம் நுகேகொட பொலிஸ் பிரிவு மிரிஹானா மஹரகம பொரலஸ்கமுவ வெல்லம்பிட்டிய தலங்கம வெலிக்கடை நவகமுவ முல்லேரியாவ ஹோமாகம கொட்டாவ அதுருகிரிய பாதுக்கா ஹன்வெல்ல கோதடுவ […] - [போராட்ட தொடர்ச்சி : அமைச்சரின் வீடு முற்றுகை](https://minnal24.com/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%9a%e0%af%8d/): அமைச்சர் பந்துல குணவர்தனவின் வீடு சற்றுமுன் முற்றுகையிடப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. - [உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு](https://minnal24.com/%e0%ae%89%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%ae%e0%af%81%e0%ae%b2%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%95%e0%af%88-2/): உடன் அமுலுக்கு வரும் வகையில் மறு அறிவித்தல் வரை கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, கொழும்பு மத்தி மற்றும் நுகேகொட பொலிஸ் பிரிவுக்குள் பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. - [வீழ்ச்சியிலிருந்து மீள்வதற்கு அசுர வேகத்தில் செயற்பட வேண்டும்](https://minnal24.com/%e0%ae%b5%e0%af%80%e0%ae%b4%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%af%80%e0%ae%b3%e0%af%8d/): இலங்கை எதிர்நோக்கியுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீள்வதற்கு அசுர வேகத்தில் செயற்பட வேண்டும் என இந்திய வௌிவிவகார அமைச்சர், கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், நாட்டிலிருந்து வௌியேறுவதற்கு முன்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது தெரிவித்துள்ளார். இலங்கையின் தற்போதைய நெருக்கடியிலிருந்து மீண்டு வர, உரிய காலத்திற்குள் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார். தற்போது காணப்படும் நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு இலங்கை மந்த கதியிலேயே செயற்படுவதாகவும் இந்திய வௌிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்காக அண்மையில் பெற்றுக்கொடுக்கப்பட்ட ஒரு பில்லியன் டொலர் இந்திய கடன் வசதியை உடனடியாக செயற்படுத்துவதாக அவர் உறுதி வழங்கியுள்ளார். திருகோணமலை எண்ணெய்த் தாங்கிகளின் அபிவிருத்தி நடவடிக்கைகள் உள்நாட்டு அமைச்சின் அறிவுறுத்தல்களுக்கு அமையவே முன்னெடுக்கப்படும் என இந்திய வௌிவிவகார அமைச்சர், கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் சுட்டிக்காட்டியுள்ளார். - [ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம்](https://minnal24.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%95%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%aa%e0%af%8a/): ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் இல்லம் அமைந்துள்ள நுகேகொடை – மிரிஹான  – பெங்கிரிவத்தை பகுதியில் மக்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் தற்போது பெரும் பதற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது. மக்களால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. - [பிரித்தானியா உள்ளிட்ட மூன்று நாடுகள் இலங்கைக்கு ஒத்துழைப்பு](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%ae%e0%af%82/): நாட்டின் எரிசக்தி, சுற்றுலா, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட சில துறைகளை அபிவிருத்தி செய்வதற்கு பிரித்தானியா, தென் கொரியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் ஒத்துழைப்பு வழங்கியுள்ளன. குறித்த நாடுகளின் பிரதிநிதிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை இன்று வியாழக்கிழமை  முற்பகல் சந்தித்தனர். பிரித்தானிய பாராளுமன்றத்தின் பிரபுக்கள் சபையின் உறுப்பினர் லார்ட் மைக்கல் நெஸ்பி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை சந்தித்த போது, மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி உற்பத்தியை மேற்கொள்வதற்கு அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை குறித்து தமது மகிழ்ச்சியை வௌிப்படுத்தியுள்ளார். சூரியசக்தி உள்ளிட்ட ஏனைய மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி மூலங்களூடாக மின்னுற்பத்தியை மேற்கொள்வதற்கு பிரித்தானியா ஒத்திழைப்பு வழங்க தயார் என பிரித்தானிய பாராளுமன்றத்தின் பிரபுக்கள் சபையின் உறுப்பினர் லார்ட் மைக்கல் நெஸ்பி கூறியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பணியாளர்களுக்கு அதிகளவில் தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொடுக்க தமது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என தென் கொரியாவின் அரசாங்க கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் […] - [6000 மெற்றிக் தொன் டீசலை வழங்க ஐ.ஓ.சி இணக்கம்](https://minnal24.com/6000-%e0%ae%ae%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9f%e0%af%80%e0%ae%9a%e0%ae%b2%e0%af%88-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%99%e0%af%8d/): மின்னுற்பத்தி நிலையங்களுக்கு 6000 மெற்றிக் தொன் டீசலை வழங்குவதற்கு இந்திய எண்ணெய் நிறுவனம் (ஐ.ஓ.சி) இணக்கம் தெரிவித்துள்ளதாக இலங்கை மின்சார சபை, இன்று வியாழக்கிழமை தெரிவித்தது. டீசல் பற்றாக்குறை காரணமாக செயலிழக்க ஆரம்பித்துள்ள களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையம் மாத்திரமே தற்போது செயற்படுத்தப்படுவதாக இலங்கை மின்சார சபை குறிப்பிட்டது. கெனியன் நீர் மின்னுற்பத்தி நிலையத்தில் ஒரு மின்பிறப்பாக்கி மாத்திரம் செயற்படுத்தப்படுவதாகவும் ஏனைய அனைத்து அனல் மின் உற்பத்தி நிலையங்களும் தற்போது செயலிழந்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் தகவல்கள் தெரிவிக்கின்றன. நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்திலிருந்து 810 மெகாவோட் மின்சாரம் தேசிய கட்டமைப்பில் நேற்று இணைக்கப்படுவதாகவும் மின்சார சபை தெரிவித்துள்ளது. - [மின்சாரம் துண்டிக்கப்பட்டு போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் தாக்குதல்](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa-2/): ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் இல்லத்தின் முன்னால் நடைபெற்றுவரும் போராட்டம் காரணமாக அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதேவேளை போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தி வருவதோடு கண்ணீர்ப்புகை நீர்த்தாரை பிரயோகம் என்பனவும் மேற்கொள்ளப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. - [போராட்டத்தால் பதற்ற நிலை : பொலிஸார் குவிப்பு](https://minnal24.com/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88/): ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லம் அமைந்துள்ள மிரிஹானயில் தற்போது பாரிய எதிர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகிறது. ஜனாதிபதியின் இல்லத்துக்கு செல்லும் பாதையை மறித்தே போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதிகளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதோடு, பதற்ற நிலை உருவாகியுள்ளது. ஜனாதிபதியின் இல்லத்தின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. - [கல்முனை மாநகர சபைக்கு புதிய ஆணையாளர்](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%88-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%ae%95%e0%ae%b0-%e0%ae%9a%e0%ae%aa%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%aa%e0%af%81/): கல்முனை மாநகர சபைக்கு புதிய ஆணையாளர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தினால் புதிய ஆணையாளராக என்.சிவலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் நாளை முதல் அமுலுக்கு வரும் என குறிப்பிடப்பட்டுள்ளது மேலும், கல்முனை மாநகர ஆணையாளராக செயற்பட்ட ஏ.சீ. அன்சார் கிழக்கு மாகாண பிரதம செயலாளரின் அலுவலகத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகின்றது. - [பெரிய வெங்காயத்தின் விலை உயர்வு](https://minnal24.com/%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%af%86%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88/): இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலையை 100 ரூபாவினால் அதிகரிக்க தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தகர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பெரிய வெங்காயம் முன்னதாக 110 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது. எனினும், நேற்றைய தினம்  தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை 210 ரூபாவாக காணப்பட்டது. - [இன்றைய மின்தடை 15 மணித்தியாலங்களாக அதிகரிப்பு](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%88%e0%ae%af-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a4%e0%ae%9f%e0%af%88-15-%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af/): இன்று அமுலாக்கப்படும் 13 மணித்தியால மின்தடையை, 15 மணித்தியாலங்களாக அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த மின்வெட்டு தொடர்பில் உரிய பொறியியலாளர்கள் தற்போது திருத்தங்களை மேற்கொண்டு வருவதாக இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.   - [கலாபூஷண விருது பெற்றார் பொன்மனச் செம்மல் எம்.எஸ்.தாஜ்மஹான்](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%b2%e0%ae%be%e0%ae%aa%e0%af%82%e0%ae%b7%e0%ae%a3-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d/): -எம்.எஸ்.எம்.ஸாகிர்- கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற 37ஆவது கலாபூஷண அரச விருது வழங்கும் விழா கொழும்பு – 07, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை மிகக் கோலாகலமாக நடைபெற்றது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில், கலைஞரும் பொன்தமிழ் கவிஞருமான இலங்கைப் பொன்மனச் செம்மல் எம்.எஸ். தாஜ்மஹான் கலாபூஷணம் விருது வழங்கி, பாராட்டி கெளரவிப்பட்டார். நேத்ரா தொலைக்காட்சியின் தமிழ்ப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன் உட்பட கலாசார அலுவல்கள் திணைக்கள குழுவினரிடமிருந்து கலாபூஷண விருதைப் பெற்றுக் கொண்டார். - [மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பல்வேறு விடயங்கள் குறித்து ஆராய்வு](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a3%e0%af%88/): -மன்னார் நிருபர்- மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று வியாழக்கிழமை காலை 9.00 மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டிமெலின் ஏற்பாட்டில் இடம் பெற்றது. குறித்த கலந்துரையாடலில் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, மாவட்ட ஒருங்கிணைப்பு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கே.கே.காதர் மஸ்தான், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், ரிஷாட் பதியுதீன், சாள்ஸ் நிர்மலநாதன், கே.திலீபன், அழைக்கப்பட்ட திணைக்கள தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், உள்ளூராட்சி மன்ற தவிசாளர்கள், உறுப்பினர்கள், இராணுவம், பொலிஸ், கடற்படை அதிகாரிகள் மற்றும் துறை சார் அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர். இக் கலந்துரையாடலில் மீன்பிடி, விவசாயம், கால்நடை, கல்வி, சுகாதாரம், உள்ளூராட்சி திணைக்கள, கூட்டுறவு, மற்றும் வீதி அபிவிருத்தி, மின்சாரம், நீர் வளங்கள், அபிவிருத்தி செயற்பாடுகளின் தற்போதைய நிலை, பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது. மேலும் பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை, பின்தங்கிய கிராமங்களில் இருந்து உரிய போக்குவரத்து […] - [மன்னாரில் தந்தை செல்வநாயகத்தின் 124 வது பிறந்த தினம் அனுஸ்டிப்பு](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a8%e0%ae%be/): -மன்னார் நிருபர்- இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஸ்தாபக தலைவர் தந்தை எஸ்.ஜே.வி செல்வநாயகத்தின் 124வது பிறந்த தின நிகழ்வு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில் மன்னார் நகரில் அமைந்துள்ள தந்தை செல்வா சிலையடிக்கு முன் இன்று வியாழக்கிழமை  காலை நடைபெற்றது. இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட கிளைச் செயலாளரும் மன்னார் நகர சபையின் உப தவிசாளருமான ஜான்சன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், இலங்கை தமிழரசு கட்சி மன்னார் கிளையின் முக்கிய உறுப்பினர்கள், மன்னார் நகர சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சியின் ஆதரவாளர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். இதன்போது தந்தை செல்வாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு, அஞ்சலி செலுத்தப்பட்டு, சிறப்பு உரையும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.   - [ஏப்ரல் 6ஆம் திகதி சத்தியாக்கிரகப் போராட்டம்](https://minnal24.com/%e0%ae%8f%e0%ae%aa%e0%af%8d%e0%ae%b0%e0%ae%b2%e0%af%8d-6%e0%ae%86%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be/): நாடு முழுவதும் எங்களின் சத்தியாகிரகப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். அடுத்த சத்தியாக்கிரகப் போராட்டம்  ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி மாத்தறையில் நடைபெறவுள்ளது. அனைவரையும் எங்களுடன் சேர அழைக்கிறோம் என்றும் அறிவித்துள்ளது. அநாமதேயக் குழுக்களால் நடத்தப்படும் எந்தவொரு போராட்டத்திலும் ஐக்கிய தேசியக் கட்சி பங்கேற்காது என்று அக்கட்சி அறிவித்துள்ளது. - ['நாயே' என விளித்தமையினால் கொட்டக்கலை நகரில் பதற்றம்](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%af%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a9-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d/): சமையல் எரிவாயுவை வாங்குவதற்காக நீண்டநேரம் வரிசையில் காத்திருந்த மக்களை, ‘நாயே’ என விளித்து – திட்டி, வர்த்தக நிலைய உரிமையாளர் மிகவும் கீழ்த்தரமான முறையில் நடந்துகொண்ட சம்பவமொன்று இன்று வியாழக்கிழமை கொட்டகலை நகரில் பதிவானது. நாட்டில் எரிபொருளுக்கும், சமையல் எரிவாயுவுக்கும் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இவற்றைப்பெறுவதற்கு நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை மக்களுக்கும், சாரதிகளுக்கும் ஏற்பட்டுள்ளது. கொட்டகலை பகுதியிலும் இந்நிலைமை காணப்படுகின்றது. கொட்டகலை நகரிலுள்ள இரு வர்த்தக நிலையங்கள் ஊடாகவே சமையல் எரிவாயு விநியோகிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நெருக்கடி நிலைமையைப் பயன்படுத்தி அதிக விலைக்கு லிற்றோ எரிவாயு விநியோகித்த வர்த்தக ஒருவரின் அனுமதி பத்திரத்தை லிற்றோ நிறுவனம் இடைநிறுத்தி வைத்துள்ளது. இந்நிலையில் மற்றைய வர்த்தக நிலையத்திலுள்ள உரிமையாளர் வாடிக்கையாளர்களை மதித்து நடப்பதில்லை என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. குறித்த வர்த்தக நிலையத்துக்கு இன்று சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வந்துள்ளன. எனினும், சுமார் 50 பேருக்கு மாத்திரமே விநியோகிக்கப்பட்டுள்ளது.  ஏனைய சிலிண்டர்கள் பதுக்கிவைக்கப்பட்டுள்ளன. இதனால் […] - [ஏறாவூரில் தமிழ்ச்சாரல் கவிதை நூல் வெளியீடும், பெண் ஆளுமைகள் கௌரவிப்பும்](https://minnal24.com/%e0%ae%8f%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b5%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95/): ஏறாவூர் தமிழ்ச்சாரல் கலை இலக்கிய வட்டத்தின் தமிழ்ச்சாரல் கவிதைத் தொகுப்பு நூல் வெளியீடும்இ பெண் ஆளுமைகளைக் கெளரவிக்கும் நிகழ்வும் ஏறாவூர் கலாசார மத்திய நிலையத்தில் நடைபெற்றது. தமிழ்ச்சாரல் கலை இலக்கிய வட்டத்தின் தலைவர் எம்.எச். ஜிப்ரியா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்இ பிரதம அதிதியாக ஏறாவூர் நகர சபையின் தவிசாளர் எம்.எஸ்.நளீம் கலந்து சிறப்பித்தார். இந்நிகழ்வில்இ பதினொரு பெண் கவிஞர்களின் கவிதைகள் அடங்கிய தமிழ்ச்சாரல் கவிதைத் தொகுப்பு நூல் வெளியீடு செய்யப்பட்டதோடுஇ ஏறாவூரில் உள்ள பல்துறை சார்ந்த பெண் ஆளுமைகள் அனைவரும் கெளரவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. - [ஏப்ரல் 8 இல் மீண்டும் ஆரம்பம்](https://minnal24.com/%e0%ae%8f%e0%ae%aa%e0%af%8d%e0%ae%b0%e0%ae%b2%e0%af%8d-8-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/): ஏப்ரல் 8ஆம் திகதி கொழும்பு கல்கிஸை-காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன்படி கல்கிஸையில் இருந்து இரவு 10 மணிக்கு ஆரம்பிக்கும் ரயில் வவுனியாவை அதிகாலை 3.15 மணிக்கும், கிளிநொச்சியை 4.25 மணிக்கும் யாழ்ப்பாணத்தை 5.28 மணிக்கும் காங்கேசன்துறை 5.54 மணிக்கும் வந்தடையும் என கூறப்படுகின்றது. பின்னர், ஞாயிற்றுக்கிழமை 10ஆம் திகதி இரவு 10 மணிக்கு காங்கேசன்துறையிலிருந்து புறப்படும் யாழ்ப்பாணத்தை 10.24 மணிக்கும் கிளிநொச்சியை 11.29 மணிக்கும் வவுனியாவை 12.38 மணிக்கும் மருதானையை 5.20 மணிக்கும் கல்கிசையை 5.54 மணிக்கும் புகையிரதம் சென்றடையும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. - [மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த கைதிகள் விடுதலை](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%a3-%e0%ae%a4%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a9%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d-2/): மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவரை மேன்முறையீட்டு நீதிமன்றம் விடுவித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. 2015 ஜனாதிபதித் தேர்தலின் போது கஹவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றின் போது நபரொருவரை சுட்டுக் கொலை செய்தமை உள்ளிட்ட குற்றங்களுங்காக இவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இரத்தினபுரி மேல் நீதிமன்றத்தினால் 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31ஆம் திகதி, பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது - [கெனியன் மின் உற்பத்தி பணியை மீண்டும் ஆரம்பிக்கின்றது](https://minnal24.com/%e0%ae%95%e0%af%86%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%a3/): மஸ்கெலியா – கெனியன் நீர்த்தேக்கத்திலிருந்து மின் உற்பத்தி பணிகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மவுசாகலையில் இருந்து கெனியன் நீர்த்தேக்கத்திற்கு நீரை கொண்டு செல்லும் நிலத்தடி சுரங்கப்பாதையின் பராமரிப்பு பணிகள் மின்சாரம் துண்டிப்பு காரணமாக கடந்த மூன்று மாதங்களாக மூடப்பட்டு இருந்தது. இதேவேளை, கெனியன் நீர்த்தேக்கத்திலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தேசிய மின்கட்டமைப்பில் 60 மெகாவாட் மின்சாரத்தை சேர்க்கும் என தெரிவிக்கப்படுகின்றது. - [பிரசன்னா மணி எக்ஸ்சேஞ்ச் அனுமதிப்பத்திரம் ரத்து](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%95%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9a%e0%af%87%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d/): வெள்ளவத்தையின் புகழ்பெற்ற பிரசன்னா மணி எக்ஸ்சேஞ்ச் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட பணப்பரிவர்த்தனைக்கான அனுமதிப்பத்திரத்தை இலங்கை மத்திய வங்கி இடைநிறுத்தியுள்ளது. அதிக மாற்று விகிதங்களை வழங்குவதாக பொது மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. மத்திய வங்கியின் அன்னிய செலாவணி திணைக்களம் 30.03.2022 அன்று பிரசன்னா மணி எக்ஸ்சேஞ்ச் (பிரைவேட்) லிமிடெட் தொடர்பில் விசாரணையை நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. - [தமிழ் அரசியல்வாதிகள் அனைவரும் பிச்சைக்காரர்கள் - யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் ஸ்ரீசற்குணராஜா-](https://minnal24.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a9%e0%af%88/): தமிழ் அரசியல்வாதிகள் அனைவரும் பிச்சைக்காரர்கள். கிளிநொச்சி மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விதவைகள் காணப்படுகின்றார்கள் ஆனால் எமது அரசியல் வாதிகளிடம் அவர்களுக்கு உதவுவதற்கு எந்த ஒரு திட்டமும் இல்லை, நிகழ்ச்சி நிரலும் இல்லை. அடுத்த மாகாணசபை தேர்தலுக்கு எவ்வாறு செயற்படுவது தொடர்பில் செயற்படுகிறார்களே தவிர தமிழ் மக்களை காப்பாற்றுவதற்காக செயற்படவில்லை என , தந்தை செல்வாவின் 124 வது ஜனன தின நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றும் போதே துணைவேந்தர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் எங்களிடம் ஒரு நிகழ்ச்சி நிரல் இல்லை ஒரு திட்டமிடல் இல்லை ஏதாவது ஒரு சம்பவம் என்றால் முதல் நாள் கூட்டத்தினை கூட்டி ஒரு அறிக்கையை தயாரித்து அதை வாசித்துவிட்டு செல்வது தான் தற்போதுள்ள நிலைமை. அது மாற்றியமைக்கப்பட வேண்டும். குறிப்பாக வடக்கு கிழக்கை மனதளவில் ஒற்றுமையாக்க வேண்டும் அத்தோடு வடகிழக்கை எவ்வாறு அபிவிருத்தி செய்யலாம் எவ்வாறு முன்னேற்றலாம் அதற்கென்று ஒரு […] - [நிலக்கரியை ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்ய திட்டம்](https://minnal24.com/%e0%ae%b0%e0%ae%b7%e0%af%8d%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%87%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/): நாட்டுக்கு தேவையான அளவு நிலக்கரியை ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மின்சக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி  குறிப்பிட்டுள்ளார். இதற்கான தீர்மானங்கள் அரசாங்கத்தின் ஊடாக மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தார். எதிர்வரும் செப்டம்பர் மாதத்திற்கு பின்னரே மீண்டும் நிலக்கரியை இறக்குமதி செய்ய வேண்டிய தேவை ஏற்படும். ஏப்ரல் மாதம் வரை இறக்குமதி செய்ய வேண்டிய நிலக்கரியை இறக்குமதி செய்வதற்கு நாணய கடிதம் விடுவிக்கப்பட்டுள்ளது. தற்போது அதற்கான கட்டணம் செலுத்தப்பட்டு வருவதாகவும் மின்சக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். - [மதில் உடைந்து விழுந்ததில் சிறுவன் உயிரிழப்பு](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%9f%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2/): அக்குரஸ்ஸ, தீகல பிரதேசத்தில் வீடொன்றின் மதில் உடைந்து விழுந்ததில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதுடன், மற்றொரு சிறுவன் காயமடைந்துள்ளார். இதில், 8 வயதுச் சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் மேலும் 5 வயதுச் சிறுவன் காயமடைந்து கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வீடு திருத்தும் பணியின் போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அக்குரஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். - [ஜே.வி.பி. யின் அதிரடி அறிவிப்பு](https://minnal24.com/%e0%ae%9c%e0%af%87-%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf/): பல்வேறு தரப்பினரால் முன்னெடுக்கப்படும் அங்கீகரிக்கப்படாத போராட்டங்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. நாட்டின் பொருளாதார நெருக்கடி தொடர்பாக அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு  எதிராக பல பொதுப் போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையியே  ஜே.வி.பி., மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளது. நாட்டின் மோசமான பொருளாதார நெருக்கடி தொடர்பில் தமது வேதனையை வெளிப்படுத்தும் வகையில் பொதுமக்கள் போராட்டங்களை நடத்த முயற்சிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. அந்த வகையில், எதிர்வரும் 3ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் நாடளாவிய ரீதியில் ஏக நேரத்தில் போராட்டத்தை நடத்துமாறு, சமூக வலைத்தளங்களின் ஊடாக அழைப்பு விடுக்கப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.   - [ஜெனரேட்டருடன் வந்ததால் பரபரப்பு](https://minnal24.com/%e0%ae%9c%e0%af%86%e0%ae%a9%e0%ae%b0%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa/): சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கேன்களில் எரிபொருள் நிரப்புவதில்லை என்பதால், கடவத்தையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு   வர்த்தகர் ஒருவர் மின்பிறப்பாக்கியை (ஜெனரேட்டர்) தள்ளிக்கொண்டு வந்துள்ளார். கேன்களில் எரிபொருள் வழங்கப்படுவதில்லை பல மணி நேரம் மின்சாரமும் துண்டிக்கப்படுகின்றது. இதனால், தான் வளர்க்கும் மீன்கள் உயிரிழந்துவிடும். ஆகையால்தான், மின்பிறப்பாக்கியை தள்ளிக்கொண்டு வந்​தேன் என தெரிவித்துள்ளார். இவர், மீன் வளர்க்கும் வர்த்தக நிலையத்தை கொண்டு நடத்தும் வர்த்தகர் என்பது குறிப்பிடத்தக்கது. பேருவளை உள்ளிட்டப் பல கிராமப் பகுதிகளில் அலங்கார மீன் வளர்க்கும் தொழில் ஈடுபடுவோர் மின்தடையால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். சில வர்த்தகர்கள் தாங்கள் வளர்க்கும் மீன்களை வீட்டுக் கிணறுகளில் போட்டுவிட்டுள்ளனர் என்றும் அறியமுடிகின்றது. - [கடதாசிகளுக்கு தட்டுப்பாடு இல்லை - கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%9f%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a4%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be/): திட்டமிடப்பட்ட வகையில் பிரதான பரீட்சைகளை நடத்துவதற்கு அவசியமான கடதாசிகள் தட்டுப்பாடின்றி கையிருப்பில் உள்ளதாக கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். அஸ்கிரிய மகாநாயக்க தேரரை நேற்று சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். எதிர்வரும் மே மாதம் கல்வி பொது தராதர சாதாரண தரப்பரீட்சையை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்தார். - [யாழில் தந்தை செல்வாவின் 124 வது ஜனன தினம் அனுஷ்டிப்பு](https://minnal24.com/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-124/): -யாழ் நிருபர்- இலங்கை தமிழரசுக்கட்சியின் ஸ்தாபகத் தலைவர் எஸ்.ஜெ.வி.செல்வநாயகத்தின் (தந்தை செல்வா) 124 வது ஜனன தினம் இன்று யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தை செல்வா நினைவிடத்தில், தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து, நினைவுத் தூபிக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. தந்தை செல்வா அறக்கட்டளை நிலையத்தின் தலைவரும் தென்னிந்தியத் திருச்சபையின் முன்னாள் பேராயருமான சுப்பிரமணியும் ஜெபநேசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.சுகிர்தன் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. - [சேவைநலன் பாராட்டு விழாவும், புலமையாளர்கள் கௌரவிப்பும்](https://minnal24.com/%e0%ae%9a%e0%af%87%e0%ae%b5%e0%af%88%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%be%e0%ae%b5%e0%af%81/): -கல்முனை நிருபர்- கல்முனை கல்விவலய மாளிகைக்காடு கமு/கமு/சபீனா முஸ்லிம் வித்தியாலயத்தில் கடந்த வருடம் வெளியான புள்ளிகளின் அடிப்படையில் சித்தியெய்திய புலமையாளர்களையும் இடமாற்றம் பெற்றுச் சென்ற ஆசிரியைகளையும் கெளரவிக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் எம்.ஐ.எம் அஸ்மி தலைமையில் இன்று பாடசாலை கூட்டமண்டபத்தில் இடம்பெற்றது. நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை கல்வி வலய வலயக்கல்விப் பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன், கெளரவ அதிதியாக கல்முனை கல்வி வலயத்தின் பிரதம கணக்காளர் வை. ஹபீபுள்ளாஹ்  மற்றும் விஷேட அதிதிகளாக கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஜே. டேவிட் உட்பட முன்னாள் கல்முனை சாஹிறாக் கல்லூரி அதிபர் சட்டத்தரணி எம்.சி. ஆதம்பாவா மற்றும் ஆசிரிய ஆலோசகர்கள் கல்விமான்கள் புத்திஜீவிகள் என பலரும் கலந்துகொண்டனர். நிகழ்வில் புலமைப்பரிசில் சித்தியெய்திய எம்.ஏ.சீனத் லிமா (158) மற்றும் எம்.எச்.எம். றுசைக் (153) ஆகிய மாணவர்கள் கெளரவிக்கப்பட்டதுடன், இடம்மாற்றம் பெற்றுச் சென்ற ஆசிரியைகளான திருமதி எல்.ஏ. அழீம் மற்றும் திருமதி மணிமாறன் ஆகியோரும் கெளரவிக்கப்பட்டனர். - [தங்களுடைய கைகளை தாங்களே வெட்டிக்கொள்ளும் மாணவர்கள்](https://minnal24.com/%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%9f%e0%af%88%e0%ae%af-%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%87/): -கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றில் சுமார் 20 மாணவர்கள் பிளேட்டினால் தங்களது கைகளை தாங்களே வெட்டிக்கொண்டுள்ளதாக சக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் தரம் ஒன்பதில் கல்வி பயிலும் மாணவர்கள் பலர் பிளேட்டினால் தங்களது கைகளை தாங்களே வெட்டியுள்ளனர். பின்னர் குருதியினை கடதாசி மூலம் துடைத்துவிட்டு கிருமி தொற்று நீக்கி காயத்தின் மேல் வீசிறிக்கொண்டதாக நேரில் பார்த்த சக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை குறித்த மாணவர்கள் சாதரணமாக செய்து கொள்வதாகவும், ஒருவருக்கு ஒருவர் பார்த்து வெட்டிக்கொண்டதன் மூலமே வெட்டியவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததாகவும் சக மாணவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கும் போது, இவ்வாறான செயற்பாடுகள் ஒரு வித உளவியல் பிரச்சினையாக கூட இருக்கலாம் என தெரிவிக்கும் மருத்துவர்கள் மாணவர்களுடன் உரையாடி அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். - [கிளிநொச்சியில் ஆரம்ப பாடசாலை ஒன்றினை அமைப்பதற்கு அங்கீகாரம்](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8a%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f/): -யாழ் நிருபர்- கிளிநொச்சி, உதயநகர் பகுதியில் வாழுகின்ற சிறார்களின் நன்மை கருதி, அப்பிரதேசத்தில் ஆரம்ப பாடசாலை ஒன்றினை அமைப்பதற்கு கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது அதனடிப்படையில், அனைத்து மதங்களையும் சேர்ந்த சுமார் 800 மாணவர்கள் ஆரம்ப கல்வியை கற்கக்கூடிய வகையில் ‘நாவலர் ஆரம்ப பாடசாலை’ உருவாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. முன்பதாக கிளிநொச்சி மாவட்டத்தின் 2022 ஆம் ஆண்டிற்கான இரண்டாவது ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது. இதன்போது மாவட்டத்தின் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன் பல பிரச்சினைகளுக்கான தீர்வுகளும் எட்டப்பட்டன.. இந்நிலையில் வடக்கு மாகாணத்திற்கு தேவையான கோழித் தீவனங்களை உடனடியாகப் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டத்தில், வடக்கு மாகாணத்திற்கு தேவையான கோழித் தீவனங்கள் தொடர்பான விபரங்களை உடனடியாக தருமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளை கேட்டுக் […] - [காரைதீவில் சிறப்பாக சேவையாற்றிய உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் நிகழ்வு](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%af%88%e0%ae%a4%e0%af%80%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95-%e0%ae%9a%e0%af%87%e0%ae%b5%e0%af%88/): -கல்முனை நிருபர்- இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் ஓய்வூதியத் திட்டத்தில் 2021 ஆம் ஆண்டில் சிறப்பாக சேவையாற்றிய உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் நிகழ்வும், 2022 ஆம் ஆண்டுக்கான பயிற்சி கருத்தரங்கும் காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜனினால் இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் தேசிய, மாவட்ட மற்றும் பிரதேச ரீதியில் இலக்கினை அடைந்து கொண்ட உத்தியோகத்தர்கள் மற்றும் திணைக்கள தலைவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வை தொடர்ந்து அம்பாறை மாவட்ட இணைப்பதிகாரியினால் கருத்தரங்கும் நிகழ்த்தப்பட்டது. இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.பார்த்திபன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலக கிராம நிர்வாக உத்தியோகத்தர், சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர், சமூகசேவை உத்தியோகத்தர்கள், அம்பாறை மாவட்ட இணைப்பதிகாரி, விடய பொறுப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் உட்பட பலர் […] - [விஞ்ஞான ஆசிரியர் உவைஸ் எழுதிய மூன்று நூல்கள் வெளியீட்டு விழா](https://minnal24.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9e%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%86%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b5%e0%af%88%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%8e/): -எம்.எஸ்.எம்.ஸாகிர்- விஞ்ஞானப் பாடத்தினை இலகு முறையில் கற்றுக்கொள்கின்ற வகையில் சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஷ்ரப் வித்தியாலயத்தின் விஞ்ஞானம் கற்பிக்கின்ற ஆசிரியர் எம்.எம்.எம்.உவைஸ் எழுதிய 03 விஞ்ஞான நூல்களின் வெளியீடு, திங்கட்கிழமை சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஷ்ரப் வித்தியாலயத்தில் நடைபெற்றது. கற்பித்தலில் சுமார் 20 வருட அனுபவம் கொண்ட, இவர் எழுதிய விஞ்ஞான வினா – விடை தொகுப்பு அடங்கிய விஞ்ஞான தேனருவி தரம் – 06, விஞ்ஞான தேன் கிண்ணம் தரம் – 07, விஞ்ஞான தேன் கிண்ணம் தரம் – 09 ஆகிய 03 நூல்களே வெளியிடப்பட்டன. பாடசாலை ஆசிரியர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் பாடசாலையின் பிரதி அதிபர் ஏ.எம். நிசார் தலைமையில் இடம்பெற்ற இந்நூல் வெளியீட்டு விழாவில், சாய்ந்தமருது கோட்டக்கல்விப்பணிப்பாளர் என்.எம்.ஏ. மலிக் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதோடு, சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஷ்ரப் அதிபர் எம்.ஐ.சம்சுதீன்இ சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ். அதிபர் எம்.ஐ. இல்லியாஸ், கல்முனை அல்-ஸுஹறா அதிபர் […] - [ஏழைக் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு](https://minnal24.com/%e0%ae%8f%e0%ae%b4%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%89/): மட்டக்களப்பு பாலர்சேனை கிராமத்தில் உள்ள 200 ஏழை எளிய குடும்பங்களுக்கு 12000 ரூபாய் பெறுமதியுள்ள உலர் உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள், நேற்று புதன்கிழமை இந்தியாவிலிருந்து வருகை தந்த சகோதரர் மோகன் சி லாசரஸ் என்பவர் தலைமையில் வழங்கப்பட்டது. இவ் நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், இந்த கூடுகையில் நல்ல சமாரியன் பொது காரியதரிசி திரு.தாமஸ் ஜெயபால் மற்றும் டாக்டர் அன்பு ராஜன், போதகர் குகன் இராஜதுரை, இலங்கை நல்ல சமாரியன் குழுவினர்கள், மற்றும் பல போதகர்கள் கலந்து கொண்டனர். - [தொடர்குடியிருப்பில் தீ : இரண்டு வீடுகள் முற்றாக எரிந்து நாசம்](https://minnal24.com/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80/): -பதுளை நிருபர்- நமுனுகுல கனவரல்ல CVE டிவிஷனில் 6 ம் இலக்க பதினொரு வீடுகளைக் கொண்ட தொடர் குடியிருப்பில் மூன்றாவது வீடு இன்று காலை 7.40 மணியளவில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதன்போது குறித்த தொடர் குடியிருப்பில் இருந்த 2 வீடுகள் முற்றாக தீக்கிரையானதுடன் பொருட்களும் தீக்கிரையாகியுள்ளன. இவ்விபத்தில் எவருக்கும் உயிர்ச்சேதங்கள் ஏற்படவில்லை. அயலவர்களின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. குறித்த வீட்டில் அறுவர் வசித்து வந்தமையும் குறிப்பிடத்தக்கது. - [மட்டக்களப்பு பிராந்திய நீர் பாவனையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a8/) - [காரைநகர் கடற்பரப்பில் 3 இந்திய மீனவர்கள் கைது](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%af%88%e0%ae%a8%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-3-%e0%ae%87/): -யாழ் நிருபர்- நேற்று புதன்கிழமை  பி.ப 10 மணியளவில் இலங்கை – காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மூன்று இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் 30,35 மற்றும் 57 வயதுகளுடையவர்கள் ஆவர். இதன்போது அவர்கள் மீன்பிடி நடவடிக்கைக்கு உபயோகித்த IND-TN-11-MM 108 என்ற இலக்கம் கொண்ட படகு ஒன்றும் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் விசாரணைகளுக்காக மைலிட்டி கடற்படை முகாமிற்கு அழைத்து வரப்படட்டனர். - [இணைய வசதிகளுக்கு இடையூறு](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%a3%e0%af%88%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%af%82/): தொடர் மின்சார தடங்கல் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் 3G மற்றும் 4G இணைய வசதிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மின்சார தடங்கல் ஏற்பட்டமை மற்றும் மின் பிறப்பாக்கிகளுக்கு போதுமான அளவு எரிபொருள் கிடைக்காமை காரணமாக, தொலைபேசி வலையமைப்புக்களின் இணைய சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன - [முன்னாள் அமைச்சர் காலமானார் ](https://minnal24.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9/): முன்னாள் அமைச்சர் அத்தாவுட செனவிரத்ன கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார் - [நாட்டின் சில பகுதிகளில் மழையுடனான வானிலை](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%aa%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-6/): வடமத்திய, வடமேல், மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடமத்திய, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. - [இலங்கைக்கான இந்தியாவின் ஆதரவு குறித்து ரணிலுக்கு விளக்கம்](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d/): இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்படும் பொருளாதார ஆதரவு குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தெளிவுபடுத்தியுள்ளார். இதேவேளை, இலங்கை கடும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள இந்தச் சந்தர்ப்பத்தில், இந்தியா வழங்கியுள்ள உதவிகள் சாதாரணமானவையல்ல என்றும் , இந்தியா இவ்வாறு வேறு எந்த நாடுகளுக்கும் தொடர் உதவிகளை வழங்கவில்லை என்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். - [இ.தொ.கா தேசிய சபைக் கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்டவர்களின் விபரம்](https://minnal24.com/%e0%ae%87-%e0%ae%a4%e0%af%8a-%e0%ae%95%e0%ae%be-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%9a%e0%ae%aa%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4/): இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபைக்கூட்டம் எனது தலைமையில் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் நேற்று புதன்கிழமை முற்பகல் கொட்டகலை CLF வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்தின் ஆரம்பத்தில் மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமான் உட்பட உயிரிழந்த கட்சி செயற்பாட்டாளர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும், பிரமுகர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன்பின்னர் காங்கிரஸின் முக்கிய பதவிகளுக்கான தெரிவுகள் இடம்பெற்றன. இதன்போது இ.தொ.கா தலைவராக செந்தில் தொண்டமான் தவிசாளராக நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர். அதன்பின்னர் பிரதி தலைவர் உட்பட ஏனைய பதவிகளுக்கு வாக்கெடுப்பு மூலம் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதன்படி பிரதித் தலைவர்களாக மத்திய மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர்களான கணபதி கனகராஜ் மற்றும் அனுசியா சிவராஜா ஆகியோர் தெரிவாகினர். பிரதித் தவிசாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ராஜதுரையும், தேசிய அரசியல் அமைப்பாளராக முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினர் சக்திவேலும், தொழிற்சங்க பிரிவு தேசிய அமைப்பாளராக லோகதாஸ் மற்றும் பிரதி பொதுச்செயலாளராக செல்லமுத்தும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். […] - [இதயம், சிறுநீரகம்- புற்று நோயாளர்களுக்கான மருந்து இல்லை](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81/): நாடளாவிய ரீதியிலுள்ள பல வைத்தியசாலைகளில் இதயம், சிறுநீரகம் மற்றும் புற்று நோயாளர்களுக்காகப் பயன் படுத்தப்படும் அதிகளவான மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அரச மருந்தாளர் சங்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் அதிகளவான ஏனைய மருந்துகள் தீர்ந்துவிடும் எனவும் சங்கம் தெரிவித்துள்ளது. - [தைத்த ஆடைகளின் விலைகள் 40 வீதமாக உயர்வு](https://minnal24.com/%e0%ae%a4%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%86%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-40-%e0%ae%b5/): தைத்த ஆடைகளின் விலைகள் சுமார் 40 வீதத்தினால் உயர்வடைந்துள்ளதாக அகில இலங்கை சிறு கைத்தொழிலாளர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் நிலுக்ஸ குமார தெரிவித்தார். மின்சாரத் தடை, டொலர் பற்றாக்குறை மற்றும் மூலப் பொருள் தட்டுப்பாடு காரணமாக இவ்வாறு தைத்த ஆடைகளின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளது. குறிப்பாக மஹரகம பமுனுவ பகுதியில் புத்தாண்டு காலத்தில் 200, 300 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட தைத்த ஆடை கள் தற்பொழுது 800 முதல் 1000 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாக குறிப்பிட்டார். தைத்த ஆடைகளை உற்பத்தி செய்யப்படும் மூலப் பொருட்களின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளது. 600 ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்பட்ட நூலை 1800 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய நேரிட்டுள்ளது. சிறு ஆடை உற்பத்தி நிலையங்கள் மின்சாரத் தடையினால் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். - [8 நிமிடங்கள் மட்டுமே நீடித்த பங்குச் சந்தை](https://minnal24.com/8-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%87-%e0%ae%a8%e0%af%80%e0%ae%9f%e0%ae%bf/): கொழும்பு பங்குச் சந்தையின் நாளாந்த வர்த்தகம் நேற்று புதன்கிழமை காலை 10.30 மணிக்கு ஆரம்ப மாகிய போதிலும் 8 நிமிடங்கள் மட்டுமே நீடித்தது. S&P SL 20 சுட்டெண் முந்தைய நாளை விட 5 வீதம் குறைந்ததன் காரணமாக பங்கு வர்த்தகம் சுமார் 30 நிமிடங்களுக்கு இவ்வாறு இடைநிறுத் தப்பட்டுள்ளது. அதன்படி, பங்குச் சந்தையின் நாளாந்த வர்த்தகம் முற்பகல் 10.38 மணிக்கு நிறுத்தி வைக்கப்பட்டு, 11.08 மணிக்கு பங்குச் சந்தை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த சந்தர்ப்பத்தில் அனைத்து பங்கு விலை குறியீடு 358.64 புள்ளிகள் சரிந்து 9,288.91 புள்ளிகளாகவும், S&P SL 20 சுட்டெண் 184.70 புள்ளி கள் சரிந்து 3,153.33 புள்ளிக ளாகவும் காணப்பட்டன. இது முந்தைய நாளைக் காட்டிலும் 3.72மூ மற்றும் 5.53மூ வீழ்ச்சியாகும். - [பாராளுமன்றம் கலைக்கப்படுமா?](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f/): பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத்தேர்தலுக்கு செல்லுமாறு வலி யுறுத்தும் பிரேரணையை முன்வைக்க தயாராகி வருகின்றோம் – என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார். அரசமைப்பின் பிரகாரம் பாராளுமன்றத்தை இரண்டரை வரு டங்களுக்கு பிறகே ஜனாதிபதியாலகலைக்க முடியும். எனினும், பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற் றப்பட்டால் நாளை வேண்டுமானாலும் அதனை கலைக்க முடியும். நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அதிலிருந்து மீள்வதற்கான வேலைத் திட்டத்தை அரசு முன்வைக்கவில்லை. ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி ஆகியனவும் தீர்வு திட்டத்தை சமர்ப்பிக்க வில்லை. முழு நாடும் சரியான பாதைக்கு எனும் வேலைத்திட்டத்தை நாமே முன் வைத்துள்ளோம். சரி, எதிரணிகளை விடுவோம், தீர்வு திட்டத்தை முன்வைக்க வேண்டியது அரசின் கடப்பாடாகும். அதனை செய்யாவிட்டால் அரசு பெயில் என்றே புலப்படும். நாட்டு மக்களை சாகடிக்கும் இந்த அரசுக்கு ஆட்சியை தொடர்ந்து முன்னெடுக்க அனுமதி வழங்குவதா அல்லது பாராளுமன்றத் தேர்தலுக்கு […] - [எரிபொருள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு](https://minnal24.com/%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%af%8d/): டீசல், பெற்றோல், விமானங்களுக்கான எரிபொருள் ஆகியவற்றை எந்தவிதமான தடையுமின்றி ஏப்ரல் மாதத்தில் விநியோகிக்க முடியுமென இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார். கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது எரிபொருள் பாவனை 35 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும், இந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களுக்கு மாத்திரம் எரிபொருள் இறக்குமதிக்காக 1.2 பில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதோடு, வருடத்தின் எஞ்சியப் காலப்பகுதிக்கு எரிபொருள் இறக்குமதிக்காக 5 பில்லியன் ரூபாய் செலவிடப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். கடந்த வருடம் எரிபொருள் இறக்குமதிக்காக வெறும் 2.5 பில்லியன் ரூபாயே இறக்குமதி செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார். - [எமக்கு தெரிந்த விடயங்களை நாம் அம்பலப்படுத்தினால் நாடு பற்றியெறியும்](https://minnal24.com/%e0%ae%8e%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a4%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%af%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88/): இலங்கையில் இந்தியாவின் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கே, இலங்கைக் கேட்கும்போதெல்லாம் இந்தியா கடன் வழங்குவதாக தெரிவித்த முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, லிற்றோ நிறுவனத்தை இந்தியாவுக்கு வழங்குவதற்கு முயற்சிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தொடர்பில் எமக்கு தெரிந்த விடயங்களை நாம் அம்பலப்படுத்தினால் நாடு பற்றியெறியுமென எனவும் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், இந்தியாவுக்கு சென்றுவிட்டு நாடு திரும்பிய நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் ஊடகவியலாளர்கள் எதிர்காலத்தில் என்ன நடக்குமென வினவினார்கள். இதற்கு சிரித்தப்படியே அதிகமாக சிந்திக்க வேண்டாமென பசில் கூறினார். அதாவது அதிகமாக நாட்டு மக்கள் சிந்திக்க ஆரம்பித்தால் பசிலை இங்கிருக்கவிடமாட்டார்கள் என்பதாலேயே  பசில் அவ்வாறு கூறினார் என்றார். பசிலின் பதவியைப் பறிப்பதால் மாத்திரம் நாட்டை நெருக்கடி நிலைமைகளில் இருந்து மீட்க முடியாது. பசில் என்கிற பல்லை பிடுங்குவதால் மாத்திரம் வாய் சுத்தமாகாது எனவும் தெரிவித்தார். இதேவேளை பசில் ராஜபக்ஷவின் இரு மகளில் ஒருவர் இந்தியா பிரஜையையும், மற்றொருவர் […] - [இலங்கைக்கு கடத்த முயன்ற 5 இலட்சம் ரூபாய் மதிப்பிலான களைநாசினிகள் பறிமுதல்](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%ae%e0%af%81%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-5/): தமிழகத்தின் தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 5 இலட்சம் ரூபாய் மதிப்பிலான களைநாசினிகளை க்யூ பிரிவு பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். அண்மைக்காலமாக தூத்துக்குடி மாவட்ட கடற்கரை பகுதிகளில் இருந்து இலங்கைக்கு கஞ்சா, அபின் உள்ளிட்ட போதைப்பொருள்களும் மஞ்சளும் அதிகளவில் கடத்தப்பட்டு வருவதும் பொலிஸார் அவற்றை சுற்றிவளைத்து பறிமுதல் செய்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறன. இந்நிலையில், தூத்துக்குடி வடக்கு பொலிஸ் நிலைய எல்லைக்குட்பட்ட திரேஸ்புரம் கடற்கரையில் க்யூ பிரிவு பொலிஸார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கு கிடைத்த இரகசியத் தகவலின் படி, திரேஸ்புரம் கடற்கரையில் ஒரு படகில் சரக்கு வாகனத்தில் இருந்து முடைகளை ஏற்றிக் கொண்டிருப்பதை கண்டு, அவர்களை சுற்றிவளைக்க முற்பட்டபோது அவர்கள் தப்பியோடியுள்ளனர். தொடர்ந்து அங்கிருந்த சரக்கு வாகனத்திலும் படகிலும் இருந்த களைநாசினிகள் சுமார் 700 லிட்டர், கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வாகனம் மற்றும் படகு ஆகியவற்றை க்யூ பிரிவு பொலிஸார் பறிமுதல் செய்தனர். இது குறித்து வழக்குப்பதிவு […] - [6,000 மெற்றிக் தொன் டீசல் கொள்வனவு](https://minnal24.com/6000-%e0%ae%ae%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9f%e0%af%80%e0%ae%9a%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b3%e0%af%8d/): LIOC யிடமிருந்து 6,000 மெற்றிக் தொன் டீசலை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்திய கடன் திட்டத்தின் கீழ் நாளை வியாழக்கிழமை வரவுள்ள டீசலைக் கொண்ட கப்பல் வரும் வரை, இவ்வாறு டீசலை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக, எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். இவ்வாறு கொள்வனவு செய்யப்படும் டீசலை, மின் உற்பத்தி உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்காக பயன்படுத்தவுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விநியோகம் தொடர்பில் ஏதேனும் சிக்கல்கள் இருப்பின் தமக்கு அறிவிக்குமாறு எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.  இது தொடர்பில் தமக்கு தனிப்பட்ட முறையில் அறிவிக்க முடியுமென தெரிவித்துள்ள அமைச்சர் தனது தொலைபேசி இலக்கத்தையும் (0777414241) வழங்கியுள்ளார். இதேவேளை, எரிபொருள் தட்டுப்பாடு அடுத்த வாரத்திற்குள் தீர்க்கப்படுமென அமைச்சர் காமினி லொக்குகே இதன் போது சுட்டிக்காட்டினார். - [ரமழான் மாதத்தில் முஸ்லிம்களுக்கு விசேட சுற்றறிக்கை](https://minnal24.com/%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%b4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%ae/): ரமழான் மாதம் இன்னும் ஓரிரு தினங்களில் ஆரம்பிக்கவுள்ள நிலையில், ரமழான் மாதத்தில் முஸ்லிம்கள் அவர்களது மதக் கடமைகளை நிறைவேற்றுவதற்கு வாய்ப்பளிக்கும் வகையில், அரசாங்கத்தினால் விசேட விடுமுறை நேரங்களை உள்ளடங்கிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக அமைச்சுக்களின் செயலாளர்கள், இராஜாங்க அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், அரச கூட்டுத்தாபனங்கள், நியதிச் சட்டச் சபைகளின் தலைவர்களுக்காக குறித்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பொது நிர்வாக அமைச்சினால் மார்ச் 28 திகதியிடப்பட்ட, EST-6/03/LEA/3125 எனும் குறித்த சுற்றறிக்கையே இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய, தொழுகைகள், மத வழிபாடுகளில் ஈடுபடுவதற்காக நாளாந்தம் குறிப்பிட்ட நேரத்தை வழங்குமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ரமழான் பெருநாளுக்கு 14 நாட்களுக்கு முன்பாக, தகைமையுடைய நபர்களுக்கு பெருநாள் முற்பணத்தை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. - [திடீரென உயிரிழந்த இளம்பெண்](https://minnal24.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f%e0%af%80%e0%ae%b0%e0%af%86%e0%ae%a9-%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%86/): -யாழ் நிருபர்- திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக இளம் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். அவரது உயிரிழப்புக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், அவரது உடல்கூற்று மாதிரிகள் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளது.  யாழ்ப்பாணம், கீரிமலை – கூவில் பகுதியை சேர்ந்தவரும் , கெப்பற்றிக்கொலாவ குடும்பநல உத்தியோகஸ்தருமான கந்தசாமி நிதர்சினி (வயது 27) என்பவரே உயிரிழந்துள்ளார்.  கெப்பற்றிக்கொலாவையில் பணியாற்றி வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் திடீர் சுகவீனம் காரணமாக கீரிமலையில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பியுள்ளார்.  இந்நிலையில் கடந்த 26ஆம் திகதி உடல் நிலை மோசமானதை அடுத்து தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  மறுநாள் 27ஆம் திகதி அவர் மயக்க நிலைக்கு சென்றதை அடுத்து , மேலதிக சிகிச்சைக்காக யாழ், போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.  அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.  அவரது மரணத்திற்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் உடல் கூற்று மாதிரிகள் பரிசோதனைக்காக […] - [நாளை 13 மணித்தியாலம் மின்வெட்டு](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%88-13-%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b5/): தற்போது நிலவும் கடும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாளை வியாழக்கிழமை 13 மணிநேரம் மின் தடை மேற்கொள்ள இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாடு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. - [பல்கலைக்கழக விடுதிக்குள் தன்னுயிரை மாய்த்துக்கொண்ட மாணவன்](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b4%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b3/): பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட இறுதியாண்டு மாணவன் ஒருவர், பல்கலைக்கழக விடுதிக்குள் தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார் என பேராதனை பொலிஸார் தெரிவித்தனர். குருநாகல்- மெல்சிறிபுர பகுதியைச் சேர்ந்த 25 வயது மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பொறியியல் பீடத்தின் இறுதியாண்டு பரீட்சைகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், குறித்த மாணவன் இதுவரை நடைபெற்ற அனைத்து பரீட்சைகளிலும் தோற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இறதிப் பரீட்சைக்கு குறித்த மாணவன் சமூகமளிக்காமையால் அவரது நண்பர்கள் அவரை தேடியுள்ளதுடன், அவரது கைப்பேசியும் செயலிழந்துள்ளதாக அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் மாணவனைத் தேடி, அவரது நண்பர்கள் விடுதிக்குச் சென்ற போது, அங்கு மாணவன் தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளதை கண்டுள்ளனர். பின்னர், அவரது அறையிலுள்ள மேஜை மீது, உயிரிழந்த மாணவனால் எழுதப்பட்ட கடிதம் ஒன்று இருந்துள்ளதுடன், அதில் “ தனது இறப்புக்கு தானே காரணம் என்றும் தன்னை மன்னியுங்கள். இந்த அழுத்தத்தை தன்னால்  தாங்கிக்கொள்ள முடியவில்லை” என எழுதியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் […] - [87,000 தோட்டத் தொழிலாளர்கள் வெளிநாடுகளுக்கு படையெடுப்பு](https://minnal24.com/87000-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86/): பெருந்தோட்ட நிர்வாகத்தினரின் முறையற்ற நிர்வாகத்தால் 87,000 தோட்டத் தொழிலாளர்கள் வெளிநாடுகளுக்கு தொழிலுக்குச் சென்றுள்ளனர் என, தொழில் அமைச்சர் நிமல் ஸ்ரீபால டீ சில்வா தெரிவித்துள்ளார். எனவே பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஏற்படுத்தப்படும் அநீதியான நிலையைத் தடுப்பதற்கான புதிய சட்டத்தை கொண்டு வரவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தொழிலாளர்களுக்கு ஏற்படும் அநீதி தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாக தெரிவித்த அவர், சட்டதிட்டங்களுக்கு அமைவாக, தோட்டத் தொழிலாளர்களுக்கு சிறந்த சேவை நிலையை ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.   - [இரண்டு நாள் விடுமுறை?](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88/): நாளை காலை 8 மணி முதல் நள்ளிரவு வரை நாடளாவிய ரீதியில் 10 மணித்தியாலங்கள் மின்வெட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழு  தெரிவித்துள்ளது. அத்துடன், நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிக்க இரண்டு நாள் விடுமுறையை அறிவிக்குமாறு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளதாக அறிய முடிகின்றது. - [தமிழ் மொழியை கற்று கொள்ள முடியாமைக்கு கவலைப்படுகிறேன்](https://minnal24.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%95%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3/): -யாழ் நிருபர்- நான்கு வருடமாக யாழில் கடமையாற்றியும் தமிழ் மொழியை கற்றுகொள்ள முடியாமைக்கு கவலைப்படுகிறேன் என மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஏற்பாட்டில் வெளிநாட்டு வேலைவாய்ப்பில் உள்ள இலங்கையர்களின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், நான் நான்கரை வருடங்களாக யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியாக கடமையாற்றியிருந்த போதிலும் தமிழ் மொழியை கற்றுக் கொள்ள முடியாமல் போனமையினையிட்டு கவலைப்படுகிறேன். ஆனால் தமிழில் கொஞ்சம் என்னால் கதைக்க முடியும். அவ்வாறு கதைத்தால் சபையில் உள்ளோர் அதனைக் கேட்டு சிரிப்பார்கள் என்பதனால் அதனை நான் கதைக்க விரும்பவில்லை. எனினும் நான்கு வருடங்களாக இந்த தமிழ் பிரதேசத்தில் இருந்து தமிழ் மொழியை கற்றுக் கொள்ள முடியாமல் போனதற்கு நான் கவலைப் படுகின்றேன் என்றதோடு, வடக்கிலுள்ள இளைஞர் யுவதிகளும் […] - [பாடசாலை போக்குவரத்து சேவை இனி இல்லை ?](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%af%88-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%87-2/): எரிபொருள் நெருக்கடிக்கு உடனடியாகத் தீர்வுகாணாவிட்டால், எதிர்வரும் வெள்ளிக்கிழமை  முதல் மாவட்டங்களுக்கு இடையிலான பாடசாலை போக்குவரத்து சேவைகளை வழங்குவதில் இருந்து விலகுவதாக அகில இலங்கை  பாடசாலை போக்குவரத்து சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது. எந்தவொரு ஆதரவும் கிடைக்காவிட்டாலும், பரீட்சை மற்றும் கல்விசார் நடவடிக்கைகளை கருத்திற்கொண்டு பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் என்.எம்.கே ஹரிச்சந்திர பத்மசிறி தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமைக்குள்  சாதகமான தீர்வு வழங்கப்படாவிட்டால், தமது சேவைகளில் இருந்து விலகிக் கொள்வதாக அவர் எச்சரித்துள்ளார். - [வைத்தியசாலைகளில் சத்திர சிகிச்சைகள் நிறுத்தம்](https://minnal24.com/%e0%ae%b5%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8b%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88%e0%ae%95/): கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஆய்வகங்களில் நடத்தப்படும் வழக்கமான பரிசோதனைகளை கட்டுப்படுத்துமாறு அதன் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சமிந்தி சமரகோன், வைத்தியசாலையின் அனைத்து பிரதானிகளுக்கும் எழுத்துமூல அறிவித்தல் ஒன்றை அனுப்பியுள்ளார். தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் பரிசோதனை கருவிகளின் பற்றாக்குறை காரணமாக, அத்தியாவசிய பரிசோதனைகள் தவிர வழக்கமான தினசரி பரிசோதனைகளை கட்டுப்படுத்துமாறு அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும், மயக்க மருந்து இல்லாத காரணத்தினால் உயிருக்கு ஆபத்தான சத்திரசிகிச்சைகளை இடைநிறுத்துமாறு வைத்தியசாலையில் உள்ள அனைத்து நிபுணர்களுக்கும் காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஷெல்டன் பெரேரா,  பணிப்புரை விடுத்திருந்தார். - [முகக் கவசத்தை அகற்றுவது குறித்த தீர்மானம்](https://minnal24.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%85%e0%ae%95%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81/): கொரோனாவைத் தடுக்கும்  மூன்று தடுப்பூசிகளையும் பெற்றுள்ளவர்களின் எண்ணிக்கை, 80 சதவீதத்தை தாண்டிச் சென்றால் மாத்திரமே, முகக் கவசத்தை அகற்றுவது குறித்து தீர்மானிக்க முடியும் என சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. எனினும் அவ்வாறான நிலை ஏற்படும் வரை, முகக் கவசத்தை அகற்றுவது குறித்து எத்தீர்மானமும் எடுக்கப்படாது என சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். அத்துடன் நாட்டில் 3 தடுப்பூசிகளையும்   பெற்றுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 54 சதவீதமாகவே காணப்படுகிறது என தெரிவித்துள்ள அவர், இந்த எண்ணிக்கை தொடர்பில் எம்மால் திருப்திபட முடியாது என்றார். மேலும் எந்ததெந்த பொது இடங்களுக்கு தடுப்பூசி அட்டையை கொண்டு செல்ல வேண்டும் என்பதை எதிர்வரும் நாள்களில் வர்த்தமானி ஊடாக அறிவிப்பதாகத் தெரிவித்த அவர், ஏப்ரல் மாதம் 30ஆம் திகதிக்கு பின்னர், பொது இடங்களுக்கு செல்ல வேண்டுமாயின் இலங்கையர்கள் முழுமையாக கொரோனா தடுப்பூசிகளை செலுத்தியிருப்பது அவசியம் என்றார்.   - [24 கரட் தங்கத்தின் விலை 200,000 ரூபா](https://minnal24.com/24-%e0%ae%95%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-200000-%e0%ae%b0%e0%af%82/): இலங்கையில்  இன்று புதன்கிழமை தங்கத்தின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக செட்டியார் தெரு தங்க வியாபாரியொருவர் தெரிவித்தார். தங்க விற்பனையாளர்களின் இன்றைய தகவலின் படி, 22 கரட் தங்கத்தின் விலை 185,000 ரூபாவாக உயர்ந்துள்ளது. மேலும், 24 கரட் தங்கத்தின் விலை 200,000 ரூபாவாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. தங்கத்தின் விலை அதிகரிப்புடன், உள்ளூர் சந்தையில் தங்கத்திற்கு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதாக தங்க விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். - [இந்தியக் கடனுதவித் திட்டத்தின் கீழ் 750 ஜீப் வாகனங்கள்](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%a9%e0%af%81%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f/): இந்தியக் கடனுதவித் திட்டத்தின் கீழ் 750 ஜீப் வாகனங்களை இலங்கை பொலிஸாருக்கு வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் பொது பாதுகாப்பு அமைச்சில்   கைச்சாத்திடப்பட்டது. ஓகஸ்ட் மாத இறுதிக்குள் 250 ஜீப் வாகனங்களும், செப்டம்பர் இறுதிக்குள் 250 ஜீப் வாகனங்களும், 2023 மார்ச் இறுதிக்குள் 250 ஜீப் வாகனங்கள் என மூன்று கட்டங்களாக இந்த வாகனங்கள் வழங்கப்படவுள்ளது. இதன் மொத்த மதிப்பீடாக 2.5 பில்லியன் ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை இலங்கை பொலிஸாருக்கு 2,000 முச்சக்கர வண்டிகள், ஜீப்கள் உட்பட 72 ஜப்பானிய உதவி வாகனங்கள் மற்றும் 150 மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்நக்கது. பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஜகத் அல்விஸ் மற்றும் மஹிந்திராவின் துணைத் தலைவருமான திரு ஜோய்தீப் மொய்த்ரா ஆகியோர் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு பரிமாறிக்கொண்டனர். இந்நிகழ்வில் பொது பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர மற்றும் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். - [புத்தாண்டை முன்னிட்டு போக்குவரத்திற்கு விஷேட ஏற்பாடு](https://minnal24.com/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%aa%e0%af%8b/): தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு கூடுதலான பஸ்களை சேவையில் ஈடுபடுத்தி பயணிகளின் போக்குவரத்தை இலகுபடுத்துமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. மேலும், ஏப்ரல் முதலாம் திகதியில் இருந்து விசேட பஸ் வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார். பஸ்களை இயக்கும் போது கொரோனா விதிகள் குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். - [பெரும்பான்மையை இழந்தது இம்ரான் கானின் அரசு](https://minnal24.com/%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%af%88-%e0%ae%87%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4%e0%af%81-%e0%ae%87/): பாகிஸ்தானில் இம்ரான் கானின் அரசு பெரும்பான்மையை இழந்ததுள்ளது. தனது கூட்டணி கட்சியான எம்.கி.எம் கட்சி இம்ரான் கான் அரசுக்கு அளித்த வந்த ஆதரவை விலக்கிக் கொண்டுள்ளது. நம்பிக்கையில்லா தீா்மானம் வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முன்னரே இம்ரான் கான் அரசுக்கு பின்னடைவு ஏற்ப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான் மீதான நம்பிக்கையில்லா தீா்மானம் மீது நாடாளுமன்ற கீழவையில் அடுத்த மாதம் 3ஆம் திகதி வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு உள்துறை அமைச்சா் ஷேக் ரஷீத் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: பிரதமா் இம்ரான் கானுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீா்மானத்தின் மீதான விவாதம் மார்ச் 31 ஆரம்பமாகும் என தெரிவித்தார். அதனைத் தொடா்ந்து, அந்தத் தீா்மானத்தின் மீதான வாக்கெடுப்பு அடுத்த மாதம் 3ஆம் திகதி நடைபெறும் என குறிப்பிட்டார். - [மரக்கறிகளின் மொத்த விலையில் பாரியளவு வீழ்ச்சி](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%af/): நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் மொத்த விலை பாரியளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த வாரம் 300 ரூபாவை அண்மித்த ஒரு கிலோ போஞ்சியின் விலையானது  இன்று புதன்கிழமை 100 ரூபாவாக வீழ்ச்சியடைந்ததுடன் ஒரு கிலோ தக்காளியின் விலை 60 ரூபாவாகவும், கரட் 110 ரூபாவாகவும், சிவப்பு உருளைக்கிழங்கு 100 ரூபாவாகவும் குறைவடைந்துள்ளது. குறிப்பாக எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு காய்கறிகள் கொள்முதல் செய்ய வரும் வியாபாரிகள் தற்போது வருகை தராமையே காய்கறி விலை வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது. - [மூடப்படும் நிலையில் தேயிலைத் தோட்ட தொழிற்சாலைகள்](https://minnal24.com/%e0%ae%ae%e0%af%82%e0%ae%9f%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%af/): நாடளாவிய ரீதியிலான மின் துண்டிப்பு, 10 மணித்தியாலங்கள் நீடிக்கப்படுதல் மற்றும் தேயிலைத் தொழிற்சாலைகளுக்கு தேவையான டீசல் கிடைக்காமை போன்ற காரணங்களால் நாளை வியாழக்கிழமையிலிருந்து தேயிலைத் தோட்டங்களின் அன்றாட செயற்பாடுகளை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தோட்ட முகாமையாளர்கள் தெரிவித்துள்ளனர். நாளாந்த மின் துண்டிப்பால் தேயிலைத் தொழிற்சாலையின் தேயிலைத் தூள் உற்பத்தியானது, மின் பிறப்பாக்கி இயந்திரம் மூலமே முன்னெடுக்கப்படுவதாகவும் குறித்த இயந்திரத்துக்காக நாளொன்று பாரிய தொகை டீசல் ​தேவை என்றும் தோட்ட முகாமையாளர்கள் தெரிவிக்கின்றனர். பறிக்கப்பட்ட தேயிலை கொழுந்து விநியோகத்திலிருந்து உற்பத்தி வரை அனைத்துக்கும் மின்சாரம் அவசியம் என்றும் தேயிலைக் கொழுந்துகளை காயவைத்து, தூளாக்குவதற்கு போதியளவு நேரம் தேவை என்றும் குறித்த நேரப்பகுதிக்குள் அதனை காய வைக்க முடியாவிட்டால், இயந்திரத்துக்குள் போடப்படும் கொழுந்து முழுமையாக அழிவடையும் என சுட்டிக்காட்டியுள்ளனர்.   இந்த நிலையில் தேயிலை உற்பத்தி செயற்பாடுகள் பாரிய ஸ்தம்பிதத்தை எதிர்நோக்கியுள்ளதால், தேயிலைத் தொழிற்சாலைகளுக்கு தேவையான டீசலை பெற்றுக்கொடுப்பதற்கான முறையொன்றை ஏற்படுத்துமாறு அரசாங்கத்திடம் தோட்ட […] - [தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் அரசாங்கத்துக்கு எச்சரிக்கை](https://minnal24.com/%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a/): எரிபொருள் பிரச்சினைக்கு இவ்வாரம் தீர்வு வழங்காவிட்டால் அடுத்த வாரத்தில் இருந்து நாடு முழுவதிலும் சேவையில் ஈடுபடும் அனைத்து பஸ்களும் சேவையிலிருந்து விலகுமென தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேவர்தன தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், இன்று போய் நாளை வா என்பது போல அரசாங்கம் தொடர்ந்து செயற்படுகிறது. குட்டக் குட்டக் குனிபவன் முட்டாள் என்பதுபோல இனியும் அரசாங்கத்தின் செயற்பாடுகளைப் பொறுத்துகொண்டு இருக்க முடியாது என்றார். தனியார் பஸ் உரிமையாளர்களுக்குப் பல்வேறுப் பிரச்சினைகள் இருக்கின்றன. எனவே எரிபொருள் பிரச்சினைக்கு அரசாங்கம் இந்த வாரத்தில் தீர்வு வழங்காவிட்டால் அனைத்து பஸ் தொழிற்சங்கங்களுடனும் கலந்துரையாடி அடுத்த வாரத்தில் இருந்து சேவைகளில் இருந்து விலகுவோம் எனவும் தெரிவித்தார். - [இ.தொ.க. வின் தலைவராக செந்தில்](https://minnal24.com/%e0%ae%87-%e0%ae%a4%e0%af%8a-%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%9a%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/): இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் புதிய தலைவராக செந்தில் தொண்டமான் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார். கொட்டகலை சி.எல்.எப் வளாகத்தில்  இடம்பெற்ற, இ.தொ.காவின் தேசிய சபை கூட்டத்திலேயே இவர் நியமிக்கப்பட்டார். முன்னாள் தலைவர், அமரர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவுக்குப் பின்னர் வெற்றிடமாக இருந்த இ.தொ.காவின்  தலைமை பதவிக்கே செந்தில் தொண்டமான் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார்.     - [தங்க மொத்த விற்பனை நிலையத்திற்கு அருகில் தீ](https://minnal24.com/%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a9%e0%af%88-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%af/): கொழும்பு – புறக்கோட்டை தங்க மொத்த விற்பனை நிலையத்துக்கு (Gold Market) அருகில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து 3 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீப்பரவலுக்கான காரணம் அறியவராத நிலையில், இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. மேலும் சேத விபரங்களும் இதுவரை வெளியாகவில்லை. - [நாடு மீண்டும் மூடப்படுமா?](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%82%e0%ae%9f%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%ae%be/): சில நாட்களேனும் நாட்டை முழுமையாக மூடிவிடுமாறு அரசாங்கத்திடம் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. எரிபொருள் தட்டுப்பாட்டால், மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுப்ப முடியாத நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. மின் வெட்டால், வர்த்தக நடவடிக்கைகளை முறையாக முன்னெடுக்க முடியாத அச்சம் ஏற்பட்டுள்ளது. பல தொழில்துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆகையால் சில நாட்களேனும் நாட்டை முழுமையாக மூடிவிடுவதற்கு நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசாங்கத்திடம் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன. - [மின்வெட்டு நேரம் அடுத்தவாரம் மேலும் அதிகரிக்கும்](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b5%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b5/): அடுத்த வாரத்தில் இருந்து ஒரு நாளைக்கு 10 மணித்தியாலங்களுக்கு மேல் மின்வெட்டு ஏற்படும் என இலங்கை மின்சார சபை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மின் உற்பத்தி நிலையங்கள் தேவையான எரிபொருளைப் பெறாவிட்டால், ஒரு நாளைக்கு 10 மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு நீட்டிக்கப்படலாம் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எரிபொருள் பற்றாக்குறை காரணமாக களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தின் பணிகள் நேற்று முற்றாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் பல பகுதிகளில் 10 மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது. மற்ற மின் ஆலைகள் மூடப்படுவதைத் தடுக்க, எரிபொருளை அவசரமாக விநியோகிக்குமாறு மின்சாரசபை கோரிக்கை விடுத்துள்ளனர். எரிசக்தி அமைச்சகம் தேவையான அளவு எரிபொருளை வழங்கத் தவறினால், அடுத்த வாரம் முதல் 10 மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு நீட்டிக்கப்படும் என்று அந்த வட்டாரங்கள் எச்சரித்தன. இதேவேளை இந்திய கடன் வரியின் கீழ் நாளை வரவுள்ள டீசல் கப்பலில் அத்தியாவசிய சேவைகள் மற்றும் மின் உற்பத்திக்காக LIOC இலிருந்து 6000 […] - [இரண்டு தலை, மூன்று கைகளுடன் பிறந்த குழந்தை](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88-%e0%ae%ae%e0%af%82%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%9f/): மத்திய பிரதேசத்தின் ஷாஹின் பகுதியை சேர்ந்தவர் பெண் ஒருவருக்கு இரண்டு தலைகள், மூன்று கைகளுடன் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையின் மூன்றாவது கையானது, குழந்தையின் இரண்டு தலைகளுக்கும் இடையே உள்ளது. இதைத்தொடர்ந்து குழந்தை மேலதிக சிகிச்சைக்காக இந்தூர் மஹாராஜா யஷ்வந்த்ராவ் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது. கருவுற்றிருந்த போது செய்த சோதனையில் இரட்டையர்கள் போன்றே தெரிந்துள்ள நிலையில் குழந்தை பிறந்த பின்னர் முழுமையான வடிவம் தெரியவந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தையின் நிலமை கவலைக்கிடமாகவே உள்ளது. இதுபோன்ற நிலையில், பெரும்பாலான குழந்தைகள் கருவிலே உயிரிழந்துவிடும், அல்லது பிறந்து 48 மணி நேரத்தில் உயிரிழந்துவிடும் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறான குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்யவும் வாய்ப்புகள் உள்ளது. எனினும், 60 முதல் 70 சதவீத குழந்தைகள் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தை இந்தூர் மஹாராஜா யஷ்வந்த்ராவ் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு வைத்தியர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளது. - [யாழ் கலாச்சார மத்திய நிலையம் யாழ்ப்பாணத்தின் தனித்துவத்தை மெருகூட்டி நிற்கிறது](https://minnal24.com/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%ae%be%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2/): -யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்ட யாழ் கலாச்சார மத்திய நிலையம் யாழ்ப்பாணத்தின் தனித்துவத்தையும் பாரம்பரியத்தையும் மேலும் மெருகூட்டி நிற்கிறது என யாழ் இந்திய துணைத்தூதர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் புகழாரம் சூட்டினார். நேற்று முன்தினம் திங்கட்கிழமை இலங்கை இந்திய நட்புறவின் சின்னமாக திறந்து வைக்கப்பட்ட யாழ் கலாச்சார மத்திய நிலையத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்திய அரசின் அரசின் 1.1 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவில் அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் பண்பாட்டு மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மக்களுக்காக இந்திய அரசினால் கையளிக்கப்பட்ட கலாச்சார மத்திய நிலையம் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் என நம்புகிறேன். தமிழ் மக்களுக்காக இந்திய அரசும் இந்திய தூதரகமும் அசை அத்திவாரமாக தொடர்ந்த செயற்படும் என அவர் மேலும் தெரிவித்தார். இந் நிகழ்வில் மதத் தலைவர்கள், யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரகத்தின் தூதுவர் […] - [பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்ட 6 பேர் கைது](https://minnal24.com/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b8%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d/): நீதிமன்ற பிடிவிறாந்தை நடைமுறைப்படுத்த சென்ற இரு பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றத்தில் 2 பெண்கள் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட யோகபுரம் பகுதியை சேர்ந்த இரு இளைஞர்கள் நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு செல்லாததால் நீதிமன்றினால் அவர்களுக்கு எதிராக பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டது. நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்ட பிடிவிறாந்தினை நடைமுறைப்படுத்தி அவர்களை கைது செய்வதற்காக 2 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் நேற்று யோகபுரம் பகுதிக்கு சென்றனர். அதன் போது அங்கிருந்த சிலர்,பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்ததுடன், அவர்கள் மீது தாக்குதலையும் மேற்கொண்டனர். சம்பவம் தொடர்பில் மேலதிக நடவடிக்கையை முன்னெடுத்த பொலிஸார், இரு பெண்கள் உள்ளிட்ட 6 பேரை கைது செய்துள்ளனர். - ['ஹரித தெயக்' தேசிய வீட்டுத் தோட்டப் பயிர்ச்செய்கை திட்டம் ஆரம்பம்](https://minnal24.com/%e0%ae%b9%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a4-%e0%ae%a4%e0%af%86%e0%ae%af%e0%ae%95%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4-2/): -கல்முனை நிருபர்- முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையில் 22 லட்சம் வீட்டுத் தோட்டங்களை இலக்காக கொண்டு செயற்படுத்தப்படும் ‘ஹரித தெயக்’ தேசிய வீட்டுத் தோட்டப் பயிர்ச்செய்கை திட்டம் எல்லா மாவட்டத்திலும் ஆரம்பித்து வைக்கப்பட்டு வருகின்றது. ஹரித தேயக் ‘ தேசிய வீட்டுத்தோட்ட யுத்தம் – 2022 செயற்றிட்டத்தின் கீழ் 2.2 மில்லியன் வீட்டுத் தோட்டங்களை இலக்காக கொண்டு தற்போது நாடு முழுவதையும் உள்ளடக்கி நடைமுறைப்படுத்தப்படும் ‘ பசுமை நாள் ‘ தேசிய வீட்டுத்தோட்ட யுத்தம் 2022 நிகழ்ச்சித் திட்டமானது தேசிய ரீதியில் செவ்வாய் கிழமை காலை 9.18 மணிக்கு சுபவேளையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அந்தவகையில் இறக்காமம் பிரதேச செயலக பிரிவில் இவ்வேலைத்திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வுகள் பிரதேச செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம். ரஷ்ஷான் (நளீமி)  தலைமையில் இடம்பெற்றது. இவ்வேலைத்திட்டத்திற்கினங்க பிரதேச செயலகத்தினால் தெரிவு செய்யப்பட்ட ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் தெரிவு செய்யப்பட்ட வீட்டுத்தோட்டத்தில் ஈடுபட்டுள்ள பயனாளிகளுக்கு நடப்பட்ட மரக்கறி […] - [ரஷ்ய இராஜதந்திரிகளை வெளியேற்ற ஐரோப்பிய நாடுகள் நடவடிக்கை](https://minnal24.com/%e0%ae%b0%e0%ae%b7%e0%af%8d%e0%ae%af-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf/): உளவு பார்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 43 ரஷ்ய இராஜதந்திரிகளை வெளியேற்ற 4 ஐரோப்பிய நாடுகள் நடவடிக்கை எடுத்துள்ளன. அயர்லாந்து, பெல்ஜியம், நெதர்லாந்து மற்றும் செக் குடியரசு முதலான 4 நாடுகள், நேற்று இந்த நடவடிக்கையை எடுத்துள்ளன. போலந்து உள்ளிட்ட சில ஐரோப்பிய நாடுகள், கடந்த வாரம் மேற்கொண்ட நடவடிக்கைக்கு இணையாக இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேநேரம், உக்ரைனின் 2 முக்கிய பகுதிகளில், இராணுவ நடவடிக்கையை கடுமையாக குறைக்க உள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. அமைதிப் பேச்சுவார்த்தையில். பரஸ்பர நம்பிக்கையை அதிகரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், படைகுறைப்பு எந்தளவில் இடம்பெறும் என்பது குறித்த தகவல்கள் இதுவரையில், உறுதியாகத் தெரியவரவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. - [கனரக வாகனத்துடன் மோதி இளைஞர் உயிரிழப்பு](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%a9%e0%ae%b0%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8b%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%87%e0%ae%b3/): -பதுளை நிருபர்- கனரக வாகனம் ஒன்றும் உந்துருளி ஒன்றும் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்விபத்து நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது சம்பவம் குறித்து தெரியவருகையில், கெப்பட்டிபொலயில் இருந்து பொரலந்த நோக்கி வந்துகொண்டிருந்த பால் ஏற்றும் கொல்கலன் ஒன்று பொரலந்த பகுதியிலிருந்து சென்ற உந்துருளியுடன் வக்கி கும்புரா பகுதியில் வைத்து மோதியது. இதில் உத்துருளியில் பயணித்த 23 வயதுடைய இளைஞர் படுகாயமடைந்தார். குறித்த விபத்துக்குள்ளான இளைஞன் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் பொரலந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பால் கொள்கலன் சாரதி போககும்பரா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை போககும்புரா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். - [குடும்பநல சுகாதார சேவைகள் பணியாளர்கள் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம்](https://minnal24.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a8%e0%ae%b2-%e0%ae%9a%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0-%e0%ae%9a%e0%af%87%e0%ae%b5%e0%af%88%e0%ae%95%e0%ae%b3/): அரச குடும்பநல சுகாதார சேவைகள் பணியாளர்கள், நாளை முதல் நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பு மற்றும் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். 30 வருட சேவையை பூர்த்தி செய்த குடும்பநல சுகாதார சேவைகள் பணியாளர்களுக்கு, விசேட தரத்திற்கான பதவி உயர்வு வழங்குவதை இடைநிறுத்துவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக குறித்த சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். - [செல்வந்தர்களுக்கு அதிக விலைக்கு விற்பதற்காக டீசலினை பதுக்குவதால் ஏழை மக்கள் பாதிப்பு](https://minnal24.com/%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95-%e0%ae%b5/): -நுவரெலியா நிருபர்- செல்வந்தர்களுக்கு அதிக விலைக்கு விற்பதற்காக டீசலினை பதுக்குவதால் ஏழை மக்கள் பாதிப்படைவதாக வாகன சாரதிகள் குற்றச்சாட்டுகின்றனர். ஹட்டன் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் டீசல் தீர்ந்து போனதால் வாகன சாரதிகள் ஹட்டன் மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்பாக வீதியினை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பொது போக்குவரத்து சுமார் ஒரு மணித்தியாலங்களுக்கு மேல் தடைப்பட்டது. ஹட்டன் நகரத்தில் உள்ள சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டீசல் பெற்றுக்கொள்வதற்காக வாகன சாரதிகள் இன்று பகல் முதல் வரிசையில் காத்திருந்தனர். குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்து டீசல் முடிவடைந்ததாக அறிவித்ததனை தொடர்ந்து சாரதிகள் நேற்று மாலை 7.45 மணியளவில் மறித்து சுமார் 8.15 வரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். ஆர்ப்பாட்ட காரர்கள் கருத்து தெரிவிக்கையில், நேற்று  பகல் முதல் டீசல் பெற்றுக்கொள்வதற்காக உணவின்றி நின்று கொண்டிருப்பதாகவும் தற்போது டீசல் இல்லையென தெரிவிப்பதாகவும் நாளை டீசல் பெற்றுக்கொள்ள வந்தால் மீண்டும் ஆரம்பத்திலிருந்து வரிசையில் […] - [12 மணி நேர மின் துண்டிப்பு அமுலாக்க அனுமதி?](https://minnal24.com/12-%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%85/): மின்சார நெருக்கடியில் மிகவும் உச்சகட்டத்தை எட்டியுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மின்தடை குறித்து நேற்றிரவு இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், 12 மணி நேர மின் துண்டிப்பு அமுலாக்க அனுமதி கோரப்பட்டது. எனினும், இந்த நிலைமைய ஓரளவுக்கு குறைப்பதற்காக, கையிருப்புக்கு அவசியமான குறிப்பிடத்தக்க அளவான எரிபொருளைப் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருந்தது. தற்போது ஏற்படும் நிலைமை அவ்வளவு சிறந்ததாக இல்லை. இலங்கை முழுவதும் காலை 8 மணி முதல் இரவு 12 மணி வரையான காலப்பகுதிக்குள் 10 மணிநேர மின்துண்டிப்பு அமுலாக்குவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு விருப்பமின்றியேனும் மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது. மின்சாரத்தை உற்பத்தி செய்யும் மின்னுற்பத்தி நிலையங்களில், 800 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்திக்கான எரிபொருள் இன்மையால், மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய இயலுமை இல்லை, என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். - [மின்பிறப்பாக்கி பழுது : இருளில் மூழ்கிய சாவகச்சேரி வைத்தியசாலை](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%af%81-%e0%ae%87/): -யாழ் நிருபர்- மின்வெட்டு நேரம் ஆதார வைத்தியசாலையில் பொருத்தப்பட்ட மின்பிறப்பாக்கி பழுதுபட்டமையால் வைத்தியசாலை முழுவதும் நேற்று இருளில் மூழ்கியது . சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது நாட்டில் நேர அட்டவணையின் பிரகாரம் மின் வெட்டு அமுல்படுத்தப்படுகிறது. இவ்வாறான நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் மின் துண்டிப்பு ஏற்பட்ட நிலையில் அங்கு பொருத்தப்பட்டிருந்த மின்பிறப்பாக்கி இயங்க மறுத்ததன் காரணமாக தொலைபேசி வெளிச்சத்தின் மூலம் சேவைகள் இடம்பெற்றதாக அறியக் கிடைத்துள்ளது. வடமாகாண சுகாதார சேவைகள் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் இவ்வாறு வைத்தியசாலையின் மின்பிறப்பாக்கி உரிய முறையில் பராமரிக்கப்படாததன் விளைவே இவ்வாறான தடங்கல்கள் ஏற்படுவதாக தகவலறிந்த வட்டாரங்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். - [எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை மீனவர் ஒருவர் கைது](https://minnal24.com/%e0%ae%8e%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d/): -மன்னார் நிருபர்- நாகை மாவட்டம் கோடியக்கரை படகுத் துறை முகத்தில் இருந்து 14 நாட்டிக்கல் மைல் தொலைவில் கப்பலில் சென்று கடலோரப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காரைக்காலைச் சேர்ந்த இந்திய கடலோர பாதுகாப்புப் படையினர் நேற்று செவ்வாய்க்கிழமை கண்ணாடி இழை படகு ஒன்றை சோதனை செய்தனர். இதன் போது குறித்த படகு இலங்கை நாட்டைச் சேர்ந்த படகு என்றும் அதில் வந்தவர் இலங்கை யாழ்ப்பாண மாவட்டம், வல்வெட்டித்துறை, ஆதிகோவிலடி பகுதியைச் சேர்ந்த சிவலிங்கம் சாந்தரூபன் (வயது-30) என்றும் தெரியவந்தது. இதையடுத்து இந்திய எல்லையில் தடை மீறி மீன் பிடித்ததாக இந்திய கடலோர காவல் படையினர் படகை கைப்பற்றி மீனவரை கைது செய்தனர். கைது செய்த மீனவரையும், கைப்பற்றிய படகையும் நாகை மாவட்டம் வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழும ஆய்வாளரிடம் ஒப்படைத்தனர். படகையும், இலங்கை மீனவரையும் அழைத்து வர நேற்று செவ்வாய்க்கிழமை மதியம் 2. 20 மணிக்கு கோடிக்கரை படகு துறைமுகத்திலிருந்து பைபர் […] - [நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b2-%e0%ae%aa%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87-2/): நாட்டின் பல பகுதிகளில் இன்று  புதன்கிழமை பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியள்ளது. காலி மற்றும் மாத்தறை கரையோரப் பகுதிகளில் காலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். அத்துடன், மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களிலும் காலி, மாத்தறை, குருநாகல் மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களின் சில இடங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும். இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் அபாயத்தைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. - [பிம்ஸ்டெக் மாநாட்டில் ஜனாதிபதியின் உரை இன்று](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%ae%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%af%86%e0%ae%95%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9c%e0%ae%a9/): கொழும்பில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் பிம்ஸ்டெக் மாநாட்டின் மூன்றாம் நாளான இன்று புதன்கிழமை காலை 9 மணிக்கு பிம்ஸ்ரெக் அமைப்பின் 5ஆவது அரசதலைவர்கள் மாநாடு நடைபெறவிருப்பதுடன் இதில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மெய்நிகர் வழியே உரை நிகழ்த்துவார். அதனைத்தொடர்ந்து உறுப்பு நாடுகளின் அரசதலைவர்களும் மெய்நிகர் வழியில் உரையாற்றுவர். அத்தோடு இம்மாநாட்டில் பிம்ஸ்ரெக் சாசனம் ஏற்கப்பட்டு, பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்படவுள்ளது. பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரி குடா முன்முயற்சியின் (பிம்ஸ் ரெக்) 5ஆவது மாநாட்டின் இரண்டாம்நாள் நிகழ்வான அமைச்சர் மட்டக்கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் அமைந்துள்ள பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், நேபாளம், பூட்டான், தாய்லாந்து மற்றும் மியன்மார் ஆகிய 7 நாடுகள் அங்கம்வகிக்கும் இந்த பிம்ஸ்ரெக் அமைப்பின் 5ஆவது மாநாடு நேற்று முன்தினம் திங்கட்கிழமை ஆரம்பமான நிலையில், மாநாட்டின் இரண்டாவது நாளான நேற்று நடைபெற்ற 18 ஆவது அமைச்சு மட்டக்கூட்டத்தில் உறுப்புநாடுகளைப் […] - [தமிழ்ப் பெண்னை மணந்தார் மக்ஸ்வெல்](https://minnal24.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d/): அவுஸ்திரேலிய தமிழ்ப் பெண் வினி ராமனை 2017 முதல் காதலித்து வந்த மக்ஸ்வெல் அண்மையில் இருவரும் திருமண பந்தத்தில் இணைந்தனர். திருமணப் படங்களை இருவரும் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்திருந்தனர். இந்நிலையில் சென்னையில் மக்ஸ்வெல் – வினி ராமன் இருவருக்கும் தமிழ் முறைப்படியும் திருமணம் நடைபெற்றது. தமிழ்த் திருமணங்களில் உள்ள மூன்று முறை மாலை மாற்றுதல் சடங்கில் மக்ஸ்வெல்லும் வினி ராமனும் கலந்துகொண்ட காணொளி சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. ஐ. பி. எல். தொடரில் மக்ஸ்வெல்லை 11 கோடி இந்திய ரூபாய்க்கு பெங்களுர் அணி தக்கவைத்திருந்தது. இன்னும் ஓரிரு தினங்களில் அவர் அணியுடன் இணையவுள்ளார். - [ஏப்ரல் 7 இல் 150 போராட்டங்களை நடத்தத் தீர்மானம்](https://minnal24.com/%e0%ae%8f%e0%ae%aa%e0%af%8d%e0%ae%b0%e0%ae%b2%e0%af%8d-7-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d-150-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88/): வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் பொதுமக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள சுமைகளுக்கு எதிராக தேர்தல் தொகுதிகளை மையப்படுத்தி 150 போராட்டங்களை ஒரே நேரத்தில் நடத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. அனைத்து இடங்களிலும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7ஆம் திகதி ஒரே நேரத்தில் போராட்டம் நடத்தப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். அரசாங்கத்துக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போராட்டம் கடந்த 15ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்றிருந்த நிலையிலேயே நாடு முழுவதும் போராட்டத்தை நடத்த அக்கட்சி தீர்மானித்துள்ளது. இதேவேளை, கட்சியின் மே தினக் கொண்டாட்டம் கண்டியில் நடைபெறவுள்ளது அதேவேளை, தேசிய மாநாடு எதிர்வரும் ஜூலை மாதம் 28ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது. - [ஐந்தில் ஒரு பெண் துஷ்பிரயோகத்திற்கு ஆளாவதாக தகவல்](https://minnal24.com/%e0%ae%90%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%b7%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0/): இலங்கையில் ஐந்தில் ஒரு பெண் தனது வாழ் நாளில் ஒருமுறையாவது தனது துணையால் உடல் ரீதியாக அல்லது பாலியல் ரீதியாக துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளதாக சமீபத்திய கணக்கெடுப்பு வெளிப்படுத்தியுள்ளது. இந்த உடல் மற்றும் பாலியல் துஷ்பிரயோகம், தங்கள் கணவர், இணைந்து வாழும் துணை அல்லது காதலன் என நெருங்கிய கூட்டாளிகளிடம் இருந்து நிகழ்ந்துள்ளது. ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்தின் கொழும்பு அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை நடத்திய மகளிர் நல ஆய்வு முடிவு மூலம் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது. இந்த கணக்கெடுப்பின் தரவுகளின் பகுப்பாய்வு, இதுபோன்ற உடல் ரீதியான துஷ்பிரயோகங்களை அனுபவித்த பெரும்பாலான பெண்களும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியிருப்பது தெரியவந்துள்ளது. பெண்களைக் கட்டுப்படுத்துவதில் அவர்களின் பங்கு தாரரின் செல்வாக்கு, 19.1 சதவீதமாக கண்டறியப்பட்டது. - [அரச நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய பரிந்துரை](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%a9-%e0%ae%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f/): இன்று புதன்கிழமை மற்றும் நாளை வியாழக்கிழமை ஆகிய தினங்களில் அரச நிறுவனங்களில் வீட்டிலிருந்து வேலை செய்யும் முறைக்கு செல்லுமாறு அரசாங்கத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் சில நாட்கள் மக்கள் வாழ்வது மிகவும் கடினமாக இருக்கும் இந்த நிலைமை மேலும் மோசமாகி வருகிறது. இதற்கு தீர்வு காண எந்த நிறுவனமும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. நிதி நெருக்கடியால் இந்த மின் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அரசாங்க நிறுவனங்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான வாய்ப்பை வழங்குவதன் மூலம் இந்த சூழ்நிலையை நிர்வகிக்க நாங்கள் அரசாங்கத்திற்கு பரிந்துரைத்தோம். சுதந்திர வர்த்தக வலயங்களுக்கு மின்சாரம் வழங்கவும் நாங்கள் எங்களால் முடிந்தவரை முயற்சி செய்கிறோம், என அவர் மேலும் தெரிவித்தார் - [வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பி வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது](https://minnal24.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be-3/): பிரித்தானியாவில் இருந்து நாடு திரும்பி, யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் வசித்து வந்த நபரே இவ்வாறு கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் தனது வீட்டில் பூஞ்சாடியில் கஞ்சா செடி வளர்ப்பதாக கோப்பாய் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், குறித்த நபரின் வீட்டினை நேற்றுமுன்தினம் சுற்றிவளைத்த பொலிஸார், அவரை கைது செய்ததுடன், வீட்டில் வளர்த்த கஞ்சா செடியினை சான்று பொருளாக மீட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். - [இந்தியாவுடனாக ஒப்பந்தம் இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்?](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%ae%be%e0%ae%95-%e0%ae%92%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d/): அண்மையில், இந்தியாவுடன் கையொப்பமிட்ட கடலோர பாதுகாப்பு ஒப்பந்தத்தின் ஊடாக, இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பு அல்லது அச்சுறுத்தல் ஏற்படும் என வெளியான தகவல், தவறான புரிதலாகும் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில், விளக்கமளித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், பாதுகாப்பு அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது. கப்பல்களை பழுதுபார்ப்பதற்காக, வருடாந்தம், வெளியிலிருந்து சேவையைப் பெற்றுக்கொள்வதற்காக 600 மில்லியன் ரூபா செலவாகும் பின்னணியில், இந்திய அரசாங்கத்தினால் எந்தவித செலவுமின்றி, மிதக்கும் கப்பல் கட்டும் தளத்தை நிர்மாணிப்பதற்காக, அமுலாகும் யோசனை 2015ஆம் ஆண்டுமுதல் ஆரம்பிக்கப்பட்ட ஒன்றாகும் என பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன், கடல்சார் கண்காணிப்பு, உளவு மற்றும் மீட்பு நடவடிக்கைகள் பற்றிய தகவல்களை வழங்க டோனியர் ஆய்வகம் முதன்மையாகப் பயன்படுத்தப்படுகிறது. இலங்கையில் இந்த வசதி மற்றும் தொழில்நுட்பம் இல்லாததால், இருதரப்பு உறவுகளை அடுத்து, இந்திய அரசாங்கம், டோனியர்  கண்காணிப்பு விமானம் ஒன்றை இலவசமாக இலங்கைக்கு வழங்க இணங்கியுள்ளதாக, பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் […] - [டீசல் கையிருப்பில் இல்லை ; வரிசையில் நிற்க வேண்டாம்](https://minnal24.com/%e0%ae%9f%e0%af%80%e0%ae%9a%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88/): டீசல் கையிருப்பு இல்லாததால் மார்ச் 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் வரிசையில் நிற்க வேண்டாம் என CEYPETCO கேட்டுக் கொண்டுள்ளது. “37,500 மெட்ரிக் டன் டீசலை ஏற்றிச் வந்த கப்பலிலிருந்து திட்டமிட்டபடி இன்று எரிபொருளை தரையிறக்க முடியவில்லை. எனவே, மார்ச் 30 மற்றும் 31 ஆகிய திகதிகளில் எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் வரிசையில் நிற்க வேண்டாம் என பொதுமக்களிடம் CEYPETCO கேட்டுக்கொண்டுள்ளது. இருப்பினும், அத்தியாவசிய சேவைகளுக்கு டீசல் தொடர்ந்து வழங்கப்படும் என இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபன தலைவர் தெரிவித்துள்ளார். - [முதலீட்டு வாய்ப்புகளை ஆராய்வதற்காக சவூதி உயர்மட்டக் குழு விரைவில் இலங்கை வரவுள்ளது](https://minnal24.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%86%e0%ae%b0/): இலங்கைக்கான சவூதி அபிவிருத்தி நிதியத்தின் உதவிகளைத் தொடர்ந்தும் வழங்கத் தாம் உத்தேசித்துள்ளதாக இலங்கைக்கான சவூதி தூதுவர் அப்துல் நாசர் ஹுசைன் அல் ஹார்தி (Abdulnasser Hussain Al-Harthi) இன்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார். தனது சேவைக் காலத்தை முடித்துக் கொண்டு எமது நாட்டில் இருந்து வெளியேறிச் செல்லும் அப்துல் நாசர் இன்று, முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியை சந்தித்த போதே இதனை தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின் போது மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி துறையில் முதலீடு மற்றும் இலங்கையில் உள்ள ஏனைய முதலீட்டு வாய்ப்புகள் குறித்து ஆராய்வதற்காக சவூதி அரேபிய உயர்மட்டக் குழுவொன்று விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதனை ஹார்தி தெரிவித்துள்ளார். முதலீட்டு வலயங்களுடன் தொடர்புடைய பல சிறப்பு வரிச் சலுகைகள் இங்கு உள்ளதனையும், மருந்து, தொழிநுட்பம் மற்றும் ஆடைத் தொழில் துறைகளில் நேரடி முதலீட்டிற்கான பரந்த வாய்ப்புகள் இலங்கையில் இருப்பதனையும் ஜனாதிபதி தெளிவுபடுத்தினார். கொழும்பு துறைமுக நகர் மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள […] - [மட்டக்களப்பு - பெண்மணி சர்வதேச விருதினை பெற்றுள்ளார்](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%b0/): அமெரிக்காவின் நியுயோர்க் நகரத்தில் தலைமையகத்தைக் கொண்டு செயற்படும் “வுமன் ஐக்கன்” (Women Icon) எனும் நிறுவனத்தினால் “வளர்ந்து வரும் உதவும் கரங்கள்” (Best Emerging Helping Hands) எனும் விருதிற்கு , மட்டக்களப்பைச் சேர்ந்த திருமதி. ஜானு முரளிதரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பில் பல்வேறு மனிதாபிமானப் பணிகளை மேற்கொண்டு வரும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான LIFT  நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரான நிர்வாகியுமான இவர் சமூக சேவையில் பெண் தலைமைத்துவம் எனும் போட்டிப் பிரிவில் “வளர்ந்து வரும் உதவும் கரங்கள்” எனும் இந்த விருதை வென்றுள்ளார். கொரோனா பெரும் தொற்று பொது முடக்கத்தின் போது மக்களுக்காக நேரடியாக களத்தில் நின்று செயற்பட்டமைக்காக,  இவ்விருது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. “வுமன் ஐக்கன்” விருது என்பது தமது தனித்துவமான வழியில் வினைத்திறனுடன் செயலாற்றும் பெண்களைக் கௌரவிக்கும் முகமாக வழங்கப்படும் சர்வதேச விருதாகும்.   - [ஆண் துணையின்றி பெண்கள் விமானத்தில் செல்ல தடை](https://minnal24.com/%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%a3%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5/): ஆண் துணையின்றி பெண்கள் விமானத்தில் செல்ல ஆப்கன் தலிபான் அரசு தடை விதித்துள்ளது. ‘பெண்களுக்கு முழு சுதந்திரம் தரப்படும்’ என தலிபான் அரசு அறிவித்தது. ஆனால், அதற்கு நேர்மாறாக ஆப்கன் அரசு செயல் படத் துவங்கியுள்ளது. ஆப்கனில் கடந்த வாரம் உயர் நிலைப் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்த ஆறாம் வகுப்புக்கு மேற்பட்ட மாணவியருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அவர்கள் வீட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர். உள்நாட்டில் பெண்கள் தனியாக பயணம் செய்யவும் அனுமதியில்லை. இந்நிலையில், உள்நாடு மற்றும் வெளிநாட்டு விமான பயணங்களில் பெண்கள் தனியே செல்ல ஆப்கன் அரசு தடை விதித்துள்ளது. ‘ஆண் உறவினர் துணையுடன் வரும் பெண்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்’ என, விமான நிறுவனங்களுக்கு தலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர். ஆனால், அப்படி எந்த உத்தரவையும் பிறப்பிக்க வில்லை என தலிபான்கள் மறுத்துள்ளனர். இருந்தும், ‘அரசு ஆணைப்படி விமானங்களில் தனியாக வரும் பெண்களை அனுமதிக்க வேண்டாம்’ என, சில விமான நிறுவனங்கள் […] - [பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான் மீதான நம்பிக்கையில்லா தீா்மானம்](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%be%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af/): பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான் மீதான நம்பிக்கையில்லா தீா்மானம் பாராளுமன்ற கீழவையில் திங்கட்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்புக்காக மாா்ச் 31-ஆம் திகதி பாராளுமன்றம் மீண்டும் கூடுகிறது. பணவீக்கம், விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்தாதது போன்ற காரணங்களுக்காக பிரதமா் இம்ரான் கான் மீது எதிா்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீா்மான நோட்டீஸை நாடாளுமன்றச் செயலகத்தில் கடந்த மாா்ச் 8-ஆம் தேதி அளித்தன. இதன் மீதான விவாதத்தை தொடங்குவதற்காக நாடாளுமன்றம் மாா்ச் 25-ஆம் திகதி கூடியது. ஆனால், அன்றைய தினம் நம்பிக்கையில்லா தீா்மானம் தாக்கல் செய்யப்படவில்லை. அவையை 28-ஆம் திகதி மாலை வரை அவைத் தலைவா் ஒத்திவைத்தாா். இதன்படி, பாராளுமன்றம் திங்கள்கிழமை காலை கூடியது. எதிா்க்கட்சித் தலைவரும் பிஎம்எல்-என் கட்சித் தலைவருமான ஷேபாஸ் ஷெரீஃப் நம்பிக்கையில்லாத் தீா்மானத்தை அவையில் தாக்கல் செய்தாா். அவைத் தலைவா் ஆசாத் கைதா் இல்லாத நிலையில், அவையை வழிநடத்திய துணைத் தலைவா் காசிம் கான் சுரி, தீா்மானத்துக்கு ஆதரவு […] - [ரஷ்யா உக்ரைன் அமைதி குழுவுக்கு விஷம் வைக்கப்பட்டதா?](https://minnal24.com/%e0%ae%b0%e0%ae%b7%e0%af%8d%e0%ae%af%e0%ae%be-%e0%ae%89%e0%ae%95%e0%af%8d%e0%ae%b0%e0%af%88%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%af%81/): ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கத்தில், இரு நாட்டு பிரதிநிதிகள் குழு இடையே அமைதி பேச்சு நடந்து வருகிறது. பல்வேறு சுற்றுப்பேச்சில் இதுவரை முடிவு எட்டப்படவில்லை. உக்ரைன் அரசின் வேண்டுகோளை ஏற்று, ரஷ்யாவை சேர்ந்த தொழிலதிபர் ரோமன் அப்ரமோவிக் இந்த அமைதிப் பேச்சில் பங்கேற்று உக்ரைனுக்கு ஆதரவாக பேசி வந்தார். இந்நிலையில், தொழிலதிபர் ரோமன் மற்றும் உக்ரைன் அமைதி குழுவை சேர்ந்த இரண்டு பிரதிநிதிகளுக்கு கடந்த மாதம் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக அமெரிக்காவின், ‘வால் ஸ்ட்ரீட் ஜெர்னல்’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், மூவருக்கும் கண்கள் சிவந்து, முகம் மற்றும் கைகளில் தோல் பகுதி உரிய தொடங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. உக்ரைன் தலைநகர் கீவில் நடந்த பேச்சின் போது இவர்களுக்கு விஷம் வைக்கப்பட்டதாக பத்திரிகையில் செய்தி வெளியாகி உள்ளது. தற்போது அவர்கள் உடல்நிலை தேறி வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. - [இலங்கைக்கு கடத்தப்படவிருந்த தடை செய்யப்பட்ட 300 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%b5%e0%ae%bf-3/): -மன்னார் நிருபர்- ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் சட்டவிரோதமாக மறைத்து வைத்திருந்த தடை செய்யப்பட்ட 300 கிலோ கடல் அட்டைகளை மெரைன் பொலிஸார் இன்று காலை பறிமுதல் செய்துள்ளனர். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம் பகுதியில் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை மீனவர்கள் பிடிப்பதாக மெரைன் பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து இன்று அதிகாலை கடற்கரையோரத்தில் ராமேஸ்வரம் மெரைன் பொலிஸார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் உள்ள மீன் கம்பெனி ஒன்றில் மெரைன் பொலிஸார் சோதனை செய்தபோது அங்கு சாக்கு பைகளில் தடை செய்யப்பட்ட உயிர் கடல் அட்டைகள் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து மெரைன் பொலிஸார் உயிருடன் இருந்த சுமார் 300 கிலோ எடையுள்ள கடல் அட்டைகளையும் இச்சம்பவத்தில் தொடர்புடைய மூவரையும் தனுஷ்கோடி மெரைன் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர். இந்த தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு கடத்த […] - [ஜனாதிபதியின் மாளிகைக்கு அருகில் ஒருவர் தற்கொலை](https://minnal24.com/%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/): மிரிஹானவில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வீட்டிற்கு முன்பாக 53 வயதுடைய ஆண் ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மின்வெட்டை உடனடியாக நிறுத்தக் கோரி, அந்த நபர் மின்மாற்றியில் ஏறி தற்கொலை செய்து கொண்டதாக தெரியவருகின்றது. சம்பவத்தின் போது அவர் மதுபோதையில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். - [இந்திய மீனவர்கள் 12 பேர் கைது](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-12-%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%af%88/): -யாழ் நிருபர்- இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 12 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை நெடுந்தீவு அருகே இந்திய கடற்தொழிலாளர்கள் கடற்றொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் ஒரு படகையும் அதிலிருந்த 12 கடற்தொழிலாளர்களையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கடற்தொழிலாளர்களை ஊர்காவற்துறை நீதிமன்றில் முற்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது.  - [யாழில் ஊடகவியலாளர்களை அச்சுறுத்திய பொலிஸார்](https://minnal24.com/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8a%e0%ae%9f%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%85%e0%ae%9a/): -யாழ் நிருபர்- ஜே.வி.பி கட்சியின் யாழ். அலுவலகத்தில் ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பிற்கு யாழ்ப்பாணத்தில் உள்ள சகல ஊடகவியலாளர்களும் வருகை தந்தபோது குறித்த இடத்தைச் சுற்றி காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அலுவலகத்திற்கு முன்னால் நிறுத்தப் பட்டிருந்த ஊடகவியலாளர்களின் மோட்டார் சைக்கிள்களை அலுவலகத்திற்குள்ளே நிறுத்துமாறு காவல்துறையினர் அச்சுறுத்தி ஊடகவியலாளர்களை வீதியில் பயணிக்க முடியாது எனத் தெரிவத்துள்ளனர். அத்துடன் ஊடகவியலாளர்கள் ஊரடங்கு வேளையில் வீதியில் பயணிக்க அனுமதி இல்லை எனவும் தெரிவித்து கைத்தொலைபேசிகளில் புகைப்படங்களை எடுத்து அச்சுறுத்தியுள்ளனர். காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகன, ஊரடங்கு வேளையில் அத்தியாவசிய தேவைகள் மற்றும் ஏனைய அன்றாட தேவைகளை கருதி வீதியில் பயணிப்போர் தமக்குரிய அலுவலக அடையாள அட்டையினை பயன்படுத்தி வீதிகளில் பயணிக்க முடியும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் யாழ்ப்பாண காவல்துறையினரால்  ஊடகவியலாளர் மீது நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பில் அனைவரும் கண்டனங்களை வெளியிட்டுள்ளனர். - [யாத்திரிகர்கள் பத்திரமாக திருப்பி அனுப்பப்பட்டனர்](https://minnal24.com/%e0%ae%af%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%be/): திடீரென நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவால் நிர்க்கதிக்குள்ளான  சிவனொளிபாதமலை யாத்திரிகர்களை மீண்டும் அவர்களது சொந்த இடங்களுக்கு பத்திரமாக அனுப்பும் நடவடிக்கையை ஹட்டன் மற்றம் நல்லதண்ணி பொலிஸார் முன்னெடுத்தனர். மத்திய மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தன மற்றும் ஹட்டன் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி விஜித அல்விஸ் ஆகியோரின் மேற்பார்வையின் கீழ், குறித்த யாத்திரிகர்களை சொந்த இடங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. சிவனொளிபாதமலை யாத்திரையை முடித்து விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த சுமார் 29 பேர் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்த நிலையிலேயே, பொலிஸார் தலையீட்டினால் அவர்கள் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். - [வெட்டுக்காயங்களுடன் ஆணொருவரின் சடலம் மீட்பு](https://minnal24.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8a/): ஹம்பாந்தோட்டை தங்கல்ல நேடொல்பிட்டிய வெலிஆரே பிரதேசத்தில் வெட்டுக்காயங்களுடன் ஆணொருவரின் சடலத்தை, தங்கல்ல பொலிஸார் இன்று ஞாயிற்றுக்கிழமை  காலை மீட்டுள்ளனர். விவசாயக் காணியொன்றிலிருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது. கோச்சியாய வீதி, பேரகம பிரதேசத்தை சேர்ந்த 38 வயது நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பிரேதப் பரிசோதனைக்காக தங்கல்ல வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். - [கத்தோலிக்க பாடசாலைகளுக்கு பூட்டு](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d/): மேல்மாகாணத்தில் உள்ள அனைத்து கத்தோலிக்க தனியார் மற்றும் சர்வதேச பாடசாலைகளும் ஏப்ரல் 4 முதல் 8 வரை மூடப்பட்டிருக்கும் என கத்தோலிக்க தனியார் பாடசாலைகளின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். - [நடைமுறைப் பரீட்சை நாளை ](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%9f%e0%af%88%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b0%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%af%88-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%88/): ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதன் காரணமாக 2021 (2022) க.பொ.த உயர்தர பரீட்சையின் இசை மற்றும் நடன பாடங்களுக்கான நடைமுறைப் பரீட்சை நாளை  திங்கட்கிழமையே நடைபெறும். அதன்படி, உள்ளூர் மற்றும் சர்வதேச நடனம், அழகியல் மற்றும் மேற்கத்திய இசை மற்றும் கர்நாடக இசை பாடங்களுக்கான நடைமுறை பரீட்சைகள் திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்படும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.   - [பாகிஸ்தான் பாராளுமன்றம் கலைப்பு](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%ae%e0%af%8d/): பிரதமர் இம்ரான் கான் கோரிக்கையை ஏற்று பாகிஸ்தான் ஜனாதிபதி ஆரிஃப் ஆல்வி பாராளுமன்றத்தைக் கலைத்துள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தனர். பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார். இதைத் தொடர்ந்து, பிரதமர் இம்ரான் கான் உரையாற்றுகையில், நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தல் நடத்திட வேண்டும் என ஜனாதிபதியிடம் கோரிக்கை வைத்தார். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையிட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வந்தன. இந்த நிலையில், பிரதமர் இம்ரான் கான் கோரிக்கையை ஏற்று ஜனாதிபதி ஆரிஃப் ஆல்வி, நாடாளுமன்றத்தைக் கலைத்து உத்தரவிட்டுள்ளார். மேலும் 90 நாள்களுக்குள் பாராளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்றும் அவர் அறிவித்துள்ளார். - [வெண்ணிற ஆடையணிந்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்](https://minnal24.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%b1-%e0%ae%86%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b4%e0%af%81%e0%ae%ae/): கொழும்பு, மார்க்கஸ் பெர்ணான்டோ மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் ஜனநாயகத்தை நிலைநிறுத்துமாறு கோரியே அமைதியான முறையில், காரியாலயத்துக்குள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதில் கலந்துகொண்டவர்கள் வெள்ளை நிறத்திலான ஆடையை அணிந்திருந்தனர். - [சிவனொளிபாதமலை யாத்திரையை முடித்து வீடு திரும்பிய 29 பேர் நிர்க்கதி](https://minnal24.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8a%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88-%e0%ae%af%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af/): நாட்டில் திடீரென பிறக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தால் மக்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துள்ளனர். இதற்கமைய, நேற்று சனிக்கிழமை சிவனொளிபாதமலை யாத்திரையை முடித்து விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த சுமார் 29 பேர் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். குறித்த யாத்திரியர்கள் நேற்று மாலை 4.00 மணிக்கு மலையிலிருந்து இறங்கியதாகவும் அதனை தொடர்ந்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதனால் செல்வதற்கு பொது போக்குவரத்து இல்லாததன் காரணமாக தற்போது ஹட்டன் ரயில் நிலைய  ஓய்வு விடுதியில் தங்கியுள்ளதாகவும்  தெரிவித்துள்ளனர். கடைகள் மூடப்பட்டுள்ளதால் நேற்று இரவு, இன்று காலை உணவின்றி இருந்தாகவும் அதனை தொடர்ந்து ரயில்  நிலையத்தின் பணியாளர்கள் இன்று பகல் உணவை  வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர். அத்துடன்  ரயில் நிலைய சிற்றூண்டிசாலையையும்  இவர்களின் நலன் கருதி திறந்து வைத்துள்ளதாகவும் தெரிவித்தனர். குறித்த 29 பேரும்  பாணந்துறை, கொழும்பு, கம்பஹா, மாத்தறை உள்ளிட்ட வெவ்வேறு பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்களுக்கு போக்குவரத்து ஒழுங்குகள் செய்து கொடுக்க முடியாத நிலை […] - [பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b4%e0%ae%95-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae/): பேராதனை பல்கலைக்கழகத்துக்கு எதிராக, பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எனினும், அந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்கு, பொலிஸார் கண்ணீப்புகைப் பிரயோகம் மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இதனால், அங்கு தற்போது பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. - [மஹரகமவில் பதற்றமான நிலைமை](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%b9%e0%ae%b0%e0%ae%95%e0%ae%ae%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae/): ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர், கொழும்பு மார்க்கஸ் பெர்ணான்டோ மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை  ஒன்று திரண்டிருந்தனர். வௌ்ளைநிற ஆடையை அணிந்திருந்த அவர்கள், ஜனநாயகத்தை நிலைநிறுத்துமாறு கோரியே அமைதியான முறையில், காரியாலயத்துக்குள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், காரியாலயத்தில் இருந்து வெளியேறியவர்கள் சுதந்திர மாவத்தை வரையிலும் பேரணியாக சென்றனர். அங்கு வீதித்தடை போட்டப்படிருந்தது. அதனையும் மீறி செய்வதற்கு முயன்றபோதே, அங்கு பதற்றமான நிலைமையொன்று எற்பட்டுள்ளது. இதேவேளை, மஹரகமவில் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. பௌத்த தேரர் உள்ளிட்ட ஒரு குழுவினர், பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். எங்களுக்கு எரிபொருள் இல்லை, பெட்ரோல் இல்லை, காஸ் இல்லை, எங்களுக்கு யார் சாப்பாடு கொண்டுவந்து தருவார்கள். நாங்கள் இவ்விடத்திலேயே நின்கின்றோம். இருக்கும் இடத்தில் எங்களை இருக்கவிடுங்கள், உங்களுக்கு பொலிஸ் நிலையம் இருக்கிறது. எங்களுக்கு என்ன இருக்கிறது. வீட்டுக்குச் செல்லமுடியாது, பிள்ளைகள் பட்டிணியில் வாடுகின்றனர். சாப்பாடு யார் கொண்டுவந்து தருவார்கள், நீங்கள் தருவீர்களா […] - [நாளாந்த மின் உற்பத்திக்காக டீசல் விநியோகம்](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/): இன்று முதல் நாளாந்த மின் உற்பத்திக்காக 3,500 மெட்ரிக் டன் டீசல் வழங்கப்படும் என பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். அதேவேளை, எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் டீசலை விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். - [மாணவர்கள் மீது கண்ணீர் புகை வீசப்படுகின்றது](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa/): அரசுக்கு எதிராக பேராதனை பல்கலைக்கழக மாணவர்களால் நடாத்தப்பட்டு கொண்டிருக்கும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் மாணவர்கள் மீது கண்ணீர் புகை மற்றும் நீர் வீசப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. - [கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் பதற்றமான சூழல்](https://minnal24.com/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0-%e0%ae%9a%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/): எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சரத் பொன்சேகா, பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோர் தலைமையில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்ட பேரணியை பொலிஸாரால் தடுத்ததையடுத்து அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. - [ஊரடங்குச் சட்டத்தால் வெறிச்சோடி காணப்படும் அம்பாறை மாவட்டம்](https://minnal24.com/%e0%ae%8a%e0%ae%b0%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86/): -கல்முனை நிருபர்- இலங்கை அரசாங்கம் நாடு முழுவதும் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியுள்ளதுடன்ள நேற்று மாலை முதல் ஊரடங்குச்சட்டம் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் முழுமையாக மக்கள் ஊரடங்குச் சட்டத்தை அனுசரித்து வருகின்றனர் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களான கல்முனை காரைதீவு சாய்ந்தமருது நிந்தவூர் சம்மாந்துறை அக்கரைப்பற்று போன்ற பிரதேசங்களில் மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளதுடன் வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன இதேநேரம் இன்று சாய்ந்தமருது எரிபொருள் நிரப்பும் நிலையமொன்றில் டீசல் கொள்வனவு செய்வதற்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்துக்கொண்டு இருந்ததையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது. - [முற்றாக முடங்கிய மன்னார் நகர்](https://minnal24.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%95-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d/): -மன்னார் நிருபர்- நாட்டில் நேற்று சனிக்கிழமை மாலை 06 மணி முதல் நாளை திங்கட்கிழமை காலை 6 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ள நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மன்னார் மாவட்டத்தின் இயல்பு நிலை ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. மன்னார் நகர் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. பொலிஸார் விசேட கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். ஊரடங்கு நடைமுறையில் உள்ள காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கப் பட்டுள்ளதோடு, ஏனைய சேவைகள் அனைத்தும் மன்னார் மாவட்டத்தில் முற்றாக முடக்கப்பட்டுள்ளது. குறிப்பாக உணவகங்கள், வியாபார நிலையங்கள் மூடப்பட்டுள்ள தோடு, அரச , தனியார் போக்குவரத்துச் சேவைகள் அனைத்தும் முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ள நிலையில் மக்கள் முற்றாக வீடுகளில் முடங்கியுள்ளனர். வீதிகள் மற்றும் பொது இடங்களில் பொலிஸார் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதுடன் உரிய அனுமதியின்றி வீதிகளில் நடமாடுவார் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்படுகின்றனர். - [ICTA தலைவர் இராஜினாமா](https://minnal24.com/icta-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%be%e0%ae%ae%e0%ae%be/): இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப முகவர் நிலையத்தின் (ICTA) தலைவர் பதவியில் இருந்து ஓஷத சேனாநாயக்க இராஜினாமா செய்துள்ளார்- - [அதிகாரிகள் இன்னும் முற்போக்காக சிந்திக்க வேண்டும் - நாமல்](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa/): சமூக ஊடகங்களை முடக்குவதை நான் ஒருபோதும் மன்னிக்கமாட்டேன். VPN இனால் கிடைக்கும். நான் இப்போது பயன்படுத்துவதைப் போல. அத்தகைய தடைகளை முற்றிலும் பயனற்றதாக ஆக்குகிறது. அதிகாரிகள் இன்னும் முற்போக்காக சிந்தித்து இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். - [அனைத்து வலயங்களிலும் ஒரு மணி நேரம் 40 நிமிடங்கள் மின் துண்டிப்பு](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%a9%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%af%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81/): நாட்டில் மின் துண்டிப்பு காலம் இன்று குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அனைத்து வலயங்களிலும் மாலை 5.30 முதல் இரவு 10.30 வரையான காலப்பகுதியில் சுழற்சி முறையில் ஒரு மணி நேரம் 40 நிமிடங்கள்  மின் துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளது. இதேவேளை, மின்னுற்பத்திக்காக எரிபொருளை வழங்குவதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சுக்கள் எழுத்துமூலமாக உறுதியளித்துள்ளன. இதற்கமைய, இந்திய கடனுதவியின் கீழ் நேற்று கிடைக்கப்பெற்ற டீசலில் 12 ஆயிரம் மெற்றிக் டன் மின்னுற்பத்திக்காக வழங்கப்படவுள்ளது. அத்துடன் லங்கா ஐஓசி நிறுவனத்திடம் இருந்தும் 6 ஆயிரம் மெற்றிக் டன் டீசல் வழங்கப்பட்டுள்ளது - [திசர அனுருத்த பண்டார பிணையில் விடுதலை](https://minnal24.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%b0-%e0%ae%85%e0%ae%a9%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%aa%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b0-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a3/): சமூக ஊடக செயற்பாட்டாளரும், பல்கலைக்கழக மாணவருமான திசர அனுருத்த பண்டார பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரை கொழும்பு நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திசர அனுருத்த பண்டார முகத்துவார காவல்நிலையத்தின் குற்ற விசாரணை பிரிவில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்திருந்தது. தண்டனை சட்ட கோவையின் 120ஆம் இலக்க பிரிவின் கீழ் அவர் கைது செய்யப்பட்டிருந்தார். அரசாங்கத்திற்கு எதிராக சூழ்ச்சி விளைவித்தமைக்காக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. - [ஏடிஎம் இயந்திர சேவைகள் தற்காலிகமாக பாதிக்கப்படலாம்](https://minnal24.com/%e0%ae%8f%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%8e%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0-%e0%ae%9a%e0%af%87%e0%ae%b5%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4/): நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடி காரணமாக ஏடிஎம் மற்றும் சிடிஎம் இயந்திர சேவைகள் தற்காலிகமாக பாதிக்கப்படலாம் என்று பல தனியார் வங்கிகள் எச்சரித்துள்ளன. ATM/CRM/CDM இயந்திரங்களில் சேவைத் தடங்கல்களை சந்திக்க நேரிடலாம் என்பதையும், மின்சார விநியோகத்தில் நிலவும் கட்டுப்பாடுகள் காரணமாக எங்கள் சில கிளைகள் மூடப்படலாம் எனவும் வங்கிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏடிஎம் மற்றும் சிடிஎம் இயந்திரங்களுக்கான தற்காலிக மின்பிறப்பாக்கிகள் தொடர்ந்து செயல்படுவதை உறுதிசெய்ய டீசல் வழங்கப்பட வேண்டும் என்பதால், தற்போதைய மின் தடைகள் காரணமாக சவால்களை எதிர்கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.   - [664 பேர் கைது](https://minnal24.com/664-%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%af%88%e0%ae%a4%e0%af%81/): நேற்று சனிக்கிழமை மாலை 6.00 மணி தொடக்கம் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது. இந்நிலையில், நேற்று இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரையான காலப்பகுதியில் ஊரடங்கு சட்டத்தை மீறியமை தொடர்பில் 664 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.   - [சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட காரணம்?](https://minnal24.com/%e0%ae%9a%e0%ae%ae%e0%af%82%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%b2%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b3%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d-2/): பாதுகாப்பு அமைச்சின் கோரிக்கைக்கு அமைய தற்காலிகமாக சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைகுழுவின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். குறித்த கோரிக்கைக்கு அமைய சேவை வழங்குனர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டு முகப்புத்தகம், வட்ஸ்அப், டுவிட்டர், இன்ஸ்டகிராம் மற்றும் யூடியுப் ஆகிய சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. - [சமூக வலைத்தளங்கள் முடக்கம்](https://minnal24.com/%e0%ae%9a%e0%ae%ae%e0%af%82%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%b2%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b3%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/): நாட்டில் சமூக வலைத்தளங்கள் சிலவற்றை பயன்படுத்துவதில் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, யூடியுப், முகப்புத்தகம், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், ட்விட்டர் போன்ற பல சமூக ஊடக வலையமைப்புகளை பயன்படுத்துவதில் தடை ஏற்பட்டுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன. - [திடீர் ஊரடங்கு அறிவிப்பு- அத்தியாவசிய பொருட்களுக்கு முண்டியடித்த மக்கள்](https://minnal24.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%8a%e0%ae%b0%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/): -மன்னார் நிருபர்- நாடளாவிய ரீதியில் நேற்று சனிக்கிழமை மாலை 6 மணி தொடக்கம் நாளை திங்கட்கிழமை அதிகாலை 6 மணி வரை பொது முடக்க நிலை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் எரிபொருட்களை பெற்றுக் கொள்ள மக்கள் நீண்ட வரிசையில் காணப்பட்டதோடு, மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கும் முகம் கொடுத்துள்ளனர். மன்னார் நகர் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் மரக்கறி விற்பனை நிலையங்களில் அதிக அளவு மக்கள் கொள்வனவு நடவடிக்கைகளில் ஈடுபட்ட நிலையில் வழமை போன்று எரிபொருள் பெற்றுக்கொள்வதற்கு மக்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றனர். 6 மணியை கடந்த நிலையிலும் மன்னார் நகர் பகுதியில் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் வழமை போன்று இயங்கி வந்த நிலையில், நேற்று சனிக்கிழமை மாலை 6 மணிக்கு மின்தடை ஏற்பட்ட நிலையில் மக்களின் நடமாட்டம் இன்றி காணப்பட்டது. - ["செல்போன் டவரை" திருடும் கும்பலை மடக்கி பிடித்த பொலிசார்](https://minnal24.com/%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9f%e0%ae%b5%e0%ae%b0%e0%af%88-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95/): செல்போன் கோபுரத்தை (டவர்) கழற்றி இரும்பு உட்பட இதர பொருள்களை திருடி விற்பனை செய்து வந்த 4 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர். சென்னை – தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வைத்து கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 3 இலட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள பொருள்கள், 2 மோட்டார் சைக்கிள் மற்றும் பொருட்கள் ஏற்றும் ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே எட்டயபுரம்- விளாத்திகுளம் பொது சாலையில் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் செயற்பட்டு வந்த செல்போன் டவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு செல்போன் ஜிடிஎல் என்ற நிறுவனத்திடம் விற்கப்பட்டதாக தெரியவருகின்றது. இந்தநிலையில் டவரின் செயல்பாடுகள் சிலமாதங்கள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் இதனை குறிவைத்து , டவரில் இருந்த பேட்டரி மற்றும் ஜெனரேட்டர் ,உள்ளக பாகங்கள், வயர்கள் அடிக்கடி திருட்டு போய் வந்துள்ளது தொடர்பாக ஏற்கனவே பொலிசாருக்கு புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சிந்தலக்கரை பகுதியில் வாகன சோதனையில் […] - [பொது இடங்களில் மக்கள் தங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது](https://minnal24.com/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a4%e0%af%81-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%99/): ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் , பொது இடங்களில் மக்கள் தங்குவதற்கு தடை விதித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விசேட வர்த்தமானி  அறிவித்தலை விடுத்துள்ளார். இந்த வர்த்தமாணி அறிவித்தலின் பிரகாரம் இன்று சனிக்கிழமை 02 ஆம் திகதி மாலை 6.00 மணி முதல் ஏப்ரல் 04 ஆம் திகதி காலை 6.00 மணி வரை அமுலுக்கு வரும் வகையில் எந்தவொரு பொது வீதி, புகையிரத நிலையங்கள், பொது பூங்கா, பொது பொழுதுபோக்கு மைதானம் , ஏனைய பொது மைதானம் அல்லது கடற்கரையோரங்களில் எவரும் நடமாடுவது தடை செய்யப்பட்டுள்ளது. வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளில் பொது ஒழுங்கைப் பேணுவது அவசியம் என்று ஜனாதிபதி கருதுகிறார். - [கோட்டாவின் ஜோதிடருக்கு பலத்த பாதுகாப்பு](https://minnal24.com/%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9c%e0%af%8b%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%aa/): ஜனாதிபதியின் ஆஸ்தான ஜோதிடரான ஞானாக்காவின் பாதுகாப்புக்காக அனுராதபுரம் தேவாலயத்துக்கு அருகில், பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் அமைப்பான, ஐக்கிய பெண்கள் சக்தியின் ஹிருணிகா பிரேமச்சந்திர தலைமையில் நடத்தப்படும்  போராட்டத்திலிருந்து  அவரைப் பாதுகாப்பதற்காகவே பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. - [இந்திய உயர் ஸ்தானிகராலயம் மறுப்பு](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%89%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b2%e0%ae%af%e0%ae%ae/): கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம், இலங்கைக்கு இந்தியா தனது வீரர்களை அனுப்புவதாக ஊடகங்கள் சிலவற்றில் வெளியான அப்பட்டமான தவறான மற்றும் முற்றிலும் ஆதாரமற்ற செய்திகளை கடுமையாக மறுப்பதாகத் தெரிவித்துள்ளது. இதேவேளை, இந்திய இராணுவம் இலங்கைக்குள் பிரவேசித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் வௌியாகும் செய்தியை முற்றாக நிராகரிப்பதாக பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார். - [மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்திய 28 வயதுடைய நபர் கைது](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%a4%e0%af%8d/): சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி செய்திகளை வெளியிட்டு மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் 28 வயதுடைய நபர் ஒருவர் கம்பளை எத்கல பிரதேசத்தில் வைத்து, இன்று சனிக்கிழமை  கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. கொழும்பு வடக்கு குற்றவியல் விசாரணைப் பிரிவினரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டு, மோதரை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்துள்ளது. அவரை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் கொழும்பு வடக்கு குற்றவியல் விசாரணைப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது. - [நாளை முதல் நோன்பு](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%af%8b%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/): ரமழான் மாதத்துக்கான தலைப் பிறை தென்பட்டுள்ளதால் இலங்கையில் உள்ள முஸ்லிம்கள், நாளை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் நோன்பை அனுஷ்டிக்குமாறு கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. - [அராசாங்கத்திற்கான உற்சாக மூட்டல்களே எதிரணியின் போராட்டங்கள் - அமைச்சர் டக்ளஸ்](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9a%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%89%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be/): நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார சவால்களை மனவைராக்கியத்துடன் எதிர்கொள்வதற்கான உற்சாக மூட்டல்களாகவே எதிர்தரப்பினரால் தூண்டி விடப்பட்டுள்ள போராட்டங்கள் அமைந்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மேலும் எதிர்வரும் சில வாரங்களுக்குள் நாட்டின் பொருளாதார நெருக்கடிகள் வழமை நிலைக்கு திரும்பும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். நாட்டின் தற்போதைய நிலை தொடர்பாக இன்று கருத்து தெரிவிக்கையிலே மேற்கண்டவாறு தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொடர்ந்தும் தெரிவிக்கையில்,”நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார பிரச்சினைகளுக்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. நீண்ட பல வருடங்களாக எமது நாடு எதிர்கொண்ட பொருளாதார சவால்களின் திரட்சியே இப்போது விஸ்வரூபம் எடுத்திருக்கின்றது. கடந்த காலங்களில் பல்வேறு சவால்களையும் எதிர்கொண்டு அவற்றில் வெற்றி பெற்ற எமது அரசாங்கம், தற்போதைய பொருளாதார சவால்களையும் முறியடிப்பதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது இவ்வாறான நிலையில், மக்கள் எதிர்கொண்டுள்ள பொருளாதார சவால்களை தமது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தும் எதிரணிகள், மக்கள் மத்தியில் தவறான பிரசாரங்களை மேற்கொள்வதுடன் போராட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றன. இவ்வாறான […] - [யாழ். கல்வியங்காடு ஸ்ரீசந்திரசேகரப்பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவம்](https://minnal24.com/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af%80%e0%ae%9a/): யாழ். கல்வியங்காடு ஸ்ரீசந்திரசேகரப்பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் கல்வியங்காடு ஸ்ரீசந்திரசேகரப்பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவம் நேற்று வெள்ளிக்கிழமை காலை ஒன்பது மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இன்நாளில் ஸ்ரீசந்திரசேகரப்பிள்ளையாரின் அருளை பெற குறித்த பகுதி பக்தர்கள் பெருந்திரளானோர் வருகைதந்திருந்தனர். மேலும் இவ்மகோற்சவ திருவிழாவானது தொடர்ந்து பதினைந்து நாட்கள் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடதக்கது. - [விசேட வர்த்தமானி வெளியீடு](https://minnal24.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9a%e0%af%87%e0%ae%9f-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%af%80%e0%ae%9f/): அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளின் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி, ஏப்ரல் 04 ஆம் திகதி வரை எந்தவொரு பொதுவீதி, பூங்கா, பொழுதுபோக்கு அல்லது பிற மைதானங்கள், புகையிரத நிலையம் , கடற்கரை போன்றவற்றில் எவரும் செல்வதைத் தடை செய்து ஜனாதிபதியினால் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. - [வீடுகளில் நாளை கறுப்பு கொடிகளை பறக்க விடுங்கள்](https://minnal24.com/%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%88-%e0%ae%95%e0%ae%b1%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%95/): -நுவரெலியா நிருபர்- வீட்டில் இருந்தவாறே இந்த ஜனநாயக விரோத அரசுக்கு எதிராக நாளை எதிர்ப்பை வெளியிடுங்கள், வீடுகளுக்கு முன்னால் கறுப்பு கொடிகளை பறக்கிடுங்கள், என  மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வீ. இராதாகிருஷ்ணன் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். தலவாக்கலையில் இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ‘ நாட்டில் மின்சாரம் இல்லை, வீட்டிலே உணவு பொருட்கள் இல்லை, எரிபொருள் விலை, எரிவாயும் இல்லை. பொருட்களின் விலைகளும் உச்சம் தொட்டுள்ளன. இவை தொடர்பில் தமது உள்ளக்குமுறல்களை நாளை வெளிப்படுத்துவதற்கு மக்கள் தயார் நிலையில் இருந்தனர். ஆனால் மக்கள் எழுச்சிக்கு பயந்து, ஊரடங்கு உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது. தடையையும்மீறி போராடுவோம் என மக்கள் அழைக்கின்றனர். ஆனால் மக்களை பாதுகாப்பதே தலைமைகளுக்கு அழகு. அந்தவகையில்தான் நாம் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளோம். எனினும், வீட்டில் இருந்து எதிர்ப்பை […] - [பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு யாழ் அரசாங்க அதிபர் வேண்டுகோள்](https://minnal24.com/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%92%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b4%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%b5/): -யாழ் நிருபர்- தற்போதுள்ள இடர் நிலையின் காரணமாக இன்று மாலையிலிருந்து திங்கட்கிழமை காலை வரை அரசாங்கத்தினால் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுகின்றது. இந்த ஊரடங்கு சட்ட நேரத்தில் யாழ்ப்பாணத்திலுள்ள பொதுமக்கள் வீடுகளில் இருந்து ஊரடங்குச் சட்டத்தினை மதித்து ஒத்துழைப்பு வழங்குமாறு தெரிவித்துள்ளதோடு, மிக மிக அத்தியாவசியமான தேவையுள்ளோர் மாத்திரம் தமக்கு அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு சென்று அதற்குரிய அனுமதியினைப் பெற்று தங்களுடைய செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும். அதனை தவிர்த்து வேறு எவரும் வீதிகளில் பயணிக்க அனுமதிக்கபட மாட்டார்கள். எனவே பொதுமக்கள் உணர்ந்து அரசின் ஊரடங்கு சட்டத்திற்கு வீட்டில் இருந்தவாறு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். - [சாய்ந்தமருது மூதாட்டி கொலை : சந்தேகநபர் சற்று முன் கைது](https://minnal24.com/%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%af%82%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%95%e0%af%8a/): -கல்முனை நிருபர்- அம்பாறை, சாய்ந்தமருதில் மூதாட்டி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தலைமறைவாக இருந்த சந்தேக நபர் இன்று கைது செய்யப்பட்டார். சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் எஸ்.எல். சம்சுதீன் தலைமையிலான பொலிஸாரினால் மட்டக்களப்பில் வைத்து குற்றவாளி கைது செய்யப்பட்டார். சாய்ந்தமருது புதுப்பள்ளி வீதியிலுள்ள வீடொன்றில் தனித்து வசித்து வந்த 83 வயதுடைய சுலைமான் செய்யது புஹாரி என்னும் மூதாட்டியை கொலை செய்து விட்டு தலைமறைவாகி இருந்த கொலை சந்தேக நபர் இன்று மட்டக்களப்பு விடுதி ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டார். மூதாட்டியிடம் இருந்த நகைகளை அபகரிக்கும் நோக்கில் இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்ட நிலையில் தலைமறைவாகி இருந்த சந்தேக நபரை பல நாள் தேடுதலின் பின்னர் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் எஸ்.எல். சம்சுதீன் தலைமையிலான பொலிஸார் சுற்றி வளைத்து கைது செய்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை […] - [மாணவர்களை பாடசாலைக்கு அழைப்பது தொடர்பான விசேட அறிவித்தல்](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%85%e0%ae%b4/): கல்வி அமைச்சு ஏப்ரல் 04 ஆம் திகதி முதல் 08 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் பரீட்சைகள் உட்பட அத்தியாவசிய நடவடிக்கைகளுக்காக மாத்திரம் மாணவர்களை பாடசாலைகளுக்கு அழைக்க அதிபர்களுக்கு கல்வி அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. பல மாகாணங்களின் தவணைப் பரீட்சைகள் நிறைவடைந்துள்ள நிலையில், இன்னும் சில தரப் பரீட்சைகள் மாத்திரமே நடைபெறவுள்ளமையினால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, பாடசாலைகளின் கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்களும் அதே காலப்பகுதியில் பாடசாலைகளுக்குச் சென்று எதிர்வரும் பரீட்சைகளுக்கான தயார்படுத்தலில் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.   - [நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுல்](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a4%e0%ae%b3%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%8a%e0%ae%b0%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%85%e0%ae%ae%e0%af%81%e0%ae%b2/): இன்று சனிக்கிழமை மாலை 6 மணி தொடக்கம் திங்கட்கிழமை காலை 6 மணி தொடக்கம் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. - [கல்வியமைச்சு விடுத்துள்ள விசேட அறிவித்தல்](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b3%e0%af%8d/): 2022 இல் அரச மற்றும் அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் நேரம் ஒரு மணித்தியாலத்தால் அதிகரிக்கப்பட்டு, 139 நாட்கள் பாடசாலை கற்றல் செயற்பாடுகள் இடம்பெற வேண்டுமென கல்வியமைச்சு அறிவித்துள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா வெளியிட்டுள்ள சுற்றுநிருபத்தில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சுற்றுநிருபம், அனைத்து கல்வி அதிகாரிகளுக்கும், அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கல்விப் பொதுதராதர உயர்தரப் பரீட்சை ஒக்டோபர் மாதமும், கல்விப் பொதுதராதர சாதாரணத்தரப் பரீட்சை 2023ஆம் ஆண்டு முற்பகுதியிலும் இடம்பெறுமென அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. - [இளைஞர் ஒருவர் மீது இளைஞர் குழு ஒன்று தாக்குதல்](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%b3%e0%af%88%e0%ae%9e%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a4%e0%af%81-%e0%ae%87%e0%ae%b3%e0%af%88%e0%ae%9e%e0%ae%b0/): -யாழ் நிருபர்- வவுனியா – செட்டிகுளம், அரசடிக்குளம் பகுதியில் இளைஞர் ஒருவர் மீது இளைஞர் குழு ஒன்று மேற்கொண்ட தாக்குதலில் ஒருவர் காயமடைந்து செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இளைஞர் ஒருவர் வெளியில் சென்று வீட்டுக்குத் திரும்பிய நேரத்தில் அங்கு வந்த இளைஞர் குழு ஒன்று குறித்த இளைஞர் மீது தாக்குதலை மேற்கொண்டுவிட்டு அங்கிருந்து சென்றது. காயமடைந்த இளைஞர் அவசர நோயாளர் காவு வண்டி மூலம் செட்டிகுளம் வைத்தியசாலைக்கு உறவினர்களால் அனுப்பி வைக்கப்பட்டதுடன், செட்டிகுளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் இச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். - [விவசாயிகள் 10% கழிவுகளின்றி தமது உற்பத்திகளை தாமே சந்தைகளுக்கு வழங்கலாம்](https://minnal24.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-10-%e0%ae%95%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1/): -யாழ் நிருபர்- விவசாயிகள் தமது உற்பத்தி பொருட்களை சந்தைகளில் வழங்கும்போது 10% கழிவுகள் வழங்கப்படுவதால் தாம் நஸ்டங்களை எதிர்கொள்வதாக விவசாயிகள் முன்வைத்த கோரிக்கைக்கு இணங்க, இது தொடர்பில் ஆராய யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதன்  கல்வியங்காடு பொதுச்சந்தைக்கு விஜயம் மேற்கொண்டார். இதன்போது, நல்லூர் பிரதேச சபை தவிசாளர், வருமான வரி பரிசோதகர், கமநல சேவைகள் அதிகாரிகள் உடனிருந்தனர். கல்வியங்காடு சந்தையில் இனிவரும் நாட்களில் விவசாயிகள் இடைத்தரகர்கள் இன்றியும், 10% கழிவுகளின்றியும் நேரடியாக தாமே உற்பத்தி பொருட்களை சந்தை வியாபாரிகளுக்கு வழங்க இணக்கம் காணப்பட்டது. மேலும் இதனை நடைமுறைப்படுத்துவதில் நல்லூர் பிரதேச சபை முழுமையான ஒத்துழைப்பு வழங்குமென நல்லூர் பிரதேச சபை தவிசாளர் உறுதியளித்தார். தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையில் விவசாயிகளுக்கு ஏற்படும் நஸ்டத்தை தடுக்கும் வகையில், கல்வியங்காடு பொதுச்சந்தையை போன்று ஏனைய பொதுச் சந்தைகளும் விவசாயிகளிடமிருந்து […] - [நாட்டில் அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்தி அரசு மீண்டும் தவறிழைத்துள்ளது](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2-%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/): -மன்னார் நிருபர்- நாட்டில் அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்தி இந்த அரசு மீண்டும் தவறிழைத்து உள்ளது என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். அவர் இன்று  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் அவசரகால சட்டம் ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. முப்படையினருக்கும் அதிகாரங்கள் வழங்கப்பட்டு ஜனநாயக ரீதியில் போராடுகின்ற மக்களை அடக்க ஒடுக்க இச்சட்டம் அமலுக்கு கொண்டு வரப் பட்டுள்ளது. இந்த அரசாங்கம் மேலும் மேலும் தவறிழைத்துக் கொண்டு இருக்கின்றது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உண்மையில் மக்களின் அன்றாட பிரச்சினை, மக்கள் அன்றாடம் எதிர்நோக்குகின்ற துன்பங்களை பிரதிபலிக்கும் வகையில் போராட்டங்களை முன்னெடுக்கின்றனர். இந்த நிலையில் அரசு மீண்டும் தவறிழைக்கின்றது. அவசர கால சட்டத்தை அமுல்படுத்தி மீண்டும் மக்களை அடக்க, ஒடுக்க நினைக்கின்ற முறையை கையாள நினைக்கின்ற செயல்பாட்டை ஜனாதிபதி செய்ய துணிகின்றார். அதை வன்மையாக கண்டிக்கின்றோம். அதனை முழுமையாக வாபஸ் பெற […] - [அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்தும் அமைச்சர்கள் நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%b4%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%aa/): -நுவரெலியா நிருபர்- நுவரெலியா வசந்த கால ஆரம்ப நிகழ்வுகள் வழமைபோல இன்று காலை 8.30 மணியளவில் நுவரெலியா கிரகறி வாவிக்கு அருகாமையில் அமைக்கப்பட்டிருந்த விசேட மேடைக்கு முன்பாக ஆரம்பமானது. நுவரெலியா மாநகர சபை முதல்வர் சந்தனலால் கருணாரத்ன தலைமையில் ஆரம்பமான நிகழ்வில் நுவரெலியா மாநகர சபை உறுப்பினர்கள் நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன் கலபட உட்பட பலரும் கலந்து கொண்டனர். நுவரெலியா மாநகர சபை முதல்வர் சந்தனலால் கருனாரத்ன தேசிய கொடியை ஏற்றி வைத்து நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார். ஒவ்வொருவருடமும் வசந்த கால நிகழ்வுகள் பாடசாலை மாணவர்களின் பேன்ட் வாத்திய அணிவகுப்புகளுடன் ஆரம்பமாவதைப் போன்றே இந்த வருட நிகழ்வுகளும் ஆரம்பமாகியது. இதே வேளை நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி எரிபொருளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக நுவரெலியா தனியார் போக்குவரத்து சங்கம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். தங்களுக்கு எரிபொருட்கள் கிடைக்கவில்லை எனவும் இ.போ.ச பேருந்துகளுக்கு மாத்திரம் எரி பொருட்கள் வழங்கப்படுவதை […] - [யாழில் ஆர்ப்பாட்டம்](https://minnal24.com/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d/): -யாழ் நிருபர்- நாடு முழுவதும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்று நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் யாழ்ப்பாணத்திலும் அரசுக்கு எதிரான போராட்டங்கள் வலுக்கின்றன. நாட்டின் பொருளாதார நெருக்கடி, எரிபொருள் பிரச்சினை என பல பிரச்சனைகளுக்கு தீர்வினை வேண்டி, கோட்டாபய அரசுக்கு எதிராக, புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியினர் இன்று யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகிறது. - [அம்பாறையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் எழுச்சி பேரணி](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af%80%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be-%e0%ae%ae%e0%af%81/): -கல்முனை நிருபர்- நாட்டின் இன்றைய சூழ்நிலையில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ளும் இலங்கையர்களின் பிரச்சினைகளை தீர்க்குமாறு வலியுறுத்தி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணி வெள்ளிக்கிழமை மாலை அம்பாறை மாவட்ட அட்டாளைச்சேனை மீனோடைக்கட்டு சந்தியில் இருந்து ஆரம்பித்து அட்டாளைச்சேனை நகரப்பகுதி வரை ஊர்வலமாக சென்றது. சுமார் பல்லாயிரக்கணக்கான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர்கள், உயர்பீட உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டு பல்வேறு கோஷங்களை எழுப்பியதுடன் பல்வேறு சுலோகங்களை தாங்கி சென்றதை காண முடிந்தது. மேலும் இப்போராட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான றவூப் ஹக்கீம் பிரதான பேச்சாளாராக கலந்து கொண்டு உரையாற்றினார். மேலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் விசேட பேச்சாளராக கலந்து கொண்டார். இந்த பேரணியில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச்செயலாளர் நிஸாம் காரியப்பர், முன்னாள் பாராளுமன்ற […] - [மிரிஹானையில் ஊடகவியலாளர்கள் கைது - முஸ்லிம் மீடியா போரம் கண்டனம்](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b9%e0%ae%be%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8a%e0%ae%9f%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0/): -எம். எஸ்.எம்.ஸாகிர்- மிரிஹானையில் கடந்த வியாழனன்று இரவு இடம்பெற்ற பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தின் போது செய்தி திரட்டுவதற்குச் சென்ற ஊடகவியலாளர்கள் சிலர் கைது செய்யப்பட்டும், தாக்கப்பட்டது குறித்தும் சிறிலங்கா முஸ்லிம் மீடியா போரம் பலத்த கண்டனத்தைத் தெரிவிக்கின்றது. இது தொடர்பாக முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவி புர்கான் பீ இப்திகார் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமது கடமையை நிறைவேற்றுவதற்குச் சென்ற ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டது மட்டுமன்றி, கைது செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஊடகக் கடமையை நிறைவேற்றச் சென்ற ஊடகவியலாளர்கள் தமது அடையாள அட்டைகளைக் காண்பித்தும் தாக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து பாரபட்சமற்ற முறையில் விசாரணைகள் நடாத்தி, எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம் பெறாது இருப்பதை உறுதிப்படுத்துமாறும், குறிப்பாக ஊடகவியலாளர்கள் இவ்வாறான கட்டங்களில் தமது கடமைகளைச் செய்வதற்கு போதிய பாதுகாப்பினை வழங்குமாறும் பொலிஸ் மா அதிபரையும், ஊடக அமைச்சரையும் நாம் கேட்டுக் கொள்கின்றோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. - [நீச்சல் தடாகத்தில் இருந்து ஆண் ஒருவர் சடலமாக மீட்பு](https://minnal24.com/%e0%ae%a8%e0%af%80%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%9f%e0%ae%be%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d/): -யாழ் நிருபர்- யாழ்ப்பாண நகர் பகுதியில் உள்ள பிரபல  தனியார் விடுதி ஒன்றின் நீச்சல் தடாகத்தில் இருந்து ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாண நகரைச் சேர்ந்த 6 பேர்  தனியார் விடுதியில், நேற்றிரவு தங்கியிருந்து இரவு 1.00 மணியின்  பின்னர் நீச்சல் தடாகத்தில்  நீராட சென்றிருந்தார்கள் என தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து, இன்று காலை விடுதி நிர்வாகத்தினர் குறித்த நபரை சடலமாக அவதானித்து யாழ்ப்பாண பொலிசாருக்கு அறிவித்திருந்த நிலையில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள். எனினும் உயிரிழந்தவருடன் மேலும் பலர் நீராடி இருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் கொலையா அல்லது இயற்கை இறப்பா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.   - [அவசரகால பிரகடனத்தை ஜனாதிபதி உடனடியாக மீளப் பெற வேண்டும்](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%95%e0%ae%9f%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf/): வசரகால பிரகடனத்தை ஜனாதிபதி உடனடியாக மீளப் பெற வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். ‘ அவசரகால பிரகடனத்தை ஜனாதிபதி உடனடியாக மீளப் பெற வேண்டும். அரசுக்கெதிரான எதிர்பினையும் போராட்டங்களையும் இதன் மூலம் அடக்க முடியாது. இந்த தவறான நடவடிக்கையை நிராகரிக்குமாறு எனது சக பாராளுமன்ற உறுப்பினர்களை கேட்டுக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று  (ஏப்ரல் 1) முதல் அமுலாகும் வகையில் நாட்டில் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தி விசேட வர்த்தமானி அறிவித்தலொன்றை வெளியிட்டிருந்தார். இந்நிலையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தனது டுவிட்டர் பக்கத்தில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். - [இனவாத கருத்துக்களை வெளியிடுவதால் நிலைமை மேலும் தீவிரமடையக் கூடும்](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af/): மிரிஹான பகுதியில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் இனவாத செயற்பாடோ அல்லது பயங்கரவாத செயற்பாடோ அல்ல. இவ்வாறு இனவாத கருத்துக்களை வெளியிடுவதால் நிலைமை மேலும் தீவிரமடையக் கூடும் என்பதால் , அவ்வாறான கருத்துக்களை வெளியிடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார். பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தீர்வினை வழங்குவதில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளமையினால் , அந்த பொறுப்பை பாராளுமன்றம் நிறைவேற்ற வேண்டும், அதற்காக கட்சி பேதமின்றி , தேசிய இணக்கப்பாட்டுடன் நாம் செயற்பட வேண்டியுள்ளது என்றும்   சுட்டிக்காட்டியுள்ளார். மிரிஹான சம்பவம் தொடர்பில் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது : பாதிக்கப்பட்டுள்ள மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் வழங்கப்படாமையின் காரணமாக நேற்று இரவு மிரிஹான பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தினால் அங்கு அமைதியற்ற நிலைமை ஏற்பட்டது இதன் மூலம் இதுவரையில் காணப்பட்ட பொருளாதார நெருக்கடிகள் அரசியல் நெருக்கடியாக மாற்றமடைந்தது. இந்த சம்பவமானது தற்போதைய அரசியல் நடைமுறையின் வீழ்ச்சியாக […] - [இன்றைய வானிலை - வளிமண்டவியல் திணைக்களம்](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%88%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b5%e0%ae%bf/): நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை, வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். காற்று : காங்கேசந்துறையிலிருந்து புத்தளம், கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன் நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றானது தென்கிழக்கு திசையிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. - [வந்தடைந்தது டீசல் தாங்கிய கப்பல்](https://minnal24.com/%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%9f%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9f%e0%af%80%e0%ae%9a%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf/): இந்திய கடன் வசதியின் கீழ், 40,000 மெட்ரிக் டன் அளவிலான டீசல் தாங்கிய கப்பலொன்று இன்று சனிக்கிழமை நாட்டை வந்தடைந்துள்ளது. அதற்கமைய இன்று மாலை எரிபொருள் தரையிறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படுமென, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் - [இன்றைய மின்தடை](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%88%e0%ae%af-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a4%e0%ae%9f%e0%af%88/): நாட்டில் இன்றைய தினம் 8 மணித்தியாலமும் 30 நிமிடமும் மின்தடை அமுலாக்கப்படவுள்ளது. இது தொடர்பில் இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு, பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. - [மிரிஹான சம்பவத்தில் கைதான 22 பேருக்கு பிணை](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b9%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%88%e0%ae%a4/): நுகேகொடை – மிரிஹானை பகுதியில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 22 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்களை கங்கொடவில நீதிவான் முன் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அடையாள அணிவகுப்பில் நிறுத்தப்படவுள்ள 6 பேரும் எதிர்வரும் திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். - [அதிபருடன் தகராறில் ஈடுபட்ட மூவர் கைது](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%95%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%88%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f/): வட்டுக்கோட்டை-அராலி சரஸ்வதி வித்தியாலயத்தின் அதிபருடன் தகராறில் ஈடுபட்ட மூவர் வட்டுக்கோட்டை பொலிஸாரால் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நெல்லியடியைச் சேர்ந்த ஒருவர் வட்டுக்கோட்டையில் உள்ள அவரது உறவினர் வீட்டில் கடந்த சில நாட்களாக வசித்து வருகின்றார். அந்த நபரும் வட்டுக்கோட்டையை சேர்ந்த இருவருமென மொத்தமாக மூவர் குறித்த பாடசாலையின் மதில் பாய்ந்து உள்ளே சென்று அதிபருடன் தகராறில் ஈடுபட்டனர். இதனை அறிந்த பழைய மாணவர்கள் அவ்விடத்திற்கு வந்தவேளை இருவர் தப்பிச் சென்ற நிலையில் ஒருவர் பழைய மாணவர்களால் மடக்கி பிடிக்கப்பட்டார். இவ்வாறு மடக்கி பிடிக்கப்பட்ட நபர் நையப்புடைக்கப்பட்ட பின்னர் வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். குறித்த சந்தேக நபரிடம் மேற்கொண்ட விசாரணையின் பிரகாரம் நேற்று மாலை மற்றைய சந்தேக நபர்கள் இருவரையும் அதிரடியாக கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களிடமும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். - [ஊரடங்கு தளர்த்தப்பட்டது](https://minnal24.com/%e0%ae%8a%e0%ae%b0%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a4%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%81/): மேல் மாகாணத்திற்கு உடன் அமுலாகும் வகையில் நேற்று  நள்ளிரவு முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. எனினும் காலை 6.00 மணிக்கு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதாக சிரேஷ்ட பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். - [அவசரகால நிலை உடன் அமுலாகும் வகையில் பிரகடனம்](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%89%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%ae%e0%af%81%e0%ae%b2%e0%ae%be%e0%ae%95/): இன்று வெள்ளிக்கிழமை (1-4-2022)  முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கையில் அவசரநிலையை பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார். நாட்டில் நிலவும் நிலைமை மற்றும் பொது பாதுகாப்பு, பொது ஒழுங்கைப் பாதுகாத்தல் மற்றும் சமூகத்தின் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான விநியோகங்கள் மற்றும் சேவைகளைப் பேணுதல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. சட்டத்தின் மூலம் திருத்தப்பட்ட பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் (அத்தியாயம் 40) 2 வது பிரிவின் கீழ் அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் கீழ் ஜனாதிபதி கோட்டாபய வர்த்தமானியை வெளியிட்டுள்ளார்.   - [பேருவளை பகுதியில் வீதிக்கிறங்கிய மக்கள்](https://minnal24.com/%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%b3%e0%af%88-%e0%ae%aa%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d/): பேருவளை பகுதியிலும் தற்போது ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எரிபொருள் மற்றும் எரிவாயு நெருக்கடிக்கு தீர்வு கோரியும், மின் தடைக்கு தீர்வு கோரியும் பொதுமக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இதன் காரணமாக பேருவளை நகரில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. அத்துடன், ஆர்ப்பாட்டம் காரணமாக ஒரு வழிப் போக்குவரத்தாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. - [115வது நட்புறவு வெற்றிக்கிண்ண துடுப்பாட்ட போட்டி](https://minnal24.com/115%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a8%e0%ae%9f%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf/): -யாழ் நிருபர்- வடக்கின் போர் என அழைக்கப்படும் இரு பிரபல கல்லூரிகளுக்கிடையில்  நடாத்தப்படும் துடுப்பாட்ட போட்டி தொடர்பான ஊடக சந்திப்பு நேற்று யாழ். மத்திய கல்லூரியின் பிரதான மண்டவத்தில், யாழ். மத்திய கல்லூரியின் அதிபர் எஸ்.கே. எழில்வேந்தன் மற்றும் யாழ். சென்  ஜோன்ஸ் பரிவோன் கல்லூரி அதிபர் பி.துஸ்சிதரன் ஆகியோரினால் நடாத்தப்பட்டது. அந்தவகையில் 115 ஆவது ஆண்டின் துடுப்பாட்ட போட்டிகள் எதிர்வரும் 07,08,09 திகதிகளிலே மத்திய கல்லூரி பிரதான விளையாட்டு அரங்கில் நடாத்துவதற்கு சகல ஒழுங்குகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கல்லூரியின் இரு அதிபர்களும் தெரிவித்துள்ளனர். மாணவர்களுக்கிடையில் நட்புறவு நல்லெண்ணக்கிண்ணத்தினை வலுப்படுத்தும் வகையில் இவ் துடுப்பாட்ட போட்டிகள் கடந்த காலங்களில் இடம்பெற்றது. ஆனால் கடந்த ஒரு கொரோனா இடர் காரணமாக வருடம் இப்போட்டிகளை நடாத்த முடியவில்லை. இந்த 115வது நட்புறவு வெற்றிக்கிண்ண துடுப்பாட்ட போட்டிக்கு இருகல்லூரி அதிபர்கள், மாணவர்கள், விளையாட்டினை பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் எனப்பலரும் இதற்கு அனுசரணை வழங்குவர்கள் என அதிபர்கள் தெரிவித்தனர். - [கைது செய்யப்பட்ட 53 பேரும் நீதிமன்றில் ஆஜர்](https://minnal24.com/%e0%ae%95%e0%af%88%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%af%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-53-%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/): நுகேகொடை – மிரிஹான, பிங்கிரிவத்த பகுதியில் நேற்றிரவு எதிர்ப்பில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 53 பேரும் கங்கொடவில நீதவான் நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாலை ஆஜர்படுத்தப்பட்டனர். இரண்டு பஸ்களில் அவர்கள் நுகேகொடை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட சந்தர்ப்பத்தில், நீதிமன்ற வளாகத்தில் குழுமியிருந்தவர்கள் சந்தேகநபர்களை கை தட்டி வரவேற்றனர். இந்த சம்பவம் தொடர்பில் மிரிஹான பொலிஸார், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு, மேல் மாகாண குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. - [பேருந்துகளுக்கு எரிபொருளை நிரப்ப காத்திருக்கும் சாரதிகள்](https://minnal24.com/%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81/): -யாழ் நிருபர்- பேருந்துகளுக்கு எரிபொருளை நிரப்புவதற்காக யாழ். தனியார் சிற்றூர்தி பேருந்து சேவை சாரதிகள் இன்று கோண்டாவிலில் உள்ள டிப்போவில் நீண்ட நேரம் காத்திருந்தனர். அங்கிருந்த சாரதிகள் கருத்து தெரிவிக்கையில், நாங்கள் எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக இன்று அதிகாலையில் இருந்து இங்கு காத்திருக்கின்றோம். இதனால் நாங்கள் கடமையில் ஈடுபடமுடியாத துர்ப்பாக்கிய நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளோம். இதனால் பாதிக்கப்படுவது நாங்கள் மட்டுமல்ல. வேலைகளுக்கு செல்பவர்கள், மாணவர்கள், நோயாளிகள் மற்றும் ஏனையோர் என பலர் பேருந்துகளில் தான் செல்கின்றார்கள். எமது இந்த சேவையானது தடைப்பட்டதால் அவர்கள் பல இன்னல்களை எதிர்நோக்குகின்றனர். அவர்களது வாழ்வாதாரமும் எங்களது வாழ்வாதாரமும் இதனால் பாதிக்கப்படுகின்றது. வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்தும் எமக்கு மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருளே வழங்கப்படுகின்றது. எமக்கு வழமைபோல் எரிபொருளை வழங்கினால் நாங்கள் எமது சேவையை வழமைபோல் திறம்படச் செய்வோம். எனவே உரியவர்கள் எங்கள் அனைவரது நிலையையும் கருத்தில் கொண்டு இதற்கு உடனடியாக தீர்வு வழங்க வேண்டும் – என்றனர்  - [நுவரெலியா வசந்த கால ஆரம்ப நிகழ்வுகள் இடைநிறுத்தம்](https://minnal24.com/%e0%ae%a8%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%86%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2-%e0%ae%86%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/): நுவரெலியா வசந்த கால ஆரம்ப நிகழ்வுகள் குழப்பத்திற்கு மத்தியில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றன. நுவரெலியா வசந்த கால ஆரம்ப நிகழ்வுகள் இன்று வெள்ளிக்கிழமை நுவரெலியா கிரகறி வாவிக்கு அருகாமையில் அமைக்கப்பட்டிருந்த விசேட மேடைக்கு முன்பாக ஆரம்பமானது. நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி எரிபொருளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக நுவரெலியா தனியார் போக்குவரத்து சங்கம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். தங்களுக்கு எரிபொருட்கள் கிடைக்கவில்லை எனவும் இ.போ.ச பேருந்துகளுக்கு மாத்திரம் எரிபொருட்கள் வழங்கப்படுவதை ஆட்சேபனை செய்துமே தனியார் பேருந்து உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் நாட்டின் பொருளாதார நிலைமை மோசமாக இருக்கின்ற இந்த நிலைமையில் வசந்த கால நிகழ்வுகளை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடனும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என்று கோசமிட்டவாறு வசந்த கால ஆரம்ப நிகழ்வுகள் இடம்பெற்ற இடத்தை முற்றுகையிட்டனர். இதன் காரணமாக வசந்த கால ஆரம்ப நிகழ்வுளை தொடர்ந்தும் முன்னெடுக்க முடியாத நிலைமை காரணமாக […] - [அலரிமாளிகையில் விஷேட கூட்டம்](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%b2%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5/): ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் விசேட கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் அலரி மாளிகையில் தற்போது இடம்பெற்று வருகிறது. மிரிஹானயில் நேற்றிரவு ஏற்பட்ட சம்பவம் மற்றும் அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சந்திப்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. எவ்வாறாயினும், இந்த கூட்டத்தை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி புறக்கணித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், தற்போது ஸ்ரீ லங்கா சுதந்திக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் அதன் தலைவர் மைத்ரிபால சிறிசேன தலைமையில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்று வருகிறது. - [7 நாட்களாக நங்கூரமிட்டுள்ள டீசல் கப்பல்](https://minnal24.com/7-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%be%e0%ae%95-%e0%ae%a8%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%82%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%b3/): 37,500 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிய மற்றுமொரு கப்பல் நாளை சனிக்கிழமை நாட்டை வந்தடையவுள்ளதாக எரிசக்தி அமைச்சு குறிப்பிட்டது. இந்திய கடன் வசதியின் கீழ், டீசலுடனான குறித்த கப்பல் நாட்டிற்கு வருகை தரவுள்ளது. எவ்வாறாயினும், 37,500 மெட்ரிக் தொன் டீசலுடன் நாட்டை வந்தடைந்துள்ள சிங்கப்பூரின் விடோல் நிறுவனத்திற்கு சொந்தமான கப்பலுக்கு செலுத்த வேண்டிய 52 மில்லியன் டொலர் நேற்று மாலை வரை செலுத்தப்பட்டிருக்கவில்லை. இன்றுடன் 7 நாட்களாக அந்த கப்பல் சர்வதேச கடற்பிராந்தியத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளது. இதனிடையே, இலங்கை- இந்திய ஒயில் நிறுவனம் 6000 மெட்ரிக் தொன் டீசலை மின்னுற்பத்தி நடவடிக்கைகளுக்கு பெற்றுக்கொடுக்க நேற்று இணக்கம் தெரிவித்தது. திருகோணமலையிலுள்ள லங்கா IOC களஞ்சியசாலையிலிருந்து இந்த டீசல் தொகை பெற்றுக்கொள்ளப்படவுள்ளது. - [மின்வெட்டுக்கான காரணத்தை அறிவித்தார் பவித்ரா](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b5%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/): நாட்டில் மின்சாரத்துக்கான கேள்வி அதிகரித்து உற்பத்தி குறைவடைந்துள்ளமையே மின் துண்டிப்புக்கான பிரதான காரணமென மின்சக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்தார். தற்போதைய நீண்டநேர மின் துண்டிப்பு தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், இந்திய கடன் உதவித் திட்டத்தின் கீழ் எதிர்வரும் 02 ஆம் திகதி தேவையான டீசல் கிடைக்கவுள்ளதாகவும் அதனையடுத்து தற்போதைய மின் துண்டிப்பு நடவடிக்கைகளில் சில மணித்தியாலங்களை குறைப்பதற்கு வாய்ப்பு ஏற்படும் . போதியளவு எரிபொருள் கிடைத்தவுடன் மின் துண்டிப்பின் நேரத்தை கணிசமானளவு குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மின்சாரத்துக்கான கேள்வி வெகுவாக அதிகரித்துள்ளதுடன் பொதுமக்கள் மின்சாரத்தை சிக்கனமாக பாவித்து தற்போதைய நெருக்கடி நிலையில் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டுமென்றும் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். டொலர் தட்டுப்பாடு காரணமாகவே மின் உற்பத்திக்கான டீசலைப் பெற்றுக்கொள்வதில் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. அதேவேளை, நீர் மின் உற்பத்திக்காக உபயோகப்படுத்தப்படும் நீர்த் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. நூற்றுக்கு 50 வீதமான மின்னுற்பத்தி நீர் மின் திட்டத்தின் மூலம் […] - [தச்சுத் தொழில்துறையினர் மொரட்டுவையில் ஆர்ப்பாட்டம்](https://minnal24.com/%e0%ae%a4%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%b0%e0%af%8d/): மொரட்டுவை சிலுவை சந்தியில் தச்சுத் தொழில்துறையில் ஈடுபடும் நபர்களால் ஆர்ப்பாட்ட பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக காலி வீதியின் காலி நோக்கி செல்லும் ஒழுங்கையில் போக்குவரத்து தடங்கலாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மின்வெட்டு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தமது தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து மொரட்டுவையில் தச்சுத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்கள் தொழிலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து அவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது, மொரட்டுவை மாநகரசபையை ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. - [பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அடிப்படை உரிமை மனு தாக்கல்](https://minnal24.com/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a3%e0%af%88%e0%ae%95-2/): நிதி அமைச்சு, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு, நாணயச் சபை, மத்திய வங்கியின் ஆளுநர், மின்சார சபை மற்றும் அரசாங்க நிறுவனங்களின் அனைத்து பங்குதாரர்களுக்கு எதிராக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்துள்ளது. தற்போதைய நெருக்கடிகளை தவிர்ப்பதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவானது 2016ஆம் ஆண்டு முதல் பலமுறை கடிதங்களை அனுப்பிவைத்துள்ள போதிலும் அது தொடர்பில் எவ்வித நிறுவனங்களும் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. அதுவே தற்போதைய நெருக்கடிக்கான முக்கிய காரணமாக அமைந்துள்ளது என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மின்சாரம் துண்டிக்கப்படுவதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதனை தவிர்ப்பதற்கு எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு 200 மில்லியன் டொலர்களை ஒதுக்குமாறு நிதி அமைச்சர், திறைசேரி செயலாளர் மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் ஆகியோருக்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கோரியுள்ளது. மேலும் மின்சார உற்பத்தியை துரிதப்படுத்தவும், எரிபொருளை வழங்கவும் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு […] - [நாளை எட்டரை மணிநேர மின்வெட்டு](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%88-%e0%ae%8e%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%af%88/): மின்துண்டிப்பை நாளை சனிக்கிழமை மேற்கொள்வதற்காக இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட கோாிக்கையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அங்கீகரித்துள்ளது. அதற்கமைய, நாளைய தினம் 8 மணித்தியாலங்களும், 30 நிமிடங்களுக்கும் மின்துண்டிப்பை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மின்துண்டிப்பு தொடர்பான அட்டவணை - [மொரட்டுவை மேயர் வீட்டின் மீது முட்டைவீச்சு](https://minnal24.com/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%b5%e0%af%88-%e0%ae%ae%e0%af%87%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d/): மொரட்டுவை மேயர் சமன்லால் பெர்னாண்டோவின் வீட்டின் மீது போராட்டக்காரர்களால் கற்கள் வீசப்பட்டன எனினும், பொலிஸார் தலையிட்டு,  நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். இந்நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரான  எம்.சாமர சம்பத் தசநாயக்க சென்ற வாகனம் மீது முட்டைவீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பதுளை மாவட்ட எம்.பியான இவர்.  வெல்லவாயவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த  நிகழ்வொன்றில் கலந்துகொள்ள சென்றபோது முட்டைவீச்சி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. - [இரண்டாவது நாளாகவும் தொடரும் உண்ணாவிரத போராட்டம்](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%ae%be%e0%ae%95%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f-2/): குடும்ப நல சுகாதார உத்தியோகத்தர்கள் 12 பேரால் ஆரம்பிக்கப்பட்ட சாகும் வரையான உண்ணாவிரத போராட்டம் இன்று வெள்ளிக்கிழமை இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது. சுகாதார அமைச்சுக்கு முன்பாக இந்த சாகும் வரையான உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. குடும்ப நல சுகாதார சேவைக்கான விசேட தரத்தை நீக்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக குடும்ப நல சுகாதார உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவி தேவிகா கொடித்துவக்கு குறிப்பிட்டார். உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். தங்களின் ஊழியர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், சுகாதார அமைச்சின் செயலாளரும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் அதற்கு பொறுப்புக்கூற வேண்டும் என குடும்ப நல சுகாதார உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவி தேவிகா கொடித்துவக்கு சுட்டிக்காட்டினார். பதவி உயர்வை பெற்றுக்கொள்ள உண்ணாவிரதத்தில் ஈடுபட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தாம் தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். - [பங்குச் சந்தைக்கு பூட்டு](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%aa%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81/): கொழும்பு பங்குச் சந்தை இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 11.33 மணியளவில் மூடப்பட்டது. S&P SL20 சுட்டெண் முந்தைய நாளை விட 10%க்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்ததே இதற்குக் காரணமாகும். இன்றைய பங்குச் சந்தை நிறைவில் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 552.18 புள்ளிகளாலும், S&P SL20 சுட்டெண் 314.96 புள்ளிகளாலும் வீழ்ச்சியடைந்திருந்தன. இதன்படி, அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 8,351.69 புள்ளிகளாகவும், S&P SL20 சுட்டெண் 2,716.20 புள்ளிகளாகவும் காணப்பட்டன. - [மிரிஹானைக்கு மஹிந்த மற்றும் நாமல் விஜயம்](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b9%e0%ae%be%e0%ae%a9%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%ae%b9%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b2/): பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஆகிய இருவரும், மிரிஹானைக்கு களவிஜயம் மேற்கொண்டு நிலைமையை ஆராய்ந்து வருகின்றனர். மிரிஹானவில் உள்ள ஜனாதிபதியின் தனிப்பட்ட வாசஸ்தலத்துக்கு முன்பாக, நேற்றிரவு கடுமையான பதற்றம் நிலவியது. ஆர்ப்பாட்டக்கார்களுக்கும் பாதுகாப்பு தரப்பினருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது. ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்கள், கையில் கிடைத்தவற்றைக் கொண்டு தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு தரப்பினர், தண்ணீர் பீச்சியடித்து ஆர்ப்பாட்டக்காரர்களை விரட்ட முயற்சி செய்தனர். அதன்பின்னர், குண்டாந்தடி பிரயோகம் மேற்கொண்டனர். இறப்பர் குண்டுகளால் சுட்டனர். இதில், பலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். வாகனங்கள் பலவற்றுக்கும் சேதங்கள் ஏற்படுத்தப்பட்டன. பஸ்ஸொன்று தீக்கிரையாக்கப்பட்டது. - [காபந்து அரசாங்கம் அமையுமா?](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%aa%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae/): காபந்து அரசாங்கமொன்றை அமைக்குமாறு ஆளுந்தரப்பைச் சேர்ந்த 11 கட்சிகளின் கூட்டமைப்பினால் ஜனாதிபதியிடம் கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. தற்போதைய அமைச்சரவையை கலைத்து, அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய காபந்து அரசாங்கமொன்றை அமைக்குமாறு குறித்த கூட்டமைப்பு கட்சிகளின் பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் கோாிக்கையொன்றை முன்வைத்துள்ளனர். - [34 பேருக்காக வாதாட இறங்கிய 300 சட்டத்தரணிகள்](https://minnal24.com/34-%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9f-%e0%ae%87%e0%ae%b1%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-300/): மிரிஹான போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்காக, 300 சட்டத்தரணிகள், மிரிஹான பொலிஸில் ஆஜராகியிருந்தனர். எவ்விதமான கட்டணங்களும் இன்றி, சுய விருப்பத்தின் பேரில், சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. பொலிஸ் விசாரணைக்குப் பின்னர், சந்தேகநபர்கள் அனைவரும் பஸ்ஸில் ஏற்றப்பட்டு, நுககேகொடை நீதவான் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். சந்தேகத்தின் பேரில் 34 பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது - [ஏப்ரல் 3ஆம் திகதி ஊரடங்கா?](https://minnal24.com/%e0%ae%8f%e0%ae%aa%e0%af%8d%e0%ae%b0%e0%ae%b2%e0%af%8d-3%e0%ae%86%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%8a%e0%ae%b0%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be/): எதிர்வரும் 3ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளரான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். - [சபாநாயகர் குழுவை சிறப்பாக நடாத்த ஆலோசனை வழங்கிய சாணக்கியன்](https://minnal24.com/%e0%ae%9a%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a8%e0%ae%be%e0%ae%af%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%af%81%e0%ae%b5%e0%af%88-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be/): சபாநாயகர் குழுவிலுள்ளவர்கள் கட்சி சார்ந்து சிந்திக்காமல், நீதியின் பக்கம் நின்று செயற்படுபவர்களாக இருக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஆலோசனை வழங்கியுள்ளார். சபாநாயகர் குழுவிலுள்ள 12 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமான இரண்டு நாள் செயலமர்வு கொழும்பில் இடம்பெற்றது. பிரித்தானிய பாராளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களினால் இந்த செயலமர்வு முன்னெடுக்கப்பட்டிருந்தமை விசேட அம்சமாகும். இந்தநிலையில் குறித்த செயலமர்வில் பங்கேற்றிருந்த போதே நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இவ்வாறான ஆலோசனைகளை வழங்கியுள்ளார். சபாநாயகர் இல்லாத சந்தர்ப்பங்களில் அவரது ஆசனத்தில் இருப்போர், தாங்கள் அங்கம் வகிக்கும் கட்சி சார்ந்து சிந்திப்பவர்களாக இருக்கக் கூடாது எனவும் சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார். - [ஐ.ம.சக்தியினரின் போராட்டத்தில் குழப்பம் : அரசதரப்பு ஆதரவாளர் மீது தாக்குதல்](https://minnal24.com/%e0%ae%90-%e0%ae%ae-%e0%ae%9a%e0%ae%95%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f/): நாடு பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் பல இடங்களில் வலுவடைந்து வருகின்றன. இந்நிலையில் இன்று பருத்தித்துறை தொடக்கம் தெய்வேந்திரமுனை நோக்கிய பேரணி” என்ற தொனிப்பொருளில் ஐக்கிய பெண்கள் சக்தியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக இன்று காலை கச்சேரியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிய இந்த பேரணி செல்கின்றது. இன்றைய பேரணி யாழ் மாவட்ட செயலகத்தில் இருந்து யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தை வந்தடைந்த இறுதி நேரத்தில் அங்கு ஐனாதிபதிக்கு ஆதரவாக ஒரு ஒரு குழு செயற்படவே அங்கு முறுகல் நிலை உருவானது. முறுகல் நிலை ஏற்பட்டதுடன் கைகலப்பும் உருவானது. இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட ஐக்கிய மக்கள் கட்சியினர் தொடர்ந்தும் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பிக் கொண்டிருந்ததுடன் அரசுக்கு ஆதரவாக வந்த அருண்சித்தார்த் குழப்பவாதிகளுக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர். இதன்போது போராட்டத்தில் குழப்பத்தில் ஈடுபட்டவர்களை பொலிஸார் அங்கிருந்து பாதுகாப்பாக முச்சக்கர வண்டியில் அனுப்புவதற்கு முயற்சித்த வேளை […] - [இலங்கையின் கடன் கோரிக்கை தொடர்பில் எதிர்வரும் நாட்களில் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளது - சர்வதேச நாணய நிதியம்](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88/): சர்வதேச நாணய நிதியம், இலங்கை அதிகாரிகளுடன் சாத்தியமான கடன் திட்டம் குறித்து எதிர்வரும் நாட்களில் கலந்துரையாடல்களை ஆரம்பிக்கும் என சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் ஜெரி ரைஸ் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார் என ராய்ட்டர்ஸ் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வசந்த காலக் கூட்டங்களுக்கு இலங்கை நிதியமைச்சர் பசில் ராஜபக்ச வாஷிங்டனில் விஜயம் செய்யும் போது கலந்துரையாடல்கள் தொடரும் என்று ரைஸ் தெரிவித்துள்ளார். ஜனவரி 2020 முதல் அந்நிய செலாவணி கையிருப்பில் 70 வீத வீழ்ச்சியை அடுத்து இலங்கை உணவு மற்றும் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய இறக்குமதிகளுக்கு பணம் செலுத்த முடியாமல் திணறுகிறது என்று ராய்ட்டர்ஸ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அதிகாரிகள் ஐஎம்எப் ஆதரவு நிதி திட்டத்தில் ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளனர், என்று ரைஸ்  ஐஎம்எப் மாநாட்டில் தெரிவித்துள்ளார். இலங்கை அதிகாரிகளுடன் அந்த நிகழ்ச்சித் திட்ட விவாதங்களை வரும் நாட்களில் தொடங்க திட்டமிட்டுள்ளோம் எனவும் […] - [தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை](https://minnal24.com/%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%89%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88%e0%ae%af-2/): இன்று தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படுவது குறைவடையக்கூடும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போதைய டீசல் தட்டுப்பாடு காரணமாக, 15 சதவீதமான தனியார் பேருந்துகளே நேற்று சேவையில் ஈடுபட்டதாக அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார். இந்த நிலையில்,டீசல் இன்மையால், இந்த நிலைமை இன்று மேலும் வீழ்ச்சியடையக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 10 முதல் 15 சதவீதமளவில் இன்று பேருந்துகள் சேவையில் ஈடுபடும். வரிசைகளில் காத்திருந்து பேருந்துகளுக்கு நிரப்பிய டீசல் இன்றுடன் தீர்ந்து போகும். எனவே, டீசலைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடயத்துடன் தொடர்புடைய அமைச்சரிடம் கோரியுள்ளாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார். - [கடலட்டை பண்ணைகள் அனைத்தும் விதிமுறைகளுக்கு அமைவாக இருக்க வேண்டும்](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%aa%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a9%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81/): -யாழ் நிருபர்- வடக்கு மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள கடலட்டை பண்ணைகள் அனைத்தும் விதிமுறைகளுக்கு அமைவாக ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கடற்றொழில் அமைச்சரின் யாழ். அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற விசேட கலந்துரையாடலிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்இ வேகமாக அதிகரித்து வருகின்ற கடலட்டைப் பண்ணைகளுக்குத் தேவையான கடலட்டை குஞ்சுகளை பெற்றுக் கொள்வதில் நடைமுறைச் சிக்கல்கள் ஏற்பட்டுள்ள நிலையில்இ நாட்டின் தற்போயை நிலைவரங்களையும், நாட்டிற்கு தேவையான அவசர ஏற்றுமதி வருமானங்களையும் கருத்தில் கொண்டு, தற்காலிகமாக கடலில் இருந்து பெற்றுக்கொள்வதற்கு விதிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் எனவும், அதனடிப்படையில் கடலட்டை குஞ்சுகளை உடனடியாகப் பெற்றுக் கொள்ளுகின்ற அதேவேளைஇ நீடித்து நிலைத்த கடலட்டை வளர்ப்பிற்கு தேவையான கடலட்டை குஞ்சு பொரிக்கும் நிலையங்களை உடனடியாக விஸ்தரிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். வடக்கு மாகாணத்தினை சேர்ந்த மாவட்டங்களின் கடற்றொழில் திணைக்களம், நக்டா எனப்படும் தேசிய நீரியல்வள அபிவிருத்தி அதிகாரசபையின் ஆகியவற்றின் அதிகாரிகளும் கடலட்டைப் […] - [கொழும்பில் இராணுவத்தினரின் கொடூர தாக்குதலுக்கு கண்டனம்](https://minnal24.com/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a3%e0%af%81%e0%ae%b5%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%b0/): -யாழ் நிருபர்- நேற்று ஜனாதிபதியின் இல்லத்திற்கு முன்னால் மக்கள் ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது போராட்டக்காரர்களும் ஊடகவியலாளர்களும் இராணுவம் மற்றும் பொலிஸாரால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இதற்கு வன்மையான கண்டனங்களை தெரிவிப்பதாக வலி. தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் அந்தோனிப்பிள்ளை ஜெபனேசன் தெரிவித்தார். இன்று பிரதேச சபையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், மக்கள், நாட்டில் பொருட்களின் விலையேற்றம், எரிபொருள் பிரச்சினை, பஞ்சம் போன்ற பிரச்சினைகளுக்கு எதிராக நேற்றிரவு ஜனாதிபதியின் வீட்டிற்கு முன்பாக ஜனநாயக ரீதியில் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். இதன்போது மக்களும் ஊடகவியலாளர்களும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவமாது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது. ஆசியாவின் ஆச்சரியமாக மாற்றுவதாக கூறிக்கொண்டு நாட்டினை வங்குரோத்து நிலைக்குள் தள்ளியுள்ளது இந்த அரசு. எனவே அரசு தமது பதவிகளை விட்டு விலகி ஆட்சியை மக்களிடம் கையளிக்க வேண்டும் என்றார். - [ஐரோப்பிய நாடுகளிலும் எரிவாயு தட்டுப்பாடு](https://minnal24.com/%e0%ae%90%e0%ae%b0%e0%af%8b%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf/): ஜெர்மனி சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு நிலவும் என அறிவித்து சில மணித்தியாலங்களில் ஆஸ்திரிய அரசாங்கம் ஒரு எச்சரிக்கையை அறிவித்துள்ளது. ரஷ்யா – உக்ரைன் மோதலைத் தொடர்ந்து மேற்கத்திய பொருளாதாரத் தடைகள் காரணமாக, டொலர்கள் அல்லது யூரோக்களுக்குப் பதிலாக ரூபிள்களில் பணம் செலுத்த ரஷ்யா வலியுறுத்தினால் நிலமை மேலும் மோசமடையும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய டுடே இணையதள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை என்பது “எரிவாயு விநியோகம் மோசமடையக்கூடும் என்பதற்கான அடித்தளம் மற்றும் நம்பகமான அறிகுறிகள் உள்ளன” என்று ஆஸ்திரியாவின் காலநிலை அமைச்சகம் அறிவித்தது , நாட்டின் கையிருப்பு தற்போது 13 சதவீத திறனில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. “ஆஸ்திரியாவின் வீடுகள் மற்றும் வணிகங்களுக்கான எரிவாயு விநியோகத்தை உறுதிப்படுத்த அனைத்தும் செய்யப்படும்” என்று அதிபர் கார்ல் நெஹாம்மர் கடந்த புதன்கிழமை தெரிவித்தார். இடையூறுகள் ஏற்பட்டால், வணிக நிலையங்கள் மாற்று வழிகளைத் தேட ஊக்குவிக்கப்படும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவுடன் “நட்பற்ற நாடுகள்” ரூபிள்களில் […] - [சீமெந்து பொதிகளின் விலை அதிகாிப்பு](https://minnal24.com/%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88/): உள்ளூரில் உற்பத்திசெய்யப்படும் மற்றும் இறக்குமதியாகும் சீமெந்து பொதிகளின் விலை அதிகாிக்கப்பட்டுள்ளதாக விற்பனை முகவர்கள் தெரிவித்துள்ளனர். அதற்கமைய, 50 கிலோகிராம்  சீமெந்து பொதியொன்றின் விலை 500 ரூபாவினால் அதிகாிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 1,850 ரூபாவாக காணப்பட்ட 50 கிலோகிராம் சீமெந்து பொதியின் விலை 2, 350 ரூபாவாக அதிகாித்துள்ளது. அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி மற்றும் மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு என்பன, இந்த விலை உயர்வுக்கு காரணமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. - [பதுக்கல் மாபியாக்களை தடுக்குமாறு மக்கள் விசனம்](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%a4%e0%ae%9f%e0%af%81/): -வாழைச்சேனை நிருபர்- மட்டக்களப்பு ஓட்டமாவடி அமிர் அலி விளையாட்டு மைதானம் மற்றும் வாழைச்சேனை பெற்றோல் நிலைய சந்திப் பகுதிகளில் எரிவாயுவிற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெற்றுக்கொண்டாலும் சிலர் தமக்குரிய எரிவாயு சிலிண்டர் கிடைக்காமையினால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கும் நிலமையினை இல்லாமல் செய்து மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு ஏற்றவாறு எரிவாயு சிலிண்டர்களை தேவையை பூர்த்தி செய்யும் நடவடிக்கையினை அரசு மேற்கொண்டாலும் சில வர்த்தகர்கள் எரிவாயுக்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாகவும் இதனால் தாம் பெரும் நெருக்கடிக்குள்ளாவதாகவும் பொதுமக்கள் கடும் விசனம் தெரிவிக்கின்றனர். எரிவாயுவிற்காக காத்திருக்கும் மக்கள் எரிவாயு முகவர்களினால் டோக்கன் வழங்கி வழங்கப்பட்ட டோக்கனுக்கு எரிவாயுக்களை விநியோகித்து வருக்கின்றனர். பொதுமக்கள் நீண்ட வரிசையில் நிற்கும்போது சில வர்த்தகர்கள் தங்களது உதவியாளர்களைக் கொண்டு வெற்றுச் சிலிண்டர்களை கொடுத்து முறையற்ற ரீதியில் எரி வாயுக்களை பெற்று பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். […] - [மக்கள் கிளர்ச்சியை அடிப்படைவாதத்தின் பால் திருப்ப வேண்டாம் - இம்ரான்](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%85%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d/): -கல்முனை நிருபர்- மக்கள் கிளர்ச்சியை அடிப்படைவாதத்தின் பெயரை கொண்டு அடக்க அரசாங்கம் முயற்சிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார். மிரிகானையில் வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற போராட்டத்தின் பின்னால் அடிப்படைவாதிகள் இருப்பதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது தொடர்பாக கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எரிபொருள், மின்சாரம், கேஸ், உணவு பொருட்கள் என அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்களை பொறுக்கமுடியாமல் மக்கள் அனைவரும் வீதிக்கு இறங்கும் நிலை வந்துள்ளது. இதன் ஆரம்ப கட்டமே நேற்று மிரிகானையில் இடம்பெற்றது. நாட்கள் செல்ல செல்ல நிலை இன்னும் மோசமாகலாம். ஆனால் இந்த மக்கள் கிளர்ச்சியை அடிப்படைவாதம் என்ற பெயரில் அரசாங்கம் திசை திருப்ப முயல்கிறது. அடிப்படைவாதம் பேசி மக்களை ஏமாற்றி வாக்கு பெற்றதன் சாபத்தையே இந்த அரசு இப்போது அறுவடை செய்கிறது. ஆனால் இதில் இருந்து பாடம் கற்காமல் மீண்டும் மீண்டும் அடிப்படைவாதம், மதவாதம் பேசி மக்கள் போராட்டத்தை அரசு திசை திருப்ப […] - [வீட்டின் மீது தாக்குதல் : மோட்டார் சைக்கிளுக்கு தீ வைப்பு](https://minnal24.com/%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d/): -யாழ் நிருபர்- சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாவடி தெற்கு, தாவடி முருகன் கோவிலுக்கு அருகாமையில்  வீட்டின் மீதும் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீதும் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. 03 மோட்டார் சைக்கிள்களில் வந்த 06 பேர் கொண்ட கும்பல் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்துள்ளனர். அத்துடன் வீட்டின் மீதும் தாக்குதல் நடாத்தியுள்ளனர். இச்சம்பவத்தில் 02 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வீட்டின் 06 ஜன்னல்கள் சேதமாகியாள்ளன. அத்துடன் இரண்டு கண்ணாடி மேசைகளின் கண்ணாடிகளும் சேதமடைந்துள்ளன.  இச்சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். - [யாழ்ப்பாணத்திற்கு வந்த அமைச்சர்களால் குழப்ப நிலை](https://minnal24.com/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4/): -யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்திற்கு வந்த பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரன  மற்றும் பனை தென்னை வள உற்பத்தி கைத்தொழில்  இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னான்டோ ஆகியோரின் வாகனங்களிற்கு இடையில் புகுந்து எரிபொருள் பெற முன்றமையினால் பெரும் குழப்பம் ஏற்பட்டது. இரு அமைச்சர்கள் யாழ்ப்பாணம் வருகை தந்தபோது ஐந்து வாகனங்களில் வருகை தந்திருந்தனர். திரும்பிச் செல்வதற்காக  வாகனத்திற்கு  யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் உள்ள எரிபொருள் விற்பனை நிலையத்திற்கு வருகை தந்தனர். இதன்போது குறித்த எரிபொருள் விற்பனை நிலையத்தில் நூற்றிற்கும் மேற்பட்ட வாகனங்கள் வரிசையில் காத்திருந்தபோது அமைச்சரின் வாகனத்திற்கு உடனடியாக டீசல் கொள்கலனை முழுமையாக நிரப்ப முயன்றனர். இதன்போது எரிபொருளிற்காக காத்திருந்த வாகன உரிமையாளர்கள், “உங்களாலதானேடா நாம் வரிசையில் நிற்கின்றோம். கொலைகாரப் பாவிகளா, இந்த நிலமையில் எமக்கு 3 ஆயிரத்திற்கு மட்டுமே டீசல் கொலை காரரிற்கு முழுமையாக கேட்குது. அடிக்க முடியாது” என கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதன்போது சம்பவத்தை செய்தியாக்கிய ஊடகவியலாளரையும் அமைச்சரின் […] - [பேருந்திலிருந்து கீழே விழுந்து பெண்ணொருவர் படுகாயம்](https://minnal24.com/%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%af%80%e0%ae%b4%e0%af%87-%e0%ae%b5%e0%ae%bf/): -பதுளை நிருபர்- பதுளை பேருந்து நிலையத்திலிருந்து அம்பாறை நோக்கி காலை 5.00 மணிக்கு புறப்பட்ட மொனராகலை இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்தில் இருந்து பசறை 10 ம் கட்டைப் பகுதியில் வைத்து பசறை மௌசாகலைப் பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய பெண் ஒருவர் பேருந்தை நிறுத்துவதற்கு முன் தவறுதலாக கீழே விழுந்து பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின் உடனடியாக மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியச்லையின் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு டூசிகிச்சை பெற்று வருவதோடு பேருந்தின் சாரதி பசறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். - [குத்தகைக்கு பொருட்களை விநியோகிக்கும் நிலையம் ஒன்றில் பாரிய தீ](https://minnal24.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf/): -பதுளை நிருபர்- பதுளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட இந்தகொட பகுதியில் விழாக்களுக்கான பொருட்களை குத்தகைக்கு விநியோகிக்கும் களஞ்சிய சாலை ஒன்றில் இன்று காலை 8.00 பாரிய தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. இதன்போது உடனடியாக பதுளை தீயணைப்பு படையினருக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தீயணைப்பு படையினரால் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இருப்பினும் பொருட்கள் அனைத்தும் தீயினால் எரிந்து சேதமடைந்துள்ளன. மேலும் எவ்விதமான உயிர்ச்சேதங்களும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. - [எரிபொருள் தட்டுப்பாடு ரயில் சேவைக்கு பாதிப்பு தராது](https://minnal24.com/%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b0/): எரிபொருள் தட்டுப்பாடு நாட்டில் ரயில் சேவைகளை இயக்குவதில் எந்த இடையூறையும் ஏற்படுத்தாது என இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. திட்டமிடப்பட்ட அனைத்து ரயில்களும் எந்தவித இடையூறும் இன்றி திட்டமிட்டபடி இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், எரிபொருள் தட்டுப்பாடு இலங்கையின் ஏனைய பொதுப் போக்குவரத்தை கடுமையாகப் பாதித்துள்ளது. - [நேற்றைய சம்பவத்தின் பின்னணியில் தீவிரவாத குழுக்கள்](https://minnal24.com/%e0%ae%a8%e0%af%87%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%88%e0%ae%af-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d/): நேற்றைய சம்பவத்தின் பின்னணியில் தீவிரவாத குழுக்களே இருந்தன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மிரிஹானவில் நேற்று இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்தள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. - [ஆர்ப்பாட்டத்தின் எதிரொலி : ஜனாதிபதி, அமைச்சர்களின் வீடுகளுக்கு இராணுவ பாதுகாப்பு](https://minnal24.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8a%e0%ae%b2/): ஜனாதிபதி மற்றும் முக்கிய அமைச்சர் ஆகியோரின் வீடுகளுக்கு முன்னால் பாரிய ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற நிலையில் அமைச்சர்களின் வீடுகளுக்கு இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹான வீட்டின் முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் நேற்று இடம்பெற்றது. இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. பெருமளவு பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினர் அவ்விடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். எனினும் ஆர்ப்பாட்டக்காரர்களால் இராணுவ வாகனம் ஒன்று கொழுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் வர்த்தக அமைச்சர் பந்துல வீட்டை சுற்றிவளைத்தும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்று உள்ளதாக தெரிவக்கப்படுகிறது. இவ்வாறு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறும் நிலையில் அமைச்சர்களின் வீடுகளுக்கு இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. - [மிரிஹான சம்பவம் தொடர்பில் 45 பேர் கைது](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b9%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2/): மிரிஹானவில் நேற்று இரவு இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 5 பொலிஸார் காயம், பொலிஸ் பஸ், பொலிஸ் ஜீப்,2 மோட்டார் சைக்கிள் மற்றும் தண்ணீர் பீச்சியடிக்கும் வாகனம் சேதம் - [29 நாட்களில் 101,192 சுற்றுலா பயணிகள் வருகை](https://minnal24.com/29-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-101192-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%a3/): கடந்த 29 நாட்களில் மட்டும் இலங்கைக்கு ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் 29 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாட்டுக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 101,192 என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. பெப்ரவரி 2020 க்குப் பிறகு ஒரே மாதத்தில் 100,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணி கள் நாட்டுக்கு வருகை தந்தது இதுவே முதல் முறையாகும் என தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 2022 ஆம் ஆண்டில் இதுவரை நாட்டுக்கு வந்துள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கை 280,026 ஆகும். இதேவேளை, மார்ச் 2022 வரையான காலப்பகுதியில் இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த நாடு இந்தியாவாகும். அந்த எண்ணிக்கை 22,231 ஆகும். - [பொலிஸ் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டது](https://minnal24.com/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%8a%e0%ae%b0%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b3/): கொழும்பில் அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, மத்திய கொழும்பு மற்றும் நுகேகொட களனி , கல்கிசை பொலிஸ் ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு பிறப்பிக்கப்பட்ட பொலிஸ் ஊரடங்கு இன்று அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ளது. - [நாட்டை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%ae%e0%af%82%e0%ae%9f%e0%af%81%e0%ae%b5%e0%ae%a4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%b5%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95/): தற்போதைய சூழ்நிலையில் அத்தியாவசிய சேவைகளை மாத்திரம் முன்னெடுத்து நாட்டை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க வலியுறுத்தினார். இலங்கை மின்சார சபையை உடனடியாக நிபுணர்கள் சபையின் கட்டுப்பாட்டில் ஒப்படைக்க வேண்டும் என்றும் வளமான நாட்டில் எழுபத்தைந்து மில்லியன் மின் நுகர்வோர், ஒரு நாளைக்கு 13 மணிநேரம் மின்சாரம் இன்றி வாழ வேண்டியுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார். மின்சாரம் இன்மையால் நான்கு இலட்சத்துக்கும் அதிகமான சிறுகடைகளும் இலட்சக்கணக்கான சிறு மற்றும் நடுத்தர தொழில்களும் இன்று அழிந்து போகும் எனவும் குறிப்பிட்டார். குளிர்சாதனப் பெட்டிகளைப் பயன்படுத்தும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான உணவு விற்பனை நிலையங்கள் இன்று பாரிய நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாகவும், உணவு மற்றும் மருந்துகளின் தரம் தொடர்பில் பாரிய பிரச்சினைகள் எழுந்துள்ளதாகவும் கூறினார். மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடியை இந்த அரசாங்கம் இன்னும் புரிந்து கொள்ளவில்லை எனவும் மேலும் குறிப்பிட்டார். - [கொரோனா தொற்று : 403 மில்லியன் மாணவர்கள் பாதிப்பு](https://minnal24.com/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b0%e0%af%8b%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-403-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d/): கொரோனா தொற்றுக் காரணமாக 403 மில்லியன் மாணவர்களுடன் 23 நாடுகளில் பாடசாலைகள் தொடர்ந்து பகுதி அளவு அல்லது முழுமையாக மூடப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் தெரிவித்துள்ளது. 147 மில்லியன் சிறுவர்கள் தாம் நேடியாகக் கற்கும் பாடசாலைக் கல்வியில் குறைந்தது பாதியை இழந்திருப்பதாக யுனிசெப் தொண்டு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. சில பாதிக்கப்படக்கூடிய சிறுவர்கள், குறிப்பாக பெண்கள் மீண்டும் பாடசாலை திறக்கப்பட்ட நிலையில் பாடசாலைக்கு திரும்பவில்லை. பெருந்தொற்றினால் மறைமுகமாகப் பாதிக்கப்பட்டவர்களாக சிறுவர்கள் உள்ளனர் என்று யுனிசெப் நிறைவேற்றுப் பணிப்பாளர் கெத்தரின் ரசல் தெரிவித்துள்ளார். கொரோன வைரஸின் மிக மோசமான சுகாதார பாதிப்பில் இருந்து குறைவான பாதிப்பை சந்தித்த சிறுவர்கள் பெருந்தொற்றில் பாடசாலைகள் மூடப்பட்டதால் அவர்களது வாழ்வு தலைகீழாக மாறியுள்ளது. 2020 மார்ச்சில் உலகெங்கும் 150 நாடுகளில் பாடசாலைகள் முழுமையாக மூடப்பட்டதோடு மேலும் 10 நாடுகளில் பகுதி அளவு மூடப்பட்டன. - [பரீட்சார்த்த சோதனை வெற்றி](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%b0%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%9a%e0%af%8b%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%af%88-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1/): இந்தியாவின் முதலாவது உள்நாட்டு தயாரிப்பு பயிற்சி விமானமான ‘ஹன்சா-என்.ஜி’ கடல் மட்ட பரீட்சார்த்த சோதனையைப் புதுச்சேரியில் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. சி.எஸ்.ஐ.ஆர் மற்றும் தேசிய விண்வெளி ஆய்வுகூடம் என்பன இணைந்து வடிவமைத்து உருவாக்கியுள்ள இந்த விமானம் மணிக்கு 155 கிலோ மீற்றர் வேகத்தில் பங்களூரில் இருந்து பயணித்து 140 கடல் மைல் தூரத்தை ஒன்றரை மணி நேரத்தில் கடந்து புதுச்சேரியை அடைந்தது என்று தேசிய விண்வெளி ஆய்வுகூடம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விமானத்தின் பரீட்சார்த்த சோதனைகளின் மூலம், அதனைக் கையாளுவதற்கான தரம், பயணிக்கும் செயற்றிறன், தரையிறக்கம், நேர்மறை மற்றும் எதிர்மறை உட்கட்டமைப்பு செயற்றிறன், மின் நிலையம் மற்றும் கடல் மட்டத்தில் ஏனைய அமைப்புகளின் செயற்றிறன் என்பன மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன. இதன் ஊடாக இவ்விமானத்தின் கடல் மட்ட பரீட்சார்த்த சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. இச்சோதனையின் போது விமானத்தின் விமானிகளாக விங் கொமாண்டர் கே.வி பிரகாஷ், விங் கமாண்டர் திலீப் ரெட்டி ஆகியோர் பணியாற்றினர். […] - [13 மாணவிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியருக்கு மரண தண்டனை](https://minnal24.com/13-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95/): இந்தோனேசியாவில் சுமார்  13 மாணவிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த பாடசாலை ஆசிரியர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்ற விசாரணையில்‘குறித்த நபர் கடந்த 2016ஆம் ஆண்டிலிருந்து 2021 ஆம் ஆண்டுவரை  12 லிருந்து 16 வயது வரை உள்ள 13 சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகவும், அதில் 8 சிறுமிகள் கர்ப்பம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீதிமன்றத்தின் இத் தீர்ப்புக்கு பெரும்பாலான  மக்கள் தமது ஆதரவினைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. - [சாதனை படைத்த சப்பாத்து](https://minnal24.com/%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%9a%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81/): பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் பயன்படுத்தக்கூடிய வகையில்  சென்சார்  தொழில் நுட்பம் பொருத்தப்பட்ட  சப்பாத்தினை அசாமை சேர்ந்த சிறுவனொருவன் வடிவமைத்துச் சாதனை படைத்துள்ளான். கரிம்கஞ்ச் மாவட்டத்தை சேர்ந்த அன்குரித் கர்மாகர் என்ற சிறுவனே குறித்த சப்பாத்தினைத் தாயாரித்துள்ளான். 9 ஆம் தரத்தில் கல்வி கற்கும் அச்சிறுவன் இது குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில் ” கண்பார்வையற்றவர்கள் இச்சப்பாத்தினை அணிந்து செல்லும் போது எதிரே வரும் தடைகளை சென்சார் கண்டறிந்து அதிக சத்தத்துடன் அவர்களுக்கு  சமிக்ஞை செய்யும்” என்றான். மேலும் ”எதிர் காலத்தில் சிறந்த விஞ்ஞானியாக உருவாக வேண்டும் என்பதே தனது ஆசை” எனவும் அவன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. - [இலங்கை தூதரகங்கள் -துணை தூதரகங்கள் சிலவற்றுக்கு பூட்டு](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%a4%e0%af%82%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%95%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%a3%e0%af%88-%e0%ae%a4/): வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்கள் மற்றும் துணை தூதரகங்கள் சிலவற்றை தற்காலிகமாக மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அமைச்சரவை தீர்மானத்திற்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதன்படி, நோர்வேயின் ஒஸ்லோ மற்றும் ஈராக்கின் பாக்தாத் ஆகிய இடங்களில் உள்ள தூதரகங்களையும், அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள துணை தூதரகத்தையும் ஏப்ரல் 30 ஆம் திகதி முதல் தற்காலிகமாக மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. - [புதிய நிதியமைச்சராக பந்துல](https://minnal24.com/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%aa%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4/): புதிய நிதியமைச்சராக பந்துல குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர் பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார். முன்னதாக நேற்றைய தினம் நிதியமைச்சராக பொறுப்பேற்ற அலி சப்ரி இன்று குறித்த பதவியிலிருந்து விலகியிருந்த நிலையிலேயே தற்போது பந்துல குணவர்தன நிதியமைச்சராக பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பந்துல குணவர்தன இதற்கு முன்னதாக வர்த்தக அமைச்சராக செயற்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. - [இலங்கையின் அரசியல் பொருளாதார நிலைமையை கண்காணிக்கும் ஐ.எம்.எப்](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3/): சர்வதேச நாணய நிதியம் இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைமையை மிக நெருக்கமாக கண்காணித்து வருவதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த மாத இறுதியில் வொஷிங்டனுக்கு புதிதாக நியமிக்கப்பட்ட நிதியமைச்சரின் வருகை உட்பட, கலந்துரையாடல்களை நடத்த சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் எதிர்பார்த்துள்ளனர். சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தலைவர் மசாஹிரோ நோசாக்கி வெளியிட்டுள்ள அறிக்கையை மேற்கோளிட்டு வெளிநாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. புதிதாக நியமிக்கப்பட்ட நிதியமைச்சர் அலி சப்ரி பதவியேற்று 24 மணித்தியாலங்களின் பின்னர் இன்று செவ்வாய்க்கிழமை இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை திறைசேரி மற்றும் நிதி அமைச்சின் செயலாளராக செயற்பட்டுவந்த எஸ்.ஆர் ஆடிகலவும் தனது இராஜினாமாவை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியை சந்தித்து இலங்கை அரசாங்கம் ஏப்ரல் 11 ஆம் திகதி பேச்சுவார்த்தை நடத்த உள்ள நிலையில் இவர்கள் இராஜினாமா செய்துள்ளனர். - [லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள அறிவிப்பு](https://minnal24.com/%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b0%e0%af%8b-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81/): ஒரு இலட்சம் சமையல் எரிவாயு சிலின்டர்கள் நேற்று சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ காஸ் நிறுவனம் தெரிவித்துள்ளதுடன் சமையல் எரிவாயு சிலின்டர்கள் தொடர்ந்தும் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. மேலும் இதனிடையே, லாப்ஸ் எரிவாயுவை ஏற்றிய கப்பல் ஒன்று நாட்டிற்கு வந்திருப்பதாக லாப்ஸ் காஸ் நிறுவனம் அறிவித்திருக்கின்றது. அதனை இறக்குவதற்கு தேவையான வங்கி நடவடிக்கைகளை இலங்கை வங்கி மேற்கொள்ளும் என்று எதிர்பார்ப்பதாகவும் நிறுவன பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். - [ஹட்டன் வீதியில் அரசுக்கெதிராக ஆர்ப்பாட்டம்](https://minnal24.com/%e0%ae%b9%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%86/): -நுவரெலியா நிருபர்- அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடளாவிய ரீதியில் பல எதிர்ப்புப் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றது. அந்தவகையில் நோட்டன் அட்டன் வீதியில், அமைந்துள்ள தோட்ட மக்கள் உட்பட அனைவரும் டிக்கோயா நகருக்கு பேரணியாக சென்று  பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். - [யாழில் ஆர்ப்பாட்டக்காரர்களை ஒழிந்து இருந்து காணொளி எடுத்த இருவர்](https://minnal24.com/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%b0/): நாடு முழுவதும் அரசின் முறையற்ற ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் நேற்று யாழ். பல்கலை வாயிலில், யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டமானது ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் அலுவலகத்திற்கு சென்றடைந்தது. இதன்போது அந்த அலுவலகத்தின் நுழைவாயில் திடீரென மூடப்பட்டது. அத்துடன் அலுவலக கட்டடத்தின் மேல் மாடியில் நின்ற இருவர் பதுங்கியிருந்து ஆர்ப்பாட்டக்காரர்களை படம்பிடித்தனர். இந்நிலையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் தண்ணீர் போத்தல்களை, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்திற்கு முன்னால் உள்ள காட்சிப்பலகை மேல் வீசியமை குறிப்பிடத்தக்கது. - [இலஞ்சம் பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் அதிரடியாக கைது](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a4%e0%af%8d/): -யாழ் நிருபர்- இளவாலை பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் இன்று மதியம் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பிரச்சினை ஒன்றிலிருந்து, சுழிபுரத்தை சேர்ந்த ஒருவரை விடுவிப்பதற்காக இலஞ்சம் பெறுவதற்கு சென்றிருந்தார். சுழிபரத்தை சேர்ந்த நபர் இது தொடர்பாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு தகவல் வழங்கிவிட்டு அவர்களது ஆலோசனையின் கீழ் செயற்பட்டார். இதன்போது குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் இலஞ்சம் பெற முயன்றவேளை அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். - [பிரதமரின் உருவம் பதித்த ஆயிரம் ரூபாவால் வந்த சண்டை](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/): -யாழ் நிருபர்- நாட்டில் பொருளாதார நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ குடும்பத்திற்கு எதிராக நாடு பூராகவும் போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளது. இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்கு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் படம் பொறித்த ஆயிரம் ரூபாய் நாணயத்துடன் வருகை தந்த போது அங்கே குழப்ப நிலை ஏற்பட்டது. ‘மஹிந்த குடும்பத்தின் முகம் உள்ள காசு இங்கே ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. மஹிந்தவே வீட்ட போகப் போகிறான், இந்த காசு எதற்கு? இந்த காசு இங்கே ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது, தயவு செய்துகாசை எடுத்துச் செல்லுங்கள்’ எனக் கூறி அந்த இடத்தில் குழப்ப நிலை ஏற்பட்டதால் குறித்த நபர் அந்த ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொண்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்தார். - [300 ஐத் தொட்டது அமெரிக்க டொலர்](https://minnal24.com/300-%e0%ae%90%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%81-%e0%ae%85%e0%ae%ae%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%9f%e0%af%8a%e0%ae%b2/): அனுமதி பெற்ற வர்த்தக வங்கிகளில் இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 310 ரூபா வரை அதிகரித்துள்ளது. தொடர்ச்சியாக ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இதனால் டொலரின் மதிப்பு உயர்ந்துள்ளது. இந்த நிலைமை தீவிரமான பொருளாதார சீரழிவுக்கான அறிகுறியாகும் என பொருளியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். - [நேற்று ஏற்றார் இன்று விலகினார்](https://minnal24.com/%e0%ae%a8%e0%af%87%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%8f%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2/): புதிய நிதியமைச்சராக  நேற்று திங்கட்கிழமை நியமிக்கப்பட்ட  அலிசப்ரி, தனது நிதியமைச்சர் பதவியை இன்று செவ்வாய்க்கிழமை இராஜினாமா செய்துகொண்டார். - [நானுஓயா- ரதல்ல குறுக்கு வீதியில் விபத்து : மூவர் வைத்தியசாலையில்](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%81%e0%ae%93%e0%ae%af%e0%ae%be-%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5/): -நுவரெலியா நிருபர்- நுவரெலியாவிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த லொறியொன்று, நானுஓயா- ரதல்ல குறுக்கு வீதியில் விபத்துக்குள்ளானதில் சாரதி உள்ளிட்ட மூவர் படுகாயமடைந்து, நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர். இன்று அதிகாலை 1 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தனர். லொறி விபத்துக்குள்ளானதுடன் லொறியிலிருந்த எரிபொருள் வீதியெங்கும் வழிந்தோடியதால், வீதி வழுக்கும் தன்மையுடன் காணப்படுவதாகவும் எனவே சாரதிகள் அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறும் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அத்துடன் எரிபொருள் வழிந்தோடிய பகுதிகளுக்கு மண் மற்றும் மணலால் நிரப்ப பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இவ்விபத்தில் லொறி கடுமையாக சேதமடைந்துள்ளதுடன்,விபத்துக்கான காரணம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர். - [நாடாளுமன்றத்திற்கு வெளியில் பொதுமக்கள் போராட்டத்தில்](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf/): நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெற்று வரும் நிலையில், நாடாளுமன்றத்திற்கு வெளியில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக நாடாளுமன்றத்திற்கு எதிரே உள்ள ஒரு பாதை மூடப்பட்டுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது - [சபையில் குழப்ப நிலை : முஷாரப்பிற்கு 5000 வழங்கிய சாணக்கியன்](https://minnal24.com/%e0%ae%9a%e0%ae%aa%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b7%e0%ae%be/): .   பாராளுமன்றத்தில் ஆளுங்கட்சியிலுள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்த பின்னர், நாட்டின் நிலைமை குறித்தும் அரசியல் கட்சிகளின் செயற்பாடுகள் குறித்தும் நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப் பேசினார். அதன்போது அவர் முன் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்  சாணக்கியன்  ஐயாயிரம் ரூபா தாளை நீட்டியபடி அதனை பெற்றுக்கொண்டு பேசுமாறு சைகை செய்தார். இதன்போது சபையில் குழப்ப நிலை ஏற்பட்டது. ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதன்போது சாணக்கியனுக்கு எதிர்ப்பினை வெளியிட்டனர் - [அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள்](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-2/): இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக ஜனாதிபதி மற்றும் அவரது அரசாங்கத்திற்கு எதிராக பொதுமக்கள் நடத்திய அமைதியான போராட்டங்களில் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இணைந்து கொண்டுள்ளார். பேராயருடன் குறித்த போராட்டத்தில் பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள் மற்றும் கிறிஸ்தவ அமைப்புகள் இணைந்து நாட்டு மக்களுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தினர். இன்று முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியின் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் பதாகைகளையும் இலங்கையின் தேசியக் கொடியையும் ஏந்தியவாறு காணப்பட்டனர். - [பெரும்பான்மையை இழந்தது அரசு](https://minnal24.com/%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%af%88-%e0%ae%87%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4%e0%af%81-%e0%ae%85/): அரசாங்கம் 2/3 என பெரும்பான்மையை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. - [விமான நிலையங்கள் மூடப்பட வேண்டும்](https://minnal24.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%82%e0%ae%9f%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f/): ஊழல்வாதிகள் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்க விமான நிலையங்கள் மூடப்பட வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இதனை தெரிவித்துள்ளார். பாராளுமன்றம் இன்று கூடிய போது, அவர் விசேட அறிக்கையொன்றை விடுத்து இதை குறிப்பிடப்பட்டுள்ளது - [முஷராப்பிடம் 5000 ரூபா தாளை நீட்டிய சாணக்கியன்](https://minnal24.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b7%e0%ae%b0%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-5000-%e0%ae%b0%e0%af%82%e0%ae%aa%e0%ae%be-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b3%e0%af%88-%e0%ae%a8/): நாட்டின் நிலைமை தொடர்பில், ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கருத்துகளை தெரிவித்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். எம். எம். முஸ்ஸாரப், பாராளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்குவதாக அறிவித்தார். அப்போது, முன்வரிசையில் இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பியான இரா.சாணக்கியன்,  5,000 ரூபாய் தாளை அவருக்கு நீட்டினார். - [தனித்தனி குழுக்களாக சிறிசேன, அனுர,விமல் அணி](https://minnal24.com/%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%be%e0%ae%95-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%bf/): முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் 15 உறுப்பினர்களும் , விமல் வீரவன்ச தலைமையில் 14 உறுப்பினர்களும் மற்றும் அனுர பிரியதர்ஷன தலைமையில் 11 உறுப்பினர்களும்  தனித்தனி குழுக்களாக இயங்குவதாக அறிவித்துள்ளன. அத்துடன், விஜயதாச ராஜபக்ஷவும் தனியாக இயங்குவதாக அறிவித்தார். - [இலங்கைக்கு கடத்த இருந்த இருதலை மணியன் பாம்பு, 6 கிளிகள் மீட்பு : இருவர் கைது](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-3/): -மன்னார் நிருபர்- ராமநாதபுரம் ரயில் நிலையப் பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த அரிய வகை இருதலை மணியன் பாம்பு மற்றும் 6 பச்சைக் கிளிகளை வனத் துறையின் இன்று செவ்வாய்க்கிழமை காலை மீட்டுள்ளதோடு, சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை  காலை சந்தேகத்துக்கிடமான முறையில் இருவர் நிற்பதாக வன உயிரின உதவிப் பாதுகாப்பாளர் கணேசலிங்கத்துக்கு தகவல் வழங்கப்பட்டது. அதனடிப்படையில் வன உயிரின அதிகாரிகள் குறித்த பகுதிக்குச் சென்று சந்தேகத்திற்கு இடமான முறையில் காணப்பட்ட இருவரையும் பிடித்து சோதனையிட்டனர். அப்போது அவர்கள் ஒரு வாளியில் இருதலை மணியன் பாம்பு மற்றும் 6 பச்சைக் கிளிகளை வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை உயிருடன் மீட்ட தோடு, அவர்கள் வைத்திருந்த இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் குறித்த இருவரும் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. இருவரும் தூத்துக்குடி […] - [மூதாட்டி கொலை சம்பவம் : 48 மணித்தியாலங்கள் விசாரணை](https://minnal24.com/%e0%ae%ae%e0%af%82%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%88-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d-48-%e0%ae%ae%e0%ae%a3/): -கல்முனை நிருபர்- சாய்ந்தமருதில் மூதாட்டி  கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய  சந்தேகநபரை 48 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து   விசாரணை மேற்கொள்வதற்கு  கல்முனை நீதிமன்ற நீதவான் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார். சாய்ந்தமருது பகுதியில் கடந்த ஜனவரி மாதம்  மூதாட்டி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில்  தலைமறைவாகி மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள விடுதி ஒன்றில் தங்கி இருந்த  சந்தேக நபர் கடந்த சனிக்கிழமை மாலை   கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் திங்கட்கிழமை கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் சாய்ந்தமருது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.எம்.சம்சுடீன் தலைமையிலான குழுவினர் ஆஜர்படுத்தியதை அடுத்து சந்தேக நபரை 48 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து   விசாரணை  மேற்கொள்வதற்கான அனுமதியை நீதவான் வழங்கி உத்தரவிட்டார். கடந்த  27.01.2022 அன்று அம்பாறை மாவட்டம்  சாய்ந்தமருது பிரதேசத்தில் மூதாட்டி ஒருவர்  கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக   பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட புலனாய்வு நடவடிக்கையினால்  மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள  கூட்டுறவுச் சங்கத்திற்குச் […] - [மோதி விட்டு தப்பிச் சென்ற டிப்பர் வாகனம்](https://minnal24.com/%e0%ae%ae%e0%af%8b%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a4%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d/): கிளிநொச்சி – பரந்தன் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரை சட்டவிரோத மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனம் மோதி விட்டு, குறித்த இடத்திலிருந்து டிப்பர் வாகனம் தப்பிச் சென்றுள்ளது. கிளிநொச்சி – பரந்தன் முல்லைத்தீவு 35 வீதியில் பரந்தன் சந்தியை அண்மித்த பகுதியில்  குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் இளைஞரொருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்தில் கிளிநொச்சி பொலிசார் கடமையில் இருந்த போதும் NP LN 4676  இலக்கமுடைய குறித்த  டிப்பர் வாகனம் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. - [பிரதி சபாநாயகர் இராஜினாமா](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a8%e0%ae%be%e0%ae%af%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%be%e0%ae%ae/): பிரதி சபாநாயகர் பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்றத்தில் தனித்து செயற்படுவதாக அறிவித்ததையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.   - [அரசாங்கத்துக்கு வழங்கிய ஆதரவை வாபஸ் பெறுகிறது இ.தொ.கா](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af/): கட்சியின் ஏகமனதான தீர்மானத்துக்கிணங்க, அரசாங்கத்திலிருந்து வெளியேறுவதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்தது. நேற்றைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அதன் நிலைப்பாட்டைத் தெரிவித்தது. இதேவேளை, தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் பதவியை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான்   இராஜினாமா செய்வதோடு, அவரும் இ.தொ.காவின் பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன்  , பாராளுமன்றத்தில் சுயாதீனமாகச் செயற்படுவதற்கும் தீர்மானித்தனர். நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமை மற்றும் மக்களின் எதிர்பார்ப்புக்கு தலைசாய்த்தே இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதென்று தெரிவித்த அக்கட்சியின் தலைவர் செந்தில் தொண்டமான், தொடர்ந்தும் மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் தீர்மானங்களை எடுக்கவும் மக்களுக்காக முன்னிற்கவும் இ.தொ.கா தயாராக இருக்கின்றதென்றும் குறிப்பிட்டார். - [7ஆம் திகதி பதவியேற்பார்](https://minnal24.com/7%e0%ae%86%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%af%87%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d/): இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் சிரேஷ்ட பிரதி ஆளுநர் கலாநிதி Dr. P. நந்தலால் வீரசிங்க இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக ஏப்ரல் 7ஆம் திகதி பதவியேற்கவுள்ளார். மத்திய வங்கியின் ஆளுநராக இருந்த கப்ரால் நேற்றைய தினம் தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார். இந்த நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ. மத்திய வங்கிக்கு புதிய ஆளுநரை தெரிவு செய்துள்ளார். - [நெருக்கடிக்கு மத்தியில் பாராளுமன்றம் இன்று கூடுகின்றது](https://minnal24.com/%e0%ae%a8%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/): பாராளுமன்றம் கடந்த மார்ச் மாதம் 25ஆம் திகதி இறுதியாக கூடிய பின்னர் ஏப்ரல் 5ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் இன்று காலை 10 மணிக்கு பாராளுமன்றம் கூடுகின்றது. பாராளுமன்றம் இன்று முதல் எதிர்வரும் 8 ஆம் திகதிவரை கூடுவதுடன் குறித்த தினங்களில் பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாகவும் பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான செயற்குழு கடந்த வாரம் கூடி தீர்மானித்திருந்தது. - [திக்வெல்லையில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி](https://minnal24.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%b5%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%af%8d/): திக்வெல்ல – ஹிரிகெட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் குறித்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார். கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். - [இன்றைய வானிலை](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%88%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b2%e0%ae%b5-27/): நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். சூரியனின் தொடர்பான வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக இவ் வருடம் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதியிலிருந்து 15ஆம் திகதி வரை அது இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது. தொடந்து, அக்குரஸ்ஸ, ரன்ன மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக நண்பகல் 12.13 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது. - [ஆறரை மணிநேரம் மின்துண்டிப்பு](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-8%e0%ae%86/): நாட்டில் இன்று முதல் எதிர்வரும் 8ஆம் திகதி வரை நாளாந்தம் ஆறரை மணிநேரம் மின்துண்டிப்பு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது. இதன்படி A முதல் L வரையான வலயங்களில் முற்பகல் 8 மணிமுதல் பிற்பகல் 5 மணிவரையில் சுழற்சி முறையில் 4 மணிநேரம் மின்துண்டிப்பு அமுலாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் பிற்பகல் 5 மணிமுதல் இரவு 10 மணிவரை இரண்டரை மணிநேரமும் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது. அத்துடன் B முதல் W வரையான வலயங்களில் முற்பகல் 10 மணிமுதல் மாலை 6 மணிவரையில் 4 மணிநேரமும் மாலை 6 மணிமுதல் இரவு 11 மணிவரை இரண்டரை மணிநேரமும் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்துடன் cc1 வலயத்தில் காலை 6 மணிமுதல் இரவு 9.30 வரையான மூன்றைரை மணிநேரத்திற்கு மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது. இதேவேளை உடனடியாக மின்சக்தி மற்றும் வலுசக்தி […] - [ஆற்றல் மிக்க எம்.பி ஒருவரை நியமிக்குக](https://minnal24.com/%e0%ae%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%8e%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0/): மின்சாரம் மற்றும் எரிசக்தி துறைக்கு பொருத்தமான ஆற்றல் மிக்க எம்.பி ஒருவரை அமைச்சராக நியமிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அரசாங்கத்திடம் அறிவித்துள்ளது. நெருக்கடியான சூழ்நிலையிலுள்ள மின்சாரம் மற்றும் பெற்றோலியத் தொழில்துறைகளைக் கருத்திற்கொண்டே ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க, அரசாங்கத்துக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார். - [கடவுச்சீட்டில் பாலினத்தைக் குறிப்பிடுவதற்குச் சிறப்புத் தெரிவு](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b5%e0%af%81%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/): அமெரிக்காவில் திருநங்கைகளும் திருநம்பிகளும் கடவுச்சீட்டில் தங்களது பாலினத்தைக் குறிப்பிடுவதற்குச் சிறப்புத் தெரிவு வழங்கப்பட்டுள்ளது. தனிநபர்கள் ஆண் அல்லது பெண் என்ற பாலினத்தை இனி குறிப்பிடத் தேவையில்லை.  அவர்கள் எக்ஸ் என்று குறிப்பிடலாம். பிறப்புச் சான்றிதழிலோ முந்தைய அதிகாரத்துவ ஆவணங்களிலோ குறிப்பிடப்பட்டிருக்கும் அவர்களது பாலினம் கருத்தில் கொள்ளப்படமாட்டாது என்று கூறப்பட்டது. திருநங்கைகள், திருநம்பிகள், பாலினத்திற்கு உட்படாதவர்கள் ஆகியோர் துல்லியமாகப் பாலின ரீதியாக வகைப்படுத்தப்படும் முயற்சியில் இது பெரும் முன்னேற்றம் என்று வெள்ளை மாளிகை கூறியது. அமெரிக்காவின் போக்குவரத்துப் பாதுகாப்பு நிர்வாகம் விமானச் சேவை நிறுவனங்களிடையே அந்த நடைமுறையைச் செயல்படுத்த முயற்சி எடுப்பதாகக் கூறப்பட்டது. - [இடைக்கால அரசாங்கத்திற்கு உடன்பட மறுப்பு](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95/): எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இடைக்கால அரசாங்கத்திற்கு உடன்பட மறுத்துள்ளார். பிரதான எதிர்க்கட்சி என்ற வகையில் செயல்படும் அரசியல் மாதிரியை தாம் விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஒரு புதிய இலங்கையானது வலுவான நிறுவனங்களுடன் ஆரம்பிக்கவேண்டும் அன்றி தலைமைகளின் மாற்றத்தினால் மாத்திரமல்ல. இடைக்கால அரசாங்கம் என்பது உட்கட்சி அரசியலைத் தவிர வேறில்லை என்று அவர் ட்வீட் செய்துள்ளார். - [முதற் காலாண்டில் இந்தியா இலங்கைக்கு 2.5 பில்லியன் கடனுதவி](https://minnal24.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be/): ஜனவரியில் வழங்கப்பட்ட 400 மில்லியன் டொலர் பணப்பறிமாற்றல் உள்ளடங்கலாக இவ்வாண்டின் முதற்காலாண்டில் இந்தியா இலங்கைக்கு 2.5 பில்லியன் கடனுதவியை வழங்கியுள்ளதாக இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் 500 மில்லியன் டொலர் கடன் திட்டத்தின் கீழ் நாட்டை வந்தடைந்த 40 000 மெட்ரிக் தொன் டீசலை இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லேவிடமிருந்து , வலு சக்தி அமைச்சர் காமினி லொக்குகே நேற்று முன்தினம் பெற்றுக் கொண்டிருந்தார். இது குறித்து இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது : இந்திய கடன் திட்டத்தின் கீழ் நான்காவது கட்டமாக இந்த டீசல் தொகை இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் கடந்த மார்ச் மாதம் 16, 20 மற்றும் 23 ஆம் திகதிகளில் எரிபொருள் தொகை நாட்டை வந்தடைந்தது. அதற்கமைய கடந்த சனிக்கிழமை நாட்டை வந்தடைந்த 40 000 மெட்ரிக் தொன் எரிபொருள் உள்ளடங்கலாக 50 […] - [ஜனாதிபதி மக்களின் கோரிக்கைகளை புரிந்து கொள்ள தவறிவிட்டார்](https://minnal24.com/%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d/): அமைச்சரவை அமைச்சுப் பதவிகளை ஏற்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ சகல கட்சிகளுக்கும் விடுத்த அழைப்பை மக்கள் விடுதலை முன்னணி நிராகரித்துள்ளது. எந்தவொரு சூழ்நிலையிலும் இடைக்கால, குறுகிய கால அல்லது சர்வகட்சி அரசாங்கக் கட்டமைப்பை உருவாக்குவதற்கு ஜனாதிபதி அல்லது பிரதமருடன் ஜே.வி.பி இணைந்து கொள்ளமாட்டாது என தெரிவித்த அக்கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, முதலில் ஜனாதிபதி தனது பதவியிலிருந்து விலக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மக்களின் கோரிக்கைகளை புரிந்து கொள்ள தவறிவிட்டார் எனவும், தற்போதைய நெருக்கடியானது அமைச்சுப் பதவிகள் தொடர்பான பிரச்சினையல்ல எனவும் அவர் தெரிவித்தார். இவ்வாறான பிரேரணையை முன்வைப்பதற்கு ஜனாதிபதிக்கு நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார். - [மத்திய வங்கியின் ஆளுநராக நந்தலால்](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b3%e0%af%81%e0%ae%a8%e0%ae%b0%e0%ae%be/): இலங்கை மத்திய வங்கியின்  ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் பதவி விலகியதையடுத்து, புதிய ஆளுநராக மத்திய வங்கியின் முன்னாள் சிரேஷ்ட பிரதி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவை நியமிக்க ஜனாதிபதி  தீர்மானித்துள்ளதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கமைய தற்போது அவுஸ்திரேலியாவில் இருக்கும் கலாநிதி நந்தலால் வீரசிங்கவிடம் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இம்மாதம் 07ஆம் திகதி இலங்கை வரவுள்ள அவர், மத்திய வங்கியின் ஆளுநர் பதவியை பொறுப்பேற்பது தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளதாக உள்ளகத் தகவல்களில் இருந்து அறியமுடிகிறது. - [இராஜினாமா கடிதத்தை அனுப்பினார் டலஸ்](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%be%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%85%e0%ae%a9%e0%af%81%e0%ae%aa%e0%af%8d/): ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தனது அமைச்சுப் பொறுப்பை இராஜினாமா செய்து அதற்கான கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளார். - [பொலிசார் விடுத்துள்ள எச்சரிக்கை](https://minnal24.com/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3-%e0%ae%8e%e0%ae%9a%e0%af%8d/): நாடு முழுவதும் இடம்பெற்று வரும் மக்கள் எதிர்ப்பு போராட்டங்களின் போது வன்முறையில் ஈடுபடும் தனிநபர்கள் மற்றும் குழுக்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, பொலிசார் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களால் முன்னெடுத்து செல்லப்படும் அமைதியான போராட்டங்களின் போது வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் தொடர்பாக  இதுவரை பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், குறித்த சம்பவங்கள் தொடர்பான வீடியோ காட்சிகளை மேலும் ஆய்வு செய்த பின்னர் இச்சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.   - [முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் வீடு தாக்கப்பட்டுள்ளது](https://minnal24.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%9a%e0%af%8d-2/): முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் வீடு இன்று திங்கட்கிழமை இரவு இனம் தெரியாத கும்பலால் தாக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் காரணமாக வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் உட்பட வீட்டிலிருந்த பொருட்கள் அனைத்தும் அடித்து நெறுக்கப்பட்டுள்ளது. - [சனத் ஜயசூரிய எதிர்ப்பை வெளிப்படுத்தினார்](https://minnal24.com/%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%9c%e0%ae%af%e0%ae%9a%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%88-%e0%ae%b5/): இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சனத் ஜயசூரிய, அரசாங்கத்துக்கு எதிராக முன்னெடுக்கப்படும் போராட்டங்களில் இணைந்துகொண்டு தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். - [மஹிந்தவின் இல்லத்துக்கு முன்பாகவும் போராட்டம்](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%b9%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/): கொழும்பு, விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்துக்கு முன்பாகவும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. - [மாலைதீவு நோக்கிச் சென்றார் நிசங்க சேனாதிபதி](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b2%e0%af%88%e0%ae%a4%e0%af%80%e0%ae%b5%e0%af%81-%e0%ae%a8%e0%af%8b%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be/): அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிசங்க சேனாதிபதி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள், கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து மாலைதீவுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இக்குழுவினர் இன்று காலை 08.20 மணியளவில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் யூஎல்-102 என்ற விமானத்தில் மாலைதீவு நோக்கிச் சென்றுள்ளனர். அவர்கள் சென்றபோது கட்டுநாயக்க விமான நிலையத்தின் கணனி மற்றும் பாதுகாப்பு கமெரா அமைப்பு சீர்குலைந்த நிலையில், கட்டுநாயக்க விமான நிலைய புறப்படும் முனையத்தின் ஊடாக விமானத்துக்குள் நுழைவதற்கு குழுவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய பாதுகாப்பு படையினரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். - [பொகவந்தலாவை நகரில் முன்னெடுக்கப்பட்ட பாரிய ஆர்ப்பாட்டம்](https://minnal24.com/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%95%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b5%e0%af%88-%e0%ae%a8%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9/): -நுவரெலியா நிருபர்- நாட்டின் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம் மற்றும் டிசல், மண்ணெண்ணை தட்டுபாடு போன்றவற்றுக்கு எதிராகவும் நாட்டின் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும் பொகவந்தலாவை டின்சின் நகரில் இன்று பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவை வெளியேறுமாறு கோஷங்கள் எழுப்பி பதாதைகளை ஏந்தியவாறும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததுடன், இந்த ஆர்ப்பாட்டத்தில் டின்சின் மற்றும் அப்பகுதியில் உள்ள சில தோட்டங்களைச் சேர்ந்த பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர். - [மூன்று நாட்களின் பின் இன்று தலவாக்கலையில் டீசல் விநியோகம்](https://minnal24.com/%e0%ae%ae%e0%af%82%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a9/): -நுவரெலியா நிருபர்- தலவாக்கலை நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தை சூழ மக்கள் இன்று நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அத்துடன், வாகனங்களும் அணிவகுத்து நின்றன. இதனால் நகர் பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது. நாடளாவிய ரீதியில் டீசலுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள இந்த நிலையில், தலவாக்கலை நகரிலுள்ள எரிபொருள் நிலையத்திலும் டீசல் இருக்கவில்லை. சுமார் 3 நாட்களுக்கு பிறகு இன்று டீசல் விநியோகிக்கப்படுகின்றது. டீசல் இன்மையால் பலரின் வாகனங்கள் வீடுகளிலும், வீதிகளிலும் அப்படியே நிற்கின்றன. சுமார் 20 லீட்டர் கேன்களுடன் சாரதிகள், நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதேவேளை, வாகனங்களும் நீண்ட வரிசையில் நிற்கின்றதை காணமுடிந்தது. பாதுகாப்பு கடமையில் பொலிஸாரும் ஈடுபட்டுள்ளனர். - [ஜனாதிபதி செயலகம் தற்போது முற்றுகை](https://minnal24.com/%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%ae%b2%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81/): கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகம், ஆர்ப்பாட்டக்காரர்களால் தற்போது முற்றுகையிடப்பட்டுள்ளது.   பெருந்திரளான இளைஞர், யுவதிகள் ஒன்றிணைந்து அரசாங்கத்துக்கு எதிரான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், கொழும்பு- காலி வீதியில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக, போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. - [இ.தொ.கா - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ சந்திப்பு](https://minnal24.com/%e0%ae%87-%e0%ae%a4%e0%af%8a-%e0%ae%95-%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/): ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்க்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இன்று திங்கட்கிழமை நடைபெற்றுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இச்சந்தப்பில் இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான், இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது மலையகப் பல்கலைக்கழகம், தொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய் சம்பள விவகாரம், உதவி ஆசிரியர் நியமனம் குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடப்பட்டுள்ளது. - [நாட்டை சீர்குலைக்க விரும்பவில்லை ](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%9a%e0%af%80%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae/): பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை காட்டும் எவருக்கும் ஆட்சி அதிகாரத்தை வழங்கத் தயார் எனவும் நாட்டை சீர்குலைக்க விரும்பவில்லை எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.  ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி தலைமையில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் நடைபெற்ற ஆளும் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எம்.பிக்களுடனான  கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தமது அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்ற முடியாததன் காரணமாக அரசாங்கத்தின் மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளதாக பல ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். மக்களின் இந்த எரியும் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் தெரிவித்துள்ளனர். - [கெஹலிய, காமினி வீடுகளின் முன் பதற்றம்](https://minnal24.com/%e0%ae%95%e0%af%86%e0%ae%b9%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d/): ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சர்களுமான கெஹலிய ரம்புக்வெல மற்றும் காமினி லொக்குகே ஆகியோரின் வீடுகளுக்கு முன்பாக பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. கெஹலியவின் கண்டி வீட்டுக்கு முன்பாக ஒன்றுதிரண்ட போராட்டகாரர்களை விரட்டியடிப்பதற்காக, பொலிஸார் கண்ணீர் புகைப்பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். பிலியந்தலையில் உள்ள காமினி லொக்குகேயின் வீட்டுக்கு முன்பாக இருந்த பெரிய பதாகைக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளதால் அங்கு பதற்றநிலைமை ஏற்பட்டுள்ளது. - [69 இலட்சம் மக்களின் ஆதரவு இன்னும் இருக்கின்றது](https://minnal24.com/69-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%b5%e0%af%81-%e0%ae%87/): இலங்கையிலுள்ள 69 இலட்சம் மக்களின் ஆதரவு இன்னும் இருப்பதால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை என நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, இன்று திங்கட்கிழமை தெரிவித்தார். ஜனாதிபதி தனது இராஜினாமாவை சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை என தெரிவித்த அமைச்சர், மக்கள் ஆணையை ஜனாதிபதி இன்னும் வைத்திருப்பதாக தான் நம்புவதாக குறிப்பிட்டார். ஜனாதிபதிக்கு இன்னும் மக்களின் ஆதரவு உள்ளது என்பதை நிரூபிக்க தேர்தல் நடத்தப்பட வேண்டும். தற்போது முன்னெடுக்கப்படும் பொதுப் போராட்டங்கள் சிறிய போராட்டங்கள் என தெரிவித்த அமைச்சர், எனினும் மக்கள் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர் என்பதை ஏற்றுக்கொள்கின்றேன் எனவும் தெரிவித்தார். - [அமைச்சரவையை முழுமையாக கலைக்குமாறு ஜனாதிபதிக்கு அறிவிப்பு](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b4%e0%af%81%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95-%e0%ae%95%e0%ae%b2/): அமைச்சரவையை முழுமையாக கலைத்து இடைக்கால அரசாங்கத்தை உருவாக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கூட்டாக ஒன்றிணைந்து ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றின் ஊடாக இந்த கோரிக்கை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டின் பிரதான பௌத்த பீடங்களான மல்வத்த, அஸ்கிரிய, ராமாஞ்ய, அமரபுர மஹா நிக்காயவின் சங்கைக்குரிய மஹா நாயக்க தேரர்கள் கூட்டாக ஒன்றிணைந்து கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். - [இராஜாங்க அமைச்சர்கள் இராஜினாமா](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be/): இராஜாங்க அமைச்சர்களான லசந்த அழகியவண்ண, துமிந்த திசாநாயக்க மற்றும்  பியங்கர ஜயரத்ன ஆகியோர் தமது பதவிகளில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. - [வந்தடைந்தது 40,000 மெட்ரிக்தொன் எரிபொருள்](https://minnal24.com/%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%9f%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4%e0%af%81-40000-%e0%ae%ae%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%a4%e0%af%8a/): இந்தியாவின் 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி ஊடாக வழங்கப்படுகின்ற 40,000 மெட்ரிக்தொன் டீசல்  உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லேயினால் இலங்கை வலுச்சக்தி அமைச்சர் காமினி லொக்குகேவிடம் இன்று திங்கட்கிழமை கொழும்பில் கையளிக்கப்பட்டது. இதற்கு முன்னதாக, எரிபொருளுக்கான கடனுதவியின்கீழ் கடந்த மார்ச் மாதம் 16, 20 மற்றும் 23 ஆகிய திகதிகளில் வழங்கப்பட்டவற்றின் தொடர்ச்சியாக விநியோகிக்கப்படும் நான்காவது தொகுதி இதுவாகும். கடனுதவி திட்டத்திற்குள் உள்வாங்காமல் 2022 பெப்ரவரியில் இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனத்தால் வழங்கப்பட்டுள்ள 40,000 மெட்ரிக்தொன் எரிபொருள் உட்பட இன்று வழங்கப்பட்ட எரிபொருள் தொகுதியுடன் கடந்த 50 நாட்களுக்குள் இலங்கைக்கு வழங்கப்பட்ட மொத்த எரிபொருள், அண்ணளவாக 200,000 மெட்ரிக் தொன் ஆகும். - [தகாத உறவு காரணமாக ஏற்பட்ட படுகொலை](https://minnal24.com/%e0%ae%a4%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95-%e0%ae%8f%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d/): அக்மீமன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நியகம காலனி பகுதியில் பெண் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் அக்மீமன நியகம பகுதியில் வசிக்கும் 58 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர். தகாத உறவு காரணமாக ஏற்பட்ட தகராறு காரணமாக, இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர் தற்போது தப்பிச் சென்றுள்ளார். சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். - [ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற சிசு](https://minnal24.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%87%e0%ae%b1/): சிசுவொன்ற பிரசவித்த தாயும், அவரது கணவனும்  சிசு பிறந்த அன்றே, சிசுவையும் தூக்கிக்கொண்டு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்தனர். இந்த புகைப்படம் வைரலாகியுள்ளது. இந்த புகைப்படம் எவ்விடத்தில் வைத்து பிடிக்கப்பட்டது என்பது தொடர்பிலான விபரங்கள் வெளிவரவில்லை. என்றாலும், குடும்பத்தை கொண்டு நடத்துவதில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியான நிலைமையை சமாளிக்க முடியாமலே, இந்த குடும்பத்தினர், பச்சை குழந்தையுடன் வீதிக்கு இறங்கியுள்ளனர் என்பது மட்டுமே உண்மையாகும். - [தங்காலை, களுத்துறையில் கண்ணீர் புகைப் பிரயோகம்](https://minnal24.com/%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95/): தங்காலையில் உள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைப்பதற்கு பொலிஸார், கண்ணீர் புகை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். இதேவேளை களுத்துறையில் உள்ள முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவின் அலுவலகத்தை முற்றுகையிட்ட போராட்டக்காரர்களை கலைப்பதற்கும் பொலிஸார் கண்ணீர் புகைப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். - [நாளை ஆட்டம் காணுமா அரசு?](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%88-%e0%ae%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3%e0%af%81%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81/): ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களில் 50இக்கும் மேற்பட்டவர்கள் நாளை செவ்வாய்க்கிழமை  பாராளுமன்ற அமர்வு முதல் சுயாதீனமாகச் செயற்பட தயாராகி வருவதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் நாளையப் பாராளுமன்ற அமர்வில் இது தொடர்பில் அறிவிப்புக்களை விடுக்க உள்ளதாகவும், இதனால் அரசாங்கத்தின் மூன்றிலிரண்டு பெரும்பான்மை இழக்கப்படும் எனவும் தெரிவித்தார். - [இராணுவம் அரசியலமைப்புக்கு இணங்கவே செயற்படும்](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a3%e0%af%81%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%ae%ae%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%8d/): தொழிற்தகைமை மிகுந்ததாக விளங்கும் இலங்கை இராணுவம் வேறு நோக்கங்களின்றி அரசியலமைப்புக்கு இணங்கவே செயற்படும் இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இலங்கையை தளமாக கொண்ட உயர்ஸ்தானிகராலயங்கள் மற்றும் தூதரகங்களின் பாதுகாப்பு இணைப்பாளர்கள், ஆலோசகர்களுடன் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற சந்திப்பின்போதே இராணுவத் தளபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். - [அரசிலிருந்து விலகியது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b8%e0%af%8d/): ஜனாதிபதிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசிலிருந்து விலகி பாராளுமன்றத்தில் சுயாதீனமாக அமரத் தீர்மானித்துள்ளது. நாளை மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளார். - [அழைப்பை நிராகரித்த ரணில் விக்ரமசிங்க](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%b4%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%88-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/): காபந்து அரசாங்கத்தில் இணைந்து கொள்ளுமாறு ஜனாதிபதி விடுத்த அழைப்பை முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நிராகரித்துள்ளார். இன்று காலை ஜனாதிபதியினால் விடுக்கப்பட்ட இந்த அழைப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்றத்திற்கு அதிகாரத்தை வழங்கி புதிய பிரதமரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். 19ஆவது திருத்தச் சட்டத்தை மீண்டும் அமுல்படுத்த வேண்டும் எனவும் முன்னாள் பிரதமர் பரிந்துரைத்துள்ளார். இல்லாவிட்டால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகி, இடைக்கால ஜனாதிபதி மற்றும் இடைக்கால அரசாங்கத்தை அமைக்க நாடாளுமன்றத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், முன்னாள் பிரதமரின் இந்த யோசனைகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணங்குவதாக தெரியவில்லை. எனவே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாழ்த்து தெரிவிப்பதைத் தவிர வேறு வழியில்லை என முன்னாள் பிரதமர் தெரிவித்துள்ளார். - [அச்சுவேலி சந்தியில் இரு கார்கள் மோதி விபத்து](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81/): -யாழ் நிருபர்- இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை மாலை வேளையில், வல்லைப் பகுதியில் இருந்து அச்சுவேலிக்கு திரும்பும் சந்திக்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது. வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட காருக்கு பின்னால் வந்த கார் மோதியே விபத்திற்குள்ளானதாக தெரியவந்துள்ளது. வல்லை வீதியில் முன்னால் சென்ற கார் சாரதிக்கு தொலைபேசி அழைப்பு வர அவர் தனது காரை வீதியோரத்தில் நிறுத்தி விட்டு தொலைபேசியில் கதைத்த போது பின்புறமாக வந்த கார் நிறுத்தி வைக்கப்பட்ட காரை மோதித் தள்ளியதுடன் கட்டுப்பாட்டை இழந்து பற்றைக்குள் பாய்ந்துள்ளது. இதில் நிறுத்தி வைக்கப்பட்ட காரின் பின் சில் உட்பட அதன் பகுதிகள் சேதமடைந்துள்ளது. சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் பின்னால் வந்த கார் சாரதிக்கு வெயில் வெளிச்சம் கண்ணில் பட்டதால் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்ட காரை அவதானிக்க முடியவில்லை எனக் கூறியதாக தெரியவந்துள்ளது. - [டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்திற்கு முன்னால் முற்றுகையிட்ட மாணவர்கள்](https://minnal24.com/%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%b3%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b2%e0%af%81/): -யாழ் நிருபர்- நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வுகாணக்கோரி யாழ்ப்பாண பல்கலைக்கழக பெரும்பான்மை மாணவர்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று காலை யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்றலில் இப் போராட்டம் இடம்பெற்று பரமேஷ் வசந்தி பலாலி வீதி வழியாக யாழ் நகரை வந்தடைந்தார். நகரை வலம் வந்து வீதிகளை மறித்து கோத்தபாய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறு டக்ளஸ் தேவானந்தா அவர்களது அலுவலகத்திற்கு முன்னால் வந்தது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்திற்கு முன்னால் முற்றுகையிட்ட போராட்டக் குழுவினர் கோத்தபாய அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியவாறு தமது போராட்டத்தை முன்னெடுத்தனர். இதன்போது அரசிற்கு எதிராக பதாகைகளை தாங்கியாறு போராட்டம் இடம்பெற்றது. - [யாழ்.மாவட்டத்தில் லங்கா சதொச மொத்த விற்பனை நிலையம் திறந்து வைப்பு](https://minnal24.com/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be/): -யாழ் நிருபர்- யாழ்ப்பாண மாவட்டத்தில் லங்கா சதொசா மொத்த விற்பனை நிலையம் திறப்பு விழாவானது லங்கா சதொச சிரேஷ்ட முகாமையாளர் திரு.சஞ்சீவ வீர கொற்றகொட அவர்களின் தலைமையில் இன்று காலை பத்து மணியளவில் நாவற்குழியில் நடைபெற்றது . இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள் கலந்து கொண்டதோடு, இவ் விற்பனை நிலையத்தின் மூலம் விரைவாக பொருட்களை பெற்றுக்கொள்ள முடிவதோடு, உள்ளூர் உற்பத்திகளையும் விற்பனை செய்யமுடியும். அத்தோடு மருந்துப் பொருட்களையும் களஞ்சியப்படுத்தி பரிமாற முடியுமெனவும் தெரிவித்தார். மேலும், இந் நிகழ்வில் உதவி மாவட்டச் செயலாளர் எஸ்.சி.என்.கமலராஜன், பிரதேச செயலாளர்  உஷா சுபலிங்கம், மாவட்டச் செயலக பிரதம கணக்காளர் சிவரூபன், சிரேஷ்ட கணக்காளர் திரு.டிலந்த பெரேரா (லங்கா ச.தொ.ச) மற்றும் மாவட்டச் செயலக பொறியியலாளர், உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள். - [மரக்கிளை முறிந்து விழுந்து கோவில் சேதம்](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%af%81%e0%ae%a8-2/): -நுவரெலியா நிருபர்- தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மடக்கும்புர புதுகாடு பிரிவில் ஆலமர கிளையொன்று முறிந்து அருகிலிருந்த ஆலயத்தின் மீது விழுந்ததில் ஆலயம் சேதமாகியுள்ளது. திங்கட்கிழமை மதியம் 12.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதிக காற்றினால் குறித்த மரக்கிளை முறிந்து விழுந்துள்ளது. தோட்ட நிர்வாகத்திற்கு குறித்த சம்பவம் தொடர்பில் அறிவித்ததற்கு இணங்க மரக்கிளையை வெட்டி அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. - [அமெரிக்காவில் உள்ள ஜனாதிபதி கோட்டாபயவின் மகனின் வீட்டிற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%ae%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3-%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf/): அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மகன் மனோஜ் ராஜபக்ஷவின் வீட்டுக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. முன்னணி ஊடகவியலாளரான ஜமீலா ஹுசைன், தனது ட்விட்டர் செய்தியில் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது அவரது தந்தையை வீட்டிற்கு அழைக்குமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷமிட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. - [யாழ்.மாவட்ட உயர் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்களால் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்](https://minnal24.com/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%89%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%a8/): -யாழ் நிருபர்- யாழ். மாவட்ட உயர் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்களால் அரசாங்கத்திற்கு எதிராக யாழ் நகரில் போராட்டமொன்று இன்று மேற்கொள்ளப்பட்டது. கல்வி சுகாதாரம் மற்றும் பொருளாதாரத்தின் வீழ்ச்சியில் மக்கள் வாழ்க்கையை நசுக்கிடும் அரசாங்கத்தினுடைய செயற்பாடுகளுக்கு எதிராக இதன்போது கோஷங்கள் எழுப்பப்பட்டது போராட்டக்காரர்கள் இன்று மதியம் 12 மணியளவில் யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்திலிருந்து ஆரம்பித்து யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு சென்றனர். போராட்டம் காரணமாக யாழ். மாநகரில் சில மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது. - [அரசுக்கு எதிராக நுவரெலியாவில் போராட்டத்தில் குதித்த மக்கள்](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%a8%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%86%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af/): -நுவரெலியா நிருபர்- இலங்கையில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ளதை அடுத்து, நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கு தொடர்ந்தும் தட்டுப்பாடு நிலவி வருகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நுவரெலியாவில் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றன. நுவரெலியா கண்டி பிரதான வீதியில் இருந்து பவனியாக வருகைத்தந்து பிரதான பஸ் தரிப்பிடம் முன் இப்போராட்டமானது இன்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அரசுக்கு எதிர்ப்பு வாசகங்கள் பொறித்த பதாதைகளை ஏந்தி, கோஷங்கள் எழுப்பி தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர். அத்தியாவசிய பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு, விலையேற்றம் போன்ற பல்வேறு பிரச்சினைகளை பொது மக்கள் எதிர் நோக்கி வருவதைச் சுட்டிக் காட்டியும் உரிய தீர்வினைப் பெற்றுத்தருமாறு கோரியும் இந்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. - [மழையில் நனைந்தபடியே சமல் ராஜபக்ஷவின் வீட்டை சுற்றிவளைத்த மக்கள்](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%b4%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%a9%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%87-%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d/): திஸ்ஸமஹாராமவில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷவின் வீட்டை இன்று ஆர்ப்பாட்டக்காரர்கள் சுற்றிவளைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படிஇ சமல் ராஜபக்ஷவின் வீட்டிற்கு செல்லும் வீதி அடைக்கப்பட்டு யாரும் உள்ளே செல்ல முடியாதவாறு பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். எங்களுடைய நடைபயணத்தை பொலிஸாரின் தடுப்பு வேலிகளால் தடுத்து நிறுத்த முடியாது என்றும், ராஜபக்ஷக்கள் உட்பட இந்த நாட்டை சீரழிக்கும் எந்தவொரு அரசியல்வாதிகளையும் காவல்துறையினர் நீண்ட நாள் மறைத்து வைக்க முடியாது எனவும் பெருமளவான மக்கள் மழையில் நனைந்தபடியே சமல் ராஜபக்ஷவின் வீட்டுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடாத்தி வருகின்றனர். சமல் ராஜபக்ஷவின் வீட்டை சுற்றி ஏற்கனவே பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. - [தனிநபர் சுமந்திரன் ரெலோவை வெளியேற்றுவது எவ்வாறு - சித்தார்த்தன் கேள்வி](https://minnal24.com/%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%ae%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b0%e0%af%86%e0%ae%b2%e0%af%8b%e0%ae%b5/): -யாழ் நிருபர்- தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தனிநபர் சுமந்திரன் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோவை எவ்வாறு வெளியேறுமாறு கூற முடியுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான புளொட் அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் கேள்வி எழுப்பினார். இன்று கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டபோது ஊடகவியலாளர்கள் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கே அவர் இவ்வாறு பதிலளித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ரெலோ அமைப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றாக விளங்குகின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பில் தனிநபராக இருக்கின்ற சுமந்திரன் ஒரு கட்சியை வெளியேறுமாறு கூறுவதற்கு அருகதை அற்றவர். தமிழ் தேசியக் கூட்டமைப்பை சிலர் பலவீனப் படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலவீனப்படுத்தினால் தமிழ் மக்களை பலவீனப் படுத்துவதாக அமையும். சுமந்திரனின் கருத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள தனிநபர் ஒருவருடைய கருத்து […] - [அரசாங்கத்துடன் உடன்படிக்கை செய்ய தயாரில்லை - சஜித் பிரேமதாச](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95/): ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்துடன் எந்தவொரு உடன்படிக்கையும் செய்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இல்லை என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே சஜித் பிரேமதாச இதனைத் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தை நொடிப்பொழுதினில் தூக்கி எறிவதே இப்போது நாம் செய்ய வேண்டிய ஒன்று என தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், அதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார். - [பலநாள் மீன்பிடிக் கலன்களின் உரிமையாளர்கள் - அமைச்சர் டக்ளஸ் சந்திப்பு](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3/): -யாழ் நிருபர்- மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலில், பலநாள் மீன்பிடிக் கலன்களில் மூலம் தொழிலில் ஈடுபடுவோர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும், நாட்டில் நிலவி வருகின்ற அண்மைய எரிபொருள் தட்டுப்பாடு, கடற்றொழிலாளர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் போன்றவை தொடர்பாக கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதனிடையே நோர்த் சீ எனப்படும் வடகடல் நிறுவனத்தின் உற்பத்திகளை விஸ்தரித்து, அதன் செயற்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில், இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெயசங்கரிடம் ஒத்துழைப்புக்களை கோரியுள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இன்று வடகடல் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரிகளை சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போது, இந்தியாவின் ஒத்துழைப்புக்களை நிறுவனத்தின் செயற்பாடுகளை வினைத்திறனாக மாற்றுவதற்கான வழிவகைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. - [புதிய அமைச்சரவையில் இருந்து ராஜபக்சே குடும்ப உறுப்பினர்கள் விலகுகின்றனர் ?](https://minnal24.com/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8/): ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்படவுள்ள புதிய அமைச்சரவையில் அமைச்சுப் பதவிகளை ஏற்கப்போவதில்லை என ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த மூன்று அமைச்சரவை அமைச்சர்களும் இராஜாங்க அமைச்சர் ஒருவரும் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, சமல் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ மற்றும் இராஜாங்க அமைச்சர் ஷீந்திர ராஜபக்ஷ ஆகியோர் புதிய அமைச்சரவையில் பதவிகளை ஏற்கப் போவதில்லை என தெரிவித்துள்ளனர். புதிய அமைச்சரவையின் கீழ் அமைச்சுப் பதவிகள் எதனையும் பெற்றுக் கொள்வதில்லை என, தனிப்பட்ட தீர்மானங்களை குழு எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. - [தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது கட்டாயமில்லை என அரசு அறிவிப்பு](https://minnal24.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b0%e0%af%8b%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%a4%e0%ae%9f%e0%af%81/): தமிழ்நாட்டில் கடந்த 31 ஆம் திகதி வரை அமுலில் இருந்த வந்த கொரோனா கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்ற உத்தரவு திரும்பப் பெறப்படுவதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம், தடுப்பூசி செலுத்திக் கொள்வது போன்ற நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் தவணை தடுப்பூசியை 92 சதவீதம் பேரும், இரண்டாம் தவணை தடுப்பூசியை 75 சதவீதம் பேரும் செலுத்திக் கொண்டிருப்பதன் காரணமாக தமிழகம் முழுவதும் தொடர்ந்து கொரோனா பாதிப்புகள் குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. - [யாழ். பல்கலைக்கழத்தின் சகல கல்விசார் நடவடிக்கைகளும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம்](https://minnal24.com/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a/): -யாழ் நிருபர்- யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் கல்விசார் நடவடிக்கைகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களை வீடுகளுக்குச் செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் இன்று காலை இடம்பெற்ற பீடாதிபதிகள் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது. இதன்படி, நாட்டின் தற்போதைய சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, மாணவர் நலன்கருதி உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அனைத்துப் பீடங்களினதும் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படுவதுடன், விடுதிகளில் தங்கி நிற்கும் மாணவர்களை விடுதிகளில் இருந்து வெளியேறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனினும் பரீட்சை மற்றும் அத்தியாவசிய ஆய்வு நடவடிக்கைகளுக்காக மருத்துவ பீடத்தின் இறுதி வருட மாணவர்களுக்கு மாத்திரம் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விடுதிகளில் உள்ள மாணவர்களை வீடுகளுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ள போதிலும்இ மாணவர்களின் போக்குவரத்து ஏற்பாடுகளுக்கமைய சாவகாசமாக விடுதிகளை விட்டு வெளியேறுவதற்குப் போதிய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. - [தீ வைப்பு சந்தேக நபர்களை கைது செய்ய பொது மக்களின் உதவியை நாடும் பொலிசார்](https://minnal24.com/%e0%ae%a4%e0%af%80-%e0%ae%b5%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%95-%e0%ae%a8%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88/): நுகேகொட, மிரிஹான பெங்கிரிவத்த வீதிச் சந்தியில் கடந்த மார்ச் மாதம் 31ஆம் திகதி இரண்டு பேருந்துகளுக்கு தீ வைத்த சந்தேக நபர்களை கைது செய்ய குற்றப் புலனாய்வுத் திணைக்களம் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். கடந்த மார்ச் மாதம் 31ஆம் திகதி மிரிஹான பெங்கிரிவத்தை வீதிச் சந்தியில் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை மற்றும் அருகில் இருந்த பேருந்துகள் மற்றும் ஏனைய வாகனங்களுக்கு தீ வைப்பது போன்ற அமைதியின்மை தொடர்பில் சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர். சந்தேகநபர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் இருப்பின் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர். தொலைபேசி இலக்கங்கள் – 071 859 1755 , 071 859 4929 ,011 2 444 265 - [விலகினார் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே](https://minnal24.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b7%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a9/): இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். டாக்டர். சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே ஆரம்ப சுகாதார பராமரிப்பு, தொற்றுநோய்கள் மற்றும் கோவிட் நோய் கட்டுப்பாடு இராஜாங்க அமைச்சராக பணியாற்றினார். நாட்டில் அதிகரித்து வரும் மக்கள் போராட்டங்கள் காரணமாக இவர் பதவியை இராஜினாமா செய்ததாக தெரிவித்தார். - [பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தங்காலை இல்லத்துக்கு அருகில் பதற்றம்](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%b9%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%88-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%a4/): பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இல்லமான தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்தில் தற்போது பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஏராளமான பொதுமக்கள் ஒன்றுகூடி போராட்டம் நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. - [அமைச்சர்கள் நால்வர் பதவியேற்பு](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%b5/): அமைச்சர்களாக நால்வர் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றனர். அதன்படி நிதியமைச்சராக அலி சப்ரியும் , வெளிநாட்டமைச்சராக ஜீ.எல்.பீரிஸும் , நெடுஞ்சாலைகள் அமைச்சராக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும் ,கல்வியமைச்சராக தினேஷ் குணவர்தனவும் பதவியேற்றுக் கொண்டனர். - [நிதியமைச்சராக அலி சப்ரி](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%85%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%aa%e0%af%8d%e0%ae%b0%e0%ae%bf/): நிதியமைச்சர் பதவியில் அலி சப்ரி நியமிக்கப்படவுள்ளார் . அதேசமயம் நிதியமைச்சின் செயலாளராக பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேரா நியமிக்கப்படவுள்ளார். இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராகவும் புதிய ஒருவர் நியமனம் பெறவுள்ளார். இதற்கிடையில் இராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோ புள்ளேயும் தமது இராஜினாமா கடிதத்தை இன்று ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளார். - [இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசேட கூட்டம் இன்று](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a3%e0%af%88-3/): இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசேட கூட்டம் இன்று திங்கட்கிழமை  நடைபெறவுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை, நாட்டில் இடம்பெற்று வரும் போராட்டங்கள் மற்றும் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், இந்த சந்திப்பின் போது நாட்டில் தற்போது எழுந்துள்ள பல பிரச்சனைகள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. - [அஜித் நிவார்ட் கப்ரால் இராஜினாமா](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87/): இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் ,பதவியை இராஜினாமா செய்தார். - [அனைத்து தரப்பினருக்கும் ஜனாதிபதி அழைப்பு](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%a9%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/): தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண அனைத்து தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். இதனால் அமைச்சுப் பொறுப்பை ஏற்று தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். - [அரசாங்கத்திற்கு எதிராக பல இடங்களில் போராட்டங்கள்](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%aa/): அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஹோமாகம பிரதேசத்தில் இளைஞர்கள் குழு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். அரசாங்கத்திற்கு எதிராக பல இடங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், ஜா-எல பகுதியிலும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகின்றது. இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக நீர்கொழும்பு – கொழும்பு பிரதான வீதியின் ஜா-எல பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்து, இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. - [87 முறை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட நபர் கைது](https://minnal24.com/87-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b0%e0%af%8b%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%a4%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%9a%e0%af%86/): ஜேர்மனியில் 87 முறை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஜேர்மனியில் 61 வயதான நபர் ஒருவர் 4 மாகாணங்களில் உள்ள 3 வெவ்வேறு கொரோனா தடுப்பூசி நிலையங்களில் அடுத்தடுத்து தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த சுகாதார பணியாளர்கள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். உடனடியாக அவரை கைது செய்த பொலிஸார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் நாள் ஒன்றுக்கு 3 முறையும் இதுவரை 87 முறை அவர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதாக அதிர்ச்சிகரமான தகவலை தெரிவித்துள்ளார். ஜெர்மனியில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பலரும் அதற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாத நபர்களுக்காக இவர் தடுப்பூசி போட்டுக்கொண்டு முறைகேட்டில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். - [இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர பதவி விலகல்](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%af%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf-2/): இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவும் தற்போது பதவி விலகியுள்ளார். அவர் தமது பதவி விலகல் தொடர்பான கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இதேவேளை, ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்று வந்த விசேட அமைச்சரவைக் கூட்டம் சற்று முன்னர் நிறைவடைந்ததுள்ள நிலையில் , இது தொடர்பான முக்கிய முடிவுகள் நாளை திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. - [அனைத்து அமைச்சர்களும் இராஜினாமா](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%a9%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87/): பிரதமர் மகிந்த ராஜபக்ச தவிர்ந்த அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் தங்கள் அமைச்சுக்களை இராஜினாமா செய்வார்கள் என தெரிவிக்கப்படுகின்றது. பிரதமர் தொடர்ந்து செயற்படுவார் மற்றும் அமைச்சரவையின் ஏனைய உறுப்பினர்கள் அனைவரும் தமது இராஜினாமா கடிதங்களை பிரதமருக்கு வழங்கியுள்ளனர் என தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். மேலும் அடுத்து வரும் சில நாட்களில் புதிய அமைச்சரவை பதவியேற்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. - [நீதியமைச்சர் அலி சப்றி இராஜினாமா](https://minnal24.com/%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%aa%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%87/): அலி சப்றி தனது நீதித்துறை அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்துள்ளார். - [முழு அமைச்சரவையும் பதவி விலக முடிவு ?](https://minnal24.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b4%e0%af%81-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%bf/): முழு அமைச்சரவையும் தங்களது அமைச்சர் பதவிகளில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னும் முக்கியமான ராஜினாமாக்கள் சில மணிநேரங்களில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. - [நாமல் ராஜபக்ஷ இராஜினாமா](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%aa%e0%ae%95%e0%af%8d%e0%ae%b7-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%be%e0%ae%ae%e0%ae%be/): விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்துள்ளார். விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தனது அனைத்து இலாகாக்களில் இருந்தும் இராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சரவை அமைச்சர்கள் தற்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் அவசர அமைச்சரவை கூட்டமொன்றில் ஈடுபட்டுள்ளனர். இன்னும் முக்கியமான ராஜினாமாக்கள் சில மணிநேரங்களில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. - [கசிப்புடன் இளைஞர் ஒருவர் கைது](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b3%e0%af%88%e0%ae%9e%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d/): இன்று, ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைநகர் – களபூமியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவர் 350 மில்லிமீட்டர் சட்டவிரோத கசிப்புடன் கைது செய்யப்பட்டுள்ளார். ஊர்காவற்துறை பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸ் புலனாய்வு பிரிவினர் மற்றும் பொலிஸார் இணைந்து இக் கைது நடவடிக்கையினை மேற்கொண்டனர். குறித்த நபர் தனது வீட்டில் வைத்து கசிப்பினை பாவனை செய்துகொண்டு இருந்தபோதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். அக் கசிப்பினை உற்பத்தி செய்த நபரை கைது செய்யும் நோக்கில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நாளையதினம் ஊர்காவற்துறை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். - [பிரதமரின் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ஏற்கவில்லை](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%be%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%bf-2/): அரசாங்கம் மற்றும் கட்சிகளுக்குள் உடனடி அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தவும், நாட்டை முன்னெடுப்பதற்காகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவிடம் சமர்ப்பித்துள்ளார். இருப்பினும் ஜனாதிபதி அதை ஏற்கவில்லை. இதைவேளை புதிய பிரதமராக தினேஷ் குணவர்தனவின் பெயர் முன்மொழியப்பட்ட போதும் ஆனால் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. புதிய நிதியமைச்சராக ஹர்ச டி சில்வாவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது. - [நாயுடனும் ஆர்ப்பாட்டங்கள்](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%af%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95/): கொழும்பு உட்பட நாடளாவிய ரீதியில் பல பிரதேசங்களில், அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இரவு ​வேலையிலும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. பல பிரதேசங்களில் மின்வெட்டு அமுலில் இருக்கிறது.  ​கொழும்பு, கொட்டாஞ்​சேனையில் சில பிரிவுகளில் மின்வெட்டு அமுலில் இருக்கிறது. அந்த பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் வீதிக்கு இறங்கிவிட்டனர்.  இருட்டிலும் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். இதேவேளை, ராஜகிரிய பிரதேசத்தில் முன்னெடுக்கப்படும் அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் நாயுடன் மக்கள் கலந்துகொண்டனர். நாயின் கழுத்தில் பதாகையும் கொழுவப்பட்டுள்ளது. - [மக்கள் தற்போது நம்பிக்கையை இழந்துள்ளனர்](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88/): இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்து இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த நாட்டின் பொருளாதாரத்தை கட்டுப்படுத்தும் மக்கள் தற்போது நம்பிக்கையை இழந்துள்ளதால் அவர்களுக்கு கீழே நிற்க வேண்டும் என மஹேல வலியுறுத்தியுள்ளார். “இந்த பிரச்சனைகள் மனிதனால் உருவாக்கப்பட்டவை மற்றும் சரியான, தகுதி வாய்ந்த நபர்களால் சரிசெய்ய முடியும்” என்று மஹேல குறிப்பிட்டார். - [பியல் நிஷாந்தவின் இல்லம் சுற்றிவளைப்பு](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b7%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d/): பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினரும் மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்தவின் அளுத்கம இல்லத்தை மக்கள் சுற்றிவளைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆர்ப்பாட்டக்காரர்கள் அமைச்சரின் வீட்டிற்குள் நுழைவதைத் தடுக்க இரண்டு தடுப்புகள் உட்பட கூடுதல் பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது. - [மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைப்பு](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a3%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%af%81-2/): பொலிஸ்மா அதிபர், தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தலைவர், பாதுகாப்பு மற்றும் ஊடகத்துறை ஆகிய அமைச்சுகளின் செயலாளர்கள் எதிர்வரும் 5 ஆம் திகதி மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். - [பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இராஜினாமா?](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%b9%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%be%e0%ae%ae%e0%ae%be/): பிரதமர் மஹிந்த ராஜபக்ச தமது பதவியை இராஜினாமா செய்யத் தீர்மானித்திருப்பதாக உயர்மட்ட அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து புதிய அமைச்சரவை விரைவில் நியமிக்கப்படுமென சொல்லப்படுகிறது. அரசியல் நெருக்கடியை தவிர்ப்பதற்காக இடைக்கால அரசொன்றை அமைக்கும் நோக்கில் மஹிந்த பிரதமர் பதவியை துறக்கத் தீர்மானித்துள்ளதாக சொல்லப்பட்டது. - [பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மறுப்பு](https://minnal24.com/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a3%e0%af%88%e0%ae%95-3/): இலங்கை மின்சாரசபை, நாளைய தினம் அமுல்படுத்துவதற்குக் கோரிய 7 மணிநேர மின்வெட்டுக்கு அனுமதி வழங்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மறுப்பு தெரிவித்துள்ளது. நுகர்வோர் வசதிக்காக இரண்டு நேர இடைவெளிகளில் இதை 5 மணி நேரத்தை விட குறைக்குமாறு (பகலில் 3 அல்லது 4 மணி நேரம், இரவு 10 மணிக்கு முன்னர் 1 அல்லது 2 மணி நேரமும்) மின்சாரசபைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ஆணைக்குழு அறிவித்துள்ளது. - [24 மணிநேரத்துக்குள் இடைக்கால அரசாங்கம்?](https://minnal24.com/24-%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%87%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%af%8d/): இன்னும் 24 மணிநேரத்துக்குள் இடைக்கால அரசாங்கம் நிறுவப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பில் உயர்மட்டத்தில் தற்போது பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் அறியமுடிகின்றது. - [ஊடகவியலாளர்கள் கைது : யாழில் குழப்ப நிலை](https://minnal24.com/%e0%ae%8a%e0%ae%9f%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%af%88%e0%ae%a4%e0%af%81-%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4/): -யாழ் நிருபர்- யாழ்ப்பாண ஊடகவியலாளர்களை கைது செய்து பொலிஸ் வாகனத்தில் ஏற்றுமாறு யாழ்ப்பாண  பிரிவு உதவி பொலிஸ் அத்தியட்சகர் பணித்ததன் காரணமாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண அலுவலகத்திற்கு முன்னால் குழப்பம் ஏற்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கொக்குவில் அலுவலகத்துக்கு முன்பாகபொலிசார் குவிக்கப்பட்டு இன்று ஒரு குழப்பமான நிலை ஏற்பட்டது. சமகால நிலைமைகள் தொடர்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரனின் ஊடக சந்திப்புக்காக ஊடகவியலாளர்கள் கட்சி அலுவலகத்துக்கு சென்றபோது பொலிஸார் அதற்கு அனுமதிக்காததால் குழப்பமான நிலைமை ஏற்பட்டது. அங்கு சென்ற ஊடகவியலாளர்களின் பெயர் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு அடையாள அட்டைகள் பரிசோதித்து கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் ஊடக சந்திப்புக்களை நடத்த முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டது. அத்துடன்  ஊடகவியலாளர்களை, யாழ்ப்பாண பிரிவுக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர கைது செய்து பொலீஸ் வாகனத்தில் ஏற்றுமாறு உத்தரவிட்ட நிலையில்  இதனையடுத்து பொலிஸாருடன் நாடாளுமன்ற உறுப்பினர் […] - [இரவில் இருளில் மூழ்கும் சாவகச்சேரி வைத்தியசாலை : அங்கஜன் திடீர் விஜயம்](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%82%e0%ae%b4%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/): -யாழ் நிருபர்- யாழ். தென்மராட்சி சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில்  தொடர்ச்சியான மின்தடையால் நோயாளர்கள் அவதியுறும் நிலை தொடர்பில் ஆராய்வதற்காக யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் நேற்று நேரடியாக வைத்தியசாலைக்குச் சென்றார். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை மின்வெட்டு நேரம்  வைத்தியசாலையில் உள்ளம் மின்பிறப்பாக்கிகள் செயலிழந்து காணப்படுவதாக பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டது. இந்நிலையில் திடீரென விஜயம் மேற்கொண்ட அங்கஜன் எம்பி வைத்தியசாலையின் பல பகுதிகளை சல்லடை போட்டு ஆராய்ந்தார். அங்கு கூடியிருந்த மக்களிடம் வைத்தியசாலையின் செயற்பாடுகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் வினவியபோது இவ்வாறு பதிலளித்தனர். நாட்டில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் சுழற்சி முறையிலான மின்வெட்டு காரணமாக குறித்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் நோயாளர்கள் இரவு நேரங்களில் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர். அதுமட்டுமல்லாது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளர்கள் நிம்மதியாக சாப்பிட முடியாது தூங்கவும் முடியாமல்  அவதிப்படுவதாகவும் சுட்டிக்காட்டினர். இதனையடுத்து வைத்தியசாலையின் மலசலகூட தொகுதியை பார்வையிட்ட […] - [“சிவன் பாலியல் தொல்லை கொடுப்பதாக” - காளி மாதா பொலிஸில் புகார்](https://minnal24.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%af%8a/): “நான் அவன் இல்லை சிவன்”  சிவன் கூப்பிடுறாரு வா..  என கூறிக் கொண்டு ஆண் சாமியார் பாலியல் தொல்லை கொடுப்பதாக காளி மாதா பொலிஸில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது திண்டுக்கல் மாவட்டம் ஆரோக்கியமாதா தெருவில் வசித்து வரும் பவித்ரா. இவர் தன்னை காளிமாதாவின் அவதாரம் என கூறிக் கொண்டு ஆசிரமம் நடத்தி வருகிறார். முகம் முழுவதும் மேக்அப் , கழுத்தில் சிவலிங்க டாலர், கழுத்து நிறைய நகைகள், கோல்ட் நிறத்தில் தலைமுடி, உதட்டில் சாயம் என வலம் நிலையில்தான் இவருக்கு நான் அவன் இல்லை சிவன் என தெரிவித்து தவயோகி சிவஞானம் எனும் போலி சாமியார் தனக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். காளிமாதா எம்போதும் அம்பிரல்லா கட்டிங் சுடிதார்தான் கலர் கலராக அணிந்து கொண்டிருப்பார். தன்னிடம் வந்து ஆசி பெற்றதால்தான் ஓ பன்னீர் செல்வம் முதல்வரானதாகவும், தன்னை வரவேற்காததால்தான் எடப்பாடி பழனிச்சாமி […] - [பொருளாதாரத்தைக் காப்பாற்றுவதற்கு நான் நிதி அமைச்சராகத் தொடர்ந்து இருக்கத் தயார் - அலி சப்ரி](https://minnal24.com/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b1/): நாட்டில் தற்போதைய சூழ்நிலையில் விமர்சனங்களுக்கு முகங்கொடுக்க அனைவரும் அஞ்சுவதால் யாரும் அமைச்சுப் பதவியை ஏற்கத் தயாராக இல்லை. இந்த நிலையில் எத்தகைய சவால்களை எதிர்கொண்டாலும், நாட்டின் பொருளாதாரத்தைக் காப்பாற்றுவதற்கு தேவையானவற்றைச் செய்ய நான் நிதி அமைச்சராகத் தொடர்ந்து இருக்கத் தயாராக இருக்கிறேன் என்று நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தொடர்பான அறிக்கை மீதான ஒத்திவைப்பு வேளை விவாதம் போது புதிய அமைச்சர்கள் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானியில் நிதியமைச்சராக நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரியின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளமை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். - [பொதுமக்களின் உதவியை நாடியுள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவினர்](https://minnal24.com/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf/): மிரிஹான பகுதியில் கடந்த மார்ச் 31 ஆம் திகதி இடம்பெற்ற மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்ட சம்பவத்தின் போது இரண்டு பேருந்துகளுக்கு தீ வைத்த சந்தேக நபர் ஒருவரை கைது செய்வதற்கு பொதுமக்களின் ஆதரவை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கோரியுள்ளனர். இவர் தொடர்பான தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்துமாறு , குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ☎- 0112 444265 ☎- 071 8591755 - [எங்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ வேண்டும்](https://minnal24.com/%e0%ae%8e%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f/): ‘எங்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ வேண்டும்’ எனும் கோசங்களை எழுப்பியவாறு இன்று வெள்ளிக்கிழமை ஆரப்பாட்டமொன்று இடம்பெற்றுள்ளது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் சிலர், ‘we want GOTA’ ‘எங்களுக்கு கோட்டா வேண்டும்’ என கோஷங்களை எழுப்பிக்கொண்டு, ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் கொழும்பில் ஈடுபட்டிருந்தனர். - [பறக்கும் விலங்கின் எச்சம் கண்டுபிடிப்பு](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae/): அடகாமா பாலைவனத்தில் சுற்றித்திரிந்த புராதன, அரியவகை ஊரும் விலங்கின் பாதுகாக்கப்பட்ட எலும்புகளைக் கண்டுபிடித்திருப்பதாக சிலியின் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அவை 100 மில்லியன் ஆண்டுகளுக்கும் பழைமையானவை என்று கூறப்படுகிறது. அவை டைனோசர்களுடன் வாழ்ந்த டெரோசர்ஸ் எனும் பறக்கும் விலங்கின் எலும்புகள் என்பதை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். அவை டைனோசர்களைப் போன்று நீண்ட இறக்கைகளைக் கொண்டிருந்ததாகவும், நீண்ட மெல்லிய பற்களைக் கொண்டு தண்ணீரை உறிஞ்சிக் குடித்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இத்தகைய கண்டுபிடிப்பு மிக அரிது என்பதால் இது சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெறும் என்று நம்பப்படுகிறது.   - [10 நாட்கள் விடுமுறை](https://minnal24.com/10-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88/): பாராளுமன்றத்திற்கு 10 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அடுத்த கூட்டத்தொடரை ஏப்ரல் 19ஆம் திகதி முதல் நடாத்த பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்துள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க அறிவித்துள்ளார். இதன்படி ஏப்ரல் 19ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை பாராளுமன்றம் கூடவுள்ளது.   - [சர்வதேச நாணய நிதியத்தின் கூட்டம் காலவரையின்றி ஒத்திவைப்பு](https://minnal24.com/%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a3%e0%ae%af-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d/): இலங்கைக்கு உதவி வழங்குவது தொடர்பில் ஆராய சர்வதேச நாணய நிதியம் எதிர்வரும் 11 ஆம் திகதி வொஷிங்டனில் நடத்தவிருந்த கூட்டம் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய வங்கியின் புதிய ஆளுனர் நந்தலால் வீரசிங்கவிடம் சர்வதேச நாணய நிதியம் இன்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளதாக தெரிய வருகிறது. நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியே இதற்கான காரணமென தெரியவருகிறது. எவ்வாறாயினும் இந்த கூட்டத்தை திட்டமிட்டபடி நடத்தக் கோரும் இராஜதந்திர பேச்சுக்களை இலங்கை நடத்த ஆரம்பித்துள்ளது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள நிதியமைச்சர் அலி சப்ரியும் அமெரிக்கா செல்லவிருந்தமை குறிப்பிடத்தக்கது. - [பொலிஸாருக்கு ரோஜா பூ கொடுக்க முற்பட்ட பெண்](https://minnal24.com/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b8%e0%ae%be%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b0%e0%af%8b%e0%ae%9c%e0%ae%be-%e0%ae%aa%e0%af%82-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f/): பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் கம்பி வேலிக்கு அருகில் சென்ற, பெண்ணொருவர் சிவப்பு நிறத்திலான ரோஜா பூவை, கம்பிவேலிக்கு அப்பால் நின்றிருந்த பொலிஸாரிடம் கொடுத்தார். பொலிஸார் எவருமே வாங்கவில்லை. எனினும், ‘வாங்கிக்கொள்ளுங்கள், உங்களுடைய பிள்ளைகளும் இதேபோன்று போராட்டத்தில் ஈடுபட்டிருக்கலாம். ஈடுபடலாம், பரவாயில்லை வாங்கிக்கொள்ளுங்கள்’ என அப்பெண் கூறியுள்ளார். அதன்பின்னர், சீருடையில் இருந்த பொலிஸார் ஒருவர் வாங்கிக்கொண்டார். ரோஜாவை கொடுத்த அப்பெண், திரும்பி வந்துவிட்டார். இரும்பு வேலிகளை உடைத்துக்கொண்டு முன்னேறி செல்லமுடியாத வகையில், இறுக்கப்பட்டிருந்தன. பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த வேலியும் இவ்வாறே அமைக்கப்பட்டிருந்தமையு; குறிப்பிடத்தக்கது. - [கள்வர்களுடன் ஒன்றிணைந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட தயாரில்லை](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%92%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a3%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4/): நான் அரசியலில் இருக்கவும் தயார், ஓய்வு பெறவும் தயார் எனத் தெரிவித்த சஜித் பிரேமதாஸ, கள்வர்களுடன் ஒன்றிணைந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட தயாரில்லை என்று பாராளுமன்றி தெரிவித்தார். அரசாங்கத்துக்கு முடியவில்லை என்றால், நாங்கள் நாட்டை முறையாக பொறுப்பு ஏற்க தயார். அவ்வாறு செய்யவேண்டுமாயின், அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தை இல்லாமல் செய்யவேண்டும் அத்துடன் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். - [கொரோனாவினால் பாதிக்கபபட்டவர்களுக்கு இரத்தம் உறையுமா?](https://minnal24.com/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b0%e0%af%8b%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%ae%aa%e0%ae%9f/): கொவிட்–19 வைரஸ் தொற்றியவர்களுக்கு இரத்தம் உறையும் அபாயம் ஆறு மாதம்வரை நீடிப்பதாக அந்த ஆய்வு குறிப்பிட்டுள்ளது. நுரையீரலுக்குச் செல்லும் இரத்தக் குழாயை அடைக்கும் அபாயத்தை ஆய்வு சுட்டி  காட்டுகிறது.   ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் அந்தச் சிக்கலை முன்வைத்தன. ஆனால் பி.எம்.ஜி மருத்துவச் சஞ்சிகை நடத்திய புதிய ஆய்வு இரத்தம் உறையும் அபாயம் எவ்வளவு காலம் இருக்கும் என்று சோதித்தது. ஆய்வாளர்கள் ஸ்வீடனில் கொவிட்–19 வைரஸால் பாதிக்கப்பட்ட ஒரு மில்லியனுக்கும் அதிகமானோரை அந்த வைரஸால் பாதிக்கப்படாத நான்கு மில்லியன் பேருடன் ஒப்பிட்டுப் பார்த்தனர். கால்களில் இரத்தம் உறையும் அபாயம் மூன்று மாதம்வரை நீடிப்பதாகவும் அந்த ஆய்வு காட்டுகிறது. - [மட்டு.நாவற்காடு பிரதேச வைத்தியசாலையில் சௌபாக்கிய கணபதி திருவுருவச்சிலை திறந்து வைப்பு](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a-%e0%ae%b5/): மட்டக்களப்பு நாவற்காடு பிரதேச வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சௌபாக்கிய கணபதி திருவுருவச்சிலையானது இன்று பி்.ப 6.00 மணியளவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது இந்நிகழ்விற்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்தியர் துஷ்யந்தன் சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பித்தார். வைத்தியசாலை பொறுப்பதிகாரி வைத்தியர் ஸ்ரீவித்தியன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வைத்தியர்கள், சுகாதார உத்தியோகத்தர்கள், கிராம மக்கள் என பலர் கலந்து கொண்டனர். - [சின்ன ஊரணி வாலிபர் ஐக்கியத்தினால் நடாத்தப்பட்ட மாபெரும் இரத்த தான முகாம்](https://minnal24.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9-%e0%ae%8a%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%90%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf/): உயிர் காப்போம் இலங்கை மெதடிஸ்த்த திருச்சபை, சின்ன ஊரணி வாலிபர் ஐக்கியத்தினால் நடாத்தப்பட்ட  மாபெரும் இரத்த தான முகாம். இன்று வெள்ளிக்கிழமை காலை 9.00 அளவில்  சின்ன ஊறணி அமைந்துள்ள மெதடிஸ்த்த ஆலயத்தின் அருட்தந்தை கே.ஜெகதாஸ் தலைமையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்தவங்கியின் வைத்தியர் டி.தவநேசன், இரத்த வங்கி பொறுப்பு உத்தியோகத்தர் க.ஜெயராஜ் மற்றும் தாதி உத்தியோகத்தர்கள்  கடமையாற்றினார். யாரெல்லாம் இரத்த தானம் செய்யலாம்? உடல் ஆரோக்கியத்தோடு இருக்கும் 18 வயது முதல் 65 வயதுள்ள அனைவரும் ரத்ததானம் செய்யலாம். அதேபோல், ரத்த தானம் செய்பவர்களின் உடல் எடை சுமார் 45 கிலோவுக்கு மேல் இருக்க வேண்டும். ஒருமுறை 350 லிருந்து 450 மில்லி லீட்டர் வரை (ஒரு யூனிட்) இரத்தத்தைக் கொடுக்கலாம். இதனால், உடலுக்கு எந்த பாதிப்பும் வராது. அதேபோல், ஒரு முறை இரத்த தானம் செய்துவிட்டால் 3 மாதம் கழித்து மீண்டும் இரத்த தானம் செய்யலாம். பொதுவாக, ஆண்கள் […] - [நோட்டன் கினிகத்தேன பிரதான வீதியில் மண் சரிவு](https://minnal24.com/%e0%ae%a8%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%be/): -நுவரெலியா நிருபர்- நோட்டன் கினிகத்தேன பிரதான வீதியில் மண் சரிவு இதனால் நோட்டன் வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளது. நோட்டன் கினிகத்தேன பிரதான வீதியில் அட்லிஸ் பகுதியில் நேற்று மாலை வேளையில் பெய்த கனமழையால் பாரிய மண் மேடு சரிந்து உள்ளது. இதனால் நோட்டன் கினிகத்தேன செல்ல முடியாத நிலையில் உள்ளது. அதற்கு மாற்று வழியாக நோட்டன் லக்சபான வழியாக வாகனங்கள் செல்ல பாதையை மாற்றி உள்ளனர். மேலும் கடந்த 20 மணித்தியாலங்கள் இந்த வீதி மூடப்பட்டுள்ளது. வீதி அபிவிருத்தி அதிகாரசபை மண் திட்டு களை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று மதியத்துக்கு பின்னர் அவ்வழியில் வாகனங்கள் செல்ல முடியும், என வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். - [மன்னாரில் அரசுக்கு எதிராக போராட்டம் : பல நூற்றுக்கணக்கானவர்கள் பங்கேற்பு](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0-2/): -மன்னார் நிருபர்- அரசாங்கத்திற்கு எதிராகவும் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இன்று வெள்ளிக்கிழமை காலை மன்னாரில் மாபெரும் கண்டன போராட்டம் இடம்பெற்றது. குறித்த கண்டன போராட்டம் காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் இடம் பெற்றது. சிவில் அமைப்புக்கள், பொது அமைப்புக்கள், பல்கலைக்கழக மாணவர்கள், மற்றும் மன்னார் மாவட்ட மக்கள் இணைந்து குறித்த கண்டன போராட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அரசின் தூர நோக்கற்ற நிதி நிர்வாக முகாமைத்துவத்தால் நாடு பெரும் பொருளாதார பின்னடைவுடன் பட்டினிச்சாவை நோக்கியுள்ளது. இதனை கண்டித்து மன்னாரில் தன்னிச்சையாக ஒன்று கூடிய பொதுமக்கள் இளைஞர் யுவதிகள் பாடசாலை மாணவர்கள் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக கோட்டபாய ராஜபக்ஷ அரசுக்கு எதிராக பல கோஷங்களை எழுப்பியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம், பொருட்களுக்கு தட்டுப்பாடு, எரிபொருட்கள் எரிவாயு தட்டுப்பாடு, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, பயங்கரவாத தடைச்சட்டத்தை இல்லாமல் […] - [இலங்கைக்கு கடத்த இருந்த 260 கிலோ கேரளகஞ்சா பறிமுதல் : மூவர் கைது](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-260/): -மன்னார் நிருபர்- நாகை மாவட்டம் வேதாரண்யம் நகராட்சிக்குட்பட்ட ஆறு காட்டுத்துறை உப்பனாறு அருகிலிருந்து படகின் மூலம் இலங்கைக்கு கடத்த இருந்த சுமார் 25 லட்சம் ரூபாய் பெறுமதியாக கேரள கஞ்சா மூட்டைகளுடன் நேற்று வியாழக்கிழமை  இரவு மூன்று பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இலங்கைக்கு கடல் வழியாக கேரள கஞ்சா கடத்தப்பட உள்ளதாக வேதாரண்யம் கடலோர காவல் நிலைய துணை காவல் கண்காணிப்பாளர் குமாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று வியாழக்கிழமை  இரவு குறித்த பகுதிக்குச் சென்ற வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழும ஆய்வாளர் செல்வராசு தலைமையிலான பொலிஸ் குழுவினர் குறித்த பகுதியில் நின்று கொண்டிருந்த சரக்கு வாகனத்தை சோதனை செய்தனர். இதன் போது குறித்த வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 09 சாக்கு மூட்டைகள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. குறித்த சாக்கு மூட்டைகளைப் பிரித்துப் பார்த்த போது அதில் கேரள கஞ்சா உள்ளமை தெரிய வந்தது. வாகனத்தை ஓட்டி வந்த […] - [மானிப்பாயில் இடி விழுந்து வீடு சேதம்](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4/): -யாழ் நிருபர்- இன்று யாழில் மழையுடனும் இடியுடனும் கூடிய காலநிலை நிலவியது. அந்தவகையில் மானிப்பாய் செல்லமுத்து விளையாட்டரங்கிற்கு அருகே உள்ள வீட்டின் மீது இடி விழுந்ததால் வீடானது பகுதியளவில் சேதமாகியுள்ளது. எனினும் இந்த அனர்த்தத்தினால் தெய்வாதீனமாக எவருக்கும் காயங்கள் எவையும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. - [கடன் கேட்க சென்ற பெண் அடித்துக்கொலை – சடலம் தோண்டி எடுக்கப்பட்டது](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95-%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%9f%e0%ae%bf/): -யாழ் நிருபர்- யாழ். மணியந்தோட்டத்தில் கொலை செய்து புதைக்கப்பட்ட பெண்ணின் சடலம் இன்று வெள்ளிக்கிழமை தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராசா மற்றும் சட்ட மருத்துவ வல்லுநர் எஸ்.பிரணவன் ஆகியோரின் முன்னிலையில் இந்தப் பணி இன்று முன்னெடுக்கப்பட்டது. அயல் கிராமத்தைச் சேர்ந்த 48 வயதுடைய பெண் ஒருவர் கடந்த முதலாம் திகதி தொடக்கம் காணாமற்போயிருந்த நிலையில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. குறித்த பெண்ணை அடித்துக் கொலை செய்து புதைத்தனர் என்ற குற்றச்சாட்டில் நேற்று வியாழக்கிழமை கணவன், மனைவி மற்றும் அவர்களது மகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பணக் கொடுக்கல் வாங்கல் காரணமாக எழுந்த முரண்பாட்டினால் சந்தேக நபர்கள் பெண்ணை அடித்துக் கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சடலம் மீட்கப்பட்ட குழியிலிருந்து அந்த பெண் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டுள்ளது. - [வட கடல் நிறுவன ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்](https://minnal24.com/protest/): குருநகர் வடகடல் நிறுவன ஊழியர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். தேவையற்ற செலவுகளால் ஊழியர்களின் ஊதியம் சுரண்டப்படுகிறது, கடந்த மூன்று ஆண்டுகளாக பொது முகாமையாளர் நியமிக்கப்படவில்லை, நூல் கொள்வனவின்போது கொள்வனவு நடைமுறைகள் பின்பற்றப்படுவதில்லை, நிறுவன ஊழியர்களின் நலனை காக்கும் சிறந்த தலைவரை எமக்கு தாருங்கள் போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த நிறுவன ஊழியர்கள் கடந்த மாதமும் வடகடல் நிறுவனத்திற்கு முன்னால் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டு பின்னர் பேரணியாக யாழில் உள்ள ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் அலுவலகத்திற்கு சென்று, முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் மகஜர் ஒன்றினை கையளித்திருந்தனர். இதன்போது முன்னாள் அமைச்சர், இரண்டு வாரங்களில் அவர்களுக்கு தீர்வு வழங்குவதாக உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது. - [அதிகாலை 6 மணி முதல் மண்ணெண்ணைக்காக காத்திருக்கும் அவலம்](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%88-6-%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%86%e0%ae%a3/): –மன்னார்  நிருபர்– மன்னார் எரிபொருள் நிரப்பு நிலையத்தில்   மண்ணெண்ணை இல்லாத போதிலும்  மண்ணெண்ணையை பெறுவதற்காக பெண்கள் சிறுவர்கள் உட்பட நூற்றுக்கணக்கானவர்கள் வரிசையில் உச்சி வெயிலிலும் காத்திருக்கும் அவல நிலை மன்னாரில் காணப்படுகின்றது. இன்று அதிகாலை 6 மணி முதல் மன்னார் நகர் பகுதியை சேர்ந்த மக்கள் எரிபொருள் நிரப்புவதற்கு என நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர் . குறிப்பாக மன்னார் எரிபொருள் நிரப்பு நிலையத்தில்  மண்ணெண்ணை இல்லாத நிலையிலும் அதை பெறுவதற்காக மக்கள் கேன்களுடன் நீண்ட வரிசையில் காத்திருப்பதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. மேலும் டீசல் தட்டுப்பாடு தொடர்ச்சியாக காணப்படுகின்ற மையினால் மன்னார் கச்சேரி தொடக்கம் எரிபொருள் நிரப்பு நிலையம் வரை வாகனங்கள் நிற்பதையும் காணக்கூடியதாக உள்ளது அதே நேரம் எரிபொருள் மற்றும் எரிவாயு மின்சாரம் போன்ற சேவைகளை இவ் அரசாங்க தடையின்றி வழங்க கோரியும் இல்லை என்றால் ஆட்சியை விட்டு வெளியேற கோரியும் இளைஞர் குழு ஒன்றும் அப்பகுதியில் போராட்டம் ஒன்றை மேற்கொண்டு வருகின்றமை […] - [கிழக்கே நிலவும் குறைந்த வளிமண்டல தாழ் அமுக்கம் - வளிமண்டல திணைக்களம் எச்சரிக்கை](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%87-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4/): இலங்கையின் கிழக்கே நிலவும் குறைந்த வளிமண்டல தாழ் அமுக்கம் காரணமாக, ஞாயிற்றுக்கிழமை வரை மழையுடனான கூடிய வானிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. அடுத்த சில நாட்களுக்கு இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும். வேறு சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழையை எதிர்பார்க்கப்படுகின்றது. நாடு பூராகவும் இன்று வெள்ளிக்கிழமை இரவு 11.00 மணி வரை இடியுடன் கூடிய கடுமையான வானிலை நிலவுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். சூரியனின் […] - [மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக துவிச்சக்கரவண்டி வழங்கி வைப்பு](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%87%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be/): மட்/ மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஷ்வரா வித்தியாலயத்தில் தரம் 5ல் கல்வி பயிலும் மாணவனது வறுமை நிலமையை கருத்திற்கொண்டும் மாணவரது கல்வி மேம்பாட்டை ஊக்கப்படுத்தும் நோக்குடன் புலமைபரீட்சை சித்தியடைந்த மூன்று மாணவர்களுக்கு அஹிம்சா சமூக நிறுவனம் துவிச்சக்கர வண்டியை மேலதிக கற்றல் செயற்ப்பாட்டிற்க்காக கையளிக்கப்பட்டது. - [அலி சப்ரி இன்னும் நிதி அமைச்சரா ?](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%aa%e0%af%8d%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%ae/): அலி சப்ரியின் நிதியமைச்சர் இராஜினாமாவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் , இன்றுவரை நிதி அமைச்சராக உள்ளார் என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக இலங்கையில் இருந்து வெளிவரும் ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சப்ரி இந்த வார தொடக்கத்தில் மூன்று அமைச்சர்களுடன் பதவிக்கு நியமிக்கப்பட்டார், ஆனால் ஒரு நாள் கழித்து தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்தார், இடைக்கால நடவடிக்கையாக மட்டுமே இலாகாவை ஏற்றுக்கொண்டதாகவும், நிலைமையை கையாள ஜனாதிபதி விரும்பினால் பொருத்தமான நபரை நியமிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். இராஜினாமா கடிதத்தை கையளித்த போதிலும், ஜனாதிபதி இன்றுவரை இராஜினாமாவை ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் புதிய அமைச்சரவை பதவியேற்கும் போது சப்ரி தொடர்ந்து நிதியமைச்சராக இருப்பார் என்றும், ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட புதிய பொருளாதார ஆலோசனைக் குழுவுடன் ஐஎம்எப்க்கு (IMF ) செல்வார் என்றும் அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. - [உப்புமாவில் விஷம் கலந்து குழந்தையை கொலை செய்த கொடூர தாய்](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/): கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என்தற்காக , தனது ஒன்றரை வயது குழந்தைக்கு உப்புமாவில் எலி மருந்(விஷ)தை கலந்து கொலை செய்த தாயை பொலிஸார் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் குளக்கச்சி பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, ஜெகதீஷ் (வயது-34), மனைவி கார்த்திகா (வயது-21) இவர்களுக்கு சஞ்சனா என்ற மூன்றரை வயது பெண் குழந்தையும், ஒன்றரை வயதில் சரண் என்ற ஆண் குழந்தையும் உள்ள நிலையில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை சரண், திடீரென எலிக்காக வைத்த விஷப்பொடியை சாப்பிட்டு மயக்கமடைந்ததாக தாய் கூலி வேலைக்கு சென்றிருந்த தனது கணவர் ஜெகதீஷ்க்கு தெரிவித்துள்ளார். இதையடுத்து குழந்தையை மார்த்தாண்டம் பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் குழந்தையை பரிசோதித்த மருத்துவர் குழந்தை உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்கு ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் விஷப்பொடியை குழந்தையே […] - [நிதியமைச்சராகிறாரா சாணக்கியன்?](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b0%e0%ae%be-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a3%e0%ae%95/): நாட்டில் அரசுக்கெதிராக போராட்டங்களை முன்னெடுத்துவரும் நிலையில் மட்டக்களப்பு நகர் பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் புதிய நிதியமைச்சராக பதவியேற்கவுள்ளார் என தெரிவித்து பனர்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது - [சாய்ந்தமருதில் ஓவியப் பயிற்சிப்பட்டறை](https://minnal24.com/%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%93%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%af/): -எம்.எஸ்.எம்.ஸாகிர்- சாய்ந்தமருது பிரதேச செயலக கலாசாரப்பிரிவு மற்றும் கலாசார அதிகாரசபை இணைந்து நடாத்திய ‘தொலஸ்மகே பஹன’ – 2022 வேலைத்திட்டத்தின் ‘ஓவியப் பயிற்சிப்பட்டறை’ சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில்  இடம்பெற்றது. கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் வழிகாட்டலில், கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எச்.சபீகாவின் ஒருங்கிணைப்பில், பிரதேச செயலாளர் ஏ.எம்.ஆசிக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அம்பாறை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரீ.எம். றின்ஸான், கலாசார உத்தியோகத்தர் சுரேஷ் குமார் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து சிறப்பித்ததோடு, ஏ.ஆர்.எம். ஹாதி நிகழ்வில் வளவாளராகக் கலந்து கொண்டார். - [சாணக்கியன் பாராளுமன்றத்துக்கு தலைமை தாங்கும் அருகதையற்றவர் - முஷாரப் முறைப்பாடு](https://minnal24.com/%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%a4%e0%af%8d/): -கல்முனை நிருபர்- பாராளுமன்றத்துக்கு தலைமை தாங்குகின்ற தகுதி, அருகதை ஆகியவற்றை பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் இழந்து விட்டார், என்று குற்றம் சாட்டி சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவுக்கு எஸ். எம். எம். முஷாரப் நேற்று வியாழக்கிழமை எழுத்துமூல முறைப்பாடு மேற்கொண்டார். இவர் இம்முறைப்பாட்டை சபாநாயகரிடம் நேரில் கையளித்தார். முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டு உள்ளவை வருமாறு, சாணக்கியன் இராசமாணிக்கம் பாராளுமன்ற உறுப்பினராகவும், பாராளுமன்றத்துக்கு தலைமை தாங்குகின்ற ஒரு உறுப்பினராகவும் இருந்து கொண்டு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒழுக்க நெறிமுறைகளை மீறி நடந்து உள்ளார். இவரின் நடவடிக்கை ஒழுக்க விழுமியங்களுக்கு புறம்பானது மாத்திரம் அல்ல பாராளுமன்றத்தின் சம்பிரதாயத்துக்கும் மாறானது ஆகும். சக பாராளுமன்ற உறுப்பினரின் சிறப்புரிமையை மீறிஉள்ளது. கடந்த 05 ஆம் திகதி நான் பாராளுமன்றத்தில் உரையாற்றி கொண்டிருந்தபோது அவர் குறுக்கிட்டு இடையூறுகள் ஏற்படுத்தினார். மாத்திரம் அல்ல 5000 ரூபாய் பணத்தை எனக்கு அன்பளிப்பு செய்ய முயன்று நான் பணத்துக்கு விலை போகின்றவன் என்று காண்பித்து […] - [யாழ். போதனா வைத்தியசாலை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் கண்டனப் போராட்டம்](https://minnal24.com/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%b5%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%af%88-%e0%ae%85/): -யாழ் நிருபர்- யாழ். போதனா வைத்தியசாலையின் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில், ‘மோசமான நிதி நிர்வாகத்தால் மனித உயிர்களை பலி கொடுக்கபோகின்றோமா?’ என்ற கருப்பொருளில் கண்டனப் போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. நோயாளர்களுக்கான அத்தியாவசிய மருத்துப்பொருட்கள் தட்டுப்பாடு மற்றும் குருதி சுத்திகரிப்பதற்கான மருத்து தட்டுபாடு நிலவுகின்ற நிலை அதனை தீர்க்க தகுந்த வழிமுறையினை பெற்றுத்தரக்கோரி இன்று குறித்த கண்டன கவனயீர்ப்பு போராட்டம் யாழ். போதனாவைத்திய சாலையின் முன்பாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் யாழ் போதனா வைத்தியசாலையின் தலைவர் வைத்தியர் ஆ.மதிவாணன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் யாழ். போதனா வைத்தியசாலையின் உபதலைவர் வைத்தியர் பி.மயூரன் உள்ளிட்ட நிர்வாக அதிகாரிகள் உத்தியோகத்தர்கள், வைத்திய குழுவினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு தமக்கான நீதியினை பெற்றுத்தரக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இலவச மருத்துவம் ஆபத்தில், அரசின் மோசமான நிதி நிர்வாகம் காரணமாக அத்தியாவசியமான மருத்துக்கள் இல்லாமல் சுகாதார கட்டமைப்பு சீரழிந்து […] - [இலங்கையிலிருந்து மேலும் ஒரு குடும்பம் அகதிகளாக தனுஷ்கோடியை சென்றடைந்தனர்](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%af%87%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/): -மன்னார் நிருபர்- இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் உணவு, அத்தியாவசிய தேவைகளுக்காக கடும் சிரமத்திற்கு வருகின்ற நிலையில் மேலும் மன்னாரில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் இன்று வெள்ளிக்கிழமை  அதிகாலை தனுஷ்கோடியை சென்றடைந்துள்ளனர். அண்மையில் மன்னார் மற்றும் வவுனியாவைச் சேர்ந்த 3 குடும்பங்களை சேர்ந்த 12 பேர் கடல் வழியாக தனுஷ்கோடி சென்றடைந்தனர். தமிழகத்திற்கு அகதிகளாக வந்த அவர்களை மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இன்று  வெள்ளிக்கிழமை அதிகாலை மன்னார் முத்தரிப்புத்துறை யை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தனுஷ்கோடியை சென்றடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தனுஷ்கோடி இலங்கைக்கு அருகே உள்ளதால் இலங்கை தமிழர்கள் இறுதிக்கட்ட போரின்போது அகதிகளாக தனுஷ்கோடி வழியாக தமிழகத்திற்குள் வந்த இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் தங்கியுள்ளனர். இதே போல் தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக […] - [நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படவுள்ள 40,000 மெட்ரிக் டன் அரிசி](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%87%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af/): இந்த வார இறுதியில் 40,000மெட்ரிக் டன் அரிசியின் முதல் தொகுதி நாட்டுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்திய கடன் வசதி எல்லையின் கீழ், இறக்குமதி செய்யப்படும் குறித்த அரிசி  உள்ளூர் சந்தையில் விற்பனை செய்யப்படவுள்ள விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளது அதன்படி, இறக்குமதி செய்யப்படும் நாட்டரிசி,பச்சை அரிசி என்பன  ஒரு கிலோகிராம்  110 ரூபாவுக்கும், சம்பா அரிசி ஒரு கிலோகிராம் 130 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. - [ஜீவனுக்கு முதுகெலும்பும் இல்லை, சுய புத்தியும் இல்லை - இளைஞர் அணி தலைவர்](https://minnal24.com/%e0%ae%9c%e0%af%80%e0%ae%b5%e0%ae%a9%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%86%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%ae/): -பதுளை நிருபர்- தந்தையின் பிணத்தை வைத்து அரசியலுக்கு வந்த ஜீவனுக்கு தெரியுமா மலையக மக்களின் வேதனை என இளைஞர் அணி தலைவர் பா.சிவநேசன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில். நேற்று வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்ற உரையில் தலவாக்கலை போராட்டத்தை கொச்சைபடுத்தி பேசிய ஜீவனுக்கு முதுகெலும்பும் இல்லை சுய புத்தியும் இல்லை. மலையக மக்கள் இன்று விலைவாசியின் உயர்வு காரணமாக வீதியில் போராடுகின்றார்கள் இந்த அறிவில்லாத ஜீவன் ஜனாதிபதி கோட்டாபாயவிடம் 1000 ரூபாய் சம்பளம் கேட்கின்றார் இன்று நாட்டில் எந்த பொருள் என்ன விலை என்று தெரியாத இந்த ஜீவன்களுக்கு மக்களின் கஸ்டம் தெரியுமா? அரசி ஒரு கிலோ 220 ரூபா, மாவு 200 ரூபா, தேங்காய்எண்ணெய் 1300 ரூபா, பருப்பு 450 ரூபா, பால்மா 1950 ரூபா விற்கும் போது இந்த ஜீவன் ஜனாதிபதியிடம் 1000  ரூபாய் கேட்கின்றாரே இவருக்கு அறிவு இருக்கின்றதா? கடந்த ஒரு வருடத்திற்கு முன் 1000 ரூபாய் […] - [நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b2-%e0%ae%aa%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa-3/): நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இலங்கைக்கு கிழக்காக உருவாகியுள்ள கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக, நாட்டின் பல பிரதேசங்களில் மழை நிலைமை அடுத்த சில நாட்களில் அதிகரிக்கக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது மேலும் மத்திய,சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.   - [இலங்கை தமிழர்களுக்கு உதவிட தனது "யாசக நிதியை" வழங்கிய முதியவர்](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%89%e0%ae%a4%e0%ae%b5/): இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் தமிழர்களுக்கு உதவுவதற்காக , மதுரையைச் சேர்ந்த யாசகர் ஒருவர், முதல்வரின் பொதுநிவாரண நிதிக்கு 20 ஆயிரம் ரூபாய் வழங்கி உள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்தவரான பூல்பாண்டி என்பவர் மதுரை வீதிகள் தோறும் யாசகம் பெற்று, தனது அன்றாட வாழ்க்கையை நடத்தி வருகின்றார். இந்தநிலையில் தனக்கு கிடைக்கப்பெற்ற யாசக நிதியிலிருந்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தை இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் தமிழர்களுக்கு உதவும் நோக்கில் மதுரை மாவட்ட ஆட்சியாளரிடம் ஒப்படைத்துள்ளார். இவர் கொரோனா பெரும் தொற்று காலத்திலும், தலா பத்தாயிரம் ரூபாய் வீதம் 30 தடவைக்கு மேல் முதல்வரின் பொதுநிவாரண நிதிக்கு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. - [சம்மாந்துறையில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டம்](https://minnal24.com/%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9f%e0%af%88%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%8d/): -கல்முனை நிருபர்- நாட்டின் பெருளாதார நிலைமை வீழ்ச்சியடைந்து மக்களின் வாழ்வாதாரம், அன்றாட ஜீவனோபாயம் கஸ்டத்திற்குள்ளான நிலையில் தற்போதிருக்கும் அரசாங்கத்திற்கும், ஜனாதிபதி மற்றம் பிரதமர் ஆகியோருக்கு எதிராக நாட்டின் பல்வேறு இடங்களிலும் ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில் அம்பாறை மாவட்ட சம்மாந்துறை பிரதேசத்தில் மூன்றாவது நாளாக இன்று ஐக்கிய மக்கள் சக்தியின் சம்மாந்துறை பிரதம அமைப்பாளர் எம்.ஏ. ஹசன் அலி தலைமையில் வியாழக்கிழமை இரவும் தீப்பந்தங்களை கையில் ஏந்திக்கொண்டு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. சம்மாந்துரை பொதுசந்தையிலிருந்து ஆரம்பித்து ஹிஜ்ரா சந்திவரை சென்ற ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன் அதனை கட்டுப்படுத்தும் வேலைகளை சம்மாந்துறை பொலிஸார் துரிதகதியில் மேற்கொண்டிருந்ததுடன் பாதுகாப்பு கடமையிலும் ஈடுபட்டிருந்தமையையும் காண முடிந்தது. - [அரசுக்கு வழங்கிய ஆதரவை விலக்கி கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் தௌபீக் அறிவிப்பு](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%86%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%b5%e0%af%88-%e0%ae%b5/): -கல்முனை நிருபர்- அரசாங்கத்தினால் பாராளுமன்றத்திற்கு கொண்டுவரப்பட்ட பிரேரணைகளில் கீழ் 20வது அரசியலமைப்புத் திருத்தம், பசில் ராஜபக்‌ஷவினால் கொண்டுவரப்பட்ட நிதி சம்மந்தப்பட்ட ஒரு பிரேரணை, 2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பின் வாக்கெடுப்பு போன்றவைகளுக்கு மாத்திரம் தான் நான் ஆதரவை வழங்கியிருந்தேன். ஆனால் இனிவரும் காலங்களில் அரசாங்கத்தினால் கொண்டுவரப்படுகின்ற எந்த பிரேரணைக்கும் ஆதரவாக வாக்களிப்பதில்லை என்று தீர்மானித்துள்ளேன். எனது கட்சியின் (ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்) தீர்மானத்திற்கு கட்டுப்பட்டதுடன் நாட்டில் ஏற்பட்டிருக்கும் விலையேற்றம், எரிபொருள் இல்லாமை, எரிவாயு இல்லாமை, மருந்துகள் தட்டுப்பாடு, அத்தியாவசிப் பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் பல காரணங்களுக்காக இத்தீர்மானத்தினை எடுத்துள்ளேன், என 20க்கு ஆதரவளித்த திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் அரசுக்கு ஆதரவு வழங்குவதிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். - [யாழில் பல பகுதிகளில் இடம்பெற்ற போராட்டங்களின் தொகுப்பு](https://minnal24.com/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b2-%e0%ae%aa%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae/): -யாழ் நிருபர்- அரசிற்கு எதிராக இன்று ஊர்காவற்துறை பிரதேச வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்கள் பதாதைகளை ஏந்தியவாறு ‘மருந்துக் தட்டுப்பாட்டை நீக்கு, உயிர் தியாகம் செய்ய வைக்காதே, நோயாளிகளை காப்பாற்று என கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று யாழ்பாணத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. இப் போராட்டமானது யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் ஆரம்பிக்கப்பட்டு மல்லாகம் சந்தி ஊடக சென்று சுன்னாகம் பேரூந்து நிலையத்தில் நிறைவடைந்தது. இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கொடும்பாவியை வீதியில் இழுத்து சென்று சுன்னாகம் பேரூந்து நிலையத்தில் தீ மூட்டி தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தற்போதய அரசாங்கம் வீட்டுக்கு செல்லவேண்டும் எனவும் புதிய அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தனர். ஐக்கிய மக்கள் சக்தியினரின் ஏற்பாட்டில் நாடு பூராகவும் அனைத்து தொகுதிகளிலும் ஐக்கிய மக்கள் சக்தியினரால் இன்று  அரசுக்கு எதிராக போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. அந்தவகையில் ஐக்கிய மக்கள் […] - [எரிபொருள், எரிவாயு விநியோகம் தொடர்பான விசேட கலந்துரையாடல்](https://minnal24.com/%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%af/): -யாழ் நிருபர்- தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலமையினால் எரிபொருள் மற்றும் எரிவாயு விநியோகம் தொடர்பான பொறிமுறையொன்றை ஏற்படுத்துவதற்கான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன்  தலைமையில் யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), பணிப்பாளர் (யாழ்.போதனா வைத்தியசாலை), உதவி மாவட்டச் செயலாளர், பிரதேச செயலாளர் (யாழ்ப்பாணம்), பிரதி ஆணையாளர் (கமநல அபிவிருத்தி திணைக்களம்), உதவிப் பணிப்பாளர் ( கடற்தொழில் நீரியல் வளங்கள் திணைக்களம்), மாவட்டச் செயலக பிரதம கணக்காளர், தொகைச்சாலை அதிகாரி ( இ.பெ.ச), பிராந்திய முகாமையாளர்( இ.போ.ச), தலைவர்( வணிகர் கழகம்), பிரதம பிராந்திய முகாமையாளர் ( இ.போ.ச), சாலை முகாமையாளர்கள் ( இ.போ.ச) முகாமையாளர் ( எஸ்.வி.எம்) ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்.   - [நாட்டிற்கு ஆசி வேண்டி மன்னாரில் இடம் பெற்ற சர்வமத பிரார்த்தனை](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%86%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%a9/): -மன்னார் நிருபர்- ‘தந்தையே எமது தேசத்தை விழித்தெழச் செய்வீர்’ என்னும் கருப்பொருளில் மன்னார் கறிற்ராஸ் வாழ்வுதயத்தின் ஏற்பாட்டில் கறிற்ராஸ்-வாழ்வுதயத்தின் இயக்குனர் அருட்பணி செ.அன்ரன் அடிகளார் தலைமையில் இன்று வியாழக்கிழமை காலை 10 மணியளவில் அமைதிப் பவனியும் தேச விழிப்புணர்வுக்கான சர்வமத வழி பாடும் மன்னார் கறிற்ராஸ் வாழ்வுதய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன் போது நாட்டில் ஜனநாயகத்தை கட்டியெழுப்புவோம், எங்கள் பிஞ்சுகளின் எதிர் காலத்தினை வளப்படுத்துவோம், எமது நாட்டை இருளிலிருந்து மீட்டெடுப்போம், விழிம்பு நிலையிலுள்ள மக்களை பாதுகாப்போம், என்னும் சுலோகங்களை தாங்கிய மக்கள் குறித்த நிகழ்வில் பங்கெடுத்தனர். தற்காலத்தில் நாட்டில் ஏற்பட்டுள்ள வறுமை மற்றும் இயல்பு நிலை பாதிப்புகளால் துன்பப்படும் மக்களின் துயரில் நாங்களும் இணைந்து எமது நாட்டுக்காக ஒருமித்து பிராத்திக்கும் முகமாக குறித்த நிகழ்வு கறிற்ராஸ் வாழ்வுதயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் போது தேச விழிப்புணர்வு சுடரினை சர்வமத மதத்தலைவர்களும் இணைந்து ஏற்றி வைத்தனர். கறிற்ராஸ்-வாழ்வுதயத்தின் இயக்குனர் அருட்பணி செ.அன்ரன் […] - [நாளை முதல் விசேட ரயில்- பஸ் சேவை](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9a%e0%af%87%e0%ae%9f-%e0%ae%b0%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b8/): புதுவருடத்தை முன்னிட்டு தூர மற்றும் விசேட ரயில் சேவைகளை நடத்த ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளது. இதன்படி , நாளை வெள்ளிக்கிழமை முதல் எதிர்வரும் 18ஆம் திகதி வரை, விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேநேரம்,  விசேட பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும்  எதிர்வரும் 15ஆம் திகதி வரை இந்த விசேட பஸ் சேவைகள் இடம்பெறும் எனவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. - [மன்னாரில் சட்டத்தரணிகள் கவனயீர்ப்பு போராட்டம்](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/): -மன்னார் நிருபர்- மன்னார் நீதிமன்ற சட்டத்தரணிகள் இன்று வியாழக்கிழமை மதியம் 1.00 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். மன்னார் நீதிமன்றத்தில் கடமையாற்றுகின்ற சட்டத்தரணிகள் மன்னார் நீதிமன்றத்தின் முன் ஒன்று கூடி பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் போது ‘கவிழ்ப்போம் கவிழ்ப்போம் குடும்ப ஆட்சியை கவிழ்ப்போம்’, அப்பாவி மக்களின் வாழ்க்கையை சீரழித்தது போதும் ஓடிவிடு கோட்டா, போலி முகம் காட்டும் கோட்ட அரசு எமக்கு வேண்டாம் உள்ளிட்ட பல்வேறு வசனங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தியவாறு மன்னார் சட்டத்தரணிகள் போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது. - [போதை மருந்துடன் சந்தேகநபர் ஒருவர் கைது](https://minnal24.com/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%95%e0%ae%a8%e0%ae%aa/): -யாழ் நிருபர்- ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாரந்தனை தெற்கு பகுதியில், ஊசி மூலம் ஏற்றப்படும் போதை மருந்தை உடைமையில் வைத்திருந்த 47 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். ஊர்காவற்துறை பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ஊர்காவற்துறை பொலிஸ் புலனாய்வு பிரிவினர் மற்றும் பொலிஸார் இணைந்து இக் கைது நடவடிக்கையினை மேற்கொண்டனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை 50 ஆயிரம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் அவர் விடுவிக்கப்பட்டார். குறித்த போதை மருந்து எங்கிருந்து கிடைத்தது என்ற விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். - [வார இறுதியில் இரண்டு மணித்தியாலங்கள் மாத்திரமே மின்வெட்டு](https://minnal24.com/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0-%e0%ae%87%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf/): வார இறுதி நாட்களில் இரண்டு மணித்தியாலங்கள் மின் வெட்டு அமுல்ப்படுத்தப் படவுள்ளது. அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலயங்களுக்கு சனிக்கிழமை பிற்பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரை 2 மணி நேரம் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது. P,Q,R,S,T,U,V,W வலயங்களுக்கு  பிற்பகல் 3 மணி முதல் இரவு 10 மணி வரை இரண்டு மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இதேவேளை, அன்றைய தினம் காலை 6 மணி முதல் காலை 09.30 மணி வரை CC1 வலயத்திற்கு 3 மணித்தியாலம் 30 நிமிடம் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன் பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார். அதேபோல், ஞாயிற்றுக் கிழமையன்று ஒரு மணித்தியாலம் மாத்திரமே மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார். அன்றைய தினம் காலை 6 மணி முதல் காலை 09.30 மணி வரை CC1 வலயத்திற்கு 3 மணித்தியாலம் 30 நிமிடம் மின் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது. […] - [வீடொன்றின் பின்னால் புதைக்கப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு](https://minnal24.com/%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%88/): -யாழ் நிருபர்- நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மணியம் தோட்டப் பகுதியில் உள்ள வீடொன்றின் பின்னால் புதைகுழியில் பெண்ணின் சடலம் இன்று வியாழக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, குறித்த பெண் ஒருவரிடம் பணம் வழங்கிய நிலையில் அதனை திருப்பித் தருமாறு பலதடவை கோரிய நிலையில் பணம் தருவதாக அழைத்து குறித்த பெண்ணை கொலை செய்து புதைத்ததாக அப்பகுதியில் இருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன. குறித்த பெண் கடந்த மாதம் முதலாம் திகதி காணாமல் போனதாக அறியப்பட நிலையில் தற்போது மணியன் தோட்டத்து பகுதியில் உள்ள வீடு ஒன்றின் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் யாழ்ப்பாணப் பொலிசார் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். - [இருவர் பதவியேற்பு](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%af%87%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/): மத்திய வங்கியின் ஆளுநராக கலாநிதி நந்தலால் வீரசிங்கவும், நிதியமைச்சின் செயலாளராக மஹிந்த சிறிவர்தனவும் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டனர். - [13, 14 இல் மின்வெட்டு இல்லை](https://minnal24.com/13-14-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b5%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88/): புத்தாண்டு தினமான 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் மின்வெட்டை அமுல்படுத்தாமல் இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். குறித்த இரு தினங்களில் மின்சாரத் தேவையில் கணிசமான குறைப்பு எதிர்பார்க்கப்படுவதாகவும், மின் உற்பத்தி நிலையங்களுக்கு போதுமான எரிபொருள் கிடைத்தால் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள இலகுவாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். - ['சமுர்த்தி அபிமானி' விற்பனைக் கண்காட்சி](https://minnal24.com/%e0%ae%9a%e0%ae%ae%e0%af%81%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa/): -யாழ் நிருபர்- சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் ‘சமுர்த்தி அபிமானி’ விற்பனைக் கண்காட்சியும், விற்பனை சந்தையும் இன்று சங்கானை கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக சங்கானை பிரதேச செயளாலர்  பிரேமினி பொன்னம்பலம், சிறப்பு விருந்தினராக சங்கானை பிரதேச செயலக பிரதம கணக்காளர்  ரி.திருவருட்செல்வன் ஆகியோர் கலந்துகொண்டதோடு, சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்துகொண்டிருந்தார்கள். சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் ‘சமுர்த்தி அபிமானி’ விற்பனைக் கண்காட்சியும், விற்பனை சந்தையும் யாழ்ப்பாண பிரதேச செயலாளர் திரு.சா.சுதர்சன்  தலைமையில் இன்று யாழ்ப்பாண பிரதேச செயலக வளாகத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன், சிறப்பு விருந்தினர்களாக பிரதம கணக்காளர் என்.எஸ்.ஆர்.சிவரூபன் மற்றும் கணக்காளர் இ.முருகதாஸ் ஆகியோரும் கலந்துகொண்டதோடு, உதவித் திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர், சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து […] - [மன்னாரில் நாளை மாபெரும் கண்டன போராட்டத்திற்கு அழைப்பு](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/): -மன்னார் நிருபர்- அரசாங்கத்திற்கு எதிராகவும், அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நாளை வெள்ளிக்கிழமை  காலை 9.30 மணிக்கு மன்னாரில் மாபெரும் கண்டன போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறித்த கண்டன போராட்டம் காலை 9.30 மணிக்கு மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் இடம்பெற உள்ளது. சிவில் அமைப்புக்கள், பொது அமைப்புக்கள் இபல்கலைக்கழக மாணவர்கள், மற்றும் மன்னார் மாவட்ட மக்கள் இணைந்து குறித்த கண்டன போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். எனவே குறித்த போராட்டத்தில் வர்த்தகர்கள், பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு ஆதரவு வழங்குமாறு ஏற்பாட்டுக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. - [மதுபானசாலையில் திருட்டு](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a9%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81/): -யாழ் நிருபர்- யாழ் கல்வியங்காடு மதுபானசாலையில் இரண்டு பெறுமதிமிக்க துவிச்சக்கர வண்டிகள் திருட்டப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கல்வியங்காடு மதுபானசாலையில் நேற்றிரவு இரண்டு பெறுமதிமிக்க துவிச்சக்கர வண்டிகள் இனம் தெரியாத திருட்டு கும்பலால் திருடப்பட்டுள்ளது. குறித்த திருட்டு சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவது, யாழ்ப்பாணம் கல்வியங்காடு கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்வியங்காடு குமரன் மதுபானசாலையில் நேற்றிரவு மின்சாரம் தடை பட்டிருந்த நேரத்தில் மதுபானம் வாங்க சென்ற இருவருடைய  பெறுமதிமிக்க துவிசக்கர வண்டிகள் இனம் தெரியாத திருட்டு கும்பலால் திருடப்பட்டுள்ளது. யாழில் மேற்கொள்ளப்படும் மின் தடையை சாதகமாக பயன்படுத்தி குறித்த திருட்டை இனம் தெரியாத கும்பல் மேற்கொண்டுள்ளது. - [மன்னாரில் அரசிற்கு எதிராக கண்டன போராட்டம்](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0-2/): -மன்னார் நிருபர்- தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று வியாழக்கிழமை  காலை 9.30 மணிக்கு மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது. தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமயில் கோட்டபாயக ராஜபக்ஸவின் அரசாங்கத்திற்கு எதிராக குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அரசின் தூர நோக்கற்ற நிதி நிர்வாக முகாமைத்துவத்தால் நாடு பெரும் பொருளாதார பின்னடைவை எதிர் நோக்கி பட்டினிச்சாவை நோக்கி நகர்கின்றது. குறிப்பாக அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம், எரிவாயு மற்றும் மின்சாரம் இன்றி பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இச் செயலைக் கண்டித்து தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று வியாழக்கிழமை  காலை 9.30மணிக்கு மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக குறித்த கவனயீர்ப்பு கண்டன போராட்டம் இடம் பெற்றது. குறித்த போராட்டத்தில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், உள்ளூட்சி மன்ற தவிசாளர்கள், உறுப்பினர்கள், சமூக ஆர்வளர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து […] - [அமெரிக்க தூதரக அதிகாரிகள் கண்ணிவெடி அகற்றும் பகுதிகளுக்கு விஜயம்](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%ae%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%a4%e0%af%82%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%95-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3/): கிளிநொச்சி முகமாலை மேற்கு பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் செயற்பாட்டுக்கு அமெரிக்காவிலிருந்து கொடையாளர்களால் நிதியுதவி வழங்கப்பட்டு கண்ணிவெடி அகற்றும் நிறுவனங்களால் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இப்பணியின் முன்னேற்றங்கள் தொடர்பில் தொடர்ந்து கள ஆய்வினை மேற்கொள்வதற்காக  குறித்த குழுவினர் வருகை தந்திருந்தனர். கண்ணிவெடி அகற்றும் பணிக்காக நன்கொடைகளை வழங்கும் அமெரிக்கர்களின் பிரதிநிதிகளான Rodne Robedia, Briget R.Hess ஆகிய இருவர்,இலங்கைக்கான அமெரிக்க தூதரக அதிகாரிகளான Rulay Woodside, Shanlbeep Croos ஆகியோரும் இவ்விஜயத்தின் போது கலந்துகொண்டனர். முகமாலை மேற்கு பகுதியில் டாஸ் (DASH) நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் கண்ணிவெடியகற்றும் மனிதாபிமான பணியினை பார்வையிட்டனர். இதன்போது அப்பகுதியில் மீட்கப்பட்டு வரும் ஆபத்தான வெடிபொருட்கள் தொடர்பிலும் அதனை அகற்றுவதில் ஏற்படுகின்ற சவால்கள் தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டது. கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளின் முன்னேற்றங்கள் தொடர்பில் கொடையாளர்கள் மற்றும், அமெரிக்க தூதரக அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர். முகமாலை பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகள் தொடர்பில் அவர்கள் […] - [இலங்கைக்கு வரும் அமெரிக்க பிரஜைகளுக்கு எச்சரிக்கை](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%ae%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95/): இலங்கையின் தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் சவால்களின் தாக்கம் தொடர்பில் பயணிகள் அவதானமாக இருக்குமாறு இலங்கைக்கு பயணம் செய்வது தொடர்பில், அமெரிக்கா தமது பிரஜைகளுக்கு பயண ஆலோசனையை புதுப்பித்துள்ளது. அமெரிக்க இராஜாங்க திணைக்களம் விடுத்துள்ள குறித்த ஆலோசனை தொடர்பில் இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் டுவிட்டர் பதிவின் மூலம் தெரியப்படுத்தியுள்ளது. அந்த ஆலோசனைக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கைக்கு பயணம் செய்வது தொடர்பான ஆலோசனையின் ஒட்டுமொத்த மட்டம் தொடர்ந்தும் 3 இல் உள்ளது என்பதுடன், 2019 ஏப்ரலில் பயங்கரவாதம் தொடர்பில் வழங்கப்பட்ட எச்சரிக்கை தொடர்ந்தும் அவ்வாறே உள்ளதாக நினைவில் கொள்வது அவசியமாகும். கொவிட்-19 தொற்று மற்றும் எரிபொருள், மருந்துகளின் தட்டுப்பாடு தொடர்பில் அவதானம் செலுத்தி இலங்கைக்கான பயணத்தை மறுபரிசீலனை செய்யுமாறு, அமெரிக்க இராஜாங்க திணைக்களம் குறித்த அறிவித்தலில் தெரிவித்துள்ளது. - [குழப்பத்தை ஏற்படுத்தியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும்](https://minnal24.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%8f%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b5/): நுவரெலியா ஏப்ரல் வசந்த கால நிகழ்வு ஆரம்ப வைபவத்தில், பலாத்காரமாக நுழைந்து குழப்பத்தை ஏற்படுத்தி இடையூறு செய்த குழுவினருக்கு எதிராக, சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என நுவரெலியா மாநகர முதல்வர் சந்தனலால் கருணாரட்ன தெரிவித்துள்ளார். பொலிஸார் துரித நடவடிக்கை எடுக்காவிட்டால், நுவரெலியா மாநகரசபை உறுப்பினர்கள் மாநகரசபை ஊழியர்களுடன் இணைந்து, வீதியில் இறங்கி போராட்டம் நடத்துவோம் என எச்சரித்துள்ளார். மாநகரசபை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நுவரெலியா மாதாந்த பொது கூட்டத்திலேயே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். நுவரெலியா நகரம் ஒரு சுற்றுலா நகரம் இங்கு அதிகமானோர் சுற்றுலாத்துறையை நம்பியே வாழ்க்கை நடத்துகின்றார்கள். அதிலும் வருடம் தோறும் ஏப்ரல் மாதத்திலே அதிக வருமானம் தேடும் காலமாகும். ஏப்ரல் மாதத்தில் பெருந் தொகையான சுற்றுலா பயணிகள் நுவரெலியாவிற்கு வருகை தரும் பொழுது இங்குள்ள சுற்றுலா விடுதிகள் ஹோட்டல்கள் உரிமையாளர்களும் பழங்கள்,மரக்கறி வியாபாரிகள் வாடகை வாகன உரிமையாளர்கள் மற்றும் நகர வர்த்தகர்கள் ஒரு வருமானம் தேடும் மாதமாகும். இவ்வாறு […] - [நாட்டை வந்தடைந்தார் கலாநிதி நந்தலால்](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%9f%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a8/): மத்திய வங்கியின் புதிய ஆளுநராக பதவியேற்கவுள்ள கலாநிதி நந்தலால் வீரசிங்க சற்று முன் இலங்கையை வந்தடைந்துள்ளதாக விமான நிலைய வட்டாரத் தகவல்கள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது. மத்திய வங்கியின் ஆளுநராக பதவிவகித்த அஜிட் நிவார்ட் கப்ரால், அப்பதவியை இராஜினாமா செய்துள்ள நிலையில் அவரது வெற்றிடத்துக்கே நந்தலால் வீரசிங்க நியமிக்கப்பட்டவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபயவினால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் நாட்டை வந்தடைந்துள்ளார். இந்நிலையில் இன்று பதவியேற்க உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. - [கோதுமைமாவின் விலை அதிகரிக்கப்படுகின்றதா?](https://minnal24.com/%e0%ae%95%e0%af%8b%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%88%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf/): கோதுமை மாவின் விலையை கிலோவொன்றுக்கு 50 ரூபாவாக அதிகரிப்பதற்கு கோதுமை மா நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்து வருவதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் தற்போது ஒரு கிலோகிராம் கோதுமை மா 180 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்தன தெரிவித்துள்ளார். குறித்த நிறுவனங்கள் அண்மையில் ஒரு கிலோகிராம் கோதுமை மாவினை 35 ரூபாவினால் அதிகரித்திருந்தன. இந்நிலையிலேயே மேலும் 50 ரூபாவினால் அதிகரிக்கப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. - [ஏப்ரல் 11 மற்றும் 12 பொது விடுமுறை](https://minnal24.com/%e0%ae%8f%e0%ae%aa%e0%af%8d%e0%ae%b0%e0%ae%b2%e0%af%8d-11-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-12-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81/): ஏப்ரல் 11 மற்றும் 12 ஆம் திகதிகளை பொது விடுமுறை தினங்களாக அறிவித்து சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். - [முச்சக்கரவண்டியும் லொறியும் நேருக்கு நேர் மோதியதில் மூவர் பலி](https://minnal24.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b2%e0%af%8a%e0%ae%b1%e0%ae%bf/): தனமல்வில – உடவளவ வீதியில் போதாகம என்ற இடத்தில் முச்சக்கரவண்டியும் லொறியும் நேருக்கு நேர் மோதியதில் மூவர் உயிரிழந்துள்ளனர். சம்பவத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த தாய், தந்தை மற்றும் குழந்தையே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. - [முன்னாள் ஆளுநருக்கு வெளிநாடு செல்லத் தடை](https://minnal24.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b3%e0%af%81%e0%ae%a8%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3/): மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் வெளிநாடு செல்வதைத் தடுத்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது. - [தலாவாக்கலையில் அரசாங்கத்திற்கெதிராக மாபெரும் ஆர்ப்பாட்டம்](https://minnal24.com/%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4/): தமிழ் முற்போக்கு கூட்டணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று வியாழக்கிழமை தலவாக்கலை நகரில் முன்னெடுக்கப்பட்டது. அரசாங்கத்திற்கு எதிராகவும் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மலையகத்தின் பல பாகங்களிலும் இருந்து வந்து மக்கள் கலந்து கொண்டனர். தமிழ் முற்போக்கு கூட்டணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பாரிய ஆர்ப்பாட்டத்திற்கு, ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர் கட்சி தலைவருமான சஜித்பிரேமதாச, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோகனேசன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம். கூட்டணியின் இனைத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வேலுச்சாமி இராதாகிருஸ்ணன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.   - [ஒரு வருடத்திற்கு எனக்கு சம்பளம் வேண்டாம் - ஹரின் பெர்னாண்டோ](https://minnal24.com/%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/): ஒரு வருட காலத்திற்கு எனக்கு சம்பளம் வேண்டாம், என நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். தனக்கு ஒரு வருடத்திற்கு சம்பளம் வேண்டாம் என தெரிவித்து பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் அவர் கடிதம் ஒன்றை கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. - [தாயுடன் வீதியில் நடந்து வந்த சிறுமி உயிரிழப்பு](https://minnal24.com/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81/): மரக்கிழளை ஒன்று முறிந்து விழுந்ததில் படுகாயமடைந்த சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் பின்னவல – நெல்லிவல பிரதேசத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. குறித்த பிரதேசத்தில் உள்ள முன்பள்ளியில் இடம்பெற்ற நிகழ்ச்சி ஒத்திகைகளில் கலந்து கொண்டு விட்டு, தனது தாயுடன் நடந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த போதே குறித்த சிறுமி விபத்துக்குள்ளாகியுள்ளார். விபத்திலிருந்து சிறுமி மீட்கப்பட்ட போதிலும், அவர் உயிரிழந்துவிட்டார், என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். - [உருவ பொம்மையை எரித்து, மொட்டையடித்து கதறியழுது ஆர்ப்பாட்டம்](https://minnal24.com/%e0%ae%89%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%af%88-%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%af%8a/): -பதுளை நிருபர்- கடந்த 5 நாட்களாக பசறை எரிபொருள் நிலையங்களுக்கு டீசல் விநியோகிக்கப்படவில்லை. இதனை கண்டித்து பசறை நகர் வாகன சாரதிகள் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். தற்போது பசறை-பிட்டமாறுவ வீதி, பசறை-செங்கலடி வீதி, பசறை-கல்வத்த வீதி ஆகிய வீதிகளை மறித்து இப்பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது இதன்போது, ஆர்ப்பாட்டக்காரர்களினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உருவ பொம்மை வீதியில் எரிக்கப்பட்டதுடன் அதனைத் தொடர்ந்து நபரொருவர் மொட்டை அடித்து இறுதிக்கிரியை நிகழ்வு நடாத்தினார் மேலும், டயர்கள் வீதியில் வீசப்பட்டு எரிக்கப்பட்டமையால் அனைத்து வீதிகளிலும் பாரிய வாகன நெருக்கடி நிலவுகின்றது. - [வலி.மேற்கு பிரதேச இளைஞர்களால் எதிர்ப்பு பேரணி](https://minnal24.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%87%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a-%e0%ae%87%e0%ae%b3%e0%af%88%e0%ae%9e%e0%ae%b0%e0%af%8d/): -யாழ் நிருபர்- நாட்டில் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு, எரிபொருள் பிரச்சினை போன்றவற்றால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைகளை கண்டித்து வலி.மேற்கு பிரதேச இளைஞர்களால் எதிர்ப்பு பேரணி ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. சுழிபுரம் சந்திப்பகுதியில் இருந்து ஆரம்பமான குறித்த போராட்டம், சங்கானை பிரதேச செயலகம் வரை சென்று, பிரதேச செயலகத்திற்கு முன்னால் முற்றுகை போராட்டமாக மாற்றமடைந்தது. இப் போராட்டத்தில் வலி. மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் து.சுஜிந்தன், சங்கானை பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவர் கேசவன் மற்றும் வலி. மேற்கு பிரதேச இளைஞர்கள் கலந்து கொண்டனர். - [ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடாளுமன்றத்திற்கு வருகை](https://minnal24.com/%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%aa%e0%ae%af-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%aa%e0%ae%95-4/): ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. - [இலங்கைக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ள சூரியன்](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%89%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d/): இன்று வியாழக்கிழமை கல்கிசை, பொரலஸ்கமுவ, கொட்டாவ, போப்பே, மஸ்கெலியா, குருதலாவ மற்றும் வெதிகும்புர ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக நண்பகல் 12.13 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது சூரியனின் வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக ஏப்ரல் 5ஆம் திகதியிலிருந்து 15ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, நாட்டின் மத்திய, சப்ரகமுவ, தென், ஊவா, வடமத்திய மாகாணங்களிலும், அம்பாறை, குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீ்ற்றருக்கு மேல் பலத்த மழை பெய்யக்கூடும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது - [விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு](https://minnal24.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b3%e0%af%88%e0%ae%9e%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-2/): -யாழ் நிருபர்- நேற்றிரவு 10.30 மணியளவில் துணைவி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் இன்னொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நவாலியில் உள்ள உறவினரின் வீட்டிற்கு பூப்புனித நீராட்டு விழாவிற்கு சென்றுவிட்டு தங்களது வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்த இளைஞர்களது மோட்டார் சைக்கிள் துணைவி வீதியில் உள்ள மரத்துடன் மோதியுள்ளது. இதன்போது மோட்டார் சைக்கிளை செலுத்திய இளைஞன் உயிரிழந்துள்ளதுடன் பின்னால் இருந்த இளைஞன் காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். அராலி – செட்டியார் மடம் பகுதியைச் சேர்ந்த புலேசாந் (வயது 22)  இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவரது உடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். - [சாய்ந்தமருதில் தொடரும் அரசுக்கெதிரான போராட்டம்](https://minnal24.com/%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85/): -கல்முனை நிருபர்- நாட்டின் பெருளாதார நிலைமை வீழ்ச்சியடைந்து மக்களின் வாவழ்வாதாரம், அன்றாட ஜீவனோபாயம் கஸ்டத்திற்குள்ளான நிலையில் தற்போதிருக்கும் அரசாங்கத்திற்கும், ஜனாதிபதி மற்றம் பிரதமர் ஆகியோருக்கு எதிராக நாட்டின் பல்வேறு இடங்களிலும் ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில் அம்பாறை மாவட்ட சாய்ந்தமருது பிரதேசத்தில் இரண்டாவது நாளாக நேற்று இரவும் தேசிய கொடியை ஏந்திக்கொண்டு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. பிரதான வீதிகளில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நிறைய இளைஞர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு Go Kota Home, வீட்டுக்கும் கேடு நாட்டுக்கும் கேடு கோட்டா நீ அமெரிக்காவுக்கே ஓடு, பச்சிளம் குழந்தைகளை கொன்ற கோத்தாவே வெளியேறு, மொட்டின் முட்டுக்கள் களருங்கள், அடுத்து நாட்டை விட்டு வெளியேர போவது யார், ஆட்சி செய்து கிழித்தது போதும், குடும்ப ஆட்சி வேரோடு ஒழிக, பெற்றோல் இல்லை டீசல் இல்லை கோட்டாவுக்கு அறிவும் இல்லை, கோட்டா சேர் தயவு செய்து போங்க சேர், வெந்தது நாடு கோட்டாவ […] - [கிழக்குத் தமிழர்களின் அதிகார சமநிலைக்கு பங்கம் ஏற்படாதவாறே எனது தீர்மானங்கள் அமையும்](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4/): நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள அசாதாரணமான அரசியல் சூழ்நிலைகளின் மத்தியில்,  கொழும்பு நிலைமைகளைப் பொறுத்தவரையில் ஜனாதிபதி பதவி விலகுவதற்கான வாய்ப்புக்கள் அரிதாகவே காணப்படுகின்றன. ஆனால் அமைச்சரவை மாற்றம் , தேசிய அரசாங்கம் அல்லது இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைப்பது பற்றியே பல்வேறு விதமான முன்னெடுப்புக்கள மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நம் ஒவ்வொருவராலும் எடுக்கப்படும் எந்த முடிவுகளும் எமது நாட்டினதும் மக்களினதும் எதிர்காலத்தை பொறுப்போடு அணுகுவதாக இருக்கவேண்டும் என , தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவனேசதுறை சந்திரகாந்தன் தனது முகநூல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார் தனது முகநூல் பக்கத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது , எமக்கு வாக்களித்த மக்களை மனதிற்கொண்டு சமூகப்பொறுப்போடும் நிதானமாகவும் நிலைமைகளை நான் கூர்ந்து அவதானித்து வருகின்றேன். கிழக்கின் தனித்துவத்துக்கான கட்சியின் பிரதிநிதி என்னும் அங்கீகரிப்பின் ஊடாக எனக்கு கடந்த நாடாளுமன்ற தேர்தலில் எமது மக்களால் வழங்கப்பட்ட ஆணை மிகவும் பெறுமதிமிக்கது என்பதை நான் […] - [ஜனாதிபதியினால் புதிய ஆலோசனை குழு நியமனம்](https://minnal24.com/%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%86%e0%ae%b2/): பலதரப்பு விவகாரம், கடன் நிலைப்படுத்தல் ஜனாதிபதி ஆலோசனை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, உலக வங்கியின் முன்னாள் பதில் தலைமை பொருளியலாளர் பேராசிரியர் சாந்த தேவராஜன் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் ஆபிரிக்க திணைக்களத்தின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் கலாநிதி ஷர்மினி குரே ஆகியோர் இந்த குழுவில் உள்ளடங்குவதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. - [நாட்டை ராஜபக்சேக்களிடம் இருந்து மீட்கும் வரை ஓயக்கூடாது : சாணக்கியன்](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%aa%e0%ae%95%e0%af%8d%e0%ae%9a%e0%af%87%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d/): எமது நாட்டை ராஜபக்சேக்களிடம் இருந்து மீட்கும் வரை ஓயவேண்டாம் எனவும், ராஜபக்சேக்கள் தவறாக எனது தலைமுறையுடன் வம்பிழுத்து உள்ளார்கள் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீது நாட்டு மக்கள் கொண்டுள்ள வெறுப்பினை நாடாளுமன்றத்திற்குள் கொண்டு வர வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்துக்கொண்டு ஆளும் தரப்பின் பிரதம கொறோடா உட்பட ஆளும் தரப்பினர்கள் செயற்படுகிறார்கள். கோ ஹோம் கோடா என்பதை 225 உறுப்பினர்களும் செல்ல வேண்டும் என மாற்றிவிடுவது இலகுவானது. நாடாளுமன்றம் ஒழுங்கு முறைக்கமைய செயற்படுவதில்லை. 225 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் விரட்டியடிக்க வேண்டும் என்பதை நாட்டு மக்களுக்கு காண்பிக்கும் வகையில் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. தவறான தலைமுறையினரிடம் மோதியுள்ளீர்கள் என குறிப்பிட்டு இளம் தலைமுறையினர் போராட்டத்தில் ஈடுப்பிடுகிறார்கள். நாடாளுமன்றம் தொடர்பில் மக்கள் மத்தியில் காணப்படும் […] - [மிகவும் நூதனமான முறையில் சங்கிலி அறுப்பு](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%82%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/): -யாழ் நிருபர்- இன்று வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வழக்கம்பரை – தொல்புரம் பகுதியில் மிகவும் நூதனமான முறையில் கொள்ளை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. காலை 9.30 மணியளவில், அப்பகுதியில் உள்ள வீட்டின் படலைக்கு அருகே இருந்த பெண்மணி ஒருவரிடம் மோட்டார் சைக்கிள் வந்த இருவர் சாத்திரம் சொல்லும் கோவில் எங்கு உள்ளது எனக் கேட்டவேளை அவர்களுக்கு வழி சொல்வதற்கு அந்த பெண்மணி அருகில் வந்தார். இதனையடுத்து அந்த பெண்மணியினது கழுத்தில் இருந்த இரண்டு பவுண் தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு இருவரும் அங்கிருந்து தப்பித்துச் சென்றனர். மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்தவர் கோயிலுக்கு செல்வது போல கையில் வாழை இலையும் பூஜைப் பொருட்களும் வைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையில் வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். - [பாடசாலை நேரத்தை அதிகரிக்க வேண்டாம் : கல்வி அமைச்சிடம் வேண்டுகோள்](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%af%88-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d/): -யாழ் நிருபர்- நாட்டில் தற்போதுள்ள சூழ்நிலையில் பாடசாலை நேரத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதோ அல்லது அதிகரிப்பதோ பொருத்தமானது அல்ல. இவ்வாறு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கல்வி அமைச்சிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. போக்குவரத்து கட்டண அதிகரிப்பு உணவுப்பொருட்களின் விலை அதிகரிப்பு, அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு எனும் மோசமான சூழ்நிலைகளுக்காக மக்கள் பேதமின்றி வீதியில் இறங்கிப் போராடிவருகின்றனர். இதில் அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஏன் மாணவர்களும் இணைந்துள்ளனர். இத்தகையதொரு சூழ்நிலையில் பாடசாலையை அரைமணிநேரம் அதிகரிப்பதென்பது ஏற்றுக்கொள்ள முடியாதவொன்று. ஒரு காலத்தில் இரு நேரப்பாடசாலையாக நடைபெற்றபோது மாணவர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டனர். அதன் பின்னர் மாணவர்களுக்கான சத்துணவு, மதிய உணவு என்பன வழங்கப்பட்டன. இப்போது எல்லாமே நிறுத்தப்பட்டு விலைவாசியை பன் மடங்காக அதிகரித்து மக்களை சித்திரவதை செய்து  ஏதோ மாணவர்களின் கல்வியில் அக்கறை உள்ளவர்கள்போல் பாசாங்கு செய்வது வேடிக்கையாக உள்ளது. இவை எவையுமே இலங்கை நாட்டில் சாத்தியப்படாது என்பதனை கோடிக்கணக்கான மக்களும் உணர்ந்துவிட்டனர். ஆகையால் […] - [நாட்டு நிலை தொடர்பில் பெண்ணியவாதிகளின் அவசர வேண்டுகோள்](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86/): இலங்கையில் பொருளாதார வீழ்ச்சியினால் ஏற்பட்டுள்ள மனிதாபிமான நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கான நாட்டில் பல பெண்கள் அமைப்புகள் ஒன்றிணைந்து அவசர வேண்டுகோள் அறிக்கை ஒன்றிணை வெளியிட்டுள்ளனர். குறித்த அறிக்கையில், இலங்கை, தனது சுதந்திரத்திற்குப் பின்னரான வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்குத் தற்போது முகங்கொடுத்துக் கொண்டிருக்கின்றது. உணவு மற்றும் எரிபொருளுக்கான பரவலான தட்டுப்பாடுகள் மக்களின் வாழ்க்கையை முடக்கியுள்ளன. ஏற்கனவே பல வாரங்களாக நீடித்த இந்த நிலைமையானதுஇதற்போது பாரிய அரசியல் அதிகாரச் சிக்கலாக உருவெடுத்துள்ளது. அரசியல் வர்க்கத்திற்கு எதிரான மக்களின் ஆழ்ந்த உணர்வுகளை கண்டுணரக் கூடியதாகவுள்ளதுடன், இப்பொருளாதாரச் சிக்கல் சாதாரண மக்கள் மத்தியில்பொருளாதார சிக்கல் முதன்மையானதும் உடனடியானதுமாகும். நாட்டின் பல பாகங்களிலும் சாதாரண மக்களின் அமைதியான ஜனநாயக ரீதியான எதிர்ப்பை வெளிப்படுத்தும் போராட்டங்கள்;தொடர்கின்ற அதேவேளை, வன்முறையான அடக்குமுறைகளும் அதிகரிக்கும் என்றே நாம் எதிர்பார்க்கிறோம். முழுமையாக நோக்குமிடத்துஇஒரு மனிதாபிமான நெருக்கடி நிலை உருவாகி வருவதை நாம் கண்கூடாகக் காண்கிறோம்.இந்த நிலைமை அதிகமான மக்களை வறுமைக்குள் தள்ளவும், […] - [ஆர்ப்பாட்டங்கள் - பேரணிகளில் சிறுவர்களை ஈடுபடுத்த வேண்டாம்](https://minnal24.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95/): ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகளில் சிறுவர்களை ஈடுபடுத்துவதை தவிர்க்குமாறு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை அனைத்து தரப்பினரையும் கோரியுள்ளது. தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுவரும் போராட்டங்களுக்கு சிலர் குழந்தைகளையும் தூக்கிச் செல்வதை அவதானிக்க முடிந்தது. இது பொருத்தமற்ற செயற்பாடாகும் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. - [ஐ.நா. சபையின் முக்கிய அறிவிப்பு](https://minnal24.com/%e0%ae%90-%e0%ae%a8%e0%ae%be-%e0%ae%9a%e0%ae%aa%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5/): இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் தெருக்களில் இறங்கி போராடி வருகிற நிலையில், ஐ.நா. சபை முக்கிய அறிவிப்பு ஒன்றை இலங்கை அரசாங்கத்திற்கு விடுத்துள்ளது. இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஐ.நா சபை, “இலங்கை நிலவரத்தை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். விலைவாசி உயர்வை எதிர்த்து போராட்டம் நடத்தும் மக்கள் மீது தாக்குதல் நடத்துவது சரியான செயல் அல்ல. சிங்கள படைகள் அப்படி அத்துமீறி நடந்துகொள்ளக் கூடாது. கோபத்தில் இருக்கும் மக்களிடம் சுமூகமான முறையில் நடந்துகொள்ள வேண்டும். அதன்மூலம் பிரச்சினைகளை தீர்க்க முன் வர வேண்டும். எதிர்க்கட்சிகள் மக்களிடம் போராட்டத்தை தூண்டிவிட செய்யக்கூடாது. அமைதியை ஏற்படுத்த அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என ஐ.நா.சபை அறிவுறுத்தியுள்ளது. - [தங்கத்தின் விலையில் திடீர் வீழ்ச்சி](https://minnal24.com/%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f-3/): நாட்டில் தங்க விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் கூறியுள்ளது. செட்டியார் தெருவின் இன்றைய நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 190,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன்,  22 கரட் தங்கம் பவுண் ஒன்று, 175, 000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது. கடந்த வாரத்தில் 24 கரட் தங்கம், பவுண் ஒன்று 200,000 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. - [அரச தனியார் பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a-%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d/): அரச மற்றும் தனியார் தமிழ் சிங்கள பாடசாலைகள் இன்று புதன்கிழமை மூடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 2021 ஆம் ஆண்டிற்கான அனைத்து அரச தனியார் சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளின் மூன்றாம் தவணை வெள்ளிக்கிழமை முடிவடையும் என, தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று இந்த அறிவிப்பை கல்வி அமைச்சு விடுத்துள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா 2022 ஆம் ஆண்டிற்கான முதலாம் தவணைக்காக ஏப்ரல் 18 ஆம் திகதி மீண்டும் பாடசாலைகள் திறக்கப்படும் என தெரிவித்தார். - [15 கோடி ரூபாய் மதிப்பிலான ஐஸ் போதைப் பொருள் பறிமுதல்](https://minnal24.com/15-%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b0%e0%af%82%e0%ae%aa%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%90/): -மன்னார் நிருபர்- தூத்துக்குடி அருகே முள்ளகாடு கடற்கரைப் பகுதியிலிருந்து இலங்கை வழியாக வளைகுடா நாட்டிற்கு கடத்த இருந்த 15 கோடி ரூபாய் மதிப்பிலான 5 பாக்கெட்டுகளில் தடை செய்யப்பட்ட ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட படகை தேசிய வருவாய் புலானாய்வுத் துறையினர் பறிமுதல் செய்துள்ளதோடு தப்பி ஓடிய படகு ஓட்டியை தேடி வருகின்றனர். தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்கள் உள்ளிட்டவை கடல் வழியாக இலங்கை, மாலத்தீவு உள்ளிட்ட பகுதிகளுக்கும், வெளி நாடுகளுக்கும் சட்ட விரோதமாக கடத்தப்பட்டு வருகின்றன. மெரைன் போலீஸார், க்யூ பிரிவு போலீஸார், மத்திய வருவாய்ப் புலனாய்வுப்பிரிவு அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டும், கடத்தப்படும் போதைப்பொருட்களை பறிமுதல் செய்தும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருப்பினும், தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள் கடத்தப்படுவது தொடர் கதையாக நடந்து வருகிறது. இந்த நிலையில், தூத்துக்குடி, முள்ளக்காடு கடற்கரையில் இருந்து படகின் மூலம் போதைப்பொருள் கடத்தப்படுவதாக மத்திய வருவாய்ப் புலனாய்வுப் பிரிவு […] - [வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கி வைப்பு](https://minnal24.com/%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a-%e0%ae%b5%e0%af%88%e0%ae%a4/): -யாழ் நிருபர்- வன்னி ஹோப் நிதி அனுசரணையில், பிரைட் சமூக அபிவிருத்தி அறக்கட்டளையின் ஏற்பாட்டில், வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு, வன்னி ஹோப் நிறுவனத்தின் பனிப்பாளர்களான கந்தகுமார் மற்றும் பணிப்பாளர் மாலதி வரன் ஆகியோரால் மருத்துவ உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு பற்றாக்குறையாக இருந்த சுமார் தொன்நூறாயிரம் பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டன. இந்த வேலைத்திட்டத்தின் ஊடாக இவ் பிரதேசத்தில் உள்ள சுமார் ஐந்தாயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் நன்மையடைய கூடியதாக உள்ளது. இந் நிகழ்வில் வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையின் வைத்தியர்களான காந்தநேசன், பி.என்.ரொபின்ஸன், பிறைட் சமூக அபிவிருத்தி அறக்கட்டளைின் தலைவர் என்.முரளிதரன், வன்னி ஹோப் நிறுவனத்தின் இணைப்பாளர் கிருஸ்ணமுகன் பிறைட் சமூக அபிவிருத்தி அறக்கட்டளைின் உத்தியோகத்தர்கள், வட்டுக்கோட்டை சமூகத்தினர் மற்றும்  நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர். - [நிந்தவூர் பிரதேச கடற்கரை சூழல் சுத்தம் செய்யப்பட்டது](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b5%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%af%88/): -மன்னார் நிருபர்- நிந்தவூர் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட கடற்கரை சூழல் நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.எம். அஸ்ரப் தாஹிரின் பணிப்புரையின் பேரில் நிந்தவூர் பிரதேச சபையின் ஊழியர்கள் ஊடாக நிந்தவூர் பிரதேச கடற்கரைச் சூழல் சுத்தம் செய்யப்பட்டது. எமது நாட்டில் நிலவுகின்ற மின்வெட்டின் காரணமாக பொது மக்கள் அதிகமாக கடற்கரை பிரதேசத்திற்கு இயற்கை காற்றை சுவாசிப்பதற்காகவும் பொழுது போக்கிற்காகவும் வருவதை அவதானிக்க முடிகிறது. அவ்வாறு மக்கள் கூட்டம் அதிகரிப்பதனால் கடற்கரை சூழல் வெகுவாக மாசடைந்து வருவதை கருத்தில் கொண்டே இத்துப்பரவு பணி மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு பொழுது போக்கிற்காகவும் ஒய்வு நேரங்களை கழிப்பதற்காகவும் கடற்கரைக்கு வருகின்றவர்கள் தங்கள் கழிவுகளை முறையாக சுத்தப்படுத்தி சூழல் மாசுபடுத்தலை தடுப்பதற்கு உதவுமாறும் பிரதேச சபையூடான கழிவகற்றல் முகாமைத்துவத்திற்கு உதவுமாறும் பொது மக்களை தவிசாளர் தாஹிர் கேட்டுக் கொண்டார். - [இருமுறை ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டவர் பதில் ஜனாதிபதியாக செயற்படலாமா?](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88-%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%95-%e0%ae%a4%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf/): -கல்முனை நிருபர்- இருக்கின்ற ஜனாதிபதி பதவி விலகினால் அரசியலமைப்பின் சரத்து 40(1)(A) இன் பிரகாரம் பாராளுமன்றம் ஒரு பாராளுமன்ற உறுப்பினரை எஞ்சிய காலப்பகுதிக்கு ஜனாதிபதியாகத் தெரிவு செய்யவேண்டும். அவ்வாறு தெரிவுசெய்யப்படுபவர் ஒரு ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்படத் தகுதியானவராக இருத்தல் வேண்டும். சரத்து 31(2) இன் பிரகாரம் ‘மக்களால்’ இரு முறை ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டவர் அதன்பின்னர் ‘ மக்களால்’ ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட தகுதியற்றவராவார் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஸ்தாபக செயலாளர் நாயகம் சட்டத்தரணி வை எல் எஸ் ஹமீட் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் சமகால விடயங்கள் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது, ஜனாதிபதிப் பதவி வெற்றிடமாகும்போது பாராளுமன்றத்தால் தெரிவு செய்யப்படுபவர் ஏற்கனவே இருமுறை மக்களால் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டவராக இருக்கக்கூடாது. 40(1)(B) இன் பிரகாரம் புதிய ஜனாதிபதி அவ்வாறு வெற்றிடம் ஏற்பட்டதிலிருந்து ஒரு மாதத்திற்கு பிந்தாத காலப்பகுதிக்குள் தெரிவுசெய்யப்பட வேண்டும். அவ்வாறு புதிய ஜனாதிபதி பதவியேற்கும்வரை பிரதம அமைச்சர் பதில் […] - [நாட்டின் நிலை தொடர்பில் ஆராய கிழக்கின் கேடயம் மக்களை சந்தித்தது](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/): -கல்முனை நிருபர்- இலங்கையில் இப்போது நடைபெற்று வரும் சமகால அரசியல், பொருளாதார நிலவரங்கள் தொடர்பில் ஆராயும் மக்கள் சந்திப்பு கிழக்கின் கேடயம் ஏற்பாட்டில் அக்கரைப்பற்றில் செவ்வாய்க் கிழமை மாலை இடம்பெற்றது. கிழக்கின் கேடயம் அமைப்பின் தலைவரும், அக்கறைப்பற்று மாநகர சபை உறுப்பினருமான எஸ் எம் சபீஸ் அவர்களுடன் பொதுமக்கள், இளைஞர்கள் கலந்துரையாடினர் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அசாதாரண அரசியல் சூழ்நிலைகளினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள், நீண்ட வரிசைகள், பொருள் தட்டுப்பாடுகள், பணவீக்கம், இதனால் இலங்கை எதிர்கொண்டிருக்கும் சவால்கள் மக்கள் சந்தித்திருக்கும் கஷ்ட நிலைகள் இதன்போது ஆராயப்பட்டதுடன். இக்கட்டான இவ்வேளையில் மக்கள் பொறுப்புடனும் எதிர்காலத்தினை கருத்திற்கொண்டு முறையாக திட்டமிட்ட நடைமுறைகளை பின்பற்றுதல் தொடர்பிலும் கருத்துக்கள் பரிமாறப்பட்டது. இஃப்தாருடன் நிறைவுபெற்ற இந்த மக்கள் சந்திப்பில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், கிழக்கின் கேடயத்தின் நிர்வாகிகள், செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர். - [சிறுவர் யாசகம் பெறுதல், சிறுவர் வியாபாரத்தை கட்டுப்படுத்தும் கலந்துரையாடல்](https://minnal24.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%af%e0%ae%be%e0%ae%9a%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a/): -யாழ் நிருபர்- சிறுவர் யாசகம் பெறுதல் மற்றும் சிறுவர் வியாபாரத்தை கட்டுப்படுத்தும் கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில், மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில், சிறுவர்களைப் பயன்படுத்தி யாசகம் பெறுதல் மற்றும் சிறுவர் வியாபாரத்தை கட்டுப்படுத்தல் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதோடு, பதிவில்லாத விடுதிகளை கண்காணித்து சட்டநடவடிக்கையெடுப்பதாகவும் தீர்மானிக்கப்பட்டது. மேலும், பாடசாலை மாணவர்களின் ஒழுக்கநெறிகள் மற்றும் இருபத்தொரு வயதிற்கு குறைந்தவர்களிற்கு சிகரெட் விற்றல், மருத்துச் சிட்டையில்லாது மருந்து வழங்குதல் மற்றும் பொது இடங்களில் நிகழும் சமூகசீர்கேடுகள் ஆகிய விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் ( காணி), உதவிமாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள், மாநகர சபை ஆணையாளர், சட்ட வைத்தியர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், வலயக் கல்வி பிரதிநிதி, மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள். - [பண்டோரா பேப்பர் பட்டியலில் சிக்கிய நிருபமா ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறினார்](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%8b%e0%ae%b0%e0%ae%be-%e0%ae%aa%e0%af%87%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%ae%bf/): முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிருபமா ராஜபக்ஷ நேற்று இரவு நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்றிரவு 10.25 மணியளவில் புறப்பட்ட எமிரேட்ஸ் விமானமான EK-655 இல் நிருபமா ராஜபக்ஷ டுபாய் நோக்கிப் புறப்பட்டுள்ளார். நிருபமா ராஜபக்ஷ மற்றும் அவரது கணவர் திருக்குமார் நடேசன் ஆகியோரின் பெயர்களும் பண்டோரா பேப்பர்களில் இடம்பெற்றுள்ளன. இது அண்மைய நாட்களில் உலகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாட்டு வங்கிகளில் வைப்பிலிடப்பட்ட 160 மில்லியன் அமெரிக்க டொலர்கள் உறுதிப்படுத்தப்படாத சொத்துக்கள் குறித்து, இலங்கையின் சட்டப்பிரிவினால் விசாரணை நடத்தப்பட்ட போதிலும், இதுவரை எந்த முடிவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது   - [மருந்து இறக்குமதிக்கு உலக சுகாதார ஸ்தாபனம் உதவி](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%87%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/): மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு உதவியாக வழங்க உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) இணங்கியுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த உதவியை வழங்க உலக சுகாதார ஸ்தாபனம் ஒப்புக்கொண்டுள்ளது. இலங்கையில் மருந்து விநியோகத்தில் பற்றாக்குறை ஏற்பட்டதன் காரணமாக அரசாங்கம் உலக சுகாதார ஸ்தாபனத்திடம் இந்த உதவிக்கான கோரிக்கையை முன்வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. - [தேசிய விளையாட்டு கவுன்சில் உறுப்பினர்கள் பதவி விலகினர்](https://minnal24.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b3%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%95%e0%ae%b5%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf/): இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் மஹேல ஜெயவர்தன் தலைமையிலான இலங்கை தேசிய விளையாட்டு கவுன்சில் உறுப்பினர்கள் பதவி விலகியுள்ளனர். நாமல் ராஜபக்ஸ விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த போது, அவருக்கு  ஆலோசனை வழங்குவதற்காக 2020-ல் தேசிய விளையாட்டு கவுன்சில் அமைக்கப்பட்டது. எனினும் நாட்டில் நிலவும் நெருக்கடியான நிலை, மற்றும் அமைச்சர்களின் இராஜினாமாவை அடுத்து இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. இதன்படி, Mahela Jayawardene Julian Bolling Kumar Sangakkara Dilantha Malagamuwa Kasturi Chellaraja Wilson Supun Weerasinghe Rohan Fernando Ruwan Keragala Sanjeewa Wickramanayake Major General Rajitha Ampemohotti Lieutenant General Shaveendra Silva Rowena Samarasinghe Yaswanth Muttetuwegama A.J.S.S Edirisooriya Thiyumi Abeysinghe ஆகியோர் பதவி விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. - [மற்றொரு ராஜபக்ஸ நாட்டை விட்டு பறந்தார்](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%8a%e0%ae%b0%e0%af%81-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%aa%e0%ae%95%e0%af%8d%e0%ae%b8-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%b5/): முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் மனைவி மற்றும் அவருடைய பெற்​றோர் உட்பட ஒன்பது பேர், நாட்டை விட்டு சென்றுவிட்டனர். இந்நிலையில், முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபக்ஷ, கட்டுநாயக்க பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக டுபாய் நோக்கி பயணித்துவிட்டார். நேற்றிரவு 10.25 புறப்பட்டுச் சென்ற எமிரேட்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான ரி.கே. 655 என்ற விமானத்திலேயே டுபாய் நோக்கி பயணிமாகியுள்ளார் என குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபக்ஷ, அவரது கணவர்   திருக்குமரன் நடேசன்  ஆகிய இருவரும் பெண்டோரா பேப்பர்ஸ் (Pandora Papers) என்ற பெயரில் வெளியான ஆவணங்களில் நிதிமோசடி தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. - [அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களில் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம்](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b1%e0%af%88-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%ae%e0%af%8d/): -கல்முனை நிருபர்- நாட்டின் பெருளாதார நிலைமை வீழ்ச்சியடைந்து மக்களின் வாவழ்வாதாரம், அன்றாட ஜீவனோபாயம் கஸ்டத்திற்குள்ளான நிலையில் தற்போதிருக்கும் அரசாங்கத்திற்கும், ஜனாதிபதி மற்றம் பிரதமர் ஆகியோருக்கு எதிராக நாட்டின் பல்வேறு இடங்களிலும் ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில் அம்பாறை மாவட்ட சாய்ந்தமருது, மருதமுனை, கல்முனை, சம்மாந்துறை, அட்டாளைச்சேனை ஆகிய இடங்களில் செவ்வாய்க்கிழமை இரவு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. பிரதான வீதிகளில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நிறைய இளைஞர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு GO HOME GOTA, வீட்டுக்கும் கேடு நாட்டுக்கும் கேடு கோட்டா நீ அமெரிக்காவுக்கே ஓடு,  ஆட்சி செய்து கிழித்தது போதும், குடும்ப ஆட்சி வேரோடு ஒழிக, பெற்றோல் இல்லை, டீசல் இல்லை கோட்டாவுக்கு அறிவும் இல்லை, கோட்டா சேர் தயவு செய்து போங்க சேர், வெந்தது நாடு கோட்டாவ தூக்கி வெளியில் போடு, பொருளாதார நெருக்கடி இரவெல்லாம் கொசுக்கடி,பசிலே வெளியேறு போன்ற கோசங்களையிட்டவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது பேரணியாக […] - [எரிபொருளிற்காக வரிசையில் நின்ற பேருந்திலிருந்து இறங்கியவர் உயிரிழப்பு](https://minnal24.com/%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2/): -யாழ் நிருபர்- எரிபொருளுக்காக வரிசையில் நின்ற தனியார் பேருந்திலிருந்து இறங்கி நிலத்தில் அமர்ந்திருந்த பயணி சாரதியின் கவனக்குறைவினால் சில்லு ஏறி உயிரிழந்துள்ளார். புன்னாலைக்கட்டுவன் எரிபொருள் நிரப்புநிலையத்தில் நேற்றிரவு 8 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. சம்பவத்தில் ஊரெழு கிழக்கைச் சேர்ந்த தர்மலிங்கம் சதீஸ் (வயது 37) என்பவரே உயிரிழந்துள்ளார். ‘உயிரிழந்தவர் வயாவிளான் நோக்கி பேருந்தில் பயணித்துள்ளார். எனினும் தூக்கத்தில் அவர் வயாவிளானில் இறங்கவில்லை. பேருந்து நடத்துனரும் கவனயீனத்தால் கவனிக்கவில்லை. மீண்டும் பேருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்து புன்னாலைக்கட்டுவனில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டீசலுக்காக வரிசையில் காத்திருந்துள்ளது. அதனால் கீழே இறங்கிய பயணி நிலத்தில் அமர்ந்திருந்துள்ளார். அதனை அவதானிக்காத சாரதி பேருந்தை எடுத்த போது பயணி மீது ஏறியுள்ளது. பயணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் பேருந்தின் சாரதி அங்கிருந்து தலைமறைவாகியிருந்தார்  என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் இறப்பு விசாரணைகளை […] - [மன்னாரில் அரசுக்கு எதிராக தனி நபர் போராட்டம்](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be/): -மன்னார் நிருபர்- நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ பதவி விலகி வீடு செல்லக்கோரி மன்னார் நகர் பகுதியில் தனி நபர் ஒருவர் இன்று  காலை தொடக்கம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றார். மன்னார் பிரதான சுற்று வட்ட பகுதியில் #go home gota என வாசகம் எழுதப்பட்ட பதாகையை ஏந்தியவாறு குறித்த நபர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார். முகமுடி அணிந்து குறித்த பதாகையை ஏந்தியவாறு அமைதியாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். - [குளத்தினை அளவிடச் சென்றவர் உயிரிழப்பு](https://minnal24.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88-%e0%ae%85%e0%ae%b3%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%b5/): முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஏம்பல் குளத்தினை அளவீடு செய்வதற்காக படகில் சென்ற உத்தியோகத்தர்களின் படகு கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 25 வயதுடைய வித்தியாபுரம் ஒட்டுசுட்டானை சேர்ந்த நமசிவாயம் டிலக்சன் என்ற நில அளவைத்திணைக்கள உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் ஒட்டுசுட்டான் பிரதேச இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும் ஆவார். நேற்று மாலை 3.00 மணியளவில் ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் உள்ள ஏம்பல் குளத்தினை அளவீடு செய்வதற்காக சென்றவேளை படகு கவிழ்ந்துள்ளது. சம்பவம் தொடர்பில் ஒட்டுசுட்டான் பொலிசார் மற்றும் பொதுமக்கள் இணைந்து சடலத்தினை மீட்டு முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை கொண்டு சென்றுள்ளார்கள். - [சுமார் 10 நிமிடங்கள் ஒத்தி வைக்கப்பட்ட சபையமர்வு](https://minnal24.com/%e0%ae%9a%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-10-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%92%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/): நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகள் தொடர்பில், இன்றும் நாளையும் பாராளுமன்றத்தில் விவாதிப்பதற்கு கட்சித் தலைவர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை  தீர்மானித்தனர். அதன்பிரகாரம், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில், பாராளுமன்றம் இன்று புதன்கிழமை காலை 10 மணிக்கு கூடியது. பிரதான நடவடிக்கைகள் நிறைவடைவதற்கு முன்னர், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, அவசரகாலச் சட்டம், பொலிஸ் ஊரடங்குச் சட்டம், பாராளுமன்ற ஆர்ப்பாட்டத்துக்குள் புகுந்த, இலக்கத் தகடு இல்லாத, முகமுடி அணிந்தவர்களால் ஓட்டிவரப்பட்ட மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பல கேள்விகளை கேட்டார். அதற்கு, சபைமுதல்வரும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன  பதிலளித்தார். எனினும், மோட்டார் சைக்கிள் ​பற்றி வாயே திறக்கவில்லை. இதனிடையே ஒழுங்குப்பிரச்சினையை எழுப்பிய சில எம்.பிக்கள் கருத்துகளை முன்வைத்தனர். விஜித ஹேரத், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரை கருத்துரைத்தனர். அதற்கு அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ பதிலளித்தார். அவரது பதிலுரையை அடுத்து ஒழுங்குப்பிரச்சினையை எழுப்பிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, ஜோன்ஸ்டனின் கூற்றுகளை மறுத்து உரையாற்றிக்கொண்டிருந்தார். […] - [100 மில்லிமீற்றருக்கும் அதிகளவில் பலத்த மழை பெய்யக்கூடும்](https://minnal24.com/100-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%ae%e0%af%80%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4/): நாட்டின் பல பாகங்களில், இன்றைய தினம் 100 மில்லிமீற்றருக்கும் அதிகளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மத்திய, சப்ரகமுவ, தென், மேல், ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும். அம்பாறை மாவட்டத்திலும் இவ்வாறு மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேநேரம், நாட்டின் பெரும்பாலான பாகங்களில், மாலை வேளையில், மழை அல்லது இடியுடன்கூடிய மழை பெய்யக்கூடும். இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில், குறித்த பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். எனவே, காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்ப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். - [இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ஏற்க மறுப்பு](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%be%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf/): பிரதி சாபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவின் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ஏற்க மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் பாராளுமன்ற ஜனநாயகத்தை தொடர்ந்தும் பேணுமாறும் ஜனாதிபதி இவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். - [பிற்போடப்பட்ட அரச எதிர்ப்பு போராட்டம் நாளை](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa/): ஊரடங்கு சட்டம் காரணமாக, பிற்போடப்பட்ட அரச எதிர்ப்பு போராட்டத்தை நாளை வியாழக்கிழமை தலவாக்கலை நகரில் நடத்த உள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணி அறிவித்துள்ளது. கடந்த 3ஆம் திகதி தலவாக்கலை நகரில் தமிழ் முற்போக்கு கூட்டணி அரச எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்க திட்டமிட்டிருந்த நிலையில், ஊரங்கு சட்டம் காரணமாக, அது பிற்போடப்பட்டது. இந்நிலையில், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் அனைவரும், நாளைய தினம்  ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரான, நாடாளுமன்ற உறப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். - [19 வது திருத்தத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும்](https://minnal24.com/19-%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae/): அரசியலமைப்பின் 20வது திருத்தத்தை இரத்துச்செய்துவிட்டு 19 வது திருத்தத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 14 பாராளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்படுவார்கள் என தெரிவித்துள்ள அவர் மோசமடைந்து வரும்  பொருளாதார நிலைமையால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள மோசமான பாதிப்புகளை தீர்ப்பதற்கான முயற்சிகளுக்கும் அவர்கள் ஆதரவளிப்பார்கள் என குறிப்பிட்டுள்ளார். தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு பாராளுமன்ற பொறிமுறை மூலம் தீர்வை காண்பதற்கான முயற்சிகளை சபாநாயகர் முன்னெடுக்கவேண்டும் என்ற வேண்டுகோளிற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆதரவளித்துள்ளார். - [பீஸ்ட் படத்திற்கு குவைத் அரசு தடை](https://minnal24.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81-%e0%ae%a4%e0%ae%9f%e0%af%88/): விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தை வெளியிட குவைத் அரசு தடை விதித்துள்ளது. வன்முறை காட்சிகள் மற்றும் தீவிரவாதிகள் தொடர்பான காட்சிகள் அதிகம் உள்ளதால் இந்த படத்தை வெளியிடகுவைத் அரசு தடை விதித்துள்ளது. இதனால் குவைத்திலுள்ள விஜய் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். - [இலக்கத்தகடு இல்லாத மோட்டர் சைக்கிள்களால் பரபரப்பு](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%95%e0%ae%9f%e0%af%81-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%ae%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f/): பாராளுமன்றத்திற்கு நேற்று செவ்வாய்க்கிழமை  வெளியே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பல பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் இராணுவ வீரர்கள் குழுவிற்கும் இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் உடனடியாக சுயாதீன விசாரணைக்கு பொலிஸ்மா அதிபர் உத்தரவிட்டுள்ளார். இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களின் ஒழுக்கமற்ற மற்றும் முறையற்ற நடத்தை தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்தி அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்புப் படைகளின் பிரதானி மற்றும் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இராணுவத் தலைமையகத்தின் நடவடிக்கைகளின் பணிப்பாளரின் வழிகாட்டலின் பேரில்  பாராளுமன்ற வளாகத்தின் வீதி நுழைவாயிலை வந்தடைந்தது. இதன்போது, இராணுவத்தினரின் மோட்டார் சைக்கிள்களில் இலக்கத்தகடு இல்லாததன் காரணமாக, அங்கு கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின்னர் மோதல் சம்பவமாக மாறியிருந்தது.     - [சிரேஷ்ட ஊடகவியலாளர் கதிர்காமத்தம்பியின் ஞாபகார்த்த அரங்கு திறந்து வைப்பு](https://minnal24.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b0%e0%af%87%e0%ae%b7%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%8a%e0%ae%9f%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0/): சிரேஷ்ட ஊடகவியலாளர் வீ.சு.கதிர்காமத்தம்பியின் ஞாபகார்த்த அரங்கு இன்று மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டது. வீ.சு.கதிர்காமத்தம்பியின் பிறந்த தினமான இன்று கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் தேவ அதிரன் தலைமையில் கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தில் வீ.சு.கதிர்காமத்தம்பியின் ஞாபகார்த்த அரங்கு திறந்து வைக்கப்பட்டது இதன் போது சிரேஷ்ட ஊடகவியலாளர் வீ சு.கதிர்காமத்தம்பியின் ஞாபகார்த்த அரங்கு பெயர்ப்பலகை அவரது பாரியாரினால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், மகுடம் ஆசிரியர் மைக்கல் கொலின், மாநகர சபை உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள், வீ.சு.கதிர்காமத்தம்பியின் குடும்ப உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர். - [எத்தகைய நெருக்கடிகளுக்கு மத்தியிலும் எனது மக்களின் குரலாக செயற்படுவேன்](https://minnal24.com/%e0%ae%8e%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%95%e0%af%88%e0%ae%af-%e0%ae%a8%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/): -யாழ் நிருபர்- எத்தகைய நெருக்கடிகளுக்கு மத்தியிலும் யாழ்ப்பாண மாவட்ட மக்களின் பிரதிநிதியாக எனது மக்களின் குரலாக நான் எப்போதும் செயற்படுவேன் என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். இன்று அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அவ்வறிக்கையில், கடந்த பாராளுமன்ற தேர்தலில் மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகளை ஆணையாக வழங்கிய என் மாவட்ட உறவுகளும், தற்போதைய பொருளாதார நெருக்கடியில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த வாரங்களில் மக்களை நேரில் சந்தித்து அவர்களது நிலைப்பாடுகளை நேரில் கேட்டறிந்து கொண்டேன். நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலையில், மக்களால் முன்னெடுக்கப்படும் போராட்டங்களை நான் மதிக்கின்றேன். எங்கள் உறவுகள் இன்று பசியோடு இருக்கிறார்கள், நீண்ட வரிசையில் நின்று பொறுமையிழந்து இன்று வீதிகளில் போராட ஆரம்பித்துள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக நாட்டை முற்றாக முடக்கிய கொரோனா பாதிப்பின் உடனடி எதிர்வினைகளை இப்போதைய பொருளாதார நெருக்கடி நிலையினூடாக நாம் எதிர்கொண்டுள்ளோம். நாட்டில் ‘இல்லை’ என்கிற வார்த்தைகளே இப்போது எங்கும் […] - [மன்னாரில் அரசிற்கு எதிராக மாபெரும் ஜனநாயக போராட்டத்திற்கு அழைப்பு](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be/): -மன்னார் நிருபர்- தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் எதிர் வரும் வியாழக்கிழமை  காலை 9 மணிக்கு மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக அரசிற்கு எதிராக இடம் பெறவுள்ள சனநாயக போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அரசின் தூர நோக்கற்ற நிதி நிர்வாக முகாமைத்துவத்தால் நாடு பெரும் பொருளாதார பின்னடைவை எதிர் நோக்கி பட்டினிச்சாவை நோக்கி நகர்கின்றது. குறிப்பாக அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம் மற்றும் மின்சாரம் இன்றி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இச் செயலைக் கண்டித்து தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் எதிர் வரும் வியாழக்கிழமை  காலை 9 மணிக்கு மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக இடம் பெற உள்ள மாபெரும் கண்டன போராட்டத்தில் அனைவரையும் கலந்து கொண்டு தமது உணர்வுகளை வெளிப்படுத்த அணி திரளுமாறு தமிழ்த்தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் அழைப்பு விடுத்துள்ளார். - [சவப்பெட்டியை வைத்து அழுது ஒப்பாரியுடன் அரசுக்கெதிராக ஆர்ப்பாட்டம்](https://minnal24.com/%e0%ae%9a%e0%ae%b5%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%b5%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%85%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4/): -நுவரெலியா நிருபர்- அதிகரித்து விலையுயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆட்சியாளர்கள் வெளியேற கோரியும், பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் கடந்த சில தினங்களாக நாட்டில் இடம்பெற்று வருகின்றன. மலையகப்பகுதியில் நேற்றும் இன்றும் இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இந்நிலையில் கொட்டகலை நகரில் அதிகரிக்கப்பட்ட அத்தியாவசிய பொருட்களில் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இன்று கொட்டகலை நகரில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. ஆர்ப்பாட்டக்காரர்கள் சவப்பெட்டியினை வைத்து அதிகரித்து விலையினை கூறி ஒப்பாரி வைத்து தப்படித்து அழுது நினைவு கூர்ந்ததுடன் ஆட்சி செய்யும் ஆட்சியாளர்கள் ஒழிய வேண்டும் எனவும் கோசமிட்டனர். அதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டகாரர்கள் சவப்பெட்டியினை சுமந்த வண்ணம் நாட்டின் ஜனாதிபதி மற்றும் அமைச்சர்கள் ஒழிய வேண்டும் என கோசமிட்டவாறு கொட்டகலை டிரேட்டன் ஆலயத்திற்கு அருகாமையிலிருந்து கொட்டகலை  புகையிரத கடவை வரை வருகை தந்து அதனை தொடர்ந்து கலைந்து சென்றனர். - [மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை பணியாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-3/): -மன்னார் நிருபர்- மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணியாளர்கள் இன்று செவ்வாய்க்கிழமை  மதியம் ஒரு மணி நேரம் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து பணிப் பகிஸ்கரிப்பை மேற்கொண்டனர். மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை  மதியம் 12 மணி முதல் 1 மணி வரை குறித்த போராட்டத்தில் ஈடுபட்டனர். 13 சுகாதார தொழில் சங்கங்கள் ஒன்றிணைந்து குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர். நாட்டில் இடம் பெற்று வருகின்ற அசம்பாவிதங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தும் குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர். இலங்கையில் அமுல் படுத்தப்பட்டுள்ள அவசர காலச் சட்டத்தை உடனடியாக ரத்து செய்யக் கோரியும், மக்களின் உரிமைகளை கடுத்துப்படுத்தவதை நிறுத்தக் கோரியும், கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்யக் கோரியும், ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமையை கண்டித்தும், மருந்துப் பொருட்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யக் கோரியும், சுகாதார சேவைக்கு அத்தியாவசிய தேவைகளை உடனடியாக வழங்க கோரியும், மக்களின் உயிரை பாதுகாக்க […] - [உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு அகில இலங்கை ரீதியிலான போட்டிகள்](https://minnal24.com/%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d/): உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு 2022 ஆம் ஆண்டிற்கான அகில இலங்கை ரீதியிலான சித்திரம், சுவரொட்டி மற்றும் கார்ட்டூன் போட்டிகளுக்கான ஆக்கங்கள் கோரப்பட்டுள்ளன.     - [விபத்தில் மூவர் படுகாயம்](https://minnal24.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%82%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d/): -பதுளை நிருபர்- பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பதுளை பசறை வீதியில் 10 ம் கட்டைப் பகுதியில் இன்று காலை 11.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். பதுளையிலிருந்து பசறை நோக்கி பயணித்த ஸ்கூட்டி ரக உந்துருளியும், பசறையிலிருந்து பதுளை நோக்கி பயணித்த உந்துருளி ஒன்றும், மோதி விபத்துக்குள்ளானதில் பத்தாங்கட்டைப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த, பசறையிலிருந்து வெவேக்கலை செல்லும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்திலும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது இரு உந்துருளிகளிலும் பயணித்த 20,19,33 வயதுகளையுடைய […] - [அரச வைத்தியசாலைகளில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லை](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a-%e0%ae%b5%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81/): மருந்து மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்களுக்கு, அரச வைத்தியசாலைகளில் கடுமையான பற்றாக்குறை நிலவுவதாக சமூக ஊடகங்கள் மூலமாக  சில தகவல்கள் பரிமாறப்படுகின்றன. இந்நிலையில், அரச வைத்தியசாலைகளில் மருந்துகள் மற்றும் சத்திர சிகிச்சை உபகரணங்கள் போதியளவில் கையிருப்பில் காணப்படுவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. - [நெடுந்தீவு கடலில் மாயமான கடற்படை வீரர் சடலமாக மீட்பு](https://minnal24.com/%e0%ae%a8%e0%af%86%e0%ae%9f%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%80%e0%ae%b5%e0%af%81-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9/): -யாழ் நிருபர்- நெடுந்தீவு கடலில் காணாமல் போன கடற்படை வீரர், அனலைதீவு கடலில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று அதிகாலை ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட காரைநகர் மற்றும் நெடுந்தீவு கடற்படையினரின் படகுகள் மோதி குறித்த கடற்படை வீரர் காணாமல் போயிருந்தார். இந்நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. கம்பளையைச் சேர்ந்த சாகர பியந்த ஜயசேகர (வயது 27) என்ற கடற்படை வீரரே இவ்வாறு சடலமாக […] - [வட மாகாண ஆளுநரின் இணைப்புச் செயலாளராக இமெல்டா சுகுமார் நியமனம்](https://minnal24.com/%e0%ae%b5%e0%ae%9f-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3-%e0%ae%86%e0%ae%b3%e0%af%81%e0%ae%a8%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a3%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa/): -யாழ் நிருபர்- வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராயாவின் இணைப்புச் செயலாளராக இமெல்டா சுகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். ஆளுநரின் தனிப்பட்ட உத்தியோகத்தர் பட்டியலில் நியமிக்கப்படும் ஆளணி மூலமே இந்த நியமனம் வழங்கப்படுகின்றது. இமெல்டா சுகுமார் முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், வவுனியா மாவட்டங்களின் அரச அதிபராக பணியாற்றதோடு, ஓய்வின் பின்னர் நாட்டில் 52 நாள் ஆட்சி ஏற்பட்டபோது நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் வகித்த அமைச்சின் இணைப்புச் செயலாளராகவும் பணியாற்றினார். - [கஞ்சாவுடன் கைதான இருவர் பிணையில் விடுவிப்பு](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b5%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%88%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d/): -யாழ் நிருபர்- நேற்று முன்தினம் கஞ்சாவுடன் கைதான இருவர் நேற்று ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டபோது தலா 50 ஆயிரம் ரூபா சரீர பிணையில்  விடுவிக்கப்பட்டனர். ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரம்பன் மேற்கு பகுதியில், 47 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் இரண்டாயிரத்து நூறு மில்லிக்கிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டார். அத்துடன் கோட்டையடி – பருத்தியடைப்பு பகுதியில் 48 வயதான சந்தேகநபர் ஒருவர் தொள்ளாயிரம் மில்லிக்கிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டார். இவ்வாறு கைது செய்யப்பட்ட இருவரையும் நேற்று  ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை […] - [ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை - சிவாஜிலிங்கம்](https://minnal24.com/%e0%ae%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf/): -யாழ் நிருபர்- நிறைவேற்று அதிகார முறை ஒழிப்போ அவநம்பிக்கை பிரேரணையோ எதுவாக இருந்தாலும் தமிழ் தரப்புக்கள் நிபந்தனையின்றி ஆதரவளித்தால் பொதுமக்களைக் கொண்டு வீதிகளில் இறங்குவோம், என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் எச்சரிக்கை விடுத்தார். யாழ்.ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி மீது நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஐக்கிய மக்கள் சக்தி இறங்கியிருக்கிறது. மக்கள் விடுதலை முன்னணியும் […] - [சமூக வலைத்தளங்களின் வினைத்திறனான பாவனை தொடர்பான பயிற்சி](https://minnal24.com/%e0%ae%9a%e0%ae%ae%e0%af%82%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%b2%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b3%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9-2/): ஸ்ரீலங்கா பாரிய உட்கட்டமைப்பு செயற்திட்டம், சிவில் சமூக மாதிரித் திட்டம் கிளிநொச்சி, யாழ்ப்பாண குடிநீர் விநியோகத் திட்டத்தில் சமூக வலைத்தளங்களின் வினைத்திறனான பாவனை தொடர்பான பயிற்சி SOND நிறுவனத்தினால் யாழில் நடாத்தப்பட்டது. இப்பயிற்சிநெறியானது நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் ஜுனஸ் றெஜிந்தன் தலைமையில் நடைபெற்றது. இப்பயிற்சி நெறியானது வளவாளர்களான ஜோய் ஜெகார்த்தனன் மற்றும் டினோஜா ஆகியோர் கலந்து கொண்டனர். இப்பயிற்சியில் சமூக பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கோடு இப்பயிற்சி வழங்கப்பட்டது. […] - [இடைக்கால அரசு என்பது புலியிடமிருந்து பறித்து நரியிடம் கொடுப்பதைப் போன்றது](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2/): அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையிலும், ஜனாதிபதிக்கு எதிரான குற்றப்பிரேரணையிலும் மக்களின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமையளித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் மனசாட்சியுடன் இவ்விரு பிரேரணைகளுக்கும் கையெழுத்திட வேண்டும், என நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார். ராஜகிரியவில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கருத்துரைத்தார். தொடர்ந்துரைத்த அவர், சமகால அரசியல் நிலைப்பாடு தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட கூட்டத்தில் கலந்து கொண்ட […] - [இளைஞர் பாராளுமன்ற வெளிவிவகார பிரதியமைச்சர் - அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிக செயலாளரிடையே சந்திப்பு](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%b3%e0%af%88%e0%ae%9e%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b5-2/): -கல்முனை நிருபர்- இளைஞர் பாராளுமன்றத்தின் வெளிவிவகாரம் மற்றும் இராஜதந்திர உறவுகளின் பிரதி அமைச்சர் அஹ்மத் ஸாதிக், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் முப்தி ஆகியோர் அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிக இரண்டாம் செயலாளர்  லாரா செவய்ன்சனுடன் சந்திப்பொன்று இடம்பெற்றது. இச்சந்திப்பில், இலங்கை உயர் கல்வி, வேலைவாய்ப்பு, வெளிவிவகாரம் மற்றும் சுற்றுலா துறை போன்றவற்றில் இளைஞர்களின் நிலைப்பாடு தொடர்பாகவும் மேலும் அதில் உள்ள குறைகள் குறித்தும், இத்துறைகளில் அவுஸ்திரேலியா நாட்டின் இளைஞர்களின் நிலைப்பாடு குறித்தும் கலந்துரையாடப்பட்டது. கலந்துரையாடலின் பின்னர், இலங்கையின் வேலைவாய்ப்பு, […] - [போராட்டங்கள் நடத்தப்படுவதால் எவ்வித பயனுமில்லை - முத்தையா முரளிதரன்](https://minnal24.com/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81/): போராட்டங்கள் நடத்தப்படுவதால் எவ்வித பயனுமில்லை என இலங்கை அணியின் முன்னாள் சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். போராட்டங்கள் இடம்பெறுவதனால், சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வரமாட்டார்கள், இதனால்  வருமான இழப்பு ஏற்படும், என அவர் மேலும் தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றில் இடம்பெற்ற நேர்காணலின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் அதனைக் கைவிட்டால், சுற்றுலாப் பயணிகள் வருவதன்மூலம், நாட்டுக்கு வருமான அதிகரிப்பு ஏற்படும். தற்போதைய அரசாங்கம் ஆட்சி செய்தாலும் அல்லது எதிர்க்கட்சி ஆட்சி அமைத்தாலும், இந்தப் […] - [வீட்டில் தரித்து நின்ற முச்சக்கர வண்டி இனந்தெரியாத நபர்களால் தீவைப்பு](https://minnal24.com/%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%ae/): -யாழ் நிருபர்- நவாலி தெற்கு, மானிப்பாய் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தரித்து நின்ற முச்சக்கர வண்டி இனந்தெரியாத நபர்களால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு 10 மணியளவில் அந்த வீட்டிற்கு வந்த 6 பேர் கொண்ட இனந்தெரியாத கும்பல் குறித்த முச்சக்கர வண்டிக்கு தீ வைத்துவிட்டு தப்பித்துச் சென்றுள்ளது. இதனால் முச்சக்கர வண்டி பகுதிகளில் எரிந்து நாசமாகியாள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். - [மழையுடனான வானிலை மேலும் அதிகரிக்கும்](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%b4%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%ae%e0%af%87%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-2/): வளிமண்டலத்தின் தாழ்வான பகுதி தொடர்ந்து கொந்தளிப்புடன் காணப்படுவதால் நாட்டில் மழையுடனான வானிலை மேலும் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில், சில இடங்களில் 75 மி.மீ வரை மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது - [21 மில்லியன் மக்களை கொண்ட நாட்டை அழித்துவிட்டனர்](https://minnal24.com/21-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%95%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%a8/): 226 பேர் இணைந்து 21மில்லியன் மக்களை கொண்ட நாட்டை அழித்துவிட்டனர். மக்களை இவ்வாறான உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய நிலைக்கு கொண்டுவந்தது குறித்து தலைவர்கள் வேதனைப்படவில்லை வருந்தவில்லை என குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். இந்த நாட்டு மக்களுக்கு அவர்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளுக்கு உடனடி தீர்வு அவசியம். நெருக்கடியான தருணங்களில் மாத்திரம் ஐக்கியப்படாத- மாறாக நெருக்கடியிலிருந்து பாடங்களை கற்று இன, மத பேதங்கள் காணப்படாத நாட்டை உருவாக்குவது குறித்தே எதிர்பார்ப்பை கொண்டுள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார். - [புத்தாண்டு கொடுப்பனவு 25 ஆயிரம் ரூபா](https://minnal24.com/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a9%e0%ae%b5%e0%af%81-25-%e0%ae%86/): புத்தாண்டு கொடுப்பனவாக, விமான நிலையம் மற்றும் விமான சேவை ஊழியர்களுக்கு 25 ஆயிரம் ரூபா வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு கொடுப்பனவு கோரி விமான நிலையம் மற்றும் விமான சேவை ஊழியர்கள் ஆரம்பித்த தொழிற்சங்கப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. 30,000 ரூபா புத்தாண்டுக் கொடுப்பனவு வழங்கக் கோரி விமான நிலைய வளாகத்துக்குள் போராட்டத்தை ஆரம்பித்தனர். தொழிற்சங்கங்கள் மற்றும் விமான நிலைய அதிகாரிகளுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து புத்தாண்டுக் கொடுப்பனவாக ரூபா 25,000 வழங்க இணக்கம் காணப்பட்டது. - [இலங்கை மின்சார சபையின் முக்கிய அறிவிப்பு](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0-%e0%ae%9a%e0%ae%aa%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae/): நீர் மின் உற்பத்தி 4 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. மின்னுற்பத்தி நிலையங்களை அண்மித்துள்ள நீரேந்துப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழை காரணமாக தற்போது நீர் மட்டம் அதிகரித்துள்ளது. சலரீ, மவுஸாகலை,கொத்மலை, விக்டோரியா, ரந்தெனிகல மற்றும் சமனலவௌ நீர்த்தேக்க பகுதிகளில அதிகளவான மழை பெய்துள்ளமையினால் குறித்த நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன்இ எதிர்வரும் நாட்களிலும் தொடர்ச்சியாக மழை பெய்யுமானால் நீர் மின் உற்பத்தியை மேலும் அதிகரிக்க முடியும் எனவும் […] - [கூகுள் வழிகாட்டியில் 'கோட்டா கோ கிராமம்'](https://minnal24.com/%e0%ae%95%e0%af%82%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b/): காலி முகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள ‘கோட்டா கோ கிராமம்’ எனும் பெயருடன் கூகுள் வழிகாட்டியில் பதிவாகியுள்ளது. அவ்வாறு உள்ளடக்கப்பட்ட பெயர் தற்போது வைரலாகியும் வருகிறது. அரசாங்கத்துக்கு எதிரான போராட்டம் கொழும்பு காலி முகத்திடலில் கடந்த மூன்று நாட்களாக முன்னெடுக்கப்படுகின்றது. போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்களில் சிலர், கூடாரம் அமைத்து போராட்டத்தை தொடர்கின்றனர். இந்நிலையில், அவ்வாறு கூடாரம் அமைக்கப்பட்ட பகுதிக்கு ‘கோட்டா கோ கிராமம்’ என்று பெயர் சூட்டி, அறிவித்தல் பலகையொன்றையும் நாட்டியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. - [இலங்கைக்கு வந்த சுற்றுலாப்பயணிகளும் ஆர்ப்பாட்டத்தில்](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%b2%e0%ae%be/): இலங்கையில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக அம்பலாங்கொட கஹவாவில் சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. எரிபொருள் பற்றாக்குறையால் தம்மால் நாட்டை சுற்றிப்பார்க்க முடியவில்லை என்று தெரிவித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக அம்பலாங்கொட கஹவாவில் சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அவர்கள், ‘கோட்டாவே வீட்டுக்குப் போ…’ என்று கோஷமிட்ட பெண் சுற்றுலாப் பயணிகள் பலர் பதாகைகளையும் இலங்கைக் கொடியையும் ஏந்தியிருந்தனர். - [இராஜாங்க அமைச்சரானார் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b8%e0%af%8d/): ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஷாந்த பண்டார இராஜாங்க அமைச்சராக பதவியேறுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. குறித்த அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஷாந்த பண்டார, சேதனப் பசளை உற்பத்தி, மேம்பாடு மற்றும் விநியோக ஒழுங்குறுத்தல், நெல் மற்றும் தானியங்கள், சேதன உணவுகள், மரக்கறிகள், பழவகைகள், மிளகாய், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு செய்கை மேம்பாடு, விதை உற்பத்திகள் மற்றும் உயர் தொழிநுட்பம், கமத்தொழில் […] - [மிரிஹான சம்பவம் தொடர்பாக பாதுகாப்புச் செயலாளரின் அறிவிப்பு](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b9%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95/): மிரிஹானவில் இடம்பெற்ற வன்முறைப் போராட்டங்கள் தொடர்பாக தேசிய பாதுகாப்புச் சபையின் கூட்டம் நடத்தப்பட்டதாக கூறி சில ஊடகங்களில் வெளியிட்டுள்ள ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன, அத்தகைய எந்தவொரு கூட்டமும் நடைபெறவில்லை என்றும் தெரிவித்தார். தேசிய பாதுகாப்பு சபை மற்றும் அதன் முக்கியத்துவத்தை விளக்கிய பாதுகாப்புச் செயலாளர், இந்தக் கூட்டங்களுக்கு அங்கீகரிக்கப்படாத எந்தவொரு நபர்கள் கலந்துகொள்ளும் வழிமுறை இல்லை என்பதையும் வலியுறுத்தினார். தலைவர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மற்றும் […] - [மே 21இல் அவுஸ்திரேலியாவில் பொதுத்தேர்தல்](https://minnal24.com/%e0%ae%ae%e0%af%87-21%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b5%e0%af%81%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%87%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2/): அவுஸ்திரேலியாவில் மே 21ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறும் என்று அந்நாட்டுப் பிரதமர் ஸ்கொட் மொரிசன் கூறியுள்ளார். அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவினம், பருவநிலை மாற்றம், முக்கியக் கட்சிகளின் தன்மையும் திறனும் பற்றிய கேள்விகள் ஆகியவை குறித்த விவாதங்கள் பிரசாரத்தில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 9 ஆண்டுகால ஆட்சிக்குப்பின்னர் எதிர்க்கட்சியான தொழிற்கட்சியை விட மோரிசனின் பழைமைவாதக் கூட்டணி பின்தங்கி இருப்பதாக கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன. மே 2019இல் நடந்த தேர்தலுக்கு முன்னர் இதேபோன்ற கருத்துக்கணிப்புகளில் மொரிசன் பின்தங்கினார். இருப்பினும் அதில் அவர் […] - [வரிசையில் காத்திருந்த நபருக்கு நடந்தது என்ன?](https://minnal24.com/%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a8%e0%ae%aa/): காலி, தவலம எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்த நபர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார். குறித்த நபர் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை முதல் எரிபொருள் எடுப்பதற்காக தனது பட்டா வகை வாகனத்தில் வரிசையில் இருந்துள்ளதோடு, பின்னர் இரவு வேளை வீட்டுக்கு வந்து மீண்டும் நேற்று திங்கட்கிழமை அதிகாலை வாகனத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பதுவத்தை, ஹபரகட, தவலம பகுதியைச் சேர்ந்த 43 வயதான பபகொட பத்திரண பிரசன்ன திலக் குமார என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். […] - [ஆசிரியர்களுக்கு இடமாற்றம்](https://minnal24.com/%e0%ae%86%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1/): ஒரே பாடசாலையில் அதிகபட்ச காலத்தை நிறைவு செய்த ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படவுள்ளது. இவ்வாறு இடமாற்றம் வழங்கப்படுவதோடு கொவிட்-19 பரவல் காரணமாக கடந்த காலங்களில் அந்த செயற்பாடு பாதிப்படைந்திருந்தது. எனினும் தற்போது இடமாற்றத்துக்கு விண்ணப்பிப்பதற்காக இணைய முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 35,000 ஆசிரியர்களுக்கு இவ்வாறு இடமாற்றம் வழங்கப்படவுள்ளது. எவ்வாறாயினும், விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றதன் பின்னர் குறித்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகிறது. இரண்டு ஆண்டு கால இடைவெளிக்கு பின்னர் ஆசிரியர் இடமாற்றங்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை […] - [லண்டனில் விருது பெற்ற இலங்கை நடிகர்](https://minnal24.com/%e0%ae%b2%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%87%e0%ae%b2/): லண்டன் நாடகம், ஓபரா, நடனம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது. இதன்போது சிறந்த நடிகருக்கான விருதை ‘லைஃப் ஆஃப் பை’ நாடகத்துக்காக ஹிரன் அபேசேகர பெற்றார். 2022 ஆம் ஆண்டுக்கான ஒலிவர் விருது வழங்கல் விழாவில் இலங்கையின் ஹிரன் அபேசேகர என்பவரே சிறந்த நடிகருக்கான விருதை வென்றுள்ளார். - [நேட்டோ அமைப்பில் இணையுமா பின்லாந்து](https://minnal24.com/%e0%ae%a8%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%8b-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a3%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%ae%be/): ஐரோப்பிய கண்டத்தில் உள்ள பின்லாந்து, நேட்டோ அமைப்பில் இணைவது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. உக்ரைன் போருக்கு முன்னர் 30 சதவீதம் பின்லாந்து மக்கள் மட்டுமே நேட்டோவில் இணைய ஆதரவு தெரிவித்திருந்தனர். போருக்குப் பின்னர் 60 சதவீதம் மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். சர்வதேச அரசியலில் நிலைமை வேகமாக மாறி வரும் சூழலில், தற்போதுள்ள அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு முடிவு எடுக்க வேண்டும் என்று பின்லாந்து முன்னாள் பிரதமரும் நேட்டோ ஆதரவாளருமான அலெக்சாண்டர் ஸ்டப் தெரிவித்துள்ளார். பின்லாந்து […] - [சீமாட்டி வைத்தியசாலையில் விசேட இன்சுலினுக்கு தட்டுப்பாடு](https://minnal24.com/%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2/): சிறுவர்களுக்காக பயன்படுத்தப்படும் விசேட இன்சுலீன் மருந்துக்கு பாரிய தட்டுபாடு காணப்படுவதாகவும் எனவே அதனை நன்கொடை செய்ய முன்வருமாறு கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.விஜேசூரிய வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த மருந்து வகையைப் பெற்றுக்கொள்வதற்காக சமூக வலைத்தளங்கள் ஊடாக நன்கொடையாளர்களால் நிதி சேகரிக்கப்படுவதாகவும் அவ்வாறு சேகரிக்கப்படும் நிதியிலிருந்து 11 இலட்சம் ரூபாய் பெறுமதியான இன்சுலீன் நாளை செவ்வாய்க்கிழமை வைத்தியசாலைக்கு வழங்கப்படவுள்ளது என்றார். வைத்தியசாலையில் சாதாரண இன்சுலீன் போதுமானளவு கையிருப்பில் இருப்பதாகத் தெரிவித்த அவர், விசேட இன்சுலினுக்கே […] - [நாளை முதல் பெரல்கள் - கேன்களுக்கு இல்லை](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%af%87%e0%ae%a9%e0%af%8d/): நாளை செவ்வாய்க்கிழமை அழுலாகும் வகையில், பெரல்கள் மற்றும் கேன்களுக்கு எரிபொருள் விநியோகிப்பது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. எதிர்வரும் 14ஆம் திகதி வரை இந்நடவடிக்கை அமுலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சட்டத்தை மீறும் எரிபொருள் விநியோகஸ்தர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு இலங்கை பொலிஸ் திணைக்களத்துக்கு அறிவித்தல் விடுத்துள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார். எரிபொருள் விநியோகிப்பவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்   - [பாகிஸ்தான் புதிய பிரதமராக எதிர்க்கட்சித் தலைவர் ஷபாஸ் ஷெரீப் தெரிவு](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%be/): அவநம்பிக்கை பிரேரணை மூலம், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பதவி நீக்கப்பட்டார். இந்த நிலையில், இன்று கூடிய பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் புதிய பிரதமராக, அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் ஷபாஸ் ஷெரீப், தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவர், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஷ் ஷெரீப்பின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. - [பிரதமர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/): பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று நாட்டு மக்களுக்கு விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார். இதன்போது, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வழிமுறைகளை தமது அரசாங்கம் விரைவில் முன்னெடுக்கும் என பிரதமர் தனது உரையின் போது தெரிவித்தார். பிரதமரின் முழு உரையையும் படிக்க கீழே உள்ள லிங்கை அழுத்தவும் https://drive.google.com/file/d/1RDtTxbBZv19fncxLjdKWCtD1hdieBq_f/view - [கச்சத் தீவை மத்திய அரசு 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு பெற வேண்டும்](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b5%e0%af%88-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81-99-%e0%ae%86/): இலங்கை வசம் உள்ள கச்சத் தீவை மத்திய அரசு 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு பெற வேண்டும் என்று ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை இராமநாதபுரம் சின்னக்கடை வீதியில் உள்ள தமுமுக பள்ளிவாசலில் நடைபெற்ற தெற்கு மண்டல புத்தாக்க பயிலரங்கம் கருத்தரங்கில் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே இந்த கோரிக்கை முன்வைத்துள்ளார். இராமநாதபுரத்தில் மீனவர்கள் தொடர்ந்து பல இடர்பாடுகளை சந்திந்து வருகின்றனர். தங்கச்சிமடம், ராமேஸ்வரம் மீனவர்களின் படகுகள் சேதமடைவது இலங்கை மீனவர்கள் சிறைபிடிப்பு தொடர் நிகழ்வாகவுள்ளது. […] - [கோட்டாவின் ஆதரவாளர்களால் சிலாபத்தில் பதற்றம்](https://minnal24.com/%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%be%e0%ae%b2/): ஜனாதிபதி கோட்டாவை பதவிவிலக கோரி நாடளாவிய ரீதியில் பல எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில், அவருக்கு ஆதரவாக ஒரு சிலர் கடந்த இரண்டு நாட்களாக போராட்டங்களை நடத்தகின்றனர். இந்நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவாக சிலாபம் நகர பகுதிக்கு வந்த குழுவொன்றை ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரிய மற்றுமொரு குழுவினர் விரட்டியடித்ததால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.   - [புத்தாண்டு தினத்தில் மின்வெட்டும் முறைமை](https://minnal24.com/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9/): புத்தாண்டு தினத்தில் மின்வெட்டும் முறைமை தொடல்பில் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. அதற்கமைவாக எதிர்வரும் 13, 14 மற்றும் 15ஆம் திகதிகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. மேலும், 16 மற்றும் 17ஆம் திகதிகளில் காலை 8 மணிமுதல் மாலை 5 மணிவரையான காலப்பகுதியில் 2 மணித்தியாலம் 15 நிமிடங்கள் மாத்திரமே மின்வெட்டு அமுல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. - [நைஜீரியாவில் இருந்து நாடு திரும்பிய யாழ் இளைஞர் ஒருவருக்கு மலேரியா காய்ச்சல்](https://minnal24.com/%e0%ae%a8%e0%af%88%e0%ae%9c%e0%af%80%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f/): -யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் தொண்டமானாறு பகுதியை சேர்ந்த 29 வயதுடைய இளைஞன் ஒருவர் மலேரியா காய்ச்சலுடன் இனம் காணப்பட்டுள்ளார். குறித்த நபர் சில நாட்களுக்கு முன்னர் நைஜீரியா நாட்டில் இருந்து திரும்பி வந்ததாகவும், இந்நிலையில் கடுமையான காய்ச்சலுக்கு உள்ளாகிய நிலையில் மந்திகை வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். யாழ். போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட வைத்திய பரிசோதனையில் குறித்த இளைஞனுக்கு மலேரியா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டு, அதற்கான சிகிச்சை […] - [தென்மராட்சி-மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற பங்குனித்திங்கள் விரத உற்சவம்](https://minnal24.com/%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a9/): -யாழ் நிருபர்- இந்துமக்களின் மிகவும் முக்கியமான விரதத்தில் ஒன்றான பங்குனித்திங்கள் விரத உற்சவமாகனது யாழ். மாவட்டத்தில் உள்ள சிவன், அம்மன் ஆலயங்களில் இடம்பெறுவது வழமை. அந்தவகையில் இந்த பங்குனித்திங்கள் விரத உற்சவமானது இன்று, வரலாற்று சிறப்பு மிக்க தென்மராட்சி – மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்தில் சிறப்பாக சிறப்பான இடம்பெற்றது. கருவறையில் அருள்பாலித்து விளங்கும் பன்றிமுகம் உடைய அம்மனுக்கும் வசந்தமண்டவத்தில் அருள்பாலிக்கும் விநாயகர் முருகன் ஆகிய தெய்வங்களுக்கு விசேட அபிசேகம் ஆராதனைகள் என்பன இடம்பெற்றன. அதன்பின்னர் வசந்தமண்டத்தில் […] - [மன்னாரில் கடும் மழை : மக்களின் இயல்பு நிலை பாதிப்பு.](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b4%e0%af%88-%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/): -மன்னார் நிருபர்- நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக மக்களின் இயல்பு நிலை பாதிக்கப் பட்டுள்ளது. இன்று காலை முதல் தொடர்ச்சியாக பெங்து வரும் கடும் மழை காரணமாக மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் வீடுகளை விட்டு வெளியில் செல்ல முடியாத நிலையும் காணப்பட்டது. மேலும் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதோடு, பல வீடுகளிலும் வெள்ள நீர் தேங்கியுள்ளது. இந்த நிலையில் மன்னார் மக்களின் […] - [இணக்கப்பாடின்றி முடிவடைந்த ஜனாதிபதியுடனான சந்திப்பு](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%a3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%9f%e0%af%88/): ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதி அலுவலகத்தில் அரசாங்கத்தில் இருந்து கடந்த வாரம் விலகிய 41 பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்திருந்த நிலையிலும் எவ்வித இணக்கப்பாட்டின்றி முடிவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அந்த சந்திப்பில் இடைக்கால அரசாங்கம் குறித்து முக்கியமான எதுவும் பேசப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கட்சிகளுக்கிடையிலான உறவுகளை பேணுவதன் அடிப்படையில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாகவும் எவ்வாறாயினும், மேலதிக கலந்துரையாடலுக்காக மீண்டும் சந்திப்பதற்கு அவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் வாசுதேவ நாணயக்கார மேலும் குறிப்பிட்டுள்ளார். - [டீசல் நிரப்ப வரிசையில் நின்ற சாரதி உயிரிழப்பு](https://minnal24.com/%e0%ae%9f%e0%af%80%e0%ae%9a%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8/): டீசல் நிரப்ப வரிசையில் நின்றிருந்த 43 வயதான ஒருவர் மயங்கிய நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், காலி- தவலம ஹினிதும பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தனது பாரவூர்திக்கு டீசல் நிரப்ப வரிசையில் நின்றிருந்த குறித்த நபர் மயங்கிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார். குறித்த நபர் இன்று திங்கட்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வந்து எரிபொருள் நிரப்ப சுமார் ஒரு மணிநேரம் வரிசையில் நின்றிருந்தமை […] - [காலி முகத்திடலில் 'கோட்டாபயகம'](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f/): காலி முகத்திடலில் தொடரும் ஆர்ப்பாட்டத்தில் கூடாரம் அமைத்து போராட்டத்தை தொடர்கின்றனர். இந்நிலையில், அவ்வாறு கூடாரம் அமைக்கப்பட்ட பகுதிக்கு ‘கோட்டாபயகம’ என்று பெயர் சூட்டி, அறிவித்தல் பலகையொன்றையும் நாட்டியுள்ளனர். அரசாங்கத்துக்கு எதிரான போராட்டம் கொழும்பு காலி முகத்திடலில் கடந்த மூன்று நாட்களாக முன்னெடுக்கப்படுகின்றது. போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்களில் சிலர் இரவு பகலாக அங்கே தங்கிவிட்டனர். - [டீசல் ஏற்றிச் செல்லும் ரயிலுடன் - பயணிகள் ரயில் மோதி விபத்து](https://minnal24.com/%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/): ரம்புக்கன ரயில் நிலையத்தில் இன்று திங்கட்கிழமை ரயில் விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. ரம்புக்கன ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டீசல் ஏற்றிச் செல்லும் ரயில் மீது மற்றொரு ரயில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. பயணிகளை ஏற்றிவந்த ரயிலே மற்றொரு ரயிலுடன் மோதியுள்ளது. புகையிரத நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பயணிகள் புகையிரதம் ஒன்று சாரதியின்றி பிரேக் பழுதடைந்ததன் காரணமாக பயணித்து சென்று, புகையிரத நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எரிபொருள் புகையிரதத்துடன் மோதியுள்ளது. பின்னர், ரம்புக்கனை ரயில் நிலையத்தில் உள்ள கட்டிடம் ஒன்றின் […] - [40,000 மெட்றிக் தொன் அரிசி இன்று இறக்குமதி செய்யப்படும்](https://minnal24.com/40000-%e0%ae%ae%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1/): இன்று 40,000 மெட்றிக் தொன் அரிசி இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. இந்திய கடன் உதவியின் கீழ் இறக்குமதி செய்யப்படும் அரிசியின் ஒரு தொகுதியே இறக்குமதி செய்யப்படவுள்ளது. இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் அரிசியை ச.தொ.ச மூலம் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ள வர்த்தக அமைச்சு, நாட்டரிசியை 110 ரூபாய்க்கும் சம்பா அரிசியை 130 ரூபாய்க்கும் சதொச மூலம் விற்பனை செய்யவுள்ளதாக வர்த்தக அமைச்சின் செயலாளர் ஹந்ரானி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.   - [பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று இரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார்](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b9%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%aa%e0%ae%95%e0%af%8d%e0%ae%b7-%e0%ae%87/): நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலை குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று இரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது கடந்த வாரம் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் நாடு பாரிய நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள நிலையில் நாட்டு மக்களுக்கு உரையாற்றி அறிக்கை வெளியிடுமாறு கோரிக்கை விடுத்திருந்தனர். அதன்படி, இன்று இரவு பிரதமர் இந்த விசேட அறிவிப்பை வெளியிடுவார் என தெரிவிக்கப்படுகின்றது. - [விக்டோரியா நீர்த்தேக்கத்திலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%9f%e0%af%8b%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af/): தலாத்து ஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகாவலி ஆற்றின் விக்டோரியா நீர்த்தேக்கத்தில் அடையாளம் காணப்படாத பெண்ணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை தலாத்துஓயா பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலையடுத்து குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் . உயிரிழந்தவர் 40 மற்றும் 45 வயதுக்கு இடைப்பட்டவர் எனவும், அவர் வெள்ளை மற்றும் சிவப்பு கலந்த சட்டை மற்றும் வெள்ளை பாவாடை அணிந்திருந்ததாகவும், அவரது அடையாளம் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர். சடலம் கண்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. […] - [வாழைச்சேனை கடதாசி உற்பத்தி தொழிற்சாலையில் ஏ4 தாள்கள் உற்பத்தி](https://minnal24.com/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%87%e0%ae%a9%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%89%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d/): மட்டக்களப்பு-வாழைச்சேனை கடதாசி உற்பத்தி தொழிற்சாலையில் ஏ4 தாள்கள் ( A4 Paper) உற்பத்தி செய்யும் செயற்றிட்டம் ஆரம்பித்துள்ளதாக தேசிய காகித கூட்டுத்தாபன பணிப்பாளர் தெரிவித்துள்ளார். வெற்றிகரமாக உரியதரத்தில் ஏ4 தாள்கள் உற்பத்தி செய்யப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். - [டொலரின் விற்பனை பெறுமதி மேலும் அதிகரிப்பு](https://minnal24.com/%e0%ae%9f%e0%af%8a%e0%ae%b2%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a9%e0%af%88-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf-2/): இன்றும், நாளையும் விசேட பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், கொழும்பு பங்குப் பரிவரித்தனை நடவடிக்கைகள் இன்றும், நாளையும் இடம்பெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று திங்கட்கிழமை அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் மேலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. உரிமம் பெற்ற தனியார் வங்கிகள் இன்று அமெரிக்க டொலர் ஒன்றை 330 ரூபாவுக்கு விற்பனை செய்கின்றன. - [பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வலி.வடக்கு மக்கள் போராட்டம்](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%af%87%e0%ae%b1%e0%af%81-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9-2/): -யாழ் நிருபர்- அண்மைக்காலமாக அரசுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்து வலுப்பெற்றுள்ளன. அந்தவகையில் இன்று வலி. வடக்கு மக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தெல்லிப்பழை பேருந்து நிலையத்திற்கு முன்னால் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். போராட்டக்காரர்கள் ‘விவசாயிகள், மீனவர்களுக்கு எரிபொருளை முன்னுரிமைப்படுத்து, அத்தியாவசிய பொருட்கள் எங்கே?, வடக்கு கிழக்கு மீதான இராணுவ மயமாக்கலை நிறுத்து, பயங்கரவாத தடைச்சட்டத்தை உடன் நீக்கு, குழந்தைகளின் பால்மா எங்கே?, வலி. வடக்கு மக்களின் காணிகளை உடனடியாக விடுவி’ போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட […] - [கடற்படையினரின் இரு படகுகள் விபத்து : கடற்படை வீரர் ஒருவரை காணவில்லை](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%95%e0%af%81%e0%ae%95/): -யாழ் நிருபர்- காரைநகர் கடற்படையினர் மற்றும் நெடுந்தீவு கடற்படையினரின் படகுகள் ஒன்றையொன்று மோதி விபத்துக்குள்ளானதில் கடற்படை வீரர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக கடற்படையினர் தெரிவிக்கின்றனர். இரண்டு கடற்படை படகுகளும் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது சந்தேகத்திற்கிடமான முறையில் ஒரு படகு செல்வதை கடற்படையினர் அவதானித்தனர். இந்நிலையில் குறித்த படகினை இரண்டு கடற்படை படகுகளும் துரத்திக்கொண்டு சென்றவேளை இந்த விபத்து சம்பவித்துள்ளது. காணாமல் போன கடற்படை வீரரை தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். - [நெடுந்தீவில் ஐஸ் போதை பொருளுடன் மூவர் கைது](https://minnal24.com/%e0%ae%a8%e0%af%86%e0%ae%9f%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%80%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%90%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%88-%e0%ae%aa%e0%af%8a/): -யாழ் நிருபர்- இன்று அதிகாலை 2.30 மணியளவில், நெடுந்தீவு கடலில் வைத்து ஒரு கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் இருவர் நாச்சிக்குடாவையும் ஒருவர் கொடிகாமத்தையும் சேர்ந்தவர்கள். நெடுந்தீவு கடற்படையினரின் விசேட சுற்றிவளைப்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் கடற்படையினர் அவர்களை நெடுந்தீவு பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தவுள்ளனர். - [நோன்பை முன்னிட்டு உலருணவுகள் வழங்கி வைப்பு](https://minnal24.com/%e0%ae%a8%e0%af%8b%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%89%e0%ae%b2%e0%ae%b0%e0%af%81%e0%ae%a3%e0%ae%b5/): -கல்முனை நிருபர்- சீன-இலங்கை தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 65ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் முகமாகவும், புனித ரமழானை முன்னிட்டும் முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பின் வேண்டுகோளின் பேரில் சீன தூதரகத்தினால் உலருணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது. அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவின் ஏற்பாட்டில் மாளிகைக்காடு பிரதேச மக்களுக்கான உலருணவு பொருட்கள் வழங்கும் நிகழ்வு அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவின் தவிசாளரும், கிழக்கு மாகாண கணனி தொழிநுட்ப பேரவையின் பணிப்பாளருமான யூ.எல்.என். ஹுதாவின் தலைமையில் மாளிகைக்காட்டில் முன்னெடுக்கப்பட்டது.   - [வந்தாறுமூலை பொதுச் சந்தை வளாகத்தில் வணிக நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டி வைப்பு](https://minnal24.com/%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%82%e0%ae%b2%e0%af%88-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a4%e0%af%81%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88/): -வாழைச்சேனை நிருபர்- மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேசபையால் வந்தாறுமூலை பொதுச் சந்தை வளாகத்தில் வணிக நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது. உள்ளுர் ஆதரவு அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் பிரதேசத்தில் வணிகத் தொழிலில் ஈடுபடுவோர் அதிகளவு நன்மை பயக்க வாய்ப்புள்ளது. ஏறாவூர் பற்று பிரதேசபை தவிசாளர் சி.சர்வானந்தம், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச ஊடகவியலாளர், தேவப்பிரதீபன் ஆகியோர்கள் இதற்கான அடிக்கல்லினை வைபவ ரீதியாக நாட்டி வைத்தனர். - [மன்னார் தீவு பகுதிக்குள் எரிவாயு விநியோகிப்பதில்லை : மக்கள் விசனம்](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b5%e0%af%81-%e0%ae%aa%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%af%8d/): –மன்னார் நிருபர்– மன்னார் மாவட்டத்திற்கு வினியோகிக்க கொண்டு வரப்படுகின்ற லிற்றோ கேஸ் (எரிவாயு) மன்னார் தீவுப் பகுதிக்கு கொண்டு வந்து விநியோகிக்கப்படாமல் மன்னார்-மதவாச்சி பிரதான வீதி,உயிலங்குளம் பகுதியில் உள்ள லிற்றோ கேஸ் (எரிவாயு) களஞ்சியசாலையில் வைத்து மக்களுக்கு வினியோகிக்கப் படுவதனால் மன்னார் தீவு பகுதியில் உள்ள மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். நாட்டில் லிற்றோ கேஸ் (எரிவாயு) விற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் கடந்த பல மாதங்களாக மன்னார் மாவட்டத்திற்கு என […] - [சற்றுமுன் விபத்து : சிறுவன் உயிரிழப்பு](https://minnal24.com/%e0%ae%9a%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5/): -யாழ் நிருபர்- தாயும் மகனும் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது லொறி மோதியதால் விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்து யாழ்ப்பாணம் சத்திரச் சந்தியில் சற்று முன்னர் இடம்பெற்றுள்ளது. லொறியின் சில்லு சிறுவனின் தலையில் ஏறியதால் சிறுவன் சம்பவம் இடத்தில் உயிரிழந்துள்ளான். சம்பவ இடத்தில் ஒன்று கூடியவர்கள் லொறியின் மீது தாக்குதல் நடாத்தியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். - [நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை நீடிக்கும்](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%80%e0%ae%b0%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1/): நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதேவேளை, பதுளை, கொழும்பு, களுத்துறை, கண்டி, நுவரெலியா, கேகாலை, மாத்தளை மற்றும் குருநாகல் ஆகிய 8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், அதிக மழைக்காரணமாக இராஜாங்கனை நீர்த்தேக்கத்தில்  4 வான்கதவுகளும், அங்கமுவ நீர்த்தேக்கத்தின் 2 வான்கதவுகளும், தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 5 வான்கதவுகளும், திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.     - [மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை](https://minnal24.com/%e0%ae%ae%e0%af%80%e0%ae%b1%e0%af%81%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%9a/): சித்திரை புத்தாண்டை முன்னிட்டு அனைத்து மதுபானசாலைகளையும் எதிர்வரும் 2 தினங்களுக்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் 13ஆம் மற்றும் 14ஆம் திகதிகளில் சகல மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளன. இது தொடர்பில் அனைத்து மதுபானசாலைகள் உரிமையாளர்களுக்கும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. - [இன்றும் நாளையும் வங்கி சேவைகள் வழமை போன்று இயங்கும்](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%9a/): இன்றும், நாளையும் அனைத்து அனுமதிப்பெற்ற வங்கிகளும் பொதுவான வங்கித் தொழிற்பாடுகளுக்காக திறக்கப்படும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இன்றும், நாளையும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வங்கிகள் வழமைபோன்று திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. - [மின்னல் தாக்கத்தினால் ஏற்பட்ட அசம்பாவிதம்](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8f%e0%ae%b1/): முல்லைத்தீவு மாவட்டத்தில் மழையுடனான காலநிலை நிலவிவருகின்ற நிலையில் இந்த மின்னல் தாக்கம் நிகழ்ந்துள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வித்தியாபுரம் பகுதியில் இன்று  மாலை மின்னல் தாக்கியதில் வீடொன்று சேதமடைந்துள்ளது. அத்துடன்,  வீட்டு மின்னிணைப்பு பாதிக்கப்பட்டதுடன், வீட்டில் பயன்படுத்தப்பட்ட இலத்திரனியல் பொருட்கள் பலவும் ​சேதமடைந்துள்ளன.   - [அமெரிக்காவுக்கான பயணம் இரத்து](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%ae%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d/): நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையில் முன்னாள் நிதியமைச்சர்  பெசில் ராஜபக்ஷ அமெரிக்காவுக்கான தனது பயணத்தை இரத்துச் செய்துள்ளதாக அறியமுடிகிறது. பெசில் ராஜபக்ஷ தனது அமெரிக்க பயணத்தை இரத்துச் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார். அவர் முன்னர் அமெரிக்காவின் வொஷிங்டனில் உள்ள சர்வதேச நாணய நிதியத்திற்கு எதிர்வரும் 11 ஆம் திகதி விஜயம் செய்ய திட்டமிட்டிருந்தார்.   - [மதுபானசாலைகளுக்கு பூட்டு](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a9%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%aa%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f/): புத்தாண்டை முன்னிட்டு, எதிர்வரும் 13 மற்றும் 14ஆம் திகதிகளில் அனைத்து மதுபானசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்த இரண்டு தினங்களிலும் நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளதாக மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு மதுவரித் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது - [தாயாரால் கண்டிக்கப்பட்ட 16 வயது சிறுவன் தற்கொலை](https://minnal24.com/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f/): சிறுவன் கையடக்க தொலைபேசி விளையாட்டுக்களிற்கு அடிமையாகியுள்ளார். நாள் முழுவதும் கையடக்க தொலைபேசியுடன் பொழுதை கழித்து வந்துள்ளார். இதனால், தாயாரால் கண்டிக்கப்பட்ட 16 வயது சிறுவன் தற்கொலை செய்துள்ளார். உடுதும்பர, ஹாலியால பகுதியைச் சேர்ந்த சிறுவன் கடந்த செவ்வாய்க்கிழமை  காலை தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கையடக்க தொலைபேசி பாவிக்க கட்டுப்பாடு விதித்துள்ளார். இதையடுத்து, சிறுவன் வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தெல்தெனிய வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிரேதப் பரிசோதனையின் போது மரணத்திற்கான காரணம் தற்கொலை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. - ['கோட்டா வீடு செல்லும் வரை நாங்களும் வீடு செல்லப்போவதில்லை'](https://minnal24.com/%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%81-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%88/): ‘கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகி வீடு செல்லும் வரை நாங்களும் வீடு செல்லப்போவதில்லை’ என ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று வருபவர்கள் தெரிவிக்கின்றனர். ஜனாதிபதியை பதவி விலகக்கோரியும் அரசுக்கு எதிராகவும் காலிமுகத்திடலில் முன்னெடுத்துவரும் போராட்டம் இன்றும் தொடர்ந்து வருகிறது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு பல்வேறு சமூக ஆர்வலர்களும் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகின்றனர். மேலும், இன்றிரவும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவதற்கு போராட்டக்காரர்கள் தீர்மானித்துள்ளனர். அதற்கமைய இன்று ஞாயிற்றுக்கிழமை உணவுகளை தயாரிப்பதற்கும் சிலர் காலிமுகத்திடலில் தயாராகி வருவதாக அங்கிருந்து வரும் […] - [மொட்டுவின் தலைவராக நாமல்](https://minnal24.com/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d/): ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியை முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, முன்னெடுத்து செல்லும் பொறுப்பை ஏற்கவுள்ளதாக தெரிய வருகிறது. இதன் முதற் கட்டமாக நாமல் ராஜபக்ஷ பொதுஜன பெரமுனவின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்படவுள்ளார். இதன் பின்னர் பொதுஜன பெரமுனவின ஸ்தாபகரான பெசில் ராஜபக்ஷ இதுவரை செய்து வந்த கட்சியின் விரிவாக்கல் பணிகளை நாமல் ராஜபக்ஷ மேற்கொள்வார் எனக் கூறப்படுகிறது. நாட்டின் தற்போது பொருளாதார நெருக்கடியில் பொதுஜன பெரமுனவின் அரசியல் செயற்பாடுகள் ஸ்தம்பித்துள்ளது. இதன் காரணமாக அந்தக் கட்சியை […] - [70 வயது நபர் பாரவூர்தியில் நசியுண்டு உயிரிழப்பு](https://minnal24.com/70-%e0%ae%b5%e0%ae%af%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a8%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%b5%e0%af%82%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/): எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டீசலை பெறுவதற்கு வரிசையில் நின்றுகொண்டிருந்த 70 வயது நபர் உயிரிழந்துள்ளார். அச்சுவேலி பத்தமேனி பகுதியைச் சேர்ந்த தம்பிப்பிள்ளை கனகரத்தினம் என்பவரே முன்னோக்கி நகர்ந்த பாரவூர்தியில் நசியுண்டு உயிரிழந்துள்ளார். சிறு வீதியிலிருந்து பிரதான வீதிக்குள் நுழைய இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் முதியவர் முற்பட்ட வேளையில், டீசலுக்காக காத்திருந்த பாரவூர்தி நகர்ந்ததால் சில்லுக்குள் நசியுண்டு முதியவர் உயிரிழந்துள்ளார். அச்சுவேலி போக்குவது பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர். - [சீரற்ற வானிலையால் மூவர் உயிரிழப்பு ; 471 பேர் பாதிப்பு](https://minnal24.com/%e0%ae%9a%e0%af%80%e0%ae%b0%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%82%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d/): புலத்கோபிடிய, இம்புல்பே, கேகாலை ஆகிய பிரதேசங்களில் மரங்கள் முறிந்து வீழ்ந்ததில் மூவர் இவ்வாறு உயிரிழந்துள்ளனர். சீரற்ற வானிலையால் 9 மாவட்டங்களில் 128 குடும்பங்களைச் சேர்ந்த 471 பேர் இதுவரையில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரையில் மூவர் உயிரிழந்துள்ளதாகவும், மூவர் காயமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. மேலும் 39 வீடுகள் முழுமையாகவும், 82 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. - [எரிபொருளுக்காக காத்திருந்த 50 வயது நபர் உயிரிழப்பு](https://minnal24.com/%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%95-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81/): தங்கொட்டுவ- நீர்கொழும்பு பிரதான வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் இரண்டு நாள்களாக எரிபொருளுக்காக காத்திருந்த தனியார் பஸ் சாரதியொருவர், திடீர் நோய்வாய்ப்பட்ட நிலையில், நேற்று சனிக்கிழமை உயிரிழந்துள்ளார். அத்துடன் தங்கொட்டுவ – தம்பரவில எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு அருகில், எரிபொருளைப் பெற்றுக்கொள்ள வந்திருந்த 50 வயது நபர் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.   - [பொதுசொத்துக்களையும் பதிவு செய்ய கோரிய சுற்று நிரூபம் வெளியீடு](https://minnal24.com/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a4%e0%af%81%e0%ae%9a%e0%af%8a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf/): பொதுச்சொத்துக்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்காக, அரசாங்கத்தின் அனைத்துப் பொதுசொத்துக்களையும் பதிவு செய்தல் என்கிற தலைப்பில் இந்த சுற்றுநிரூபம் வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து அமைச்சின் செயலாளர்கள், மாகாணசபைகளின் பிரதம செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள் என அனைவருக்கும் இந்த சுற்றுநிரூபம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்திலிருந்து பதவி விலகியுள்ள அமைச்சர்கள் பயன்படுத்திய அரசாங்கத்துக்கு சொந்தமான இல்லங்கள், வாகனங்கள், தளபாடங்கள், அலுவலக உபகரணங்களை மீளப்பெற வேண்டுமென அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் திறைசேரி அறிவுறுத்தியுள்ளது. திறைசேரியின் செயலாளராக அண்மையில் பதவி விலகிய எஸ்.ஆர்.ஆட்டிகலே, தான் பதவி […] - [காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தில் மரவள்ளி கிழங்கு அவியல்](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be-2/): போராட்டத்துக்கு வருவோருக்கு நேற்றையதினம் தண்ணீர் போத்தல்கள் தன்னார்வ தொண்டர்களினால் வழங்கப்பட்டன. இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை சுடசுட தேனீர் மற்றும் மரவள்ளி கிழங்கு அவியல், தன்னார்வ தொண்டர்களினால் வழங்கப்படுகின்றது. அரசாங்கத்துக்கு எதிராக நேற்று சனிக்கிழமை காலை 9 மணிக்கு, பழைய பாராளுமன்ற கட்டடத்துக்கு முன்பாகவும் காலி முகத்திடலிலும் (கோல்பேஸ்) ஆரம்பிக்கப்பட்ட அரசாங்கத்துக்கு எதிரான எதிர்ப்புப் போராட்டம் இன்னும் தொடர்கின்றது. விடியவிடிய முன்னெடுக்கப்பட்ட போராட்டம் விடிந்தும் தொடர்ந்தது. அவர்களுடன் மேலும் சிலர், தங்களையும் காலையிலும், பிற்பகலிலும் இணைத்துக்கொண்டனர். இதனால், காலிமுகத்திடலின் போராட்டம் […] - [மட்டு.மாவட்டத்தில் வெற்றியீட்டிய விளையாட்டு வீர, வீராங்கனைகளின் தரவுகள் கோரப்பட்டுள்ளது](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1/): மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து சர்வதேசமட்டங்களில் பங்குபற்றிய மற்றும் தேசிய விளையாட்டுக்களில் பங்குபற்றி வெற்றியீட்டிய விளையாட்டு வீர, வீராங்கனைகளின் தரவுகளை ஆவணப்படுத்துவதற்கான விண்ணப்பங்கள் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் கோரப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான கே.கருணாகரன் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக மேற்படி விளையாட்டு வீர, வீராங்கனைகளின் விபரங்கள் கீழ் வரும் பிரிவுகளின் அடிப்படையில் ஆவணப்படுத்தும் நோக்கில கோரப்படுகின்றது. 1. 1990ம் ஆண்டிலிருந்து சர்வதேச மட்டத்தில் இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சின் (Under Ministry) அனுமதியுடன் பங்கு பற்றிய போட்டிகள் […] - [விபத்தில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு](https://minnal24.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%ae%9f%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a/): -யாழ் நிருபர்- நேற்று சனிக்கிழமை சித்தங்கேணியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வட்டுக்கோட்டையில் இருந்து சித்தங்கேணி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும், சித்தங்கேணியில் இருந்து வட்டுக்கோட்டை பக்கமாக சென்ற சைக்கிளும் மோதியே குறித்த விபத்து சம்பவித்துள்ளது. இந்நிலையில் விபத்திற்குள்ளான இருவரும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார். வட்டுக்கோட்டையை சேர்ந்த நாகராசா சிறீஸ்குமார் (வயது 42) என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக […] - [வீட்டிலுள்ளவர்களை கட்டி போட்டுவிட்டு கொள்ளை](https://minnal24.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%87%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2/): -யாழ் நிருபர்- வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சித்தங்கேணி பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து 15 பவுண் நகை மற்றும் 2 1/2 இலட்சம் ரூபா பணம் என்பன இன்று அதிகாலை 2 மணியளவில் களவாடப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இருவர் குறித்த வீட்டிற்குள் உள்நுழைந்து வீட்டில் உள்ளவர்களை கட்டிப்போட்டுவிட்டு நகைகளையும் பணத்தையும் திருடிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். - [வீதியின் பெயர் மாற்றப்பட்டது](https://minnal24.com/%e0%ae%b5%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f/): எம்பிலிப்பிட்டியவில் டோன தண்டின ராஜபக்ஷ மாவத்தை என இருந்த வீதியை முன்பு இருந்தது போல கொங்கிரீட் யாட் வீதியாக மாற்றப்பட்டுள்ளது. கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் தாயாரான டோன தண்டின சமரசிங்கவின் 41வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்ட போது அவரது நினைவாக 2011 இல் கார்ப்பெட் செய்து டோன தண்டின ராஜபக்ஷ மாவத்தை என பெயர் மாற்றப்பட்டது. தற்போது ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ மற்றும் அரசுக்கு எதிராக போராட்டம் இடம்பெறும் நிலையில் […] - [கோட்டாவுக்கு ஆதரவாக எழும் குரல்கள்](https://minnal24.com/%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%86%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95-%e0%ae%8e%e0%ae%b4%e0%af%81%e0%ae%ae/): ஜனாதிபதியை பதவிவிலகுமாறு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுவரும் நிலையில், தற்போது ஜனாதிபதி பதவி விலக வேண்டாம் என்று கூறி அவரது ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர். குறித்த ஆர்ப்பாட்டமானது தங்காலை மற்றும் கண்டியில் இடம்பெற்று வருகின்றன. இதில் பங்கேற்றவர்கள் “We want Gota” என்ற பதாதைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். - [ஜனாதிபதியுடன் இன்று சந்திக்கவுள்ள கட்சிகள்](https://minnal24.com/%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4/): 11 கட்சிகளின் கூட்டணி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக அறிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் வழங்கிய யோசனை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதியினால் அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கமைய இன்று  ஞாயிற்றுக்கிழமைமாலை 7 மணிக்கு குறித்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட ஆளும் கூட்டணியின் பங்காளி கட்சிகள் காபந்து அரசாங்கம் ஒன்றுக்கு கோரிக்கை விடுத்திருந்தன. இந்தநிலையில் இந்த விடயம் தொடர்பில் இன்றைய கலந்துரையாடலில் ஆராயப்படவுள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன. - [நேற்று  ஆரம்பித்த ஆர்ப்பாட்டம் இன்றும் தொடர்கிறது](https://minnal24.com/%e0%ae%a8%e0%af%87%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%86%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa/): அரசுக்கு எதிராக நேற்று  சனிக்கிழமை காலிமுகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்ட நடவடிக்கையானது மழையையும் பொருட்படுத்தாது தொடர்ந்து இடம்பெற்று வருகிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை காலை முதல் காலிமுகத்திடல் பகுதிகளில் கடும் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுவருபவர்களுக்கு சமூக ஆர்வலர் ஒருவர் சுமார் 500 மழைக் கவச ஆடைகளை அன்பளிப்பாக வழங்கியுள்ளார். அத்தோடு, பல்வேறு நலன்விரும்பிகளும் குறித்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருபவர்களுக்கு பல்வேறு உதவிகளை மேற்கொண்டு வருகின்றனர். - [பிரான்ஸில் இன்று தோ்தல்](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%a4%e0%af%87%e0%ae%be%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d/): புதிய ஜனாதிபதியைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் இன்று ஞாயிற்றுக்கிழமை பிரான்ஸில் நடைபெறுகிறது. இந்தத் தோ்தலில், தற்போதைய ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் மீண்டும் போட்டியிடுகிறாா். தோ்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பில் மேக்ரான் முன்னிலை வகிக்கிறாா். அவருக்கு அடுத்தபடியாக, தீவிர வலதுசாரிக் கொள்கையுடைய மரீனே லீ பென் அதிக ஆதரவைப் பெற்றுள்ளாா். முந்தைய தோ்தலைவிட இந்தத் தோ்தலில் மேக்ரானை எதிா்த்து போட்டியிடுவோா் அதிக பலம் பெற்றிப்பது கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே, இந்தத் தோ்தலில் போட்டி மிகவும் கடுமையாக இருக்கும் […] - [உக்ரைன் ஜனாதிபதி- பிரித்தானிய பிரதமர் சந்திப்பு](https://minnal24.com/%e0%ae%89%e0%ae%95%e0%af%8d%e0%ae%b0%e0%af%88%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d/): கடுமையான போர் சூழலுக்கு மத்தியில் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சனை உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி சந்தித்துப் பேசினார். உக்ரைன் மீது 40இற்கும் மேற்பட்ட நாளாக ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இருதரப்பினரிடையேயான போர் உலகின் பல நாடுகளிலும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சனை உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி சந்தித்துப் பேசினார். பிரித்தானியாவுக்கான உக்ரைன் தூதரகத்தில் இந்த சந்திப்பு நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சந்திப்பின்போது ரஷ்யத் தாக்குதல்கள் […] - [இலங்கையில் இருந்து மேலும் ஐந்து குடும்பம் அகதிகளாக தனுஷ்கோடியை சென்றடைந்தனர்](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%af%87%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae/): இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் உணவு, அத்தியாவசிய தேவைகளுக்காக கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால் இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு வந்த 20 இலங்கை தமிழர்கள் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை   அதிகாலை இரண்டு கை குழந்தையுடன்  5 குடும்பத்தை சேர்ந்த மேலும் 19 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடியை சென்றடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தனுஷ்கோடி இலங்கைக்கு அருகே உள்ளதால் இலங்கை தமிழர்கள் […] - [கற்குவாரியில் மண்சரிவு ; போக்குவரத்துக்கு பாதிப்பு](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81/): மாத்தளை- வட்டகொட பிரதான வீதியின் அமைந்துள்ள கற்குவாரியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளமையினால் குறித்த வீதியுடனான போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக இப்பகுதியில் பெய்து வரும் கடும்மழையினால் கற்கள் சரிந்து வருவதால் வீதி மூடப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் கவனம் செலுத்துமாறு, மாத்தளை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாலக பண்டாரவால் சம்பந்தப்பட்ட பிரிவினரின் கவனத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளது. அதற்கமைய அனர்த்தக முகாமைத்துவ மத்திய நிலையம், பிரதேச செயலகம், பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து வீதியில் உள்ள […] - [நாளை புதிய அமைச்சரவை](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%88-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%b5%e0%af%88/): பாராளுமன்றத்தில் 113 உறுப்பினர்களை காண்பித்து ஆட்சியை பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இந்நிலையில், அந்த சவாலை ஏற்றுக்கொள்வதற்கு எதிர்க்கட்சிகள் தயங்குகின்றன. பழைய அமைச்சரவையே நாளை திங்கட்கிழமை  புதிய அமைச்சரவையாக பதவியேற்கும் என்று அறியமுடிகின்றது. ஆகையால், மீண்டும் பழைய அமைச்சரவையே புதிய அமைச்சரவையாக பதவியேற்றுகும் என்று முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன, களுத்துறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். - ['மக்களிடத்தில் மன்னிப்பை கேட்டுக்கொள்கின்றேன்'](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%88/): மக்கள் படும் துன்பங்களை பார்த்து, அரசாங்கம் என்ற வகையிலும், ஸ்ரீ லங்கா பொதுஜன​ பெரமுன என்றவகையிலும் மக்களிடத்தில் மன்னிப்பை கேட்டுக்கொள்கின்றேன். அவர்கள் வீதிகளில் இறங்கி அரசாங்கத்தை விமர்சிப்பதை கண்டு புதுமையடையத் தேவையில்லை என்கிறார் எஸ்.பி.திஸாநாயக்கா எரிபொருள் வரிசை, சமையல் எரிவாயு வரிசை, இன்னும் பல வரிசைகளில் நிற்கும் மக்கள், “கோட்டா ​வீட்டுக்குப் போ” என கூறுவதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை. ஏழு, எட்டு மணிநேரம் மின்சாரம் இன்றி வீட்டுக்குள் இருக்கும் போது, பதாகையை ஏந்திக்கொண்டு, வீதிக்கு இறங்குவதற்கு எனக்கும் […] - [கொரியாவிலும் இலங்கைக்கெதிராக ஆர்ப்பாட்டம்](https://minnal24.com/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%86/): கொரியாவிற்கு தொழில் நிமித்தமாக சென்றுள்ள இலங்கையர்கள் குழுவொன்று அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசாங்கம் மற்றும் ஜனாதிபதிக்கு எதிராக நாட்டு மக்கள் முன்னெடுத்து வரும் தொடர் போராட்டங்களுக்கு, வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களும் ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர்.   - [சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் விடுத்துள்ள எச்சரிக்கை](https://minnal24.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b0%e0%af%87%e0%ae%b7%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be/): உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு திட்டமிட்ட குழுக்கள், பண்டிகை காலத்தில்   பண மோசடிகளில் ஈடுபட தயாராவது தொடர்பிலான தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதன் பின்னணி தொடர்பில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இந்த எச்சரிக்கை  விடுத்துள்ளார். புத்தாண்டு காலத்தில், பரிசுப் பொதிகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக வரும் இணைய மற்றும் ஏனைய தொலைபேசி அழைப்புக்கள், குறுஞ்செய்திகள் தொடர்பில் எச்சரிக்கையாக இருக்குமாறு பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். குற்றவியல் விவகாரங்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரும் பொலிஸ் […] - [மாலைதீவிலிருந்து இன்று வந்தடையவுள்ள எரிவாயு கப்பல்](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b2%e0%af%88%e0%ae%a4%e0%af%80%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%b5/): கப்பலில் இருந்து எரிவாயுவை இறக்கும் பணிகள் இன்று சனிக்கிழமை இரவு 7 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் துஷார ஜயசிங்க தெரிவித்தார். மாலைதீவில் இருந்து 3,900 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிக்கொண்டு கப்பலொன்று இலங்கையை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது நாளொன்றுக்கு சுமார் 100,000 எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு வெளியிடுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். - [இலங்கைக்கு கடத்த இருந்த ஐஸ் போதைப்பொருள் பறிமுதல்](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-4/): -மன்னார் நிருபர்- ராமேஸ்வரத்தில் இருந்து கடல் வழியாக படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்ற ஒரு கோடி மதிப்பிலான ஐஸ் போதைப்பொருள் நேற்று சனிக்கிழமை மீட்கப் பட்டதோடுஇ போதைப்பொருள் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட இருவரை கைது செய்து விசாரித்து வரும் ராமேஸ்வரம் பொலிஸார் மேலும் ஒருவரை தீவிரமாக தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு சமீப காலமாக கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. தமிழகத்திலிருந்து கடல் அட்டைகள், மஞ்சள், கஞ்சா […] - [பட்டாசு உட்பட கேளிக்கை வெடிபொருட்களின் விலைகள் அதிகரிப்பு](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%9a%e0%af%81-%e0%ae%89%e0%ae%9f%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f-%e0%ae%95%e0%af%87%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%b5/): மூலப்பொருட்களின் விலைகள் மற்றும் உற்பத்திச் செலவு அதிகரித்தமையே பட்டாசு உட்பட கேளிக்கை வெடிபொருட்களின் விலைகள், குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ளதாக  கிம்புலாபிட்டியில் சிறிய அளவில் பட்டாசு மற்றும் கேளிக்கை வெடிபொருட்களை உற்பத்தி செய்யும் பணிகளில் ஈடுபடும் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கடந்த வருடங்களுடன் ஒப்பிடும் போது இம்முறை பட்டாசு உள்ளிட்ட கேளிக்கை வெடிபொருட்களின் விற்பனையிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களினால் மக்கள் இவ்வாறு கேளிக்கை வெடிபொருட்களை கொள்வனவு செய்வதில் […] - [ஐ.எம்.எப். செல்கிறார் சப்ரி](https://minnal24.com/%e0%ae%90-%e0%ae%8e%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%aa%e0%af%8d%e0%ae%b0/): இம்மாதம் 18அம் திகதி ஆரம்பமாகவுள்ள சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடலுக்காக நிதி அமைச்சர் அலி சப்ரி தலைமையில், மத்தியவங்கி ஆளுநர், நிதியமைச்சின் செயலாளர் உள்ளடங்கிய குழுவினர் வொஷிங்டனுக்கு செல்வுள்ளனர். எதிர்வரும் 18ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள கலந்துரையாடல் 5 நாட்களுக்கு இடம்பெறவுள்ளது. அரசாங்கத்தின் சர்வதேச கடனை மறுசீரமைக்க உதவும் நிதி மற்றும் சட்ட ஆலோசகர்கள் 21 நாட்களுக்குள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. - [ஏப்ரல் 30 வரை நுவரெலியா வசந்தகாலம்](https://minnal24.com/%e0%ae%8f%e0%ae%aa%e0%af%8d%e0%ae%b0%e0%ae%b2%e0%af%8d-30-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%88-%e0%ae%a8%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%86%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%a8/): நுவரெலியா மாநகர சபையின் ஏற்பாட்டில் வருடந்தோறும் நடாத்தப்படும் ஏப்ரல் வசந்தக்கால கொண்டாட்டங்கள் இம் முறை கடந்த முதலாம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியது. இம்மாதம் முழுவதும் எதிர்வரும் ஏப்ரல் 30 ஆம் திகதி வரை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த முதலாம் திகதி பாடசாலை மாணவ மாணவிகளின் பேண்ட் வாத்திய அணிவகுப்பு மரியாதையுடன் நுவரெலியா மாநகரசபை முதல்வர் சந்தனலால் கருணாரட்ன மற்றும் நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட ஆகியோர் ஏப்ரல் வசந்தகால நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தனர். ஏப்ரல் […] - [சதித்திட்டக்காரர்களுக்கு கடவுளின் சாபம் கிடைத்துள்ளது](https://minnal24.com/%e0%ae%9a%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d/): ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சதித்திட்டக்காரர்களுக்கு கடவுளின் சாபம் கிடைத்துள்ளது என, கொழும்பு மறை மாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்தார். அந்த சதித்திட்டக்காரர்களுக்கு ஆட்சியை கைப்பற்ற முடியும் ஆனால், ஆட்சியை பாதுகாத்துக்கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். கத்தோலிக்க திருச்சபையின் சிவில் சங்கங்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்த அமைதி பேரணி நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி தேவாலயத்துக்கு அருகில் இருந்து ஆரம்பமாகி, கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் வரை முன்னெடுக்கப்பட்டது. நீர்கொழும்பில் இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பேராயர் […] - [நள்ளிரவையும் கடந்து தொடர்ந்த ஆர்ப்பாட்டம்](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0/): கொழும்பு ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, அரசாங்கத்துக்கு எதிராக ஆரம்பமாகிய ஆர்ப்பாட்டம், நேற்று சனிக்கிழமை நள்ளிரவையும் கடந்து தொடர்ந்தும் பல்லாயிரக் கணக்கானோரின் பங்கேற்புடன் இடம்பெறுகின்றது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் #GotaGoHome எனும் தமது குறிக்கோளை வலியுறுத்தி, ஜனாதிபதியை பதவி விலகுமாறு கோரி இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. - [சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடலுக்கு தயாராகும் குழு](https://minnal24.com/%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a3%e0%ae%af-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%9f-2/): நிதியமைச்சர் அலி சப்ரி, நிதியமைச்சின் செயலாளர் மற்றும் மத்திய வங்கி ஆளுநர் உள்ளிட்ட குழுவினர் ஏப்ரல் 18 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள சர்வதேச நாணய நிதியத்துடன் 5 நாட்கள் கலந்துரையாடலில் கலந்துகொள்வதற்காக அமெரிக்காவின் வோஷிங்டனுக்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது - [உயிரை மாய்த்துக் கொண்ட இளம் தந்தை](https://minnal24.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%87/): -யாழ் நிருபர்- மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆனைக்கோட்டை முதலாம் வீதியைச் சேர்ந்த நபர் ஒருவர் இன்று அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இன்று காலை 10 மணியளவில் அவரது மனைவி அவரின் அறையை திறந்து பார்த்தபோதே அவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டார். இதனையடுத்து மானிப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. பொலிஸார் சடலத்தை பார்வையிட்ட பின்னர் பிரேத பரிசோதனை னகளுக்காக சடலத்தை யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர். திருச்செல்வன் நியூட்டன் (வயது 33) […] - [11, 12 ஆம் திகதிகளில் வங்கிகள் இயங்கும்](https://minnal24.com/11-12-%e0%ae%86%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/): எதிர்வரும் 11 மற்றும் 12 ஆம் திகதிகள் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டாலும் அனைத்து வங்கிகளும் வழமை போன்று இயங்கும், என மத்திய வங்கி அறிவித்துள்ளது. - [இன்று முதல் சதொச விற்பனை நிலையங்களில் நிவாரண பொதி](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9a-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a9%e0%af%88/): அரிசி, பால்மா, சீனி, தேயிலை ஆகிய பொருட்கள் அடங்கிய இந்த பொதி ஒன்றின் விலை 1950.00 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது. தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இன்று முதல் இலங்கை சதொச விற்பனை நிலையங்களில் குறித்த நிவாரண பொதி விற்பனை செய்யப்படவுள்ளது இவ் நிவாரண பொதியில், 5 கிலோ நாட்டரிசி, 5 கிலோ சம்பா அரிசி, 400 கிராம் ஐலண்ட் பால்மா, 1 கிலோ சிவப்பு சீனி, 100 கிராம் தேயிலை ஆகியன அடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. - [79 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது](https://minnal24.com/79-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b0%e0%af%82%e0%ae%aa%e0%ae%be-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9/): தலைமன்னார் கடற்பகுதியில் கடற்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போது ஐஸ் ரக போதைப் பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 79 இலட்சம் ரூபா பெறுமதியான 965 கிராம் ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது. தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த 37 மற்றும் 45 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.   - [க‌ண்கெட்ட‌பின் ஞான‌ம் வ‌ந்த‌து போன்று ச‌ஜித் பிரேம‌தாச‌ பேசுகிறார் - அப்துல் ம‌ஜீத்](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9e%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5/): -கல்முனை நிருபர்- நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்க வேண்டுமாயின் ஆட்சி பொறுப்பை ஏற்க தான் தயாராக இருப்பதாகவும், அவ்வாறு ஆட்சி பொறுப்பை ஏற்க வேண்டுமெனில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை முழுமையாக நீக்கப்பட வேண்டுமெனவும் எதிர் கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சொல்லியிருப்ப‌து வேலைக்க‌ள்ளிக்கு பிள்ளைச்சாட்டு போன்ற‌தாகும் என‌ ஐக்கிய‌ காங்கிரஸ் க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் சாடியுள்ளார். அவ‌ர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ள‌தாவ‌து, ச‌ஜித் பிரேம‌தாச‌வும் அமைச்ச‌ராக‌ இருந்த‌ அர‌சாங்க‌மே க‌ட‌ந்த‌ […] - [மூத்த கலைஞர்களுக்கான ஓய்வூதிய கொடுப்பனவு வழங்கி வைப்பு](https://minnal24.com/%e0%ae%ae%e0%af%82%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%b2%e0%af%88%e0%ae%9e%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%93%e0%ae%af%e0%af%8d/): -கல்முனை நிருபர்- இறக்காமம் பிரதேசத்தில் இருந்து 07 சிரேஷ்ட கலைஞர்கள் ஓய்வூதியக் கொடுப்பனவுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட கலைஞர்களுக்கான காசோலை வழங்கும் நிகழ்வு இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம். ரஷ்ஷான் தலைமையில் வெள்ளிக் கிழமை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. கலைஞர் ஓய்வூதியக் கொடுப்பனவானது, சமூக, சமூக நலனோம்பல் அமைச்சின் கீழ் கலாசார அலுவல்கள் திணைக்களத்துடனும் சேர்ந்து ஸ்தாபிக்கப்பட்டுள்ள புதிய நிகழ்ச்சித்திட்டமாகும். நலிவுற்ற நிலையில் இருக்கின்ற கலைஞர்களைப் பேணிக் காத்தல், போசணையளித்தல், பொருளாதார ஆற்றலை வளர்த்தல், அவர்களை கௌரவப்படுத்தல் […] - [சிங்கள மக்களையும் அரசாங்கத்தையும் மோத விட்டு நாம் வேடிக்கை பார்க்க கூடாது](https://minnal24.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3-%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%be%e0%ae%99%e0%af%8d/): -யாழ் நிருபர்- இருபது ஆண்டுகளாக நேர்மையாக நியாயமாக அடிப்படையில் செயற்பட்டு வந்தாலும் அடங்கி ஒடுங்கியிருந்த தமிழர் விடுதலைக் இன்று சனிக்கிழமை மீண்டும் தலைதூக்க போகின்றது, என அக்கட்சியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே வீ.ஆனந்தசங்கரி இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு மக்கள் மீண்டும் ஆதரவு தரவேண்டும் இன்று காலை 11 மணிக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியின் மத்திய குழுக் கூட்டம் […] - [நகைக்காக 84 வயது மூதாட்டி கொலை](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%95-84-%e0%ae%b5%e0%ae%af%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%af%82%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%95/): -நுவரெலியா நிருபர்- தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, மடக்கும்புற தோட்டத்தின் வடக்கி மலை பிரிவில் நேற்று மாலை கொலை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த தோட்ட பிரிவில் வசித்து வந்த 84 வயதுடைய மூதாட்டி ஒருவரை இனம் தெரியாத நபர் ஒருவர் படுகொலை செய்துள்ளார். குறித்த மூதாட்டி அணிந்திருந்த காதணிகளை களவாடி செல்வதற்காக அவரின் கைகளும் வாயும் துணியால் கட்டிய நிலையில் கழுத்து நசுக்கப்பட்டு காது அறுக்கப்பட்ட நிலையில் கொலைச் சம்பவம் நடந்துள்ளதாக உறவினர் ஒருவர் தெரிவித்தார். நேற்று […] - [நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b2-%e0%ae%aa%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87-3/): நாட்டைச் சூழவுள்ள தாழ்வான வளிமண்டலம் காரணமாக எதிர்வரும் சில தினங்களில் நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது. - [இன்றைய மின்தடை அறிவித்தல்](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%88%e0%ae%af-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a4%e0%ae%9f%e0%af%88-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2/): இன்று A முதல் L வரையான வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களில் மாலை 3.00 மணிமுதல் இரவு 9.00 மணிவரையான காலப்பகுதியினுள் 2 மணித்தியாலங்கள் மின்சாரம் தடைபடவுள்ளது. P முதல் W வரையான வலயங்களில் மாலை 3.00 மணிமுதல் இரவு 10.00 மணிவரையான காலப்பகுதியினுள் 2 மணித்தியாலங்கள் மின்சாரம் தடைபடவுள்ளது. CC1 வலயத்தில் காலை 6.00 மணிமுதல் முற்பகல் 9.30 வரையான காலப்பகுதியினுள் 3 மணித்தியாலமும் 30 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படுகிறது. நீர்மின் நிலையங்களை அண்மித்த பகுதிகளில் மழைவீழ்ச்சி […] - [வாழைச்சேனையில் எரிவாயு சிலிண்டர்கள் ஏற்றி வந்த வாகனத்தினை இடை மறித்து ஆர்ப்பாட்டம்](https://minnal24.com/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%87%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%af%81-%e0%ae%9a/): -வாழைச்சேனை நிருபர்- மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக எரிவாயு சிலிண்டர்கள் ஏற்றி வந்த வாகனத்தினை இடை மறித்து மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். வாழைச்சேனை மற்றும் ஓட்டமாவடி பிரதேசத்தினை சேர்ந்த மக்களே இவ்வாறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். எரிவாயு விற்காக அதிகாலை முதல் காத்திருந்த மக்களுக்கு எரிவாயு கிடைக்கவில்லை. நேற்று எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டதினால் வெற்று எரிவாயு சிலிண்டர்களுடன் அதிகாலை 3 மணிமுதல் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் உள்ள வெற்றுக் காணியில் மதியம் வரை […] - [தம்பதியினர் ஒன்றாக தூங்க , முத்தமிட தடை விதித்துள்ள ஷாங்காய் நிர்வாகம்](https://minnal24.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%92%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%95-%e0%ae%a4%e0%af%82%e0%ae%99%e0%af%8d%e0%ae%95/): சீனாவில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் முத்தமிடல் , கட்டியணைத்தல் உள்ளிட்ட  தடைகளை ஷாங்காய் நிர்வாகம் மீண்டும் அமுல்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் தற்போது முடிவுக்கு வந்துள்ள நிலையில் , கொரோனா தொற்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட இடத்திலிருந்து பரவத் தொடங்கியுள்ள நிலையில் கொரோனா தொற்று மக்கள் மத்தியில் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஷாங்காய் நகரில் 2.6 கோடி மக்கள் வசித்து வருகின்ற நிலையில் இங்கு கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு நாளுக்கு […] - [பதவியிலிருந்து விலகப்போவதில்லை - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b/): ஜனாதிபதி பதவியில் இருந்து விலகப் போவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரச உயர் அதிகாரிகள் குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டின் அரசியலமைப்புக்கு அமைவாக தான் செயற்படுவதாக மேலும் அவர் குறிப்பிட்டுள்ளார்.   - [மீனவர்களை விடுவிக்க சட்ட உதவிகளை கோரும் மு.க.ஸ்டாலின்](https://minnal24.com/%e0%ae%ae%e0%af%80%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f/): இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிப்பதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்திய மத்திய அரசாங்கத்திடம் சட்ட உதவிகளை கோரியுள்ளார். இந்த விடயம் தொடர்பில் அவர் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். கிளிநொச்சி இரணைதீவு கடற்பரப்பில்  கைதுசெய்யப்பட்ட 12 இந்திய மீனவர்களையும்  தலா இரண்டு கோடி ரூபா  ரொக்கப் பிணையில் செல்லுமாறு அண்மையில் கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த விடயம் தொடர்பில் தமது கடிதத்தில் கருத்துரைத்துள்ள மு.க.ஸ்டாலின்  தமிழக மீனவர்களால் அவ்வளவு […] - [நாட்டை விட்டு வெளியேறினாரா பசில்?](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%af%87%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%be/): கொரோனா தொற்றுக்குள்ளாகிய  முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ளார் என சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இன்று சனிக்கிழமை காலை இரத்மலானை விமான நிலையத்திலிருந்து பசில் புறப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், பசில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலோ அல்லது இரத்மலானை விமான நிலையத்திலோ இருந்து வெளியேறியதாக தகவல் தெரிவிக்கப்படவில்லை விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, பசில் கொரோனா தொற்று காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. - [திங்கட்கிழமை முதல் எரிபொருள் விநியோகம் வழமைக்கு திரும்பும்](https://minnal24.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%ae%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8a/): புத்தாண்டு விடுமுறையில் சென்ற எரிப்பொருள் கொள்கலன் தாங்கி ஊர்தி சாரதிகளில் குறிப்பிடத்தக்க அளவானோர் சேவைக்கு சமூகமளித்துள்ள நிலையில் கனியவள கூட்டுத்தாபன எரிப்பொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக எரிப்பொருள் விநியோக நடவடிக்கைகள் ஓரளவு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் திங்கட்கிழமை முதல் எரிப்பொருள் விநியோக நடவடிக்கைகள் வழமைக்கு திரும்பும் என இலங்கை கனியவள தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கனியவள கூட்டுத்தாபன சேவையாளர்கள் மற்றும் எரிப்பொருள் தாங்கி ஊர்திகளின் சாரதிகள் கடந்த 2 […] - [நாட்டின் நிலைமை தொடர்பில் பேச்சுவார்த்தை](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae%e0%af%88-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf/): நாட்டில் தற்போது நிலவுகின்ற விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று சனிக்கிழமை பல கட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன. அதன் முதல் கட்ட பேச்சுவார்த்தையில் நிதி அமைச்சர் அலி சப்ரி, மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க, இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, ஜனாதிபதி செயலாளர் காமினி செனரத், ஜனாதிபதியின் பிரதான ஆலோசகர் லலித் வீரதுங்க மற்றும் முதல் அமைச்சின் செயலாளர் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர். மற்றுமொரு பேச்சுவார்த்தை நிதி, வலுசக்தி மற்றும் சுகாதார அமைச்சின் அதிகாரிகளுடன் […] - [நேற்று அமைக்கப்பட்ட இணைய கோபுரம் இன்று அகற்றப்பட்டது](https://minnal24.com/%e0%ae%a8%e0%af%87%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b2%e0%af%88/): காலி முகத்திடலுக்கு அருகில் நேற்று வெள்ளிக்கிழமை தற்காலிகமாக அமைக்கப்பட்ட தொலைத்தொடர்பு கோபுரம் திடீரென இன்று சனிக்கிழமை அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. போராட்டத்திற்கு வருகை தருவோரின் தகவல்களை திரட்டுவதற்காக இந்த கோபுரம் அமைக்கப்பட்டதாக தொலைத்தொடர்பு துறை சார் புத்திஜீவிகள் தனக்கு தெரிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், கோபுரம் இன்று அப்புறப்படுத்தப்பட்டுள்ளது - [ஒரு வார காலத்திற்கு நாடு மூடப்படுகின்றதா?](https://minnal24.com/%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81/): நாட்டை ஒருவார காலம் முடக்குவது தொடர்பில் அரச உயர்மட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக உறுதிப்படுத்தபடாத தகவல்கள் வெளியாகியுள்ளன. எரிபொருள் மற்றும் இதர அத்தியாவசிய பொருட்களை மக்கள் பெற்றுக்கொள்வதில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளதால் ,ஒருவாரகாலம் நாட்டை முடக்கி அத்தியாவசிய சேவைகளை சீர்செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டால் இதுதொடர்பில்   அறிவிப்பு வெளிவருமென எதிர்பார்க்கப்படுகிறது. - [வட்டக்கச்சி ஸ்ரீ ரங்கநாதர் ஆலயத்தினுள் திருட்டு](https://minnal24.com/%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af%80-%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a4/): -யாழ் நிருபர்- நேற்று வெள்ளிக்கிழமை வட்டக்கச்சி ஸ்ரீ ரங்கநாதர் ஆலயத்துக்குள் புகுந்த இனந்தெரியாத நபர்களினால் ஆலயத்தில் மூலஸ்தான விக்கிரகம் புரட்டப்பட்டு தகடுகள் களவாடப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நேற்று வெள்ளிக்கிழமை ஆலயத்தில் பூசை வழிபாடுகள் இடம் பெற்ற பின்னர் ஆலயம் பூட்டப்பட்டது. இந்நிலையில், இரவு இனந்தெரியாத நபர்கள் ஆலயத்துககுள் புகுந்து மூல விக்கிரகத்தை புரட்டி அதன் கீழிருந்த தகடுகளை திருடிச் சென்றுள்ளதுடன் திருப்பணி உண்டியலையும் உடைத்து களவாடியுள்ளனர். குறித்த ஆலயம் ஒரு சில மாதங்களுக்கு முன்னர் மகாகும்பாபிசேஷம் […] - [இயந்திரக் கோளாறு காரணமாக மீனவர்களுடன் இந்தியாவில் கரையொதுங்கிய படகு](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%af%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b3%e0%ae%be%e0%ae%b1%e0%af%81-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%ae%e0%ae%be-2/): -யாழ் நிருபர்- முல்லைத்தீவில் இருந்து கடல் தொழிலிற்குச் சென்ற படகு ஒன்று இயந்திரக் கோளாறு காரணமாக இன்று சனிக்கிழமை இந்தியாவில் கரை ஒதுங்கியுள்ளது. முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த இரு மீனவர்கள் பயணித்த படகு இயந்திரக் கோளாறு காரணமாக தூத்துக்குடியில் கரை ஒதுங்கியுள்ளது. இதன்போது, முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த றொசான் (வயது 29), மன்னார் மாவட்டத்தை சேர்ந்த சுதாகர் (வயது 26) ஆகிய இரு மீனவர்களே இந்தியாவில் கரை சேர்ந்துள்ளனர் இவர்கள் தொடர்பில் இந்தியப் பொலிஸார் […] - [மட்டக்களப்பில் சித்திர குப்த விரத நிகழ்வுகள்](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0-%e0%ae%95/): -வாழைச்சேனை நிருபர்- சித்திர குப்த விரதத்தினை முன்னிட்டு மட்டக்களப்பில் உள்ள பல்வேறு ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. அந்த வகையில் பேத்தாழை வாழைச்சேனை ஸ்ரீ வீரையடி ஆலயத்திலும் ஆலய குரு சிவஸ்ரீ எம்.சண்முகம் குருக்கள் தலைமையில் பூஜை நிகழ்வுகள் நடைபெற்றன. விநாயகருக்கு அபிஷேகமும் சித்திர குப்தருக்கு விசேட அபிஷேகம் பூஜையும், அர்ச்சனை வழிபாடும் சித்திர குப்த நாயனார் கதையும் பாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து பாரம்பரிய சித்திரை கஞ்சி வைத்து அடியார்களுக்கு வழங்கப்பட்டது. இன்று சித்திரா பௌர்ணமி […] - [இக்கட்டான சூழ்நிலையில் ஓடி ஒழித்தவர்கள் இன்று வந்து சேர்கின்றார்கள்](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%93/): -கல்முனை நிருபர்- கட்சியில் நன்கு அனுபவித்து விட்டு வேறு கட்சி தாவி மீண்டும் வந்தவர்களைப் பற்றி நாம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதிப் பொருளாளர் ஏ.சி.யஹியாகான் குறிப்பிட்டார். சாய்ந்தமருது அல் ஜலால் முன்பள்ளி பாடசாலையின் வருடாந்த பட்டமளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே யஹியாகான் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து உரையாற்றிய அவர், கட்சி மாறுவதை தொழிலாகக் கொண்டவர்கள், அவ்வாறு கட்சி தாவி நன்கு அனுபவித்து விட்டு, துரோகம் […] - [மூன்றாம் உலகப் போர் ஆரம்பம் : ரஷ்யா அறிவிப்பு](https://minnal24.com/%e0%ae%ae%e0%af%82%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/): ரஷ்யா-உக்ரைன் இடையே கடுமையான போர் இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில், உக்ரைன் தனது ஏவுகணை மூலம் மாஸ்கோவின் கருங்கடல் பிரதேசத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரஷ்யாவின் முதன்மை போர் கப்பலான Moskva வை மூழ்கடித்தாக அறிவித்தது. இதனையடுத்து மூன்றாம் உலகப்போர் தொடங்கிவிட்டதாக ரஷ்ய அரசு தொலைக்காட்சி அறிவித்துள்ளது. - [காலி முகத்திடலில் பொலிஸ் பாரவூர்திகள்?](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d/): காலி முகத்திடல் போராட்டம் இடம்பெறும் பகுதிக்கு அண்மையில் நிறுத்தப்பட்டிருந்த பொலிஸ் வாகனங்கள் தற்போது அகற்றப்பட்டுள்ளன. இன்று சனிக்கிழமை காலை காலிமுகத்திடலுக்கு அருகாமையில் பொலிஸ் பாரவூர்தி வாகனங்கள்  பல நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் இவை எங்கிருந்து? எதற்காக? இவ்விடத்தில் நிறுத்தப்பட்டன என்பது குறித்து அதிகாரபூர்வமான தகவல் எதுவும் வெளியிடப்படிருக்கவில்லை. இந்நிலையில் தற்போது அவை அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.   - [கைவிசேடம் கொடுக்க மறுத்தவர் மீது தாக்குதல்](https://minnal24.com/%e0%ae%95%e0%af%88%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9a%e0%af%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/): கைவிசேடம் கொடுக்க மறுத்தவர்  இரும்பு கம்பியால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் ஒன்று யாழ்.மட்டுவில் பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவகையில், வெளிநாட்டில் இருந்து வந்த நபர் ஒருவர் புத்தாண்டை முன்னிட்டு கைவிசேடம் வழங்கியுள்ளார். இதை கேள்வியுற்ற குறித்த தாக்குதலை மேற்கொண்ட நபர் மதுபோதையில் அங்கு சென்று தனக்கும் கைவிசேடம் தருமாறு கேட்டுள்ளார். அதற்கு கைவிசேடம் வழங்கியவர் நாளை காலை வாருங்கள் கைவிசேடம் தருகிறேன், என கூறியுள்ளார். இதனையடுத்து, மதுபோதையில் இருந்தவர் கைவிசேடம் வழங்கிய […] - [மீராவோடை பள்ளிவாசல் தாக்கப்பட்டு ஐந்தாவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு](https://minnal24.com/%e0%ae%ae%e0%af%80%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b5%e0%af%8b%e0%ae%9f%e0%af%88-%e0%ae%aa%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9a%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%af%8d/): -வாழைச்சேனை நிருபர்- ‘வஹ்ஹாபிஸக் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றுபடுவோம்’    என்ற தொனிப்பொருளில் மஸ்ஜிதே செய்தினா முஹமத்(ஸல் ) மீராவோடை பள்ளிவாயல் தாக்கப்பட்டு ஐந்தாவது ஆண்டு நிறைவினை நினைவு கூறும் முகமாக கருப்பு வெள்ளி நாள் நினைவேந்தல் நிகழ்வு  நினைவு கூறப்பட்டது. குறித்த நிகழ்வு கல்குடா மீராவோடை ஆலீம் வீதியில் அமைந்துள்ள மஸ்ஜிதே செய்தினா முஹமத் பள்ளிவாயலில் நடைபெற்றது.  இஸ்லாமிய கல்வி கலாச்சார நிலையத்தின் தலைவர் ஏ.எல்.மர்சூத் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மௌவி ஜே.அஸ்ரப்அலி ஆசிரியர் கலந்து கொண்டு […] - [ஊடக சந்திப்பில் கண்ணீர் விட்டு அழுத இராஜாங்க அமைச்சர்](https://minnal24.com/%e0%ae%8a%e0%ae%9f%e0%ae%95-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%80%e0%ae%b0%e0%af%8d/): பிரதேசவாசிகள் வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்ததால் எனது சின்ன மகள் முழுநாளும் சாப்பிடவே இல்லை, என சுதந்திர கட்சியின் ராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார கண்ணீர் விட்டு அழுதார். நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் உரையாற்றும் போதே அவர் இடையில் இவ்வாறு தெரிவித்து அழுதார். மேலும், தனது இல்லத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டாம் எனவும் விவசாய இராஜாங்க அமைச்சர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். - [கத்தோலிக்க திருச்சபையின் அறிவிப்பு](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%aa%e0%af%88%e0%ae%af%e0%ae%bf-2/): ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று 3 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி எதிர்வரும் 21 ஆம் திகதி நாட்டின் சகல கத்தோலிக்கத் தேவாலயங்களில் விசேட ஆராதனைகள் நடத்துவதற்கு இலங்கை கத்தோலிக்க திருச்சபை தீர்மானித்துள்ளது. மேலும் அன்றைய தினம் காலை 8.45 மணிக்கு சகல தேவாலயங்களிலும் மணியோசை எழுப்பப்படவுள்ளதுடன் செப வழிபாடுகளும் ஏற்பாடு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்திலும் நீர்கொழும்பு கட்டுவப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்திலும் உயிரிழந்தவர்களுக்கான விசேட நினைவு ஆராதனை ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது. - [19ஆம் திகதி இராஜினாமா](https://minnal24.com/19%e0%ae%86%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%be%e0%ae%ae%e0%ae%be/): இம்மாதம் 19ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற அமர்வில் தமது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதா பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். ருவன்வெல்லவில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அடுத்த வார பாராளுமன்ற அமர்வின் முதல் பணியாக புதிய பிரதி சபாநாயகரை நியமிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். - [விமானங்களின் எண்ணிக்கையை 35 ஆக அதிகரிக்க தீர்மானம்](https://minnal24.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af/): ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அடுத்த மூன்று வருடங்களுக்குள் தனது விமானங்களின் எண்ணிக்கையை 35 ஆக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. 21 விமானங்களுக்காக நீண்டகாலக் குத்த கைக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலுக்கு முன்னர், ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் 27 விமானங்களைக் கொண்டிருந்தது. அது தற்போது 24 ஆகக் குறைந்துள்ளது. இந்த விமானங்களுக்கு பதிலாக புதிய விமானங்களை கொண்டு வரவும் விமான நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன்படி, 2025ஆம் ஆண்டுக்குள் விமானங்களின் எண்ணிக்கையை 35 ஆக அதிகரித்து புதிய இடங்களுக்கு […] - [இன்றும் நாளையும் இரண்டு மணித்தியாலய மின்வெட்டு](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81/): ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டவாறு இன்றும் நாளையும் இரண்டு மணித்தியாலங்களும் 15 நிமிடங்களுக்கும் மின் வெட்டு அமுல்படுத்தப்படுமென பொதுப் பயன்பாடுகள் ஆணைக் குழு தெரிவித்துள்ளது. அதன்படி, குறித்த இரு தினங்களிலும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை யான காலப்பகுதியினுள் மாத் திரம் இவ்வாறு மின்வெட்டு அமுலாகும் என்றும், இரவில் மின் துண்டிக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று சனிக்கிழமை மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமை ஏ முதல் டபிள்யூ வரையான வலயங்களுக்கு காலை 9 மணி முதல் […] - [புத்தாண்டு பலகாரங்களுடன் சிறை சென்ற சஜித் அணியினர்](https://minnal24.com/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9/): புத்தாண்டு பலகாரங்களுடன் சிறைக்கு சென்ற சஜித் அணியினர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக் கவை பார்வையிட்டு வழங்கியுள்ளனர். தமிழ் – சிங்கள புத்தாண்டு கொண்டாடப்பட்ட நிலையில் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரீன் பெர்ணான்டோ மற்றும் மனுஷ நாணயக்கார புத்தாண்டு இனிப்புக்களுடன் சிறையிலுள்ள ரஞ்சனை பார்க்கச் சென்றுள்ளனர். சிறைச்சாலையில் ரஞ்சன் ராமநாயக்கவை பார்வையிட்டு புத்தாண்டு இனிப்புகளை வழங்கி உரையாடிவிட்டு வெளியே வந்த ஹரீன், மனுஷ ஆகியோர், ரஞ்சனுக்கு ஜனாதிபதியின் பொது மன்னிப்பு தேவையில்லை என […] - [தந்தை – மகன் தண்ணீர் தொட்டியிலிருந்து சடலமாக மீட்பு](https://minnal24.com/%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%af%8d/): தொழிற்சாலை தண்ணீர் தொட்டியில் இருந்து மர்மமான முறையில் உயிரிழந்த 37 வயதுடைய தந்தை மற்றும் 9 வயது மகன் ஆகியோரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. குறித்த நபர் தனது மகனுடன் தொழிற்சாலையின் பாதுகாப்பை பார்வையிட வந்திருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இருவரும் காலை 10.30 மணியளவில் தொழிற்சாலைக்குள் நுழைந்துள்ளதுடன் பிற்பகல் 2.00 மணி ஆகியும் வெளியே வராத காரணத்தால் பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளே சென்று அவதானித்த போது தண்ணீர் தொட்டியில் இருந்து குறித்த இருவரின் சடலம் […] - [பதுக்கி வைக்கப்பட்டிருந்த 230 கேஸ் சிலிண்டர்களுடன் உரிமையாளர் கைது](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%b5%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81-2/): கினிகத்தேனை – அம்பகமுவ பகுதியில் உள்ள வீடொன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 230 வீட்டு சமையல் எரிவாயு கொள்கலன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய, பொலிஸாரும், நுவரெலியா மாவட்ட நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகளும் இணைந்து முன்னெடுத்த சுற்றிவளைப்பில் இந்த எரிவாயு கொள்கலன்கள் மீட்கப்பட்டுள்ளன. 12.5 கிலோகிராம் எடைக்கொண்ட 177 கொள்கலன்களும், 5 கிலோகிராம் எடைக்கொண்ட 28 கொள்கலன்களும், 2.5 கிலோகிராம் எடைகொண்ட 25 கொள்கலன்களும் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த எரிவாயு கொள்கலன்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வீட்டின் […] - [பசில்  ராஜபக்ஷவுக்கு கொவிட்](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%aa%e0%ae%95%e0%af%8d%e0%ae%b7%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b5/): முன்னாள் நிதி அமைச்சர் பசில்  ராஜபக்ஷவுக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது. இந்நிலையில் சிகிச்சைகளுக்காக அவர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். - [எரிபொருள் விநியோகத்திற்கு வரையறைகள் விதிக்கப்படவில்லை](https://minnal24.com/%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%af%e0%af%8b%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1-2/): தமது எரிபொருள் விநியோகத்திற்கு வரையறைகள் விதிக்கப்படவில்லை என லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் இன்று மதியம் முதல் எரிபொருள் விநியோகத்தை வரையறைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்போது , தமது நிறுவனத்தின் எரிபொருள் விநியோகத்தில் வரையறைகள் விதிக்கப்படவில்லை என ஐ.ஓ.சி நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.   - [எலான் மஸ்க் வசமாகும் டுவிட்டர்](https://minnal24.com/%e0%ae%8e%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b8%e0%af%8d%e0%ae%95%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9f%e0%af%81%e0%ae%b5/): பிரபல சமூக வலைதளங்களில் ஒன்றான டுவிட்டரை உலக பணக்காரரும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான எலான் மஸ்க் வாங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. முன்னதாக, எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தில் 9.2 சதவீத பங்குகளை வைத்திருந்ததால் நிர்வாகக் குழுவில் இணைய அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதை மறுத்த எலான், தற்போது 41 பில்லியன் டொலருக்கு (இலங்கை மதிப்பில் 9 இலட்சம் கோடி) ட்விட்டர் நிறுவனத்தை வாங்க முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. - ['கோட்டா கோ கம' வில் சிறுமி திடீரென மயக்கம்](https://minnal24.com/%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be-%e0%ae%95%e0%af%8b-%e0%ae%95%e0%ae%ae-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%ae%bf-%e0%ae%a4/): காலி முகத்திடலுக்கு அருகாமையில் நடைபெற்ற போராட்டத்திற்கு ஆதரவளிக்க வந்திருந்த சிறுமி ஒருவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். 12 வயதுடைய சிறுமி ஒருவர் திடீரென சுகவீனமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறுமியை சிகிச்சைக்காக ‘புழவயபுழபுயஅய’ என பெயரிடப்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அடிப்படை சிகிச்சை பிரிவுக்கு அழைத்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. - [அரசாங்கம் வெளிப்படைத் தன்மையுடன் இருக்கவில்லை- நாமல்](https://minnal24.com/%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3/): ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் தேவையான அளவுக்கு வெளிப்படைத் தன்மையுடன் இருக்கவில்லை என்பதையும் ஜனாதிபதியின் மௌனம் தற்போதைய நிலைமைக்கு உதவவில்லை என்பதையும் ஏற்றுக்கொண்ட நாமல், ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்றி தனது திட்டங்களை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார். மக்கள் ஏன் அரசாங்கத்தின் மீது கோபமாக உள்ளனர் என்பது தமக்கு புரிகிறது ஜனாதிபதி மௌனம் கலைய வேண்டும் என தெரிவித்துள்ளார். இருப்பினும், இப்போது கோபத்திற்கான நேரம் மட்டுமல்ல, தீர்வுக்கான நேரம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ஊடகமொன்று […] - [போராட்டத்தில் கலந்துகொண்ட பொலிஸார் பிணையில் விடுவிப்பு](https://minnal24.com/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8a%e0%ae%a3/): மக்கள் நடாத்தும் அரசாங்கத்திற்கு எதிரான எழுச்சிப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரி பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இவர் நேற்று வியாழக்கிழமை கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். விடுமுறை நாளான இன்று அவருக்காக ஏராளமான நீதிபதிகள் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது குறித்த அதிகாரிக்கு பிணை வழங்கிய நீதிமன்றம், வழக்கை எதிர்வரும் 29 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுக்குமாறு உத்தரவிட்டது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று […] - [மாபெரும் தீப்பந்த போராட்டத்திற்கு அழைப்பு](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d/): -யாழ் நிருபர்- ஜனநாயகத்திற்காக ஒன்றிணைந்த இளையோர்களின் ஏற்பாட்டில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் நகரில் மாபெரும் தீப்பந்த போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக ஜனநாயக ஒன்றிணைந்த இளைஞர்கள் அமைப்பு அறிவித்துள்ளது. குறித்த போராட்டமானது காலிமுகத்திடலில் கோத்தபாய வீட்டுக்கு போ என கோசமெழுப்பியவாறு கடந்த ஏழு நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்திற்கு ஆதரவாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், அந்த போராட்டத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள அனைத்து இளைஞர்களும் போராட்டத்தில் பங்குபற்றி காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபடுவோருக்கு தமது ஆதரவினை அளிக்க முன்வருமாறு அழைப்பு […] - [ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு இலவச 4G – 5G வசதிகள்](https://minnal24.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d/): 7ஆவது நாளாக முன்னெடுக்கப்படும் காலி முகத்திடல் போராட்ட களத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு இலவச 4பு – 5பு வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று வெள்ளிக்கிழமை முதல் இவ்வாறான இலவச வசதிகளை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, போராட்ட களத்துக்கு அருகாமையில் தொலைத்தொடர்பு கோபுரம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது. எனினும், இதுவரை அதற்கான இணைப்புகள் எதுவும் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நேற்று வியாழக்கிழமை காலி முகத்திடலில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர். […] - [பதவி விலகினார் லிட்ரோ நிறுவனத் தலைவர்](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b0%e0%af%8b-%e0%ae%a8%e0%ae%bf/): நாட்டில் நிலவும் எரிவாயு தொடர்பான நெருக்கடி நிலைமையினால், லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார். நாட்டில் நிலவும் எரிவாயு தொடர்பான நெருக்கடி நிலைமையை கருத்திற்கொண்டு தான் பதவி விலகுவதாக தனது இராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாகத் தெரியவருகிறது. - [எரிபொருள் விநியோகத்திற்கு வரையறை](https://minnal24.com/%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%af%e0%af%8b%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d/): உடன் அமுலுக்கு வரும் வகையில், எரிபொருள் விநியோகத்தை வரையறுக்க அரசு தீர்மானித்துள்ளது. இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 1 மணி முதல் அமுலாகும் வகையில் இவ்வாறான அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைவாக இனிமேல் மோட்டார் சைக்கிள்களுக்கு 1000 ரூபா, முச்சக்கர வண்டிகளுக்கு 1500 ரூபா, கார், வேன், ஜீப்களுக்கு 5000 ரூபாவிற்கு மட்டுமே எரிபொருள் விநியோகிக்கப்படும். பஸ்கள், லொறிகள், வர்த்தக வாகனங்களுக்கு இந்த கட்டுப்பாடு அமுலாகாதென அறிவிக்கப்பட்டுள்ளது. - [தெரு நாய், பூனையின் கீறலுக்கு உள்ளாகி குடும்பத்தலைவர் ஒருவர் உயிரிழப்பு](https://minnal24.com/%e0%ae%a4%e0%af%86%e0%ae%b0%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%80%e0%ae%b1%e0%ae%b2%e0%af%81/): -யாழ் நிருபர்- தெரு நாய் மற்றும் பூனையின் நகங்கள் கீறலுக்கு உள்ளாகி குடும்பத்தலைவர் ஒருவர் நீர்வெறுப்பு நோய்க்குள்ளாகி உயிரிழந்துள்ளார். அவர் விலங்கு விசர் நோய்த்தடுப்பூசி பெற்றுக்கொள்ளாது நீர்வெறுப்பு நோய்க்குள்ளாகினார் என்று சட்ட மருத்துவ வல்லுநரின் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கடற்கரை வீதியைச் சேர்ந்த அந்தோனி சூசைநாதன் (வயது-35) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தார். 3 மாதங்களுக்கு முன்பு தெரு நாய் கடிக்கு உள்ளாகிய குடும்பத்தலைவர் அதுதொடர்பில் மருத்துவ சிகிச்சை பெறாததால் விலங்கு விசர் நோய்த்தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளத் […] - [தமிழ் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளின் ஒன்றுகூடல்](https://minnal24.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf/): -யாழ் நிருபர்- நாட்டில் ஏற்பட்டுள்ள சமகால அரசியல் நெருக்கடி தொடர்பில் ஆராய ஜனநாயகத்திற்காக ஒன்றிணைந்த இளையோர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தமிழ் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளின் ஒன்றுகூடல் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் ஆரம்பமாகி இடம்பெறுகிறது. குறித்த ஒன்றுகூடல் நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பினை பிரதிநிதித்துவபடுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள்இ உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் உட்பட 55 பேர் கலந்து கொண்டுள்ளனர். - [சமூக வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படம் : புகைப்படத்தின் உண்மை நிலை?](https://minnal24.com/%e0%ae%9a%e0%ae%ae%e0%af%82%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%b2%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b3%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%88%e0%ae%b0-2/): சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகின்ற செய்திகள் தொற்று நோய் போன்று மிக வேகமாக பரவி வருகின்றது. அதன்படி, கிளிநொச்சி-அக்கராயன் வைத்தியசாலையில் வைத்தியர் ஒருவர் மேஜையின் மீது கால்களை வைத்தபடி கடமையாற்றும் புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளது. குறித்த புகைப்படத்தை பகிர்ந்து வைத்தியரின் இச்செயற்பாடு தொடர்பாக பலரும் பலவாறு தமது கருத்துக்களையும் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறித்த புகைப்படத்தின் உண்மை நிலை குறித்து விளக்கம் அளித்துள்ளார். குறித்த புகைப்படத்தில் […] - [இன்று முதல் மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள் விநியோகம்](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d/): இன்று பிற்பகல் 1.00 மணி முதல் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனங்களுக்கான எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது அதன்படி, மோட்டார் சைக்கிள்களுக்கு – 1000 ரூபாய், முச்சக்கர வாகனங்களுக்கு – 1,500 ரூபாய், கார்கள், வான்கள், ஜீப்களுக்கு 5,000 ரூபாய். எனினும் இவ்வாறு மட்டுப்படுத்தப்பட்ட விநியோகம் இது பேருந்துகள், லொறிகள் மற்றும் வர்த்தக வாகனங்களுக்கு இது பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது - [எதிர்வரும் இரு தினங்களுக்கு மின்வெட்டு அமுலாகும் நேரம்](https://minnal24.com/%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95/): நாளை சனிக்கிழமை மற்றும் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களில் இரண்டு மணித்தியாலங்களும் 15 நிமிடங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நாளை மற்றும் நாளை மறுதினம் A முதல் W வரையான வலயங்களுக்கு காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை இரண்டு மணி நேரம் 15 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இரவில் மின் துண்டிக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   - [யாழில் இருந்து இந்தியா தப்பிச் செல்ல முயன்ற ஐவர் கடற்படையினரால் கைது](https://minnal24.com/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-%e0%ae%a4/): -யாழ் நிருபர்- யாழில் இருந்து இந்தியா தப்பிச் செல்ல முயன்ற ஐவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் நிலவும் பொருளாதர நெருக்கடி காரணமாக இந்தியாவிற்கு தப்பிச் சென்ற சமயமே இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் இருந்து ஒரு பெண், ஓர் குழந்தை மற்றும் 3 ஆண்களே இவ்வாறு தப்பிச் செல்ல முற்பட்ட சமயம் கைது செய்யப்பட்டுள்ளனர். - [யாழ். மாவட்ட தேவாலயங்களில் பெரிய வெள்ளி தவக்கால கூட்டுத்திருப்பலி](https://minnal24.com/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b2%e0%ae%af%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf/): -யாழ் நிருபர்- கிறிஸ்தவ மக்கள் தமது பெரிய வெள்ளியின் தவக்கால கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கும் திருப்பலி இன்று யாழ். மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் சிறப்பாக இடம்பெற்றுவருகின்றது. இவ் பெரிய வெள்ளி கூட்டுத்திருப்பலியினை முன்னிட்டு வரலாற்று சிறப்புமிக்க நாவாந்துறை சென் நீக்கிலஸ் தேவாலயத்தில் மிகச்சிறப்பாக தவக்கால சிலுவைப்பாதையின் கூட்டுத்திருப்பலி இடம்பெற்றது. இவ் கூட்டுத்திருப்பலியினை பங்குமுதல்வர் அருட்பணி யேசுரட்ணம் அடிகளார்கள் தலைமையிலான அருட்சகோதர்கள் நடாத்திவைத்தனர். இதில் பலபாகங்களில் இருந்து வருகைதந்த மக்கள் பலரும் கலந்துகொண்டனர். தவக்கால வாரம் கடந்த 18.03 அன்று […] - [டெங்கு நோய் அதிகரிக்க கூடிய அச்சுறுத்தல்](https://minnal24.com/%e0%ae%9f%e0%af%86%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a8%e0%af%8b%e0%ae%af%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%95%e0%af%82/): தற்போது நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு நோய் அதிகரிக்க கூடிய அச்சுறுத்தல் நிலவுவதாக தேசிய தொற்று நோயியல் நிறுவகத்தின் விசேட வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார். இதன்படி, டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்கள் தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில், டெங்கு நுளம்பு பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகளை பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டும் என தேசிய தொற்று நோயியல் நிறுவகத்தின் விசேட வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம அறிவுறுத்தியுள்ளார். - [இன்று முதல் விசேட பேருந்து சேவைகள்](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9a%e0%af%87%e0%ae%9f-%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d/): புத்தாண்டை முன்னிட்டு வெளிமாவட்டங்களுக்கு சென்ற மக்கள் மீள கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களுக்கு திரும்புவதற்காக பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக, இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொதுமுகாமையாளர் பண்டுக சுவர்ணஹங்ச தெரிவித்துள்ளார். அதன்படி, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 200 மேலதிக பேருந்துகளை இன்று முதல் சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.   - [இன்று மின்தடை இல்லை](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a4%e0%ae%9f%e0%af%88-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88/): புத்தாண்டை முன்னிட்டு மூன்று நாட்களுக்கு வரை மின்தடை அமுலாக்கப்படமாட்டாது, என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, நாட்டில் இன்று மின்தடை அமுலாக்கப்படமாட்டாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நாளை மின்தடை அமுலாக்கப்படுவது குறித்து இன்று தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.   - [தமிழ் மக்களுடைய பிரச்சினையை மட்டும் கோரிக்கையாக வைக்க முடியாது - தர்மலிங்கம் சித்தார்த்தன்](https://minnal24.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%9f%e0%af%88%e0%ae%af-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9/): -யாழ் நிருபர்- அரசாங்கத்தை மாற்ற வேண்டும் என பெரும்பாலான மக்கள் போராட்டத்தில் இறங்கி உள்ள நிலையில் தமிழ் மக்களுடைய பிரச்சினையை மட்டும் ஏனைய தரப்பினரிடம் கோரிக்கையாக வைக்க முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை கந்தரோடையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய ஆட்சியாளருக்கு எதிராக குற்றப்பிரேரணை மற்றும் நம்பிக்கையில்லாத் […] - [நாட்டின் பல பாகங்களில் மழை](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b2-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae/): வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. - [மன்னார் மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இடம் பெற்ற புனித வியாழன் திருப்பலி](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b3/): -மன்னார் நிருபர்- புனித வியாழன் திருப்பலி மற்றும் ஆராதனை இன்று வியாழக்கிழமை மாலை 5.30 மணிக்கு மன்னார் மறைமாவட்டத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் ஒப்புக் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயத்தில் ஆலய பங்குதந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார் தலைமையில் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது. இதன் போது இறைவார்த்தை வழிபாடு, பாதம் கழுவும் சடங்கு, நற்கருணை வழிபாடு, நற்கருணை இட மாற்று பவனி ஆகியவை இடம் பெற்றது. இதன் போது குறித்த கிராமத்தைச் சேர்ந்த […] - [சதுரங்க போட்டியில் தேசிய ரீதியில் மூன்றாம் இடத்தைப் பெற்ற யாழ்.இந்துக்கல்லூரி மாணவன்](https://minnal24.com/%e0%ae%9a%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af/): -யாழ் நிருபர்- இலங்கை சதுரங்க சம்மேளனத்தினால் தேசிய ரீதியில் நடாத்தப்பட்ட நஷனல் யூத் சாம்பியன்ஷிப் 2022 (National youth championship 2022) இறுதிப் போட்டிகளில் 12 வயதிற்கு குறைந்த திறந்த பிரிவில் யாழ்பாணம் இந்துக்கல்லூரி மாணவன் பிரகலாதன் ஜனுக்ஷன் தேசிய ரீதியில் 3 ம் இடத்தைப் பெற்றுக்கொண்டார் . 8 சுற்றுக்களை கொண்ட போட்டியில் 6 வெற்றிகள் மற்றும் ஒரு சமநிலை அடங்கலாக 6 1/2 புள்ளிகளைப் பெற்றுக்கொண்டதன் மூலம் மூன்றாம் இடத்தைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. இப்போட்டியில் […] - [இந்த வருடம் கறுப்பு புத்தாண்டாக இருக்கிறது - வடிவேல் சுரேஸ்](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b1%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d/): எவ்வளவு கஸ்டமாக காலகட்டத்திலும் புத்தாண்டு இந்த வருடம் போல் களையிழந்து காணப்பட்டதில்லை. இந்த வருடம் கறுப்பு புத்தாண்டாக தான் எமது மக்களுக்கு இருக்கிறது என பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார் இன்று பசறை சிறி கதிர்வேலாயுத ஆலயம் பசறை சமாதி விகாரை மற்றும் தேவாலயத்திற்கும் பள்ளிவாசலுக்கும் சென்று வழிபாட்டில் ஈடுபட்டார். இதன் போது ஊடகத்திற்கு கருத்து தெரிவித்த அவர் கீழ் வருமாறு தெரிவித்தார், - [போராட்டக்காரர்களின் கோரிக்கைகளை ஏற்றால் தப்பிப் பிழைக்க கூடிய வாய்ப்புக்கள் உண்டு](https://minnal24.com/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b0/): -யாழ் நிருபர்- ஒரு தோற்றுப்போன அரசாங்கம் தோல்வியின் விளிம்பிலிருக்கின்ற ராஜபக்ச குடும்பம் உடனடியாக போராட்டக்காரர்களின் கோரிக்கைகளை ஏற்று நியாயமாக நடந்து கொண்டால் உலகப் பந்தில் தப்பிப் பிழைக்கக் கூடிய வாய்ப்புக்கள் உண்டு என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். சித்திரைப் புத்தாண்டு தினமான இன்று கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாவட்ட அலுவலகமான அறிவகத்தில் புத்தாண்டு நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் […] - [மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-2/): இயற்கை அபாய முன்னெச்சரிக்கை நிலையத்தினால் கடுமையான மின்னல் தாக்கத்திற்கான எச்சரிக்கை இன்று வியாழக்கிழமை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையானது இன்று நண்பகல் ஒரு மணி தொடக்கம் இரவு 10 வரை இருக்கும் எனவும் , வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் கடுமையான மின்னலுடன் கூடிய இடியுடன் அதிகூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இந்தப் பிரதேசங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கு மேல் ஓரளவு பலத்த மழையை எதிர்பார்க்கலாம். இடியுடன் […] - [இராட்சத பல்லி மீது கூட்டு பாலியல் பலாத்காரம் நால்வர் கைது](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a4-%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f/): மனிதனுடைய பாலியல் வேட்கைகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்ற நிலையில் மனிதனுடைய அத்துமீறல்கள் விலங்குகள் பறவைகள் என்று ஆரம்பித்து இன்று பல்லி வரை சென்றுள்ளமை பெரும் அதிர்ச்சியையும், அருவெறுப்பையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது. இப்படியும் நடக்குமா என்ற கேள்விகளுக்கு மத்தியில் இவ்வாறன சம்பவமொன்று மகாராஷ்டிர மாநிலத்தில் நடந்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம் சஹிதாரி புலிகள் பாதுகாப்பு சரணாலயம் அருகே இராட்சத பல்லியை (வங்காள மானிட்டர்) 4 பேர் ஒன்றாக இணைந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் தொடர்பாக […] - [இலங்கையின் திட்டங்களை வரவேற்பதாக "ஐஎம்எப்" தெரிவிப்பு](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%b5%e0%ae%b0/): சர்வதேச நாணய நிதியம் (IMF) கடனாளிகளுடன் “கூட்டு உரையாடலில்” ஈடுபடும் இலங்கையின் திட்டங்களுக்கு ஆதரவளிப்பதாக நேற்று புதன்கிழமை தெரிவித்துள்ளது. “இலங்கையின் கடன் நீடிக்க முடியாதது என்றும், நாட்டின் நிதி முயற்சிகள் மற்றும் பொருளாதாரக் கொள்கை மாற்றங்களால் மட்டுமே கடன் நிலைத்தன்மையை மீட்டெடுக்க முடியாது என்றும் நாங்கள் மதிப்பிட்டுள்ளோம்” என்று சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தூதரகத் தலைவர் மசாஹிரோ நோசாகி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். “எனவே, இலங்கை அதிகாரிகள் தங்கள் கடனாளிகளுடன் கூட்டு உரையாடலில் ஈடுபடும் […] - [சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு - 35 வயது பெண் கைது](https://minnal24.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%a9%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%a8%e0%af%8d/): சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த 35 வயது பெண்ணை பொலிசார் கைது செய்துள்ள சம்பவமானது ஆவனிப்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை – சிவகங்கை மாவட்டம் கீழச்சேவல்பட்டி அருகேவுள்ள ஆவனிப்பட்டி கிராமத்தை சேர்ந்த 35 வயதுடைய பெண் , இவருடைய வீட்டிற்கு அருகே வசித்து வந்த 13 வயது சிறுவனுக்கு தினமும் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இச்சம்பவம் குறித்து சிறுவன் பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து , அதிர்ச்சியடைந்த சிறுவனின் பெற்றோர் கீழச்சேவல்பட்டி பொலிஸ் நிலையத்தில் […] - [மூடப்பட்டுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தின் முன்னால் காத்திருக்கும் சாரதிகள்](https://minnal24.com/%e0%ae%ae%e0%af%82%e0%ae%9f%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3-%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d/): -பதுளை நிருபர்- புத்தாண்டு தினமான இன்றும் பசறை எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு முன்பாக எரிபொருளுக்காக வாகனங்களுடன் வாகன சாரதிகள் காத்திருக்கின்றனர். பசறையில் உள்ள 2 எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் எரிபொருள் இன்மையினால் மூடப்பட்டுள்ளது. இருப்பினும் வாகன சாரதிகள் எரிபொருளுக்காக காத்திருப்பதை காணக்கூடியதாக இருந்தது. - [தங்கத்தின் விலை தொடர்ந்தும் அதிகாிப்பு](https://minnal24.com/%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4/): உலக சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது. இதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் சந்தை விலை இந்த வாரத்தில் 1945 அமெரிக்க டொலர் ஆக உயர்ந்துள்ளது. - [தமிழக சட்டப்பேரவையில் மீன்வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம்](https://minnal24.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95-%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80/): தமிழக சட்டப்பேரவையில் மீன்வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இது தொடர்பான தமிழக அரசின் கொள்கை விளக்க குறிப்பேட்டில், தமிழக மீனவர்கள் தங்களது பாரம்பரிய கடல் பகுதியில் மீன்பிடிக்கும்போது சர்வதேச கடல் எல்லையை கடப்பதாகக் கூறி இலங்கை கடற்படயினரால் அடிக்கடி கைதுசெய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இலங்கை அரசால் கைப்பற்றப்ப்டட 88 படகுகளையும், கைதுசெய்யப்பட்ட 23 மீனவர்களையும் மீட்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கைப்பற்றப்பட்டு மீட்க இயலாத நிலையில் உள்ள படகுகளுக்கு […] - [திருக்கேதீஸ்வர ஆலயத்தில் சித்திரை புத்தாண்டு விசேட பூஜை](https://minnal24.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%87%e0%ae%a4%e0%af%80%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b0-%e0%ae%86%e0%ae%b2%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2/): -மன்னார் நிருபர்- சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு இன்று வியாழக்கிழமை  ஆலயங்களில் விசேட பூஜைகள் இடம் பெற்றுள்ளது. அந்த வகையில் மன்னார் மாவட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இன்று வியாழக்கிழமை காலை விசேட பூஜைகள் நடைபெற்றன. ஆலயத்தின் பிரதமகுரு சிவ ஸ்ரீ கருணானந்த குருக்கள் தலைமையில் இன்று காலை 8.41 மணிக்கு விசேட ஆராதனைகள் நடை பெற்றதை தொடர்ந்து விசேட சித்திரைப் புத்தாண்டு பூஜை இடம்பெற்றன. இதன்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை நீங்கி நாட்டின் […] - [நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் புத்தாண்டு தின விசேட பூஜை](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%b2%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d/): -யாழ் நிருபர்- சிங்கள தமிழ் புத்தாண்டு தினமாகிய இன்று வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று முருகப்பெருமான் உள்வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்றைய சுபகிருது வருட தமிழ் புத்தாண்டு தினத்தன்று வரலாற்று பிரசித்திபெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதோடு வசந்தமண்டப பூஜை இடம்பெற்று முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராக மயில் வாகனத்தில் எழுந்தருளி நல்லூர் ஆலயத உள்வீதிவலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வாக்கிய […] - [மீண்டும் எரிவாயு அடுப்பு வெடிப்பு](https://minnal24.com/%e0%ae%ae%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%af%81-%e0%ae%85%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/): -யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் – வடமராட்சி – கரவெட்டி பிரதேசத்தில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியுள்ளது. கரவெட்டி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கரணவாய் ஜே/350 கிராம சேவையாளர் பிரிவில் உள்ள வீடு ஒன்றில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியுள்ளது. நேற்று புதன்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் சமையல் ஈடுபட்டிருந்த போது மேற்படி அடுப்பு வெடித்தாக தெரிவிக்கப்படுகிறது. அச்சமயம் அருகில் எவரும் இல்லாத நிலையில் எவ்வித சேதமும் ஏற்படவில்லை. இச்சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. - [நெடுந்தீவு கடற்பரப்பில் மிதந்து வந்த கேரள கஞ்சா பொதிகள்](https://minnal24.com/%e0%ae%a8%e0%af%86%e0%ae%9f%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%80%e0%ae%b5%e0%af%81-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/): -யாழ் நிருபர்- இன்று அதிகாலை 3 மணியளவில் நெடுந்தீவு கடற்பரப்பில் மிதந்து வந்த 150 கிலோ எடையுள்ள கேரள கஞ்சா பொதிகள் நெடுந்தீவு கடற்படையினரால் மீட்கப்பட்டது. நெடுந்தீவு கடற்படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போதே இவ்வாறு கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன. இந்த கஞ்சா பொதிகள் எவ்வாறு மிதந்து வந்தன என்ற விசாரணை கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றனர். - [சுபகிருது புத்தாண்டு சுபநேரங்கள்](https://minnal24.com/%e0%ae%9a%e0%af%81%e0%ae%aa%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%9a%e0%af%81%e0%ae%aa/): வாக்கிய பஞ்சாங்கத்தின் பிரகாரம் சுபகிருது புத்தாண்டு இன்று காலை 7.50க்கு பிறக்கின்றது. திருக்கணித பஞ்சாங்கத்தின்படி, சுபகிருது புத்தாண்டு இன்று காலை 8.41க்கு பிறக்கிறது. இன்று அதிகாலை 4.41 முதல் பிற்பகல் 12.41 வரையான காலப்பகுதி மருத்து நீர் வைக்க உகந்த நேரமாகும். கைவிஷேடம் பரிமாறுவதற்கு வாக்கிய பஞ்சாங்கப்படி இன்று காலை 7.57 முதல் 8.47 வரையும், நாளை காலை 7.52 முதல் 9.51 வரையும், திருக்கணித பஞ்சாங்கப்படி இன்று காலை 8.50 முதல் 9.42 வரையும், நாளை […] - [காளானை உட்கொண்ட 13 பேர் உயிரிழப்பு](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a9%e0%af%88-%e0%ae%89%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f-13-%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf/): அசாமில் விஷக்காளான்கள் உட்கொண்டு 13 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் , பலர் ஆபத்தான நிலையில் இருப்பதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. அசாம் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் விஷக் காளான்களை உட்கொண்டதன் விளைவாக ஏற்பட்ட உடல் நலக்குறை காரணமாக மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று செவ்வாய்க்கிழமை ஒன்பது பேரும் திங்கட்கிழமை நான்கு பேர் மருத்துவமனையில் உயிரிழந்தனர். அசாம் மாநிலம் திப்ருகார், ஷிவசாகர், தின்சுஹியா உள்ளிட்ட 4 மாவட்டங்களில் உள்ள வனப்பகுதியில் […] - [முன்னாள் போராளிக்கு இராணுவத்தினரால் வீடு கையளிப்பு](https://minnal24.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a3/): இலங்கை இராணுவத்தால் முன்னாள் விடுதலைப் புலி போராளி ஒருவருக்கு, புதிய வீடு ஒன்று அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது. வீடொன்றில்லாமல் தன் குடும்பத்துடன் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் வசித்து வந்த மயிலாடியைச் சேர்ந்த ராசவல்லன் தபோரூபன் எனும் முன்னாள் போராளிக்கு இராணுவ ஆள்பலம் மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவத்துடன் நிர்மாணிக்கப்பட்ட வீடு கையளிக்கப்பட்டுள்ளது. இம்முன்னாள் போராளி 2021 ஜூன் மாதம் 24ஆம் திகதி அன்று ஜனாதிபதியின் விசேட மன்னிப்பின் பேரில் விடுவிக்கப்பட்ட பின்னர் புனர்வாழ்வளிக்கப்பட்டு , சமூகத்துடன் மீண்டும் ஒருங்கிணைக்கப்பட்டார். […] - [சித்திரை புத்தாண்டை முன்னிட்டு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு](https://minnal24.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9/): நாட்டில் தற்பொழுது நிலவிவரும் விலை உயர்வு மற்றும் பொருள் தட்டுப்பாடு காரணமாக , தினசரி கூலி தொழிலுக்கு செல்லும் கூலித் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு பண்டிகை காலங்களில் தொழில் இன்மையினை கருத்தில் கொண்டு லண்டனில் வாசிக்கும் ஸ்டீபன் மற்றும் அவுஸ்திரேலியாவில் வசிக்கும் அருண் அவர்களின் நிதி உதவியுடன் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் கூலித் தொழிலாளர்களின் சுமார் 50க்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு புலம்பெயர் நாடுகளில் உள்ள சமூக ஊடக செயற்பாட்டாளர்களான தமிழ் இளைஞர்களினால் உருவாக்கப்பட்டுள்ள“வணக்கம் வாழ்க தமிழ்”‘அமைப்பின் ஊடாக இன்று […] - [வட மாகாண ஆசிரியர்களுக்கு வடக்கில் நியமனம் இல்லை](https://minnal24.com/%e0%ae%b5%e0%ae%9f-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3-%e0%ae%86%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/): -யாழ் நிருபர்- கல்வியியற் கல்லூரிகளை முடித்த வட மாகாண ஆசிரியர்களுக்கு வடக்கில் நியமனம் இல்லை, இது திட்டமிட்ட செயற்பாடு, இதனை வன்மையாகக் கண்டிப்பதோடு இப்போதுள்ள சூழ்நிலையில் அவர்கள் வாழ்க்கைக்காக போராடும் நிலையில் இதனை ஏற்க முடியாது, என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. வடக்கு மாகாணத்தில் உள்ள வன்னிப் பிரதேச பாடசாலைகளில் பெருமளவான ஆசிரிய பற்றாக்குறை உள்ளது. அங்கு கடமையாற்றும் வெளி மாவட்ட ஆசிரியர்கள் தமது சேவைக்காலத்தை நிறைவு செய்து, அவர்களில் பலருக்கு இடமாற்றமும் வழங்கப்பட்டு […] - [பாராளுமன்ற உறுப்பினர்களை ஏலத்தில் விற்க முடியாது](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%89%e0%ae%b1%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3/): பாராளுமன்ற உறுப்பினர்களை ஏலத்தில் விற்க முடியாது. அவர்களை விலைக்கு வாங்குவதை நிறுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பசில் ராஜபக்ஷவிற்கு அறிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அவ்வாறு பணம் கொடுத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுக்கொண்டு அதிகாரத்தை தக்கவைக்க முயற்சிப்பது கீழ்த்தரமான விடயம் எனவும் அவர் டுவிட்டர் பதிவினூடாக தெரிவித்துள்ளார். - [பிரதமரின் அழைப்புக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் அளித்த பதில்](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b4%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%86%e0%ae%b0/): பிரதமரின் அறிவிப்பு வந்த பின் அதற்கான பதிலை வழங்கியுள்ளனர் ஆர்ப்பாட்டக்காரர்கள்..! மக்கள் போராட்டத்தின் அடிப்படை கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். 01. ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலக வேண்டும். 02. ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த எவருக்கும் நாடாளுமன்றத்தில் ஆசனம் வழங்கக் கூடாது. 03. அத்தியாவசிய சேவைகள், நெருக்கடியில் உள்ள விசேட பகுதிகள் (சுகாதாரக் கல்வி போன்றவை…) மறுசீரமைப்பதற்காக 19வது திருத்தத்தை மீண்டும் அமுல்படுத்தி 06 மாதங்களுக்கு இடைக்கால அரசாங்கத்தை உருவாக்குதல். 04. அனைத்து திருடப்பட்ட பணம் மற்றும் சொத்துக்களை மீட்பதற்காக […] - [நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் அதிகரிப்பு](https://minnal24.com/%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d/): நாடளாவிய ரீதியில் பெய்து வரும் மழையினால் மின் உற்பத்தி நிலையங்கiளை அண்டிய நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் 10 முதல் 15 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. 73 பிரதான நீர்ப்பாசன நீர்த்தேக்கங்களில் 9 நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிவதாகவும் மேலும் 20 நீர்த்தேக்கங்கள் அதிகபட்ச கொள்ளளவை எட்டியுள்ளதாகவும் நீர்பாசனத் திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் தெரிவித்தார். - [வவுனியாவைச் சேர்ந்த யுவதியே சடலமாக மீட்பு](https://minnal24.com/%e0%ae%b5%e0%ae%b5%e0%af%81%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%af%88%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%af%e0%af%81%e0%ae%b5%e0%ae%a4/): இறம்பொடை நீர்வீழ்ச்சியில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போயிருந்த மூன்று பேரில், ஒருவரினது சடலம் இன்று புதன்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது. மற்றைய யுவதி ஒருவரையும், இளைஞரையும் கண்டுபிடிக்க தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வவுனியாவில் உள்ள ஆடைத்தொழிற்சாலையொன்றில் பணிபுரியும் ஊழியர்கள் 48 பேர் பேருந்து ஒன்றில், நுவரெலியாவுக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ளனர். நுவரெலியா சென்று மீண்டும் நேற்று செவ்வாய்க்கிழமை வவுனியாவுக்கு திரும்பிய வழியில் இறம்பொடை நீர்வீழ்ச்சியை பார்வையிட்டுள்ளனர். அதன்போது, அவர்களில் 7 பேர் கொண்ட குழுவினர் நீரில் அடித்துச்செல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து […] - [மருந்து கொள்வனவுக்காக உலக வங்கியிடமிருந்து 10 மில்லியன் டொலர்](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%95-%e0%ae%89%e0%ae%b2/): மருந்து கொள்வனவு செய்வதற்காக உலக வங்கியிடமிருந்து 10 மில்லியன் டொலர் நிதி கிடைக்கப்பெற்றுள்ளது. மேலும், நிதியுதவி அல்லது மருந்துகளைப் பெற்றுக் கொள்வதற்காக வேண்டி உலக சுகாதார அமைப்பு மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றுடன் சுகாதார அமைச்சு பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது. அரச வைத்தியசாலைகளில் சில மருந்துகளுக்கும் உபகரணங்களுக்கும் தட்டுப்பாடு காணப்படுவதாகவும், அதனை சரியாக நிர்வகித்து தொடர்ச்சியாக மருந்துகளை வழங்குவதை உறுதிப்படுத்துகின்ற திட்டமொன்றை தயாரித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அந்நியச் செலாவணி சிரமம் காரணமாக கடன் கடிதங்களை […] - [சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு இடமாற்றம்](https://minnal24.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b0%e0%af%87%e0%ae%b7%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%ae-2/): மத்திய மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன, உதவிச் சேவை தொடர்பான சிரேஷ்ட உதவிப் பிரதி பொலிஸ் மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக  பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று புதன்கிழமை இதனை அறிவித்துள்ளது. இதேவேளை, அப்பதவியை வகித்து வந்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, மத்திய மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் இடம்பெற்றிருந்த வேளையில், அரச புலனாய்வு சேவை […] - [பொருளாதார நெருக்கடி : மன்னாரில் கலையிழந்தது புத்தாண்டு கொண்டாட்டம்](https://minnal24.com/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0-%e0%ae%a8%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d/): -மன்னார் நிருபர்- நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் விலையேற்றம் காரணமாக தமிழர்  பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டம் மற்றும் புத்தாண்டு வியாபாரம் கலையிழந்து காணப்படுகின்றது. மக்கள் பொருள் கொள்வனவு மற்றும் ஆடை கொள்வனவில் அதிகளவு ஆர்வம் காட்டாத நிலையில் டீசல் மற்றும் மண்ணெண்ணை கொள்வனவுகளுக்காக நீண்ட வரிசையில் காத்திருப்பதை அவதானிக்க கூடியதாக உள்ளது. அதே நேரம் மன்னார் மாவட்டத்தில் தொடர்சியாக சீரற்ற காலநிலை நிலவி வருகின்றமையினால் பெரும்பாலான மக்கள் வீடுகளிலே முடங்கி காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது. - [நியூயோர்க் துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 20 ஆக உயர்வு](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%af%e0%af%82%e0%ae%af%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d/): நியூயோர்க்கில் உள்ள சுரங்க தொடருந்து நிலையத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சந்தேக நபர் முதலில் இரண்டு புகை குண்டுகளை வீசி, பின்னர் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மேலும், அங்கிருந்து வெளியேற முற்பட்ட போது நெரிசலில் சிக்கியும், நச்சு புகையை சுவாசித்தமையினாலும் பாதிக்கப்பட்ட பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனினும், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் இதுவரை கைது செய்யப்படவில்லை எனவும் அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. - [பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெருந்தொகையான எரிபொருள் அதிரடிப்படையினரால் மீட்பு](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%b5%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8/): நாடு முழுவதும் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெருந்தொகையான எரிபொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சுற்றிவளைப்பின்போது,  5,690 லீற்றர் பெற்றோல், 5,620 லீற்றர் மண்ணெண்ணெய், 10,115 லீற்றர் டீசல் என்பவை அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.   - [பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் - உளநல வைத்தியர் கதிரமலை உமாசுதன்](https://minnal24.com/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%95%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9/): -யாழ் நிருபர்- அத்தியாவசிய மருந்துகள் இல்லாத இந்த நெருக்கடியான காலகட்டத்தில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை உளநல வைத்தியர் வைத்திய கலாநிதி கதிரமலை உமாசுதன் தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், கடந்த காலங்களில் கொரோனா நெருக்கடி ஏற்பட்டது போல தற்போது பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அத்தியாவசிய மருந்துகள் உட்பட உயிர் காக்கும் மருந்துகளுக்கு தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த இக்கட்டான நிலையை கடந்து மீள்வதற்கு உள ஆரோக்கியம் மற்றும் […] - [யாழ். கொரோனா நிலையங்களில் மோசடி : யாழ் சுகாதார பணிமனை கணக்காளருக்கு இடமாற்றம்](https://minnal24.com/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b0%e0%af%8b%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2/): -யாழ் நிருபர்- யாழில் கொரோனா இடைத் தங்கல் நிலையங்களில் மோசடி இடம்பெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் யாழ்.பிராந்திய சுகாதார பணிமனையில் கடமையாற்றும் கணக்காளர் தர்மசீலனுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்தில் கொரோனா இக்கட்டான காலகட்டத்தில் அமைக்கப்பட்ட கொரோனா இடைத்தங்கல் நிலையங்கள் அமைக்கப்பட்டது. மருதங்கேணி, நாவற்குழி மற்றும் வட்டுக்கோட்டை பகுதிகளில் அமைக்கப்பட்ட கொரோனா இடைத்தங்கல் நிலையங்கள் அகற்றப்படும் போது அதில் இருந்த பல இலட்சம் ரூபா பொருட்கள் வரவுப் புத்தகத்தில் பதிவேற்றம் செய்யப்படாமல் மாயமாப் […] - [மட்டு.வாகரையில் அறநெறி பாடசாலைகள் மீண்டும் ஆரம்பித்து வைப்பு](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%a8%e0%af%86%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%aa/): -வாழைச்சேனை நிருபர்- மட்டக்களப்பு வாகரையில் பல்வேறு இடங்களில் இயங்கா நிலையில் இருந்த அறநெறி பாடசாலைகளை மீண்டும் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது. பிரதேச ஆலய நிர்வாகத்தினரால் விடுத்த வேண்டுகோளினை அடுத்து வடக்கு கிழக்கு முன்னேற்ற கழகத்தின் அனுசரணையுடன் இச் செயற்பாடு முன்னெடுகப்பட்டது. புச்சாக்கேணி திருச் செந்தூர் முருகன் அறநெறிபாடசாலை மற்றும் பால்சேனை பெரியசாமி அறநெறிப்பாடசாலை என்பன வைபவ ரீதியாக சர்வமத குருமார்களின் ஆசிர்வாதத்துடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன்போது மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகளும் வழங்கப்பட்டது. சிவகுரு […] - [புத்தாண்டு பொருட்கொள்வனவில் மக்கள் ஆர்வம் காட்டவில்லை](https://minnal24.com/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%af%8a%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a9/): -யாழ் நிருபர்- இம்முறை தமிழ் சிங்கள புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பொருட் கொள்வனவில் மக்கள் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை என வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர் வழமையாக சித்திரை வருட புத்தாண்டுக்கு முதல் நாள் யாழ் நகரப்பகுதியில் பெருந்திரளான மக்கள் தமக்கு தேவையான உடுபுடைவைகள், நகை மற்றும் ஏனைய பொருட்களை கொள்வனவு செய்து செல்வார்கள். இம்முறை, நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலவுவதன் காரணமாகவும் ஆடம்பர பொருட்கள் உடு புடவைகளின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில் பொதுமக்கள் புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்கான பொருட் கொள்வனவில் ஆர்வம் […] - [நம்பிக்கையில்லா பிரேரணையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் சற்றுமுன்னர் கையொப்பமிட்டனர்](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%af%87%e0%ae%b0%e0%ae%a3-2/): -யாழ் நிருபர்- நம்பிக்கையில்லாப் பிரேரணையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி எம்.பிக்கள் கைச்சாத்து இட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஊடக பேச்சாளர் சட்டத்தரணி க.சுகாஷ் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கைச்சாத்திட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் இன்று காலை கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து குறித்த பிரேரணைக்கு ஆதரவாக […] - [மட்டு.வாகரை இறால் பண்ணை அமைக்கும் நடவடிக்கைக்கு தவத்திரு வேலன் சுவாமிகள் கண்டனம்](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95%e0%ae%b0%e0%af%88-%e0%ae%87%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%88-%e0%ae%85/): -வாழைச்சேனை நிருபர்- வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் இருக்கின்ற வளங்களை சூறையாடுகின்ற நிலங்களை எந்த விதத்திலும் பயனற்ற நிலங்களாக ஆக்குகின்ற இன அழிப்பினுடைய ஒரு அம்சமாக பொருளாதாரத்தை வளங்களையும், நிலத்தையும், அழிக்கின்ற செயற்பாடாக வாகரையில் இறால் பண்ணை அமைப்பதற்கான செயற்பாடு இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக சிவகுரு ஆதின முதல்வரும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான மக்கள் பேரெழுச்சி இயக்க இணைப்பாளருமாகிய தவத்திரு வேலன் சுவாமி தெரிவித்தார். மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் இடம்பெற்ற பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக தவத்திரு […] - [யாழ்.விபத்தில் உயிரிழந்த சிறுவனுக்கு நீதி கோரி அராலியில் கவனயீர்ப்பு](https://minnal24.com/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4/): -யாழ் நிருபர்- நேற்றுமுன்தினம் யாழ். சத்திரத்துச் சந்தியில் இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்த தாவடியைச் சேர்ந்த சிறுவன் அஜித்தன் அபிநயனின் மரணத்திற்கு முறையான விசாரணையை மேற்கொள்ளுமாறு கோரி அராலி மத்தி பகுதியில் இன்று கவனயீர்ப்பு நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த கவனயீர்ப்பு நடவடிக்கையானது அராலி செந்தமிழ் சனசமூக நிலையத்தில் இருந்து ஆரம்பித்து அராலி சமுர்த்தி வங்கியடியில் நிறைவுற்றது. இதன்போது ‘அதி வேகத்தை குறைப்போம் விபத்துகளைத் தவிர்ப்பபோம், அபிநயனின் மரணத்திற்கு முறையான விசாரணை வேண்டும், மாணவர்களது உயிரைப் பறிக்காதே’ […] - [வடக்கு சுகாதாரத்துறையில் இடம்பெறும் முறைகேடு](https://minnal24.com/%e0%ae%b5%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%9a%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2/): -யாழ் நிருபர்- மந்திகை ஆதார வைத்தியசாலையில் நீர் விநியோகம் தடைப்பட்டதால் நோயாளர்கள் பல அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நேற்று, யாழ்.பருத்தித்துறை மந்திகை ஆதார வைத்தியசாலையின் மின்பிறப்பாக்கி பழுதுபட்டமையல் நீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. சுமார் ஆறு மணித்தியாலங்களாக நோயாளர்கள் மற்றும் குழந்தை பிரசவித்த பெண்கள் மலசல கூடத்தைப் பயன்படுத்த நீரின்மையால் அவதிப்பட்டதாக வைத்தியசாலையில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்தன. குறித்த வைத்தியசாலையில் நீர்த்தாங்கியில் சேமிக்கப்பட்ட நீரும் முடிவுற்ற நிலையில் இரவு 10 மணியைக் கடந்தும் நீர் […] - [எரிபொருளைப் பெற கொட்டும் மழையிலும் நீண்ட வரிசையில் நிற்கும் மக்கள்](https://minnal24.com/%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/): -எம்.எஸ்.எம்.ஸாகிர்- சாய்ந்தமருதில் எரிபொருளைப் பெறுவதற்கு கொட்டும் மழையிலும் மக்கள் மிக நீண்ட வரிசையில் நின்று எரிபொருளை பெற்றுச் செல்லும் நிலைமையை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. கடந்த சில நாட்களாக, வெயில், மழை, இரவு – பகல் எனப் பாராது, நித்திரை இன்றி நள்ளிரவு தாண்டியும் 1 கிலோமீட்டருக்கும் அதிகமான   வரிசையில் காத்திருந்து எரிபொருளை மக்கள் பெற்றுச் செல்கின்றனர். மின்சாரத் துண்டிப்பும் ஒருநாளில் 2 முறை இடம்பெறுவதினால் முதலாவது மின்சாரத் துண்டிப்புக்குள் எரிபொருளை பெற்றுச் சென்றவர்கள் போக மீதமான […] - [மூன்று நாட்களுக்கு மின்தடை இல்லை](https://minnal24.com/%e0%ae%ae%e0%af%82%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a4/): இன்று முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு நாடு முழுவதும் மின்தடை அமுலாக்கப்பட மாட்டாது, என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை, 16 ஆம் மற்றும் 17 ஆம் திகதிகளில், காலை 8.00 மணிமுதல் மாலை 5.00 மணிவரையான காலப்பகுதிக்குள் சுழற்சி முறையில் இரண்டு மணித்தியாலமும், 15 நிமிடங்களும் மின்தடை அமுலாகும், என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.   - [பசறை எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் ஒருவர் மீது தாக்குதல்](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%9a%e0%ae%b1%e0%af%88-%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%a8/): -பதுளை நிருபர்- பசறை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஊழியர் ஒருவர் நேற்றிரவு இருவரால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பசறை எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு நேற்று நள்ளிரவு 1.00 மணி அளவில் உந்துருளியில் வருகை தந்த இருவர் எரிபொருள் நிலையத்தில் பெற்றோல் வேண்டும் என்று கேட்டுள்ளனர். இதன்போது எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்த ஊழியர் பெற்றோல், டீசல் இரண்டு நாட்களாக இல்லை என்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரமே எரிபொருள் விநியோகிக்கப்படுவதாக கூறியுள்ளார் இதன் போது மீண்டும் பெற்றோல் தமது […] - [சமூகப் பார்வையுள்ள ஓர் மருத்துவரை யாழ் மண் இழந்துவிட்டது - அங்கஜன் இராமநாதன்](https://minnal24.com/%e0%ae%9a%e0%ae%ae%e0%af%82%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3-%e0%ae%93%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae/): -யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் முன்னாள் பீடாதிபதியும், உயிர் இரசாயனவியல் பிரிவின் துறைத்தலைவருமான பேராசிரியர் Dr. ச.பாலகுமார் அவர்கள் காலமான செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியடைந்தேன், என யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார் கல்வித்துறையை தாண்டி சமூக சேவையில் தன்னை ஈடுபடுத்திய மிகச்சிறந்த மனிதராக அவர் திகழ்ந்திருந்தார். தனது பிரதேச வளர்ச்சிக்காக தனது அறிவையும் ஆளுமையையும் அவர் சிறப்பாக பயன்படுத்தியதை நான் நன்கறிவேன். அன்னாரின் இழப்பு யாழ். பல்கலைக்கழகத்துக்கு மட்டுமன்றி, யாழ்ப்பாண மருத்துவ […] - [இன்று வெளியாகியது "பீஸ்ட்" திரைப்படம்](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%af%80%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f/): சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘பீஸ்ட்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் ‘பீஸ்ட்’ படத்திற்கு கட்டார் அரசாங்கம் தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது இப்படத்தில் தீவிரவாதிகள் மற்றும் வன்முறை சம்பந்தப்பட்ட காட்சிகள் அதிகம் இருப்பதாக கூறி கட்டார் அரசாங்கம் பீஸ்ட் படத்திற்கு தடை விதித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த காரணத்தை முன்வைத்து குவைத் அரசாங்கமும் […] - [மட்டு.வாகரையில் இடம்பெற்ற மாபெரும் படகு போட்டி](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%8d/): மட்டக்களப்பு-வாகரைப் பிரதேசத்தில் சித்திரை புது வருடத்தை முன்னிட்டு ஆண், பெண் இருபலாருக்குமான படகு ஓட்டப்போட்டி நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. சமூக செயற்பாட்டாளர் வி.லவக்குமார் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில், சிவகுரு ஆதின முதல்வர் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் தவத்திரு வேலன் சுவாமிகள், அருட்தந்தை க.ஜெகதாஸ், தென்கையிலை ஆதின முதல்வர் தவத்திரு அகத்தியர் அடியார், தென்கையிலை ஆதின திருமூலர் தம்பிராசா சுவாமி, அருட்தந்தை செ.பிறின்சன் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர். கிராமத்தின் இளைஞர், யுவதிகள் […] - [துப்பாக்கிச்சூட்டில் பலர் படுகாயம்](https://minnal24.com/%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b2/): அமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பலர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இச்சம்பவத்தில் படுகாயமடைந்த 16 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், 5 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புரூக்ளின் சுரங்கப்பாதை பகுதியில் பல வெடிக்காத வெடிகுண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட சந்தேக நபர் தமது முகம் தெரியாதவாறு முகக்கவசம் ஒன்றை அணிந்திருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.   - [குறைந்தபட்ச ஒருமணி ஊதியமாக 21 சுவிஸ் பிரங் - அறிமுகப்படுத்திய முதல் ஜெர்மன் மாநிலம்](https://minnal24.com/%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%a8/): சுவிட்சர்லாந்தில் குறைந்தபட்ச ஊதியத்தை அறிமுகப்படுத்திய முதல் ஜெர்மன் மொழி பேசும் மாநிலமாக பாசல் நகரம்  ( Basel- Stadt) உள்ளது. எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி முதல் , ஒரு மணி வேலை நேரத்திற்கு குறைந்த பட்ச கொடுப்பனவாக 21 சுவிஸ் பிரங்குகள் வழங்கப்படவுள்ளதாக இன்று செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக மாநாட்டில் குறைந்தபட்ச ஊதியத்தை அமல்படுத்துவதற்கான உத்தரவை அரசாங்க கவுன்சிலர் காஸ்பர் சுட்டர் தெரிவித்துள்ளார். இந்த ஊதிய நடைமுறை பிரஞ்சு மொழி பேசும் […] - [17 ஆயிரம் லீற்றர் எரிபொருளுடன் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 பவுசர்கள் மீட்பு](https://minnal24.com/17-%e0%ae%86%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b2%e0%af%80%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3/): பமுனுகம பகுதியில் உள்ள வாகனங்களை பராமரிக்கும் வளாகத்தில் நிறுத்தி பதுக்கி வைக்கப்பட்டிருந்த 17,000 லீற்றருக்கும் அதிகமான எரிபொருளுடன் நான்கு பவுசர்கள் இன்று செவ்வாய்க்கிழமை கைப்பற்றப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த பவுசர்கள் வத்தளை மற்றும் நீர்கொழும்பு பகுதிகளில் அனுமதி பெற்ற இரண்டு எரிபொருள் நிரப்பு நிலையங்களை நடத்தும் நபர் ஒருவருக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது. பமுனுகம பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இந்த எரிபொருள் பவுசர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களின் அனுமதிப்பத்திரங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் […] - [நீராடச்சென்ற 7 பேரில் மூவரை காணவில்லை](https://minnal24.com/%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-7-%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%82%e0%ae%b5/): ரம்பொடை நீர்வீழ்ச்சியில் நீராடச்சென்ற 7 பேரில் 3 பேர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு காணாமல் போன மூவரையும் கண்டறியும் நடவடிக்கையில் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. - [கசிப்பு தயாரிப்பில் ஈடுபட்ட பெண் பொலிஸாரின் மாமி கைது](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%a4%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%88%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa/): பெண் பொலிஸாரின் மாமி ஒருவர் சட்டவிரோத கசிப்பு தயாரிப்பில் ஈடுபட்டு வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். தர்கா நகரத்தின் பொந்துபிடிய முதலிகம பிரதேசத்திலேயெ இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது சந்தேகநபரின் வீட்டில் இருந்து 7500 மில்லி லீற்றர் கோடா, காஸ் சிலிண்டர், காஸ் அடுப்பு உள்ளிட்ட பொருள்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் கசிப்பு தயாரிப்பு செய்வதற்கு தேவையான காஸ் சிலிண்டரை பெண் பொலிஸ் அதிகாரியே தனது மாமிக்கு வழங்கியுள்ளதாக பொலிஸ் […] - [ஈஸ்டர் தாக்குதல் சந்தேக நபர்கள் தொடர்பில் புதிய அறிவிப்பு](https://minnal24.com/%e0%ae%88%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%95/): ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார். உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல் தொடர்பில் இதுவரை 735 பேர் செய்யப்பட்டனர். இவர்களில் 196 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அத்துடன் 81 சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ள நிலையில், 493 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.   - [பொலிஸாருக்கு சன்மானம்](https://minnal24.com/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b8%e0%ae%be%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d/): நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடியான சூழ்நிலையில், பொலிஸ் அதிகாரிகளின் சேவைக்காக 2,500 ரூபா சன்மானம் வழங்குவதற்கு பொலிஸ்மா அதிபர் சீ.டி.விக்ரமரத்ன தீர்மானித்துள்ளார். பொலிஸ்மா அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. - [அழைப்பு விடுக்கப்பட்ட போது பதவியை ஏற்கவில்லை](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%b4%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%aa%e0%af%8b/): நிதியமைச்சர் பதவியை ஏற்குமாறு ஜனாதிபதி இந்த அழைப்பை விடுத்தப்போதிலும், நாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக பதவியை ஏற்காமல் இருக்க தீர்மானித்தேன் என முன்னாள அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். இந்த நாட்டில் குறிப்பிட்ட சில அதிகாரிகளை கையாள்வது மிகவும் கடினமானது எனவும் இவ்வாறான சூழலில் பொறுப்புகளை நிறைவேற்றுவது மிகவும் கடினமானது. பொருளாதாரம் சீர்குலைந்து, பாராளுமன்றம் இந்த யதார்த்தத்தைப் புரிய வைத்தாலும், இந்த யதார்த்தத்தை யாரும் புரிந்து கொள்ளவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.   - [இலங்கை நிலைவரம் தொடர்பில் மோடி பேச்சு](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2/): இலங்கையின் தற்போதைய நிலவரம் குறித்து, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளின் அரச தலைவர்களுக்கும் இடையிலான காணொளி மூலமான சந்திப்பு இடம்பெற்றது. இதன்போதே, பாகிஸ்தான் மற்றும் இலங்கையின் நிலைமைகள் குறித்து பைடனுடன் மோடி கலந்துரையாடியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. - [பண மதிப்பிழப்பு விவகாரம் ; ஐ.தே.க.வின் அறிவிப்பு](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/): சுதந்திரத்தின் பின்னர் கடனை திருப்பிச் செலுத்துவதில் கறைபடாத சாதனையை இலங்கை பேணி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடனை திருப்பிச் செலுத்தாமை மற்றும் பண மதிப்பிழப்பு விவகாரம் தொடர்பில் ஆராய தெரிவுக்குழு ஒன்றை நியமிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, அனைத்து வெளிநாட்டுக் கடன்களும் திருப்பிச் செலுத்தப்படமாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளமைக்கு வருந்துவதாகவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. - [கோதுமை மா விலை வெகுவாக அதிகரிப்பு](https://minnal24.com/%e0%ae%95%e0%af%8b%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%88-%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%b5%e0%af%86%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95-%e0%ae%85%e0%ae%a4/): சந்தையில் மீண்டும் கோதுமை மா விலை வெகுவாக அதிகரித்துள்ளது. ஒரு கிலோ கோதுமை மா கடந்த வாரம் 180 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் தற்போதைய விலை 210 தொடக்கம் 220 ரூபா வரை அதிகரித்துள்ளது. கோதுமை மா இறக்குமதி நிறுவனங்களில் ஒன்று கோதுமை மா விநியோகத்தை நிறுத்தியுள்ள நிலையில், இந்த வாரம் மீண்டும் கோதுமை மா விலை அதிகரித்துள்ளதாக புறக்கோட்டை மொத்த வர்த்தகர்கள் குறிப்பிட்டனர். கோதுமை மாவிற்கான கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டுள்ள […] - [முறைக்கேடுகள் தொடர்பில் அறிவிக்க விசேட இலக்கம்](https://minnal24.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%87%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/): முறைக்கேடுகள் தொடர்பில் அறிவிக்க விசேட கைப்பேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி மக்கள் தத்தமது பிரதேசங்களில் எரிபொருள் மற்றும் எரிவாயு வழங்கல் அல்லது விநியோகத்தின்போது, ஏற்படும் அனைத்து முறைப்பாடுகளையும் 0711 691 691 என்ற இலக்கத்தின் ஊடாக அறிவிக்க முடியும். - [பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான காரியாலய சீருடைகள் வழங்கி வைப்பு](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%ae%b2%e0%ae%95-%e0%ae%89%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%af%8b%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/): -கல்முனை நிருபர்- இறக்காமம் பிரதேச செயலகத்தின் சேவைகளை வினைத்திறனாகவும், இலகுவாகவும் மக்களுக்கு வழங்கும் நோக்கில் பல்வேறு வேலைத்திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் பொதுமக்கள் தினமான திங்கள் கிழமைகளில் காரியாலயத்திற்கு வரும் சேவைநாடிகள் இலகுவில் காரியால உத்தியோகத்தர்களை அடையாளம் காணக்கூடிய வகையில் பிரதேச செயலகத்தில் கடமைபுரியும் அனைத்து ஆண் உத்தியோகத்தர்களுக்குமான காரியாலய சீருடை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உற்பத்திதிறன் பிரிவுக்கு பொறுப்பான அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.பிராஸ் இம்தியாஸ், ஏ.எம். பாஷி மற்றும் ஏ.எல்.ஜஸீர் ஆகியோரின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற மேற்படி சீருடைகள் வழங்கிவைக்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம். ரஷ்ஷான் (நளீமி) தலைமையில் இன்று புதன் கிழமை பிரதேச செயலக கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.அஹமட் நஸீல் உட்பட பதவி நிலை உத்தியோகத்தர்களும் ஏனைய காரியாலய உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர். - [மஸ்கெலியாவில் தோட்டத் தொழிலாளர்கள் போராட்டம்](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%b8%e0%af%8d%e0%ae%95%e0%af%86%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a/): -நுவரெலியா நிருபர்- மஸ்கெலியா, சாமிமலை பிரதேசத்தில் இன்று காலை தோட்டத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாமிமலை நகரில் இருந்து கவரவில்லை சந்தி வரை பேரணியாக வந்தனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். எரிபொருள் விலை, கோதுமை மாவிலை உட்பட விலை உயர்வை கண்டித்தும் கோஷம் எழுப்பினர். - [கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்க பணிப்பகிஷ்கரிப்பு ஊடக அறிக்கை](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b4%e0%ae%95-%e0%ae%8a%e0%ae%b4/): -கல்முனை நிருபர்- பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழுவின் தீர்மானத்திற்கிணங்க, கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் இன்று  முன்னெடுக்கும் ஒரு நாள் அடையாள பணிப்பகிஷ்கரிப்பு தொடர்பில் இவ்ஊடக அறிக்கை வெளியிடப்படுகின்றது என தெரிவித்து ஊடக அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும், நாடு மிக மோசமான பொருளாதார நிலையச் சந்தித்துள்ள தற்போதைய காலகட்டத்தில் இதற்கான உரிய தீர்வுகளை எட்ட அரசு விரைந்து செயற்பட வேண்டுமென அரசை வலியுறுத்தி எமது தொழிற்சங்கம் இன்று பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளது. இந்நாட்டின் முதுகெலும்பாகத் திகழும் உயர்கல்வித் துறையில் முக்கிய பாத்திரத்தை வகிக்கும் ஒரு பொறுப்புள்ள ஊழியர் சங்கம் என்ற வகையில் எமது சங்கம் தற்போதைய அரசின் பொருளாதாரப் போக்கைத் தொடர்ந்தும் அவதானித்து வருகின்றது. இந்த அரசாங்கம் கடைப்பிடித்த பொருளாதார நடைமுறைகள் காரணமாக நாடு வங்குரோத்து நிலைக்கு இட்டுச் செல்லப்பட்டுள்ளதை இங்கு சுட்டிக் காட்ட விரும்புகின்றது. பொருள் விலையேற்றம் காரணமாக பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை கேள்விக் குறியாகி மக்கள் வீதிக்கு இறங்கி […] - [அனைத்து வாகன சாரதிகளும் இணைந்து பசறையில் பாரிய ஆர்ப்பாட்டம்](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%a9%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95%e0%ae%a9-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/): -பதுளை நிருபர்- முச்சக்கரவண்டி சாரதிகளும் வாகன சாரதிகளும் இணைந்து இன்று புதன்கிழமை பசறை நகரில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர். பசறை பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் மடூல்சீமை சந்தியில் பேரணியாக வந்து, பசறை-பிட்டமாறுவ வீதியையும், பசறை-செங்கலடி வீதியையும், பசறையிலிருந்து பெல்வத்தை செல்லும் வீதியையும் மறித்து பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பசறையிலிருந்து செங்கலடி செல்லும் வீதி மற்றும் பசறை பிட்டமாறுவ செல்லும் வீதி பசறை பெல்வத்தை செல்லும் வீதிகளிலும் போக்குவரத்து முற்றாக தடை பட்டுள்ளன. குறித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் நாட்டில் தற்போது நிலவும் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்தினை கண்டித்தும் ஜனாதிபதியை பதவி விலகுமாறு கூறியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த ஆர்ப்பாட்டம் இன்று காலை 9.00 மணியளவில் ஆரம்பமாகி தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. - [ராஐபக்ச அரசாங்கம் தமிழர்களை இன ரீதியாக அழிப்பதில் தீவிரமாகவே உள்ளனர்](https://minnal24.com/%e0%ae%b0%e0%ae%be%e0%ae%90%e0%ae%aa%e0%ae%95%e0%af%8d%e0%ae%9a-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d/): -யாழ் நிருபர்- நாடு எரிகின்ற வேளையிலும் தமிழர்களின் நிலங்களை அபகரித்தல் தொடர்கிறது, என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணித் தலைவர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார் இலங்கைத் தீவு பாரிய பொருளாதார வறுமை காரணமாக திறைசேரியில் டொலர்கள் இல்லாது வெளிநாடுகளில் கடனுக்கு மேல் கடன்படும் அவலம் காரணமாக எரிபொருளின் பாரிய விலை உயர்வு மக்களை அரசாங்கத்திற்கு எதிராக வீதிக்கு இறக்கி பாரிய நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. இவ்வாறு நாடு எரிந்து கொண்டு இருக்கும் போதும் ராஐபக்ச அரசாங்கம் தமிழர்களின் நிலங்களை அபகரிப்பதில் ஒரு தளர்வு கூட இல்லாமல் தொடர்ந்த வண்ணமே உள்ளனர். வன்னிப் பிரதேசத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் அளம்பில், செம்மலை, புதுக்குடியிருப்பு, போன்ற பகுதிகளில் இராணுவ சிவில் பாதுகாப்புத் திணைக்களம் இருபாதாயிரம் ஏக்கர்(20000) தனியார் காணிகளை விடுதிகளுக்கும், இராணுவத் தோட்டங்களுக்கும், ஏனைய இராணுவத் தேவைகளுக்குமாக சுவீகரிக்கும் செயற்பாட்டை முன்னெடுத்துள்ளனர். முழு நாடும் அவலத்தை சந்தித்ததைக் கூட கவலை கொள்ளாத ராஐபக்ச அரசாங்கம் […] - [பாடசாலையில் போதைப்பொருள் பாவனை](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3/): -யாழ் நிருபர்- முல்லைத்தீவு வலயப் பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவர்கள் பாடசாலையில் ஒருவித போதை பொருள் பாவனைக்கு அடிமையாகி உள்ள சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, முல்லைத்தீவில் உள்ள  பிரபல்யமான பாடசாலை ஒன்றில் தரம் 10 மற்றும் 11ல் கல்வி பயிலும் மாணவர்களே இவ்வாறு பாடசாலையில் வைத்து போதை பொருள் நுகர்வது கண்டறியப்பட்டுள்ளது . குறித்த மாணவர்கள் புகைத்தல் பொருட்கள் பாதுகாப்பாக அடைத்துவரும் வெள்ளை மற்றும் மஞ்சள் கலந்த தாளில் ஒருவகையான தூள் கலந்த பொருளினை சூடேற்றி அதிலிருந்து வெளிவரும் புகையினை மணக்கும் செயற்பாடு தொடர்ச்சியாக குறித்த பாடசாலையில் இடம்பெற்று வருகிறது. குறித்த சம்பவம் தொடர்பில் பாடசாலை நிர்வாகத்திற்கு தெரிந்த நிலையிலும் அவர்கள் குறித்த விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கத் தயங்கி வருவதாக அறியக் கிடைத்துள்ளது. குறித்த பாடசாலையில் பெண் மாணவிகளும் கல்வி கற்கின்ற நிலையில் ஒரு சில ஆண் மாணவர்களின் செயற்பாடுகளால் ஏனைய […] - [திருமலையில் இரண்டாவது நாளாகவும் தொடரும் ஆர்ப்பாட்டம்](https://minnal24.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be/): திருகோணமலை – கண்டி பிரதான வீதியான அபயபுர சுற்று வளைவு சந்தியில் மூன்று பக்கமாகவும் ஆர்ப்பாட்டகாரர்களால் வீதித் தடை போடப்பட்டு மறிக்கப்பட்டுள்ளன. திருகோணமலையில் நேற்று மாலையிலிருந்து பொதுமக்கள் வீதியை மறித்து, டயர்களை எரித்து அரசாங்கத்திற்கெதிரான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் இன்றும் புதன்கிழமையும் தொடர்வதாக தெரிவிக்கப்படுகின்றது. திருகோணமலை – கண்டி பிரதான வீதியில் பேரூந்து ஒன்றினை வீதிக்கு குறுக்கே நிறுத்தி உப்புவெளி பகுதிக்குச் செல்லும் வீதியும் மறிக்கப்பட்டுள்ளது. கடைகள் , மற்றும் மத்திய மீன் சந்தை மூடப்பட்டு காணப்படுகின்றது. அத்தோடு திருகோணமலை மணிக்கூட்டு கோபுரச் சந்தியில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் திருகோணமலை நகரிலுள்ள அரச அலுவலகங்களுக்கு இன்று காலை, தொழில் நிமிர்த்தம் சென்ற பலரும் திருப்பி அனுப்பப்படடுள்ளனர். - [120,000 மெற்றிக் தொன் நிலக்கரி தரையிறக்கம்](https://minnal24.com/120000-%e0%ae%ae%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%a4/): 2 கப்பல்களில் இருந்து 120,000 மெற்றிக் தொன் நிலக்கரி தரையிறக்கப்படுவதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. 38 மில்லியன் அமெரிக்க டொலர் செலுத்தப்பட்டப்பின்னரே தரையிறக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. மேலும், விமானத்திற்கான எண்ணெய், டீசல் என்பனவும் கப்பல்களில் இருந்து தரையிறக்கப்படுவதாக அறியமுடிகிறது. - [காலிமுகத்திடலில் தேரர் உண்ணாவிரதம்](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%ae%b0%e0%af%8d/): காலிமுகத்திடல் போராட்டத் தளத்தில் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து தெரிபெஹே சிறிதம்ம தேரர் உண்ணாவிரதப் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளார். அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்துள்ளார். - [பிரதமரின் இல்லம் முற்றுகை](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%88/): தங்காலை கால்டன் சுற்றுவட்டப் பகுதியில் தற்போது ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக  தெரியவருகிறது. மேலும், போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தற்போது பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் வீட்டை முற்றுகையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. - [ரம்புக்கனை விவகாரத்தினால் சபையில் சலசலப்பு](https://minnal24.com/%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%be/): இன்று புதன்கிழமை நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாகி 5 நிமிடங்களிலேயே சபை அமர்வுகளை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதற்கு சபாநாயகர் தீர்மானித்துள்ளார். சபை அமர்வுகள் ஆரம்பமாகிய போது ரம்புக்கனை போராட்டத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றில் கேள்வி எழுப்பயதைத் தொடர்ந்து சபையில் அமைதியின்மை ஏற்பட்டது. இதனையடுத்து சபையை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார். - [மட்டக்களப்பைச் சேர்ந்த 3 பேர் தனுஷ்கோடிக்கு அகதிகளாக சென்றுள்ளனர்](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%88%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-3/): -மன்னார் நிருபர்- இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மட்டக்களப்பைச் சேர்ந்த ஒரு பெண், சிறுமி, நான்கு வயது சிறுவன் என ஒரு குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தனுஷ்கோடிக்கு அகதிகளாக இன்று புதன்கிழமை அதிகாலை சென்றடைந்துள்ளனர். தனுஷ்கோடியை சென்றடைந்த குறித்த இலங்கை தமிழர்களை மீட்ட மெரைன் பொலிஸார் தனுஷ்கோடி மெரைன் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் மட்டக்களப்பில் இருந்து எவ்வாறு தனுஷ்கோடிக்கு சென்றார்கள் என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். - [யாழில் மாட்டு வண்டியில் பாடசாலைக்கு சென்ற ஆசிரியர்கள்](https://minnal24.com/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/): ஆசிரியர்கள் மாட்டு வண்டியில் பாடசாலைக்கு சென்ற சம்பவமானது இன்று காலை தெல்லிப்பழையில் இடம்பெற்றுள்ளது. எரிபொருட்களின் விலைகள் நாட்டில் உச்சம் தொட்டுள்ள நிலையில் விலையேற்றத்தை பிரதிபலிக்கும் முகமாக குறித்த ஆசிரியர்கள் இவ்வாறு மாட்டு வண்டியில் பாடசாலைக்கு சென்றுள்ளனர். தெல்லிப்பழை யூனியன் கல்லூரி ஆசிரியர்களே இவ்வாறு மல்லாகம் சந்தியில் இருந்து தெல்லிப்பழை யூனியன் கல்லூரி வரை மாட்டு வண்டியில் பாடசாலைக்கு சென்றுள்ளனர். - [1.7 மில்லியன் டொலர் நிகர இலாபத்தை பெற்ற ஸ்ரீலங்கன் விமான சேவை](https://minnal24.com/1-7-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9f%e0%af%8a%e0%ae%b2%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%be/): ஸ்ரீலங்கன் விமான சேவை 16 வருடங்களின் பின்னர் முதன் முறையாக 04 ஆவது காலாண்டில் 1.7 மில்லியன் டொலர் நிகர இலாபத்தை பெற்றுள்ளது. கொரோனா சவால்களுக்கு மத்தியிலும் இந்த நிகர இலாபத்தை பதிவு செய்துள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றின் மூலம் இதனை தெரிவித்த விமான நிறுவனம் தனது 2021-,22 நிதியாண்டில் ஊழியர்களின் செலவுகள் மற்றும் மேல்நிலைகளைக் குறைப்பது உட்பட பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் இந்த நிதித் திருப்பத்தை அடைய முடிந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது. - [இன்று முதல் பஸ் கட்டணங்கள் 35 வீதமாக அதிகரிப்பு](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a3%e0%ae%99%e0%af%8d%e0%ae%95/): இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் பஸ் கட்டணங்கள் இன்று முதல் அழுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, முதல் 35 சதவீதத்தால் அதிகரிக்கப்படுவதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். குறைந்தபட்ச பஸ் கட்டணம் 20 ரூபாவிலிருந்து 27 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விலையேற்றம் காரணமாக தனியார் பஸ் சேவைகள் நேற்று செவ்வாய்க்கிழமை இடைநிறுத்தப்பட்டிருந்தன. நாட்டின் பல்வேறு இடங்களில் எரிபொருள் விலையேற்றம் காரணமாக தனியார் பஸ் சேவைகள் ஸ்தம்பிதம் அடைந்திருந்தன. இதேவேளை, எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பஸ்கள் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து சேவைகள் வெகுவாக பாதிக்கப்பட்டன. எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் வருடாந்த பஸ் கட்டண திருத்தம் என்பன அடிப்படையில் குறைந்த பஸ் கட்டணம் 40 ரூபாவரை அதிகரிக்க வேண்டுமென இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்திருந்த நிலையிலேயே இவடவாறு கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. - [21000 ரூபா பணத்தை கொள்ளையிட்ட நபர் ஹெரோயினுடன் கைது](https://minnal24.com/21000-%e0%ae%b0%e0%af%82%e0%ae%aa%e0%ae%be-%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f/): கண்டி, மஹியாவ பிரதேச எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 21000 ரூபா பணத்தை கொள்ளையிட்ட சந்தேக நபர் ஒருவரை 2 மி.கி. ஹெரோயின் போதைப் பொருளுடன் கட்டுகாஸ்தோட்டைப் பொலிசார் கைது செய்துள்ளனர். கடந்த 17ஆம் திகதி எரிபொருள் நிரப்பு நிரலயத்திற்கு மோட்டார்சைக்கிளில் வந்த ஒருவர் எதிபொருளைப் பெறறுக் கொண்டிருந்த போது அவருடன் கூடவந்த மற்றொரு நபர் பெற்றோல் நிரப்பு நிலைய காசாளரின் பெட்கத்தில் இருந்த பணத்தை திருடிக்கொண்ட ஓட்டம் பிடித்துள்ளார். நிரப்பு நிலையத்தில் காத்திருந்தவர்கள் சம்பவத்தை கண்டுள்ளனர். இதனை அடுத்து மோட்டார் சைக்கிளில் உடன் வந்தவர் கைது செய்யப்பட்டு விசாரித்ததில் தனது வீட்டுக்கு வேலைக்காக அந்நபரை அழைத்துச் செல்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து மேற்கொண்ட மேலதிக விசாரணைகளில் சந்தேக நபர் 38 வயதுடைய கண்டி வித்தியார்த்த மாவத்தையில் வசிக்கும் ஒருவர் என இனம் காணப்பட்டதைத் தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். அவர் வசம் 21,000 ரூபா பணமும் 2 மி.கி. ஹெரோயின் போதைப் […] - [அரசாங்கம் என்ற ரீதியில் எமது பொறுப்புக்களில் இருந்து விடுபட முடியாது – பிரதமர்](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%b0%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/): அரசியலமைப்பின் பத்தொன்பதாவது திருத்தத்தை சரியான நேரத்தில் திருத்தங்களுடன் ஜனநாயக ரீதியில் அமுலாக்குவது குறுகிய காலத்தில் மேற்கொள்ளக்கூடிய மிக சரியான தீர்வாகுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அத்துடன் அன்றாடம் மணிக்கணக்கில் வரிசையில் காத்திருக்க வேண்டிய வலியை அறிந்து, இந்த நிலையைத் தவிர்க்க வேண்டியதன் அவசியத்தை ஒப்புக் கொள்கிறோம். 24 மணி நேரத்துக்கு தீர்வு கிடைக்காவிட்டாலும், உங்களை இனிமேலும் நாங்கள் வரிசையில் காத்திருக்க வைக்க மாட்டோம். நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள சவால்கள் தொடர்பில் இந்த சபையின் உறுப்பினர்கள் நன்கு புரிந்து கொண்டுள்ளனர். நமது நாட்டின் வரலாற்றில் நீண்ட காலமாக எதிர்கொண்ட பொருளாதார சவால் தற்போது மிகவும் கடினமான கட்டத்தை எட்டியுள்ளது. ஒரு அரசு தன் மக்களுக்கு ஒருபோதும் மனமுவந்து கஷ்டங்களை ஏற்படுத்தாது. ஆனால், இந்நாட்டு மக்கள் இன்று பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றார்கள் என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். மின்வெட்டு, எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் எரிவாயு நெருக்கடி ஆகியவை […] - [எரிவாயு சிலிண்டர்கள் பதுக்கி வைத்திருந்தவருக்கு அபராதம்](https://minnal24.com/%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%af%81-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a4%e0%af%81/): எரிவாயு சிலிண்டர்களை தமது வீட்டில் சேகரித்த குற்றத்தை ஒப்புக்கொண்ட சந்தேகநபர் ஒருவருக்கு, 10,000 ரூபாய் அபராதத் தொகை விதிக்கப்பட்டுள்ளது. கினிகத்தேனையைச் சேர்ந்த 50 வயதான சந்தேகநபர், நுவரெலியா நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகளால் நேற்று செவ்வாய்க்கிழமை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே, அவரிடம் 10,000 ரூபாய் அபராத தொகையை அறவிடுமாறு நீதவான் பருக்டீன் உத்தரவிட்டுள்ளார். அபராத தொகைக்கு மேலதிகமாக சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட 12.5 கிலோ நிறையடைய 177 சிலிண்டர்கள், 2.4 கிலோ நிறையுடைய 25 சிலிண்டர்கள், 5 கிலோ நிறையுடைய 28 சிலிண்டர்கள் என்பவற்றை அரசாங்கத்தின் நிர்ணய விலையின் கீழ், நுகர்வோருக்கு விற்பனை செய்து அந்த பணத்தை நீதிமன்றில் வைப்பிலிடுமாறும் வெற்று சிலிண்டர்களை சந்தேகநபரிடம் கையளிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார். - [இலங்கைக்கு உதவ தாம் தயார்- சீனா தூதுவர்](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%89%e0%ae%a4%e0%ae%b5-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0/): இலங்கையின் பொருளாதார நெருக்கடிகளை சீனா அவதானித்துள்ளதாகவும், இலங்கைக்கு உதவ தாம் தயாராக இருப்பதாகவும் சீனாவின் சர்வதேச அபிவிருத்தி ஒத்துழைப்பு நிறுவனத்தின் பேச்சாளர் சூ வெய் இன்று தெரிவித்தார். இலங்கையின் தற்போதைய நெருக்கடியான நிலையை சமாளிக்க சீன அரசாங்கம் அவசர மனிதாபிமான உதவிகளை வழங்க தீர்மானித்துள்ளது. இலங்கை அரசாங்கமும் மக்களும் முகங்கொடுக்கும் சிரமங்களை சமாளித்து பொருளாதார மற்றும் சமூக ஸ்திரத்தன்மை மற்றும் அபிவிருத்தியை பேணுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம் என்று வெய் கூறினார். - [அனைத்து விதமான வன்முறைகளையும் கண்டிக்கிறேன்- அமெரிக்க தூதுவர்](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%a9%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%95%e0%ae%b3/): ரம்புக்கனையில் இருந்து வெளியான பயங்கரமான செய்தியைக் கேட்டு தான் கவலையடைந்ததாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி ஜியூன் சங் பதிவிட்டுள்ள டுவிட்டர் குறிப்பிலேயே மேற்கண்டவாநு குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அனைத்து விதமான வன்முறைகளையும் கண்டிக்கிறேன். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், பொலிஸார் மற்றும் அனைத்து தரப்பிலிருந்தும் அமைதியைக் கோருகிறேன். முழுமையான, வெளிப்படையான விசாரணை அவசியம் மற்றும் அமைதியான போராட்டத்திற்கான மக்களின் உரிமை நிலைநாட்டப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் பதிவிட்டுள்ளார். - [பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் உடன் பதவி விலக வேண்டும் - சாணக்கியன் கோரிக்கை](https://minnal24.com/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%85-2/): புதிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உடன் பதவி விலக வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இன்று செவ்வாய்க்கிழமை தனது டுவிட்டர் பக்கத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். ரம்புக்கனையில் போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் , பலர் படுகாயமடைந்து  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எரிபொருள் விலையேற்றத்தைக் கண்டித்து, ரம்புக்கனையில் இன்று காலை முதல் மக்கள் வீதிமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது ரயில் மார்க்கத்திற்கும் தடை ஏற்படுத்தப்பட்டது. இதனால் ரயில் சேவைகள் முற்றாக பாதிக்கப்பட்டது. அத்துடன் எரிபொருள் பவுசர் ஒன்றையும் மக்கள் தடுத்து நிறுத்தியிருந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் போது போராட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறு பொலிஸார் அறிவுறுத்தல் வழங்கிய நிலையிலும் போராட்டக்காரர்கள் கலைந்துசெல்லவில்லை. இதனையடுத்து கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பதிலுக்கு போராட்டக்காரர்களும் கல்வீச்சு தாக்குதல் தொடுக்க ஆரம்பித்தனர். இதனால் ரம்புக்கனை பகுதி போர்க்களமாக மாறியது. இதனைத் தொடர்ந்து சட்டம், […] - [முதலாம் தரத்திற்கு புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு](https://minnal24.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af/): -வாழைச்சேனை நிருபர்- . மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு புதிய மாணவர்களை வரவேற்கும் விழா நடைபெற்றது. அதன் ஒரு நிகழ்வாக பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலயத்திலும் அதிபர் க.கதிர்காமநாதன் தலைமையில் இவ் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வில் அதிதிகளாக பிரதேச பாடசாலை அதிபர்களான சி.முருகவேல், அ.ஜெயஜீவன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர். புதிய மாணவர்கள் சுபவேளையில் இறை வணக்கத்துடன் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஆசியுடன் பழைய மாணவர்களினால் மலர்மாலை அணிவித்து வரவேற்கப்பட்டு வகுப்பறைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அதிபர் மற்றும் கௌரவ அதிதிகளினால் மாணவர்களின் எதிர்கால கல்வி தொடர்பான அறிவுரை வழங்கப்பட்டது. - [கிளிநொச்சி சேவை சந்தையில் 07 கடைகள் உடைப்பு](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8a%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%9a%e0%af%87%e0%ae%b5%e0%af%88-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2/): -கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி சேவை சந்தையில் நேற்று இரவு 07 கடைகள் உடைக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸாரிடம் முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டுள்ளது. கிளிநொச்சி சேவை சந்தையில் இவ்வாறான சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாகவும், சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் அசமந்த போக்காக செயற்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். கடந்த காலங்களில் கிளிநொச்சி சேவை சந்தையின் கடைத்தொகுதிகள் எரிந்ததும் மக்கள் மனதில் சந்தேகநிலை உள்ளதாகவும், சந்தை வளாகத்தினுள் சில காவாலிகள் அநாகரிகமாக செயற்பட்டு வருதாகவும், இது தொடர்பாக பல முறை கிளிநொச்சி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டும் இதுவரையில் அவர்கள் கைது செய்யப்படவில்லை எனவும் வர்த்தகர்கள் சிலர் தெரிவித்திருந்தனர். இன்று குறித்த கடைத்தொகுதிகளை கரைச்சி பிரதேச சபை தவிசாளர் வேழமகிழ்தன் மற்றும் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் சண்முகராஜா ஜீவராஜா ஆகியோர் சென்று நேரடியாக பார்வையிட்டனர். இது பலபேரின் சதியால் திட்டமிட்டே செய்யப்பட்டு வருவதாகவும், இதற்கான உடனடி நடவடிக்கை பொலிஸார் எடுக்க வேண்டும், எனவும் […] - [ரம்புக்கனையில் ஊரடங்கு சட்டம் அமுல்](https://minnal24.com/%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8a%e0%ae%b0%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%9a/): ரம்புக்கனை பொலிஸ் பிரிவிற்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. - [பொலிஸார்-ஆர்ப்பாட்டக்காரர்கள் மோதல் : ஒருவர் பலி, பலர் படுகாயம்](https://minnal24.com/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b8%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be/): ரம்புக்கனையில் பொலிஸாருக்கும் ஆர்பாட்டக்காரர்களுக்கும் இடையே இடம்பெற்ற மோதலின் போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் 10 பேர் காயமடைந்து கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நால்வர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். - [எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற லொறியை வழிமறித்து ஆர்ப்பாட்டம்](https://minnal24.com/%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%af%81-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%8f%e0%ae%b1%e0%af%8d/): -நுவரெலியா நிருபர்- சமையல் எரிவாயுவை பெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்தி கொட்டகலை எரிபொருள் நிலையத்திற்கு முன்பாக மக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டதால், அங்கு பதற்றமான நிலை உருவானது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட கொட்டகலை பிரதேச மக்கள், அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பி எதிர்ப்பை வெளியிட்டதுடன், கேஸ் சிலிண்டர்களை வீதியில் வைத்து, எரிவாயு பிரச்சினைக்கு தீர்வு வேண்டும் என உரத்துக் குரல் எழுப்பினர். அத்துடன், நுவரெலியா பகுதிக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்களை எடுத்துச் சென்ற லொறியையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மறித்தனர். இதனையடுத்து திம்புள்ள – பத்தனை பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து, கேஸ் லொறியில் இருந்த கேஸ் சிலிண்டர்களில் 60 கேஸ் சிலிண்டர்களை மாத்திரம் இறக்கி போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களுக்கு வழங்கினர். சுமார் 2 மணித்தியாலங்களுக்கும் அதிக நேரம் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதால் நுவரெலியா – ஹட்டன் வீதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. அதேபோல் மேற்படி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வருகைத் தந்த வாகன சாரதிகளும் மேற்படி ஆர்ப்பாட்டத்தில் இணைந்து […] - [யாழில் அன்னை பூபதியின் 34 வது நினைவேந்தல் நிகழ்வு](https://minnal24.com/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%aa%e0%af%82%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-34-%e0%ae%b5/): -யாழ் நிருபர்- இந்திய அமைதிப்படைகளின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக சாத்வீகமாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உயிர்நீத்த அன்னை பூபதியின் 34 வது நினைவேந்தல் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ். அலுவலகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது கட்சி உறுப்பினர்களால் அன்னை பூபதியின் நினைவுருவப்படத்திற்கு மலரஞ்ஞலி செலுத்தப்பட்டதோடு தொடர்ந்து ஈகைச்சுடரேற்றி 1நிமிட அகவணக்கமும் செலுத்தப்பட்டது. அன்னை பூபதியின் 34 வது நினைவேந்தல் யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி வளாகத்தில் பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது மாணவர்களால் அன்னை பூபதியின் நினைவுருவப்படத்திற்கு  மலரஞ்சலி செலுத்தப்பட்டதோடு, தொடர்ந்து பேரணியாக ஈகைச்சுடரேற்றி 1நிமிட அகவணக்கமும் செலுத்தப்பட்டது. இவ் நினைவேந்தல் நிகழ்வில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. - [சட்டத்தை அவமதித்த குற்றச்சாட்டில் மருதமுனையில் நால்வருக்கு அழைப்பானை](https://minnal24.com/%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%9a/): -கல்முனை நிருபர்- சட்டத்துறைக்கு   முகநூல் ஊடாக பங்கம் விளைவித்த  மருதமுனை நால்வருக்கு கல்முனை நீதவான் நீதிமன்றினால் இன்று அழைப்பானை விடுக்கப்பட்டுள்ளது. சட்டத்துறையையும் சட்டத்தரணிகளின் தொழில் தர்மத்தையும் அவமதிக்கும் வகையில் தொடர்ச்சியாக பல முகநூல் பதிவுகளையும், பின்னூட்டங்களையும் இட்டுவந்த நபர்களுக்கெதிராக கல்முனை நீதவான் நீதிமன்றில் சட்டத்தரணி எஸ்.எச்.எம். மனார்த்தீனினால் தாக்கல் செய்யப்பட்ட MC/KAL/PVT/688/2022 இலக்க வழக்கானது இன்று ஆதரிப்புக்காக எடுக்கப்பட்டபோது,  முறைப்பாட்டாளர் சார்பில் சட்டத்தரணி ஏ.எம். றகீப் தலைமையில் ஆஜரான சட்டத்தரணிகள் மேற்கொண்ட சமர்ப்பணத்தில் திருப்தியுற்ற கௌரவ நீதிவானினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. குறித்த வழக்கில் எதிரி/பிரதிவாதிகளாக மருதமுனையைச் சேர்ந்த முகம்மது இஸ்மாயில் முபாறக், இப்றாலெப்பை முகம்மது றியாஸ், சேகு இஸ்மாயில் மௌஜூத், அஸான் மனாஸ் ஆகியோர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர். இவர்களை எதிர்வரும் 25 ஆம் திகதி மன்றில் ஆஜராகுமாறு அழைப்பானை விடுக்கப்பட்டுள்ளது. - [மீண்டும் இராஜாங்க அமைச்சராக சதாசிவம் வியாழேந்திரன்](https://minnal24.com/%e0%ae%ae%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%9a%e0%af%8d/): நாட்டில் மேலும் 3 இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் நியமனம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை இராஜாங்க அமைச்சராக சதாசிவம் வியாழேந்திரன் பதவிப்பிரமானம் செய்து கொண்டுள்ளார். மேலும், கிராமிய வீதி அபிவிருத்திகள் இராஜாங்க அமைச்சராக சிவநேசத்துரை சந்திர காந்தனும், நெசவு கைத்தொழில்  உள்நாட்டு ஆடை உற்பத்தி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சராக எஸ்.எம்.எம். முஷாரப் ஆகியோர் நியமனம் பெற்றுள்ளனர்.   - [பாணின் விலை அதிகரிப்பு](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/): இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் ஒரு இறாத்தல் பாணின் விலை 30 ரூபாவால்  அதிகரிக்கப்படவுள்ளது, என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. மேலும், இதர பேக்கரி பொருட்கள் 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. - [இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதம்](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf-4/): இலங்கை மத்திய வங்கி இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 327 ரூபா50 சதம், விற்பனை பெறுமதி 339 ரூபா 99 சதம் ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 428 ரூபா 51 சதம், விற்பனை பெறுமதி 443 ரூபா 67 சதம் யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 357 ரூபா 42 சதம், விற்பனை பெறுமதி 369 ரூபா 33 சதம் சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 348 ரூபா 10 சதம், விற்பனை பெறுமதி 361 ரூபா 68 சதம் கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 260 ரூபா 78 சதம், விற்பனை பெறுமதி 271 ரூபா 52 சதம் அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 241 ரூபா 11 சதம், விற்பனை பெறுமதி 252 ரூபா 10 சதம் ஜப்பானிய யென் ஒன்றின் […] - [நாளை ஆசிரியர்கள் கறுப்பு ஆடை அணிந்து எதிர்ப்பு?](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%88-%e0%ae%86%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b1%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/): நாளை தேசிய எதிர்ப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நாளை பாடசாலைக்கு சமூகமளிக்கும் ஆசிரியர்கள் கறுப்பு உடை அணிந்து எதிர்ப்பை தெரிவிப்பதுடன், இடைவேளையின் போது பாடசாலைக்கு வெளியே சென்று ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபடுவார்கள் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். - [ஃப்ரைட் ரைஸ், கொத்து ஆகியவற்றின் விலைகள் 20 சதவீதத்தால் அதிகரிப்பு](https://minnal24.com/%e0%ae%83%e0%ae%aa%e0%af%8d%e0%ae%b0%e0%af%88%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%b0%e0%af%88%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%86%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af/): உணவகங்களில் உணவு பொருட்களின் விலையை 20 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் குறிப்பிட்டார். அதன்படி ஃப்ரைட் ரைஸ், கொத்து, பகலுணவுப் பொதி உள்ளிட்டவற்றின் விலைகளை 20 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. உணவு உற்பத்திக்கான மூலப்பொருட்களின் விலை மற்றும் உணவுகளை பொதி செய்யும் பொருட்களின் விலை ஆகியவை அதிகரித்துள்ளமையாலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் குறிப்பிட்டார். - [இன்று நள்ளிரவு முதல் பேருந்து கட்டணங்கள் அதிகரிப்பு](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%a8%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%b5%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0/): இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படுவதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. பேருந்து கட்டணம் அதிகரிப்பு தொடர்பில் போக்குவரத்து அமைச்சில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்து மேற்படி தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, கட்டணங்கள் 35 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டு, 20 ரூபாவாக காணப்பட்ட குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 27 ரூபாவாக அதிகரிப்படுமென தெரிவிக்கப்படுகின்றது.   - [நாளைய மின்துண்டிப்பு அறிவித்தல்](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%88%e0%ae%af-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf/): நாளை, 3 மணித்தியாலங்களும் 20 நிமிடமும் மின்சாரம் துண்டிக்க மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது. இதன்படி, A முதல் W வரையான வலயங்களில் நாளை முற்பகல் 9.00 மணிமுதல் மாலை 5.00 மணிவரையான காலப்பகுதியில் 2 மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது. அத்துடன், மாலை 5.00 மணிமுதல் இரவு 9.00 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் ஒரு மணிநேரமும் 20 நிமிடமும் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. - [யாழில் பெற்றோலுக்காக வரிசையில் காத்திருந்த முதியவர் உயிரிழப்பு](https://minnal24.com/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%8b%e0%ae%b2%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%b0/): -யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் பெற்றோலுக்காக நீண்டநேரம் வரிசையில் காத்திருந்த முதியவர் மயங்கி வீழ்ந்து உயிரிழந்தார். நேற்று திங்கட்கிழமை மாலை சாவகச்சேரி – நுணாவில் லங்கா ஐ. ஓ. சி எரிபொருள் நிரப்பு நிலையம் முன்பாக இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. நீண்டநேரம் வரிசையில் காத்திருந்த முதியவர் எரிபொருள் நிரப்பு நிலையத்தின் வாசலை அண்மித்தபோது திடீரென மயங்கி விழுந்து அந்த இடத்திலேயே உயிரிழந்தார். உயிரிழந்தவரின் சடலம் சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. - [நாடு இவ்வளவு சீரழியும் வரை அமைச்சர்கள் தம் மனைவிமாருடன் சமையலறையில் இருந்தார்களா?](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%87%e0%ae%b5%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%b5%e0%af%81-%e0%ae%9a%e0%af%80%e0%ae%b0%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5/): -கல்முனை நிருபர்- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹாபீஸ் நஸீர் அஹமட் சுற்றாடல் அமைச்சர் பதவியை பொறுப்பேற்றுக்கொண்டதாக அறிகிறேன். தோல்வியடைந்த அரசில் பதவிகள் பொறுப்பெடுப்பதானது துரோகத்தனமான கண்டனத்துக்குரிய செயற்பாடாக பார்க்கிறோம். எமது நாட்டின் மக்களும், இளைஞர்களும் காலிமுகத்திடலில் நாட்டின் நலனுக்காக ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என்று பல நாட்களாக போராட்டத்தை முன்னெடுத்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் தோல்வியின் விளிம்பில் இருக்கும் மொட்டுக்கு முட்டுக்கொடுப்பதானது சமூகத்திற்கு செய்யும் பலத்த அநீதியாகும், என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்பீட உறுப்பினரும், கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான சிரேஷ்ட சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் தெரிவித்தார். கல்முனையில் அமைந்துள்ள அவரது காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், தேர்தல் காலங்களில் மொட்டை கடுமையாக சாடி மக்களின் வாக்குகளை பெற்று பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களும், […] - [சிவனேசதுரை சந்திரகாந்தனுக்கு இராஜாங்க அமைச்சு பதவி](https://minnal24.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%a9%e0%af%87%e0%ae%9a%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%88-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%95%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9/): மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தன் கிராமிய வீதிகள் அபிவிருத்தி உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சராக பதவியேற்றுள்ளார். - [கோதுமை மாவின் விலை சடுதியாக அதிகரிப்பு](https://minnal24.com/%e0%ae%95%e0%af%8b%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%88-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%9a%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf/): பிறிமா நிறுவனம் கோதுமை மாவின் விலையை இன்று முதல் கிலோ ஒன்றுக்கு 40 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானித்துள்ளது. - [1999 இல் சாதாரண தரம் கல்வி பயின்ற நண்பர்களின் ஒன்றுகூடல்](https://minnal24.com/1999-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a3-%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%bf/): -கல்முனை நிருபர்- சாய்ந்தமருது மல்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலயத்தில் 1999 இல் சாதாரண தரம் கல்வி பயின்ற நண்பர்கள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒன்றுகூடல் மற்றும் இப்தார் நிகழ்வு பொலிவேரியன் சன் ரைஸ் உணவக மண்டபத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. - [வவுனியாவில் புகையிரதம் மோதி இளைஞன் பலி](https://minnal24.com/%e0%ae%b5%e0%ae%b5%e0%af%81%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae/): -யாழ் நிருபர்- வவுனியா ஓமந்தை பகுதியில் புகையிரதம் மோதியதில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளார். குறித்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை இரவு 11.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர் ஓமந்தைப் பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. இந்நிலையில் சம்பவம் தொடர்பில் ஓமந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். - [அரசாங்கத்துக்கு எதிரான பிரேரணையை ஐக்கிய மக்கள் சக்தி நாளை கையளிக்கும்](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%aa/): ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எதிராக கொண்டுவர இருக்கும் நம்பிக்கையில்லா பிரேரணை மற்றும் ஜனாதிபதிக்கு எதிரான குற்றப்பிரேரணை ஆகியவற்றை நாளை 20ஆம் திகதி சபாநாயகருக்கு கையளிக்க தீர்மானித்திருக்கின்றது. புத்தாண்டு விடுமுறைக்கு சொந்த இடங்களுக்கு சென்றிருக்கும் அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பு திரும்பியதும் அவர்களது  இணக்கப்பாட்டையும் பெற்றுக்கொண்ட பின்னர் கையளிக்க இருப்பதாக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். அத்துடன் பிரேரணையை வெற்றிகொள்வதற்கு பாராளுமன்றத்தில் 113 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகின்றது. எதிர்க்கட்சியில் இருக்கும் அரசியல் கட்சிகள் அனைத்தும் பிரேரணைக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்து கைச்சாத்திட்டுள்ளனர். எனினும் ஐக்கிய தேசிய கட்சி சார்ப்பில் ரணில் விக்ரமசிங்கவிடம் இதுதொடர்பாக பல தடவைகள் கேட்டிருந்தபோதும் இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை என அவ் உறுப்பினர் தெரிவித்தார். - [சீனாவில் மீண்டும் கொவிட்](https://minnal24.com/%e0%ae%9a%e0%af%80%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d/): சீனாவின் வர்த்தக மையமாக இருக்கும் ஷங்ஹாய் நகரில் கடந்த மார்ச் மாதத்தில் முடக்க நிலை அறிவிப்பட்டது தொடக்கம் முதல் முறையாக மூவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். 89 மற்றும் 91 வயதுக்கு இடைப்பட்ட தடுப்பூசி பெறாதவர்களே உயிரிழந்திருப்பதாக அந்த நகர சுகாதார ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நகரின் 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 38 வீதமானவர்களே முழுமையாக தடுப்பூசி பெற்றிருப்பதாக ஷங்ஹாய் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்மூலம் அந்த நகர் மீண்டும் முழுமையாக கொரோனா சோதனையை எதிர்கொண்டிருப்பதோடு நகரில் பெரும்பாலான மக்கள் நான்காவது வாரமாக கடுமையான பொது முடக்கத்திற்கு முகம்கொடுத்துள்ளனர். - [வெளிநாட்டுப் பயணத்தை தடைசெய்ய கோரிய மனு நிராகரிப்பு](https://minnal24.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%a3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%a4%e0%ae%9f%e0%af%88/): மத்திய வங்கி பிணை முறி சம்பவம் தொடர்பில் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்‌ஷவின் வெளிநாட்டுப் பயணத்தை தடைசெய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த  மனுவை கொழும்பு மேலதிக மஜிஸ்திரேட் நீதிமன்றம்  நிராகரித்துள்ளது. முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்‌ஷ மற்றும் நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல ஆகியோர் பிணைமுறி சம்பவம் சம்பந்தமான சாட்சியாளர்களாக பெயரிடப்பட்டு அவர்களின் வெளிநாட்டுப் பயணத்தை தடைசெய்யுமாறு கோரி ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். நேற்றைய தினம் மேற்படி முறைப்பாடு தொடர்பில் நடைபெற்ற விசாரணையின் போதே கொழும்பு மேலதிக மஜிஸ்திரேட் நீதவான் ஹர்சன கெக்குணாவலவினால் அந்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கி பிணைமுறி சம்பவம் தொடர்பாக 500 பில்லியன் ரூபா நிதி வழங்கப்படவேண்டிய நபர்களின் பெயர் பட்டியலை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்கான உத்தரவை விடுத்துள்ள நீதவான் அதற்காக எதிர்வரும் மே மாதம் 02 ஆம் திகதி வரை கால அவகாசத்தை வழங்கியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான முறைப்பாட்டை […] - [சமையல் எரிவாயு விநியோகம் வழமைக்கு திரும்பியது](https://minnal24.com/%e0%ae%9a%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%af%e0%af%8b%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/): புதுவருட விடுமுறையை முன்னிட்டு கடந்த ஐந்து தினங்களாக மூடப்பட்டிருந்த லிற்றோ கேஸ் நிறுவனம் நேற்று திங்கட்கிழமை முதல் மீண்டும் சமையல் எரிவாயு விநியோக நடவடிக்கைகளை ஆரம்பித்தது. அதேவேளை, சமை யல் எரிவாயு விநியோக நடவடிக்கைகள் தொட ர்பில் லிற்றோ கேஸ் நிறுவனத்தின் உயரதிகாரிகள் மற்றும் தனியார் எரிபொருள்  பௌஸர்கள் உரிமையாளர்கள் சங்கத்திற்கும் இடையே நேற்று விசேட பேச்சுவார்த்தையொன்று நடைபெற்றுள்ளது. கடந்த 13ஆம் திகதி முதல் ஐந்து நாட்களாக எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை லிற்றோ கேஸ் நிறுவனம் நிறுத்தியிருந்தது. புதுவருட விடுமுறை காரணமாகவே அவ்வாறு விநியோக நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டிருந்ததாக அந்த நிறுவனம் தெரிவித்தது. அத்துடன் லிற்றோ காஸ் நிறுவனத்தின் தலைவராக செயற்பட்ட தெஷார ஜயசிங்க அந்த பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார். எவ்வாறெனினும் தொடர்ந்தும்தட்டுப்பாடின்றி சமையல் எரிவாயு விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. - [ஆகக் குறைந்த பஸ் கட்டணத்தை 40 ரூபாவாக அதிகரிக்க நேரும் - கெமுனு](https://minnal24.com/%e0%ae%86%e0%ae%95%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%aa%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a3%e0%ae%a4%e0%af%8d/): எரிபொருள் விலை அதிகரிப்பு உள்ளிட்ட செலவினங்கள் காரணமாக ஆகக் குறைந்த பஸ் கட்டணத்தை 40 ரூபாவாக அதிகரிக்க நேரும் என தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்துள்ளார். அதற்கிணங்க அனைத்து பஸ் கட்டணங்களும் 50 வீதத்தால் அதிகரிக்க நேரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஜூலை மாதத்தில் மேற்கொள்ளப்படும் வருடாந்த பஸ் கட்டண திருத்தத்தின் போது கட்டணங்களை இவ்வாறு அதிகரிக்க நேரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஐஓசி எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் மாத்திரம் எரிபொருளின் விலைகள் அதிகரிக்கப்பட்டிருந்தாலும் நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடி நிலை மற்றும் சில பிரதேசங்களில் சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்கள் இல்லாத காரணத்தினாலும் அதிக விலைக்கு டீசலைப் பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. எவ்வாறாயினும்தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் தற்போதைக்கு பஸ் கட்டணத்தில் திருத்தமொன்றை எதிர்பார்க்கவில்லையென்றும் எனினும் ஜூலை  மாதத்தில் இடம்பெறும் வருடாந்த கட்டண திருத்தத்தின் போது மேற்படி விலை அதிகரிப்பை […] - [நிதியமைச்சர் அலி சப்ரி- IMF பணிப்பாளர் சந்திப்பு](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%aa%e0%af%8d%e0%ae%b0%e0%ae%bf-imf-%e0%ae%aa/): நிதியமைச்சர் அலி சப்ரி, வோஷிங்டனில் உள்ள IMF தலைமையகத்தின் IMF முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவை சந்தித்தார். ஒரு நிலையான தீர்வை அடைவதில் இலங்கையுடன் இணைந்து பணியாற்ற IMF சாதகமாக உள்ளதாக இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நிலைமையைத் தணிக்க நிதியமைச்சர் ஏற்கனவே எடுத்துள்ள நடவடிக்கைகளை IMF பாராட்டியதாகவம் அறியமுடிகிறது. மேலும், இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) பற்றிய கலந்துரையாடல்கள் குறித்தும் இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெறவிருந்த குறித்த கலந்துரையாடலுக்காக நிதியமைச்சர் அலிசப்ரி தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் (17) வோஷிங்டன் நோக்கி பயணமாகி இருந்தனர். மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க மற்றும் நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன உள்ளிட்ட குழுவினரே இவ்வாறு பயணமாகினர். இந்நிலையில் சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல் நேற்றைய தினம் ஆரம்பமானது. இதில் சர்வதேச நாணய நிதியம், 3 பில்லியன் அமெரிக்க டொலரை கடனாக வழங்கும் என எதிர்ப்பார்ப்பதாக மத்திய வங்கியின் […] - [தனியார் பஸ்களின் சாரதிகள் திடீர் வேலைநிறுத்தம்](https://minnal24.com/%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b8%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3/): அவிசாவளையிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் தனியார் பஸ்களின் சாரதிகள் திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாவவே அவர்கள் இந்த பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். இதேவேளை அவிசாவளை பஸ் நிலையத்திலிருந்து புறப்படும் அரச பஸ்களின் சேவைகளையும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.   - [இன்றைய வானிலை முன்னறிவிப்பு](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%88%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%aa/): நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என வலிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அத்துடன், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.     - [வாகனங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த எரிபொருள் விநியோக வரையறைகள் நீக்கம்](https://minnal24.com/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95%e0%ae%a9%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d/): எரிபொருளை விநியோகிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த சகல கட்டுப்பாடுகளையும் தளர்த்துவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் அறிவித்துள்ளது. கொள்கலன்களில் எரிபொருளை வழங்குவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், வாகனங்களுக்காக விதிக்கப்பட்டிருந்த சகல எரிபொருள் வரையறைகள் (வாகனங்கள் அடிப்படையிலான உச்ச அளவு) உடன் அமுலாகும் வகையில் நீக்கப்பட்டுள்ளது.   - [இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன எரிபொருள் விலைகள் அதிகரிப்பு](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%8b%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-2/): இன்று செவ்வாய்க்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமும் எரிபொருள் விலைகளை உயர்த்தியுள்ளது. இதற்கமைய, ஒக்டெய்ன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 338 ரூபா ஒக்டெய்ன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 373 ரூபா லங்கா ஒட்டோ டீசலின் புதிய விலை 289 ரூபா லங்கா சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 329 ரூபா - [பாகிஸ்தானில் இலங்கையரை கொடூரமாக படுகொலை செய்தவர்களுக்கு தூக்கு தண்டனை](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%b0%e0%af%88-%e0%ae%95/): பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவரை கொடூரமாக படுகொலை செய்து எரித்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தண்டணை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதன்படி, குற்றம் சாட்டப்பட்ட 6 பேருக்கு தூக்கு தண்டனையும், 7 பேருக்கு ஆயுள் தண்டனையும், 76 பேருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. - [பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை](https://minnal24.com/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a4%e0%af%81-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%ae/): இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் பொது போக்குவரத்து மற்றும் உள்ளக செயல்பாடுகள் தவிர பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார் - [தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள எச்சரிக்கை](https://minnal24.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a3%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d/): மக்களின் குரலை தொடர்ந்தும் புறக்கணிப்பது ஆபத்தானது, என தேர்தல் ஆணைக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் நிலவும் நெருக்கடிகளுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் மற்றும் அமைப்புகளும் முன்வந்து கலந்துரையாடி தீர்வுக்காண வேண்டுமெனவும் தேர்தல் ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.   - [அமைச்சு பொறுப்பை ஏற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டும் அழைப்பை நிராகரித்தேன் - இசாக் ரஹ்மான்](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b1%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%88-%e0%ae%8f%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%ae%be/): -கல்முனை நிருபர்- இன்று அமைக்கப்பட்ட அமைச்சரவையில் சக்திமிக்க அமைச்சுப் பதவியை பெற்றுக் கொள்ளுமாறு எனக்கு பல தடவைகள் அழைப்புகள் விடுக்கப்பட்டன. இருப்பினும் தான் அரச உயர்மட்ட அழைப்புக்களை முற்றாக நிராகரித்து விட்டதாக, அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இசாக் ரஹ்மான் தெரிவித்தார். ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் தொடர்ந்தும் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், இன்று புதிதாக அமைக்கப்பட்ட அமைச்சரவையில் தனக்கு முக்கிய அமைச்சுப் பொறுப்பு ஒன்றைத் தர தீர்மானிக்கப்பட்டுள்ளதால் அதனை ஏற்றுக் கொள்ளுமாறு பல தடவைகள் ஆளும் தரப்பு உயர்மட்டத்திலிருந்து எனக்கு அழைப்புகள் விடுக்கப்பட்டன. இருப்பினும் அவர்களின் அந்த அழைப்பை நான் முற்றாக நிராகரித்தேன். இன்று மக்கள் பொருளாதார ரீதியாகவும் மற்றும் பல்வேறு வகையிலும் பிரச்சினைகளை எதிர்கொண்டு வீதியில் இறங்கி போராடிக்கொண்டிருக்கும் நிலையில் எந்தவொரு அமைச்சுப் பொறுப்பையும் தன்னால் ஏற்க முடியாது என அவர்களிடம் நான் தெளிவாக எத்திவைத்தேன். நாட்டில் இன்று எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் வழங்கி அதனைத் தீர்க்க […] - [அமைச்சு பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு எனக்கு பல முறை அழைப்பு விடுக்கப்பட்டது - ஹரீஸ் எம்.பி](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%8f%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%8a/): -கல்முனை நிருபர்- இன்று புதிதாக ஸ்தாபிக்கப்படவுள்ள அமைச்சரவையில் அமைச்சுப் பொறுப்பு ஒன்றை பெற்றுக் கொள்ளுமாறு அரச மேலிடங்களிலிருந்து மூன்று தடவைகள் உத்தியோகபூர்வ அழைப்புகள் விடுக்கப்பட்டன. மக்களின் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும் என்பதற்காகவும், மக்களின் பிரதிநிதி என்றவகையில் மக்கள் பக்கமாக நின்றே செயற்பட வேண்டும் என்று தீர்மானித்ததன் அடிப்படையில் அரச தரப்பின் அழைப்புகளை முற்றாக தான் நிராகரித்ததாக, முன்னாள் இராஜாங்க அமைச்சரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹாரீஸ் தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், புதிதாக ஸ்தாபிக்கப்படவுள்ள அமைச்சரவையில் தனக்கு முக்கிய அமைச்சுப் பொறுப்பு ஒன்றைத் தர தீர்மானிக்கப்பட்டுள்ளதால் அதனை ஏற்றுக் கொள்ளுமாறு மூன்று தடவைகள் ஆளும் தரப்பு உயர்மட்டத்திலிருந்து எனக்கு அழைப்புகள் விடுக்கப்பட்டன. இருப்பினும் அவர்களின் அந்த அழைப்பை நான் நிராகரித்தேன். இன்று மக்கள் பொருளாதார ரீதியாகவும் மற்றும் பல்வேறு வகையிலும் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள நிலையில் எந்தவொரு அமைச்சுப் பொறுப்பையும் தன்னால் ஏற்க […] - [17 அமைச்சர்கள் பதவியேற்றனர்](https://minnal24.com/17-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%af%87%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%a9/): புதிய அமைச்சரவை அமைச்சர்கள் 17 பேர் பதவியேற்றுள்ளனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று திங்கட்கிழமை முற்பகல் 10.30 மணியளவில் பதவியேற்கும் நிகழ்வு இடம்பெற்றது. அதன்படி, தினேஷ் குணவர்தன –  பொதுசேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா – மீன்பிடித்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரண – கல்வி மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க – பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திலும் அமுணுகம – போக்குவரத்து மற்றும் கைத்தொழில் அமைச்சர் கனக்க ஹேரத் – பெருந்தெருக்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க – தொழில் அமைச்சர் ஜானக்க வக்கும்புர – விவசாயம் மற்றும் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ஷெஹான் சேமசிங்க – வர்த்தகம் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி அமைச்சர் மொஹான் பிரியதர்ஷன டி சில்வா – நீர்வழங்கல் அமைச்சர் விமலவீர திசாநாயக்க – வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சர் கஞ்சன விஜேசேகர – வலுசக்தி […] - [அமெரிக்க டொலரின் பெறுமதி மேலும் அதிகரிப்பு](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%ae%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%9f%e0%af%8a%e0%ae%b2%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf/): பல அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கிகளில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை இன்று மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 340 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 330 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. - [இரண்டு விபத்துக்களை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற கடத்தப்பட்ட வாகனம்](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%8f%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa/): -கிளிநொச்சி நிருபர்- அக்கராயன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஸ்கந்தபுரம் பகுதியில் வீடொன்றின் முற்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹயஸ் வாகனமொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 3.50. மணியளவில் இனந்தெரியாத ஒருவரால் கடத்தப்பட்டுள்ளது. கடத்தப்பட்ட வாகனம் A9 பிரதான வீதியூடாக சென்ற சமயம் வீதி போக்குவரத்து பொலிஸார் மறித்தபோதும் நிறுத்தப்படவில்லை. ஓமந்தை சோதனைச் சாவடியில் இராணுவத்தினர் சோதனைக்காக நிறுத்திய போதும் நிறுத்தாமல், தொடர்ச்சியாக நிறுத்தாது சென்ற சமயம், இடை நடுவே ஹொரவ்பொத்தான வீதியில் இரண்டு விபத்துக்களை ஏற்படுத்தி விட்டு குறித்த வாகனம் தப்பி சென்றுள்ளது இதனையடுத்து, அக்கராயன் பொலிஸார் மற்றும் போக்குவரத்து பொலிஸார் இணைந்து, ஹொரவப்பொத்தான பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று அக்கராயன் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை அக்கராயன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். - [மலையக தொடருந்து சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%95-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%87%e0%ae%b5%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b1%e0%af%8d/): -பதுளை நிருபர்- இன்று அதிகாலை 8.30 மணிக்கு பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட தொடருந்து ஹாலிஎலக்கும் பதுளைக்கும் இடைப்பட்ட பகுதியில் தடம்புரண்டுள்ளது‌. இதனால் மலையகத்துக்கான தொடருந்து போக்குவரத்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில், குறித்த தொடருந்தை தடமேற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. - [பதுக்கி வைத்து டீசல் விற்ற ஒருவர் கைது](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%b5%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9f%e0%af%80%e0%ae%9a%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b1/): -பதுளை நிருபர்- ஹப்புத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டார எலிய பகுதியில் டீசல் விற்பனை செய்த 45 வயதுடைய நபர் ஒருவரை விஷேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 80 லீற்றர் டீசல் கைப்பற்றப்பட்டதோடு, குறித்த சந்தேக நபரையும் டீசலையும் ஹப்புத்தளை பொலிஸாரிடம் அதிரடிப் படையினர் ஒப்படைத்துள்ளனர்.   - [எரிபொருள் ஏற்றிச் சென்ற வாகனம் விபத்து](https://minnal24.com/%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8f%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1/): -பதுளை நிருபர்- இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன எரிபொருள் நிலையத்துக்கு சொந்தமான கொள்கலன்,  பதுளை-பண்டாரவளை பிரதான வீதியில் உடகும்பல்வெல பகுதியில்  இன்று அதிகாலை வீதியை விட்டு விலகி  விபத்துக்குள்ளாகியுள்ளது. கொழும்பில் இருந்து பதுளைக்கு எரிபொருளை ஏற்றிச் செல்லும் வேளையிலேயே குறித்த கொள்கலன் பவுசர் விபத்துக்குள்ளானது. இதனால் பதுளை எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் தாமதமாகி கிடைக்கும் என தெரிவிக்கப்படுகின்றது விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் - [11 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து](https://minnal24.com/11-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95%e0%ae%a9%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%92%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%92%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1/): தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 11 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வாகன விபத்தில் 3 பேர் காயமடைந்த நிலையில், நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கௌனிகம – தொடங்கொடை ஆகிய பகுதிகளுக்கு இடையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. - [10.30 மணியளவில் புதிய அமைச்சரவை பதவியேற்கிறது](https://minnal24.com/10-30-%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b3%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b0/): புதிய அமைச்சரவை இன்று திங்கட்கிழமை பதவியேற்கவுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்போது 18 அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வு ஜனாதிபதி மாளிகையில் இன்று முற்பகல் 10.30 அளவில் ஆரம்பமாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. - [மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படும் கால அளவில் மாற்றம்](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%85%e0%ae%ae%e0%af%81%e0%ae%b2%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81/): இன்று திங்கட்கிழமை மின் துண்டிப்பு 4 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இவ்வாறு அநிவிக்கப்பட்டிருந்த நிலையில், கால அளவில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இன்றைய தினம் 3 மணிநேரமும் 20 நிமிடம் மின் துண்டிக்கப்படவுள்ளது.  முன்னதாக அந்த வகையில், A முதல் L  வரையான மற்றும் P முதல் W வரையான வலயங்களில் காலை 8 மணி முதல் இரவு 10.30 வரையான காலப்பகுதியில், 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் சுழற்சி முறையில் இரண்டு கட்டங்களாக மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படவுள்ளது. - [பிரதமர் தலைமையிலான கூட்டம் திடீரென இரத்து](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f/): பிரதமர் தலைமையில் இன்று திங்கட்கிழமை நடைபெறவிருந்த விசேட கலந்துரையாடல் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. இன்று முற்பகல் 11 மணிக்கு அலரிமாளிகையில், இந்த கலந்துரையாடல் இடம்பெறிவிருந்த நிலையிலேயெ இரத்தச் செய்யப்பட்டுள்ளது. கலந்துரையாடல் திடீரென இரத்துச் செய்யப்பட்டதாக ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் பிரதீப் உடுகொட தெரிவித்துள்ளார். - [புதிய அமைச்சரவை இன்று பதவியேற்கின்றது?](https://minnal24.com/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%b5%e0%af%88-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%aa%e0%ae%a4/): புதிய அமைச்சரவை இன்று திங்கட்கிழமை முற்பகல் பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய அமைச்சரவையில் 20 அமைச்சர்கள் மாத்திரமே உள்ளடங்கவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. அமைச்சரவையில் தற்போதுள்ள பேராசிரியர் ஜி.எல் பீரிஸ், தினேஸ் குணவர்தன, அலி சப்ரி, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோருக்கு மேலதிகமாக ரமேஸ் பத்திரன, திலும் அமுனுகம, செஹான் சேமசிங்க ஆகியோருக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. - [இன்றைய வானிலை தொடர்பில் அறிவிப்பு](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%88%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2/): சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 35-45 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கடல் நிலை: புத்தளத்திலிருந்து […] - [சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல் ஆரம்பம்](https://minnal24.com/%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a3%e0%ae%af-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%9f-3/): சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. இந்த கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக நிதியமைச்சர் அலி சப்ரி தலைமையிலான குழுவினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வொஷிங்டன் நோக்கி பயணிமாகினர். குறித்த குழுவில் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க மற்றும் நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன உள்ளிட்டோரும் அடங்குகின்றனர். இலங்கைக்கு இந்த வருடத்திற்கு, 3 முதல் 4 பில்லியன் அமெரிக்க டொலர் தேவை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், சர்வதேச நாணய நிதியம், 3 பில்லியன் அமெரிக்க டொலரை கடனாக வழங்கும் என எதிர்ப்பார்ப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார். - [உறக்கத்தில் உயிரிழந்த சிறுமி : 2 மாத கர்ப்பிணி என மருத்துவ அறிக்கை தெரிவிப்பு](https://minnal24.com/%e0%ae%89%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%9a%e0%ae%bf/): -யாழ் நிருபர்- யாழில், உறக்கத்தின் போது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சிறுமி 2 மாத கர்ப்பிணி என உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. யாழ்ப்பாணம், கரவெட்டியைச் சேர்ந்த சிறுமி உறக்கத்தில் சுயநினைவற்று இருந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதன்போது சிறுமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்திய பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சிறுமியின் சடலம் இறப்பு விசாரணைகளின் பின் உடற்கூற்று பரிசோதனை சட்ட மருத்துவ வல்லுநர் கனகசபாபதி வாசுதேவ முன்னிலையில் உட்படுத்தப்பட்டுள்ளது. இதன்போது குறித்த சிறுமி இரண்டு மாத கர்ப்பிணி என உடற்கூற்றுப் பரிசோதனையில் அறிக்கையில் தெரியவந்துள்ளது. - [எரிபொருள் விலை மீண்டும் அதிகரித்தது](https://minnal24.com/%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d__trashed/): லங்கா ஐ ஓ சி நிறுவனம் அனைத்து வகை பெட்ரோல் விலையை லீற்றருக்கு 35 ரூபாவாலும் அனைத்து வகை டீசல் விலையை லீற்றருக்கு 75 ரூபாவாலும் அதிகரித்துள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் இந்த விலை உயர்வு அமுலுக்கு வரும் என குறித்த நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,   - [காதலனுடன் வாழ ஆசைப்பட்டு மூதாட்டியை கொலை செய்த மாணவி](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%a9%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4-%e0%ae%86%e0%ae%9a%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81/): காதலனை திருமணம் செய்தவற்காக மூதாட்டி ஒருவரை கொன்று அவரின் நகைகளை அபகரித்த 17 வயதே ஆன மாணவியை தமிழக பொலிஸார் கைது செய்துள்ளனர். கோவை – பொள்ளாச்சியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஒன்றரை வருடங்களாக காதலித்து வரும் நபரை திருமணம் செய்வதற்காகவே மூதாட்டியை கொன்று நகைகளை அபகரித்ததாக அந்த மாணவி பொலிஸாருக்கு வாக்குமூலம் அளித்துள்ளார். அயல் வீட்டில் வசித்து வந்த மூதாட்டியிடம் நிறைய நகைகள் இருந்ததால் அவரின் நகைகளை அபகரிக்க ஆசைப்பட்டதாகவும், இந்நிலையிலேயே அவரைக் கொலை செய்ய நேர்ந்ததாகவும் காதலனுடன் சேர்ந்து வாழ ஆசைப்பட்டு இரு மாதங்களாக திட்டமிட்டு இந்தக் கொலையை செய்ததாக மாணவி ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார் - [மக்கள் விரும்பினால் இடைக்கால அரசாங்கத்துக்கு தலைமை ஏற்க தயார்](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%9f%e0%af%88%e0%ae%95/): ‘மக்கள் விரும்பினால் இடைக்கால அரசாங்கத்துக்கு தலைமை ஏற்று, நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்க தயார்’, என்று முன்னாள் பிரதமரும் தற்போதைய எம்.பி.யுமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். போக்குவரத்து சங்கப் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ரணில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இளைஞர்களின் கோரிக்கைக்கு அமைய ஒட்டுமொத்த அரசாங்கமும் விலக வேண்டும். மக்கள் உண்மையில் என்னை விரும்பினால், இடைக்கால அரசாங்கத்துக்கு குறுகியக் கால தலைமைத்துவத்தை வழங்குவதற்கு தயாராகவே இருக்கிறேன். தற்போதைய நெருக்கடி நிலைமைகளை ஒன்றரை வருடங்களுக்குள் தீர்க்க முடியும் என்றும் அவர் மேலும் கூறினார். - [ஜெனரேட்டர் வெடித்ததில் தாயும் மகளும் பலி](https://minnal24.com/%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%b0%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be/): வெலிமடை – கெப்பட்டிப்பொல பகுதியில் ஜெனரேட்டர் வெடித்ததில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர். மின்வெட்டு காரணமாக பாவனைக்குட்படுத்தப்பட்ட ஜெனரேட்டர் வெடித்தமையினால் 38 வயதான தாயும் அவரின் 9 வயதான மகளும் 4 வயதான மகனும் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சிறார்கள் இருவரும் மேலதிக சிகிச்சைகளுக்காக சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதுடன், சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.   - [வெளிநாட்டு இலங்கையர்கள் நாட்டிற்கு உதவ வேண்டும்](https://minnal24.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/): வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் அனுப்பும் பணம் உணவு, எரிபொருள் மற்றும் மருந்து போன்ற அத்தியாவசிய இறக்குமதிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என இலங்கை மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க குறிப்பிட்டுள்ளார். அந்நிய செலாவணி தேவையற்ற விடயங்களுக்கு செலவு செய்யப்படாதென இலங்கை மத்திய வங்கி உறுதியளித்துள்ளது. அத்தியாவசிய இறக்குமதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பை அதிகரிக்க அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார். வெளிநாடு வாழ் இலங்கையர்கள் நாட்டிற்கு உதவுமாறும் அந்த பணம் தேவையற்ற முறையில் பயன்படுத்தப்படாதென அவர் வாக்குறுதியளித்துள்ளார். - [பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் அறிவிப்பு](https://minnal24.com/%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%8b%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%ae%a9%e0%ae%a4/): தற்போது நிலவிவரும் எரிபொருள் நெருக்கடியானது, இன்றைய தினம் வழமைக்கு திரும்புமென இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு ஊழியர்கள் விடுமுறையில் சென்றிருப்பதால் சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டிருந்தன. ஆனால் இன்று முதல் எரிபொருள் நிரப்பு நிலைய செயற்பாடுகள் வழமைக்குத் திரும்புமென, எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு அறிவித்துள்ளனர். அத்துடன், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது. - [முதலாம் தவணை கற்றல் நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் ஆரம்பம்](https://minnal24.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%a3%e0%af%88-%e0%ae%95%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%b5%e0%ae%9f/): அனைத்து அரச பாடசாலைகளும் முதலாம் தவணை கற்றல் நடவடிக்கைகளுக்காக  இன்று திங்கட்கிழமை  ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அத்தோடு பாடசாலை கல்வி நடவடிக்கைகளை மேலும் ஒரு மணிநேரம் நீடிக்கும் முடிவு இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 2022ஆம் ஆண்டுக்கான புதிய தவணையின் கற்றல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் வகையில், பாடசாலை நேரத்தை ஒரு மணித்தியாலமாக ஒரு மணிநேர நீடிக்கும் முடிவு இடைநிறுத்தம் நீடிப்பதற்கு கல்வி அமைச்சு முன்னர் தீர்மானம் எடுத்திருந்தது. இந்த ஆண்டுடன் தொடர்புடைய பாடத்திட்டங்களை உள்ளடக்குவதற்கு 139 நாட்கள் வரையறுக்கப்பட்ட கால அவகாசம் காணப்படுவதால், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது. அத்துடன் பாடசாலை நேரத்தை ஒரு மணித்தியாலம் வரை நீடிப்பதன் மூலம் கற்பித்தலுக்கான காலத்தை கூடுதலாக வழங்க முடியும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. மேலும், கால அவகாசம் நீடிக்கப்பட்ட பின்னரும் பாடத்திட்டத்தை உள்ளடக்க முடியாத பட்சத்தில், மூன்றாம் தவணையின் போது, சனிக்கிழமைகளில் பாடசாலைகளை நடத்துவது குறித்தும் கல்வி அமைச்சு கவனம் செலுத்தியிருந்தது. எனினும், குறித்த தீர்மானத்தை தற்காலிகமாக கைவிடுவதாக […] - [ஜனாதிபதி செயலக கட்டிட வாசகமாக 'Go Home Gota'](https://minnal24.com/%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%ae%b2%e0%ae%95-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%9f-%e0%ae%b5%e0%ae%be/): காலிமுகத்திடலில் அரசுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக இன்று ஜனாதிபதி செயலக கட்டிடத்தை “Go Home Gota” என்ற வாசகத்தை மின்விளக்கு வெளிச்சத்தில் காட்சிப்படுத்தினர். எவ்வாறாயினும், ஜனாதிபதி செயலக கட்டிடத்திற்கு இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்களை பாதுகாப்பு அதிகாரிகள் தடுக்க முற்பட்டுள்ளனர். - [பொலிஸ் பிரிவின் இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்](https://minnal24.com/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a3%e0%af%88%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b3/): இலங்கைப் பொலிஸ் பிரிவின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குறித்த இணையத்தளம் செயலிழந்துள்ளதாகவும் அதனைச் சீர் செய்யும் முயற்சியில் சம்பந்தப்பட்ட தரப்புக்கள் ஈடுபட்டிருப்பதாகவும் பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. - [நாளை புதிய அமைச்சரவை பதவியேற்பு](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%88-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%b5%e0%af%88-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%b5/): புதிய அமைச்சரவை   நாளை திங்கட்கிழமை பதவியேற்கவுள்ளதாக அரசாங்கத்தின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய அமைச்சரவைக்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், புதிய அமைச்சரவை கூட்டத்தை நாளைய தினம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது, புதிய அமைச்சரவையில் 15 அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும், புதிய அமைச்சரவையில் சமல் ராஜபக்ஸ, பஷில் ராஜபக்ஸ, நாமல் ராஜபக்ஸ மற்றும் ஷஷிந்திர ராஜபக்ஸ ஆகியோர் இடம்பிடிக்கமாட்டார்கள் என அறிய முடிகின்றது. - [தரம் 01 இற்கு மாணவர்களை சேர்க்கும் நடவடிக்கை ஆரம்பம்](https://minnal24.com/%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-01-%e0%ae%87%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%9a%e0%af%87%e0%ae%b0/): அரச பாடசாலைகளில் 2022 இற்கு தரம் 01 இற்கு மாணவர்களை சேர்த்தல் நாளை மறுதினம், ஏப்ரல் 19ஆம் திகதி இடம்பெறுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அத்துடன், புனித ரமழான் நோன்பு காரணமாக விடுமுறை வழங்கப்பட்டுள்ள முஸ்லிம் பாடசாலைகளில் தரம் 01 இற்கு மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் நிகழ்வு மே 05ஆம் திகதி இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நாட்டிலுள்ள அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தமிழ், சிங்கள பாடசாலைகள் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளதோடு, முஸ்லிம் பாடசாலைகள் ரமழான் விடுமுறையின் பின்னர் மே 04ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன. - [நியூ மெக்ஸிகோ மாகாணத்தில் காட்டுத் தீ ; 200இற்கும் மேற்பட்ட வீடுகள் நாசம்](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%af%e0%af%82-%e0%ae%ae%e0%af%86%e0%ae%95%e0%af%8d%e0%ae%b8%e0%ae%bf%e0%ae%95%e0%af%8b-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2/): அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி இருவர் உயிரிழந்தனர். 200இற்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சாம்பலாகின. அமெரிக்காவின், நியூ மெக்ஸிகோ மாகாணத்தில் உள்ள ஒரு மலைகிராமத்தில், 12ஆம் திகதி காட்டுத் தீ ஏற்பட்டது. தீ வேகமாக பரவியதால், அங்கு வசித்த 5,000இற்கும் மேற்பட்டோர் உடைமைகளை கூட எடுக்காமல் தப்பினர். இந்த தீயில் சிக்கி இருவர் உயிரிழந்தனர்; 200க்கும் மேற்பட்ட வீடுகள் சாம்பலாகின. - [120,000 மெற்றிக் தொன் நிலக்கரியை இறக்குவதற்கு டொலர் இல்லை](https://minnal24.com/120000-%e0%ae%ae%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af/): ஏப்ரல் 12 ஆம் திகதி முதல் நுரைச்சோலை கடற்பரப்பில் நங்கூரமிட்டுள்ள இரண்டு கப்பல்களின் உரிமையாளர்களும் ஏப்ரல் 18ஆம் திகதிக்குள் உரிய தொகையை செலுத்தாவிட்டால், சரக்குகளை இறக்காமல் புறப்படுவோம் என தெரிவித்துள்ளனர். நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையமானது நிதிப் பற்றாக்குறை காரணமாக, 34 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான 120,000 மெற்றிக் தொன் நிலக்கரியை இறக்குவதற்கு சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ஆறு நாட்களுக்கான அதிக அபராதத்துடன் தொகையை  செலுத்த வேண்டியிருக்கும் என்றும் தற்போதுள்ள நிலக்கரி மின் உற்பத்திக்கு போதுமானதாக இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரலுக்குப் பின்னர், தென்மேல் பருவ நிலை ஆரம்பிப்பதால் அடுத்த தொகுதி நிலக்கரி செப்டெம்பர் மாதமே கொண்டுவரப்படும் எனவும் இந்த மாத கடைசிக்குள் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, அடுத்த நிலக்கரி இறக்குமதி செய்யும் காலம் தொடங்கும் வரை, கையில் இருக்கும் நிலக்கரியைப் பயன்படுத்துவதற்காக […] - [வைத்தியர்களுக்கு வேலைக்குச் செல்வதில் சிக்கல்](https://minnal24.com/%e0%ae%b5%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d/): எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக வைத்தியர்கள் தங்கள் தனியார் வாகனங்களில் வைத்தியசாலைகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எரிபொருள் பற்றாக்குறையினால் வைத்தியர்களுக்கு வேலைக்குச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக விசேட வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஆகவே, விசேட வைத்தியர்களின் வாகனங்களுக்கு எவ்வித பிரச்சினையுமின்றி எரிபொருளை பெற்றுக்கொள்ளும் முறைமையொன்று வகுக்கப்பட வேண்டுமென அதன் தலைவர் டாக்டர் லக்குமார் பெர்னாண்டோ தெரிவித்தார் - ['நீதிக்காக அழுகின்றோம்'](https://minnal24.com/%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%95-%e0%ae%85%e0%ae%b4%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d/): கொழும்பு காலிமுகத்திடத்தில் “கோட்டாகம”வில்,  ‘மூன்று வருடங்கள் கடந்துவிட்டன. நீதிக்காக அழுகின்றோம்’ எனும் தொனிப்பொருளில், ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. உயிர்த்த ஞாயிறுத் தினத்தன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு, 3 வருடங்கள் கடந்துவிட்டன. அதனை நினைவுகூர்ந்து, நாடளாவிய ரீதியிலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில், விசேட திருபலிகளும் இடம்பெற்றன.   - [அவர்களின் போராட்டம் வறுமைக்கானது, எங்களின் போராட்டம் வாழ்க்கைக்கானது](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae/): -யாழ் நிருபர்- கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பம் வைத்ததன் அர்த்தம் சஜித்திலோ, ரணிலிலோ அல்லது பொன்சேகாவிலோ நம்பிக்கையுள்ளது என்பதல்ல. இனப்படுகொலையாளிகளான ராஜபக்ஷாக்களைப் பதவியில் தொடர அனுமதிக்க முடியாது என்பதனாலேயே கையொப்பம் வைக்கப்பட்டது, என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர்  க.சுகாஷ்  தெரிவித்துள்ளார் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதற்காகத் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளைத் தீர்ப்பதற்கு உடன்படாத எவரையும் ஆட்சிக்குக் கொண்டுவருவதற்குத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஒருபோதும் ஆதரவு வழங்கமாட்டாது. அரசியல் தீர்வற்ற வெறும் ஆட்சி மாற்றங்களுக்குக் கொடிபிடிக்க வேண்டிய தேவை எமக்குக் கிடையாது. அவ்வாறு கொடி பிடிப்பதனால் தமிழினத்திற்கு எதுவும் கிடைக்கப் போவதுமில்லை. அவர்களின் போராட்டம் வறுமைக்கானது. எங்களின் போராட்டம் வாழ்க்கைக்கானது. அரிசி, பருப்பின் விலை குறைந்தால் அவர்களின் போராட்டம் முடியும். இனப்படுகொலைக்கு நீதி கிடைக்கும்வரை எங்களின் போராட்டம் தொடரும். போராட விரும்பும் தமிழ் இளைஞர், யுவதிகள் […] - [தகராறு காரணமாக வீடு ஒன்றின் மீது தாக்குதல்](https://minnal24.com/%e0%ae%a4%e0%ae%95%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b1%e0%af%81-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%81-%e0%ae%92%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1/): -யாழ் நிருபர்- மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது இன்று பிற்பகல் வேளை தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இத் தாக்குதலில் வீட்டில் படலை, ஜன்னல்கள் என்பன சேதமாக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட வீட்டில் உள்ளவர்களுக்கும் அயல் வீட்டில் உள்ளவர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாகவே இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். - [எரிபொருள் பதுக்களினால் விவசாய நடவடிக்கைகள் பாதிக்கிறது : உடனடியாக விதைப்பை ஆரம்பிக்க வேண்டும்](https://minnal24.com/%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5/): -கல்முனை நிருபர்- ஒவ்வொரு நாட்களிலும் நூற்றுக்கணக்கான உழவு இயந்திரங்கள் வரிசையில் நின்று எரிபொருளை பெற்றுக்கொள்கிறது. ஆனால் வயலில் இறங்கி ஒருசில உழவு இயந்திரங்களே விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. இலங்கையின் அரிசி தேவையில் ஐந்தில் ஒருபங்கை பூர்த்திசெய்யும் அம்பாறை மாவட்ட விவசாயிகள் இவ்வாறு மெத்தனப்போக்குடன் இருப்பதானது பிற்காலத்தில் பாரிய உணவு நெருக்கடியை உண்டாக்கும் வாய்ப்பிருக்கிறது. விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்க பள்ளிவாசல்கள் ஊடாகவும், பொலிஸாரின் உதவியுடனும் பல்வேறு அறிவுறுத்தல்களை செய்துள்ளோம். உழவுத்தேவைகளுக்காக தினமும் தனியான வரிசையமைத்து உழவு இயந்திரங்களுக்கு எரிபொருள் வழங்கப்படுகிறது. கிராம சேவகர் ஊடக எரிபொருள் அட்டைகளை வழங்கியும், தாங்கிகளுக்கு முழுமையான அளவு எரிபொருள் வழங்கியும் 5-10 சதவீதமான நிலங்கள் மட்டுமே இப்போது உழுதுள்ளனர். காலம் கடந்து விவசாயம் செய்வதனால் பயிர்களுக்கு  அரக்கொட்டியடித்து நஷ்டம் உண்டாகும் நிலை ஏற்படும், என சம்மாந்துறை பிரதேச நீர்ப்பாசன பொறியியலாளர் எம்.எஸ்.எம். நவாஸ் தெரிவித்தார். சம்மாந்துறை நீர்ப்பாசன பொறியியலாளர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் […] - [மோட்டார் சைக்கிள் குளத்தில் வீழ்ந்து மாணவர்கள் இருவர் பலி](https://minnal24.com/%e0%ae%ae%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/): நால்வர் பயணித்த மோட்டார் சைக்கிள் குளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். தம்புள்ளை – வேமதில்ல பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நால்வர் இணைந்து பயணித்த மோட்டார் சைக்கிளின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாத காரணத்தினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் கலேவெல, புவக்பிட்டிய, நபடகஹாவத்த பகுதியைச் சேர்ந்த பிசுல் ஹபீக் ஹம்னிதாஸ் (வயது – 16) மற்றும் நவ்சாத் அலி முசாபிக் (வயது – 16) ஆகியோரே உயிரிழந்துள்ளதாகத் பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றைய இருவர் படுகாயமடைந்து தம்புள்ளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். - [மன்னாரில் 6 கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-6-%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b0%e0%af%82%e0%ae%aa%e0%ae%be-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%81/): மன்னார் தெற்கு கடல்பகுதியில் சுமார் 6 கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் நேற்று சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 177 கிலோ 60 கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மீட்கப்பட்டுள்ள குறித்த கேரள கஞ்சாப் பொதிகள் கடற்படை அதிகாரியின் மேற்பார்வையின் கீழ் தீவைத்து அழிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். - ['கோட்டா கோ கம' கிராமம் அப்புறப்படுத்தப்பட்டதால் பதற்றம்](https://minnal24.com/%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be-%e0%ae%95%e0%af%8b-%e0%ae%95%e0%ae%ae-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa/): காலியில் நிறுவப்பட்டிருந்த ‘கோட்டா கோ கம’ கிராமம் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகின்றன. காலிமுகத்திடலில், ‘கோட்டா கோ கம’ கிராமம் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு ஒத்துழைப்பு நல்கும் வகையில், ‘கோட்டா கோ கம’ காலி கிளை நிறுவப்பட்டுள்ளது. அங்கும் கூடாரம் அமைத்து போராட்டத்தில் பலரும் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில், அங்குச் சென்ற பொலிஸார், தற்காலிக கூடாரத்தை அகற்றியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.   - [அமெரிக்கா புறப்பட்டனர் நிதியமைச்சர் உள்ளிட்ட குழுவினர்](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%ae%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a9%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8/): நிதி அமைச்சர் அலி சப்ரி, மத்திய வங்கி ஆளுனர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்த்தன உள்ளிட்ட குழுவினர் இன்று அதிகாலை அமெரிக்கா வோஷிங்டனுக்கு புறப்பட்டனர் ஏப்ரல் 19-24 வரை சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. - [வடமாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜெகத் பளிகக்காரவுக்கு இடமாற்றம்](https://minnal24.com/%e0%ae%b5%e0%ae%9f%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%ae/): -யாழ் நிருபர்- வடமாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜெகத் பளிகக்காரவுக்கு உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. அந்த வெற்றிடத்துக்கு மூத்த பிரதிப் பொலிஸ் மா ஜெயந்த வீரசூரிய இடமாற்றப்பட்டுள்ளார். அதனடிப்படையில், வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜெகத் பளிகக்கார சமுக பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பாக செல்லவுள்ளதுடன், மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜெயந்த வீரசூரிய, வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். - [பாடசாலை நேரத்தை அதிகரிக்கும் தீர்மானம் கைவிடப்பட்டுள்ளது](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%af%88-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95-2/): பாடசாலை நேரத்தை ஒரு மணித்தியாலம் நீடிக்கும் தீர்மானத்தை தற்காலிகமாக கைவிடத் தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இந்த ஆண்டுடன் தொடர்புடைய பாடத்திட்டங்களை உள்ளடக்குவதற்கு 139 நாட்கள் வரையறுக்கப்பட்ட கால அவகாசம் காணப்படுவதால், 2022ஆம் ஆண்டுக்கான புதிய தவணையின் கற்றல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் வகையில், பாடசாலை நேரத்தை மேலும் ஒரு மணித்தியாலம் நீடிப்பதற்கு முன்னராக கல்வி அமைச்சு தீர்மானம் எடுத்திருந்தது. அத்துடன் பாடசாலை நேரத்தை ஒரு மணித்தியாலம் வரை நீட்டிப்பதன் மூலம் கற்பித்தலுக்கான காலத்தை கூடுதலாக வழங்க முடியும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. மேலும், கால அவகாசம் நீட்டிக்கப்பட்ட பின்னரும் பாடத்திட்டத்தை உள்ளடக்க முடியாத பட்சத்தில், மூன்றாம் தவணையின் போது  சனிக்கிழமைகளில் பாடசாலைகளை நடத்துவது குறித்தும் கல்வி அமைச்சு கவனம் செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், குறித்த தீர்மானத்தை தற்காலிகமாக கைவிடுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. - [இன்றைய மின்துண்டிப்பு அறிவித்தல்](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%88%e0%ae%af-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%85%e0%ae%b1/): இன்று ஞாயிற்றுக்கிழமை 2 மணித்தியாலமும் 15 நிமிடமும் மின்தடை அமுலாக்கப்பட உள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி, A முதல் W வரையான வலயங்களில் காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரையான காலப்பகுதியில் 2 மணித்தியாலமும் 15 நிமிடமும் மின்தடை அமுல்படுத்தப்படவுள்ளது. மின்துண்டிப்பு அட்டவணை :- https://drive.google.com/file/d/1ksCLTBhZeHCXOsjeENKh9E3SiPUcOPrf/view - [மன்னாரில் ஆயர் தலைமையில் இடம்பெற்ற ஈஸ்டர் நள்ளிரவு திருப்பலி](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%86%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/): -மன்னார் நிருபர்- இயேசுவின் உயிர்ப்பு பெருவிழா (ஈஸ்டர்) திருவிழா திருப்பலி மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் நேற்று  சனிக்கிழமை இரவு 11.15 மணிக்கு இடம்பெற்றது. மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் குருக்கல் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத் திருப்லியாக ஒப்புக் கொடுக்கப்பட்டது. இதன் போது மக்கள் சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக கலந்து கொண்டனர். திருவிழா திருப்பலி இடம் பெற்ற போது ஆலயத்தை சூழ பொலிஸாரின் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டிருந்தது. மன்னார் மறை மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஆலயங்களிலும் நள்ளிரவு திருப்பலி இடம் பெற்றது. இன்று  காலையும் திருவிழா திருப்பலி ஆலயங்களில் ஒப்புக் கொடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. - [யாழ்.மாவட்ட தேவாலயங்களில் உயிர்த்தஞாயிறு கூட்டுத்திருப்பலி](https://minnal24.com/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b2%e0%ae%af%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2/): -யாழ் நிருபர்- கிறிஸ்தவ மக்கள் தமது தவக்காலத்தின் நிறைவு நாளினை முன்னிட்டு உயிர்த்த ஞாயிறு கூட்டுத்திருப்பலியினை யாழ். மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் ஆராதனையுடான நிகழ்த்தினர். இதனை முன்னிட்டு வரலாற்றுசிறப்பு மிக்க யாழ். மரியன்னை பேராலயத்திலும் இன்று காலை உயிர்த்தஞாயிறு கூட்டுத்திருப்பலி இடம்பெற்றது. இதனை யாழ் . மறைமாவட்ட ஆயரின் அருட்சகோதர் என் டீபன் ராஜ்  நடாத்தி வைத்தார். தவக்காலத்தின் மறுமலர்ச்சியில் உயிர்த்த ஞாயிறு அன்று ‘யேசுப்பிரான் காட்டிய வாழ்வியல் பாடங்கள்’ என்னும் தலைப்பிலான சிறப்பு கூட்டுப்போதனையும் இடம்பெற்றது. இதில் யாழ். மாவட்டத்தில் இருந்து பல பாகங்களிலும் வருகைதந்த கிறிஸ்தவ மக்கள் கலந்துகொண்டனர். - [இன்று உயிர்த்த ஞாயிறு தினம்](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%9e%e0%ae%be%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81-%e0%ae%a4%e0%ae%bf/): உலகெங்கும் வாழும் கிறிஸ்தவ மக்கள் இன்று உயிர்த்த ஞாயிறு தினத்தை அனுஷ்டிக்கின்றனர். இயேசு பிரான் சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழுவதைக் குறிக்கும் தினமாக இந்த உயிர்த்த ஞாயிறு கிறிஸ்தவர்களினால் அனுட்டிக்கப்படுகிறது. இலங்கை மக்களுக்கு இந்த உயிர்ந்த ஞாயிறு தினமானது ஒரு கவலைக்குரிய நாளாக மாறிவிட்டிருக்கின்றது. இறைவன் உயிர்ந்த நாளில் பல உயிர்கள் பலியாகிய துயரம் 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தில்இடம்பெற்றது. இதேவேளை, இன்றைய தினம் நாட்டின் பல தேவாலயங்களில் விசேட ஆராதனை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. - [பசில் ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறவில்லை](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%aa%e0%ae%95%e0%af%8d%e0%ae%b7-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f/): முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று சனிக்கிழமை காலை இரத்மலானை விமான நிலையத்தின் ஊடாக இலங்கையை விட்டுச் சென்றுள்ளதாக பரவிய வதந்தியில் எவ்வித உண்மையும் இல்லை என , விமான சேவைகள் பணிப்பாளர் ஷெஹான் சுமனசேகர தெரிவித்துள்ளார். முன்னாள் நிதி அமைச்சர் வைரஸ் தொற்றுக்கு உள்ளானதை அடுத்து அவர் இன்னும் வைத்தியசாலையில் இருப்பதாகவும் விமான நிலைய வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. பசில் மூன்று முக்கிய விமான நிலையங்களான கட்டுநாயக்கா, மத்தல மற்றும் இரத்மலானை ஊடாக நாட்டை விட்டு வெளியேறவில்லை எனவும், அத்தகைய வதந்திகள் பொய்யானவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது இன்று காலை இரத்மலானை விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட தனியார் ஜெட் விமானத்தில் இரண்டு வெளிநாட்டு பிரஜைகள் மற்றும் பணியாளர்கள் இருந்ததாகவும், முன்னாள் நிதியமைச்சரை இந்த விமானத்தில் செல்லவில்லை என்றும் ஷெஹான் தெரிவித்துள்ளார். கோவிட்-19 தொற்றுடன் நேற்று வெள்ளக்கிழமை அனுமதிக்கப்பட்ட பசில் தற்போது கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் மேலும் […] - [வணக்கம் வாழ்க தமிழ் அமைப்பினால் மீனவ குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கி வைப்பு](https://minnal24.com/%e0%ae%b5%e0%ae%a3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%95-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%aa/): மட்டக்களப்பு  பாலமீன்மடு  பகுதியில் வறுமை நிலையில் உள்ள சுமார் 30 குடும்பங்களுக்கு பணமும், 350 000  ரூபாய் பெறுமதியுள்ள உலர் உணவுப் பொருட்களும் இன்று வழங்கி வைக்கப்பட்டது நாட்டில் தற்பொழுது நிலவிவரும் விலை உயர்வு மற்றும் பொருள் தட்டுப்பாடு காரணமாக கடலுக்கு செல்லும் மீனவ குடும்பங்களுக்கு தொழில் இன்மை ஏற்பட்டுள்ளமையினை கருத்தில் கொண்டு, கனடாவில் வசிக்கும் நிஷான், மம்தா தம்பதியினரின் செல்வப் புதல்வன் கரிகாலனின் முதலாவது பிறந்த நாளை முன்னிட்டு நிதி உதவியுடன் உலர் உணவுப் பொருட்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டது. புலம்பெயர் நாடுகளில் உள்ள சமூக ஊடக செயற்பாட்டாளர்களான தமிழ் இளைஞர்களினால் உருவாக்கப்பட்டுள்ள ‘வணக்கம் வாழ்க தமிழ்’ அமைப்பின் ஊடாக இன்று சனிக்கிழமை காலை  10.30 மணி அளவில்  மீனவ குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது. வணக்கம் வாழ்க தமிழ் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அமல்ராஜ் மற்றும்  இலங்கைக்கான ஒருங்கிணைப்பாளர் பிரவீன்  ஆகியோரின் ஏற்பாட்டில் […] - [இராஜாங்க அமைச்சரின் வீட்டுக்கு பொலிஸ் பாதுகாப்பு](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f-2/): தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் கால்நடை அபிவிருந்தி இராஜாங்க அமைச்சர் எஸ்.அரவிந்த குமாரின் வீட்டுக்கு முன்பாக தோட்டப்பகுதி இளைஞர்கள் குழுவொன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து, பல பொலிஸ் நிலையங்களில் இருந்து பொலிஸ் அதிகாரிகள் லிந்துலை பொலிஸ் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு அமைச்சரின் வீட்டிற்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இராஜாங்க அமைச்சரை இராஜினாமா செய்யுமாறு கோரி தோட்டப்பகுதி இளைஞர்களினால் இவ்வாறு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. - [ஜனாதிபதியின் தவறான முடிவுகளே மக்களின் துன்பத்துக்குக் காரணம்](https://minnal24.com/%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b1%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5/): ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தவறான முடிவுகள் காரணமாகவே 22 மில்லியன் மக்கள் துன்பங்களை அனுபவித்து வருவதாக முன்னாள் ராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று நோயை ஒழிக்கும் பொறுப்பை ஏற்று செயற்பட்டு வந்த கோவிட் 19 தடுப்பு ராஜாங்க அமைச்சராக பணியாற்றிய சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தற்போது அரசாங்கத்தில் இருந்து விலகியுள்ள சுயாதீன அணியில் எதிர்க்கட்சி வரிசையில் இருந்து வருகிறார். சிங்கள பத்திரிகை ஒன்று பேட்டியளித்துள்ள சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே, தலைவலிக்கு தலையணை மாற்றுவது போல் புதிய அமைச்சரவையை நியமித்துள்ளதன் மூலம் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது. அனைத்து கட்சிகளும் இணைந்து இடைக்கால நிர்வாகத்தை உருவாக்கி இந்த பிரச்சினையை தீர்க்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். - [எரிபொருள் தாங்கிவூர்திக்கு தீ வைக்க முயன்ற இளைஞர் கைது](https://minnal24.com/%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b5%e0%af%82%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95/): ரம்புக்கனை சம்பவத்தில் எரிபொருள் தாங்கிவூர்திக்கு தீ வைக்க முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த இளைஞன் இன்று பிற்பகல் கேகாலை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். இதன்போது, சந்தேக நபரை 100,000 ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். எனினும். குறித்த இளைஞனுக்கு பிணை வாங்க எவரும் முன்வராத காரணத்தினால் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். - [பொலிஸார் முன்வைத்த கோரிக்கை கொழும்பு மேலதிக நீதவானால் நிராகரிப்பு](https://minnal24.com/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b8%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b5%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95/): ஜனாதிபதி   உள்ளிட்ட அரசாங்கத்திற்கு எதிராக காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளோர் வன்முறையில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் உத்தரவிடுமாறு பொலிஸார் முன்வைத்த கோரிக்கையை கொழும்பு மேலதிக நீதவான் எம்.ஏ.பிரபாகரன் இன்று சனிக்கிழமை நிராகரித்தார். நூற்றுக்கணக்கானவர்கள் சில நாட்களாக காலி முகத்திடலில் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளமையினால், பொதுமக்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதுடன், பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக எதிர்ப்பில் ஈடுபட்டுள்ள 16 பேரின் பெயர்களைக் குறிப்பிட்டு கொழும்பு – கோட்டை பொலிஸார் மன்றின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு எதிரானவர்கள் மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு இடையில் ஏதேனும் முறுகல் நிலை ஏற்படும் சாத்தியமுள்ளதாக மன்றில் சுட்டிக்காட்டிய கோட்டை பொலிஸார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் 16 பேருக்கும் ஏற்ற உத்தரவை பிறப்பிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். வன்முறையோ, பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படுத்தும் சம்பவங்களோ இடம்பெறுவதற்கு முன்னர், உத்தரவு பிறப்பிப்பதற்கான இயலுமை இல்லையென தெரிவித்த மேலதிக நீதவான், சட்டவிரோதமான நடவடிக்கைகள் ஏதேனும் இடம்பெற்றால், பொலிஸ் கட்டளைச் சட்டத்திற்கமைய […] - [தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு](https://minnal24.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%bf-6/): -யாழ் நிருபர்- யாழில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் ஸ்டான்லி வீதியில் உள்ள மக்கள் வங்கிக்கு அருகில் பின்புறத்தில் குறித்த இளைஞனின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்ற ரீதியில் மேலதிக விசாராணைகளை மேற்கொண்டு வருவதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர். - [தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்ட பல்கலைக்கழக மாணவி](https://minnal24.com/%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b1%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%af%86%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88/): -யாழ் நிருபர்- இன்று சனிக்கிழமை, யாழ்.பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலட்டி சந்தியில் உள்ள பல்கலைக்கழக மாணவர் விடுதியில் தங்கியிருந்து யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வந்த மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். பளை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய யுவதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சடலமானது பிரேத பரிசோதனைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். - [பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் உறுப்பினர்களுடன் சீன தூதுவர் கலந்துரையாடல்](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%af%e0%ae%be%e0%ae%a4%e0%af%80/): பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் ஒரு சில பாராளுமன்ற உறுப்பினர்களுடன், கொழும்பிலுள்ள சீன தூதுவர் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார். இதன்படி, சுயாதீனமாக செயற்படும் 7 உறுப்பினர்களை அவர் சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையின் தற்போதைய நிலைமை மற்றும் சீனாவினால் இலங்கைக்கு வழங்கப்படும் உதவிகள் குறித்து இதன்போது கலந்துரையாடல் நடத்தப்பட்டதாக இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவிக்கின்றது. இலங்கைக்கு தொடர்ச்சியாக உதவிகளை வழங்குமாறு, சுயாதீன உறுப்பினர்கள், சீன தூதுவரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர்களான அத்துரெலிய ரத்தன தேரர், வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில, தயாசிறி ஜயசேகர, அநுர பிரியதர்ஷன யாப்பா, வீரசுமன வீரசிங்க மற்றும் ஜகத் புஸ்பகுமார ஆகியோரே இவ்வாறு சீன தூதுவரை சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியுள்ளனர். - [எதிர்க்கட்சியின் எதிரப்புப் பேரணி பட்டியல்](https://minnal24.com/%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d/): ஐக்கிய மக்கள் சக்தி (SJB) கண்டியில் இருந்து கொழும்பு வரை ‘சமகி ஜன பாகமன’ என்ற பெயரில் ஏற்பாடு செய்துள்ள . எதிர்ப்பு பேரணி எதிர்வரும் ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி முதல் கண்டியில் இருந்து ஆரம்பமாகி ஏப்ரல் 30 ஆம் திகதி கொழும்பை வந்தடைய திட்டமிடப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்பாட்டுத் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ, இந்த எதிர்ப்புப் பேரணியானது பின்வரும் 5 கட்டங்களைக் கொண்டதாகத் தெரிவித்துள்ளார். முதல் கட்டம் – ஏப்ரல் 26 – கண்டி முதல் மாவனெல்லை வரை 2 ஆவது கட்டம் – ஏப்ரல் 27 – மாவனெல்லை முதல் கலிகமுவ வரை 3 ஆவது கட்டம் – ஏப்ரல் 28 கலிகமுவ முதல் தனோவிட்ட வரை 4 ஆவது நிலை – 29 ஏப்ரல் தனோவிட்ட முதல் யக்கல வரை 5 ஆவது கட்டம் – ஏப்ரல் 30 யக்கல […] - [செயல்முறைப் பரீட்சைகள் விரைவில்](https://minnal24.com/%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b0%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5/): 2021 உயர்தரப் பரீட்சையின் தகவல் தொழில்நுட்பப் பாடம் தொடர்பான செயல்முறைப் பரீட்சைகள் விரைவில் நடத்தப்படும் என பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாடகம் மற்றும் கலைப் பாடத்திற்கான செயல்முறைப் பரீட்சைகள் ஏப்ரல் 29ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்துள்ளார். - [விலை அதிகரிக்கப்பட்டாலும் எரிபொருள் கொடுப்பனவு அதிகரிக்கப்படாது](https://minnal24.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b2%e0%af%81/): எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டாலும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் எரிபொருள் கொடுப்பனவை அதிகரிக்காமல் இருப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. எரிபொருள் விலை பல தடவைகள் அதிகரிக்கப்பட்ட போதிலும் அந்த விலைக்கு ஏற்ப கொடுப்பனவு அதிகரிக்கப்படாது எனவும், முன்னைய எரிபொருள் விலையிலேயே பெப்ரவரி மாத கொடுப்பனவு வழங்கப்படும் என நாடாளுமன்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். - [கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு](https://minnal24.com/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b0%e0%af%8b%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e-15/): கொரோனா தொற்று உறுதியான மேலும் 40 பேர் இன்று சனிக்கிழமை  அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 663,131ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 4,060 பேர் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். - [சதொச ஊடாக 145 ரூபாவிற்கு அரிசி விற்பனை](https://minnal24.com/%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9a-%e0%ae%8a%e0%ae%9f%e0%ae%be%e0%ae%95-145-%e0%ae%b0%e0%af%82%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%bf/): இந்திய கடன் உதவி மூலம் இறக்குமதி செய்யப்படும் 40,000 மெற்றிக் தொன் அரிசியை இன்று முதல் நாடளாவிய ரீதியில் சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக விற்பனை செய்ய வர்த்தக அமைச்சு திட்டமிட்டுள்ளது. அதன்படி, 1கிலோ வெள்ளைப்பச்சை அரிசி 145 ரூபாவிற்கும் 1கிலோ நாட்டு அரிசி 145 ரூபாவிற்கும் 1கிலோ சம்பா அரிசி 175 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படவுள்ளது - [தினேஸ் குணவர்த்தனவை பிரதமராக நியமிக்க யோசனை](https://minnal24.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%87%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%b5%e0%af%88-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4/): ஆளுங்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினராகவும் சபை முதல்வராகவும் தினேஸ் குணவர்தன செயற்பட்டு வரும் தினேஸ் குணவர்த்தனவை பிரதமராக நியமிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியில் இருந்து விலகினால், அப்பதவிக்கு தினேஸ் குணவர்தனவை நியமிப்பதற்கு யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்தோடு, தினேஸ் குணவர்தன புதிய பிரதமராக பதவியேற்றால் அவருக்கு வேறு எந்த அமைச்சுப் பதவியையும் வழங்காதிருக்கவும் பேச்சுவாரத்தைகள் இடம்பெற்றுள்ளதாக அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.   - [திருமண மண்டப கட்டணம் 40 சதவீதத்தால் அதிகரிப்பு](https://minnal24.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%aa-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-40-%e0%ae%9a%e0%ae%a4%e0%ae%b5/): திருமண மண்டப கட்டணத்தை 40 சதவீதத்தால் அதிகரிக்க அகில இலங்கை விருந்து மண்டபம் மற்றும் உணவு வழங்கல் சங்கம் தீர்மானித்துள்ளது. சங்கத்தின் தலைவர் அதுல களுஆராச்சி இதனைத் தெரிவித்துள்ளார். இன்றைக்குப் பிறகு பெறப்படும் முன்பதிவுகளுக்கு குறைந்தபட்சம் 40 சதவீத விலை உயர்வு தேவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். - [இராஜாங்க அமைச்சரின் உருவ படத்திற்கு செருப்பு மாலை அணிவிப்பு ஆர்ப்பாட்டம்](https://minnal24.com/%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5/): -பதுளை நிருபர்- பதுளை நகரில் ஜனாதிபதியை பதவி விலகுமாறு கூறியும் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்தினை கண்டித்தும் பதுளை நகர வர்த்தகர்களினால் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று இடம்பெற்றது இவ் ஆர்ப்பாட்டம் பதுளை மாகாண சபைக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டு பதாதைகளை ஏந்தியும் கோஷங்களை எழுப்பியவாறும் நடைபவணியாக பதுளை வைத்தியசாலை வரை சென்று மீண்டும் பதுளை நகர் வரை வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பதுளை நகரில் பாரிய வாகன நெரிசல் காணப்பட்டது. மேலும், பதுளை மாகாண சபைக்கு முன்பாக அண்மையில் அமைச்சு பதவியை பொறுப்பேற்ற ராஜாங்க அமைச்சர் அரவிந்த குமாரின் உருவ படத்திற்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. - [யாழில் மோட்டார் குண்டுகள் கண்டுபிடிப்பு](https://minnal24.com/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3/): -யாழ் நிருபர்- மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லுண்டாய் குடியேற்ற திட்டம் பகுதியில் சக்தி வாய்ந்த மூன்று மோட்டார் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக மானிப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. குறித்த குண்டுகளை மீட்பதற்கான நடவடிக்கைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். - [பளையில் சட்டவிரோத மண் அகழ்வோருக்கு பொது அமைப்புக்கள் விடுத்துள்ள வேண்டுகோள்](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%b3%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8b%e0%ae%a4-%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%95/): -கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி மாவட்டத்திற்குட்பட்ட பளை பிரதேசத்தில் பல வருடங்களாகவே சட்டவிரோத மண் அகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. இது தொடர்பாக பல்வேறு பொது மக்களால் பல்வேறு ஆர்ப்பாட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன, இருப்பினும் எந்த பயனும் இல்லாது தொடர்ச்சியாக சட்டவிரோத மண் அகழ்வோரால் மண் திருட்டு இடம்பெற்று கொண்டு தான் இருக்கின்றது. சட்டவிரோத மண் அகழ்வினால் சில பாடசாலை மாணவர்கள் கல்வி நிலைகளை இடைநிறுத்தி சட்ட விரோத மண் அகழ்வுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இளைஞர்கள் மதுபோதைகளுக்கு அடிமையாகி தமது எதிர்காலத்தை கேள்வி குறியாக்கியுள்ளனர். பளை பிரதேசத்தில் உள்ள வேம்போடுகேணி கிராமத்தை சூழவுள்ள நான்கு கிராமங்களிலும் குறித்த சட்டவிரோத மண் அகழ்வுகள் இடம்பெற்று வருவதாகவும், இதனால் கனரக வாகனங்கள் இந்த வீதிகள் ஊடாக சென்று வீதிகள் முற்றாக பழுதடைந்துள்ளதாகவும் கவலை தெரிவிக்கின்றனர். பாடசாலை மாணவர்கள் உட்பட நோயாளர்கள் என பலர் பாதிப்படைந்துள்ளனர் எனவும் குறித்த வீதியும் இயற்கை வளத்தையும் காப்பாற்ற வேண்டியது தமது கடமை எனவும் […] - [எந்த நேரத்திலும் செயலிழக்கும் அபாயத்தில் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம்](https://minnal24.com/%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95/): நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையம் எந்த நேரத்திலும் செயலிழக்கும் அபாயத்தில் உள்ளதென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மின் நெருக்கடி காரணமாக நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையம் தொடர்ச்சியாக மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டியுள்ளமையால் சுமார் 15 அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இதனால் மின் உற்பத்தி நிலையம் எந்த நேரத்திலும் செயலிழக்கும் அபாயம் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த மின் உற்பத்தி நிலையங்கள் மூன்று 300 மெகாவோட் இயந்திரங்கள் மூலம் தேசிய கட்டமைப்பிற்கு சுமார் 900 மெகாவோட்களை சேர்க்கின்றன. ஒவ்வொரு அமைப்பிலிருந்தும் அவ்வப்போது அகற்றி பராமரிப்பது வழக்கமான நடைமுறை என்று இலங்கை மின்சார சபை பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர். நாட்டில் நிலவும் கடும் வறட்சி காரணமாக நீர்மின் உற்பத்தி குறைந்தளவிலேயே குறைந்துள்ளதுடன், அனல் மின் நிலையங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் அன்றாட மின் தேவைக்கு போதுமானதாக இல்லை. இதனால் நிலக்கரி அனல்மின் நிலையத்தின் மூலம் உற்பத்தியாகும் மெகாவோட் மின்சாரம் முழுவதையும் தேசிய […] - [ஈழத்துக் கவிதை இலக்கிய வரலாற்றில் மரியசேவியர் அடிகளின் பங்களிப்பு -ஆய்வரங்கம் ](https://minnal24.com/%e0%ae%88%e0%ae%b4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5/): திருமறைக் கலாமன்றத்தின் ஸ்தாபக இயக்குநர் அமரர்  அருட்கலாநிதி நீ.மரிய சேவியர் அடிகளாரின் பன்முகப்படுத்தப்பட்ட பணிகளை ஆவணப்படுத்தும் முகமாக  ‘கலைத்தூது நீ.மரிய சேவியர் அடிகள்: ஒரு பன்முகப் பார்வை’ என்னும் தலைப்பில்  மெய்நிகர் வழியில் சூம் செயலிக்கூடாக திருமறைக் கலாமன்றம் மாதந்தோறும் நடத்தி வருகின்ற ஆய்வரங்கத் தொடரின் பத்தாவது நிகழ்வு  ஞாயிற்றுக்கிழமை(24.04.2022)  மாலை 7.00 மணிக்கு (இலங்கை நேரம்)இடம்பெறவுள்ளது. யாழ்.பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் அ.சண்முகதாஸ்  தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் ‘ஈழத்துக் கவிதை இலக்கிய வரலாற்றில் மரியசேவியர் அடிகளின் பங்களிப்பு’ என்னும் தலைப்பில் யாழ்.பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலையின்  ஆசிரியரும்,கலை இலக்கிய செயற்பாட்டாளருமான திரு.ந.குகபரன் அவர்கள் ஆய்வினை வழங்கவுள்ளார். ஆர்வமுள்ள அனைவரும் சூம் செயலி இலக்கம்  7893644809,கடவுச் சொல் cpa என்பதற்கூடாக இந்நிகழ்வில் இணைந்துகொள்ள முடியும். - [சீமெந்து விலை 600 ரூபாவால் அதிகரிக்கும்?](https://minnal24.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%ae%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-600-%e0%ae%b0%e0%af%82%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85/): எரிபொருட்கள் விலையை கருத்தில் கொண்டு சீமெந்தின் விலையை அதிகரிக்க சீமெந்து நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. இதன்படி, 50 கிலோ கொண்ட சீமெந்து மூடை ஒன்றின் விலையை 500 முதல் 600 ரூபா வரை உயர்த்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போது சீமெந்து மூடையொன்றின் விலை 2300 – 2350 ரூபாவாக விற்கப்படுகின்றமைக் குறிப்பிடத்தக்கது. - ['ஊர் பக்கம் வந்துவிட வேண்டாம்' – கண்டியில் சுவரொட்டி](https://minnal24.com/%e0%ae%8a%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%8d/): ‘நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்காமல் ஊர் பக்கம் வந்துவிட வேண்டாம்.’ என கண்டி மாவட்டத்தில் உள்ள ஆளும் மற்றும் எதிரணி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு, கண்டி மாவட்ட மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பிட்ட வாசகங்களைக் கொண்ட சுவரொட்டிகளையும் வீதியோர சுவர்கள் மற்றும் மதில்களில் ஒட்டி எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். - [உலகளவில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதாக அறிவிப்பு](https://minnal24.com/%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%b3%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b0%e0%af%8b%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/): உலகளவில் கொரோனாபாதிப்பு குறைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலகளவில் ஏப்ரல் 11 முதல் 17ஆம் திகதி வரையிலான ஒரு வார கால கொரோனா நிலைவரம் குறித்த அறிக்கையை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் ஒரு வார காலத்தில் 55 லட்சத்து 90 ஆயிரம் பேரை கொரோனா பாதித்துள்ளதாகவும் இது முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் 17.24 சதவீதம் வீழ்ச்சி எனவும் கூறப்பட்டுள்ளது. கொரோனாவால் ஒரு வார காலத்தில் 18 ஆயிரத்து 215 பேர் பலியாகி இருப்பதாகவும் இது முந்தைய வாரத்தைக்காட்டிலும் 21 சத வீதம் குறைவு எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. எல்லாப் பிராந்தியங்களிலும் கொரோனா தொற்று குறைந்துள்ளது. பல நாடுகள் தங்கள் கொரோனா பரிசோதனை உத்திகளை படிப் படியாக மாற்றுவதால் இந்த போக்கு எச்சரிக்கையுடன் பார்க்கப்பட வேண்டும் என்றும் எச்சரித்துள்ளது. - [திங்கட்கிழமை அதிபர்- ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்](https://minnal24.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%ae%e0%af%88-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%86%e0%ae%9a%e0%ae%bf/): பாடசாலை மாணவர்கள் மற்றும் அதிபர், ஆசிரியர்களின் போக்குவரத்து பிரச்சினைக்கு சரியான தீர்மானத்தை மேற்கொண்டு தீர்வை வழங்கக்கோரி அனைத்து அதிபர்கள், ஆசிரியர்களும் மற்றும் ஆசிரி யர் ஆலோசகர் அனைவரும் எதிர்வரும் 25ஆம் திகதி திங்கட்கிழமை வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். தற்போதைய சூழ்நிலையில் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டிருப்பதுடன் எரிபொருள் தட்டுப்பாடு மற் றும் எரிபொருள் விலையேற்றம் காரணமாக மாணவர்கள் மற்றும் அதிபர் ஆசிரியர்கள் பாடசாலைக்குச் செல்லுவதற்கு மிகவும் கஷ்டப்படும் நிலையும் காணப்படுகின்றது. இப்பிரச்சினைக்கு தீர்வாக மாணவர்களை அவர்களின் வீட்டுக்கு அருகாமையில் உள்ள பாடசாலைக்கு இணைத்துக் கொள்வதோடு, ஆசிரியர்களையும் அவர்களின் வீட்டுக்கு அருகாமையில் அமைந்துள்ள பாடசாலைக்கு தற்காலிக இணைப்பு வழங்குமாறும் அல்லது வேறு தகுந்த நடவடிக்கை எடுக்குமாறும் கல்வி அமைச்சின் செயலாளருக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. - [பணவீக்கம் 21.5 சதவீதமாக அதிகரிப்பு](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%b5%e0%af%80%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-21-5-%e0%ae%9a%e0%ae%a4%e0%ae%b5%e0%af%80%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95/): இலங்கையில் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பண வீக்கம் 21.5 சதவீதமாக அதிகரித்துள்ளதாக புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய நுகர்வோர் விலை சுட்டெண் தொடர்பான அறிக் கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச பணவீக்க சுட்டெண்ணுக்கு அமைய இலங் கையின் பணவீக்கம் 20 சத வீதத்தை தாண்டி இருப்பது இதுவே முதல் முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் இலங்கையின் பணவீக்கமானது 18.7 சத வீதமாக காணப்பட்டுள்ளது. - [உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட தேரர் வைத்தியசாலையில்](https://minnal24.com/%e0%ae%89%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%88%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f/): காலிமுகத்திடலில் இடம்பெற்றுவரும் போராட்டத்திற்கு ஆதரவாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட வண. தெரிபெஹே சிறிதம்ம தேரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் அம்பியூலன்ஸ் வண்டி மூலம் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிய வருகிறது - [பாடப் புத்தகங்களை அச்சிடும் பணி பூர்த்தி](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%95%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%85%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%9f/): பாடசாலைகளுக்குத் தேவையான பாடப் புத்தகங்களை அச்சிடும் பணி தற்போது பூரணமடைந்துள்ளதாக அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். பாடநூல்களை பாடசாலைகளுக்கு பகிர்ந்தளிக்கும் வேலைத்திட்டமும் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. அடுத்த மாதம் நடுப்பகுதியின் போது மின்சார நெருக்கடியை இயலுமான அளவு தீர்க்க முடியுமென்றும் அமைச்சர் ரமேஷ் பத்திரன நம்பிக்கை தெரிவித்தார். அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத் தராதர பத்திர சாதாரண பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் மின்சார நெருக்கடியினால் பாதிப்படைவார்கள் என்று எதிர்க்கட்சி பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டியது. இதற்கு பதிலளித்த அமைச்சர் அடுத்த மாதத்தை அண்மிக்கும் போது தினமும் இரண்டு மணி நேரம் மாத்திரம் மின் துண்டிப்பு இடம் பெறலாமென்றும் கூறினார். - [உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட குழு வத்திக்கான் பயணம்](https://minnal24.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%9e%e0%ae%be%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%a4-23/): பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட 30 பேர் நேற்று வெள்ளிக்கிழமை காலை வத்திக்கான் பயணமாகினர். பரிசுத்த பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ்ஸின் அழைப்பின் பேரில் பேராயருடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட 30 பேர் உள்ளிட்ட 60 பேரடங்கிய குழுவினர் வத்திக்கான் புறப்பட்டதாக கொழும்பு பேராயர் இல்ல தொடர்பாடல் பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் பெர்னாண்டோ தெரிவித்தார். கடந்த 2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் 269 பேர் உயிரிழந்ததுடன் 500 க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். இத்தாக்குதல்கள் நடைபெற்று கடந்த 21 ஆம் திகதியுடன் 03 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளதுடன் தாக்குதல்களுக்கு பொறுப்பானவர்களை சட்டத்தின் முன் நிறுத்துமாறு கோரி பல்வேறு போராட்டங்கள் நாட்டில் பல பகுதிகளிலும் தொடர்ந்து நடைபெற்றன.   - [84 ஆண்டுகள் ஒரே நிறுவனத்தில் பணியாற்றி கின்னஸ் சாதனை](https://minnal24.com/84-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%87-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/): பிரேசிலைச் சேர்ந்த முதியவர் ஒருவர் 84 ஆண்டுகள் ஒரே நிறுவனத்தில் பணியாற்றி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். பிரேசிலின் பிரஸ்க் நகரை சேர்ந்த 100 வயதான வோல்டர் ஆர்த்மான், தனது 16 வயதில் ரெனக்ஸ் வியூ என்ற புடவை தொழிற்சாலையில் சாதாரண ஊழியராக வேலைக்குச் சேர்ந்த நிலையில் தற்போது அதே நிறுவனத்தின் வியாபார பிரிவின் முகாமையாளராக உள்ளார். மெல்ல மெல்ல பணி உயர்வு, அத்துடன் கூடிய சம்பள உயர்வால் நிறுவனத்தை விட்டு வெளியேற மனமில்லாத அவர், 84 ஆண்டுகள் அங்கேயே பணியாற்றி வருகிறார். ‘வேலையை விரும்பிச் செய்ய வேண்டும். நான் விருப்பத்துடனும் உத்வேகத்துடனுமே வேலையை ஆரம்பித்தேன்’ என்று ஆர்த்மான் குறிப்பிட்டார். - [நீர் மட்டம் அதிகரிக்கும் வரை மின்வெட்டு தொடரும்](https://minnal24.com/%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/): நாட்டில் தற்போது பெய்து வரும் மழையினால் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் அதிகபட்ச கொள்ளளவை எட்டும் வரை மின்சார விநியோகத்தை அவ்வப்போது நிறுத்த வேண்டியிருக்குமென இலங்கை மின்சார சபை குறிப்பிட்டுள்ளது. தற்போது 25 சத வீத மின்சாரம் நீர் மின் நிலையங்களிலிருந்து உற்பத்தி செய்யப்படுவதாகவும், மேலும், நுரைச்சோலை அனல்மின் நிலையத்திலிருந்து 900 மெகாவோட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்பில் சேர்க்கப்படுமெனவும் இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் டி.சி.ஆர். அபேசேகர தெரிவித்துள்ளார். இதேவேளை, 03 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின் வெட்டை அமுல்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. - [மீண்டும் அதிகரிக்கின்றது?](https://minnal24.com/%e0%ae%ae%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%a4/): அத்தியாவசியப் பொருட்களின் விலை பாரியளவில் அதிகரித்துள்ள இச்சந்தர்ப்பத்தில் இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அடுத்த வாரம் முதல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி மற்றும் உலக சந்தையில் பால் மாவின் விலை அதிகரிப்புக்கேற்ப விலைகளும் அதிகரிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலர் நெருக்கடி காரணமாக சில இறக்குமதியாளர்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இதனையடுத்து, அடுத்த வாரம் முதல் நாட்டுக்கு வரவிருக்கும் புதிய கையிருப்புக்கள் தொடர்பில் விலை அதிகரிப்பு குறித்து முடிவு செய்யப்படுமென தெரிவித்துள்ளனர். - [கட்டாரில் 20 இலங்கையர் விடுதலை](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-20-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f/): கட்டாரில் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த 20 இலங்கையர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. புனித ரமழானை முன்னிட்டு சிறைவாசம் அனுபவித்த 20 இலங்கையர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக பணியகம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, அபராத தொகை செலுத்தலிலிருந்தும் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. - [பழிவாங்கும் நேரம் இதுவல்ல - அலி சப்ரி](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d/): ஜனாதிபதியுடன் பிரச்சினைகள் இருக்கலாம், ஆனால், அவற்றை காட்ட வேண்டிய நேரம் இதுவல்ல, இது பழிவாங்கும் நேரம் இல்லை. இப்போது நாம் அனைவரும் ஒன்றிணைந்து பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ள நமது நாட்டை மீட்டெடுக்க போராடுவோம் என்று நீதியமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டார். நாம் மிகவும் நெருக்கடியான நிலைமையில் இருக்கின்றோம். இந்த தருணத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து நமது நாட்டை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டெடுக்க வேண்டியது அவசியம். நிகழ்நிலை ஊடாக ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே நிதியமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து வெளியிடுகையில், ‘நாங்கள் பயணிக்கும் கப்பல் திடீரென நடுக்கடலில் வைத்து புயலில் மாட்டிக்கொண்டுள்ளது. நீங்கள் அந்த கப்பலின் கேப்டனுடன் கோபம் என்றால் உடனே அந்த கப்பலை மூழ்கடிப்பதற்கு முயற்சிக்க வேண்டாம். அவ்வாறு செய்தால் நாமும் நீரில் மூழ்கி இறந்துவிடுவோம். கப்பலில் பயணிக்கும் அனைவரையும் ஒன்றிணைத்து மெதுவாக அந்த கப்பலை பாதுகாப்பாக கரைக்கு கொண்டுவர வேண்டும். அதன் பிறகே கேப்டனுடனான பிரச்சினைக்கு தீர்வு […] - [காலிமுகத்திடல் போராட்டக் களத்தில் மஹிந்த தேசப்பிரிய](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%95/): காலிமுகத்திடலில் அரசுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும்   போராட்டத்தில் நேற்றைய தினமான 14 ஆவது நாள்   போராட்டக் களத்தில் முன்னாள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய பங்கேற்றுள்ளார். ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஆதரவு வழங்கும் வகையில் அவரும் அரசுக்கு எதிராக தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தார்.   - [லேடி றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் அவசர அறிவிப்பு](https://minnal24.com/%e0%ae%b2%e0%af%87%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%9c%e0%af%8d%e0%ae%b5%e0%af%87-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%af%88%e0%ae%a4%e0%af%8d/): இலங்கையின் மிகப்பெரிய சிறுவர் வைத்தியசாலையான லேடி றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் தற்போது 20 வகையான மருந்து வசதிகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் இந்நிலையில் நலன்  விரும்பிகளிடமிருந்து நன்கொடைகளை கோருகின்றது. இது தொடர்பில் வைத்தியசாலை வெளியிட்டுள்ள கோரிக்கை கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையின் மிகப்பெரிய மூன்றாம் நிலை பராமரிப்பு மருத்துவமனை இதுவாகும். நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள குழந்தைகளுக்கு பிரத்தியேகமாக சிகிச்சை அளித்து நிர்வகிக்கிறது. இது பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை ஆண்டுதோறும் நிர்வகிக்கிறது மற்றும் ஆயிரக்கணக்கான குழந்தைகளைக் கையாளுகிறது. உங்களால் முடிந்தால் நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம். லேடி ரிட்ஜ்வே மருத்துவமனைக்கு தொடர்ச்சியான நோயாளிகளின் பராமரிப்பு சேவைகளுக்கு நன்கொடையாக பின்வரும் பொருட்களை வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.   - [இன்றைய மின்வெட்டு விபரம்](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%88%e0%ae%af-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b5%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/): இன்று சனிக்கிழமை நாடளாவிய ரீதியில் 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்கள் மின்வெட்டு அமுலாகவுள்ளது. அதற்கமைய, நாளைய தினம்(23) A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரையான காலப்பகுதியினுள் சுழற்சி முறையில் 2 மணிநேரம் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது. அவ்வாறே, குறித்த வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு மாலை 5 மணிமுதல் இரவு 9 மணிவரையான காலப்பகுதியினுள் 1 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டினை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. - [மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி உதவி](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%b5%e0%af%81-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d/): மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக இலங்கைக்கு 21.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை உடனடியாக வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) இணங்கியுள்ளது. நிகழ்நிலை தொழில்நுட்பம் ஊடாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது நிதியமைச்சர் அலி சப்ரி இதனைத் தெரிவித்துள்ளார். - [ஊடகத்துறை அமைச்சர் இராஜினாமா?](https://minnal24.com/%e0%ae%8a%e0%ae%9f%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b1%e0%af%88-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%bf/): நிலையான அரசியல் ஸ்திரத்தன்மை ஒன்றை ஏற்படுத்த இடைக்கால அரசொன்றை அமைக்கும் செயற்பாடுகளுக்கு இடமளிக்கும் வகையில் பதவி விலகும் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் ஒப்படைத்ததாகவும் ,ஜனாதிபதி அதனை ஏற்றுக்கொள்ளவில்லையெனவும் ஊடகத்துறை அமைச்சர் நாலக்க கொடஹேவா தெரிவித்துள்ளார். - [கணவரை பராமரிப்பதற்காக பதவி துறந்த துணை பிரதமர்](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b0%e0%af%88-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%95-%e0%ae%aa%e0%ae%a4/): புற்றுநோயால் அவதியுறும் கணவரை அருகிலிருந்து கவனித்துக் கொள்வதற்காக பெல்ஜியம் துணை பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான சோஃபி வில்மஸ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். 2019 முதல் 2020-ஆம் ஆண்டு வரை பிரதமராகப் பொறுப்பு வகித்த வில்மஸ், அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த கிறிஸ்டோஃபா ஸ்டோனை 2009-ஆம் ஆண்டு மணந்தார். தற்போது ஸ்டோனுக்கு மூளைப் புற்றுநோய் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து தனது பதவியை இராஜினமா செய்வதாக வில்மஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: எனது கணவர் மூளைப் புற்றுநோயால் அவதியுறுகிறார். பொறுப்பு மிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் பதவியைத் தொடர்ந்தால்; அவரது அருகிலிருந்து கவனித்துக்கொள்ளவும் தேவைப்படும் நேரத்தில் அவருக்கு ஆறுதல் அளிக்கவும் எனக்கு நேரமிருக்காது. எனவே, எனது பதவியிலிருந்து தற்காலிகமாக விலகுகிறேன் என்று சோஃபி வில்மஸ் தெரிவித்துள்ளார். அவரது இராஜினாமாவை ஏற்றுக்கொண்டுள்ள பிரதமர் அலெக்ஸாண்டா் டிக்ரூ, வில்மஸின் முடிவு அவா மீது மிகப் பெரிய மரியாதையை ஏற்படுத்துவதாகப் பாராட்டியுள்ளாh். - [ஆர்ப்பாட்டத்தின்போது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள அறிவுறுத்தல் வழங்கவில்லை - பொலிஸ்மா அதிபர்](https://minnal24.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%af%81/): ஆர்ப்பாட்டத்தின் போது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள தான் எந்தவொரு அறிவுறுத்தலும் வழங்கவில்லை, என பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார். ரம்புக்கனை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட சில சிரேஷ்ட அதிகாரிகள் இன்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். அதற்கமைய, மேற்படி சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள மூவரடங்கிய குழுவின் முன்னிலையில் குறித்த அதிகாரிகள் இன்று காலை முன்னிலையாகினர். அதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். - [லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்பட மாட்டாது](https://minnal24.com/%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b0%e0%af%8b-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf-2/): லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிப்பை அரசாங்கம் நிராகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று நள்ளிரவு முதல் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. முன்னதாக, இன்று நள்ளிரவு முதல் 12.5 கிலோ எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் விலை 5,175 ரூபாவாக அதிகரிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்திருந்தது. இந்நிலையில், அரசாங்கம் இவ்வாறான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. - [70 அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு](https://minnal24.com/70-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0/): சுமார் 70 அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவித்து, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு, தனியார் வைத்தியசாலைகள் மற்றும் மருத்துவமனைகளின் கூட்டமைப்பு கடிதமொன்றை அனுப்பியுள்ளது இவ்வாறு பற்றாக்குறையாக காணப்படும் மருந்து பொருட்களை தனியார் துறையினர் பெற்றுக்கொள்ள உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு குறித்த கடிதத்தில் கோரப்பட்டுள்ளது. - [லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை மீண்டும் அதிகரிப்பு](https://minnal24.com/%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b0%e0%af%8b-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf-2/): லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை மீண்டும் இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளது. அதன்படி, லிட்ரோ 12.5 கிலோ எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் புதிய விலை 5,175 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. - [விபத்தில் தந்தை மற்றும் இரு பிள்ளைகள் பலி](https://minnal24.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/): -யாழ் நிருபர்- யாழ். கொடிகாமம் மிருசுவில் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் தந்தை மற்றும் இரு பிள்ளைகள் உயிரிழந்துள்ளனர். பாதுகாப்பற்ற புகைரத கடவை ஊடாக வீதியை கடக்க முயன்றபோதே இந்த விபத்து இடம்பெற்றிருக்கின்றது. விபத்தில் சிக்கிய பட்டா வாகனத்தில் பயணித்த தந்தையும், இரு பிள்ளைகளும் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. உயிரிழந்தவர்கள் கொடிகாமம் – தவசிகுளத்தை சேர்ந்தவர்கள் என தொிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவத்தை தொடர்ந்து பாதுகாப்பான புகைரத கடவை அமைக்கும்படி கேட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டிய மக்கள், புகைரத பாதையை மறித்து போராட்டம் நடத்தினர். - [வடமராட்சியில் எரிபொருளிற்காக இன்றும் நீண்ட வரிசை](https://minnal24.com/%e0%ae%b5%e0%ae%9f%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%ae%bf/): -கிளிநொச்சி நிருபர்- வடமராட்சி மந்திகை மற்றும் கிராமக்கோடு ஓராங்கட்டை கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் எரிபொருள் பெற்றுக் கொள்வதற்கு மக்கள் தமது பெற்றோல் வாகனங்களுடன் இன்றும் மிக நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். நேற்று ஓராங்கட்டை கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் திடீரென எரிபொருள் நிரப்பு இயந்திரம் செயலிழந்தமையால் பிற்பகல் 6:30 மணிமுதல் எரிபொருள் நிரப்புவது நிறுத்தப்பட்டதுடன் இன்று காலை முதல் மீண்டும் விநியோகிக்கபடுகிறது. மந்திகை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இரவு எட்டுமணிமுதல் இதுவரை எரிபொருள் விநியோகம் இடம் பெறுகிறது. எரிபொருள் பெற்றுக் கொள்வதற்காக மக்கள் நூற்றுக்கணக்கில் கொழுத்தும் வெயிலிலும் மிக நீண்ட வரிச காத்திருக்கின்றனர். - [உருக்குலைந்த நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்பு](https://minnal24.com/%e0%ae%89%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b2%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%86-2/): -பதுளை நிருபர்- லுணுகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லுணுகலை நகரில் உள்ள பாழடைந்த கட்டிடத்தில் இருந்து உருக்குலைந்த நிலையில் சுமார் 56 வயது மதிக்கத்தக்க ஆணொருவரின் சடலம் லுணுகலை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. குறித்த நபர் லுணுகலை நகரில் பாரம் தூக்கும் தொழிலில் ஈடுபடும் நபராக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். மரணத்துக்கான காரணம் கண்டறியாத போதிலும் விசாரணைகளை லுணுகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். - [ரயிலுடன் லொறி மோதி விபத்து](https://minnal24.com/%e0%ae%b0%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b2%e0%af%8a%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%8b%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d/): புகையிர கடவையை கடக்க முயன்ற கூலர் லொறி ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இன்று காலை 8.00 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த குளிரூட்டிய ரயில் அலவ்வ ரயில் நிலையத்துக்கு அண்மையில் உள்ள புகையிரத கடவையை கடக்க முற்பட்ட கூலர் லொறியை மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் லொறியின் சாரதி படுகாயமடைந்து அலவ்வ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். - [ஹெலிகொப்டராக மாறிய கார்](https://minnal24.com/%e0%ae%b9%e0%af%86%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%af%8a%e0%ae%aa%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d/): இந்தியாவின், பீகாரில் வசிக்கும் ஹகரியாஸ் திவாகர் குமார் என்பவர் தனது காரை ஹெலிகொப்டர் போன்ற வடிவத்தில் மாற்றியமைத்துள்ளார். அவரைப் பொறுத்தவரை, இந்த மாற்றத்திற்கு அவருக்கு சுமார் ரூ. 3.5 லட்சம். செலவாகியுள்ளாதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பான ஒரு காணொளியை யூடியூப்பில் பார்த்தபோது தனக்கு இந்த யோசனை தோன்றியதாக அவர் கூறியுள்ளார். திருமண வைபவ நிகழ்வுகளின் போது இந்த ஹெலிகாப்டருக்கான ஓடர்களை மேற்கொள்வதாகவும் அவர் கூறினார். - [இலங்கையில் இருந்து மேலும் 18 பேர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம்](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%af%87%e0%ae%b2%e0%af%81-2/): -மன்னார் நிருபர்- இலங்கையில் இருந்து மேலும் 4 குடும்பத்தைச் சேர்ந்த 17 நபர்களும் தனி நபர் ஒருவர் உள்ளடங்களாக 18 பேர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். மன்னாரைச் சேர்ந்த 3 குடும்பங்களைச் சேர்ந்த 13 பேரூம், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம் 4 நபர்கள், தனி நபர் ஒருவரும் உள்ளடங்குகின்றனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் இலங்கையில் வசிக்கும் மக்கள் உணவு பொருட்கள் வாங்க முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதன் காரணமாக கடந்த புதன்கிழமை வரை 42 இலங்கை தமிழர்கள் இலங்கையில் இருந்து புறப்பட்டு தனுஷ்கோடி வழியாக தமிழகத்திற்கு அகதிகளாக வந்து முகாம்களில் தங்கியுள்ள நிலையில் தற்போது நான்கு மாத கர்ப்பிணி, ஒன்றரை வயது குழந்தை உட்பட 4 குடும்பத்தைச் சேர்ந்த மேலும் 18 இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடியில் தஞ்சமடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் […] - [பால் உற்பத்தியாளர்கள் பாலின் விலையை அதிகரிக்க கோரியுள்ளனர்](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be/): -கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி மாவட்டத்தில் பால் உற்பத்தியாளர்கள் விலை அதிகரிக்காமையால் பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர். கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் தமது பாலிற்கான விலையை அதிகரித்து தருமாறு அரசாங்கத்திடம் கேட்டு நிற்கின்றனர். நாட்டில் ஏற்பட்டுள்ள விலை ஏற்றங்களினால் நாட்டு மக்கள் அனைவரும் பாரிய நெருக்கடிகளை சந்தித்து வருகின்ற நிலையில் பாலின் விலையை மாத்திரம் அதிகரிக்காமல் இருப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளனர். அத்தியாவசிய பொருட்களின் விலையை நாளுக்கு நாள் விலை ஏற்றி பால் உற்பத்தியை மாத்திரம் நம்பி இருக்கும் எமக்கு வாழ்வாதாரத்தை கொண்டு செல்ல மிக சிரமமாக உள்ளது எனவும் எமது பாலுக்கான விலையையும் அதிகரித்து தருமாறு கேட்டு நிற்கின்றனர். - [கீதா கோபிநாத் - அலி சப்ரி சந்திப்பு](https://minnal24.com/%e0%ae%95%e0%af%80%e0%ae%a4%e0%ae%be-%e0%ae%95%e0%af%8b%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%aa%e0%af%8d%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%9a/): சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதலாவது பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத், ​வொஷிங்டன் சென்றுள்ள இலங்கை பிரதிநிதி   சந்தித்தார். இதன்போது, அவர் நிதியமைச்சர் அலி சப்ரி மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவுடன் கலந்துரையாடியுள்ளார். இலங்கை எதிர்கொள்ளும் கடினமான சவால்கள் மற்றும் தற்போதைய தேவைகள் குறித்து இரு தரப்பினரும் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   - [இலங்கை இந்தியாவின் மாநிலமா?](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2/): இலங்கை மக்கள் விரும்பினால் இந்தியா – இலங்கை தனது ஒரு மாநிலம் என அறிவிக்க தயார் என இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார் என வெளியாகியுள்ள டுவிட்டர் செய்தி உண்மைக்கு புறம்பானது என தெரிவித்துள்ள இந்தியா அதனை கடுமையாக சாடியுள்ளது. இலங்கை மக்கள் இணங்கினால் இலங்கையை இந்தியா தனது இன்னுமொரு மாநிலமாக அறிவிக்க தயார் அதற்கு பதிலாக இந்தியா இலங்கையில் தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு உட்பட ஏனைய பிரச்சினைகளிற்கு தீர்வை காணும் நீண்டகால விடயங்களிற்கும் உதவலாம் என இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார் என குறிப்பிடும் டுவிட்டர் செய்தியொன்று மக்களிடையே பரப்பப்பட்டு வருகின்றது. இந்த டுவிட்டர் செய்தி போலியானது என தனது டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ள இந்திய தூதரகம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் டுவிட்டர் கணக்கிற்குரியதென காண்பிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட போலியான படம் தொடர்பாக நாம் அறிந்துள்ளோம். இது முழுக்க முழுக்க போலியானதும் புனையப்பட்டதுமாகும். தீய எண்ணத்துடனான […] - [மீண்டும் ஆரம்பம்](https://minnal24.com/%e0%ae%ae%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d/): யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் அனைத்தும் எதிர்வரும் 25 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாகப் பதிவாளர் அறிவித்துள்ளார். - [திருத்தங்கள் அடங்கிய சட்டமூலம் இன்று கையளிப்பு](https://minnal24.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d/): 19ஆம் திருத்தத்தினை வலுப்படுத்தும் திருத்தங்கள் அடங்கிய சட்டமூலம் ஒன்றை சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று வெள்ளிக்கிழமை  சபாநாயகரிடம் கையளிக்கவுள்ளனர். கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் சபாநாயகரிடம் இது தொடர்பில் தெளிவுப்படுத்தப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இந்த சட்டமூலம் ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ஷ தலைமையில் சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். - [சுற்றுலா பயணிகளின் வருகையில் வீழ்ச்சி](https://minnal24.com/%e0%ae%9a%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%88/): நாளொன்றிற்கு சுமார் 4,000 சுற்றுலா பயணிகள் வருகை தந்திருந்த நிலையில், கடந்த 3 நாட்களாக 1,300 சுற்றுலா பயணிகளே வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை பணிப்பாளர் தெரிவித்துள்ளார். அதனால் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில், வீதி போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்தாமல் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்குமாறு அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். - [கேகாலை பொலிஸ் வலயத்திற்கு புதிய பொறுப்பதிகாரி நியமனம்](https://minnal24.com/%e0%ae%95%e0%af%87%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%88-%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%af-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b1%e0%af%81%e0%ae%aa%e0%af%8d/): கேகாலை வலய பொறுப்பதிகாரியாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP) ஜீ.ஆர்.கந்தேவத்த நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னதாக இவர் கேகாலை வலய மேலதிக பொறுப்பதிகாரியாக செயற்பட்டிருந்தார். இதேவேளை, பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றிய உதவிப் பொலிஸ் அதிகாரி பீ.எம்.எஸ்.பீ.நவரத்ன கேகாலை பொலிஸ் வலயத்திற்கு மாற்றப்பட்டுள்ளார் - [இன்றைய காலநிலை - வளிமண்டலவியல் திணைக்களம்](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%88%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b2-3/): நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை அடுத்த இரு நாட்களில் சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடமேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. - [24வது சித்திரை வருட கலாச்சார விளையாட்டு விழா](https://minnal24.com/24%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f-%e0%ae%95%e0%ae%b2%e0%ae%be%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a/): -கல்முனை நிருபர்- சுபகிருது சித்திரை வருடப்பிறப்பை முன்னிட்டும், காரைதீவு விளையாட்டுக் கழகத்தின் 39வது ஆண்டு நிறைவை முன்னிட்டும் காரைதீவு விளையாட்டுக் கழகமும் விபுலாநந்தா சனசமூக நிலையமும், காரைதீவு பிரதேச செயலகம் மற்றும் சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் இணை அனுசரணையுடன் விபுலானந்தர் மைதானத்தில் நடாத்திய 24வது மாபெரும் கலாசார விளையாட்டு விழா இடம்பெற்றது. இந்நிகழ்வில், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன், காரைதீவு பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன், காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கே.ஜெயசிறில் உட்பட உயரதிகாரிகள், முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர். - [ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்கு மன்னாரில் அஞ்சலி](https://minnal24.com/%e0%ae%88%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf/): -மன்னார் நிருபர்- உயிர்த்த ஞாயிறு (ஈஸ்டர்) தாக்குதலின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று வியாழக்கிழமை  மாலை 6.00 மணியளவில் மன்னாரில் இடம் பெற்றது. தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன் போது குறித்த தற்கொலை குண்டு தாக்குதலின் போது உயிர் நீத்த மக்களை நினைவுகூரும் வகையில் உருவப்படத்திற்கு சுடர் ஏற்றி மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன் போது மத தலைவர்கள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது. - [ஹட்டனில் இராஜாங்க அமைச்சரின் உருவபொம்மை எரிப்பு](https://minnal24.com/%e0%ae%b9%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a/): -நுவரெலியா நிருபர்- மக்களை வதைக்கும் அரசுக்கு எதிராகவும், அவ்வாறானதொரு அரசுக்கு ஆதரவு வழங்கி இராஜாங்க அமைச்சு பதவியை பெற்றுக்கொண்ட அரவிந்தகுமாருக்கு எதிராகவும் ஹட்டனில் இன்று  போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, மக்களை காட்டிக்கொடுத்த துரோகி என விமர்சித்து, இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமாரின் உருவபொம்மையை போராட்டக்காரர்கள் நடுவீதியில் வைத்து தீயிட்டு கொளுத்தி, எதிர்ப்பை வெளியிட்டனர் - [நுவரெலியாவில் ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 3ஆம் ஆண்டு நினைவேந்தல்](https://minnal24.com/%e0%ae%a8%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%86%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%88%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95/): -நுவரெலியா நிருபர்- இலங்கையில் ஈஸ்டர் தினத்தில் தற்கொலை குண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 3ஆம் ஆண்டு நினைவு நினைவேந்தல் நிகழ்வு மலையகத்தில் பல இடங்களிலும் இடம்பெற்றது. அந்தவகையில், நுவரெலியாவில் புனித சவேரியார் தேவாலயத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்தி வேண்டி விசேட ஆராதனைகள் இடம்பெற்றது. இதனையடுத்து, ஆலய வளாகத்தில் அருட்தந்தை சுகத் ரோகன தலைமையில் காலை 8.45 மணிக்கு ஆலய மணி ஓசை எழுப்பப்பட்டு, மெழுகுவர்த்தி ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அத்தோடு, தற்கொலை குண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பில் நீதி வேண்டும் என கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றையும் முன்னெடுத்தனர். இதன்போது எதிர்ப்பு வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தி அமைதியான முறையில் தமது எதிர்பை வெளியிட்டனர். - [இயற்கை முறையில் பயிரிடப்பட்ட பாரம்பரிய நெல் களஞ்சியப்படுத்தும் செயற்திட்டம்](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%aa%e0%af%8d/): -மன்னார் நிருபர்- இயற்கை முறையில் நஞ்சற்ற விவசாய செய்கையை ஊக்குவிக்கும் முகமாக மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் மெசிடோவினால் கடந்த வருட இறுதி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நெற்செய்கை மூலம் பெறப்பட்ட பாரம்பரிய நெல் இன்று வியாழக்கிழமை  வைபவ ரீதியாக மன்னார் முருங்கன் நெற்களஞ்சியத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த வருட இறுதிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பெரும்போக செய்கையின் போது தேர்ந்தெடுக்கப்பட்ட 100 விவசாயிகளுக்கு இலவசமாக மெசிடோ நிறுவனத்தால் பாரம்பரிய நெல் விதைகளான சீனட்டி, மொட்டக்கறுப்பன் போன்ற மரபணு மாற்றப்படாத விதைகள் மற்றும் நெற்செய்கை மேற்கொள்வதற்கான ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கப்பட்டு இயற்கை முறையில் விவசாய செய்கை மேற்கொள்ளப்பட்டது. மேற்படி இயற்கை முறையில் மேற்கொள்ளப்பட்ட விவசாய செய்கையின் அறுவடை இவ்வாரம் இடம் பெற்ற நிலையில் 10,000 கிலோ விதை நெல்கள் இன்று விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்டு எதிர் வரும் போக செய்கைக்காக தயார் நிலையில் உள்ள விவசாயிகளுக்கு இயற்கை முறையில் செய்கைக்காக இலவசமாக வழங்குவதற்கு என […] - [ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சார்ஜெண்ட் பணி இடைநீக்கம்](https://minnal24.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81/): காலி முகத்திடலில் இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட பொலிஸ் சார்ஜெண்ட் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் 14ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான பொலிஸ் ஒழுக்காற்று விசாரணையின் பின்னர், பொதுமக்களை ஆத்திரமூட்டும் வகையில் கருத்துகளை தெரிவித்ததாக, குட்டிகல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் டி.எம். அமரதாச எனும், பொலிஸ் சார்ஜென்ட் கொழும்பு கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார். கடந்த புதுவருட தினத்தில் (14) காலி முகத்திடலில் இடம்பெற்றுவரும் போராட்டத்தில் கலந்து கொண்ட நிலையில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட குறித்த பொலிஸ் சார்ஜெண்ட் அடுத்த நாள் (15) கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து பிணையில் விடுதலை செய்யப்பட்டார். - [மீண்டும் புதிய தலைவர் நியமனம்](https://minnal24.com/%e0%ae%ae%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf/): இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் தற்போதைய தலைவர் விஜித ஹேரத் லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே தலைவரா இருந்த தெஷார ஜயசிங்க கடந்த வாரமளவில் பதவி விலகியதையடுத்தே இவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. - [நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிப்பு தொடர்பான பரிந்துரை கையளிப்பு](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%b5%e0%af%87%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0-%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa/): நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கான பரிந்துரைகள் அடங்கிய, எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினால் பாராளுமன்றத்தில் 21ஆவது அரசியலமைப்பு திருத்த முன்மொழிவுகள் கையளிக்கப்பட்டுள்ளன. குறித்த யோசனைகள் தனி நபர் பிரேரணையாக இன்று வியாழக்கிழமை ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் சபாநாயகரிடம் (பாராளுமன்ற்தில்) கையளிக்கப்பட்டது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழித்தல், 20ஆவது திருத்தம் உள்ளிட்ட பல அரசியலமைப்பு திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் இந்த பிரேரணையின் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் பாராளுமன்றில் உரையாற்றிய ரஞ்சித் மத்தும பண்டார, பாராளுமன்ற நிலையியற்கட்டளைகளை இடைநிறுத்தி அத்தியாவசிய அல்லது விசேட காரணங்களின் அடிப்படையில், மிக விரைவில் இதற்கான நேரத்தை ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்தார். குறித்த பிரேரணை சஜித் பிரேமதாஸவினால் கையளிக்கப்படாமைக்கு காரணம், பாராளுமன்ற நிலையியற்கட்டளை 24 (03) இன் கீழ், எதிர்க்கட்சித் தலைவருக்கு தனிநபர் பிரேரணையை முன்வைக்க முடியாது என அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். குறித்த பிரேரணையின் […] - [ஆசிரியர் இடமாற்றத்தில் முறைகேடு : நாளை போராட்டம்](https://minnal24.com/%e0%ae%86%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1/): -யாழ் நிருபர்- வடமாகாண ஆசிரியர் இடமாற்றத்தை போது இடம்பெற்ற முறைகேடுகளுக்கு நீதிகோரி நாளை  வெள்ளிக்கிழமை வடமாகாண ஆளுநர் செயலகம் முன் போராட்டம் நடைபெற உள்ளது. வடமாகாண கல்விப் பணிப்பாளரினால் மேற்கொள்ளப்பட்ட ஆசிரியர் இடமாற்றத்தில் முறைகேடு இருப்பதாக தெரிவித்தே குறித்த போராட்டம் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம் பெறவுள்ளது. - ["வடக்கின் பெரும்போர்" பெருந்துடுப்பாட்ட போட்டி ஆரம்பம்](https://minnal24.com/%e0%ae%b5%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0/): -யாழ் நிருபர்- வடக்கின் பெரும்போர் என்று வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, சென். ஜோன்ஸ் கல்லூரிகளின் பெருந்துடுப்பாட்ட போட்டி இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகின்றது. இந்தப் போட்டியில் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடி வருகின்றது. - [ஜனாதிபதி செயலகத்தின் வளாகத்தில் கறுப்பு, வெள்ளை கொடிகள்](https://minnal24.com/%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%ae%b2%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%be/): ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் மூன்றாண்டுகள் கழிந்துள்ள நிலையில்,நாடளாவிய ரீதியில் விஷேட பிரார்த்தனைகளள், அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. அந்த வகையில், காலிமுகத்திடலில் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருபவர்கள், ஜனாதிபதி செயலகத்தின் வளாகத்தில் கறுப்பு, வெள்ளை கொடிகள் பறக்கவிட்டு தங்களது சோகத்தை வெளிப்படுத்தி இருந்தனர். - [இன்று முதல் மீண்டும் அமுல்](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%ae%e0%af%81/): பொது இடங்களில் முகக்கவசம்  அணிய வேண்டிய அவசியம் இல்லை எனவும் பொதுப்போக்குவரத்தின் போது அணிவது கட்டாயம் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று வியாழக்கிழமை முதல் மீண்டும் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன அறிக்கை ஒன்றின் மூலம் இதை தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் பெருந்தொகையான மக்கள் ஒன்றுகூடுவதன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் - [மன்னார் மாந்தை மேற்கு பிரதேச சபை உறுப்பினர்கள் கறுப்பு பட்டி அணிந்து போராட்டம்.](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%ae%e0%af%87%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%aa%e0%ae%bf/): -மன்னார் நிருபர்- மாந்தை மேற்கு பிரதேச சபை உறுப்பினர்கள் இன்று வியாழக்கிழமை காலை அரசிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். மாந்தை மேற்கு பிரதேச சபையின் சபையின் 48 வது அமர்வு இன்று வியாழக்கிழமை காலை மாந்தை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் தலைமையில் இடம்பெற்றது. இதன் போது சபையின் 25 உறுப்பினர்களில் 21 உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர். இதன் போது சபை உறுப்பினர்கள் சபையில் கருப்பு பட்டி அணிந்து அரசுக்கு எதிராக பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாகைகளுடன் சபை அமர்வில் கலந்து கொண்டிருந்தனர். இதன் போது கலந்து கொண்ட உறுப்பினர்களின் ஏகமனதான தீர்மானத்திற்கு அமைவாக அரசுக்கு எதிராக மாந்தை மேற்கு பிரதேச சபைக்கு முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் போது போராட்டத்தில் ஈடுபட்ட உறுப்பினர்கள் கருப்பு பட்டி அணிந்து பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இரத்தவெறி பிடித்தவனே நாட்டை விட்டு வெளியேறு,மக்களை பட்டினிச்சாவில் தள்ளாதே, மக்களை […] - [மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அரசாங்கம்?](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%b9%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%aa%e0%ae%95%e0%af%8d%e0%ae%b7%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae%e0%af%88/): பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அரசாங்கத்தை வலுவாக வைத்திருப்பதற்கான பிரேரணையொன்று நிறைவேற்றப்பட்டுள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஆளும் கட்சி நாடாளுமன்றக் குழுவின் விசேட கூட்டம் இன்று வியாழக்கிழமை  முற்பகல் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்றது. அதன்போது, நாட்டில் ஏற்பட்டுள்ள இந்தச் சூழ்நிலையில் அரசாங்கம் அதற்கு வலுவாக முகம்கொடுக்க வேண்டுமெனவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அரசாங்கம் அதனைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டுமெனவும் இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சஹான் பிரதீப் யோசனையொன்றை முன்மொழிந்தார். அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஏகமனதாக கைகளை உயர்த்தி ஏகமனதாக ஆதரவளித்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் யு.கே.சுமித் அதனை வழிமொழிந்ததாக பிரதமரின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. - [ரம்புக்கனை சம்பவம் ; மூன்று உயர் அதிகாரிகளுக்கு இடமாற்றம்](https://minnal24.com/%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%88-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%82%e0%ae%a9%e0%af%8d/): ரம்புக்கனை ஆர்ப்பாட்டத்தின்போதான மோதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினர் மற்றும் சாட்சியாளர்கள் சுயாதீனமாக விசாரணைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு முன்னிலையாவதை உறுதிப்படுத்த மேற்படி அதிகாரிகள் வெளிமாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் மூன்று உயர் அதிகாரிகள் உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, ரம்புக்கனை காவல்நிலைய பொறுப்பதிகாரி, ரம்புக்கனை பொலிஸ் பிரிவின் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் கேகாலை வலயத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரே இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. - [வீதி மறித்து போராட்டம் நடை பவணியில் சுற்றுலாப்பயணிகள்](https://minnal24.com/%e0%ae%b5%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8/): லிந்துலை பகுதியில் அரசுக்கு எதிராக மக்கள் வீதியை மறித்து போராட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர். இதன் காரணமாக குறித்த வீதியை பயன்படுத்தி வாகனங்களில் பயணங்களை மேற்கொண்ட வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று அப்பகுதியில் தமது உடமைகளுடன் நடந்துச் சென்றுள்ளனர். - [திட்டமிட்டப்படி பரீட்சைகள் இடம்பெறும்](https://minnal24.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%b0%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%af%88/): கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைகள் முன்னதாக திட்டமிட்டப்படி அடுத்த மாதம் 23ஆம் திகதி  இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் ரமேஷ் பத்திரன இதனை தெரிவித்துள்ளார். மே மாதம் 23ஆம் திகதி முதல் ஜூன் 1 ஆம் திகதி வரை சாதாரண தரப்பரீட்சைகள்  இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், தரம் 5க்கான புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் அக்டோபர் 16ஆம் திகதி இடம்பெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், 2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப்பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் 17ஆம் திகதி முதல் நவம்பர் 12ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். - [3 நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு CID உத்தரவு](https://minnal24.com/3-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa/): ரம்புக்கனையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிஸ்மா அதிபரின் பணிப்புரையின் பேரில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இது குறித்து 3 நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதேவேளை, பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12 (1) விதியின் கீழ் கேகாலை மாவட்டத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்காக பொலிஸாருக்கு ஆதரவளிக்க இலங்கை இராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு அரசாங்கத் தகவல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. மேலும், ரம்புக்கனையில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவரின் இறுதிக்கிரியைகள் நாளை வெள்ளிக்கிழமை நாரணபத்தவில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. - [மக்கள் குறைதீர் மன்ற அரங்கம் ஒன்று கூடல் நிகழ்வு](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%a4%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%99/): -வாழைச்சேனை நிருபர்- மட்டக்களப்பு வாகரை பிரதேச சபையில் ஜனநாயக பங்குதாரர்கள் ஒன்றினைந்த மக்கள் குறைதீர் மன்ற அரங்கம் என்ற செயல் திட்டத்தின் கீழ் ஒன்று கூடல் நிகழ்வு நடைபெற்றது. இந் நிகழ்வினை அகம் மனிதாபிமான வள நிலையம்  என்ற அரசசார்பற்ற நிறுவனத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர். பிரதேச சபை உறுப்பினர்கள், சிவில் அமைப்புக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகிய 3 தரப்பினரையும் ஒன்றினைத்து வாகரை பிரதேசத்தில் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. மத்திய அரசாங்கம் மற்றும் பிரதேச சபையினால் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் அடையாளம் காணப்பட்டு கலந்துரையாடப்பட்டது. இதில் குறிப்பாக கதிரவெளியில் அமைக்கப்படவுள்ள இல்மனைற் தொழிற்சாலை, இறால் வளர்ப்பு பண்ணை, காணி அபகரிப்பு, மணல் அகழ்வு, சட்டவிரோத கசிப்பு உற்பத்தி, இளவயது திருமணம், சிறுவர் துஷ்பிரயோகம், சட்டவிரோத மீன் பிடி நடவடிக்கையான சுருக்கு வலை பாவித்து மீன் பிடித்தல், வேலைவாய்ப்பு, என்பன போன்ற பல்வேறு விடயங்களுக்கு எவ்வாறு தீர்வு காண்பது என்று […] - [கறுப்பு நிற ஆடையுடன் சபையில் அஞ்சலி](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%b1%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1-%e0%ae%86%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%aa%e0%af%88/): உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல் சம்பவம் இடம்பெற்று இன்றுடன் 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இதனை முன்னிட்டு இன்று வியாழக்கிழமை பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியினர் கறுப்பு நிற ஆடைகளை அணிந்து கலந்துகொண்டுள்ளனர். மேலும், ஐக்கிய மக்கள் சக்தியினர் சபாநாயகரிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக, உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல் சம்பவத்தில் உயிர்நீத்தவர்களுக்காக பாராளுமன்றில் ஒரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. - [பிணையில் விடுவித்த மாணவனை மீண்டும் ஆஜராகுமாறு உத்தரவு](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a3%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%a9/): ரம்புக்கன விவகாரம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 18 வயதான பாடசாலை மாணவன், பிணையில் விடுவிக்கப்படட மாணவன் மீதான விசாரணை மீண்டும் எதிர்வரும் 28ஆம் திகதி எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. தலா 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலேயே விடுதலை செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபரான மாணவன், நேற்று வியாழக்கிழமை இரவு 10.40க்கு கேகாலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவித்தமை, சட்டத்துக்கு முரணாக ஒன்றுகூடியமை உள்ளிட்ட இன்னும் பல குற்றச்சாட்டுகள் அந்த மாணவன் மீது சுமத்தப்பட்டுள்ளது. கேகாலை நீதவான் வசந்த நவரட்னவின் உத்தரவின் பேரில், கேகாலை நீதவான் வைத்திய அதிகாரியின் முன்னிலையில் சந்தேகநபரான மாணவன் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னரே, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். - [டயர்களை எரித்தமையால் புதிய கார்ப்பட் வீதி சேதம்](https://minnal24.com/%e0%ae%9f%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4/): பொகவந்தலாவை நகரில் டயர்களை எரித்து போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், புதிதாக கார்பட் இடப்பட்டு புனரமைக்கப்பட்ட குறித்த வீதி சேதமடைந்துள்ளது என நோர்வூட் பிரதேச சபை தெரிவித்துள்ளது. வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, எரிபொருள் விலையேற்றம் மற்றும் அரசாங்கத்துக்கு எதிராக நேற்று புதன்கிழமை டயர்களை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதன்பின்னரே இவ்வாறு வீதி சேதமடைந்துள்ளதாகத் தெரிய வருகின்றது. பாரிய நிதி செலவில் ஒரு வருடத்துக்கு முன்னர், பொகவந்தலாவை வீதி புனரமைக்கப்பட்டதாகவும், நேற்றைய தினம் அங்கு டயர்கள் எரிக்கப்பட்டமையால் வெப்பத்தால் சேதமடைந்து போட்டப்பட்ட காபட் கழன்றுள்ளதாகவும் நோர்வூட் பிரதேச சபை தெரிவித்துள்ளது. - [100 அடி உயரமான மரத்தில் ஏறி இளைஞன் போராட்டம்](https://minnal24.com/100-%e0%ae%85%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%89%e0%ae%af%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8f%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%87/): இன்ஜெஸ்ரி தோட்டத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், 100அடி உயரமான மரத்தில் ஏறி போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளார். ரம்புக்கனை தூப்பாக்கிசூட்டில் உயிர்ழந்த நபருக்கு நீதி கோரியே இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். டிக்கோயா- இன்ஜெஸ்ரி கீழ் பிரிவைச் சேர்ந்த, 44வயதுடைய பழனியாண்டி முருகேஸ் என்ற நபரே இன்று வியாழக்கிழமை காலை இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். ரம்புக்கனை பகுதியில் தூப்பாக்கி சூட்டில் பலியான நபருக்கு நீதி கோரியும் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்தும் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஸ பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும் ‘கோட்டா கோ கோம்’ போன்ற பதாதைகளை மரத்தில் காட்சிப்படுத்தி இந்த போராட்டத்தை முன்னெடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.   - [ஆபத்தான நிலையில் வடிகான்கள் : கண்டுகொள்ளாமல் இருக்கும் மாநகர சபை](https://minnal24.com/%e0%ae%86%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/): -கல்முனை நிருபர்- அம்பாரை மாவட்டம் கல்முனை மாநகர சபை பிரிவில் உள்ள சகல ஊர்களிலுமுள்ள வீதியில் காணப்படும் வடிகான் மூடிகள் உடைந்து சேதமடைந்துள்ளமையினால் வீதியூடான போக்குவரத்து செய்யும் பொது மக்கள் பெரும் சிரமங்களை தினமும் எதிர் நோக்கியுள்ளதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். வடிகான் மூடிகள் நீண்டகாலமாக உடைந்து காணப்படுவதுடன் இதனால் வீதியில் போக்குவரத்து செய்யும் மக்கள் விபத்துக்களை சந்தித்து வருகின்றனர். குறித்த வீதிகளினூடாக தினம் தோறும் ஆயிரக்கணக்கான பொது மக்கள் தங்களது போக்குவரத்தினை பெரும் சிரமத்திற்கு மத்தியில் பயன்படுத்தி வருவதாகவும் மின்சார தடை நேரங்களில் வீதியில் காணப்படும் வடிகான் மூடிசேதமடைந்துள்ளமையினால் போக்குவரத்துக்கு பெரும் இடைஞ்சலாகவும் ஆபத்தாகவும் காணப்படும் வடிகானினால் வாகனங்கள் சேதமடையக் கூடிய நிலை உள்ளதாகவும் வீதியின் குறுக்காக உள்ள வடிகான் மூடிகள் உடைந்து சேதமடைந்து காணப்படுவது பற்றி எவ்விதமான முன்னாய்த்த அறிவுறுத்தல் இல்லையெனவும் இதனால் விபத்துக்களை சந்திக்க நேரிடுவதாகவும் குறித்த விடயம் தொடர்பில் கல்முனை மாநகர சபைக்கு தெரியப்படுத்தியும் இது […] - [30,000 லீற்றர் எரிபொருளை  தீ வைக்க முற்பட்டதை தடுக்கவே துப்பாக்கி பிரயோகம்  ](https://minnal24.com/30000-%e0%ae%b2%e0%af%80%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80/): ரம்புக்கனை ஆர்ப்பாட்டத்தின்போது 30,000 லீற்றர் எரிபொருளைக் கொண்ட தாங்கி ஊர்தியொன்றுக்கு ஒரு குழுவினர் தீ வைக்க முற்பட்டதைத் தடுக்க பொலிஸார் குறைந்தபட்ச பலத்தை பிரயோகிக்க வேண்டியேற்பட்டதாக பொலிஸ் மாஅதிபர் சந்தன விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்.. 12 மணித்தியாலங்களுக்கு மேலாக அங்கு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு முச்சக்கரவண்டி மற்றும் எரிபொருள் தாங்கி ஊர்திக்கு தீ வைக்க முயற்சித்தனர். அவர்களை கலைந்து செல்லுமாறு பொலிஸார் எச்சரித்த போதிலும், அவர்கள் கட்டளைக்கு மாறாக செயற்பட்டதால் தடியடி பிரயோகம், கண்ணீர் புகைப் பிரயோகங்களை மேற்கொண்டு அடக்கும் நடவடிக்கையில் காவல்துறையினர் தொடர்ந்தும் ஈடுபட்டனர். அதன்போது, ஒரு குழுவினர் கலைந்து சென்ற போதிலும், மேலும் சிலர் ரயில் பாதையில் இருந்த கற்களை வீசி எரிபொருள் தாங்கி ஊர்தியை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸாரை கடுமையாக தாக்கியதாகவும் தெரிவித்த அவர், அதன்போது, பொலிஸார் குறைந்த பட்ச பலத்தை பிரயோகித்து வானத்தை நோக்கி துப்பாக்கிச் […] - [நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரத்தின் மீது முச்சக்கர வண்டி மோதி இருவர் படுகாயம்](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%b5%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b0-4/): -யாழ் நிருபர்- நேற்று இரவு மின்சாரம் தடைப்பட்டிருந்த வேளை வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லான்ட்மாஸ்டர் மீது முச்சக்கர வண்டி மோதியதால் வெளிநாட்டில் இருந்து வருகை தந்திருந்த தம்பதிகள் இருவர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், புகையிலை ஏற்றி வந்த லான்ட் மாஸ்டரை, சமிக்ஞை விளக்கு போடாமல் வீதியில் நிறுத்தி வைத்திருந்ததால் வீதியில் வந்த முச்சக்கர வண்டி மோதியது. இதனால் முச்சக்கர வண்டியில் பயணித்த தம்பதிகள் படுகாயமடைந்ததால் 1990 இலக்க அவசர நோயாளர் காவு வண்டிமூலம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். லான்ட்மாஸ்டரானது பொறுப்பற்ற விதத்தில் வீதியில் நிறுத்தியதாலேயே குறித்த விபத்து சம்பவித்துள்ளது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். - [சர்வதேச பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சியடையும் அபாயம்](https://minnal24.com/%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0-%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d/): சர்வதேச நாணய நிதியம், உக்ரைன்–ரஷ்யப் போர் காரணமாக சர்வதேச பொருளாதார வளர்ச்சி முன்னுரைப்பை கீழ்நோக்கித் திருத்தியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் சர்ச்சையின் தாக்கம் அடுத்த சில ஆண்டுகளுக்குப் பெரிய அளவில் உணரப்படும் என்று அது கூறியது. சர்வதேச பொருளாதாரத்தின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் இந்த ஆண்டும் அதற்கு அடுத்த ஆண்டும் 3.6 வீதமாக இருக்கும் என்று அந்த நிதியம் முன்னுரைத்துள்ளது. இவ்வாண்டுக்காக முன்னர் வெளியிடப்பட்ட கணிப்பை விட அது 0.8 வீதம் குறைவு. 2023ஆம் ஆண்டுக்கான முன்னுரைப்பைக் காட்டிலும் அது 0.2 வீதம் குறைவு. உக்ரேன்–ரஷ்யப் பூசலின் தாக்கம் சர்வதேச அளவில் கொள்கை மாற்றங்களுக்கும் விலை அதிகரிப்புக்கும் இட்டுச்செல்லும் என்று நிதியத்தின் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். வைரஸ் பரவல் சூழலால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து நாடுகள் இன்னமும் முழுமையாக மீளவில்லை. அண்மைய போருக்கு முன்பாகவே நாடுகள் பணவீக்கத்தையும் விநியோகத் தொடர்களில் இடையூறுகளையும் சமாளிக்க வேண்டியிருந்ததை அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். - [அவசர மனிதாபிமான உதவிகளை வழங்க தயார் - சீனா அறிவிப்பு](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%b0-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%89%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%88/): இலங்கை மக்கள் மீள்வதற்காக அவசர மனிதாபிமான உதவிகளை வழங்க, சீன வெளிவிவகார அமைச்சும் சர்வதேச அபிவிருத்தி ஒத்துழைப்பு நிறுவனமும் தீர்மானித்துள்ளன. இந்த உதவிகளை சீன வெளிவிவகார அமைச்சும் சர்வதேச அபிவிருத்தி ஒத்துழைப்பு நிறுவனமும் ஒன்றிணைந்து வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகம் தமது உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில் இதனை அறிவித்துள்ளது. இலங்கை மக்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை சமாளிக்கும் வகையில் இந்த உதவி வழங்கப்படுவதாகவும், வழங்கப்படும் உதவிகள் குறித்த தகவல்கள் எதிர்காலத்தில் வெளியிடப்படும் எனவும் சீன தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது. - [முகக்கவசம் அணிவது தொடர்பில் மீளாய்வு](https://minnal24.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa/): பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்று தளர்த்தப்பட்ட சட்டத்தை, மீளாய்வுக்கு உட்படுத்துமாறு ஆலோசனை வழங்கியுள்ளதாக சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். 15 பேர் கொண்ட நிபுணர் குழுவினால், இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதன்படி, கடந்த 19 ஆம் திகதி முதல் இந்தத் தீர்மானம் அமுலாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், குறித்த தீர்மானம் தற்போதைய நிலைமையில் ஏற்புடையதல்ல என பல்வேறு தரப்பினரும் தெரிவித்துள்ளனர். எனவே, இந்தத் தீர்மானத்தை மீளாய்வுக்கு உட்படுத்துமாறு நிபுணர் குழுவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். - [வீடு உடைத்து ஒரு கோடி ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் திருட்டு](https://minnal24.com/%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%81-%e0%ae%89%e0%ae%9f%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b0%e0%af%82%e0%ae%aa/): -யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் உள்ள உயர் கல்வி நிறுவனம் ஒன்றின் விரிவுரையாளர் ஒருவரின் வீடுடைத்து சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் திருடப்பட்டுள்ளன என்று கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலி – யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்துக்கு அண்மையில் உள்ள வீடொன்றிலேயே இந்த திருட்டுச் சம்பவம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது. விரிவுரையாளரது குடும்பம் அன்றைய தினம் மாலை 5.30 மணியளவில் உறவினர் வீட்டுக்குச் சென்று இரவு 8.30 மணிக்கு வீடு திரும்பியுள்ளனர், வீட்டில் அவர்கள் இல்லாத நேரத்தில் திருட்டு இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர். சுமார் 50 பவுண் தங்க நகைகள் திருட்டுப் போயுள்ளன என்று முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டது. - [எரிபொருள் விநியோகத்துக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம்](https://minnal24.com/%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%af%e0%af%8b%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d/): தற்போது கிடைத்துள்ள எரிபொருளுக்கு மேலதிகமாக விமான எரிபொருள் மற்றும் மற்றுமொரு தொகை டீசல் என்பன தரையிறக்கப்பட்டுள்ளன. போதியளவு எரிபொருள் கையிருப்பு கிடைத்துள்ளதால் விநியோகத்துக்கு இடையூறு விளைவிக்காமல் நாட்டுக்கு ஆதரவளிக்குமாறு வலுசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர வேண்டுகோள் விடுத்துள்ளார். எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசைகள் இருந்தாலும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இரண்டு கப்பல்கள் மூலம் கொண்டுவரப்பட்ட 120,000 மெட்ரிக் டன் நிலக்கரிக்கு 38 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்தப்பட்டதை அடுத்து அதனை இறக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. தற்போதுள்ள நிலக்கரி மற்றும் புதிதாக பெறப்பட்ட இருப்புகளை கொண்டு 810 மெகாவாட் கொண்ட நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களை உச்ச செயற்திறனுடன் இயக்குவதற்கு போதுமானது . நாடு பூராகவும் எரிபொருளை முறையாக விநியோகிப்பதற்கு, தற்போது ஆங்காங்கே நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டங்களும் வீதி மறியல் போராட்டங்களும் பாரிய தடையாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்தியாவசிய […] - [இலங்கைக்கு அவசர உதவிகளை வழங்கத் தயார்](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%b0-%e0%ae%89%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%88/): இலங்கைக்கு அவசர உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. வொஷிங்டனில் நிதியமைச்சர் அலி சப்ரியுடன் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து உலக வங்கியின் துணைத் தலைவர் ஹார்ட்விக் ஷாஃபர் (Hartwig Schafer)  இலங்கைக்கு அவசர உதவிகளை வழங்கத் தயாரென தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கும் ஸ்திரத்தன்மை மற்றும் மீட்சியை ஆதரிப்பதற்கும் பாதிக்கப்படக்கூடிய மக்களைப் பாதுகாப்பதற்குமான நடவடிக்கைகள் குறித்து இதன்போது விவாதித்ததாகவும் தெரிவித்துள்ளார். எனவே, அத்தியாவசிய மருந்துகள் மற்றும் சுகாதாரம் தொடர்பான பொருட்கள், ஊட்டச்சத்து மற்றும் கல்விக்கு அவசர உதவியை வழங்க உலக வங்கி தயாராக உள்ளது என உலக வங்கியின் துணைத் தலைவர் ஹார்ட்விக் ஷாஃபர் தெரிவித்துள்ளார். - [வீடு உடைத்து வீட்டிலிருந்தோரை அச்சுறுத்தி கொள்ளையிட்ட இருவர் கைது](https://minnal24.com/%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%81-%e0%ae%89%e0%ae%9f%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8/): -யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் ஏழாலை பகுதியில் உள்ள வீடொன்றினை உடைத்து, வீட்டினுள் நுழைந்து வீட்டிலிருந்தோரை அச்சுறுத்தி கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கொள்ளைச் சம்பவம் கடந்த 16ஆம் திகதி சனிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு இடம்பெற்றது. குறித்த வீட்டினுள் புகுந்த இருவர் அங்கிருந்தோரை எழுப்பி அடித்துக் காயப்படுத்தி அச்சுறுத்தி மூன்றரைப் பவுண் நகைகளை கொள்ளையடித்துத் தப்பித்து சென்றனர். சம்பவத்தில் காயமடைந்த பெண் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. அதனடிப்படையில் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், ஏழாலை குப்பிளானைச் சேர்ந்த 23 மற்றும் 33 வயதுடைய சந்தேக நபர்கள் இன்று கைது செய்யப்பட்டனர். - [இன்றோடு மூன்று வருடங்கள்](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%ae%e0%af%82%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/): உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு இன்றுடன் மூன்று வருடங்கள் பூர்த்தியாகின்றன. கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி, உயிர்த்த ஞாயிறு தினத்தில், யாரும் எதிர்பார்த்திராத சமயத்தில் அந்த துயரம் நடந்தேறியது. நாட்டின் பல பகுதிகளில் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், மட்டக்களப்பு சியோன் தேவாயலம், நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி தேவாலயம் மற்றும் கொழும்பிலுள்ள சில நட்சத்திர ஹோட்டல்களிலும் தற்கொலை தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்தத் தாக்குதல்களில் வெளிநாட்டவர்கள் உட்பட 268 பேர் உயிரிழந்ததோடு, 500 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர். அந்த தாக்குதலில் காயமடைந்த பலர் இன்றும் உடல் உறுப்புகளை இழந்து அந்த வடுவோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். எனினும் ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் இன்னும் நிறைவடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. - [அரசாங்கத்திற்கு மகாநாயக்க தேரர்களின் அறிவிப்பு](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%be%e0%ae%a8%e0%ae%be%e0%ae%af%e0%ae%95/): மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களுக்கும் தற்போதைய நெருக்கடிகளுக்கும் ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 225 பேரும் பொறுப்புகூறவேண்டுமென மூன்று பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் தெரிவித்துள்ளனர். புதிய அமைச்சரவை நியமனம் பிரச்சினைக்கு தீர்வாகாது எனவும், 20ஆவது திருத்தச் சட்டத்தை நீக்கி 19ஆவது திருத்தச் சட்டத்தின் சாதகமான அம்சங்களை உள்வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். - [ஊரடங்கு உத்தரவு தளர்வு](https://minnal24.com/%e0%ae%8a%e0%ae%b0%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%89%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%b5%e0%af%81-%e0%ae%a4%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%81/): ரம்புக்கனை பொலிஸ் பிரிவில அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது. இன்று வியாழக்கிழமை அதிகாலை 5 மணிக்கு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படுவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.   - [மலையகத்தில் பல இடங்களில் ஒப்பாரி வைத்து போராட்டம் : போக்குவரத்து ஸ்தம்பிதம்](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b2-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/): -நுவரெலியா நிருபர்- ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும், பொருட்களின் தொடர் விலையேற்றத்தைக் கண்டித்தும் மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் இன்று பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இதனால் போக்குவரத்து நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்தன. சாலை மறியல் போராட்டம், ஒப்பாரி போராட்டம், பறை அடித்து முறையிடும் போராட்டம் என பல வடிவங்களில் போராட்டங்களை முன்னெடுத்து, தமது எதிர்ப்பை மக்கள் வெளிப்படுத்தினர். தமது கோரிக்கையை அரசு ஏற்காவிட்டால், போராட்டம் தீவிரம் அடையும் என எச்சரிக்கையும் விடுத்தனர். சில தோட்டங்களில் தொழிலாளர்கள் இன்று வேலைக்கு செல்லாமல், தமது எதிர்ப்பை வெளியிட்டனர். மேலும் சில இடங்களில் 12 மணிக்கு பிறகு போராட்டங்கள் இடம்பெற்றன. பத்தனை சந்தியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின்போது, தப்படித்து, ஒப்பாரி வைத்து, அரசு வீடு செல்ல வேண்டும் என கோஷம் எழுப்பட்டது. நுவரெலியா மாவட்டத்தில் நுவரெலியா, ஹைபொரஸ்ட், இராகலை, உடபுஸ்ஸலாவ, நானுஓயா, டயகம, லிந்துலை நாகசேனை, அட்டன், கொட்டகலை, நோர்வூட், டிக்கோயா, நோட்டன்பிரிட்ஜ் […] - [தற்போதைய சூழ்நிலையில் ஆசிரியர்கள் மீது நெருக்கீடுகளை ஏற்படுத்த வேண்டாம்](https://minnal24.com/%e0%ae%a4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%88%e0%ae%af-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%86%e0%ae%9a/): -யாழ் நிருபர்- தற்போதைய சூழ்நிலையில் ஆசிரியர்கள் மீது நெருக்கீடுகளை ஏற்படுத்த வேண்டாம் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் மத்திய, மாகாண கல்வி அமைச்சிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும், தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியான சூழ்நிலை என்பது ஒட்டுமொத்த மக்களுக்குமானது. மக்களில் ஓரங்கமாகவே அதிபர், ஆசிரியர்கள் உள்ளனர். அவர்களுக்கும் பல்வேறு நெருக்கடிகள் உள்ளன என்பதனை அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும். இது வெறும் அலுவலக கடமையல்ல. மனித ஜீவன்களோடு பயணிக்கும் கடமை. இந்தக்கடமைகளில் இருந்து அதிபர், ஆசிரியர்கள் விலக முடியாது என்பதனை நாம் உணர்ந்தவர்கள். ஆகையினாலேயே எமது கடமைகளை எவ்வேளையும் செய்ய தயாராக இருக்கிறோம். இன்று முதல் நாட்டில் உள்ள 300 தொழிற்சங்கங்கள் ஹர்த்தாலுக்கு அழைப்புவிடுத்து, அதனை ஏற்ற போக்குவரத்து துறை சார்ந்தவர்கள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்களின் சேவை முடக்கத்தால் பாடசாலைகளுக்கான போக்குவரத்துகள் முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளன. இதனால் அதிபர், ஆசிரியர், மாணவர்களின் போக்குவரத்து வழிமுறைகளும் பாதிப்படைந்துள்ளன. இன்று பாடசாலைகளில் மாணவர்களின் வரவு குறைவாகவே […] - [ஊழலற்ற எமது மக்கள் நலப் பணிகள் தொடரும் -இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன்-](https://minnal24.com/%e0%ae%8a%e0%ae%b4%e0%ae%b2%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%8e%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa/): எமது நாடு எதிர்கொண்டுள்ள பாரிய பொருளாதார, அரசியல் நெருக்கடிகளிலிருந்து மீண்டு, நாட்டைக் கட்டியெழுப்பும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ள புதிய அமைச்சரவையில் கிராமிய வீதிகள் மற்றும் உள்கட்டுமான இராஜாங்க அமைச்சராக நேற்றையதினம் பதவிப்பிரமாணம் செய்துகொண்ட சிவநேசதுறை சந்திரகாந்தன் இன்று புதன்கிழமை அமைச்சின் கடமைகளையும் பொறுப்பேற்றுள்ளார். மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவர் என்கின்ற பொறுப்போடு மேலும் இந்த அமைச்சு பொறுப்பும் எனக்கு வழங்கப்பட்டுள்ளமையானது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை ஆதரித்து எமது கரங்களை பலப்படுத்தி நின்ற பல்லாயிரம் மக்களின் ஆணைக்கு வழங்கப்பட்ட கௌரவமாகவே நான் பார்க்கின்றேன் என, தனது கடமைகளை பெறுப்பேற்றுக் கொண்டு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் எமது மக்களின் அபிவிருத்தி மற்றும் சமூக மேம்பாட்டினை இலக்காக கொண்டு நாம் முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் நம்பிக்கை வைத்து என்னை பெருவாரியான ஆதரவுடன் பாராளுமன்றம் அனுப்பிய உங்களுக்கு பணியாற்றுவதற்கு கிடைத்த வாய்ப்பாக இந்த அமைச்சுப் பொறுப்பினை கருதுகின்றேன். 2008-2012 காலப்பகுதியில் கிழக்குமாகாண […] - [வடக்கு கிழக்கு இணைய அயல்நாடான இந்தியாவே உதவ வேண்டும்](https://minnal24.com/%e0%ae%b5%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%87%e0%ae%a3%e0%af%88%e0%ae%af-%e0%ae%85%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d/): -கிளிநொச்சி நிருபர்- வருகின்ற மே 1 ம் திகதி கிளிநொச்சி மாவட்டத்தில் மாபெரும் எழுச்சி பேரணி ஒன்று ஊர்வலமாக சென்று எமது நிலையை அரசுக்கு உணர்த்த வேண்டும் என கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் சண்முகராஜா ஜீவராஜா அழைப்பு விடுத்துள்ளார். கிளிநொச்சி கரடிபோக்கு சந்தியில் இருந்து பசுமை பூங்கா வரை செல்லவுள்ள குறித்த பேரணியில் தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாயிகள் பொது மக்கள் என பலரும் கலந்து கொள்ள வேண்டும் எனவும் மலையகத்தில் தேயிலை பறிக்கும் தொழிலாளிகளின் சம்பளப்பிரச்சனை, விவசாயம் தொடர்பான பிரச்சனைகள், காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சனைகள் மற்றும் எமது நாட்டில் வடக்கு கிழக்கு இணைய வேண்டும் என்ற பிரச்சனை அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி ஏற்றம் சம்பந்தமாகவும், இப்படி தொழிலாளர்கள் படுகின்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என்றே குறித்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கு இணைவதற்கு அயல்நாடான இந்தியாவே உதவி புரிய வேண்டும் எனவும் 1987ஆம் ஆண்டு […] - [உங்கள் போராட்டத்திற்கும், எமக்கும் என்ன சம்பந்தம்? - தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கம் கேள்வி](https://minnal24.com/%e0%ae%89%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae/): -மன்னார் நிருபர்- சிங்களவர்கள் தமிழர்களை எதிரிகளாகவும், விரோதிகளாகவும் நோக்கியதாலேயே தமிழர்கள் சிங்கள தேசத்தை அயல்நாடாக உணர்ந்தனர். உண்மையும், நீதியும், சத்தியமும் அறவுணர்வும் தமிழர்களின் கோரிக்கையில் இருந்த போதும் சிங்கள தேசம் அதை முழுமையாக புறக்கணித்தது, என தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார். காலி முகத்திடல் போராட்டம் குறித்து தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கம் இன்று புதன்கிழமை  விடுத்துள்ள திறந்த மடலில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த மடலில் மேலும் குறிப்பிடுகையில், தங்களின் ஜனநாயகப் போராட்டம் கடந்த பத்து நாட்களுக்கு மேலாக தன்னெழுச்சியாக நடப்பதை யிட்டு நாமும் மகிழ்ச்சியடைகிறோம். ஏனெனில் ஜனநாயகப் போராட்டம், ஆயுதப் போராட்டம் என கடந்த 70 ஆண்டுகளாக எதிர்கொண்டவர்கள் என்ற வகையில் நீங்கள் நடாத்துவது வாழ்தலுக்கான போராட்டம். நாம் நடத்தியது வாழ்வுரிமை இருப்பிற்கான போராட்டம் இரண்டிற்கும் இடையில் பாரிய வேறுபாடு உண்டு. தமிழ் மக்கள் கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு விதமான அடக்குமுறைக்குள் சிக்கித் தவிக்கிறார்கள். […] - [ஒன்றரை லீட்டர் கசிப்புடன் சந்தேக நபர் ஒருவர் கைது](https://minnal24.com/%e0%ae%92%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%b0%e0%af%88-%e0%ae%b2%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9/): -யாழ் நிருபர்- இன்று புதன்கிழமை வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் – காட்டுப்புலத்தில் ஒன்றரை லீட்டர் கசிப்புடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வட்டுக்கோட்டை பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வட்டுக்கோட்டை பொலிஸாரால் இக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலதிக விசாரணைகளின் பின்னர் குறித்த சந்தேகநபரை மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். - [மக்களுக்கு சேவை செய்வதே எமது தலையாய கடமை - ரிஷாட் பதியுதீன்](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%9a%e0%af%87%e0%ae%b5%e0%af%88-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a4%e0%af%87/): -மன்னார் நிருபர்- மக்களுக்கு சேவை செய்வதே எமது தலையாய கடமை என்பதை ஒவ்வொரு அரசியல்வாதியும், அதிகாரிகளும் மனதிற்கொள்ள வேண்டும் என மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். ரம்புக்கனையில் நேற்று இடம் பெற்ற அசம்பாவித சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர் மேலும் கூறியதாவது, தங்களது எதிர் காலத்துக்காகவும் உரிமைகளுக்காகவும் போராடி உயிர்நீத்த இளைஞருக்கும், பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கின்றேன். பொலிஸாரின் இவ்வாறான காட்டுமிராண்டித்தனமான செயற்பாடுகளை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். இவை நிறுத்தப்பட வேண்டும். அத்துடன், குறித்த சம்பவத்துடன் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளும் இதற்குப் பொறுப்புக் கூற வேண்டும். குறித்த, மக்கள் ஆர்ப்பாட்டத்தை தடுத்து நிறுத்துவதற்கு பயன் படுத்தப்பட்டதாகக் கூறப்படும் குறைந்தபட்ச படையணியினாலேயே ஓர் உயிர் காவு கொள்ளப்பட்டிருக்கின்றது என்றால், அதிகபட்ச படைகளை பயன்படுத்தி இருப்பின் என்ன நேர்ந்திருக்கும்? ஆகையால், மக்களுக்கு சேவை செய்வதே எமது கடமை என்பதை […] - [யாழ். மாநகரசபை முதல்வர் உள்ளிட்ட குழு பிரான்ஸ் நாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயம்](https://minnal24.com/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%ae%95%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%aa%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%89/): -யாழ் நிருபர்- யாழ்.மாநகரசபை முதல்வர் விசுவலிங்கம் மணிவண்ணன், நகரசபை உறுப்பினர் வ.பார்த்தீபன் மற்றும் நல்லூர் பிரதேச சபை தவிசாளர் மயூரன் ஆகியோர் உத்தியோகபூர்வ விஜயமாக பிரான்ஸ் நாட்டிற்கு சென்றுள்ளனர். அவர்களை பிரான்ஸ் வாழ் தமிழ் மக்கள் பூங்கொத்து கொடுத்து சிறப்பாக வரவேற்றனர். - [அம்பாறை – சாய்ந்தமருது பகுதியில் உடற்பாகங்கள் தோண்டி எடுப்பு](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b1%e0%af%88-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa/): அம்பாறை – சாய்ந்தமருது பகுதியில் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 26ஆம் திகதி இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடற்பாகங்கள் இன்று புதன்கிழமை  மீண்டும் தோண்டி எடுக்கப்படவுள்ளன. கட்டுவாப்பிட்டிய தேவாலயத்தில் குண்டுத் தாக்குதல் நடத்தியவரான மொஹமட் ஹஸ்துன் என்பவரின் மனைவியான சாரா ஜெஸ்மின் என்ற புலஸ்தினி மகேந்திரனின் மரபணுவை அடையாளம் காண்பதற்காக குறித்த உடற்பாகங்கள் மீள தோண்டி எடுக்கப்படவுள்ளதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். அம்பாறை நீதவானின் கண்காணிப்பில் இந்தப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி, அரச இரசாயன பகுப்பாய்வாளர் மற்றும் விசாரணை அதிகாரிகளும் இதன்போது பிரசன்னமாகவுள்ளனர். ஏப்ரல் 21 தாக்குதலை அடுத்து, பாதுகாப்புத் தரப்பினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பிற்கு மத்தியில், 2019 ஏப்ரல் மாதம் 26ஆம் திகதி சாய்ந்தமருது பகுதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 17 பேர் பலியானதாக கூறப்பட்டபோதிலும் 16 பேரின் உடற்பாகங்களே மீட்கப்பட்டன. சாரா ஜெஸ்மின் என்ற புலஸ்தினி […] - [இலங்கையின் பொருளாதார வளர்ச்சி குறித்து கணிப்பு](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0-%e0%ae%b5%e0%ae%b3/): இந்த ஆண்டு இலங்கை பொருளாதார வளர்ச்சி 2.6 சதவீதமாக அமையுமென, சர்வதேச நாணய நிதியம் கணிப்பிட்டுள்ளது. இதேவேளை, தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க 600 மில்லியன் டொலர் நிதி உதவியை வழங்க உலக வங்கி இணங்கியுள்ளது. அதன் முதற்கட்டமாக 400 மில்லியன் டொலர்கள் விரைவில் வழங்கப்படுமென உலக வங்கியின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி சியோ கண்டா தெரிவித்துள்ளார். உலக வங்கியின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையில் நேற்றுப் பிற்பகல், கொழும்பு – கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மருந்து, சுகாதாரத் தேவைகள், சமூகப் பாதுகாப்பு, விவசாயம், உணவுப் பாதுகாப்பு மற்றும் எரிவாயு தேவைகளைப் பூர்த்தி செய்ய இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது. தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு தொடர்ந்தும் உதவிகளை வழங்குவதாகவும் உலக வங்கியின் பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர். - [தேசிய இளைஞர் சேவைகள் மன்ற சாய்ந்தமருது பயிற்சி நிலைய 10 ஆண்டுகள் நிறைவினை முன்னிட்டு விசேட நிகழ்வு](https://minnal24.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%87%e0%ae%b3%e0%af%88%e0%ae%9e%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%87%e0%ae%b5%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d/): -கல்முனை நிருபர்- தேசிய இளைஞர் சேவைகள் மன்ற சாய்ந்தமருது பயிற்சி நிலையம் ஸ்தாபிக்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு பயிற்சி நிலையத்தின் இளைஞர் கழகம் ஏற்பாடு செய்த விசேட நிகழ்வும் வருடாந்த இப்தார் வைபகமும் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற சாய்ந்தமருது பயிற்சி நிலையத்தின் நிலைய பொறுப்பதிகாரி எம்.ரீ.எம்.ஹாறூன் தலைமையில் திங்கட்கிழமை மாலை இடம்பெற்றது. இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், மேலும் விசேட அதிதிகளாக தேசிய இளைஞர் சேவைகள் மன்ற ஓய்வுபெற்ற உதவிப்பணிப்பாளர் ஏ. லத்திப், அம்பாரை மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி ஏ. முபாரக் அலி, மருதமுனை பரக்கத் டெக்ஸ் முகாமைத்துவப் பணிப்பாளர் எம்.ஐ.ஏ.பரீட், ஓய்வுபெற்ற மாவட்ட பதிவாளர் ஜமால் முஹம்மட், அல்- அமானா நற்பணி மன்ற தலைவர் ஏ.எல். பரீட், சாய்ந்தமருது பிரதேச இளைஞர் சேவை அதிகாரி எம்.எம். ஷமீலுள் இலாஹி, தேசிய இளைஞர் சேவைகள் மன்ற சாய்ந்தமருது […] - [காரைதீவு பிரதேச செயலக கணக்காளராக றிம்ஷியா அர்சாட் நியமனம்](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%af%88%e0%ae%a4%e0%af%80%e0%ae%b5%e0%af%81-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%ae%b2%e0%ae%95-%e0%ae%95%e0%ae%a3/): -கல்முனை நிருபர்- இறக்காமம் பிரதேச செயலகத்தில் கடந்த 08 வருடங்கள் கணக்காளராக கடமையாற்றி வந்த றிம்ஷியா அர்சாட் கடந்த திங்கட்கிழமை முதல் காரைதீவு பிரதேச செயலகத்திற்கு இடமாற்றம் பெற்றுள்ளார். இடமாற்றம் பெற்ற கணக்காளர் றிம்ஷியா அர்சாட்டை சம்பிரதாய பூர்வமாக வழியனுப்பி வைக்கும் நிகழ்வு, பிரதேச செயலாளர் எம். எஸ். எம். ரஷ்ஷான் (நளீமி) தலைமையில் இறக்காமம் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. இதனை தொடர்ந்து கணக்காளர் றிம்ஷியா அர்சாட், காரைதீவு பிரதேச செயலாளர் எஸ். ஜெகராஜன் முன்நிலையில் தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். இறக்காமம் பிரதேச செயலகத்தில் 2014 ஆம் ஆண்டு முதல் கடந்த 08 வருடங்களாக கணக்காளராக சிறந்த முறையில் பணியாற்றியமையை கௌரவித்து பாராட்டுக்களைத் தெரிவித்து இறக்காமம் பிரதேச செயலாளரினால் வாழ்த்துரை இதன்போது வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் இறக்காமம் உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அஹமட் நஸீல், காரைதீவு உதவி பிரதேச செயலாளர் எஸ். பார்த்தீபன், அக்கரைப்பற்று பிரதேச செயலக கணக்காளர் […] - [இயற்கையோடு இணைந்த மழலை பூங்கா திறந்து வைப்பு](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%87%e0%ae%a3%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%ae%e0%ae%b4%e0%ae%b2%e0%af%88-%e0%ae%aa/): -கிளிநொச்சி நிருபர்- யாழ்.வெத்திலைக்கேணி கட்டைக்காடு பகுதியில் உள்ள 55 இராணுவ படைப்பிரிவினரினால் புதிதாக அமைக்கப்பட்ட  இயற்கையோடு இணைந்ததாக மழலை பூங்காவை யாழ்.மாவட்ட படைமுகாம்களின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா பிரதம ஆதியாக கலந்துகொண்டு உத்தியோகபூர்வமாக திறந்து வைத்து மழலைகளுக்கு கையளித்தார். இயற்கையாக அமைந்த பனை மரச் சோலையில் சிறார்களின் சிறந்த கொள்கையில் செல்லும் நோக்கில் மழலைப் பூங்காவை அமைத்து சிறார்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. - [தொழிற்சங்க போராட்டங்களில் மலையக தொழிற்சங்கங்களும் கலந்து கொள்ள ஏற்பாடு](https://minnal24.com/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf/): -நுவரெலியா நிருபர்- 28ம் திகதி நடைபெறுகின்ற தொழிற்சங்க போராட்டங்களில் மலையக தொழிற்சங்கங்களும் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில்  இதில் இணைந்துக் கொள்ள வேண்டும் என்பதோடு, தோட்ட தொழிலாளர்களும் இதற்கு ஆதரவு வழங்க வேண்டும், என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அட்டனில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, விலைவாசி உயர்வு, அரசியல் அராஜகம் போன்ற பிரச்சினைகள் இந்த நாட்டில் நடந்துக் கொண்டிருக்கின்றது. இதற்கு அனைத்து தொழிற்சங்கங்களும் அரசுக்கு எதிராக 28ம் திகதி போராட்டத்தை நடத்த இருக்கின்றனர். இதற்கு நாங்களும் ஆதரவு வழங்கி இணைந்துக் கொள்கின்றோம். எனவே மலையக மக்கள் முன்னணி மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து […] - [மன்னார் மனிதப் புதைகுழி மேலதிக அறிக்கையை சமர்ப்பிக்க கால அவகாசம் கோரப்பட்டுள்ளது](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%bf/): -மன்னார் நிருபர்- மன்னார் மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எச்சங்கள் மற்றும் சான்றுப் பொருட்கள் தொடர்பான மேலதிக அறிக்கையை சமர்ப்பிக்க நீதிமன்றத்தில் மூன்று வார கால அவகாசம் கோரப்பட்டுள்ளது. சட்ட வைத்திய அதிகாரி மற்றும் தொல்பொருள் திணைக்களத்தின் பேராசிரியர் ராஜ் சோமதேவ ஆகியோர் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் நேற்று இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர். மனிதப் புதைகுழி அகழ்வுப் பணியை மேற்கொள்ள தேவையான காலம் தொடர்பிலும், ஏற்கனவே மீட்கப்பட்ட எச்சங்களை பிரித்தெடுத்து அறிக்கை தயார் செய்வதற்கான காலம் தொடர்பிலும் நேற்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கமைய, இந்த விடயம் தொடர்பான மேலதிக அறிக்கைகளை தயார் செய்ய மூன்று வாரங்கள் அவசியம் என மன்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கைக்கு அமைய, மனிதப் புதைகுழி வழக்கை எதிர்வரும் மே மாதம் 20 ஆம் திகதி வரை மன்னார் நீதவான் ஒத்திவைத்துள்ளார். இதனிடையே, மன்னார் நீதவான் நீதிமன்றத்தின் வழக்கு விசாரணை தொடர்பான முன்னேற்ற அறிக்கை வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு அனுப்பி […] - [அரசாங்கத்தை செயற்கையாகப் பாதுகாக்க முயற்சிப்பதில் அர்த்தமில்லை](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%aa/): சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு இடமளித்து பதவி விலகத் தயார் என ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மை உறுப்பினர்களால் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். முழு அரசாங்கமும் இராஜினாமா செய்ய வேண்டும் என்ற சுமூகக் கருத்து உருவாகியுள்ளதாகவும் அதன் காரணமாக பிரதமர் உட்பட அரசாங்கத்தின் அனைத்து உறுப்பினர்களும் இராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூகக் கருத்துக்குப் புறம்பாக அரசாங்கத்தை செயற்கையாகப் பாதுகாக்க முயற்சிப்பதில் அர்த்தமில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார் - [மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0-2/): மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லையென இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது. மின்சாரக் கட்டணங்களைத் திருத்துவதற்கு இலங்கை மின்சாரச் சட்டத்தின் 30 ஆவது பிரிவின் கீழ் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதி தேவை. மேலும், கட்டண திருத்தம் செய்தால், திருத்த முன்மொழிவை பொதுமக்களிடம் சமர்ப்பித்து, பொதுமக்களின் கருத்துகளைப் பெறுவது கட்டாயமாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். - [இலங்கைக்கு உலக வங்கி 600 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf-600-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b2/): இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண உலக வங்கி 600 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதன் முதல் கட்டத்தின் கீழ் 400 மில்லியன் அமெரிக்க டாலர்கள் விரைவில் வெளியிடப்படும் என்று உலக வங்கியின் மேலாளர் சியோ காண்டா தெரிவித்துள்ளார். உலக வங்கியின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையில் இன்று கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே சியோ காண்டா இதனைத் தெரிவித்தார். மருந்துகள் , சுகாதாரத் தேவைகள், சமூகப் பாதுகாப்பு, விவசாயம், உணவுப் பாதுகாப்பு மற்றும் எரிவாயுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு இந்த நிதியுதவி வழங்கப்படும். தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு தொடர்ந்து உதவிகளை வழங்குவதாக உலக வங்கி பிரதிநிதிகள் தெரிவித்துள்ளதாக இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. - [28ஆம் திகதி மரக்கறி விநியோகம் இல்லை](https://minnal24.com/28%e0%ae%86%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%af%e0%af%8b/): நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களுக்கும் மரக்கறி விநியோகம் நாளை மறுநாள் வியாழக்கிழமை இடம்பெறாது என அகில இலங்கை விசேட பொருளாதார மத்திய நிலையங்களின் சங்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 28ஆம் திகதி மக்கள் ஹர்த்தாலை நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், 28ஆம் திகதி மரக்கறி கையிருப்புகளை அனுப்ப வேண்டாம் என கொழும்பு மெனிங் சந்தை உள்ளிட்ட பல பொருளாதார நிலையங்கள் விடுத்த கோரிக்கையை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. - [எலான் வசமானது டுவிட்டர்](https://minnal24.com/%e0%ae%8e%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9f%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d/): டுவிட்டா் நிறுவனத்தை டெஸ்லா தலைமைச் செயல் அதிகாரி எலான் மஸ்க் 44 பில்லியன் டொலருக்கு கொள்வனவு செய்வது  முடிவானது. இது தொடா்பாக டுவிட்டா் – எலான் மஸ்க் இடையே பேச்சுவாா்த்தை நடைபெற்றது. ட்விட்டா் நிறுவனத்தை கொள்வனவு செய்வதற்கு டெஸ்லா தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் அண்மையில் விருப்பம் தெரிவித்திருந்தாா். இதற்காக 43 பில்லியன் டொலா் (சுமாா் 10 இலட்சம் கோடி) ரொக்கம் அளிக்கத் தயாா் என்றும் அவா் கூறியிருந்தாா். இதையடுத்து நிறுவனத்தை அவா் கையகப்படுத்த இயலாத வகையில் பங்கு ஒழுங்காற்று விதிமுறைகளின் கீழ் டுவிட்டா் நிா்வாகம் தடைகளை ஏற்படுத்தியது. எனினும், எலான் மஸ்க் அல்லது இதே போன்ற கையகப்படுத்தும் நோக்கத்துடன் முன்வரும் வேறு ஏதேனும் முதலீட்டாளரை நிரந்தரமாகத் தடுத்துவிட முடியாது என்ற நிலையில், டுவிட்டா் நிறுவனம் மனம் மாறியது. எலான் மஸ்குடன் டுவிட்டா் நிா்வாகக் குழு நேற்று பேச்சுவாா்த்தை நடத்தியது. அப்போது ட்விட்டரை வாங்குவதற்கான தொகை, கால வரம்பு உள்ளிட்டவை […] - [இரண்டு வாரங்களுக்கு ஒரு தடவை மருந்து விலைகளில் திருத்தம்](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81/): இரண்டு வாரங்களுக்கு ஒரு தடவை மருந்துகளின் விலைகளில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த சந்தர்ப்பங்களில் காணப்படும் டொலரொன்றின் பெறுமதிக்கமைய இந்த திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. மருந்துகளின் விலைகளை அதிகரிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் முன்வைக்கும் கோரிக்கைகளுக்கு தாம் ஒரு போதும் இணங்குவதில்லை என சுகாதார அமைச்சர், பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார். டொலரொன்றின் பெறுமதிக்கு நிகராக விலைகளை திருத்தியமைத்து, நோயாளர்களுக்கு தேவையான மருந்துகளை தட்டுப்பாடின்றி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார். - [அரச சேவைகளின் செலவீனங்களை கட்டுப்படுத்த சுற்றறிக்கை](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a-%e0%ae%9a%e0%af%87%e0%ae%b5%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%ae%b5%e0%af%80%e0%ae%a9%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3/): நிதி அமைச்சின் செயலாளர் அரச சேவைகளின் செலவீனங்களை கட்டுப்படுத்துவதற்கான சுற்றறிக்கையை வௌியிட்டுள்ளார். திட்டச் செலவினக் கட்டுப்பாட்டு அமைப்பு, எரிபொருள் குறைப்பு, தகவல் தொடர்புச் செலவுகள் மற்றும் அரசாங்கத் துறை ஆட்சேர்ப்புகளை இடைநிறுத்தல் இதனூடாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பொதுச் செலவினங்கள் மிகவும் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் வகையில் கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பதால், உள்ளூர் நிதியில் நிதியளிக்கப்படும் திட்டங்களைச் செலவு மற்றும் செயல்படுத்துவதில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளைக் கோடிட்டு நிதி அமைச்சின் செயலாளர் குறித்த சுற்றறிக்கையை வௌியிட்டுள்ளார். - [விலை உயர்வினால் காதலித்த பெண்ணை கைவிட்ட காதலன்](https://minnal24.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%89%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d/): வடமேற்கு சீனாவில் பல ஆண்டுகள் காதலித்த பெண்ணை திருமணம் புரிவதற்கு மணப் பெண்ணுக்கான 300,000 யுவான் பணத்தை வழங்க முடியாததால் காதலன் அந்தப் பெண்ணை கைவிட்டுள்ளார். பெண்ணின் உடல் மற்றும் உழைப்பை உரிமையாக்குவதற்காகவே மணப்பெண்ணுக்கு பணம் செலுத்தும் வழக்கம் இருந்து வருகிறது. எனினும் கன்சு மாகாணத்தில் வசிக்கும் குயின் என்ற ஆடவர் வருடாந்தம் 20,000 யுவான் வருமானத்தை பெறும் நிலையில் மணப்பெண்ணின் விலையாக நிர்ணயிக்கப்பட்ட தொகையை சேகரிக்க 15 ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது. திருமண சடங்கில் சீர்திருத்தங்களை கொண்டுவர சீன அரசு முயன்றபோதும் மணமகள் விலை சீன சமூகத்தில் தொடர்ந்து அதிகமாக உள்ளது. குறிப்பாக கிராமப் பகுதிகளில் இந்த சிக்கலால் பலரும் தொடர்ந்து திருமணம் செய்ய முடியாத நிலையில் உள்ளனர். - [4,860 ரூபாவாக எரிவாயு விலை அதிகரிப்பு](https://minnal24.com/4860-%e0%ae%b0%e0%af%82%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95-%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf/): இன்று  செவ்வாய்க்கிழமை நள்ளிரவு   முதல் அமுலுக்கு வரும் வகையில் 12.5kg சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 4,860 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக, லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த வகையில், இதற்கு முன்னர் ரூ. 2,675 ஆக இருந்த 12.5kg சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 2,185 இனால் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் 5kg, 2.3kg சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய லிட்ரோ சமையல் எரிவாய சிலிண்டர்களின் புதிய விலைகள் 12.5kg: ரூ. 2,675 இலிருந்து ரூ. 4,860 ஆக ரூ. 2,185,  5kg: ரூ. 1,071 இலிருந்து ரூ. 1,945 ஆக ரூ. 874 , 2.3kg: ரூ. 910 இலிருந்து ரூ. 910 ஆக ரூ. 404 என்றவாறு அதிகரிக்கப்பட்டுள்ளது. - [நிதி மற்றும் நீதி அமைச்சராக அலி சப்ரி](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a/): அமைச்சர் அலி சப்ரி இன்று  செவ்வாய்க்கிழமை பிற்பகல் கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் நீதி அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். நிதி அமைச்சர் அலி சப்ரி மீண்டும் நீதி அமைச்சராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார். நிதி மற்றும் நீதி அமைச்சராக அலி சப்ரி கடமையாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. - [பதுளையில் சட்டத்தரணிகள் அமைதி வழி போராட்டம் ஒன்றை முன்னெடுப்பு](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%a4%e0%af%81%e0%ae%b3%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/): -பதுளை நிருபர்- இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.00 மணியளவில் அரசிற்கு எதிராக தங்களின் எதிர்ப்பினை பதுளை சட்டத்தரணிகள் முன்னெடுத்தனர். பதுளை நீதி மன்ற கட்டிட வளாகத்தில் ஆரம்பமாகிய, இந்த எதிர்ப்பு பேரணி பதுளை பொது வைத்தியசசாலை வரையில் சென்றனர் டீசல் விலையுர்வு, எரிவாயு இன்மை, பொருட்கள் விலை உயர்வு, பஸ் கட்டணம் அதிகரிப்பு, பால்மா விலை உயர்வு, அத்தியாவசிய பொருள்கள் தட்டுப்பாடு போன்ற விடயங்களை முன்வைத்து பதாதைகளை ஏந்தி எதிர்ப்பில் ஈடுபட்ட சட்டத்தரணிகள் மீண்டும் பதுளை நீதிமன்றம் வரையில் பேரணியை முன்னெடுத்தார்கள். - [அமெரிக்க தூதுவர் ஜீலி சுங் முகமாலை பகுதிக்கு விஜயம்](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%ae%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%a4%e0%af%82%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9c%e0%af%80%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%9a%e0%af%81/): -கிளிநொச்சி நிருபர்- யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க தூதுவர் இன்று காலை 7.45 மணியளவில் முகமாலை பகுதிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். அமெரிக்க கொடையாளர்களின் நிதி உதவியில் முகாமாலை பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளை நேரில் பார்வையிட்டுள்ளார். டாஸ் நிறுவனத்தினால் குறித்த பகுதியில் கண்ணிவெடி அகற்றும் செயற்பாட்டில் ஈடுபட்டு வரும் பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவருக்கு குறித்த மனிதநேய பணி தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது. தொடர்ந்து குறித்த பகுதியில் மேற்கொள்ளப்படுவரும் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளை நேரில் சென்று பார்வையிட்டதுடன், கள ஆய்வினையும் மேற்கொண்டு அங்கு கடமையில் ஈடுபட்டுள்ள மனிதநேய கண்ணிவெடி அகற்றம் பணியாளர்களுடன் கலந்துரையாடியிருந்தார். தொடர்ந்து குறித்த பகுதியில் அகற்றப்பட்ட ஆபத்தமிக்க வெடி பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு தூதுவருக்கு விளக்கமளிக்கப்பட்டது. தொடர்ந்தும் குறித்த பகுதியில் கண்ணிவெடிகள் காணப்படுகின்றமை தொடர்பிலும், அவற்றை அகற்றவேண்டிய தேவைகள் தொடர்பிலும் அதிகாரிகளால் விளக்கமளிக்கப்பட்டது. தொடர்ந்து கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள டாஸ் நிறுவனத்தின் பணியாளர்கனுடன் புகைப்படம் எடுக்கப்பட்டது. குறித்த […] - [கொழும்பு வித்தியா விருத்திச் சங்கத்தின் விவாதப் போட்டியில் யாழ்.வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி முதலிடம்](https://minnal24.com/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d/): -யாழ் நிருபர்- கொழும்பு வித்தியா விருத்திச் சங்கத்தின் எழுபதாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நிகழ்நிலையில் நடாத்தப்பட்ட விவாதப் போட்டியில் கலந்துகொண்டு, யாழ்.வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி மாவட்ட ரீதியிலும் மாகாண ரீதியிலும் முதலிடத்தை தட்டிச் சென்றது. பின்னர் அதன் இறுதிப் போட்டியானது கடந்த 23.04.2022 அன்று கொழும்பு  லோறன்ஸ் வீதியில் அமைந்துள்ள சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற்றது. இந்த இறுதிப் போட்டியில் கலந்துகொண்டு கொழும்பு பம்பலப்பிட்டி இந்து பாடசாலை தேசிய ரீதியில் முதலாம் இடத்தை பெற்றுக்கொண்டதுடன் யாழ்.வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்டது சி.கேசவன், ர.துலக்சன், இ.அஸ்வின், ந.பிருதிக்சா ஆகிய மாணவர்களே வட்டுக்கோட்டை இந்து கல்லூரி சார்பில் கலந்துகொண்டு யாழ்.மண்ணிற்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பணப்பரிசு, சான்றிதழ்கள், நூற் பரிசு மற்றும் வெற்றிக்கேடயம் என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டது. - [மாணவியை ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுத்திய சகோதரிகள் கைது](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%93%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af/): பாடசாலை மாணவியை ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுமாறு பாலியல் தொல்லை கொடுத்து வந்த உறவு முறையான சகோதரிகள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது. சென்னை – மதுரை மாவட்டம் மேலூர் அருகே கரையப்பட்டியை சேர்ந்த உறவு முறையான இவர்கள் இருவரும் மேலூரில் உள்ள துணிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வரும்நிலையில், துணிக்கடை அருகே குடியிருக்கும் 17 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுமாறு தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இந்த விடயம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் மேலூர் அனைத்து மகளிர் பொலி நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இதையடுத்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த சகிதாபேகம் மற்றும் அவரது சகோதரி வகிதா பானு ஆகிய இருவர் மீதும் போக்சோ மற்றும் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துடன், இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் போது சகிதா பேகத்தின் […] - [வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களுக்கு முதலீட்டு வாய்ப்புகள் உருவாக்கி கொடுக்கப்படும்](https://minnal24.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88/): -யாழ் நிருபர்- வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்கு இலங்கையில் முதலீடு மற்றும் தொழில் வாய்ப்புக்களை உருவாக்கி கொடுப்பதற்கு அரசாங்கம் தயாராக உள்ளதாக வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார். அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அவ் அறிக்கையில் மேலும் உள்ளதாவது, வெளிநாட்டில் வாசிக்கும் இலங்கையர்களை நாட்டுக்கு வரவழைத்து முதலீடு மற்றும் தொழில் வாய்ப்புக்களை உருவாக்கும் பொருட்டு அரசாங்கம் 11 அம்ச கொள்கை திட்டம் ஒன்றை தயாரித்துள்ளது. மேலும் வட மாகாணத்தில் இரண்டு வருடத்தில் விவசாயத்துறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் தயார் செய்யப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றது. அதுமட்டுமல்லாது பெண் தலைமைத்துவத்தை கொண்ட குடும்பங்கள், கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், முதியவர்கள் சமுர்த்தி பயனாளிகள் மற்றும் நிரந்தர வாழ்விடங்களை அற்றவர்கள் தொடர்பிலு தொடர்ச்சியாக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. வடக்கில் எரிபொருள் விநியோகம் அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் என்பவற்றை தடையின்றி வழங்குவதற்குரிய ஏற்பாடுகள் இடம்பெற்று வருகிறது. தீவக பகுதிகளின் தேவைகள் தொடர்பில் அவதானம் செலுத்தி வருகின்ற […] - [3ஆம் உலக போர் நடக்கும் அபாயம் ?](https://minnal24.com/3%e0%ae%86%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%aa%e0%ae%be/): உக்ரைன் உடன் அமைதி பேச்சுவார்த்தை தொடரும் என தெரிவித்துள்ள ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் 3ஆம் உலக போர் நடக்கும் அபாயமும் உள்ளதாக எச்சரித்துள்ளார். ரஷ்ய ஊடகங்களிடம் பேசிய அமைச்சர் செர்ஜி லாவ்ராவ், நல்லெண்ணம் என்பதற்கு ஒரு அளவு இருப்பதாகவும், எதிர் தரப்பில் இருந்து அதற்கான பிரதிபலன் இல்லையெனில் பேச்சுவார்த்தைக்கு அது உதவாது என தெரிவித்தார். உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி ஒரு சிறந்த நடிகர் என விமர்சித்த லாவ்ராவ், அவரது பேச்சில் பல முரண்பாடுகள் உள்ளதாகவும் , அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதை போல நடிக்கிறார் எனவும் குற்றம்சாட்டினார். மேலும், 3ஆம் உலக போர் என்ற அபாய சூழல் உருவாவதை குறைத்து மதிப்பிட முடியாது என தெரிவித்த அவர், உக்ரைன் உடனான பிரச்னை அமைதி ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வரும் என தான் நம்புவதாக கூறினார். - [தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பு](https://minnal24.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a3%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf-2/): அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கும் வகையில் அமைச்சரவை உருவாக்க வேண்டிய காலம் உருவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதனூடாக தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியுமெனவும் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு தேர்தல்கள் ஆணைக்குழு இதனைக் குறிப்பிட்டுள்ளது. - [விலை அதிகரிக்காமல் எரிவாயு விநியோகிக்க முடியாது](https://minnal24.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be/): சமையல் எரிவாயு விலைகளை அதிகரிக்காமல் எரிவாயு விநியோகிக்க முடியாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. ஆகையால் விலை அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கம் முடிவெடுக்க வேண்டுமென லிட்ரோ நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் இன்றைய தினம் தீர்மானம் எட்டப்படும் என அமைச்சரவை இணைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். 12.5 கிலோ கிராம் நிறைக் கொண்ட சமையல் எரிவாயுவின் விலையை 2,500 ரூபாவால் அதிகரிக்க லிட்ரோ நிறுவனம் தீர்மானித்திருந்தது. எனினும், அந்த விலை அதிகரிப்பை நடைமுறைப்படுத்த அனுமதி வழங்கவில்லை என அரசாங்கம் அறிவித்திருந்தது. இதன்படி, பழைய விலைக்கே 12.5 கிலோ கிராம் நிறைக் கொண்ட லிட்ரோ சமையல் எரிவாயு விற்பனை செய்யப்படுகின்றது. - [தினமும் 10 ஆயிரம் டொலர்களை செலுத்துமாறு ட்ரம்ப்க்கு உத்தரவு](https://minnal24.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-10-%e0%ae%86%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9f%e0%af%8a%e0%ae%b2%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88/): வழக்கு ஒன்றில் ஆவணங்களை அளிக்காததற்காக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நீதிமன்றத்தை அவமதித்ததாக நியுயோர்க் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவர் நீதிமன்ற உத்தரவின்படி ஆவணங்களை வழங்குவரை தினமும் 10 ஆயிரம் டொலர்கள் அபராதமாக செலுத்தவேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. டொனால்ட் ட்ரம்பின் தொழில் நடைமுறைகள் தொடர்பான ஆவணங்களை வழங்க நியுயோர்க் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. முதலில் மார்ச் 3ஆம் திகதி வரையும் பின்னர் மார்ச் 31ஆம் திகதி வரையும் அவகாசம் அளிக்கப்பட்டும் ட்ரம்ப் தரப்பில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்படவில்லை. இதனால் அவர் நீதிமன்றத்தை அவமதித்ததாக தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு தினமும் 10 ஆயிரம் டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அவரை தண்டிப்பதற்காக அல்லவென்றும், அவர் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தவேண்டும் என்பதற்காகவே விதிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இந்த உத்தரவை எதிர்த்து ட்ரம்ப் மேல்முறையீடு செய்வார் என அவர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. - [40 லீற்றர் கசிப்புடன் இருவர் கைது](https://minnal24.com/40-%e0%ae%b2%e0%af%80%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5/): -கிளிநொச்சி நிருபர்- சுற்றுக்காவல் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய, 40 லீட்டர் கசிப்புடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று இரவு நெத்தலி ஆற்றுப் பகுதியிலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளில் இரண்டு சந்தேக நபர்கள் உரப்பையில் மறைத்து 40 லீற்றர் கசிப்பினை புதுக்குடியிருப்பு நோக்கி எடுத்துச் சென்றனர். அவ்வேளை, இரவு காவல் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரின் வீதி சோதனையின் போது குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். அத்துடன், அவர்களிடமிருந்து 40 லீட்டர் கசிப்பு மற்றும் கசிப்பினை எடுத்துச் செல்வதற்காக பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் என்பவை பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரையும் இன்று செவ்வாய்க்கிழமை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தருமபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எம்.சதுரங்க தெரிவித்துள்ளார். - [கடற்படையினர் அபகரித்த தனது எட்டு பரப்பு காணியை மீட்க பல வருடங்களாக போராடும் முதியவர்](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%85%e0%ae%aa%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%8e%e0%ae%9f/): -யாழ் நிருபர்- சங்கானை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை தெற்கு, பொன்னாலை சந்திக்கு அண்மையில் ஜே/170 கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான காணி ஒன்றினை அளப்பதற்கு நில அளவை திணைக்களம் வருகை தந்தது. முத்துக்குமாரசாமி விநாசித்தம்பி என்பவரது எட்டு பரப்புக் காணியில் இலங்கை கடற்படையினர் கடற்படை முகாமை அமைத்து இருந்தது. இந்நிலையில், இன்று குறித்த காணியை நில அளவீட்டை மேற்கொள்வதற்காக நில அளவைத் திணைக்களம் வருகை தந்த நிலையில் காணி உரிமையாளர், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் தமது எதிர்ப்பினை வெளியிட்னர். இதனை அடுத்து, குறித்த காணியினை அளவீடு செய்ய முடியாத நில அளவை திணைக்களம் காணி உரிமையாளரிடமும் அங்கு எதிர்ப்பில் ஈடுபட்டவர்களிடமும் கடிதத்தினை வாங்கிய பின்னர் அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.   - [வாழைச்சேனையில் நீதி கேட்டு வழிபாட்டு ஆராதனை நிகழ்வு](https://minnal24.com/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%87%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%95%e0%af%87%e0%ae%9f%e0%af%8d/): -வாழைச்சேனை நிருபர்- ‘நீதியின் தேவனே வரவேண்டும் நிம்மதி எம் வாழ்வில் தரவேண்டும் ‘ எனும் தொனிப்பொருளில், வாழைச்சேனை கிறிஸ்தவ வாலிப சங்கத் தலைவர் ஞா.ஜோய் பிரகாஸ் தலைமையில் உயிர்த்த ஞாயிறு தினமன்று உயிரிழந்தவர்களின் இளைப்பாறுதலுக்கும் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார சுமையால் அல்லலுறும் அனைத்து மக்களுக்காகவும் விடுதலை வேண்டி நீதியின் தேவனிடம் நீதி கேட்டு வழிபாட்டு ஆராதனை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கிறிஸ்த்தவ பணிக்குழு பொறுப்பாளர் றோய்மாணிக்கத்தின் ஏற்பாட்டில் பிரதேச கிறிஸ்தவ திருச் சபைகளை இணைத்து இந் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது கிறிஸ்தவ ஆண்மீக பாடல்களும், வேதாகம வசனங்களும் வாசிக்கப்பட்டு ஜெப ஆராதனைகளும் இடம்பெற்றது. நிகழ்வின் இறுதியில் இறந்தவர்களுக்காக நினைவு சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் குறுத்துவ வாழ்வில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த கத்தோலிக்க அருட்பணியாளரான ஏ.அருளானந்தம் கலந்து சிறப்பித்து அருளுரை வழங்கினார். அத்துடன், ஏனைய திருச்சபை குருவானவர்களும் போதகர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். வாழைச்சேனை வை.எம்.சி.ஏ. புதிய […] - [அதிபரை இடமாற்றம் செய்ய வேண்டாம் எனக்கூறி கவனயீர்ப்பு](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%b0%e0%af%88-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%af-%e0%ae%b5/): -யாழ் நிருபர்- சுழிபுரம் – காட்டுப்புலம் அ.த.க. பாடசாலை அதிபரை இடமாற்றம் செய்ய வேண்டாம், எனக்கூறி அந்த பாடசாலையின் பழைய மாணவர்களும் பெற்றோர்களும் இன்று பாடசாலைக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த அதிபர் பாடசாலைக்கு வந்தது தொடக்கம் அவர் மாணவர்களது நலன்கள் மீது காட்டுகின்ற அக்கறை, மாணவர்கள் மீதான அணுகுமுறை மற்றும் பாடசாலையின் தலைமைத்துவம் என்பன சிறப்பாக காணப்படுவதால் அவரை இடமாற்றம் செய்ய வேண்டாம் எனக்கூறி கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். கவனயீர்ப்பின் பின்னர் வலயக்கல்வி பணிமனைக்கு கடிதம் ஒன்று கையளிக்கப் போவதாகவும் 5 நாட்களுக்குள் தகுந்த பதில் தராவிட்டால் பாரிய ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுக்கப்போவதாகவும் கவனயீர்ப்பில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். குறித்த அதிபர் பாடசாலைக்கு வந்த பின்னர் வரலாற்றில் முதல் தடவையாக மாணவர் ஒருவர் புலமை பரிசில் பரீட்சையில் சித்தி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. - [மட்டக்களப்பில் இடம்பெற்ற தந்தை செல்வாவின் 45வது சிரார்த்த தின நிகழ்வு](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1-5/): இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் 45வது சிரார்த்த தினம் மட்டக்களப்பு தந்தை செல்வா நினைவு முற்றத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு கிளை ஏற்பாட்டில் இடம்பெற்றது. கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பொன்.செல்வராசா தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றிருந்தது. இதன்போது தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து தீபமேற்றிஇ மலரஞ்சலி செலுத்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் உள்ளடங்களாக தமிழரசுக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் அங்கத்தவர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.   - [இன்னும் தீர்மானம் எடுக்கப்படவில்லை - மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b0%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/): இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதி கிடைத்துள்ள போதும், மின்சார சபையினால் முன்மொழியப்பட்ட கட்டண திருத்தங்கள் தொடர்பில் இன்னும் தீர்மானம் எடுக்கப்படவில்லை, என மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். எனினும், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி அளிப்பதானது  முதல் தடவை அல்ல, கட்டண திருத்தங்களுக்கான கோரிக்கை 2015 முதல் பலமுறை முன்வைக்கப்பட்டது. இதனை நடைமுறைப்படுத்தவோ, திருத்தவோ அல்லது பிரேரணையை நிராகரிக்கவோ அமைச்சரவைக்கு அதிகாரம் உள்ளதாக அமைச்சர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய, மின்சாரக் கட்டணத்தை திருத்தும் கோரிக்கை தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை, என அவர் மேலும் தெரிவித்துள்ளார். - [சீமெந்து விலையுடன் மணல் விலையும் அதிகரிப்பு](https://minnal24.com/%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%b2%e0%af%8d/): இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் 50 கிலோகிராம் நிறையுடைய ஒரு மூடை சீமெந்தின் விலை 400 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு மூடை சீமெந்தின் புதிய விலை 2,850 ரூபாவாகும். அத்துடன் உள்நாட்டு சீமெந்து ஒரு மூடை 2,750 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது. இதேவேளை, சீமெந்தின் விலை வெகுவாக அதிகரித்துள்ளமையினால் எதிர்வரும் 3 மாதங்களுக்கு சீமெந்தினை கொள்வனவு செய்வதை தவிர்க்குமாறு இலங்கை தேசிய கட்டுமான சங்கம் கோரியுள்ளது. 1,375 ரூபாவிற்கு காணப்பட்ட சீமெந்து மூடை ஒன்றின் விலை தற்போது பாரியளவு அதிகரிக்கப்பட்டுள்ளதாக, இலங்கை தேசிய கட்டுமான சங்கத்தின் தலைவர் சுசந்த லியனாராச்சி தெரிவித்துள்ளார். மேலும் மணலின் விலையும் அதிகரித்துள்ளதாக அவ் குறிப்பிட்டுள்ளார். - [மின்சார கட்டணம் 100 சதவீதத்தினால் அதிகரிப்பு](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-100-%e0%ae%9a%e0%ae%a4%e0%ae%b5%e0%af%80%e0%ae%a4%e0%ae%a4%e0%af%8d/): மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு அமைய, மின்சாரக் கட்டணத்தை 100 சதவீதத்தினால் அதிகரிப்பதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. - [யாழில் இடம் மாற்றத்திற்கு ஒத்துழைக்காத 47 அதிபர்கள்](https://minnal24.com/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95/): -யாழ் நிருபர்- யாழ். வலயத்தில் ஆசிரியர் நியமனத்தின் போதும், அதிபர் நியமனத்தின்போதும் இதுவரை வெளி மாவட்டம் செல்லாத 47 அதிபர்கள் யாழ். மாவட்டத்திலே தொடர்ந்தும் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. யாழ்ப்பாணத்தில் தீவகம் தவிர்ந்த யாழ். வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம் ஆகிய வலயங்களிலே குறித்த அதிபர்கள் கடமையாற்றுகின்றனர். இவ்வாறான நிலையில் தற்போது முதற்கட்டமாக 27 அதிபர்களுக்கு வெளி மாவட்டங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்படவுள்ள நிலையில் 27 பேரும் மேல்முறையீடு செய்திருப்பதாக அறிய வருகிறது. இவ்வளவு காலமும் அரசியல் செல்வாக்கு அதிகாரிகளின் செல்வாக்கு என்பவற்றை பயன்படுத்தி யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறாத குறித்த 47 பேரும் தொடர்ந்தும் யாழ்ப்பாணத்தில் கடமையாற்றும் அதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த விடயம் தொடர்பில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் வரதீஸ்வரனைத் தொடர்பு கொண்டபோது, தாம் அதிபரிடம் மாற்றத்தில் உறுதியாக இருப்பதாகவும், சரியான மருத்துவ அறிக்கை வழங்கப்படும் சந்தர்ப்பத்தில் பரிசீலிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். - [இன்று இரண்டு மணி நேர மின்வெட்டு](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d/): நாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை இரண்டு மணி நேரம்   மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது. இதன்படி, A முதல் L மற்றும் P முதல் W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் முற்பகல் 9.30 முதல் மாலை 5.30 வரையான காலப்பகுதியில் சுழற்சி முறையில் 2 மணிநேரம் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது. அத்துடன், குறித்த வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு மாலை 5.30 முதல் இரவு 9.30 வரையான காலப்பகுதியினுள் சுழற்சி முறையில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின் துண்டிப்பு அமுலாகவுள்ளது. கொழும்பு நகர் பகுதியில் காலை 6 மணிமுதல் 9 மணிவரையான காலப்பகுதியில் 3மணி நேரம் மின் துண்டிப்பை அமுல்படுத்த பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது. - [போத்தல் ஒன்றில் பெற்றோல் வழங்க மறுத்ததால் வந்த வினை](https://minnal24.com/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%92%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%8b%e0%ae%b2%e0%af%8d/): போத்தல் ஒன்றில் பெற்றோல் வழங்க மறுத்தார் எனத் தெரிவித்து எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் ஒருவர் தாக்கப்பட்டு அவரது மூன்று பற்கள் உடைக்கப்பட்ட சம்பவம் கண்டியில் இடம்பெற்றுள்ளது. தலாத்துஓயா மாரஸ்ஸன பலநோக்குக் கூட்டுறவு சங்கத்துக்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் தாக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவத்தில் ஊழியரின் மூன்று பற்கள் உடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபரைக் கைது செய்ய கண்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். - [ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை கட்டியெழுப்பத் தயார்](https://minnal24.com/%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af%80%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be-%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f-2/): ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தற்போதைய தலைவரும், பொதுச்செயலாளரும் பதவி விலகினால் கட்சியைக் கட்டி யெழுப்ப தயார என இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அறிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:- ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட போஷகர் பதவியில் நான் நீடிக்கின்றேன். என்னை எவரும் பதவி நீக்கம் செய்ய முடியாது. கட்சியில் உள்ள கள்வர்களை விரட்டினால், கட்சியைக் கட்டியெழுப்ப நான் தயார். தற்போதைய தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் ஆகியோர் கட்டாயம் பதவி விலக வேண்டும்  என்றார். இதேவேளை, தற்போதைய அரசாங்கம் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாத நிலையில் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். - [7200 மெற்றிக் தொன் கேஸ் இவ்வாரம் நாட்டை வந்தடையும்](https://minnal24.com/7200-%e0%ae%ae%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%87%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b5%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be/): நாட்டிற்கு மேலும் 7200 மெற்றிக் தொன் கேஸ் கொண்டுவரும் இரண்டு கப்பல்கள் இந்தவாரத்திற்குள் நாட்டை வந்தடையுமென லிற்றோ எரிவாயு நிறுவனம்  தெரிவித்துள்ளது. அதுதொடர்பில் அந்த நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் தெரிவிக்கையில், இன்றைய தினம் மேலும் 3600 மெற்றிக் தொன் கேஸ் தாங்கிய கப்பல் நாட்டை வந்தடையவுள்ளது. அதனை நாளை முதல் சந்தைக்கு விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகும். மேலும் இரண்டு தினங்களுக்குள் 3600 மெற்றிக் தொன் எரிவாயுவுடன் கப்பல் நாட்டை வந்தடையவுள்ளது. அதற்கிணங்க இரண்டு கப்பல்களிலும் வரும் 7200 மெற்றிக் தொன் எரிவாயுவை உடனடியாக மக்களுக்கு விநியோகிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.   - [இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்- வளிமண்டலவியல் திணைக்களம்](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%ae%e0%ae%b4%e0%af%88-%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%af-6/): மேல், மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. தென் மாகாணத்திலும் களுத்துறை மாவட்டத்திலும் பல இடங்களில் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். - [வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா - அமெரிக்க தூதுவர் சந்திப்பு](https://minnal24.com/%e0%ae%b5%e0%ae%9f%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3-%e0%ae%86%e0%ae%b3%e0%af%81%e0%ae%a8%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9c%e0%af%80%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af/): இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி ஜியூன் சங் இன்று திங்கட்கிழமை  வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவை சந்தித்து கலந்துரையாடினார். யாழ்ப்பாண மாவட்டத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் பல்வேறு தரப்புக்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் இன்று காலை வடமாகாண ஆளுநரை சந்தித்து கலந்துரையாடினார். குறித்த சந்திப்பில் யாழ்ப்பாணத்திலுள்ள தற்போதைய நிலைமைகள் மற்றும் சமகாலப் போக்குகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது - [ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் அறிவிப்பு](https://minnal24.com/%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af%80-%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b2%e0%af%88%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d/): ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தினால் 2022-2025 காலப் பகுதியில் 21 விமானங்களை குத்தகைக்குப் பெற்றுக் கொள்வது தொடர்பான கொள்முதல் செயற்பாட்டை மூன்று மாதங்களுக்கு ஒத்திவைக்குமாறு அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத், இன்று திங்கட்கிழமை பரிந்துரைத்தார். இதற்கமைய தற்பொழுது காணப்படும் பொருளாதார நிலைமையின் கீழ் முழுமையான செயற்பாட்டை மறுபரிசீலனை செய்யுமாறும், உரிய கொள்முதல் செயல்முறை உரிய  நடைமுறைகளுக்கு இணங்குகிறதா என்பது பற்றி ஆராயுமாறும் அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சின் செயலாளர்களுக்கு ஆலோசனை வழங்கினார். விமானங்களின் சேவைக்காலம் முடிவடைந்ததும் அவற்றுக்காக விமானங்களை மாற்றீடு செய்தல் விமான சேவையை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு அவசியமான நடைமுறை என்பதை ஏற்றுக்கொள்ள முடியும். இருந்தபோதும் நாட்டின் நெருக்கடி நிலைமை காணப்படுவதால் இது குறித்து அதிக கவனம் செலுத்தி உரிய தேவைகளைப் பூர்த்தி செய்வது முக்கியம் என்றும் சுட்டிக்காட்டினார். ஸ்ரீ லங்கன் விமான சேவையில் தற்பொழுது காணப்படும் 24 விமானங்களில் எண்ணிக்கை சில காலங்களில் […] - [நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு இல்லை](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%af%87%e0%ae%b0/): அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சியால்  கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் அரசாங்கத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மானம் எடுத்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், அறிவித்துள்ளது. இது தொடர்பில் ட்விட்டர் பதிவொன்றை விடுத்துள்ள இ.தொ.க. கட்சியின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான இதனைத் தெரிவித்துள்ளார். விரிவான கலந்துரையாடலின் பின்னர் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஆளும் கட்சி, எதிர்க்கட்சி மற்றும் சுயாதீனமாக இயங்கும் கட்சி தலைவர்களுக்கு குறித்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தி கொண்டுவரவுள்ள அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு தாம் உள்ளிட்ட 120 எம்.பிக்களின் ஆதரவு உள்ளதாக, முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். - [திருத்தங்களை ஆராய அமைச்சரவை உபகுழு](https://minnal24.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%86%e0%ae%b0%e0%ae%be%e0%ae%af-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a/): புதிய அமைச்சரவை நியமனத்திற்கு பின்னர் முதன் முறையாக இன்று திங்கட்கிழமை அமைச்சரவை சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது, 20ஆவது திருத்தச் சட்டத்தை நீக்கி நிறைவேற்று அதிகாரங்களை கட்டுப்படுத்தும் தீர்மானத்தை இன்று ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் சமர்ப்பித்துள்ளார். எவ்வாறாயினும், ஜனாதிபதி மற்றும் அமைச்சரவை இந்த யோசனைக்கு உடன்படவில்லை. இதன்படி, 19வது திருத்தச் சட்டம் போன்று 20வது திருத்தச் சட்டத்தில் சாதகமான விடயங்களும் காணப்படுவதால், அவை இரண்டிலும் உள்ள சாதகமான விடயங்களைக் கொண்டு 21ஆவது திருத்தச் சட்டத்தை முன்வைக்குமாறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டார். அதற்கமைய, ஜனாதிபதியின் குறித்த யோசனைக்கு அமைவாக அமைச்சர்கள் அடங்கிய உபகுழுவொன்றை ஜனாதிபதி நியமித்துள்ளார். அமைச்சர்களான அலி சப்ரி, ஜீ.எல்.பீரிஸ், தினேஷ் குணவர்தன மற்றும் ரமேஷ் பத்திரன ஆகியோரை உபகுழுவில் இணைத்துக் கொள்ள ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த உபகுழுவினால் தயாரிக்கப்பட்ட தீர்மானம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு பின்னர் தெரிவுக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.     - [சுகயீன விடுமுறை போராட்டம் வெற்றி - ஜோசப் ஸ்டாலின்](https://minnal24.com/%e0%ae%9a%e0%af%81%e0%ae%95%e0%ae%af%e0%af%80%e0%ae%a9-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae/): ஆசிரியர் தொழிற்சங்கங்கள்  இன்று திங்கட்கிழமை முன்னெடுத்த சுகயீன விடுமுறை போராட்டம் வெற்றிகரமாக அமைந்ததாக ஆசிரியர் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. இதுதொடர்பில் , இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நெருக்கடி நிலைக்கு தீர்வு கோரியும் ஆசிரியர்கள் அதிபர்கள் மற்றும் ஆசிரிய ஆலோசகர்கள் உள்ளிட்டோர் இன்று இவ்வாறு போராட்டத்தை ஈடுபட்டிருந்தனர். இதன் காரணமாக இன்று பாடசாலைகளில் கற்றல் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டிருந்தன. ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு வருகை தராமையினால் பல பாடசாலைகளின் மாணவர்கள் மீண்டும் வீட்டுக்கு திருப்பி அனுப்பபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் 28ஆம் திகதி பல அரச மற்றும் தனியார் தொழிற்சங்கங்களும் இணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டார். - [அயர்லாந்து யுவதி இலங்கையில் துஷ்பிரயோகம்](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%af%e0%af%81%e0%ae%b5%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88/): சுற்றுலா வந்த அயர்லாந்து யுவதி ஒருவரை துஷ்பிரயோகம் செய்ததாக சந்தேகத்தின் பேரில் மூன்று இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். கட்டுகஸ்தோட்டை மற்றும் மெதவெல பிரதேசத்தை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். துஷ்பிரயோகத்திற்கு ஆளான யுவதி, கடந்த 6ஆம் திகதி கண்டிக்கு சுற்றுலா சென்ற போது மூன்று இளைஞர்கள் செல்பி எடுக்குமாறு வற்புறுத்தியுள்ளனர். அப்போது, ​​இளைஞர் ஒருவர் யுவதியை துஷ்பிரயோகம் செய்த சம்பவம், அவர்களின் கெமராவில் நேரலையாக பதிவாகியுள்ளது. அவர்கள் குறித்த இளைஞர்களின் முகங்கள் அடங்கிய காணொளியை அண்மையில் யூடியூப்பில் வெளியிட்டுள்ளனர். இதனையடுத்து அந்த வீடியோ குறித்து சமூக வலைதளங்களில் காரசார விவாதம் நடந்ததையடுத்து கண்டி சுற்றுலா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞர்களை கைது செய்துள்ளனர். மேலதிக விசாரணைகளை சுற்றுலாப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். - [இலங்கைக்காக வத்திக்கானில் இடம்பெற்ற விஷேட ஆராதனை](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf/): இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுடன் இணைந்து பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் தலைமையில் இன்று திங்கட்கிழமை விஷேட ஆராதனை இடம்பெற்றுள்ளது. வத்திக்கானிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கையின் ஆயர்கள் மற்றும் உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகளில் சிக்கி காயமடைந்தவர்களுடன் இணைந்து  வத்திக்கானிற்கு சென்றுள்ளவர்கள் விசேட ஆராதனையில் கலந்துகொண்டுள்ளனர். - [சிங்கப்பூரில் 'தமிழ்மொழி' திருவிழா](https://minnal24.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4/): தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில் சீன மொழி, மலாய், ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகியவை அதிகாரப்பூர்வ மொழிகளாக உள்ளன. பாடசாலைகளில் தாய்மொழிப் பாடம் என இந்த மொழிகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. நாடாளுமன்றிலும் பயன்பாட்டில் உள்ளது. அந்நாட்டு நாணயத் தாள்களிலும் இந்த நான்கு மொழிகளும் இடம் பெற்றுள்ளன. இந்நிலையில்  சிங்கப்பூரின் அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒன்றான தமிழ் மொழியை கொண்டாடவும், ஊக்குவிக்கவும் ஒரு மாத திருவிழாவுக்கு அந்நாட்டு அரசு ஏற்பாடு செய்துள்ளது. தமிழ் மொழியை அடுத்த தலைமுறையினருக்கு பயிற்றுவிக்கவும், மொழியை ஊக்குவிக்கும் விதமாகவும், ஒரு மாத தமிழ் மொழி திருவிழாவுக்கு அந்நாட்டு அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்த ஒரு மாத காலமும், தமிழின் தொன்மையை பறைசாற்றும் நாடகங்கள், இசை மற்றும் பல்வேறு போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. இவை பெரும்பாலும், இணையவழி ஊடாக  வாயிலாக நடத்தப்படுகின்றன - [அமெரிக்காவிடம் ஆயுதங்கள் கோரும் உக்ரைன்](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%ae%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%af%e0%af%81%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3/): கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, கடந்த இரண்டு மாதங்களாக, ரஷ்யப் படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். உக்ரைன் இராணுவத்தினரும் அதற்கு தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.இதற்கிடையே, உக்ரைனின் மரியுபோல், கார்கிவ், லுஹான்ஸ்க் ஆகிய நகரங்களில், ரஷ்யப் படையினர் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளனர். உக்ரைனுக்கு பயணம் மேற்கொள்ளும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மற்றும் இராணுவ அமைச்சரிடம், இராணுவ ஆயுதங்களை வழங்கி உதவும்படி கோரிக்கை வைக்க உள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். போர் துவங்கியது முதல் தாக்குதல் நடத்தப்பட்டு வந்த துறைமுக நகரமான மரியுபோலை, கைப்பற்றிவிட்டதாக, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், கடந்த வாரம் அறிவித்திருந்தார். இந்நிலையில், உக்ரைனுக்கு, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டனி பிளின்கன் மற்றும் இராணுவ அமைச்சர் லாய்டு ஆஸ்டின், பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும், உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை, அவர்கள் சந்தித்துப் பேச உள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த சந்திப்பில், உக்ரைனுக்கு இராணுவ ஆயுதங்களை வழங்கி […] - [125 மில்லியன் ரூபா உதவி வழங்கும் இத்தாலி](https://minnal24.com/125-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b0%e0%af%82%e0%ae%aa%e0%ae%be-%e0%ae%89%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%99%e0%af%8d/): இலங்கைக்கு அவசர உதவியாக 125 மில்லியன் ரூபாவை வழங்க இத்தாலி அரசாங்கம் முன்வந்துள்ளது. இலங்கைக்கான இத்தாலிய தூதரகம் இதனைத் தெரிவித்துள்ளது. இந்த நிதியானது மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு வழங்கப்படவுள்ளதாக தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது - [அரநாங்கத்திற்கு உதவ வேண்டாம் என கோரி கடிதம்](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%a8%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%89%e0%ae%a4%e0%ae%b5-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%8d/): தற்போதைய அரசாங்கத்துக்கு உதவிகளை வழங்க வேண்டாம் என கோரி, சர்வதேச நாணய நிதியத்திற்கும், இந்திய அரசாங்கத்துக்கும் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் பேராசிரியர் ரத்னஜீவன் ஹுல் இந்த கடிதங்களை அனுப்பி வைத்துள்ளார். - [பிரான்ஸின் ஜனாதிபதியாக மீண்டும் இம்மானுவேல் மக்ரோன்](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%95-%e0%ae%ae/): பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் இம்மானுவேல் மக்ரோன் வெற்றி பெற்றுள்ளார். பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலின் இரண்டாம் கட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காலை முதல் மாலை வரை விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அதில் மேக்ரான் 58.2 சதவீதம் வாக்குகள் பெற்று மீண்டும் ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட மரைன் லு பென் 41.8 சதவீதம் வாக்குகள் பெற்றார். இரண்டாவது முறையாகவும் வெற்றி பெற்ற இம்மானுவேல் மக்ரோனிற்கு உக்ரைன் ஜனாதிபதி செலன்ஸ்கி ட்விட்டர் மூலம் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் மக்ரோனின் வெற்றி எமக்கும் வெற்றியான பல திருப்பங்களை கொடுக்கும் என நம்புகின்றோம். மக்ரோன் உக்ரைனுக்கு மிகவும் தேவையானவர் அவருடனான நட்புறவு எமக்கு பல நன்மைகளை கடந்த காலங்களில் பெற்றுத் தந்துள்ள நிலையில் இரண்டாவது முறையாகவும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டமையானது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி. இதனை நாம் மகிழ்வுடன் வரவேற்கின்றோம். வெற்றி பெற்ற மக்ரோனுக்கு உக்ரைனின் மக்கள் […] - [வட்டுக்கோட்டையில் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது](https://minnal24.com/%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b5/): வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டுக்கோட்டை பகுதியில் 23 கால் போத்தல்கள் சாராயத்துடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றிரவு வட்டுக்கோட்டை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, சட்ட விரோதமாக விற்பனைக்காக வைத்திருந்த சாராய போத்தல்களுடன். குறித்த சந்தேகநபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபரை பொலிஸார் பிணையில் விடுவித்துள்ளனர் - [யாழில் வீடொன்றில் ஒரு இலட்சம் பெறுமதியான தங்க நகை திருட்டு](https://minnal24.com/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%87%e0%ae%b2/): வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூளாய் – வேரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்த ஒரு இலட்சம் பெறுமதியான தங்க ஆபரணம் களவாடப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றின் திருவிழா இன்று நடைபெற்றது. வீட்டில் உள்ளவர்கள் ஆலயத்திற்கு சென்று தரிசித்துவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தவேளை வீட்டில் இருந்த  நகை களவாடப்பட்ட விடயம் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். - [மனிதநேயம் மிக்க திருடன்](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%a8%e0%af%87%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d/): நேற்றிரவு, மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லுண்டாய் வைரவர் கோவில் பகுதியில் இயக்க நிலையில் இருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று திருட்டு போயுள்ளது. மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் வேலை முடிந்து வரும் வழியில் கோவில் உள்ளதால் மோட்டார் சைக்கிளை வீதியில் இயக்க நிலையில் நிறுத்திவிட்டு கோவிலை தரிசித்துக்கொண்டிருந்தார். இதன்போது அங்கிருந்த திருடன் மோட்டார் சைக்கிளின் உரிமையாளரது கண் முன்னாலேயே மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றுள்ளான். இச் சம்பவத்தை கண் முன்னாலேயே பார்த்தும் தனது மோட்டார் சைக்கிளை காப்பாற்ற முடியாத மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இந்நிலையில், இன்று மாலை வேளையில் அவரது மோட்டார் சைக்கிளானது திருட்டு போன இடத்திற்கு அருகாமையில் உள்ள வீதியில் நிறுத்தப்பட்டிருந்தது. இதனையடுத்து மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் மோட்டார் சைக்கிளை எடுத்துச் சென்றுள்ளார். தொடர்புடைய செய்தி :- https://www.minnal24.com/?p=72922 - [ஊடகவியலாளர் ரூபனின் நினைவேந்தல் அனுஷ்டிப்பு](https://minnal24.com/%e0%ae%8a%e0%ae%9f%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b0%e0%af%82%e0%ae%aa%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88/): -யாழ் நிருபர்- காலம் சென்ற ஊடகவியலாளர் செல்வரத்தினம் ரூபன் அவர்களது 12வது ஆண்டு நினைவேந்தலானது பொன்னாலையில் உள்ள வெண்கரம் படிப்பகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது அன்னாரின் திருவுருவபடத்திற்கு மலர்மாலை அணிவித்து, மலர் தூவி விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. வலி.மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் பொன்ராசா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வெண்கரம் படிப்பகத்தின் செயற்பாட்டாளர் கோமகன் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டு அன்னாருக்கு அஞ்சலி செலுத்தினர். அன்னார் ஊடகவியலாளராக பணியாற்றும் போது மக்களுக்கு பல்வேறு சேவைகளை ஆற்றியமை குறிப்பிடத்தக்கது. - [சுவாமி தரிசனத்தின் போது கண் முன்னே மோட்டார் சைக்கிள் திருட்டு](https://minnal24.com/%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf-%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81/): -யாழ் நிருபர்- மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லுண்டாய் வைரவர் கோவில் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று நேற்றிரவு கொள்ளையிடப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், அராலி வடக்கினை சேர்ந்த ஒருவர் வேலை முடிந்து வீட்டிற்கு வரும் வழியில் மோட்டார் சைக்கிளை இயக்க நிலையில் வைத்துவிட்டு கல்லுண்டாய் வைரவர் கோவிலை தரிசித்து கொண்டிருந்தார். இதன்போது அப்பகுதியில் நின்ற ஒருவர் மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். டிஸ்கவர் (Discover) NP – WN 3141  என்ற இலக்க மோட்டார் சைக்கிளே இவ்வாறு திருடப்பட்டுள்ளது. தற்போதைய காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. - ['முகத்தூர் முழக்கம்' மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி](https://minnal24.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%aa%e0%af%86/):   மட்டக்களப்பு பாலமீன்மடு, லைட்ஹவுஸ் இளைஞர் கழகத்தின் 26வது நிறைவினை முன்னிட்டு ‘முகத்தூர் முழக்கம்’ மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி பாலமீன்மடு லைட்ஹவுஸ் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. 30 இளைஞர் கழகங்கள் பங்குகொண்ட இந்த சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி கடந்த சனிக்கிழமை மாலை நடைபெற்றது. லைட்ஹவுஸ் இளைஞர் விளையாட்டுக்கழக தலைவர் வி.ஹபிலன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் கலந்து கொண்டார். அத்துடன சிறப்பு விருந்தினர்கள், இளைஞர் கழக உறுப்பினர்கள், பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.     - [முன்னாள் ஆளுநர் கப்ராலுக்கு மேலும் ஒரு தடை](https://minnal24.com/%e0%ae%86%e0%ae%b3%e0%af%81%e0%ae%a8%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%85%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%b0/): இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு வௌிநாடு செல்ல மேலும் ஒரு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும், ஜூன் 7 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கப்ராலுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டதுடன், கப்ரால் தனது கடவுச்சீட்டையும் நீதிமன்றில் ஒப்படைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. - [புகையிரத தொழிற்சங்கங்கள் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம்](https://minnal24.com/%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3/): அரசுக்கு எதிராக மக்கள் முன்னெடுத்துவரும் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்கும் வகையில் புகையிரத தொழிற்சங்கங்கள் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளன. அதற்கமைய, எதிர்வரும் 27ஆம் திகதி நள்ளிரவு தொடக்கம் 28ஆம் திகதி நள்ளிரவு வரையில் இவ்வாறு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளன. இந்த வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு பிரதான தொழிற்சங்கள் பலவும் தமது ஆதரவை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. - [நாட்டு நிலை காரணமாக இருதய நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4/): நாட்டில்  இருதய நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதயநோய் நிபுணர் வைத்தியர் கோட்டாபய ரணசிங்க தெரிவித்துள்ளார். தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி காரணமாகவே, இவ்வாறு இருதய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதன்படி, மேல் மாகாணத்தில் மாத்திரம் பதிவாகும் இருதய நோயாளர்களின் எண்ணிக்கை 30 தொடக்கம் 40 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.   - [கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக வரும்போது கையிருப்பாக நாட்டில் 06 பில்லியன் அமெரிக்க டொலர் இருந்தது - இரா.சாணக்கியன்](https://minnal24.com/%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%aa%e0%ae%af-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%aa%e0%ae%95%e0%af%8d%e0%ae%b7-%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4/): ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் இந்த நாட்டில் அட்டைகள் எவ்வாறு மனிதனிலிருந்து இரத்தத்தினை உறுஞ்சுமோ அதுபோன்று நாட்டு மக்களை உறிஞ்சும் செயற்பாட்டினை முன்னெடுத்துள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குற்றம் சுமத்தியுள்ளார். மட்டக்களப்பு பாலமீன்மடு, லைட்ஹவுஸ் இளைஞர் கழகத்தின் 26வது நிறைவினை முன்னிட்டு ‘முகத்தூர் முழக்கம்’மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியை பாலமீன்மடு லைட்ஹவுஸ் விளையாட்டு மைதானத்தில் நடாத்தியது. 30 இளைஞர் கழகங்கள் பங்குகொண்ட இந்த சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி கடந்த சனிக்கிழமை மாலை நடைபெற்றது. இறுதிப்போட்டியில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய போதே இரா.சாணக்கியன் மேற்கண்டவாறு குற்றம் சுமத்தியுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ‘கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கம் நாட்டில் அட்டைகள் எவ்வாறு இரத்தத்தினை உறிஞ்சி எடுக்குமோ அதேபோன்று இந்த நாட்டு மக்களின் நிதியை களவெடுத்து, நாட்டு மக்களுக்கு சொந்தமான வளங்களை விற்பனை செய்து, இந்த நாட்டு மக்களுக்கு சொந்தமான அந்நிய செலாவாணியை கொண்டு நாடுகளின் […] - [இடைக்கால அரசாங்கம் அமைக்க ஜனாதிபதி இணக்கம்](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%95%e0%af%8d/): இடைக்கால அரசாங்கமொன்றை அமைப்பதற்கும் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுகாண உடனடி நடவடிக்கைகளை எடுப்பதற்கும் ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மகாநாயக்க தேரர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் வகையில் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான கலந்துரையாடல்கள் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது   - [இலங்கை மூன்றாவது இடத்தில்](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%ae%e0%af%82%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2/): அமெரிக்க பொருளாதார வல்லுநரான ஸ்டீவ் ஹான்கே இலங்கையின் பணவீக்கம் தொடர்பில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார். அப்பதிவில், ‘இந்த வார பணவீக்க அட்டவணையில் இலங்கை மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது. ஏப்ரல் 21ஆம் திகதியன்று நான் இலங்கையின் பணவீக்கமான 119 சதவீத்தை வான் அளவு உயர்வாக கூறினேன். பணவீக்கத்தை கட்டுப்படுத்த மற்றும் ரூபாயை சேமிக்க, இலங்கை 1884 முதல் 1950 வரை இருந்ததைப் போன்ற ஒரு நாணய சபையை நிறுவ வேண்டும்’ என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை உலகின் பணவீக்கம் அதிகம் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் 6வது இடத்தில் இருந்த இலங்கை தற்போது மூன்றாவது இடத்தை பிடித்துள்ளமை இதுவே முதல் முறையாகும். கடந்த 21ஆம் திகதி வெளியான பட்டியலுக்கு அமைய இலங்கையின் வருடாந்த பணவீக்கம் 119 சதவீதத்தை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.   - [3 பெண்கள் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் : ஒருவர் பலி](https://minnal24.com/3-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%95%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%86%e0%ae%af%e0%af%81%e0%ae%a4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2/): நபரொருவர் தனது மனைவி உட்பட மூன்று பெண்களை கூரிய ஆயதத்தால் தாக்கிவிட்டு தானும் தற்கொலை செய்துகொள்ள முயன்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெலிவேரிய பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது சம்பவத்தில் தாக்குதலுக்கு இலக்கான குறித்த சந்தேகநபரின் மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் வேபட வடக்கு பகுதியில் வசிக்கும் 33 வயதுடைய பெண் என தெரியவந்துள்ளது. மேலும், தாக்குதலுக்கு உள்ளான ஏனைய இரு பெண்களும் படுகாயமடைந்த நிலையில் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர் பொலிஸ் பாதுகாப்பில் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான விசாரணைகளை வெலிவேரிய பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். - [மருந்துகளின் விலை பாரியளவில் அதிகரிப்பு](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b3/): மருந்துகளின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளதாக, மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான வைத்தியர்களின் தொழிற்சங்கத்தின் தலைவர் வைத்தியர் ஜி.ஜி சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார். இன்னும் 12 வாரங்களில் கையிருப்பில் உள்ள மருந்துப்பொருட்கள் நிறைவடையும். நாட்டில் அத்தியாவசிய மருந்துப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கு முன்னதாக அறிவிக்கப்பட்டது. எனினும், அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமையின் காரணமாக தற்போது மருந்துப்பொருட்களின் விலை பல மடங்காக அதிகரித்துள்ளது. சாதாரண மருந்துகளுக்கு கூட 1,500 முதல் 2,000 ரூபா வரையில் அதிகரிக்கும், என மேலும் அவர் தெரிவித்துள்ளார். - [இலங்கையிலிருந்து மேலும் 15 பேர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம்](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%af%87%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae-2/): -யாழ் நிருபர், மன்னார் நிருபர்- இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் உணவு, அத்தியாவசிய தேவைகளுக்காக கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால் இலங்கையில் இருந்து 60 இலங்கை தமிழர்கள் தமிழகத்திற்கு அகதிகளாக சென்று மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று திங்கட்கிழமை அதிகாலை 9 மாத கை குழந்தை உட்பட 5 குடும்பத்தை சேர்ந்த மேலும் 15 பேர் அகதிகளாக தனுஷ்கோடியை சென்றடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தனுஷ்கோடி இலங்கைக்கு அருகே உள்ளதால் இலங்கை ஏற்பட்ட இறுதிக்கட்ட போரின் போது இலங்கை தமிழர்கள் தங்கள் உயிர்களை காப்பாற்றி கொள்ள அகதிகளாக தனுஷ்கோடி வழியாக தமிழகத்திற்கு சென்று இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் தங்கியுள்ளனர். அதேபோல், தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், உணவுப் பஞ்சம் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டு […] - [மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் தொழிலாளி மரணம்](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%87%e0%ae%9f%e0%af%81-%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-2/): கண்டி கழிவு நீர் திட்டத்தில் பணிபுரிந்த தொழிலாளி ஒருவர் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . நேற்று ஞாயிற்றுக்கிழமை கண்டி போகம்பர பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த தொழிலாளி கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார் என தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். - [எதிர்வரும் காலங்களில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படக் கூடும்](https://minnal24.com/%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89/): இலங்கையில் எதிர்வரும் காலங்களில் கடுமையான உணவுத் தட்டுப்பாடு ஏற்படக் கூடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். எரிபொருளுக்காக வழங்கப்பட்ட இந்தியக் கடன் வசதி மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கான ஒரு பில்லியன் டொலர் கடன் திட்டம் முதல் வாரத்தில் முடிவடைவதால் அடுத்த மாதம் இலங்கை பாரிய பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற தனியார் வங்கியாளர்கள் குழுவுடனான கலந்துரையாடலின் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார். அரசாங்கம் உடனடியாக பதவி விலகுமாறு கோரி இளைஞர்கள் உட்பட பொதுமக்கள் வீதியில் இறங்கிய போதிலும் பாராளுமன்றம் உரிய தீர்வை வழங்கத் தவறியுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். மக்கள் கோரும் புரட்சிகரமான மாற்றத்திற்கு செவிசாய்க்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.   - [பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் இன்று விசேட பிரார்த்தனை](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a9/): இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுடன் இணைந்து பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் இன்று திங்கட்கிழமை விசேட பிரார்த்தனையில் ஈடுபடவுள்ளார். வத்திக்கானிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கையின் ஆயர்கள் மற்றும் உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்புகளில் சிக்கி காயமடைந்தவர்களுடன் இணைந்து பரிசுத்த பாப்பரசர் இன்று விசேட ஆராதனையை முன்னெடுக்கவுள்ளார் என கர்த்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். வத்திக்கானிற்கு சென்றுள்ளவர்கள் விசேட ஆராதனையின் பின்னர் பரிசுத்த பாப்பரசரை சந்திப்பார்கள் என கர்த்தினால் தெரிவித்துள்ளார். இது அரசியல் நிகழ்வில்லை. இது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இடம்பெறும் ஆராதனை மாத்திரமே. நாங்கள் அவர்களின் நிலைமையை உலகிற்கு காண்பிக்க விரும்புகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார். - [டிக்டொக் வீடியோவிற்கு தலிபான்கள் தடை ](https://minnal24.com/%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%9f%e0%af%8a%e0%ae%95%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%8b%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a4%e0%ae%b2/): ஆப்கான் இளைஞர்களை வழிதவறச் செய்வதாகக் கூறி வீடியோ பகிர்வு செயலியான டிக்டொக் மற்றும் பப்ஜி வீடியோ விளையாட்டை தலிபான்கள் தடை செய்துள்ளனர். ஒழுக்கமற்ற விடயங்களை ஒளிபரப்பும் தொலைக்காட்சி சேவைகளுக்கும் ஆப்கானில் ஆட்சியில் உள்ள தலிபான்கள் தடை விதித்துள்ளனர். ஏற்கனவே இசை, திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நாடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு அதிகாரத்திற்கு வந்த தலிபான்கள் மிதமான அணுகுமுறையில் ஆட்சி நடத்தப்போவதாக உறுதி அளித்தபோதும், குறிப்பாக பெண்களுக்கான உரிமைகள் பல குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இளம் சமூகம் தவறுதலாக வழிநடத்தப்படுவதை தவிர்ப்பதற்கே தற்போதைய தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தலிபான் பேச்சாளர் இனாமுல்லா சமன்கானி குறிப்பிட்டுள்ளார். தலிபான்களால் செயலி ஒன்று தடை செய்யப்படுவது இது முதல் முறையாகும். ஆப்கானில் இணையதள பயன்பாடு அண்மைய ஆண்டுகளில் வேகமாக அதிகரித்து வருகிறது. அங்கு தற்போது சுமார் ஒன்பது மில்லியன் பயனர்கள் உள்ளனர். - [சிறுமியின் உயிரை பறித்த ஜம்புக்காய்](https://minnal24.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88-%e0%ae%aa%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/): ஜம்புக்காய் தின்ற சிறுமி ஒருவர் மூச்சுத் திணறி உயிரிழந்தார். குருநாகல் வாரியப்பொலை பகுதியில் நேற்று முன்தினம் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. நாரம்மல, தங்கொல்ல பிரதேசத்தில் வசிக்கும் மூன்று பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் இளைய மகளான சிறுமியே உயிழிழந்துள்ளார். வாரியபொலை ஹம்மாலிய பிரதேசத்தில் உள்ள தனது தாத்தாவை பார்க்க தாயாருடன் சென்றபோதே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரிய வருகிறது. சிறுவர்களுடன் முற்றத்தில் பழங்களை சாப்பிட்டுக் கொண்டிருந்த போது குழந்தையின் தொண்டையில் ஜம்புக்காய் சிக்கியதாக சிறுமியின் தாத்தா கூறுகிறார். வைத்தியசாலையில் சேர்க்கப்படும்போது சிறுமி உயிரிழந்தாரெனத் தெரிவிக்கப்பட்டது.   - [10 பேரில் எண்மர் தொற்றுக்கு](https://minnal24.com/10%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/): 2020ஆம் ஆண்டு கொரோனா தொற்று பரவியத்திலிருந்து இங்கிலாந்தில் 10பேரில் எண்மருக்கு தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என்று அந்த நாட்டின் தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. பிரிட்டனில், கடந்த இரண்டு ஆண்டுகளில் 2 கோடியே 20 இலட்சம் தொற்றாளர்கள் மற்றும் ஒரு இலட்சத்து 73 ஆயிரத்து 980 க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், கடந்த ஜனவரி மாதத்தின் பின்னர் ஒமைக்ரோன், பிறழ்வும் அதன் துணை பிறழ்வான BA.2 உம் இங்கிலாந்தில் பரவுகின்றன. இவற்றால் உயிரிழப்பு குறைவாகவுள்ளபோதிலும் மருத்துவமனைக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனிடையே கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப் பட்டமையே இங்கிலாந்தில் தொற்று அதிகரிக்கக் காரணம் என்று குற்றஞ்சாட்டப்படுகின்றது - [அதிபர் - ஆசிரியர்கள் இன்று சுகயீன விடுமுறை](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%86%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1/): இலங்கையிலுள்ள அனைத்து அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் இன்று திங்கட்கிழமை பாடசாலைக்கு சமுகமளிக்கமாட்டார்கள். ஆகையால் இன்றைய தினம் பிள்ளைகளின் பாதுகாப்பு குறித்து பெற்றோர் அக்கறையுடன் செயற்படுமாறும் – இன்றைய பொருளாதார நெருக்கடியுள்ள சூழலில் வீணான சிரமங்களைத் தவிர்க்குமாறும் இலங்கை ஆசிரியர் சங்கம் கோரியுள்ளது. உப தலைவர் ஆ.தீபன் திலீசன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமாகாண கல்வித் திணைக்களத்தால் அன்றைய தினம் நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்த இடைநிலை பிரிவுக்கான பரீட்சைகளை வேறொரு தினத்துக்கு ஒத்திவைக்குமாறு கோரியுள்ளோம். எரிபொருள் விலையேற்றம் மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக – தூர இடங்களிலிருந்து வரும் மாணவர்களின் வரவு மிகவும் வீழ்ச்சியடைந்துள்ளது. பொருட்களின் தட்டுப்பாடும் -விலையேற்றமும்- குடும்ப பொருளாதார நிலையும் மாணவர்களின் வரவினையும் கணிசமாக பாதித்துள்ளன. எரிபொருள் பிரச்சினை தீர்க்கப்படாத நிலையில் – மாற்றீடான எமது முன்மொழிவுகளை கல்வியமைச்சு நிராகரித்தமையின் விளைவாகவே இன்றைய தினம் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களால் சுகயீன லீவுப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.   - [21ஆவது திருத்தம் இன்று அமைச்சரவைக்கு சமர்ப்பிப்பு](https://minnal24.com/21%e0%ae%86%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88/): அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் இன்று அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட உள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன. இன்று திங்கட்கிழமை பிற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தின்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டவுள்ளதாகதெரியவருகின்றது. அதேவேளை ஜனாதிபதியினால் புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்ட பின்னர் நடைபெறும் முதலாவது அமைச்சரவைக் கூட்டமாக இன்றைய அமைச்சரவை கூட்டம் அமையவுள்ளது. இன்றைய தினம் பிரதமரினால் 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் சமர்ப்பிக்கப்படவுள்ள அதேவேளை,ஏற்கனவே நடைமுறையில் உள்ள 20ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் காணப்படும் நிறைவேற்று அதிகாரங்கள் அதன் மூலம் இல்லாதொழிக்கப்படவுள்ளது. அதற்கிணங்க பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகள் அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் தொடர்பாக முன்வைத்துள்ள யோசனைகள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. - [இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் எச்சரிக்கை](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%99-2/): கொழும்பை அண்மித்துள்ள ஒரு சில வீதிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள வீதித் தடைகளில் கூரிய ஆணி போன்ற கம்பிகளை பொருத்தி கறுப்பு நிற பொலித்தீனால் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மக்களுக்கு பாரிய காயங்கள் ஏற்படுவதற்கான அபாயம் நிலவுகின்றமை தொடர்பில் தாம் கவனம் செலுத்தியுள்ளதாக சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொலிஸ்மா அதிபர், பொலிஸார் மற்றும் படையினர் எந்தவொரு நிலைமையின் கீழும் எதிர்ப்பில் ஈடுபடுபவர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அமைதியாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கும் சுதந்திரமாக நடமாடுவதற்கும் உள்ள மக்களின் உரிமையை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. ஏதேனும் வன்முறை சூழல் ஏற்பட்டால் அது நாட்டிற்கு பாரிய எதிர்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. - [நிலத்திலிருந்து 9 கோடி பணமும், சுவரிலிருந்து 19 கிலோ வெள்ளியும் மீட்பு](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-9-%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%a3/): நகை வியாபாரி ஒருவரின் கடையில் வருமானத்துறை அதிகாரிகள் நடாத்திய திடீர் சோதனையின் போது நிலத்திலிருந்து, பணத்தையும் சுவரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெள்ளியையும் மீட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இயங்கிவரும் சாமுண்டா என்ற நகை வியாபார நிறுவனத்தின் வருமானம் கடந்த 2019-20 நிதி ஆண்டில் ரூ.22.83 இலட்சமாக இருந்த நிலையில் மூன்றே ஆண்டுகளில் இது பன்மடங்கு அதிகரித்து தற்போதைய நிதியாண்டில் ரூ.1764 கோடியாக உயர்ந்துள்ளதை வருமானத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து, குறித்த நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இவற்றில் பெரும்பாலான இடங்கள் வணிகத்திற்கான இடங்களாக பதிவு செய்யப்படவில்லை. இந்தநிலையில் கல்பாதேவி பகுதியில் உள்ள சிறிய அலுவலகம் ஒன்றில் சோதனை செய்தபோது, தரைக்கு அடியில் இருந்து கட்டுக்காட்டாக பணமும், சுவரில் பதிக்கப்பட்டிருந்த வெள்ளி கட்டிகளையும் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். 9.78 கோடி பணமும் , 19 கிலோ வெள்ளியும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் , பணத்தை எண்ணுவதற்கே அதிகாரிகளுக்கு கிட்டத்தட்ட 6 மணி நேரம் […] - [சக பயணியை சரமாரியாக குத்திய குத்துச்சண்டை வீரர் டைசன்](https://minnal24.com/%e0%ae%9a%e0%ae%95-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%95-%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%af%8d/): பிரபல முன்னாள் குத்துச்சண்டை வீரரான மைக் டைசன் தம்முடன் விமானத்தில் பயண செய்த ஒருவரைச் சரமாரியாக தாக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. அடிவாங்கிய நபர் டைசனின் தீவிர பற்றாளர் என நம்பப்படுகின்றது. விமானத்தில் டைசனைப் பார்த்ததும் அவருக்கு ஒரே ஆனந்தம். டைசனுடன் பேசி புகைப்படமும் எடுத்துக்கொண்டார். ஆனால், அந்த நபரின் வாய் ஓயவில்லை. கலகலப்பாக ஆரம்பித்த உரையாடல், பின்னர் டைசனுக்கு எரிச்சலூட்ட தொடங்கியது. பலமுறை டைசன் அவரை வாயை மூடச்சொல்லியும் அவர் காதில் வாங்கவில்லை. அடையாளம் தெரியாத அந்த நபர் தண்ணீர்ப் புட்டியை டைசன் மீது தூக்கியேறிந்ததாகவும் ,இதையடுத்து கோபமடைந்து நபரின் முகத்தை ஓங்கி பலமுறை குத்தியுள்ளார். தாக்குதலுக்கு உள்ளான நபரின் நெத்திலியிருந்து இரத்தம் கொட்டியது. அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, சம்பவம் குறித்து பொலிஸில் புகார் செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. - [நான் நலமாகவே உள்ளேன் - பிரதமர்](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%ae%b5%e0%af%87-%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0/): தாம் வழமை போன்றே நலத்துடன் காணப்படுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிவித்தலிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பிரதமர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சமூக வலைத்தளங்களில் ஒழுங்கமைக்கப்பட்ட குழுவொன்றினால் முன்னெடுக்கப்பட்டுவரும் பொய்யான பிரசாரங்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். நோயாளியை பார்ப்பதற்கேனும் தான் இத்தினங்களில் வைத்தியசாலைக்கு செல்லவில்லை எனத் தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தான் உடற்பயிற்சியில் ஈடுபட்டு சிறந்த ஆரோக்கியத்துடன் காணப்படுவதாகவும் குறிப்பிட்டார். அதற்கமைய பிரதமர் நோய்வாய்ப்பட்ட நிலையில் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வெளியாகிவரும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவையாகும். ஊடகப்பிரிவு – பிரதமர் அலுவலகம் - [பஸ்- மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் பலி](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf/): இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸுடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் இப்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்தனர். பூண்டுலோயா- கம்பளை வீதியில் பாலுவத்த சந்தியில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற விபத்தில் வௌஹேன பகுதியைச் சேர்ந்த ஆர். ஜி. அனுஷா குமாரி வயது (55) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திய நபர் சிறுகாயங்களுக்குள்ளான நிலையில், அதில் பயணித்த பெண் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவித்த பூண்டுலோயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். - ['ஒன்றிணைந்த இளமை ஹட்டனில் ஆரம்பம்](https://minnal24.com/%e0%ae%92%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a3%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%b3%e0%ae%ae%e0%af%88-%e0%ae%b9%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2/): ‘ஒன்றிணைந்த இளமை ஹட்டனில் ஆரம்பம்’ என்ற அமைப்பின் ஏற்பாட்டில் இளைஞர்கள், யுவதிகள் மற்றும் ஹட்டன் பகுதியில் உள்ள தனியார் ஆடை தொழிற்சாலை ஒன்றின் பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு அத்தியாவசிய பொருட்களின் விலையுயர்வுக்கும், அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர். ஹட்டன் மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை இளைஞர், யுவதிகள் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். எம்.ஆர். டவுனில் உள்ள எரிபொருள் நிலையத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டு, ஊர்வலமாக வந்து மணிக்கூட்டு கோபுரத்தின் முன்பாக சுமார் இரண்டு மணித்தியாலயங்கள் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ‘உலகத்தின் முன் தாய் நாட்டை கேவலமாக்காதே, பசிக்கு நிறம் மதம் கிடையாது, விலை குறை அடுத்த தலைமுறை வாழ வேண்டும், போன் பல வாசகங்களை உள்ளடக்கிய சுவரொட்டிகளை ஏந்திய வண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். - ['கோட்டாகோகம' வில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசேட குழு](https://minnal24.com/%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%95%e0%af%8b%e0%ae%95%e0%ae%ae-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%ae/): ‘கோட்டாகோகம’ விற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசேட குழு ஒன்று இன்று விpஜயம் செய்துள்ளது. காலி முகத்திடலில் கடந்த இரு வாரங்களாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் ஆர்ப்பாட்டக்காரர்களால் இந்த குக்கிராமமம் அமைக்கப்பட்டது. பொலிஸாரால் வீதிப் போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்தப்பட்டமை, போராட்டக்காரர்கள் பொலிஸாரால் தாக்கப்படலாம் என தெரிவித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்ற பல முறைப்பாடுகளை தொடர்ந்தே இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசேட குழு அங்கு சென்றுள்ளது. - [கொழும்பில் பல வீதிகளுக்கு இரும்பினாலான வீதித்தடைகள்](https://minnal24.com/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b2-%e0%ae%b5%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/): அம்புலன்ஸ் வண்டிகள் உட்பட எந்தவொரு வாகனமும் பயணிக்க முடியாதவாறு கொழும்பில் பல வீதிகள் இரும்பு வேலிகளைக் கொண்டு பின்னப்பட்டுள்ளமை குறித்த பகுதிகளில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கொழும்பில் முக்கிய வீதிகள் பலவற்றின் ஊடாக பயணிக்க முடியாத வகையில், இரும்புக் கம்பி வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு கூட நடந்து செல்லமுடியாது. வேறு வழிகளின் ஊடாக நடந்துவந்து இரும்புக் கம்பி வேலிக்கு அருகில் சிக்கிக்கொள்ளும் மக்கள், இரும்புக் கம்பி வேலிகளுக்கு இடையே இருக்கும் இடைவெளியில் நுழைந்து வெளியேறிக்கொண்டிருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.   - [பிரதான எண்ணெய் விநியோக நிறுவனம் இலங்கைக்கு அழுத்தம்](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%8e%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%86%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%af%e0%af%8b%e0%ae%95-%e0%ae%a8/): ஐக்கிய அரபு இராட்சியத்தை சேர்ந்த பிரதான எண்ணெய் விநியோக நிறுவனம் இலங்கைக்கு பாரிய கடன் அழுத்தத்தை பிரயோகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு இராட்சிய நிறுவனத்திடம் இருந்து இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் இறக்குமதி செய்யப்படும் எண்ணெய்க்கான கொடுப்பனவிற்கே இந்த அழுத்தம் மேற்கொள்ளப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வெளிநாட்டு கடன்கள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் என்பவற்றுக்கான கடன் வழங்கலை இலங்கை அரசாங்கம் பிற்போட்ட நிலையில், இந்த தகவல் வெளியாகியுள்ளது. குறித்த நிறுவனம் 95,000 மெட்ரிக் டன் எண்ணெய்யை இலங்கைக்கு விநியோகித்து அதற்கான கொடுப்பனவினை வழங்குவதற்கு 200 நாட்கள் காலவகாசம் வழங்கியிருந்தது. - [பிரதமர் இல்ல பகுதியில் அமைதியின்மை](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%aa%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85/): அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தின் எதிர்ப்பு பேரணி தற்போது விஜேராம பகுதியில் உள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தை சுற்றிவளைத்துள்ளது. இதனால், குறித்த பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. - [இ.போ.ச பேருந்தின் சில்லு பாதியாக கழன்று விபத்து](https://minnal24.com/%e0%ae%87-%e0%ae%aa%e0%af%8b-%e0%ae%9a-%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%81-%e0%ae%aa/): இன்று காலை பொல்காவலை நோக்கி பயணித்த அரச பேருந்து ஒன்று அனுராதபுரம்-கொழும்பு வீதியில் பயணிக்கையில் குறித்த பேருந்தின் சில்லு பாதியாக கழன்று விழுந்து விபத்திற்குள்ளாகியது. - [பிரதமர் இல்லத்தை சுற்றிவளைத்த அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தின் பேரணி](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5/): அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தின் எதிர்ப்பு பேரணி தற்போது விஜேராம பகுதியில் உள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தை சுற்றிவளைத்துள்ளது. இதனால், குறித்த பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது, - [கலை மன்றங்களுக்கான வருடாந்த ஊக்குவிப்புத் தொகை வழங்கிவைப்பு](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%b2%e0%af%88-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f%e0%ae%be/): -கல்முனை நிருபர்- கலை மன்றங்களுக்கான வருடாந்த ஊக்குவிப்புத் தொகை கொடுப்பனவானது, கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் ஒவ்வொரு வருடமும் கலை மன்றங்களின் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் நோக்குடன் வழங்கப்படும் தேசிய நிகழ்ச்சித்திட்டமாகும். நலிவுற்ற நிலையில் இருக்கின்ற கலைஞர்களைப் பேணிக்காத்தல், போசணையளித்தல், பொருளாதார ஆற்றலை வளர்த்தல், அவர்களை கௌரவப்படுத்தல் தேசத்தின் கடமையும் அரசாங்கத்தின் பொறுப்புமாகும். அந்தவகையில், இறக்காமம் பிரதேச செயலக பிரிவில் இயங்கிவரும் அய்மன் கலை மன்றம், சன்ரைஸ் கலை மன்றம், இஸ்லாமிய மரபுரிமைகள் கலாச்சார மன்றம், மீரா கோலாட்டக் குழு ஆகிய கலை மன்றங்களுக்கான காசோலை வழங்கும் நிகழ்வு இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம். ரஷ்ஷான் தலைமையில் வெள்ளிக்கிழமை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலாச்சார உத்தியோகத்தர் (மத்திய) ஏ.எல். நௌபீஸா மற்றும் கலாச்சார உத்தியோகத்தர் (மாகாணம்) வசந்தா ரன்ஞனி, கலாச்சார அதிகார சபை சார்பாக உளவளத்துணை உத்தியோகத்தர் ஏ.எச். றகீப் ஆகியோர் கலந்து கொண்டனர். - [பள்ளிக்குடியிருப்பில் உலர் உணவு பொதிகள் மற்றும் நிதியுதவி வழங்கி வைப்பு](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89/): -கல்முனை நிருபர்- இந்தியாவைச் சேர்ந்த தம்பதிகள் (அமெரிக்காவில் மருத்துவர்களாக கடமை புரியும்) தமது சொந்த நிதியில் ஆறு இலட்சம் ரூபாவை நன்கொடையாக வழங்கியுள்ளனர். இதில் ஐந்து இலட்சம் ரூபாவுக்கு உலர் உணவுப் பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டு வருமானம் குறைந்த 100 குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன. முன்னாள் பிரதித் தவிசாளர் ஐ.எல். ஹக்கிம் பீ.சி.தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் கிராம சேவையாளர்கள் உட்பட ஏராளமான அதிதிகளும் கலந்து கொண்டனர். ஹக்கீம் பி.சியின் பெரும் முயற்சியின் காரணமாக தமது சொந்த நிதியில் கடந்த 2020,2021 வருடம் கனடா லங்கா தொண்டர் அமைப்பு கனடா ரிலிப் சிறிலங்கா அமைப்பின் மூலமாக பணத்தை வழங்கிய அக்கரைப்பற்றைச் சேர்ந்த கனடாவில் வாழும் சகோதர் அபூ அப்துல்லாஹ் (சஹீட் அஸ்வர்) என்பவர் மூலமாக கிடைக்கப் பெற்ற பணத்தை கொண்டு வருமானம் குறைந்த 100 குடும்பங்களுக்கு தலா ஐயாயிரம் ரூபாய் பெறுமதியான பொதிகளே வழங்கி […] - [தேசிய 'கமசமக பிலிசந்தர' வேலைத்திட்டத்தின் கீழ் தையல் இயந்திரங்கள் வழங்கிவைப்பு](https://minnal24.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%ae%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%95-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0-%e0%ae%b5%e0%af%87/): -கல்முனை நிருபர்- ஜனாதிபதியின் சபீட்சத்தின் நோக்கு எண்ணக்கருவின் கீழ் தேசிய ‘கமசமக பிலிசந்தர’ வேலைத்திட்டத்தின் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம். ரஷ்ஷான் (நளீமி) தலைமையில் வெள்ளிக் கிழமை இடம்பெற்றது. ‘கமசமக பிலிசந்தர’ வேலைத்திட்டத்தின் கீழ் இறக்காமம் பிரதேச செயலக 12 பிரிவுகளிலும் குறைந்தது 05 வேலைத்திட்டங்கள் என்ற அடிப்படையில் 84 வேலைத்திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. வரவு செலவுத்திட்டம் 2022 க்கான நிதி ஒதுக்கீட்டின் மூலம் அபிவிருத்தியின் பயன்கள் விரைவாக மக்களுக்கு சென்றடையும் வகையில் கிராம மட்ட பிராந்திய அபிவிருத்திகளுக்கு முன்னுரிமை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இவ்வேலைத்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி கருத்திட்டங்கள் பின்வரும் பிரிவுகளின் கீழ் செயற்படுத்தப்படவுள்ளது. 01. வாழ்வாதார அபிவிருத்தி – 40% 02. பொது உட்கட்டமைப்பு அபிவிருத்தி – 40% 03. சுற்றாடல் மற்றும் நிலையான அபிவிருத்தி – 10% 04. சமூக நலன் மற்றும் சமூக அபிவிருத்தி – […] - [ஆசிரியர் சங்கங்கள் நாளை சுகயீன விடுமுறை](https://minnal24.com/%e0%ae%86%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%88/): ஆசிரியர் சங்கங்கள் நாளை திங்கட்கிழமை சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எரிபொருள் இன்மையால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாடசாலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நாளை சுகயீன விடுமுறை போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் - [விடுதலை புலிகளின் தலைவர் 2004 சுனாமியின் போது உயிரிழந்தார் ](https://minnal24.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d/): காலிமுகத்திடலில் இடம்பெற்று வரும் மக்கள் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட நீல் தம்மிக்க என்பவர் விடுதலை புலிகளின் தலைவர் பற்றிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். 2009ஆம் ஆண்டு மோ மாதம் இடம்பெற்ற இறுதி யுத்ததின் போது நந்திக்கடலில் வைத்து பிரபாகரன் இறக்கவில்லை, இவர் 2004.26.12 இல் சுனாமியின் போது பிரபாகரன் உயிரிழந்தார் என தெரிவித்துள்ளார். திருடர்கள் ஹீரோவாக முடியாது, ஹீரோக்கள் திருடர்களாக இருக்க மாட்டார்கள், என தெரிவித்து அச்சடிக்கப்பட்ட பதாகை ஒன்றை ஏந்திய வண்ணம் குறித்த நபர் காலிமுகத்திடலில் நின்றிருந்தார். - [சவர்க்காரம், பற்பசை, ஷாம்போ விலைகள் அதிகரிப்பு ?](https://minnal24.com/%e0%ae%9a%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9a%e0%af%88-%e0%ae%b7%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d/): சவர்க்கார இறக்குமதியாளர்கள் தமது பொருட்களின் விலையை 100 வீதத்திற்கு மேல் அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். அந்தவகையில், இலங்கையில் பிரபல வர்த்தக நாமம் ஒன்றின் விலையும் இதே போன்று 70 ரூபாவில் இருந்து 115 ரூபாவாகவும் . 75 ரூபாவிலிருந்து 145 ரூபாவாகவும் மற்றும் குழந்தைகளுக்கான சவர்காரத்தின் விலை 74 ரூபாவிலிருந்து 175 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. மேலும் சலவை தூள், சவர்க்கார திரவம் போன்ற அனைத்து உப தயாரிப்புகளின் விலைகளும் 100 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், பற்பசை மற்றும் ஷாம்போ ஆகியவற்றின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. - [சுகாதார அமைச்சகத்தின் இணையதளம் சைபர் தாக்குதலுக்கு உள்ளானது](https://minnal24.com/%e0%ae%9a%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a3/): சுகாதார அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளம் (http://www.health.gov.lk/)  ‘தமிழ் ஈழ சைபர் படை’ என அடையாளப்படுத்தும் குழுவினால் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. - [இடமாற்றங்களை தடுக்க அரசியல்வாதிகளை நாடும் ஆசிரியர்கள்](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%a4%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a/): -கிளிநொச்சி நிருபர்- யாழ் மாவட்டத்திலுள்ள தீவகம் தவிர்ந்த 4 வலயங்களிலும் சுமார் 900 ஆசிரியர்கள் இதுவரை வெளி மாவட்டங்கள் செல்லாமல் யாழ் மாவட்டத்தில் தொடர்ந்தும் சேவை ஆற்றுவதாக அறியக் கிடைத்துள்ளது. யாழ் வலயம், வலிகாமவலையம் தென்மராட்சி மற்றும் வடமராட்சி வலயங்களிலேயே குறித்த ஆசிரியர்கள் தொடர்ச்சியாக வெளி மாவட்டங்கள் செல்லாமல் கடமையாற்றி வருகின்றனர். தற்போது ஆசிரியர் இடமாற்றத்திற்கு வெளி மாவட்டங்களில் கடமையாற்றும் குறிப்பாக கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களில் இருந்து யாழ் மாவட்டத்திற்கு வருகை தருவதாக சுமார் 274 பேர் வரை பணி இடமாற்றம் கோரி விண்ணப்பம் செய்திருப்பதாக அறிய முடிகிறது. எனினும், யாழ் மாவட்டத்திலிருந்து 7 வருடங்களைத் தாண்டியவர்களுக்கு வெளிமாவட்ட இடமாற்றம் வழங்கப்படவுள்ள நிலையில் பலர் அரசியல்வாதிகளையும் உயர் அதிகாரிகளையும் நாடத் தொடங்கியுள்ளனர். வெளி மாவட்டங்களில் தொடர்ச்சியாக ஏழு வருடங்களுக்கு மேலாக ஆசிரியராக உள்ளவர்கள் இதுவரை தமது சொந்த இடங்களுக்கு தற்போது திரும்புவோம் என எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் […] - [வீதித்தடைகளை பயன்படுத்தி பலத்த பாதுகாப்பு](https://minnal24.com/%e0%ae%b5%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/): ஜனாதிபதி செயலகத்திற்கு செல்லும் அனைத்து வீதிகளிலும் பொலிஸார் வீதித்தடைகளை பயன்படுத்தி பாதுகாப்பை பலப்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் நெளும் மாவத்தை பகுதியில் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது குறித்த பகுதியில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் ஏனைய இடங்களில் பணிபுரிபவர்களின் வாகனங்களை சோதனையிட்ட பின்னரே அவர்கள் வீதிக்கு அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.   - [கடனில் இயங்கும் பல நோக்கு கூட்டுறவு சங்கத்திற்கு புதிய நிர்வாக தெரிவு](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%9f%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b2-%e0%ae%a8%e0%af%8b%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/): -கிளிநொச்சி நிருபர்- பல இலட்சம் ரூபா கடனில் இயங்கும் வடமராட்சி கிழக்கு பல நோக்கு கூட்டுறவு சங்கத்திற்கு புதிய நிர்வாக தெரிவு  வடமராட்சி கிழக்கு பல நோக்கு கூட்டுறவு சங்க மாநாட்டு மண்டபத்தில் முன்னாள் தலைவர் சிவலிங்கம் சிறிகலாதன் தலைமையில் காலை 11:00 மணியளவில் இடம் பெற்றது. இதில் புதிய தலைவராக த.தங்கரூபன் தெரிவு செய்யப்பட்டதுடன் அவருடன் சேர்த்து ஆறு இயக்குநர்களும் தெரிவு செய்யப்பட்டனர். கடந்த காலங்களில் வடமராட்சி கிழக்கு பல நோக்கு கூட்டுறவு சங்கத்தில் இடம் பெற்றதாக சொல்லப்படும் மோசடிகள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள பொதுச்சபை உறுப்பினர் இ.முரளீதரன் தலமையில் ஐவர் கொண்ட விசாரணை குழுவும் தெரிவு செய்யப்பட்டனர். இதேவேளை வடமராட்சி கிழக்கு பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் வளர்ச்சிக்கு தடையாகவும், இவ்வளவு கடன் ஏற்பட காரணமாகவும் யாழ் மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களமே இருந்ததாகவும் இங்கு கருத்து தெரிவித்த பலரும் கூட்டுறவு திணைக்களம் மீது குற்றம் சாட்டியதுடன் 2010 […] - [ஊர்காவற்துறை சுகாதார வைத்திய அதிகாரியின் இடமாற்றம் ஒத்திவைப்பு](https://minnal24.com/%e0%ae%8a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b1%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b1%e0%af%88-%e0%ae%9a%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0-%e0%ae%b5%e0%af%88%e0%ae%a4/): -கிளிநொச்சி நிருபர்- ஊர்காவற்றறை சுகாதார வைத்திய அதிகாரியை தெல்லிப்பழைக்கு பணி இடமாற்றம் வழங்கப்பட்ட நிலையில் தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் தெரிய வருவதாவது, ஊர்காவற்துறை சுகாதார வைத்திய அதிகாரியாக கடமையாற்றிய வைத்தி அதிகாரியை தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு பணி இடமாற்றம் அண்மையில் வழங்கப்பட்டது. ஊர்காவற்துறைக்கு நிரந்தர சுகாதார வைத்திய அதிகாரி ஒருவரை நியமனம் செய்யாமல் வடமாகாண சுகாதார பணிப்பாளர் குறித்த இடமாற்றத்தை சிபாரிசு செய்திருந்தார். இந் நிலையில் குறித்த விடயம் வடமாகாண ஆளுநர் கவனத்திற்கு சென்றததன் காரணமாக இடமாற்றத்தை தற்காலிகமாக நிறுத்தி இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது - [அலரி மாளிகைக்கு முன்பாக இறுதி ஊர்வலம்](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%b2%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95/): பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லமான அலரி மாளிகைக்கு முன்பாக நேற்று சனிக்கிழமை  பிற்பகல் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்பதைப் போன்று வருகைதந்து சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரம்புக்கனை போராட்டத்தின் போது கொல்லப்பட்ட இளைஞரின் இறுதிக்கிரியையுடன் இணைந்து இந்த அடையாள இறுதி ஊர்வலத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். அலரி மாளிகையின் பிரதான நுழைவாயில் மற்றும் சுவர்களில் இரத்தக் கறையுடன் சிவப்பு வண்ணம் பூசப்பட்ட வெள்ளைக் கொடிகளை பறக்கவிட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது எதிர்ப்பினை வெளியிட்டனர். மேலும், அலரிமாளிகை முன்பாக பல இடங்களில் மலர் வளையம் வைத்தும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். - [கோடரியால் தாக்கப்பட்டு ஒருவர் படுகாயம்](https://minnal24.com/%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%92/): -யாழ் நிருபர்- யாழ் – பருத்தித்துறை, திக்கம் பகுதியில் ஒருவர் இன்று சனிக்கிழமை காலை கோடரியால் வெட்டப்பட்டு படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திக்கம் பகுதியை சேர்ந்த 44 வயதானவரே இச்சம்பவத்தில் படுகாயமடைந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், இன்று காலை 9 மணியளவில் இந்த தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதலில் படுகாயமடைந்தவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். - ['நாட்டுக்கு சிறந்த முன்மாதிரியான தொழிலாளர்களுக்கு வாழ்த்துக்கள் '](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae/): அனைத்து குடிமக்களின் முன்னேற்றத்திற்காகவும் இரவு பகல் பாராது பாடுபடும் அன்பான உழைக்கும்  மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள மேதின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இரண்டு வருடங்களுக்கும் மேலாக உலகளாவிய தொற்றுநோய் நிலைமைக்கு மத்தியில் பல்வேறு பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொண்ட நீங்கள், நாட்டில் காணப்படும் இந்த பொருளாதார நெருக்கடியினாலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பது இரகசியமல்ல. எதிர்பாராத விதமாக முகங்கொடுக்க நேரிட்டுள்ள இப்பொருளாதார நெருக்கடி நிலைக்கு மத்தியிலும், மிகுந்த அர்ப்பணிப்புடனும், நிதானத்துடனும் செயல்பட்டு நீங்கள் நாட்டுக்கு சிறந்த முன்மாதிரியாக திகழ்கின்றீர்கள். தொழிலாளர் போராட்டத்திற்காக உங்களுடன் கைக்கோர்த்திருந்த நான், பொறுப்பு கூற வேண்டிய சகல சந்தர்ப்பத்திலும் உங்களது உரிமைகளுக்காக நிறைவேற்றப்பட வேண்டிய கடமைகளையும் பொறுப்புகளையும் ஒருபோதும் புறக்கணித்ததில்லை. எனினும் நாட்டில் ஏற்பட்டுள்ள இப்பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு நாம் அனைவரும் ஒன்றாக கைக்கோர்த்து, முதலில் இச்சவாலை வெற்றி கொள்ள வேண்டும். பொருளாதார நெருக்கடியை […] - [இன்றைய காலநிலை- வளிமண்டலவியல் திணைக்களம்](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%88%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b2-4/): மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது. ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். அத்துடன் வடக்கு, வடமத்திய வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும். தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் அபாயத்தைக் குறைக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. - [தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து](https://minnal24.com/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf/): தொழிலாளர் தினத்தை முன்னிட்டு  இன்று ஞாயிற்றுக்கிழமை  பல கட்சிகளின் பேரணிகள் இடம்பெறவுள்ளதால் கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் ஒன்று அமுல்படுத்தப்படவுள்ளது. இதன்படி, நுகேகொடை மற்றும் கொழும்பு நகரில் முன்னெடுக்கப்படும் பேரணிகள், கூட்டங்கள் காரணமாக குறித்த பகுதியில் பொலிஸாரை சேவையில் ஈடுபடுத்த அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. - [இன்று தொழிலாளர் தினம்](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d/): தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுத்த நாளாக, இன்று மே தினம் அனைத்துலக ரீதியாக கொண்டாடப்படுகின்றது. 18ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில், 12 முதல் 18 மணிநேர கட்டாய தொழில் நிர்ப்பந்தத்திற்கு எதிராக ஏற்பட்ட புரட்சியே, மேதின உருவாக்கத்தின் ஆரம்பமாக இருந்தது. அமெரிக்காவில் 1832இல், பொஸ்டனில் கப்பலில் பணியாற்றிய தச்சுத் தொழிலாளர்கள், 10 மணி நேர தொழில் கோரிக்கையை முன்வைத்து பணிநிறுத்தம் செய்தனர். இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர் இயக்கங்களை இணைத்து ‘அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு’என்ற இயக்கம் உருவாக்கப்பட்டது. இந்த இயக்கம் 8 மணிநேர தொழில் கோரிக்கையை முன்வைத்து, தொடர்ந்து போராட்டங்களை நடத்தியது. 1886ஆம் ஆண்டு மே முதலாம் திகதி நாடு தழுவிய பணி நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது. இந்த இயக்கமே மே தினம் பிறப்பதற்கு காரணமாகவும் அமைந்தது. 1886ஆம் ஆண்டு, மே மாதம் 4 திகதி, இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் அணிதிரண்டு, சிக்காக்கோ நகரில் போராட்டம் நடத்தினர். ஆயுத பலத்தினால், இந்தத் […] - [ஒருங்கிணைந்த தமிழர் கூட்டமைப்பின் கலந்துரையாடல்](https://minnal24.com/%e0%ae%92%e0%ae%b0%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a3%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%af%8d/): -யாழ் நிரபர்- ஒருங்கிணைந்த தமிழர் கூட்டமைப்பின் கலந்துரையாடல் இலங்கை வேந்தன் கலைக் கல்லூரியில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மதத்தலைவர்கள் தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். ஒருங்கிணைந்த தமிழ் கூட்டமைப்பின் ஏற்பாட்டில், தென் பகுதியில் ஏற்பட்டுள்ள அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள் தொடர்பில், ‘உங்களை நாங்கள் புரிந்து கொள்கின்றோம் எங்களை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்’ என்னும் தொனிப்பொருளில் தமிழர் தரப்பாக முன்னெடுக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடலாக இக் கலந்துரையாடல் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலின் போது, எதிர்வரும் காலங்களில் வடக்கின் ஏனைய மாவட்டங்கள் மற்றும் கிழக்கு மாகாணத்தில் குறித்த கலந்துரையாடல் கூட்டங்களில் கலந்து கொள்ளாத ஏனைய பொது அமைப்புக்கள் மற்றும் சிவில் அமைப்பு பிரதிநிதிகளை ஒருங்கிணைத்து எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் எதிர்காலத்தில் ஆராய உள்ளதாக ஒன்றிணைந்த தமிழர் கூட்டமைப்பின் பிரதிநிதி தெரிவித்தார். - [மன்னார் பேசாலையில் மே தின விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பம்](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%87-%e0%ae%a4%e0%ae%bf/): -மன்னார் நிருபர்- மன்னார் பேசாலை புனித வெற்றி நாயகி ஆலய பங்கு பேரவையின் ஆதரவுடன் பேசாலை மீனவ கூட்டுறவு சங்கம், விக்ரரிஸ் விளையாட்டுக்கழகம் ஆகியவற்றின் பேராதரவுடன் வெற்றியின் சிறகுகள் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் ‘மே தின’ விளையாட்டு போட்டிகளின் அங்கமாக கரப்பந்தாட்ட போட்டி இன்று சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு ஆரம்பமானது. பேசாலை புகையிரத வீதியில் உள்ள மைதானத்தில் பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயத்தின் உதவி பங்குத்தந்தை மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டு மின்னொளி இரவு நேர போட்டியாக இடம்பெற்று வருகின்றது. மீனவ மக்களைக் கொண்ட பேசாலை கிராமத்தில் மே தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் கடந்த சில வருடங்களாக பெரும் தொற்று காரணமாக மே தின கொண்டாட்ட நிகழ்வுகள் தடைப்பட்டிருந்த போதும் இம்முறை மே தினத்தை வெகு சிறப்பாக கொண்டாடும் நோக்கில் போட்டி இடம்பெற்று வருகின்றது. நாளை மே தின விசேட திருப்பலி […] - [ராகலையில் இருந்து காலி முகத்திடலை நோக்கி நடைபயணம் ஆரம்பம்](https://minnal24.com/%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%ae/): -நுவரெலியா நிருபர்- நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெறுக்கடியான நிலைக்கு அரசு உடனடியாகத் தீர்வு வழங்க வேண்டும், உரம் பொருளாதாரம் , எரிவாயு மற்றும் பொருட்களின் விலை உயர்வு போன்ற பிரச்சினைகளுக்கு அரசு தீர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தி உடபுசல்லாவையைச் சேர்ந்த இளைஞன் நடைபயணத்தை இன்று சனிக்கிழமை காலை ஆரம்பித்துள்ளார். உடபுசல்லாவை சேர்ந்த மணிவேல் சத்தியசீலன் என்பவர் இன்று காலை 9.30 மணியளவில் ராகலையில் வைத்து இடம்பெற்ற மத வழிபாடுகளின் பின்னர் நுவரெலியா, ஹட்டன், கினிகத்தனை, அவிசாவளை வழியாக கொழும்பு காலி முகத்திடலை நோக்கி நடைபயணத்தினை ஆரம்பித்துள்ளார். இவ் நடைபயணத்திற்கு மக்கள் மத்தியில் இருந்து சத்தியசீலனுக்கு வரவேற்பும் , உற்சாகமும் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. - [களவாடப்பட்ட தங்கச்சங்கிலிகள் மீட்பு](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%b3%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9f%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf/): -கிளிநொச்சி நிருபர்- கடந்த மாதம் இரு வேறு திகதிகளில் களவாடப்பட்ட தங்கச் சங்கிலிகள் 2 இரண்டு புலனாய்வு பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளது. இன்று சனிக்கிழமை புலனாய்வுப்பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கு அமைவாக, குறித்த சங்கிலிகளை களவாடிய இரண்டு சந்தேக நபர்களும், தங்கச் சங்கிலியை விலைக்கு வாங்கிய இருவரும் தருமபுர பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 4 பேரையும் இன்று நீதிமன்றில் முற்படுத்திய போது ஏழு நாட்களுக்கு தடுப்புக்காவலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார். - [வேகக்கட்டுப்பாட்டை இழந்த வாகனம் வீதியை விட்டு பாய்ந்து விபத்து](https://minnal24.com/%e0%ae%b5%e0%af%87%e0%ae%95%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%87%e0%ae%b4%e0%ae%a8-3/): -யாழ் நிருபர்- தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெல்லிப்பழை – காங்கேசன்துறை வீதியில் பயணித்த ஹயஸ் வாகனம் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் உள்ள மதகுடன் மோதி விபத்துக்குள்ளானது. குறித்த விபத்து இன்று சனிக்கிழமை பிற்பகல் வேளையில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் வாகனத்தில் பயணித்த எவருக்கும் தெய்வாதீனமாக காயங்கள் எவையும் ஏற்படவில்லை. தெல்லிப்பழை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். - [யாழ்.பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மூவர் பேராசிரியர்களாக பதவி உயர்வு](https://minnal24.com/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b4%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a/): -யாழ் நிருபர்- யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மூவர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். மருத்துவ பீடத்தைச் சேர்ந்த ஒருவரும், வணிக முகாமைத்துவ பீடத்தைச் சேர்ந்த இருவருமாக மூன்று சிரேஷ்ட விரிவுரையாளர்களைப் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்துவதற்குப் பல்கலைக்கழகப் பேரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது. பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் இன்று  சனிக்கிழமை காலை, துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்றது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சுற்றறிக்கை நியமங்களுக்கு அமைய திறமை அடிப்படையில் பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களின் மதிப்பீடு, நேர்முகத் தேர்வு முடிவுகள் இன்றைய பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அவற்றின் படி, மருத்துவ பீடாதிபதியும், சமுதாய மருத்துவ மற்றும் குடும்ப மருத்துவத் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளருமான மருத்துவர் இ.சுரேந்திரகுமாரன் சமுதாய மருத்துவத் துறையில் பேராசிரியராகவும், வணிக முகாமைத்துவ பீடத்தின் கணக்கியல் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பி. பிரதீப்காந் கணக்கியலில் பேராசிரியராகவும், மனித வள முகாமைத்துவத் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் […] - [மட்டு. மீராவோடை மன்பஉல் ஹிதா அரபுக் கல்லூரியில் சர்வதேச குத்துஸ் தினம் அனுஸ்டிப்பு](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%ae%e0%af%80%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b5%e0%af%8b%e0%ae%9f%e0%af%88-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%89%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b9/): -வாழைச்சேனை நிருபர்- மட்டக்களப்பு மீராவோடை மன்பஉல் ஹிதா அரபுக் கல்லூரியில் சர்வதேச குத்துஸ் தினம் அனுஸ்டிக்கப்பட்டதுடன் ரமழான் வினா விடை போட்டி நிகழ்ச்சியும் நடைபெற்றது. மீராவோடை மன்பஉல் ஹிதா அரபுக் கல்லூரியின் நிர்வாகத் தலைவர் அஷ்ஷெய்க் அப்துல்ஹலீம் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் பிரதேச சமூக நல ஆர்வலர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இதன்போது சர்வதேச குத்துஸ் தினம் ஏன் கொண்டாடப்படுகின்றது என்ற சொற்பொழிவினை மௌலவி அல்ஹாபில் எம்.யூ.எம். சபீர் நிகழ்த்தினார். ரமழான் மாதத்தினுடைய இறுதி வெள்ளிக்கிழமையை சர்வதேச குத்துஸ் தினமாக ஈரான் இஸ்லாமிய புரட்சியினுடைய இஸ்தாபகர் இமாம் கொம்மினி ரம்மதுல்லா அலகி அவர்கள் அறிவித்திருந்தார். அன்று தொடக்கம் இன்றுவரை குத்துஸ்தினம், உலகம் முழுவதும் வாழக் கூடிய எல்லா மக்களாலும் பரவலாக அனுஸ்டிக்கப்பட்டு வருவதாக தமது சொற்மொழிவின் போது அவர் தெரிவித்தார். ரமழான் வினா விடை போட்டி நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவர்கள் குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்பட்டு […] - [பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும்](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b3%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%81/): நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று மழையுடனான வானிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மத்திய, சப்ரகமுவ, மேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களிலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும்  பிற்பகல் வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய பிரதேசங்களின் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில்  மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. - [60 மருந்துகளின் விலை 40 சதவீதத்தினால் அதிகரிப்பு](https://minnal24.com/60-%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-40-%e0%ae%9a%e0%ae%a4%e0%ae%b5%e0%af%80%e0%ae%a4/): 2015  ஆண்டின் 5  ஆம் இலக்க தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டத்தின் கீழ் மருந்து   60 மருந்துகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. மருந்து பொருட்களின் விலைகளை  40 சதவீதத்தினால் அதிகரித்துள்ள அதிவிசேட    வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டுள்ளது.   சுகாதார அமைச்சர் ஜயசுமனவினால் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைய பெரசிட்டமோல், அட்டோவாஸ்டடின், எனலாபிரில் ,அஸ்பிரின் உள்ளிட்ட பல்வேறு மருந்து பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. - [எரிபொருள் விநியோக பவுசர் உரிமையாளர்கள் சங்கம் வேலைநிறுத்தம்](https://minnal24.com/%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%af%e0%af%8b%e0%ae%95-%e0%ae%aa%e0%ae%b5%e0%af%81%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d/): எரிபொருள் விநியோக நடவடிக்கைகளில் இருந்து இன்று சனிக்கிழமை  நள்ளிரவு முதல்  விலகுவதற்கு இலங்கை கனியவள தனியார் பவுசர் உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை இது தொடர்பில் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் கஞ்சன விஜேசேகரவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்தே குறித்த சங்கம் இதனைத் தெரிவித்தது. எரிபொருள் விலை அதிகரிப்புக்கு இணையாக போக்குவரத்து கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்படாததன் காரணமாகவே இவ்வாறு எரிபொருள் விநியோக செயற்பாடுகளில் இருந்து விலகுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. - [அமைச்சுக்கள் தொடர்பான புதிய வர்த்தமானி](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%aa%e0%af%81/): கடந்த 18 ஆம் திகதி புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம் இடம்பெற்றிருந்த நிலையில்,  புதிய அமைச்சுகள் மற்றும் இராஜாங்க அமைச்சுகளின் விடயதானங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.   ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.  இதன்போது 17 அமைச்சரவை அமைச்சர்கள் , 21 புதிய இராஜாங்க அமைச்சர்களும் பதவியேற்றிருந்தனர். பதவியேற்று ஒருவாரம் கடந்துள்ள போதிலும், தற்பொழுதே அமைச்சுகளின் விடயதானங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. - [மருந்து பொருட்களை நன்கொடையாக வழங்கியது இந்தியா](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%a8%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f/): இந்திய அரசாங்கம் 15,500 அமெரிக்க டொலர் பெறுமதியான மருந்துப் பொருட்களை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே அவர்களினால் கொழும்பு துறைமுகத்தில் வைத்து சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமணவிடம் இந்த மருந்துத் தொகுதி கையளிக்கப்பட்டது.   - [விசா அனுமதிப்பத்திரம் இன்றி நாட்டில் தங்கியிருந்த வெளிநாட்டு பிரஜை கைது](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9c%e0%af%88-%e0%ae%85%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%88/): -நுவரெலியா நிருபர்- விசா அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்த நபரொருவர் ஹட்டன் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். கிடைக்கப்பெற்ற தகவலொன்றின் அடிப்படையில், ஹட்டன் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் இந்தக் கைது இடம்பெற்றுள்ளது. 25 வயதான சந்தேக நபரை, ஹட்டன் நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. - [கொகா கோலா நிறுவனத்தை வாங்கவுள்ளாரா மாஸ்க்?](https://minnal24.com/%e0%ae%95%e0%af%8a%e0%ae%95%e0%ae%be-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%99/): உலகின் பெரும் செல்வந்தர் எலோன் மஸ்க் அடுத்து கொகா கோலா நிறுவனத்தை விலைக்கு வாங்கவிருப்பதாய் வேடிக்கையாகக் கூறியுள்ளார். அண்மையில் அவர், ட்விட்டர் சமூக ஊடகத்தை 44 பில்லியன் டொலருக்கு வாங்கவுள்ளதாகத் தகவல் வெளிவந்தது. அதைத் தொடர்ந்து மஸ்க்கின் புதிய பதிவு வந்துள்ளது. “அடுத்து நான் கொகா கோலாவை வாங்குகிறேன். அதில் மீண்டும் கொக்கெய்னைச் சேர்ப்பேன்” என்று எலோன் மஸ்க் பதிவிட்டார். கொகா கோலா பானத்தின் ஆரம்பக்கட்ட செய்முறையில் ‘கொக்கெய்ன்’ போதைப்பொருள் தயாரிக்கத் தேவையான கொக்கோ இலைகள் சேர்க்கப்பட்டிருந்தன. பானத்தில் அப்போது 3.5 மில்லிகிராம் அளவிலான கொக்கெய்ன் இருந்ததாக நம்பப்படுகிறது. கொகா கோலா பானங்களிலிருந்து அது 1903ஆம் ஆண்டில் நீக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.   - [ஆப்கானிஸ்தான்-காபுலில் குண்டுத் தாக்குதல் : 66 பேர் பலி](https://minnal24.com/%e0%ae%86%e0%ae%aa%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95/): ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் உள்ள வழிபாட்டுத் தலம் ஒன்றில்இ நேற்று நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 66 பேர் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது மேலும், 78 பேர் காயமடைந்த நிலையில்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தலிபான்களின் ஆட்சி நிலவும் ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட இந்தக் குண்டுத் தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு உரிமை கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. - [அருகிலுள்ள பாடசாலையில் கடமையாற்ற கல்வியமைச்சு இணக்கம்](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95/): எரிபொருள் செலவுகள் மற்றும் தற்போதைய நிலைமைக்கு மத்தியில், அருகிலுள்ள பாடசாலையில் கடமையாற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு, ஆசிரியர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைக்கு, கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா இணக்கம் தெரிவித்துள்ளார். எனினும், இவ்வாறானதொரு தீர்மானத்தை உடனடியாக அமுலாக்க முடியாதென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பு கிடைக்குமாயின், தரவுகளை மதிப்பாய்வு செய்து, இந்த நடவடிக்கையை முன்னெடுக்க முடியுமென   அவர் மேலும் தெரிவித்துள்ளார். - [பீஜிங்கில் மூன்றாவது முறையாக வைரஸ் தொற்றுப் பரிசோதனை](https://minnal24.com/%e0%ae%aa%e0%af%80%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%82%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%af%81/): 21 மில்லியன் பேருக்கும் அதிகமானோர் வசிக்கும் பீஜிங்கில் இன்று சனிக்கிழமை    மூன்றாவது முறையாக வைரஸ் தொற்றுப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. சீனாவின் குவாங்சோ நகரில் அனைத்து உள்நாட்டு விமானச் சேவைகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. அங்குள்ள விமான நிலைய ஊழியர்களுக்கும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளவர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. ஷங்ஹாயில் நடப்பிலுள்ள முடக்கநிலையைத் தவிர்க்க குவாங்சோவில் உள்ள 7 வட்டாரங்களில் பெரிய அளவிலான வைரஸ் தொற்றுப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பீஜிங்கில் உள்ள பாடசாலைகளும் அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளன. அங்குள்ள குடியிருப்புப் பேட்டைகளில் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பீஜிங்கில் 50க்கும் மேற்பட்ட வைரஸ் தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. முழுமையான கொரோனா தொற்றை துடைத்தொழிக்கும் கொள்கையை பின்பற்றும் சீனா, நோயை கட்டுப்படுத்த கடுமையான முடக்கநிலை, கூட்டு வைரஸ் சோதனை மற்றும் பயணக் கட்டுப்பாடுகளை செயற்படுத்தி வருகிறது. - [ நாளை காலி முகத்திடலுக்கு வரவேண்டாம் என எச்சரிக்கை ](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%88-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%b2%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/): தொழிலாளர் தினமான நாளை ஞாயிற்றுக்கிழமை காலிமுகத்திடல் போராட்டக்களத்துக்கு அரசியல்வாதிகளை அழைத்துக்கொண்டு வர வேண்டாமென போராட்டத்திலுள்ள இளைஞர், யுவதிகள் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அறிவித்துள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க, மே தினத்தன்று தமது கட்சியினரை காலிமுகத்திடல் போராட்டகளத்துக்கு செல்லுமாறு அறிவித்திருந்தார். இதனையடுத்தே போராட்ட களத்திலுள்ள இளைஞர்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். கொழும்பு காலிமுகத்திடலில் இளைஞர், யுவதிகள் கடந்த 21 நாட்களாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எந்த அரசியல் கட்சிகளின் ஆதரவுமின்றி இளைஞர்கள் தன்னெழுச்சியாக இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர். - [யாழ்.முஸ்லிம் சிவில் சமூகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் நல்லிணக்க இப்தார் நிகழ்வு](https://minnal24.com/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%82/): -யாழ் நிருபர்- முஸ்லிம் வர்த்தகர்களின் நிதி அனுசரணையில், யாழ். முஸ்லிம் சிவில் சமூகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் நல்லிணக்க இப்தார் நிகழ்வானது இன்று யாழ்.ஒஸ்மானியாக் கல்லூரி உள்ளக மைதானத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் உயர் க. மகேசன்  பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்திருந்தார். மேலும் இந் நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக யாழ்ப்பாணம் பிரதேச செயலர் எஸ்.சுதர்சன், யாழ் மாநகர ஆணையாளர்   த. ஜெயசீலன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். இவ் நல்லிணக்க இப்தார் நிகழ்வில் விசேட உரைகளை மௌலவி எம்.ஏ. பைசர் (மதனி), மௌலவி ஏ. எம். ரழீம், மௌலவி ஏ.டபள்யூ. பி. அன்பர் (நஜாஜி) உள்ளிட்டோர் வழங்கியிருந்தனர். ஏற்பாட்டுக்குழு சார்பில் யாழ். முஸ்லிம் சிவில் சமூகம் சார்பில் எம்.எம்.எம். நிபாஹிர் அவர்கள் தலைமை உரையினை வழங்கியிருந்தார். மேற்படி இவ் நல்லிணக்க இப்தார் நிகழ்வில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, யாழ் மாவட்ட செயலக அதிகாரிகள், யாழ் பிரதேச […] - [பிரான்ஸ் பாராளுமன்ற உறுப்பினர் - யாழ்.மாநகர முதல்வர் இடையே கலந்துரையாடல்](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%89%e0%ae%b1%e0%af%81%e0%ae%aa/): -யாழ் நிருபர்- பிரான்ஸ் பாராளுமன்ற உறுப்பினரும், பிரஞ் பாராளுமன்ற செயலாளருமாகிய ஜோன்ஸ் பிரான்சுவாவுக்கும், யாழ்.மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனிற்கும் இடையில் கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் கருத்து தெரிவித்த யாழ். மாநகர முதல்வர், நாங்கள் உங்களிடம் இரண்டு கோரிக்கைகளை முன்வைக்கின்றோம். ஒன்று தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கான நீதியினைப் பெற்றுதருவதற்கு நீங்கள் துணை நிற்கவேண்டும். இரண்டாவதாக 30 வருட போரின் காரணமாக அழிக்கப்பட்ட எமது பிரதேசங்களை கட்டியெழுப்புவதற்கு தேவையான உதவிகளை நீங்கள் வழங்கவேண்டும் என்றும் கேட்டு கொண்டார். அத்துடன் தற்போது இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலையில் இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகள் அமைப்புக்கள் தமிழருக்கு நீதியான சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சமஸ்டி முறையிலான ஆட்சி அதிகாரத்தினை சிறிலங்கா அரசு வழங்கவேண்டும் என்ற நிபந்தனையுடன் தான் நிதி உதவிகளை அளிக்கவேண்டும் என்றும் அதற்கான அழுத்தங்களை நீங்கள் பிரயோகிக்க வேண்டும், என்றும் கேட்டுக்கொண்டார். இக் கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த பிரஞ் பாராளுமன்ற […] - [யாழில் பொருட்களை பதுக்கி வைத்திருந்த வர்த்தகர் பொலிஸாரிடம் சிக்கினார்](https://minnal24.com/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%aa%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf/): -யாழ் நிருபர்- யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரின் கட்டளைக்கு அமைவாகவும், மாவட்ட பொறுப்பதிகாரியின் பணிப்பிற்கு அமைவாகவும், பாவனையாளரிடமிருந்து கிடைக்க பெற்ற எரிவாயு தொடர்பான முறைப்பாட்டின் அடிப்படையில் பாவனையாளர் அதிகார சபையினரால் நேற்று வெள்ளிக்கிழமை களப் பரிசீலனை செய்யப்பட்டது. இத் திடீர் பரிசீலனையின் போது வர்த்தக நிலையத்தில் அதிகூடிய விலைக்கு விற்பனை செய்யப்பட்ட மற்றும் பதுக்கி வைக்கப்பட்டிருந்த எரிவாயு பொலிஸாரின் உதவியுடன் கைப்பற்றப்பட்டு சரியான விலைக்கு பாவனையாளர்களுக்கு வழங்கப்பட்டதுடன் அவ் வர்த்தகருக்கு எதிராக வழக்கும் பதிவு செய்யப்பட்டது. மேலும், இவ்வாறாக எரிவாயுவினை அதிகூடிய விலைக்கு விற்பனை செய்தல் மற்றும் பதுக்கி வைத்திருத்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடும் வர்த்தகர்கள் மீது சட்ட நடவடிக்கையெடுக்கப்படும் என்பதனை வர்த்தகர்களுக்கு பாவனையாளர் அதிகார சபை தெரிவித்துள்ளது. - [தமிழக பா.ஜா.க தலைவர் இலங்கை வருகை](https://minnal24.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95-%e0%ae%aa%e0%ae%be-%e0%ae%9c%e0%ae%be-%e0%ae%95-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95/): இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அழைப்பின் பேரில் தமிழக பா.ஜா.க தலைவர் அண்ணாமலை இலங்கை வந்துள்ளார். மறைந்த தலைவர்களான அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமான், அமரர் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோர், இந்தியாவில் எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் இலங்கை தொழிலாளர் கங்கிரசுடன் காலம் தொட்டு நட்புறவை ஏற்படுத்தி வைத்திருந்தனர். அதன் விளைவாக, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இந்தியாவில் இருந்து மலையக மக்கள் சார்ந்த உதவிகளை முதல் முதலாக இலங்கை பெற வழிவகுத்தது. அதன்படி, இன்று சனிக்கிழமை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அழைப்பை ஏற்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பிரதிநிதியாக அண்ணாமலை  இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள இலங்கை வந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.   - [சட்டவிரோதமாக இந்தியா செல்ல முயன்ற 13 பேர் யாழில் கைது](https://minnal24.com/%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8b%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2/): -யாழ் நிருபர்- சட்டவிரோதமாக இந்தியா செல்வதற்கு முயன்ற திருகோணமலையை  சேர்ந்த 13 பேர் நேற்றிரவு யாழ்.வளலாய் கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது அவர்கள் பயணித்த ஒரு டிங்கி படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தற்போது காங்கேசன்துறை கடற்படை முகாமில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றனர். கடற்படையினரின் விசாரணையின் பின்னர் அவர்கள் பலாலி பொலிஸ் நிலையத்தில் கையளிக்கப்படவுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் திருகோணமலையை சேர்ந்தவர்கள் என்பதுடன், அவர்களில் ஆண்கள் 05, பெண்கள் 03, சிறுவர்கள் 05 என மொத்தமாக 13 பேர் உள்ளடங்குவர். - [மே 1ம் திகதியை துன்பியல் நாளாக கடைபிடிக்க இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் முடிவு](https://minnal24.com/%e0%ae%ae%e0%af%87-1%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%a4%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8/): -யாழ் நிருபர்- 2022 மே 1 ம் திகதியை துன்பியல் நாளாக கடைபிடிப்பதாக தெரிவித்து இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அவ்வறிக்கையில், உலகத் தொழிலாளர் நாளாம் மே 1 உலகில் வாழும் ஒட்டுமொத்த தொழிலாளர்களின் எழுச்சி நாளாகும். இந்நாளில் தொழிலாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எழுச்சியை வெளிப்படுத்தும் நாளே மேதினம். இலங்கையில் வாழுகின்ற அத்தனை தொழிலாளர்களும் தற்போது வாழ்வதற்கு வழியின்றி வாழ்க்கைக்காக போராடுகின்றனர். ஆசிரியர்களின் அடிப்படைச் சம்பளமாக இரண்டு லட்சம் தந்தாலும் இன்றைய நிலையில் வாழ முடியாது. அது போன்று அத்தனை உழைப்பாளர்களும் அடுத்த வேளை உணவுக்கு அலையும் நிலை இன்று உருவாகியிருக்கின்றது. இந்த நிலைக்கு இலங்கையில் உள்ள அத்தனை அரசியல் கட்சி உறுப்பினர்களும் காரணம் என்பதனை வலியுறுத்தி இளையோர் இன்று வீதியில் இறங்கியுள்ளனர். வருடந்தோறும் நாம் நடாத்தும் மேதின பேரணியாலோ, கூட்டங்களாலோ எதுவும் நடந்துவிடப் போவதில்லை. இது கடந்தகால வரலாறு. இந்நாளை அரசியல்வாதிகளே தமக்குச் சாதகமாகப் […] - [இறந்த நிலையில் கரை ஒதுங்கிய முதலை](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b0%e0%af%88-%e0%ae%92%e0%ae%a4%e0%af%81%e0%ae%99%e0%af%8d/): -கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி கல்மடுக்குளத்தில் நேற்று இறந்த நிலையில் முதலை ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. முதலை இறந்தது தொடர்பில் மக்கள் மத்தியில் மிகவும் அச்சநிலை தோன்றியுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர் . இதுவரைகாலமும் இக்குளத்தில் இவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெறவில்லை எனவும், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர். . - [355 பேரின் ஆசிரிய நியமனம் எமக்கு கிடைத்த வரப்பிரசாதம் - கல்வி அமைச்சின் செயலாளர்](https://minnal24.com/355-%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%86%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%ae/): -யாழ் நிருபர்- நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் கல்வியற் கல்லூரியை நிறைவு செய்த ஆசிரிய மாணவர்களுக்கு நிரந்தர ஆசிரியர் நியமனம் கிடைத்தமை எமக்குத் கிடைத்த வரப்பிரசாதமாகும் என வடக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் எஸ் வரதீஸ்வரன் தெரிவித்தார். இன்று வெள்ளிக்கிழமை கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் இடம்பெற்ற 355 ஆசிரிய மாணவர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரி ஆசிரிய மாணவர்களுக்கு நிரந்தர ஆசிரியர் நியமனத்தை வழங்க முடியுமா என்ற சந்தேகத்தில் இருந்தோம். எனினும் உரிய தரப்பினருடன் கலந்துரையாடி நிரந்தர நியமனத்தை வழங்கக் கூடியதாக இருந்தமை ஆசிரியர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமாகும். ஆகவே, இவ்வாறு ஆசிரியர் நியமனங்களை பெற்றவர்கள் தாம் செல்லும் பகுதியில் கற்பித்தல் செயற்பாடுகளை வினைத்திறனாக மேற்கொள்வதன் மூலம் ஆசிரிய சேவைக்கு பெருமை சேர்க்க வேண்டும் என […] - [இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனிற்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்படுத்தியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4-7/): தனது அமைச்சு பதவிக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் வார்த்தை பிரயோகங்களை உபயோகிக்கப்படுத்தியதோடு, தனக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக, இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். கடந்த 25 ஆம் திகதி பிள்ளையாரடி பிரதான வீதியில் உள்ள இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் வீட்டுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரனின் வீட்டுக்கு முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த இளைஞனின் மரணத்திற்கு நீதி கோரி குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தனது அமைச்சு பதவிக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் வார்த்தை பிரயோகங்களை உபயோகிக்கப்படுத்தியதோடு தனக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்ததாகவும் இராஜாங்க அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார். குறித்த விடயம் தொடர்பாக இன்று மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துவிட்டு, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இளைஞர் மற்றும் […] - [மின்னல் தாக்கி நால்வர் படுகாயம்](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa/): -பதுளை நிருபர்- பண்டாரவளை சேவனகம பகுதியில் நேற்று இரவு மின்னல் தாக்கியதில் மூவர் பண்டாரவளை மாவட்ட வைத்தியசாலையில் குடியிருப்பு முற்றிலுமாக சேதம் அடைந்துள்ளது. நேற்று இரவு பண்டாரவளை சேவனகம  பகுதியில் கடும் மழை மற்றும் மின்னல் தாக்கியுள்ளது. இதனால் குறித்த பகுதியில் உள்ள வீடு மின்னல் தாக்கி முற்றிலுமாக சேதமடைந்துள்ளது.மற்றும் மின் உபகரணங்களும் சேதமடைந்துள்ளது. குடியிருப்பில் இருந்த நால்வருக்கு காயங்கள் ஏற்பட்டமையினால் பண்டாரவளை மாவட்ட வைத்தியசாலைக்கு சிகிச்சைகளுக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இதில் 5 வயது சிறுவனை சிறு காயங்கள் என்பதினால் மீண்டும் அவருடைய வீட்டுக்கு அனுப்பி உள்ளனர். எனினும், 60 வயதான முதியவர் ஒருவர், 58 வயதான மூதாட்டி, 14 வயதான சிறுமியும் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக தற்பொழுதும் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதன்போது சம்பவ இடத்திற்கு வருகை தந்த பண்டாரவளை பொலிஸார் சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.   - [பிரான்ஸ் தமிழ் வர்த்தகர்களுக்கும், யாழ்.மாநகர முதல்வருக்கும் இடையில் கலந்துரையாடல்](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d/): -யாழ் நிருபர்- பிரான்சில் ‘குட்டி யாழ்ப்பாணம்’ என அழைக்கப்படும் ‘பரிஸ் லாச்சப்பல்’ பகுதியில் பிரான்ஸ் தமிழ் வர்த்தகர்களுக்கும், யாழ்.மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனிற்கும்   இடையில் வர்த்தகர்களால் ஒழுங்குபடுத்தப்பட்ட கலந்துரையாடல் நடைபெற்றது. தமிழ்மக்களின் நீண்டகால அரசியல் அபிலாசைகள் மற்றும் தாயகத்து மக்களின் சமூக பொருளாதார அபிவிருத்திகள் மற்றும் மாநகர சபையின் செயற்பாடுகள் தொடர்பான ஒரு நீண்ட நேரக் கலந்துரையாடலாக இது அமைந்தது. இது தொடர்பில் மாநகர முதல்வர் மணிவண்ணன் மற்றும் பார்த்திபன் ஆகியோர் தமது கருத்துரைகளை வழங்கினர். இந்நிகழ்வினைத் தலைமை தாங்கி நடாத்திய பிரான்சின் பிரபல வர்த்தகர் பாஸ்கரன் பிரான்ஸ் இலங்கை தமிழ் பழைய மாணவர் சங்கத்தின் செயலாளரும் பிரான்ஸில் வளர்ந்து வரும் பிரபல வர்த்தகருமான தயா  உட்பட பல வர்த்தகர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர். இக் கலந்துரையாடலில் கலந்து கொண்ட கருத்துத் தெரிவித்த பிரான்ஸ் வாழ் தமிழ் வர்த்தகர்கள் யாழ்.மாநகர சபையின் தற்போதைய செயற்பாடுகளையும் மாநகர முதல்வர் மணிவண்ணன்  செயற்பாடுகளையும் வெகுவாகப் […] - [கோப்பாய் தேசிய கல்வியல் கல்லூரி ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான நியமனம் வழங்கி வைப்பு](https://minnal24.com/%e0%ae%95%e0%af%8b%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d/): -யாழ் நிருபர்- கோப்பாய் தேசிய கல்வியல் கல்லூரி ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான நியமனம் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது. கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியின் அதிபர் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் 355 ஆசிரியர்களுக்கான நியமனங்களை வடக்கு மாகாண பிரதம செயலாளர் சு. சுமன் பந்துலசேன வழங்கி வைத்தார். கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியின் தலைவர் எஸ்.பரமானந்தம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பல்வேறு பாடவிதானங்களை கொண்ட ஆசிரியர்களுக்கான நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன. விவசாயம், கலை விஞ்ஞானம், கணிதம் ஆங்கிலம் மற்றும் சமயம் உள்ளிட்ட 18 வகையான பாடவிதானங்களை கற்பிக்கும் 355 டிப்ளோமா ஆசிரியர் பயிலுனர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன. நிகழ்வில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஆர். வரதீஸ்வரர் வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எஸ். உதயகுமார் மற்றும் கல்வியற் கல்லூரியின் விரிவுரையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர். - [மனிதநேயத்தின் அடையாளம் தமிழர்கள் : இலங்கை மக்களுக்கு கைகொடுக்கிறது தமிழக அரசு](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%a8%e0%af%87%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4/): இலங்கை மக்களுக்கு உதவிகளை வழங்குவதற்கு மத்திய அரசிடம் அனுமதிகோரி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு சட்டபேரவையில் முன்வைக்கப்பட்ட தனிநபர் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்கமைய, 80 கோடி ரூபா பெறுமதியான 40,000 மெட்ரிக் டன் அரிசி, 137 மருந்து பொருட்கள் (28 கோடி ரூபா) மற்றும் குழந்தைகளுக்காக 500 டன் பால்மா (15 கோடி ரூபா) என்பவற்றை வழங்க தமிழக அரசு தீர்மானித்துள்ளது. இவற்றை தமிழக மாநில அரசினால் நேரடியாக வழங்க முடியாது என்பதால், இலங்கையில் உள்ள இந்தியா தூதரகம் ஊடாக வழங்கிவைக்க மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் என மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மேலும் தற்போது, தாம் வழங்க முன்வந்திருப்பது முதற்கட்ட உதவி என்றும், தேவையேற்படின், அடுத்தகட்டமாக உதவுவதற்கும் தமிழ்நாடு அரசு தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதேவேளை, இலங்கை மக்களுக்கு உதவி செய்வதற்காக தனது சொந்த நிதியிலிருந்து 50 இலட்சம் ரூபாவை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக தமிழக […] - [இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1/):   - [எதிர்வரும் திங்கட்கிழமை பொது விடுமுறை](https://minnal24.com/%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%ae%e0%af%88/): சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு 2022 ஆம் ஆண்டு மே மாதம் 2 ஆம் திகதி திங்கட்கிழமை பொது விடுமுறை தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது. சர்வதேச தொழிலாளர் தினம் ஞாயிற்றுக்கிழமை வருவதால், மறுநாள் திங்கட்கிழமையை பொது விடுமுறையாக அறிவிக்க அரசு முடிவு செய்துள்ளது. - [புதிய பிரதமரின் கீழ் இடைக்கால அரசாங்கம் அமைக்க ஜனாதிபதி இணக்கம்](https://minnal24.com/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%80%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%87%e0%ae%9f%e0%af%88/): புதிய பிரதமரின் கீழ் சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளதாக, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அரசாங்கத்திலிருந்து விலகிய 11 சுயாதீன கட்சிகளுடன் இன்று காலை இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி இதனை தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உட்பட 11 கட்சிகள் அண்மையில் அரசாங்கத்தில் இருந்து விலகி, நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடிக்கு தீர்வு காண அனைத்து கட்சி இடைக்கால அரசாங்கம் அமைக்கப்படும் வரை நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இருக்க தீர்மானித்தன. இந்நிலையில், அனைத்துக் கட்சிகளின் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் ஆலோசிப்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று அனைத்து அரசாங்க கட்சிகளின் கூட்டத்துடன் கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. - [மட்டக்களப்பு ஊடகவியலாளர்களையும் கொலை செய்யவா பார்க்கிறீகள் என சீறிப்பாய்ந்த சாணக்கியன்](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%8a%e0%ae%9f%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0/): மட்டக்களப்பிலுள்ள ஊடகவியலாளர்களையும் கொலை செய்யவா முயற்சிக்கின்றீர்கள்? என சிவில் உடையில் ஊடகவியலாளர்களை காணொளி எடுத்த பொலிஸாரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மிகவும் காட்டமான முறையில் கேள்வி எழுப்பியுள்ளார். படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் டி.சிவராமின் நினைவு தினத்தினை முன்னிட்டு இன்று வெள்ளிக்கிழமை  மட்டக்களப்பில் நினைவேந்தல் நிகழ்வும் கவனயீர்ப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டு.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வுகள் நடைபெற்றது. இலங்கையில் படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிவேண்டியும், நாட்டில் இடம்பெற்றுவரும் ஊடகவியலாளர்களுக்கு எதிரான அடக்குமுறையினை கண்டித்தும், தமிழ் மக்களின் உரிமையினை அங்கிகரிக்ககோரியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, போராட்டத்தில் ஈடுபட்ட ஊடகவியலாளர்களை சிவில் உடையில் வருகை தந்திருந்த பொலிஸார் கெமராக்களின் உதவியுடன் காணொளியாக பதிவு செய்திருந்தனர். இந்தநிலையில், இதன்போது கோபமடைந்த இரா.சாணக்கியன் மட்டக்களப்பிலுள்ள ஊடகவியலாளர்களையும் கொலை செய்யவா முயற்சிக்கின்றீர்கள்? என கேள்வி எழுப்பியிருந்தார்.   - [முஷாரபிற்கு தக்க பாடத்தை கற்பிற்க அம்பாறை மாவட்ட மக்கள் தயாராக உள்ளார்கள்](https://minnal24.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b7%e0%ae%be%e0%ae%b0%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88/): -கல்முனை நிருபர்- அமைச்சர் பதவி கிடைத்தால் அந்த பிரதேச மக்கள் கொண்டாடுவார்கள். ஆனால் இங்கு அந்த தினம் துக்க தினமாக இருக்கிறது. அரசியல் சூறாவளியில் பெரிய பெரிய அரசியல் திமிங்கிலங்கள் மொட்டு கடலிலிருந்து வெளியிறிக்கொண்டிருக்கும் இந்த காலத்தில் எங்கள் பிரதேச பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் பேத்தை போன்று மொட்டில் ஒட்டிக்கொண்டிருக்கிறார். அவரது பொய்யான மாயையை மக்கள் இனியும் நம்ப தயாரில்லை. பொத்துவில் மக்கள் உட்பட அம்பாறை மாவட்ட மக்கள் எதிர்காலத்தில் தக்க பாடத்தை முஷாரபிற்கு கற்பிற்க தயாராக உள்ளார்கள், என அகில இலங்கை மக்கள் காங்கிரசின் சார்பிலான உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் தெரிவித்தனர். நேற்று பொத்துவில் தனியார் விடுதியில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர்களான ஆசிரியர் ஏ.எம்.எம். தாஜுதீன், என்.எச்.முனாஸ் மக்கள் காங்கிரசின் வட்டார அமைப்பாளர்களான ஏ.எல். மனாப், அலாவுதீன் அப்துல்லாஹ் ஆகியோர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் […] - [வடக்குமாகாண பண்பாட்டுத் திணைக்களத்தின் பண்பாட்டு விழா](https://minnal24.com/%e0%ae%b5%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3-%e0%ae%aa%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d/): -யாழ் நிருபர்- வடக்குமாகாண பண்பாட்டுத் திணைக்களத்தின் அனுசரணையுடன் யாழ்ப்பாணம் பிரதேச செயலகமும் பிரதேச கலாசார பேரவையும் இணைந்து நடாத்தும் பண்பாட்டு விழா இன்று காலை, யாழ் பிரதேச செயலகத்தின் மண்டபத்தில் யாழ்ப்பாணம் பிரதேச செயலாளரும் கலாசார பேரவைத் தலைவருமான சாம்பசிவம் சுதர்சன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது பல்வேறுபட்ட கலை நிகழ்வுகள் இடம்பெற்றதோடு கலைஞர்களுக்கான யாழ்.ரத்னா விருதும், இளங்கலைஞர்களுக்கான கௌரவிப்பும் இடம்பெற்றதோடு யாழ்.பிரதேச செயலகத்தின் எல்லைக்குட்பட்ட கலைஞர்களில் உலகப்புகழ் பெற்ற கலைஞராகவும், பல கலைப்படைப்புக்களை ஆற்றி மறைந்த கலைத்தூது கலாநிதி மரியோ சேவியர் அடிகளாரின் நினைவுறுத்தும் திரைநீக்கம் செய்யப்பட்டு மலர் மாலையும் நிறைவுறும் படத்திற்கு சூட்டப்பட்டு மரியோ சேவிய அடிகளாரின் நினைவுப்பேருரையும் இடம்பெற்றது. இந்த நிகழ்வில், சர்வமத தலைவர்கள் பிரதம விருந்தினராக அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன், சிறப்பு விருந்தனராக இராஜமல்லிகை சிவசுந்தரசர்மா பிரதிப் பணிப்பாளர் வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கௌரவ விருந்தினராக கலைக்குரிசில் வசந்தி குஞ்ஞிதபாதம் நடனக் கலைஞர் யாழ் சத்னா, […] - [காங்கேசன்துறை சீமெந்து ஆலை தொடர்பில் ஆராய இந்திய அதிகாரிகள் குழு வருகை](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%87%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b1%e0%af%88-%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%86/): -யாழ் நிருபர்- காங்கேசன்துறை சீமெந்து ஆலை அபிவிருத்தி தொடர்பில் நேரில் ஆராய இன்று இந்திய அதிகாரிகள் குழுவினர் காங்கேசன்துறைக்கு வருகை தரவுள்ளனர். துறைமுகத்தை இந்திய நிதி அனுசரணையில் அபிவிருத்தி செய்வது தொடர்பில் ஆராயவே இன்று  காலை 11.30 மணிக்கு அதிகாரிகள் வருகை தரவுள்ளனர். இதன்போது, தொழில் அமைச்சின் செயலாளரான முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்கவும் வருகை தரவுள்ளார். வருகை தரும் குழுவினர் பலாலி விமானப்படைத் தளத்திற்கு விமானம் மூலம் வருகை தரவுள்ளனர். இவ்வாறு வருகைதரும் நான்கு இந்திய அதிகாரிகளும் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை அவதானிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. - [நீண்ட நாட்களாக கொள்ளையில் ஈடுபட்ட இரு இளைஞர்கள் கைது](https://minnal24.com/%e0%ae%a8%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%be%e0%ae%95-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2/): -யாழ் நிருபர்- யாழ்.மாநகரில் வெவ்வேறு நான்கு சம்பவங்களில் இளைஞர்களை அச்சுறுத்தி பணம் மற்றும் கைபேசிகளை அபகரித்த கும்பலைச் சேர்ந்த இருவர் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று இளைஞர் ஒருவரிடம் 6 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் கைபேசியை அபகரித்துச் சென்ற நிலையில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் மாநகரில் கடந்த ஒரு வாரத்துக்குள் 3 வெவ்வேறு சம்பவங்களில் இளைஞர்களை அச்சுறுத்தி பணம் மற்றும் கைபேசிகள் அபகரிக்கப்பட்டன. நூதனமான முறையில் இளைஞர்களை மறித்து தமது சகோதரியுடன் கதைப்பதாகவும் அவருடைய படத்தை பணப்பையில் (பர்ஸில்) வைத்திருப்பதாகவும் அச்சுறுத்திவிட்டு அவர்களிடமிருந்து கைபேசி மற்றும் பணத்தை அபகரித்து கும்பல் தப்பித்து வந்துள்ளது. இந்த நிலையில் 4ஆவது சம்பவமாக யாழ்ப்பாணம் பழைய பூங்கா வீதியில் இளைஞர் ஒருவரை அதே பாணியில் அச்சுறுத்தி 6 ஆயிரம் […] - [டிப்பர் - மோட்டார் சைக்கிள் மோதி விபத்து](https://minnal24.com/%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf-2/): -யாழ் நிருபர்- யாழ். சண்டிலிப்பாய் சந்திப் பகுதியில் நேற்று இரவு டிப்பர் – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நேற்றிரவு 11 மணியளவில் மானிப்பாயிலிருந்து சண்டிலிப்பாய் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த 28 வயதுடைய இளைஞன், சண்டிலிப்பாய் சந்தியை கடக்க முற்பட்ட வேளை, சங்கானைப் பகுதியில் இருந்து வந்த டிப்பர் வாகனம் மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளியது. இந்நிலையில், குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞன் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் . சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். - [தியவன்னாவ கட்டத்தொகுதிக்கு வயது 40](https://minnal24.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b5-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8a%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95/): இலங்கை பாராளுமன்றம் ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டேயில் உள்ள தற்போதைய கட்டடத்துக்கு கொண்டு வரப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை நாற்பது வருடங்கள் பூர்த்தியடைகிறது. காலிமுகத்திடலில் அமைந்திருந்த பாராளுமன்றக் கட்டடத்தில் போதிய இடவசதி இன்மையால் அதனை வேறொரு இடத்துக்கு மாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டது. இதன் பின்னர் கோட்டே பிரதேசத்தில் பாராளுமன்றத்துக்குப் புதிய கட்டடத்தை அமைப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டது. இதற்கமைய 1979ஆம் ஆண்டு ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டே பிரதேசத்தில் காணப்பட்ட 16 ஏக்கர் சிறிய தீவில் புதிய பாராளுமன்றக் கட்டடத்துக்கான பணிகள் ஆரம்பமாகின. அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தன அவர்களின் வழிகாட்டிலின் கீழ் அப்போதைய பிரதமர் ஆர்.பிரேமதாச அவர்களினால் இக்கட்டடத்தைக் அமைக்கும் பணிகள் கண்காணிக்கப்பட்டன. இதற்கமைய ஜெஃப்ரி பாவா அவர்கள் பிரதான கட்டடக் கலைஞராகத் தெரிவுசெய்யப்பட்டதுடன், புதிய கட்டடத்தை அமைப்பதற்கான பணிகளை ஜப்பானிய நிறுவனமொன்று பொறுப்பேற்றிருந்தது. இலங்கையின் பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்ட பாராளுமன்ற கட்டடத்தின் அனைத்து கட்டடக்கலை நடவடிக்கைகளிலும் தேசியத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. இந்தக் கட்டடத்தின் கட்டுமானப் […] - [பண்டைய பெண் கடவுள் சிலை கண்டுபிடிப்பு](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%88%e0%ae%af-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b5%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95/): பண்டைய பெண் கடவுளின் கற்சிலை ஒன்று காசா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கற்சிலை 4,500 ஆண்டுகளுக்கு முன் வெண்கல யுகத்தின் பிற்பகுதியைச் சேர்ந்த கனானித் தெய்வத்தின் தலை என்று பலஸ்தீன தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். காசாவின் தெற்கு பகுதியில் கான் யூனிசில் இருக்கும் விவசாயி ஒருவர் தனது நிலத்தை தோண்டியபோதே இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் கனானித் குடியேற்றம் ஒன்றாக இருந்த காசா பகுதி பண்டைய நாகரிகத்தில் முக்கிய வர்த்தகப் பாதையாக இருந்திருப்பதை இந்த சுண்ணாம்பு சிலை காட்டுகிறது. 22 செ.மீ உயரம் கொண்ட இந்த பெண் தெய்வத்தின் சிலையின் தலையில் பாம்புக் கிரீடம் ஒன்று செதுக்கப்பட்டுள்ளது. இந்த அனாத் சிலை பெரிதும் அறியப்பட்ட கனானித் தெய்வமாகும். இது தற்போது காசாவில் இருக்கும் ஒருசில அருங்காட்சியங்களில் ஒன்றாக செயல்படும் கஸ்ர் அல் பஷாவில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. - [தனது துணையைக் கொன்றவரைப் பழிவாங்கத் துடிக்கும் பாம்பு](https://minnal24.com/%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%af%81%e0%ae%a3%e0%af%88%e0%ae%af%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%b0%e0%af%88%e0%ae%aa%e0%af%8d/): இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம் மிர்ஸாபூரில், தனது துணையைக் கொன்றவரைப் பழிவாங்கத் துடிக்கும் பாம்பிடம் 7 முறை கடிபட்டவரைப் பற்றிய செய்தி ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது. சுமார் ஏழு மாதங்களுக்கு முன்பு விளைநிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த பப்லுவை இரண்டு பாம்புகள் தாக்கின. தன்னை தற்காத்துக் கொள்ள அவற்றை பப்லு தாக்கிய போது, இரண்டு இணை பாம்புகளில் ஒன்று கொல்லப்பட்டது. அதுநாள் முதல், தப்பியோடிய அதே பாம்பு தன்னை ஏழு முறை கடித்துவிட்டதாகவும், நல்வாய்ப்பாக தான் உயிர்பிழைத்துக் கொண்டேன் என்றும் கூறுகிறார். இதையும் படிக்க மெக்சிகோவில் இரு தரப்பினரிடையே நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் உயிரிழப்பு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், தனியாக வேலை செய்யும் போதெல்லாம் எனக்கு காலில் ஏதோ கடிப்பது போல இருக்கும். பார்த்தால் பாம்பு பல் தடம் பதிந்திருக்கும். சில முறை பாம்பு கடித்துவிட்டு ஓடும் போது பார்ப்பேன். அதே பாம்புதான். தனது இணை பாம்பை கொன்றுவிட்டதால், […] - [பரீட்சை வினாத்தாள்களுக்கு காகித பற்றாக்குறை ஏற்படாது](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%b0%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d/): 2021ஆம் கல்வி ஆண்டுக்கான, கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை வினாத்தாள்களை அச்சிடுவதற்கு, காகித பற்றாக்குறை பிரச்சினையாக அமையாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டீ. தர்மசேன தெரிவித்துள்ளார். கொழும்பில்  இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 2021ஆம் கல்வி ஆண்டுக்கான, சாதாரண தரப் பரீட்சை, எதிர்வரும் மே மாதம் 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில், மே மாதம் 20ஆம் மற்றும் 21ஆம் திகதியளவில், தொடர்புபடுத்தல் மத்திய நிலையங்களுக்கு வினாத்தாள்களை வழங்க நடவடிக்கை எடுப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்   - [ரம்புக்னைக்கு சென்றார் இ.தொ.க தலைவர்](https://minnal24.com/%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%a9%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87/): ரம்புக்கனை பிரதேசத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த நாரன்பெத்த பிரதேசத்தைச் சேர்ந்த சமிந்த லக்ஷானின் வீட்டுக்கு நேரில் சென்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், அன்னாரது குடும்பத்துக்கு இ.தொ.கா. சார்பிலும் மலையக மக்கள் சார்பிலும் இரங்கலைத் தெரிவித்துள்ளார். அத்துடன், மேற்படி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கு இ.தொ.கா. சார்பாகத் தமது கடுமையான கண்டனத்தையும் வெளிப்படுத்தினார். மேலும், உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என்றும் பக்கபலமாக இருக்கும் என்றும் அவர் இதன்போது உறுதியளித்தார். இதன்போது, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் அண்ணாமலை பாஸ்கரனும் கலந்துகொண்டிருந்தார்.   - [நீர்நிலைகள்  நீராடுவதை தவிர்க்குமாறு எச்சரிக்கை](https://minnal24.com/%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f%e0%af%81%e0%ae%b5%e0%ae%a4%e0%af%88-%e0%ae%a4/): மலையகத்தில் தொடரும் பெரும் மழை காரணமாக இப்பகுதியிலுள்ள நீர்நிலைகள் பெருக்கெடுத்து வருவதால் நீராடுவதை தவிர்த்து கொள்ளுமாறு பாதுகாப்புத் தரப்பினர் மற்றும் இப்பிரதேசவாசிகள் பொது மக்களை அறிவுறுத்துகின்றனர். பண்டிகைக் காலத்தில் இளைஞர்கள் இவற்றில் உல்லாசமாக நீராட வருவதால் ஆபத்துக்களில் சிக்கி உயிரிழப்புக்கள் ஏற்பட்டு வருகின்றன. எனவே இத்தினங்களில் இப்பிரதேச நீர்வீழ்ச்சிகள், ஆறுகள், குளங்களில் நீராடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு இவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர். மேலும் இரத்தினபுரி வழியாக சிவனொளிபாத மலை செல்லும் யாத்திரிகர்கள் களுகங்கை உட்பட பல நீர்நிலைகளில் நீராடுவோர் கவனயீனம் காரணமாக உயிராபத்துக்களை எதிர்கொள்வதாக இரத்தினபுரி மாவட்ட நீர்வீழ்ச்சிகள் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. இரத்தினபுரி மாவட்டத்தினூடாக சிவனொளிபாத மலைக்குச் செல்லும் 3வீதிகளிலும் களுகங்கை‌ வளவை கங்கையும் இவற்றின் கிளையாறுகளும் நீர்வீழ்ச்சிகளும் காணப்படுகின்றன. இவற்றின் நீரோட்டம் தற்போது அதிகரித்து வருவதால் பொது மக்களின் பாதுகாப்புக்கருதி அபாய அறிவுறுத்தல்களை இவர்கள் விடுத்து வருகின்றனர்.   - [பிரபல சிங்கள நடிகை காலமானார்](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%aa%e0%ae%b2-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%ae%e0%ae%be/): பிரபல சிங்கள நடிகை அனுஷா சொனாலி காலமானார். இறக்கும் போது அவருக்கு 47 வயதாகும். கொழும்பு தெற்கு களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. திடீரென ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக அவர் மரணமடைந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர் சில காலமாக நோய்வாய்ப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 1995 ஆம் ஆண்டு லேக் ஹவுஸ் நிறுவனத்தால் வழங்கப்படும் சரசவி திரைப்பட விழாவில் சிறந்த வளர்ந்து வரும் நடிகைக்கான விருதை அவர் பெற்றிருந்தார். அனுஷா சொனாலி, ‘விசிதெல’ உள்ளிட்ட பல பிரபலமான சிங்கள திரைப்படங்களில் நடித்து உள்ளூர் சினிமாத் துறைக்கு தனது பங்களிப்பை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.   - [சனத் ஜயசூரியவை இந்திய உயர் ஸ்தானிகர் சந்திப்பு](https://minnal24.com/%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%9c%e0%ae%af%e0%ae%9a%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b5%e0%af%88-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%89%e0%ae%af/): கிரிக்கட் ஜாம்பவான் சனத் ஜயசூரியவை இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே சந்தித்துள்ளார். இலங்கை நாட்டுக்காகவும் கிரிக்கெட்டுக்காகவும் அவர் மேற்கொண்ட பல்வேறு சாதனைகள் தொடர்பில் உயர் ஸ்தானிகர் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். இதேவேளை, இலங்கைக்கு மருந்துப்பொருட்கள் உட்பட அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் இந்தியா வழங்கி வரும் ஆதரவு தொடர்பில் சனத் ஜயசூரிய பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். இதன்போது சனத் ஜயசூரிய தனது கையொப்பத்துடனான கிரிக்கெட் துடுப்பாட்ட மட்டையொன்றை, நினைவுப் பரிசாக இந்திய உயர் ஸதானிகர் கோபால் பாக்லேவிற்கு வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.   - [அமெரிக்க தூதரகத்தின் சொகுசு வாகனம் மோதி இளைஞர் காயம்](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%ae%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%a4%e0%af%82%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%95/): வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று வியாழக்கிழமை காலை 10 மணியளவில் இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற மூன்று சொகுசு வாகனங்கள் தாண்டிக்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, நகர் பகுதியிலிருந்து தாண்டிக்குளம் நோக்கி பிரதான வீதியிலிருந்து இடது பகுதிக்கு துவிச்சக்கர வண்டியில் கடக்க முற்பட்ட இளைஞன் மீது மோதியே இவ்விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்திற்குள்ளான  சொகுசு வாகனத்தில் அமெரிக்க தூதரக முக்கியஸ்தர்கள் பயணம் செய்ததாக தெரிய வருகிறது. குறித்த விபத்தில் திவாகர் எனும் கூமாங்குளத்தை சேர்ந்த 19 வயது இளைஞர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் விபத்தை ஏற்படுத்திய  குறித்த வாகனம் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து செல்லப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.  மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.     - [இலங்கைப் பெண்ணின் சடலம் 19 நாட்களின் பின்னர் ஓமானில் நல்லடக்கம்](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%9f%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-19/): ஓமான் நாட்டில் மரணமடைந்த இலங்கைப் பெண்ணின் சடலம் 19 நாட்களின் பின்னர் ஓமானில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக மரணமடைந்த பெண்ணின் உறவினர்கள் தெரிவித்தனர். வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிறைந்துறைச்சேனை பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய ஒரு பிள்ளையின் தாய் ஒருவரே இவ்வாறு ஓமான் நாட்டில் மரணமடைந்துள்ளார். ஓமான் நாட்டிற்கு தொழில் நிமித்தம் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் சென்ற இவர் கடந்த 9 ஆம் திகதி அங்கு மரணமடைந்துள்ளதாக உறவினர்கள் மேலும் தெரிவித்தனர். திடீரென மரணமடைந்த பெண் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட ஓமான் நாட்டு பொலிஸார், வைத்திய பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களின் ஒப்புதலுடன் நேற்று புதன்கிழமை  பெண்ணின் உடல் ஓமான் நாட்டில் நல்லடக்கம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. - [பிரபல நடிகர்  சலீம் காலமானார்](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%aa%e0%ae%b2-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%b2%e0%af%80%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%ae%e0%ae%be/): வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வந்த பிரபல நடிகர்  சலீம் கவுஸ் ( வயது – 70 ) உடல்நலக் குறைவால் காலமானார். தமிழில் சின்னக் கவுண்டர், திருடா திருடா, வேட்டைக்காரன் உள்ளிட்ட படங்களில் படங்களில் வில்லனாகத் தனது எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் புகழ்பெற்றார் சலீம் கவுஸ். இது தவிர, பாலிவுட் படங்களான கலியுக், சக்ரா,கொய்லா, சிப்பாய் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் வெள்ளித்திரை மட்டுமல்லாமல், சின்னதிரையிலும் பல தொடர்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். அவரது மறைவு, ரசிகர்களையும் திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவிற்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். - [போராட்டத்திற்கு சென்றவர் உயிரிழப்பு : அப்புத்தளையில் நிகழ்ந்த சோகம்](https://minnal24.com/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%b0/): -பதுளை நிருபர்- அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று அப்புத்தளையில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள சென்றிருந்த தங்கமலை பகுதியைச் சேர்ந்த 46 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்த குறித்த நபர் சிறிது நேரத்தில் அங்கிருந்து சென்றதாகவும், பின்னர் வீதியோரமாக உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இறப்பதற்கு முன்னர் அங்கிருந்த சிலரிடம் அவர் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டதாகவும் அருகில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் இவர் போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த போது மரணிக்கவில்லை எனவும், மரணம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அப்புத்துத்தளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். - [விபத்தில் ஒருவர் பலி](https://minnal24.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%bf-2/): -கிளிநொச்சி நிருபர்- பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதுகாட்டு சந்தி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். குறித்த சம்பவமானது இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது. புதுகாட்டுச்சந்தியில் இருந்து மருதங்கேணி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளை, மருதங்கேணி இருந்து புதுகாட்டு நோக்கி வந்து கொண்டிருந்த கப் ரக வாகனம் மோதியுள்ளது. இதில் உடுத்துறை வடக்கு தாளையடியை சேர்ந்த நாகேந்திரன் ஜெகன் என்பவரே பலியாகியுள்ளார். குறித்த பகுதியில் சற்று நேரம் அமைதியின்மை ஏற்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் - [நுவரெலியாவில் வர்த்தகர்கள் கடைகளை மூடி தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவு](https://minnal24.com/%e0%ae%a8%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%86%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d/): -நுவரெலியா- தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக சாலையை மறித்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பொதுமக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டமானது இன்று  நுவரெலியா நகரில் உள்ள பிரதான தபால் நிலையத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது இதன்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும், தொடர் விலையேற்றத்தைக் கண்டித்தும், கேகாலை றம்புக்கனை பகுதியில் உயிரிழந்த நபருக்கு நீதி வேண்டியும் பொதுமக்கள் பிரதான வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கண்டி, பதுளை பிரதான வீதியை வழிமறித்த போராட்டக்காரர்கள் வீதிகளில் கோஷங்களை எழுப்பியும் போராட்டத்தை முன்னெடுத்தனர். இப் போராட்டத்தில் நுவரெலியா வர்த்தக நிலையத்தில் தொழில் புரிவோர், மாநகர சபை ஊழியர்கள், பொது மாவட்ட வைத்தியசாலை ஊழியர்கள், சாரதிகள், அதிபர் ஆசிரியர்கள், தபால் நிலைய ஊழியர்கள், ஆடை தொழிற்சாலை ஊழியர்கள், அரச தனியார் வங்கி ஊழியர்கள் என பலர் இப்போராட்டத்தில் பங்கேற்றிருந்தனர். ஜனாதிபதியும் பதவி விலக வேண்டும், ‘கோ ஹோம் கோட்டா’ என போராட்டக்காரர்கள் […] - [நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்செய்ய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%9a/): -கல்முனை நிருபர்- பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழுவின் தீர்மானத்திற்கிணங்க, கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் இன்று  வியாழக்கிழமை ஒரு நாள் அடையாள பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொண்டுள்ளது. நாடு மிக மோசமான பொருளாதார நிலையைச் சந்தித்துள்ள தற்போதைய காலகட்டத்தில் இதற்கான உரிய தீர்வுகளை எட்ட அரசு விரைந்து செயற்பட வேண்டுமென அரசை வலியுறுத்தி எமது தொழிற்சங்கம் இன்று பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளது. இந்த அடையாள பணிப்பகிஷ்கரிப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் இந்நாட்டின் முதுகெலும்பாகத் திகழும் உயர்கல்வித் துறையில் முக்கிய பாத்திரத்தை வகிக்கும் ஒரு பொறுப்புள்ள ஊழியர் சங்கம் என்ற வகையில் எமது சங்கம் தற்போதைய அரசின் பொருளாதாரப் போக்கைத் தொடர்ந்தும் அவதானித்து வருகின்றது. இந்த அரசாங்கம் கடைப்பிடித்த பொருளாதார நடைமுறைகள் காரணமாக நாடு வங்குரோத்து நிலைக்கு இட்டுச் செல்லப்பட்டுள்ளதை இங்கு சுட்டிக் காட்ட விரும்புகின்றது. பொருள் விலையேற்றம் காரணமாக பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை கேள்விக் குறியாகி மக்கள் வீதிக்கு இறங்கி […] - [முற்றாக முடங்கியுள்ள யாழ்.நகரம்](https://minnal24.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%95-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3-%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4/): -யாழ் நிருபர்- அரச தலைவர் மற்றும் அரசாங்கத்தை பதவி விலக கோரி பல தொழிற்சங்கங்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளமையால் யாழ்ப்பாண நகரில் பொதுமக்களின் அன்றாட செயற்பாடு பாதிக்கப்பட்டுள்ளது. அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் தற்போதைய அரசாங்கத்தை பதவி விலக வலியுறுத்தி இன்று வியாழக்கிழமை நாடளாவிய ரீதியில் பல தொழிற்சங்கங்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தை அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந் நிலையில், யாழ்ப்பாண குடாநாட்டின் இயல்பு நிலை முற்றாக செயலிழந்து, வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு, தனியார் மற்றும் அரச போக்குவரத்து சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம் பெறுகின்றது. பாடசாலைகள் மற்றும் வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, புகையிரத சேவை தபால் சேவைகள் என்பன முற்றாக செயலிழந்துள்ளன. அத்தோடு யாழ்ப்பாண நகரத்தின் வீதிகளில் பொது மக்களின் நடமாட்டம் குறைவாக காணப்படுவதோடு யாழ்ப்பாண நகரில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. - [பதுளையில் பாரிய ஆர்ப்பாட்டம் : முற்றாக தடைப்பட்ட ரயில் சேவை](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%a4%e0%af%81%e0%ae%b3%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f/): -பதுளை நிருபர்- இன்று வியாழக்கிழமை அரசுக்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டங்கள் நாடளாவிய ரீதியில் நடைப்பெற்று வருகின்ற நிலையில் பதுளை பகுதியில் ரயில் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதோடு, பொது போக்குவரத்து வழமை போல் இடம்பெற்று வருக்கின்றன. அத்தோடு பதுளை நகரில் நூற்றுக்கு 90% வீதமான கடைகள் மூடப்பட்டதோடு நகரங்களில் சில பகுதிகளில் கறுப்பு கொடிகள் தொங்கவிடபட்டுள்ளதோடு, லுனுகலை, மடுல்சீமை, பசறை ஆகிய பகுதிகளிலும் இதே நிலைமைகள் காணப்பட்டு வருகின்றது. ஹாலிஎல, கெட்டவெல பகுதிகளிலும் மற்றும் ஹாலிஎல பகுதிகளிலும் ஆர்பாட்டங்கள் இடம்பெற்று வருவதோடு, பதுளை ஊவா வெல்லச பல்கலைகழக மாணவர்கள் நடைபவணியாக கோஷங்களை எழுப்பியவாறு பதுளை நகருக்கு வந்து ஆர்பாட்டத்தில் ஈடுபடுவதோடு ஆசிரியர்களும் இவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அத்தோடு, மீதும்பிடிய பகுதிகளிலும் பொதுமக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதோடு, இவ் ஆர்ப்பாட்டத்தில் பெருந்தோட்ட தொழிலாளர்களின் பங்களிப்பு மிகவும் அதிகமாக காணப்படுகின்றனர். பல இடங்களில் ஆர்பாட்டகாரர்கள், அண்மையில் இராஜாங்க அமைச்சு பதவி ஏற்ற அரவிந்தகுமாரை பதவி […] - [பசறை நகரில் அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டு ஆர்ப்பாட்டம்](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%9a%e0%ae%b1%e0%af%88-%e0%ae%a8%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a9%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4/): -பதுளை நிருபர்- இன்று வியாழக்கிழமை நாடளாவிய ரீதியில் இடம்பெறும் கவனயீர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, பசறை நகரில் அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளதோடு, அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவினை தெரிவித்து வருகின்றனர். அத்தோடு, வர்த்தக நகரத்திற்கு முன்பாக Go Home Gota என கறுப்பு கொடிகளும் தொங்கவிடபட்டுள்ளதை காணக்கூடியாத இருப்பதோடு, பசறை பஸ்தரிப்பிடத்திற்கு முன்பாக பெருந்தோட்ட தொழிலாளர்கள் மற்றும் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் வாகன சாரதிகள் இணைந்து பாரிய ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.   - [மன்னார் மாவட்ட செயலகத்தில் சர்வமத தலைவர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற இப்தார் நிகழ்வு](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%ae%b2%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-2/): -மன்னார் நிருபர்- வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் மன்னார் மாவட்ட செயலகத்துடன் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வு நேற்று புதன் கிழமை மாலை 5 மணியளவில் மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஆர்.வரதீஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நோன்பு திறக்கும் நிகழ்வில் சர்வமத தலைவர்கள், வட மாகாணத்தின் பிரதம செயலாளர், மன்னார் மாவட்ட செயலாளர், வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் பணிப்பாளர், பொலிஸ் பொறுப்பதிகாரி, பிரதேச செயலாளர்கள், திட்டமிடல் பணிப்பாளர், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், பதவிநிலை உத்தியோகத்தர்கள், திணைக்கள தலைவர்கள், மதத்தலைவர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டனர். இதன் போது சர்வ மத தலைவர்களின் ஆசிச் செய்தி வழங்கப்பட்டது. மேலும் நோன்பு திறக்கும் நிகழ்வு இடம் பெற்றதோடு, தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்கள் […] - [அரசுக்கு ஆதரவளிக்க பல கோடிகளை முஷாரப் பெற்றுக் கொண்டார்](https://minnal24.com/%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%86%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%aa%e0%ae%b2-%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f/): -கல்முனை நிருபர்- 20ம் திருத்த வாக்கெடுப்பு இடம்பெற சில தினங்களுக்கு முன்னரே அந்த சட்டமூலத்திற்கு ஆதரவளிப்பதற்கான ஆயத்தங்களை இராஜாங்க அமைச்சர் எஸ்.எம்.எம். முஷாரப் தனக்கு சாதகமான பிரதேச ஆதரவாளர்களை கொண்டு செய்ததை இன்றும் சமூக வலைத்தளங்களில் காணலாம். இப்போது பொய்யான கதைகளை கூறி தன்னை நல்லவராக அடையாளப்படுத்த முனைகிறார். சட்டமூலங்களை ஆதரிக்க 02 கோடி வாங்கியதும், துறைமுக சட்டமூலத்தை ஆதரிக்க 06 கோடி வாங்கியதும் எங்களுக்கு தெரியாமல் இல்லை. 20 க்கு ஆதரவளித்தவர்களில் கல்முனை தொகுதி பாராளுமன்ற உறுப்பினரை தவிர ஏனைய எல்லோரும் சலுகைகளை பெற்றுள்ளனர் என்று திடமாக கூறுகிறேன். தேவையேற்படின் ஆதாரங்களையும் முன் வைப்பேன். நாங்கள் சலுகைகளை வாங்கவில்லை என்று இவர்கள் சாத்தியமிட தயாரா?, என கல்முனை மாநகர சபை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பிலான உறுப்பினர்களினால் சவால் விடுக்கப்பட்டுள்ளது. கல்முனை மாநகர சபை கேட்போர் கூடத்தில் கல்முனை மாநகர சபையில் அங்கம் வகிக்கும் அகில இலங்கை மக்கள் […] - [விவேகானந்தா பழைய மாணவர் சங்க நல்லிணக்க விளையாட்டு விழா](https://minnal24.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%af%87%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be-%e0%ae%aa%e0%ae%b4%e0%af%88%e0%ae%af-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d/): ‘விழுதுகள் கூடி வலிமை சேர்ப்போம்’ எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா பழைய மாணவர் சங்கத்தின் நல்லிணக்க விளையாட்டு விழா கல்லூரியின் அதிபரும் விவேகா பழைய மாணவர் சங்கத்தின் தலைவியுமான ந.தர்மசீலன் தலைமையில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. அனைத்து பழைய மாணவர்களையும் ஒன்றிணைத்து பாடசாலையின் கல்வி மற்றும் பௌதீகவளம்சார் அபிவிருத்திகளை மேம்படுத்தும் நோக்கில் நடாத்தப்பட்ட நல்லிணக்க விளையாட்டு விழாவிற்கு பிரதம அதிதியாக முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் செ. புண்ணியமூர்த்தி கலந்து நிகழ்வில் சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மாநகர சபையின் பொறியியலாளர் சி. லிங்கேஸ்வரன் கலந்து சிறப்பித்திருந்தார். குறித்த நல்லிணக்க விளையாட்டு விழாவின் முதல் நிகழ்வாக அதிதிகள் வரவேற்கப்பட்டதனைத் தொடர்ந்து, மங்கல விளக்கேற்றல், இறை வணக்கம் இடம்பெற்றதனைத் தொடர்ந்து பாடசாலைக் கொடியேற்றப்பட்டு, கல்லூரியின் அதிபரினால் தலைமையுரையும் பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் பிரமிளா சசிகுமாரனின் உரையினை தொடர்ந்து பழைய மாணவர்களின் கலந்துரையாடல், புதிய உறுப்பினர்களை பதிவு செய்தல், […] - [யாழ்.குடிநீர் விநியோகத் திட்டத்தில் சமூக வலைத்தளங்களின் வினைத்திறனான பாவனை தொடர்பான பயிற்சி](https://minnal24.com/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%af%e0%af%8b%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d/): -யாழ் நிருபர்- இன்று ஸ்ரீலங்கா பாரிய உட்கட்டமைப்பு செயற்திட்டம் சிவில் சமூக மாதிரித் திட்டம் கிளிநொச்சி, யாழ்ப்பாண குடிநீர் விநியோகத் திட்டத்தில் சமூக வலைத்தளங்களின் வினைத்திறனான பாவனை தொடர்பான பயிற்சி SOND நிறுவனத்தினால் நடாத்தப்பட்டது. இப்பயிற்சி நெறியானது நிறுவனத்தின் நிறைவேற்றுப்பாளர் ச.செந்துராசா தலைமையில் நடைபெற்றது. இப்பயிற்சி நெறியினை வளவாளர்களான ஜோய் ஜெகார்த்தனன் மற்றும் டினோஜா ஆகியோர் நடாத்தினர். இப்பயிற்சியில் இளையோர் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட 50 பேர் கலந்து கொண்டனர். - [கிளிநொச்சி மக்களுக்கு இடர் கால உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8a%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%87%e0%ae%9f/): -மன்னார் நிருபர்- கிளிநொச்சி மாவட்டம் கரைச்சி மற்றும் ஜெயபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த வறுமைக் கோட்டின் கீழ் உள்ள மற்றும் பெண் தலைமைத்துவத்தை கொண்ட குடும்பங்களுக்கான இடர் கால உலர் உணவுப் பொதிகள் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில் நேற்று புதன்கிழமை மதியம் வழங்கி வைக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் வைபவ ரீதியாக வழங்கி ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தெரிவுசெய்யப்பட்ட ஜெயபுரம் பகுதியில் தெரிவு செய்யப்பட்ட ஒரு தொகுதி மக்களுக்கு ஜெயபுரம் பொது மண்டபத்தில் அத்தியாவசிய உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. சுமார்3350 ரூபாய் பெறுமதியான உலர் உணவு பொதிகள் தெரிவு செய்யப்பட்ட 200 குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது. இதன் போது கிராம சேவையாளர்கள், சமூக பணியாளர்களுடன் இணைந்து அத்தியாவசிய உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. நாட்டில் தற்போது நிலவி […] - [சம்மாந்துறை நீர்ப்பாசன காரியாலய முன்றலில் கவனயீர்ப்பு பேரணி](https://minnal24.com/%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b1%e0%af%88-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9-%e0%ae%95/): -கல்முனை நிருபர்- நாட்டின் பெருளாதார நிலைமை வீழ்ச்சியடைந்து மக்களின் வாழ்வாதாரம், அன்றாட ஜீவனோபாயம் கஸ்டத்திற்குள்ளான நிலையில் தற்போதிருக்கும் அரசாங்கத்திற்கும், ஜனாதிபதி மற்றம் பிரதமர் ஆகியோருக்கு எதிராகவும், ஆதாரவாகவும் நாட்டின் பல்வேறு இடங்களிலும் ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில் அம்பாறை மாவட்ட சம்மாந்துறை பிரதேச நீர்ப்பாசன காரியாலய பொறியியலாளர் எம்.எஸ்.எம். நவாஸ் தலைமையில் கையில் பல்வேறு சுலோகங்களை ஏந்திக்கொண்டு ‘ விவசாயிகளின் குரலுக்கு அரசாங்கம் செவிசாய்க்குமாறு கோரி கவனயீர்ப்பு பேரணி நேற்று நண்பகல் மதியபோசன நேரத்தில் அம்பாறை மாவட்ட சம்மாந்துறை பிரதேச நீர்ப்பாசன காரியாலய முன்றலில் இடம்பெற்றது. - [யாழ் இளைஞர்கள் இருவர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம்](https://minnal24.com/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b3%e0%af%88%e0%ae%9e%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%85%e0%ae%95/): -யாழ் நிருபர், மன்னார் நிருபர்- இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி, உணவு பற்றாக்குறை, கடுமையான விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் இலங்கையில் உயிர் வாழ முடியாத இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகம் நோக்கி சென்ற வண்ணம் உள்ளனர் . இந்த நிலையில், இன்று ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை அடுத்த புதுக்குடி கடற்கரையில் இலங்கையில் இருந்து படகு மூலம் இரண்டு பேர் வந்து இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, மரைன் பொலிஸார் அங்கு சென்று பார்த்தபோது யாழ்ப்பாணம் மாவட்டம் குருநகர் பகுதியை சேர்ந்த சீலன் மற்றும் அருள்ராஜ் என இருவர் அகதிகளாக வந்திருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து, அவர்கள் இருவரையும் மரைன் பொலிஸார் தொண்டி மரைன் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் உடைமைகள் எதுவும் இல்லாததால் இவர்கள் அகதிகளாக வந்தார்களா? அல்லது வேறு கடத்தல் சம்பவங்களில் தொடர்புடையவர்களா? என்பது குறித்து பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை […] - [நாடளாவிய ரீதியில் இன்று ஹர்த்தால்](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b3%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b0%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81/): நாடளாவிய ரீதியாக பல தொழிற்சங்கங்கள் இன்றைய தினம் பணிப்புறக்கணிப்பு மற்றும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கவுள்ளன. இதற்கு பல அரச, தனியார் மற்றும் பெருந்தோட்ட தொழிற்சங்கங்கள் ஆதரவு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளன. துறைமுகம், தொடருந்து, சில சுகாதார சேவை சங்கங்கள், சுங்கத்தினர், ஆசிரிய அதிபர்கள் மற்றும் வர்த்தக சமூகத்தினர் தங்களது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர். இன்றைய போராட்டத்துக்கு தமது தரப்பினரும் ஆதரவு வழங்கவுள்ளதாக ஆசிரிய அதிபர் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. மக்களின் கோரிக்கைக்கு மதிப்பளித்து அரசாங்கம் பதவி விலக வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டார். இதேவேளை, இன்றைய போராட்டத்துக்கு ஆதரவு வழங்குவதாக இலங்கை கல்வி சமூக சம்மேளனத்தின் செயலாளர் ஆர். சங்கரமணிவண்ணன் தெரிவித்தார். அத்துடன் இன்று முன்னெடுக்கப்படுகின்ற தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவு வழங்குகின்ற போதிலும் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடப் போவதில்லையென அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளதாக அதன் மத்தியக்குழு மற்றும் ஊடகக்குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் குறிப்பிட்டார். […] - [60 மொழிகளில் வெளியாக உள்ள அவதார் -2](https://minnal24.com/60-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%95-%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3-%e0%ae%85/): ஜேம்ஸ் கெமரூன் இயக்கத்தில்  2009 ஆம் ஆண்டு வெளியாகி, உலகெங்கும் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்த படம் அவதார். குறித்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம்  டிசம்பர் 16 ஆம் திகதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2 மணிநேரம் 40 நிமிடங்கள் ரசிகர்களை வேறு உலகிற்கு அழைத்துச் சென்றிருந்தது இத்திரைப்படம். 25 கோடி அமெரிக்க டொலர்கள் பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் உலகம் முழுவதும் 280 கோடி அமெரிக்க டொலர்கள் வசூலை அள்ளியது. இந்த நிலையில், இந்த படத்தின் இரண்டாம் பாகம் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் திகதி வெளியாகவுள்ளது. கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் கழித்து இந்த திரைப்படத்தின் 2ஆம் பாகம் வெளியாகவுள்ளது. முதல் பாகத்தைப் போல மிகச் சிறப்பான காட்சி அனுபவத்துடன் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம் உலகம் முழுவதும் 160 மொழிகளில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. - [இ.போ.ச வழமைபோல இன்றும் இயங்கும்](https://minnal24.com/%e0%ae%87-%e0%ae%aa%e0%af%8b-%e0%ae%9a-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%ae%e0%af%88%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b2-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%ae%99/): இன்று வியாழக்கிழமை போராட்டங்கள் இடம்பெற்றாலும் இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகள் வழமை போன்று  சேவையில் ஈடுபடுமென அறிவிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் பல தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து போராட்டம் மற்றும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளன. இந்நிலையில்இ இலங்கை போக்குவரத்து சபை தொழிற்சங்கத்தினர், வழமை போல்  சேவையில் ஈடுபடுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் தெரிவித்துள்ளார். - [துப்பாக்கி பிரயோகத்தில் தெய்வாதீனமாக உயிர்த்தப்பிய வர்த்தகர்](https://minnal24.com/%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%af%e0%af%8b%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2-3/): பேலியகொடவில் இரண்டு இனந்தெரியாத நபர்களின் துப்பாக்கி பிரயோகத்தில் வர்த்தகர் ஒருவர் தெய்வாதீனமாக காயமின்றி உயிர்த்தப்பியுள்ளார். சம்பவத்தின் போது பதிவான CCTV காட்சிகளின் படி, குறித்த வர்த்தகர் வீட்டு முற்றத்தில் அமர்ந்திருந்த வேளையில், அங்கு வந்த இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர். எவ்வாறாயினும் இதன்போது விரைந்து செயற்பட்ட குறித்த வர்த்தகர் திடீரென வீட்டுக்குள் புகுந்து தன்னை பாதுகாத்துக் கொண்டுள்ளார். அதிர்ஷ்டவசமாக சந்தேக நபர்கள் இலக்கை தவறவிட்டனர். இந்நிலையில், சந்தேக நபர்களை கைது செய்ய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். - [இலங்கைக்கு மருத்துவ உதவிகளை வழங்கிய இந்தோனேஷியா](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5-%e0%ae%89%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%bf/): அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு மனிதாபிமான உதவிகளை இலங்கைக்கு இந்தோனேஷியா வழங்கியுள்ளது. மனிதாபிமான உதவியாக இலங்கைக்கு 1.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான இந்தோனேஷியாவின் தூதுவர் Dewi Gustina Tobing தெரிவித்துள்ளார். அதற்கமைய குறித்த பொருட்கள் எதிர்வரும் 28 மற்றும் மே 8ஆம் திகதிகளில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தின் ஊடாக இலங்கையை வந்தடையவுள்ளதாகவும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. - [மக்கள் ஆணையில்லாமல் ஆட்சி நிர்வாகத்தில் இணையமாட்டோம் - சஜித்](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a3%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a/): எந்தவொரு சந்தர்ப்பத்திலும், ஐக்கிய மக்கள் சக்தி கட்சியோ அதன் தலைமையிலான கூட்டணியோ மக்கள் ஆணையில்லாமல் ஆட்சி நிர்வாகத்தில் இணைய மாட்டாது. இடைக்கால அரசை அமைத்து இன்னொரு நாடகத்திற்கு துணை போவதை விடவும் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவது நல்லதென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கண்டியில் வைத்து தெரிவித்தார். இது கட்சியின் கொள்கை என்றும், அந்தக் கொள்கையை கடைபிடிப்பதா இல்லையா என்பதை ஒவ்வொரு தனிநபர்களும் முடிவு செய்யலாம் என்றும் அவர் கூறினார். ஐக்கிய மக்கள் சக்தி கட்சியால் முன்வைக்கப்பட்ட அரசியலமைப்பு திருத்த பிரேரணையின் பிரதியை அஸ்கிரிய பீடாதிபதி வண. வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரரிடம் கையளித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 69இலட்சம் மக்களின் ஒப்புதலுடன் ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்பட்டார்.  2020பொதுத் தேர்தலில் அறுபத்தெட்டு இலட்சம் பேர் இணைந்து 140எம்.பிக்களை இந்த அரசாங்கத்திற்கு வழங்கியது. பிறகு வழக்கம் போல சலுகைகள், பலன்கள் என்று ஒரு அணியை உருவாக்கி […] - [இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள அறிவிப்பு](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%86%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a/): -யாழ் நிருபர்- நாட்டின் இன்றைய நிலைக்குக் காரணமனவர்கள் பதவி விலகுவதே சிறந்தது என இலங்கை தமிழ் ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை தமிழ் ஆசிரியர் சங்கம் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ் அறிக்கையில் மேலும் உள்ளதாவது, நாளை பகிஸ்கரிப்பு ஒட்டுமொத்த இலங்கையரின் ஏகோபித்த முடிவு. 6ஆந் திகதி ஹர்த்தாலுக்கு இ.த.ஆ.சங்கம் பூரண ஆதரவு. நாட்டின் இன்றைய நிலைக்கு காரணமானவர்கள் பதவிவிலக வேண்டுமென்று நாட்டில் உள்ள பெருபான்மையானோரின் கோரிக்கை. இந்தக் கோரிக்கையை ஏற்று தற்போதைய அரசாங்கம் பதவி விலக வேண்டும் என நாட்டில் உள்ள அனைத்துத் தொழிற்சங்கங்களும் கூட்டாக வேண்டுகோள் விடுத்து, நாளை பணிப்பகிஸ்கரிப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளன. இதனை அனைவரும் ஏற்று பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபடுமாறு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதைவிட ஒட்டு மொத்த மக்களையும் இணைத்து ஆட்சியாளர்களுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்த எதிர்வரும் 06.05.2020 (வெள்ளிக்கிழமை) நடைபெறும் பொதுக் ஹர்த்தாலுக்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டும். இந்த […] - [அமெரிக்க தூதுவர் வந்த வேளை யாழ்.பொது நூலகத்தில் தடைப்பட்ட மின்சாரம்](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%ae%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%a4%e0%af%82%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%b5%e0%af%87/): -யாழ் நிருபர்- யாழ். பொது நூலகத்திற்கு இன்று புதன்கிழமை விஜயம் செய்த அமெரிக்க தூதர் ஜுலி சுங் சிறிது நேரம் மின்சாரம் இல்லாத நிலையில் பொது நூலகத்தை பார்வையிட்டார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, இன்று காலை பதினொரு மணி அளவில் இலங்கை மின்சார சபையின் மின்சாரம் தடைப்பட்டது. இந்நிலையில் யாழ்ப்பாணம் விஜயம் மேற்கொண்ட இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் யாழ். பொது நூலகத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். யாழ். பொது நூலகத்தில் இருக்கும் மின்பிறப்பாக்கி திடீரென இயங்காத காரணத்தினால் தூதுவர் குழு சிறிது நேர மின்சாரம் இன்றிப் பொது நூலகத்தை பார்வையிட்ட வேண்டிய தேவை ஏற்பட்டது. பின்னர் மின்சார சபை ஊழியர்களின் உதவியுடன் மின்பிறப்பாக்கி சரிசெய்யப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டது. குறித்த விடயம் தொடர்பில் யாழ். மாநகரசபை ஆணையாளர் ஜெயசீலனைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, மின்பறப்பாக்கி இயங்காது உண்மைதான் ஆனால் அது உடனடியாக சரி செய்யப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டது, என தெரிவித்தார். - [கிளிநொச்சி விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டம்](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8a%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a3%e0%af%88%e0%ae%95%e0%af%8d/): -கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி மாவட்ட விவசாய திணைக்களத்தின் இரணைமடு விவசாய விரிவாக்கல் அலுவலகத்திற்கு முன்னால், இன்று அரசாங்கத்தின் செயற்பாடுகளை கண்டித்தும், அரச பணியாளர்களின் சம்பளத்தினை உடன் வழங்கவேண்டும்,   விவசாயிகளுக்கு மண்ணென்ணை வழங்கப்பட வேண்டும்,  விவசாய செய்கைக்கான இராசாயன உரத்தினை’வழங்க வேண்டும் , கிருமிநாசினி வழங்கப்பட வேண்டும், என பல விடயங்களை முன்வைத்தும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. - [மட்/ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற புகுநிலை தேர்ச்சிக் கண்காட்சி](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a9%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%b3/): மட்/ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரியில் புகுநிலை தேர்ச்சிக் கண்காட்சி நேற்று காலை 10.00 மணியளவில் இடம் பெற்றது. இக்கண்காட்சியில் சிறப்பு விருந்தினராக அட்டாளைச்சேனை கல்வியற் கல்லூரியின் பீடாதிபதி S.புண்ணியமூர்த்தி, வலயக்கல்வி அலுவலகத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்வில் பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர் அவர்களும் கலந்து சிறப்பித்தனர். - [ஒரு வார கால அவகாசம்](https://minnal24.com/%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%95%e0%ae%be%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d/): ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவி விலகுவதற்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்படும் என தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர். இதனை புரிந்து கொள்ள வேண்டும் என சுகாதார வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்தார். இன்று இந்த நடவடிக்கைக்கு சம்மதித்துள்ள தொழிற்சங்கங்களின் எண்ணிக்கை 1000ஐ தாண்டியுள்ளது. எனவே, ராஜபக்ச அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் தயவு செய்து இதை புரிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். உங்களுக்கு ஒரு வாரம் அவகாசம் தருகிறோம். அந்த நாற்காலிகளில் இருந்து வெளியேறுங்கள் என அவர் தெரிவித்துள்ளார். - [பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%b2-%e0%ae%aa%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95/): நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் தென் கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். - [1000 தொழிற்சங்கங்களின் ஆதரவுடன் நாளைய போராட்டம்](https://minnal24.com/1000-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%b5/): பல அரச, தனியார் மற்றும் பெருந்தோட்ட தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட சுமார் 1,000 தொழிற்சங்கங்கள் நாளைய தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளன. துறைமுகம், தொடருந்து, சில சுகாதார சேவை சங்கங்கள், ஆசிரிய அதிபர்கள் மற்றும் வர்த்தக சமூகத்தினர் தங்களது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர். நாளைய போராட்டத்துக்கு தமது தரப்பினரும் ஆதரவு வழங்கவுள்ளதாக ஆசிரிய அதிபர் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. மக்களின் கோரிக்கைக்கு மதிப்பளித்து அரசாங்கம் பதவி விலக வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டார். இதேவேளை, நாளைய போராட்டத்துக்கு ஆதரவு வழங்குவதாக இலங்கை கல்வி சமூக சம்மேளனத்தின் செயலாளர் ஆர். சங்கரமணிவண்ணன் தெரிவித்தார். அத்துடன் நாளைய போராட்டத்துக்கு ஆதரவு வழங்குகின்ற போதிலும் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடப் போவதில்லையென அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளதாக அதன் மத்தியக்குழு மற்றும் ஊடகக்குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் குறிப்பிட்டார். இதேவேளை, நாடு முழுவதுமுள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களுக்கும், […] - [குருந்தூர் மலைக்கு பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் விஜயம்](https://minnal24.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b3/): -மன்னார் நிருபர்- குருந்தூர்மலை பிரதேசத்தின் கீழ் உள்ள தண்ணிமுறிப்பு கிராமத்தைச் சேர்ந்த மக்களின் பூர்வீக காணிகள் மீள் குடியேற்றத்தின் பின்பு சில வருடங்களாக வனவள திணைக்களத்தின் ஆளுகையின் கீழ் கொண்டு வரப்பட்டிருந்தது. பூர்விக காணிகளிலே தமது வாழ்வாதாரம் தங்கி இருப்பதாகவும், தமது பூர்வீக காணிகளை வன வள திணைக்களத்தினரிடம் இருந்து மீட்டுத் தருமாறும், பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் கவனத்திற்கு இம் மக்கள் கொண்டுவந்தின் பிரகாரம் பாராளுமன்ற உறுப்பினர் இது தொடர்பாக பாராளுமன்றத்தில் தனது கோரிக்கையை முன் வைத்திருந்தார். அதன் பிரகாரம் இன்று புதன்கிழமை குருந்தூர் மலை பிரதேசத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர், வனவள திணைக்களத்தினர், முல்லைத்தீவு மாவட்ட மேலதிக உதவி அரசாங்க அதிபர் தலைமையிலான குழுவினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் வருகை தந்து இந்த காணி விடுவிப்பு தொடர்பான தற்போதைய நிலமை தொடர்பாகவும் கலந்துரையாடினார்கள். கையகப்படுத்தப்பட்டுள்ள இக் காணிகள் சட்டங்களுக்கு அமைவாக விடுவிப்பதற்குரிய நடவடிக்கைகளை தாம் மேற்கொண்டு வருவதாகவும் வனவள […] - [நாளை கொட்டகலை நகரில் முழு கடை அடைப்பு போராட்டம்](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%88-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%95%e0%ae%b2%e0%af%88-%e0%ae%a8%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b4/): -நுவரெலியா நிருபர்- நாளை வியாழக்கிழமை மக்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கொட்டகலை நகரம் முழு கடை அடைப்புப் போராட்டம் நடைபெறும் என கொட்டகலை வர்த்தக சங்க தலைவர் புஷ்பா விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இதனிடையே, நாட்டில் பொருளாதார நிலைமையை கண்டித்து நாளை கடையடைப்பு நடைபெறும் என வணிகர் சங்க தலைவர் அறிவித்துள்ளார். இன்று நடைபெற்ற வர்த்தகசங்க அவசர கலந்துரையாடலில் இம் முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்தார். இந்த கடையடைப்பில், கொட்டகலை நகர் வர்த்தகர்கள், பொதுமக்கள் அனைத்து வணிகர்களும் பங்கேற்க வேண்டுமென அவர் அழைப்பு விடுத்துள்ளார். - [விவசாய திணைக்கள ஊழியர்கள், விவசாயிகள் இணைந்து அரசுக்கு எதிராக போராட்டம்](https://minnal24.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a3%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3-%e0%ae%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3/): -நுவரெலியா நிருபர்- விவசாயத்திற்கான உரம், மருந்தினை தடையின்றி வழங்குமாறு கோரியும், நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கு தொடர்ந்தும் தட்டுப்பாடு நிலவி வருகின்றமை,பொருட்களின் தொடர் விலையேற்றம், வாழ்க்கைச்சுமை அதிகரிப்பு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் உடனடியாக தற்போதைய அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி நுவரெலியாவில் விவசாய திணைக்களம் ஊழியர்கள், விவசாயிகள் இணைந்து எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். நுவரெலியா நகரசபை மண்டபத்திற்கு முன்பாக ஆரம்பித்து நுவரெலியா பிரதான தபால் அலுவலகத்திற்கு முன்பாக பேரணி வருகை தந்து பதாதைகளை ஏந்தியவாறும், கோஷங்கள் எழுப்பி போராட்டகாரர்கள் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர். - [அமெரிக்க தூதுவர் யாழ்.பல்கலைக்கழகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%ae%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%a4%e0%af%82%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b2/): -யாழ் நிருபர்- இன்று காலை யாழ். பல்கலைக்கழகத்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட அமெரிக்க தூதுவர், யூ.எஸ். எயிட் அனுசரணையுடன் யாழ். பல்கலைக்கழக உயர்பட்டப் படிப்புகள் பீடத்தால் நடத்தப்படும் சமாதானமும், முரண்பாடுகளுக்கான தீர்வுகளும் என்ற முதுமாணிக் கற்கை நெறிக்கான அனுசரணையாளர் உடன்படிக்கையை கைச்சாத்திட்டர். அமெரிக்கத் தூதுவர் முன்னிலையில் யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தரும், யூ.எஸ்.எயிட் நிறுவன அதிகாரிகளும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விஜயம் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. - [என்னை இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி ஒருபோதும்   கூறமாட்டார்  -  பிரதமர்  ](https://minnal24.com/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%be%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%ae%be/): ஜனாதிபதி என்னை இராஜினாமா செய்யுமாறு ஒருபோதும் கூறவில்லை. அவ்வாறு கூறமாட்டார் எனவும் உறுதியாக நம்புகிறேன் என  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  தெரிவித்தார். பிரதேச சபைத் தவிசாளர்கள், மேயர்கள் மற்றும் மாவட்டத் தலைவர்களுடன் இன்று   அலரி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். வெளிநாட்டு உதவிகளை பெற்றேனும் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு தேவையான வேலைத்திட்டங்களை முன்னெடுப்போம் என்றும்   பிரதமர் வலியுறுத்தினார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்யக்கூடாது என பிரதேச சபை தவிசாளர்கள் மற்றும் மேயர்கள் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றினர். குறித்த சந்திப்பின் போது   பிரதமர் ஆற்றிய முழுமையான உரை வருமாறு, கடந்த காலங்களில் சந்தித்து பேசுவதற்கு எங்களுக்கு அதிக நேரம் கிடைக்கவில்லை என்று நினைக்கிறேன். ஆனால் இன்று நாடும் மக்களும் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து சந்தித்து கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. தீர்வு காண்பதற்கான செயற்பாடுகள் குறித்து பேச சிலர் தமது ஆலோசனைகளையும் முன்வைத்தனர். […] - [நாளைய போராட்டத்திற்கு இ.தொ.க. ஆதரவு](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%88%e0%ae%af-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%87/): நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினைக்கு எதிராக நாளை வியாழக்கிழமை   நாடு தழுவிய ரீதியில்  முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்  தனது ஆதரவை தெரிவித்துள்ளது. தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மத்திய நிலைய உறுப்பினர்களுடன் சௌமியபவனில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, இ.தொ.கா தனது ஆதரவை வழங்கியுள்ளது. அத்துடன்,குறித்த போராட்டத்தின் போது, நாடளாவிய ரீதியில்  இ.தொ.கா தமது  அதிருப்தியை அரசாங்கத்துக்கு தெரிவிக்கும் வகையில், 300 இடங்களில், போராட்டங்களை ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. - [அரச -தனியார் பஸ்கள் வழமைப்போன்று இயங்கும்](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a-%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b8%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%ae%e0%af%88%e0%ae%aa/): அரசுக்கு எதிராக நாளை வியாழக்கிழமை பொது பணிப்புறக்கணிப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள போதும், அரச மற்றும் தனியார் பஸ்கள் வழமைப்போன்று இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அரச போக்குவரத்து சேவைகள் உரிய முறையில் இடம்பெறும் என்று இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் தெரிவித்துள்ளார். அதேநேரம் தாமும் நாளையதினம் சேவைகளை முன்னெடுக்கவுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கத் தலைவர் கெமுன விஜயரத்ன தெரிவித்தார். எனினும் எதிர்வரும் 6ஆம் திகதி நடத்தப்படவுள்ள தேசிய நிர்வாக முடக்கல் போராட்டத்துக்கு தமது சங்கம் ஆதரவளிக்கும் என்று அவர் குறிப்பிட்டார். - [குறைந்த விலையில் போதுமான எரிபொருளை வழங்கவுள்ள ரஷ்யா](https://minnal24.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9/): எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் குறைந்த விலையில் போதுமான எரிபொருளை ரஷ்யா வழங்குவதாக ரஷ்ய பிரதிநிதிகள் எழுத்து மூலம் தமக்கு அறிவித்துள்ளதாக எல்லே குணவன்ச தேரர் தெரிவித்துள்ளார். எனவே, மக்களுக்கும் நாட்டுக்கும் நல்லது செய்ய வேண்டும் என்ற உண்மையான விருப்பமும் உறுதியும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இருந்தால் மூன்று நாட்களில் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண முடியும் என எல்லே குணவன்ச தேரர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோருக்கு கடிதம் ஊடாக அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இடைக்கால தேசிய அரசாங்கம் விரைவில் அமைக்கப்பட வேண்டும் எனவும், நிறக் கட்சிகளை ஒதுக்கி வைத்து மக்களின் வாழ்க்கையை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். - [மண்ணெண்ணெய் வரிசையில் காத்திருந்த வர்த்தகர் மரணம்](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%86%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%9f/): -நுவரெலியா நிருபர்- மண்ணெண்ணையைப் பெற்றுக் கொள்வதற்காக சுமார் 5 மணித்தியாலயங்களுக்கு மேல் நீண்ட வரிசையில் காத்திருந்த ஹட்டன் நகர வர்த்தகர் ஒருவர், இன்று புதன்கிழமை  அதிகாலை உயிரிழந்துள்ளார். ஹட்டன் – தும்புறுகிரிய வீதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 55 வயதான தேவநாயகம் கிருஸ்ணசாமி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. ஹட்டன் நகரில் வாடகைக்கு கடையொன்றை பெற்று வர்த்தகத்தில் ஈடுபடும் குறித்த நபர், நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் மண்ணெண்ணையைப் பெறுவதற்காக, எரிபொருள் நிலையத்துக்கு சென்று, சுமார் இரவு 11 மணியளவில் வீட்டுக்கு வருகைத் தந்ததாகவும் அவரது மனைவி தெரிவித்துள்ளார். வீட்டுக்கு வந்த அவர், தனக்கு அதிகம் சோர்வாக இருப்பதாக தெரிவித்து, வாந்தியும் எடுத்துள்ளதுடன், நித்திரைக்குச் சென்றுள்ளார். பின்னர் அதிகாலை தனது கணவர் நித்திரையிலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ள அவரது மனைவி, இதற்கு முன்னர் தனது கணவருக்கு எவ்வித நோய்களும் இருக்கவில்லை என்றும் மண்ணெண்ணெய் பெறுவதற்காக பல மணி நேரம் காத்திருந்தமையாலேயே […] - [சாய்ந்தமருது அல்-ஹிலால் பாடசாலையில் வித்தியாரம்ப விழா](https://minnal24.com/%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%81-%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b9%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-2/): -எம்.எஸ்.எம்.ஸாகிர்- எதிர்வரும் 5 ஆம் திகதி வியாழக்கிழமை சாய்ந்தமருது அல்-ஹிலால் பாடசாலையில் தரம் 1 மாணவர்களின் வித்தியாரம்ப விழா நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் இம்முறை புதிதாக அனுமதி பெற்றுள்ள தரம் 1 மாணவர்களின் பெற்றோர் வருகை தந்து சிறப்பிக்க வேண்டும் என பாடசாலையின் அதிபர் யூ.எல். நஸார் தெரிவித்தார். சாய்ந்தமருது அல்-ஹிலால் பாடசாலையில் இடம்பெறவுள்ள வித்தியாரம்ப விழா பற்றி புதிதாக அனுமதி பெற்றுள்ள மாணவர்களின் பெற்றோர்களுக்கு நேற்று  செவ்வாய்க்கிழமை விளக்கமளித்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு அதிபர் தெரிவித்தார். அங்கு மேலும் பேசும் போது, இம்முறை கிட்டத்தட்ட எமது பாடசாலையில் தரம் 1 க்கு புதிதாக 250 மாணவர்கள் அனுமதி பெற்றுள்ளார்கள். எனவே, அனுமதி பெற்றுள்ள மாணவர்களின் பெற்றோர்களாகிய நீங்கள் விழாவுக்கு வருகை தந்து பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். அடுத்து பெற்றோர்களில் ஆண்கள் நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் விகிதம் எமது பகுதியில் மிகக் குறைவாக காணப்படுகின்றனர். நீங்கள் ஏனைய பகுதிகளில் […] - [ரம்புக்கனை சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸாரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு](https://minnal24.com/%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%88-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d/): ரம்புக்கனை போராட்டத்தின்போது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட மற்றும் அதற்கு உத்தரவு வழங்கிய சகல பொலிஸாரையும் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கேகாலை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவத்தில் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களின் சட்டவைத்திய பரிசோதனைகளில் அவர்களது காயங்கள் துப்பாக்கி சூட்டினால் ஏற்பட்டது என உறுதிசெய்யப்பட்டது. இந்நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து பொலிஸ் அதிகாரிகளையும் உடனடியாக கைது செய்துமாறு பொலிஸ்மா அதிபருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. - [அனைத்துக் கட்சி அரசாங்கத்தை உருவாக்க ஜனாதிபதி இணக்கம்](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%a9%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4/): அனைத்துக் கட்சி அரசாங்கத்தை உருவாக்குவதற்கான தமது இணக்கத்தை, அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரியப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளுக்கும் கடிதம் மூலம் ஜனாதிபதி இதனை அறியப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய பிரதமரும், அமைச்சரவையும் பதவி விலகியதன் பின்னர் அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைக்க நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி என்ற வகையில் தான் இணங்கியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.   - [74 வருட சாபக்கேடுக்கு முற்புள்ளி வைப்போம் என்ற தொனிபொருளில் எதிர்ப்பு பேரணி](https://minnal24.com/74-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%aa%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%87%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%8d/): -பதுளை நிருபர்- பதுளை ஹாலி எல நகரில் இன்று 74 வருட சாபகேடுக்கு முற்புள்ளி வைப்போம் என்ற தொனிபொருளில் தோட்ட மக்கள் தங்களின் எதிர்ப்பு பேரணியை நடத்துகின்றனர். ஹாலி எல ரயில் நிலையம் முன்பு ஆரம்பமாகிய இந்த எதிர்ப்பு பேரணி 5 கிலோமீற்றர் தூரத்தில் காணப்படும் ஹாலி எல பிரதேச செயலகம் வரையில் தங்களின் பேரணியை முன்னெடுக்கின்றனர். தோட்ட தொழிலாளர் தங்களின் கைகளில் இப்போது காணப்படும் பொருளாதார பிரச்சினை, 1000 ரூபா சம்பளம் தொடர்பான பதாதைகளை ஏந்தி எதிர்ப்பு பேரணியில் ஈடுபடுகின்றனர். இந்த பேரணியில் ஹாலி எல, ரொகத்தனை தேட்டம், உடுவரை போன்ற ஹாலி எல நகரில் சுற்றியுள்ள தோட்ட மக்கள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெறுகிறனர் - [டொலரின் விற்பனை பெறுமதி மேலும் அதிகரிப்பு](https://minnal24.com/%e0%ae%9f%e0%af%8a%e0%ae%b2%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a9%e0%af%88-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf-3/): அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கிகள் இன்று புதன்கிழமை அமெரிக்க டொலர் ஒன்றை 355 ரூபாவிற்கு விற்பனை செய்கின்றன. நேற்று செவ்வாய்க்கிழமை மத்திய வங்கியினால் அறிவிக்கப்பட்ட அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 333.88 ரூபாவாக இருந்தது. - [தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞன்](https://minnal24.com/%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b1%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%af%86%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0-2/): -யாழ் நிருபர்- காங்கேசன்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கீரிமலை பகுதியில் வசித்து வந்த இளைஞன் ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இச்சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. கருணாகரன் அருட்சாந்தன் (வயது 22) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் வீட்டிற்கு வெளியே உள்ள மரத்தில் தூக்கிட்டு கொண்டுள்ளார் இளைஞன் சடலமாக தூக்கில் தொங்கியதை அவதானித்த உறவினர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கினர். பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சடலத்தை, உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கவுள்ளனர். - [வைத்தியரை கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்த யாசகர்](https://minnal24.com/%e0%ae%b5%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%88-%e0%ae%95%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%86%e0%ae%af%e0%af%81%e0%ae%a4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be/): யாசகம் கேட்டு தர மறுத்ததால் யாசகர் ஒரு வைத்தியர் ஒருவரை கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்துள்ளார். இச்சம்பவம் தலங்கம பத்தரமுல்ல பிரதேசத்தில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றிற்கு அருகில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாலபே  பொத்துவார வீதியில் வசிக்கும் 57 வயதுடைய ஆயர்வேத வைத்தியர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த வைத்தியர் பல்பொருள் அங்காடியில் இருந்து வெளியேறும் போது அங்கு இருந்த யாசகருக்கு பணம் கொடுக்க மறுத்ததால் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து குறித்த யாசகர் வைத்தியரை கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் பல்பொருள் அங்காடியில் உள்ள சி.சி. டிவியில் பதிவாகியுள்ளது. தப்பி ஓடிய குறித்த யாசகரை கைது செய்வதற்கான முயற்சிகளை தலங்கம பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். - [ராஜபக்ச சகோதரர்களுக்கு சார்பாக இருந்தது மு.கா.தலைவர் தான்](https://minnal24.com/%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%aa%e0%ae%95%e0%af%8d%e0%ae%9a-%e0%ae%9a%e0%ae%95%e0%af%8b%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%9a/): -கல்முனை நிருபர்- உண்மைகளை மழுங்கடித்து தலைமைத்துவ விசுவாசமெனும் பெயரில் முழுப்பூசணிக்காயை ஒரு பிடி சோற்றில் மறைக்க என்னும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல். தவம் அவர்கள் முழுநிதானமாக இருந்து பதிலளிக்க வேண்டி இந்த கேள்விகளை தொடுக்கிறேன், என ஏறாவூர் நகர சபை முன்னாள் நகர பிதா ஏ.அப்துல் நாஸர் தெரிவித்துள்ளார். அமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள முன்னாள் மாகாணசபை உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினருமான ஏ.எல். தவத்தின் அறிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், நீங்கள் தலைவரின் காணிவேலுக்கு முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தேடிவந்து தலைவரை சந்தித்த கதையை கூறுகின்றீர்கள். ஆனால் அது உண்மையில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தேடிவந்த கதையல்ல மு.கா தலைவர் ஹக்கீம் வரவழைத்த கதையென்பதை உங்களுக்கு கூறிவைக்க விரும்புகிறேன். அதற்கு முன் தலைவர் தானாக […] - [சீனாவில் மீண்டும் தாண்டவமாடும் கொரோனா](https://minnal24.com/%e0%ae%9a%e0%af%80%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b5/): சீனாவில் கொவிட்-19 நிலைமை மோசமடைந்து வருகிறது. சீனத் தலைநகர் பீஜிங்கில் முதல்முறையாகப் 11 முக்கிய வட்டாரங்களில் கட்டாயப் பரிசோதனை அறிவிக்கப்பட்டுள்ளது. தலைநகரில் புதிதாக முப்பது பேருக்கு வைரஸ் தொற்று பதிவானதைத் தொடர்ந்து மத்தியில் இருக்கும் சோயங் வட்டாரத்தில் ஏற்கனவே பெரிய அளவில் வைரஸ் பரிசோதனை நடப்பில் உள்ளது.  பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மேலும் உயரலாம் என்று அஞ்சப்படுகிறது. பீஜிங்கின் மிகப்பெரிய வட்டாரம் சாவ்யாங்கில் மூன்றரை மில்லியன் பேர் வசிக்கின்றனர். பெரும்பகுதி புதிய வைரஸ் தொற்றுச் சம்பவங்கள் அந்தப் பகுதியில் இருந்தே வந்துள்ளன. எந்நேரத்திலும் முடக்கநிலை அறிவிக்கப்படலாம் என்ற அச்சத்தின் காரணமாக மக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்கிக் குவிக்க ஆரம்பித்துவிட்டனர்.   நிதி மையமான ஷங்ஹாயில் திடீர் முடக்கநிலை ஏற்பட்டபோது உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டதை மறந்துவிட வேண்டாம் என்று தலைநகர் பீஜிங்கில் வசிக்கும் மக்களுக்கு சமூக ஊடகத்தினர் நினைவுறுத்தி வருகின்றனர். ஷங்ஹாய் நகரம் கிட்டத்தட்ட ஒரு மாதமாக முடக்கநிலையில் உள்ளது. கடந்த திங்களன்று அங்கு புதிதாக இருபதாயிரம் […] - [மின்வெட்டு நேரத்தை அதிகரிக்கும் நடவடிக்கை](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b5%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0/): நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் உள்ள 270 மெகாவோட் மின் பிறப்பாக்கி  தொழில்நுட்ப கோளாறு காரணமாக செயலிழந்துள்ளதாக இலங்கை மின்சார சபை, நேற்று செவ்வாய்க்கிழமை அறிவித்தது.   தற்போது 3 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதாகவும், மின்பிறப்பாக்கி செயலிழந்துள்ள காரணத்தால் 5 மணித்தியாலங்களாக மின்வெட்டை நீடிக்க வேண்டும் எனவும் மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் உள்ள மின் பிறப்பாக்கி செயலிழந்துள்ளதால், மின்வெட்டு மணித்தியாலங்கள் நீடிக்கப்பட வேண்டுமென இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. - [போராட்டத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்ளிட்ட 12 பேர் கைது](https://minnal24.com/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%88%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-2-%e0%ae%aa/): பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்ளிட்ட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த குழுவினர் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை உடனடியாக பாராளுமன்றத்தில் எடுத்துக் கொள்ளுமாறு கோரி, பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கடிதம் ஒன்றை கொடுக்க வந்ததாகவும் அவ்வாறு கொண்டு வந்த கடிதம் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் காலி முகத்திடலில் இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவரும் நபர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. பாராளுமன்ற அமர்வுகள் இன்று புதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமை  வரை  3 நாட்களுக்கு இடம்பெறவுள்ள நிலையில், பாராளுமன்றத்திற்கு நுழையும் வீதிக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   - [விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவன் மயங்கி வீழ்ந்து உயிரிழப்பு](https://minnal24.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b3%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%9a/): யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவன் மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளான். குடவத்தை துண்ணைலை கிழக்கு கரவெட்டி சேர்ந்த மயூரன் மகிந்தன் (வயது 08) எனும் சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான். குறித்த சிறுவன் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை தனது நண்பர்களுடன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த வேளை மயங்கி விழுந்துள்ளான். சிறுவன் மூச்சு பேச்சு இல்லாததை அவதானித்த சிறுவர்கள், சிறுவனின் தாயாரிடம் தெரிவித்துள்ளனர். சிறுவனை உடனடியாக, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும், சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டான் என வைத்தியர்கள் அறிக்கையிட்டனர். உடல் கூற்று பரிசோதனைக்காக சிறுவனின் சடலம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. - [பாடசாலைக்கு தீ வைத்த 7, 12 வயது மாணவர்கள் கைது](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a4%e0%af%80-%e0%ae%b5%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-7-12-%e0%ae%b5%e0%ae%af%e0%ae%a4/): பாணந்துறையில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபரின் அலுவலகம் மற்றும் கணினி அறைக்கு தீ வைத்த குற்றச்சாட்டில் இரண்டு மாணவர்கள் கைது செய்யப்பட் டுள்ளனர். பாணந்துறை வடக்கு கெசல்வத்த பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றிலேயே நேற்று செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 12 மற்றும் 07 வயதுடைய குறித்த பாடசாலையைச் சேர்ந்த இரு மாணவர்களே இரண்டு அறைகளுக்கும் தீ வைத்துள்ளதாக CCTV காட்சிகளில் தெரிய வந்துள்ளது. மாணவர்கள் செய்த சிறு தவறுக்காக அதிபரால் தண்டிக்கப்பட்டதற்கு பழிவாங்கும் நோக்கில் மாணவர்கள் இவ்வாறு செயற்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பாடசாலை சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதம் விபரங்கள் இன்னும் கண்டறியப்ப டவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரு மாணவர்களும் இன்று புதன்கிழமை பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாணந்துறை வடக்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். - [சாய்ந்தமருதில் இரவில் வீசும் பலத்த துர்நாற்றம் : சுகாதாரத்துறை கண்டறியமுடியாத மர்மம் என்ன?](https://minnal24.com/%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5-2/): -கல்முனை நிருபர்- சாய்ந்தமருதில் சில நாட்களாக மாலை முதல் அதிகாலை வரை பலத்த துர்நாற்றம் வீசிவருவதாக மக்கள் தொடர்ந்தும் விசனம் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் கருத்து தெரிவித்த பிரதேச வாசிகள், இந்த தூர்நாற்றம் சாய்ந்தமருது பொலிவேரியன் கிராமத்தில் அமையப்பெற்றிருக்கும் விலங்கறுமனையிலிருந்து வருவதாகவும், மாட்டின் என்புகள் மற்றும் மாட்டின் தோலை தீயிட்டு அழிப்பதனால் வரும் துர்நாற்றம் என்றும் தெரிவித்ததுடன், இந்த துர்நாற்றம் காரணமாக குடியிருப்பு பிரதேசங்களில் நாங்கள் பலத்த சங்கடங்களை அனுபவிப்பதாகவும், குறித்த பிரதேசத்திலிருந்து துர்நாற்றம் காரணமாக இடம்பெயரவேண்டிய நிலை உள்ளதாகவும், இது தொடர்பில் சுகாதார அதிகாரிகள், கல்முனை மாநகர சபையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். அது மட்டுமின்றி சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்திலும் பொதுமக்களினால் முறைப்பாடொன்று பதிவுசெய்யப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களும், பொதுமக்களும் சுகாதாரத்துறையினருக்கு எடுத்துரைத்ததுடன் குறித்த பிரச்சினையின் அவசர நிலையறிந்து துர்நாற்றம் வருவதாக பொதுமக்கள் குற்றம்சுமத்திய விலங்கறுமனைக்கு இன்று  நண்பகல் திடீரெனெ களவிஜயம் மேற்கொண்டு கல்முனை மாநகர பிரதம […] - [இன்றைய நாணயமாற்று விகிதங்கள்](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%88%e0%ae%af-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a3%e0%ae%af%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%99/): இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணயமாற்று விகிதங்கள் - [யாழ்.வலிகாமம் வடக்கு தெல்லிப்பளை மக்களுக்கு இடர் கால உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு](https://minnal24.com/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%ae%be%e0%ae%ae%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a4%e0%af%86%e0%ae%b2/): -மன்னார் நிருபர்- மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில் யாழ்.வலிகாமம் வடக்கு தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மீள்குடியேற்றம் செய்யப்பட்டு வறுமைக் கோட்டின் கீழ் உள்ள மற்றும் பெண் தலைமைத்துவத்தை கொண்ட குடும்பங்களுக்கான இடர் கால உலர் உணவுப் பொதிகள் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை வழங்கிவைக்கப்பட்டது. . பலாலி, மயிலிட்டி, ஊறணி, தையிட்டி, போன்ற பகுதிகளில் அங்குள்ள கிராம சேவையாளர்களினால் தெரிவு செய்யப்பட்ட 260 குடும்பங்களுக்கான 3350 ரூபா பெறுமதியான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது. நாட்டில் தற்போது நிலவி வருகின்ற உணவு தட்டுப்பாடு உணவுப் பொருட்களுக்கான விலை ஏற்றம் காரணமாக பாதிக்கப்பட்டிருக்கும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மற்றும் பெண் தலைமைத்துவங்களை கொண்ட குடும்பங்களுக்கு மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களுக்கான நிவாரண பணிகள் நடைபெற்றுக் கொண்டு வரும் இந்த நேரத்தில் யாழ்.வலிகாமம் வடக்கு தெல்லிப்பழை பகுதியில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்களின் […] - [வெண்கரம் அமைப்பினால் யாழ்.கொட்டடியில் கற்கை நெறிகள் ஆரம்பம்](https://minnal24.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4/): -யாழ் நிருபர்- வெண்கரம் அமைப்பின் கற்றல் கற்பித்தல் செயற்பாட்டின் முன்னோக்கிய பாய்ச்சலாக யாழ்ப்பாணம் கொட்டடியில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியல், ஆங்கிலம் மற்றும் சிங்களம் ஆகிய கற்கை நெறிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அட்சய திருதியை தினமான நேற்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு வெண்கரம் பிரதான செயற்பாட்டாளர் மு.கோமகன் தலைமையில் இந்த ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது. கொட்டடி லைடன் சந்தியில் உள்ள கட்டிடம் ஒன்றில் மிக எளிமையான முறையில் ஆரம்ப வைபவம் இடம்பெற்றது. வலிகாமம் கல்வி வலய தமிழ் பாட ஆசிரிய ஆலோசகரும் வெண்கரம் தலைமைச் செயற்பாட்டாளர்களில் ஒருவருமாகிய திருமதி சுகுணா சண்முகேந்திரன் மற்றும் விருந்தினர்கள் இணைந்து இக்கற்கைநெறிக் கூடத்தை திறந்து வைத்தனர். பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள மாணவர்களை கல்வியில் மேல்நிலை அடையச் செய்வதன் மூலம் அவர்களின் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டு செயற்பட்டுவரும் வெண்கரம் அமைப்பு, இன்று தகவல் தொழில்நுட்பத் துறையுடன் இரண்டாம் மொழியை விருத்தி செய்யும் செயற்பாட்டை நோக்கி […] - [3 வயது இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தை உயிரிழப்பு](https://minnal24.com/3-%e0%ae%b5%e0%ae%af%e0%ae%a4%e0%af%81-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2/): -யாழ் நிருபர்- வீட்டுக் கிணற்றில் தவறி வீழ்ந்த 3 வயது குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. யாழ்ப்பாணம், ஊரெழு மேற்கில் நேற்று மாலை 4.00 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தையான கிருஷ்ணகாந்தன் சித்தாத் (வயது-3) என்ற பாலகனே இவ்வாறு உயிரிழந்தார். இரட்டையர்கள் ஊஞ்சலில் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். அவர்களுக்கு பிஸ்கட் கொடுத்துவிட்டு தாயார் தேநீர் தயாரிக்க சமையலறைக்குச் சென்றுள்ளார். மீள வந்து பார்த்த போது பாலகன் ஒருவரைக் காணவில்லை. வீட்டு வளவில் தேடிய பின் கிணற்றை பார்த்த போது குழந்தையை கிணற்றில் தவறி வீழ்ந்தமை கண்டறிப்பட்டது. குழந்தையை உடனடியாக மீட்டு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போதும் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது. கட்டுக் கிணற்றை சுற்றி தகரத்தினால் வேலியிடப்பட்டுள்ளது. அதில் ஏறிய போதே பாலகன் கிணற்றுக்குள் தவறி வீழ்ந்திருக்கலாம் என்று இறப்பு விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை […] - [பேருந்தும் உந்துருளியும் நேருக்கு நேர் மோதி விபத்து](https://minnal24.com/%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae/): -பதுளை நிருபர்- வெள்ளவெல பகுதியில் பிபிலையிலிருந்து பதுளைக்கு சென்று கொண்டிருந்த பிபிலை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும், பசறை பகுதியிலிருந்து லுணுகலை நோக்கி சென்று கொண்டிருந்த உந்துருளி ஒன்றும், நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், உந்துருளியை செலுத்திய 29 வயதுடைய நபர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் லுணுகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார். உந்துருளியின் வேகக்கட்டுப்பாட்டை கட்டுப்படுத்த முடியாமையே விபத்துக்கான காரணம் என லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர். பேருந்தின் சாரதி லுணுகலை பொலிஸார் கைது செய்துள்ளதோடு மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். - [இந்திய பிரதமருக்கும், தமிழக முதல்வருக்கும் சர்வதேச இந்துமதபீடம் நன்றி தெரிவிப்பு](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae/): இலங்கை நாட்டில் அண்மையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பெரும் சிரமங்களுக்குள்ளாகினர். அவர்களது சிரமங்களை போக்குவதற்காக தமிழ் நாடு அரசு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஏகமானதாக இலங்கைவாழ் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான பிரேரனை ஒன்றை முன்மொழிவு செய்து அதை நிறைவேற்றியும் கொண்டார். இதன் மூலம் ஒதுக்கப்பட்ட கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான பொருட்கள் மத்திய அரசின் வெளியுறவு துறை அமைச்சர் அவர்களின் மூலம் அனுமதி பெறப்பட்டு இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தினூடாக வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கான ஆயத்தங்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில் தக்க தருணத்தில் தங்கள் உளபூர்வமான உதவியினை முழு இலங்கைவாழ் மக்களுக்கும் ஓரளவேனும் இந்த நிதி உதவி மூலம் பொருளாதார சிக்கல் தீர வேண்டும் என ஒரு அர்பணிப்பான உணர்வுடன் எடுத்த அவர்களுடைய இந்த சேவை காலத்தால் நிச்சயம் போற்றப்படும், மதிக்கப்படும் இந்த வகையில் இலங்கைக்கு என்றும் உறுதுணையாக இருக்கும் இந்தியாவின் உதவிக் கரம் இலங்கைவாழ் மக்களால் மறக்கமுடியாதவை. மேலும் […] - [இந்தியா செல்ல முயன்ற 12 பேர் கைது : இரு படகோட்டிகளும் கைது](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%ae%e0%af%81%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-12-%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0/): -மன்னார் நிருபர்- மன்னாரில் இருந்து சட்டவிரோதமாக, இந்தியாவிற்கு படகில் சென்ற மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 12 பேர் உள்ளடங்களாக, 14 நபர்களை தாழ்வுபாடு கடற்பரப்பில் வைத்து இன்று புதன்கிழமை அதிகாலை கடற்படையினர் கைது செய்துள்ளனர். திருகோணமலையை 7 சிறுவர்கள், 3 பெண்கள், 2 ஆண்கள் உள்ளடங்களாக சேர்ந்த 3 குடும்பம் 12 நபர்கள் மற்றும் மன்னாரை சேர்ந்த படகோட்டிகள் இருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 14 பேரும் இன்று புதன்கிழமை காலை 5.00 மணியளவில் மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைகளின் பின் இரண்டு படகோட்டிகள் உள்ளடங்களாக 14 பேரூம் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது. - [டொலரின் பெறுமதி மேலும் அதிகரிப்பு](https://minnal24.com/%e0%ae%9f%e0%af%8a%e0%ae%b2%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%92%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf-370/): இலங்கையில் பல உரிமம் பெற்ற வணிக வங்கிகளில் இன்று புதன்கிழமை அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி 370 ரூபாயாக பதிவாகி உள்ளது. BOC – Rs. 366 People’s Bank – Rs. 359 Sampath Bank – Rs. 370 Commercial Bank – Rs. 370 NDB – Rs. 370 Amana Bank – Rs. 360 - [50 மில்லியனுக்கும் குறைவான டொலரே கையிருப்பில் உள்ளது](https://minnal24.com/50-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%b5%e0%ae%be/): 50 மில்லியன் டொலருக்கும் குறைவான அமெரிக்க டொலரே பயன்படுத்தக்கூடிய வகையில் கையிருப்பில் உள்ளதாக நிதி அமைச்சர் அலி சப்ரி பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை நிகழ்த்திய விசேட உரையில் குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றுகையில், தாம் இந்த ஆட்சியை 2019ஆம் ஆண்டு ஏற்கும் போது 7 பில்லியன் அமெரிக்க டொலர் கையிருப்பில் காணப்பட்டதாகவும், தற்போது பயன்படுத்தக்கூடிய வகையில் அந்த தொகை 50 மில்லியன் வரை குறைவடைந்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை இதற்கு முன்னதாகவே சென்றிருக்க வேண்டும். டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியை இதற்கு முன்னரே நெகிழ்வு தன்மையுடன் பேணியிருக்க வேண்டும். அத்துடன், நாட்டின் வரி வருமானம் 24 வீதத்திலிருந்து 8.6 வீதம் வரை குறைவடைந்துள்ளது. வரி வருமானத்தை எதிர்வரும் இரு ஆண்டுகளுக்குள் மேலும் அதிகரிக்க வேண்டும் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். - [19 ஆம் திருத்தச் சட்டத்தை உடன் அமுலாக்குமாறு சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை](https://minnal24.com/19-%e0%ae%86%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%89/): நாட்டின் நெருக்கடி நிலைக்கு தீர்வு காண்பதற்காக 15 பேர் கொண்ட அனைத்துக் கட்சி அமைச்சரவையையும், அதற்கு ஆலோசனை வழங்குவதற்காக நிபுணர்கள் அடங்கிய ஆலோசனை சபை ஒன்றையும் நிறுவ வேண்டுமென இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போதைய நெருக்கடிக்கு தீர்வைப் பெற்றுக் கொள்வதற்கான யோசனையை நேற்று கண்டி மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களிடம் முன்வைத்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோது சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார். 20 ஆம் திருத்தச் சட்டத்தை நீக்கி, 19 ஆம் திருத்தச் சட்டத்தை உடன் அமுலாக்க வேண்டும். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை, குறிப்பிட்ட காலத்திற்குள் நீக்கப்பட வேண்டும். அவநம்பிக்கை பிரேரணை கொண்டுவரப்பட்டு, அது நிறைவேற்றப்பட்டாலும், நிறைவேற்றப்பட்டாவிட்டாலும், தேசிய அரசாங்கத்தை நிறுவி, குறைந்தபட்ச வேலைத்திட்டத்துடன் செயற்படல் வேண்டும் என்ற யோசனைகளைத் தாம் முன்வைத்துள்ளதாக சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார். - [10 கோடி ரூபா பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது](https://minnal24.com/10-%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b0%e0%af%82%e0%ae%aa%e0%ae%be-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%95%e0%af%87%e0%ae%b0/): -யாழ் நிருபர்- இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 490 கிலோ கேரளக் கஞ்சாவுடன் ஒருவர் இன்று புதன்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மண்டைதீவுப் பகுதியூடாக கடத்த முயன்ற கஞ்சாவே இவ்வாறு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது. இதன்போது குருநகரை் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நீண்ட இடைவெளியின் பின்பு அதிகளவான கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதோடு, இதன் பெறுமதி 10 கோடி ரூபாவையும் தாண்டும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. - [13 மில்லியன் சிறுவர்கள் பாதிப்பு](https://minnal24.com/13-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be/): அமெரிக்காவில் இதுவரை 13 மில்லியன் சிறுவர்கள் கொரோனா தொற்று காரணமாக  பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஆய்வு நிறுவனம் மற்றும் சிறுவர் வைத்தியசாலை சங்கம் ஆகியவற்றினால்  வெளியிடப்பட்ட அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. இதன்படி, அமெரிக்காவில் கடந்த வாரம் மாத்திரம் ஒரு இலட்சத்து 49 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன், இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 5 மில்லியனுக்கும் அதிகளவான சிறுவர்கள் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. - [இன்றைய மின் விநியோகத்தடை](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%88%e0%ae%af-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%af%e0%af%8b%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%9f/): இன்று புதன்கிழமை 3 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படுமென இலங்கை மின்சார சபைத் தெரிவித்துள்ளது. ‘ஏ’  முதல் ‘டபிள்யூ’ வரையான 20 வலயங்களில் முற்பகல் 9 மணி முதல்மாலை 5 வரையான காலப்பகுதியில் 2 மணித்தியாலம் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது. அத்துடன், குறித்த வலயங்களில் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின் விநியோகத்தடையினை அமுல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே, ‘சி சி’ வலயங்களில் காலை 6 மணி முதல் 9 மணி வரையான காலப்பகுதியில் மூன்று மணித்தியாலம் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது. - [சேவைகள் வழமைபோல இடம்பெறும்](https://minnal24.com/%e0%ae%9a%e0%af%87%e0%ae%b5%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%ae%e0%af%88%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b2-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1/): குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் சேவைகள் வழமைக்குத் திரும்பியுள்ளன. கணனி அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, அத்தியாவசியமில்லாத சேவைகளுக்காக இன்று புதன்கிழமை தமது அலுவலகத்திற்கு வருவதை தவிர்க்குமாறு பொதுமக்களிடம்  வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக ஒரு நாள் சேவைகளிலும் தாமதம் ஏற்படலாம் என அத்திணைக்களம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், கோளாறு திருத்தம் செய்யப்பட்டு, சேவைகள் வழமைபோல இன்று இடம்பெறுமென திணைக்களத்தின் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார். - [மூத்த பெண் அறிவிப்பாளர் காலமானார்](https://minnal24.com/%e0%ae%ae%e0%af%82%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d/): இலங்கை வானொலி- வர்த்தக ஒலிபரப்பின் முதல் பெண் அறிவிப்பாளர்களுள் ஒருவரான,   புவனலோஜினி (வேலுப்பிள்ளை) நடராஜசிவம், நேற்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் காலமானார். - [கைதியுடன் காணாமல் போன சிறைக்காவலர்](https://minnal24.com/%e0%ae%95%e0%af%88%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a9-%e0%ae%9a%e0%ae%bf/): அமெரிக்காவில் கொலை குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள கைதி ஒருவருடன் சிறைக் காவல் அதிகாரி ஒருவரும் காணாமல்போயுள்ளார். கெசி வைட் என்ற கைதியும் விக்கி வைட் என்ற சிறைக் காவலரும் அலபாமாவில் உள்ள லோடர்டாலே கௌன்டி ஷெரிப் அலுவலகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை காலையிலேயே கடைசியாக காணப்பட்டுள்ளனர். உளவியல் மதிப்பீடு ஒன்றுக்கு அந்தக் கதியை அழைத்துச் செல்வதாக கூறியே காவல் அதிகாரி அவரைக் கூட்டிச் சென்றுள்ளார். ஆனால் , அது திட்ட அட்டவணையில் இருக்கவில்லை என்பதை அதிகாரிகள் பின்னரே கண்டுபிடித்துள்ளனர். இந்நிலையில் வைட் கைதியை தப்பவைக்க உதவினாரா அல்லது அவர் பணயக் கைதியாக பிடிக்கப்பட்டுள்ளாரா என்பது பற்றி பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கெசி வைட்டை பிடிப்பதற்கும் விக்கி வைட் இருக்கும் இடத்தை அடையாளம் காண்பதற்கும் தகவல் அளிப்பவர்களுக்கு 10,000 டொலர் சன்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது. - [பிக்கு மாணவர் ஒன்றியத்தினரின் ஆர்ப்பாட்டத்தினால் பதற்றம்](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%92%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/): அனைத்து பல்கலைக்கழக பிக்கு மாணவர் ஒன்றியம், அரசாங்கத்துக்கு எதிராக இன்று செவ்வாய்க்கிழமை எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்டதுடன் கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் நுழைந்ததால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. அரசாங்கத்திற்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகள் மற்றும் குடைகளை ஏந்தியிருந்த எதிர்ப்பாளர்கள், ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் நுழைந்துள்ளனர். அப்பகுதியில் கடமையிலிருந்த பொலிஸாரால் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாததால், கலகம் அடக்கும் பொலிஸாரும் நீர்த்தாரை பிரயோகிக்கும் வாகனங்களும் அப்பகுதிக்கு அழைக்கப்பட்ட்டிருந்தது.   - [குற்றம் சுமத்தி இலாபம் தேடுகின்றனர்](https://minnal24.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%be%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4/): மத்திய வங்கியின் பிணைமுறி மோசடியில் திருடப்பட்ட பணத்தை தான் உள்ளிட்ட தனது குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டதாக ஊழல் ஒழிப்பு அமைப்பின் அழைப்பாளர் வசந்த சமரசிங்க முன்வைத்த குற்றச்சாட்டை வன்மையாக கண்டிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். விசேட அறிக்கையொன்றை வெளியிட்டே அவர் இதனைத் தெரிவித்தார். அரசியல் இலாபத்திற்காக இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். எவ்வாறாயினும், இது தொடர்பில் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மைத்ரிபால சிறிசேன தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். - [மதுபானங்களின் விலை அதிகரிப்பு?](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a9%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0/): உள்ளூர் நிறுவனங்களினால் அதிகரிக்கப்பட்ட மதுபானங்களின் திருத்தப்பட்ட விலை அறிவித்தலை உடனடியாக விற்பனை நிலையங்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மதுவரித் திணைக்களம் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. மதுவரித் திணைக்கத்தின் பேச்சாளர் கபில குமார சிங்க இதனைக் குறிப்பிட்டார். திருத்தப்பட்ட விலை இன்மையால் மதுபானசாலைகளில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக அவர் தெரிவித்தார். - [இலங்கை தமிழர் மண்டபம் அகதிகள் முகாம் வாசலில் பெண்ணொருவர் போராட்டம்](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%95/): -மன்னார் நிருபர்- மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தனக்கு ஒதுக்கப்பட்ட வீடு சேதமடைந்துள்ளதால் தனி ஆட்சியரின் அனுமதியுடன் அருகே காலியாக இருந்த வீட்டை சொந்த செலவில் புணரமைத்து பயன்படுத்தி வந்த நிலையில், புதிதாக வந்த இலங்கை தமிழர்களுக்கு அதை ஒதுக்கி தனது உடைமைகளை வெளியில் வீசியதாக கூறி, இலங்கை பெண் ஒருவர் மண்டபம் அகதிகள் முகாம் வாசல் முன்பு இன்று செவ்வாய்க்கிழமை காலை அமர்ந்து நீதி கோரி போராட்டத்தில் ஈடுபட்டார். இலங்கையில் ஏற்பட்ட இறுதிக்கட்ட போரின் போது இலங்கையில் வசித்த ஈழத் தமிழர்கள் பெரும்பாலானோர் தங்களது உயிர்களை காப்பாற்றிக்கொள்ள தனுஷ்கோடி வழியாக தமிழகத்துக்குள் அகதிகளாக சென்றனர். அவர்கள் மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தற்போது மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் 450 குடும்பத்தைச் சேர்ந்த 1419 இலங்கைத் தமிழர்கள் வசித்து வருகின்றனர். மண்டபம் அகதிகள் முகாமில் 400 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இதில் தற்போது இலங்கையில் […] - [ஆபாசப்படம் பார்த்ததால் எம்.பி. க்கு நடந்த விபரீதம்](https://minnal24.com/%e0%ae%86%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9a%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e/): ஆபாசப்படம் பார்த்ததால் எம்.பி ஒருவர் தனது பதவியை  இராஜினாமா செய்த சம்பவம் பிரித்தானியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவில் பிரதமர் போரிஸ் ஜோன்சன் தலைமையிலான ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியினைச் சேர்ந்தவர் 65 வயதான நீல் பாரிஷ் (Neil Parish). விவசாயியான இவர் கடந்த 2010ஆம் ஆண்டு முதல் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து வந்தார். இந்நிலையில் அண்மையில் இவர் பாராளுமன்ற கீழவையின் கூட்டத்தொடரின் போது தனது தொலைபேசியில்  2 முறை ஆபாச படம் பார்த்ததாகக்  குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. குறிப்பாக நீல் பாரிஷ் தனது சக பெண் எம்.பி.க்கு அருகில் அமர்ந்து ஆபாச படம் பார்த்ததை அப் பெண் எம்.பி. ஊடகத்திடம் தெரியப்படுத்தியதை தொடர்ந்து இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. இதனையடுத்து இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு ஆளும் கட்சி மீது கடுமையான விமர்சனங்களும் எழுந்தன. இதற்கிடையில் பாராளுமன்ற நிலைக்குழு ஆணையரிடம் கூட்டத்தொடரின்போது தான் ஆபாச படம் பார்த்ததை நீல் பாரிஷ் […] - [நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் ஒரு பகுதி செயலிழப்பு](https://minnal24.com/%e0%ae%a8%e0%af%81%e0%ae%b0%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%8b%e0%ae%b2%e0%af%88-%e0%ae%85%e0%ae%a9%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2/): நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் ஒரு பகுதி செயலிழந்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இதனூடாக, 270 மெகாவோட் தேசிய மின் உற்பத்திக்கு இழக்கப்படும் 5 நாட்களில் குறித்த செயலிழப்பு சரிசெய்யப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார். எவ்வாறாயினும், மின்வெட்டு நேரத்தை அதிகரிக்காமல் ஏனைய மின் உற்பத்தி நிலையங்களின் ஊடாக மின்சார விநியோகத்தை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை மின்சார சபை தமக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் கூறினார். - [தலவாக்கலையிலிருந்து காலிமுகத்திடலுக்கு தனிமனித நடைபவனி போராட்டம்](https://minnal24.com/%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2/): கொழும்பு காலிமுகத்திடலில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் அரசாங்கத்திற்கு எதிரான தொடர்ச்சியான போராட்டத்திற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் இன்று செவ்வாய்க்கிழமை  காலை 9.30 மணிக்கு தலவாக்கலை நகரில் இருந்து சசிகுமார் என்ற தனி மனிதர் ஒருவர் நடை பவனியாக தனது போராட்டத்தை ஆரம்பித்தார். இந்த தனிமனித நடைபவனி போராட்டம் காலிமுகத்திடலில் இணைந்து கொள்வதற்காக இன்னும் மூன்று தினங்களில் சென்று அடையும் நோக்குடன் அவர் குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். - [காலிமுகத்திடல் போராட்டத்தில் வடக்கு கிழக்கு அருட் தந்தையர்கள்](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4/): -வாழைச்சேனை நிருபர்- கொழும்பு -காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் மக்கள் எழுச்சி போராட்டம் இன்றுடன் 24 ஆவது நாளாகவும் தொடர்கிறது. இந் நிலையில் இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் நீதிக்கும், சமாதானத்திற்குமான ஆணைக் குழுவின் ஏற்பாட்டில் காலி முகத்திடலில் கலந்து கொண்டோர்,  பல்வேறுபட்ட கோரிக்கைகளை முன் வைத்து முன்னெடுக்கப்பட்டு வரும் மக்கள் எழுச்சி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள், ஜனாதிபதி மற்றும் பிரதமர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டு விசாரணை செய்ய வேண்டும். வடக்கு கிழக்கில் இருக்கும் இராணுவத்தினர் வெளியேற்றப்பட வேண்டும், என்ற கோரிக்கையினை முன்வைத்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவ் ஆர்பாட்டத்தில் அருட் தந்தையர்களான கிங்ஸ்லி, குனே, நதிர, சுஜிதர் சிவநாயகம், பிரின்சன், றிச்சட் சொருபன், ஜெகதாஸ் ஆகியோர்களும், வடக்கு கிழக்கில் உள்ள அருட் தந்தையர்கள் மற்றும் தென் பகுதியிலுள்ள அருட் தந்தையர்களும் கலந்து கொண்டார்கள். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட அனைத்து ராஜபக்சாக்களும் அரசாங்கமும் பதவி விலக வேண்டும், […] - [30 வருடங்களாக பூட்டப்பட்டுள்ள ஆலயங்களின் சாபமே நாட்டை பாடுபடுத்துகின்றது](https://minnal24.com/30-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%be%e0%ae%95-%e0%ae%aa%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f/): -யாழ் நிருபர- யாழ் காங்கேசன்துறையில் எவ்வித பூசை வழிபாடுகளும் இன்றி சுமார் 30 வருடங்களுக்கு மேலாக பூட்டப்பட்ட இந்து ஆலயங்களின் சாபமே தற்போது நாட்டைப் பாடுபடுத்துவதாக சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன் தெரிவித்தார். நேற்று திங்கட்கிழமை யாழ் வந்த இந்திய பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலையை நல்லை ஆதீன குருமுதல்வர் சன்னிதானத்தில் சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், காங்கேசந்துறை பகுதியில் மக்களின் காணிகளை பறித்து ஆடம்பர ஜனாதிபதி மாளிகை கட்டியுள்ள நிலையில் மக்களை இன்னும் மீள் குடியேற்றம் செய்யவில்லை. ஆனால் அப்பகுதியில் காணப்படுகின்ற நான்கிற்கு மேற்பட்ட இந்து ஆலயங்கள் இன்னும் பூசை வழிபாடுகள் இன்றி பூட்டப்பட்ட நிலையில் உள்ளன. அதனுடைய சாபங்களை இன்றைய நாட்டின் நிலைமைக்கு காரணமாகும். சடையம்மா மடம் விஷ்ணு கோயில் மற்றும் சிவன் கோயில் உட்பட அப்பகுதியில் பல இந்து ஆலயங்கள் இருக்கின்ற நிலையில் ஆட்சியாளர்கள் […] - [பலாலி சர்வதேச விமான நிலையத்தை மீளத் திறக்க ஏற்பாடு செய்வதாக அண்ணாமலை உறுதிமொழி](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88/): யாழ் நிருபர்- நேற்று திங்கட்கிழமை யாழ்ப்பாணம் வந்திருந்த பாராதிய ஜனதா கட்சியின் தமிழ்நாட்டு மாநிலத் தலைவர் அண்ணாமலை யாழில் உள்ள தனியார் விடுதியில் யாழ்.மாவட்ட அரச சார்பற்ற நிறுவனப் பிரதிநிதிகளைச் சந்தித்தார். இதன்போது தற்போதைய பொருளாதார நெருக்கடியில் வடபகுதி மக்கள் எதிர்நோக்கும் பிரச்னைகள், அதிலிருந்து மீள்வதற்கான வழிகள் பற்றி கலந்துரையாடப்பட்டன. இந்த கலந்துரையாடலில் வடபகுதி பொருளாதார முன்னேற்றத்திற்கு தமிழகத்துடனான தொடர்பு முக்கியமானது என்பது சுட்டிக்காட்டப்பட்டதோடு, இது வணிகவிருத்திக்கு அவசியமானது போன்ற விடயங்கள் யாழ். மாவட்ட அரசசார்பற்ற நிறுவனப்பிரதிநிதிகளால் சுட்டிக்காட்டப்பட்டது. இந்தச் சந்திப்பின் போது, யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமானநிலையத்தை மீளத் திறப்பதற்கு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் மற்றும் காங்கேசன்துறையிலிருந்து காரைக்காலுக்கான கப்பல் போக்குவரத்தை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையடங்கிய மகஜர் பாரதப்பிரதமர் நரேந்திரமோடியிடம் கையளிப்பதற்காக சமர்ப்பிக்கப்பட்டது. இந்த விடயங்களை டெல்லிக்கு எடுத்துச்சென்று, நிச்சயமாக விமானநிலையத் திறப்பு மற்றும் கப்பல் போக்குவரத்து என்பவற்றிற்கு ஏற்பாடுகள் செய்வதாக அண்ணாமலை உறுதியளித்தார். இந்த […] - [விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு](https://minnal24.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b3%e0%af%88%e0%ae%9e%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-3/): -யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். கொடிகாமம் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம்பெற்ற குறித்த விபத்தில் கொடிகாமம் – கச்சாய் வீதியை சேர்ந்த யோகேஸ்வரன் நிலாந்தன் (வயது 31) என்பவரே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற கப் ரக வாகனமும், யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது. - [பா.ஜ.க தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை மன்னார் மாவட்டத்திற்கு விஜயம்](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%be-%e0%ae%9c-%e0%ae%95-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4/): -மன்னார் நிருபர்- இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு வருகை தந்திருந்த பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணியளவில் மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு வருகை தந்தார். வருகை தந்த பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட குழுவினர் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் பூஜை வழிபாட்டில் ஈடுபட்டார். அதனைத்தொடர்ந்து இந்திய அரசின் நிதி உதவியுடன் புனரமைக்கப்பட்டு வரும் திருக்கேதீஸ்வர ஆலய கட்டுமாணப் பணிகளை பார்வையிட்டதோடு, திருக்கேதீஸ்வர ஆலய நிர்வாகத்தினருடன் கலந்துரையாடினார். இதன் போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் செந்தில் தொண்டமான் மற்றும் குழுவினர் விஜயம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. - [66 வது வயதில் 38 வயது காதலியை கரம்பிடித்த அருண்லால்](https://minnal24.com/66-%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%ae%af%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-38-%e0%ae%b5%e0%ae%af%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%95/):  மேற்கு வங்க கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருப்பவர் அருண் லால்(66). முன்னாள் கிரிக்கெட் வீரரான அருண் புல்புல் சஹா(38) என்ற பெண்ணை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தார். ஆரம்பத்தில் இருவரும் பொதுவான பார்ட்டி ஒன்றில் சந்தித்துக்கொண்டனர். பின்னர் அவர்களது நட்பு காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இத்திருமண சடங்குகள் கடந்த மாதம் 24ஆம் திகதி தொடங்கியது. மஞ்சள் வைக்கும் இந்நிகழ்ச்சியில் அருண் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டதை புல்புல் சாஹா தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார். நேற்று இருவரும் முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.   இருவரும் பதிவுத்திருமணம் செய்துகொண்ட பிறகு கேக் வெட்டித் திருமணத்தைக் கொண்டாடினர். அருண் ஏற்கெனவே ரீனா என்பவரைத் திருமணம் செய்திருந்தார். இருவரும் ஒரு மித்த கருத்தின் அடிப்படையில் பிரிந்துவிட்டனர். ஆனாலும் ரீனாவிற்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் அவரை கவனித்துக்கொள்ள அருண் லால் தனது முதல் மனைவியுடன் வசித்து வருகிறார். […] - [இனி நீர்கட்டணப் பட்டியல் இல்லை](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a3%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d/): இனிவரும் காலங்களில் இ-பில் அல்லது குறுஞ்செய்தி மூலம் குடிநீர் கட்டணங்கள் வழங்கப்படும் என நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. கட்டணங்களை அச்சிடும் கடதாசிகளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக இந்த சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக அச் சபையின் பேச்சாளர் தெரிவித்தார். அதன்படி, எதிர்காலத்தில் வாடிக்கையாளர்கள் இ-பில்லிங் அல்லது குறுஞ்செய்தி மூலம் தண்ணீர் கட்டணத்தைப் பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. - [பிலிப்பைன்ஸ் தீயில் ஆறு சிறுவர்கள் உட்பட எட்டுப் பேர் பலி](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%88%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b1%e0%af%81-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5/): பிலிப்பைன்ஸ் தலைநகர் மனிலாவுக்கு அருகில் பல வீடுகளில் பரவிய தீயில் ஆறு சிறுவர்கள் உட்பட எட்டுப் பேர் உயிரிழந்துள்ளனர். நேற்றுக் காலை ஏற்பட்ட இந்தத் தீயில் 80 வீடுகள் அழிந்துள்ளன. கியுசோன் நகரில் உள்ள பிலிப்பைன்ஸ் பல்கலைக்கழகத்தின் பரந்த வளாகத்திற்குள் இருக்கும் சனநெரிசல் கொண்ட குடியிருப்பு ஒன்றின் இரண்டாவது மாடியிலேயே இந்தத் தீ ஆரம்பித்துள்ளது. தீக்கான காரணம் உறுதி செய்யப்படவில்லை.   - [திடீரென மயங்கி விழுந்த இளைஞன் மரணம்](https://minnal24.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f%e0%af%80%e0%ae%b0%e0%af%86%e0%ae%a9-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87/): திருகோணமலை-உப்புவெளி-கன்னியா மாங்காய் ஊற்று பகுதியில் திடீரென மயங்கி விழுந்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருகோணமலை பாலையூற்று பூம்புகார் பிரதேசத்தில் வசித்து வந்த கே.வசந்தன் (வயது 34) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்த நபர் நேற்று திங்கட்கிழமை நண்பகலில் வெயிலில் வேலை செய்து கொண்டிருக்கும்போது குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தற்போது சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும், குறித்த நபர் உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. - [24 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பில் ரயில்வே தொழிற்சங்கங்கள்](https://minnal24.com/24-%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b2-%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b7%e0%af%8d%e0%ae%95/): ரயில்வே தொழிற்சங்கங்கள் எதிர்வரும் 5ஆம் திகதி வியாழக்கிழமை நண்பகல் 12.00 மணி முதல் 24 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொள்ள தீர்மானித்துள்ளன. - [SIAM நிறுவன எரிவாயுவிற்கு அமைச்சரவை அனுமதி](https://minnal24.com/siam-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%a9-%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%85%e0%ae%ae/): தாய்லாந்தில் உள்ள SIAM எரிவாயு நிறுவனத்தில் இருந்து இந்த மாதம் இலங்கைக்கு தேவையான 70% எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி தற்போதைய ஓமான் நாட்டு விநியோகஸ்தரை காட்டிலும் ஒரு மெட்ரிக் தொன்னுக்கு 9 அமெரிக்க டொலர்கள் குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. - [குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மே-ஜூலை மாதம் வரை நிவாரணம்](https://minnal24.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-4/): தற்போதைய பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. அதன்படி, அடையாளம் காணப்பட்ட 3.34 மில்லியன் குடும்பங்களுக்கு மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை விசேட பண கொடுப்பனவு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.   - [நாட்டின் பல பிரதேசங்களிலும் இஸ்லாமியர்களின் புனித நோன்புப் பெருநாள் கொண்டாட்டம்](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b2-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf-2/): இஸ்லாமிய மக்கள் இன்று செவ்வாய்க்கிழமை  புனித நோன்புப் பெருநாளை கொண்டாடுகின்றனர். நாட்டின் பல பிரதேசங்களில் இஸ்லாமியர்கள் புனித நோன்புப் பெருநாளை கொண்டாடி வருகின்றனர். மன்னார் மாவட்டத்தில் உள்ள இஸ்லாமிய மக்களும் இன்று செவ்வாய்க்கிழமை  நோன்பு பெருநாளை கொண்டாடுகின்றனர். மன்னார் மூர்வீதி ஜும்மா பள்ளிவாசலில் காலை 8.00 மணியளவில் பெருநாள் தொழுகைகள் இடம் பெற்றது. காலை 7.00 மணிக்கு பெண்களுக்கும் காலை 8.00 மணியளவில் ஆண்களுக்கும் பெருநாள் தொழுகை இடம் பெற்றது. குறித்த பெருநாள் தொழுகை மூர்வீதி ஜும்மா பள்ளிவாசலின் மௌலவி எம்.அஸீம் தலைமையில் நடைபெற்றது. இதன் போது நோன்பு பெரு நாளின் முக்கியத்துவம், அல்குர்ஆன் சமய நற்சிந்தனைகள், பற்றியும் இங்கு எடுத்து கூறப்பட்டது. மேலும், மாவட்டத்தில் உள்ள ஏனைய பள்ளிவாசல்களிலும் பெருநாள் தொழுகைகள் இடம்பெற்றது. யாழ். ஒஸ்மானியக்கல்லூரியின் திறந்த மைதானத்தில் புனித றம்ழான் தின துவாப்பிராத்தனைகள் இடம்பெற்றன. இவ் துவாப்பிராத்தனையும் குப்த பிரசங்கத்தினையும் மௌலவி எ.எச்.ரகீம் தலைமையில் நடாத்தி வைக்கப்பட்டது. இதில் […] - [தாயின் காரை ஓட்டிச் சென்ற நான்கு வயது சிறுவன்](https://minnal24.com/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%af%88-%e0%ae%93%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d/): நெதர்லாந்தில் நான்கு வயது சிறுவன் ஒருவன் தனது தாயின் காரை ஓட்டிச் சென்று அதனை நிறுத்தி இருந்த கார்கள் மீது மோதவிட்டுள்ளான். அந்த சிறுவன் கடந்த சனிக்கிழமை இரவு வாகனத் தரிப்பிடத்தில் இருந்த இரு கார்கள் மீது மோதவிட்டபின், இரவு ஆடையுடன் வெறுங்காலோடு அங்கிருந்து வெளியேறி சென்றிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குளிருக்கு மத்தியில் வீதியில் தனியாகச் செல்லும் அந்த சிறுவனை கண்ட பாதசாரிகள் பொலிஸாரை அழைத்துள்ளனர். இந்த சம்பவத்தில் சிறுவன் உட்பட எவருக்கும் காயம் ஏற்படவில்லை. அங்கு விரைந்த பொலிஸார் சிறுவனின் தாயாரை தொலைபேசியில் அழைத்து, சிறுவனை பேசவைத்தபோது அவன், கார் செயல்படும் சத்தங்களை எழுப்பியதாகவும் காரின் திருப்பு வளையத்தைத் திருப்புவதுபோல் சைகை காட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதன்மூலம் அந்தக் காரை சிறுவனே செலுத்தி இருப்பதை பொலிஸார் உறுதி செய்துள்ளனர். - [இன்று மின் தடை இல்லை](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%af%e0%af%8b%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%9f%e0%af%88/): முஸ்லிம்களின் நோன்பு பண்டிகையை முன்னிட்டு நாட்டில் இன்று மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படமாட்டாது என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் நாளை  மூன்று மணித்தியாலங்களுக்கும் அதிகளவான காலத்திற்கு மின் விநியோகத்தடையினை அமுல்படுத்துவதற்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இலங்கை மின்சாரசபை விடுத்த கோரிக்கைக்கு அமைய இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வலயங்களின் அடிப்படையில்  மூன்று  மணித்தியாலமும் 20 நிமிடமும் இவ்வாறு மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. - [இடியுடன் கூடிய மழை பெய்யும்- வளிமண்டலவியல் திணைக்களம்](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%ae%e0%ae%b4%e0%af%88-%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%af-7/): மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது இன்றைய தினம் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை மாவட்டத்தின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும். இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் அபாயத்தைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. - [புனித நோன்பு பெருநாளை இன்று](https://minnal24.com/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4-%e0%ae%a8%e0%af%8b%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%88-%e0%ae%87%e0%ae%a9/): இஸ்லாமிய மக்கள் புனித நோன்பு பெருநாளை இன்று கொண்டாடுகின்றனர். இலங்கையில், புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை தென்படவில்லை என கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறைக்குழு நேற்று முன்தினம் அறிவித்தது. நாட்டின் எந்தவொரு பகுதியிலும் பிறை தென்பட்டமைக்கான ஆதாரம் கிடைக்கப்பெறாத காரணத்தினால், இஸ்லாமியர்கள் இன்றைய தினம் புனித நோன்பு பெருநாளை கொண்டாடுகின்றனர். - [இ.தொ.காங்கிரஸை விமர்சிப்பதற்கு சுமந்திரனுக்கு எவ்வித அருகதையும் இல்லை - செந்தில் தொண்டமான்](https://minnal24.com/%e0%ae%87-%e0%ae%a4%e0%af%8a-%e0%ae%95%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%b8%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d/): -யாழ் நிருபர்- இலங்கை தொழிலாளர் காங்கிரஸை விமர்சிப்பதற்கு சுமந்திரனுக்கு அரசியல் தொலைநோக்கு தெரியாது, என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார். நேற்று திங்கட்கிழமை யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மஹிந்த ராஜபக்ச ஆட்சி முடிவுறும் தருவாயில் உள்ள நிலையில் அரசாங்கத்தில் இருந்து வெளியேறியதாக சுமந்திரன் ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்திருந்தார். பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனைப் போல் வாயில் அரசியல் பேசுபவர்கள் நாங்கள் கிடையாது. யாழ் பொது நூலகத்தை எரித்த ஐக்கிய தேசிய கட்சியுடன் ஒன்றிணைந்து ஆட்சியை அமைக்க ஆதரவு வழங்க முடியும் என்றால் அதைவிட அரசாங்கத்திலிருந்து நாங்கள் வெளியே அருமை பெரிய விடயமாக அமையாது. ஜீவன் தொண்டமானை மக்கள் பாராளுமன்றம் அனுப்பியது மக்களுக்கு வேலை செய்வதற்கே தவிர அரசாங்கத்தில் இருந்து வேடிக்கை பார்ப்பதற்கு அல்ல. தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் […] - [சுவாமி விபுலாநந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் இடம்பெற்ற மாணவர் ஆர்ப்பாட்டம் தொடர்பான ஊடக அறிக்கை](https://minnal24.com/%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a8%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be-%e0%ae%85%e0%ae%b4%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af/): கிழக்குப் பல்கலைக் கழக, சுவாமி விபுலாநந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் 29.04.2022 அன்று நடந்த மாணவர் ஆர்ப்பாட்டம் தொடர்பாக மாணவர்களால் வழங்கப்பட்டு பரவலாக ஊடகங்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ள செய்தியானது உண்மைக்குப் புறம்பானதும், சுவாமி விபுலாநந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதுமாக, அமைகின்றது. எனவே மக்களுக்கு உண்மை நிலையை வெளிப்படுத்துவதும் இந்த விடயம் சார்ந்த பின்னணியினைத் தெரியப்படுத்துவதும் எமது பொறுப்பாகும். சுவாமி விபுலாநந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் இடம் பெற்ற பகிடிவதை, வன்முறைகள் மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் தொடர்பாக விசாரணைக்குழுவினால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, பின்வரும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் நிறுவக முகாமைத்துவ சபையின் அங்கீகாரத்துடன் எடுக்கப்பட்டு, குறிப்பிட்ட மாணவர்களுக்கு எழுத்து மூலம் தெரிவிக்கப்பட்டன. 1. மாணவர்களின் பயன்பாட்டுக்காக ஆண்கள் விடுதியில் இருந்த தொலைக்காட்சிப் பெட்டி உடைக்கப்பட்டமை, இதனை உடைத்த மாணவர்கள் உடைக்கப்பட்ட தொலைக்காட்சிப் பெட்டிக்கான பெறுமதித் தொகையை சமமாகப் பிரித்துச் செலுத்துவதோடு குறிப்பிட்ட அம்மாணவர்கள் தொடர்ந்தும் விடுதியில் தங்கியிருக்க முடியாதென தடைவிதிக்கப்பட்டது. […] - [முஸ்லிம் பிரமுகர்களின் பெருநாள் வாழ்த்துச் செய்தி](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%88-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%ae%95%e0%ae%b0-%e0%ae%9a%e0%ae%aa%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be/): -கல்முனை நிருபர்- நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் பாவங்கள், தீயன விலக்கி நல்லமல்களினால் நாம் இறைவனுடன் தொடர்புபட்ட ஆயிரம் மாதங்களை விட சிறந்த மாதமான புனித ரமழானை அடைந்து இன்று நோன்புப்பெருநாளை கொண்டாடும் முஸ்லிம் சகோதரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன் சகலரும் தேக ஆரோக்கியத்துடனும் மன நிம்மதியுடனும் வாழ இறைவன் துணைபுரிய பிராத்திக்கிறேன். நாட்டின் பொருளாதார நெருக்கடிகள், அரசியல் தளம்பல்கள் காரணமாக பல்வேறு முரண்பாடுகளுடன் இந்த புனிதமிகு காலத்திலும் கஷ்டத்தை அனுபவிக்கும் எமது சகோதரர்களுக்கும் பல்வேறு காரணங்களினாலும் துயருற்றிருக்கும் அனைவருக்கும் இறைவன் நல்ல சுகத்தையும், பறக்கத்தையும் வழங்கிட எல்லோரும் கையேந்தி பிராத்திப்போம், என்று முன்னாள் இராஜாங்க அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் விடுத்துள்ள நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும், இலங்கையில் வாழ்கின்ற சிங்கள, தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ மக்களிடையே இந்த காலகட்டத்தில் ஒற்றுமை புரிந்துணர்வு நிலையாக ஏற்பட வேண்டும் எனவும் சகலருக்கும் நிம்மதியான சந்தோசமான வாழ்க்கை […] - [யாழ்.வலி.மேற்கு பிரதேச சபை உறுப்பினர் வீட்டில் திருட்டு](https://minnal24.com/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%87%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a-%e0%ae%9a%e0%ae%aa/): -யாழ் நிருபர்- மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் பகுதியில் வசிக்கும் வலி.மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் கிருபாகரன் வீட்டில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த பிரதேச சபையின் உறுப்பினர் அவரது தங்கையின் மகனது பிறந்தநாள் கொண்டாட்டத்திக்காக குடும்பத்தினரோடு சென்றுள்ளார். இச்சந்தர்ப்பத்தில் அவரது வீட்டினை உடைத்து உள்ளே நுழைந்த திருடர்கள் எரிவாயு சிலிண்டர், கிரைன்டர், வங்கி கணக்கு புத்தகம் மற்றும் வங்கி தானியங்கி இயந்திர அட்டை (ATM அட்டை) என்பற்றினை இவ்வாறு களவாடிச் சென்றுள்ளனர். பிரதேச சபையின் உறுப்பினர் வீட்டிற்கு வந்து பார்த்தவேளை வீடு உடைத்து திருட்டு போயிருந்த விடயம் அவருக்கு தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். - [வீடு தீப்பற்றி சிறுமி பரிதாபமாக பலி](https://minnal24.com/%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a4%e0%af%80%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%b0/): -யாழ் நிருபர்- சண்டிலிப்பாய் பிரான்பற்று பகுதியில் வீடு தீப்பிடித்ததில் சிறுமி ஒருவர் பரிதாபகராக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வீட்டிற்கு அருகில் உள்ள ஆலயத்தில் ஒலிபெருக்கி சத்தம் அதிகமாக இருந்ததால் கதவை பூட்டி விட்டு அறையில் குறித்த சிறுமி மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் கல்வி கற்றுக்கொண்டிருந்திருக்கிறார். அச்சமயம் விளக்கு விழுந்து வீடு தீப்பற்றுகையில் சிறுமியின் ஆடைகளையும் தீ விட்டு வைக்கவில்லை. இதன்போது பேரூந்துக்கென தந்தையரால் சேமித்து வைக்கப்பட்ட மண்ணெண்ணெயும் அறையில் காணப்பட்டுள்ளது. மண்ணெண்ணெயும் தீப்பிடிக்கவே வீடு சுவாலை விட்டு எரிந்திருக்கிறது. இதனையடுத்து வீட்டார் மற்றும் அயலவர்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து சிறுமியை உடல் கருகிய நிலையில் மீட்டு சங்கானை வைத்தியசாலையில் அனுமதித்தனர். எனினும் சிறுமி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, சடலம் சங்கானை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை இளவாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். குறித்த சம்பவத்தில் […] - [தடுப்பூசி அட்டை தொடர்பில் புதிய வர்த்தமானி](https://minnal24.com/%e0%ae%a4%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa/): கொவிட் தடுப்பூசியை முழுமையாகக் பெற்றுக் கொண்டமைக்கான அட்டையின்றி பொது இடங்களுக்குச் செல்ல முடியாது எனத் தெரிவித்து வெளியிடப்பட்டிருந்த வர்த்தமானி அறிவித்தல் இரத்து செய்யப்பட்டுள்ளது. ‘ஏப்ரல் 30 ஆம் திகதியிலிருந்து பொது இடங்களுக்குச்  செல்லும் போது முழுமையாக தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டதை உறுதிப்படுத்தும் அட்டையை வைத்திருப்பது அவசியமாகும்’ என்று குறிப்பிட்டு முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவினால் கடந்த பெப்ரவரி மாதம் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தது. அந்த வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்து தற்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சன்ன ஜயசுமணவினால் ஏப்ரல் 29 ஆம் திகதி புதிய வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. - [தியாக மனப்பாங்குடன் செயற்படுவோம்- ரமழான் வாழ்த்துச்செய்தியில் பிரதமர்](https://minnal24.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%95-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%ae%b1/): முழு நாடும் சவால்மிக்கதோர் காலகட்டத்தில் உள்ள இத்தருணத்தில் தியாக மனப்பாங்குடன் செயற்படுவோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள ரமழான் வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, உலகம் முழுவதும் பரந்து வாழும் இஸ்லாமியர்களுடன் இணைந்து ஈத்-உல்-ஃபிதர் பெருநாளைக் கொண்டாடும் இலங்கையிலுள்ள அனைத்து இஸ்லாமிய சமூகத்தினருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இஸ்லாம் நாட்காட்டியின் மிக முக்கியமான மாதத்தில், உங்கள் வாழ்க்கையைப் புரிந்துகொள்வதற்காக உலக வாழ்க்கையிலிருந்து சற்று ஒதுங்கி ஆன்மீக சடங்குமுறைகளை நிறைவேற்றுவது ஒரு சிறந்த பணியாகும். அதற்காக இந்த ரமழான் நோன்பு காலத்தில் நீங்கள் அனைவரும் நற்செயல்களில் மாத்திரம் கவனம் செலுத்துவது பாராட்டுக்குரிய விடயம். பட்டினியால் வாடும் ஒருவரின் வலியைப் புரிந்துகொள்வதும், தியாக வாழ்வின் மதிப்பை உணர்வதும் இந்த நோன்பு காலத்தில் நீங்கள் பெறும் விலைமதிப்பற்ற வாழ்க்கை மதிப்புகளாகும். அல் குர்ஆனின் கூற்றுக்கு அமைய ரமழான் நோன்புடன் தொடர்புடைய உன்னத நற்பண்புகளைப் பின்பற்றி அந்த நோன்பு காலத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்த உங்களுக்கு […] - [அரிசிக்கான அதிகப்பட்ச சில்லறை விலை நிர்ணயம்](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a-%e0%ae%9a%e0%ae%bf/): இன்று  திங்கட்கிழமை முதல் அமுலாகும் வகையில் அரிசிக்கான அதிகப்பட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது. இது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலையும் நுகர்வோர் விவகார அதிகாரசபை வெளியிட்டுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள விலை நிலைவரம் இதோ! ஒரு கிலோகிராம் வெள்ளை மற்றும் சிவப்பு வேகவைத்த/அவித்த உள்ளூர் அரிசி- 220 ரூபா ஒரு கிலோகிராம் வெள்ளை மற்றும் சிவப்பு சம்பா அரிசி – 230 ரூபா ஒரு கிலோகிராம் கீரி சம்பா – 260 ரூபா - [சுற்றுலாப் பயணிகளின் வருகையில் வீழ்ச்சி](https://minnal24.com/%e0%ae%9a%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%b2%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81/): நாட்டில் நிலவும் அரசியல் ஸ்திரமின்மை காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகையில் வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை சுமார் 50% குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, கடந்த ஏப்ரல் மாதத்தில் 60,000 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர் என்றும், ஆனால் மார்ச் மாதம் கிட்டத்தட்ட 110,000 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. நாட்டிற்கு தினசரி சுற்றுலாப் பயணிகளின் வருகையும் 1000 – 1500க்கு இடையில் குறைந்துள்ளதுடன், மார்ச் மாதத்தில் தினசரி சுற்றுலாப் பயணிகளின் வருகை 4000 – 5000 வரை காணப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகிறது. எரிபொருள் தட்டுப்பாடு, எரிவாயு தட்டுப்பாடு, மருந்துகள் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் தட்டுப்பாடு போன்றவை சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவதற்கு காரணமாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. - [அரசியல்வாதியை இனி சந்திப்பதில்லை -ஸ்ரீ சுமங்கல தேரர்](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%87%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa/): மல்வத்தை பீடத்தின் மகாநாயக்க தேரர், வணக்கத்துக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர், தம்மைச் சந்திக்க எந்தவொரு அரசியல்வாதியும் அனுமதிப்பதில்லை எனத் தீர்மானித்துள்ளார். நாட்டில் தற்போது நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக இலங்கையிலுள்ள மூன்று பௌத்த பீடங்களின் பிரதான பீடாதிபதிகளினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைகளுக்கு இதுவரை பொறுப்பான எந்தவொரு நபரும் பதிலளிக்காத காரணத்தினால் வணக்கத்துக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார். நாட்டின் அரசியல் தலைமைத்துவம் அரசியல் ஸ்திரத்தன்மையை உருவாக்கி பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணாவிட்டால், மகா சங்கத்தினர் ஒன்றிணைந்து சங்க மாநாட்டை பிரகடனப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என நான்கு பிரேரணைகளை சமர்ப்பித்த பிரதம தேரர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். - [மீனவர்களை மனிதாபிமான அடிப்படையில் பார்க்க வேண்டும்](https://minnal24.com/%e0%ae%ae%e0%af%80%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%85%e0%ae%9f%e0%ae%bf/): -யாழ் நிருபர்- மனிதாபிமான அடிப்படையில் இலங்கையில் இருந்து வரும் மீனவர்களையும், இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடலுக்குள் வருகின்ற மீனவர்களையும், பார்க்கவேண்டும் என்பது நிலைப்பாடு, என பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் நாடு மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். இலங்கைக் கடற்பரப்பிற்குள்ள எல்லைதாண்டிவரும் இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பாக எமக்கு நிரந்தர தீர்வாக அமையாது. இதனை மனிதாபிமான அடிப்படையாக பார்க்கவேண்டும். தொப்புள் கொடி உறவுகளுக்கிடையில் இதனை பார்க்ககூடாது என்பது எமது நிலைப்பாடு. நிச்சயமாக இலங்கை மீனவர்கள் தமிழக கடற்பரப்புக்குள் வருவதை கூட அவர்களை வெளியிலே கொண்டுவருவதற்கு துணைநிற்போம். கைது செய்யப்படுவர்கள் அனைவரும் படகில் ஒருநாள் வேலைக்காக மீன்பிடிப்பதற்காக செல்லுவர்கள் இவர்களை குற்றம் செய்வதை போன்று பார்ப்பதை விட மனிதாபிமான அடிப்படையில் இலங்கையில் இருந்து வரும் மீனவர்களையும் பார்க்க வேண்டும் இந்தியாவில் இருந்து வருகின்ற மீனவர்களையும் பார்க்கவேண்டும் என்பது நிலைப்பாடு என்பதாகும், என அவர் தெரிவித்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் தமிழரசுக்கட்சியின் […] - [சட்டவிரோத மதுபான உற்பத்தி இடத்திற்கு அருகிலிருந்து சடலம் மீட்பு](https://minnal24.com/%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8b%e0%ae%a4-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%89%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d-2/): -பதுளை நிருபர்- ஹப்புத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுசாக்கலை தோட்டப் பகுதியில் 38 வயதான இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை குறித்த நபரை காணவில்லை என அவருடைய உறவினர்கள் ஹப்புத்தளை பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து, இன்று திங்கட்கிழமை பொலிஸார் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து குறித்த பகுதியில் உள்ள வனப்பகுதியில் தேடுதல் பணிகளை ஆரம்பித்தனர். சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்கு மேல் தேடப்பட்ட நபர் சடலமாக இன்று மாலை  குறித்த பகுதியில் காணப்பட்டார். இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர் மவுசாகலை தோட்டம் கீழ் பிரிவைச் சேர்ந்தவர் ஆவார். சட்டவிரோதமாக மதுபானம் உற்பத்தி செய்யப்படும் இடத்திற்கு அருகாமையில் இவருடைய சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேலதிக விசாரணைகளை ஹப்புத்தளை பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. - [பொருளாதார நெருக்கடியினால் குடும்பஸ்தர் தற்கொலை](https://minnal24.com/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0-%e0%ae%a8%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%be/): பொருளாதார நெருக்கடி காரணமாக குடும்பஸ்த்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். கல்கமுவ – வலஸ்வௌ பகுதியைச் சேர்ந்த 60 வயது குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது பற்றி மேலும் தெரியவருவதாது, குடிசையொன்றில் மனைவியுடன் வசித்து வந்த அவர், சேனை விவசாயியாகவும், கூலித் தொழிலாளியாகவும் பணியாற்றி வந்தார். பாரிய வயல்வெளியில் விவசாயம் செய்து வந்ததாகவும், உரம் இல்லாத காரணத்தினால் அவரது நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தற்போது நிலவும் நெருக்கடியான சூழ்நிலையில் மனைவிக்கு முறையாக உணவைக் கூட வழங்க முடியாத அவலநிலையில் நீண்ட நாட்களாக வாழ்ந்து வந்துள்ளார். அவரது மனைவி கூறுகையில், கடந்த 29ஆம் திகதி காலை வீட்டை விட்டு வெளியே சென்ற கணவன் மாலை வரை வீடு திரும்பவில்லை. இதனையடுத்து பிரதேச மக்களின் உதவியுடன் தேடிய போது, மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் அவர் இருந்ததாக குறிப்பிட்டார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். - [எரிபொருள் தரம் குறித்து அறிவிப்பதற்கு புதிய இலக்கம்](https://minnal24.com/%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81/): எரிபொருள் தரம் குறித்து அறிவிப்பதற்கு எரிசக்தி அமைச்சு புதிய தொலைபேசி இலக்கமொன்றை அறிவித்துள்ளது. தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், குறித்த விடயங்கள் தொடர்பான தகவல்களை 0115234234 அல்லது 0115455130 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அறியப்படுத்த முடியும் என தெரிவித்தார். அதேசமயம் பல பிரதேசங்களில் எரிபொருள் பிரச்சினை தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். - [மேடையிலிருந்து மைக்கை வீசிய பார்த்தீபன்](https://minnal24.com/%e0%ae%ae%e0%af%87%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%b5%e0%af%80/): பார்த்திபன் இயக்கி நடிக்கும் ‘இரவின் நிழல்’ திரைப்படம் ஒரே ஷாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. வித்யாசமான கதைக்களன்களோடு திரைப்படம் எடுப்பதில் இயக்குனர், நடிகர் பார்த்திபன் எப்போதுமே தனித்துவமானவர். அண்மையில்; அவர் உருவாக்கிய ஒத்த செருப்பு ஒரே ஒரு நடிகரை வைத்து மட்டுமே எடுக்கப்பட்ட வித்தியாசமான முயற்சியாக அமைந்தது. இதையடுத்து அவர் இரவின் நிழல் என்ற திரைப்படத்தை எடுத்துள்ளார். இந்த படம் மொத்தமும் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் ரஹ்மான் மற்றும் பார்த்திபன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். விழாவின் போது திடீரென மைக் வேலை செய்யாததால் பார்த்திபன் கோபமாகி மைக்கை தூக்கி எறிந்தார். இதைப் பார்த்து தர்மசங்கடமான ரஹ்மான் ‘விடுங்க சார்’ என சமாதானம் செய்தார். பின்னர் தன்னுடைய செய்கைக்காக பார்த்திபன் வருத்தம் தெரிவித்தார். - [கடற்கரைக்கு சென்ற 13 பேரை இந்தியாவிற்கு செல்வதாக தெரிவித்து கைது செய்த கடற்படையினர்](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-13-%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%af%88-%e0%ae%87/): -மன்னார் நிருபர்- தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, நேற்று ஞாயிற்றுக்கிழமை ஓய்வை கழிப்பதற்காக தலை மன்னார் கடலுக்கு சென்ற 10 சிறுவர்கள் உட்பட 13 நபர்களை தலை மன்னார் கடற்படையினர் கைது செய்துள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை தொழிலாளர் தின விடுமுறையை முன்னிட்டு மன்னாரில் கரையோர பகுதிகளை சேர்ந்த பல குடும்பங்கள் பொழுதை கழிப்பதற்கு கடற்கரை பகுதிக்கு சென்ற நிலையில் சிறுவர் குழு ஒன்றும் கடற்கரைக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில், குறித்த சிறுவர்கள் இந்தியா செல்ல முயற்சிப்பதாக தெரிவித்து தலை மன்னார் கடற்படையினரால் 13 நபர்களும் கைது செய்யப்பட்டு தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு, இன்று திங்கட்கிழமை மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டனர். இந்த நிலையில் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட நபர்கள் சார்பாக சட்டத்தரணி S.டினேசன் ஆஜராகிய நிலையில், கைது செய்யப்பட்ட அனைவரும் கடற்கரையை பார்வையிட சென்றதாகவும் கடற்படையினர் வேண்டும் என்று அவர்களை கைது செய்ததாகவும் சமர்பணம் மேற்கொண்டார். இந்த நிலையில் வழக்கை […] - [திருகோணமலை மீனவர்கள் 6 பேர் படகுடன் இந்திய கடற்படையினரால் கைது](https://minnal24.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8b%e0%ae%a3%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-6-%e0%ae%aa%e0%af%87/): -மன்னார் நிருபர்- இந்திய கடல் எல்லையில் அத்துமீறி மீன்பிடித்த திருகோணமலை மீனவர்கள் 6 பேர் படகுடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய கடல் எல்லையில் இந்திய கடற்படையினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமான முறையில் இந்திய எல்லைப் பகுதியில் படகு ஒன்று நிறுத்த பட்டிருப்பதைக் கண்டு படகில் வந்த 6 பேரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் இலங்கையில் திருகோணமலையை சேர்ந்தவர்கள் என்பதும், எல்லை தாண்டி மீன் பிடிக்க வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, அவர்கள் 6 பேரையும் இந்திய கடற்படையினர் கைது செய்து காரைக்கால் துறைமுகத்திற்கு இன்று திங்கட்கிழமை மதியம் அழைத்து செல்லப்பட்டனர். தொடர்ந்து அவர்களிடம் கடலோர காவல் குழும ஆய்வாளர் ராஜா தலைமையில் பொலிஸார் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள், இலங்கை திருகோணமலையை சேர்ந்த அனுரா என்பவருக்குச் சொந்தமான படகில் கடந்த 21ம் தேதி திருகோணமலையில் இருந்து […] - [சாய்ந்தமருதில் இரவில் வீசும் துர்நாற்றம் : களவிஜத்தில் வெளிவந்த உண்மைகள்](https://minnal24.com/%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80/): -கல்முனை நிருபர்- சாய்ந்தமருதில் சில நாட்களாக பிந்திய மாலை பொழுது முதல் அதிகாலை நேரம் வரை பலத்த துர்நாற்றம் வீசிவருவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் கருத்து தெரிவித்த சாய்ந்தமருது ஜும்மா பெரியபள்ளிவாசல் நிர்வாகிகள், பிரதேச வாசிகள் இந்த தூர்மாற்றம் சாய்ந்தமருது பொலிவேரியன் கிராமத்தில் அமையப்பெற்றிருக்கும் விலங்கறுமனையிலிருந்து வருவதாகவும், மாட்டின் என்புகள் மற்றும் மாட்டின் தோலை தீயிட்டு அழிப்பதனால் வரும் துர்நாற்றம் என்றும் தெரிவித்ததுடன், இந்த துர்நாற்றம் காரணமாக குடியிருப்பு பிரதேசங்களில் நாங்கள் பலத்த சங்கடங்களை அனுபவிப்பதாகவும், இது தொடர்பில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமணைக்கு அறிவித்தும் பயனில்லை என்றும் சுகாதார அதிகாரிகள், கல்முனை மாநகர சபையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். இந்த விடயம் தொடர்பில் ஆராய குறித்த விலங்கறுமனைக்கு திடீரெனெ களவிஜயம் மேற்கொண்டு பார்வையிட்டபோது இந்த விலங்கறுமனையில் மாடுகளை அறுக்கும் இடம் சுத்தமாக இருந்ததுடன் உப்பு மற்றும் இரசாயன பதார்த்தங்களை கொண்டு மூன்று மாதமளவில் […] - [பா.ஜ.க தமிழ்நாட்டு தலைவர் - த.தே.கூ. பாராளுமன்ற உறுப்பினர்கள் விசேட சந்திப்பு](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%be-%e0%ae%9c-%e0%ae%95-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d/): -யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பா.ஜ.க தமிழ்நாட்டு தலைவர் அண்ணாமலைக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பு யாழ்ப்பாணம் தனியார் விடுதியில் ஆரம்பமாகியுள்ளது. குறித்த சந்திப்பில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர், வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், இலங்கை தமிழரசுக் கட்சியின் செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். - [அம்பாறை ரஹ்மத் பவுண்டேஷனினால் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b1%e0%af%88-%e0%ae%b0%e0%ae%b9%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b5%e0%af%81%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%87%e0%ae%b7%e0%ae%a9/): -கல்முனை நிருபர்- அம்பாறை மாவட்டத்தின் பல பாகங்களுக்கும் ரஹ்மத் பவுண்டேஷன் அமைப்பின் மூலம் குடிநீர் வசதிகள், பாலம் அமைத்தல், கல்விக்கு உதவுதல், ஏழைகளுக்கு இல்லிடமமைத்தல் உட்பட பல மனித நேயப்பணிகள் இடம்பெற்று வருகின்றது. அதன் தொடர்ச்சியாக புனித நோன்புப்பெருநாளை முன்னிட்டு கல்முனை பிராந்தியத்தில் அடையாளப்படுத்தப்பட்ட விஷேட தேவையுடையவர்கள், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள், வருமானம் குறைந்தவர்களுக்கான, உலர் உணவுப்பொதிகள் வழங்கும் நிகழ்வு கல்முனையில் ரஹ்மத் பவுண்டேஷன் தலைமையகத்தில் நடைபெற்றது. Y.W.M.A. பேரவையின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இந் நிகழ்வானது, ரஹ்மத் பவுண்டேஷன் அமைப்பின் நேரடி கண்காணிப்பிலும், கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேஷன் அமைப்பின் ஸ்தாபகத் தலைவருமான ரஹ்மத் மன்சூர் தலைமையிலும் நடைபெற்றது. - [இந்திய நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை பா.ஜ.க தமிழ்நாடு தலைவர் பார்வையிட்டார்](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%92%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9/): -பதுளை நிருபர்- இந்திய நிதி ஒதுக்கீட்டின் கீழ் அப்புத்தளை தங்கமலை தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் மாநில சட்டப்பேரவை உறுப்பினர் அண்ணாமலை நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை பார்வையிட்டார். குறித்த நிகழ்வினை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் ஏற்பாடு செய்திருந்தார். இதன்போது, குத்துவிளக்கேற்றிய பின்னர் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை பார்வையிட்டார். குறித்த வீட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சௌமியமூர்த்தி தொண்டமான், ஆறுமுகன் தொண்டமானின் உருவப்படங்கள் வைக்கப்பட்டிருந்தது அதற்கு மரியாதை செலுத்திய பின்னர் அந்த உருவப்படங்கள் தமக்கு வேண்டும் எனவும் வலியுறுத்தினார். பின்னர் மக்கள் மத்தியில் உரையாற்றினார். குறித்த நிகழ்வில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பதுளை மாவட்ட பிரதேச சபை மற்றும் உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. - [உயிரிழந்தவரை அடையாளம் காண உதவி கோரும் மட்டு.பொலிஸார்](https://minnal24.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b0%e0%af%88-%e0%ae%85%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be/): மரணித்தவரை அடையாளம் காண்பதற்கு பொதுமக்களின் உதவியை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் நாடியுள்ளனர். மட்டக்களப்பு பிரதான பேரூந்து தரிப்பிடத்தில் கடந்த 26.04.2022 ஆம் திகதி காலை 7.30 மணியளவில் 60 தொடக்கம் 65 வயது மதிக்கத்தக்க வயோதிபர் ஒருவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து, அங்கிருந்த பேருந்து நடத்துனரினால் 1990 அவசர சேவை நோயாளர் காவு வண்டி அழைக்கப்பட்டு குறித்த வயோதிபர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் குறித்த வயோதிபர் கடந்த 27.04.2022 அன்று பி.ப 12.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்த குறித்த வயோதிபரின் ஊர் மற்றும் பெயர் என்பன தெரியாத நிலையில் அடையாளம் காணப்படாத குறித்த சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. குறித்த சடலத்தை இனங்கண்டுகொள்வதற்காக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடி நிற்பதுடன், மேலதிக விசாரனைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். - [பா.ஜ.கட்சியின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை யாழ் விஜயம்](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%be-%e0%ae%9c-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81/): -யாழ் நிருபர்- பா.ஜ.கட்சியின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை யாழ்.நல்லைக் கந்தன் ஆலய வழிபாட்டுடன் குடாநாட்டு பயணத்தை ஆரம்பித்தார். இன்று திங்கட்கிழமை காலை 9.00 மணிக்கு நல்லூர் ஆலய சூழலில் யாழில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் தூதுவர் உள்ளிட்ட குழுவினர் வரவேற்று ஆலய வழிபாட்டிற்கு அழைத்துச் சென்றனர். இவ்வாறு ஆலய வழிபாட்டில் ஈடுபட்டவர்களை நிரஞ்சன் மற்றும் செந்தில் தொண்டமான் ஆகியோர் அழைத்து வந்தனர். மேலும், இவர்கள் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள யாழ். இந்திய கலாச்சார மத்திய நிலையத்தினையும், அங்கு அமைந்துள்ள திரைப்படகலைக்கூடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை பார்வையிட்டனர். இதனை தொடர்ந்து, யாழ் பண்ணைகடற்கரையில் அமைந்துள்ள சிறைச்சாலைக்கும் விஜயம் மேற்கொண்டார். பின், அத்துமீறி மீன்பிடியில் ஈடுப்பட்டுவந்த இந்திய மீனவர்கள் தடுப்பில் வைக்கப்பட்ட நிலையில், அவர்களின் சுகநலங்களையும் விசாரித்து அவர்களுக்கான உலர் உணவுகள் உள்ளிட்ட பொதிகளும் வழங்கிவைத்தார். இந்த விஜயத்தின் போது யாழ். இந்திய உதவித்துணைத் தூதுவர் ராகேஸ் நட்ராஜ் பாஸ்கர், […] - [நாடு முழுவதும் இராணுவத்தினர் கடமையில்](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b4%e0%af%81%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a3%e0%af%81%e0%ae%b5%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/): எரிபொருள் விநியோக நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக நாடு முழுவதும் இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். பிரதான எரிபொருள் நிரப்பு நிலையங்களிலிருந்து வெளியேறும் எரிபொருள் பவுசர்கள் உரிய முறையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களை வந்தடைகின்றனவா என்பதைப் பரிசோதிப்பதற்காகவே இந்த கண்காணிப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்தார். - [சாரதி அனுமதிப்பத்திர அட்டை விநியோகிப்பதில் தாமதம்](https://minnal24.com/%e0%ae%9f%e0%af%8a%e0%ae%b2%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%a4/): நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடி காரணமாக சுமார் பத்து இலட்சம் சாரதி அனுமதிப்பத்திர அட்டை விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் அலுவலகம் தெரிவித்துள்ளது. சாரதி அனுமதிப் பத்திரம் பெற்றுக்கொள்வதற்கான உரிய பரீட்சைகளில் சித்தியடைந்த சுமார் 3 இலட்சம் பேருக்கு இதுவரை சாரதி அனுமதிப் பத்திர அட்டைகள் வழங்கப்படவில்லை என அலுவலகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் ஜெனரல் அலுவலகம் மாதத்துக்கு சுமார் 60 ஆயிரம் சாரதி அனுமதி பத்திரங்களை வழங்குவதாகவும், டிசம்பர் 2021 முதல் புதிய சாரதி அனுமதி பத்திரங்களை அச்சிட்டு வழங்க முடியவில்லை குறிப்பிட்டுள்ளார். - [ஜனாதிபதி தலைமையில் இன்று விஷேட கலந்துரையாடல்](https://minnal24.com/%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-2/): இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று திங்கட்கிழமை முற்பகல் ஜனாதிபதி மாளிகையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனாவின் உறுப்பினர்கள் மற்றும் அரசாங்கத்திலிருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினர் ஜனாதிபதி தலைமையிலான இன்றைய கலந்துரையாடலில் பங்கேற்கவுள்ளனர். இதேவேளை, இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைப்பது தொடர்பில் சுயாதீனமாக செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு முன்வைத்த யோசனை தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.   - [வாகனத்தை செலுத்தி விபத்தை ஏற்படுத்திய 14 வயது சிறுவன் கைது](https://minnal24.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%83/): குளியாப்பிட்டிய – மாதம்பே வீதியின் கனதுல்ல பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் டிஃபெண்டர் ரக வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் நபர் பலியானார். குறித்த நபர் குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தில் குளியாப்பிட்டிய – குரதல்பொத்த பகுதியைச் சேர்ந்த 39 வயதான ஒருவரே உயிரிழந்தார். இந்த விபத்தை அடுத்து குறித்த பகுதியில் இருந்த மக்களால் டிஃபெண்டர் ரக வாகனத்தின் மீது தீ வைக்கப்பட்டுள்ளது. குறித்த டிஃபெண்டர் ரக வாகனத்தை செலுத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 14 வயது சிறுவன் ஒருவனே இவ்வாறு வாகனத்தை செலுத்தியமையும் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. - [ஆவா குழுவைச் சேர்ந்த 16 பேர் கைது](https://minnal24.com/%e0%ae%86%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%af%81%e0%ae%b5%e0%af%88%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-16-%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0/): வவுனியா ஓமந்தை கோதண்டர் நொச்சிகுளம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த 16 பேரை ஓமந்தை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சந்தேக நபர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை ஆவா குழுவின் பதாதைகளை பயன்படுத்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபர்கள் தொடர்பான தீவிர விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். - [விபச்சார விடுதி சுற்றிவளைப்பு : 9 பெண்கள் உள்ளிட்ட 10 பேர் கைது](https://minnal24.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5-3/): கஹட்டகஸ்திகிலிய பிரதேசத்தில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரிகள் அநுராதபுரம் புதிய நகரப் பகுதியில் நடாத்திச் சென்ற இரண்டு விபச்சார விடுதிகளை சோதனை செய்து 10 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர். கொழும்பு, எப்பாவள, பொலன்னறுவை, மகாவுலன்குளம், நீர்கொழும்பு பகுதிகளில் வசிக்கும் 19 – 35 வயதுடைய 09 பெண்களும்  ஒரு ஆணும் இதில் அடங்குவதாக பொலிசார்  தெரிவிதத்னர். ஆயுர்வேத மசாஜ் மையங்களாக ஆயுர்வேத திணைக்களத்தில் பதிவு செய்து இந்த இடங்களில் விபச்சாரத்தை நடத்திச் செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது. காலை 08.00 மணி தொடக்கம் மாலை 05.00 மணி வரை சேவையில் ஈடுபடுவதாக கூறியே பதிவு செய்துள்ள போதும், அதிகாலை 04.00 மணியளவில் விடுதியை சுற்றிவளைக்கும் போதும் பெண்கள் தொழிலில் ஈடுபட்டு வந்ததாகவும் பொலிசார் தெரிவித்தனர். குறித்த இரண்டு நிலையங்களினதும் உரிமையாளர்களாக கைது செய்யப்பட்டுள்ள கஹட்டகஸ்திகிலிய, திகன் ஹல்மில்லாவ பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூத்த சகோதரிக்கு இரண்டு விடுதிகளும் […] - [நாளை நோன்புப் பெருநாள்](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%88-%e0%ae%a8%e0%af%8b%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4/): நாட்டின் எப்பாகத்திலும் ஷவ்வால் மாத தலைப்பிறை தென்படாததால் நாளை செவ்வாய்க்கிழமை நோன்புப் பெருநாள் தினம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஹிஜ்ரி 1443 இஸ்லாமிய வருடத்தின் ஷவ்வால் மாத தலைப்பிறை இலங்கையின் எப்பாகத்திலும் தென்படாமை காரணமாக, ‘ஈதுல் பித்ர்’ நோன்புப் பெருநாளை நாளை  செவ்வாய்க்கிழமை கொண்டாடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. புனித ஷவ்வால் மாத தலைப் பிறையினை தீர்மானிக்கும் மாநாடு  மஹ்ரிப் தொழுகையினை தொடர்ந்து, கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழுத் தலைவர் தலைமையில்  இடம்பெற்ற கூட்டத்திலேயே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   - [சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிலையத்தினால் உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு](https://minnal24.com/%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%ae/): -யாழ் நிருபர்- தற்காலத்தில் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் தமது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்கு மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். அந்தவகையில் சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிலையத்தினால், யாழ்ப்பாணம், நல்லூர், கோப்பாய், சண்டிலிப்பாய், சங்காணை, காரைநகர், ஊர்காவற்துறை, வேலணை, உடுவில், தெல்லிப்பழை, கரவெட்டி, பருத்தித்துறை மற்றும் சாவகச்சேரி ஆகிய பிரதேச செயலக பிரிவுகளைச் சேர்ந்த வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. பிரதேச செயலக பிரிவுகளை சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட மக்களுக்கு முதற்கட்டமாக உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டது - [நாளை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது அவநம்பிக்கை பிரேரணை](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%88-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81/): அரசாங்கத்திற்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை மற்றும் குற்றப் பிரேரணை ஆகியவற்றை நாளை நாடாளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். சுதந்திர சதுக்க வளாகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மே தின கூட்டத்தில் கலந்துகொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், இதன்மூலம் குறித்த பிரேரணைகளுக்கு ஆதரவாக மற்றும் எதிராக வாக்களித்தவர்கள் விபரம் வெளிக்கொண்டுவரப்படுவதுடன்,  இரு நிலைப்பாடுகளில் உள்ளவர்கள் குறித்த விபரங்களை அறிய முடியும் , எனவும் அவர் குறிப்பிட்டார் - [நாட்டை பொறுப்பேற்க நாம் தயார் - சஜித் பிரேமதாஸ தெரிவிப்பு](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b1%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%87%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d/): நாட்டை பொறுப்பேற்க தாம் தயாராகவுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். சுதந்திர சதுக்க வளாகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மே தின கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும், இதன்மூலம் நாட்டை அபிவிருத்தி பாதையில் இட்டு செல்ல தாம் வழி வகுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். - [நாட்டின் பல பிரதேசங்களில் மழையுடனான வானிலை](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b2-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2/): நாட்டில் மேல் மற்றும் தென் மாகாணங்களில் இன்று திங்கட்கிழமை மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, தென் மற்றும் மத்திய மாகாணங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். அதேவேளை, மேல் மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கு அதிக மழைவீழ்ச்சி பதிவாகும். அத்துடன், ஊவா, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகிறது. வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.   - [இராஜாங்க அமைச்சருக்கு செருப்பினை காண்பித்த அம்மாவின் கைகளுக்கு தங்க காப்பு போட வேண்டும் - சாணக்கியன்](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%9a%e0%af%86/): தென்னிலங்கையில் மக்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினை கண்டு அஞ்சிய போது, மட்டக்களப்பிலுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களே ஜனாதிபதிக்கு எதிரான போராட்டத்தினை ஆரம்பித்து வைத்தனர், என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், இன்று காலை மரண வீடு ஒன்றிற்கு சென்றிருந்த போது தாய் ஒருவரை சந்தித்து பேசினேன், அவர் எங்கே செல்கின்றீர்கள் என என்னிடம் கேட்டார், நான் இங்கு வருகை தரவுள்ளமையினை அவரிடம் சொன்னேன். அவர் என்னிடம் அங்கே என்ன பேசப்போகின்றீர்கள் என என்னிடம் கேட்டார், பின்னர் கோட்டா கோ கோம் என கூறாதீர்கள், கோட்டா கோ ஜெயில் என கூறுகள் என சொன்னார், அது உண்மைதான். கடந்த சில தினங்களுக்கு முன்னர் இராஜாங்க […] - [உழைப்பாளர் தினத்தில் நுவரெலியா மாநகர சபை ஊழியர்கள் போராட்டம்](https://minnal24.com/%e0%ae%89%e0%ae%b4%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%af%81%e0%ae%b5/): -நுவரெலியா நிருபர்- நுவரெலியா மாநகரசபையில் தொழில்புரியும் ஊழியர்களின் சங்கமான நுவரெலியா ஐக்கிய தொழிலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமை நுவரெலியா நகரில் நடைபெற்றது. நுவரெலியா கண்டி வீதியில் அமைந்துள்ள பழைய மாநகரசபை கட்டிடத்திற்கு அருகில் ஆர்ப்பாட்ட பேரணி ஆரம்பித்து கண்டி வீதி, புதியகடை வீதி வழியாக நுவரெலியா பிரதான தபாலகத்திற்கு அருகில் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, அங்கிருந்து எலிசபெத் வீதி, லோசன் வீதி, கண்டி வீதி வழியாக மீண்டும் மாநகரசபை கட்டிடத்திற்கு அருகில் சென்று கலைந்து சென்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநகர முதல்வர் சந்தனலால் கருணாரட்ன, மாநகரசபை உறுப்பினர்களான சுசந்த பலியவர்தன, என். பி. சீ.தயாநாயக்க மற்றும் நுவரெலியா பிரதேசசபை எதிர்கட்சி தலைவர் ருவான் சம்பத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.   - [தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மன்னார்-பள்ளிமுனை கிராம மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்](https://minnal24.com/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9-2/): -மன்னார் நிருபர்- சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மன்னார் பள்ளிமுனை கிராம மக்கள் பள்ளிமுனை கடற்கரைக்கு அருகில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணியளவில் அடையாள கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர் தொழிலாளர்களின் உரிமை மதிக்கப்பட வேண்டும், நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும், இலங்கையில் தீர்க்க முடியாமல் காணப்படும் இனப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு எட்டப்பட வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பள்ளிமுனை மக்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர். குறித்த போராட்டத்தில் பள்ளிமுனை பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் தலைவர் ஜாட்சன் பிகிறாடோ, மன்னார் நகர சபை உப தலைவர் ஜான்ஸன் உட்பட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஆட்சியாளர்களே அப்பாவி பொது மக்களின் வாழ்க்கையை நசுக்காதீர்கள், குழந்தைகளுக்கான பால்மா எங்கே?, தொழிலாளர்களின் பட்டினி நிலைக்கு பதில் சொல், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கு, விலை உயர்வு உனக்கு என்ன விளையாட்டு, கடற்றொழிலாளர்களுக்கு […] - [இ.தொ.கா தலைவரின் 'மே தின' வாழ்த்து செய்தி](https://minnal24.com/%e0%ae%87-%e0%ae%a4%e0%af%8a-%e0%ae%95%e0%ae%be-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%87-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4/): -யாழ் நிருபர்- உழைப்போரின் உன்னதத் திருநாளாம் மே தினத்தை உலகெங்கும் கொண்டாடிக் கொண்டிருக்கும் தொழிலாளர்கள் அனைவருக்கும் மே தின நல்வாழ்த்துக்கள், என இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் விடுத்துள்ள ‘மே தின’ வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். தொழிலாளர்களின் உழைப்பே உலகத்தின் மூலதனம் என்ற உண்மையை, பாட்டாளி வர்க்கம் இரத்தம் சிந்திப் பிரகடனம் செய்த நாள்தான் மே முதல் நாள் ஆகும். அதிகாலை முதல் அந்தி சாயும்வரை வேலை செய்ய வேண்டும் என்பதை எதிர்த்தும், எட்டு மணி நேர வேலையை வலியுறுத்தியும் எழுந்த போராட்டத்தின் வெற்றி தினமே மே தினம். இ.தொ.கா பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக முன்நின்று செயற்படுவதோடு, நலன்புரி விடயங்களையும் பெற்றுத்தரும். உழைப்புக்கேற்ற ஊதியமின்மை, கொத்தடிமைத் தனமான இன்னல்கள் ஆகியவற்றில் இருந்து தொழிலாளர்களுக்கு விடுதலை கிடைத்த இந்த மே தின நன்னாளில், சிறுவர் தொழிலாளர் முறையை ஒழித்து, உழைப்பவரை உயர்த்துவோம் என்ற உறுதியை மேற்கொண்டு, தினக்கூலி அடிப்படையில் பணிபுரிபவர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள் […] - [இ.தொ.கா. காலம் காலமாக மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வந்துள்ளது](https://minnal24.com/%e0%ae%87-%e0%ae%a4%e0%af%8a-%e0%ae%95%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95-%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3/): -யாழ் நிருபர்- மே தினம் தொழிலாளர்களுக்கு விமோசனத்தையும், விடிவையும் ஏற்படுத்தித் தரும் என்பதில் உறுதி கொண்டுள்ளதாக, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் விடுத்துள்ள மேதினச் செய்தியில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தனது செய்தியில் தெரிவித்துள்ளதாவது, உலகமெங்குமுள்ள தொழிலாளர்களால் கொண்டாடப்படும் மே தினத்தை இம்முறை மிகுந்த நம்பிக்கையோடு வரவேற்கின்றோம். மேதினம் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள், வேலை நேர நிர்ணயம் என இன்னும் பல உரிமைகளை வென்றெடுத்த வெற்றி தினமாகும். இன்றைய சூழலில் மலையக பெருந்தோட்ட மக்கள் பொருளாதார நெருக்கடிகளாலும், விலைவாசி உயர்வினாலும் பல்வேறு இடர்பாடுகளை சொல்ல முடியாத அளவிற்கு இன்று எதிர்நோக்கி வருகின்றார்கள். எனவே, இந்த மேதினத்தை தொழிலாளர் வர்க்க சிந்தனையோடும், ஒருமித்த குரலாகவும் எமது பலத்தை எடுத்துக் காட்டுவோம். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் காலம் காலமாக மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வந்துள்ளதுடன், சமகால தேவைகளுக்கேற்பவும் சேவையாற்றி வந்துள்ளது. எனவே, அனைத்து […] - [சோறும் தேவை, சுதந்தரமும் தேவை என சொன்னதே எமது அரசியல் - டக்ளஸ் தேவானந்தா](https://minnal24.com/%e0%ae%9a%e0%af%8b%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%af%88-%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/): -யாழ் நிருபர்- சகல இன மத மக்களும் சமத்துவம் என்ற உரிமைகள் வெல்லவும், சம கால இடர்கள் நீங்கி சகல மக்களும் மகிழ்வுற்று வாழ, தமிழர் தேசம் தலை நிமிர, உழைக்கும் மக்களின் வாழ்வு விடிய, உழைப்பவர் தினத்தில் உறுதி கொள்வோம், என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும், கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தனது மேதின செய்தியில் தெரிவித்துள்ளார். மேலும் அந்த மேதின செய்தியில், இன்று உழைப்பவர் தினம், உழைக்கும் மக்கள் உரிமை கேட்டெழுந்து தமதுரிமை பெற்று தலை நிமிர்ந்த நாள்.,உலக உழைக்கும் மக்களே, ஒடுக்கப்படும் தேச மக்களே, ஒன்றுபடுங்கள் என்ற அறை கூவலை ஏற்று, தமிழர் தேசத்தின் விடியலுக்காகவும் உழைக்கும் மக்களின் உரிமைக்காகவும் உறுதி கொண்டு அன்றே எழுந்து நின்றவர்கள் நாம். புலித் தலைமையின் தனித் nதலைமை வெறியாட்டத்தில் எமது நீதியான உரிமை போராட்டம் திசை மாறி அழிவு யுத்தமாக மாறிச்சென்ற அவல நிலையில், இலங்கை […] - [சிறுநீரக மற்றும் இருதய சத்திர சிகிச்சைக்கான உதவித்தொகை வழங்கி வைப்பு](https://minnal24.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%ae%95-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%ae%af-%e0%ae%9a/): -கல்முனை நிருபர்- சாய்ந்தமருது அல்- அமானா நற்பணி மன்றத்தினால் சிறுநீரக சத்திர சிகிச்சை, இருதய சத்திர சிகிச்சை செய்ய பணத்தேவை உடையவர்களுக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்வும் அமைப்பின் வருடாந்த பொதுக்கூட்டமும், இப்தார் வைபகமும் அமானா நற்பணி மன்றத் தலைவர் ஏ.எல். பரீட்  தலைமையில் அல்- அமானா நற்பணி மன்ற சாய்ந்தமருது காரியாலயத்தில் நேற்று சனிக்கிழமை மாலை நடைபெற்றது. சிறுநீரக சத்திர சிகிச்சை, இருதய சத்திர சிகிச்சை செய்ய பணத்தேவை உடையவர்கள், பெருநாளை கொண்டாட வசதியற்ற ஏழைகள் மற்றும் அங்கவீனர்கள், அனாதைகள், விதவைகள், வாழ்வாதாரம் இழந்தோர் எனப்பலருக்கும் பெருந்தொகை பண உதவிகளை அல்- அமானா நற்பணி மன்றத்தினர் வழங்கி வைத்தனர். இந்நிகழ்வில், உலமாக்கள், சாய்ந்தமருது பிரதேச செயலக அதிகாரிகள், முன்னாள் மாநகர சபை உறுப்பினர்கள், ஆசிரியர்கள், கல்விமான்கள், பிராந்திய சமூக சேவை அமைப்புக்களின் பிரமுகர்கள், சாய்ந்தமருது அல்- அமானா நற்பணி மன்றத்தின் நிர்வாக உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். இப்தார் விசேட மார்க்க […] - [கல்முனை கிரீன் பீல்ட் மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%88-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%af%80%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%80%e0%ae%b2%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%95/): -கல்முனை நிருபர்- கல்முனை கிரீன் பீல்ட் வீட்டுத்திட்டத்தில் வசிக்கும் கணவனை இழந்த விதவைகளுக்கான உலர் உணவுப்பொதிகள் வழங்கும் முகமாக கிரீன் பீல்ட் முஹைதீன் மஸ்ஜித் பள்ளிவாசல் நிருவாகத்தினரால் மிகவும் தெளிவாக அடையாளப்படுத்தப்பட்ட கணவனை இழந்த 100 பயனாளிகளுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு கல்முனை மாநகர சபை பிரதி முதல்வரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேஷன் அமைப்பின் ஸ்தாபகத் தலைவருமான ரஹ்மத் மன்சூர் தலைமையில் கிரீன் பீல்ட் கமு/கமு/ரோயல் வித்தியாலயத்தில் இடம்பெற்றது. இலங்கையுடனான இந்தியாவின் நீண்டகால உறவின் அடிப்படையில் இந்திய அரசாங்கத்தின் உலருணவு வழங்கும் திட்டத்தின் கீழ் இந்திய அரசின் முழுமையான பங்களிப்புடன் இந்திய உயஸ்தானிகரின் ஒத்துழைப்புடன் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு கல்முனை மாநகர சபை பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர் வேண்டுகோளுக்கிணங்க இலங்கைக்கான இரண்டாவது இந்திய உயர்ஸ்தானிகரான வீ.அஷோக் குமார் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையில், இலங்கை இந்திய நற்புறவானது இன்று நேற்றானது அல்ல பல தசாப்தங்களாக நீடித்துக்கொண்டிருக்கக் கூடியதென்றும், […] - [கிளிநொச்சியில் தமிழ்த் தேசிய மேநாள் நிகழ்வுகள்](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8a%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4/): -கிளிநொச்சி நிருபர்- தமிழ்த் தேசிய மேநாள் நிகழ்வுகள் கிளிநொச்சியில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் ஆரம்பமானது. கிளிநொச்சி கரடிபோக்கு சந்தியில் ஆரம்பிக்கப்பட்ட மேதின பேரணியானது ஏ9 வீதி ஊடாக கிளிநொச்சி டிப்போ சந்திவரை சென்று அங்கு உள்ள பசுமை பூங்காவில் மேதின நிகழ்வுகள் இடம்பெறுகின்றது. குறித்த பேரணி ஆரம்ப நிகழ்வில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம் ஏ சுமந்திரன், எஸ் சிறிதரன், செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான மா.வை.சேனாதிராஜா, சரவணபவன் ஊள்ளிட்டடோர் பேரணியை ஆரம்பித்து வைத்தனர். வட மாகாணம் தழுவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த மேதின நிகழ்வில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் கலந்து கொண்டுள்ளனர். இதன்போது அரசியல் கைதிகளின் விடுதலை, விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்கள் உள்ளிட்ட கருத்துக்களை உள்ளடக்கிய வாகனங்களும் குறித்த பேரணியில் பங்கு கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதுஇ இதன்போது ஜனாதிபதி, பிரதமர், பசில் ராஜபக்ச,.சமல் ராஜபக்ச மற்றம் விவசாய அமைச்சர் ஆகியோர் விவசாயிகளின் […] - [ஜனாதிபதி பதவி விலகுவதற்கான வாய்ப்புக்கள் அரிதாகவே உள்ளது - முன்னாள் பிரதமர் தெரிவிப்பு](https://minnal24.com/%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%ae%a4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95/): உலகளாவிய உணவு நெருக்கடி குறித்து உலக வங்கி எச்சரித்துள்ள நிலையில் இது 2024 வரை நீடிக்கும் நிலையில் இது இலங்கையும் பாதிக்கும் என , எச்சரித்துள்ளதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். “நாட்டில் எரிபொருள் மற்றும் உர நெருக்கடி நிலவுகிறது. வாழ்க்கைச் செலவு உயர்ந்துள்ளது மற்றும் உலக வங்கி 2024 வரை உணவு நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இலங்கை முன்னுரிமை அளிக்க வேண்டும்” என்று கொழும்பு புதிய நகர சபை மண்டபத்தில் ஜாதிக சேவக சங்கமயா (ஜேஎஸ்எஸ்) ஏற்பாடு செய்திருந்த மே தினக் கூட்டத்தில் ரனில் விக்கிரமசிங்க கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்துள்ளார். இக்கூட்டத்தில் ரனில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளதாவது இலங்கை சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் அமெரிக்காவுடனான உறவுகளை மீள ஏற்படுத்துவதே நாட்டின் முன்னுரிமை என தெரிவித்துள்ளார். இந்த பிரச்சினைகளை சமாளிக்க ஏனைய நாடுகளின் உதவியையும் நாட வேண்டும். பாராளுமன்றம் அரசியலமைப்பின் கீழ் தனக்கு […] - [ஆயுதங்களுடன் மூவர் கைது](https://minnal24.com/%e0%ae%86%e0%ae%af%e0%af%81%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%82%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%af%88%e0%ae%a4%e0%af%81/): ரங்கல பொலிஸ் பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூவரை மீகொட பிரதேசத்தில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபர்களிடம் இருந்து துப்பாக்கிகள் மற்றும் ரவைகள் என்பன கைப்பற்றப்படடுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைப்பற்றப்பட்ட ஆயுதங்களில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவோல்வர், 12 ரவைகள் 09 மி.மீ மற்றும் 11 ரவைகள் 5.26 மி.மீ துப்பாக்கிக்குரியன என்பன மீட்கப்பட்டுள்ளன. சந்தேகநபர்கள் 22 முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள் இவர்கள் ஓவிட்டகம மற்றும் யடபத்த பிரதேசங்களில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். - [ஆறு மாவட்டங்களுக்கு அபாய கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது](https://minnal24.com/%e0%ae%86%e0%ae%b1%e0%af%81-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%85%e0%ae%aa%e0%ae%be%e0%ae%af/): வானிலை ஆய்வு மையத்தின் இயற்கை அபாயங்கள் முன் எச்சரிக்கை மையத்தால் அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக (பூமத்திய ரேகை – 06 N ) மற்றும் (70N – 90N) இடைப்பட்ட கடற்பரப்பில் காற்றின் வேகம் (40-50) கிலோமீற்றர் வேகமாக இருக்கும் இது 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கலாம். மேலும் கடற்பரப்புகளுக்கு மேல் பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழை மற்றும் கடல் கொந்தளிப்பையும் எதிர்பார்க்கலாம். - [ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடாத்திய முகாமையாளர் உட்பட மூவர் கைது](https://minnal24.com/%e0%ae%8a%e0%ae%9f%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%af%8d/): -யாழ் நிருபர்- வவுனியாவில் ஊடகவியலாளர்கள் மீது நடாத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியாவில் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் எரிபொருள் நிரப்புநிலைய முகாமையாளர் உட்பட மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், நேற்று சனிக்கிழமை மாலை வவுனியா வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக வவுனியாவை சேர்ந்த இரு ஊடகவியலாளர்கள் சென்றுள்ளனர். இதன்போது அதிகமான பொதுமக்கள் வரிசையில் நின்றமையால் அந்த நெரிசலை கட்டுப்படுத்துவதற்கு ஊடகவியலாளர்களால் சில ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இதனையடுத்து, எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடமையில் இருந்த ஊழியர்களுக்கும் அவர்களுக்கும் இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டது. கருத்து முரண்பாடு முற்றிய நிலையில் தாம் ஊடகவியலாளர்கள் என அவர்களிடம் அறிமுகம் செய்துவைத்தனர். அதனை பொருட்படுத்தாத ஊழியர்கள் ‘கடந்தமுறையும் எமது எரிபொருள் நிரப்புநிலையம் தொடர்பான செய்தியினை நீதானே பிரசுரித்தாய்’ என கூறி கடுமையாக தாக்கியுள்ளனர். குறித்த சம்பவத்தில் […] - [ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷ விடுத்துள்ள மேதின வாழ்த்துச் செய்தி](https://minnal24.com/%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%aa%e0%ae%af-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%aa%e0%ae%95-5/): உலகவாழ் உழைக்கும் சமூகம் மிகப்பெரும் சவாலை எதிர்கொள்ளும் நேரத்தில், இவ்வருட சர்வதேச தொழிலாளர் தினம் நினைவுகூறப்படுகின்றது. நமது நாட்டில் கடந்த மூன்று வருடங்கள் பாரிய சவாலுக்கு உள்ளாகியதும் தொழிலாளர் வர்க்கமே ஆகும். அத்தனை சவால்களையும் எதிர்கொண்டு விடாமுயற்சியுடன் தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்த உறுதி பூண்டவர்களும் அவர்கள்தான் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்துள்ள மேதின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அவர் விடுத்துள்ள செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, நாளுக்கு நாள் அவர்கள் மீதான அழுத்தங்கள் தற்போது அதிகமாக உள்ளன. அதிலிருந்து மக்களை மீட்டெடுப்பதற்கும், நிலவுகின்ற சிக்கலான நிலைமையினைக் கட்டுப்படுத்துவதற்கும் அரசாங்கம் என்ற வகையில் பல்வேறு அணுகுமுறைகளை மேற்கொண்டு வருகின்றது. அந்நியச் செலாவணி இழப்பானது பல பிரச்சினைகளை உருவாக்கியுள்ளது. அவை அனைத்தையும் முகாமைத்துவம் செய்வதுதான் தற்போதைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழியாகும். ஏற்பட்டுள்ள சிக்கலான நிலைமை யாரால் ஏற்படுத்தப்பட்டது என்பதைப் பின்தொடர்வதற்குப் பதிலாக, பொதுமக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பதில் கவனம் […] - [சிங்கப்பூரில் புதிய வகை ஒமிக்ரோன்](https://minnal24.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%95%e0%af%88/): ஒமிக்ரோன் வகை கொரோனாவின் புதிய துணை ரகத் தொற்று, சிங்கப்பூரில் இருவரிடம் கண்டறியப்பட்டுள்ளது. புதிய வகை கொரோனா வைரஸை கண்காணிக்கும் சுகாதாரத் துறை அமைச்சக திட்டத்தின் கீழ், இருவருக்கு பிஏ.2.12.1 ரக ஒமிக்ரொன் வகை கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த இருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்ட உடனேயே, அவா்கள் தனிமைப்படுத்தப்பட்டனா். பிஏ.2.12.1 துணை ரகம் கவலைக்குரியது என்றோ, கண்காணிக்கப்படவேண்டியது என்றோ உலக சுகாதார அமைப்பு இதுவரை அறிவிக்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா். தீவிர தொற்றும் தன்மை கொண்ட ஒமிக்ரொன் ரகமான பிஏ.2-வின் துணை ரகமான பிஏ.2.12.1, மாா்ச் மாத மத்தியில் உலகம் முழுவதும் அதிக பேருக்கு பரவியது. - [வெடிகுண்டுடன் விமான நிலையத்திற்கு வந்த தம்பதி](https://minnal24.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%81%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88/): இஸ்ரேலில் வெடிகுண்டுடன் விமான நிலையத்திற்கு வந்த அமெரிக்க தம்பதியை கண்டு சக பயணிகள் அலயறிடித்துக் கொண்டு ஓடும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. கோலன் பகுதிக்கு சுற்றுலா சென்ற அமெரிக்காவை சேர்ந்த தம்பதி, கீழே கிடந்த ஒரு பொருளை எடுத்து, தங்கள் நாட்டுக்கு கொண்டு செல்ல முயன்றுள்ளது. விமான நிலையத்திற்கு அப்பொருளை தம்பதி கொண்டு சென்ற நிலையில், பாதுகாப்பு சோதனையில் அது வெடிக்காத குண்டு என கண்டுபிடிக்கப்பட்டது. இதைக் கண்ட சக பயணிகள் நிலையத்திற்குள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து பல்வேறு கட்ட விசாரணைக்கு பின் தம்பதி வெளியேற அனுமதிக்கப்பட்டனர். தப்பிக்கும் முயற்சியில் கீழே விழுந்து காயமடைந்த சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். - [23 ஆவது நாளாகவும் தொடரும் காலிமுகத்திடல் போராட்டம்](https://minnal24.com/23-%e0%ae%86%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%ae%be%e0%ae%95%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95/): ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி கொழும்பு – காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை 23 ஆவது நாளாகவும் தொடர்கிறது. சர்வதேச தொழிலாளர் தினமான இன்று தொழிலாளர்களுக்கான உரிமைகளை வலியுறுத்தி கறுப்புக் கொடியேற்றி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. நாட்டில் ஜனநாயகம் மற்றும் மக்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து , காலி முகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள எஸ்.டபிள்யு.ஆர்.டீ.பண்டாரநாயக்காவின் உருவச்சிலையின் கண்கள் கறுப்பு நிறத்துணியால் கட்டப்பட்டுள்ளன. - [10 வயது சிறுவனை பாலியல் துஸ்பிரயோகம் செய்த 32 வயது இளைஞன் கைது](https://minnal24.com/10-%e0%ae%b5%e0%ae%af%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%a9%e0%af%88-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%b8/): -கிளிநொச்சி நிருபர்- யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடாரப்பு பகுதியில் பத்து வயது சிறுவன் ஒருவனை பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 32 வயது இளைஞன் ஒருவன் மருதங்கேணி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மாமுனை கிராமத்தை சேர்ந்த 32 வயதுடைய இளைஞன் ஒருவன் குறித்த பத்து வயது சிறுவனை பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளதாகவும், இதனால் பாதிக்கப்பட்ட சிறுவன் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந் நிலையில், குறித்த மாமுனையை சேர்ந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மருதங்கேணி பொலிஸாரால் கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. - [கடற்தொழிலாளர் சங்கத் தலைவரின் படகு மீது கடற்படையினரின் படகு மோதி விபத்து](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b1%e0%af%8d%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88/): -யாழ் நிருபர்- வடமராட்சி கடற்தொழிலாளர் சங்கத் தலைவர் ஒருவரின் படகு மீது கடற்படையினரின் படகு மோதி விபத்து ஏற்படுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் வடமராட்சி கடற்பரப்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை  நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவத்தில் அந்த படகில் தொழில் செய்த கடற்தொழிலாளிகள் இருவர் தெய்வாதீனமாக உயிர் தப்பினர். இருப்பினும், சங்கத் தலைவரின் படகு மற்றும் இயந்திரம் மீளப் பயன்படுத்த முடியாதவாறு சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. - [மின்சார தடை இல்லை](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0-%e0%ae%a4%e0%ae%9f%e0%af%88-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88/): இன்றைய தினம் மற்றும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஆகிய தினங்களிலேயே மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படமாட்டாதென தெரிவிக்கப்பட்டுள்ளது. மே தினம் மற்றும் நோன்பு பெருநாள் ஆகியவற்றை முன்னிட்டு இவ்விரு நாட்களும் மின்தடை ஏற்படாது என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இவ்விரு தினங்களை தவிர்த்து இவ்வாரத்தில் உள்ள ஏனைய நாட்களில் மூன்று மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படும் என பொது பயன்பாட்டு ஆணைக்குழு மேலும் அறிவித்துள்ளது. - [லண்டனில் 'கோட்டாகோகம'](https://minnal24.com/%e0%ae%b2%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%95%e0%af%8b%e0%ae%95%e0%ae%ae/): இங்கிலாந்தில் உள்ள இலங்கையர்கள் லண்டன் பாராளுமன்றத்துக்கு முன்பாக ‘கோட்டாகோகம’ கிளையை அமைத்துள்ளனர். குறித்த பகுதியில் இருந்து அரசுக்கு எதிராகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகக் கோரியும் பலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கொழும்பில் இடம்பெறும் தொடர் போராட்டத்துக்கு ஆதரவளிக்குமுகமாகவே இவ்வாறு குரல் கொடுப்பதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர். - [காலிமுகத்திடலில் “கோட்டகோகாம" தீயிட்ட கொளுத்தப்பட்டுள்ளது – பதற்றம்](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f/): காலிமுகத்திடலுக்கு அண்மையில் அமைக்கப்பட்டிருந்த “கோட்டகோகாம” அரசு ஆதரவாளர்களால் தாக்கப்பட்டு தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் பாரிய பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இரு குழுக்களுக்கும் இடையில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் மோதலின் போது இதுவரை 10 திற்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். - [மக்களுக்காக எந்த தியாகத்தையும் செய்யத் தயார்-பிரதமர் மஹிந்த](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%95-%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d/): மக்களுக்காக எந்த தியாகத்தையும் செய்யத் தயார் என இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று திங்கட்கிழமை தெரிவித்தார். அலரிமாளிகையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளூராட்சி உறுப்பினர்கள் மன்றம், ராஜபக்சவை பிரதமர் பதவியில் இருந்து விலகக் கூடாது என வலியுறுத்தி, நூற்றுக்கணக்கானவர்கள் மஹிந்த ராஜபக்ஷ ஆதரவாளர்கள் இன்று அலரி மாளிகைக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில் மக்களுக்காக எந்தத் தியாகத்தையும் செய்யத் தயார் என பிரதமர் அறிவித்துள்ளமையானது இன்று இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தொடரையடுத்து முக்கிய முடிவுகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. - [ரணில் விடுத்துள்ள எச்சரிக்கை](https://minnal24.com/%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3-%e0%ae%8e%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%bf/): அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தி, “கோட்டகோகம” போராட்டத் தளத்தை அரசாங்கம் சீர்குலைக்கும் பட்சத்தில், அனைத்துக் கலந்துரையாடல்களிலிருந்தும் விலகவுள்ளதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது அறிவித்துள்ளார். மேலும் போராட்டத் தளத்தை சீர்குலைக்கும் நிலையில் தற்போதைய பொருளாதார , அரசியல் நெருக்கடியைத் தீர்ப்பதற்கு அரசாங்கத்திற்கு உதவுவதை நிறுத்துவதாகவும் அரசாங்கக் கட்சித் தலைவர்களுக்கு முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். - [வட மாகாண மக்களுக்கு யாழ்.போதனா வைத்தியசாலை விடுத்துள்ள அவசர எச்சரிக்கை](https://minnal24.com/%e0%ae%b5%e0%ae%9f-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d/): விலங்கு விசர் நோய்த் தடுப்பூசி மருந்துகளான ஏ.ஆர்.வி மற்றும் ஏ.ஆர்.எஸ் என்பவை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஏ.ஆர்.வி மருந்துகள் வடக்கு மாகாண மருத்துவமனைகளில் குறிப்பிட்டளவு உள்ள போதும் ஏ.ஆர்.எஸ் தடுப்பூசி மருந்துகள் இல்லை என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். “நாய்களைக் கண்டால் விலகிச் செல்லுங்கள். நாய்க்கடிக்கு உள்ளாகினால் விலங்கு விசர் நோய் தடுப்பூசி மருந்து தட்டுப்பாட்டினால் உயிர்களைக் காப்பாற்ற முடியாது” என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நாய்க்கடிக்கு உள்ளாகியவர்களுக்கு ஏ.ஆர்.பி மற்றும் ஏ.ஆர்.எஸ் தடுப்பூசி மருந்துகள் வழங்கப்படாவிடின் நீர்வெறுப்பு நோய்க்கு உள்ளாகி உயிரிழப்பு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. - [பிரதமரின் ஆதரவாளர்கள் அலரிமாளிகைக்கு முன் ஆர்ப்பாட்டம்](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b2/): பிரதமர் மகிந்த ராஜபக்சவை பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்ய வேண்டாம் என வலியுறுத்தி கொழும்பில் அலரிமாளிகைக்கு முன்பாக அவரது ஆதரவாளர்கள் இன்று திங்கட்கிழமை ஒன்றுகூடி ஆர்ப்பாட்த்தில் ஈடுபட்டுள்ளனர். பிரதமரின் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் அலரிமாளிகைக்கு சென்று பிரதமரை பதவி விலக வேண்டாம் என வலியுறுத்தினர். இதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோரி, அலரிமாளிகைக்கு எதிரே மைனகோகம ஆர்ப்பாட்டமும் இடம்பெற்று வருகின்றது. - [சிறையில் உள்ள 12 மீனவர்களை விடுதலை செய்ய கோரி ஆர்ப்பாட்டம்](https://minnal24.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3-12-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88/): -மன்னார் நிருபர்- இலங்கை கடற்பரப்பில் கடற்படையால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் உள்ள 12 மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும், இலங்கை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட 4 மீனவர்களை உடனடியாக தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்க கோரி தங்கச்சிமடத்தில் மீனவர்கள் இன்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தியும், கடந்த 2019 ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டு  இலங்கை வசமுள்ள விசைப்படகுகளை மீட்டுத்தரக் கோரியும்,  விடுதலை செய்யப்பட்டு நாடு திரும்பாத மண்டபத்தைச் சேர்ந்த 4 மீனவர்களை மீட்கக் கோரி மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி தங்கச்சி மடத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ராமேஸ்வரம் மீனவர்கள் ஈடுபட்டனர். இதில் மண்டபம், ராமேஸ்வரம், பாம்பன் உள்ளிட்ட பகுதியில் இருந்து ஏராளமான மீனவர்கள் கலந்து கொண்டனர். - [யாழ்.போதனா வைத்தியசாலையில் கவனயீர்ப்பு போராட்டம்](https://minnal24.com/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%b5%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%af%88%e0%ae%af-4/): -யாழ் நிருபர்- வடக்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மற்றும் யாழ். போதனா வைத்தியசாலையின் தாதியர்கள் மற்றும் ஊழியர்கள் இணைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உள்ளே இன்று திங்கட்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை காலை 9.00 மணிமுதல் மேற்கொண்டனர். இதன்போது, ‘ஊடக அடக்குமுறை, தேசிய கொள்கைகளை அழித்து ஆக்கிரமிப்பில் ஆட்சி செய்கின்ற அரசே மக்கள் அபிப்பிராயத்திற்கு தலை வணங்கவும், சுகாதாரத் துறையை தனியார் மயப்படுத்துவதை தடுத்து நிறுத்துவோம், அரசின் மோசமான நிதி நிர்வாகம் காரணமாக அத்தியவசியமான மருந்துகள் இல்லாமல் சுகாதார கட்டமைப்பு சீரழிந்து வருகிறது மக்களின் உயிர்கள் ஆபத்தில் உள்ளன, மின்சாரம் இல்லை, மருந்து இல்லை பொறுப்பேற்க எந்த ஒரு அரசும் இல்லை, இலவச சுகாதார மையத்தில் அனைவரது உயிர்கள் ஆபத்தில் உள்ளன, அனைவருக்கும் ஒரே சட்டத்தை நிலைநாட்டவும், முறையற்ற நிதி மேலாண்மை நாம் மக்களின் உயிர்களை தியாகம் செய்கின்றோமா, பணவீக்கத்திற்கு சமமான வருமானத்தை உறுதி செய்வோம், அரசின் அடக்குமுறையை இல்லாது […] - [முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூரின் வாழ்க்கை குறிப்புக்கள் அடங்கிய நூல் வெளியீடு](https://minnal24.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%8f-%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae/): -கல்முனை நிருபர்- டாக்டர் எஸ்.நளீமுடீன் எழுதிய ‘அரசியல் அறம் A.R.M’ கவிதை நூல் வெளியீடும் ஏ.ஆர்.மன்சூர் பௌண்டேஷனின் இணையத்தள அங்குரார்ப்பண நிகழ்வும் கடந்த வெள்ளிக்கிழமை ஏ.ஆர்.மன்சூர் பௌண்டேஷனின் ஏற்பாட்டில், அதன் ஸ்தாபகத் தலைவி சட்டத்தரணி மர்யம் மன்சூர் நளீமுடீன் தலைமையில் சாய்ந்தமருது லீ மெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தமிழ் மொழித்துறை பேராசிரியர் ரமீஸ் அப்துல்லாஹ் நூல் ஆய்வுரை வழங்கியதுடன், அறிஞர் சித்திலெப்பை ஆய்வு மன்றத் தலைவர் சட்டத்தரணி மர்சூம் மௌலானா மற்றும் இஸ்லாமிய ஆசிரியர் சங்க தலைவரும் எழுத்தாளருமான ஆசிரியர் ஜெஸ்மி எம்.மூஸா, கவிதாயினி டாக்டர் புஸ்பலதா லோகநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். நூலின் முதற்பிரதியை மறைந்த முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.எம். மன்சூர் அவர்களின் பாரியார் சுஹாரா மன்சூர் பெற்றுக் கொண்டார். சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக், கல்முனை வடக்கு உப பிரதேச செயலாளர் டி.ஜெ அதிசயராஜ், சாய்ந்தமருது ஜும்மாப் பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள், அரசியல் […] - [அத்தியாவசிய சேவைக்காக மாத்திரம் எரிவாயு விநியோகம்](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%9a%e0%af%87%e0%ae%b5%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%95-%e0%ae%ae%e0%ae%be/): விநியோகத்திற்கு தேவையான எரிவாயு கையிருப்பில் இல்லை என்பதுடன், அத்தியாவசிய சேவைக்காக மாத்திரம் எரிவாயு விநியோகிக்கப்படும், என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, வீட்டு உபயோகத்திற்கான எல்.பி எரிவாயு இல்லை எனவும், தொழிற்சாலை நோக்கங்களுக்காக மட்டுமே எரிவாயு விநியோகிக்ப்படும். எனவே பொதுமக்கள் வரிசையில் நிற்க வேண்டாம், என லிட்ரோ நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார். - [நாட்டின் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b2-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%9f/): நாட்டின பல பகுதிகளில் மழையுடனான வானிலை காணப்படும், என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் அவ்வப்போது 50 மில்லிமீற்றருக்கு அதிக மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது. வட மாகாணத்திலும் அநுராதபுரம் மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகிறது. அத்துடன், ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடளாவிய ரீதியில், குறிப்பாக மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் காற்று அவ்வப்போது 40 – 50 கிலோமீற்றர் வேகத்தில் அதிகரித்து வீசக்கூடும், என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. - [காலிமுகத்திடல் போராட்டத்துக்கு இன்றுடன் ஒரு மாதம்](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-2/): கொழும்பு காலிமுகத்திடலில் கடந்த ஏப்ரல் மாதம் 9ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட அரசாங்கத்துக்கு எதிரான இளைஞர் தன்னெழுச்சிப் போராட்டம் இரவு -பகல் பாராது தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஆர்ப்பாட்டக்காரர்கள் காலிமுகத்திடலின் இரு பகுதிகளிலும் கூடாரங்களை அமைத்து அதில் இரவு பொழுதை கழிப்பதுடன் அவர்களுக்கான உணவு உள்ளிட்ட உதவிகளை தன்னார்வ அமைப்புகள் வழங்கி வருகின்றன. ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக ஒன்றுகூடி தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். அவசரகால சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ள நிலையில் அதனையும் பொருட்படுத்தாது கொழும்பு காலிமுகத்திடல் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான ஒட்டுமொத்த அரசாங்கமும் வீட்டுக்குச் செல்ல வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப் பட்டு வருகின்றது. - [சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்தை யோசனையை பரிசீலிப்பேன்- ஜனாதிபதி](https://minnal24.com/%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9/): தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி நிலையை தீர்ப்பதற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்துள்ள யோசனை திட்டங்களை, ஆராய்ந்து அரசியலமைப்பிற்கு இணங்க செயற்படுவது குறித்து தாம் பரிசீலிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினருக்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையில்   ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே, ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய சூழ்நிலையின் அடிப்படையில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினர் 13 முக்கிய யோசனைகளை அதன் நிறைவேற்று சபையில் முன்வைத்து ஏகமனதாக நிறைவேற்றியது. இந்த யோசனைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதியுடனான சந்திப்பில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டுள்ளது. குறித்த யோசனைகளை ஆராய்ந்து அரசியலமைப்புக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.   - [இன்று முதல் சேவைகள் வழமைக்குத் திரும்பும்](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%af%87%e0%ae%b5%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%ae%e0%af%88/): குடிவரவு , குடியகல்வு திணைக்களத்தின் சேவைகள் வழமைப்போல இன்று திங்கட்கிழமை முதல்  ஆரம்பிக்கப்படும் என திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கணனி அமைப்பில் ஏற்பட்டுள்ள அவசர திருத்தப்பணிகள் காரணமாக இடைநிறுத்தப்பட்ட கடவுச்சீட்டு வழங்கும் (ஒரு நாள் சேவை தவிர்ந்த) வழமையான சேவையை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.   - [இன்று மின்சாரம் துண்டிக்கப்படும் நேரங்கள்](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d/): இன்று திங்கட்கிழமை நாட்டில் 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின் துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதற்கமைய, A முதல் L மற்றும் P முதல் A வரையான வலயங்களிலும், காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணிவரையான காலப்பகுதியில் 2 மணிநேரமும், மாலை 5.00 மணிமுதல் இரவு 9.00 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணி நேரமும் 20 நிமிடங்களும் மின் துண்டிக்கப்படவுள்ளது. மேலும், M,N,O,X,Y,Z ஆகிய வலயங்களில் அதிகாலை 5 மணிமுதல் காலை 8 மணிவரையான காலப்பகுதியில் 3 மணித்தியாலங்கள் மின் துண்டிக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மின் துண்டிப்பு நேரம் தொடர்பான அட்டவணை - [வெள்ளை மாளிகை பேச்சாளராக கறுப்பினத்தவர்](https://minnal24.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95/): வெள்ளை மாளிகை பேச்சாளராக முதல் முறை கறுப்பினத்தவர் மற்றும் வெளிப்படையாக தம்மை ஓரினச் சேர்க்கையாளர் என்று அறிவித்துக் கொண்ட ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு நியமிக்கப்பட்டிருக்கும் 44 வயதான கரீன் ஜீன் பீர், அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் தேர்வானது தொடக்கம் அவரது நிர்வாகத்தின் முதன்மை பிரதி ஊடக செயலாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் தற்போது வெள்ளை மாளிகை பேச்சாளராக இருக்கும் 43 வயது ஜேன் சக்கி அடுத்த வாரம் தமது பணியை நிறைவு செய்யவிருக்கும் நிலையிலேயே அந்த இடத்திற்கு ஜீன் பீர் நியமிக்கப்பட்டுள்ளார்.   - [எரிபொருள் விநியோகம் நாளை முதல் புதிய முறைமை](https://minnal24.com/%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%af%e0%af%8b%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%88/): எரிபொருள் விநியோகத்தை நாளை திங்கட்கிழமை முதல் மட்டுப்படுத்துவதாக லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கமைய, மோட்டார் சைக்கிள்: ரூ. 2,000, முச்சக்கர வண்டி: ரூ. 3,000, கார், வேன், ஜீப்: ரூ. 8,000 என்றவாறு விநியோகிக்கப்படவுள்ளது. பஸ், லொறி, வர்த்தக வாகனங்களுக்கு இது பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.   - [காரொன்று விபத்துக்குள்ளானதில் ஐந்து மாத குழந்தை பலி](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3/): வலப்பனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், காரொன்று பாதையை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஐந்து மாத குழந்தையொன்று சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக வலப்பனை பொலிஸார் தெரிவித்தனர். இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணியளவில் கீர்த்தி பண்டாரபுர பொலிஸ் சோதனைச் சாவடிக்கு அருகில் இடம்பெற்ற இவ்விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மேலும் ஏழுவர் காயமடைந்து வலப்பனை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கண்டியிலிருந்து அதிகாரகமை ஊடாக பதுளை நோக்கி, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எட்டு பேருடன் பயணித்த காரே விபத்துக்குள்ளாகியுள்ளதாகத் தெரியவருகிறது. வேகக் கட்டுப்பாட்டை இழந்தமையாலேயே இச்சம்பவம் இடம்பெற்றதாகத் தெரிவித்த வலப்பனை போக்குவரத்து பொலிஸார மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.   - [இலஞ்சம் பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் மூவர் இடமாற்றம்](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a4%e0%af%8d-2/): இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஊர்காவற்துறை நெடுந்தீவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள். யாழ். கல்வியங்காட்டுப்பகுதியில் டிப்பர் ஒன்றினை மறித்து 10000 ரூபா பணம் பெற்றமை தொடர்பில் பாதிக்கப்பட்ட நபர் யாழ் . மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த லியனகே விடம் நேரடியாக முறைப்பாடு செய்துள்ளார். பாதிக்கப்பட்ட நபரையும் இலஞ்சம் பெற்ற மூன்று பொலிஸாரையும் விசாரணைக்கு அழைத்த பிரதி பொலிஸ்மா அதிபர் பெற்றுக்கொண்ட பத்தாயிரம் பணத்தினை திருப்பி வழங்குமாறு உத்தரவிட்டுள்ளதுடன் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு உடனடி இடமாற்றம் வழங்கியுள்ளார். யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக பல்வேறு பொலிஸ் பிரதேசங்களில் இலஞ்சம் பெறும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பாக பிரதி பொலிஸ் மா அதிபர் கூடிய கவனம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. - [மாணவர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்தினால் வீழ்ச்சி](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88-33-%e0%ae%86/): நாட்டில் பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 33 ஆயிரத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த வருடம் பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 4,238,760 ஆக குறைவடைந்துள்ளது. இந்த எண்ணிக்கை 2020ஆம் ஆண்டு 4,272,289 ஆக காணப்பட்டது. இந்த தரவுகளின் அடிப்படையில் கடந்த ஆண்டு கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 33,529ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. அரச பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை 31,174 இனால் வீழ்ச்சியடைந்துள்ளதுடன் ஏனைய பாடசாலைகளில் 2,055 இனால் குறைவடைந்துள்ளது. அத்துடன் நாடாளவிய ரீதியில் அரச பாடசாலைகளில் சேவையாற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை 2020 உடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு 994 இனால் வீழ்ச்சியடைந்துள்ளதாக என இலங்கை மத்திய வங்கியின் ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. - [இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினருடன் இன்று கலந்துரையாடல்](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%99-3/): அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படவுள்ளதாக அறிவித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட 11 கட்சிகள் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பன இன்று ஞாயிற்றுக்கிழமை இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினருடன் கலந்துரையாடலை நடத்தவுள்ளன. தற்போதைய நெருக்கடி நிலைக்கு தீர்வாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்துள்ள யோசனை மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்துள்ள யோசனை என்பன தொடர்பில் இன்று இரு தரப்பினரும் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர். இதற்கிடையில் சுயாதீன நாடாளுமன்ற குழுவும் இன்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினரை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர். இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கான யோசனை தொடர்பில் இதன்போது ஆராயப்படவுள்ளது. இதுதவிர சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்த 11 கட்சிகளின் பிரதிநிதிகள் இன்று ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகளை சந்திக்கின்றனர் - [பாதுகாப்பு அமைச்சு பொதுமக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a4%e0%af%81/): நாட்டின் தற்போதைய பொருளாதார, சமூக நெருக்கடி மற்றும் அமைதியின்மையுடன் கூடிய சூழலில் புத்திசாலித்தனத்துடனும் பொறுமையுடனும் நிர்வகிக்க உதவுமாறு முதலில் நாட்டின் அனைத்து பிரஜைகளிடமும் பாதுகாப்பு அமைச்சு அன்புடன் கேட்டுக்கொள்கிறது. ஜனநாயக கட்டமைப்பிற்குள் அமைதியான முறையில் தமது போராட்டங்களையும் எதிர்ப்புகளையும் வெளிப்படுத்தும் இலங்கை மக்களின் ஜனநாயக உரிமையை நாம் அனைவரும் மதிக்கின்றோம் என்பதை குறிப்பிட வேண்டும். இருந்த போதிலும், விஷேடமாக நேற்றும் கடந்த சில நாட்களாகவும் அமைதிப் போராட்டமாக நடைபெற்று வந்த போராட்டத்தை மாற்றி மக்களின் ஜனநாயக உரிமைகள் மீறப்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கையை சீர்குலைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இயல்பு வாழ்க்கையைப் பாதிக்கும் விதத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நடத்தப்படும் போராட்டங்கள் மற்றும் ஹர்த்தால்களால் பொதுவாக அனைவரும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம் என்பதே யதார்த்தமாகும். நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கை பொருட்படுத்தாமல் ஆத்திரமூட்டும் வகையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் நடந்துகொள்வதுடன், சட்டம், ஒழுங்கைப் பேணுவதில் அர்ப்பணிப்புடன் செயற்படும் பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படையினரின் பணிகளுக்கு […] - [மண்ணெண்ணெய் வரிசையில் மீண்டும் ஒரு மரணம்](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%86%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae/): மண்ணெண்ணெய் வாங்குவதற்காக வரிசையில் காத்திருந்த 80 வயதுடைய முதியவர் உயிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – அளவெட்டி மத்தியை சேர்ந்த கந்தசாமி நடராசா என்பவரே உயிரிழந்துள்ளதாகத் தெரிய வருகிறது. குறித்த முதியவர் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மண்ணெண்ணெய் வாங்குவதற்காக அளவெட்டி – மல்லாகம் பலநோக்கு கூட்டுறவு சங்கத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்த போதிலும் சில மணி நேரத்தில் மண்ணெண்ணெய் முடிந்து விட்டது என ஊழியர்கள் அறிவித்ததையடுத்து நேற்று சனிக்கிழமையும் அவ்வாறு வரிசையில் சென்று காத்துக்கொண்டிருந்துள்ளார். நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தும் அருகில் சென்றதும் மண்ணெண்ணெய் முடிந்துவிட்டது என கூறியுள்ளனர். அதனால் கடும் மனவிரக்தியுடன் வீடு திரும்பியவர், மனைவியிடம் இன்றும் தன்னால் மண்ணெண்ணெய் வாங்க முடியவில்லை என கவலையுடன் கூறி படுத்தவர், சில நிமிடங்களிலேயே உயிரிழந்துள்ளதாகத் தெரியவருகிறது. - [பிரதமருக்கு ஆதரவாக நாளை களமிறங்கவுள்ள அணி](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%86%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%88/): பதவியை இராஜினாமா செய்யுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்துள்ள கோரிக்கை தொடர்பில் தமது நிலைப்பாட்டை அறிவிப்பதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள் நாளை திங்கட்கிழமை அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் பலர் நாளை திங்கட்கிழமை  அலரிமாளிகைக்கு முன்பாக அழைக்கப்பட்டுள்ளனர். ‘பிரதமர் மஹிந்தவை பாதுகாப்போம்’ என்ற தொனிப்பொருளில் பிரதமருக்கு ஆதரவாக போராட்டம் நடத்துவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் பதவியை இராஜினாமா செய்ததன் பின்னர் நாட்டை ஆட்சி செய்ய உரிய திட்டம் இருந்தால் தான் பதவியை இராஜினாமா செய்வதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அமைச்சரவை கூட்டத்தின் போது தெரிவித்துள்ளார்.   - [களுவாஞ்சிக்குடியில் பல வீடுகளில் திருடர்கள் கைவரிசை : அச்சத்தில் மக்கள்](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b2-%e0%ae%b5/): -மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பு-களுவாஞ்சிக்குடி கடற்கரை வீதி மற்றும் அதை அண்டிய உள் வீதிகளில் உள்ள ஆறு வீடுகளில் திருடர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். எனினும், சிறு தொகைப்பணமே கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில், நேற்று சனிக்கிழமை இரவு 10.15 தொடக்கம் நண்பகல் 12.00 மணி வரை திரூடர்கள் நடமாட்டம் இருந்ததாக அப்பகுதி வீட்டு உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு குழுவே இதில் ஈடுபட்டு இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர், வர்த்தகர், தாதிய உத்தியோகத்தர், ஓய்வுபெற்ற கிராமசேவை உத்தியோகத்தர், ஓய்வு பெற்ற பிரதம முகாமைத்துவ உதவியாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோரின் வீட்டிலேயே இச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. பிரதேச செயலக உத்தியோகத்தர் ஒருவருக்கு முகத்தில் திரவம் தெளிக்கப்பட்டுள்ளதாகவும் அவரின் கண்கள் எரிந்துகொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். வீடுகளின் ஜன்னல்களை உடைத்து அதன் ஊடாக உட்செல்ல முயற்சிக்கப்பட்டுள்ளமையால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. - [நாளை முதல் ஒரு வாரத்திற்கு நாடு முடங்குமா?](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d-2/): தற்போதைய நெருக்கடிக்கு நாடாளுமன்றம் தீர்வு காணும் வரை தாங்கள் போராட்டத்தை கைவிடப் போவதில்லை எனவும் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் ஒன்றிணைந்த தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையம் தெரிவித்துள்ளது. தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் ஒன்றியத்தின் தலைவர் ரவி குமுதேஷ் இதனைத் தெரிவித்துள்ளார். இதேவேளை, மே 17ஆம் திகதி பொதுமக்களுடன் நாடாளுமன்றத்தை முற்றுகையிடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.   - [வெள்ளை நிற நீர்த்தாரை வண்டி தொடர்பில் அமைச்சர் விளக்கம்](https://minnal24.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%88-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%af%88-%e0%ae%b5%e0%ae%a3/): நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ள வெள்ளை நிற நீர்த்தாரை வண்டி பொலிஸ் விசேட அதிரடிப்படையினால், ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் பணிகளுக்காக கொண்டுவரப்பட்டது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இதேவேளை, இலங்கைக்கு, இந்தியா நீர்த்தாரை வண்டிகளை வழங்கியுள்ளதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடன் எல்லைத்திட்டத்தின் கீழ் இலங்கைக்கு இந்தியா நீர்த்தாரை வண்டியினை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும், அதில் எவ்வித உண்மைத் தன்மையும் இல்லை என்பதுடன், உணவு மற்றும் அத்தியாவசிய மருந்துகளின் கொள்வனவுக்காகவே ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்படவுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. - [நாளாந்தம் 4,000 மெற்றிக்தொன் எரிபொருள் விநியோகம்](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-4000-%e0%ae%ae%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%a4%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d/): நாளாந்தம் 4,000 மெற்றிக் தொன் டீசல் மற்றும் 2,500 மெற்றிக் தொன் 92 ஒக்ரோன் பெற்றோல் ஆகியன விநியோகிக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இலங்கைக்கு வருகை தந்துள்ள கப்பல்களில் இருந்து மேலும் 40,000 மெற்றிக் தொன் பெற்றோல் மற்றும் மசகு எண்ணெய் இன்று தரையிறக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். - [இன்றைய வானிலை முன்னறிவித்தல்](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%88%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf-5/): இன்று ஞாயிற்றுக்கிழமை நாட்டில் சில பிரதேசங்களில் மழையுடனான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதன்படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் பல இடங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் மேலும், மேற்கு கிழக்கு மற்றும் தெற்கு கரையோரப் பகுதிகளில் காலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை, வடக்கு வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் காற்று அவ்வப்போது 40 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.   - [வெட்டுப்புள்ளிகள் விரைவில் வெளிவரும்](https://minnal24.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%b5/): 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளிகள் எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பிரபல பாடசாலைகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான வெட்டுப்புள்ளிகள் நிர்ணயிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஜனவரி 22ஆம் திகதி நடத்தப்பட்டு மார்ச் 13ஆம் திகதி பெறுபேறுகள் வெளியிடப்பட்டன. புலமைப்பரிசில் பரீட்சைக்கு மொத்தம் 340,508 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்ததுடன் இம்முறை பரீட்சை 2,943 பரீட்சை நிலையங்களிலும் 108 விசேட நிலையங்களிலும் இடம்பெற்றமைக் குறிப்பிடத்தக்கது. - [சிங்கப்பூர் சென்றார் துமிந்த](https://minnal24.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae/): வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் துமிந்த சில்வா கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூருக்கு சென்றுள்ளார். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் நிலையிலேயே துமிந்த சில்வா நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். - [உடலூறவின் போது ஆணுறையில் துளையிட்ட பெண்ணுக்கு 6 மாதம் சிறை](https://minnal24.com/%e0%ae%89%e0%ae%9f%e0%ae%b2%e0%af%82%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81-%e0%ae%86%e0%ae%a3%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/): ஜேர்மன் நாட்டு பெண் ஒருவர் தனது ஆண் நண்பனுடன் உடலுறவில் ஈடுபடும் போது ஆணுறையில் துளையிட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றஞ் சாட்டப்பட்ட நிலையில் , பெண்னுக்கு நீதிமன்றத்தால் 6 மாதங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது 39 வயதான குறித்த பெண் உடல் உறவில் இருந்தபோது, அவருக்குத் தெரியாமல் ஆணுறையை வேண்டுமென்றே சேதப்படுத்தி கருத்தரிக்க முறற்சி செய்துள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. இந்த வழக்கானது “சட்ட வரலாற்றை உருவாக்கியது” ஏனெனில் “திருட்டுத்தனம்” இங்கு இடம்பெற்றுள்ளதாக நீதிபதி தெரிவித்துள்ளார். 2021 இன் தொடக்கத்தில் ஆன்லைனில் சந்தித்து சாதாரண, பாலியல் உறவைத் தொடங்கியதாகவும் , ஆனால் 42 வயதான ஆண் நண்பர் தன்மீது ஆழமான உணர்வுகளை வளர்த்துக் கொண்டார், ஆனால் அவர் உறுதியான குடும்ப உறவில் இருக்க விரும்பவில்லை என குறித்த பெண் தெரிவித்துள்ளார். இந்த நிலையில்தான் கர்ப்பம் தரிக்க வேண்டும் என்ற நோக்கில் , இரகசியமாக ஆணுறையில் துளையிட்டு […] - [ஓந்தாச்சிமட விபத்தில் அரச ஊழியர் பலி](https://minnal24.com/%e0%ae%93%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%9f-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0/): மட்டக்களப்பு – ஓந்தாச்சிமடத்தில் இன்று சனிக்கிழமை மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் அரச ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக, களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் எருவில் சமூர்த்தி வங்கியில் காசாளராக கடைமையாற்றும் களுவாஞ்சிகுடியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான நாகராசா விஜேந்திரன் (வயது – 58) என்பவரே உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் மீது ஜீப் வண்டி மோதியதால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக, தெரியவருகின்றது. விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி, போக்குவரத்துப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். - [ஊடக சுதந்திர தர வரிசையில்  இலங்கைக்கு 146 ஆம் இடம்](https://minnal24.com/%e0%ae%8a%e0%ae%9f%e0%ae%95-%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0-%e0%ae%a4%e0%ae%b0-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2/): உலக ஊடக சுதந்திர தர வரிசையில் இலங்கை 19 இடங்கள் பின்தங்கியுள்ளது.  உலக ஊடக சுதந்திர சுட்டெண்ணில் இலங்கை 146ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. உலகில் உள்ள 180 நாடுகளின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது, இதில் நோர்வே முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடம் டென்மார்க்கிற்கும், மூன்றாம் இடம் சுவீடனுக்கும் கிடைத்தது. 2021ஆம் ஆண்டில், உலக பத்திரிகை சுதந்திர சுட்டெண்ணில் இலங்கை 127ஆவது இடத்தில் இருந்தது. 2020 இல் 127ஆவது இடத்திலும் 2019 இல் 126ஆவது இடத்திலும் 2018 இல் 131ஆவது இடத்திலும் இருந்தது. இந்த ஆண்டு, உலக ஊடகக் குறியீட்டில் இந்தியா 150ஆவது இடத்திலும், பங்களாதேஷ் 162ஆவது இடத்திலும், மியான்மர் 176ஆவது இடத்திலும் உள்ளன - [சீமெந்து தொழிற்சாலை தீ](https://minnal24.com/%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%af%88-%e0%ae%a4%e0%af%80/): ஹம்பாந்தோட்டை துறைமுகம் அருகில் உள்ள சீமெந்து தொழிற்சாலை கட்டடத்தில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர 2 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. - [அனைத்து பாதுகாப்பு படையினரினதும் விடுமுறைகள் இரத்து](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%a9%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%ae%bf/): நாட்டில் உள்ள அனைத்து பாதுகாப்பு படையினரினதும் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. - [ஒரே நாளில் கோடீஸ்வரரான தமிழர்](https://minnal24.com/%e0%ae%92%e0%ae%b0%e0%af%87-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%af%80%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%a4/): வெளிநாட்டில் அதிர்ஷ்ட இலாப சீட்டிழுப்பில் தமிழர் ஒருவர் ஒரே நாளில் கோடீஸ்வரராகியுள்ளார். அபுதாபியில் வசிக்கும் தமிழர் உள்ளிட்ட பலருக்கே இந்த அதிர்ஷ்டம் அடித்துள்ளது. துபாயில் வசிக்கும் விஸ்வநாதன் பாலசுப்ரமணியன் என்பவரே அதிஷ்ட இலாப சீட்டிழுப்பில் இரண்டாவது பரிசான 1 மில்லியன் திர்ஹாம் பரிசை தட்டிச்சென்றுள்ளார். இதேவேளை, ஐக்கிய அரபு அமீரகத்தின் அஜ்மனில் வசிக்கும் கேரளாவை சேர்ந்த முஜீப் சிராதோடி என்பவர் கடந்த மாதம் அதிர்ஷ்ட இலாப சீட்டிழுப்பில் தனது 9 நண்பர்களுடன் இணைந்து வாங்கிய நிலையில் அவர்களுக்கு அதில் 12 மில்லியன் திர்ஹாம் ஜாக்பொட் பரிசு விழுந்துள்ளது. இந்த பரிசு தொகையை 10 பேரும் பிரித்து எடுக்கவுள்ளனர். - [திங்கள் முதல் சேவைகள் வழமைக்குத் திரும்பும்](https://minnal24.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%af%87%e0%ae%b5%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b4/): கடவுச்சீட்டு விநியோக நடவடிக்கை சாதாரண சேவையின் கீழ் (ஒருநாள் சேவை தவிர) திங்கட்கிழமை  முதல் ஆரம்பிக்கபடவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் அறிவித்துள்ளார். கணணியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கடந்த இறுதினங்களாக கடவுச்சீட்டு வழங்கும் சேவைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது. - [லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் விலைகள் அதிகரிப்பு?](https://minnal24.com/%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be-%e0%ae%90-%e0%ae%93-%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2/): லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக வெளியான தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மேலும், இதுபோன்ற போலியான செய்திகளை பதிவிடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். - [குளவி கொட்டுக்கு உள்ளாகி 09 பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி](https://minnal24.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf/): -நுவரெலியா நிருபர்- பொகவந்தலாவ மோரா மேல் பிரிவு தோட்டத்தில் தேயிலை மலையில் தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த 09 பெண் தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு உள்ளாகி பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று சனிக்கிழமை காலை 8.30 மணியளவில் இடம் பெற்றதாக காயங்களுக்கு உள்ளான தொழிலாளர்கள் தெரிவித்தனர். மரம் ஒன்றில் இருந்த குளவி கூடு கலைந்து வந்து தொழிலாளர்களை தாக்கியுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர். காயங்களுக்கு உள்ளான ஒன்பது பெண் தொழிலாளர்களும் பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி தெரிவித்தார். - [2021 இறுதிவரை கொரோனாவினால் 15 மில்லியன் மக்கள் பலி](https://minnal24.com/2021-%e0%ae%87%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%b0%e0%af%88-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b0%e0%af%8b%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-15-%e0%ae%ae/): உலகளவில் கிட்டத்தட்ட 15 மில்லியன் மக்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கொவிட் தொற்றுநோயால் இறந்துள்ளனர் என உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது. ஜனவரி 1, 2020 மற்றும் டிசம்பர் 31, 2021 க்கு இடையில், கொவிட் இறப்புகளின் மொத்த எண்ணிக்கை அல்லது உலகின் மிக அதிகமான இறப்புகள் தோராயமாக 14.9 மில்லியன் என்று ஐக்கிய நாடுகளின் நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. இந்த மதிப்பு முந்தைய ஆண்டுகளில் நிகழ்ந்த இறப்புகளின் எண்ணிக்கைக்கும் தொற்றுநோய் இல்லாத நிலையில் எதிர்பார்க்கப்படும் எண்ணிக்கைக்கும் உள்ள வித்தியாசமாக கணக்கிடப்படுகிறது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, பெரும்பாலான இறப்புகள் தென்கிழக்கு ஆசியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உள்ளன, 68% உலகளவில் 10 நாடுகளில் குவிந்துள்ளது. இதற்கிடையில், 14.9 மில்லியன் அதிகப்படியான இறப்புகளில் 81% நடுத்தர வருமான நாடுகளில் இருந்து பதிவாகியுள்ளன, அதே நேரத்தில் அதிக மற்றும் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் முறையே 15% மற்றும் 4% ஆகும். உலகளாவிய […] - [மன்னாரில் இருந்து இந்தியா செல்ல முயன்ற 12 பேர் கைது](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af/): -மன்னார் நிருபர்- மன்னாரில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவிற்கு படகில் கை குழந்தையுடன் சென்ற இளம் குடும்பம் உட்பட 12 பேரை தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து இன்று சனிக்கிழமை அதிகாலை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மன்னார் மடு தேக்கம் பகுதியை சேர்ந்த பத்து மாத கைக்குழந்தையுடன் இளம் குடும்பம் ஒன்றும் பேசாலை பகுதியை சேர்ந்த 7 நபர்கள் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்தும், யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரு பெண்கள் சட்டவிரோதமாக படகில் இலங்கைக்கு சொந்தமான தீடை பகுதியில் இறக்கி விடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 12 பேரூம் இன்று சனிக்கிழமை மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப் பட்டு மேலதிக விசாரணைகளின் பின்னர் மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதி A.H.ஹைபதுல்லா முன்னிலையில் மதியம் 3.00 மணியளவில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதவான் நீதிமன்ற நீதிபதி இரு சிறுவர்களையும் பொற்றோரிடம் ஒப்படைக்குமாறு ஏனைய 10 பேரையும் சுமார் ஐம்பதாயிரம் ரூபா சரீர பிணையில் செல்ல அனுமதித்துள்ளார். - [இடைக்கால அரசாங்கத்துக்கு ஆதரவு](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/): இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு ஆதரவளிக்க சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னான்டோ இதனை தெரிவித்துள்ளார். இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்மொழிவின் அடிப்படையில், நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு  ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.     - [பொலிஸ் சிரேஷ்ட அத்தியட்சகருக்கு விளக்கமறியல் நீடிப்பு](https://minnal24.com/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b0%e0%af%87%e0%ae%b7%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a/): ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கேகாலைக்கு பொறுப்பான முன்னாள் பொலிஸ் சிரேஷ்ட அத்தியட்சகர் கே.பி. கீர்த்திரத்ன எதிர்வரும் 13ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ரம்புக்கனை துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பில் கேகாலைக்கு பொறுப்பான முன்னாள் பொலிஸ் சிரேஷ்ட அத்தியட்சகர் கே.பி. கீர்த்திரத்ன மற்றும் மூன்று பொலிஸ் கான்ஸ்டபிள்கள் அண்மையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது ரம்புக்கனையில் நபர் ஒருவரை சுட்டுக் கொல்ல உத்தரவிட்ட அனைத்து அதிகாரிகளையும் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கேகாலை நீதிவான் பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிட்டார். அந்த உத்தரவின் பிரகாரம் இவர்கள் கைதுசெய்யப்பட்டனர். - [ஐயப்பன் ஆலயத்திற்குள்ளிருந்து சடலம் ஒன்று மீட்பு](https://minnal24.com/%e0%ae%90%e0%ae%af%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b2%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf/): -கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி செல்வாநகர் கிராமத்தில் உள்ள ஐயப்பன் ஆலயத்திற்குள் சடலம் ஒன்று இன்று சனிக்கிழமை காலை பொது மக்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது. இரண்டு பிள்ளைகளின் தந்தையான லாலசிங்கம் (வயது 42) என்ற வர்த்தகரே இவ்வாறு சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளார். பொலீஸ் மற்றும் நீதிமன்ற நடவடிக்கையின் பின்னர் சடலம் மீட்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது. கிளிநொச்சி பொலீஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். - [நாட்டின் தற்போதைய நிலைமைக்கு ரணிலும் பொறுப்புக் கூற வேண்டும் - இரா.சாணக்கியன்](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%88%e0%ae%af-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae%e0%af%88/): நாட்டின் தற்போதைய நிலைமைக்கு ரணிலும் பொறுப்புக் கூற வேண்டும், என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ‘கொலைகாரர்களின் ஆதரவுடன் 2013ஆம் ஆண்டு தொகுதி அமைப்பாளராக தெரிவு செய்யப்பட்டமை தொடர்பில் சபையில் பல தடவைகள் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளேன். பிள்ளையான் 600 பேரை கொலை செய்ததாக குறிப்பிடப்படும் விடயத்தில் முன்னாள் பிரதமர் ரணில்விக்ரமசிங்க எனது பெயரையும் குறிப்பிட்டுள்ளமை பொறுத்தமற்றது. ஏனெனில் நான் 1990 ஆம் ஆண்டே பிறந்தேன். அத்துடன் ராஜபக்ஷர்களுக்கு ஒருபோதும் சரணம் கச்சாமி குறிப்பிடவில்லை. இந்த நிலையில் 2015 ஆம்ஆண்டு அர்ஜூன மகேந்திரனை மத்திய வங்கியின் ஆளுநராக்கி அதன் மூலம் பாரிய மோசடிக்கு ரணில் விக்கிரமசி்ங்க வழிவகுத்தார். அத்துடன் அவரின் உறவினரான அலோசியஸின் மெண்டிஸ் நிறுவனத்துக்கு 3.5 பில்லியன் ரூபா வங்கி ஒன்றிடம் கடன் உள்ளது. எனவே, அதனை மீண்டும் கொண்டு வருவதற்கு […] - [மட்டு.பட்டிருப்பு சித்திவிநாயகர் ஆலய வருடாந்த உற்சவ பாற்குடப்பவனி](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/): -மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பு-பட்டிருப்பு சித்திவிநாயகர் ஆலய வருடாந்த உற்சவத்தின் விசேட நிகழ்வாக இன்று சனிக்கிழமை பால்குடப்பவனி இடம்பெற்றது. கடந்த 2ம் திகதி ஆரம்பமான வருடாந்த உற்சவத்தின் இறுதி நாள் நிகழ்வு தீர்த்தோற்சவத்துடன் நிறைவுபெறும். பால்குடப்பவனியானது ஆலயத்தில் இருந்து ஆரம்பித்து வைத்தியசாலை வீதி வழியாக சென்று பிரதானவீதி பட்டிருப்பு வீதி வழியாக ஆலயத்தை வந்தடைந்தது. - [முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டிற்கு முன்னால் போராட்டம்](https://minnal24.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5/): தற்போதைய அரசாங்கத்துடன் ரணில் விக்கிரமசிங்கவும் வீட்டிற்கு செல்ல வேண்டும், என தெரிவித்து முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டிற்கு முன்னால் இன்று சனிக்கிழமை காலை போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்திற்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது இலங்கையில் அதிகமுறை பிரதமராக பதவி வகித்திருந்த ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்திற்கு முன்பாக போராட்டம் நடத்தப்படுவது  அவரது அரசியல் வாழ்க்கையில் இதுவே முதல்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.   - [க.பொ.த சாதாரண தரப் பரீட்சார்த்திகளுக்கான அறிவித்தல்](https://minnal24.com/%e0%ae%95-%e0%ae%aa%e0%af%8a-%e0%ae%a4-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a3-%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b0%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be/): இம்மாதம் மே 23ஆம் திகதி முதல் ஜூன் மாதம் முதலாம் திகதி வரை வரை சதாரணதரப் பரீட்சைகள் நடைபெறும் என கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பரீட்சார்த்திகளின் பரீட்சை அனுமதி அட்டைகள் மற்றும் பரீட்சை அட்டவணைகள் சம்பந்தப்பட்ட பாடசாலை அதிபர்களுக்கும்,  தனிநபர் பரீட்சார்த்திகளின் பரீட்சை அனுமதிப்பத்திரங்கள் தத்தமது விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 2021 ஆம் கல்வி ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை அனுமதி அட்டைகள்  எதிர்வரும் 12 ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கப்பெறாத பரீட்சார்த்திகள்  பரீட்சைகள் திணைக்களத்தை தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இம்மாதம் 12ஆம் திகதிக்கு முன்னர் பரீட்சை அனுமதி அட்டைகளை பெறாத பாடசாலைகள் மற்றும் தனிநபர் பரீட்சார்த்திகள், பரீட்சை திணைக்களத்தின் கீழே தரப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு  பரீட்சைகள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. அத்துடன் , பரீட்சைக்கான நேர அட்டவணை இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான  www.donets.lk இல் வெளியிடப்பட்டுள்ளது. […] - [பசறை பண்டாரவளை வீதியில் போக்குவரத்து தடை](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%9a%e0%ae%b1%e0%af%88-%e0%ae%aa%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%b3%e0%af%88-%e0%ae%b5%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/): -பதுளை நிருபர்- பசறை பண்டாரவளை வீதி கனவரல்ல 13ம்கட்டை பகுதியில் ஆர்ப்பாட்டத்தின் காரணமாக போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது. நமுனுகுலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கனவரல்ல 13ம் கட்டைப்பகுதியில் வாகன சாரதிகளும், பொது மக்களும் இணைந்து எரிபொருள் விலை ஏற்றத்தைக் கண்டித்தும், அரசாங்கத்தை பதவி விலகுமாறு கூறியும், கனவரல்ல 13ம் கட்டைப் பகுதியில் இன்று சனிக்கிழமை அதிகாலை 6.30 மணிமுதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கனவரல்ல 13 ம் கட்டைப்பகுதியிலிருந்து பண்டாரவளை செல்லும் வீதியில் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது. இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதிகளில் டயர்களை போட்டு எரித்தும், பதாதைகளை ஏந்திகோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.     - [இ.மி.சபையின் பிரதான பொறியியலாளர் ஒருவர் மீது மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு](https://minnal24.com/%e0%ae%87-%e0%ae%ae%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%aa%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af/): -யாழ் நிருபர்- இலங்கை மின்சார சபையின் சுன்னாக கிளையின் பிரதான பொறியியலாளர் லிங்கறூபனின் தவறான வழிநடத்தலினால் தனது வீட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக, பாதிக்கப்பட்ட நபர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளார் . குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, பளைப் பகுதியில் வசிக்கும் நபர் ஒருவர் மின்சார சபையினால் மின் துண்டிக்கப்பட்ட தனது வீட்டை மனைவியின் மருத்துவச் செலவுக்காக ஒரு தொகை பணத்துக்காக அடகு வைத்துள்ளார். இவ்வாறான நிலையில் அடகு வாங்கிய பளைப் பிரதேசத்தை சேர்ந்த நபர் வீட்டில் இருப்பவர்களை அப்புறப்படுத்தி வீட்டை கைப்பற்றும் நோக்கில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளார். அதன் ஒரு அங்கமாக தனது பெயருக்கு மாற்றப்பட்ட அடகு உறுதியை சுன்னாக மின்சார சபை பணிமனையில் காண்பித்து உயர் அதிகாரி ஒருவரின் அனுமதியுடன் குறித்த வீட்டின் மின் இணைப்பையும் துண்டித்துள்ளார். இவ்வாறான நிலையில் பாதிக்கப்பட்டவர் குறித்த அடகு காரரிடம் தனது […] - [பீஜிங்கில் மீண்டும் கொரோனா](https://minnal24.com/%e0%ae%aa%e0%af%80%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b0/): சீனத் தலைநகர் பீஜிங்கில்  55 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்ப ட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை அந்த எண்ணிக்கை 42ஆக இருந்தது. அறிகுறி இல்லாமல் வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை 17 என்று பதிவாகி உள்ளது. அது முந்தைய தினத்தின் எண்ணிக்கையைப் போல் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு. பீஜிங்கில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மில்லியன் கணக்கான ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலைசெய்யும்படி அரசாங்கம் கேட்டுக்கொண்டது. பல ரயில் நிலையங்கள் மூடப்பட்டன. பாஸ் பாதைகள் அடைக்கப்பட்டன. குடியிருப்புப் பகுதிகளைச் சுற்றி வேலிகள் போடப்பட்டன. இதற்கிடையே நிதி மையமான ஷங்ஹாயில் கிட்டத்தட்ட 4,300 பேருக்குக் வைரஸ் தொற்றியுள்ளது. அங்கு வைரஸ் தொற்றுச் சம்பவங்கள் குறைவதால், முடக்கநிலை கைவிடப்படலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. - [அவசரகால பிரகடனத்தை இரத்துச் செய்யுமாறு சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%95%e0%ae%9f%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/): சமகால நிலைமைக்கு அவசரகால சட்டம் தீர்வாகாது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு அச்சங்கம் இதனை தெரிவித்துள்ளது. கருத்துச் சுதந்திரம் மற்றும் அமைதியான முறையில் ஒன்றுக்கூடுதல் என்பன பொதுமக்களின் அடிப்படை உரிமைகளாகும். இந்த நிலையில், தன்னிச்சையான கைதுகள் மற்றும் தடுத்து வைத்தல் என்பனவற்றுக்கு, அவசரகால சட்டத்தைப் பயன்படுத்தக்கூடாது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. எனவே, அவசரகால சட்ட பிரகடனத்தை இரத்துச் செய்யுமாறு சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதியிடம் கோரியுள்ளது. - [நேற்று நள்ளிரவு முதல் அவசரகால நிலை பிரகடனம்](https://minnal24.com/%e0%ae%a8%e0%af%87%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%a8%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%b5%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b5/): நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில்  நாட்டில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்  ஜனாதிபதியின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையில் மக்கள் அவசரகால நிலைமை நிலவுவதன் காரணமாக பொதுமக்களின் பாதுகாப்பு, நாட்டின் அமைதியைப் பாதுகாத்தல், பொதுமக்கள் வாழ்வுக்கு அத்தியாவசியமான வழங்கல்கள் மற்றும் சேவைகள் என்பவற்றைப் பேணுவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது. - [பரிசோதனைகளில் பிரச்சினைகள் எதுவும் கண்டறியப்படவில்லை](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8b%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88/): தரமற்ற கலப்படம் உள்ள எரிபொருளை சிபெட்கோ நிறுவனம் விநியோகிப்பதாக சமூக வலைத்தளங்களில் காணொளி  பரவி வருகின்றது. இந்நிலையில், குறித்த காணொளியில் குறிப்பிடப்பட்டுள்ள குருநாகல் – நாரம்மல எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து எரிபொருள் மாதிரிகள் ஆய்வுக்கூடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) அறிவித்துள்ளது. குறித்த பிரச்சினையை ஏற்படுத்திய கொள்கலன் கொலன்னாவை எல்லைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், தேவையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எனினும், குறித்த எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் எரிபொருள் பிரச்சனைகள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. டெர்மினல் அல்லது கிடங்கில் இருந்து எரிபொருளை விநியோகிக்கும் போது முறையான தரப்படுத்தல் நடைமுறைகள் எப்போதும் பின்பற்றப்படுவதாகவும், தொடர்புடைய மாதிரிகள் தினமும் பரிசோதிக்கப்படுவதாகவும் சிபெட்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது. எரிபொருளின் தரம் தொடர்பில் ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் 0115 234 234 மற்றும் 0115 455 130 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு முறைப்பாடுகளை தெரிவிக்கலாம், என சிபெட்கோ விற்பனைப் பணியகம் […] - [இன்று நள்ளிரவு முதல் அவசரகால நிலைமை பிரகடனம்](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%a8%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%b5%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%9a/): இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அமுல் ஆகும் வகையில் ஜனாதிபதியினால் அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. - [23 வருடங்களின் பின்னர் பாரிய வீழ்ச்சி](https://minnal24.com/23-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0/): உரத்தடை மற்றும் உக்ரைன் போரினால் இலங்கையின் தேயிலை ஏற்றுமதி 23 வருடங்களில் மிகக் குறைந்த மட்டத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளதாக  புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன. நாட்டின் மிகப்பெரிய ஏற்றுமதிப் பொருளாக தேயிலை உள்ளது. தற்போதைய பொருளாதார வீழ்ச்சிக்கு முன், ஆண்டுக்கு 1.3 பில்லியன் அமெரிக்க டொலரை இது ஈட்டி வந்தது. எனினும் தற்போது 1948 இல் சுதந்திரத்திற்குப் பிறகு மிக மோசமான வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. - [தேசிய ரணவிரு நினைவு மாதம் பிரகடனம்](https://minnal24.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%81-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4%e0%ae%ae/): ரணவிரு நினைவு மாதத்தைப் பிரகடனப்படுத்தி இன்று, வெள்ளிக்கிழமை முற்பகல் ஜனாதிபதி மாளிகையில் தேசிய ரணவிரு கொடி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விற்கு அணிவிக்கப்பட்டது. ரணவிரு சேவை அதிகார சபையின் தலைவர் மேஜர் ஜெனரல் நந்தன சேனாதீர (ஓய்வுபெற்ற) , முதலாவது ரணவிரு கொடியை ஜனாதிபதிக்கு அணிவித்தார். மூன்று தசாப்தங்களுக்கும் மேலான பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்து, சுதந்திரமான நாட்டிற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த, துணிச்சலான போர் வீரர்களை ரணவிரு மாதம் நினைவுகூருகிறது. ஜனாதிபதிக்கு தேசிய ரணவிரு கொடி அணிவிக்கப்பட்டது முதல் ரணவிரு நினைவேந்தல் மாதம் ஆரம்பமாகிறது. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், ரணவிரு சேவை அதிகார சபையின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கித்சிறி ஏக்கநாயக்க (ஓய்வுபெற்ற) ஆகியோர் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். ஜனாதிபதி ஊடகப் பிரிவு - [பிரதமரை பதவி விலகுமாறு ஜனாதிபதி கோரிக்கை](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b0%e0%af%88-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%81-%e0%ae%9c/): இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற அவசர அமைச்சரவை கூட்டத்தில், அமைச்சர்களின் ஆதரவுடன் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ, பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்யுமாறு மஹிந்த ராஜபக்ஷவுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். - [இராஜினாமா செய்யத் தயார் - அறிவித்தார் மஹிந்த](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%be%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d/): பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச அமைச்சரவையில் தெரிவித்துள்ளார். இன்று வெள்ளிக்கிழமை  மாலை ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற அவசர அமைச்சரவை கூட்டத்தின்போது இந்த உறுதிமொழி ஜனாதிபதியிடம் வழங்கப்பட்டுள்ளது. இப்போதைய நிலையில் பிரதமர் பதவி விலகி புதிய அமைச்சரவை அமையவேண்டியதன் அவசியம் குறித்து ஜனாதிபதி விளக்கியுள்ளார். ஆனால் பிரதமர் பதவி விலகுவதால் பிரச்சினை தீராது என்று அமைச்சர்கள் எடுத்துக்கூறியபோதும் ஜனாதிபதி ஏற்கவில்லை. ‘ஆர்ப்பாட்டங்களுக்கு பயந்து பதவிகளை இராஜினாமா செய்வதில் அர்த்தமில்லை’ என்று பிரதமர் கூறியபோதும் அதனை ஏற்காத ஜனாதிபதி, இந்த விடயத்தில் தமது நிலைப்பாட்டிற்கு முக்கியத்துவமளிக்குமாறு வலியுறுத்தியுள்ளார். நீண்ட வாதப்பிரதிவாதங்களுக்கு பின்னர் பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த விலகுவதென்றும், அதன்பின்னர் புதிய அமைச்சரவையை திங்கட்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை நியமிப்பதென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. - [பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் வாபஸ்](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b4%e0%ae%95-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9-2/): தியத்த உயனவில் பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றுக்கொள்வதாக பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவர் வசந்த முதலிகே அறிவித்துள்ளார். பாராளுமன்ற வளாகத்தில் பல்கலைக்கழக மாணவர்களால் பல எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் நேற்று வியாழக்கிழமை மாலை முதல் முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையில், அடுத்த பாராளுமன்ற அமர்வு எதிர்வரும் 17ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டதையடுத்தே போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர். - [ரஞ்சித் சியம்பலாபிட்டிய மீண்டும் இராஜினாமா](https://minnal24.com/%e0%ae%b0%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%be%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af/): பிரதி சபாநாயகராக நேற்று வியாழக்கிழமை  தெரிவு செய்யப்பட்ட ரஞ்சித் சியம்பலாபிட்டிய, மீண்டும் குறித்த பதவியிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளார். இது தொடர்பிலான அவரது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்குவுக்கு அனுப்பி வைத்துள்ளதாக பிரதி சபாநாயகரின் ஊடகச் செயலாளர் தெரிவித்தார். நேற்றைய தினம் நாடாளுமன்றில் பிரதி சபாநாயகர் பதவிக்காக போட்டியிட்ட அவர் 148 வாக்குகளை பெற்றிருந்தார். இதற்கு முன்னதாக, பிரதி சபாநாயகராக செயற்பட்ட கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான ரஞ்சித் சியம்பலாபிட்டிய இரு வாரங்களுக்கு முன்னதாக பிரதி சபாநாயகர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். எவ்வாறாயினும், அவரது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த 4 நாட்களுக்கு முன்னதாகவே ஏற்றுக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. - [பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வேந்தராக பேராசிரியர் ஜி.எச். பீரிஸ்](https://minnal24.com/%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b4%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d/): பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வேந்தராக பேராசிரியர் ஜி.எச். பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.  இன்று,வெள்ளிக்கிழமை பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடமிருந்து தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார். 1960இல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் புவியியல் துறையில் முதல் தரப் பட்டம் பெற்ற பேராசிரியர் ஜி.எச் பீரிஸ் , 1965இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொருளாதார புவியியல் துறையில் தனது முனைவர் பட்டத்தைப் பெற்றுள்ளார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளராக தனது முதல் நியமனத்தைப்பெற்ற அவர், 44 வருடங்களாக பல்கலைக்கழக விரிவுரையாளராக கடமையாற்றியுள்ளார். பேராசிரியர் ஜி.எச். பீரிஸ் , உலகின் பல்வேறு பகுதிகளில் இடம்பெறும் அரசியல் மாற்றம் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டுள்ள நிபுணர் ஆவார். ஜனாதிபதி ஊடகப் பிரிவு - [ஹர்த்தாலுக்கு பூரண ஆதரவு : எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசை](https://minnal24.com/%e0%ae%b9%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%ae%a3-%e0%ae%86%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%b5%e0%af%81/): -மன்னார் நிருபர்- நாடளாவிய ரீதியில் கோட்டபாய ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் மற்றும் அமைச்சரவை உடனடியாக பதவி விலக கோரியும் சுமார் 3000 தொழிற்சங்கங்கள் இணைந்து மேற்கொள்ளும் ஹர்த்தால் கதவடைப்பு போராட்டத்திற்கு மன்னார் மக்களும் பூரண ஆதரவு வழங்கியுள்ளனர். இன்று  வெள்ளிக்கிழமை அதிகாலை தொடக்கம் மன்னார் நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டதுடன் தனியார் பேருந்து சேவைகளும் இயங்கவில்லை. அதே நேரம் பொது இடங்களில் அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக கறுப்பு கொடிகளும் பறக்கவிடப்பட்டுள்ளது. பாடசாலைகள் வழமை போல் இயங்கிய போதிலும் மாணவர்களின் வரவு குறைவாக காணப்பட்டது. ஆசிரியர்களும் ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கியுள்ளதுடன் பாடசாலை வருகை பதிவேட்டில் கையொப்பம் இடுவதையும் தவிர்த்துள்ளனர். மன்னார் மாவட்டம் முழுவதும் ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கப்பட்ட போதிலும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக நீண்ட வரிசையில் தொடர்ச்சியாக பொதுமக்கள் காத்திருக்கின்ற மை குறிப்பிடத்தக்கது. - [மன்னார்-மாந்தை மேற்கில் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டம்](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%ae%e0%af%87%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/): -மன்னார் நிருபர்- நாடளாவிய ரீதியில் இன்று வெள்ளிக்கிழமை அரசாங்கத்திற்கு எதிரான ஹர்த்தால் மேற்கொள்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மக்கள் இன்று காலை அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வர்த்தகர்கள், முச்சக்கர வண்டி உரிமையாளர்கள், அமைப்புகளின் பிரதிநிதிகள், மக்கள் இணைந்து குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர். காலை 9.30 மணியளவில் நெடுங்கண்டல் சந்தியில் ஆரம்பமான ஊர்வலம் மாந்தை மேற்கு பிரதேச செயலக வீதியை சென்றடைந்தது. இதன் போது கண்டன ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் அரசின் நடவடிக்கையை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக எரி பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமை, விலையேற்றம், எரிவாயு தட்டுப்பாடு மற்றும் விலை ஏற்றம், அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம், விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் ஆகியவற்றை முன் வைத்து அரசின் செயல்பாட்டை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேவேளை மன்னார் நகர பகுதிகளில் உள்ள […] - [பாராளுமன்றத்திற்கு அருகில் உள்ளாடைகளை வைத்து போராட்டம்](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81%e0%ae%95/): உள்ளாடைகளில் ஜனாதிபதியை பதவி விலகுமாறு கோரி அரசாங்கத்திற்கு எதிரான பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்டு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள koru go gama இல் பல உள்ளாடைகள் காட்சிப்படுத்தப்பட்டு தனித்துவமான போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.   - [கல்முனை அஷ்ரப் வைத்தியசாலை முன்றலில் போராட்டம்](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%88-%e0%ae%85%e0%ae%b7%e0%af%8d%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%b5%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%9a%e0%ae%be/): -கல்முனை நிருபர்- அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று வெள்ளிக்கிழமை நாடளாவிய ரீதியில், ஹர்த்தால் முன்னெடுக்கப்படுகிறது. இதற்கு ஒத்துழைப்பு வழங்கி, பல துறைசார் தொழிற்சங்கங்கள் சேவையிலிருந்து விலக தீர்மானித்துள்ளன. இதேநேரம், இன்றைய ஹர்த்தாலுக்கும் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் கூட்டுப் போராட்டத்துக்கும், பதில் கிடைக்காவிட்டால் மே 11ஆம் திகதி முதல் அரசாங்கம் வீட்டுக்குச் செல்லும் வரை தொடர் வேலை நிறுத்தமும் தொடர் ஹர்த்தாலும் தொடரும் என தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையம் தெரிவித்துள்ளது. ஹர்த்தால் போராட்டத்திற்கு 2000க்கும் அதிகமான தொழிற்சங்கங்கள் ஆதரவளித்துள்ளதாக தேசிய தொழிற்சங்க மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், பல பொது, அரை பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. பொது போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், கடைகள் அடைக்கப்பட்டு சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதன் அங்கமாக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை ஒன்றிணைந்த சுகாதார சேவைகள் தொழிற்சங்கத்தினால் வைத்தியசாலைக்கு முன்னால் இன்று காலை ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தின் போது […] - [நுவரெலியாவில் பாரிய ஆர்ப்பாட்டம்](https://minnal24.com/%e0%ae%a8%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%86%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa/): -நுவரெலியா நிருபர்- ஹட்டன் நகரில் இன்று வெள்ளிக்கிழமை அரசுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று தனியார் ஆடை தொழிற்சாலை ஊழியர்களாலும் மற்றும் ஆசிரியர்கள், சமூக செயற்பாட்டாளர்களால் முன்னெடுக்கப்பட்டது. சுமார் 1000ற்கும் மேற்பட்டோர் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர். மேற்படி போராட்டகாரர்கள் பேரணியாக அட்டன் நகரத்திலிருந்து மல்லியப்பு சந்தி வரை சென்று அங்கு அனைவரும் ஒன்றுக்கூடி போராட்டத்தினை முன்னெடுத்தனர். அதன் பின் மீண்டும் ஹட்டன் நகரத்திற்குள் பேரணியாக சென்றனர். இன்றைய பணிபுறக்கணிப்புக்கு ஆதரவு தெரிவித்தும், தற்போது அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம், தொடர் மின் துண்டிப்பு, எரிபொருள் விலையேற்றம், டீசல் தட்டுப்பாட்டினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இச்செயலைக் கண்டித்து குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. எதிர்ப்பு பதாதைகளை காட்சிப்படுத்தியவாறு, கறுப்பு கொடிகளை ஏந்திக்கொண்டு கோஷங்களை எழுப்பியவாறு போராட்டகாரர்கள் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். - [திங்கட்கிழமை முதல் நான்காவது கொவிட் தடுப்பூசி](https://minnal24.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%ae%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95/): எதிர்வரும் திங்கட்கிழமை முதல், நாட்டில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு, நான்காவது கொவிட் தடுப்பூசி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.   - [நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் வேளையில் பலத்த மழை](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b2-%e0%ae%aa%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa-4/): இன்று வெள்ளிக்கிழமை நாட்டின் பல பாகங்களில் மாலை அல்லது இரவு வேளையில்  மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும், என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. சில இடங்களில் 50 மில்லிமீற்றக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   - [1953 ஆம் ஆண்டிற்கு பிறகு மீண்டும் இன்று பாரிய ஹர்த்தால்](https://minnal24.com/1953-%e0%ae%86%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a3%e0%af%8d/): -கல்முனை நிருபர்- அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று வெள்ளிக்கிழமை நாடளாவிய ரீதியில், ஹர்த்தால் முன்னெடுக்கப்படுகிறது. இதற்கு ஒத்துழைப்பு வழங்கி, பல துறைசார் தொழிற்சங்கங்கள் சேவையிலிருந்து விலக தீர்மானித்துள்ளன. இதேநேரம், இன்றைய ஹர்த்தாலுக்கும் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் கூட்டுப் போராட்டத்துக்கும் பதில் கிடைக்காவிட்டால் மே 11ஆம் திகதி முதல் அரசாங்கம் வீட்டுக்குச் செல்லும் வரை தொடர் வேலை நிறுத்தமும் தொடர் ஹர்த்தாலும் தொடரும் என தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையம் தெரிவித்துள்ளது. ஹர்த்தால் போராட்டத்திற்கு 2000க்கும் அதிகமான தொழிற்சங்கங்கள் ஆதரவளித்துள்ளதாக தேசிய தொழிற்சங்க மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், பல பொது, அரை பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. பொது போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், கடைகள் அடைக்கப்பட்டு சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஆசிரியர், அதிபர் தொழிற்சங்கங்கள், தொடருந்து, பேருந்து, சுகாதாரம், வங்கி, மின்சாரம், அஞ்சல், துறைமுகம் மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட பல்துறைசார் தொழிற்சங்கங்கள் இன்று இந்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக […] - [மாநகரசபைக்கு செலுத்தும் ஆதனவரி ஒரு யாசகருக்கு வழங்கும் தொகையை விட குறைவானது](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%ae%95%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%aa%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/): -கல்முனை நிருபர்- மாநகர சபையின் பிரதான கடமைகளில் ஒன்று திண்மக்கழிவுகளை அகற்றும் பணியாகும். அப்பணி கடந்த ஒரு மாதகாலமாக முன்னரை விட சற்று குறைந்த வேகத்தில் அக்கரைப்பற்று மாநகர சபை பிரதேசங்களில் நடைபெறுவதனை மக்கள் அடையாளம் கண்டிருக்கலாம். இது நிதி நிலைமை மோசமாக இருப்பதனால் ஏற்பட்டதாகும். இதற்கு காரணம் டீசல் விலை இருமடங்கு அதிகரித்ததும் வாகன உதிரிப்பாகங்களின் விலை பன்மடங்கு அதிகரித்தமையும் என கூறிக்கொண்டே போகலாம் அதனால் நிறுத்தி மாநகர சபையின் பிரதான வருமானம் ஆதன வரியாகும். இதுவரையில் 46 மில்லியன் ஆதன வரி மக்களால் செலுத்தப்படாமல் நிலுவையாக காணப்படுகின்றது, என அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினரும், கிழக்கின் கேடயத்தை பிரதான செயற்பாட்டளருமான, அக்கரைப்பற்று அனைத்துப்பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவர் எஸ்.எம். சபீஸ் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது, திண்மக்கழிவுகளை அகற்றாமல் விட்டால், வீதி விளக்குகள் இரவு நேரங்களில் ஒளிராது இருந்தால், வடிகான்கள் துப்பரவு செய்யப்படாது விட்டால், நீர் தேங்கி […] - [நீண்ட நாள் கொள்ளையர்கள் பொலிஸாரால் கைது](https://minnal24.com/%e0%ae%a8%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%88%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/): யாழில் தொடர்ச்சியாக வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தேடப்பட்டுவந்த இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்.அச்சுவேலி பகுதியில் உள்ள வீடொன்றில் மறைந்திருந்த நிலையில் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும், இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொியவிளான், வடலியடைப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக இடம்பெற்ற பல வழிப்பறி கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி மற்றும் சண்டிலிப்பாய் பகுதிகளை சேர்ந்த 22 வயதுடைய இரு இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், கைதான நபர்கள் வழிப்பறியில் கொள்ளையடித்த நகைகள் அடகுவைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. - [நாளை சேவைகள் இடம்பெறாது](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%88-%e0%ae%9a%e0%af%87%e0%ae%b5%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%ae%be%e0%ae%a4%e0%af%81/): ஆட்பதிவுத் திணைக்களத்தின் அனைத்து சேவைகளும் நாளை வெள்ளிக்கிழமை இடம்பெறமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியாக நாளை ஹர்த்தால் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதன் காரணமாக இவ்வாறு சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறித்த திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. - [“1990 சுவசெரிய” அம்பியூலன்ஸ் சேவையும் பாதிப்பு](https://minnal24.com/1990-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%9a%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%85%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%af%e0%af%82%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b8/): “1990 சுவசெரிய” அம்பியூலன்ஸ் சேவை தற்போது நிலையற்றதாக மாறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். பண பற்றாக்குறையால் குறித்த அம்பியூலன்ஸ் சேவை எந்த நேரத்திலும் இடைநிறுத்தப்படும் ஆபத்து உள்ளது. இந்த அம்பியூலன்ஸ் சேவையின் காரணமாக நாளொன்றுக்கு 1000இற்கும் மேற்பட்ட நோயாளிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதாகவும், இதனை சமூக பாதுகாப்பு நடவடிக்கையாக பேணுமாறும் அவர் கேட்டுக்கொண்டார். எனவே இதனை தொடர தேவையான நிதியை ஒதுக்கீடு செய்யுமாறு நிதியமைச்சரை கேட்டுக்கொள்வதாகவும் ஹர்ஷ டி சில்வா எம்.பி குறிப்பிட்டார். - [கடவுச்சீட்டு விநியோக நடவடிக்கைகள் இடம்பெறாது](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b5%e0%af%81%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%af%e0%af%8b%e0%ae%95-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%b5/): கடவுச்சீட்டு விநியோக நடவடிக்கைகள் நாளைய வெள்ளிக்கிழமை  இடம்பெற மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, ஒருநாள் மற்றும் பொதுவான சேவைகள் உள்ளடங்களாக பொதுமக்களுக்கான எந்தவொரு சேவைகளும் இடம்பெறாது என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. நாளை நாடு முழுவதும் ஹர்த்தால் முன்னெடுக்கப்படவுள்ளதன் காரணமாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. - [நாடாளுமன்ற வளாகத்தில் “ஹொருகோகம”](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%be%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b9/): பாராளுமன்ற கட்டிடத் தொகுதியை அண்மித்து பல்கலைக்கழக மாணவர்களினால் இன்று எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டிருந்தனர். மேலும், நேற்று புதன்கிழமை இரவு நாடாளுமன்ற வளாகத்தை அண்மித்த வீதிகள் முழுமையாக மூடப்பட்டிருந்தன. இன்றைய ஆர்ப்பாட்டத்தின் போது, பொலிஸாரினால் அமைக்கப்பட்ட இரும்பு கம்பிகளுடனான வீதித் தடைகளை மாணவர்கள் உடைத்தெறிந்திருந்தனர். இவ்வாறான பின்னணியில், நாடாளுமன்ற வளாகத்தில் தற்போது “ஹொருகோகம” என்ற பெயரிலான மாதிரி கிராமம் அமைக்கப்பட்டுள்ளது. - [எதிர்வரும் 3 நாட்களுக்கான மின்வெட்டு அறிவிப்பு](https://minnal24.com/%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-3-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be/) - [மன்னாரில் மலேரியா விழிப்புணர்வு ஊர்வலம்](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b2%e0%af%87%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d/): -மன்னார் நிருபர்- மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை மற்றும் மன்னார் மலேரியா தடை இயக்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில், மலேரியா விழிப்புணர்வு நடைபவணி இன்று வியாழக்கிழமை காலை 8.30 மணியளவில் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு முன் ஆரம்பமானது. மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தலைமையில் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் ஆரம்பமானது. குறித்த ஊர்வலத்தில்இவைத்தியர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள், வைத்தியசாலை பணியாளர்கள், பாடசாலை மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர். இதன் போது மலேரியா தொற்று தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு கலந்து கொண்டனர். குறித்த ஊர்வலமானது மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் ஆரம்பமாகி, பிரதான வீதியூடாக மன்னார் பஜார் பகுதியை சென்றடைந்தது. மீண்டும் அங்கிருந்து மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையை சென்றடைந்தமையும் குறிப்பிடத்தக்கது. - [மன்னாரில் 110 மாணவர்களுக்கு இராணுவத்தினரால் பாதணிகள் வழங்கி வைப்பு](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-110-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/): -மன்னார் நிருபர்- நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார பின்னடைவு காரணமாக பல குடும்பங்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ள நிலையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு உதவும் வகையில், மன்னார் பேசாலையில் அமைந்துள்ள 543 வது ராணுவ படைப் பிரிவின் ஏற்பாட்டில் இன்று வியாழக்கிழமை  காலை 9 மணியளவில் மன்னார் நகர மண்டபத்தில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான பாதணிகள் மற்றும் ஆசிரியர்களுக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. வெசாக் மாதத்தை ஒட்டி இடம்பெற்ற குறித்த நிகழ்வில் மன்னார் வலயக்கல்வி பணிமனை க்குட்பட்ட சிறுத்தோப்பு ரோமன் கத்தோலிக்க பாடசாலை மாணவர்கள் 110 பேருக்கு பாதணிகள் ( சப்பாத்து) காலுறை மற்றும் குறித்த பாடசாலை ஆசிரியர்களுக்கு ஊக்குவிப்புத் தொகை வழங்கி வைக்கப்பட்டது. பேசாலை 543 ராணுவ படைப்பிரிவில் படை அதிகாரி கேணல் துசார கறஸ்கம தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் தள்ளாடி 54 ஆவது படைப் பிரிவின் உயர் அதிகாரி மேஜர் […] - [இன்று முதல் மட்டுப்படத்தப்பட்ட எரிபொருள் விநியோகம்](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/): எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் இன்று வியாழக்கிழமை முதல் வாகனங்களுக்கான எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மோட்டார் சைக்கிள்களுக்கு ரூ.2,000 முச்சக்கர சக்கர வண்டிகளுக்கு ரூ.3,000 கார், வான்கள், ஜீப்புகளுக்கு ரூ8,000  என்ற ரீதியில் எரிபொருள் வழங்கப்படும் எனினும், பேருந்துகள், லொறிகள் மற்றும் வர்த்தக வாகனங்களுக்கு இது பொருந்தாது, என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தலைவர் தெரிவித்துள்ளார் - [மட்டக்களப்பு வர்த்தகர்களும் ஹர்த்தாலுக்கு ஆதரவு](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95/): நாளை வெள்ளிக்கிழமை நாடளாவிய ரீதியில் அனைத்து அமைப்புக்களும் தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து ஹர்த்தால் அனுஷ்டிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நாளை வெள்ளிக்கிழமை என்பதால் ஏறாவூர் பிரதேச வர்த்தகர்களதும், பங்களிப்பினை வழங்குவதில் சிரமம் இல்லை என்ற படியினால் குறித்த பிரதேச வர்த்தக சங்கமும் மட்டக்களப்பு வர்த்தகர்கள் சார்பில் குறித்த ஹர்த்தாலிற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளது, என இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஏறாவூர் வர்த்தக சங்க செயலாளர் அஸ்மி தெரிவித்தார். மேலும், அனைத்து வர்த்தகர்களும் நாளைய தினம் தங்களது வர்த்தக நிலையங்களை மூடி தேசிய ரீதியான போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு வேண்டிக் கொள்கிறோம். நாளைய தினம் தங்களுக்கு தேவையான பொருட்களை இன்றைய தினமே கொள்வனவு செய்து மக்கள் வீன் அசௌகரியங்களை தவிர்ந்து கொள்ளுமாறு ஏறாவூர் வர்த்தக சங்கம் சார்பில் வேண்டிக் கொள்கிறோம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். - [நாடாளுமன்றில் நடாத்தப்படும் நாடகங்கள் இன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa/): நாடாளுமன்றில் 65 பேர் மட்டுமே மக்களுக்காக உள்ளதாகவும், 148 பேர் ராஜபக்ஷக்களுடனேயே தற்போதும் உள்ளனர், என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று  வியாழக்கிழமை உரையாற்றிய அவர், நாடாளுமன்றில் நடத்தப்பட்ட, நடத்தப்படும் நாடகங்கள் இன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக குறிப்பிட்டார். ஏனென்றால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவை தெரிவு செய்வார்களென தான் நினைக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார். ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவிற்கு வாக்களித்து, அவரை பிரதி சபாநாயகராக தெரிவு செய்த 148 பேரும் தற்போகும் ராஜபக்ஷக்களுடனேயே இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். எனவே, அவரை எதிர்த்து போட்டியிட்ட இம்தியாஸ் பாக்கிர் மார்க்கருக்கு வாக்களித்த 65 பேர் மட்டுமே மக்கள் பக்கம் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், நாடாளுமன்றத்தில் என்ன நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்டாலும் இங்குள்ள நாடககாரர்கள், பொய்யர்கள் அதற்கு எதிராகவே வாக்களிப்பார்கள். ஏனென்றால் அவர்களுக்கு ராஜபக்ஷக்களை காப்பாற்ற வேண்டும், எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.   - [தொழிற்சங்க வேலைநிறுத்த போராட்டத்திற்கு இ.தே.தோ.தொ.சங்கம் முழுமையான ஆதரவு](https://minnal24.com/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%af%88%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%aa/): -பதுளை நிருபர்- தொழிற்சங்க வேலைநிறுத்தப் போராட்டத்திற்க்கு இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் முழுமையான ஆதரவு வழங்குவோம், என அச்சங்கத்தின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை காரியாலயத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போதே மேற்கண்டவாறு கருத்து தெரிவித்திருந்தார் அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக நாடு பூராகவும் மக்கள் தங்களுடைய எதிர்ப்பை நாள்தோறும் தெரிவித்துக் கொண்டே இருக்கின்றார்கள். எது எவ்வாறாக இருப்பினும் கூட பதவி போதையில் அரசாங்கத்திற்கு காதும் கேட்கவில்லை கண்களும் தெரியவில்லை . பொருளாதார நெருக்கடியினால் நாடு பாரியதொரு பின்னடைவை கண்ணுற்று இருக்கின்றது என நிதியமைச்சர் பாராளுமன்றத்தில் முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளார் . வரிசைகள் ஓய்ந்தபாடில்லை சுகாதாரம் கல்வி பெருந்தோட்டமென அனைத்து துறைகளும் பாரியதொரு வீழ்ச்சியை கண்டுள்ளது. கடனால் ஒரு நாட்டை ஒருபோதும் கட்டியெழுப்ப முடியாது தொலைநோக்குப் பார்வையும் […] - [பிரதி சபாநாயகராக மீண்டும் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a8%e0%ae%be%e0%ae%af%e0%ae%95%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae/): புதிய பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்டது. அதன்படி பிரதி சபாநாயகர் பதவிக்கு மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவு செய்யப்பட்டுள்ளார். பிரதி சபாநாயகர் பதவிக்காக, ஆளுந்தரப்பில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவின் பெயரும், எதிர்க்கட்சி தரப்பிலிருந்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்காரின் பெயரும் பரிந்துரை செய்யப்பட்டது. இந்நிலையில், இடம்பெற்ற வாக்கெடுப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்குச் சீட்டின் மூலம் வாக்களித்தனர். இந்த வாக்கெடுப்பில், ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய 148 வாக்குகளையும், இம்தியாஸ் பாக்கிர் மார்க்கர் 65 வாக்குகளையும் பெற்றனர். அதன்படி,  83 மேலதிக வாக்குகளால்  நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய மீண்டும் பிரதி சபாநாயகர் பதவிக்கு தெரிவானதாக சபாநாயகர் அறிவித்தார். - [இன்று நள்ளிரவு முதல் தனியார் பேருந்துகள் சேவை முடக்கம்](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%a8%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%b5%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%bf/): இன்று வியாழக்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சேவை புறக்கணிப்பில் ஈடுபட தனியார் பேருந்து உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார் நாடளாவிய ரீதியில் நாளை முன்னெடுக்கப்படவுள்ள நிர்வாக முடக்கல் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தே இத்தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். - [டயகம நகரில் இருந்து தனி மனிதர் ஒருவர் நடை பவனியாக போராட்டம்](https://minnal24.com/%e0%ae%9f%e0%ae%af%e0%ae%95%e0%ae%ae-%e0%ae%a8%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%ae/): -நுவரெலியா நிருபர்- கொழும்பு காலிமுகத்திடலில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் அரசாங்கத்திற்கு எதிரான தொடர்ச்சியான போராட்டத்திற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் இன்று வியாழக்கிழமை காலை டயகம நகரில் இருந்து தனி மனிதர் ஒருவர் நடை பவனியாக தனது போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். இந்த தனிமனித நடைபவனி போராட்டம் காலிமுகத்திடலில் நடை பெற்றுக்கொண்டிருக்கும் போராட்டத்தில் இணைந்து கொள்வதற்காக இன்னும் மூன்று தினங்களில் சென்று அடையும் நோக்குடன் ஆரம்பித்துள்ளார். - [இன்றைய நாணயமாற்று விகிதங்கள்](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%88%e0%ae%af-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a3%e0%ae%af%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a4-2/) - [பாடசாலை உபகரணம் வழங்கும் நிகழ்வு](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%af%88-%e0%ae%89%e0%ae%aa%e0%ae%95%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/): -கல்முனை நிருபர்- பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும், சிறுவர் நிகழ்ச்சிகளும் நேற்று புதன்கிழமை  அனஃபா சமூக சேவை நலன்புரி அமைப்பின் ஸ்தாபகத் தலைவரும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தருமாகிய ஏ. முஹம்மட் நளீம் தலைமையில் அதன் நிகழ்கால தலைவர் ஏ. நுஸ்மியா மற்றும் நிர்வாக உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் சாய்ந்தமருது கமு/கமு/அல்- ஜலால் வித்தியால மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் – ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதிப் பொருளாளரும் யஹியாகான் குரூப் நிறுவனத்தின் தவிசாளரும் ஹஸ்மியா முகவர் மற்றும் கானு பிரயாண நிறுவனத்தின் தவிசாளருமாகிய ஏ.சீ.யஹியாகான் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கொண்டதுடன், கௌரவ அதிதியாக இலங்கை மின்சார சபை அம்பாறை பிராந்திய மின் பொறியியலாளரும் செஸ்டோ நிறுவனத்தின் ஸ்தாபகத் தலைவருமாகிய எம்.ஆர்.எம். பர்ஹான், நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் எம். பீ. நவாஸ், கல்முனை மாநகர சபை உறுப்பினர் நஸ்ரின் முர்ஷீத் அமீன், மேலும் அதிதிகளாக கமு/கமு/அல்- ஜலால் […] - [யாழ்.இந்தியத் துணைத் தூதுவராலயத்தின் துணைத் தூதுவர் யாழ்.பல்கலைக்கழகத்திற்கு விஜயம்](https://minnal24.com/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%a3%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%82%e0%ae%a4/): -யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதுவராலயத்தின் துணைத் தூதுவர் ஜே.ராகேஷ் நட்ராஜ் நேற்று புதன்கிழமை காலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு மரியாதை நிமித்தமான விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார். யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவை சந்தித்து நிலைமைகளைக் கேட்டறிந்ததுடன் இந்திய அரசாங்கத்தின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் மற்றும் இந்திய அரசாங்கத்தின் புலமைப்பரிசில்கள் தொடர்பிலும் சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டது. - [சி.சி.டீ.வி காணொளியில் சிக்கிய பசுமாடு திருடர்கள்](https://minnal24.com/%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%9f%e0%af%80-%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3%e0%af%8a%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95/): -பதுளை நிருபர்- கன்றுக்குட்டியை திருடிய இருவர் பசறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், பசறை டெமேரியா முதலாவது பிரிவில் பசு மாட்டின் உரிமையாளர் ஒருவர் தனது பசுவையும், கன்று குட்டியையும் மேய்வதற்காக கட்டி வைத்து விட்டு வீடு சென்றிருந்தார். அதன்பின் மீண்டும் மாட்டை கட்டப்பட்டிருந்த இடத்திற்கு சென்று பார்த்த வேளையில் அவ்விடத்தில் பசுவும் கன்றும் இருக்கவில்லை. உடன் சுற்றிவர காணப்பட்ட இடங்களில் மாட்டு உரிமையாளர் தேடுதலை மேற்கொண்ட போது, தாய் மாடு நோயால் பீடிக்கப்பட்டிருந்ததால், தாய் மாடு காட்டுப் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்க்கப்பட்டுள்ளது. இருப்பினும், கன்று குட்டியைத் தேடி மாட்டு உரிமையாளர் செல்லும் போது, கன்று குட்டியை இருவர் விரட்டி செல்வதாக அவ்வீதியால் வந்த ஒருவர் கூறியதைத் தொடர்ந்து, டெமேரியா முதலாவது பிரிவில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்தில் பசறை-பதுளை வீதியின் கோயில் கடை பகுதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த CCTV காணொளியை […] - [வடக்கு அபிவிருத்திக்கு ஆந்திரா தெலுங்கானா தொழில்நுட்ப வல்லுநர்களை சந்தித்த வடக்கு ஆளுநர்](https://minnal24.com/%e0%ae%b5%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%85%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%86/): -யாழ் நிருபர்- இந்தியா சென்ற வடக்கு ஆளுநர் ஜீவன் தியாகராஜா நேற்று புதன்கிழமை ஆந்திரா மற்றும் தெலுங்கானா தொழில்நுட்ப வல்லுனர்களை தமிழ்நாட்டில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன் போது, வடக்கு அபிவிருத்தியை முன்னோக்கி நகர்த்திச் செல்வதற்கு தேவையான ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பிலும் அனுபவங்களை பகிர்வது தொடர்பில் தொழில்நுட்ப வல்லுனர்களுடன் ஆளுநர் கலந்துரையாடினார். வடக்கில் இறால் வளர்ப்பு, மீன்பிடி பண்ணைப் பொருளாதாரம், ரயில்வே, மீள் புதுப்பிக்க சக்தித்திட்டம் மற்றும் நிதி பெறும் முறைமை தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது. குறித்த கலந்துரையாடலில் வடக்கு மாகாணத்தில் முட்டை உற்பத்தியை அதிகரித்தல் மற்றும் கோழிப் பண்ணையாளர்கள் ஊக்குவித்தல் தொடர்பில் ஆளுநர் தனது கருத்துக்களை முன்வைத்ததுடன் போக்குவரத்துத் துறைகளான கப்பல் சேவை மற்றும் விமானப் போக்குவரத்து தொடர்பில் தனது கருத்துக்களை முன்வைத்திருந்தார். - [நுவரெலியா வர்த்தகர்கள் சங்க தலைவர் வர்த்தகர்களுக்கு விடுத்துள்ள அறிவுறுத்தல்](https://minnal24.com/%e0%ae%a8%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%86%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a/): -நுவரெலியா நிருபர்- நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில், 06 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நுவரெலியா நகரில் முன்னெடுக்கப்படும் போராட்டத்துக்கு ஆதரவு வழங்குவதற்காக, அன்றைய தினம் வியாபார ஸ்தலங்களை மூடி,  2க்கு 1 1/2 அளவுடைய கறுப்புக் கொடி ஏற்றி எதிர்ப்பை வெளிக்காட்ட வேண்டும். அத்தோடு, இன்று வியாழக்கிழமை வாடிக்கையாளர் நலன் கருதி, 6 ஆம் திகதி தமது வியாபார நிலையம் மூடப்படும் என அறிவித்தல் காட்சிப்படுத்த வேண்டும், எனவும் நுவரெலியா வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் டக்ளஸ் நாணயக்கார, பொருளாளர் வசீகரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். - [யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு உதவு தொகை வழங்கி வைப்பு](https://minnal24.com/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b4%e0%ae%95-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-4/): -யாழ் நிருபர்- நாட்டின் பொருளாதார நெருக்கடியான சூழலில், தியாகி அறக்கட்டளை நிதியத்தினால், யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு நேற்று புதன்கிழமை உதவு தொகை வழங்கப்பட்டது. மாணவர்கள் தமது உயர்கல்விகளை தடையின்றி தொடர ஊக்குவிக்கும் முகமாக, பொருண்மியம், நலிந்த 100 மாணவர்களுக்கு, தியாகி அறக்கட்டளை நிதிய நிறுவுனர் தியாகி தியாகேந்திரன் வாமதேவனால் இந்த உதவி வழங்கி வைக்கப்பட்டது. இதன்போது பல்கலைக்கழக மாணவர்கள் கலந்து குறித்த ஊக்குவிப்பு தொகையை பெற்றுக்கொண்டனர்.   - [திடீர் காய்ச்சலால் 11 மாத குழந்தை உயிரிழப்பு](https://minnal24.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-11-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%95/): -யாழ் நிருபர்- திடீர் காய்ச்சல் காரணமாக 11 மாத குழந்தை ஒன்று யாழ். – கொடிகாமம் தவசிக்குளத்தடியில் உயிரிழந்துள்ளது. குறித்த குழந்தைக்கு நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை காலை வேளையில் காய்ச்சல் ஏற்பட்டதால் பனடோல் வழங்கப்பட்டது. எனினும் காய்ச்சல் அதிகமானதால் பிற்பகல் வேளையில் மிருசுவில் மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்டது. மேலதிக சிகிச்சைக்காக குழந்தை அங்கிருந்து யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில், குழந்தை ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த மரணம் தொடர்பான விசாரணையை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். - ['மைனா கோ கம' அகற்றப்பட்டது](https://minnal24.com/%e0%ae%ae%e0%af%88%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%af%8b-%e0%ae%95%e0%ae%ae-%e0%ae%85%e0%ae%95%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%81/): அலரிமாளிகைக்கு முன்பாக நிறுத்தப்பட்டிருந்த பொலிஸ் வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, முதலில் வாகனங்கள் அகற்றப்பட்டதுடன், ஆர்ப்பாட்டக்காரர்களின் கூடாரங்கள் மற்றும் பதாதைகளும் அகற்றப்பட்டுள்ளன. எனினும் கூடாரத்தை அகற்றினாலும் தமது “மைனா கோ கம” போராட்டம் தொடரும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் அறிவித்தனர். இதேவேளை, அலரிமாளிகைக்கு முன்பாக பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் அவர்களின் சகல கட்டமைப்புக்களையும் அகற்றுமாறு கோட்டை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.   - ['டுவிட்டர்' பயன்படுத்தவும் கட்டணம் அறவீடு?](https://minnal24.com/%e0%ae%9f%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b5%e0%af%81/): வர்த்தக மற்றும் அரச நடவடிக்கைகளுக்காக TWITTER சமூக வலையமைப்பை பயன்படுத்துவதற்கு எதிர்காலத்தில் கட்டணமொன்றை அறவிட டெஸ்லா நிறுவனத்தின் பிரதானி  எலான் மாஸ்க் தீர்மானித்துள்ளார். டுவிட்டர் நிறுவனத்தின் பங்குகளை ஈலோன் மாஸ்க் 44 பில்லியன் அமெரிக்க டொலருக்கு கொள்வனவு செய்யும் தீர்மானத்திற்கு நிறுவனத்தின் பணிப்பாளர் சபை அனுமதி வழங்கிய பின்னணியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், சாதாரண பயன்பாட்டாளர்களிடமிருந்து எந்தவித கட்டணமும் அறவிடப்படாது எனவும், சாதாரண பயன்பாட்டாளர்கள் இலவசமாக சேவையை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் கூறுகின்றார். - [உலகின் மிகவும் வயதான கன்னியாஸ்திரி](https://minnal24.com/%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%af%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d/): உலகின் மிகவும் வயதான கன்னியாஸ்திரியாக பிரான்ஸைச் சேர்ந்த 118 வயதான ‘அன்ட்ரே ‘,கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னர் உலகின் மிக வயதானவர் என கருதப்பட்ட 119 வயதான ஜப்பானைச் சேர்ந்த கேன் டனேகா அண்மையில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து 118 வயதான பிரான்ஸ் கன்னியாஸ்திரி அண்ட்ரேவை ‘உலகில் உயிர் வாழும் மிகவும் வயதான கன்னியாஸ்திரி’ என கின்னஸ் அமைப்பு அங்கீகரித்து சான்றிதழ் வழங்கி உள்ளது. அண்ட்ரே ஸ்பானீஷ்   மற்றும் இரண்டாம் உலக போர் காலக்கட்டத்தில் பல்வேறு துறவுப் பணிகளில் ஈடுபட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. - [போராட்டத்தில் ஈடுபட்ட 13 பேர் பிணையில் விடுதலை](https://minnal24.com/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%88%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-13-%e0%ae%aa/): பத்தரமுல்லை-பொல்துவை சந்தியில் நாடாளுமன்ற வளாக நுழைவாயில் வீதியை இடைமறித்து போராட்டத்தில் ஈடுபட்ட 13 பேரை பிணையில் விடுவிப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடுவெல நீதவான் நீதிமன்றம் குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழையும் பொல்துவ சந்தியிலிருந்து நாடாளுமன்ற கட்டடத் தொகுதிக்கு செல்லும் பிரதான வீதி இன்று காலை வீதித்தடைகளால் மறிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை அவ்விடத்தில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 13 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து அப்பகுதியில் ஒரு பதற்றமான சூழ்நிலை நிலவியது. இன்று காலை நாடாளுமன்றத்திற்குள் பிரவேசித்த அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் நாடாளுமன்றத்திற்கு பின்னாலுள்ள மாதிவெல நுழைவாயிலை பயன்படுத்தினர். - [மொரட்டுவ துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்](https://minnal24.com/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%b5-%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%82/): மொரட்டுவ-கொரலவெல்ல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவத்தில் காயமடைந்த நபர் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அலுபோமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை தேடி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது. - [சிறகுகள் அமையத்தின் புத்தகத் திருவிழா](https://minnal24.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%95%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d/): அனைத்துலக புத்தக தினத்தினை முன்னிட்டு சிறகுகள் அமையத்தின் ஏற்பாட்டில் புத்தகத் திருவிழா ஏப்ரல் 29 முதல் மே 2ஆம் திகதி வரை சிறப்பான முறையில் கோண்டாவிலில் அமைந்துள்ள எழுதிரள் பணிமனையில் இடம்பெற்றது. ஈழத்து எழுத்தாளர்கள் மற்றும் அயல்நாட்டு எழுத்தாளர்களின் 800க்கு மேற்பட்ட தலைப்புகளிலான நூல்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமையுடன், வாசகர்கள் ஆர்வத்துடன் பங்கெடுத்திருந்தனர். ஏப்ரல் 29ஆம் திகதி இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வில் கணபதி சர்வனந்தா (ஆசிரியர் – அறிந்திரன்)  ஜோதிலிங்கம் ( அரசியல் ஆய்வாளர்) ஆகியோர் விருந்தினர்களாக கலந்துகொண்டனர். தொடர்ந்து 30, மே 1ஆம் திகதிகளில் சிறுவர்களுக்கான கடதாசி வேலைப்பாடுகள் (ஓரிகாமி) பயிற்சி மற்றும் கதை சொல்லல் நிகழ்வுகள்,  செ.மகேஸ் (முன்னாள், உதவிக் கல்வி பணிப்பாளர் – வடகிழக்கு மாகாணம்) மற்றும் திரு.றொபின்சன் ஆகியோரால் மேற்கொள்ளப்பட்டது. நிகழ்வில் சிறுவர்களுக்கான சித்திரம் வரைவதற்கான பகுதி அனைவரினதும் கவனத்தினையும் ஈர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது. - [ஊரடங்கு உத்தரவு தொடர்பிலான அறிவிப்பு](https://minnal24.com/%e0%ae%8a%e0%ae%b0%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%aa/): நாட்டில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு உத்தரவு நாளை வியாழக்கிழமை காலை 7 மணிக்கு தளர்த்தப்படுவதாக, ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நாளை வியாழக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை 6 மணி வரை அமுலில் இருக்கும் என , ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. - [2 வருடங்களுக்குப் பின் நியூசிலாந்து முழுமையாக திறக்கப்பட்டது](https://minnal24.com/2-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf/): உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக பல்வேறு நாடுகளும் தங்களது எல்லைப் பகுதிகளை மூடி உத்தரவிட்டன.  2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவத் தொடங்கியதிலிருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நியூசிலாந்து அரசு தங்கள் நாட்டு எல்லைகளை மூடியது. நியூசிலாந்து அரசு கொரோனா தொற்று பரவல் கட்டுப்பாடுகளைப் படிப்படியாக தளர்த்திவந்த நிலையில் நாட்டின் எல்லைகளை தற்போது முழுவதுமாக திறந்துள்ளது. கொரோனா பரவல் குறையத் தொடங்கிய நிலையில் நியூசிலாந்தில் 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டது. இந்நிலையில் நியூசிலாந்து நாட்டில் கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ள நிலையில் தங்களது எல்லைப் பகுதிகளை அந்நாட்டு அரசு திறக்க உத்தரவிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா வெளியிட்டுள்ளார். - [வன்முறைச் சம்பவங்களை அறிவிக்க புதிய இலக்கங்கள்](https://minnal24.com/%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf/): வன்முறைச் சம்பவங்கள் தொட்பில் அறிவிப்பதற்கு 1997 மற்றும் 118 என்ற தொலைபேசி இலக்கங்களையும்,telligp@police.gov.lk  என்ற மின்னஞ்சல் முகவரியையும் பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ளனர். மே 09ஆம் திகதியன்று வன்முறைச் சம்பவங்களுக்காக மக்களை ஒன்று திரட்ட பயன்படுத்தப்பட்ட 59 சமூக ஊடகக் குழுக்கள் அடையாளம் காணப்பட்டு அவற்றின் நிர்வாகிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான விசாரணைகள் நடைபெற்று வருவதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். - [சமூக ஊடக குழுக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை](https://minnal24.com/%e0%ae%9a%e0%ae%ae%e0%af%82%e0%ae%95-%e0%ae%8a%e0%ae%9f%e0%ae%95-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5/): கடந்த திங்கட்கிழமை மே 09ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுக்காக, மக்களை ஒன்று சேர்க்க பயன்படுத்தப்பட்ட 59 சமூக வலைத்தள குழுக்கள் அடையாளம் காணப்பட்டு, அவற்றின் நிர்வாகிகளுக்கு (Admin) எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. - [நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி விஷேட உரை](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa/): ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்றிரவு 9 மணிக்கு நாட்டு மக்கள் மத்தியில் விசேட உரை நிகழ்த்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகியதன் பின்னர் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு ஆற்றும் முதலாவது உரை . தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் ஜனாதிபதியின் இன்றைய உரையில் முக்கிய தீர்மானங்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. - [துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள கூடும் என எச்சரிக்கை](https://minnal24.com/%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%af%e0%af%8b%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%87/): இன்று புதன்கிழமை இரவு ஊரடங்குச் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும், என பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஊரடங்கு காலப்பகுதியில் எந்தவொரு வன்முறையிலும் ஈடுபட வேண்டாம் என்றும், வீதிகளில் தேவையற்ற விதத்தில் குழுக்களாக ஒன்று கூடவேண்டாம் எனவும் பொதுமக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்படக்கூடும் என்றும் பொலிஸார் எச்சரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. - [கிளிநொச்சி வைத்தியசாலை வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் போராட்டம்](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8a%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%b5%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%af%88-%e0%ae%b5/): கிளிநொச்சி வைத்தியசாலை வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று புதன்கிழமை பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றது. வைத்தியசாலை வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராட்டம்  A9 வீதியில் கவனயீர்ப்பு போராட்டமாக முன்னெடுக்கப்பட்டது. அவர்கள் போராட்டத்தின்போது தெரிவிக்கையில், தமது தொழிற்சங்க நடவடிக்கையை மக்கள் நலன் கருதி இன்று கைவிடுவதாகவும், வன்முறைக்கு வன்முறை தீர்வாகாது என்பதால் அமைதியாக நாட்டு மக்கள் போராட வேண்டும், என தெரிவித்துள்ளனர். - [வாகரை கடலில் குளிக்கச் சென்ற நண்பர்கள் மூவர் உயிரிழப்பு](https://minnal24.com/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95%e0%ae%b0%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a/): -வாழைச்சேனை நிருபர்- மட்டக்களப்பு கதிரவெளி வாகரை கடலில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற மூவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர். கதிரவெளி புதூரைச் சேர்ந்த த.சதிஜன் (வயது 26), கதிரவெளியைச் சேர்ந்த ஜீ.நிமல்ராஜ் (வயது 22), பு.அனுராஜன் (வயது 22) ஆகிய இளைஞர்களே இன்று புதன்கிழமை உயிரிழந்துள்ளனர். ஊரடங்கு சட்டம் நாட்டில் அமுல்படுத்தப்பட்ட நிலையில் தமது பொழுதை கழிப்பதற்காக 5 பேர்கொண்ட நண்பர்கள் கதிரவெளி கடற்கரைக்கு சென்று இளநீர் குடித்துவிட்டு பின்னர் கடலில் குளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர்களின் சடலங்களை மீனவர்கள் மற்றும் சுழியோடிகளின் உதவியுடன் மீட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக வாகரை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக கதிரவெளி பிரதேசம் சோகத்தில் உள்ளது. வங்கக் கடலில் தற்போது ஏற்பட்டுள்ள தாழ் அமுக்கம் காரணமாக கடல் அலையில் உயரமும் வேகமும் அதிகமாகவுள்ளது. நேற்று இரவு முதல் மட்டக்களப்பில் தாழ் அமுக்கம் காரணமாக கடல் அலை வழமைக்கு மாறாக […] - [நாளை ஊரடங்கு தளர்த்தப்படுகின்றதா?](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%88-%e0%ae%8a%e0%ae%b0%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a4%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f/): அசம்பாவிதங்கள் எதுவும் இன்று இடம்பெறாத பட்சத்தில் நாளை வியாழக்கிழமை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் என பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார். எனவே, நாட்டில் இன்றைய நிலைவரம் முழுமையாக கண்காணிக்கப்பட்டு அதன் அடிப்படையில் பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை நீக்குவதா? அல்லது நீடிப்பதா என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என்றும், ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் தேவையேற்பட்டால் மீண்டும் ஊரடங்கை அமுல்படுத்த வாய்ப்புள்ளதாகவும், அவர் தெரிவித்துள்ளார். - [தினசரி 10 முதல் 12 மணிநேர மின்வெட்டு?](https://minnal24.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%bf-10-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-12-%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d/): தற்போதைய நிலைமை அடுத்த இரண்டு நாட்களில் தொடர்ந்தால், தினசரி 10 முதல் 12 மணிநேர மின்வெட்டு ஏற்படலாம், எரிபொருள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படலாம், எனவே அரசியல் ஸ்திரத்தன்மையை விரைவில் உறுதிப்படுத்துமாறு இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அரசியல் தலைவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதேவேளை, ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் மின்சாரத் தேவை அதிகரிக்கும் என்பதால், தற்போதைய மின்வெட்டு ஏழரை மணித்தியாலங்களாக நீடிக்கப்படும் அபாயம் உள்ளதாக, இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் எரங்க குடா ஹேவா தெரிவித்துள்ளார். - [மட்டு.ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரியில் மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%86%e0%ae%a9%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae/): மட்டக்களப்பு ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரியில் மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு, அதிபர் ச.சதீஸ்வரன் தலைமையில் கடந்த திங்கட்கிழமை இடம் பெற்றது. மட்டக்களப்பு கல்வி வலய முறைசாரா கல்விப் பிரிவின் உதவிக் கல்விப் பணிப்பாளர் மு.தயானந்தன், தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர்  அ.ஜெகநாதன் ஆகியோர் இந் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர். - [அமைதிவழிப் போராட்டத்தின் மீதான தாக்குதலுக்கு ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு கண்டனம்](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9/): -கிளிநொச்சி நிருபர்- அமைதிவழிப் போராட்டத்தின் மீதான காட்டுமிராண்டித் தனமான தாக்குதலை கண்டிக்கின்றோம், என ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் அவ் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ் அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, இலங்கைத் தீவில் எழுந்த அரசியல் பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து அதற்குத் தீர்வு வேண்டி, கடந்த ஒருமாத காலமாக காலிமுகத்திடலில் இடம்பெற்று வந்த கட்சி சார்பற்ற அமைதிவழிப் போராட்டத்தின் மீது,  திங்கட்கிழமை காடையர்களை திட்டமிட்ட ரீதியில் ஏவி நடாத்தப்பட்ட வன்முறைத் தாக்குதலை ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு ஆகிய நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். தமிழர்களாகிய நாங்கள் இவ்வாறான நிலைமைகளை கடந்த பல தசாப்தங்களாக எதிர்கொண்டவர்கள் என்றவகையில் உங்கள் வலிகளை நாங்கள் புரிந்து கொள்கின்றோம். வன்முறை மற்றும் ஒடுக்கு முறை சார்ந்து, பிரச்சினைகளைத் தீர்க்க முனையும் அபாயகரமான முறைமையை இல்லாது செய்ய அனைத்து முற்போக்கு சக்திகளும் முன்வர வேண்டும் என கோரி நிற்கின்றோம், என தெரிவிக்கப்பட்டுள்ளது. […] - [ஜனாதிபதி இராஜினாமா செய்தால் தான் மக்கள் புரட்சியை முடிவுக்கு கொண்டு வர முடியும்](https://minnal24.com/%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%be%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4/): -மன்னார் நிருபர்- மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி ஆகியோர் காலம் கடந்து முடிவுகள் எடுப்பது தவறு, மக்கள் விரும்பவில்லை என்றால் அவர்கள் தமது பதவிகளை விட்டுச் செல்ல வேண்டும் என்பதே காலத்தின் நீதி. பிரச்சினைகளை ஏற்படுத்தி இன முறுகலை தூண்டி விட்டு இழப்புக்களை சந்தித்த பின்பு தமது பதவிகளை ராஜினாமா செய்வது என்பது முட்டாள்தனம், என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். மன்னாரில் வைத்து இன்று புதன்கிழமை அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாடு மிகவும் கொந்தளிப்பான நிலையில் இருந்து கொண்டு இருக்கின்றது. சிங்கள தேசத்தில் போராட்ட வடிவில் பல விடையங்கள் நிகழ்ந்து கொண்டு இருக்கின்றது. மஹிந்த ராஜபக்ஷவின் ஆரம்ப பிரச்சினையே இன்று பாரிய அளவில் வெடித்துள்ளது. பொருளாதார பிரச்சனை பின்தங்கிய நிலையிலே இவ்வாறான ஒரு சூழலை உருவாக்கி மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ மற்றும் அவருடைய அரசாங்கம் மிக மோசமான […] - [அரசியல் நடவடிக்கைகளுக்காக தனியார் பஸ்களை வழங்குவதில்லை](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%b5%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/): அரசியல் நடவடிக்கைகளுக்காக தனியார் பஸ்களை வழங்குவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை தனியார் பஸ் சங்க சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்களால் காலிமுகத்திடலில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து கொழும்பிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் 20 இற்கும் மேற்பட்ட தனியார் பஸ்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. தனியார் பஸ் உரிமையாளர்கள் அலரிமாளிகையில் நடத்தப்படும் நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக வாடகை அடிப்படையிலும் சிலர் தனிப்பட்ட இலாப நோக்கத்திற்காகவும் இவ்வாறு பஸ்களை வழங்கி இருந்ததாகவும் தெரிவித் அவர், இனி வரும் காலங்களில் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு இடமளிக்கப்போவதில்லையெனவும் குறிப்பிட்டுள்ளார்.   - [நாடு இயல்பு நிலைக்கு திரும்பும் வரை மஹிந்த ராஜபக்ஷ திருகோணமலையில் தங்கியிருப்பார்](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%87%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0/): நாடு இயல்பு நிலைக்கு திரும்பும் வரையில் மஹிந்த ராஜபக்ஷ திருகோணமலை கடற்படை முகாமில் தங்கியிருப்பார். தற்போதைய நிலைமை வழமைக்கு திரும்பியவுடன் அவர் விரும்பிய இடத்திற்கு இடமாற்றம் செய்யப்படுவார், என பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார். போராட்டக்காரர்கள் அலரி மாளிகையை சுற்றி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமையால், பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை திருகோணமலைக்கு அழைத்துச் சென்றதாக, அவர் மேலும் தெரிவித்துள்ளார். - [எரிபொருள் விநியோகம் தற்காலிகமாக தடை](https://minnal24.com/%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%af%e0%af%8b%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95/): நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் மற்றும் தற்போதைய பாதுகாப்பு நிலைமையை கருத்திற்கொண்டு எரிபொருள் விநியோகத்தை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது. பாதுகாப்பு காரணங்களைக் கருத்திற்கொண்டே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. கடந்த திங்கட்கிழமை அமைதியின்மை ஏற்பட்டதைத் தொடர்ந்து நாளை வியாழக்கிழமை காலை 07 மணி வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளது. நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸாரும் இராணுவத்தினரும் களமிறக்கப்பட்ட போதிலும் பல பகுதிகளில் அவ்வப்போது வன்முறைச் சம்பவங்களும் பதற்றமான சூழ்நிலைகளும் பதிவாகி வருகின்றன. ஏற்கனவே எரிபொருள் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள நிலையில், தற்போது நாட்டின் நிலைமையை கருத்திற்கொண்டு இந்தத்தீர்மானத்தை எடுத்துள்ளோம் என்றும் குறிப்பிட்டுள்ளது. - [தினேஸ்  குணவர்தனவின் வீட்டின் மீது தாக்குதல்](https://minnal24.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%87%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f/): அமைச்சரும் முன்னாள் சபை முதல்வருமான தினேஸ்  குணவர்தனவின் கொழும்பில் உள்ள வீட்டின் மீது இனந்தெரியாத நபர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பில் முன்னாள் அமைச்சர் தினேஸ் குணவர்தன, சபாநாயகருக்கு அறிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. - [அடித்து கொலை செய்து புதைக்கப்பட்ட இரண்டு பிள்ளைகளின் தந்தை](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%88-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%88/): மருதங்கேணி வெற்றிலைக்கேணி பகுதியில் இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபர் காணி ஒன்றில் புதைகுழியில் புதைக்கப்பட்டிருப்பதை அவதானித்த மக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து,குறித்த சடலம் நீதவான் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. - [ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் வீட்டிலிருந்து 80 எரிவாயு சிலிண்டர்கள் மீட்பு](https://minnal24.com/%e0%ae%9c%e0%af%8b%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%8b%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9/): குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் வீட்டில் இருந்து 80 எரிவாயு சிலிண்டர்கள் போராட்டக்காரர்களால் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், வடமத்திய மாகாண முன்னாள் ஆளுநர் மஹிபால ஹேரத்தின் வீட்டில் இருந்து 400 யூரியா உர மூட்டைகள் கண்டெடுக்கப்பட்டு உர மூட்டைகள் அனைத்தும் போராட்டக்காரர்களால் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன இதேவேளை, குருநாகல் மேயர் துஷார சஞ்சீவவின் வீட்டிலும் 60 எரிவாயு சிலிண்டர்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. - [எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தம்](https://minnal24.com/%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%af%e0%af%8b%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%9f%e0%af%88%e0%ae%a8/): எரிபொருள் விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை மற்றும் ஊரடங்குச் சட்டத்தை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. - [இந்தியப் படைகளை இலங்கைக்கு அனுப்பும் எண்ணம் எமக்கு இல்லை](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%af%8d/): இந்தியப் படைகளை இலங்கைக்கு அனுப்பும் எண்ணம் தமக்கு இல்லை, என இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உத்தியோகபூர்வ ட்விட்டரின் ஊடாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பல்வேறு ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை நிபந்தனையின்றி நிராகரிப்பதாகவும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் நெருங்கிய அண்டை நாடான இலங்கை, ஜனநாயகம் மற்றும் அதன் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு மிகுந்த மரியாதையைக் கொண்டுள்ளது. பல்வேறு கட்சிகள்.குழுக்கள் மற்றும் தனிநபர்களால் வெளியிடப்படும் அறிக்கைகள் இந்திய அரசின் நிலைப்பாட்டுடன் ஒத்துப்போவதில்லை, என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை பாரதீய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவரான சுப்பிரமணியன் சுவாமி ட்விட்டர் பதிவொன்றை இட்டிருந்தார். ‘இலங்கையில் தற்போது நிலவும் அமைதியின்மையைத் தணிக்க இந்தியப் படையினர் களமிறங்க வேண்டும்’, என அவர் அந்தப் பதிவில் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே இந்திய உயர்ஸ்தானிகராலயம் இவ்வாறு தெரிவித்துள்ளது. - [யாழிலும் கலவரத்தை ஏற்படுத்த முனைகிறார்கள் - அங்கஜன்](https://minnal24.com/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%8f%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81/): -யாழ் நிருபர்- யாழ்.சண்டிலிப்பாய் பகுதியில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் அலுவலகம் முன்பாக இருந்த பதாகைக்கு நேற்று இரவு தீ வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். குறித்த ஊடக அறிக்கையில் யாழிலும் கலவரத்தை ஏற்படுத்த முனைகிறார்கள். தமது அரசியல் தேவைக்காக உசுப்பேற்றுபவர்கள் தொடர்பில் மக்கள் எச்சரிக்கையுடன் இருங்கள். இங்கு வன்முறைகள் இடம்பெற்றால் பாதிக்கப்படுவது எங்கள் மக்களே. நிதானித்து சிந்தித்து செயற்படுங்கள். யாழில் எனது அலுவலகம் எரிக்கப்பட்டது என பரவும் தகவல்கள் தவறானவை என்பதோடுஇ அலுவலக பதாதையிலும் சிறு பகுதி மாத்திரமே வன்முறையை தூண்டும் சிலரால் தீ வைக்கப்பட்டுள்ளது. இச்செயலூடாக யாழில் வன்முறையை தூண்டி குளிர்காய நினைப்பவர்கள் தமது அரசியல் கோழைத்தனத்தை கைவிட வேண்டும். வரலாறு சொல்லும் தமிழர் வீரங்கள் இந்த கோழைத்தனத்தை ஏற்றுக்கொள்ளாது. நாட்டில் அமைதிவழி போராட்டங்களில் ஈடுபட்ட மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட வன்முறைகளை நாம் கண்டித்துள்ள நிலையில் எம்மீது தாக்குதல் நடாத்தி தமது அரசியல் […] - [மொட்டின் போக்கு காரணமாக அரசின் பங்காளி கட்சி அந்தஸ்த்திலிருந்து விலகிக்கொள்கிறோம் - முபாற‌க் அப்துல் ம‌ஜீத்](https://minnal24.com/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95/): -கல்முனை நிருபர்- ஸ்ரீ ல‌ங்கா பொதுஜ‌ன‌ பெர‌முன‌ அர‌சினால் முஸ்லிம் ச‌மூகமோ, எம‌து க‌ட்சியோ உருப்ப‌டியான‌ எந்த‌ ந‌ன்மையும் அடைய‌வில்லை என்பதுட‌ன், நாட்டை பொருளாதார‌ ரீதியில் க‌ட்டியெழுப்ப‌தில் அக்கட்சி பாரிய‌ த‌வ‌றுக‌ளை செய்து விட்ட‌தால் 2019ம் ஆண்டு முத‌ல் எம‌து க‌ட்சி பொதுஜ‌ன‌ பெர‌முன‌வுட‌ன் செய்து கொண்ட‌ புரிந்துண‌ர்வு ஒப்ப‌ந்த‌த்திலிருந்து வெளியேறி சுயாதீன‌மாக‌ செய‌ற்ப‌டும் என்ப‌தை மீண்டும் நாட்டு ம‌க்க‌ளுக்கு ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி (உல‌மா க‌ட்சி) அறிவித்துக்கொள்கிறது, என‌ அக்க‌ட்சியின் த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்துள்ளார். அவ‌ர் மேலும் தெரிவித்த‌தாவ‌து, ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ச நீண்ட‌ கால‌ அர‌சிய‌ல் அனுப‌வ‌ம் உள்ள‌வ‌ராக‌ இருந்த‌ போதும் த‌ன‌து அருகில் க‌ள்வ‌ர்க‌ளையும், கொள்ளைய‌ர்க‌ளையும் வைத்துக்கொண்டிருந்த‌தால் நாடு அத‌ள‌ பாதாள‌த்தில் விழுந்து விட்ட‌து. க‌ட‌ந்த‌ நல்லாட்சி என்ப‌து முஸ்லிம்க‌ளின் 99 வீத‌ ஓட்டுக‌ளால் வ‌ந்தும் முஸ்லிம் ச‌மூக‌த்துக்கு அநியாய‌மே செய்த‌து. இந்த‌ நிலையில் ம‌ஹிந்த‌ த‌லைமையிலான‌ பெர‌முன‌வுட‌ன் இணையும் ப‌டி எம‌க்கு வ‌ந்த‌ அழைப்பை […] - [தமிழர் தாயகத்தில் வன்முறைகளுக்கு இடமளிக்க வேண்டாம் - சுகாஷ்](https://minnal24.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1/): -யாழ் நிருபர்- தமிழர் தாயகத்தில் வன்முறைகளுக்கு இடமளிக்க வேண்டாம், என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் க.சுகாஷ் தெரிவித்துள்ளார். அவர் மேலும், நாட்டின் இந்த நிலமைக்கும் தமிழ்த் தேசத்தின் அவலத்திற்கும் அங்கஜன் இராமநாதன், டக்ளஸ் தேவானந்தா, கருணா, பிள்ளையான், வியாழேந்திரன் மற்றும் தமிழ்த் தேசியம் பேசும் கட்சிகளுக்குள் மறைந்திருந்து அரச நிகழ்ச்சி நிரலைக் கனகச்சிதமாக நகர்த்துபவர்களும் காரணமென்பதில் மாற்றுக் கருத்துக்களுக்கு இடமில்லை. அதற்காகத் தமிழர் தாயகத்தில் அவர்களைத் தாக்குவதையோ அல்லது அவர்களது அலுவலகங்களுக்குத் தீ வைப்பதையோ ஜனநாயக அரசியலில் ஏற்றுக்கொள்ள முடியாது. இவர்களுக்கான சரியான தண்டனை அடுத்த பொதுத் தேர்தலில் இவர்களுக்கு வாக்களிக்காது முற்றாகப் புறக்கணித்து இவர்களை அரசியல் அநாதைகளாக்குவதே. சிங்கள தேசத்தின் பொருளாதார மோதலில் தமிழ்த் தேசம் சிக்குப்படாது அமைதியாக இருப்பதே உசிதமானது. தமிழர் தாயகத்திலிருந்து சிங்களக் கட்சிகளுக்கு ஆதரவளித்த மக்களில் ஒருசாராருக்குத் திருந்துவதற்கு சந்தர்ப்பமொன்றை வழங்கி அவர்களையும் தமிழ்த் தேசியத்தின்பால் ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளையும் கருத்துருவாக்கத்தையும் முன்னெடுப்பதே […] - [க.பொ.த சாதாரண தரப்பரீட்சை திட்டமிட்ட திகதியில் இடம்பெறும்](https://minnal24.com/%e0%ae%95-%e0%ae%aa%e0%af%8a-%e0%ae%a4-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a3-%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%af%88-2/): 2021 ஆம் கல்வி ஆண்டுக்கான  கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பிற்போடப்பட்டுள்ளதாக, இணையத்தளங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பரப்பப்படும் தகவல்களில் உண்மை இல்லை, என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை  எதிர்வரும் 23 ஆம் திகதி முதல், ஜுன் மாதம் முதலாம் திகதிவரை இடம்பெறவுள்ளது. இந்நிலையில், இவ்வாறு பரப்பப்படும் போலி தகவலில் எவ்வித உண்மையும் இல்லை என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது - [நாள்பட்ட நோயினால் 3000 பேர் உயிரிழப்பு](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%a8%e0%af%8b%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-3000-%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%89/): உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் நாள்பட்ட நோய்களுக்கு உரிய சிகிச்சை பெற முடியாமல் சுமார் 3,000 உக்ரேனியர்கள் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு ரஷ்யாவின் போர் காரணமாக உக்ரைனில் சுகாதார சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மருத்துவமனைகள் மற்றும் சுகாதார சேவை மையங்கள் மீது இது வரை ரஷ்யா 200 தாக்குதல்களை நடத்தியுள்ளது என உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய பிராந்திய பணிப்பாளர் ஹான்ஸ்க்ளுக் தெரிவித்துள்ளார். ஐ.நா. 53 உறுப்பு நாடுகள் மற்றும் உலக சுகாதார அமைப்பின் சிரேஷ்ட அதிகாரிகள் பங்கேற்ற கூட்டத்திலேயே நேற்று அவர் இந்தத் தகவலை வெளியிட்டார். உக்ரைனில் உள்ள 40 வீதமான குடும்பங்களில் குறைந்தபட்சம் ஒருவராவது நாட்பட்ட நோய்களுக்கு சிகிச்சை தேவைப்படுபவராக உள்ளார். ஆனால், தற்போதைய சூழலில் அவர்கள் சுகாதார சேவைகளை அணுக முடியாதுள்ளனர். இதன் விளைவாக குறைந்தது 3,000 தவிர்க்கக்கூடிய இறப்புகள் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.   - [மஹிந்தானந்தவின் அலுவலகத்தின் மீது கல்வீச்சு](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%b9%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b2%e0%af%81%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%95%e0%ae%a4/): நாவலப்பிட்டி நகரில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்தவின் அலுவலகத்துக்கு  முன்பாக டயர்களை எரித்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதுடன், அலுவலகத்தின் மீது கல்வீச்சு தாக்குதலை அப்பிரதேச வாசிகள் நடத்தியுள்ளனர். நேற்று செவ்வாய்க்கிழமை மாலையே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.  இதனால் அலுவலகம் சேதமடைந்த நிலையில்,  பொலிஸாரால் போராட்டக்காரர்கள் கலைக்கப்பட்டுள்ளனர். - [நான்கு மாவட்டங்களுக்கு -மண்சரிவு அபாய எச்சரிக்கை](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/): மலையகம் உட்பட பல பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்து வரும் காற்றுடன் கூடிய கடும்மழையினால், சிறு சிறு சேதங்கள் இடம்பெற்றுள்ளதுடன் மண்சரிவு அபாயமும் ஏற்பட்டுள்ளது. நாட்டின் நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையை  தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய களுத்துறை மாவட்டத்தின் புளத்சிங்ஹள மற்றும் இங்கிரிய ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவுக்கும் மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், மாத்தறை மாவட்டத்தின் பிட்டபெத்தர மற்றும் கொட்டபொல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், இரத்தினபுரி மாவட்டத்தின் குருவிட்ட, கிரியெல்ல, எலபாத்த, அயாகம, நிவித்திகல, எஹெலியகொட, கலவான மற்றும் இரத்தினபுரி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. - [இன்றைய மின்தடை விபரம்](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%88-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a4%e0%ae%9f%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/): நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் மூன்று மணித்தியாலத்திற்கு அதிகளவான காலம் மின் விநியோகத்தடை  இடம்பெறும். அதற்கமைய,வலயங்களின் அடிப்படையில் மூன்று மணித்தியாலமும் 20 நிமிடமும் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ‘ஏ’ முதல் ‘எல்’ வரையான வலயங்களிலும், ‘பி’ முதல் ‘டபிள்யூ’ வரையான வலயங்களிலும் காலை 09 மணி முதல் மாலை 05.30 வரையான காலப்பகுதிக்குள் 2 மணித்தியாலமும் அத்துடன், குறித்த வலயங்களில் மாலை 05.30 முதல் இரவு 09.30 வரையான காலப்பகுதிக்குள் 1 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது. மேலும், ‘எம்’, ‘என்’, ‘ஓ’  ‘எக்ஸ்’, ‘வை’ மற்றும் ‘இஸற்’ ஆகிய முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் காலை 05 மணி முதல் காலை 08 மணி வரையான காலப்பகுதிக்குள் 3 மணித்தியாலமும்  மேலும்,  கொழும்பு வர்த்தக வலயத்திற்கு உட்பட்ட பகுதியில் காலை 6 மணி முதல் 9 மணி வரையான காலப்பகுதியில்  3 மணி நேரம் […] - [பாதிக்கப்பட்டவர்கள் குறித்து பொலிஸ் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிவிப்பு](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1/): காலிமுகத்திடல் தாக்குதலைத் தொடர்ந்து நாடு முழுவதும் பரவிய வன்முறைகளில் இதுவரை 9 பேர் உயிரிழந்தனர். 250இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், ஆளும் கட்சியைச் சேர்ந்த 103 பேரின் சொத்துக்கள் அடித்துடைக்கப்பட்டன – சூறையாடப்பட்டன. இதில், முன்னாள் அமைச்சர்கள், அரசியல்வாதிகளுக்கு சொந்தமான 38 வீடுகள் தீக்கிரையாக்கப்படடுள்ளன. 88 வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. இவற்றில் 47 வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. ஒரு பாராளுமன்ற உறுப்பினர், பிரதேசசபை தவிசாளர், இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். அத்துடன், 250இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இவர்களில் 232 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் ஐவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் – அவர்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். - [அங்கஜனின் அலுவலகத்தின் காட்சி பலகைக்கு தீ வைப்பு](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b2%e0%af%81%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95/): -யாழ் நிருபர்- யாழ். சண்டிலிப்பாயில் அமைந்துள்ள அங்கஜனின் மானிப்பாய் தொகுதி காரியாலயத்தில் உள்ள காட்சிப் பலகைக்கு தீ மூட்டப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு இடம்பெற்றுள்ளது. இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியதையடுத்து, பெருமளவான புலனாய்வாளர்கள் அங்கு குவிக்கப்பட்டனர். - [நாடாளுமன்ற விசேட அமர்வுகள் இடம்பெறாது](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9a%e0%af%87%e0%ae%9f-%e0%ae%85%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%81%e0%ae%95/): அமைச்சர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தும் வரையில் நாடாளுமன்ற விசேட அமர்வுகள் இடம்பெறாது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். அத்தோடு, இன்று புதன்கிழமை இடம்பெறவிருந்த கட்சித் தலைவர்களின் கூட்டமும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சபாநாயகர் மேலும் குறிப்பிட்டார். - [மட்டு.ஏறாவூரிலும் தீ வைப்பு](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%8f%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b5%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80-%e0%ae%b5%e0%af%88%e0%ae%aa/): ஏறாவூரில் ஹாபிஸ் நசீருக்கு சொந்தமான அவரது காரியாலயம், வீடு மற்றும் அவரது தம்பியின் ஹோட்டல் என்பன தற்போது ஆர்பாட்டக்காரர்களினால் உடைக்கப்பட்டு தீ வைக்கப்பட்டுள்ளது. - [பாதுகாப்பு கருதி கட்சித் தலைவர்களின் கூட்டம் ரத்து](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%a4/): நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பாக ஏற்பட்டுள்ள அச்ச சூழ்நிலை காரணமாக நாளை புதன்கிழமை நடைபெறவிருந்த கட்சித் தலைவர்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திய பின்னரே விசேட பாராளுமன்ற அமர்வு கூட்டப்படும் எனவும், சபாநாயகர் மேலும் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு சபாநாயகர் இன்று ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் நாடாளுமன்றம் எதிர்வரும் 17 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து கலந்துரையாடுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களை கூட்டுமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். - [துப்பாக்கி சூட்டில் நால்வர் படுகாயம்](https://minnal24.com/%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d/): ரத்கம பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரத்கம பிரதேச சபைத் தலைவரின் வீட்டிற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போதே நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் இதுவரை தெரியவரவில்லை. - [புதைக்கப்பட்ட நிலையில் ஆணொருவரின் சடலம் : மர்மம் என்ன?](https://minnal24.com/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%86/): -கிளிநொச்சி நிருபர்- யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணியில் ஆண் ஒருவரது உடலம் புதைக்கப்பட்டுள்ளதாக, சந்தேகத்தின் பெயரில் குறித்த இடத்தினை மருதங்கேணி பொலிஸார் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதாகவும், நீதிமன்ற உத்தரவை பெற்று குறித்த இடத்தை தோண்டுவதற்க்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் மருதங்கேணி பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், இராசன் சிவஞானம் எனும் இரண்டு பிள்ளைகளின் தந்தையின் சடலமே புதைக்கப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படுவதுடன், இது குடும்ப தகராறு காரணமாக இடம் பெற்றிருக்கலாம் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த கொலையுடன் சம்மந்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் சந்தேக நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், மருதங்கேணி பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. - [ஊரடங்குச் சட்டம் நீடிப்பு](https://minnal24.com/%e0%ae%8a%e0%ae%b0%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d-2/): நாடளாவிய ரீதியில் அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் நாளை மறுதினம் வியாழக்கிழமை காலை 7.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. - [இலங்கையின் வன்முறைச் சம்பவங்கள் குறித்து ஐ.நா. கண்டனம்](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d/): கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வரும் இலங்கையில் அதிகரித்து வரும் வன்முறைச் சம்பவங்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் மிச்செல் பச்லெட் கண்டனம் தெரிவித்துள்ளார். கொழும்பில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது, முன்னாள் பிரதமரின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதை அடுத்து, ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு எதிரான வன்முறைகள் உட்பட இலங்கையில் வன்முறைகள் அதிகரித்து வருவதால், தாம் மிகவும் கவலையடைந்துள்ளதாக பச்லெட் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். அனைத்து வகையான வன்முறைகளையும் நாங்கள் கண்டிக்கிறோம் மற்றும் அனைத்து தாக்குதல்கள் குறித்தும் விரிவான மற்றும் வெளிப்படையான விசாரணையை தொடங்குமாறு அதிகாரிகளை வலியுறுத்துகிறோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். - [103 வீடுகளும் 88 வாகனங்களும் கடுமையான சேதம்](https://minnal24.com/103-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-88-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95%e0%ae%a9%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95/): நாடு முழுவதும் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களில் 103 வீடுகளுக்கு கடுமையான சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை காலை 6 மணி வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற சம்பவங்களே இவ்வாறு பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தோடு, குறித்த காலப்பகுதியில் 88 வாகனங்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. - [பிரதி பொலிஸ்மா அதிபர் மீது தாக்குதல்; இருவர் கைது](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80/): மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொள்ளுபிட்டிய பொலிஸாரின் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பு – கங்காராம விஹாரைக்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது, கூட்டத்தை கலைக்க பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் இடம்பெற்ற வேளையில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து, சிவில் உடையில் இருந்துள்ளதாக தெரியவந்துள்ளது. தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக, அங்கிருந்து அவர் ஓடி தப்ப முயன்றபோதிலும், குறித்த குழுவினர் பின் தொடர்ந்து அவரை தாக்கியுள்ளனர். எனினும், தாக்குதல் சம்பவத்திலிருந்து பொலிஸார் அவரை மீட்டு பாதுகாப்பாக, அங்கிருந்து அனுப்பிவைத்துள்ளனர். - [துப்பாக்கிச் சூட்டுக்கு பாதுகாப்பு அமைச்சு உத்தரவு](https://minnal24.com/%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/): பொதுச் சொத்துக்களைக் கொள்ளையடிப்பவர்கள் அல்லது சேதம் விளைவிக்கும் நபர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்வதற்கு முப்படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அத்தோடு, நபர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவர்கள் மீதும் துப்பாக்கி சூடு நடத்த முடியுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சினால் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. - [அமைதியைப் பேணுமாறு ஜனாதிபதி கோரிக்கை](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%a3%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%81-%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf/): அரசியல் சார்புகளைப் பொருட்படுத்தாமல், அனைத்து பொதுமக்களுக்கு எதிரான வன்முறைகளையும் பழிவாங்கல்களையும் நிறுத்தி அமைதியைப் பேணுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். டுவிட்டர் பதிவொன்றின் ஊடாக ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த பதிவில், பொருளாதார நெருக்கடி தீர்வுக்கு, அரசியலமைப்பின் ஆணைக்கு அமைய, பொது இணக்கப்பாட்டு ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்   - [தங்காலையில் உள்ள டி.ஏ.ராஜபக்ஷவின் உருவச்சிலை உடைப்பு](https://minnal24.com/%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3-%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%8f-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c/): தங்காலையில் உள்ள டி.ஏ.ராஜபக்ஷவின் உருவச்சிலை இன்று செவ்வாய்க்கிழமை சிலரால் உடைக்கப்பட்டுள்ளது. டி.ஏ. ராஜபக்ஷ, முன்னாள் பிரதமரான மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர்களான சமல் ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோரின் தந்தை ஆவார். கொழும்பில் நேற்றைய தினம் மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்களால் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமையினால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் டி.ஏ.ராஜபக்ஷவின் உருவச்சிலையை உடைத்துள்ளனர்.   - [கைவிலங்கு மற்றும் கைத்துப்பாக்கியுடன் தப்பியோடிய இளைஞன்](https://minnal24.com/%e0%ae%95%e0%af%88%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81/): -கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியில் நேற்று திங்கட்கிழமை மாலை பொலிஸாரினால் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவ்வேளை குறித்த இளைஞன் பொலிஸாரிடமிருந்து கைத்துப்பாக்கி மற்றும் கைவிலங்கு என்பவற்றை எடுத்துக்கொண்டு தப்பியோடியுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில், கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியில் தருமபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இராமநாதபுரம் பொலிஸ் காவல் நிலையத்தில் கடமைபுரியும் பொலிஸ் அதிகாரிகள் மூவர் நேற்று பிற்பகல், கசிப்பு உடமையில் வைத்திருந்நதாக தெரிவித்து இளைஞர் ஒருவரைக் கைது செய்ய சென்றிருந்தனர். அந்நிலையில், பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டது அப்போது, அச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இளைஞன் கைவிலங்குடன் பொலிஸாரி்ன் கைத்துப்பாக்கியையும் பறித்துக் கொண்டு தப்பியோடியுள்ளார். அதன்பின், குறித்த பகுதியில் அதிகளவான பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு தேடுதல் மேற்கொள்ளப்பட்டது. எனினும், குறித்த தப்பியோடிய இளைஞனை கைது செய்ய முடியவில்லை. அதனைத்தொடர்ந்து, இளைஞரின் தாயார் மற்றும் கிராம மக்களிடம் மேற்கொள்ளப்பட்ட பேச்சு வார்த்தையின் அடிப்படையில் தப்பியோடிய இளைஞனிடமிருந்து கைத்துப்பாக்கி மற்றும் […] - [யாழில் அரசியல் பிரமுகர்களின் அலுவலகங்களுக்கு முன்னால் இராணுவம் குவிப்பு](https://minnal24.com/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95/): -யாழ் நிருபர்- யாழ். மாவட்டத்திலுள்ள அரசியல் பிரமுகர்களின் அலுவலகங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படலாம் என்ற அச்சத்தில், தீவிர பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று திங்கட்கிழமை கொழும்பில் ஏற்பட்ட அமைதியின்மையினை அடுத்து அரசியல் பிரமுகர்களின் வீடுகள் மற்றும் அவர்களுக்குச் சொந்தமான விடுதிகள் போராட்டக்காரர்களினால் தீக்கிரையாக்கப்பட்டன. இந்நிலையில் இன்றும் அந்த பதற்றநிலை காணப்படும் பட்சத்தில் யாழிலுள்ள அங்கஜன் ராமநாதன் மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரது அலுவலகங்களுக்கு பாரிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அலுவலகங்களைச் சூழ காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். - [சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீது தாக்குதல் ?](https://minnal24.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b0%e0%af%87%e0%ae%b7%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%85/): சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஒரு குழுவினர் மேற்கொண்ட தாக்குதலைத் தொடர்ந்து காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு கங்காராமவிற்கு அருகில் இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது. கூட்டத்தை கலைக்க பொலிசார் வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. - [குமார் வெல்கமவின் உடல் நிலை குறித்து அறிவிப்பு](https://minnal24.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8/): நாட்டில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற அமைதியின்மையின் போது ஆத்திரமடைந்த பொதுமக்கள் குழுவினால் தாக்கப்பட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவின் உடல்நிலை கவலைக்கிடமாக இல்லை என அவரது சகோதரர் நளின் வெல்கம தெரிவித்துள்ளார். டுவிட்டர் பதிவிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.  தனது சகோதரர் பாதுகாப்புக் காரணங்களால் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) இருப்பதாகவும் மற்றபடி நலமாக இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் “எந்தவொரு எலும்பு முறிவுகளும் இல்லை. வெறும் வெட்டுக் காயங்கள் மட்டுமே உள்ளது. அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்” என்று அவர் தனது ட்விட்டர் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.   - [பிரதமராகத் தயார் - கரு ஜயசூரிய](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b0%e0%af%81-%e0%ae%9c%e0%ae%af%e0%ae%9a/): அனைவரும் இணங்கினால் சிறந்த செயல் திட்டத்துடன் மிகக்குறுகிய காலத்துக்கு நாட்டின் பிரதமராகத் தயார் என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். நாட்டில் அரசியல், பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ள நிலையில் அனைத்து  கட்சிகளும் உள்ளடங்கிய சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைக்குமாறு பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் பிரதமர் பதவியை ஏற்குமாறு முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதோடு முன்னாள் அமைச்சர் டளஸ் அழகப்பெரும, மைத்திரிபால சிறிசேன, நிமல்சிறிபால டிசில்வா ஆகியோரின் பெயர்களும் முன்வைக்கப்பட்டன. இந்த நிலையில் முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரியவின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.   - [திருகோணமலை கடற்படை முகாம் முன்னால் பதற்றமான சூழ்நிலை](https://minnal24.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8b%e0%ae%a3%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%ae/): முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ மற்றும் அவரது குடும்பத்தினர் திருகோணமலை கடற்படை முகாமில் தஞ்சம் புகுந்துள்ளதாகவும், அங்கிருந்து வெளிநாட்டிற்க்கு தப்பிசெல்ல முயல்வதாகவும் தகவல்கள் வெளியானது. இதனையடுத்து, பொதுமக்கள் திருகோணமலை கடற்படை தளத்தை சுற்றிவளைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது - [அவுஸ்திரேலியாவில் பொதுத் தோ்தல் ஆரம்பம்](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%b5%e0%af%81%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%87%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4/): அவுஸ்திரேலியாவில் பொதுத் தோ்தலில் முன்கூட்டியே வாக்களிக்கும் நடைமுறை நேற்று திங்கட்கிழமை தொடங்கியது. அதிகாரபூா்வ தோ்தல் திகதி மே 21 என்றாலும் பொதுமக்களின் வசதியைக் கருத்தில் கொண்டு முன்கூட்டியே வாக்களிக்கும் முறை அவுஸ்திரேலியாவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தோ்தலுக்காக மொத்தம் 550 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்நாட்டில் அனைவரும் தோ்தலில் வாக்களிப்பது கட்டாயமாகும். 1.7 கோடி போ் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனா். பணி, பயணம் காரணமாக தோ்தல் தினத்தில் வாக்களிக்க முடியாதவா்கள் முன்கூட்டியே வாக்களிக்க முடியும். கொரோனா பரவல் பிரச்னை இருப்பதால், மக்கள் ஒரே நாளில் வாக்குச் சாவடியில் கூடாமல் இருக்கவும் இந்த முன்கூட்டியே வாக்களிக்கும் முறை உதவும். 40 சதவீதத்துக்கும் மேற்பட்டோா் தோ்தல் திகதிக்கு முன்பே தங்கள் வாக்குகளைச் செலுத்திவிடுவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. சமீபத்திய கருத்துக் கணிப்புகளின்படி மத்திய-இடது தொழிலாளா் கட்சி தலைமையான எதிா்க்கட்சி கூட்டணி, பிரதமா் ஸ்காட் மொரிஸனின் கன்சா்வேடிவ் கூட்டணியைவிட அதிக இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. - [திருமலை முகாமுக்குள் மகிந்த குடும்பமா?](https://minnal24.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%bf/): திருகோணமலை கடற்படை முகாம் முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடு க்கப்பட்டு வருகிறது. ராஜபக்ஷ குடும்பத்தினர் குறித்த முகாமில் இருப்பதாக தெரிவித்து சிலர் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. - [“கோட்டாகோகம” மீது தாக்குதல் சி.ஐ.டி விசாரணைகள் ஆரம்பம்](https://minnal24.com/%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%95%e0%af%8b%e0%ae%95%e0%ae%ae-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/): முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் குழுவொன்று அலரி மாளிகைக்கு வெளியே நேற்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவிற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு பொலிஸ் மா அதிபர் இன்று செவ்வாய்க்கிழமை பணிப்புரை விடுத்துள்ளார். முன்னாள் பிரதமருக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக அலரிமாளிகைக்கு வந்த சிலர், அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை தாக்கி சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக பொலிஸார் தெரிவித்தனர். பின்னர் அவர்கள் காலி முகத்திடலில் உள்ள “கோட்டகோகம” எதிர்ப்பு தளத்தில் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த நிலையில் இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக தேவையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு, பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார். - [சிறைச்சாலைகளில் 58 கைதிகளை காணவில்லையாம்!](https://minnal24.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-58-%e0%ae%95%e0%af%88%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3/): சிறைச்சாலை புனர்வாழ்வு முகாமிற்கு நிர்மாணப் பணிகளுக்கான பயிற்சி நடவடிக்கைகளுக்காக சிறைக் கைதிகளை ஏற்றிச்சென்ற பஸ் மீது நேற்று திங்கட்கிழமை இரவு  வன்முறைக் கும்பலொன்று தாக்குதல் நடத்தி இருந்தது. இந்நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்களின் தாக்குதலின் போது 58 கைதிகள் காணாமல் போயுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்தார். மேலும், நேற்றைய தினம் ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்வதற்காக கைதிகள் அனுப்பிவைக்கப்பட்டதாக வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லையெனவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் மேலும் குறிப்பிட்டார்.   - [நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%89%e0%ae%9f%e0%ae%a9%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%95/): நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு ஜனாதிபதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய நிலைமை மற்றும் எடுக்கவேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து நாளை புதன்கிழமை நடைபெறும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படும் என, சபாநாயகர் தெரிவித்துள்ளார். கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு நாளை காலை 10 மணிக்கு அழைப்பு விடுததுள்ளதாகவும் தற்போதைய சூழ்நிலையில், கூட்ட நேரத்தில் மாற்றம் ஏற்படலாம் எனவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார். தற்போதைய நெருக்கடி நிலை குறித்து மாத்திரம் பேசுவதற்கு மாத்திரம் சபாநாயகர் சபையைக் கூட்டுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. - [எம்.பி.க்கள் நாட்டை விட்டு வெளியேறும் நுழைவு தடுக்கப்பட்டுள்ளது](https://minnal24.com/%e0%ae%8e%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f/): நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாட்டை விட்டு தப்பிச் செல்வதை தடுக்கும் நோக்கில் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தைச் சேர்ந்த இளைஞர் குழுவொன்று, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் நுழைவாயிலை மறித்து, நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுத்துள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. விமான நிலைய நுழைவாயிலை இளைஞர்கள் வாகனங்களுடன் முற்றுகையிட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. - [மோதல்களில் கடந்த 24 மணித்தியாலத்தில் 7 பேர் பலி , 231 பேர் படுகாயம்](https://minnal24.com/%e0%ae%ae%e0%af%8b%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-24-%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/): இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற மோதல்களில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் , 231 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் 218 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மோதல்களில் காயமடைந்தவர்கள் பலர் நேற்று இரவும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தகவல்கள் தெரிவிக்கின்றன. வீரகெட்டிய:- வீரகெட்டிய பிரதேச சபைத் தலைவரின் இல்லத்தில் நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் , மேலும் ஐவர் படுகாயமடைந்துள்ளனர். நிட்டம்புவ:- பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தரும் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் நிட்டம்புவவில் உயிரிழந்துள்ளனர். அலரிமாளிகை மற்றும் ஜனாதிபதி அலுவலகம் முன்பாக அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து நிட்டம்புவையில் திரண்டிருந்த மக்கள் மீது நாடாளுமன்ற உறுப்பினருடன் வந்தவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் 27 வயதுடைய […] - [சமல் ராஜபக்சவின் அலுவலகம் மீது சற்று முன்னர் தாக்குதல்](https://minnal24.com/%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%aa%e0%ae%95%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b2%e0%af%81%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%95/): பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்சவின் தெபரவெவ அலுவலகம் மீது சற்றுமுன்னர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. - [திருகோணமலை படைத்தளத்திற்கு தப்பியோடும் அரச பிரமுகர்கள்](https://minnal24.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8b%e0%ae%a3%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1/): அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்கள் பலர் தப்பித்து திருகோணமலை படைத்தளத்தில் தரையிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் மனைவி லிமினி மற்றும் அவரது மகன் கேசரா ஆகியோர் இன்று செவ்வாய்க்கிழமை காலை கொழும்பில் இருந்து திருகோணமலைக்கு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்கள் பலர் திருகோணமலை படைத்தளத்தில் வந்திறங்கியுள்ளனர் - [அலரி மாளிகையிலிருந்து வெளியேறினார் மஹிந்த ராஜபக்ஷ](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%b2%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%af%86/): முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இராணுவப் பாதுகாப்புடன் இன்று செவ்வாய்க்கிழமை காலை அலரிமாளிகையிலிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. - [நான் வாழும் வரை அரசியலுக்கு திரும்ப மாட்டேன்](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%88-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%81%e0%ae%95/): “நான் அரசியலில் இருந்து ஒரு ரூபாய் கூட சம்பாதிக்கவில்லை, பிரத்தியேக வகுப்புகளை நடத்திச் சம்பாதித்த சொத்துக்கள் அனைத்தும் தீயிட்டு எரித்து நாசமாக்கப்பட்டுள்ளது”, என பாராளுமன்ற உறுப்பினர் குணபால ரத்னசேகர தெரிவித்துள்ளார். மேலும், நான் வாழும் வரை அரசியலுக்கு திரும்ப மாட்டேன், என்றும் தனது முகநூல் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார் - [ஒரு இலட்சம் பேர் நாட்டைவிட்டு வெளியேற்றம்](https://minnal24.com/%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88%e0%ae%b5/): இந்த வருடம் இதுவரையில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் வெளிநாட்டு வேலைக்காக நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக, உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இவ்வாறு வெளியேறியவர்களில் பெரும்பாலானோர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைக்குச் சென்றுள்ளதோடு, எதிர்வரும் ஆண்டில் வெளிநாட்டு வேலைவாய்ப்பில் வளர்ச்சியடைவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக அதன் செயலாளர் எம்.எப்.எம்.அர்ஷாத் தெரிவித்துள்ளார். இலங்கை மத்திய வங்கியின் 2021 வருடாந்த அறிக்கையின் படி கடந்த வருடம் வேலைக்காக வெளிநாடுச் சென்ற இலங்கையர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 21 ஆயிரத்து 795ஆக பதிவாகியுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 127 சதவீதம் அதிகமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   - [ஊரடங்கு உத்தரவால் மன்னாரில் இயல்பு நிலை ஸ்தம்பிதம்](https://minnal24.com/%e0%ae%8a%e0%ae%b0%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%89%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b0/): -மன்னார் நிருபர்- நாட்டில் நேற்று திங்கட்கிழமை ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை தொடர்ந்து நாட்டில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவுக்கு அமைவாக இன்று செவ்வாய்க்கிழமை மன்னார் மாவட்டத்தின் இயல்பு நிலை முழுமையாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. கொழும்பில் அமைதியான முறையில் போராட்டம் மேற்கொண்டவர்கள் மீது நேற்று திங்கட்கிழமை அரச தரப்பு ஆதரவாளர்கள் மேற்கொண்ட கடுமையான தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் பதற்ற நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று திங்கட்கிழமை மாலை 7 மணி முதல் நாளை புதன்கிழமை  காலை 7 மணி வரை நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் மன்னார் மாவட்டத்திலும் இன்று செவ்வாய்க்கிழமை  காலை முதல் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அரச, தனியார் போக்குவரத்துச் சேவைகள் இடம் பெறவில்லை, பாடசாலைகளும் இடம் பெறவில்லை. இதனால் மன்னார் மாவட்டத்தின் இயல்பு நிலை முழுமையாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. - [பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் உயிரிழப்பு](https://minnal24.com/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%af%8b%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/): நேற்று திங்கட்கிழமை இரவு அலரிமாளிகையில் இடம்பெற்ற மோதலை கட்டுப்படுத்த கண்ணீர் புகை குண்டு அடித்தபோது காயமடைந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. - [இன்றைய வானிலை முன்னறிவித்தல்](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%88%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf-6/): நாட்டின் பல பிரதேசங்களில் இன்று மழையுடனான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழையும் எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். தீவு முழுவதும் குறிப்பாக மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்.     - [இறக்காமம் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற காணிக் கச்சேரி](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%ae%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%ae%b2%e0%ae%95%e0%ae%a4-2/): -கல்முனை நிருபர்- இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட, இறக்காமம் – 01 கிராம உத்தியோகத்தர் பிரிவில் நீண்ட காலமாக பராமரித்து, குடியிருந்து வரும் காணிகளுக்கு அனுமதிப்பத்திரம் கோரி விண்ணப்பித்தவர்களுக்கான காணிக் கச்சேரி நேற்று திங்கட்கிழமை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம். றஸ்ஸான் (நளீமி) தலைமையில் இடம்பெற்ற இந்த காணிக்கச்சேரியில் பிரதேச செயலகக் காணி உத்தியோகத்தர் என்.எல்.எம். மாஹிர் மற்றும் காணிப் பிரிவு உத்தியோகத்தர்கள் மற்றும் பிரிவிற்குரிய கிராம உத்தியோகத்தர் ஆகியோர் கலந்துகொண்டதோடு குறித்த பொது மக்களும் பங்குபற்றியிருந்தனர். - [பிரதமரின் இராஜினாமா தொடர்பில் வர்த்தமானி அறிவிப்பு வெளியீடு](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%be%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0/): பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச ராஜினாமா செய்வது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. - [நாடளாவிய ஊரடங்கு சட்டம் நீடிப்பு](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b3%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%8a%e0%ae%b0%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d/): நாடு முழுவதும் நேற்று திங்கட்கிழமை அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, நாடளாவிய ரீதியில் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் நாளை புதன்கிழமை காலை 7.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளின் எழுத்துமூல அனுமதியின்றி பொது வீதிகள்இ , தொடருந்து மார்க்கங்கள், பொது பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், வேறு பொது இடங்களிலும் கடற்கரைகளிலும் இருப்பதற்கு அனுமதி மறுக்கப்படுவதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. - [ஊரடங்குச் சட்டம் புதன்கிழமை வரை தொடராக நீடிப்பு](https://minnal24.com/%e0%ae%8a%e0%ae%b0%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf/): இன்று திங்கட்கிழமை பிற்பகல் முதல் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் நாளை மறுதினம் புதன்கிழமை காலை 7 மணிக்கு நீக்கப்படும். - [இலங்கையின் நிலைமை ; அமெரிக்கா கவலை](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae%e0%af%88-%e0%ae%85%e0%ae%ae%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf/): இலங்கையின் நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு அந்த திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இலங்கையின் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், அமைதியான போராட்டக்காரர்கள் மற்றும் அப்பாவி மக்கள் மீதான வன்முறைளுக்கு எதிராக ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளதாகவும், பொருளாதார மற்றும் அரசியல் சவால்களுக்கு நீண்டகால தீர்வுகளைக் கண்டறிவதிலும் செயல்படுத்துவதிலும் கவனம் செலுத்துமாறு அனைத்து இலங்கையர்களையும் கேட்டுக்கொள்கிறோம்” என்று அமெரிக்க அரச திணைக்களம் தெரிவித்துள்ளது. - [மகிந்தவின் பூர்வீக இல்லம் தீக்கிரை ; நினைவுச்சின்னங்களும் அழிப்பு](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%80%e0%ae%95-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%ae/): ஹம்பாந்தோட்டை, மெதமுலனவில் உள்ள ராஜபக்ச குடும்பத்தின் பூர்வீக வீடு, எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.  குருநாகலிலுள்ள இல்லமும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது தங்காலை வீரகெட்டியவில் உள்ள டி.ஏ.ராஜபக்ஷ நினைவுச் சின்னம் போராட்டக்காரர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. மெதமுலன ராஜபக்ச நூதனசாலை மக்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது தங்காலை வீரகெட்டியவில் உள்ள டி.ஏ.ராஜபக்ஷ நினைவுச் சின்னம் போராட்டக்காரர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது   - [சேதமாக்கப்படும் எவென்ரா கார்டன் ஹோட்டல்](https://minnal24.com/%e0%ae%9a%e0%af%87%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b5%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b0%e0%ae%be/): நீர்கொழும்பில் உள்ள எவென்ரா கார்டன் ஹோட்டல் மற்றும் அதன் சொத்துக்கள் பல ஆர்ப்பாட்டக்காரர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளன. - [காலை 7 மணிவரை நாடு முழுவதும் கடுமையான கட்டுப்பாடுகள்](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%88-7-%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%b0%e0%af%88-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b4%e0%af%81%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81/):   பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் இன்று திங்கட்கிழமை இரவு 7 மணிமுதல் நாளை செவ்வாய்க்கிழமை காலை 7 மணிவரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. அதற்கமைய, குறித்த காலப்பகுதியில் பொது வீதிகளில், புகையிரத கடவைகள், பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் அல்லது வேறு பொது இடங்கள் மற்றும் கடலோரங்களில் ஒன்றுகூடுவதற்கோ அல்லது உலாவுவதற்கோ முழுமையாக தடை விதிக்கப்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.     - [வீரகெட்டிய துப்பாக்கி சூட்டில் இருவர் பலி](https://minnal24.com/%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%ae%95%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%9a%e0%af%82/): வீரகெட்டிய பகுதியில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீரகெட்டிய பிரதேச சபையின் தலைவரின் வீட்டில் துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர். இது தொடர்பான மேலதிக தகவல்கள் இதுவரை தெரியவரவில்லை. - [ஊரடங்கு சட்டம் நாளை காலை தளர்த்தப்படும்](https://minnal24.com/%e0%ae%8a%e0%ae%b0%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%88-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%88/): நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை செவ்வாய்க்கிழமை காலை 07 மணிக்கு தளர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது - [பொலிஸ் உத்தியோகத்தர்களின் விடுமுறை இரத்து](https://minnal24.com/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%af%8b%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf/): அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களின் விடுமுறைகளும் உடன் அமுலாகும் வகையில் இரத்து செய்யப்படுவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. அத்தோடு, அனைவரையும் பணிக்கு திரும்புமாறும் பொலிஸ் ஊடகப்பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது. - [அலி சப்ரி ரஹீமின் வீட்டிற்கு தீ](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%aa%e0%af%8d%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%b0%e0%ae%b9%e0%af%80%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf/): முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீமின் வீட்டின் மீது இனந்தெரியாத குழுக்களால் இன்றிரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புத்தளம் வான் வீதியில் உள்ள குறித்த பாராளுமன்ற உறுப்பினரின் உத்தியோகபூர்வ வீட்டின் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது , பாராளுமன்ற உறுப்பினரின் உத்தியோகபூர்வ இல்லம், அவரது அலுவலகம் என்பனவற்றின் மீது இனந்தெரியாத குழுக்களினால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளதுடன், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களும் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளன. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினரான அலிசப்ரி ரஹீம், கடந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலில் முஸ்லிம் தேசிய கட்டமைப்பு சார்பில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானார். இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர், அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட 20 ஆவது திருத்த சட்டத்திற்கு ஆதரவு வழங்கியது முதல் இன்றுவரை அரசு சார் உறுப்பினராக செயற்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. - [அனைத்து ரயில் சேவைகளும் நிறுத்தம்](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%a9%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b0%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%af%87%e0%ae%b5%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/): நாட்டில் திடீரென ஏற்பட்டுள்ள அசம்பாவிதத்தினால் மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை அனைத்து ரயில் சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன ரயில்வே கட்டுப்பாட்டுத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதுவரையில் சேவையில் ஈடுபடும் ரயில்கள் அந்தந்த பிரதேசங்கள் வரை மட்டுமே இயங்கும் என்றும் இலங்கை ரயில்வே பொது முகாமையாளர் அறிவித்துள்ளார். - [பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவின் வீடு தீக்கிரை](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%89%e0%ae%b1%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a9/): ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவின் வீடு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. புத்தளம் ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்தில் உள்ள வீடே இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. - [பயணிகளுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%af%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3/): வௌிநாடுகளுக்கு செல்லும் பயணிகள் தங்களது கடவுச்சீட்டு மற்றும் பயணச்சீட்டை ஊரடங்கு அனுமதிப்பத்திரமாக பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்படுகின்றது. - [குருநாகல் மேயரின் வீடு தாக்கப்பட்டு தீ வைப்பு](https://minnal24.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%ae%be%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%87%e0%ae%af%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a4/): குருநாகல் மேயர் துஷார சஞ்சீவவின் வீடு தாக்கப்பட்டு தீவைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலால் ஆத்திரமடைந்த குருநாகல் மக்களே இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் மேயரின் வீடு பலத்த சேதமடைந்தது. குருநாகல் போதனா வைத்தியசாலை, அரச வங்கிகள், குருநாகல் மாவட்ட செயலகம், மாகாண சபை உள்ளிட்ட நிறுவனங்களின் 4,000ற்கும் மேற்பட்ட ஊழியர்கள் இன்று திங்கட்கிழமை குருநாகல் “gota go gama” போராட்ட தளத்திற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதேச அரசியல்வாதியான உதேனி அத்துகோரலவின் வீடு பிரதேச மக்களால் தாக்கப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. அவரது வீடும் பலத்த சேதமடைந்தது. இதேவேளை, நாட்டின் பல நகரங்களில் அரசியல்வாதிகளின் கார்கள் பொதுமக்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளன. நிட்டம்புவ, கடவத்தை, மினுவாங்கொடை உள்ளிட்ட பகுதிகளில் பஸ்கள் மற்றும் சொகுசு கார்கள் பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. - [பாராளுமன்ற உறுப்பினர் கைத்துப்பாக்கியால் சுட்டு தற்கொலை](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%89%e0%ae%b1%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b1/): பொலனறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துக்கோரள கைத்துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு  தற்கொலை செய்துகொண்டார். இன்று திங்கட்கிழமை மாலை ஆர்ப்பாட்டக்காரர்களுடன் நடந்த மோதலின் பின்னரே அவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாகத் தெரியவருகிறது. சம்பவம் தொடர்பில் பொலன்னறுவை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். - [நிட்டம்புவ துப்பாக்கிச் சூட்டில் 27 வயது இளைஞன் பலி](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b5-%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%9a-2/): நிட்டம்புவ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 6 பேர் காயமடைந்த நிலையில் வதுபிட்டிவல வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்தவர்களுள், கல் எலிய, ஹாபிட்டிகம பகுதியை சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. - [மறு அறிவித்தல் வரை மதுபானசாலைக்கு பூட்டு](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%b1%e0%af%81-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%88-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%ae%be/): இன்று முதல் ஊரடங்கு அமுலில் உள்ள காலப்பகுதியினுள் மதுபானசாலைகள் திறக்கப்படமாட்டாது என மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. ஊரடங்குச் சட்டத்தை அடுத்து நாடளாவிய ரீதியில் இத்தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது - [மன்னார் மாவட்டத்தில் எரிபொருட்களை சீராக வழங்குவது தொடர்பில் விசேட கலந்துரையாடல்](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf/): -மன்னார் நிருபர்- தற்போதைய சூழ்நிலையில் மன்னார் மாவட்டத்தில் விவசாயம், மீன்பிடி மற்றும் வீட்டுத் தேவைகளுக்கான எரிபொருள் விநியோகத்தை எவ்வாறு சீரான முறையில் வழங்குவது குறித்து மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் தலைமையில் இன்று திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் விசேட கலந்துரையாடல் இடம் பெற்றது. மன்னார் மாவட்டத்தில் விவசாயம், மீன்பிடி மற்றும் வீட்டுத் தேவைகளுக்கான எரிபொருள் விநியோகத்தை எவ்வாறு சீராக வழங்குவது தொடர்பாக பொலிஸ் அதிகாரிகள், மீனவர் சங்கங்கள், எரிபொருள் நிலையங்களின் உரிமையாளர்கள் அரச உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது. அதனடிப்படையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து சங்கங்களுக்கு எவ்வளவு எரிபொருள் கொடுக்க வேண்டும் என்று தீர்மானங்கள் எடுக்கப்பட்டது. மக்களுக்கு எரி பொருட்கள்  வழங்குவதற்காக எதிர் வரும் வெள்ளிக் கிழமைக்கு முன்னர் அவர்களுக்கான குடும்ப அட்டைகளை விநியோகம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த குடும்ப அட்டையின் அடிப்படையில் இனிமேல் மக்களுக்கு மண்ணெண்ணை வழங்கப்படும். மண்ணெண்ணை மட்டுமல்ல […] - [கல்முனை சாஹிரா கல்லூரியின் முன்னாள் அதிபர் ஏ.எம் ஹுசைன் காலமானார்](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%88-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b9%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf/): -கல்முனை நிருபர்- கல்முனை சாஹிரா கல்லூரியின் ஆசிரியராக பல வருடங்களும், அதிபராக சுமார் பத்து வருடங்களுக்கு மேல் கடைமையாற்றி ஓய்வு பெற்ற முன்னாள் அதிபர் ஏ.எம்ஹுசைன் அவர்கள் இன்று காலமானார். கல்முனை ஸாஹிரா கல்லூரியின் வளர்ச்சியில் ஆசிரியராக, பகுதி தலைவராக, பிரதி அதிபராக, அதிபராக இருந்து அப்பாடசாலைக்கு பாரிய அளவிலான பங்களிப்பினை செய்தவர். குறிப்பாக பல பௌதீக வள அபிவிருத்திகள் மட்டுமல்லாது, பல்கலைக் கழக தெரிவு, விளையாட்டுத்துறை மற்றும் புறக்கிருத்திய செயற்பாடுகளிலும் இப்பாடசாலை அன்று உச்சத்தை அடைவதற்குப் பாடுபட்டவர். இவருடைய காலத்தில் இக்கல்லூரி வளர்ச்சிப் பாதையில் சென்றதுடன், அன்னாரது நிருவாக மற்றும் செயற்றிறன் மிக்க செயற்பாடுகள் இன்றும் அப்பாடசாலையில் செல்வாக்குச் செலுத்தியுள்ளது மறுக்க முடியாத உண்மை. அன்னாரின் ஜனாஸா இன்று திங்கட்கிழமை காலை 9.00 மணியளவில் சாய்ந்தமருது தக்வா ஜும்ஆப் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. - [மக்கள் குடியிருப்புக்கு மத்தியில் கள்ளுத் தவறணை : மதுப்பிரியர்கள் போதையில் அட்டகாசம்](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/): -கிளிநொச்சி நிருபர்- மக்கள் குடியிருப்புக்கு மத்தியில் கள்ளுத் தவறணைக்கு நிரந்தர கட்டிடம் அமைப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு வெளியிட்டதுடன், தவறணையை அகற்றுமாறும் கொடிகாமம் வடக்கு மக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அங்கு ஏற்பட்ட குழப்ப நிலையை அடுத்து கொடிகாமம் பொலிஸார் தலையிட்டு தற்காலிக தடையை விதித்துள்ளனர். கொடிகாமம் வடக்கு மக்கள் வாழும் பகுதியில் கடந்த 10 வருடங்களாக கள் விற்பனை நிலையமான கள்ளுத் தவறணை இயங்கி வருகிறது. ஐந்து வருடங்களுக்கு தற்காலிகமாக இயங்குமெனத் தெரிவித்து ஆரம்பித்த தவறணை, அடுத்த 10 ஆண்டுகளுக்கு புதுப்பிக்கும் முகமாக நிரந்தர கட்டம் ஆரம்பிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டது. இதனை அடுத்து குறித்த பகுதி மக்கள் தமது எதிர்ப்பினை வெளியிட்டனர். குறிப்பாக பெண்கள் பிள்ளைகள் என ஒன்று சேர்ந்து எதிர்பினை வெளியிட்டனர். இப் பகுதியில் குழப்ப நிலை ஏற்பட்டதனால் கொடிகாமம் பொலிஸார் தலையிட்டு எதிர்ப்பில் ஈடுபட்டவர்களுடன் பேசி அவர்களின் வாக்கு மூலத்தைப் பதிவு செய்து கொண்டனர். வாக்கு மீலத்தை […] - [4 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது](https://minnal24.com/4-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8b-%e0%ae%95%e0%af%87%e0%ae%b0%e0%ae%b3-%e0%ae%95%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b5%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81/): -யாழ் நிருபர்- யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் 4 கிலோ கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர்கள் இருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் மேனனுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய இக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. மாதகல் பிரதேசத்தில் இருந்து யாழ்ப்பாண பிரதேசத்திற்கு கொண்டுவரப்பட்ட 4 கிலோ எடையுடைய கேரள கஞ்சாவும், இரு சந்தேக நபர்களும், யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரான்சிஸ் தலைமையிலான பொலிஸ் குழுவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. - [ஆலயம் உடைக்கப்பட்டு அம்மனின் தாலி திருட்டு](https://minnal24.com/%e0%ae%86%e0%ae%b2%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%85%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae/): -நுவரெலியா நிருபர்- மஸ்கெலிய பொலிஸ் பிரிவிற்குற்பட்ட சாமிமலை கிலனுஜி தோட்டத்தில் அம்மன் ஆலயம் உடைக்கப்பட்டு, அம்மனுக்கு அணிந்திருந்த தாலி மற்றும் ஆலய உண்டியல் என்பன களவாடப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், ஆலயத்தின் அருகில் வசிக்கும் ஒருவர், நேற்று ஞாயிற்றுக்கிழமை காலையில்  ஆலயத்தின் மின்குமிழை நிறுத்துவதற்கு சென்ற போது, ஆலயத்தின் நுழைவாயில் கதவு உடைக்கப்படடிருப்பதை கண்டு ஆலய நிர்வாக சபைக்கு அறிவித்ததையடுத்து, ஆலய நிர்வாக சபையினரால் மஸ்கெலிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பிலான மேலதிக விசாரனைகளை மஸ்கெலிய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். - [பாடசாலை விளையாட்டு மைதானத்தை தனியாருக்கு விற்றதை எதிர்த்து ஆர்ப்பாட்டம்](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b3%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%ae%e0%af%88%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9/): -கிளிநொச்சி நிருபர்- கிளி/சோறன்பற்று கணேசா வித்தியாலயத்தின் பாவனையில் நூறு வருடங்களாக இருந்த விளையாட்டு மைதானத்தை, தனியார் ஒருவருக்கு விற்பனை செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் புதுக்காட்டுச் சந்தி- தாழையடி வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கணேசா வித்தியாலயத்திற்கு அருகாமையில் உள்ள தனியார் காணியினை பாடசாலை நிர்வாகம் சுமார் 100 வருடங்களாக விளையாட்டு மைதானமாக பாவித்து வருவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். அக் காணியினை பெற்றுக் கொள்வதற்கு பாடசாலை நிர்வாகம் தயாராக இருந்தது. அதற்கு காணி உரிமையாளரும் ஒப்புக் கொண்டிருந்தார். இந்நிலையில், அக்காணி தனி நபர் ஒருவருக்கு விற்கப்பட்டதாக தெரிவித்து அங்கு கட்டடம் அமைப்பதற்காக கற்கள், மண் பறிக்கப்பட்டதை தொடர்ந்து, நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணி அளவில் புதுக்காட்டு சந்தி- தாளையடி பிரதான வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வருகை தந்த பளை பொலிஸார் போராட்டகாரர்களுடன் கலந்துரையாடி, பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யுமாறும் தெரிவித்ததை […] - [பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகினார்](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b9%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%aa%e0%ae%95%e0%af%8d%e0%ae%b7-%e0%ae%aa/): பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகியுள்ளார். இது தொடர்பான கடிதத்தை அவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பியுள்ளதாக பிரதமரின் ஊடகச் செயலாளர் ரொஹான் வெலிட்ட தெரிவித்துள்ளார். - [அனுமதி இன்றி அரச காட்டுக்குள் நுழைந்த இருவர் கைது](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a-%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95/): -கிளிநொச்சி நிருபர்- இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் சுடலை குளம் பகுதியில், நேற்று ஞாயிற்றுக்கிழமை சட்டவிரோதமான முறையில் அரச காட்டுக்குள் அனுமதியின்றி நுழைந்த இருவர், அங்கு நின்ற பத்திற்கும் மேற்பட்ட கருங்காலி மரத்தினை வெட்டிய குற்றச்சாட்டில் இராமநாதபுரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.   - [மட்டக்களப்பு-வாகரை நாகபுரத்தில் இடம்பெற்ற உதைபந்தாட்ட போட்டி நிகழ்வு](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95%e0%ae%b0%e0%af%88-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%95%e0%ae%aa%e0%af%81/): -வாழைச்சேனை நிருபர்- மட்டக்களப்பு வாகரை நாகபுரத்தில் உதைபந்தாட்ட போட்டி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நாகபுரம் ‘விடியல்’ விளையாட்டு கழகத்தினால் வருடா வருடம் இவ் நிகழ்வு ஏற்பாடு செய்யப்படுவது வழக்கமாகும். நிகழ்வில் வாகரை பிரதேசத்தின் எல்லைக்குட்பட்ட 12 உதைபந்தாட்ட கழகங்கள் பங்குபற்றியிருந்தன. இறுதி போட்டியை வடக்கு கிழக்கு முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கு.வி.லவக்குமார் ஆரம்பித்து வைத்தார். நாகபுரம் ‘விடியல் ‘விளையாட்டு கழகத்திற்கும் புச்சாக்கேணி ‘அகரமுதல்வன்’ விளையாட்டு கழகத்திற்கும் இடையில் கடும் போட்டி நடைபெற்றது. இறுதியில் நாகபுரம் ‘விடியல்’ விளையாட்டு கழகம் 02 கோல்கள் பெற்று வெற்றி பெற்றது. இந் நிகழ்வில் அதிதியாக வடக்கு கிழக்கு முன்னேற்ற கழக தலைவர் கு.வி.லவக்குமார் கலந்து கொண்டு வெற்றி பெற்ற கழகத்திற்கு வெற்றிக் கிண்ணத்தை பணப் பரிசினையும் வழங்கி வைத்தார்.   - [மோதல் சம்பவங்களில் இதுவரை 40 பேர் காயம்](https://minnal24.com/%e0%ae%ae%e0%af%87%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0/): கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற பல்வேறு மோதல் சம்பவங்களின் போது காயமடைந்தவர்களில் 40 பேர் தற்போது வரை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த தாக்குதல் சம்பவங்களின் போது மேலும் பலர் காயமடைந்துள்ளதாக தெரியவருகின்றது. - [ஜனாதிபதியும் பிரதமரும் கண்டனம்](https://minnal24.com/%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-2/): கொழும்பில் இடம்பெற்றுவரும் வன்முறை சம்பவங்களுக்கு இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதியும் பிரதமரும் தங்களது கண்டனங்களை ட்வீட் செய்துள்ளனர்.   - [கட்சி வேறுபாடின்றி அனைவரையும் கைது செய்யுமாறு ஜனாதிபதி பணிப்பு](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b1%e0%af%81%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%ae%b0/): கொழும்பு காலி முகத்திடலிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் இடம்பெற்று வரும் மோதல்கள் குறித்து தாம் முழுமையாக அறிந்திருப்பதாக ஜனாதிபதி கோட்டாபய தெரிவித்துள்ளார். டுவிட்டர் பதிவொன்றை இட்டு ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும், மோதலில் ஈடுபட்ட அனைவரையும் அரசியல் கட்சி வேறுபாடின்றி கைது செய்யுமாறும்  மோதல்களைக் கட்டுப்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ளுமாறும் பாதுகாப்புப் படையினருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக, அந்தச் செய்தியில் தெரிவித்துள்ளார்.   - [சாய்ந்தமருதில் தொடரும் மர்ம துர்நாற்றம் : கண்டறிவதில் இழுபறி நிலை](https://minnal24.com/%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae/): -கல்முனை நிருபர்- சாய்ந்தமருதில் சில வாரங்களாக மாலை நேரத்தில் பலத்த துர்நாற்றம் வீசிவருவதாக மக்கள் தொடர்ந்தும் சுகாதார தரப்பினருக்கு முறைப்பாடுகளை தெரிவித்து வருவதுடன், இந்த தூர்நாற்றம் சாய்ந்தமருது பொலிவேரியன் கிராமத்தில் அமையப்பெற்றிருக்கும் விலங்கறுமனையிலிருந்து வருவதாகவும், மாட்டின் என்புகள் மற்றும் மாட்டின் தோலை தீயிட்டு அழிப்பதனால் வரும் துர்நாற்றம் என்றும் தெரிவித்ததுடன், இந்த துர்நாற்றம் காரணமாக குடியிருப்பு பிரதேசங்களில் பலத்த சங்கடங்களை அனுபவிப்பதாகவும், குறித்த பிரதேசத்திலிருந்து துர்நாற்றம் காரணமாக இடம்பெயர வேண்டிய நிலை உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் பிரதேச சுகாதார அதிகாரிகள், கல்முனை மாநகர சபையினர், பொலிஸார், ஊடகங்கள் என பலரும் சென்ற வாரம் முழுவதிலும் பல்வேறு சந்தர்ப்பங்களில் கள விஜயம் செய்து ஆய்வுகளை மேற்கொண்டும் அங்கிருந்து பாரியளவிலான தூர்நாற்றம் வெளிவர காரணிகள் இல்லையென்பதை அறிய முடிந்தது. இருந்தாலும் தொடர்ந்தும் வெளிவரும் துர்நாற்றத்திற்கான காரணம் கண்டறிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் தெரிவித்திருந்த நிலையில், சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தில் பொதுமக்களினால் முறைப்பாடொன்றும் பதிவுசெய்யப்பட்டுள்ளதுடன், […] - [காலி முகத்திடலில் சஜித் பிரேமதாசா மீது தாக்குதல்](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d/): காலிமுகத்திடலில் தற்போது இடம்பெற்று வரும் போராட்டத்திற்கு வருகை தந்த எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா கலகக்காரர்களால் தாக்கப்பட்டார் - [களத்தில் அநுரகுமார திஸாநாயக்க மற்றும் சஜித் பிரேமதாஸ](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%b3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a8%e0%af%81%e0%ae%b0%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b8%e0%ae%be%e0%ae%a8/): இன்று திங்கட்கிழமை முற்பகல் அலரி மாளிகை அருகில் அரச ஆதரவாளர்களால் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அங்கு அமைதியான முறையில் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து காலி முகத்திடலுக்கு சென்ற அரச ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்த கூடாரங்களை தகர்த்தெறிந்து கலகத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டு நிலைமை தீவிரமடைந்தது. தற்போது காலி முகத்திடலில் நிலவி வரும் அமைதியின்மையை தொடர்ந்து மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ ஆகியோர் களத்திற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. - [உடன் அமுலாகும் வகையில் ஊரடங்கு சட்டம்](https://minnal24.com/%e0%ae%89%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%ae%e0%af%81%e0%ae%b2%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8a/): உடன் அமுலாகும் வகையில் மறு அறிவித்தல் வரை கொழும்பு வடக்கு, கொழும்பு மத்தி மற்றும் கொழும்பு தெற்கு ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. - [9 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி](https://minnal24.com/9-%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%af%88%e0%ae%a4%e0%af%8d/): காலி முகத்திடலில் இடம்பெறும் கலக நடவடிக்கைகளின் காரணமாக காயமடைந்துள்ள 9 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். - [வெற்றுக்காணி ஒன்றில் வெடி பொருட்கள் கண்டுபிடிப்பு](https://minnal24.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf-%e0%ae%92%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%9f/): -யாழ் நிருபர்- மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை வெடிபொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. நுங்கு வெட்டுவதற்காக வெற்றுக்காணி ஒன்றிற்கு சென்ற இளைஞர்கள் சிலர் இந்த வெடி பொருட்களை கண்டுள்ளனர். அதன் பின்னர் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்ற அனுமதியின் பின்னர் குறித்த வெடிபொருட்கள் மீட்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த வெடிபொருட்களுள் கைக்குண்டு ஒன்று, கண்ணிவெடி ஒன்று மற்றும் தோட்டாக்கள் என்பன உள்ளடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.   - [நாட்டிற்கு ஜே.வி.பி ஒரு மாற்றுத் தீர்வாக இருக்க முடியாது](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%9c%e0%af%87-%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%ae%e0%ae%be/): -கல்முனை நிருபர்- உலகில் ஆளும் அரசாங்கத்திற்கெதிராக நிறைய போராட்டங்கள் நடைபெற்று ஆட்சிமாற்றங்கள் இடம் பெற்றிருக்கின்றன. அவற்றில் பெரும்பாலனவை அரசியல் போராட்டங்கள். ஒன்றில் ஆட்சியாளர்கள் கொடூங்கோலானவர்களாக இருப்பார்கள் அல்லது மக்களின் ஆதரவு இல்லாமல் குறுக்கு வழியில் அதிகாரத்திற்கு வந்தவர்களாக இருப்பார்கள். சிலவேளை ஜனநாயக விழுமியங்களைப் பின்பற்றாதவர்களாக இருப்பார்கள். இவற்றிற்கெல்லாம் மாறுபட்டதுதான் இன்று இலங்கையில் நடைபெறும் போராட்டங்கள், என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஸ்தாபக செயலாளர் நாயகம் சட்டத்தரணி வை.எல்.எஸ்.ஹமீட் தெரிவித்துள்ளார். சட்டத்தரணி வை எல் எஸ் ஹமீட்  வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை தற்போதைய ஆட்சியாளர்கள் குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்கவில்லை. மக்களின் அபரிமித ஆதரவுடன் ஆட்சிக்கு வந்தவர்கள். பெரும்பான்மை சமூகத்தவர்களைப் பொறுத்தவரை கொடுங்கோலர்களுமல்ல. இங்கைப் போராட்டமென்பது முழுக்க, முழுக்க வயிற்றுப் பசியை அடிப்படையாக கொண்ட போராட்டம். பெற்றோல் இல்லை, டீசல் இல்லை, லாம்பெண்ணை இல்லை, சமைக்க காஸ் இல்லை, விவசாயிக்கு உரமில்லை, இல்லை, இல்லை, நாட்டில் இருப்பதெல்லாம் ‘இல்லை’ மாத்திரமே, என்கின்ற […] - [20இற்கு ஆதரவளித்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்தார் சஜித்](https://minnal24.com/20%e0%ae%87%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%86%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%ae/): -கல்முனை நிருபர்- ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களான திகாமடுல்ல மாவட்டத்தை சேர்ந்த சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், பைசல் காசிம் திருமலையை சேர்ந்த எம்.எஸ்.தௌபீக் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனுராதபுர மாவட்ட இஷாக் ரஹுமான் ஆகியோர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில்  சந்தித்தனர். தற்போது நாடு எதிர்நோக்கியுள்ள இந்நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுக்கும் முகமாக ஐக்கிய மக்கள் சக்திக்கு தங்கள் ஆதரவை வழங்குவதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்கள், எதிர்கால அரசியல் செயற்பாடுகள் அனைத்தும் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து முன்னெடுப்பதாகவும், இதன் போது  தெரிவித்ததாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் உறுதிப்படுத்தியது. மேற்குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கடந்த 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் போது அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு, பின்னர் தனது ஆதரவை விலக்கிக்கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. - [மாமரத்திலிருந்து தவறி வீழ்ந்த குடும்பத்தலைவர் பரிதாபமாக உயிரிழப்பு](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%b5%e0%af%80/): -யாழ் நிருபர்- மாமரத்தில் ஏறி கொப்பு வெட்டியவர் தவறி வீழ்ந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நேற்று சனிக்கிழமை பகல் இடம்பெற்ற இச் சம்பவத்தில், மானிப்பாய்-சங்குவேலி தெற்கைச் சேர்ந்த நாகேந்திரம் நகுலேந்திரன் (வயது- 48) என்ற 6 பிள்ளைகளின்  தந்தையே உயிரிழந்துள்ளார். மாமரத்தில் 25 அடி உயரத்தில் ஏறி கொப்பு வெட்டும்போது அவர் நின்ற கொப்பு முறிந்ததால் தவறி வீழ்ந்துள்ளார். கீழே வீழ்ந்து சுயநினைவற்றுக் காணப்பட்ட அவரை யாழ்ப்பாணம் மருத்துவமனையில் சேர்த்த போதும், ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவ அறிக்கையிடப்பட்டது. யாழ்.போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் இறப்பு விசாரணைகளை முன்னெடுத்தார். - [பஸ் சேவைகளை 10 சதவீதமாக குறைக்க தீர்மானம்](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%9a%e0%af%87%e0%ae%b5%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-10-%e0%ae%9a%e0%ae%a4%e0%ae%b5%e0%af%80%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1/): டீசல் கிடைக்காவிட்டால் நாளை திங்கட்கிழமை முதல் தனியார் பஸ்கள் சேவையிலிருந்து விலக நேரிடும் என  சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார். டீசல் இன்மையால் நாடு முழுவதும் பஸ் சேவைகளை 10 சதவீதமாக குறைக்க நேரிட்டுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எனினும் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள காலப்பகுதியில் சகல பஸ்களும் வழமை போன்று சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. - [வடகொரியாவில் 187,000க்கும் மேற்பட்டோர் சுயதனிமையில்](https://minnal24.com/%e0%ae%b5%e0%ae%9f%e0%ae%95%e0%af%8a%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-187000%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%87%e0%ae%b1/): வட கொரியாவில் கொரோனா தொற்றினால் குறைந்தது ஒருவர் உயிரிழந்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இதற்கு முன்னதாக அங்கு வைரஸ் தொற்றால் சிலர் பாதிக்கப்பட்டிருப்பதாய் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஏப்ரல் மாத இறுதியிலிருந்து சுமார் 187,000க்கும் மேற்பட்டோர் அங்கு தனிமைப்பட்டிருப்பதாக அந்நாட்டின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான கே.சி.என்.ஏ தெரிவித்துள்ளது. அடையாளம் தெரியாத காய்ச்சலோடு இதுவரை 350,000க்கும் மேற்பட்டோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் அவர்களில் 162,000க்கும் அதிகமானோருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் கொவிட்–19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களா என்பதை அது குறிப்பிடவில்லை. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் 6 பேர் உயிரிழந்ததாகவும் அவர்களில் ஒருவர் ஒமிக்ரோன் கொரோனா திரிபினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், வைரஸ் தொற்றுக்கு எதிரான நிலையத்தைப் பார்வையிடச் சென்ற வட கொரியத் தலைவர் கிம் ஜொங் உன் தேசிய அளவிலான முடக்க நிலையை அறிவித்துள்ளார். - [அபராதத் தொகை அறிவிப்பு](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%95%e0%af%88-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/): அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் தனி உரிமையாளராக இருந்தால் 100,000 ரூபா முதல் 500,000 ரூபா வரையில் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அதிகாரசபை தெரிவித்துள்ளது. அத்துடன் தனியார் நிறுவனம் அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்தால் அவர்களுக்கு 500,000 ரூபா முதல் அதிகபட்சமாக 5 மில்லியன் ரூபா வரை அபராதம் விதிக்கப்படும். மேலும், அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.   - [பாராளுமன்ற உறுப்பினர்களை பாதுகாக்க விஷேட ஏற்பாடு](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%89%e0%ae%b1%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95-2/): பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக ரி56 ரக இரண்டு துப்பாக்கிகளை பாதுகாப்பு உத்தியோகத்தர் குழுவிற்கு வழங்குமாறு பொலிஸ் தலைமையகம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பில் மேலும் பொலிஸ் தலைமையகத்தினால் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பில், பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக மேலதிக பொலிஸ் உத்தியோகத்தர்களை ஈடுபடுத்துவது அவசியம். இதற்கமைவாக பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு அதிகபட்சமாக 06 பொலிஸ் உத்தியோகத்தர்களின் பாதுகாப்பும் மேலதிகமாக 04 பொலிஸ் உத்தியோகத்தர்களும் வழங்கப்படவுள்ளனர். நாட்டில் கடந்த 09 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களையடுத்தே இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. - [பொலிஸாரினால் விஷேட இலக்கங்கள் அறிமுகம்](https://minnal24.com/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b8%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b7%e0%af%87%e0%ae%9f-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d/): பொது அல்லது தனியார் சொத்துக்களுக்கு ஆர்பாட்டங்கள் என்ற போர்வையில் சேதம் ஏற்படுத்தப்படுமாயின் அது தொடர்பில் அறிவிக்க பொலிஸ் தலைமையகத்தினால் விஷேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய, 1997 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறியத்தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதோடு, அவசர தொலைபேசி இலக்கமான 119 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கும் அழைப்பினை ஏற்படுத்த முடியும் என பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் கடந்த நாட்களில் இடம்பெற்ற கலவர நிலையில், சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாகவும் வீடுகள், வர்த்தக நிலையங்கள், வாகனங்கள் என இவ்வாறு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.   - [ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டது](https://minnal24.com/%e0%ae%8a%e0%ae%b0%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/): நாடளாவிய ரீதியில் நேற்று சனிக்கிழமை மாலை 6 மணிமுதல்   அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணி முதல் நீக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்ட திடீர் அசாம்பாவிதம் காரணமாக கடந்த மூன்று நாட்களாக (இடையிடையே தளர்த்தப்பட்டது) அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் இன்று காலை நீக்கப்பட்டது. இன்று மீண்டும் 6 மணிக்கு ஊரடங்குச் சட்டம் அமுல்ப்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. - [க.பொ.த சாதாரண தரப் பரீட்சார்த்திகளுக்கு விஷேட அறிவிப்பு](https://minnal24.com/%e0%ae%95-%e0%ae%aa%e0%af%8a-%e0%ae%a4-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a3-%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b0%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be-2/): க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதும் பரீட்சார்த்திகளில் பரீட்சை அனுமதி அட்டை கிடைக்காத வர்கள் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, உத்தியோகபூர்வ இணையத் தளத்தின் முதற்பக்கத்தில் எமது சேவைகளின் கீழ் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை 2021 (பரீட்சை அனுமதி பதிவிறக்கங்கள்) ஐகான் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதன் கீழ் சரியான தேசிய அடையாள அட்டை எண் அல்லது பரீட்சை எண்ணை உள்ளிட்டு, தொடர்புடைய அனுமதி அட்டையின் நகலை பதிவிறக்கம் செய்ய தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வருடம் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள பாடசாலைகள் மற்றும் தனியார் பரீட்சார்த்திகளின் அனுமதி அட்டைகள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 23ஆம் திகதி முதல் ஜூன் 1 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. நாடு முழுவதும் 3 ஆயிரத்து 844 […] - [கிரிக்கெட் ஜாம்பவான் கார் விபத்தில் பலி](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%86%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%9c%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0/): அவுஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் (வயது -46) கார் விபத்தில் உயிரிழந்துள்ளார். நேற்று சனிக்கிழமை இரவு டவுன்ஸ்வில்லுக்கு வெளியே சுமார் 50 கிலோ மீற்றர் தொலைவில் இந்த விபத்துச் சம்பவம் இரவு 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக குயின்ஸ்லாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர். - [ரஞ்சனை இன்று விடுதலை செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம்](https://minnal24.com/%e0%ae%b0%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a9%e0%af%88-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af/): ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்யக் கோரி வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. நடிகர்கள, கலைஞர்கள் , பொதுமக்கள் என இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர். ராமநாயக்க அரசியல் பழி வாங்கலுக்கு உள்ளாகிய நிலையிலேயே சிறைவாசம் அனுபவித்த வருகின்றார். வெசாக் போயா தினமான இன்று ஞாயிற்றுக்கிழமை பொது மன்னிப்பின் அடிப்படையில் அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். - [17ஆம் திகதிக்குப் பின்னர் எரிபொருள் நெருக்கடி மோசமடையும்](https://minnal24.com/17%e0%ae%86%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%b0%e0%af%8d/): நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி இம்மாதம் 17ஆம் திகதிக்குப் பின்னர் மோசமடையும் என தொழிற்சங்கவாதியான ஆனந்த பாலித தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயம் நிலவி வருகின்றது. ஏப்ரல் 29 ஆம் திகதிக்கு பின்னர் அரசாங்கம் இந்தியாவில் இருந்து டீசல் இறக்குமதி செய்யவில்லை. பெப்ரவரி 21ஆம் திகதி முதல் 95 ஒக்ரேன் பெற்றோல் தட்டுப்பாடு நிலவுகிறது. மக்களின் குறைகளுக்கு ஜனாதிபதியிடம் பதில் இல்லை. எல்.பி எரிவாயு ஏற்றுமதியை சரியான நேரத்தில் வெளியிடுவதில் அரசாங்கம் தவறிவிட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார். - [224 கைதிகளுக்கு இன்று விடுதலை](https://minnal24.com/224-%e0%ae%95%e0%af%88%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4/): வெசாக் தினத்தை முன் னிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வழங்கப்பட்ட விசேட அரச மன்னிப்பின் கீழ் 244 கைதிகளை விடுதலை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை வெசாக் தினத்தை முன்னிட்டு அரசியலமைப்பின் 34ஆவது சரத்தின் பிரகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக இவ்வாறு 244 கைதிகளை விடுதலை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. - [சட்டத்தரணிகள் சங்கம் விரதமருக்கு விடுத்துள்ள அறிவிப்பு](https://minnal24.com/%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0/): இலங்கையிலும் சர்வதேசத்திலும் நம்பிக்கையைக் கட்டியெழுப்பி, நாட்டின் பொருளாதாரத்தை மாற்றக் கூடிய ஒரு ஒன்றிணைந்த அரசாங்கம் உருவாக்கப்பட வேண்டும் என  கோரி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு  சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அச்சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் சர்வ கட்சிகளின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ள வேண்டும். அத்துடன் நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு பிரதமர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டியமை முக்கியமான விடயமாகும் என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் மக்களின் நம்பிக்கை பெற்றுக் கொள்ளும் வகையில் பிரதமர் உள்ளிட்ட அரசாங்கம் அமைய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.   - [த.ம.வி.பு.கட்சி கிழக்கு மக்களுக்காக எவ்வகையான தியாகங்களையும் செய்ய தயாராக இருக்கிறது](https://minnal24.com/%e0%ae%a4-%e0%ae%ae-%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%81-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d/): கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் அரசியல் இருப்பை பேணிப் பாதுகாப்பதற்கும், தமிழ்மக்கள் எதிர்நோக்குகின்ற பொருளாதார கட்டமைப்பினை வலுவாக்கி, கல்வி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் நிலைபேறான சூழலை உருவாக்குவதற்காக, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும், அதன் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களும் எவ்வகையான தியாகங்களைச் செய்வதற்கும் தயாராகவே இருக்கின்றனர் என தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன் தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ முகப்புத்தக பக்கத்தில் அவர் இவ்வாறு பதிவிட்டுள்ளார். குறித்த பதிவில் அவர் மேலும், மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்கு என்றும் பூரண ஆதரவு வழங்குவோம். இவ்வாண்டு ஆரம்பத்திலிருந்து எமது நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியானது மாபெரும் அரசியல் மாற்றங்களுக்கு வித்திட்டுள்ளமை யாவரும் அறிந்ததே. இந்நிலையில, நாட்டின் பிரதமராயிருந்த கெளரவ.மஹிந்த ராஜபக்ச அவர்கள் தனது பதவியை இராஜினாமா செய்தமையினை அடுத்து புதிய பிரதமராக கெளரவ.ரணில் விக்கிரமசிங்க அவர்கள் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். நாடு எதிர்கொண்டுள்ள மிக மோசமான […] - [மூன்றாவது மாடியிலிருந்து விழுந்த இளம் தாய் படுகாயம்](https://minnal24.com/%e0%ae%ae%e0%af%82%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4/): உணவகம் ஒன்றின் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்த இளம் தாய் ஒருவர், பலத்த காயங்களுடன் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று சனிக்கிழமை காலை 6.30 மணியளவில் நுவரெலியா-இராகலையில் இடம்பெற்றுள்ளதாக இராகலை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த தாய் உணவகத்தின் மூன்றாவது மாடியில் தொழில் ஆரம்பித்த சில மணி நேரத்தில் ஜன்னல் வழியாக பாய்ந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதில் ஒரு பிள்ளையின் தாயான இராகலை – ஹல்கரனோயா தோட்டத்தைச் சேர்ந்த பி.நித்தியபிரபா (வயது 35) என்ற இளம் தாயே மாடியிலிருந்து குதித்து, பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். இராகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். - [நா.ம.உறுப்பினரின் எலும்பு முறிவுகள் மரணத்திற்கு காரணம் : பிரேத பரிசோதனை அறிக்கை](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%89%e0%ae%b1%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d/): நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவின் மரணம் தொடர்பிலான பிரேத பரிசோதனையில் பலத்த அடிகள் காரணமாக பல எலும்பு முறிவுகள் ஏற்பட்டு இரத்தக்கசிவு காரணமாக மரணம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. பிரேத பரிசோதனையை மேற்கொண்ட வத்துபிட்டிவல வைத்தியசாலையின் ஆலோசகர் சட்ட வைத்திய அதிகாரி, நாடாளுமன்ற உறுப்பினரின் உடலில் பல எலும்பு முறிவுகள் காணப்பட்டதாக தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்பதை சட்டவைத்திய அதிகாரி நிராகரித்துள்ளார். கடந்த மே 9 ஆம் திகதி நிட்டம்புவ பிரதேசத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சடலமாக மீட்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.   - [வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 90 பேர் கைது](https://minnal24.com/%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f/): நாடளாவிய ரீதியில் கடந்த (மே) மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 90 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக , பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். குறித்த சந்தேக நபர்கள் நாட்டின் பல பாகங்களில் இருந்து கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 15 சந்தேக நபர்கள் நீர்கொழும்பு மற்றும் 17 சந்தேக நபர்கள் பொலன்னறுவையைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். இதே சம்பவம் தொடர்பில் கம்பஹாவைச் சேர்ந்த 09 சந்தேக நபர்களும்,  அனுராதபுரத்தைச் சேர்ந்த 04 சந்தேக நபர்களும் இன்று சனிக்கிழமை கைது செய்யப்படடுள்ளனர். இதேவேளை, சமூக வலைத்தளங்கள் ஊடாக வன்முறைகளை தூண்டிய குற்றச்சாட்டில் இதுவரை 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார். - ["கோட்டாகோகம" தளத்தை பராமரிப்பதற்கு முப்படையினர்– நாளை விசேட அறிக்கை](https://minnal24.com/%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%95%e0%af%8b%e0%ae%95%e0%ae%ae-%e0%ae%a4%e0%ae%b3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b0/): ஜனாதிபதி செயலகத்திற்கு அருகாமையில் அமைக்கப்பட்டுள்ள “கோட்டாகோகம” எதிர்ப்பு தளத்தை பராமரிப்பதற்கும் குழுவொன்றை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நியமித்துள்ளார். கொழும்பு மாநகர முதல்வர் ரோசி சேனாநாயக்க, ருவான் விஜேவர்தன மற்றும் சுகாதார அமைச்சு, இராணுவம் மற்றும் பொலிஸ் பிரதிநிதிகள் அடங்கிய பிரிவிற்கு கோட்டாகோகம வளாகத்திற்கு தேவையான வசதிகளை வழங்குவது குறித்து ஆராயுமாறு  பிரதமர் பணித்துள்ளார். போராட்டம் நடத்தும் இளைஞர்கள் முன்வைக்கும் நிபந்தனைகளின் அடிப்படையில் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாகவும், போராட்டத் தளங்கள் மீது ஒடுக்குமுறை முயற்சிகள் நடைபெறாது என்றும் பிரதமர் உறுதியளித்தார். இதேவேளை, நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து நாளை விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். - [புறக்கோட்டையில் சரிந்தது வெசாக் தோரணம்](https://minnal24.com/%e0%ae%aa%e0%af%81%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4/): கொழும்பு, புறக்கோட்டைப் பகுதியில் வீசிய பலத்த காற்றினால் குறித்த பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வெசாக் தோரணம் சரிந்து வீழ்ந்துள்ளது. வெசாக் பௌர்ணமியை முன்னிட்டு, இந்த பந்தல் 25 ஆவது தடவையாக வியாபாரிகள் சங்கத்தின் அனுசரணையில் அமைக்கப்பட்டிருந்தது. இன்று சனிக்கிழமை பிற்பகல் வீசிய பலத்த காற்றினால் பந்தல் பின்னோக்கி சரிந்து வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். - [ஈ.பி.டி.பி. பிரதமருக்கு ஆதரவு](https://minnal24.com/%e0%ae%88-%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%86%e0%ae%a4%e0%ae%b0/): பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் அமைக்கப்படவுள்ள புதிய அரசாங்கத்துக்கு ஆதரவளிக்க ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தீர்மானித்துள்ளது. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா இதனைத் தெரிவித்துள்ளார். - [புதிய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க சஜித் மறுப்பு](https://minnal24.com/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%86%e0%ae%a4/): ராஜபக்சக்கள் இல்லாத அரசாங்கம் அமைய வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது கடிதத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவிற்கு நினைவூட்டியுள்ளார். புதிய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா இன்று சனிக்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு அனுப்பிய கடிதத்திற்கு பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். புதிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்க மறுத்த எதிர்க்கட்சித் தலைவர், பொருளாதாரம் தொடர்பில் எடுக்கப்படும் சரியான தீர்மானங்களுக்கு புதிய அரசாங்கத்திற்கு எதிர்க்கட்சி ஆதரவளிக்கும் என பிரதமரிடம் அறிவித்துள்ளார். - [விமானப்படை உட்பட விசேட குழுக்கள் தயார் நிலையில்](https://minnal24.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%88-%e0%ae%89%e0%ae%9f%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9a%e0%af%87%e0%ae%9f-%e0%ae%95/): நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக பல பகுதிகளில் வெள்ளம் மற்றும் மண்சரிவுகள் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் உள்ள நிலையில், நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை வழங்குவதற்கு விமானம் மற்றும் தொடர்புடைய மீட்பு பணியாளர்களை அனுப்புவதற்கு இலங்கை விமானப்படை தயார் நிலையில் உள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாயம் உள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பேச்சாளர் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார். அனார்த்தங்கள் ஏற்படும் பட்சத்தில் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக விமானம் மற்றும் ஏனைய பணியாளர்களை தயார் நிலையில் வைத்திருக்குமாறு இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன பணிப்புரை விடுத்துள்ளார். இரத்மலானை, கட்டுநாயக்க, ஹிங்குராங்கொட மற்றும் அனுராதபுரம் ஆகிய விமானப்படைத் தளங்களில் இலங்கை விமானப்படையின் விமானங்களும் , உலங்குவானூர்திகளும் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் மீட்புப் பணிகளுக்காக விசேட குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் பேச்சாளர் தெரிவித்தார். - [புதிய 4 அமைச்சர்கள் நியமனம்](https://minnal24.com/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-4-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%ae%a9/): 4 புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால்  நியமிக்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, வெளிவிவகார அமைச்சராக – பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ். பொது நிர்வாகம், உள்நாட்டு விவகாரங்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சராக – தினேஷ் குணவர்தன. நகர்ப்புற அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சராக – பிரசன்ன ரணதுங்க. எரிசக்தி அமைச்சராக – கஞ்சன விஜேசேகர, ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். - [மட்டு.சிவானந்தா விளையாட்டுக்கழகத்தின் மாபெரும் இரத்ததான நிகழ்வு](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b3%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d/): மட்டக்களப்பு சிவானந்தா விளையாட்டுக்கழகத்தின் 50வது வருட பூர்த்தியை முன்னிட்டு மாபெரும் இரத்ததான நிகழ்வு சிவானந்தா வித்தியாலய ஒன்று கூடல் மண்டபத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்றது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தற்பொழுது நிலவிவரும் குருதி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் முகமாக இவ் இரத்ததான நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இரத்ததான நிகழ்வில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதுடன், குறிப்பாக மட்டக்களப்பு ராணுவத்தினரும் தங்களது பூரண ஒத்துழைப்பை வழங்கியமை குறிப்பிடத்தக்கது. இரத்ததான நிகழ்வில் சிவானந்தா விளையாட்டு கழகத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. - [244 கைதிகளை விடுதலை செய்ய தீர்மானம்](https://minnal24.com/244-%e0%ae%95%e0%af%88%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%af-%e0%ae%a4%e0%af%80/): நாளை ஞாயிற்றுக்கிழமை வெசாக் தினத்தை முன்னிட்டு அரசியலமைப்பின் 34ஆவது சரத்தின் பிரகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக, ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட விசேட அரச மன்னிப்பின் கீழ் 244 கைதிகளை விடுதலை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது - [மீன் பிடிக்க சென்ற இளம் குடும்பஸ்தர் கடலில் விழுந்து பலி](https://minnal24.com/%e0%ae%ae%e0%af%80%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%87%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95/): -மன்னார் நிருபர்- மன்னார் செளத்பார் பகுதியில் மீன் பிடிப்பதற்காக வலை பாய்ச்ச சென்ற மீனவர் ஒருவர், எதிர்பாராத விதமாக மன்னார் புகையிரத பாலத்திற்கு அருகாமையில் உள்ள பள்ளத்தில் விழுந்து காணாமல் போன நிலையில் இன்று சனிக்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் மன்னார் எமில் நகர் பகுதியை சேர்ந்த இளம் குடும்பஸ்தரான கிரிஸ்தோபர் ஜாக்லின் (வயது 29) என அடையாளம் காணப்பட்டுள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை மதியம் கடலுக்குள் விழுந்த நிலையில் உள்ளூர் மீனவர்கள் மற்றும் கடற்படையினர் இணைந்து குறித்த நபரை தேடும் பணியில் ஈடுபட்டனர் . இருப்பினும், குறித்த நபர் மீட்கப்படாத நிலையில் இன்று சனிக்கிழமை காலை தொழிலுக்குச் சென்ற மீனவர்களினால் குறித்த மீனவர் சடலமாக மீட்கப்பட்டார். சம்பவ இடத்திற்கு வருகை தந்த மன்னார் பொலிஸார் மரணம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். பின்னர் சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. - [சண்டையிட வேண்டாம் : பிரதமர் தெரிவிப்பு](https://minnal24.com/%e0%ae%9a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%ae/): பிரதி சபாநாயகர் பதவி தொடர்பில் சண்டையிட வேண்டாம் எனவும், அந்தப் பதவிக்கு ஏகமனதாக பெண் ஒருவரை நியமிக்குமாறும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இவ்வாறான நிலைப்பாடுகளுக்காக பிரிந்து சண்டையிடுவதற்கான நேரம் இதுவல்ல என நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ள விக்கிரமசிங்க, பாராளுமன்றத்தில் பெண் பிரதிநிதித்துவத்தை வலுப்படுத்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு பதவியை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். பாராளுமன்றம் மே 17ஆம் செவ்வாய்க்கிழமை திகதி கூடும் போது பிரதி சபாநாயகரை நியமிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். - [இந்தியா உடனடியாக 65,000 மெற்றிக்தொன் யூரியாவை வழங்க உள்ளது](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-%e0%ae%89%e0%ae%9f%e0%ae%a9%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%95-65000-%e0%ae%ae%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf/): வரலாற்றில் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கும் இலங்கைக்கு இந்திய அரசாங்கம் உடனடியாக 65,000 மெற்றிக் தொன் யூரியா உரத்தை வழங்க உள்ளது. நாட்டிற்கு அவசரமாக தேவைப்படும் உரங்களை வழங்குவது தொடர்பாக இந்திய அதிகாரிகளிடமிருந்து இலங்கைக்கு உத்தரவாதம் கிடைத்துள்ளது. இலங்கைகான இந்திய உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வெள்ளிக்கிழமை சந்தித்து கலந்துரையாடினார். உயர் ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, இந்திய உரத் திணைக்களத்தின் செயலாளர் ஸ்ரீ ராஜேஷ் குமார் சதுர்வேதியைச் நேற்று வெள்ளிக்கிழமை சந்தித்து, இலங்கையில் நடப்பு “யாலப்” பயிர்ச்செய்கைப் பருவத்திற்குத் தேவையான 65,000 மெட்ரிக் டன் யூரியாவை வழங்க இந்தியா எடுத்த முடிவிற்கு நன்றி தெரிவிததுள்ளார். தற்போதுள்ள 01 பில்லியன் அமெரிக்க டொலர் இந்தியக் கடனின் கீழ் 65,000 மெட்ரிக் தொன் யூரியாவை உடனடியாக இலங்கைக்கு வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் தீர்மானித்ததை அடுத்து இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்தியாவில் இருந்து யூரியா ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், இலங்கை அரசின் வேண்டுகோளுக்கு […] - [தமிழ்நாட்டிலிருந்து இலங்கை மக்களுக்கு நிவாரணப் பொதிகள்](https://minnal24.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99/): இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் பரிந்துரையில் நிவாரணப் பொதிகள் அனுப்பப்படவுள்ளது. இந்நிலையில், ‘தமிழ்நாட்டு மக்களிடமிருந்து அன்புடன்’ என்று அச்சிடப்பட்டுள்ள நிவாரண பொதிகள் தயார் நிலையில் உள்ளதாக, இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த நிவாரண பொதிகள் இம்மாதம் 22ம் திகதிக்கு பின்னர் இலங்கை மக்களுக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. - [நியூசிலாந்திடமிருந்து இலங்கைக்கு 500,000 அமெரிக்க டொலர் நிதியுதவி](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%af%e0%af%82%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%87/): உலக உணவுத் திட்டம் மற்றும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு ஆகியவற்றின் ஊடாக, நியூசிலாந்து இலங்கைக்கு 500,000 அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்கவுள்ளதாக,  நியூசிலாந்து வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. நியூசிலாந்தின் வெளிவிவகார அமைச்சர் நனயா மஹுதா டுவிட்டர் பதிவினூடாக இதனை தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கும் இலங்கை விவசாயிகளுக்கு உதவுவதற்கும், அதனால் பாதிக்கப்படக்கூடிய பிள்ளைகளுக்கு உணவு வழங்குவதற்கும் இந்த நிதியுதவி வழங்கப்படவுள்ளதாகவும், அவர் தெரிவித்துள்ளார். இது இலங்கைக்கும் நியூசிலாந்துக்கும் இடையிலான 30 வருட கால ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என்றும், கடந்த 30 வருட காலத்திற்குள் நியூசிலாந்து இலங்கைக்கு 25.07 மில்லியன் அமெரிக்க டொலர்களை அபிவிருத்தி திட்டங்களுக்காக உதவியாக வழங்கியுள்ளதாகவும், அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். - [பாராளுமன்றத்தில் ரணிலின் காலை இழுத்து விட நாம் விரும்பவில்லை - மனோ கணேசன்](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a9/): -கல்முனை நிருபர்- பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தமது அரசில் பங்குபெற எமது தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் அழைப்பு விடுத்தார், நாம் நாகரீகமாக மறுத்து விட்டோம், என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் முன்னாள் அமைச்சருமான மனோ கணேசன் ஊடகங்களுக்கு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், அவர் எமது முன்னாள் பிரதமர். அவரது பலமும், பலவீனமும் எனக்கு நன்கு தெரியும், பலவீனம் பற்றி பேச விரும்பவில்லை. சர்வதேச தொடர்பாடல் தொடர்பான, அவரது பலம் மூலம் நாட்டுக்கு நன்மை நடக்குமாயின் அதை நான் ஒரு இலங்கையராக வரவேற்கிறேன். அவரது அரசில் பங்கெடுக்கும் ‘டீல்’ அரசியலையும் நாம் செய்யவில்லை, அதேவேளை, சும்மா ‘களரிகதை’ பேசி ‘பாழ்’ அரசியலும் செய்ய விரும்பவில்லை. இன்று நாட்டில் உணவு இல்லை, மருந்து இல்லை, எரிவாயு இல்லை, உரம் இல்லை, இவற்றில் எதையாவது அவர் தீர்த்து வைப்பாரேயானால், அதை செய்யட்டுமே. இன்றைய சூழலில், பாராளுமன்றத்தில் அவரது காலை இழுத்து விட […] - [மருத்துவபீட மாணவர் ஒருவரது மடிக்கணினி திருட்டு](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%aa%e0%af%80%e0%ae%9f-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0/): -யாழ் நிருபர்- யாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவபீட மாணவர் ஒருவரது மடிக்கணினி நேற்று வெள்ளிக்கிழமை திருடப்பட்டுள்ளது. குறித்த மாணவன் திருநெல்வேலி பகுதியில் வாடகை வீடொன்றில் தங்கியிருந்து யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வருகின்றார். மாணவன் தனது மடிக்கணினியை ஜன்னலின் அருகே வைத்திருந்திருக்கிறார். இந்நிலையில் அங்கு நுழைந்த திருடர்கள் அவரது மடிக்கணினியினை திருடிச் சென்றுள்ளனர். தனது கல்வி சம்பந்தமான பதிவுகள் அனைத்தும் அந்த மடிக்கணினியிலேயே இருப்பதாக குறித்த மாணவர் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். - [மின்கட்டணம் அதிகரிக்கப்படுகின்றதா?](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d/): மின்சார கட்டணத்தை இந்த ஆண்டு அதிகரிக்காவிட்டால் இலங்கை மின்சார சபை சுமார் 250 பில்லியன் ரூபா நட்டத்தை எதிர்நோக்க வேண்டி ஏற்படும், என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். எவ்வாறிருப்பினும், மின்சார கட்டண திருத்தம் தொடர்பான நடவடிக்கைகள் அரசாங்கத்தின் கொள்கையின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும், என அவர் மேலும் தெரிவித்துள்ளார். - [எரிபொருள் வரிசையில் காத்திருந்த சாரதி ஒருவர் உயிரிழப்பு](https://minnal24.com/%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4-2/): எரிபொருள் வரிசையில் காத்திருந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது சீதுவ, முத்துவடிய, குஸ்வல பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தனது முச்சக்கர வண்டிக்கு எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக வரிசையில் காத்திருந்த நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இறந்தவர் 69 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. - [ஜன்னலை உடைத்து தங்கச்சங்கிலியை அறுத்த கொள்ளை கும்பல்](https://minnal24.com/%e0%ae%9c%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%b2%e0%af%88-%e0%ae%89%e0%ae%9f%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d/): -யாழ் நிருபர்- யாழ். கல்வியங்காடு கட்டைப்பிராய் பகுதியில் உள்ள வீடு ஒன்றில், ஜன்னலை உடைத்து வீட்டுக்குள் நுழைந்த கொள்ளை கும்பல் அங்கிருந்த வயோதிபப் பெண்ணின் 2 பவுண் தங்கச்சங்கிலியை கொள்ளையடித்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவமானது நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த வீட்டின் ஜன்னலை திறந்து உள்ளே நுழைந்த திருடர்கள் வீட்டில் இருந்து வயோதிபப் பெண்ணின் தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்றுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். - [மூன்று நாட்களாக டீசலுக்கு காத்திருக்கும் சாரதிகள் கடும் விசனம்](https://minnal24.com/%e0%ae%ae%e0%af%82%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%be%e0%ae%95-%e0%ae%9f%e0%af%80%e0%ae%9a%e0%ae%b2%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/): கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடந்த மூன்று நாட்களாக டீசலுக்கு காத்திருந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு போதிய டீசல் வந்தும் வாகனங்களுக்கு வழங்காமையால், வாகன சாரதிகள் விசனம் கொண்டு வீதியை மறித்து போராட்டத்தை மேற்கொண்டார்கள் அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார் அவசர நிலை உள்ளபோது வீதியை மறிக்க வேண்டாம் என தெரிவித்ததை அடுத்து, கிளிநொச்சி மாவட்ட செயலகத்தை நோக்கி மாவட்ட அரசாங்க அதிபரை சந்திப்பதற்காக சாரதிகள் சென்றிருந்தனர். மாவட்ட செயல மேலதிக அரசாங்கதிபர் ஸ்ரீமோகன் சாரதிகளோடு கலந்துரையாடியிருந்தார்.. இதன் பின்னர் குறித்த எரிபொருள் நிரப்பு நிலைய உயர் அதிகாரிகளோடு மாவட்ட செயல மேலதிக அரசாங்க அதிபர் தொலைபேசி ஊடாக கலந்துரையாடியதை தொடர்ந்து, 5000 ரூபாவிற்கு வழங்குவதாக தெரிவிக்கப்பட்ட பின்னர், சாரதிகளின் போராட்டம் கைவிடப்பட்டு பின்பு 5000 ரூபாய்க்கு வாகனங்களுக்கு டீசல் விநியோகிக்கப்பட்டது. - [இன்றைய வானிலை முன்னெச்சரிக்கை](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%88%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%86%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b0/): நாட்டின் பல இடங்களில் இன்று சனிக்கிழமை மழை பெய்யக் கூடும், என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி, தென்மேல், மேல்,  சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில இடங்களிலும், மேல் மாகாணத்தின் பல இடங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதுடன், 100 மில்லிமீற்றருக்கு மேல் மழை வீழ்ச்சி பதிவாகுமென தெரிவிக்கப்படுகிறது. வட மாகாணத்திலும் அநுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் […] - [மாலை 6 மணிவரை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b2%e0%af%88-6-%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%b0%e0%af%88-%e0%ae%8a%e0%ae%b0%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f/): நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் இன்று சனிக்கிழமை காலை 6 மணிக்கு தற்காலிகமாக தளர்த்தப்பட்டுள்ளது. அதன்பின்னர், ஊரடங்கு சட்டம் இன்று மாலை 6 மணிக்கு மீள அமுலாக்கப்பட்டு, நாளை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்படும் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. - [30 இலட்சம் நகை திருட்டு : பெண் உட்பட மூவர் கைது](https://minnal24.com/30-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%95%e0%af%88-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3/): -யாழ் நிருபர்- மானிப்பாயில் 30 இலட்சம் பெறுமதியான தங்க நகைகளைத் திருடிய குற்றச்சாட்டில் பெண் உட்பட மூவர் இன்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உள்பட்ட சண்டிலிப்பாய் தொட்டிலடியில் உள்ள வீட்டில் கடந்த மே 4ஆம் திகதி வீட்டிலிருந்தவர்கள் வெளியே சென்றிருந்த நிலையில் வீடுடைத்து 30 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் திருடப்பட்டிருந்தன. இதுதொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்டவரினால் முறைப்பாடு செய்யப்பட்டது. இச்சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். சம்பவ தினத்தன்று திருட்டு இடம்பெற்ற வீட்டுக்கு அண்மையாக உள்ள பகுதிகளில் பெறப்பட்ட சிசிரிவி காணொளிப் பதிவுகளின் அடிப்படையில் தெல்லிப்பழை வீமன்காமம் பகுதியைச் சேர்ந்த பெண் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் திருட்டு நகைகளை விற்பனை செய்ய உதவினார் என்ற குற்றச்சாட்டில் கிளிநொச்சியைச் சேர்ந்த மற்றும் ஒருவரும் கைது […] - [பிரதமாரால் நான்கு குழுக்கள் நியமனம்](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%af%81%e0%ae%95%e0%af%8d/): அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளின் பற்றாக்குறையை நீக்குவதுடன்,  மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான முன்மொழிவுகளைப் பெறுவதற்கு நான்கு விசேட குழுக்களை இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார். வஜிர அபேவர்தன மற்றும் பாலித ரங்கே பண்டார ஆகியோர் பொதுமக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை தட்டுப்பாடு இன்றி வழங்குவதற்காக, சம்பந்தப்பட்ட பிரிவுகளுடன் கலந்தாலோசித்து முன்மொழிவுகளைப் பெறுவதற்காக நியமிக்கப்பட்டனர். விவசாயிகள் எதிர்நோக்கும் உரப் பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்காக அகில விராஜ் காரியவசம் நியமிக்கப்பட்டுள்ளார். மருந்து வகைகளின் தட்டுப்பாடு தொடர்பில் ஆராய்வதற்காக ருவன் விஜேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். சாகல காரியவசம் எரிபொருள் பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் இக் குழுக்கள் குறித்த தரப்பினருடன் கலந்துரையாடி பிரச்சினைகளை தீர்ப்பதற்காக யோசனைகளை முன்வைக்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். - [முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேரை உடனடியாக கைது செய்யுமாறு வழக்கு தாக்கல்](https://minnal24.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b9%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4/): முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேரை உடனடியாக கைது செய்யுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிடுமாறு கோரி சட்டத்தரணி ஒருவரினால் கொழும்பு நீதவான் நீதிமன்றில் தனிப்பட்ட முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 9ஆம் திகதி அலரி மாளிகை மற்றும் காலி முகத்திடலுக்கு முன்பாக அமைதியான முறையில் இடம்பெற்ற மக்கள் போராட்டத்தின் போது எற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் , இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கொழும்பு 12, புதுக்கடை வீதியைச் சேர்ந்த சட்டத்தரணியான சேனக பெரேராவினால் தனிப்பட்ட ரீதியில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சஞ்சீவ எதிரிமான்ன, சனத் நிஷாந்த மற்றும் மொரட்டுவை மாநகர சபையின் தலைவர் சமன் லால் பெர்னாண்டோ, மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்கிரமரத்ன ஆகியோர் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர். இந்த மனு […] - [இராணுவம், பொலிஸார் கடமையிலிருந்தும் இடம்பெறும் முறைகேடுகள்](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a3%e0%af%81%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b8%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%ae%e0%af%88%e0%ae%af/): -யாழ் நிருபர், கிளிநொச்சி நிருபர்- ஊரடங்கு சட்டம் இன்று வெள்ளிக்கிழமை காலை 6 மணியிலிருந்து தளர்த்தப்பட்ட நிலையில் வடமராட்சியின் நெல்லியடி, பருத்தித்துறை, மந்திகை பகுதிகளில் அதிகளவான மக்கள் கூட்டம் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக வர்த்தக நிலையங்களில் கூடியிருப்பதை அவதானிக்க முடிந்தது. அதேவேளை, எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கொளுத்தும் அகோர வெயிலையும் பொருட்படுத்தாது எரிபொருள் நிரப்புவதற்க்காக தமது வாகனங்கள் சகிதம் மிக நீண்ட வரிசையில் மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நின்றிருந்தனர். இதே வேளை, ஏற்கனவே பயிற்செய்கையை மேற்கொண்ட விவசாயிகள் மண்ணெண்ணெய் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் பயிர்களை பராமரிக்க முடியாமலும், பயிர்செய்கையில் ஈடுபட இருப்பவர்கள் மண்ணெண்ணெய், உரம் இல்லாத காரணத்தினால் பயிர்செய்கையில் ஈடுபட முடியாத நிலையிலும் உள்ளனர். மண்ணெண்ணெய் பெற்றுக்கொள்ள முடியாத காரணத்தினாலும், தற்போதைய காலநிலை மாற்றத்தினால் மீனவர்கள் பல நாட்களாக கடலுக்கு செல்ல முடியாத நிலையில் தங்களுடைய வாழ்வாதாரத்தை ஈட்ட முடியாத துர்ப்பாக்கிய நிலையில் உள்ளதாக, மீனவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், வடமராட்சியிலுள்ள […] - [சிறைச்சாலை பொறுப்பாளர் கொலை சம்பவம் : ஒருவர் கைது](https://minnal24.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%af%88-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b1%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95/): -கிளிநொச்சி நிருபர்- யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணியில் ஆண் ஒருவரது சடலம் கடந்த புதன்கிழமை மீட்கப்பட்டது. இதன்போது, இராசன் சிவஞானம் எனும் இரண்டு பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்கப்பட்டிருந்தார். குறித்த நபர் விடுதலைப்புலிகளின் சிறை கைதிகளுக்கான பொறுப்பாளராக கடமையாற்றியவர் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று வியாழக்கிழமை கொலை சம்பவத்துடன் தொடர்புடைய கொலை குற்றவாளி சட்டதரணி ஒருவருடன் மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்திருந்தார். குறித்த நபர் நேற்று கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு, பின் 14 நாள் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவமானது குடும்ப தகராறு காரணமாக இடம் பெற்றது என கைதானவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார். கைதானவர் கொலை செய்யப்பட்டவரின் மனைவியின் தம்பி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்புடைய செய்தி https://www.minnal24.com/?p=75049 - [6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாயம்](https://minnal24.com/6-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%bf/): நாட்டின் 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நுவரெலியா, இரத்தினபுரி, களுத்துறை, கண்டி, கேகாலை, மாத்தறை ஆகிய 6 மாவட்டங்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது. களுத்துறை  , கண்டி  , கேகாலை , புலத்கொஹூபிட்டிய, மாத்தறை மாவட்டம் , நுவரெலியா , இரத்தினபுரி  ஆகிய மாவட்டங்களுக்கே மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. - [ஊரடங்கு சட்டம் தொடர்பில் புதிய அறிவிப்பு](https://minnal24.com/%e0%ae%8a%e0%ae%b0%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/): நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை சனிக்கிழமை காலை 6 மணியுடன் தளர்த்தப்படவுள்ளது. பின்னர், நாளை மாலை 6 மணி முதல் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணிவரை அமுலாகும் வகையில் மீண்டும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. - [ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி காலமானார்](https://minnal24.com/%e0%ae%90%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%aa%e0%af%81-%e0%ae%85%e0%ae%ae%e0%af%80%e0%ae%b0%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d/): ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி ஷேக் கலிபா பின் ஜாயத் அல் நஹயன் இன்று  வெள்ளிக்கிழமை காலமானதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சமீப நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். அவரது மறைவை தொடர்ந்து 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் எனவும், தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் 3 நாட்கள் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தனது தந்தை மறைவை தொடர்ந்து  2004ஆம் ஆண்டு நவம்பர் மாதம், ஷேக் கலீபா பின் ஜாயத் அல் நஹயன் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதியாக பதவியேற்று கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. - [முதலாவது கொவிட்-19 மரணம் பதிவு](https://minnal24.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d-19-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a4/): வடகொரியாவில் முதலாவது கொவிட்-19 மரணம் பதிவாகியுள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது. காய்ச்சல் காரணமாக 187,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக, வட கொரிய மத்திய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாக, சர்வதேச செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.   - [மின்துண்டிப்பு அமுல்படுத்தப்பட மாட்டாது](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%85%e0%ae%ae%e0%af%81%e0%ae%b2%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81/): வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 15ஆம் திகதி நாடளாவிய ரீதியில் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்பட மாட்டாது, என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் தெரிவித்துள்ளார். இதேவேளை நாளை சனிக்கிழமை ஐந்து மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும், எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. - [இரண்டு நாட்களுக்கு அனைத்து மதுபான சாலைகளுக்கும் பூட்டு](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%85%e0%ae%a9%e0%af%88%e0%ae%a4%e0%af%8d/): வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்படும், என மதுவரி திணைக்கள ஆணையாளர் நாயகம் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார். அதன்படி, குறித்த இரண்டு தினங்களிலும் விற்பனை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் மற்றும் நிபந்தனைகளை மீறிச் செயற்படும் உரிமம் பெற்ற மதுபான சாலைகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும், எனவும் அவர் தெரிவித்துள்ளார். - [தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் தொடர்பான அறிவிப்பு](https://minnal24.com/%e0%ae%a4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81-%e0%ae%85%e0%ae%ae%e0%af%81%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3-%e0%ae%8a%e0%ae%b0%e0%ae%9f/): இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம் அழுல்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் இன்று காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை தற்காலிகமாக தளர்த்தப்பட்டது. தற்போது மீண்டும் இன்று பிற்பகல் 2 மணிக்கு அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம், நாளை சனிக்கிழமை காலை 6 மணி வரை அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.   - [ரணில் தலைமையிலான அரசாங்கத்தில் இணையப்போவதில்லை - மைத்திரிபால சிறிசேன](https://minnal24.com/%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95/): ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தில் எந்த பதவியையும் ஏற்காது, அரசாங்கத்தில் அங்கம் வகிக்காது, என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அதன்படி, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகள் எதனையும் பெற்றுக்கொள்ளப் போவதில்லை, என அவர் தெரிவித்துள்ளார். ரணில் தலைமையிலான புதிய அரசாங்கத்தில் இணைந்து கொள்ளுமாறு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளனர். இதனையடுத்து இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கலந்துரையாடலை தொடர்ந்து, இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.   - [நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் 6 பொலிஸ் உத்தியோகத்தர்கள் நியமனம்](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%89%e0%ae%b1%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95-7/): நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு அவரது பாதுகாப்பிற்காக 6 பொலிஸ் உத்தியோகத்தர்களை வழங்க பொலிஸ்மா அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு இதுவரை பாதுகாப்பிற்காக இரண்டு பொலிஸார் வழங்கப்பட்டிருந்த நிலையில், மேலதிகமாக 4 பொலிஸ் உத்தியோகத்தர்களை வழங்க அமைச்சர் பாதுகாப்பு பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, பிரதேச பொலிஸ் நிலையங்களில் உள்ள தாம் விரும்பிய பொலிஸ் அதிகாரிகளை அமைச்சர் பாதுகாப்பு பிரிவில் இணைத்து கொண்டு பாதுகாப்பு பணிகளுக்கு அமர்த்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.   - [தங்கத்தின் விலை வீழ்ச்சி](https://minnal24.com/%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b4%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf/): இலங்கையில் இன்று வெள்ளிக்கிழமை தங்கம் ஒரு அவுன்ஸ் 658,421 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது அதேவேளை, 24 கரட் தங்கம் 1 கிராம் 23,230 ரூபாவிற்கும், 1 பவுன் 185,850 ரூபாவிற்கும், 22 கரட் தங்கம் 1 கிராம் 21,300 ரூபாவிற்கும், 1 பவுன் 170,400 ரூபாவிற்கும், 21 கரட் தங்கம் 1 கிராம் 20,330 ரூபாவிற்கும், 1 பவுன் 162,650 ரூபாவிற்கும், விற்பனை செய்யப்படுகின்றது.   - [கிழக்கு பல்கலைக் கழகத்திற்கு முன்பாக முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b4%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/): -வாழைச்சேனை நிருபர்- ‘கஞ்சி பரிமாறுவோம் முள்ளிவாய்க்கால் வலி சுமந்த கதை பகிர்வோம்’ என்ற தலைப்பில் முள்ளி வாய்க்கால் அவல நிலை குறித்து நினைவு கூர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்றும் இரண்டாவது நாளாக கிழக்கு பல்கலைக் கழகத்திற்கு முன்பாகவும் அதனைத் தொடர்ந்து செங்கலடி சந்தைப் பகுதியிலும் முன்னெடுக்கப்பட்டது. இந் நிகழ்வினை, வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கம் ஏற்பாடு செய்திருந்தனர். ‘முள்ளிவாய்க்கால் கஞ்சியினை’ பெரும் ஆவலுடன் மக்கள் உணர்வு பூர்வமாக பருகினார்கள். அத்துடன், முள்ளி வாய்க்கால் கஞ்சி என்ற துண்டுப் பிரசுரங்களும் வழங்கி வைக்கப்பட்டது. இதே நிகழ்வு செங்கலடி சந்தைப் பகுதியிலும் முன்னெடுக்கப்பட்டது. இந் நிகழ்வில், மதகுருமார்கள், சிவில் அமைப்பு பிரதி நிதிகள் மற்றும் வடக்கு கிழக்கு முன்னேற்ற கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.   - [யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு](https://minnal24.com/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b4%e0%ae%95-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-5/): -யாழ் நிருபர்- நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக அமுலாக்கப்பட்ட ஊரடங்கு வேளையில் யாழ்.பல்கலை மாணவர்களுக்கான உணவுப் பொதிகள் நேற்று வழங்கி வைக்கப்பட்டன. இவ் அத்தியாவசிய உதவியானது, புலம்பெயர் தேசத்தவர்களான கீதன் சர்மிளா குடும்பம் மற்றும் சசிகரன் ஜீவிதா குடும்பத்தால் வழங்கப்பட்ட பணத்தில் முதற்கட்டமாக வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன், எதிர்காலத்திலும் மாணவர்களுக்கான உதவிகளை வழங்குவதற்கு அவர்கள் முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. - [வாடகை அறைகளில் தங்கியிருக்கும் மாணவர்களுக்கு உணவு வழங்கி வைப்பு](https://minnal24.com/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9f%e0%ae%95%e0%af%88-%e0%ae%85%e0%ae%b1%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81/): -யாழ் நிருபர்- ஊரடங்கு நேரத்தில் வீடுகளிற்கு செல்ல முடியாது வாடகை அறைகளில் தங்கி பாதிக்கப்பட்டிருக்ககூடிய பல்கலை மாணவர்களுக்கு அரியாலை கில்லாடிகள் விளையாட்டுக் கழகதினரால் நேற்று வியாழக்கிழமை இரவு உணவு வழங்கி வைக்கப்பட்டது. குறித்த விளையாட்டு கழகத்தினர் தாமாகவே முன்வந்து அவசர உதவியை வழங்கியதையிட்டு அரியாலை கில்லாடி விளையாட்டு கழகத்தின் தலைவர் கவிந்தனிற்கு பல்கலை மாணவர்கள் தமது நன்றிகளை தெரிவித்துள்ளனர். - [அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதி வீழ்ச்சி](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%ae%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%9f%e0%af%8a%e0%ae%b2%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a9-2/): இன்று வெள்ளிக்கிழமை உரிமம் பெற்ற பல வணிக வங்கிகள் அமெரிக்க டொலர் ஒன்றை 365 ரூபாவுக்கு விற்பனை செய்வதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று வியாழக்கிழமை அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி நேற்று 380 ரூபாவாக பதிவாகியிருந்ததுடன், டொலரின் கொள்முதல் விலை 365 ரூபாவாக பதிவாகியிருந்தது. நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் வணிக வங்கிகளில் அமெரிக்க டொலரொன்றின் விற்பனை பெறுமதி 15 ரூபாவினால் குறைவடைந்துள்ளது. - ['நான் உயிருடனே உள்ளேன்' - நித்யானந்தா](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%87-%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf/): தான் உயிருடனே இருப்பதாகவும்இ மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பதால் வழக்கம்போல் செயல்பட சில காலம் பிடிக்கும் என்றும் நித்யானந்தா விளக்கம் அளித்துள்ளார். பல்வேறு சர்ச்சையில் சிக்கிய நித்யானந்தா எங்கே போனார் என்று பொலிஸ் தேடிக்கொண்டிருந்தபோது அவர் கைலாசா என்ற தீவுக்குச் சென்றதாக கூறப்பட்ட நிலையில்இ அதை நித்யானந்தா ‘கைலாசா நாடு’ என்று அறிவித்தார். அங்கே இருந்தபடியே அவர்இ சமூக வலைதளங்களில் சொற்பொழிவாற்றும் வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில்இ நித்யானந்தா நோயால் பாதிக்கப்பட்டு இறந்து விட்டதாகஇ சமூக ஊடகங்களில் அவர் பேசி பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்கள்இ அவருடைய ஆதரவாளர்களால் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டவை எனவும் சமூக ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டன. இதனைத் தொடர்ந்துஇ நித்யானந்தா இறந்துவிட்டாரா என்று நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பிய நிலையில்இ நித்யானந்தா அதற்கு விளக்கம் அளிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. அதில்இ ’27 மருத்துவர்கள் மருத்துவம் பார்த்து வருகிறார்கள். மருத்துவ சிகிச்சையிலிருந்து நான் இன்னும் வெளியே வரவில்லை. […] - ['கோட்டாகோகம' அப்படியே தொடரட்டும்](https://minnal24.com/%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%95%e0%af%8b%e0%ae%95%e0%ae%ae-%e0%ae%85%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%87-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f/): ‘கோட்டாகோகம’ போராட்டம் அப்படியே தொடர வேண்டுமென கூறிய புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, போராட்டக்காரர்கள் மீது எவ்விதமான பொலிஸ் இடையூறுகளும் ஏற்படுத்தப்பட மாட்டாது என்றும் தெரிவித்துள்ளார். தேவையான நேரத்தில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை காட்டுவதாகவும், அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கை தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். - [அல்-ஜசீரா ஊடகவியலாளர் சுட்டுக்கொலை](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d%e0%ae%9c%e0%ae%9a%e0%af%80%e0%ae%b0%e0%ae%be-%e0%ae%8a%e0%ae%9f%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%9f/): பலஸ்தீனிய அமெரிக்கரான அல்ஜசீரா ஊடகவியலாளர் ஷிரீன் அபு அக்லே மேற்குக் கரை நகரமான ஜெனினில் இஸ்ரேலிய இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டார். மேற்குக் கரையில் இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகள் குறித்த அறிக்கையிடல் பணியில் ஈடுபட்டிருந்த நிலையல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாரென பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அபு அக்லேவின் தயாரிப்பு உதவியாளரான ஊடகப் பணியாளர் அலி அல்-சமுதியும் சுடப்பட்ட நிலையில் படுகாயங்களுக்கு உள்ளாகி தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். அரபு உலகின் மிக முக்கியமான பத்திரிகையாளர்களில் ஒருவரான அபு அக்லே, இஸ்ரேலிய இராணுவத்தால் திட்டமிட்டே கொல்லப்பட்டாரென அல் ஜசீரா குற்றம் சாட்டியுள்ளது. மேலும், இந்த கொலையை கண்டித்துள்ள அல் ஜசீரா, இந்தப் படுகொலைக்கு இஸ்ரேல் பொறுப்புக் கூறலை உறுதி செய்யுமாறு சர்வதேச சமூகத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. - [எதிர்வரும் நாட்களில் நாட்டின் வானிலை தொடர்பான எச்சரிக்கை](https://minnal24.com/%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f/): எதிர்வரும் நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதன்படி, தென்மேல், மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், வட மாகாணத்தின் பல இடங்களிலும், அநுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும், எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. - [பிரதமரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b0%e0%af%88-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95/): இலங்கையில் பிரதமரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு உண்டு என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். எந்தவொரு கட்சியும் பிரதமர் பதவிக்கு தமது சார்பில் ஒருவரை நியமிக்காதுவிட்டால் பிரதமர் பதவிக்கு ஒருவரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு. பாராளுமன்ற உறுப்பினர்களின் பொறுப்பற்ற செயற்பாடுகளினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். - [ஜனாதிபதிக்கெதிரான நம்பிக்கையில்லா பிரேரணை 17 ஆம் திகதி](https://minnal24.com/%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%86%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf/): ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப்பிரேரணை மீது பாராளுமன்றத்தில் எதிர்வரும் 17 ஆம் திகதி விவாதம் நடத்தப்படவுள்ளது. சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தன தலைமையில் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. குறித்த பிரேரணை நிறைவேறினால்கூட ஜனாதிபதியை பதவி நீக்கம் செய்யமுடியாது. எனினும், ஜனாதிபதி மீது பாராளுமன்றத்தின் அவநம்பிக்கையை அதன் மூலம் வெளிப்படுத்தலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார். - [இன்று நடைபெறவிருந்த நேர்முகத்தேர்வு ஒத்திவைப்பு](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%a8%e0%ae%9f%e0%af%88%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%af%8d/): பாடநெறிசாரா நடவடிக்கைகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான 2022-2021 கல்வியாண்டுக்குரிய பல்கலைக்கழக அனுமதிக்கான நேர்முகத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று வெள்ளிக்கிழமை குறித்த நேர்முகத்தேர்வுகளை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், நாட்டின் தற்போதைய சூழ்நிலை காரணமாக அதனை ஒத்திவைக்க தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். - [பிரதமரின் செயலாளராக ஏக்கநாயக்க](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%8f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/): பிரதமரின் செயலாளராக ஈ.எம்.எஸ்.பி. ஏக்கநாயக்க,   கோட்டை ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத்திடமிரருந்து தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார். சமன் ஏக்கநாயக்க, இலங்கை நிர்வாக சேவையில் விசேட தர ஓய்வுபெற்ற அதிகாரி ஆவார். 2015 – 2019 காலப்பகுதியில் மூன்று தடவைகள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் செயலாளராக கடமையாற்றிய அவர், நான்காவது தடவையாகவும் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். ஈ.எம்.எஸ்.பி. ஏக்கநாயக்க, பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தனது முதல் பட்டத்தையும், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றவராவார். இவர்  தனது 30 வருடங்களுக்கும் அதிகமான  நிர்வாக சேவையில், இளைஞர் விவகாரம், விளையாட்டு, சமுர்த்தி, வீடமைப்பு, கைத்தொழில், வெளிவிவகார மற்றும் நிதி ஆகிய அமைச்சுக்களிலும், மலேசியா மற்றும் இலண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயங்களிலும்  சேவையாற்றியுள்ளார் - [17ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை](https://minnal24.com/17%e0%ae%86%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%b5%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d/): க.பொ.த சாதாரண தர பரீட்சையுடன் தொடர்புடைய கருத்தரங்குகள், மேலதிக வகுப்புகள் மற்றும் கலந்துரையாடல்களுக்கு எதிர்வரும் 17ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை, எதிர்வரும் 23 ஆம் திகதி முதல், ஜூன் மாதம் முதலாம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையிலேயே பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார். இந்த தடை உத்தரவை மீறினால் பரீட்சை சட்ட விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையாளர் நாயகம் தெரிவித்தார். மேலும் சாதாரணதரப் பரீட்சையை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.   - [புதிய பிரதமருடன் இணைந்து செயற்பட தயார்](https://minnal24.com/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a3%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81/): இலங்கையை மீண்டும் பலப்படுத்துவதற்காக புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து செயற்பட எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையின் பிரதமராக ஆறாவது தடவையும் நேற்று வியாழக்கிழமை ரணில் பதியேற்றுக்கொண்டதையடுத்து இவ்வாறு வாழ்த்தியுள்ளார். - [சஜித்தின் கடிதத்திற்கு ஜனாதிபதி அனுப்பிய பதில்](https://minnal24.com/%e0%ae%9a%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%9c/): பிரதமர் பதவி தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் அனுப்பிய கடிதத்திற்கு பதில் ஜனாதிபதி பதில் வழங்கியுள்ளார். அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவிக்கு நியமிப்பதற்கு மேற்கொண்ட தீர்மானத்தை தற்போது மாற்ற முடியாது. பிரதமர் பதிவியை ஏற்பது தொடர்பில் தாங்களுடன் இதற்கு முன் அறிவித்த போதிலம் இதுபற்றி சரியான பதில் கிடைக்காத பட்சத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. மேலும், சஜித் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லையெனவும் ஜனாதிபதி அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனாதிபதி – ஊடகப்பிரிவு - [கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் விடுத்துள்ள அறிவித்தல்](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a3/): நாளை வெள்ளிக்கிழமை கிழக்கு மாகாண பாடசாலைகள் காலை 7.30 மணியிலிருந்து மதியம் 12.30 மணி வரை நடைபெறும், என தெரிவிக்கப்பட்டுள்ளது கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் திருமதி.நகுலேஸ்வரி புள்ளநாயகம் இதனை தெரிவித்துள்ளார். - [நாளை காலை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும்](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%88-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%88-%e0%ae%8a%e0%ae%b0%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d/): நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு தளர்த்தப்படவுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அதேவேளை, நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் நாளை மறுதினம் சனிக்கிழமை காலை 6 மணிவரை அமுலாகும் வகையில் மீண்டும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படவுள்ளதாக, மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. - [வடக்கு கிழக்கின் பல பகுதிகளில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு](https://minnal24.com/%e0%ae%b5%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b2-%e0%ae%aa%e0%ae%95%e0%af%81%e0%ae%a4/): -வாழைச்சேனை நிருபர்- ‘கஞ்சி பரிமாறுவோம் முள்ளிவாய்க்கால் வலி சுமந்த கதை பகிர்வோம்’ என்ற தலைப்பில் முள்ளி வாய்க்கால் அவல நிலை குறித்து அதனை நினைவு கூர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பு காந்தி பூங்காவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வினை வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கம் ஏற்பாடு செய்திருந்தனர். காந்தி பூங்காவில் ஒன்று கூடியவர்கள் உப்பில்லாத கஞ்சியினை அவ்விடத்தில் காச்சியதுடன் அதனை சிரட்டையில் கொண்டு வீதியினால் சென்றோர்கள் மற்றும் பஸ் தரிப்பிடங்களில் இருந்தோர்கள் என பலருக்கும் வழங்கினார்கள். அத்துடன் முள்ளிவாய்க்கால் கஞ்சி என்ற துண்டுப் பிரசுரங்களும் வழங்கி வைக்கப்பட்டது. -மன்னார் நிருபர்- மே-18 முள்ளிவாய்க்கால் வாரத்தையொட்டி இன்று வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் மன்னார் பள்ளிமுனை பெருக்க மரத்தடி பகுதியில் மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. -யாழ் […] - [மன்னார் நகர நீர் பாவனையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர வேண்டுகோள்](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%95%e0%ae%b0-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%ae%be/): -மன்னார் நிருபர்- மன்னார் நகர நீர் பாவனையாளர்களுக்கு மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை பொறுப்பதிகாரி அவசர வேண்டுகோள் ஒன்றை இன்று வியாழக்கிழமை விடுத்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பற்றாக்குறை மற்றும் மின்வெட்டு காரணமாக மன்னார் நகர பகுதியில் மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் பகல் நேரங்களில் வழங்கப்படும் நீர் வழங்கலின் அழுத்தம் குறைவாக காணப்படும். இதனால் பகல் நேரங்களில் எமது பாவனையாளர்கள் துரித கதியில் நீரை பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்படும். தொடர்ச்சியான மின்வெட்டு மற்றும் எரிபொருள் பற்றாக்குறை இதற்கான காரணமாக உள்ளது. எனவே முருங்கனில் இருந்து மன்னாரிற்கு நீரை விரைவுபடுத்துவதில் தாமதம் ஏற்படுகிறது. எனவே மன்னார் நகர பகுதிகளில் நீர் இணைப்பு பெற்றுள்ள பாவனையாளர்கள் நாளாந்தம் இரவு நேரங்களில் தமது வீடுகளில் உள்ள நீர் தாங்கிகள் அல்லது கொள்கலன்களில் நீரினை சேமித்து வைத்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள், என மன்னார் நகர நீர் […] - [அங்கஜனின் அலுவலக பதாகைக்கு தீ வைத்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b2%e0%af%81%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%95-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%af%8d/): -யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் சண்டிலிப்பாய் தொகுதி அலுவலக பதாகைக்கு தீ வைத்தார் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் மானிப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். சுழிபுரத்தைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே இன்று கைது செய்யப்பட்டார். நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் சண்டிலிப்பாய் தொகுதி அலுவலகத்தின் முன் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பதாகை நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு தீவைக்கப்பட்டது. எனினும் பகுதியளவில் மட்டும் பதாகை சேதமடைந்தது. இதுதொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயந்த குணதிலக, சுழிபுரத்தைச் சேர்ந்த ஒருவரை இன்று வியாழக்கிழமை கைது செய்தார். சந்தேக நபர் வேலைவாய்ப்புப் பெற்றுத்தரவில்லை என்ற விரக்தியில் அலுவலகப் பதாகைக்கு தீவைத்துள்ளார் என்று விசாரணையில் தெரியவந்தது என்று பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்தில் அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் இந்தச் செயல் அமைந்ததால் சந்தேக நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார். - [ஐ.தே.க வின் ஆதரவாளர்கள் யாழில் வெற்றிக் கொண்டாட்டம்](https://minnal24.com/%e0%ae%90-%e0%ae%a4%e0%af%87-%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%af%e0%ae%be/): -யாழ் நிருபர்- ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் யாழ்ப்பாண நகரில் வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்கு இலங்கையின் புதிய பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். இதனையடுத்து, யாழ்ப்பாண நகரின் பிரதான வீதிகளில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் பட்டாசுகளை கொளுத்தி மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர். - [முன்னாள் பிரதமர் புதிய பிரதமருக்கு வாழ்த்து தெரிவிப்பு](https://minnal24.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%aa/): புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கவுக்கு, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ டுவிட்டர் பதிவொன்றின் ஊடாக வாழ்த்து தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்க பதவியேற்று ஒரு சில நிமிடங்களிலேயே மஹிந்த ராஜபக்ஷ புதிய பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி காரணமாக கடந்த 9ஆம் திகதி பிரதமர் பதவியை மஹிந்த ராஜபக்ஷ இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.   - [புதிய பிரதமராக பதவியேற்றார் ரணில்](https://minnal24.com/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%af%87%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1/): ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஆறாவது பிரதமராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகியதைத் தொடர்ந்து, தற்போது புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க இன்று வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்டுள்ளார். - [சாய்ந்தமருதில் மர்ம துர்நாற்றத்தின் காரணம் கண்டறியப்பட்டது](https://minnal24.com/%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d%e0%ae%ae-%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%8d/): -கல்முனை நிருபர்- சாய்ந்தமருது பிரதேசத்தின் ஒரு பகுதியில் கடந்த சில வாரங்கள் முதல் பிந்திய மாலை பொழுதுகளில் பலத்த  துர்நாற்றமொன்று வெளிவந்து கொண்டிருப்பதனால் மக்கள் உச்சகட்ட அசௌகரியங்களை அனுபவித்து வருகின்றனர். இதனடிப்படையில் சுகாதார துறையினருக்கும், சாய்ந்தமருது பொலிஸாருக்கும் கிடைத்த மக்களின் முறைப்பாட்டையடுத்து பிரதம சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.ஜே.கே.எம். அர்ஸத் காரியப்பரின் களவிஜயத்தின் மூலம் கல்முனையை நோக்கி செல்லும் வண்ட் வீதியில் நேற்றிரவு மேற்கொண்ட பரிசோதனையில் விலங்கு கழிவுகள், கோழி கழிவுகள் உட்பட பல்வேறு திண்மக்கழிவுகள் இடப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. குறித்த தூர்நாற்றம் தொடர்பில் பிரதேசவாசிகளுடன் உரையாடிய கல்முனை மாநகர பிரதம சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.ஜே.கே.எம். அர்ஸத் காரியப்பர், அடைக்கப்பட்டுள்ள நீர்நிலையில் நான்கு மாடுகள் இறந்துள்ளதாக பிரதேச வாசிகள் மூலமாக அறிந்து கொண்டதாகவும், இந்த விடயங்கள் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுத்து மக்களின் சுகாதாரத்தை உறுதிப்படுத்த தானும் கல்முனை மாநகர சுகாதார பிரிவும் எப்போதும் தயாராக இருப்பதாகவும், […] - [பாடசாலைகளில் மாணவர்களின் வரவில் வீழ்ச்சி](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9/): -யாழ் நிருபர்- நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதன்பின்னர் இன்று வியாழக்கிழமை காலை 7 மணியளவில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு வடக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் கல்வி ஆரம்பிக்கப்பட்டன. எனினும், வழமையாக பாடசாலைக்கு வருகை தரும் மாணவர்களது எண்ணிக்கையை விட இன்று வருகை தந்த மாணவர்களது எண்ணிக்கையில் வீழ்ச்சி காணப்பட்டது. அத்துடன், வழமையாக மதியம் 1.30 இற்கு நிறைவடையும் பாடசாலையானது மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால் 12.00 மணிக்கு நிறைவடைந்தது. படங்கள் :- வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி, விக்டோரியா கல்லூரி - [ஊரடங்கு தளர்த்திய வேளை யாழில் எரிபொருளை கொள்வனவு செய்ய குவிந்த மக்கள்](https://minnal24.com/%e0%ae%8a%e0%ae%b0%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a4%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b3%e0%af%88-%e0%ae%af/): -யாழ் நிருபர்- ஊரடங்கு சடத்தினை சரியான முறையில் நடைமுறைப்படுத்துவதற்காக நேற்று புதன்கிழமை நாடு முழுவதும் எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று வியாழக்கிழமை காலை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டது. இந்நிலையில் எரிபொருட்களை கொள்வனவு செய்வதற்கு, யாழில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் குவிந்தனர். அந்தவகையில், சித்தங்கேணி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் சுமார் 800ற்கும் அதிகமானோர் வாகனங்களுடன் எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு முண்டியடித்ததை அவதானிக்க முடிந்தது. இதனால் வீதியில் வாகன நெரிசல் ஏற்பட்டது. இதன்போது குழப்பங்கள் ஏற்படாமல் இருப்பதற்கும், வாகன நெரிசலை சீர் செய்யவும் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி சமன் குணதிலகவின் வழிகாட்டலின் கீழ் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். - [வன்முறை ஏற்புடையது அல்ல, அதை தமிழ் மக்கள் ரசிக்கக் கூடாது](https://minnal24.com/%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88-%e0%ae%8f%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%ae%a4%e0%af%81-%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2/): -மன்னார் நிருபர்- அமைதி வழி போராட்டத்தை அரசியல் பின்புலத்துடன் அரச இயந்திரத்தின் ஒத்திசைவுடன் நசுக்க முனைவது சன நாயக படுகொலை ஆகும். இச் செயற்பாட்டை வன்மையாக கண்டிப்பதுடன் ஆழ்ந்த கவலையடைகிறோம், என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார். அவர் இன்று வியாழக்கிழமை மாலை விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அரசியல் அமைப்பின் பிரகாரம் சனநாயக உரிமை பண்பியல்புகளுக்கு மதிப்பளித்து முதன்மைப்படுத்த வேண்டியது தார்மீக பொறுப்பும் அடிப்படை உரிமையும் ஆகும் . இந்த மரபை காக்க வேண்டியது ஆட்சியாளரின் இரகசியப் பிரமாணமும் ஆகும். அவ்விதமான நெறி முறையை அவமதிப்பது சம நீதியின்மையற்ற செயலில் ஈடுபட்டது பெரும் தேச விரோத குற்றமாகும். வன்முறையின் வலிகளை நன்கு உணர்ந்தவர்கள் என்ற வகையில் முன்னெச்சரிக்கையுடன் சவால்களை எதிர் கொண்டு, வெற்றி கொள்ள முனைவது சிறந்த சனநாயக தலைமைத்துவ பண்பியலாகும். அவசர […] - [பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b4%e0%ae%95-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%86/): 2022/2021 கல்வியாண்டுக்குரிய பல்கலைக்கழக அனுமதிக்கான நேர்முகத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நாளை வெள்ளிக்கிழமை குறித்த நேர்முகத்தேர்வுகளை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், நாட்டின் தற்போதைய சூழ்நிலை காரணமாக அதனை ஒத்திவைக்க தீர்மானித்துள்ளதாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். - [போராட்டத்தில் ஈடுபடுகின்றவர்களை அரவணைக்க வேண்டும்](https://minnal24.com/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%88%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9/): -யாழ் நிருபர்- போராட்டத்தில் ஈடுபடுகின்றவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அவர்களை அரவணைத்துக் கொள்ள வேண்டும், என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சினருக்கு அக்கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சின் யாழ்ப்பாண தலைமைக் காரியாலயத்தின் முன்பாக போராட்டத்தில் ஈடுபடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து, நேற்று புதன்கிழமை கட்சியின் அமைப்பாளர், பொறுப்பாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்களுடன் நடத்திய கலந்துரையாடலின் போதே  மேற்குறிப்பிடப்பட்ட விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இருந்து சூம் (Zoom) ஊடாக கலந்துரையாடிய கட்சியின் செயலாளர் நாயகம், பொருளாதார நெருக்கடி காரணமாக நாடளாவிய ரீதியில் மக்கள் தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தி வருகின்ற நிலையில், மக்கள் எதிர்கொள்ளுகின்ற இடர்களை துடைப்பதை பிரதான நோக்கமாக கொண்டு செயற்படுகின்ற கட்சி என்ற அடிப்படையில் அதனைப் புரிந்து கொண்டு செயற்பட வேண்டும், எனவும் தெரிவித்தார். மேலும், வன்முறைகளின் ஊடாக எதனையும் சாதிக்க முடியாது என்ற எமது நம்பிக்கையை போராட்டத்தில் ஈடுபடுகின்ற […] - [மூன்று பாராளுமன்ற தேர்தல்களை சந்தித்தும் எவ்வித அபிவிருத்தியும் இல்லை](https://minnal24.com/%e0%ae%ae%e0%af%82%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2/): -கல்முனை நிருபர்- சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்ததன் பின்னர், கடந்த மஹிந்த அரசினால் நிர்மாணித்து கொடுக்கப்பட்ட சாய்ந்தமருது பொலிவேரியன் கிராம மக்கள் மூன்று ஜனாதிபதிகளை, மூன்று பாராளுமன்ற தேர்தல்களை சந்தித்தும் இதுவரை தம்முடைய குறைபாடுகள் நிபர்த்திசெய்யப்படவில்லை, என ஏக்கம் தெரிவிக்கின்றனர். அங்குள்ள வீதிகள் பாவனைக்கு உதவாத நிலையில் உள்ளதையும், தரமற்ற அபிவிருத்திகள் மூலம் பாதைகள் உடைந்து காணப்படுவதையும், பலதடவைகள் அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு எடுத்துரைத்தும் எவ்வித பயனும் கிட்டவில்லை, என்று தெரிவிக்கின்றனர். மழைக்காலங்களில் பாம்பு போன்ற நச்சு விலங்குகள் வீடுகளை நோக்கி படையெடுக்கும் நிலை உள்ளதாகவும், இரவில் போதியளவிலான வெளிச்சம் தரக்கூடிய மின்விளக்குகள் இல்லாமையால் பல்வேறு அசௌகரியங்களை அனுபவித்து வருவதாகவும், இந்த பிரதேசத்தின் பிரதான நுழைவாயிலாக உள்ள பாலம் கூட மிகப்பெரிய சேதத்தை அடைந்துள்ளதாகவும், மக்கள் குறை கூறுகின்றனர். வீதிகளில் குளம் போன்று நீர் தேங்கி நிற்பதால் பாதசாரிகளும், பாடசாலை மாணவர்களும் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து வருவதாகவும், அடிக்கல் நடப்பட்டு […] - [மீண்டும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்](https://minnal24.com/%e0%ae%ae%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%8a%e0%ae%b0%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81/): நாடு முழுவதும், இன்று வியாழக்கிழமை பிற்பகல் 2.00 மணி முதல் மீண்டும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இன்று  அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு சட்டம் நாளை வெள்ளிக்கிழமை காலை 6.00 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியால் வழங்கப்பட்ட எழுத்துமூல அனுமதியின்றி  வீதிகள், ரயில் பாதை, பொதுப்பூங்கா, பொது விளையாட்டு மைதானம், கடற்கரை  ஆகியவற்றில் யாரும் கூட்டமாகவோ, தேவையற்ற விதத்திலோ நடமாட அனுமதி இல்லையென, ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. - [இந்திய மீனவர்கள் 12 பேர் விடுதலை](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-12-%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf/): -கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி இரணைதீவு கடற்பரப்பில், கடந்த மார்ச் மாதம் 23 ஆம் திகதி எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது​ செய்யப்பட்ட 12 இந்திய மீனவர்கள்​ தொடர்பான வழக்கு, இன்று வியாழக்கிழமை கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதவான்​ பி.ஆர்​ இஸ்மாத் ஜெமில் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது,​ குறித்த 12 இந்திய மீனவர்கள் தொடர்பிலான குற்றச் சாட்டு பத்திரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதன்படி, அனுமதிப்பத்திரம் இன்றி இலங்கை கடற்பரப்புக்குள் பிரவேசித்தமை,​ ​ இழுவை மடி வலைகளை உடமையில்​ வைத்திருந்தமை,​ இழுவை மடி வலைகளை பயன்படுத்தி தொழில் மேற்கொண்டது,​ ஆகிய​ மூன்று குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன. இந்நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி, குறித்த மீனவர்களுக்கு 15 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட இரண்டு வருடகால சிறை தண்டனையை விதித்து விடுதலை செய்தார். ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ […] - [புதிய பிரதமராக பதவியேற்கிறார் ரணில் விக்கிரமசிங்க](https://minnal24.com/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%af%87%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95/): ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று வியாழக்கிழமை மாலை புதிய பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொள்வாரென தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க புதிய அரசாங்கத்தை அமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மையை நாடாளுமன்றத்தில் பெற்றுள்ளதாக, அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இன்று மாலை 4.00 மணிக்கு புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க 7 ஆவது தடவையாகவும் பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. - [இன்றைய மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%88%e0%ae%af-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b5%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa/): நாடு முழுவதும் இன்று வியாழக்கிழமை 5 மணி நேர மின்வெட்டுக்கு அனுமதி அளித்துள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. பகலில் 3 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களும், இரவில் 1 மணித்தியாலம் 40 நிமிடங்களும் மின்வெட்டு நீடிக்கும், என அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.     - [ஏறாவூரில் ஆடைத் தொழிற்சாலை மீதான தாக்குதலை கண்டித்து போராட்டம்](https://minnal24.com/%e0%ae%8f%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b5%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3-%e0%ae%86%e0%ae%9f%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b4/): -கல்முனை நிருபர- மட்டக்களப்பு – ஏறாவூரில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்து போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஏறாவூரில் இயங்கி வந்த தொழிற்சாலைகள் தாக்கப்பட்டு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தாக்குதல் நடத்தயவர்களுக்கு எதிராகவும், அவர்களை கைது செய்யும்படியும் வலியுறுத்தி தொழிற்சாலை ஊழியர்களால் இன்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த ஆடைத் தொழிற்சாலையானது முன்னாள் அமைச்சர் நசீர் அஹமட்டுடன் தொடர்புடையது என தெரிவிக்கப்படுகின்றது. - [பொலிஸார் மற்றும் வைத்தியசாலை ஊழியர்களால் குழப்பநிலை](https://minnal24.com/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b8%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af/): -யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் மணிக்கூட்டு கோபுர வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று புதன்கிழமை ஏற்பட்ட குழப்பத்தினை அடுத்து எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மதியம் முதல் பெற்றோல் முடிவடைந்து விட்டதாக ஊழியர்கள் கூறிய போதிலும் ஒரு சிலருக்கு வழங்கப்பட்டது. அதனால், அங்கு கூடிய சில தமக்கும் பெற்றோல் தருமாறு கோரிய போது, யாழ்.போதனா வைத்திசாலையில் கடமையாற்றும் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு மாத்திரமே வழங்குகின்றோம் என கூறியுள்ளனர். அதன் போது, அங்கு இருந்த சிலர், “ஒரு வைத்திய சாலை ஊழியர் ஐந்திற்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிளில் வந்து பெற்றோல் அடித்து செல்வதனை எவ்வாறு எம்மால் அனுமதிக்க முடியும்”, என கேட்டுள்ளனர். இந்நிலையில், அங்கு இரு மோட்டார் சைக்கிளில் வந்த காவல்துறையினர் தமக்கு பெற்றோல் நிரப்ப ஊழியர்களிடம் கேட்ட போது, அவர்களுக்கு பெற்றோல் வழங்க ஊழியர்கள் தயாராகிய போது, “மணித்தியால கணக்காக […] - [நீண்ட காலமாக கைபேசிகளைத் திருடி வந்தவர் கைது](https://minnal24.com/%e0%ae%a8%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95-%e0%ae%95%e0%af%88%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%88%e0%ae%a4%e0%af%8d/): -யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் நீண்ட காலமாக கைபேசிகளைத் திருடி வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து பெறுமதி வாய்ந்த 9 கைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர். மானிப்பாய் சாவற்கட்டுப் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவரே இவ்வாறு நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் நீண்ட நாட்களாக ஊழியர்கள். நோயாளிகளின் கைபேசிகள் திருட்டுப்போயிருந்தன. கதைத்துவிட்டுத் தருவதாக தெரிவித்துவிட்டு அபகரித்துச் செல்வது, நோயாளிகள் மலசல கூடங்களுக்கு செல்லும் போது அபகரித்துச் செல்வது, என கைபேசிகள் திருடப்பட்ட சம்பவம் இடம்பெற்றன. அவை தொடர்பில் பொலிஸில் முறைப்பாடுகள் செய்யப்பட்டன. யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ்நிலைய குற்றத் தடுப்பு பொலிஸ் பிரிவினர் மேற்கொண்ட விசாரணையிலேயே ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். - [ஊரடங்கு காரணமாக அகற்றப்படாத குப்பைகள் : வீதிகளில் தேங்கி கிடந்து துர்நாற்றம் வீசும் அவலம்](https://minnal24.com/%e0%ae%8a%e0%ae%b0%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95-%e0%ae%85%e0%ae%95%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa/): நாட்டில் அழுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தை தொடர்ந்து, கடந்த இரண்டு நாட்களாக யாழ்ப்பாணம் வடமராட்சி, பருத்தித்துறை, நெல்லியடி போன்ற பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டது. அவசரத் தேவைகளுக்காக மருத்துவமனைக்குச் சென்ற முச்சக்கர வண்டிகள் கூட எரிபொருள் நிரப்புவதற்கு முடியாதநிலை காணப்பட்டதுடன், மருத்துவமனை உட்பட அத்தியாவசிய சேவைகளுக்கு கூட மக்கள் சென்று வர முடியாத அவல நிலையை அவதானிக்க முடிந்தது. பருத்தித்துறை நகரில் கழிவகற்றல் மேற்கொள்ளப்படாத பல இடங்களிலும் துர்நாற்றம் வீசிக் கொண்டிருக்கிறது ஆங்காங்கே பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தனர். - [இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு செல்லும் மக்களை தடுக்க பலத்த பாதுகாப்பு நடவடிக்கை](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/): -கிளிநொச்சி நிருபர்- இலங்கையில் இருந்து இந்தியாவிற்க்கு மக்கள் செல்வதை தடுக்கு நோக்கில் இந்திய கடலோர காவல்படையினரால் கடலோர காவல் நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக கிரப் ஓவர் கப்பல் என்று சொல்லப்படும் கடலிலும் தரையிலும் செல்லக்கூடிய கப்பல் பயன்படுத்தப்பட்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. - [அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் நியமனம்](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%9a%e0%af%87%e0%ae%b5%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a3%e0%af%88%e0%ae%af/): ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக, அத்தியாவசிய சேவைகளை வழங்குதல் மற்றும் தொடர்ந்து முன்னெடுத்தல் தொடர்பான சகல செயற்பாடுகளையும் அமுல்படுத்துவதற்கும், ஒருங்கிணைப்பதற்கும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் இரண்டு மேலதிக ஆணையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இலங்கை நிர்வாக சேவையின் விசேட தரப் பிரதானி ஒருவரான கே.டி.எஸ்.ருவன் சந்திர , அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகமாகவும், மேலதிக ஆணையாளர்களாக விவசாய அமைச்சின் முன்னாள் செயலாளரான ரோஹன புஷ்பகுமார மற்றும் தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன் ஒருங்கிணைப்பு அதிகாரிகளாக 25 மாவட்டங்களைச் சேர்ந்த செயலாளர்களையும் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடகப் பிரிவு - [கிழக்கு , மேல்மாகாண பாடசாலைகளுக்கு  விடுமுறை](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%af%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%9a%e0%ae%be/): மேல்மாகாணத்தின் அனைத்து அரச பாடசாலைகளுக்கும் நாளை வியாழக்கிழமை  விடுமுறை வழங்கப்படுவதாக மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இதே வேளை , கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும்  மூடப்படுவதாக மாகாண கல்விப் பணிப்பாளர் நகுலேஸ்வரி பிள்ளைநாயகம் தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டு அசாதாரண அரசியல் சூழ்நிலையையடுத்தே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது - [புதிய பிரதமராக மீண்டும் ரணில் ?](https://minnal24.com/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/): புதிய பிரதமராக  ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நாளை வியாழக்கிழமை பதவியேற்கவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இதுவரை இத்தகவல் உறுதி செய்யப்படவில்லை. பிரதமர் பதவியை பொறுப்பேற்குமாறு பல கட்சிகளின் தலைவர்களிடம் ஜனாதிபதி கோரியிருந்த நிலையில், தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு முகங்கொடுப்பதற்கு எந்தவொரு கட்சித் தலைவரும் முன்வரவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ரணில் விக்ரமசிங்கவுக்கும் அவசர சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. - [மட்டக்களப்பின் கதைச் சிற்பி மாஸ்டர் சிவலிங்கம் காலமானார்](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1/): மட்டக்களப்பின் பொக்கிஷம் என அழைக்கப்படும் கதைச் சிற்பி மாஸ்டர் சிவலிங்கம் இன்று புதன்கிழமை மாலை இறையடி சேர்ந்தார். ஈழத்தின் சிறுவர் எழுத்தாளரும், பேச்சாளரும் ஆகிய இவர், கவிதை, சிறுவர் கதை, சிறுவர் பாடல்கள், வில்லுப்பாட்டு, நகைச்சுவைப் பேச்சு, நாடகம் எனப் பல துறைகளிலும் சிறப்புப் பெற்றவர். அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை வியாழக்கிழமை நடைபெற்று, கல்லடி உப்போடை இந்து மயானத்தில் மாலை 4.00 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும், என அறிவிக்கப்பட்டுள்ளது - [சஜித் அணியிலிருந்து விலகினார் ஹரீன்](https://minnal24.com/%e0%ae%9a%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95/): ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோ, அக்கட்சியிலிருந்து விலகி சுயாதீனமாக செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளார். - [அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட மேலும் 19 பேர் களுவாஞ்சிக்குடியில் கைது](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%b5%e0%af%81%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%87%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%8d/): சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்ட மேலும் 19 பேர் களுவாஞ்சிக்குடி கடற்பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது இன்று வியாழக்கிழமை அதிகாலை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது குறித்த 19 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இந் நிலையில் திருகோணமலை துறைமுக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இதேவேளை, இன்று காலை சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்ட 21 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது தொடர்புடைய செய்தி https://www.minnal24.com/?p=75993 - [ஒரு இரசாயன உர மூடையை 10,000 ரூபாவிற்கு வழங்க தீர்மானம்](https://minnal24.com/%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%ae%a9-%e0%ae%89%e0%ae%b0-%e0%ae%ae%e0%af%82%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%af%88-10000-%e0%ae%b0%e0%af%82%e0%ae%aa%e0%ae%be/): விவசாயிகளுக்கு இரசாயன உர மூட்டை ஒன்றினை 10,000 ரூபாவிற்கு வழங்குவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, உரப் பிரச்சினைக்கு தீர்வு காண பிரதமரால் நியமிக்கப்பட்ட குழு தீர்மானித்துள்ளது. இந்திய கடன் அடிப்படையில் 65,000 மெற்றிக் தொன் யூரியா உரத்தை இம்மாத இறுதிக்குள் இறக்குமதி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்தக் குழு குறிப்பிட்டுள்ளது. - [06 விடயங்களுக்கும் தாம் உடன்படுவதாக:பிரதமர் தெரிவிப்பு](https://minnal24.com/06-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%af%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%9f/): எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவினால் நாட்டினை முன்னோக்கி செல்லும் பாதை குறித்து முன்வைக்கப்பட்ட கடிதத்திற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதிலளித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்த 06 விடயங்களுக்கு தாம் உடன்படுவதாக பிரதமர் விக்ரமசிங்க தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அரசியலமைப்பின் 21வது திருத்தம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர், எதிர்கால நடவடிக்கை குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடவுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார். 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்பாக வெளிநாட்டு நிபுணர்களின் உதவி தேவைப்படுமாயின் ஏற்பாடு செய்ய முடியும் என அவர் மேலும் தெரிவித்தார். இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள தேர்தல் முறையினால் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக ஐரோப்பிய நாடுகளில் தேர்தல் முறைமையை இணைத்துக்கொள்வது தொடர்பில் ஆராய விசேட குழுவொன்றும் நியமிக்கப்படும் எனவும் பிரதமர் தெரிவித்தார். நாட்டில் நிலவும் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காண்பதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து அனைத்துக் […] - [பாடசாலைகளுக்கான முதலாம் தவணை முடிவடைகின்றது](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d/): அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான 2022 ஆம் ஆண்டிற்கான முதல் பாடசாலை தவணை நாளை வெள்ளிக்கிழமை முடிவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர (சா/த) பரீட்சை மே 23 ஆம் திகதி முதல் ஜூன் 1 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையில், முதல் பாடசாலை தவணை வெள்ளிக்கிழமையுடன் முடிவடையும் என, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டிற்கான இரண்டாம் பாடசாலை தவணை ஜூன் 6 ஆம் திகதி ஆரம்பமாகும். - [கோதுமை மாவின் விலை மீண்டும் அதிகரிப்பு](https://minnal24.com/%e0%ae%95%e0%af%8b%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%88-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f/): கோதுமை மாவின் விலையை 40 ரூபாவினால் ப்றீமா நிறுவனம் அதிகரித்துள்ளது. ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 40 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமது கோதுமைமாவின் விலையை அதிகரிக்குமாறு அனைத்து முகவர்களுக்கும் ப்றீமா நிறுவனம் அறிவித்துள்ளது. - [தமிழ் அரசியல்வாதிகளை வைத்துக்கொண்டு இனியும் எமது விடியலை தேட முடியாது](https://minnal24.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%b5%e0%af%88%e0%ae%a4/): ஈழத்தமிழருக்கான நிரந்தர அரசியல் தீர்வை வழங்கும் வரை இலங்கைத்தீவில் என்றுமே அமைதியானதும், சுபீட்சமானதுமான மக்கள் வாழ்விற்கு இடமில்லை, என அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை தெரிவித்துள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டடுள்ளதாவது, ஆயிரமாயிரம் கறுப்பு யூலைகளயும், செம்மணிகளையும், செஞ்சோலைகளையும் ஒன்றாகச் சேர்த்து சிங்கள பௌத்த பேரினவாத பேயாட்சி ஆடிய ஊழிக்கூத்தின் அழியா சாட்சியாக முள்ளிவாய்க்கால் இரத்த சரித்திரத்தின் 13வது ஆண்டை கடக்கும் நிலையில், ஈழத்தமிழர்களை இனவழிப்புச்செய்த ராஜபக்ச சகோதரர்களின் ஆட்சிக்கெதிராக சிங்கள மக்களே கிளர்ந்து எழுந்துள்ளனர். 13வது இனவழிப்பு நினைவேந்தல் நாளில் கொடுங்கோலர்களின் ஆட்சி அவர்களது சொந்த மக்களாலேயே அடித்துத் வீழ்த்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கையில் இருந்து ஆங்கிலேயர்கள் வெளியேறிய காலத்திலிருந்து ஈழத்தமிழர்களை வஞ்சித்து செய்த இனவாத அரசியலின் விளைவே இன்றைய நிலைக்குக் காரணம். ஈழத்தமிழருக்கான நிரந்தர அரசியல் தீர்வை வழங்கும் வரை இலங்கைத்தீவில் என்றுமே அமைதியான வாழ்வும் ஆரோக்கியமான பொருளாதார வளர்ச்சியும்; கிட்டாது என்பது […] - [அத்தியாவசியமற்ற அரச ஊழியர்கள் நாளை கடமைக்கு சமூகமளிக்க தேவையில்லை](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a-%e0%ae%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%af/): அத்தியாவசியமற்ற அரச ஊழியர்கள் நாளை வெள்ளிக்கிழமை கடமைக்கு சமூகமளிக்க வேண்டிய அவசியமில்லை, என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று வியாழக்கிழமை தனது நாடாளுமன்ற உரையில் அவர் இதனை தெரிவித்துள்ளார் தற்போதைய கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து சிரமங்களை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, பிரதமர் தெரிவித்தார். மேலும், அன்றாடம் அத்தியாவசிய உணவு பொருட்களுக்காக செலவு செய்வதற்கு திறைசேரியில் நிதி இல்லை எனவும், இது தொடர்பான விரிவான அறிக்கை அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும், எனவும் பிரதமர் தெரிவித்தார். அன்றாட நுகர்வுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குரிய செலவினங்களுக்காக உடனடியாக நிதியைக் தேட வேண்டியுள்ளது. உணவு நெருக்கடி உலகளாவிய நெருக்கடியாக மாறுவதற்கான அறிகுறிகள் தென்படுவதாகவும், அதனை முன்னதாகவே அறிந்து  அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க உலக வங்கி 30 பில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளது, என்றும் பிரதமர் தெரிவித்தார்.   - [எதிர்வரும் சனிக்கிழமையின் பின்னரே பெற்றோல் விநியோகம்](https://minnal24.com/%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%bf/): எதிர்வரும் சனிக்கிழமையின் பின்னரே பெற்றோல் விநியோகிக்கப்படும், என இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சனிக்கிழமை முதல் பெற்றோல் விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், அதற்கு தேவையான போக்குவரத்து சேவைகள் வழங்கப்படும் என அச்சங்கம் தெரிவித்துள்ளது. இன்று வியாழக்கிழமை, நாளை வெள்ளிக்கிழமை ஆகிய இரு நாட்களும் பெற்றோல் விநியோகிக்கப்படமாட்டாது, என்பது குறிப்பிடத்தக்கது. - [வைத்திய துறையில் அலட்சிய போக்கு அறவே இருக்க கூடாது](https://minnal24.com/%e0%ae%b5%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a4%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b2%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af/): -கல்முனை நிருபர்- வைத்திய துறையில் பணியாற்ற கிடைத்தது இறைவன் தந்த பொறுப்பு, இவர்களிடத்தில் அலட்சிய போக்கு என்பது அறவே இருக்க முடியாது, என நிந்தவூர் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் எஸ் ஆர் இஸ்ஸதீன் தெரிவித்தார். சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் நடைபெற்ற நோயாளர் பாதுகாப்பு முறைமைகள் குறித்த விழிப்புணர்வு செயலமர்வில் பிரதான வளவாளராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் எம் எச் கே சனூஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், வைத்திய அதிகாரிகள், தாதிய உத்தியோகத்தர்கள் உட்பட அனைத்து தர ஊழியர்களும் கலந்து கொண்டனர். இதன் போது தொடர்ந்தும் உரையாற்றுகையில், வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் திருமதி எஸ் ஆர் இஸ்ஸதீன் மேலும் கூறியதாவது, வைத்தியசாலையில் நோயாளரை பொறுப்பேற்றது முதல் அந்த நோயாளி பூரண சுகம் பெறும் வரை அந்த நோயாளி பற்றிய தகவல் பரிமாற்றம் முறையாக இடம்பெறல் […] - [மீண்டும் நாடாளுமன்றுக்கு வருமாறு சந்திரிகா குமாரதுங்கவிற்கு அத்தாவுல்லாஹ் பகிரங்க அழைப்பு](https://minnal24.com/%e0%ae%ae%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/): -கல்முனை நிருபர்- முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவையும் நாடாளுமன்றுக்கு அழைத்து வரவேண்டும், என்று தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம் அத்தாவுல்லாஹ் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார் அவர் மேலும், இந்த நாட்டை அபிவிருத்தி செய்தது மாத்திரமல்ல, நாட்டை நாசமாக்கியதாக குற்றம் சுமத்தப்படும் பலர் இன்று நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பிரதமர் ரணில் விக்ரசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போன்றோர் நாடாளுமன்றில் தற்போது உறுப்பினர்களாக உள்ளனர். எனினும் சந்திரிகா குமாரதுங்க மாத்திரமே நாடாளுமன்றில் இல்லை. எனவே, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தேசியப்பட்டியலின் ஒருவர் சுரேன் ராகவனாவது பதவி விலகி சந்திரிகா குமாரதுங்கவை நாடாளுமன்றுக்குள் அழைத்து வரவேண்டும். அத்துடன், இதுவரையில் அரச சேவையில் அங்கம் வகித்த அலுவலகர்களையும் அழைத்து வந்து நாட்டை கட்டியெழுப்பும் திட்டங்கள் முன்னெடுக்க வேண்டும், என தெரிவித்துள்ளார். - [நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரின் கைத்துப்பாக்கி மற்றும் தங்கம் மாயம்](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%89%e0%ae%b1%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95-8/): அநுராதபுர மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்கவின் வீட்டில் இருந்த 9 மில்லிமீற்றர் ரக கைத்துப்பாக்கி ஒன்று காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அனுமதிப் பெற்ற குறித்த கைத்துப்பாக்கி காணாமல் போயுள்ளதாக, அவரின் சகோதரரால் அநுராதபுர பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்கவின் வீட்டில் இருந்து 60 பவுன் தங்கம் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச்சம்பவங்களின் போது, பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்கவின், வீட்டிற்கும் அலுவலகத்திற்கும் மற்றும் நாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்கவின், வீட்டிற்கும் தீ வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. - [இன்று முதல் சமையல் எரிவாயு விநியோகம் ஆரம்பம்](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be-2/): இன்று வியாழக்கிழமை முதல் 80,000 சமையல் எரிவாயு கொள்கலன்களை நாளாந்தம் சந்தைக்கு விநியோகிப்பதற்கான நடவடிக்கைகளை லிட்ரோ நிறுவனம் முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை 2,800 மெட்ரிக் டன் எரிவாயு தாங்கிய கப்பல் ஒன்று நாட்டிற்கு வந்திருந்த நிலையில், சீரற்ற வானிலை காரணமாக அதிலிருந்து எரிவாயுவை தரையிறக்குவதில் சிக்கல் ஏற்பட்டிருந்தது. இதனையடுத்து, கப்பல் கொழும்புத் துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டு அதிலிருந்து சமையல் எரிவாயு தரையிறக்கப்பட்டது. அதன்பின், தாங்கி ஊர்திகள் ஊடாக கெரவலப்பிட்டிக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனால், திட்டமிட்டப்படி நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவிருந்த எரிவாயு விநியோகம் தடைப்பட்டிருந்தது. இதேவேளை, 3,800 மெட்ரிக் டன் அளவிலான எரிவாயு தாங்கிய மற்றுமொரு கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது - [பூனை போல் வந்து எலி போல் சென்றதை பார்க்க வேதனையாக இருக்கிறது - சந்திம வீரக்கொடி](https://minnal24.com/%e0%ae%aa%e0%af%82%e0%ae%a9%e0%af%88-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%8e%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a/): “யுத்த வெற்றி தினமான இன்று (மே18) சிங்கம் போல நாடாளுமன்றுக்கு வரவேண்டிய யுத்த நாயகன் மஹிந்த ராஜபக்ச, பூனை போன்று உள்ளே வந்து எலி போன்று வெளியே சென்றதைப் பார்க்க மனதுக்கு வேதனையாக இருந்தது”, என நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார் நேற்று புதன்கிழமை நாடாளுமன்ற அமர்வில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதேவேளை, நேற்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.   - [16 இலட்சம் பெறுமதியான பேருந்து திருட்டு : இருவர் கைது](https://minnal24.com/16-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%af%81/): சுமார் 16 இலட்சம் ரூபா பெறுமதியான பேருந்து ஒன்றை திருடிய குற்றச்சாட்டில் இரு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். பின்வத்த பொலிஸ் பிரிவிற்குபட்ட காலி வீதிக்கு அருகில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பேருந்தே இவ்வாறு திருடப்பட்டுள்ளது. குறித்த திருடப்பட்ட பேருந்து காலி முகத்திடலுக்கு அருகிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட, 28 மற்றும் 29 வயதுடைய, அலவ்வ மற்றும் வாத்துவ பிரதேசங்களை சேர்ந்த சந்தேக நபர்கள் இன்று வியாழக்கிழமை பாணந்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். - [நாட்டில் மழையுடனான வானிலை](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b4%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2/): நாடு முழுவதும் மழையுடனான வானிலை காணப்படும், என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் அதேவேளை, வட மாகாணத்திலும், அனுராதபுரம் மாவட்டத்திலும் பல சந்தர்ப்பங்களிலும் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான அளவு மழை பெய்யக்கூடும். மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 – 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும், என தெரிவிக்கப்பட்டுள்ளது. - [விலை அதிகரிக்கும் தீர்மானம் இல்லை - லங்கா ஐ.ஓ.சி](https://minnal24.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b0%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be/): லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் விலை தொடர்பில் வெளியிடப்படும் செய்தி உண்மைக்கு புறம்பானது, என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்று புதன்கிழமை நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் விலையை அதிகரிப்பதாக சமூக ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த விடயம் தொடர்பில், விளக்கமளித்துள்ள லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் எரிபொருள் விலையை அதிகரிப்பது தொடர்பான எந்த தீர்மானமும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை, என குறிப்பிட்டுள்ளது. - [எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பலப்படுத்தப்படும் இராணுவ பாதுகாப்பு](https://minnal24.com/%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%99/): -மட்டக்களப்பு நிருபர்- இலங்கை கடந்த ஏழு தசாப்தங்களுக்கும் இல்லாத அளவிற்கு மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர் கொண்டுள்ளது. மின்சாரம், உணவு மற்றும் சமையல் எரிவாயு போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுகின்றது. நாளாந்தம் ஆயிரக்கணக்கான வாகனங்கள் எரிபொருளிற்காக வரிசையில் நிற்கும் நிலையில், நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் ஆர்ப்பாட்டங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறித்த நிலைமையினால் அரசாங்கம் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பாதுகாப்பிற்காக படையினரை குவித்து வருகின்றது. மேலும், கொழும்பில் மண்ணெண்ணெய் கொள்வனவு செய்ய முடியாத காரணத்தினால், ஆத்திரமடைந்த மக்கள் பிரதான வீதிகளை மறித்ததையடுத்து, அரசு படையினரை நிலைநிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. நாட்டில் எரிபொருட்களை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் காத்திருந்த, நாட்டின் சிரேஷ்ட பிரஜைகள் சிலர் அண்மையில் உயிரிழந்த சம்பவங்களும் பதிவாகியுள்ளது. எரிவாயு கப்பல் இரண்டு இந்த வாரம் அளவில் நாட்டை வந்தடையவுள்ளதனால், தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய எரிவாயு தட்டுப்பாட்டை குறைக்க முடியும், என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். […] - [முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த ஆத்துமாக்களை நினைவுகூர்ந்து அன்னதான நிகழ்வு](https://minnal24.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0/): வணக்கம் வாழ்க தமிழ் அமைப்பின் ஏற்பாட்டில், களுதாவளை பிள்ளையார் ஆலயத்தில் அன்னதானம் வழங்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை மதியம் 1.30 மணியளவில் இடம்பெற்றது. மட்டக்களப்பு களுதாவளையில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலயத்தில் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளின் ஆத்ம சாந்தி வேண்டி விசேட பூஜை இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து, தமிழ் தேசிய கூட்டமைப்பின் மண்முனை தெற்கு எருவில் பற்று பிரதேசசபை உறுப்பினர் கே.வினோராஜ், வணக்கம் வாழ்க தமிழ் அமைப்பின் செயலாளர் சதீஷன், அமைப்பின் உறுப்பினர்கள், பொதுமக்கள் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த ஆத்மா சாந்தி வேண்டி விசேட பூஜையில் கலந்து கொண்டனர். அத்துடன் சிவா மற்றும் நிசான் அவர்களின் அனுசரணையுடன் ஆலயத்தில் அன்னதானமும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. - [த.தே.கூ.இனால் மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு](https://minnal24.com/%e0%ae%a4-%e0%ae%a4%e0%af%87-%e0%ae%95%e0%af%82-%e0%ae%87%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa/): முள்ளிவாய்க்கால் 13 வது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு கல்லடி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்திற்கு முன்பாக நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டது . இதன்போது, முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளை நினைவு கூரும் முகமாக தீபச் சுடர் ஏற்றப்பட்டு, அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் கூட்டுப் பிரார்த்தனையும் இடம்பெற்றது . இதனைத்தொடர்ந்து, முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது. இதன்போது பொதுமக்கள் மிகவும் ஆர்வத்துடனும், ஆதரவுடனும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது . தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாநகர சபை முதல்வர் மற்றும் உறுப்பினர்கள், பிரதேச சபை தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்கள், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணியினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. - [உள்ளுராட்சி மன்றங்களை கலைத்துவிட அரசிடம் கோரிக்கை](https://minnal24.com/%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%81%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%95%e0%ae%b2/): -கல்முனை நிருபர்- நாட்டின் இன்றைய பொருளாதார நிலை மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையற்ற நிலையை கருத்தில் கொண்டு வீணான செலவாக அரசுக்கும் மக்களுக்கும் சுமையாக இருக்கும் நீடிக்கப்பட்டுள்ள உள்ளுராட்சி மன்றங்களை கலைத்துவிட்டு, ஆணையாளர்கள், விசேட ஆணையாளர்கள், சபை செயலாளர்களிடம் சபைகளை ஒப்படைப்பதன் மூலம் நாட்டின் நிதியில் 150 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் சேமிக்கப்பட வாய்ப்புள்ளது, என தெரிவித்து அல்- மீஸான் பௌண்டஷன்,  ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளனர். அவர்கள் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மேலும், நாட்டு மக்கள் கடுமையான கஸ்டங்களை அனுபவித்துக் கொண்டு பணமில்லாத திண்டாட்டத்திலும், அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதில் பாரிய பிரச்சினைகளையும் அனுபவித்து வருகின்றனர். எரிபொருள் தட்டுப்பாடு முதல் மின்சார தடை வரை நாடு கடுமையான சிக்கலை சந்தித்திருக்கும் இந்த சூழ்நிலையில் மக்களின் வரிப்பணமும், அரச நிதியும் வீணாக்குவதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. உள்ளுராட்சி மன்றங்களின் ஆயுட்காலம் மேலும் நீட்டிக்கப்பட்டு உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு மாதாந்தம் வழங்கப்பட்டு […] - [வட்டுக்கோட்டை தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்](https://minnal24.com/%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81%e0%ae%95%e0%af%8d/): -யாழ் நிருபர்- யாழ். – வட்டுக்கோட்டை தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன்  தலைமையில் இந்நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது, ஈகைச்சுடர் ஏற்றி மலர் தூவி, இரண்டு நிமிட அக வணக்கத்துடன் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில், பிரதேச சபையின் உறுப்பினர்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர். - [சனத் நிஷாந்த உள்ளிட்ட 4 பேர் விளக்கமறியலில்](https://minnal24.com/%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b7%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-4-%e0%ae%aa%e0%af%87/): கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான, சனத் நிஷாந்த, மிலான் ஜெயதிலக்க உள்ளிட்ட 4 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 9 ஆம் திகதி திங்கட்கிழமை அலரி மாளிகைக்கு முன்பாகவும், காலிமுகத்திடலிலும் இடம்பெற்ற கலவரம் தொடர்பில் கைதான நான்கு பேரும் இன்று புதன்கிழமை கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது, அவர்களை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். - [பஸில் ராஜபக்சவை அரசியலில் இருந்து அப்புறப்படுத்தாதவரை மாற்றத்தை கொண்டு வர முடியாது](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%b8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%aa%e0%ae%95%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b5%e0%af%88-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2/): -நுவரெலியா நிருபர் பிரதி சபாநாயகர் தெரிவில் கட்சிகள் ஒற்றுமையாக செயற்பட தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும், அதனை இல்லாமல் செய்தவர் பஸில் ராஜபக்சவே, இவரை இலங்கை அரசியலில் இருந்து அப்புறப்படுத்தாதவரை மாற்றத்தை கொண்டு வர முடியாது, என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். பிரதி சபாநாயகர் தெரிவு தொடர்பாக ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், பிரதி சபாநாயரை தெரிவு செய்யும் விடயத்தில் பிரதமரின் கருத்தாக இருந்தது பெண் ஒருவரை தெரிவு செய்ய முடியுமாக இருந்தால் அது சிறப்பானது என. அதன்படி ஜக்கிய மக்கள் சக்தி அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி பெண் ஒரு வரை பெயரிட்டிருந்தது. அதற்கு அனைவரும் சம்மதித்திருந்த நிலையிலேயே தெரிவு நடைபெற்ற அன்று காலையில் பஸில் ராஜபக்சவின் ஏற்பாட்டில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் ஒருவர் நியமிக்கப்பட்டார். இதன் காரணமாக பாராளுமன்றத்தில் இருண்டு பெயர்கள் […] - [மின்தடை அமுலாக்கப்படும் நேரம் குறையும் சாத்தியம்](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a4%e0%ae%9f%e0%af%88-%e0%ae%85%e0%ae%ae%e0%af%81%e0%ae%b2%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/): நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக, தற்போது அமுலாக்கப்படும் மின் தடை நேரத்தை எதிர்காலத்தில் குறைக்க முடியும், என மின்சார சபையின் சிரேஷ்ட பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மழையுடனான காலநிலையால் நீர்மின் உற்பத்தி நிலையங்களை அண்டியுள்ள நீர்த்தேக்கங்களில், நீர்மட்டம் குறிப்பிடத்தக்க அளவு உயர்வடைந்துள்ளமையே இதற்குக் காரணமாகும் என தெரிவிக்கப்படுகின்றது. நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் மேலும் அதிகரித்தால், மின்னுற்பத்தியை மேலும் அதிகரிக்க முடியும், என மின்சார சபையின் சிரேஷ்ட பொறியியலாளர் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நந்திக பத்திரண தெரிவித்துள்ளார். நீர்மின் உற்பத்தி மூலம் கடந்த வாரம் 210 ஜிகாவொட் மின்சாரம் கிடைக்கப்பெற்றுள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது இதேவேளை, இன்று புதன்கிழமை 3 மணித்தியாலமும், 40 நிமிடங்களும் மின்துண்டிப்பு அமுலாக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.     - [இனவாதம், மதவாதம் பேசும் அரசியல்வாதிகள் நீண்ட காலம் ஆட்சியில் நிலைத்திருந்ததில்லை](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85/): -நுவரெலியா நிருபர்- ஒரு நாட்டில் இனவாதம், மதவாதம் பேசும் அரசியல்வாதிகள் நீண்ட காலம் ஆட்சியில் நிலைத்திருந்ததில்லை. இனவாதத்தையும் மதவாதத்தையும் விதைத்து ஆட்சி நடத்தியதை இன்று இளைஞர்கள் மாத்திரமல்ல அனைத்து மக்களும் புரிந்துக்கொண்டுள்ளார்கள், என மலையக மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினருமான ஆர். இராஜாராம் தெரிவித்துள்ளார். ஊடக அறிக்கை மூலமே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், கோல்பேஸ் பேரெழுச்சி போராட்டத்திற்கு மலையக இளைஞர், யுவதிகளும் ஆதரவு வழங்க வேண்டும். மஹிந்த ராஜபக்ச பிரதமர் பதவியிலிருந்து இராஜினாமா செய்த பின்னர் தற்பொழுது புதிய பிரதமராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்படுள்ளார். இளைஞர் யுவதிகள் நடத்திய போராட்டத்தால் மஹிந்த ராஜபக்ச மாத்திரம் விலகியுள்ளார். இன்னும் ஐனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகவில்லை. ஜனாதிபதி விலகும் வரை தொடர்ந்து நடத்தும் இந்த போராட்டத்திற்கு இன, மத, கட்சி பேதமில்லாமல் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். […] - [நாடாளுமன்றத்திற்கு வருகை தந்தார் மகிந்த ராஜபக்ஷ](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%95/): முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்திற்கு  வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வாரம் நாட்டில் ஏற்பட்ட வன்முறைகளை அடுத்து முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகியிருந்தார். அதனைத்தொடர்ந்து, மகிந்த ராஜபக்சவை திருகோணமலையில் கடற்படை தளத்தில் பாதுகாப்பாக தங்க வைத்துள்ளதாக, பாதுகாப்பு செயலாளர் தெரிவித்திருந்திருந்தார் இந்நிலையில், இன்று முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்திற்கு வருகைத் தந்துள்ளதாக தெரிய வருகின்றது. மேலும், மகிந்த ராஜபக்ஷவிற்கு ஆளும் கட்சியில் வரிசையில் 4 ஆவது முன்னணி ஆசனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. - [காலிமுகத்திடலில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf/): கொழும்பு காலிமுகத்திடலில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு போராட்டக்காரர்களால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இதன்போது, சுடர் ஏற்றப்பட்டதுடன், அகவணக்கமும் செலுத்தப்பட்டது. இதில் சிங்கள மக்களும் கலந்துகொண்டுள்ளதுடன், நினைவேந்தல் உரையை தொடர்ந்து, முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கப்படவுள்ளது. மாலை அமைதியான நினைவு பேரணியும் இடம்பெறவுள்ளது.   - [பேரறிவாளன் விடுதலை](https://minnal24.com/%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b3%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88/): இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை விடுதலை செய்து இந்திய உயர்நீதிமன்றம் இன்று புதன்கிழமை தீர்ப்பு அளித்துள்ளது. தன்னை விடுதலை செய்யுமாறு பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில், உயர்நீதிமன்றத்தில் மத்திய, மாநில அரசுகள் எழுத்துபூா்வமான வாதங்களைத் தாக்கல் செய்திருந்தன. முன்னராக, இந்த வழக்கு கடந்த 11ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், தீா்ப்பை திகதி குறிப்பிடாமல் உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. அதனை தொடர்ந்து, இன்று நீதியரசர் எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான மூவரடங்கிய ஆயம் இன்று முற்பகல் குறித்த வழக்கிற்கான தீர்ப்பை வழங்கி பேரறிவாளனை விடுதலை செய்தது. - [மன்னாரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/): -மன்னார் நிருபர்- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று புதன்கிழமை காலை 8 மணியளவில் மன்னாரில் இடம் பெற்றது. தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் மன்னார் பஜார் பகுதியில் இடம்பெற்றது. இதன் போது முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த மக்களை நினைவு கூர்ந்து சுடர் ஏற்றி, மலர் தூவி ஆஞ்சலி செலுத்தப்பட்டது. இதன் போது அருட்தந்தையர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர். அதனைத்தொடர்ந்து, கலந்து கொண்டவர்களுக்கு காலை உணவாக முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. - [இரண்டு நாட்களுக்கு பெற்றோல் இல்லை](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1/): எதிர்வரும் இரண்டு நாட்களுக்கு பெற்றோல் கிடைக்காது, எனவே வரிசையில் காத்திருக்க வேண்டாம், என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இதேவேளை, இன்று புதன்கிழமை பெற்றோல் விநியோகம் மட்டுப்படுத்தப்படவுள்ளதாக, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார் அதன்படி, பெற்றோலுக்காக வரிசைகளில் காத்திருக்க வேண்டாம், என பெற்றோலிய கூட்டுத்தாபனமும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. எனினும், தற்போது நாடு முழுவதும் டீசல் தட்டுப்பாடின்றி விநியோகிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. - [சீரற்ற வானிலை காரணமாக எரிவாயு தரையிறக்கும் பணிகள் இடைநிறுத்தம்](https://minnal24.com/%e0%ae%9a%e0%af%80%e0%ae%b0%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95-%e0%ae%8e%e0%ae%b0/): எரிவாயு தரையிறக்கும் பணிகளை முன்னெடுக்க முடியாதுள்ளமையால், மறு அறிவிப்பு வரை காத்திருக்கும்படி, லிட்ரோ நிறுவனம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. நாட்டை வந்தடைந்துள்ள கப்பலில் இருந்து 2,800 மெட்ரிக் டன் எரிவாயுவை தரையிறக்கும் பணிகள் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு ஆரம்பிக்கப்பட்டன. எனினும், சீரற்ற வானிலை காரணமாக முழுமையாக தரையிறக்கும் பணிகள் தடைப்பட்டுள்ளதாக, லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அதனால், மறு அறிவிப்பு வரை காத்திருக்கும் படியும், தேவையில்லாமல் எரிவாயுக்காக வரிசையில் காத்திருக்க வேண்டாம் எனவும் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. இன்று முதல் சமையல் எரிவாயு விநியோகப் பணிகளை மீள ஆரம்பிப்பதாக லிட்ரோ நிறுவனம் நேற்று அறிவித்திருந்தது. தற்போது வரையில், எரிவாயுவைப் பெற்றுக்கொள்வதற்காக 7 மில்லியன் டொலர் செலுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, 3,500 மெட்ரிக் டன் எரிவாயு தாங்கிய மற்றுமொரு கப்பல் நாளை வியாழக்கிழமை நாட்டை வந்தடைய உள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே, குறித்த இரண்டு கப்பல்களின் மூலம் பெற்றுக்கொள்ளப்படும் எரிவாயு 5 நாட்களுக்குப் போதுமானதாகும், என லிட்ரோ […] - [கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றத்தில் பாரபட்சம்](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3-%e0%ae%86%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87/): -கல்முனை நிருபர்- கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றத்தில் இம்முறை பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது, என பாதிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். கடந்த வாரம் கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் 06/04/2022 ம் திகதியுடைய கடிதங்களின் பிரகாரம் வெளிவலயங்களுக்கான மேலதிக பதிலீட்டு ஆசிரியர்கள் இடமாற்றமானது எந்தவித நிபந்தனை காலமும் இடப்படாமல் அனுப்பப்பட்டுள்ளது கவலை அளிப்பதாக, ஆசிரியர்களிடமிருந்து வருத்தம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்கு முன்னைய காலங்களில் வழங்கப்பட்ட வெளிவலய ஆசிரியர் இடமாற்றங்கள் யாவும் இரண்டு அல்லது மூன்று வருடங்கள் என நிபந்தனை காலம் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு வெளிவலயங்களுக்கு செல்லும் ஆசிரியர்கள் ஆகக் குறைந்தது 15 வருடங்கள் வேறு வேறு பாடசாலைகளில் சேவையாற்றியவர்கள் என்பதுடன், இவர்கள் இடமாற்றம் பெற்றுச் செல்லும் வலயங்களில் இருந்து மீண்டும் எப்போது தமது சொந்த வலயங்களுக்கு இடம் மாற்றப்படுவார்கள் என்பதற்கு எந்தவிதமான உத்தரவாதமும் கடிதத்தில் குறிப்பிடப்படவில்லை, என ஆசிரியர்களிடமிருந்து அறிய முடிகிறது. அத்தோடு, ஒரே காலத்தில் வழங்கப்பட்ட நியமனங்களில் ஒரு சிலர் மாத்திரம் […] - [க.பொ.த.சாதாரண தர பரீட்சை மேலதிக வகுப்புகளை நடாத்த அனுமதி](https://minnal24.com/%e0%ae%95-%e0%ae%aa%e0%af%8a-%e0%ae%a4-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a3-%e0%ae%a4%e0%ae%b0-%e0%ae%aa%e0%ae%b0%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%af%88-%e0%ae%ae%e0%af%87/): எதிர்வரும் 20 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையுடன் தொடர்புடைய மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் என்பவற்றை நடாத்த அனுமதி வழங்கப்படுவதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்துள்ளார். கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையுடன் தொடர்புடைய மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் என்பவற்றை நடத்துவதற்கு தடைவிதிக்கும் காலத்தில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. நேற்று நள்ளிரவு முதல் பரீட்சை நிறைவடையும் வரை குறித்த செயற்பாடுகளுக்கு தடை விதிக்கப்பட உள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் முன்னர் அறிவித்திருந்தது. எனினும், இந்தத் தீர்மானத்தில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதன்படி, எதிர்வரும் 20 ஆம் திகதி நள்ளிரவு 12 மணிமுதல் பரீட்சை நிறைவடையும் வரையில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையுடன் தொடர்புடைய மேலதிக வகுப்புகள், […] - [தாய்ப்பாலை விற்கும் இளம் தாய்](https://minnal24.com/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d/): அமெரிக்காவைச் சேர்ந்த அலிசா என்ற இளம் தாய் தனக்கு அதிகளவு தாய்ப்பால் சுரப்பதால் அதனை சேகரித்து வைத்து, தேவைப்படுவோருக்கு குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறார். அமெரிக்காவில் பிரபல பால்மா நிறுவனம் திடீரென மூடப்பட்டதால் அங்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அதிக தாய்மார்கள் அலிசாவிடம் தாய்ப்பாலை கொள்வனவு செய்து வருகின்றனர். அலிசா இதுவரையில் 118 லீற்றர் தாய்ப்பாலை விற்பனை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. - [விநியோக நடவடிக்கை நாளை ஆரம்பிக்கப்படும்](https://minnal24.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%af%e0%af%8b%e0%ae%95-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%b5%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%88-%e0%ae%86/): வழமையான பெற்றோல் விநியோகம் நாளை வியாழக்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்படும், என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த திங்கட்கிழமை தொன் கணக்கிலான எரிபொருள் நாட்டை வந்தடைந்த நிலையிலேயே இவ்வாறான அறிவிப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது. இன்று புதன்கிழமை எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்படவுள்ளதால் அத்தியாவசிய தேவையின்றி பெற்றோலுக்காக இன்று வரிசையில் காத்திருக்க வேண்டாம், எனவும் கூட்டுத்தாபனம் மேலும் குறிப்பிட்டுள்ளது. - [கனி மீது வாள்வெட்டு தாக்குதல்](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b5%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%af%8d/): ஆவா குழுவைச் சேர்ந்த  அளவெட்டி ” கனி ” என்பவர் மீது இன்று செவ்வாய்க்கிழமை இரவு வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சண்டிலிப்பாய் பகுதிக்கு காரில் சென்றிருந்த இவரை பின்தொடர்ந்து , 3 மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்களே தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர். படுகாயமடைந்தவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். - [நான்கு மாதத்தில் மாத்திரம் 12 இலட்ச ரூபா தண்டப்பணமாக அறவீடு](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0/): -நுவரெலியா நிருபர்- நுவரெலியா மாவட்டத்தில் கடந்த நான்கு மாதத்தில் 12 இலட்ச ரூபா தண்டப்பணமாக அறவிடப்பட்டுள்ளதாக, நுவரெலியா பாதுகாப்பு நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 106 வர்த்தகர்களுக்கு எதிராக நுவரெலியா வலப்பனை ஹட்டன் நாவலப்பிட்டிய ஆகிய நீதிமன்றங்களில் வழக்கு தொடுக்கப்பட்டு இந்த தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது. அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்தமை உட்பட்ட குற்றச்சாட்டுகளுக்காகவே வர்த்தகர்கள் மீது வழங்கு தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக அவரிடம் வினவியபொழுது, நுவரெலியா மாவட்டத்தில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையை பொறுத்த அளவில் நாங்கள் தொடர்ச்சியாக சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றோம். எங்களுக்கு பொது மக்களிடம் இருந்து தொடர்ந்தும் புகார்கள் கிடைத்த வண்ணமே உள்ளன. அதிலும், குறிப்பாக தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக சில வர்த்தகர்கள் பொருட்களை அதிக விலைக்கு விற்பது தொடர்பாக பொது மக்கள் புகார் அளித்து வருகின்றனர். எனவே நாங்கள் அதிகார சபை என்ற வகையில் பொது மக்களின் […] - [சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் கைது](https://minnal24.com/%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8b%e0%ae%a4-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85/): -நுவரெலியா நிருபர்- நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, ஹட்டன் விசேட குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை நோர்வூட் போட்ரி தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது. விசேட குற்றத்தடுப்பு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலினையடுத்து, விசேட குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பி.ஏ.பி.ஆர்.பிரேமலாலின் வழிகாட்டலில், பொலிஸ் பரிசோதகர் டி.என்.ஏ.தசநாயக்க தலைமையில் பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள் காசல்ரீ நீரத்தேக்கத்திற்கு நீர் வழங்கும் கெசல்கமு ஓயாவின் கிளை ஓடை ஒன்றில், பாரிய சூழல் சீர்கேடு ஏற்படும் வகையில் மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்டிருந்ததாகவும், நீண்ட காலமாக மிகவும் ரகசியமான முறையில் இவ்வாறு சட்டவிரோத மாணிக்க கல் அகழ்வில் இப்பிரதேசத்தில் இவர்கள் ஈடுபட்டிருப்பதாகவும், பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளதாக, விசேட கோட்ட குற்ற தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார். […] - [முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த கைது](https://minnal24.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%9a%e0%af%8d-3/): முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த சி.ஐ.டியினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 9ஆம் திகதி திங்கட்கிழமை காலி முகத்திடலில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். - [அரச ஊழியர்களுக்கான புதிய அறிவிப்பு விரைவில்](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a-%e0%ae%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af/): அரச ஊழியர்களை கடமைக்கு அழைப்பதை மட்டுப்படுத்துவதற்கு அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் கே.டி.எஸ்.ருவன்சந்திர தீர்மானித்துள்ளார். இது தொடர்பில், பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். அலுவலகப் பணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அத்தியாவசிய ஊழியர்களை மாத்திரம் வரவழைத்து நிறுவனத் தலைவரின் விருப்பத்திற்கேற்ப செயற்பட அனுமதிக்குமாறு அமைச்சின் செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், தொலைதூரத்தில் இருந்து பணிக்கு வரும் அதிகாரிகளை அவர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் உள்ள பணியிடத்திற்கு தற்காலிகமாக இணைக்க தேவையான அதிகாரங்கள் நிறுவனங்களின் தலைவர்களுக்கு வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார். நாட்டில் எரிபொருள் உள்ளிட்ட வளங்களின் பற்றாக்குறை காரணமாக அரசாங்க செலவினங்களைக் கட்டுப்படுத்தும் வகையில்  இவ்வாறான நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். - [புதிய பிரதமராக எலிசபெத் போா்ன்](https://minnal24.com/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%8e%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%aa%e0%af%86%e0%ae%a4%e0%af%8d/): பிரான்ஸின் புதிய பிரதமராக எலிசபெத் போா்ன் (61)  நியமிக்கப்பட்டாா். இந்தப் பதவிக்கு நியமிக்கப்படும் 2-ஆவது பெண் இவா். பிரான்ஸ் அதிபராக இமானுவல் மேக்ரான் கடந்த மாதம் 2ஆவது முறையாகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா். இதையடுத்து, அப்போது பிரதமராக இருந்த ஜீன் காஸ்டெக்ஸ்,  நேற்று திங்கட்கிழமை  இராஜினாமா செய்தாா். அவருக்குப் பதிலாக புதிய பிரதமராக எலிசபெத் போா்னை அதிபா் மேக்ரான் நியமித்துள்ளாா். அதிபா் மேக்ரானும், பிரதமா் எலிசபெத்தும் இணைந்து முழுமையான அமைச்சரவையை வரும் நாள்களில் அமைப்பாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. முந்தைய அரசில் 2020-ஆம் ஆண்டிலிருந்து தொழிலாளா் துறை அமைச்சராக இருந்த எலிசபெத் அமல்படுத்திய சில சீா்திருத்த நடவடிக்கைகளுக்கு தொழிலாளா்கள் மற்றும் இடதுசாரிகளிடமிருந்து விமா்சனங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது. - [பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு புதிய வீடுகள்](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%89%e0%ae%b1%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95-3/): தலவத்துகொட பகுதியில் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான இடத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக 100 வீடுகள் நிர்மாணிக்கப்படுகின்றன. அண்மையில் நாட்டில் பல பகுதிகளில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களின் போது 71 பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கும் சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. மேற்படி இச்சம்பவத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவாக புதிய வீடொன்றை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அவற்றை விரைவில் நிறைவு செய்து பாதிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பாராளுமன்றம் தலையிட்டு அவர்களுக்கு விரைவில் வீடுகளை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது. - [நாளைய மின்வெட்டு தொடர்பான அறிவித்தல்](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%88%e0%ae%af-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b5%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa-2/): நாடளாவிய ரீதியில் நாளை புதன்கிழமை 3 மணித்தியாலங்கள் 40 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும், என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, W வலயங்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 2 மணி நேரமும், மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை 1 மணி நேரம் 40 நிமிடங்களும் மின் வெட்டு அமுல்படுத்தப்படும். மேலும், M, N, O, X, Y, Z ஆகிய வலயங்களுக்கு காலை 5 மணி முதல் 8 மணி வரையான காலப்பகுதியில்  3 மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும். அதேவேளை, கொழும்பு நகர எல்லைக்குள் காலை 6 மணி முதல் 9 மணி வரை 3 மணி நேரம் மின் வெட்டு அமுல்படுத்தப்படும், […] - [முன்பள்ளி ஆசிரியர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு தொடர்பான செயலமர்வு](https://minnal24.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95-3/): கோப்பாய் பிரதேச செயலகத்தில் Centre for Children’s Happiness(CCH)  நிறுவனத்தின் அனுசரணையுடன் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வும், சிறார்களின் ஆளுமை விருத்தியும் மற்றும் புத்தாக்கமும் எனும் கருப்பொருளில் செயலமர்வு பிரதேச செயலக புதிய மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில், பிரதம விருந்தினராக பிரதேச செயலாளர், சிறப்பு விருந்தினர்களாக உதவி பிரதேச செயலாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், முன்பள்ளி உதவிக்கல்வி பணிப்பாளர் மற்றும் யாழ்ப்பாண CCH நிறுவன நிறைவேற்று அதிகாரி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். மேலும், வளவாளராக லின்டா ரோஸ் (UK) கலந்து கொண்டிருந்தார். அத்துடன் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், Centre for Childrens’ Happiness நிர்வாக உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள். - [கடற்தொழிலுக்கு சென்றவர் சடலமாக மீட்பு](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b1%e0%af%8d%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d/): -யாழ் நிருபர்- யாழ்ப்பாணம்-கொழும்புத்துறை பகுதியில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கொழும்புத்துறை உதயபுரம் பகுதியை சேர்ந்த அந்தோனிப்பிள்ளை டென்சில் ராஜேந்திரன் (வயது 53) என்பவரே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபர் நேற்று திங்கட்கிழமை தனது மகனுடன் தொழிலுக்கு சென்ற வேளை கடலில் தவறி விழுந்து காணாமல் போயுள்ளார். இந்நிலையில், குறித்த நபரை மீனவர்கள் தேடிவந்த நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை நெடுந்தீவு கடற்பரப்பில் கரையொதுங்கிய நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். - [படகு கவிழ்ந்ததில் 19 வயது இளைஞன் உயிரிழப்பு](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%95%e0%af%81-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-19-%e0%ae%b5%e0%ae%af%e0%ae%a4%e0%af%81-%e0%ae%87/): திருகோணமலை,  குச்சவெளி பகுதியில் படகு கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று செவ்வாய்க்கிழமை காலை மூன்று இளைஞர்கள் ஒன்றாக குறித்த படகில் பயணித்த போது இவ்விபத்து இம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தில், வாழையூற்று பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளார். ஏனைய இருவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குச்சவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். - [7 நா.ம.உறுப்பினர்களிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் வாக்குமூலங்களை பதிவு செய்யவுள்ளது](https://minnal24.com/7-%e0%ae%a8%e0%ae%be-%e0%ae%ae-%e0%ae%89%e0%ae%b1%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%81/): கடந்த திங்கட்கிழமை 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 7 நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் வாக்குமூலங்களை பதிவு செய்யவுள்ளதாக பொலிஸார் சபாநாயகருக்கு அறிவித்துள்ளனர். திங்கட்கிழமை காலை, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற கூட்டத்தைத் தொடர்ந்து, அலரிமாளிகைக்கு அருகிலுள்ள மைனகோகாமா போராட்டத் தளத்தை அரசாங்க சார்பு ஆதரவாளர்கள் தாக்கியதை அடுத்து வன்முறைகள் வெடித்தன. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் மன்றத்தினால் அலரிமாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கூட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து, அரச சார்பு ஆதரவாளர்கள், அலரிமாளிகைக்கு அருகில் உள்ள மைனாகோகாமா போராட்டத் தளத்தைத் தாக்கி இங்குள்ளவர்களை கலைத்தனர். இதையடுத்து கோட்டகோகாம எனப்படும் காலி முகத்திடலில் உள்ள பிரதான போராட்டத் தளத்திற்குச் சென்று பல கூடாரங்களை அழித்ததுடன், அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபட்ட எதிர்ப்பாளர்களைத் தாக்கியதையடுத்து வன்முறைகள் வெடித்தமை குறிப்பிடத்தக்கதாகும். - [ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வி](https://minnal24.com/%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa/): ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்துள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட 119 வாக்குகள் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராகவும், 68 வாக்குகள் ஆதரவாகவும் கிடைக்கப்பெற்றது. ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் முன்வைத்திருந்தார். - [மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதம்](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-2/): இலங்கை மத்திய வங்கி இன்று செவ்வாய்க்கிழமை அதிகாரப்பூர்வ அமெரிக்க டொலர் விகிதத்தை அறிவித்துள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி 354.76 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 364.73 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. - [அஜித் ராஜபக்ஷ பிரதி சபாநாயகராக தெரிவு](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%aa%e0%ae%95%e0%af%8d%e0%ae%b7-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a8/): ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் ராஜபக்ஷ 109 வாக்குகளைப் பெற்று பிரதி சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன கவிரத்ன 78 வாக்குகளைப் பெற்றுள்ளார். அதற்கமைய 31 மேலதிக வாக்குகளால் அஜித் ராஜபக்க்ஷ வெற்றி பெற்று பிரதி சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். தொடர்புடைய செய்தி:- https://www.minnal24.com/?p=75793 - [பிரதி சபாநாயகர் பதவிக்கான இரகசிய வாக்கெடுப்பு ஆரம்பம்](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a8%e0%ae%be%e0%ae%af%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be/): பிரதி சபாநாயகர் பதவிக்கு இரண்டு பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன. அதன்படி, பிரதி சபாநாயகர் பதவிக்கு ரோஹினி கவிரத்னவின் பெயரை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ முன்மொழிந்தார். அதை லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி ஆமோதித்தார். அஜித் ராஜபக்ஷவின் பெயரை ஜி.எல்.பீரிஸ்  முன்மொழிந்தார். நாடாளுமன்ற உறுப்பினர் பண்டார அதை ஆமோதித்தார். எனினும், பிரதி சபாநாயகர் பதவிக்கான தேர்தலை எதிர்த்த விமல் வீரவங்ச, தேர்தலை நடத்துவதற்கு சுமார் 9 மில்லியன் ரூபா செலவாகும், என குறிப்பிட்டார். இவற்றை தொடர்ந்து தற்சமயம் இரகசிய வாக்கெடுப்பு ஆரம்பமாகியுள்ளது. - [6000 மில்லிலீற்றர் கசிப்புடன் ஒருவர் கைது](https://minnal24.com/6000-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%80%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%9f/): -பதுளை நிருபர்- லுணுகலை ஒப்டன் ஏ பிரிவில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட 28 வயதுடைய நபர் ஒருவரை நேற்று திங்கட்கிழமை மாலை பொலிஸார் கைது செய்துள்ளனர். லுணுகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒப்டன் ஏ பிரிவில் கசிப்பு விற்பனை இடம்பெறுவதாக, தோட்ட பொதுமக்களால் பொலிஸாருக்கு ரகசிய தகவல் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து, ஒப்டன் ஏ பிரிவுக்கு விரைந்த லுணுகலை பொலிஸார், கசிப்பு விற்பனை செய்யும் இடத்தை சுற்றி வளைத்தனர். இதன்போது, 6000 மில்லிலீற்றர் கசிப்புடன், 28 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் குறித்த நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர், நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக, லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.   - [அம்பாறை -சாய்ந்தமருதில் கடைகள் உடைத்து கொள்ளை](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b1%e0%af%88-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/): -கல்முனை நிருபர்- அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, சாய்ந்தமருது பிரதேசத்தில் இரண்டு கடைகள் உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கடைகள் யாவும் சாய்ந்தமருது ஜூம்மாப்பள்ளிவாசலுக்குச் சொந்தமான கடைத்தொகுதியில் அமைந்துள்ளவை, என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த கடைத்தொகுதியில் உள்ள இரண்டாம் இலக்க கடை மற்றும் 12ஆம் இலக்க  கடை ஆகியவை உடைக்கப்பட்டு, ரொக்கப்பணமும் பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக, கடை உரிமையாளர்கள் பொலிஸாரிடம் தெரித்துள்ளனர். கடைக்குள் இருந்த 57ஆயிரம் பணமும், பல பொருட்களும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக கடை உரிமையாளர் ஒருவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். மற்றைய தேனீர்க்கடை உரிமையாளர் பொலிஸாரின் விசாரணையின் போது, கடை உடைக்கப்பட்டுள்ளதாகவும் பொருட்கள் ஒன்றும் களவாடப்படவில்லை, எனவும் தெரிவித்துள்ளார். கொள்ளை தொடர்பாக சாய்ந்தமருது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.எம்.சம்சுதீன் வழிகாட்டலில், குற்றத்தடுப்புப் பிரிவினர் விசாரனைகளை முன்னெடுத்துள்ளனர். அதேவேளை, அம்பாறை புலனாய்வுத்துறை பொலிஸார் மோப்பநாய் உதவியுடன் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருவதுடன், அப்பகுதியிலுள்ள சி.சி.டி.வி கமராக்களின் பதிவுகளைப் பெற ஏற்பாடு செய்யப்பட்டள்ளதாகவும், சாய்ந்தமருது பொலிஸார் தெரிவித்தனர். - [பல்கலைக்கழக மாணவிகள் தங்கியிருந்த வீடொன்றின் மீது தாக்குதல்](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b4%e0%ae%95-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d/): -யாழ் நிருபர்- யாழ்ப்பாணம்-கொக்குவில் புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள பகுதியில், வீடொன்றின் மீது இனந்தெரியாதோர் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது குறித்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், 4 மோட்டார் சைக்கிள்களில் வந்த குழு ஒன்று, வீட்டுக்குள் புகுந்து ஜன்னல்கள், கதவுகளை சேதப்படுத்திவிட்டு தப்பி சென்றுள்ளது, என தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை, குறித்த வீட்டில் யாழ்ப்பாண பல்கலைகழக மாணவிகள் வாடகைக்கு தங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.   - [விசேட தேவையுடையவர்களுக்கு முன்னுரிமை](https://minnal24.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9a%e0%af%87%e0%ae%9f-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/): அத்தியாவசிய சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் விசேட தேவையுடையவர்களுக்கு முன்னுரிமை வழங்குமாறு அனைத்து பொது மற்றும் தனியார் நிறுவனங்களிடம் அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக விசேட தேவையுடையவர்கள் எரிபொருள், உணவு, சுகாதாரம் உள்ளிட்ட  அத்தியாவசிய சேவைகளுக்காக நீண்ட வரிசையில் காத்திருப்பதாக வெளியான தகவலை அடுத்து அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். - [பொத்துவில் - முள்ளிவாய்க்கால் வரையிலான மக்கள் பேரணி திருகோணமலையில் இருந்து தொடர்கிறது](https://minnal24.com/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%95/): -வாழைச்சேனை நிருபர்- இன விடுதலை வேண்டி பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையிலான (மே-18) மக்கள் பேரணி, இன்று செவ்வாய்க்கிழமை திருகோணமலை மாவட்டம் சிவன்கோவில் முன்றலில் இருந்து “வீழ்ந்த இடத்தில் எழுவோம்” என்ற தலைப்பில் ஆரம்பமாகியது. இப்பேரணியை வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கம் ஏற்பாடு செய்திருந்தனர். சிவன்கோவில் முன்றலில் தயாரிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி மக்களுக்கு பரிமாறி, 2009 இறுதி யுத்த காலப்பகுதியில் முள்ளி வாய்க்காலில் இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பாக நினைவு கூரப்பட்டது. இந்நிகழ்வில், மதகுருமார்கள், தாயக ஜனநாயக கட்சி தலைவர் வி.நிமலன், சிரேஸ்ட ஊடகவியலாளர் திருமலை நவம் ஆகியோர்கள் கலந்து கொண்டு பேரணியினை ஆரம்பித்து வைத்தனர். இன்று ஆரம்பிக்கப்பட்ட மக்கள் பேரணியானது, அனுராதபுர சந்தி ஊடாக, கன்னியா சென்றடைந்து, அங்கிருந்து வவுனியா, நெடுங்கேணி, செட்டிக்குளம் வீதி வழியாக முல்லைத் தீவை சென்றடையும். தொடர்ந்து, நாளை புதன்கிழமை வடமாகாணத்தில் இருந்து வரும் காணாமல் ஆக்கப்பட்டோர்களின் பேரணியுடன் இணைந்து, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் […] - [காலி முகத்திடல் சம்பவம் : முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா கைது](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d/): காலி முகத்திடல் மற்றும் அலரிமாளிகைக்கு அருகில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு ஒரு வாரம் கடந்துள்ள போதிலும் சம்பவம் தொடர்பில் இதுவரையில் ஒருவர் மாத்திரமே கைது செய்யப்பட்டிருந்ததாக முன்னராக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்,  காலி முகத்திடல் சம்பவம் தொடர்பில் மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அமல் சில்வா மற்றும் நகர சபை ஊழியர் ஒருவரும் குற்றப்புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடைய 78 பேரை அடையாளம் காண்பதற்காக பொலிஸார் தற்போது பொது மக்களின் உதவியை கோரியுள்ளனர். அவர்களின் படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து, ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ, சனத் நிஷாந்த உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் உள்ளிட்ட 22 பேரை கைது செய்து வாக்குமூலம் பெற்றதன் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு சட்டமா அதிபரினால் பொலிஸ்மா அதிபருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் […] - [இன்று நள்ளிரவு முதல் தடை](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%a8%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%b5%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%9f%e0%af%88-2/): கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சையுடன் தொடர்புடைய மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவதற்கு இன்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் பரீட்சை நிறைவடையும் வரை தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2021 கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கான அனுமதிப்பத்திரத்தை பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்திலிருந்து தர விறக்கம் செய்து கொள்வதற் கான சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. அனுமதிப்பத்திரங்கள் இதுவரை கிடைக்கவில்லையெனின், பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets. lk எனும் இணையத்தளத்திற்குள் பிரவேசித்து, அதன் முதற் பக்கத்திலுள்ள எமது சேவைகள் எனும் நிரலின் கீழுள்ள க. பொ.த.சாதாரண தரம் 2021 அனுமதிப்பத்திர பதிவிறக்கம் பகுதியை தெரிவு செய்து, சரியான தேசிய அடையாள அட்டை இலக்கம் அல்லது பரீட்சை இலக்கத்தை குறிப்பிட்டு அனுமதிப்பத்திரத்தின் பிரதியை பதிவிறக்கம் செய்ய முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். - [20ஆம் திகதி முதல் சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை](https://minnal24.com/20%e0%ae%86%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%95%e0%ae%b2-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%9a%e0%ae%be/): கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்காக எதிர்வரும் 20ஆம் திகதி முதல் சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுகின்ற நிலையில் ஜூன் மாதம் 2ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையை திட்டமிட்டவாறு எதிர்வரும் 23ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு பரீட்சைகள் திணைக்களத்தின் ஊடாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கமைய விண்ணப்பதாரிகளுக்கான அனுமதி அட்டை மற்றும் பரீட்சை நிலையங்களுக்கு வினாத்தாள்களை பகிர்ந்தளிக்கும் செயற்பாடு தற்போது முன்னெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. - [பாராளுமன்றம் இன்று கூடுகிறது](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%af%81%e0%ae%95/): பாராளுமன்றம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை  காலை 10.00 மணிக்கு கூடுகிறது. நாட்டில் ஏற்பட்ட வன்முறை மற்றும் அரசியல் மாற்றத்தின் பின்னர் முதன்முறையாக கூடும் நிலையில் ஆசன ஒதுக்கீட்டிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக படைக்கள சேவிதர் அலுவலகம் தெரிவித்தது. இதற்கமைய ஆளும் தரப்பில் ஜனாதிபதியின் ஆசனத்திற்கு அருகில் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளதோடு முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவிற்கு முன்வரிசையில் வேறொரு ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிய வருகிறது. இது தவிர புதி அமைச்சர்களுக்கும் முன்வரிசையில் ஆசன ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதோடு அடுத்த வரிசைகளில் முன்னாள் அமைச்சர்களுக்கு ஆசனம் ஒதுக்கப்படுவதாக அறிய வருகிறது. இதே வேளை சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்த பொதுஜனபெரமுன பின்வரிசை எம்பிகள் 10 பேரும் இன்று ஆளும் தரப்பில் அமர உள்ளதாகவும் அறிய வருகிறது.   - [இன்றைய வானிலை முன்னறிவித்தல்](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%88%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf-7/): நாட்டின் சில பகுதிகளில் இன்று செவ்வாய்க்கிழமை 100 மில்லிமீற்றர் வரையில் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும், என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் வரையில் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும். அத்துடன் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், ஹம்பாந்தொட்டை, திருகோணமலை மாவட்டங்களிலும் மணித்தியாலத்துக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும், என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. - [ஊரடங்கு நீக்கம் : பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம்](https://minnal24.com/%e0%ae%8a%e0%ae%b0%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a8%e0%af%80%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%af%88/): நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளும் இன்று செவ்வாய்க்கிழமை வழமைபோல் திறக்கப்படும், என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. நாட்டில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டதால் கல்வி நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், நேற்று திங்கட்கிழமை இரவு 11 மணிக்கு அமுல்படுத்தப்பட்ட நாடளாவிய ரீதியிலான பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 5 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ளதையடுத்து, பாடசாலைகள் வழமைபோல் இயங்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.   - [நாளை முதல்  ஒருநாள் சேவையும் இடம்பெறும்](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%af%87%e0%ae%b5%e0%af%88%e0%ae%af/): குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் ஒருநாள் மட்டும் சாதாரண கடவுச்சீட்டு வழங்கும் நடவடிக்கைகள் நாளை செவ்வாய்க்கிழமை முதல்     வழமைபோல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான சேவைகளை பெற்றுக்கொள்வோர் www.immigration.gov.lk என்ற இணையத்தள பக்கத்தில் முன்பதிவு செய்துக்கொள்ள முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. - [போலி விவசாய இரசாயனப் பொருட்களை விற்பனை செய்த இருவர் கைது](https://minnal24.com/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%ae%a9%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0/): -நுவரெலியா நிருபர்- விவசாயத் திணைக்களத்தின் அனுமதி அல்லது சிபாரிசு இன்றி போலியான பூச்சிக்கொல்லி மற்றும் விவசாய இரசாயனப் பொருட்களை விற்பனை செய்த இருவரை நுவரெலியா பொலிஸார் கைது செய்துள்ளனர். விவசாய திணைக்களத்தின் அனுமதியின்றி தயாரிக்கப்பட்ட போலியான பூச்சிக்கொல்லி இரசாயன மருந்துக்கள் மற்றும் விவசாய உப மருந்துக்களை நுவரெலியா நகரில் கண்டி வீதியோரத்தில் உள்ள நடைபாதையில் விற்பனை செய்யும் போது நுவரெலியா பொலிஸார் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கைது செய்துள்ளனர். நுவரெலியா பிரதேச விவசாயிகளுக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் நுவரெலியா நகர மையத்தில் போலி பூச்சிக்கொல்லி மற்றும் விவசாய இரசாயன பொருட்களை விற்பனை செய்து வந்த சந்தேக நபர்கள் இருவரையும் போதைப்பொருளுடன் நுவரெலியா பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் இருவரும் நுவரெலியா கந்தப்பளை மற்றும் ராகலை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும், பதுளை ஹாலிஎல பிரதேசத்தை சேர்ந்த ஒருவராலேயே இந்த போலி விவசாய இரசாயண பொருட்களால் தயாரிக்கப்பட்டு நாட்டின் பல பாகங்களிலும் அதிக விலைக்கு […] - [நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத தசநாயகவிற்கு கொலை மிரட்டல்](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%89%e0%ae%b1%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be/): -பதுளை நிருபர்- முன்னாள் ஊவா மாகாண சபை முதலமைச்சரும், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான, சாமர சம்பத தசநாயகவிற்கு ஹாலிஎல பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரால் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. “நீ இன்னும் உயிருடன் இருக்கின்றாயா ? எமது பெயர் பட்டியலில் நீயும் இருக்கின்றாய்”, என கொலை மிரட்டல் விடுத்து முகப்புத்தகத்தில் பதிவேற்றம் செய்திருந்த நபருக்கு எதிராக, ஹாலிஎல பொலிஸ் நிலையத்தில் இன்று மாலை சுமார் 3.30 மணியளவில் பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத தசநாயகவின் செயலாளரினால் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக, ஹாலிஎல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு, சந்தேக நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். - ['நான் நாட்டை பொறுப்பேற்றது மிகவும் அபாயகரமான சவால்'](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b1%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%87%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1/): நான் நாட்டை பொறுப்பேற்றது மிகவும் அபாயகரமான சவால். கத்தியின் மேல் நடப்பதைவிட இது பயங்கரமான சவால் மிகுந்தது. மிகவும் ஆழமானது. அடியே தெரியவில்லை.   இந்த சவாலை நான் நாட்டிற்காகவே பொறுப்பேற்றேன். எனது நோக்கமும் அர்ப்பணிப்பும் ஒரு தனிமனிதன் , ஒரு குடும்பம், அல்லது ஒரு கூட்டத்தை பாதுகாப்பது அல்ல முழு நாட்டினதும் மக்களை காப்பாற்றுதே, இளைஞர்களின் எதிர்காலத்தை காப்பாற்றுவதே .உயிரை பணயம் வைத்து இந்த சவாலுக்கு நான் முகம் கொடுப்பேன். அந்த சவாலை வெற்றி கொள்வேன். அதற்கு உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பையும் எனக்கு பெற்றுத் தாருங்கள் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின்போது அவர் மேலும் கூறியதாவது , கடந்த வியாழக்கிழமை நான் பிரதமர் பதவியை பொறுப்பேற்றேன்.அந்தப் பதவியை நான் கேட்கவில்லை. நாட்டில் ஏற்பட்டிருந்த நெருக்கடி நிலையை கருத்தில் கொண்டு இந்தப் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு   ஜனாதிபதி எனக்கு அழைப்பு விடுத்தார். நான் அரசியல் தலைவராக மட்டுமின்றி […] - [நாளை மீண்டும் மின்வெட்டு](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b5%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81/): நாளை செவ்வாய்க்கிழமை நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் 3 மணிநேரமும் 40 நிமிடங்களுக்கும் மின்வெட்டினை மேற்கொள்ள, இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது. அதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 2 மணி நேரமும், மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை ஒரு மணி நேரமும் 40 நிமிடங்களும் மின்வெட்டு அமுலாகவுள்ளது. மேலும், கொழும்பு முன்னுரிமை வலயங்களில் காலை 6 மணி முதல் 9 மணி வரையான காலப்பகுதியினுள் 3 மணிநேரம் மின்வெட்டு அமுலாகவுள்ளது. - [ஊரடங்கு உத்தரவு தொடர்பில் புதிய அறிவிப்பு](https://minnal24.com/%e0%ae%8a%e0%ae%b0%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%89%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%b5%e0%af%81-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf-5/): நாடளாவிய ரீதியில் இன்று திங்கட்கிழமை ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ள காலப்பகுதியில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, இன்று திங்கட்கிழமை இரவு 11 மணி முதல் நாளை செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளது. முன்னதாக இன்று இரவு 8 மணி முதல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. - [ராஐபக்ஷக்களை துரத்தும் மக்களின் குறிக்கோள் ரணிலால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d/): -எம்.எஸ்.எம்.ஸாகிர்- ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாஸ ஏன் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தவில்லையென மக்கள் மத்தியில் இருக்கின்ற கேள்விக்கு முல்லைத்தீவு மாவட்டத்தின் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான அமைப்பாளர் என்ற முறையில் அதற்கான பதிலையும் விளக்கத்தையும் வழங்குவதற்கு நான் தலைப்பட்டுள்ளேன், என லக்‌ஷயன் முத்துக்குமாரசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார். பதவி வெறிபிடித்து சஜித் மக்களுக்கு துரோகம் செய்ய எண்ணவில்லை, இதுவே என்னைப் பொறுத்தவரையில் சிறந்த தலைமைத்துவ பண்பு என்றும் ஆனால், ரணில் தனது நண்பர் மஹிந்தவின் குடும்பத்தைக் காப்பாற்றவே எந்தவித நிபந்தனையும் இல்லாமல் களம் இறங்கியுள்ளார், என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு, எரிபொருள் தட்டுப்பாடு, சமையல் எரிவாயுத் தட்டுப்பாடு, வாழ்வாதாரச் செலவுகளின் திடீர் உயர்வு, உரத்தின் தட்டுப்பாடு மற்றும் டொலர் இருப்புப் பிரச்சினை என பொருளாதாரத்தை சீரழித்த கோட்டபாய அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் […] - [ஏறாவூர் வன்முறைகள் தொடர்பில் 12 பேர் கைது](https://minnal24.com/%e0%ae%8f%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b5%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d/): -மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பு ஏறாவூர் நகரில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு வன்முறைகளில் ஈடுபட்ட பிரதான நபர் உட்பட 12 பேரை இன்று திங்கட்கிழமை  கைது செய்திருப்பதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். வன்முறைக் கும்பலில் சம்பந்தப்பட்ட மேலும் பலர் தேடப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். பிரதான சந்தேக நபர் தனது அணியைச் சேர்ந்த ஏனையோரையும் வன்முறையில் ஈடுபடுமாறு கூவி அழைப்பது காணொளிக் காட்சியில் இருப்பதாகவும் இதன் அடிப்படையிலேயே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். ஏறாவூரில் வன்முறையில் ஈடுபட்ட கும்பல் மூன்று ஆடைத் தொழில்சாலைகளைச் சேதமாக்கியிருந்ததோடு முன்னாள் அமைச்சர் நஸீர் அஹமட்டின் வாடகைக் கட்டிடமான அவரது அலுவலகம் அவரது சகோதரரின் வீடு சகோதரரின் புதல்வருக்குச் சொந்தமான உணவகம் ஒன்று ஆகியவற்றைத் தாக்கி தீயிட்டும் கொளுத்தியிருந்தனர். மூன்று ஆடைத்தொழில்சாலைகள் பலத்த சேதத்திற்குள்ளாக்கப்பட்டது. அங்கிருந்த அதி நவீன ஆடைத் தொழில் இயந்திராதிகள், மின் பிறப்பாக்கிகள், ஜன்னல் கண்ணாடிகள் என்பனவும் அடித்து நொறுக்கப்பட்டு […] - [சுயாதீன எம்.பிக்கள் குழு பிரதமருக்கு ஆதரவு](https://minnal24.com/%e0%ae%9a%e0%af%81%e0%ae%af%e0%ae%be%e0%ae%a4%e0%af%80%e0%ae%a9-%e0%ae%8e%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%af%81/): அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக அரசாங்கத்தில் இருந்து விலகிய 10 கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சுயாதீன எம்.பிக்கள் குழு தீர்மானித்துள்ளது. பிரதமருடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து, பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு எந்தவொரு அமைச்சுக்களையும் ஏற்காமல் ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ளதாகவும் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, பாராளுமன்றத்தில் விரைவில் இடைக்கால வரவு-செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டதாவும் கம்பன்பில தெரிவித்தார். - [நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b4%e0%af%81%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8a%e0%ae%b0%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%89-3/): நாடு முழுவதும் இன்று திங்கட்கிழமை இரவு  8 மணி முதல்  நாளை செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணிவரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. - [முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஊர்தி மன்னாரை வந்தடைந்தது](https://minnal24.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5-7/): -மன்னார் நிருபர்- தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாடு செய்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஊர்தி பவணி இன்று திங்கட்கிழமை மன்னாரை வந்தடைந்தது. கடந்த 12 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஆரம்பமானது. இதன் போது வடக்கில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் குறித்த நினைவேந்தல் ஊர்தி சென்று முள்ளிவாய்க்கால் வாரம் அனுஸ்ரிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் முள்ளிவாய்க்கால் வாரத்தின் 5 ஆவது நாளான இன்று திங்கட்கிழமை குறித்த ஊர்தி மன்னாரை வந்தடைந்தது. மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன் அஞ்சலி இடம் பெற்றது.தமிழினப் படுகொலைக்கு நீதி கோரி இடம் பெற்ற ஊர்திப்பவனியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதி நிதிகள் மற்றும் மக்கள் கலந்து கொண்டிருந்தனர். இதன் போது முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த மக்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து, கலந்து கொண்டவர்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது. - [கலவரத்தை திட்டமிட்ட பிரதமரின் மகன் இன்று நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4/): -மட்டக்களப்பு நிருபர்- இலங்கையில் நிலவும் அமைதியின்மையை அடக்கும் வகையில் பொதுசொத்துக்களுக்கு சேதம் வினைவிக்கும் நபர்களுக்கு எதிராக அரசு துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளது நாட்டில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் மற்றும், சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த பாதுகாப்புப் படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வரலாற்றில் இலங்கையில் ஏற்பட்டுள்ள மோசமான பொருளாதார நெருக்கடி காரணமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டுமென அமைதியான முறையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த திங்களன்று அமைதியான முறையில் போராட்டத்தை மேற்கொண்டுவந்தவர்கள் மீது சிலர் மேற்கொண்ட தாக்குதல் காரணமாக நாடளாவியரீதியில் பெரும் போராட்டங்களும் வன்முறைகளும் வெடிக்க தொடங்கியதை அடுத்து பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்ஸ இராஜினாமா செய்ய நேரிட்டது. பொதுச் சொத்துக்களைக் சேதம் வினைவிப்பவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ள இராணுவத்திற்கு அரசாங்கம் உத்தரவிட்டது. பல்லாயிரக்கணக்கான இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை வீரர்கள் கொழும்பு வீதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் […] - [காலி முகத்திடல் வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய 159 பேர் கைது](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88/): காலி முகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை 159 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வன்முறை சம்பவங்கள், நாடளாவிய ரீதியில் பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை, நபர்கள் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் குறித்த 159 பேரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். அதற்கமைய, இதுவரை 398 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. - [வடகொரியாவில் அதிகரிக்கும் கொவிட் தொற்று : மேலும் 15 பேர் பலி](https://minnal24.com/%e0%ae%b5%e0%ae%9f%e0%ae%95%e0%af%8a%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/): வடகொரியாவில் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகி மேலும் 15 பேர் நேற்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, அந்நாட்டில் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது. வடகொரியாவில் இதுவரையில் 2 இலட்சத்து 96 ஆயிரத்து 180 பேருக்கு நோய் அறிகுறிகள் காணப்படுவதாக, அந்த நாட்டு அரச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கொவிட்-19 தொற்றினை கட்டுப்படுத்த நாடு தழுவிய ரீதியில் அங்கு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் ஊரடங்கு காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகள் முன்னெடுக்கப்படும் என வடகொரிய தலைவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், அனைத்து பகுதியிலும் உள்ள மக்களுக்கு கொவிட்-19 பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதேவேளை, வடகொரியாவில் கொவிட்-19 தொற்றினை கட்டுப்படுத்த தென்கொரியா தடுப்பூசிகளை வழங்க முன்வந்துள்ளது. எனினும், அதனை ஏற்றுக்கொள்வதா? இல்லையா? என்பது தொடர்பான தீர்மானத்தை வடகொரியா  அறிவிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. - [வாகன சாரதிகளுக்கு காஞ்சன விஜேசேகர விடுத்துள்ள கோரிக்கை](https://minnal24.com/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95%e0%ae%a9-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%95%e0%ae%be%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a9/): நேற்று ஞாயிற்றுக்கிழமை எரிபொருள்  சரக்கு கப்பல் ஒன்று நாட்டிற்கு வந்துள்ள நிலையில், மேலும் 03 கப்பல்கள் இந்திய கடன் உதவியில் அடுத்த 2 வாரங்களில் இலங்கையை வந்தடையவுள்ளது. அதன்பின், போதுமான எரிபொருள் கிடைக்கும். ஆகவே எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விநியோகம் இடம்பெறும்வரை, அடுத்த 03 நாட்களுக்கு வரிசையில் நிற்க வேண்டாம், என வாகன சாரதிகளுக்கு அமைச்சர் காஞ்சன விஜேசேகர கோரிக்கை விடுத்துள்ளனர். - [மகிந்த ராஜபக்சவின் வீட்டிலிருந்து காணாமல் போயுள்ள நாய்க்குட்டிகள்](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%aa%e0%ae%95%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f/): முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் கார்ல்டன் வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த மூன்று நாய்க்குட்டிகள் கடந்த 9 ஆம் திகதி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச் சம்பவம் தொடர்பில் வீரகெட்டிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவாளருமான ஒருவருடைய வீடொன்றில் இருந்து காணாமல் போன லாப்ரடோர் நாய்க்குட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இச்சம்பவம் தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரது 21 வயது மகள் சந்தேகத்தின் பேரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட யுவதி கடந்த 9 ஆம் திகதி நாய்க்குட்டியை அழைத்துச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணைகளை வீரகெட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். - [மொரட்டுவை நகர சபை ஊழியர் கைது](https://minnal24.com/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%b5%e0%af%88-%e0%ae%a8%e0%ae%95%e0%ae%b0-%e0%ae%9a%e0%ae%aa%e0%af%88-%e0%ae%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d/): நாட்டில் கடந்த வாரம் இடம்பெற்ற அசம்பாவித சம்பவங்களுடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் மொரட்டுவை நகர சபை ஊழியர் ஒருவர் மொரட்டுமுல்ல பகுதியில் வைத்து சி.ஐ.டியினரால் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அலரிமாளிகைக்கு முன்பு கடந்த 9 ஆம் திகதி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டமை தொடர்பிலே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோதமாக ஒன்றுகூடினார் மற்றும் பொதுச்சொத்துக்களிற்கு சேதம் விளைவித்தார் எனவும் அவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகத் தெரிவருகிறது. - [கனேடிய தூதுவர் - எதிர்க்கட்சித் தலைவர் சந்திப்பு](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%a9%e0%af%87%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a4%e0%af%82%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/): இலங்கைக்கான கனேடிய தூதுவர் டேவிட் மெக்கின்னன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில்  இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள பாரிய பொருளாதார நிலைமை மற்றும் இதிலிருந்து நாட்டைக் மீளக்கட்டியெழுப்புவது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. ஊடகப்பிரிவு - [இன்றைய வானிலை - வளிமண்டலவியல் திணைக்களம்](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%88%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b2%e0%ae%b5-28/): நாடளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற வானிலை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சப்ரகமுவ மாகாணத்திலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், காங்கேசன்துறை முதல் புத்தளம், காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான பகுதிகளில் மணித்தியாலத்திற்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் கடும் காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. - [47 ஆயிரம் அமெரிக்க டொலர்களுடன் இருவர் கைது](https://minnal24.com/47-%e0%ae%86%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%ae%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%9f%e0%af%8a%e0%ae%b2%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3/): உண்டியல் முறையினூடாக அமெரிக்க டொலரை நாணய பரிமாற்றம் செய்வதற்கு முற்பட்ட இருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொரலஸ்கமுவை மற்றும் பில்லேவ பகுதிகளிலேயே இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் 47 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் – இன்றைய மதிப்பில் சுமார் ஒரு கோடியே 71 இலட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் கிருலப்பனை சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். உண்டியல் முறையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நாணய பரிமாற்றம் இடம்பெற்று வருவதாகவும் எதிர்காலத்தில் சோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் எனவும் பொலிஸ் விசேட அதிரடிப்படை யினர் தெரிவித்துள்ளனர். - [பிரதமர் இன்று நாட்டு மக்களுக்கு உரை](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d/): பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று திங்கட்கிழமை நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளார். நாட்டின் 26ஆவது பிரதமராக பதவியேற்ற பின்னர் நாட்டு மக்களுக்கு அவர் ஆற்றும் முதல் உரை இதுவாகும். நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடியின் உண்மை தன்மை, நெருக்கடியை தீர்த்து வலுவான நாட்டை கட்டியெழுப்பு வதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர் பில் பிரதமர் தனது உரையில் வெளிப்படுத்துவார் என தெரிய வருகிறது. - [உலகின் மிக நீளமான தொங்கு நடைப்பாலம்](https://minnal24.com/%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%95-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b3%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81/): உலகின் மிக நீளமான தொங்கு நடைப்பாலம் அதிகாரபூர்வமாக செக் குடியரசில் திறக்கப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாகப் கட்டப்பட்டு வந்த தொங்குபாலத்தின் மொத்த நீளம் 721 மீற்றர். இது கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,116 மீற்றர் உயரத்திலும் தரையிலிருந்து சுமார் 95 மீற்றர் உயரத்திலும் தொங்குகிறது. சுமார் 1.2 மீற்றர் நடைபாதை அகலம் கொண்ட அனைத்து வயது, உயரம் கொண்ட குழந்தைகளும் செல்லலாம். இதற்கு முன் உலக சாதனை படைத்த பாக்லங் பர்பத் தொங்கு பாலம் நேப்பாளத்தில் உள்ளது. அது சுமார் 567 மீற்றர் நீளம் கொண்டது. - [மீண்டும் எரிபொருள் விநியோகம் வழமைக்கு](https://minnal24.com/%e0%ae%ae%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%af/): இன்று திங்கட்கிழமை முதல் மீண்டும் எரிபொருள் விநியோகம் வழமைக்கு திரும்பும், என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. விடுமுறை தினம் என்பதால் நேற்று ஞாயிற்றுக்கிழமை எரிபொருள் விநியோக நடவடிக்கை முன்னெடுக்கப்படவில்லை. இந்நிலையில், இன்று எரிபொருள் நடவடிக்கைகள் வழமைக்கு திரும்பும், என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல் மாகாணத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு காலை வேளையில் எரிபொருள் கிடைக்கப்பெறும், ஏனைய மாகாணங்களுக்கு மதிய வேளையில் எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும், என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் சாந்த சில்வா குறிப்பிட்டுள்ளார்.   - [சுற்றுலாப்பயணிகளின் வருகை 60 வீதமாக வீழ்ச்சி](https://minnal24.com/%e0%ae%9a%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%b2%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%af%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81/): இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 60 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. உணவு, எரிபொருள் நெருக்கடி நிலை மற்றும் நாட்டில் நிலவும் குழப்பகரமான சூழ்நிலை தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் பிரசாரங்கள் இதற்கு நேரடி காரணமாக அமைந்துள்ளதாக  மேற்படி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தம்மிகா விஜேசிங்க  தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடி நிலையில் சுற்றுலாத் துறையின் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது சவாலுக்குள்ளாகியுள்ளது என்றும் பழைய நிலைமைக்கு சுற்றுலாத்துறை இயல்பு நிலையை அடைவதற்கு இன்னும் எவ்வளவு காலம் எடுக்கும் என கூற முடியாதுள்ளது என்றும் தெரிவித்துள்ளார் - [நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு எந்தத் தடையும் இல்லை](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95/): நாட்டில் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு எந்தத் தடையும் இல்லை எனவும் போரில் இறந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை நினைவேந்த உறவுகளுக்கு முழு உரிமை உண்டு. அதை எவரும் தடுக்கவே முடியாது எனவும் புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன், நினைவேந்தல் நிகழ்வுகளில் இறந்தவர்களின் ஆத்மாவை வைத்து எவரும் அரசியல் செய்யக் கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இறுதி கட்டப் போரில் இறந்தவர்களை நினைவுகூரும் ‘முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்’ வாரம் தற்போது வடக்கு கிழக்கு உட்பட பல பகுதிகளில் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இந்த நினைவேந்தல் வாரத்தின் இறுதி நாளான மே 18ஆம் திகதி உணர்வெழுச்சியுடன் நிகழ்வுகளை நடத்தவும் ஏற்பாட்டுக் குழுவினர் தயாராகி வருகின்றனர். எனினும் கடந்த இரு வருடங்கள் நினைவேந்தல் நிகழ்வுகளுக்குத் தடை விதித்திருந்தது.வடக்கு கிழக்கின் பல இடங்களில் நீதிமன்றங்கள் ஊடாக இந்தத் தடை உத்தரவுகளைப் பொலிஸார் பெற்றிருந்தனர். இவ்வாறான நிலையில் இம்முறையும் நினைவேந்தல் நிகழ்வுகளுக்குத் தடங்கல் எதுவும் ஏற்படுமா என்பது தொடர்பில் புதிய […] - [ஸ்ரீலங்கா பென் கிளப்பின் ஏற்பாட்டில் அவரி அவிழ்கை விழா](https://minnal24.com/%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af%80%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d/): -எம்.எஸ்.எம்.ஸாகிர்- ஸ்ரீலங்கா பென் கிளப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அவரி அவிழ்கை விழா (சஞ்சிகை வெளியீட்டு விழா) இன்று திங்கட்கிழமை பிற்பகல் 4 மணிக்கு சூம் தொழில்நுட்பத்தின் வாயிலாக இடம்பெறும். ஸ்ரீலங்கா பென் கிளப்பின் தலைவி சம்மாந்துறை மஷூறா தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வுக்கு சாகித்திய மண்டல பரிசு பெற்ற மூத்த எழுத்தாளரும் இலக்கிய செயற்பாட்டாளருமான மேமன் கவி பிரதம அதிதியாகக் கலந்து கொள்கிறார். விஷேட அதிதியாக பிரபல கவிஞரும் ஒலிபரப்பாளருமான அஷ்ரப் சிஹாப்தீன் மற்றும் ஊடக அதிதிகளாக சிரேஷ்ட ஊடகவியலாளரும் சட்டத்தரணியுமான ரஷீட் எம். இம்தியாஸ், லேக்ஹவுஸ் மற்றும் வசந்தம் தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் அஷ்ரப் ஏ. சமட் ஆகியோரும் கௌரவ அதிதிகளாக பாவேந்தல் பாலமுனை பாறூக், அம்பாறை மாவட்ட கலாசார ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் ஏ.எல்.தௌபீக், அம்பாறை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரி.எல்.றின்ஸான், கல்முனை பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் சா.சிவஜோதி ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இந்நிகழ்வில், ஸ்ரீலங்கா பென் கிளப்பின் துணைச் செயலாளர் […] - [கடும் மழை காரணமாக பாரிய மண் சரிவு](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b4%e0%af%88-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%ae/): -நுவரெலியா நிருபர்- நாட்டில் பெய்து வரும் கடும் மழை காரணமாக, நோட்டன் தியகல 3 ம் கட்டை வீதியில் பாரிய மண் சரிவு ஏற்பட்டு உள்ளது, என நோட்டன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். இதனால் அவ்வீதியூடாக வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளது. அதற்கு மாற்று வழியாக நோட்டன் லக்சபான வழியாக வாகனங்கள் செல்ல அனுமதி வழங்கி உள்ளதாக, நோட்டன் பொலிஸ் நிலைய போக்குவரத்து அதிகாரி தெரிவித்தார். மஸ்கெலியா நகரில் இருந்து செல்லும் அனைத்து வாகனங்களும் லக்சபான வழியாக திருப்பி அனுப்பப்படுவதாகவும், நேற்றும், இன்று திங்கட்கிழமையும் சிவனடி பாதமலை பருவகாலம் நிறைவு பெறுவதை முன்னிட்டு தியகல வீதியை பயன்படுத்த வேண்டாம், என கினிகத்தேன பொலிஸார் தெரிவித்து வருகின்றனர். யாத்திரிகர்கள் நலன் கருதி முன்னறிவித்தல் வழங்கி வருகின்றனர்.   - [புதிய அரசில் எவ்வித பதவிகளையும் ஏற்காதிருக்க மலையக மக்கள் முன்னணி தீர்மானம்](https://minnal24.com/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b5%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%bf/): -நுவரெலியா நிருபர்- பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளடங்கலான புதிய அரசில் எவ்வித பதவிகளையும் ஏற்காதிருக்க மலையக மக்கள் முன்னணி தீர்மானித்துள்ளது. அரசில் இணையுமாறும், அமைச்சு பதவியை ஏற்குமாறும் மலையக மக்கள் முன்னணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பில் ஆராய்ந்து முடிவொன்றை எடுப்பதற்காக முன்னணியின் மத்திய குழுக் கூட்டம், ஹட்டனில் உள்ள கட்சி தலைமையகத்தில், முன்னணியின் தலைவர் வீ. இராதாகிருஷ்ணன் தலைமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மத்திய மற்றும் செயற்குழு உறுப்பினர்களிடம், சமகால அரசியல் நிலவரம் மற்றும் தற்போது கட்சி கையாள வேண்டிய நகர்வுகள் சம்பந்தமாக கருத்துகள் பெறப்பட்டன. இவ்வாறு கருத்துகள் பெறப்பட்ட பின்னர், தமிழ் முற்போக்கு கூட்டணியாக, ஐக்கிய மக்கள் சக்தியுடன் தொடர்ந்து பயணிக்க வேண்டும் எனவும், புதிய அரசில் எவ்வித பதவிகளையும் ஏறக்கக்கூடாதெனவும் தீர்மானிக்கப்பட்டது. கட்சியால் எடுக்கப்பட்ட இந்த முடிவு முன்னணியின் தலைவரால் ஊடகங்களுக்கு அறிவிக்கப்பட்டது. நாட்டு மக்களுக்கு எவ்வித தடையுமின்றி எரிபொருள், சமையல் எரிவாயு உட்பட அத்தியாவசிய […] - [ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் மறைந்த ஜனாதிபதிக்கான இரங்கல் செய்தி](https://minnal24.com/%e0%ae%90%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%aa%e0%af%81-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%af%8d%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/): -கல்முனை நிருபர்- ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் மறைந்த ஜனாதிபதி மர்ஹூம் ஷேக் கலீபா பின் சயீத் அல் நஹ்யான் அவர்களுக்கான இரங்கல் தெரிவிப்பதற்காக, நேற்று ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்கான ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் தூதுவர் இல்லத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ்.தௌபீக் மற்றும் பைசல் காசிம் ஆகியோர் சென்று, அங்கிருந்த அனுதாப செய்தியறிவிக்கும் புத்தகத்தில் தமது அனுதாப செய்தியை பதிவிட்டனர். - [பால்மா பொதியின் விலை மேலும் அதிகரிப்பு](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%ae%e0%af%87%e0%ae%b2/): இறக்குமதி செய்யப்படும் பால்மா பொதியின் விலை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், 400 கிராம் பால்மாவின் விலை 1,020 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு கிலோகிராம் பால்மா பொதியொன்றின் விலை 2, 545 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. - [தங்கத்தின் விலையில் வீழ்ச்சி](https://minnal24.com/%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b4%e0%af%8d/): அமெரிக்க டொலரின் மதிப்பு இரண்டு தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில் தங்கத்தின் விலை குறைவடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,810 அமெரிக்க டொலர்களாக இன்றைய தினம் பதிவாகியுள்ளது. அதேசயம், இலங்கையில் 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 185,850 ரூபாவாக பதிவாகியுள்ளது. 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 170,400 ரூபாவாக பதிவாகியுள்ளது. - [17 முதல் 20 வரை கொழும்பில் விஷேட பாதுகாப்பு](https://minnal24.com/17-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-20-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%88-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b7/): மேல்மாகாணத்தில் எதிர்வரும் 17 முதல் 20 ஆம் திகதி வரையில் கொழும்பில் விசேட பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். விசேட கடமைகளுக்காக மேல் மாகாணத்துக்கு வெளியிலிருந்து 1,000 பொலிஸார் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். வடக்கு, ஊவா, தெற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் இருந்தும், பொலிஸ் கல்லூரிகளில் இருந்தும் இவ்வாறு பொலிஸார் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. - [நாளையும் மின்வெட்டு இல்லை](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b5%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2/): நாடளாவிய ரீதியில் நாளை திங்கட்கிழமை மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்னாயக்க தெரிவித்துள்ளார். வெசாக் பூரணை தினமான இன்று ஞாயிற்றுக்கிழமையும் நாளை திங்கட்கிழமையும் மின்வெட்டு மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படமாட்டாது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். - [பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையிலான மாபெரும் பேரணி ஆரம்பம்](https://minnal24.com/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b3%e0%af%8d/): -வாழைச்சேனை நிருபர்- இன விடுதலை வேண்டி, பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையிலான (மே-18) மக்கள் பேரணி இன்று ஞாயிற்றுக்கிழமை அம்பாறை மாவட்டம் பொத்துவிலில் ஆரம்பமாகியது. இப்பேரணியை வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கம் ஏற்பாடு செய்திருந்தனர். இன்று ஆரம்பிக்கப்படும் இப்பேரணியானது, பொத்துவிலில் ஆரம்பிக்கப்பட்டு திருக்கோவில், அக்கரைப்பற்று, காரை தீவு, கல்முனை, களுவாஞ்சிகுடி, ஆரையம்பதி, காத்தான்குடி வீதி வழியூடாக கல்லடி பாலத்தினை சென்றடையும். அதனைத் தொடர்ந்து, நாளை திங்கட்கிழமை மாலை மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தில் இருந்து செங்கலடி, வாழைச்சேனை, வாகரை வழி ஊடாக திருகோணமலை சிவன் கோவில் முன்றலினை சென்றடையும். 17.5.2022 காலை திருகோணமலை சிவன் கோவில் முன்றலில் இருந்து ஆரம்பித்து, நிலாவெளி ஊடாக தென்னைமரவாடியை சென்றடைந்து, வவுனியா நெடுங்கேணி வீதி வழியாக முல்லைத் தீவைச் சென்றடையும். தொடர்ந்து, 18.5.2022 அன்று வடமாகாணத்தில் இருந்து வரும் காணாமல் ஆக்கப்பட்டோர்களின் பேரணியுடன் இணைந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முன்றலில் சென்றடையவுள்ளது. “முள்ளிவாய்க்கால் வலி […] - [த ஹிந்து நாளிதழுக்கு சாணக்கியன் கடும் கண்டனம்](https://minnal24.com/%e0%ae%a4-%e0%ae%b9%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a3/): த ஹிந்து நாளிதழில் வெளியிடப்பட்டுள்ள செய்தி தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். இலங்கை கடும் பொருளாதார அரசியல் நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் தாக்குதலை மேற்கொள்வதற்காக ஒன்றிணைகின்றனர் என த ஹிந்து நாளிதல் செய்தி வெளியிட்டுள்ளது. தீவிரமான வன்முறைப் போராட்டங்களுக்கு மத்தியில் இலங்கை இரண்டு முறை அவசரகால நிலைமையை அறிவித்துள்ளன. இந்த நிலையில் சர்வதேச தொடர்புகளைக் கொண்ட புலம்பெயர் தமிழர்களின் ஒரு பிரிவினர், போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்து வரும் மோதல்களில் தங்கள் இருப்பை உறுதிப்படுத்த முயல்வதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிப்பதாக குறித்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவு தினமான மே 18ஆம் திகதியை சில குழுக்கள் தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக அனுசரித்து தாக்குதல்களை நடத்த திட்டமிடுவதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறானதொரு பின்னணியிலேயே குறித்த செய்தி தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற […] - [மன்னார் இளைஞர்களால் சாந்திபுரம் விகாரை சுத்தப்படுத்தும் செயற்பாடு முன்னெடுப்பு](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b3%e0%af%88%e0%ae%9e%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d/): -மன்னார் நிருபர்- இளைஞர்கள் மத்தியில் ‘சமூக ஒத்திசைவை பலப்படுத்தல்’ எனும் தொனிப்பொருளில் வாழ்வுக்கான தன்னார்வத் தொண்டர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் ரஹமா நிறுவனத்தின் அனுசரணையில் முன்னெடுக்கப்பட்டு வரும் இளைஞர் செயற் திட்டத்தின் ஒரு பகுதியாக இன்று ஞாயிற்றுக்கிழமை காலை சாந்திபுரம் பெளத்த விகாரை சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டது பௌத்த மக்களால் வெசாக் தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், திருமதி ரெஜினா ராமலிங்கம் தலைமையில் லியோ மற்றும் இளைஞர் கழகங்கள், தன்னார்வ இளைஞர்கள் இணைந்து குறித்த சிரமதான பணியை முன்னெடுத்திருந்தனர். குறித்த சிரமதான பணியில் சர்வமத இளைஞர்கள் மற்றும் யுவதிகள் கலந்து கொண்டு மதங்களுக்கிடையிலான புரிந்துணர்வை செயற்பாட்டு ரீதியாக வெளிப்படுத்தினர். குறித்த சிரமதான பணியில் அதிகளவான இஸ்லாமிய இளைஞர் யுவதிகளும் கலந்து சிரமதான பணியை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது. . - [அமைச்சுப் பதவியென்ற பேச்சுக்கே இடமில்லை - க.சுகாஷ்](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%8d/): இனப்படுகொலையாளிகளான ராஜபக்ஷாக்களைக் காப்பாற்றும் ரணில் விக்கிரமசிங்கவைப் பலப்படுத்த வேண்டிய தேவை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு துளியளவும் கிடையாது, என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் க.சுகாஷ் தெரிவித்துள்ளார். அமைச்சுப் பதவியென்ற பேச்சுக்கே இடமில்லை, என தெரிவித்துள்ள அவர் மேலும், இலங்கையில் மாறி மாறி வந்த அரசாங்கங்களால் தமழினத்திற்கெதிராக மேற்கொள்ளப்பட்ட கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கு எதிராக சர்வதேச விசாரணை கோரும் இத்தருணத்தில், அமைச்சரவையில் அங்கம் வகித்தோ அல்லது அரசாங்கத்தால் நியமிக்கப்படும் அரசைக் காப்பாற்றும் குழுக்களுக்குத் தலைமை தாங்கியோ, அரசாங்கத்தோடு சங்கமிப்பதென்பது ஈழத் தமிழினத்தின் நீதிக்கான பயணத்தை நீர்த்துப்போகச் செய்வதோடு, இனப்படுகொலையாளிகளைப் பாதுகாப்பதாகவே அமையும். இந்த துரோகங்களைத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஒருபோதும் செய்யாதென்பதை, இனவிடுதலைக்காக ஆகுதியாகியவர்களின் ஆத்மாக்களை மனதிருத்தி, பொறுப்போடு கூறுகின்றோம், என தெரிவித்துள்ளார்.   - [அநுராதபுரத்தில் பௌத்த பிக்கு உட்பட 22 பேர் கைது](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%a8%e0%af%81%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a4%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8c%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%aa%e0%ae%bf/): நாட்டில் கடந்த வாரம் ஏற்பட்ட அரசியல் அசாதாரண சூழ்நிலையின் போது அரசியல் வாதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் வீடுகள் சேதமாக்கப்பட்டதுடன் பல வீடுகள் தீரக்கிரையாக்கப்பட்டன. அந்தவகையில், அநுராதபுர நகரில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் நால்வரின் வீடுகள், அநுராதபுர நகர மேயரின் வீடு ஆகியவற்றை தாக்கியழித்து, தீவைத்ததாக சந்தேகிக்கப்படும் பௌத்த பிக்கு உள்ளிட்ட 22 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவத்துடன் தொடர்புடையதாக முன்னணி வர்த்தகர் உள்ளிட்ட 20 – 53 வயதுடைய நபர்களே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.   - ['ஹரித தெயக்' தேசிய வீட்டு தோட்ட பயிர்ச்செய்கை வேலை திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஆரம்பம்](https://minnal24.com/%e0%ae%b9%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a4-%e0%ae%a4%e0%af%86%e0%ae%af%e0%ae%95%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a4/): -கல்முனை நிருபர்- முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையில் 22 லட்சம் வீட்டுத் தோட்டங்களை இலக்காகக் கொண்டு செயற்படுத்தப்படும் ‘ஹரித தெயக்’ தேசிய வீட்டுத் தோட்டப் பயிர்ச்செய்கை திட்டம் எல்லா மாவட்டத்திலும் ஆரம்பித்து வைக்கப்பட்டு வருகின்றது. ஹரித தேயக் ‘ தேசிய வீட்டுத்தோட்ட யுத்தம் – 2022 செயற்றிட்டத்தின் கீழ் 2.2 மில்லியன் வீட்டுத் தோட்டங்களை இலக்காக கொண்டு தற்போது நாடு முழுவதையும் உள்ளடக்கி நடைமுறைப்படுத்தப்படும் ‘ பசுமை நாள் ‘ தேசிய வீட்டுத்தோட்ட யுத்தம் – 2022’ நிகழ்ச்சித் திட்டமானது தேசிய ரீதியில் மார்ச் 3ஆந் திகதி செவ்வாய் கிழமை காலை 9.18 மணிக்கு சுபவேளையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அந்தவகையில் இறக்காமம் பிரதேச செயலக பிரிவில் இவ் வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டமாக வீட்டுத்தோட்ட பயிர்ச் செய்கையாளர்களுக்கு பயிர்ச் செடிகள் வழங்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம். ரஷ்ஷான் (நளீமி) தலைமையில் திங்கட்கிழமை வரிப்பத்தான்சேனை -03 ஆம் பிரிவில் இடம்பெற்றது. இவ்வேலைத்திட்டத்திற்கு அமைவாக, […] - [2021ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளி வெளியானது](https://minnal24.com/2021%e0%ae%86%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-5-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%ae%ae/): 2021ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான பாடசாலை மட்ட வெட்டுப்புள்ளிகள் தொடர்பான விபரம் வெளியாகியுள்ளது. - [மூதூரில் சிறுவர் அபிவிருத்தி நிலைய சுற்று மதிலுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு](https://minnal24.com/%e0%ae%ae%e0%af%82%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%85%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81/): -எம்.எஸ்.எம்.ஸாகிர்- மூதூர் பிரதேசத்தில் இயங்கி வரும் சிறுவர் அபிவிருத்தி நிலையமான றவ்ழத்துல் அத்பால் நிலையத்தின் சுற்று மதிலுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது. மூதூர் பிரதேசத்தில் அமைந்துள்ள தாய், தந்தையற்ற பிள்ளைகளைப் பராமரித்து, அவர்களின் சிறந்த எதிர்காலத்திற்கு வழிகாட்டுமிடமாக அமைந்துள்ள றவ்ழத்துல் அத்பால் சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் சுற்று மதிலுக்கான அடிக்கல்லினை அல்-ஹிக்மத்துல் உம்மா பௌண்டேஷனின் தலைவர் கஸ்ஸாலி முகம்மது பாதிஹ் நட்டி வைத்தார். இந்நிலையமானது நீண்டகாலமாக சுற்று மதிலின்றி காணப்பட்டதனால் பிள்ளைகளுக்கு பாதுகாப்பற்ற அசௌகரிய நிலையும் காணப்பட்டது. இந்நிலையை சமூகசேவையாளரும் அல்-ஹிக்மதுல் உம்மா பௌண்டேஷனின் தலைவருமான கஸ்ஸாலி முகம்மது பாதிஹின் கவனத்திற்கு கொண்டு வந்ததிற்கமைய உடனடியாக அதற்கான நடவடிக்கையை துரிதமாக மேற்கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது. - [மேலும் இரண்டு கப்பல்களிலிருந்து எரிபொருள் தரையிறக்கம்](https://minnal24.com/%e0%ae%ae%e0%af%87%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2/): இன்று செவ்வாய்க்கிழமை மேலும் இரு கப்பல்களிலிருந்து எரிபொருளை தரையிறக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. மேலும், குறித்த இரு கப்பல்களிலும் ஒக்டேன் 92 மற்றும் ஒக்டேன் 95 ரக பெட்ரோல் மற்றும் டீசல் என்பன உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. - [10 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து : 5 பேர் பலி](https://minnal24.com/10-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf/): ஈரானின் தெற்கு நகரமான அபாடானில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக, சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும், இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 80 பேர் வரை இடிபாடுகளில் சிக்கியுள்ளதாகவும், தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. கட்டிடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். - [சட்ட விரோதமாக நாட்டை விட்டு வெளியேற முயன்ற 67 பேர் திருகோணமலையில் கைது](https://minnal24.com/%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8b%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f/): சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முயற்சித்த 67 பேர் திருகோணமலையில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று திங்கட்கிழமை இரவு இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சல்லிசம்பல்தீவு மற்றும் திருகோணமலை கடற்பகுதியில் கடற்படையினர், நிலாவெளி பொலிஸார் இணைந்து மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பில், கடல் வழியாக வெளிநாட்டுக்கு சட்டவிரோதமாக வெளியேற முயன்ற குறித்த 67 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, 02 முச்சக்கர வண்டிகள், ஒரு கெப் வாகனம் மற்றும் கார் ஒன்று போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளன. - ["திரிபோஷா" தொழிற்சாலைக்கு பூட்டு](https://minnal24.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b7%e0%ae%be-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/): அரசாங்கத்திற்கு சொந்தமான ‘திரிபோஷா’ தொழிற்சாலை மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு இலவசமாக வழங்கப்படும் ஊட்டச்சத்து உணவான திரிபோஷா சோளம் மற்றும் சோயா போன்றவற்றால் தயாரிக்கப்படுகின்றது. இந்நிலையில், தட்டுப்பாடு காரணமாக சோளம் மற்றும் சோயா விநியோகம் முற்றிலும் தடைபட்டுள்ள நிலையில், திரிபோஷவை உற்பத்தி செய்வதில் பிரச்சினை எழுந்துள்ளது. இதேவேளை, நாடு முழுவதும் உள்ள கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஊட்டச்சத்து குறைபாடு மிக சிக்கலான பிரச்சினையாக எதிர்காலத்தில் மாறும் அபாயத்தை இலங்கை எதிர்கொள்கிறது எனவும், வைத்தியர் ஜெயருவன் பண்டார தெரிவித்துள்ளார். - [குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ](https://minnal24.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%ae%a9%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%af%81-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a3%e0%af%88%e0%ae%95%e0%af%8d/): நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, இன்று செவ்வாய்க்கிழமை வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மே 09 ஆந் திகதி காலி முகத்திடலில் இடம்பெற்ற வன்முறை மற்றும் கலவர சம்பவங்கள் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காகவே, அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் அழைக்கப்பட்டுள்ளார். - [முதலாவது கிலோமீற்றருக்கு 90 ரூபா?](https://minnal24.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8b%e0%ae%ae%e0%af%80%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/): எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து முச்சக்கர வண்டிகளின் கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப முதலாவது கிலோமீற்றருக்கான கட்டணம் 90 ரூபாவாகவும், இரண்டாவது கிலோமீற்றருக்கான கட்டணம் 80 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுதில் ஜயருக் தெரிவித்துள்ளார் - [பேருந்து கட்டணங்கள் அதிகரிப்பு](https://minnal24.com/%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a3%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95/): எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு அமைய பேருந்து கட்டணம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கான கட்டணங்களில் திருத்தத்தை ஏற்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, எரிபொருள் விலை அதிகரிப்புக்கு ஏற்ப பேருந்து கட்டணம் 25% – 30% வரை அதிகரிக்கப்படும், என தனியார் பேருந்து உரிமையார்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். மேலும், புதிய பேருந்து கட்டணங்கள் இன்று செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படும், எனவும் அவர் தெரிவித்துள்ளார்.   - [இன்று சமையல் எரிவாயு விநியோகம் இடம்பெறாது](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a8/): இன்று செவ்வாய்க்கிழமை சமையல் எரிவாயு விநியோம் இடம்பெறாது, என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. அதனால், பொதுமக்கள் விற்பனை நிலையங்களில் எரிவாயுவிற்காக காத்திருக்க வேண்டாம், என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இரண்டு எரிவாயு கப்பல்களுக்கான 6.5 மில்லியன் அமெரிக்க டொலர் கொடுப்பனவு நேற்று திங்கட்கிழமை செலுத்தப்பட்டதாகவும், குறித்த கப்பல்கள் மூலம் 7,500 மெட்ரிக் டன் எரிவாயு நாட்டுக்கு கொண்டு வரப்படவுள்ளதாகவும், லிட்ரோ நிறுவனத் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். - [இன்றைய மின்வெட்டு நேரம் குறைப்பு](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%88%e0%ae%af-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b5%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/): இன்று செவ்வாய்க்கிழமை நாடளாவிய ரீதியில் மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு வசதியாக மின்வெட்டு அமுல்படுத்தப்படாது எனவும், எதிர்வரும் ஜூன் 01 வரை மாலை 6.30 மணிக்கு மேல் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது எனவும், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. குறித்த தினங்களில் நண்பகல் 12.00 மணி முதல் மாலை 6.30 மணி வரை பரீட்சை நடைபெறாத அந்நாட்களில் கைத்தொழில் வலயம் மற்றும் கொழும்பு வர்த்தக நகர வலயம் தவிர்ந்த அனைத்து வலயங்களிலும் 1 மணித்தியாலம் 45 நிமிடம் முதல் 2 மணித்தியாலம் 10 நிமிடம் வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. கைத்தொழில் வலயங்களுக்கு காலை 5.00 மணி முதல் மு.ப. 8.00 மணி வரையிலும், கொழும்பு வர்த்தக நகர வலயத்திற்கு காலை 6.00 மணி முதல் மு.ப. 9 மணி வரையிலும் 3 மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது. - [புதிதாக பதியேற்ற அமைச்சர்கள் ஒரே பார்வையில்...](https://minnal24.com/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%af%87%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b0/): அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை அமைச்சர்கள் 08 பேர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். ஏற்கனவே அமைச்சுப் பதவிகளை பெற்றுள்ள அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் ரமேஷ் பத்திரண ஆகியோருக்கு ஏற்கனவே அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்ட நிலையில், மீண்டும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அந்த வகையில், ஏற்கனவே 13 அமைச்சர்கள் பதவியேற்றுள்ள நிலையில், தற்போது பதவியேற்றுள்ள 6 அமைச்சர்களுடன், புதிய அமைச்சரவையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட 20 அமைச்சர்கள் தற்போது அங்கம் வகிக்கின்றனர். டக்ளஸ் தேவானந்தா – மீன்பிடி அமைச்சர், பந்துல குணவர்தன – போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சராகவும், வெகுசன ஊடக அமைச்சர், கெஹெலிய ரம்புக்வெல்ல – நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சராகவும், மஹிந்த அமரவீர – விவசாயம், வன ஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சராகவும், ரமேஷ் பத்திரண – கைத்தொழில் அமைச்சராகவும், விதுர விக்ரமநாயக்க – […] - [ஊழியரின் மோதிர விரலை கடித்து குதறிய சிங்கம்](https://minnal24.com/%e0%ae%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8b%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%bf/): ஜமைக்காவில் உள்ள மிகப்பெரிய வனவிலங்குகள் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் சிங்கத்திடம் ஊழியர் ஒருவர் சேட்டை செய்து விரல்களை இழந்த பரிதாப சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஜமைக்காவில் உள்ள உயிரியல் பூங்காவுக்கு வந்த பார்வையாளர்களைக் கவரும் வகையிலும், அவர்கள் வீடியோ எடுத்துக் கொண்டிருந்ததால், சிங்கத்திடம் தான் விளையாடும் வீடியோ வைரலாகும் என்ற நோக்கத்திலோ இந்த சேட்டையில் ஈடுபட்ட நபர், விரல்களை இழந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இரும்பு வேலிக்குள் இருந்த சிங்கத்தின் முகத்தில் தனது கையால் வருடி விடுவது போலவும், தள்ளுவது போலவும் அந்த ஊழியர் செய்து கொண்டிருக்க, ஒரு கட்டத்தில் கோபம் வந்து, அந்த ஊழியரின் விரல்களை லாவகமாக வாய்க்குள் பிடித்துக் கொண்டது. இப்படி விளையாட்டு விபரீதமாகும் என்று நினைத்துப் பார்க்காத ஊழியரோ, விரல்களைக் காப்பாற்ற என்ன செய்வது என்று தெரியாமல் கையை இழுக்க, மறுபுறம் அந்தப் பெரிய சிங்கமோ […] - [பிரதி பொலிஸ்மா அதிபர் இடமாற்றம்](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87%e0%ae%9f/): குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் டபிள்யூ.திலகரத்ன உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றப்பட்டுள்ளார். பொலிஸ் ஊடகப்பிரிவு  விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, நுவரெலிய மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபராக கடமையாற்றிய பிரசாத் ரணசிங்க தற்போது குற்றப்புலனாய்வு பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. - [எரிபொருட்களின் விலை மீண்டும் அதிகரிப்பு](https://minnal24.com/%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a3%e0%af%8d/): இன்று செவ்வாய்க்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒக்டென் 92 ரக பெற்றோல் லீட்டர் ஒன்றின் புதிய விற்பனை விலை 420 ரூபாவாகவும் ஒக்டென் 95 ரக பெற்றோல் லீட்டர் ஒன்றின் புதிய விற்பனை விலை 450 ரூபாவாகவும் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஒட்டோ டீசல் லீட்டர் ஒன்றின் புதிய விற்பனை விலை 400 ரூபாவாகவும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுப்பர் டீசல் லீட்டர் ஒன்றின் விற்பனை விலை 445 ரூபாவாகவும் அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமைச்சரவைக் கூட்டத்தின் போது இது தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதாகவும், தொடர்ந்து நட்டத்தில் இயங்கிவரும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்  தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. மேலும், குறைந்த வருமானம் பெறும் குடும்பத்தினரின் நலன் கருதி மண்ணெண்ணெய் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தாமல் இருக்கவும் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. - [அத்தியாவசிய அரச ஊழியர்களை மாத்திரம் பணிக்கு அழைக்கவும்](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a-%e0%ae%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3/): அரச துறை ஊழியர்களை கடமைக்கு அழைக்கும் போது, அத்தியாவசிய ஊழியர்களை மாத்திரம் கருத்தில் கொள்ளுமாறு, நிறுவன தலைவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கை நாளை வெளியிடப்படும், என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். - [புதிய அமைச்சரவை பேச்சாளராக பந்துல குணவர்தன](https://minnal24.com/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%b5%e0%af%88-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0/): புதிய அமைச்சரவை பேச்சாளராக ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், மஹிந்த அமரவீர, மனுஷ நாணயக்கார மற்றும் கஞ்சன விஜேசேகர ஆகியோர் புதிய அமைச்சரவையின் இணைப் பேச்சாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். - [கல்முனையில் தொடரும் மர்ம துர்நாற்றம்](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d%e0%ae%ae/): -கல்முனை நிருபர்- கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் அண்மைக்காலமாக வீசுகின்ற துர்நாற்றம் காரணமாக பொதுமக்கள் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் மாநகர சபை எல்லைக்குட்பட்ட கல்முனை, சாய்ந்தமருது, நற்பிட்டிமுனை உள்ளிட்ட பகுதிகளில் பகலிரவு வேளைகளில் திடீரென துர்நாற்றம் வீசுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, கல்முனை மாநகர பிரதம சுகாதார வைத்திய அதிகாரி எம்.ஜே.கே.எம்.அர்சத் காரியப்பர் தற்போது வீசுகின்ற துர்நாற்றம் குறித்து ஆராய்வதற்காக இரு நாட்களாக களவிஜயம் செய்ததுடன், டிரோன் கமரா உதவியுடன் தேடுதல் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டது. இதன் போது, கல்முனை, சாய்ந்தமருது பகுதியில் வீசுகின்ற துர்நாற்றம் எங்கிருந்து வருகின்றது? எதனால் வருகின்றது? என்பதை எந்தவொரு ஆதாரத்துடன் அறிய முடியவில்லை. இருந்த போதிலும், சுமார் 3 மணி நேரமாக சந்தேகிக்கப்படடுகின்ற இடங்கள், அதனைச் சூழவுள்ள பகுதிகள் யாவும் டிரோன் கமராவின் உதவியுடன் கண்காணிக்கப்பட்டு சில இடங்கள் சந்தேகத்தில் அடையாளப்படுத்தப்பட்டன. பின்னர் இவ்வாறு அடையாளப்படுத்தபட்ட இடங்களை நோக்கி கால்நடையாகவும், நீர் நிலைகளிலுள்ள […] - [40,000 மெட்ரிக் டன் பெற்றோல் தாங்கிய கப்பல் இன்று கொழும்பை வந்தடைந்துள்ளது](https://minnal24.com/40000-%e0%ae%ae%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d-%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%8b%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be/): இந்திய கடன் உதவியின் கீழ் 40,000 மெட்ரிக் டன் பெற்றோல் தாங்கிய கப்பல் இன்று கொழும்பை வந்தடைந்துள்ளதாக, கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. - [எரிவாயு கொள்கலனிற்காக காத்திருந்து ஏமாற்றமடைந்த மக்கள்](https://minnal24.com/%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%af%81-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%95-%e0%ae%95%e0%ae%be/): -பதுளை நிருபர்- பசறை எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் அமைந்துள்ள எரிவாயு விற்பனை நிலையத்திற்கு, 23 நாட்க்களுக்கு பின்னர் இன்று திங்கட்கிழமை எரிவாயு கொள்கலனை ஏற்றிய லொறி ஒன்று வருகை தந்ததை தொடர்ந்து, எரிவாயு விநியோகஸ்தர்களினால் எரிவாயு கொள்கலன்கள் விநியோகிக்கப்பட்டது. இன்று அதிகாலை சுமார் 3 மணியிலிருந்து எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு முன்பாக சுமார் 200 ற்கும் மேற்பட்ட மக்கள் எரிவாயு கொள்கலன்களை பெற்று கொள்வதற்காக காத்திருந்தனர். இருப்பினும் அங்கிருந்த 75 நபர்களுக்கே எரிவாயு கொள்கலன்கள் வழங்கப்பட்டதாகவும், தம்மால் 75 கொள்கலன்களே பகிர்ந்தளிக்க முடியும் என்றும், விற்பனை நிலைய முகாமையாளர் தெரிவித்தார். இதன்போது, 75 நபர்களுக்கே எரிவாயு கொள்கலன்கள் பகிர்ந்தளிக்கப்பட்டதோடு, காத்திருந்த மக்கள் எரிவாயுவை பெற்றுக் கொள்ளாமல், ஏமாற்றத்துடன் திரும்பி சென்றதை காணக்கூடியதாக இருந்தது. பொலிஸார் மற்றும் படையினரின் பாதுகாப்புடனேயே எரிவாயு கொள்கலன்கள் விநியோகிக்கப்பட்டன. - [டொலர் ஒன்றின் இன்றைய பெறுமதி](https://minnal24.com/%e0%ae%9f%e0%af%8a%e0%ae%b2%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%92%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%88%e0%ae%af-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1/): இலங்கை மத்திய வங்கி இன்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி ரூபா 354.45 சதமாகவும், விற்பனைப் பெறுமதி ரூபா 364.42 சதமாகவும் பதிவாகியுள்ளது.   - [மட்டு.முதலைக்குடாவில் வறுமை நிலையில் வாழும் குடும்பமொன்றிற்கு வீடு கையளிப்பு](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b1/): -வாழைச்சேனை நிருபர்- மட்டக்களப்பு முதலைக்குடா கிராமசேவகர் பிரிவில் வறுமை நிலையில் வாழ்ந்து வரும் குடும்பமொன்றிக்கான 34 ஆவது சக்தி இல்லம் மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர் பீடத்தினால் வைபவ ரீதியாக கையளிக்கப்பட்டது. பாடசாலை வீதி முதலைக்குடா மேற்கினைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான வி.விதுசா என்பவரது நலன் கருதி இவ் மனித நேய உதவி வழங்கப்பட்டுள்ளது. 2 பெண் பிள்ளைகளுடன் அடிப்படை வசதியற்ற குடிசை வீட்டில் வாழ்ந்து வந்த இவர்கள் மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர்பீடம் கல்வி சமூகநலம் பண்பாடு அறப்பணிமையம் சுவிஸ் மட்டக்களப்பு கிளை ஊடாக விடுத்த வேண்டுகோளினையடுத்து இவ்வுதவி வழங்கி வைக்கப்பட்டது. நிதி அனுசரனைணயை அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த மாசிலாமணி ரவி வழங்கி வைத்தார். மேற்படி அமைப்பானது மாவட்டத்தில் பல்வேறுபட்ட மனிதநேய உதவிகளை மேற்கொண்டு வருகின்றது. 34 ஆவது சக்தி இல்லம் கையளிப்பு நிகழ்வில் மேற்படி அமைப்பின் ஸ்தாபகர் சுவிஸ் சுரேஸ் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பாளர் பா.வினோராஜ் அவருடன் இணைந்த சக்தி […] - [க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் 10 சிறுவர் குற்றவாளிகள்](https://minnal24.com/%e0%ae%95-%e0%ae%aa%e0%af%8a-%e0%ae%a4-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a3-%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b0%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%af%88-9/): இவ்வருடம் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு 15 கைதிகள் தயாராக உள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர்கள் அனைவரும் புதிய மெகசின் சிறைச்சாலை மற்றும் வட்டரெக்க சிறைச்சாலை பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள பரீட்சை நிலையங்களில் பரீட்சைக்கு தோற்றவுள்ளதாக சிறைச்சாலையின் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். அதன்படி வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து ஒரு கைதியும்இ புதிய மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறப்புக் கைதிகள் நால்வரும்இ வட்டரெக்க சிறைச்சாலை பாடசாலையில் 10 சிறுவர் குற்றவாளிகள் என 15 கைதிகள் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   - [ஒரு கிலோ நெல்லை விற்று ஒரு கட்டி சவர்க்காரம் வாங்க முடியுமா ? விவசாயிகள் கேள்வி](https://minnal24.com/%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8b-%e0%ae%a8%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%92%e0%ae%b0/): இரசாயன உரங்களை விரைவில் வழங்குவதாக அரசாங்கம் உறுதியளித்த போதிலும், இதுவரையில் எவ்வித உரமும் வழங்கப்படவில்லை, என விவசாயகள் தெரிவிக்கின்றன. இரசாயன உர இறக்குமதியை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் அண்மைக் காலங்களில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருந்தது. இதனால் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் உரத் தட்டுப்பாடு ஏற்பட தொடங்கியது. இரசாயன உர இறக்குமதிக்கு தடை விதித்து சேதன உரத்திற்கு மாறுவதற்கு ஜனாதிபதி தீர்மானித்தார். குறித்த தீர்மானத்திற்கு எதிராக விவசாயிகள் கடந்த சில மாதங்களாக, இரசாயன உர இறக்குமதியை மீண்டும் தொடங்கக் கோரி நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தி வந்தனர். உரப்பிரச்சினையால் தங்களின் பயிர்கள் குறிப்பாக நெற்பயிர்களுக்கு நஷ்டஈடு வழங்குமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இரசாயன உர தடையானது நடப்பு ஆண்டில் உணவு உற்பத்தியில் பாரிய வீழ்ச்சிக்கு வழிவகுத்தது. குறித்த தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதி தற்போது கவலை வௌியிட்டுள்ளதுடன், இரசாயன உரத்தை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி தெரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இரசாயன உரதட்டுப்பாடு […] - [பெற்றோல் கிடைக்காததால் பிறந்து 3 நாட்களேயான சிசு உயிரிழந்த துயரம்](https://minnal24.com/%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%8b%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa/): பெற்றோல் கிடைக்காததால் பிறந்து 3 நாட்களேயான சிசுவொன்று உயிரிழந்த சம்பவம் ஹல்துமுல்ல பகுதியில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த குழந்தை கடந்த 19ஆம் திகதி பிறந்துள்ளது. குழந்தையும் தாயும் சிறந்த நலத்துடன் இருந்தமையினால் வைத்தியசாலையில் இருந்து வீடு செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர். வீடு வந்தவுடன் குறித்த சிசுவுக்கு திடீர் சுகயீனம் ஏற்பட்டுள்ளது. எனவே குழந்தையை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு பெற்றோர் முயற்சித்துள்ளனர். இதன்போது, குறித்த சிசுவின் தந்தை வைத்தியசாலைக்கு செல்ல முச்சக்கரவண்டிக்கு பெற்றோல் பெற்றுக்கொள்வதற்கு பல இடங்களுக்கு அலைந்து திரிந்துள்ளார். எனினும் தாமதமாகவே பெற்றோல் கிடைத்துள்ளது. அதன் பின்னர், பெற்றோர் குறித்த சிசுவை ஹல்துமுல்ல வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், சிகிச்சை பலனின்றி சிசு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. - [மேலும் சில அமைச்சர்கள் பதவியேற்பு](https://minnal24.com/%e0%ae%ae%e0%af%87%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa/): புதிய அமைச்சரவையில் இன்று திங்கட்கிழமை மேலும் சில அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர். அதன்படி,  ரமேஷ் பத்திரண பெருந்தோட்டத்துறைக்கு மேலதிகமாக கைத்தொழில் அமைச்சராகவும், மஹிந்த அமரவீர விவசாய அமைச்சராகவும், எஸ்.எம் சந்திரசேன நீர்ப்பாசன அமைச்சராகவம், நியமனம் பெற்றுள்ளனர். - [33 இலட்சம் குடும்பங்களுக்கு இரண்டு மாதங்களுக்கு நிவாரணம்](https://minnal24.com/33-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d/): பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள சமுர்த்தி பயனாளர்கள் மற்றும் உதவி தேவையான 33 இலட்சம் குடும்பங்களுக்கு இம்மாதம் முதல் எதிர்வரும் இரண்டு மாதங்களுக்கு 5000 முதல் 7500 ரூபா வரை நிதியுதவி வழங்கப்படவுள்ளது. இதன்படி, 17 இலட்சத்து 65 000 சமுர்த்தி பெறுனர் குடும்பங்கள், 730 000 குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் மற்றும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், சிறுநீரக நோயாளர்கள் உட்பட 33 இலட்சம் பேர் பயனடையும் வகையில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. முதல் கட்டமாக அடுத்த வாரம் மே மாத உதவித்தொகையை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உலக வங்கியிடமிருந்து பெறப்பட்ட 300 மில்லியன் அமெரிக்க டொலர்களில் ஒரு பகுதியைப் பயன்படுத்தி பயனாளிகளுக்கு  நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. - [மே 9 சம்பவத்துடன் தொடர்புடைய 1500 பேர் கைது](https://minnal24.com/%e0%ae%ae%e0%af%87-9-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/): அலரி மாளிகைக்கு அருகிலான ‘மைனா கோ கம’ மற்றும் காலி முகத்திடல் ‘கோட்டா கோ கம’ பகுதிகளில் இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டங்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் அதனைத் தொடர்ந்ததான கலவரம் தொடர்பில் இதுவரையில் 1,500 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்தார். இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர்களில் இதுவரை 677 பேருக்கு விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இச்சம்பவங்கள் தொடர்பில் மேலும் புதிதாக 8 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவித்த அவர், இதுவரை இச்சம்பவங்கள் தொடர்பில் மொத்தமாக நாடு முழுவதும் 847 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக சுட்டிக்காட்டினார். இதுவரை 152 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்களில் பொலிஸ் பிணை மற்றும் நீதிமன்ற பிணைகளில் 101 பேர் விடுவிக்கப்பட்டுள்ளதோடு, 39 பேருக்கு விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளதாக நிஹால் தல்தூவ தெரிவித்தார். - [குரங்கு அம்மை தொற்று நோய் இலங்கையிலும் பரவியுள்ளதா?](https://minnal24.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%85%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%a8%e0%af%8b%e0%ae%af/): உலகின் பல நாடுகளில் பரவியுள்ள குரங்கு அம்மை தொற்று நோய் தொடர்பான பரிசோதனையை மேற்கொள்ள மற்றும் நோய்த் தொற்றை கண்டறிவதற்கான வசதிகள் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை எதிர்ப்பு சக்தி, ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்ர தெரிவித்துள்ளார். இதன்படி, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை எதிர்ப்பு சக்தி அறிவியல் மற்றும் உயிரணு ஆய்வு நிறுவகத்தில் அது தொடர்பான பரிசோதனையை மேற்கொள்ள முடியும் என அவர் டுவிட்டர் பதிவொன்றின் மூலம் பதிவிட்டுள்ளார். மேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க நாடுகளில் குரங்கு அம்மை தொற்று அடையாளம் காணப்பட்டது. அந்த நோய் தற்போது ஐரோப்பிய நாடுகளுக்கிடையேயும் பரவத்தொடங்கியுள்ளது. இதனால் உலக சுகாதார அமைப்பு லண்டன் நகரில் அவசர கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. இதுவரையில், ஐரோப்பாவில் 80க்கும் அதிக குரங்கு அம்மை நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். - [கைது செய்யப்பட்டவர்களில் 150 பேர் ஜே.வி.பி யினர்](https://minnal24.com/%e0%ae%95%e0%af%88%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%af%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2/): பாராளுமன்ற உறுப்பினர்கள் வீடுகள் மீது நடத்திய தாக்குதல்களுடன் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஜே.வி.பிக்கு தொடர்புள்ளது. அதற்கான ஆதாரங்களும் எம்மிடம் உள்ளது எனவும் இது தொடர்பில் அந்தக் கட்சிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். கிராம மட்டத்தில் இரு கட்சிகளுக்கும் தொடர்புள்ள தலைவர்கள் உள்ளனர். அவர்கள் தொடர்பில் நியாயமாக விசாரணை நடத்தி அவர்களை கட்சியில் இருந்து அகற்ற வேண்டும். அவர்கள் தொடர்பான ஆதாரங்கள் எம்மிடம் உள்ளன. ஜே.வி.பி தலைவர்களின் வழிகாட்டல்களுடனே இந்த தாக்குதல்கள் நடந்ததாக கருதுகிறோம். நான் அரசியலின் ஊடாக 5 சதம் கூட தவறாக சம்பாதித்து கிடையாது. ஆனால், எனது அனைத்து சொத்துக்களும் அழிக்கப்பட்டன. எனவே தவறான முன்மாதிரியை காண்பிக்க வேண்டாம் என கோருகிறோம் 1988-,89 போன்ற நிலையை ஏற்படுத்த முயலக் கூடாது என்றார். நான் பொலிஸ்மா அதிபருடன் பேசினேன். கைதுசெய்யப்பட்ட 400 பேரில் 150 பேர் ஜே.வி.பி ஆதரவாளர்கள் […] - [ ஐந்து இலட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் தோற்றும் க.பொ.த சாதாரண தரப்பரீட்சை இன்று](https://minnal24.com/%e0%ae%90%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85/): நெருக்கடி நிலைமைகளுக்கு மத்தியில் கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. இன்று ஆரம்பமாகும் இந்த பரீட்சை எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி வரை இடம்பெறவுள்ளது.  3,844 பரீட்சை நிலையங்களிலும் 542 இணைப்பு மத்திய நிலையங்களிலும் நடைபெறவுள்ளது. இந்தமுறை பரீட்சைக்கு 407,129 பாடசாலை பரீட்சார்த்திகளும், 110,367 தனியார் பரீட்சார்த்திகளும் அடங்களாக 517,496 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர். கொவிட்-19 தொற்றுறுதியான பரீட்சார்த்திகள் தோற்றுவதற்கு விசேட பரீட்சை நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதோடு, இந்த பரீட்சைக்கு 590 விசேட தேவையுடையவர்களும் தோற்றவுள்ளனர். இந்த நிலையில், பரீட்சைக்கு தேவையான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் எல்.எம்.டி தர்மசேன தெரிவித்துள்ளார். இந்த நிலையில் பரீட்சார்த்திகள் தங்களது பரீட்சைக்குரிய ஆவணங்களை தயார் நிலையில் வைத்துக்கொள்ளுமாறு அவர் கோரியுள்ளார். மாணவர்களுக்கு பரீட்சை நிலையங்களுக்கு செல்ல இடைஞ்சல் ஏற்படுத்த வேண்டாம் எனவும் அவர்களை வீதியில் கண்டால் வாகனத்தில் ஏற்றிச் சென்று பரீட்சை நிலையங்களில் விடுமாறும் கோரப்பட்டுள்ளது. இதேவேளை, […] - ["மங்கிபாக்ஸ்" வைரஸ் பரவும் அபாயம் : உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%b5%e0%af%88%e0%ae%b0%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae/): -ச.சந்திரபிரகாஷ்- உலக நாடுகளை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா பெருந்தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், தற்போது மங்கிபாக்ஸ் வைரஸ் தொற்று நோய் உலகம் முழுவதும் பரவிவருதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. உலக சுகாதார அமைப்பு முதல் அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்ரிக்கா விஞ்ஞானிகள் இந்த புதிய தொற்று பரவலை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்த துரித முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஜெர்மனி வெள்ளிக்கிழமை தனது முதல் வைரஸ் பாதிப்பை பதிவு செய்தது, பிரித்தானியா, ஸ்பெயின், போர்த்துக்கல், பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகளும் தொற்றைக் கண்டறிந்த சமீபத்திய ஐரோப்பிய நாடாக மாறியுள்ளன. கடந்த 10 நாள்களில் 12 நாடுகளில் 90க்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த மங்கிபாக்ஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதேவேளை இந்த தொற்று பாலியல் உறவுகளிலும் குறிப்பாக ஆணுடன் ஆண் பாலியல் உறவு கொள்ளும் (ஓரிணசேர்கை) நபர்களிடம் அதிகம் காணப்படுவதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. உடலில் நீர்க்கட்டி […] - [மட்டு .சந்தை கட்டிடத் தொகுதியில் சூரிய மின் பிறப்பாக்கி தகடுகள் பொருத்தும் நடவடிக்கைகள் ஆரம்பம்](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%95/): உலக வங்கியின் அனுசரணையுடன் மட்டக்களப்பு மாநகர சபையினால் சூரிய சக்தியில் இருந்து மின்சாரத்தை பெறும் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. மட்டக்களப்பு மாநகர சபைக்கு உரித்தான நகரின் மத்தியில் உள்ள சந்தைக் கட்டிடத் தொகுதியின் கூரையில் இந்த சூரிய மின் பிறப்பாக்கி தகடுகள் (Solar panels)  பொருத்துவதற்கான கள ஆய்வினை இன்று ஞாயிற்றுக்கிழமை மாநகர சபை முதல்வர் தியாகராஜா சரவணபவன் முதல்வர் தியாகராஜா சரவணபவன் மோற்கொண்டிருந்தார். சுமார் 08 மில்லியன் ரூபாய் செலவில் முன்னெடுக்கப்படும் இந்த சூரிய மின் திட்டத்தின் மூலம் 40 கிலோ வாட்ஸ் அளவிலான மின்சாரத்தினை பெற்றுக்கொள்ள முடியும். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மின்சாரத் தட்டுப்பாடுகளை கணிசமானளவு குறைக்கும் பொருட்டு இந்த மாற்று திட்டங்களை நாங்கள் முன்னெடுத்து செல்கின்றோம் என முதல்வர் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தின் மூலமாக சந்தை தொகுதிக்கு மின்சாரத்தினை பெற்றுக்கொள்வதுடன். மாநகர சபைக்கு வருவாயையும் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவித்துள்ளார். - [மூத்த எழுத்தாளர் தெணியான் காலமானார்](https://minnal24.com/%e0%ae%ae%e0%af%82%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%8e%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%af%86%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9/):  மூத்த எழுத்தாளர் தெணியான் (க.நடேசு) இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை வடமராட்சி பொலிகண்டியில் தனது 80 வது வயதில் காலமானார் 1964இல் ‘விவேகி’ சிற்றிதழில் வெளிவந்த ‘பிணைப்பு’ எனும் சிறுகதையுடன் இவரது எழுத்துலகப் பிரவேசம் ஆரம்பமானது. பிற்படுத்தப்பட்ட , சாதிய ஒடுக்குமுறைக்குள்ளான சமூகத்தின் குரலாக ஒலித்த முற்போக்கு எழுத்தாளர் தெணியான். பொலிகண்டி கிராமத்தின் ’தெணி’ என்னும் பகுதியில் சந்ததி சந்ததியாகப் பல காலம் வாழ்ந்துவந்த இவரது குடும்பத்தவர்களை ஊரவர்கள் ’தெணியார்’ என அழைக்கும் வழக்கம் இருந்தமையால், ’தெணியான்’ என்ற புனைபெயரையே இவரும் தமதாக்கிக்கொண்டார். சுமார் 150 சிறுகதைகள், 30 கவிதைகள், 8 நாவல்கள், 3 குறுநாவல்கள், 5 வானொலி நாடகங்கள், 100க்கும் மேற்பட்ட கட்டுரைகள், விமர்சனங்கள், செவ்விகள் என்பன இவரது படைப்புலக அறுவடைகள். - [கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கு விஷேட அறிவிப்பு](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b0-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0/): கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு நாளை திங்கட்கிழமை தோற்றவுள்ள மாணவர்களை முன்கூட்டியே பரீட்சை மண்டபங்களுக்கு அனுப்பி வைக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் பெற்றோரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. பரீட்சார்த்திகள் இரண்டு மணி நேரத்திற்கு முன்னர் பரீட்சை நிலையங்களுக்கு சமூகமளிப்பதால் தேவையற்ற அசௌகரியங்களை தவிர்த்துக்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளது. எனினும், ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் பரீட்சை மண்டபத்திற்கு பரீட்சார்த்திகளுக்கு சமூகமளிக்க முடியவில்லையாயின், அதற்கு சலுகை வழங்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கல்வி பொதுத் தராதர சாதாரண பரீட்சையை பாதிப்பின்றி நடத்துவதற்கு ஒத்துழைப்பை வழங்குமாறு போராட்டங்களில் ஈடுபடுவோரிடம் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கோரிக்கை விடுத்துள்ளார். நெருக்கடி நிலைமைகளுக்கு மத்தியில்  பரீட்சை  ஆரம்பமாகவுள்ளது. இதேவேளை,  ஆகையால், பரீட்சை இடம்பெறும் தினங்களில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. - [பதுளை நகரில் அரசுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம்](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%a4%e0%af%81%e0%ae%b3%e0%af%88-%e0%ae%a8%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a4/): -பதுளை நிருபர்- பதுளை நகரில் ஊவா மாகாண கட்டிடத் தொகுதிக்கு முன்பாக அரசுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்று வருகின்றது. கடந்த 9 ம் திகதி காலி முகத்திடலில் கோட்டா கோ கமவில் தாக்குதல் மேற்கொண்டவர்களை கைது செய்ய கூறியும், ஜனாதிபதியை பதவி விலகுமாறு வலியுறுத்தியும் பதுளை நகரில் JVP யின் ஏற்பாட்டில் இவ்வார்ப்பாட்டம் இடம்பெற்று வருகின்றது. இளைஞர்களும், பெருந்திரளான பொதுமக்களும் பதாதைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பியவாறு இவ்வார்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். - [எரிவாயு பெற ஒன்றுகூடிய மக்களால் குழப்பநிலை](https://minnal24.com/%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%af%81-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1-%e0%ae%92%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%ae/): -மன்னார் நிருபர்- மன்னாரில் எரிவாயு விநியோகிக்கப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து மன்னார் வைத்தியசாலை பிரதான வீதியில் உள்ள லிற்றோ எரிவாயு முகவர் நிலையத்திற்கு முன்பாக பொது மக்கள் ஒன்று கூடியதால் குறித்த பகுதியில் முரண்பாடு தோற்றம் பெற்றதுடன், போக்குவரத்து தடங்கலும் ஏற்பட்டது. இன்று ஞாயிற்றுக்கிழமை ஒரு தொகுதி எரிவாயு சிலிண்டர்கள் மன்னார் லிற்றோ எரிவாயு முகவர்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக, வெளிவந்த தகவலை தொடர்ந்து மக்கள் நீண்ட வரிசையில் எரிவாயு சிலிண்டர்களுடன் காத்திருந்த போதிலும் எரிவாயு சிலிண்டர்கள் முகவர் நிலையங்களுக்கு கிடைக்கப்பெறவில்லை. இந்த நிலையில் வரிசையில் நின்ற மக்கள் மத்தியில் வாய்த்தர்க்கம் மற்றும் முரண்பாடு தோற்றம் பெற்ற நிலையில் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் குறித்த பகுதிக்கு நேரடியாக விஜயம் மேற்கொண்ட மன்னார் பிரதேச செயலாளர் ம.பிரதீப் பொது மக்களிடம் கலந்துரையாடி பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்ததுடன், எரிவாயு விற்பனையின் போது வீண் முரண்பாடு தோற்றம் பெறாத வகையில் எரிவாயு சிலிண்டர்கள் […] - [தமிழ் நாட்டிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் இலங்கை அரசிடம் கையளிப்பு](https://minnal24.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%85%e0%ae%a9%e0%af%81/): இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழ்நாட்டில் இருந்து நன்கொடையாக வழங்கப்பட்ட மனிதாபிமான உதவிப் பொருட்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. 9,000 மெட்ரிக் டன் அரிசி, 50 மெட்ரிக் டன் பால்மா மற்றும் 25 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான மருந்து பொருட்கள் அடங்கிய கப்பல் இன்று ஞாயிற்றுக்கிழமை நாட்டை வந்தடைந்தது. இந்த உதவிப் பொருட்களை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிடம் கையளித்துள்ளார். இதில், அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தன, இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான், பிரதமர் பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்கா ஆகியோரும்  பங்கேற்றனர். மேலும் ஒரு தொகுதி உதவிப்பொருட்கள் இந்தியாவிலிருந்து விரைவில் அனுப்பப்படவுள்ளதாக, இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. - [2மணித்தியாலம் 10 நிமிடங்களுக்கு மட்டும் மின்வெட்டு](https://minnal24.com/2%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-10-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3/): திங்கட்கிழமை முதல் 02மணித்தியாலம் 10 நிமிடங்களுக்கு மின்வெட்டுக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. நாளை 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள கல்விப்பொது தராதர சாதாரண தர பரீட்சையை முன்னிட்டு இரவு நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. - [ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சூனியம் மூலம் வழிநடத்த முயலவில்லை](https://minnal24.com/%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%aa%e0%ae%af-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%aa%e0%ae%95-6/): “ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சூனியம் மூலம் நான்வழிநடத்த முயலவில்லை”, என ஞானாக்கா கண்ணீருடன் தெரிவித்துள்ளார். சண்டே டைம்ஸ் இற்கு அவர் அளித்துள்ள  நேர்காணலில் இவ்வாறு தெரிவித்துள்ளார். மே9 ஆம் திகதி அனுராதபுரத்தில் வன்முறை கும்பல் தனது வீட்டைத் தாக்கிய பின்னர், தனது சொந்த வியர்வை, உழைப்பால் கட்டியெழுப்பப்பட்ட அனைத்தும் இப்போது எரித்து அழிந்துவிட்டதாக, ஞானாக்கா தெரிவித்துள்ளார். நாட்டை ஆட்சி செய்வது குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அறிவுறுத்தல் வழங்கவில்லை, அரசியல் விவகாரங்கள் எதுவும் ஜனாதிபதியுடன் பேசப்படவும் இல்லை. ஜனாதிபதி அல்லது வேறு யாருக்கும் வழங்கிய ஆசீர்வாதங்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் நினைவில் இல்லை, என தெரிவித்துள்ள ஞானக்கா, . இலங்கையின் சமீபத்திய தலைவிதியை அதன் தலைவர்கள் மூலம், குறிப்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு சூனியம் அல்லது சூனியம் மூலம் வழிநடத்த முயன்றதான, கருத்தை மறுத்துள்ளார். ஜனாதிபதியும் அவரது மனைவியும் சுமார் 12-13 வருடங்களுக்கு முன்னர் வருகை தந்துள்ளனர், பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் போராடி […] - [தனியார் எரிபொருள் பவுசர் உரிமையாளர்கள் பொலிஸ் பாதுகாப்பை கோரியுள்ளனர்](https://minnal24.com/%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b5%e0%af%81%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d/): இலங்கை பெற்றோலிய தனியார் எரிபொருள் பவுசர் உரிமையாளர்கள் சங்கம், எரிபொருள் கொண்டு செல்லும் போது பாதுகாப்பு வழங்குமாறு பொலிஸ் மா அதிபரிடம் இன்று ஞாயிற்றுக்கிழமை கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த சில நாட்களாக குறிப்பிட்ட சில குழுக்கள் செய்த பல்வேறு இடையூறுகளை மேற்கோள் காட்டி, எரிபொருள் போக்குவரத்தின் போது பாதுகாப்பு வழங்கப்படாவிட்டால் கடமைக்கு சமூகமளிக்க முடியாது என சங்கத்தின் இணைச் செயலாளர் சாந்த சில்வா பொலிஸ் மா அதிபரிடம் தெரிவித்துள்ளார். - [வீதியில் சென்ற சிறுவனை மோதி இழுத்துச் சென்ற மோட்டார் சைக்கிள்](https://minnal24.com/%e0%ae%b5%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%a9%e0%af%88-%e0%ae%ae/): -மன்னார் நிருபர்- மன்னார் சிறுவர் பூங்கா பிரதான வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் படுகாயம் அடைந்த 07 வயது சிறுவன் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். குறித்த சிறுவன், அவருடைய தாய் உள்ளடங்களாக மூவர் இன்று காலை மன்னார் சிறுவர் பூங்கா பிரதான வீதியூடாக நடந்து சென்ற நிலையில், குறித்த வீதியூடாக அதி வேகமாக மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் குறித்த சிறுவனை மோதியதோடு, சிறிது தூரம் மோட்டார் சைக்கிலில் குறித்த சிறுவன் இழுத்துச் செல்லப்பட்டார். உடனடியாக குறித்த சிறுவன் அப்பகுதியில் சென்றவர்களால் மீட்கப்பட்டு மன்னார் வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டார். விபத்தை ஏற்படுத்திய இளைஞர் அவ்விடத்தில் இருந்து சென்ற நிலையில் தற்போது மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெற்று வருவதாக தெரிய வருகின்றது. இந்த நிலையில் குறித்த சிறுவன் படுகாயம் நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். […] - [21வது திருத்தம் அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்](https://minnal24.com/21%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%b5%e0%af%88/): அரசியலமைப்பின் 21வது திருத்தம் தொடர்பாக நாளை திங்கட்கிழமை அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் என, நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்க முடியாத வகையில் திருத்தம் கொண்டு வரப்படும் என அமைச்சர் தெரிவித்தார். மேலும், தற்போதுள்ள சுயாதீன ஆணையங்களுடன் கூடுதலாக, தேசிய தணிக்கை ஆணையம் மற்றும் கொள்முதல் ஆணையம் ஆகியவை சுயாதீன ஆணையங்களாக திருத்தப்படும். தற்போதுள்ள ஆணைக்குழுக்களின் அதிகாரங்களை மேலும் பலப்படுத்துவதுடன், அவற்றை சுயாதீனமாகவும் ஆக்குவதற்கு அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் முயல்வதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மத்திய வங்கியின் ஆளுநரை அரசியலமைப்பு சபையின் கீழ் கொண்டு வருவதற்கும் புதிய திருத்தம் முன்மொழிகிறது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். - [நாளை இடம்பெறவுள்ள பரீட்சை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%88-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3-%e0%ae%aa%e0%ae%b0%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a/): நாட்டில் நெருக்கடி நிலைமைகளுக்கு மத்தியில் கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை நாளை திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில், பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களை முன்கூட்டியே பரீட்சை மண்டபங்களுக்கு அனுப்பி வைக்குமாறு, பரீட்சைகள் திணைக்களம் பெற்றோரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. எவ்வாறாயினும், ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் பரீட்சை மண்டபத்திற்கு பரீட்சார்த்திகளுக்கு சமூகமளிக்க முடியவில்லையாயின், அதற்கு சலுகை வழங்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். மேலும், பரீட்சார்த்திகள் இரண்டு மணி நேரத்திற்கு முன்னர் பரீட்சை நிலையங்களுக்கு சமூகமளிப்பதால் தேவையற்ற அசௌகரியங்களை தவிர்த்துக்கொள்ள முடியும், எனவும் தெரிவித்தார். பரீட்சையை பாதிப்பின்றி நடத்துவதற்கு ஒத்துழைப்பை வழங்குமாறு கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, போராட்டங்களில் ஈடுபடுவோரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். பரீட்சை இடம்பெறும் தினங்களில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு, இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு […] - [50,000 அமெரிக்க டொலர்களை வைத்திருந்த ஒருவர் கைது](https://minnal24.com/50000-%e0%ae%85%e0%ae%ae%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%9f%e0%af%8a%e0%ae%b2%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%b5%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/): 50,000 அமெரிக்க டொலர்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் 36 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று சனிக்கிழமை இரவு ராஜகிரிய வெலிக்கடை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, இலங்கையர்கள் தமது கைகளில் பணமாக வைத்திருக்கக் கூடிய ஆகக்கூடிய வெளிநாட்டு நாணயத்தின் பெறுமதி 15,000 அமெரிக்கா டொலர்களில் இருந்து 10,000 டொலர்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்திருந்தார். இலங்கையின் அந்நியச் செலாவணிச் சட்டத்தின் கீழ், விதிகளை மீறுவதற்கு எதிராக வைத்திருக்கும் நாணயத் தாள்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும், மூன்று மாதங்களுக்கும் மேலாக அவற்றை வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தெரிவிக்கப்பட்டிருந்தது. - [மன்னார் தாழ்வுபாடு கடற்கரையில் தூய்மையாக்கும் நடவடிக்கை முன்னெடுப்பு](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%af%81%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95/): -மன்னார் நிருபர்- மன்னார் தாழ்வுபாடு கடற்கரையில் இருந்து நடுக்குடா வரையிலான கடற்கரை கரையோர பகுதி தூய்மையாக்கும் நடவடிக்கை இன்று ஞாயிற்றுக்கிழமை  காலை இடம்பெற்றது. மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அவ் அமைப்பின் தலைவர் வி.ஸ்.சிவகரன் தலைமையில் குறித்த தூய்மையாக்கல் நடவடிக்கை இடம் பெற்றது. இதன் போது, மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அருட்தந்தை ஜெயபாலன் குரூஸ் அடிகளார் மற்றும் இளைஞர்கள், யுவதிகள், சிறுவர்கள் கலந்து கொண்டு தாழ்வுபாடு கடற்கரையில் இருந்து நடுக்குடா கடற்கரை வரையிலான கரையோரப்பகுதியில் சிரமதானம் இடம் பெற்றது. இதன் போது கண்ணாடி மற்றும் பிளாஸ்டிக் கழிவுப் பொருட்கள், உள்ளிட்ட கழிவுப்பொருட்கள் அப்பகுதியில் இருந்து அகற்றப்பட்டது. அகற்றப்பட்ட கழிவுப்பொருட்கள் மன்னார் பிரதேச சபையின் உதவியுடன் அப்பகுதியில் இருந்து கொண்டு செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.   - [சமையல் எரிவாயுவை 10000 ரூபாவிற்கும் வாங்க தயாராக இருக்கும் மக்கள்](https://minnal24.com/%e0%ae%9a%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%af%81%e0%ae%b5%e0%af%88-10000-%e0%ae%b0%e0%af%82%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf/): -கல்முனை நிருபர்- நாட்டில் நிலவும் தட்டுப்பாடு காரணமாக சமையல் எரிவாயுவை பெற மக்கள் கடுமையான நெருக்கடியை அனுபவித்து வருகின்றனர். அதனடிப்படையில், இன்று ஞாயிற்றுக்கிழமை காலை முதல் சாய்ந்தமருது பொலிவேரியன் கிராமத்தில் சமையல் எரிவாயு லிற்றோ கேஸ் நிறுவனத்தினால் விநியோகிக்கப்பட்டது. தேவையுடைய மக்கள் வெயிலையும் கவனத்தில் கொள்ளாது நீண்டவரிசையில் நின்று எரிவாயுவை பெற்றுச் செல்கின்றனர். அம்பாறை மாவட்ட விற்பனை விலை (12.5kg) 4970 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருந்தும், இங்கு ஒரு 12.5kg  சமையல் எரிவாயுவை பெற மக்களிடமிருந்து 5000 ரூபாய் அறிவிடப்பட்டது. இது தொடர்பில் சமூக செயற்பாட்டாளர்கள் கேள்வியெழுப்பிய போது, மக்களிடம் மிகுதியை கொடுக்க எங்களிடம் சில்லறை இல்லையென்று பிராந்திய விற்பனை முகவர் தெரிவித்தார். இதனால் பலத்த சலசலப்பு உருவாகியது. மக்களிடம் இருந்து ஒருவருக்கு 30 ரூபாய் வீதம் பகல் கொள்ளையிடப்படும் இந்த பணத்தினால் மொத்தமாக ஒரு பாரிய தொகை இறுதியில் சேரும் என்றும், ஏற்கனவே விலை அதிகரித்திருப்பதை தாங்கமுடியாமல் திணறும் நாங்கள் இப்போது […] - [எரிபொருள் கொள்வனவிற்காய் சீனா மற்றும் இந்தியாவிடம் இருந்து கடன் பெற பேச்சுவார்த்தை](https://minnal24.com/%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%be-2/): எரிபொருள் கொள்வனவு செய்ய சீனா மற்றும் இந்தியாவிடம் இருந்து ஒரு பில்லியன் டொலர் கடன் பெற பேச்சுவார்த்தை ஒன்று தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த ஆண்டு முழுவதும் எரிபொருள் கொள்வனவுக்காக ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை திரட்டும் நோக்கத்துடன், இந்தியா மற்றும் சீனாவுடன் புதிய கடன் பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளை இலங்கை தொடங்கவுள்ளது, என Sunday times செய்தி வெளியிட்டுள்ளது. எரிபொருள் வாங்குவதற்கு இந்தியாவிடமிருந்து இன்னும் 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் மட்டுமே மீதமுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என தெரிவிக்கப்பட்டுள்ளது - [எரிவாயு விநியோகம் தொடர்பில் புதிய செயலி அறிமுகம்](https://minnal24.com/%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%af%e0%af%8b%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa/): சமையல் எரிவாயு விநியோகம் தொடர்பில், புதிய நடவடிக்கை ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக, லிட்ரோ எரிவாயு நிறுவனத்தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அதன்படி, எரிவாயு விநியோகம் மற்றும் எரிவாயு பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை பற்றி, நுகர்வோரையும் விற்பனை முகவர்களையும் தெளிவூட்டுவதற்கான தொலைபேசி செயலியொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக, அவர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் திங்கட்கிழமை அறிமுகப்படுத்தப்படவுள்ள இந்த செயலி மூலம், நுகர்வோரும் விற்பனை முகவர்களும் குறித்த பிரதேசத்தில் பகிர்ந்தளிக்கப்படும் எரிவாயு சிலிண்டர்களின் எண்ணிக்கை பற்றிய சரியான தகவல்களை அறிந்து கொள்ள முடியும், என அவர் மேலும் தெரிவித்துள்ளார். - [மேலதிக வகுப்புக்கள், செயலமர்வுகள் ஆகியவற்றிற்கு இன்று முதல் தடை](https://minnal24.com/%e0%ae%ae%e0%af%87%e0%ae%b2%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af/): 2021ம் ஆண்டுக்கான கல்விப்பொது தராதர சாதாரண தர பரீட்சைகளுக்கான மேலதிக வகுப்புக்கள், செயலமர்வுகள் உள்ளிட்ட அனைத்து கற்பித்தல் நடவடிக்கைகளும் இன்று சனிக்கிழமை முதல் தடை செய்யப்பட்டுள்ளன. கல்விப்பொது தராதர சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் 23 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில், உத்தரவை மீறி மேலதிக வகுப்புக்கள், செயலமர்வுகளை நடத்துவோர் தொடர்பில் ஏதேனும் தகவல் கிடைக்கும் பட்சத்தில், அது குறித்து பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது பரீட்சைகள் திணைக்களத்திற்கோ அறிவிக்குமாறு, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன கேட்டுக்கொண்டுள்ளார்.   - [க.பொ.த.சாதாரண தரப்பரீட்சைக்காக விஷேட நடவடிக்கை](https://minnal24.com/%e0%ae%95-%e0%ae%aa%e0%af%8a-%e0%ae%a4-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a3-%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%af%88-3/): கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை நாளை மறுதினம் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில், பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகள் மற்றும் பரீட்சை பணிக்குழாமினர் பரீட்சை மண்டபங்களுக்கு செல்வதற்காக விஷேட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டீ தர்மசேன தெரிவித்துள்ளார். அதன்படி, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து சாலைகளில் கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகள் மற்றும் பணிக்குழாமினரின் வாகனங்களுக்கான டீசலை விநியோகிக்கும் பணிகள் தற்போது இடம்பெறுவதாக, அவர் தெரிவித்துள்ளார். மேலும், பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியில் உரிய ரயில் சேவைகள் இடம்பெறும் என ரயில் திணைக்களம் அறிவித்துள்ளது. அத்துடன், நாட்டில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் பரீட்சைக்கு செல்வோர் வரிசையில் காத்திருக்காது பெற்றோலை பெற்றுக் கொள்ள வாய்ப்பு வழங்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பொதுமக்களை கோரிக்கை விடுத்துள்ளார்.     - [நாளை முதல் நாடு முழுவதும் விசேட சுற்றிவளைப்பு](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b4%e0%af%81%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae/): நாளை ஞாயிற்றுக்கிழமை முதல் நாடு முழுவதும் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக, பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். பெற்றோல் மற்றும் டீசல் போன்றவற்றை சட்டவிரோதமாக விற்பனை செய்ய பதுக்கி வைத்திருப்போரை கண்டறிய, இவ்வாறு சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக, அவர் மேலும் தெரிவித்துள்ளார். - [கொழும்பு துறைமுகத்தில் 4 எரிபொருள் கப்பல்கள் நங்கூரமிடப்பட்டுள்ளது](https://minnal24.com/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%a4%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-4/): இந்தியாவின் கடன் உதவியில் வழங்கப்படும் எரிபொருள் வழங்கலில், 40,000 மெட்ரிக் தொன் டீசல் கப்பல் இன்று சனிக்கிழமை கொழும்பை வந்தடைந்துள்ளதாக, இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து வந்த டீசல் கப்பலுடன் சேர்த்து தற்போது கொழும்பு துறைமுகத்தில் 4 எரிபொருள் கப்பல்கள் நங்கூரமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த 4 கப்பல்களில் இன்று இரண்டு கப்பல்களுக்கு டொலர் வழங்கப்பட்டு அவற்றிலிருந்து டீசல், பெற்றோல் இறக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. மேலுமொரு எரிபொருள் தாங்கிய கப்பல் இன்னும் 10 நாட்களில் நாட்டை வந்தடையவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது அத்துடன், சமையல் எரிவாயு  கப்பல்கள் இரண்டு நாட்டிற்கு வந்துள்ளன. இவற்றிற்கான 7 மில்லியன் டொலர் நாளை மறுதினம் திங்கட்கிழமை வழங்கப்படவுள்ளது. - [ரயில் கடவையில் விபத்து : 6 பேர் படுகாயம்](https://minnal24.com/%e0%ae%b0%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-6-%e0%ae%aa/): நீர்கொழும்பு – பெரியமுல்ல பகுதியில், இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ரயில் விபத்தில் 6 பேர் படுகாயமடைந்துள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது குறித்த பகுதியில் உள்ள ரயில் கடவையில், ஜீப் ஒன்றுடன் ரயில் மோதுண்டதால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். - [நாளுக்கு நாள் ஏமாற்றமடைந்து கடும் விரக்திக்குள்ளாகும் மக்கள்](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8f%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%ae%e0%ae%9f%e0%af%88%e0%ae%a8/): -நுவரெலியா நிருபர்- நாட்டில் சமையல் எரிவாயு, எரிபொருள் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றுக்கான வரிசை நாளுக்கு நாள் நீளும் நிலையில், இன்று சனிக்கிழமை, மக்களும், வாகன சாரதிகளும் நீண்ட வரிசைகளில் நின்றிருந்தனர். குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் ஹட்டன் மற்றும் கொட்டகலை பகுதிகளில் நீண்டநேரம் வரிசைகளில் காத்திருந்தவர்களில் பலர் ஏமாற்றத்தோடு வெறுங்கையுடன் வீடு திரும்பினர். விரக்தியால் மேலும் சிலர், புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீதும் சரமாரியாக விமர்சனங்களை முன்வைத்தனர். - [இறக்காமத்தின் வறிய குடும்பங்களுக்கான இலவச நீர் மற்றும் மின் இணைப்பு வழங்கி வைப்பு](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae/): -கல்முனை நிருபர்- இறக்காமம் பிரதேச குடும்பங்களில் வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் சுமார் 200க்கும் மேற்பட்ட வறிய குடும்பங்களை இனங்கண்டு அதில் 100 குடும்பங்களுக்கு இலவச நீர் வழங்குதல் மற்றும் வீட்டுக்கான மின் இணைப்பு வசதி  SAY_YES பெமிலிஸ் றிலீப்ஃ ட்ரஸ்ட் நிறுவனத்தினால் வழங்கி வைக்கப்பட்டது. சமூக செயற்பாட்டாளர் எஸ்.எல்.எம் றஜாவினால் குறித்த குடும்பங்கள் இனங்காணப்பட்டு, இறக்காமம் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் அதற்கான நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில்  SAY_YES பெமிலிஸ் றிலீப்ஃ ட்ரஸ்ட் நிறுவனத்தின் செயற்பாட்டாளர் பொறியியலாளர் சீ.கே.நிஷாத், இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம் றஸ்ஷான், உதவித்திட்ட பணிப்பாளர் கே. ஹம்ஸார், திட்டமிடல் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.ஆஹிர், அய்மன் கலை மன்ற தலைவர் சன்சிர், அதன் செயற்பாட்டாளர் பீ.டீ. கலீல் உட்பட ஏனைய உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். - [அம்பாறை மாவட்டத்தின் 32 அணிகள் பங்கு பற்றிய மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டி](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b1%e0%af%88-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-32-%e0%ae%85%e0%ae%a3/): அம்பாறை மாவட்டத்தின் பலம் வாய்ந்த 32 அணிகள் பங்கு பற்றிய அணிக்கு 9 பேர் 5 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டியில், சாய்ந்தமருது விளாஸ்டர் விளையாட்டு கழகம் சம்மாந்துறை அல்- ஹுதா விளையாட்டுக்கழகத்தை வீழ்த்தி சம்பியன் பட்டத்தை தனதாக்கி கொண்டது நற்பிட்டிமுனை ஆர்.கே.ஆர்.விளையாட்டுக்கழக ஏற்பாட்டில் நற்பிட்டிமுனை பொதுவிளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற ஆர்.கே.ஆர். கிண்ண சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியில் சம்மாந்துறை அல்- ஹுதா விளையாட்டுக்கழம் மற்றும் சாய்ந்தமருது விளாஸ்டர் விளையாட்டு கழகம் ஆகிய அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சாய்ந்தமருது விளாஸ்டர் விளையாட்டு கழகம் முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது. அதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய சம்மாந்துறை அல்- ஹுதா விளையாட்டுக் கழம் 05 ஓவர்களை சந்தித்து ஏழு விக்கட்டுக்களை இழந்து 40 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டனர். பதிலுக்கு 41 எனும் வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய சாய்ந்தமருது விளாஸ்டர் விளையாட்டு கழகம் 4.2 ஓவர்களை மட்டுமே சந்தித்து வெற்றியிலைக்கை அடைந்தனர். இந்த […] - [எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குவிந்த மக்கள்](https://minnal24.com/%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%af-5/): -யாழ் நிருபர்- இன்று சனிக்கிழமை எரிபொருளை நிரப்புவதற்கு சித்தங்கேணி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் குவிந்துள்ளனர். இதனால் வீதி போக்குவரத்து முற்றாக தடைப்பட்டது. பின்னர் வட்டுக்கோட்டை பொலிஸ் பொறுப்பதிகாரி சமன் குணதிலகவின் வழிகாட்டலின் கீழ் கடமையில் ஈடுபடுத்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் போக்குவரத்தினை ஓரளவு சீர் செய்தனர். கடந்த சில தினங்களாக எரிபொருள் இல்லாமல் காணப்பட்ட நிலையில் மக்கள் இவ்வாறு குவிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. - [40 நிமிடங்களில் வெறும் 20 நிமிடங்களே கற்பித்தல் இடம்பெறுகின்றது](https://minnal24.com/40-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-20-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%ae/): -கல்முனை நிருபர்- பால்மா, எரிபொருட்கள், கோதுமை மா பண்டங்களுக்கு நிகராக ரியூசன் (மேலதிக வகுப்பு) கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுக் கொண்டே செல்கின்றது. இவ்வதிகரிப்பினால் பல ஏழைப்பெற்றோர்கள் மனம் வெதும்புகின்றார்கள். 03 இற்கு மேற்பட்ட பிள்ளைகள் உள்ள வீட்டின் நிலைமை மிகவும் வேதனைக்குரியதாகவுள்ளது. பிள்ளைகளிற்கான காலை உணவு, பாடக்கட்டணம், போக்குவரத்துக் கொடுப்பனவு, கைச்செலவுக்கான தொகை என்பவற்றிற்காக அதிகமான பெற்றோர்கள் கடுமையாக திண்டாடுகின்றார்கள். மனம் நொந்து வேதனைப்படுகின்றார்கள். எனவே தயவு செய்து ரியூசன் கட்டண அதிகரிப்பை சில காலங்களிற்கு பிற்போடுமாறு ஆசிரியர் சமூகத்தை அன்பாக வேண்டுகின்றேன் என தேசிய முஸ்லிம் கவுன்சிலின் தலைவர் எம்.ஐ.எம்.வலீத் அறிக்கையொன்றினூடாக கேட்டுக்கொண்டுள்ளார். அவரது அறிக்கையில் மேலும், பல ஆசிரியர்கள் அக்கறையுடனும், இலவசமாகவும் இன்றும் சேவை நோக்குடன் கற்பித்தல் பணிகளில் பாடசாலைகளிலும், பிரத்தியேகமாகவும் ஈடுபடுகின்றார்கள். அவ்வாறானவர்களிற்கு விசேட நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவிக்கின்றேன். ஒரு சமூகத்தினது உயர்ச்சிக்கும், வளர்ச்சிக்கும் காத்திரமான பங்களிப்பைச்செய்து வரும் அன்பான ஆசிரிய ஆசிரியைகள் தங்களிடம் கல்வி கற்கும் மாணவர்களுக்கு […] - [நாடு முழுவதும் இதுவரை 1,348 பேர் கைது](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b4%e0%af%81%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%88-1348-%e0%ae%aa%e0%af%87/): நாடு முழுவதும் மே 9 ஆந் திகதி இடம்பெற்ற கலவரம் தொடர்பில் இதுவரையில் 1,348 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அத்துடன், 638 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் 654 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாக, அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். - [நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த அவசரகால சட்டம் இரத்து](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%ae%e0%af%81%e0%ae%b2%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa/): நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டிருந்த அவசரகாலச் சட்டம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு முதல் நீக்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. கடந்த 6ஆம் திகதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் அவசரகால சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டது. அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்துவதும், நடைமுறைப்படுத்துவதும் நாடாளுமன்ற சட்ட விதிகளுக்கு உட்பட்ட நிலையில், அது நிறைவேற்றப்பட்ட 14 நாட்களுக்குள் ஜனாதிபதியால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். எனினும், 14 நாட்களுக்கு மேலாகியும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாத காரணத்தினால் அது இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. - [ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து மேலும் பல அமைச்சு பதவிகள்?](https://minnal24.com/%e0%ae%90%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%95%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b0/): ஐக்கிய மக்கள் சக்தி கட்சியிலிருந்து மேலும் பலர் அமைச்சரவை அமைச்சர் பதவிகளை பெற்றுக்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அக்கட்சியைச் சேர்ந்த சுமார் பத்து பேர் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பார்கள் என தெரிவிக்கப்படுகின்றது. அவர்களில் சிலர் இராஜாங்க அமைச்சர்களாக நியமிக்கப்படுவார்கள், எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. - [இலங்கை தமிழர்கள் இந்தியாவில் உண்ணாவிரத போராட்டம்](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be/): -கிளிநொச்சி நிருபர்- நாட்டில் நிலவிய யுத்தம், இராணுவ அச்சுறுத்தல் மற்றும் அசாதாரண சூழ்நிலைகளால் இந்தியா சென்று சிறப்பு முகாம்களில் எந்த தீர்வுமின்றி தவிக்கும், இலங்கை உறவுகள் தம்மை விடுதலை செய்து தங்கள் குடும்பங்களுடன் சேர்ந்து வாழ வழிசெய்யக்கோரி, திருச்சி மத்திய சிறைச்சாலையின் சிறப்பு முகாமில் நேற்று வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த உண்ணா விரதத்தில் ஈடுபட்டுள்ள பலர் பல வருடங்களாக வழக்குகள் விசாரிக்கப்படாமல் பல ஆண்டுகாலமாக சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் விசா காலம் முடிந்த குற்றச்சாட்டு, கடல் வழியாக சட்டவிரோதமாக இந்தியாவிற்கு வருகைதந்தமை, இந்திய கடவுச்சீட்டு எடுக்க முயன்றமை போன்ற குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்யப்பட்டவர்கள். நீண்ட காலமாக விடுதலை கிடைக்குமா? என்ற ஏக்கத்தோடு கடந்த மூன்று வருடங்களாக தடுத்த வைக்கப்பட்டுள்ளனர். இன்று தங்களை விடுதலை செய்து தங்கள் குடும்பங்களுடன் வாழ வழிசெய்யுமாறு கோரி உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இதன் போது கருத்து வெளியிட்ட அவர்கள், தாம் நீண்ட […] - [பிரித்தானியாவில் நடாத்தப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/): பிரித்தானியாவில் உணர்வுபூர்வமாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடாத்தப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வானது பேரணியாக சென்று பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாக உள்ள திடலில் தமிழீழ தேசிய கொடியேற்றலுடன் S.சிவதர்சன் தலைமையில் பொது நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன. 21ஆம் நூற்றாண்டின் அதியுச்ச இனவழிப்பு இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் இடம்பெற்றிருந்தமையும், முள்ளிவாய்க்காலில் கொத்துகொத்தாக கொலை செய்யப்பட்ட அப்பாவி தமிழ் மக்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்தும் நாளாக மே18 இலங்கை உட்பட பல புலம்பெயர் நாடுகளில் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது. இதனடிப்படையிலேயே, முள்ளிவாய்க்கால் நினைவு தினம் பிரித்தானியா பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உணர்வுபூர்வமாக நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும். - [கல்வி ஊக்குவிப்பு புலமைப் பரிசில் உதவிக்கான அங்குரார்பண நிகழ்வு](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%8a%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%ae%ae%e0%af%88%e0%ae%aa/): -வாழைச்சேனை நிருபர்- மட்டக்களப்பு – கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களில், திறமை இருந்தும் பொருளாதார வசதி குறைவால் சிரமங்களை எதிர்நோக்கும் மாணவர்களை இனங்கண்டு, அவர்களுக்கான கல்வி ஊக்குவிப்பு தொகையாக விசேட புலமைப்பரிசில் வழங்கும் திட்டம் LIFT நிறுவனத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தினூடாக 2023 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தரத்திற்கு தோற்றவுள்ள 20 மாணவர்கள் நன்மையடையவுள்ளனர். ஒரு விசேட புலமைப்பரிசில் பரீட்சை மூலம் இம் மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு, அவர்களது குடும்ப பொருளாதார பின்னணி ஆராயப்பட்டு இத் திட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர். இதன் மூலம் தெரிவு செய்யப்பட்ட ஒவ்வொரு மாணவருக்கும் விசேட வகுப்புகளுக்கு செல்வதற்காக சராசரியாக க.பொ.த சாதாரண தர மாணவர் ஒருவருக்கு 6000 ரூபாவும், க.பொ.த உயர்தர மாணவர் ஒருவருக்கு 6500 ரூபாவும் வீதம் 24 மாதங்களுக்கு அவர்களது பிரத்தியேக வகுப்புத் தேவைகளுக்காக வழங்கப்பட உள்ளது. கல்குடா வலயக்கல்வி அலுவலகத்துடன் இணைந்து செயற்படுத்தப்படவுள்ள இத்திட்டத்திற்கான […] - [மின்துண்டிப்பு தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவித்தல்](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2/): கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு இடம்பெறவுள்ளதால், நாளை ஞாயிற்றுக்கிழமை முதல் எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி வரையான காலப்பகுதியில் மின்துண்டிப்பு அமுல்படுத்தப்படும் விதம் தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, நாளை ஞாயிற்றுக்கிழமை மற்றும் 29ஆம் திகதி ஆகிய தினங்களில் மின்துண்டிப்பு இடம்பெறாது எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி வரையில் குறித்த இரண்டு தினங்கள் தவிர்ந்த ஏனைய நாட்களில் மாலை 6.30க்கு பின்னர் மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது. குறித்த தினங்களில் பரீட்சை இடம்பெறாத வேளையில் மதியம் 12 மணி முதல் மாலை 6.30 வரையிலான காலப்பகுதிக்குள் கைத்தொழில் வலயம் மற்றும் கொழும்பு வர்த்தக நகர வலயம் தவிர்ந்த ஏனைய அனைத்து வலயங்களிலும் 1 மணித்தியாலம் 45 நிமிடங்கள் முதல் 2 மணித்தியாலம் 15 நிமிடங்கள் வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படும். கைத்தொழில் வலயங்களில் காலை 5 மணி முதல் 8 மணி வரையிலும், கொழும்பு வர்த்தக […] - [எரிபொருள் விநியோகத்தை நிறுத்த வேண்டி வரும் : அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை](https://minnal24.com/%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%af%e0%af%8b%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%a8%e0%ae%bf/): எரிபொருள் பௌசர்கள் நிரப்பு நிலையங்களுக்கு செல்லும் போது, ஒரு சில ஒழுங்கமைக்கப்பட்ட சிறு குழுக்கள் பௌசரை தடுத்து நிறுத்தி குழ்ப்பம் ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த குழுக்கள், இவ்வாறு கொண்டு செல்லும் எரிபொருளை, பல்வேறு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இறக்கிச் செல்லுமாறு கோரி மிரட்டுவதுடன், தீ வைக்கப்படும் என அச்சுறுத்தி வருவதாக, முறைப்பாடு கிடைத்துள்ளது என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இந்நிலை தொடர்ந்தால், போக்குவரத்து ஊழியர்களின் பாதுகாப்பிற்காக எரிபொருள் விநியோகத்தை நிறுத்த வேண்டியிருக்கும், என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.   - [தமிழ் நாடு வழங்கும் நிவாரணப் பொருட்கள் நாளை நாட்டை வந்தடையும்](https://minnal24.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/): தமிழ் நாட்டில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட 2 பில்லியன் ரூபா பெறுமதியான முதல் தொகுதி நிவாரணப் பொருட்கள் அடங்கிய கப்பல், நாளை ஞாயிற்றுக்கிழமை நாட்டை வந்தடையும், என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரகம் அறிவித்துள்ளது. குறித்த கப்பலில், 9 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசி, 50 மெற்றிக் தொன் பால்மா மற்றும் 25 மெற்றிக் தொன் மருந்து பொருட்கள் அதில் அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த நிவாரணப் பொருட்கள் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவினால் இலங்கை தரப்பினரிடம் கையளிக்கப்படும், என்பது குறிப்பிடத்தக்கது.   - [தேசிய பாடசாலைகளுக்கு அனுமதி கோரும் விண்ணப்பங்களை வழங்குவது இன்று முதல் இடைநிறுத்தம்](https://minnal24.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%85%e0%ae%a9%e0%af%81/): மாணவர்களை தேசிய பாடசாலைகளுக்கு சேர்ப்பதற்கான அனுமதி கோரும் விண்ணப்பங்களை வழங்குவது இன்று வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பாடசாலை விடுமுறை முடிந்து கொள்கை முடிவுகள் எடுக்கப்பட்ட பின்னர் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என்று அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புதிய அமைச்சர் பதவியேற்றவுடன் அமைச்சு அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சராக அமைச்சர் சுசில் பிரேமஜயத இன்று வெள்ளிக்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. - [வீதியில் வரிசையாக அடுக்கி வைத்துள்ள எரிவாயு கொள்கலன்களினால் ஏற்பட்டுள்ள பிரச்சினை](https://minnal24.com/%e0%ae%b5%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d/): -நுவரெலியா நிருபர்- ஹட்டன் நகரிலுள்ள சமையல் எரிவாயு விற்பனை முகவர் நிலையங்கள் முன்பாக, பல நாட்களாக நீண்ட வரிசைகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள சமையல் எரிவாயு வெற்றுச் சிலிண்டர்களால் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பாதசாரிகள் பெரிதும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். ஹட்டன் நகரில் சமையல் எரிவாயு விநியோகிக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தால் அறிவிக்கப்பட்ட நிலையில், ஹட்டன் நகரிலுள்ள ஹோட்டல் உரிமையாளர்கள், சமையல் எரிவாயு சிலிண்டர்களை நடைபாதையில் நீண்ட தூரத்துக்கு வைத்து, ஒன்றுடன் ஒன்றை கயிற்றால் பிணைத்து கட்டி வைத்துள்ளனர். இதனால் நடைபாதையில் பயணிப்பவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை, ஹட்டன் நகரிலுள்ள சகல எரிவாயு விற்பனை நிலையங்களுக்கு முன்பாகவும், ஹோட்டல் மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் தரகர்களைப் பயன்படுத்தி, சமையல் எரிவாயுவை சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதால், சாதாரண பொதுமக்கள் சமையல் எரிவாயுவை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.   - [யாழ்.ஆரிய குளத்தில் மக்களை மகிழ்விக்க படகு சவாரி](https://minnal24.com/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/): -யாழ் நிருபர்- யாழ் .ஆரிய குளத்திற்கு வருகை தரும் மக்களை மகிழ்விக்க படகு சவாரி நடைமுறைக்கு வருகின்றது. அதன் ஆரம்ப நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது இதனை, யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தார். மாநகர ஆணையாளர் வ.ஜெயசீலன். உள்ளிட்ட மாநகர உறுப்பினர்கள், ஊர்மக்கள் என பலரும் கலந்து கொண்டனர். - [நீதியின் கதவுகள் மெல்ல திறப்பதற்கான ஏது நிலை உருவாகியுள்ளது - சபா குகதாஸ்](https://minnal24.com/%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a4%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%a4/): -யாழ் நிருபர்- மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் 12 ஆண்டுகளின் பின்னர் 13 ஆண்டு நினைவேந்தல் என்றும் இல்லாத வகையில் தென்னிலங்கை சிங்கள சகோதரர்களால் காலிமுகத்திடலில் இம்முறை நிகழ்த்தப்பட்டமை பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதிக்கான ஔிக்கீற்று தென்படுவதை உணர வைத்துள்ளது, என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் அதே நேரம் தொடர்ந்து ராஐபக்ச குடும்பத்திற்கு துதி பாடி அவர்களின் அடாவடிகளை மூடி மறைக்கும் தமிழ் குழுக்களுக்கும் அவர்கள் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் செருப்படியாகவே காலிமுகத்திடல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் சிங்கள மக்களால் நடைபெற்றுள்ளது. கடந்த காலத்தில் குறிப்பாக 2009 முள்ளிவாய்க்காலில் பாரிய தமிழினப் படுகொலையை ராஐபக்ச அரசாங்கம் அரங்கேற்றும் போது, துதி பாடிய தமிழ் குழுக்களுள் அவர்களுடன் இணைந்து பாற்சோறு கொடுத்தும் யாழில் வெடி கெளுத்தி கொண்டாடியவர்கள், விடுதலைப் போராட்டத்தை காட்டிக் கொடுத்தவர்கள், பதவிகளுக்காக தமிழ்த் தேசியத்தை விலை பேசியவர்கள், எல்லோருக்கும் காலிமுகத்திடல் முள்ளிவாய்க்கால் […] - [உலக நீதிக்கான அமைப்பின் சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்ள தெரிவாகியுள்ள மட்டக்களப்பு தமிழர்](https://minnal24.com/%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95-%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d/): நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தராகவும், மட்டக்களப்பு சனசமூக மத்தியஸ்த சபையின் பிரதி தவிசாளராகவும் கடமையாற்றும் வீரச்சந்திரன் குகதாசன் உலக நீதிக்கான அமைப்பின் சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்வதற்குத் தெரிவு செய்யப்பட்டு பயணமாகவுள்ளார். நீதியமைச்சின் மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவினால் மத்தியஸ்த சபை தவிசாளர்கள், சிரேஸ்ட மத்தியஸ்தர்களுக்கென கோரப்பட்டிருந்த விண்ணப்பத்தின் அடிப்படையில் நீதியை அணுகுதல், ஊழல் எதிர்ப்பு, சமவுரிமை, பாரபட்சமின்மை, போன்ற நீதிசார் விடயங்களில் உலகளாவிய ரீதியில் சட்டவாட்சியை ஸ்திரப்படுத்த கொள்கை அளவில் உதவும் அமைப்பான உலக நீதிக்கான அமைப்பின் ஒருங்கிணைப்புடன் பிரிட்டிஸ் கௌன்சில், செடார் அமைப்பின் அனுசரணையுடன் கட்டமைக்கப்பட்ட நேர்முகப்பரீட்சை, அளிக்கையின் அடிப்படையில் 116 நாடுகளின் பிரதிநிதிகள் இதன்போது கலந்து கொள்கின்றனர். இம்மாநாடு எதிர்வரும் 29.05.2022 தொடக்கம் 03.06.2022 வரையில்  தொர்லாந்தில் இடம்பெறவுள்ளது. இவ்வாறு இலங்கையிலிருந்து இம்மாநாட்டில் கலந்து கொள்ளும் 8 பேரில் சிரேஸ்ட மத்தியஸ்தரகளில் ஒருவரான வீ.குகதாசன் மாத்திரமே […] - [மட்டக்களப்பு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/): எமது வீட்டு வாசலை மரண ஒலி வந்து தட்டும் வரை காத்திருக்க வேண்டாமென, அனைவருமாக ஒன்றினைந்து இந்த டெங்கு நோய் தாக்கத்தை கட்டுப்படுத்த முன்வரவேண்டுமென, பிராந்திய சுகாதார பணிப்பாளர் ஜீ.சுகுணன் மட்டக்களப்பு மக்களிடம் உருக்கமான வேண்டுகோள் ஒன்றினை முன்வைத்துள்ளார். மட்டக்களப்பில் டெங்கு தாக்கம் அதிகரித்த வண்ணம் இருப்பதை கருத்திற் கொண்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் ஜீ.சுகுணன் இன்று பாடசாலைகளுக்கு கள விஜயம் ஒன்றினை மேற்கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இலங்கையைப் பொறுத்தவரையில் டெங்கு நோய் தாக்கம் மிக வேகமாக அதிகரித்தவண்ணம் உள்ள நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்திலும் டெங்கு நோய் தாக்கம் அதிகரித்து காணப்படுகின்றது. இதனடிப்படையில் டெங்கு தாக்கம் அதிகமுள்ள மாவட்டமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில், கடந்த 5 மாதங்களுக்குள் 422 பேர் டெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதுடன், 2 இளவயது மரணங்களும் சம்பவித்துள்ளது, மட்டக்களப்பு நகர் பகுதியில் மாத்திரம் 240 பேர் டெங்கு நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனைக் […] - [நாட்டு நிலை பற்றி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நகைச்சுவை](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%aa%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b0/): Sky news சர்வதேச தொலைக்காட்சிக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேர்காணல் ஒன்றை வழங்கியுள்ளார். குறித்த நேர்காணலில் செய்தி தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு நாட்டின் நிலை பற்றி பிரமதர் நகைச்சுவையாக பதிலளித்துள்ளார். தற்போதைய சூழ்நிலையில் சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வது பாதுகாப்பானது என தெரிவிப்பீர்களா?, என பிரதமரிடம் கேட்டதற்கு ஆம், இலங்கையில் சுவாரஸ்யமான விடயங்களை அனுபவிக்க விரும்புபவர்கள் இங்கு வரலாம். அவர்கள் ஆர்ப்பாட்டங்களிலும் கலந்துகொள்ளமுடியும். அவர்கள் ஜனாதிபதியை பதவி விலகுமாறு கோரும் பதாகைகளை ஏந்தலாம், அல்லது பிரதமர் பதவி விலகவேண்டும் என கோரும் பதாகைகளை ஏந்தலாம், அவர்கள் தங்களின் தெரிவுகளை தெரிவு செய்யலாம், என தெரிவித்துள்ளார். மேலும், நாங்கள் மக்கள் விஜயம் செய்வதை விரும்பவில்லை என தெரிவிக்க முடியாது. ஆனால் அந்நியசெலாவணி பற்றாக்குறை ஆர்ப்பாட்டம் அத்தியாவசிய பொருள் தட்டுப்பாடு காரணமாக அவர்கள் இந்த தருணத்தில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள மாட்டார்கள் என்பதை நாங்கள் புரிந்துகொண்டுள்ளோம், என்றும் தெரிவித்துள்ளார். - [ஹரின் பெர்னாண்டோ, மனுஷ நாணயக்காரவின் கட்சி உறுப்புரிமை நீக்கம்](https://minnal24.com/%e0%ae%b9%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%8b-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%81%e0%ae%b7-%e0%ae%a8%e0%ae%be/): புதிய அமைச்சரவையில் அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்ற, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோ, மனுஷ நாணயக்கார ஆகியோரின் கட்சி உறுப்புரிமையை நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார். புதிய அமைச்சரவையில் எந்தவொரு அமைச்சுப் பதவிகளையும் ஏற்காதிருக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்திருந்தது. இந்நிலையில், கட்சி தீர்மானத்தை மீறியமைக்காக அவர்களின் கட்சி உறுப்புரிமையை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார். இன்று வெள்ளிக்கிழமை கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் மேலும் 9 அமைச்சரவை அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றிருந்தனர். இதில், ஐக்கிய மக்கள் சக்தியின் ஹரின் பெர்னாண்டோ சுற்றுலா மற்றும் காணி அமைச்சராகவும், மனுஷ நாணயக்கார தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சராகவும், பதவியேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது - [விசாரணைகளில் இருந்து நாம் ஒதுங்கவில்லை: நாமல் தெரிவிப்பு](https://minnal24.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a3%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%ae/): கோட்டகோகம மீதான தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளில் இருந்து தாங்கள் தப்பிசெல்லமாட்டோம் என தெரிவித்த முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, விசாரணைகளுக்கு பூரண ஆதரவை வழங்குவதாகவும் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் பெயரிடப்பட்ட அனைவரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கோரப்பட்டவாறு சரணடைந்துள்ளனர் அல்லது வாக்குமூலங்களை வழங்கியுள்ளனர் என அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். கொலை, ஆணவக் கொலைகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கட்சி அரசியல் பாகுபாடின்றி சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் எனவும், அவ்வாறு செயற்படாவிட்டால் சட்டம் ஒழுங்கு மற்றும் சமூகம் சீர்குலைந்துவிடும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். வன்முறைச் சம்பவங்களுக்குப் பின்னால் அரசியல் நோக்கத்துடன் வன்முறைச் செயல்களை வழிநடத்தும் ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள் மற்றும் தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்ட இளைஞர்கள் என இரண்டு குழுக்கள் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். “தாக்குதலை வழிநடத்தியவர்களுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும், அதே நேரத்தில் தாக்குதலுக்கு உள்ளான இளைஞர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட வேண்டும்,” என்று அவர் […] - ["நாட்டின் புதிய ஆட்சிக்கான மக்களின் பங்களிப்பு" எனும் தொனிப்பொருளில் கருத்தரங்கு](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/): -யாழ் நிருபர்- நாட்டின் புதிய ஒரு ஆட்சி மலர்வதற்கான மக்களின் பங்களிப்பு எனும் தொனிப்பொருளில் அபிவிருத்திக்கான சமூக அமைப்புகளின் வலையமைப்பு (சொண்ட்) ஏற்பாடு செய்த கருத்தரங்கு திருமறைக்கலாமன்றக் கலைக்கோட்டத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது. இவ் கருத்தரங்கில் நாட்டின் புதிய ஆட்சியை ஏற்படுத்துவதற்கான பொருளாதார அரசியல் நிர்வாகம் மற்றும் சட்டத்துறை ஆகியவற்றில் என்ன மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும், என வளவாளர் கருத்துக்கள் முன்வைக்கப் பட்டது. சட்டத்துறை மாற்றங்கள் தொடர்பில் யாழ் பல்கலைக்கழக சட்ட விரிவுரையாளர் கோசலை மதன், பொருளாதார மாற்றங்கள் தொடர்பில் யாழ் பல்கலைக்கழக முன்னாள் வாழ்நாள் பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை, நிர்வாக மாற்றங்கள் தொடர்பில் முன்னாள் துணைவேந்தர் மோகனதாஸ் மற்றும் அரசியல் விமர்சகர் செல்வின் ஆகியோர் தமது கருத்துக்களை முன்வைத்தனர். கருத்தரங்கில் புத்திஜீவிகள், மதத்தலைவர்கள் கலந்துகொண்டு தமது அபிப்பிராயங்களை முன் வைத்ததுடன், அவர்களின் சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் வளவாளர்கள் பதில் அளித்தனர். - [தமிழ் தேசிய மக்கள் முன்னணியிலிருந்து வடமராட்சி கிழக்கு நிர்வாகிகள் வெளியேற்றம்?](https://minnal24.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9/): -கிளிநொச்சி நிருபர்- தமிழ் தேசிய மக்கள் முன்னணியிலிருந்து வடமராட்சி கிழக்கு நிர்வாகிகள் வெளியேறியுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது. கடந்த மே 17 அன்று முள்ளிவாய்க்கால் நினைவு தாங்கிய ஊர்தியுடன் சென்ற வடமராட்சி கிழக்கு செயற்பாட்டாளர்களுக்கும், பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, குறித்த செயற்பாட்டாளர்கள் ஆவணங்கள் மற்றும் பொருட்களை வீசி விட்டு அங்கிருந்து வெளியேறியதாகவும், நேற்று முன்தினம் முள்ளிவாய்க்கால் சென்றபோது அங்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊர்திக்கு முன்னால் அஞ்சலி செலுத்தப்பட்ட நிலையில் வடமராட்சி கிழக்கு நிர்வாக செயற்பாட்டாளர்கள் பிறிதொரு இடத்தில் தனிமையில் அஞ்சலி செலுத்தியதாகவும் தெரியவருகிறது. இதேவேளை, குறித்த வடமராட்சிக் கிழக்கு மகளிர் அணி தமிழ் தேசிய மக்கள் முன்னணி, கஜேந்திரன் அணியுடன் இணைந்து செயற்படப் போவதில்லை என்றும், செல்வராசா கஜேந்திரன் தங்களிடம் ஒருவகையான பாகுபாட்டை ஏற்படுத்துவதாகவும், மகளிர் உறுப்பினர் ஒருவர் தெரிவித்திருந்தார்.   - [வேகக்கட்டுப்பாட்டை இழந்து மரத்துடன் மோதிய வாகனம்](https://minnal24.com/%e0%ae%b5%e0%af%87%e0%ae%95%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%87%e0%ae%b4%e0%ae%a8-4/): -கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி புளியம்பொக்கனை பகுதியில், இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில், புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்து பரந்தன் நோக்கி பயணித்த கப்ரக வாகனம் வேகட்டுப்பாட்டை இழந்து மரத்துடன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் கப்ரக வாகனம் முற்றாக சேதமடைந்துள்ளதுடன், வாகனத்தில் பயணித்த இருவர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக தருமபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக தருமபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். - [இலங்கைக்கு 1.5 மில்லியன் டொலர்களை அவசரகால நிவாரணமாக வழங்கும் ஜப்பான்](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-1-5-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9f%e0%af%8a/): ஜப்பானிய அரசாங்கம் 1.5 மில்லியன் டொலர்களை அவசரகால நிவாரணமாக இலங்கைக்கு வழங்கவுள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகளின் சர்வதேச சிறுவர் அவசர நிதியம் (UNICEF) மூலம் இந்நிதியை ஜப்பான் இலங்கைக்கு வழங்கவுள்ளது. மேலும், 1.5 மில்லியன் டொலர் பங்களிப்பானது  53,000 கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் 122,000 உடனடித் தேவையுள்ள குழந்தைகள் உட்பட 1.2 மில்லியன் மக்களுக்கு மருந்துகளை வாங்குவதற்கு UNICEF இந்த அவசர நிதியை வழங்கியுள்ளது. - [பரீட்சை கடமைகளுக்கு செல்லவுள்ள அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%b0%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%ae%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d/): கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை கடமைகளுக்கு செல்லவுள்ள அதிகாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும், என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார் அதன்படி, பரீட்சை கடமைகளுக்கு செல்லவுள்ள அதிகாரிகளுக்கு, எதிர்வரும் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரை எரிபொருள் பெற்றுக்கொள்ள முன்னுரிமை வழங்கப்படவுள்ளது. . - [டீசல் விநியோகிக்கப்படும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கும் வாகன சாரதிகள்](https://minnal24.com/%e0%ae%9f%e0%af%80%e0%ae%9a%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%af%e0%af%8b%e0%ae%95%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae/): பசறை நகரிலுள்ள இரண்டு எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு முன்பாகவும், டீசலை பெற்றுக் கொள்வதற்காக வாகன சாரதிகள் வாகனங்களுடன் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். கடந்த மூன்று தினங்களுக்கு முன் பசறை நகரிலுள்ள இரண்டு எரிபொருள் நிரப்பும் நிலையங்களிலும் டீசல் விநியோகிக்கப்பட்டது. இருப்பினும் அன்றைய தினம் வரிசையில் காத்திருந்த சாரதிகள் டீசலை பெற்றுக்கொள்ள முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். அன்றிலிருந்து இரண்டு எரிபொருள் நிரப்பும் நிலையங்களிலும் டீசல் பெற்றோல் இல்லாததால் மூடப்பட்டு இருந்தன. அத்தோடு, இன்று வெள்ளிக்கிழமை எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு டீசல் விநியோகிக்கப்படும் என்ற நம்பிக்கையில் வாகன சாரதிகள் வாகனங்களுடன் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். - [இன்று 50,000 சமையல் எரிவாயு கொள்கலன்கள் விநியோகம்](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-50000-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%af%81-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b3/): இன்று வெள்ளிக்கிழமை நாடு முழுவதும் 50,000 சமையல் எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக, லிட்ரோ நிறுவனம் தெரிவித்துளளது. மேலும், நாளை சனிக்கிழமை 80,000 சமையல் எரிவாயு கொள்கலன்கள் விநியோகிக்கப்படும் என்றும், லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதேவேளை, நாட்டை வந்தடைந்துள்ள 3,900 மெட்ரிக் டன் எரிவாயு தாங்கிய மற்றுமொரு கப்பலில் இருந்து எரிவாயுவை தரையிறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.   - [அமரகீர்த்தி அத்துகோரல கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%95%e0%af%80%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8b%e0%ae%b0%e0%ae%b2-%e0%ae%95%e0%af%8a/): நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்களில் ஒருவரான 29 வயதான பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆதரவாளர்களால் காலி முகத்திடல் போராட்ட களத்தில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. அதனையடுத்து, நிட்டம்புவ பிரதேசத்தில் பதற்றம் ஏற்பட்டிருந்தது. இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டது. நிட்டம்புவ நகரில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற பகுதியிலிருந்து சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலர் ஆகியோர் சடலங்களாக மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது - [எரிவாயு தட்டுப்பாடு காரணமாக சிற்றுண்டி வியாபாரிகள் பாதிப்பு](https://minnal24.com/%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%af%81-%e0%ae%a4%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a3/): -மன்னார் நிருபர்- நாட்டில் தொடர்ச்சியாக ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாடு காரணமாக, மன்னார் மாவட்டத்தில் உள்ள அநேக உணவகங்கள் உட்பட சிற்றுண்டி வியாபார நிலையங்களும் நீண்ட நாட்களாக மூடிய நிலையில் காணப்படுகின்றது. இந்த நிலையில், உணவகங்களில் நாட்கூலி தொழிலாளர்களாக பணிபுரியும் பலர் வேலை இழந்துள்ளதுடன், பலர் சொந்த மாவட்டங்களுக்கு போக முடியாத நிலையில் பணி புரியும் உணவகங்களில் தங்கியுள்ளனர். அதே நேரம், மாலை நேரங்களில் சிற்றுண்டி வியாபாரங்களில் ஈடுபடும் பல வியாபாரிகள் எரிவாயு தட்டுப்பாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வாழ்வாதாரத்தையும் இழந்து வருகின்றனர். சிற்றுண்டிகளை வீடுகளில் இருந்து விறகு அடுப்புக்களில் தயார் செய்ய வேண்டி வருவதாகவும், வீடுகளில் இருந்து தயார் செய்து விற்பனை செய்வதை மக்கள் கொள்வனவு செய்வது குறைந்துள்ளதாகவும், சிற்றுண்டி வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர். எனவே, விரைவில் அரசாங்கம் முன்னுரிமை அடிப்படையில் இவ்வாறான தொழிலாளர்களுக்கு எரிவாயுவை வழங்குமாறும், சிற்றுண்டி வியாபாரிகள் மற்றும் உணவக நாட்கூலி தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். - [மேலும் 9 அமைச்சர்கள் இன்று பதவியேற்பு](https://minnal24.com/%e0%ae%ae%e0%af%87%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-9-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1/): மேலும் சில அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று வெள்ளிக்கிழமை பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர். நிமல் சிறிபால டி சில்வா – துறைமுகங்கள், கப்பற்துறை, விமான சேவை சுசில் பிரேமஜயந்த – கல்வி கெஹெலிய ரம்புக்வெல்ல – சுகாதாரம் ஹரீன்- சுற்றுலா மற்றும் காணி மனுஷ நாணயக்கார- தொழில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு நளின் பெர்னாண்டோ- வர்த்தகம் விஜயதாச ராஜபக்ச – நீதி, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, அரசியலமைப்பு விவகாரம் ரமேஷ் பத்திரன – பொதுநிர்வாகம் - [ஜி7 நாடுகள் இலங்கைக்கு ஆதரவு](https://minnal24.com/%e0%ae%9c%e0%ae%bf7-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%86%e0%ae%a4/): இலங்கைக்கான கடன் நிவாரணம் வழங்குவதற்கான முயற்சிகளுக்கு ஜி7 நாடுகள் ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜேர்மனியில் இடம்பெறுகின்ற உலக வல்லரசுகளின் அமைப்பான ஜி7 நாடுகளின் மாநாட்டில், இணங்கப்பட்ட கடித வரைவு ஒன்றில், இலங்கை பெற்றுள்ள கடன்களுக்கான நிவாரணங்களை வழங்குவதற்கு ஒத்துழைப்பு வழங்க இருப்பதாக நிதியமைச்சர்கள் தெரிவித்ததாக, தெரிவிக்கப்படுகின்றது. மேலும் ஜி7 நாடுகளின் அறிக்கையில், இந்தியப் பெருங்கடல் தேசத்திற்கான நீண்டகால தீர்வுகளைக் கண்டறிவதில் உறுதியாக இருப்பதாகவும், சாத்தியமான கடன் திட்டத்தில் சர்வதேச நாணய நிதியத்துடன் ஆக்கப்பூர்வமாக பேச்சுவார்த்தை நடத்த ஒத்துழைப்பதாகவும் தெரிவித்துள்ளது. - [கோட்டா கோ கமவில் சிகை அலங்கார நிலையம் திறந்து வைப்பு](https://minnal24.com/%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be-%e0%ae%95%e0%af%8b-%e0%ae%95%e0%ae%ae%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-%e0%ae%85%e0%ae%b2%e0%ae%99/): காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள கோட்டா கோ கமவில் சிகை அலங்கரிப்பு நிலையம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. கோட்டா கோ கமவில், வைத்திய நிலையம், நூலகம், சட்ட உதவி மையம், மின்னுற்பத்தி நிலையம் மற்றும் சர்வதேச ஊடக மத்திய நிலையம் போன்ற பல்வேறு வசதிகள் காணப்படுகின்ற நிலையில், தற்போது சிகை அலங்கரிப்பு நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சுமார் ஒன்றரை மாதங்களாக கோட்டா கோ கமவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோர், இங்கு இலவசமாக சிகை அலங்காரத்தை மேற்கொள்ள முடியுமென தெரிவிக்கப்படுகிறது.   - [கல்முனை ரோட்டரி கழகத்தினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%88-%e0%ae%b0%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%b4%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9/): -கல்முனை நிருபர்- வசதிகுறைந்த மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக பிரதேச முக்கியஸ்தர்கள் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை மாணவர்கள் 85 பேருக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு கல்முனை ரோட்டரி கழகத்தின் ஏற்பாட்டில் பாடசாலை அதிபர் எம்.ஐ.எம். இல்யாஸ் தலைமையில் பாடசாலையில் நடைபெற்றது. அவுஸ்திரேலிய வெஸ்டர்ன் கிரீக், கெண்பெர நகர ரோட்டரி கழகத்தின் அனுசரணையில் இடம்பெற்றுவரும் ‘ரோட்டரி கழக மீண்டும் பாடசாலைக்கு திரும்புதல்’ வேலைத்திட்டத்தின் கீழ் இடம்பெற்ற இந்த நிகழ்வில், கல்முனை ரோட்டரி கழக தலைவர் ரோட்டேரியன் எஸ். புஸ்பராஜா, செயலாளர் ரோட்டேரியன் சிவபால சுந்தரம், ரோட்டரி கழக உறுப்பினர்களான ரோட்டேரியன் பொறியியலாளர் கிருஷ்ணமூர்த்தி, ரோட்டேரியன் சிதம்பரநாதன், ரோட்டேரியன் வி.விஜயஷாந்தன், ரோட்டேரியன் திருநாவுக்கரசு, பாடசாலை உதவியதிபர் எம்.ஏ.சி.எல். நஜீம், பகுதித்தலைவர்கள், மாணவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர். ஏறத்தாள 1.8 மில்லியன் ரூபாய் செலவில் 16 பாடசாலைகளுக்கு கல்முனை ரோட்டரி கழகம் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. - [பாடசாலை வந்து காத்திருந்து விட்டு திரும்பி சென்ற மாணவர்கள்](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%af%88-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d/): -கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி மாவட்டத்தில் பல பாடசாலைகளிற்கு வருகை தந்த மாணவர்கள் இன்று நீண்ட நேரம் காத்திருப்பின் பின் வீடு திரும்பியுள்ளனர். இன்று வெள்ளிக்கிழமை பாடசாலை விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், க.பொ.த (சா/த) பரீட்சை கடமைகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் மற்றும் பரீட்சை நிலையங்களான பாடசாலைகளின் அதிபர்கள் கடமைக்கு சமூகமளிக்குமாறு கோரப்பட்டிருந்தது. அனைத்து அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு, இன்று தொடக்கம் முதலாம் தவணை விடுமுறை ஆரம்பமாகின்றது. இரண்டாம் தவணை கற்றல் செயற்பாடுகளுக்காக பாடசாலைகள் எதிர்வரும் ஜூன் மாதம் 6ஆம் திகதி மீள திறக்கப்படும், என கல்வி அமைச்சு தெரிவித்திருந்த நிலையில், இன்று அதிகளவான தூர இடங்களில் இருந்து வந்திருந்த மாணவர்கள் மற்றும் எரிபொருள் தட்டுபாட்டுக்கு மத்தியிலும் பிள்ளைகளை ஏற்றி வந்த பெற்றோர்கள் ஆத்திரமடையும் வகையில் நீண்ட நேர காத்திருப்பின் பின் வீடு திரும்பியுள்ளனர். இவ்வாறு தெளிவற்ற முடிவை அறிவித்த கல்வி அமைச்சு பிள்ளைகளின் பாதுகாப்பை எவ்வாறு உறுதி […] - [மலையத்தில் தொடர்மழையால் ஆபத்தில் சிக்கியுள்ள மக்கள்](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%ae%e0%ae%b4%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d/): -நுவரெலியா நிருபர்- மலையகப் பிரதேசத்தில் தொடர்ச்சியாக காலநிலை சீர்கேட்டின் காரணமாக காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில், தலவாக்கலை ஹேமச்சந்திரா மாவத்தை பகுதியில் நேற்று வியாழக்கிழமை காலை 6.30 மணியளவில் தொடர் குடியிருப்புகள் உள்ள தொகுதியின் பின்புறத்தில் 50 அடி உயரத்திலுள்ள மதில் சரிந்து விழுந்ததில் நான்கு குடியிருப்புகள் சேதமாகி உள்ளது இதன்போது, ஒரு வீட்டில் இருந்த 53 வயதுடைய தாய் ஒருவருக்கு கைகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளதோடு, குறித்த தாய் உடனடியாக தலவாக்கலை தோட்டத்தில் இயங்கும் மருத்துவ நிலையத்தில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். அத்தோடு, கர்ப்பிணித் தாயொருவர் எவ்வித ஆபத்துக்கள் இன்றி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார். வீடுகளில் சுவர்கள் இடிந்து விழுந்துள்ளதோடு,வீடுகளில் இருந்த பெறுமதிமிக்க பொருட்களும் மண் மேட்டில் புதைந்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து இப்பகுதியில் மழை பெய்து வருவதால் அப்பகுதியில் மண் சரிந்து விழுவதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றன. […] - [இன்றைய வானிலை முன்னறிவித்தல்](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%88%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf-8/): நாட்டின் பல இடங்களில் மழையுடனான வானிலை நிலவும் என, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும். கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு மாகாணத்திலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் பல சந்தர்ப்பங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. - [தீ வைப்புடன் தொடர்புடையவர் கைது](https://minnal24.com/%e0%ae%a4%e0%af%80-%e0%ae%b5%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%ae%b5/): மிரிஹான சம்பவத்தின் போது பேருந்துக்கு தீ வைத்தமை தொடர்பில் 42 வயதுடைய நபர் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். நுகேகொட, கங்கொடவில பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் தெரணியகல பிரதேசத்தில் வைத்து இன்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த மார்ச் 31ஆம் திகதி சந்தேக நபர் இராணுவ பேருந்திற்கு தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. முன்னதாக, சந்தேக நபரை கைது செய்ய பொதுமக்கள் உதவி கோரி அவரது உருவப்பட ஓவியத்தை பொலிசார் வெளியிட்டிருந்தனர். இந்த நிலையில் பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் நாளை வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். - [தனிச்சிங்களத்தில் வெளியிடப்படும் சுற்றறிக்கைகள் : இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கண்டனம்](https://minnal24.com/%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af/): -யாழ் நிருபர்- காலம் காலமாக இலங்கையில் உள்ள அரச அமைச்சுக்கள் திணைக்களங்கள் தம்மால் வெளியிடப்படும் சுற்றறிக்கைகள், அனுப்பப்படும் கடிதங்கள் போன்றவற்றை தனிச்சிங்கள மொழிகளில் அனுப்புவது இப்போது இன்னும் அதிகரித்துள்ளது. அண்மை நாட்களில் அவசரமாக நாட்டு மக்களுக்கு அறிவிக்கவேண்டிய விடயங்களை தனிச் சிங்கள மொழிகளில் சுற்றறிக்கைகளாகவும், அறிவித்தல்களாகவும் வெளியிடுவது இந்நாட்டில் சிங்களவர்கள் மட்டுமே வாழ்வது என்பதனை அர்த்தப்படுத்துகின்றது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்காக இன்று பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளருக்கு கடிதமூலம் தயவான வேண்டுகோள் ஒன்று இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளரால் முன் வைக்கப்பட்டுள்ளது. இனியும் இதுபோன்ற செயற்பாடுகள் தொடருமாக இருந்தால் சட்டரீதியான அணுகுமுறைகளைப் பின்பற்ற வேண்டிய சூழ்நிலை உருவாகும் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சரா.புவனேஸ்வரன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளார். - [க.பொ.த.சாதாரண தரப் பரீட்சை நேரத்தில் மின்வெட்டு இல்லை](https://minnal24.com/%e0%ae%95-%e0%ae%aa%e0%af%8a-%e0%ae%a4-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a3-%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b0%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%af%88-8/): கல்விப் பொதுத் தராதார சாதாரண தரப் பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியிலும், குறித்த காலத்தில் மாலை 6.30 க்கு பின்னரும் தடையின்றி மின்சாரத்தை விநியோகிக்க, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளதாக, ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அதற்கமைய, எதிர்வரும் 22ஆம் திகதி முதல் எதிர்வரும் முதலாம் திகதிவரையான காலப்பகுதிக்குள்  பரீட்சை இடம்பெறும் காலத்திலும், மாலை 6 மணியின் பின்னரும் மின்தடையை அமுலாக்க வேண்டாம் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபையை அறிவுறுத்தியுள்ளது. இதற்கு அவசியமான எரிபொருள் மற்றும் நீர் உள்ளிட்ட வளங்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு  சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களுக்கு  பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.   - [இன்று முதல் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a9%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%9a/): அனைத்து அரச பாடசாலைகளுக்கும் இன்று வியாழக்கிழமை தொடக்கம் முதலாம் தவணை விடுமுறை ஆரம்பமாவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் இந்த ஆண்டுக்கான முதலாம் தவணை விடுமுறை நாளை வெள்ளிக்கிழமை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு முன்னதாக தெரிவித்திருந்தது. இந்நிலையில், முதலாம் தவணை விடுமுறை இன்று முதல் ஆரம்பமாவதாக கல்வி அமைச்சு தற்போது அறிவித்துள்ளது.   - [கொள்ளை சம்பவம் : ரத்தவெள்ளத்தில் கிடந்த கணவன், மனைவி](https://minnal24.com/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%88-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%af%8d/): கிளிநொச்சியில் கொள்ளையர்களால் தாக்கப்பட்டு கணவன், மனைவி ஆகிய இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில், கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புளியம்போக்கணை பகுதியில் இன்று வியாழக்கிழமை அதிகாலை 1.00 மணியளவில் மூன்று கொள்ளையர்கள் வீடொன்றினுள் புகுந்து வீட்டிலிருந்தவர்களை தாக்கியுள்ளனர். இதன்போது, வீட்டில் இருந்த கணவன் மனைவி ஆகியோர் மீது, கத்தியால் கை பகுதியில் வெட்டியும், உலக்கையால் தாக்கியும் காயப்படுத்தியுள்ளனர். அத்துடன், வீட்டிலிருந்த பல பொருட்களை சேதப்படுத்திவிட்டு, கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இந் நிலையில், வீட்டிளிருந்த சிறுவர்களின் சத்தம் கேட்டு அயலவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபொழுது, வீட்டிலிருந்தவர்கள் ரத்த வெள்ளத்தில் இருப்பதை அவதானித்து இருவரையும் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். இச்சம்பவத்தில், கொள்ளையிடப்பட்ட பொருட்கள் தொடர்பில் இதுவரை தகவல்கள் எதுவும் தெரியவரவில்லை. கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளi முன்னெடுத்துள்ளனர். - [பாணின் விலை அதிகரிப்பு](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-2/): இன்று வியாழக்கிழமை நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் 450 கிராம் பாணின் விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக, அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்க தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார். அத்துடன், ஏனைய வெதுப்பக உற்பத்திகளின் விலைகளும் 10 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்புடைய செய்தி:- https://www.minnal24.com/?p=76019 - [மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a4%e0%af%88%e0%ae%aa%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b1/): -மன்னார் நிருபர்- மறைந்த மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் வணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்களின் முதலாம் ஆண்டு நினைவை முன்னிட்டு வட மாகாண ரீதியாக 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி இன்று சனிக்கிழமை  காலை 10 மணியளவில் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமானது. மன்னார் மாவட்ட சிரேஷ்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் முதல் நாளான இன்று  சனிக்கிழமை காலை குறித்த போட்டியை மன்னார் மறைமாவட்டத்தின் முன்னை நாள் குரு முதல்வர் அருட்தந்தை விக்டர் சோசை அடிகளார் வைபவ ரீதியாக குறித்த போட்டியை ஆரம்பித்து வைத்தார். குறித்த இரு நாள் சுற்றுப்போட்டியில் 10 கழகங்கள் கலந்து கொள்ள உள்ளது. இன்றைய முதல் போட்டியில் மன்னார் மற்றும் பூநகரி விளையாட்டு கழகங்களுக்கு இடையில் இடம் பெற்று வருகின்றது. இறுதி நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை  மாலை 4 மணிக்கு மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் […] - [வீடொன்றிலிருந்து இரு பெண்களின் சடலம் மீட்பு](https://minnal24.com/%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3/): வீடொன்றில் வயோதிப பெண்கள் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடி, சங்கரத்தை என்ற பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்தே இவ்வாறு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 76 மற்றும் 73 வயதுடைய குறித்த இரண்டு வயோதிப பெண்கள் மாத்திரமே அவ் வீட்டில் வசித்து வந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. மாதாந்த உதவிப் பணம் பெற்றுக்கொள்ளாததால் கிராம அலுவலகர் வீடு தேடிச் சென்ற போதே இருவரும் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். - [திருச்சி சிறப்பு முகாமில் இலங்கை தமிழர்கள் உண்ணாவிரத போராட்டம் : 7 பேரின் நிலை கவலைக்கிடம்](https://minnal24.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf-2/): தமிழ்நாடு-திருச்சி சிறப்பு முகாமில் உள்ள இலங்கை தமிழர்கள் பத்துப் பேரில் ஏழுபேர் கவலைக்கிடமான நிலையில், திருச்சி அரசினர் மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 20ஆந் முதல் திருச்சி சிறப்பு முகாமில் தம்மை தமது குடும்பங்களுடன் சேர்த்து வைக்குமாறு கோரி, உண்ணாவிரத போராட்டத்தை பத்து இலங்கை தமிழர்கள் ஆரம்பித்திருந்தனர். அவர்களில் ஏழு பேரது உடல் நிலை மோசமடைந்த நிலையில், அவர்கள் ஏழு பேரும் திருச்சி அரசு மருத்துவ மனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. - [தலை சிதறிய நிலையில் வெளிநாட்டவர் ஒருவரின் சடலம் மீட்பு](https://minnal24.com/%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf/): வவுனியா நகரில் பகுதியில் வர்த்தக நிலையத்திற்கு முன்பாக தலை சிதறிய நிலையில் வெளிநாட்டவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வவுனியா பஐார் வீதியிலுள்ள வர்த்தக நிலையத்தின் முன்பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை 11.30மணியளவில் தலை சிதறிய நிலையில் இரத்த வெள்ளத்தில் ஒருவர் கிடந்துள்ளார். அதனை அவதானித்த அவ்விடத்தில் நின்ற மக்கள் உடனடியாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்தனர். எனினும் அவர் முன்பதாகவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர் தெரிவித்துள்ளனர் இவ்விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்த நிலையில், குறித்த நபர் வர்த்தக நிலையத்தின் மேற்பகுதியில் விடுதி அமைந்துள்ள மூன்றாம் மாடி கட்டிடத்திலிருந்து கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளமை விசாணைகளின் ஆரம்ப கட்டத்தில் தெரியவந்துள்ளது. குறித்த நபரின் மரணம் கொலையா? அல்லது தற்காெலையா? என்ற கோணத்தில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இந்தியாவை சேர்ந்த 36 வயதுடைய சன்டிப் மலிக் என்ற நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார் சடலம் […] - [IPL இறுதிப்போட்டி : குஜராத் டைட்டன்ஸ்-ராஜஸ்தான் றோயல்ஸ் மோதுகின்றன](https://minnal24.com/ipl-%e0%ae%87%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%95%e0%af%81%e0%ae%9c%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%9f/): இந்தியன் ப்றீமியர் லீக் தொடரின் (IPL) இறுதிப் போட்டிக்கு ராஜஸ்தான் றோயல்ஸ் அணி தகுதி பெற்றது. நாளை ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ள இறுதிப் போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணியுடன், ராஜஸ்தான் றோயல்ஸ் அணி  மோதவுள்ளது. றோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் அணியுடன் நேற்று வெள்ளிக்கிழமை இரவு  இடம்பெற்ற இரண்டாம் தகுதிகாண் போட்டியில், ராஜஸ்தான் றோயல்ஸ் அணி 7 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய றோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் அணி 20 ஓவர்களில் 8 விக்கட்டுக்களை இழந்து 157 ஓட்டங்களைப் பெற்றது. இதையடுத்து, 158 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய  ராஜஸ்தான் றோயல்ஸ் அணி, 18.1 ஓவர்களில் 3 விக்கட்டுக்களை இழந்து 161 ஓட்டங்களைப் பெற்று வெற்றியடைந்தது. 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது ஐ.பி.எல் தொடரில் சாம்பியனான இராஜஸ்தான் றோயல்ஸ் அணி, அதன் பின்னர் இந்த ஆண்டே மீண்டும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.   - [திங்கட்கிழமை முதல், எரிவாயு விநியோகிக்கப்படும்](https://minnal24.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%ae%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b5/): விற்பனை நிலையங்களில் எரிவாயுவுக்காக வரிசைகளில் காத்திருப்பதை தவிர்க்குமாறு பொது மக்களைக் கோரியுள்ள லிற்றோ எரிவாயு நிறுவனம், எதிர்வரும் திங்கட்கிழமை முதல், எரிவாயு விநியோகத்தை முன்னெடுக்கக்கூடியதாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது. இதுவரை , இலங்கையை வந்தடையவிருந்த 3,500 மெட்ரிக் தொன் எரிவாயு தாங்கிய கப்பல், நாட்டுக்கு வருவதற்கு மேலும் இரு நாட்கள் தாமதமாகும் என அறிவிக்கப்பட்டமையே இதற்கு காரணம் என லிற்றோ அறிவித்துள்ளது. கடந்த 3 நாட்களாக லிற்றோ நிறுவனத்தினால் எரிவாயு விநியோகம் இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையிலும், பொதுமக்கள் எரிவாயு கொள்கலன்களை பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிசைகளில் காத்திருந்தாக தெரிவிக்கப்படுகின்றது. - [இரண்டு வாரங்களில் 104 பில்லியன் அச்சடிப்பு?](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81/): இரண்டு வாரங்களில் மாத்திரம் மேலும் 104 பில்லியன் ரூபா நாணயத்தாள்களை அச்சிட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி கடந்த உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அரசாங்க செலவினங்களை ஈடுசெய்ய மேலும் ஒரு இலட்சம் கோடி ரூபாவை அச்சிட வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ள பின்னணியில், கடந்த மே 11ஆம் திகதிக்கும் மே 24ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் மத்திய வங்கி இந்தத் தொகையை அச்சிட்டுள்ளது. ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய பிரதமர், எதிர்வரும் மாதங்களில் நாட்டின் பணவீக்கம் 40% ஐ தாண்டும் எனச் சுட்டிக்காட்டியிருந்தார். - [நாளாந்தம் 400 முதல் 500 மில்லியன் ரூபாய் வரை நாட்டுக்கு நட்டம்](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-400-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-500-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af/): கொழும்பில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் காரணமாக நாளாந்தம் 400 முதல் 500 மில்லியன் ரூபாய் வரை நாட்டுக்கு நட்டம் ஏற்படுவதாக தெரியவந்துள்ளது. மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் போக்குவரத்து மற்றும் விநியோக முகாமைத்துவ பிரிவின் சிரேஷ்ட பேராசிரியர் அமல் குமாரகே இதனை தெரிவித்துள்ளார். இந்த வாகனங்கள் பாராளுமன்ற வீதி, கண்டி வீதி, காலி வீதி, ஹைலெவல் வீதி, ஹொரண வீதி, தெமட்டகொட – வெல்லம்பிட்டிய வீதி, நாவல – நாரஹேன்பிட்டி வீதி, ஒருகொடவத்தை – அம்பத்தளை வீதி, கிரிமண்டல மாவத்தை, ஹேகித்த – மட்டக்குளிய வீதி, லோ லெவல் ஆகியவற்றின் ஊடாக கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கின்றன. இவற்றில் பெரும்பாலான வாகனங்கள் காலி வீதி, கண்டி வீதி, நீர்கொழும்பு வீதி மற்றும் ஹைலெவல் வீதி வழியாக கொழும்புக்குள் பிரவேசிக்கின்றன. மோட்டார் சைக்கிள்கள் உட்பட சுமார் 9 இலட்சம் வாகனங்கள் இந்த வீதிகள் ஊடாக நாளாந்தம் கொழும்புக்குள் பிரவேசிப்பதாகவும் தெரியவந்துள்ளது. இதில் 3 இலட்சத்து 14 ஆயிரத்து […] - [புகைத்தல் பாவனையால் இலங்கையில் நாளாந்தம் 55 பேர் உயிரிழப்பு](https://minnal24.com/%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d/): இலங்கையில் புகைத்தல் பாவனையின் காரணமாக நாளாந்தம் 55 பேர் உயிரிழப்பதாக, மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது. அதன்படி, வருடாந்தம் இலங்கையில் சுமார் 20,000 பேர் உயிரிழப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சிகரெட் தயாரிப்பதற்கு உலகளாவிய ரீதியில் சுமார் 600 பில்லியன் மரங்கள் வருடாந்தம் வெட்டப்படுகின்றன. சுமார் 84 பில்லியன் தொன் காபன் டயொக்சைட் துணிக்கைகள் சூழலில் சேர்வதனால் புவியின் வெப்பநிலை அதிகரிக்கப்படுகின்றது. மேலும் வருடாந்தம் சிகரெட் தயாரிக்க சுமார் 22,000 பில்லியன் லீற்றர் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. புகையிலை உற்பத்தியினால் 2 மில்லியன் டொன் கழிவுகள் தேங்குகின்றன. நாட்டில் அனைத்து அத்தியாவசியமான பொருட்களின் விலைகளும் பாரிய அளவில் அதிகரித்த போதும், சிகரெட்டிற்கான விலை மிகவும் குறைவான சதவீதத்திலேயே அதிகரிக்கப்பட்டிருக்கின்றது. தற்போதைய பணவீக்கத்திற்கு ஏற்ப சிகரெட் விலை அதிகரிகரிக்கப்படவில்லை, என மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. - [இரண்டு மாதங்களுக்கு பின்னர் மீண்டும் ஆரம்பம்](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d/): சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலைய பணிகள் சுமார் இரண்டு மாதங்களுக்கு பின்னர் இன்று வெள்ளிக்கிழமை முதல் மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மசகு எண்ணெய் பற்றாக்குறை காரணமாக, சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள், கடந்த மார்ச் மாதம் 20ஆம் திகதி நிறுத்தப்பட்டன. இதையடுத்து, சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலைய பணிகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ட்விட்டர் பதிவொன்றில் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், நாட்டை வந்தடைந்துள்ள எரிபொருள் கப்பலில் இருந்து இன்றைய தினம் எரிபொருளை தரையிறக்கும் பணிகள் இடம்பெறவுள்ளன. - [விமல் வீரவன்ஸ மனைவி மேன்முறையீடு](https://minnal24.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b8-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%87%e0%ae%a9%e0%af%8d/): விமல் வீரவன்ஸ மனைவி சஷி வீரவன்சவுக்கு கடவுச்சீட்டு முறைகேடு தொடர்பான வழக்கில் வழங்கப்பட்ட 2 வருட கடூழிய சிறைத் தண்டனையை எதிர்த்து சஷி வீரவன்ச மேன்முறையீடு செய்துள்ளார். அதற்கமைய, அவரை பிணையில் விடுவிக்குமாறு அவரது சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கையை எதிர்வரும் மே 30ஆம் திகதி பரிசீலிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் திகதி குறிப்பிட்டுள்ளது. குறித்த பிணை மனு இன்று வெள்ளிக்கிழமை கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷண கெகுனவலவின் உத்தியோகபூர்வ அறையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது நீதவான் குறித்த உத்தரவை வழங்கியுள்ளார். போலித் தகவல்களை சமர்ப்பித்து சட்டவிரோதமாக இராஜதந்திர கடவுச்சீட்டை வைத்திருந்த குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் சஷி வீரவன்சவுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனையும் ரூ. 100,000 அபராதத்தையும் விதித்ததுடன், குறித்த தொகையை செலுத்தாவிடின் மேலும் 6 மாத சிறைத் தண்டனை விதிக்கப்படுவதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போது, சஷி வீரவன்சவின் மேன்முறையீடு எதிர்வரும்; 30ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள […] - [நன்கொடையாக மருந்துவ பொருட்களுடன் மண்ணெண்ணெய் வழங்கியது இந்தியா](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95-%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81/): இந்திய அரசாங்கத்தால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட ஒரு தொகுதி மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்களை பதில் இந்திய உயர்ஸ்தானிகர் வினோத்கேஜேக்கப் , சுகாதார அமைச்சர் கெஹலியரம்புக் வெல்லவிடம் இன்று வெள்ளிக்கிழமை கையளித்தள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலய ஊடகப்பிரிவு விடுத்தள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 25 தொன்களுக்கும் அதிக நிறையுடைய இத்தொகுதியானது கிட்டத்தட்ட 260 மில்லியன் இலங்கை ரூபா பெறுமதியுடைய தென மதிப்பிடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் செயலாளர் ஜானக சந்த்ரகுப்தாவும் இதன்போது கலந்துக்கொண்டார். இதனை துரிதமாக விநியோகிப்பதற்காக இந்திய கடற்படைக்குச் சொந்தமானதும் நேரடியாக தரையிறங்கல் வசதியுடையதுமான, 5600 தொன்நிறை கொண்ட கரியால் கப்பலானதுசாகர் IX பணியின் ஓர் அங்கமாக சேவையில் அமர்த்தப்பட்டிருந்தது. மருத்துவப்பொருட்களுக்கு மேலதிகமாக இலங்கை மீனவர்களின் பயன்பாட்டுக்காக மண்ணெய்யும் இக்கப்பல் மூலமாக தருவிக்கப்பட்டுள்ளது. அடுத்துவரும் நாட்களில் இலங்கை மீன்பிடித்துறைமுக கூட்டுத்தாபனம் ஊடாக இந்த மண்ணெய் பயனாளிகளுக்கு விநியோகிக்கப்படவுள்ளது. ஊடகப்பிரிவு - [விமானப்படை தளபதி - அமெரிக்க தூதுவருக்கிடையில் சந்திப்பு](https://minnal24.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b3%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%ae%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95/): இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரனவை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் ஆகியோருக்கிடையில் இன்று வெள்ளிக்கிழமை சந்திப்பொன்று இடம்பெற்றது. இலங்கை விமானப்படை தலைமை காரியாலயத்தில் இடம்பெற்ற இந்த உத்தியோகப்பூர்வ சந்திப்பினையடுத்து, நினைவு சின்னங்கள் பரிமாறப்பட்டன. - [பிரதமர் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிவிப்பு](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%8a%e0%ae%9f%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81/): அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெனியான செய்தி உண்மைக்குப் புறம்பானது என பிரதமர் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரச ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்துவதற்கு தீர்மானித்துள்ளதாக உண்மைக்குப் புறம்பானவை. சமர்ப்பிக்கப்படவிருக்கும் இடைக்கால வரவுசெலவுத்திட்டத்தில் நிவாரணங்கள் வழங்கப்படவுள்ளது. அதே நேரம், சுகாதாரம் மற்றும் கல்வியை தவிர அனைத்து அமைச்சுக்களுக்குமான ஒதுக்கீடுகள் குறைக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. - [உலகளவில் பொருளாதார வீழ்ச்சி ஏற்படும்](https://minnal24.com/%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%b3%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b4%e0%af%8d%e0%ae%9a/): உலகளவில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளதாக உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். சமீபத்தில் அமெரிக்க வர்த்தக சபையுடனான சந்திப்பில் பேசிய உலக வங்கித் தலைவர், ரஷ்ய-உக்ரைன் போர் நிலைமை இதில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். உணவு, எரிசக்தி மற்றும் உரங்களின் விலைகள் கடுமையாக உயர்வதால் உலகப் பொருளாதாரச் சரிவு மேலும் அதிகரிக்கக்கூடும் .   அவ்வாறானதொரு நிலைமையை தடுப்பது மிகவும் கடினமானது . சீனாவில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய கொரோனா நோய்த் தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே உலகின் நான்காவது பெரிய நாடான ஜேர்மனியின் பொருளாதாரம் மந்தமடைந்துள்ளதாகவும் உலக வங்கியின் தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். - [எமது மீனவர்களின் கருத்துக்களை ஒட்டியே எங்களுடைய முடிவுகள் அமையும்](https://minnal24.com/%e0%ae%8e%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81/): -கிளிநொச்சி நிருபர்- மீனவர்களின் கருத்துக்களை அறிந்துகொண்ட பின்னரே கச்சத்தீவு விடயம் பற்றி தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு அறிவிக்கப்படும், என கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா  தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு விஜயம் மேற்கொண்ட இந்திய பிரதமர் மோடியிடம் தமிழக முதலமைச்சர் கச்சத்தீவை மீட்பதற்குரிய பொருத்தமான நேரம் இதுவென கோரிக்கை விடுத்திருந்தார், எனவே இது தொடர்பில் தமிழரசு கட்சியின் நிலைப்பாடு என்ன என வினவிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், இது இரண்டு நாடுகளின் உடன்படிக்கை இந்த நிலையில் கச்சத்தீவு எங்களுடைய மீனவர்களின் நலன்களுக்கு சாதகமாக இருக்குமானால், எங்களுடைய மீனவர்களின் நலன்களை ஒட்டி இந்திய அரசுடன் பேசவேண்டும. அதற்கு முன்னதாக கச்சத்தீவை இந்தியா பொறுப்பேற்க வேண்டும் என்ற தமிழக முதலமைச்சரின் கருத்து தொடர்பில் நாம் முதலில் எங்களுடைய மீனவர்களின் கருத்துகளை அறிய வேண்டும், அவர்களின் கருத்துக்களை ஒட்டியே எங்களுடைய முடிவுகள் அமையும் அதற்கு முன்னதாக எழுந்தமானமாக கருத்துக்களை கூற முடியாது அத்தோடு, […] - [240 லீற்றர் பெற்றோலுடன் ஒருவர் கைது](https://minnal24.com/240-%e0%ae%b2%e0%af%80%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%8b%e0%ae%b2%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81/): மடூல்சீமை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பிட்டமாறுவை பகுதியில் 240 லீற்றர் பெற்றோலுடன் ஒருவர் கைது  செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மடூல்சீமை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பிட்டமாறுவை பகுதியில் வியாபார நிலையம் ஒன்றில் அதிக விலைக்கு பெற்றோல் விற்பனை செய்யப்படுவதாக மடூல்சீமை பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து உடன் சம்பவ இடத்திற்கு விரைந்து மடுல்சீமை பொலிஸார் சுற்றிவளைப்பினை மேற்கொண்டனர். இதன் போது குறித்த வியாபார நிலையத்திலிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 20 லீற்றர் பெற்றோல் கொள்கலன்கள் 12 மீட்கப்பட்டதோடு, மொத்தமாக 240 லீற்றர் பெற்றோலை கைப்பற்றிய பொலிஸார் 50 வயதுடைய நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர். குறித்த சந்தேக நபர் பிட்டமாறுவ பகுதியைச் சேர்ந்த சோமசிரி நிவச ரடகொம்வன என்பவராவார். குறித்த சந்தேக நபரை நாளைசனிக்கிழமை பதுளை நீதிவான் முன்னிலையில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மடூல்சீமை பொலிஸார் தெரிவித்தனர். - [வாழைச்சேனையில் வடிசாராயத்துடன் 19 வயது இளைஞன் கைது](https://minnal24.com/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%87%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%ae%be%e0%ae%af/): -வாழைச்சேனை நிருபர்- மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் உள்ள மீராவோடை தீவுப் பகுதியில் வாழைச்சேனை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, சட்டவிரோத வடிசாராய உற்பத்தியில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் கோடா எனப்படும் மதுசாரமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது, கோடா அடங்கிய 04 பரல்களுடன் 02 வெற்றுபரல்கள் மற்றும் உற்பத்தி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்திய பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்போது 74375 லீற்றர் கோடா கைப்பற்றப்பட்டள்ளது. மட்டக்களப்பு பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலினையடுத்து, வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வசந்த பண்டாரவின் ஆலோசனைக்கமைய, உப பொலிஸ் பரிசோதகர் ஜீ.ஆர்.எஸ்.அமரபந்துவின் வழிகாட்டலில், மீராவோடை பகுதிக்கு சென்று சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன்போது, சந்தேகத்தின் பேரில் 19 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 74375 லீற்றர் கோடா கைப்பற்றப்பட்டள்ளது. அத்துடன் மதுசார உற்பத்தி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்திய பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைப்பற்றப்பட்ட பொருட்கள் மற்றும் சந்தேக நபரினை வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றில் […] - [சிறுநீர் கழிவிலிருந்து தயாரிக்கப்படும் பீர்](https://minnal24.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4/): சிங்கப்பூரில் மதுபான நிறுவனம் ஒன்று ‘Newbrew’ என்ற புதிய பிராண்டை உருவாக்கி சிறுநீர் கழிவில் இருந்து பீர் தயாரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நீர் மேலாண்மை தொடர்பாக விழிப்புணர்வு மேற்கொள்வதற்காகவே இத்தாயாரிப்பை மேற்கொண்டுள்ளதாக குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இவ்வாறு தயாரிக்கப்பட்டுள்ள பீர் ஆனது ‘Newater’ எனப்படும் நீரைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இந்த நீர் கழிவு மற்றும் சிறுநீரில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட உயர் தரம் வாய்ந்த நீராகும். இந்த ‘Newbrew’ என்ற புதிய பிராண்டில் 95 சதவீத தயாரிப்புகள் இந்த ‘Newater’ நீரில் இருந்து தான் தயாரிக்கப்படுகிறது. இ இது சர்வதேச பாதுகாப்பு தரத்துடன் கூடியதாகவும் பீர் தயாரிப்பு ஏற்ப தூய்மையானதாகவும் உள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நீரைக் கொண்டு தயாரிக்கப்படும் பீரில் தேன், பார்லி, மோல்ட், ஈஸ்ட் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் சேர்க்கப்படுவதாகவும், சிங்கப்பூரில் உள்ள கடைகள் மற்றும் பார்களில் இந்த பீர் விற்பனைக்கு வர உள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. - [இலங்கை மத்திய வங்கியின் நாணய சபை உறுப்பினராக அந்தோனி நிஹால் பொன்சேகா நியமனம்](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-4/): இலங்கை மத்திய வங்கியின் நாணய சபையின் உறுப்பினராக அந்தோனி நிஹால் பொன்சேகா நேற்று வியாழக்கிழமை முதல் நாடாளுமன்ற சபையினால் நியமிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் தெரிவித்துள்ளார். - [அத்தியாவசிய உணவுப்பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b5%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81-2/): எதிர்காலத்தில் சந்தையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும், என அத்தியாவசிய உணவுப்பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்களின் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள கொள்கலன்கள் விடுவிக்கப்படாமையே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. சுமார் 300 கொள்கலன்கள் இவ்வாறு விடுவிக்கப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன என்றும், உடனடியாக விடுவிக்கப்படாவிட்டால் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும், என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்தக் கொள்கலன்களை விடுவிக்க அரசாங்கம் இதுவரையில் மாற்று வழியை முன்வைக்கவில்லை என அந்த சங்கத்தின் செயலாளர் ஜி.இளமைநாதன் தெரிவித்துள்ளார். - [இலங்கையின் நிலையில் பாகிஸ்தான் : IMF இன் உதவியை நாடுகிறது](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf/): பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மத்திய வங்கியில் திரவ வெளிநாட்டு நாணய கையிருப்பு சுமார் 10 பில்லியன் டொலராக குறைந்துள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிதி இன்னும் இரண்டு மாத இறக்குமதி செலவிற்கு மட்டுமே போதுமானதாக இருப்பதால், பாக்கிஸ்தான் இலங்கையை போன்ற நிலைக்கு தள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடி 6 பில்லியன் டொலர் கடன் திட்டத்தை பெறுவதற்கு பாகிஸ்தான் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர், என அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. பெற்றோல் மற்றும் டீசல் விலை லீற்றருக்கு ரூ.30 (பாகிஸ்தான் ரூபாய்) உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி இன்று வெள்ளிக்கிழமை முதல் இஸ்லாமாபாத்தில் ஒரு லீற்றர் பெற்றோல் ரூ.179.86 ஆகவும், டீசல் ரூ.174.15 ஆகவும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. மக்கள் பட்டினி கிடக்கும் அளவிற்கு மோசமடைந்துள்ளதாக, அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ ஜர்தாரி தெரிவித்துள்ளார். - [பிரான்ஸ் அரசு வழங்கியுள்ள மருந்து பொருட்களை வைத்தியசாலைகளுக்கு விநியோகிக்கும் நடவடிக்கை](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%b3%e0%af%8d/): பிரான்ஸ் அரசு இலங்கைக்கு நன்கொடையாக 300000 யூரோ மதிப்புள்ள மருந்துப் பொருட்கள் வழங்கியுள்ளது. குறித்த மருந்து பொருட்கள் நாட்டிற்கு வந்து சேர்ந்துள்ள நிலையில், நாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கும் அனுப்புவதற்கான நடவடிக்கைகளை, சுகாதார அமைச்சின் அதிகாரிகள் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. - [விமல் வீரவன்சவின் மனைவிக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை](https://minnal24.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%99%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95/): போலி ஆவணங்களை கொண்டு கடவுச்சீட்டை தயாரித்ததாக குற்றச்சாட்டில், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவங்சவுக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு விசாரணை இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இது தொடர்பில் விசாரணை செய்த, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தின் தலைமை நீதவான்  புத்திக ஸ்ரீ ராகலவினால் 2 வருட சிறைத்தண்டனை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அத்துடன், ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. குறித்த அபராத தொகையை செலுத்தத் தவறினால்  இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனைக்கு மேலதிகமாக  ஆறு மாதகால சிறைத் தண்டனையை விதித்து, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. - [தமிழ்நாட்டு முதல்வரிடம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விடுத்துள்ள கோரிக்கை](https://minnal24.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d/): -பதுளை நிருபர்- இலங்கை மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைத்துவிட்டு, சிறுபான்மையின மக்களின் உரிமைகளை பறிப்பதற்கு துணை போக வேண்டாம், என தமிழ்நாட்டு முதல்வரிடம் பதுளை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் T.V.சென்னன் கோரிக்கை விடுத்துள்ளார். குறித்த கோரிக்கையில் அவர், கச்சைத்தீவை மீளப்பெறுமாறு இந்திய பிரதமரிடம் தமிழ்நாட்டு முதல்வர் மு.க‌.ஸ்டாலின் நேற்று கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். அன்று இருந்த இலங்கை தலைவர் J.R.ஜெயவர்தனவும், இந்திய பிரதமர் ரஜிவ்காந்தியும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரமே கச்சைத்தீவு இலங்கைக்கு கொடுக்கப்பட்டது. அதேபோல் இலங்கையின் 13 ம் திருத்தசட்டம் இலங்கை சிறுபான்மையின மக்களுக்காக செய்துகொண்ட ஒரு ஒப்பந்தமாகும். இருப்பினும் இலங்கையில் பெரும்பான்மை இன தலைவர்களினால் இந்த 13 ம் சரத்து நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதை நடைமுறைப்படுத்துமாறு இலங்கை சிறுபான்மையின தலைவர்களும் தமிழ் மக்களும் இந்தியாவிடம் வலியுறுத்தி வருகின்றனர். மேலும், நீங்கள் கச்சைத்தீவை மீள பெற வேண்டும் என இந்திய பிரதமரிடம் கூறுவதனால், இலங்கை பெரும்பான்மை இன தலைவர்களினால் […] - [எதிர்வரும் இரண்டு வாரங்களில் எரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு](https://minnal24.com/%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95/): நாட்டின் தற்போதைய நிலவரப்படி, எதிர்வரும் இரண்டு வாரங்களில் எரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக, ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் அழைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார். இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தற்போது குறைந்த அளவிலேயே எரிபொருளை வெளியிடுவதாகவும், வாகனங்களுக்கு எரிபொருள் வழங்குவதையும் மட்டுப்படுத்தியுள்ளதாகவும், அவர் தெரிவித்துள்ளார். - [மன்னாரில் மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி நாளை ஆரம்பம்](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a4%e0%af%88%e0%ae%aa%e0%ae%a8/): -மன்னார் நிருபர்- மறைந்த மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் வணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசப் ஆண்டகையின் முதலாம் ஆண்டு நினைவை முன்னிட்டு வட மாகாண ரீதியாக 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி நாளை சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாக உள்ளது. மன்னார் மாவட்ட சிரேஷ்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தினால் நடத்தப்படும் மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி யின் இறுதி நிகழ்வு நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை  மாலை இடம் பெற்றும். குறித்த இரு நாள் சுற்றுப்போட்டியில் 10 கழகங்கள் கலந்து கொள்ள உள்ளது. இறுதி நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை  மாலை 4 மணிக்கு மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இடம் பெறும். குறித்த நிகழ்வில் விருந்தினர்களாக மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை பி.கிறிஸ்து நாயகம் அடிகளார், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மெல் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொள்ள உள்ளமை […] - [சம்பள உயர்வு குறித்த தகவலை பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது](https://minnal24.com/%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b3-%e0%ae%89%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%81-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a4%e0%ae%95%e0%ae%b5/): பொதுத்துறை ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தும் முடிவை இன்னும் எடுக்கவில்லை, என பிரதமர் தெரிவித்துள்ளார். அதன்படி, அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு குறித்து ஊடகங்களில் வெளியான செய்தியை பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது. சுகாதாரம் மற்றும் கல்விக்காக எதிர்பார்க்கும் அனைத்து அமைச்சுகளுக்கான ஒதுக்கீட்டைக் குறைக்கும் அதே வேளையில், இடைக்கால வரவு செலவுத் திட்டம் நிவாரணம் வழங்கும் என பிரதமரின் அலுவலக ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. தொடர்புடைய செய்தி:- https://www.minnal24.com/?p=76830&fbclid=IwAR227popAEFqKcXy66a6bsWObIr1LfgLDEA1J8ju-tqgKsqc6RhSyd302ak   - [நாட்டில் கையிருப்பில் உள்ள அத்தியாவசிய உணவு பொருட்களின் தொகை குறித்து கணக்கிடப்படுகின்றது](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b3/): நாட்டின் கையிருப்பில் உள்ள, அத்தியாவசிய உணவுப் பொருட்களின் தொகை குறித்து கணக்கிடப்பட்டு வருவதாக, சந்தை வணிக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் முகங்கொடுக்க வேண்டியுள்ள உணவு நெருக்கடிக்கு தயார்படுத்தல் மற்றும் திட்டமிடல் என்பன குறித்து  ஜனாதிபதியுடன் எதிர்வரும் 2ஆம் திகதி விசேட கலந்துரையாடல் ஒன்று நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்தக் கணக்கெடுப்பு நிறைவடைந்த பின்னர், நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட வேண்டிய அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களின் தொகை குறித்து தீர்மானிக்கப்படும், என சந்தை  வணிக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.   - [3 இலட்சத்திற்கு விற்கப்பட்ட மோட்டார் சைக்கிள் தற்போது 8 இலட்சம்](https://minnal24.com/3-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa/): இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலைமையில் அத்தியாவசிய பொருட்களைப் போன்றே புதிய வாகனங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது 3 லட்சத்திற்கு விற்கப்பட்ட சாதாரண ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிளின் விலை தற்போது ரூ. 8 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேவேளை முன்னணி கார்களின் விலையும் 60 முதல் 90 லட்சம் ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இருசக்கர வாகனம் மற்றும் கார்களின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. - [நாட்டின் பல பாகங்களில் மழையுடனான வானிலை](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b2-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae-2/): நாட்டின் பல பாகங்களில், இன்று வெள்ளிக்கிழமை மழையுடனான வானிலை நிலவும், என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி, ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகிறது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன்கூடிய மழை பெய்யும். மேலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும், மணிக்கு 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும், என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. - [மக்கள் வங்கி கடன்கள் 54,000 கோடி ரூபா நிலுவையில்](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-54000-%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f/): மக்கள் வங்கியினால் அறவிடப்படாமல் நிலுவையில் இருக்கும் கடன்களின் தொகை 54,000 கோடி ரூபா, என பாராளுமன்ற பொது நிறுவன குழு(கோப்) தலைவர் கலாநிதி சரித்த ஹேரத் தெரிவித்துள்ளார். ஒரு மாத காலத்திற்குள், இந்த கடன்கள் எவ்வாறு மதிப்பீடு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளன என்பது தொடர்பிலும், இந்த கடன்களை வழங்கும் அனுமதியில் யாருடைய தலையீடுகள் உள்ளன என்பது தொடர்பிலும், விபரங்கள் வழங்கப்பட வேண்டுமென, கோப் தலைவர், மக்கள் வங்கியின் தலைவர் சுஜீவ ராஜபக்ஷவிற்கு அறிவுறுத்தியுள்ளார். 2018, 2019 மற்றும் தற்போதைய மக்கள் வங்கியின் நிலமை தொடர்பான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் இலங்கை கடன்களை தீர்க்க கூடிய இந்த பாரிய தொகை கடன்கள் செலுத்தப்படாத நிலையில் அல்லது நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பதாக கூறப்பட்டுள்ள நிலையிலேயே, பாராளுமன்றத்தில் நடைபெற்ற கோப் குழு கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. - [இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 10வது சர்வதேச ஆய்வரங்கு](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d/): -கல்முனை நிருபர்- இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 10வது சர்வதேச ஆய்வரங்கு புதன்கிழமை பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் – அரபு மொழி பீடத்தின் கேட்போர் கூடத்தில் உபவேந்தர் பேராசிரியர் ஏ. றமீஸ் தலைமையில் ‘சமகால சவால்களை எதிர்கொள்வதற்கான பல்துறைசார் ஆய்வு’ எனும் தொனிப்பொருளில் இடம்பெற்றது. இவ்வாய்வரங்கில் சர்வதேச மற்றும் தேசிய பேராளார்கள் பலரும் கலந்துகொண்டனர். பல்துறையினையும் ஊடறுத்துச் செல்லும் சுமார் 60 இற்கு மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் ஆய்வரங்கில் சமர்ப்பிக்கப்பட்டன. ஆய்வரங்கின் இணைப்பாளர் பேராசிரியர் ஏ.ஜௌபர் இம்மகாநாட்டினை நெறிப்படுத்தியதுடன் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ஏ.றமீஸ் அவர்களின் தொடக்க உரையுடன் அங்காரா இல்டின் பயாசிட் பல்கலைக்கழக பேராசிரியர் பாதிஹ் மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் செய்ட் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஹபீபுல் ஹொங்கர் ஆகியோர் மகாநாட்டின் பிரதான உரைகளை நிகழ்த்தினர். சமகாலத்தில் உலகம் எதிர்கொள்ளும் நெருக்கடிகளுக்கு பல்துறைசார் ஆராய்ச்சி அணுகுமுறையினை கையாள்வதன் அவசியம், உலகமயமாதல் செயன்முறையில் ஏற்பட்டு வரும் புதிய மாற்றங்கள் குறித்தும் இவர்களது உரைகள் கவனம் […] - [குமார வெல்கம மீதான தாக்குதல் தொடர்பில் இருவர் கைது](https://minnal24.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/): நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம கொட்டாவ பகுதியில் வைத்து கடந்த 9ஆம் திகதி தாக்குதலுக்குள்ளானார். மேலும், அவர் பயணித்த வாகனம் தீக்கிரையாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, கொட்டாவ பிரதேசத்தில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.   - [தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று விசேட கலந்துரையாடல்](https://minnal24.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a3%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2/): நாட்டில் நிலவும் தற்போதைய நெருக்கடி நிலை குறித்த விசேட கலந்துரையாடல் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் இடம்பெறும், என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். இந்த விசேட கலந்துரையாடலுக்காக தேர்தல்கள் ஆணைக்குழுவின் அனைத்து அங்கத்தவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். - [இலங்கைக்கு ஆதரவளிப்பதை IMF உறுதிப்படுத்தியுள்ளது](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%86%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%88-imf/): தற்போதுள்ள நெருக்கடியான நேரத்தில் இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கான உறுதிப்பாட்டை சர்வதேச நாணய நிதியம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. சர்வதேச நாணய நிதிய ஆதரவு வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கைக்கு உறுதியான நடவடிக்கைகளை வகுக்கப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. IMF ஊழியர்கள் இலங்கைக்கான மெய்நிகர் பணியை முடித்துக் கொண்டு, பொருளாதார மற்றும் அரசியல் நிலைமையை மிக நெருக்கமாக தொடர்ந்து கண்காணித்து, உறுதியான நடவடிக்கைகளை உருவாக்குவார்கள். சர்வதேச நாணய நிதிய குழுவொன்று இலங்கை அதிகாரிகளுடன் மே 9-24 வரை கடன் வழங்கும் ஏற்பாட்டின் மூலம் ஒரு பொருளாதார வேலைத்திட்டத்தில் ஒரு மெய்நிகர் பணியை நடத்தியது, என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. - [வாகனங்களை கண்காணிக்க புதிய செயலி](https://minnal24.com/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95%e0%ae%a9%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4/): எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனங்களைக் கண்காணிக்கவும், நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுடன் தரவுகளைப் பகிர்ந்து கொள்ளவும் செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக, எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இலங்கை காவல்துறையின் தகவல் தொழில்நுட்பத் திணைக்களத்தினால் உருவாக்கப்பட்ட இந்தச் செயலி தற்போது பல இடங்களில் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. நுகர்வோரின் வாகன இலக்கத் தகடு விவரங்கள் குறித்த செயலியில் உள்ளெடுக்கப்படும். எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வரும் வாகனங்களின் இலக்கத் தகடு எண் செயலியில் உள்ளெடுக்கப்பட்டவுடன், அதே வாகனம் ஒரே நாளில் வேறு ஏதேனும் நிலையத்திலிருந்து எரிபொருளைப் பெற்றுக்கொண்டதா? மற்றும் வாகனத்திற்கு எரிபொருள் நிரப்பப்பட்ட அளவு ஆகியவற்றை அது அறிவிக்கும், என அமைச்சர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார். - [ஹஜ் பயண ஏற்பாடுகள் அமைப்பினர் அமைச்சர் ஹாபிஸ் நஸீருடன் சந்திப்பு](https://minnal24.com/%e0%ae%b9%e0%ae%9c%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%a3-%e0%ae%8f%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%aa%e0%af%8d/): -வாழைச்சேனை நிருபர்- புனித ஹஜ் பயண ஏற்பாடுகள் அமைப்பினர்  சுற்றாடல்துறை அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்டை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அமைச்சு அலுவலகத்தில் நடந்த இச்சந்திப்பில், இம்முறை ஹஜ் பயண ஏற்பாடுகளைச் செய்வதற்கான வழிவகைகளை செய்வது பற்றியும், இதிலுள்ள தடங்கல்களை களைவது குறித்தும் அமைச்சருடன் கலந்துரையாடப்பட்டது. கடந்த இரண்டு வருடங்களாக புனித ஹஜ்ஜுக்கு இலங்கையிலிருந்து எவரும் செல்லவில்லை. இந்நிலையில், இம்முறை 1585 பேருக்கு ஹஜ்கடமையை நிறைவேற்ற வாய்ப்புக் கிடைத்துள்ளது. எனினும், நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடி உள்ளிட்ட சில விடயங்களால், பயண ஏற்பாடுகளில் ஏற்பட்டுள்ள தடங்கல்களுக்கு தீர்வுகாண்பது பற்றியே அமைச்சருடன் கலந்துரையாடப்பபட்டது. பயண கட்டணங்களை டொலரில் செலுத்த வேண்டியுள்ளதால், மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் மற்றும் கொரோனா தடுப்பூசிகள் ஏற்றுதல் உள்ளிட்டவற்றை அரசின் அனுமதியுடன் ஏற்பாடு செய்து தருமாறு அமைச்சரைச் சந்தித்த, ஹஜ் பயண ஏற்பாடுகள் அமைப்பினர் கேட்டுக் கொண்டனர். இந்தப் பேச்சு வார்த்தையில் பாராளுமன்ற உறுப்பினர்களான முஸ்ர்ரப், அலிசப்ரி ஆகியோரும் உடனிருந்தனர். […] - [கல்முனையில் சீன தூதரகத்தினால் விளையாட்டு உபகரணங்களும், உலருணவுகளும் வழங்கி வைப்பு](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%af%80%e0%ae%a9-%e0%ae%a4%e0%af%82%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/): -கல்முனை நிருபர்- சீன-இலங்கை தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 65ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் முகமாக சீன தூதரகத்தினால் பல்வேறு விடயங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதன் ஒருகட்டமாக அம்பாறை மாவட்ட உதைப்பாந்தாட்ட கழகங்களுக்கான உதைப்பந்து விளையாட்டு பொருட்களும், பாதணியும் வழங்கும் நிகழ்வும், வறுமைக்கோட்டுக்குள் உள்ள குடும்பங்களுக்கான உலருணவு பொருட்கள் வழங்கி வைக்கும் நிகழ்வும், ஸ்போர்ட்ஸ் பர்ஸ்ட் பௌண்டசனின் ஏற்பாட்டில் கல்முனை தனியார் மண்டபத்தில் அமைப்பின் இணைத்தவிசாளர் ஏ.ஜி.எம். அன்வர் நௌசாத் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில், இலங்கைக்கான சீன தூதுவர்  ஷீ ஜன்ஹொங், அவரது பாரியார் ஜின் ஜியாங் ஆகியோர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு தேவையுடைய மக்களுக்கு உணவுப்பொருட்களையும், விளையாட்டு கழகங்களுக்கான பந்து மற்றும் பாதணிகளை கையளித்தனர். இந்நிகழ்வில், கல்முனை மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி ஏ.எம். ரக்கிப், கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மதநாயக்க, கல்முனை மாநகர சபை பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர், கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள், கல்முனை […] - [மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சினால் கவனம் செலுத்தப்பட்டுள்ளது](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b5%e0%af%81/): பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சினால் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக , கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். பெற்றோர்கள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கும் வகையில் பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட வேண்டுமென தாம் உறுதியாக நம்புவதாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் தெரிவித்துள்ளார். கல்வித்துறையில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு முறையான வழிமுறையின்றி செயற்படுவதே காரணம் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். - [மோட்டார் சைக்கிள் பாலத்துடன் மோதுண்டு விபத்து : ஒருவர் உயிரிழப்பு](https://minnal24.com/%e0%ae%ae%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/): இலுப்பைக்கடவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெள்ளாங்குளம் பதியில் நேற்று புதன்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் இருவர் பயணித்த வேளை, வெள்ளாங்குளம் பகுதியிலுள்ள பாலத்துடன் மோதுண்டதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் படுகாயமடைந்த நிலையில் முழங்காவில் வைத்தியசாலையில்’அனுமதிக்கப்பட்டனர். பின்னர் இருவரில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பொழுது, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் வெள்ளாங்குளம் பகுதியைச் சேர்ந்த கோபிராஜ் (வயது 22) என்பவராவார். உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. மற்றையவர் முழங்காவில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் தொடர்பாக இலுப்பைக்கடவை பொலிஸார் மேலதிக விசாரனைகளை முன்னெடுத்துள்ளனர். - [நாளையும் சமையல் எரிவாயு விநியோகம் இடம்பெறாது](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%af%81/): நாளை வெள்ளிக்கிழமையும் சமையல் எரிவாயு விநியோகம் இடம்பெறாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த 3 நாட்களாக லிட்ரோ நிறுவனத்தினால் எரிவாயு விநியோகம் இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் நாளையும் குறித்த பணிகள் இடம்பெறாது, என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே, எரிவாயு விநியோக நிலையங்களுக்கு முன்னால் வரிசையில் நிற்க வேண்டாம் எனவும் மக்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. - [உலக வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை](https://minnal24.com/%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3-%e0%ae%8e%e0%ae%9a/): உக்ரைன்-ரஷ்யா போர் காரணமாக, உணவு, எரிசக்தி மற்றும் உரம் என்பனவற்றின் விலைகளில் ஏற்பட்டுள்ள தாக்கம், உலகளாவிய ரீதியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என உலக வங்கி எச்சரித்துள்ளது. நேற்று புதன்கிழமை அமெரிக்காவில்  இடம்பெற்ற வணிக நிகழ்வு ஒன்றில், கருத்து தெரிவித்துள்ள உலக வங்கியின் தலைவர் டேவிட் மெல்பாஸ் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். மேலும், சீனாவில் தொடர்ச்சியான கொரோனா வைரஸ் முடக்கமானது இந்த தாக்க நிலை குறித்த கவலைகளை மேலும் அதிகரிக்கின்றது, எனவும் அவர் தெரிவித்துள்ளார். எரிசக்தி விலைகள் இரட்டிப்பாகும் என்ற கவலையே, இந்தத் தாக்க நிலையை தூண்டுவதற்கு போதுமானதாகும், இந்தத் தாக்க நிலையை எவ்வாறு தவிர்க்கப்போகிறோம் என்பது கடிமானதாகும், என அவர் தெரிவித்துள்ளார். - [அரச ஊழியர்களின் மாதாந்த சம்பளத்தை உடனடியாக அதிகரிக்க தீர்மானம்](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a-%e0%ae%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4/): அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவை எதிர்கொள்ளும் வகையில் நிவாரண வரவு செலவுத் திட்டத்தில் இருந்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அரச ஊழியர்களின் மாதாந்த சம்பளத்தை அதிகரிக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கான வரவு செலவு திட்ட வரைபை தயாரிக்கும் அதிகாரிகளுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த வரவு செலவுத் திட்டத்தை முன்வைக்கும் போது பிரதமர் தனியார் துறையினருக்கும் சம்பளத்தை அதிகரிக்குமாறும் கோர உள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. - [யாழில் 1 இலட்சத்து 6420 பேருக்கு அரசின் உதவிப்பணம் வழங்கப்படும்](https://minnal24.com/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-1-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-6420-%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d/): யாழ்.மாவட்டத்தில் குறைந்த வருமானம் பெறும் 1 லட்சத்து 6420 குடும்பங்களுக்கு, மே, யூன் மாதங்களுக்கான அரசாங்கத்தின் உதவிப் பணம் வழங்கப்படவுள்ளதாக, யாழ்.மாவட்டச் செயலர் க.மகேசன் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்டச் செயலகத்தில் நேற்று புதன்கிழமை மாலை ஊடகங்களை சந்தித்து கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் தெரிவிக்கையில், வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு உதவிப் பணம் வழங்கும் திட்டத்தை அரசாங்கம் அறிமுகம் செய்துள்ளது. அதன்படி யாழ்.மாவட்டத்தில் 78 ஆயிரத்து 442 சமுர்த்தி பெறும் குடும்பங்களுக்கும், 27978 வறுமைப்பட்ட குடும்பங்களுமாக சேர்த்து 1 லட்சத்து 6420 குடும்பங்களுக்கு இந்த உதவிப் பணம் வழங்கப்படும். அதற்கான பணிகளை சமுர்த்தி திணைக்களம் மேற்கொண்டுள்ளது. மேலும், எரிபொருள் தட்டுப்பாட்டினால் எமது மாவட்டத்தில் கடற் றொழிலாளர்கள் அதிகம் பாதிக்கப்பட்ட நிலையில், அவர்களும் இந்த உதவி வழங்கும் திட்டத்தில் உள்வாங்கப்படுவார்கள், என்றார். - [றோல்ஸ் மற்றும் பட்டிஸ் ஒன்றின் விலை 100 ரூபா](https://minnal24.com/%e0%ae%b1%e0%af%8b%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%92/): நாட்டில் அனைத்து சிற்றுணவகங்களிலும், சிற்றுண்டிகளின் விலைகள் மீண்டும் பாரிய அளவில் அதிகரித்துள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது. எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஆகியவை இந்த விலை அதிகரிப்பிற்கு காரணம், என தெரிவிக்கப்படுகின்றது அதன்படி, முட்டை ரொட்டி மற்றும் தோசை என்பனவற்றின் விலை 100 ரூபா பரோட்டாவின் விலை 50 ரூபா கறியுடன் முட்டை ரொட்டி ஒன்றின் விலை 150 ரூபா கறியுடன் 3 பரோட்டாவின் விலை 200 ரூபா அப்பம் ஒன்றின் விலை 50 ரூபா முட்டை அப்பத்தின் விலை 100 ரூபா தேநீரின் விலை 50 ரூபா பால் தேநீரின் விலை 100 ரூபா கறியுடன் அரை இறாத்தல் பாணின் விலை 170 ரூபா என அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் றோல்ஸ், பட்டிஸ், மரக்கறி ரொட்டி, முட்டை பனிஸ் மற்றும் சீனி சம்பல் பனிஸ் உள்ளிட்ட சிற்றுண்டிகளின் விலை 100 ரூபா வரையில் அதிகரிக்க சிற்றுணவக உரிமையாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும், […] - [டொலரின் இன்றைய பெறுமதி](https://minnal24.com/%e0%ae%9f%e0%af%8a%e0%ae%b2%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%88%e0%ae%af-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf/): இலங்கை மத்திய வங்கி இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் இன்றைய விற்பனைப் பெறுமதி 364 ரூபா 69 சதமாகவும், கொள்முதல் பெறுமதி 354 ரூபா 72 சதமாகவும், பதிவாகியுள்ளது. - [உலகளவில் 219 பேருக்கு மங்கி பொக்ஸ் நோய்](https://minnal24.com/%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%b3%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-219-%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf/): பிரித்தானியா, ஸ்பெயின், போர்த்துக்கல் ஆகிய நாடுகளில் மங்கி பொக்ஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.. மங்கி பொக்ஸ் நோய் தொற்றினால் உலகளவில் இதுவரை 219 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. எனினும், இந்த வைரஸ் மக்களை பெரியளவில் பாதிக்காது என சுகாதாரத்துறை பிரிவினர் தெரிவிக்கின்றனர். - [ஆப்கானிஸ்தானில் இருவேறு இடங்களில் குண்டுத் தாக்குதல் : 14 பேர் பலி](https://minnal24.com/%e0%ae%86%e0%ae%aa%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%af%87%e0%ae%b1%e0%af%81/): ஆப்கானிஸ்தானில் இருவேறு இடங்களில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தலைநகர் காபூலில் உள்ள பள்ளிவாசல் ஒன்றின் மீது நேற்று புதன்கிழமை மாலை நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில், அங்கு தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்களில் 5 பேர் கொல்லப்பட்டதோடு, 22 பேர் காயமடைந்துள்ளனர். இதேவேளை, ஆப்கானிஸ்தானின் வட பகுதியில் உள்ள மசார்-இ-ஷெரீப் நகரத்தில் பேருந்து ஒன்றினை இலக்கு வைத்து நடத்தப்பட்ட குண்டு தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர். குறித்த தாக்குதலில் 15 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எவ்வாறாயினும் இந்த தாக்குதல்களை இதுவரை எந்த ஒரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை, என தெரிவிக்கப்படுகின்றது. - [தனது 113 வது பிறந்தநாளை கொண்டாடும் உலகின் மிக வயதான நபர்](https://minnal24.com/%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%a4%e0%af%81-113-%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%88-%e0%ae%95%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d/): கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த உலகிலேயே மிகவும் வயதான நபரான வெனிசுலா நாட்டைச் சேர்ந்த ஜுவான் விசென்டே பெரெஸ் மோரா, தனது 113-ஆவது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். அதன்படி, நல்ல ஆரோக்கிய உடல் நலத்துடன் இருக்கும் பெரெஸ் மோராவிற்கு 41 பேரக்குழந்தைகள், 18 கொள்ளுப் பேரக்குழந்தைகள் மற்றும் அதற்கு பிறகான சந்ததியரும் உள்ளனர். மேலும், உயர் ரத்த அழுத்தம் மற்றும் வயது முதிர்வு காரணமாக கேட்கும் பிரச்சினையை தவிர, பெரெஸ் மோரா மிகவும் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. - [முன்னாள் பிரதமரிடம் 3 மணி நேர வாக்குமூலம்](https://minnal24.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-3-%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf/): முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் நேற்று புதன்கிழமை முன்னிலையாகி 3 மணிநேரம் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மே 9ஆம் திகதி காலிமுகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டி பகுதியில் ஏற்பட்ட வன்முறை சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் பெற குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. - [மீண்டும் லாஃப் சமையல் எரிவாயு விநியோகம்](https://minnal24.com/%e0%ae%ae%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b2%e0%ae%be%e0%ae%83%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b0/): நாணய கடிதத்தை திறக்க கூடியதாக இருப்பதால், எதிர்வரும் 6 நாட்களுக்குள் எரிவாயு விநியோகத்தை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக, லாஃப் சமையல் எரிவாயு (Laugfs Gas) நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த சித்திரை புத்தாண்டுக்கு முன்னரான காலப்பகுதி முதல் தமது எரிவாயு கொள்கலன் விநியோகத்தினை லாஃப் சமையல் எரிவாயு நிறுவனம் இடைநிறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. - [நீரில் மூழ்கி தகப்பன் மற்றும் இரண்டு பிள்ளைகள் உயிரிழப்பு](https://minnal24.com/%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%82%e0%ae%b4%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%a4%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b1/): -பதுளை நிருபர்- மஹியங்கனை தம்பராவ குளத்தில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் 45 வயதான தந்தை மற்றும் 15,10 வயது இரு மகன்கள் ஆவர். ஹபரவெவ, கிரிமெடில்ல பிரதேசத்தில் வசிக்கும் இவர்கள் நேற்று பிற்பகல் தம்பராவ குளத்தில் குளிப்பதற்குச் சென்றுள்ளனர். அவர்கள் வீடு திரும்பாததையடுத்து உறவினர்கள் தேடி பார்த்ததில் அவர்கள் குளிப்பதற்கு சென்ற இடத்தில் உடைகள் மற்றும் காலணிகள் மட்டும் காணப்பட்டுள்ளது. பின்னர் பிரதேசவாசிகள் நீரில் மூழ்கியவர்களை மீட்டு மஹியங்கனை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது அவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. மஹியங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். - [3,500 மெற்றிக்தொன் எரிவாயு கப்பல் நாட்டை வந்தடையும்](https://minnal24.com/3500-%e0%ae%ae%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%a4%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%af%81-%e0%ae%95%e0%ae%aa/): இன்று வியாழக்கிழமை 3,500 மெட்ரிக் டன் எரிவாயு தாங்கிய கப்பல் ஒன்று  நாட்டை வந்தடையவுள்ளது. 7,500 மெட்ரிக் டன் எரிவாயுவைப் பெற்றுக்கொள்வதற்காக, 6.5 மில்லியன் டொலர் கொடுப்பனவு செலுத்தப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் கூறியுள்ளது. கப்பலில் இருந்து எரிவாயுவை தரையிறக்கும் வரையில், எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்க இயலாது. இதனால் இன்றைய தினமும் வீட்டு சமையல் எரிவாயு கொள்கலன் விநியோகம் இடம்பெறாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக விற்பனை நிலையங்களில் எரிவாயுவுக்காக வரிசைகளில் காத்திருப்பதை தவிர்க்குமாறு அந்த நிறுவனம் பொது மக்களைக் கோரியுள்ளது. - [மரக்கறிகளின் விலைகள் மேலும் அதிகரிப்பு?](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%87%e0%ae%b2/): எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக பொருளாதார மத்திய நிலையங்களுக்கு கிடைக்கப்பெறும் மரக்கறிகள் 50 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், மரக்கறிகளின் விலை அதிகரிப்பால் பொருளாதார மத்திய நிலையங்களுக்கு வரும் நுகர்வோரின் தொகையிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். எரிபொருள் இன்மையினாலும், விலை அதிகரிப்பு காரணமாகவும், போதியளவான மரக்கறிகள் கிடைக்கப்பெறாததால், எதிர்வரும் நாட்களில் மரக்கறிகளின் விலைகள் மேலும் அதிகரிக்கும் என வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். . - [சில்க் ஸ்மிதாவாக மாறிய காஜல் பசுபதி](https://minnal24.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%af%8d-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95/): பிக் பாஸ் புகழ் நடிகை காஜல் பசுபதி சில்க் ஸ்மிதா போல உடை அணிந்து கிளாமர் போஸ் கொடுத்து இருக்கிறார். ‘என் தலைவி (சில்க்) மாதிரி எவளும் வர முடியாது. இருந்தாலும் தலைவிக்காக தலைவி போஸ் வசல பண்றது தப்பு இல்லை’ என குறிப்பிட்டு அந்த போட்டோவை வெளியிட்டுள்ளார் காஜல் பசுபதி. ஒருகாலத்தில் காலத்தில் தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் சில்க் ஸ்மிதா. அவர் இறந்தபிறகும் அவரது பெயர் பிரபலமான ஒன்றாக தான் இருந்து வருகிறது. தமிழ் சினிமாவில் கவர்ச்சி என்றாலே எல்லோருக்கும் முதலில் சில்க் ஸ்மிதா பெயர் தான் நினைவுக்கு வரும். - [ஆறு வார காலங்களுக்குள் இடைக்கால வரவுசெலவுத் திட்டம்](https://minnal24.com/%e0%ae%86%e0%ae%b1%e0%af%81-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%87/): அரசாங்கம் ஆறு வார காலங்களுக்குள் இடைக்கால வரவுசெலவுத் திட்டமொன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக பிரதமரும் நிதியமைச்சருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.  அதற்கிணங்க அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்படவுள்ள  இடைக்கால வரவுசெலவுத் திட்டம் நிவாரணங்களை வழங்கும் வரவுசெலவுத் திட்டமாக அமையுமென்றும் அத்துடன் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி தொடர்பாக ஒதுக்கப்பட்டுள்ள நிதியானது இரண்டு வருடங்களுக்கு நிவாரண வேலைத்திட்டத்திற்காக செலவிடப்படுமென்றும் அவர் தெரிவித்துள்ளார். சாத்தியமற்ற பொருளாதார முகாமைத்துவம் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடிக்கு தீர்வுகாணப்பட்டு நாட்டை இயல்புநிலைக்கு கொண்டுவருவதற்காக மேற்கொள்ளவேண்டிய பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக நாட்டின் பணவீக்கம் மேலும் அதிகரிக்கலாம் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டிலுள்ள 22 மில்லியன் மக்களில் மிகவும் அத்தியாவசியமான தேவைகளையுடைய மக்களின் அடிப்படைத் தேவைகளை நிவர்த்திசெய்வதற்காக நிதியை பெற்றுக்கொடுப்பது அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள பிரதமர் அலுவலகத்தில் ரொய்ட்டர் செய்தி சேவைக்கு வழங்கிய நேர்காணலின் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நாட்டுக்கு வருமானம் இல்லாத நிலையில் தற்போது மேலும் ட்ரில்லியன் ரூபாவை […] - [இலங்கைக்கு அனுப்பும் தொகை 250 மில்லியன் டொலராக குறைவு](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%85%e0%ae%a9%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%95/): வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களின் மாதாந்தம் இலங்கைக்கு அனுப்பும் தொகை 250 மில்லியன் டொலராக குறைவடைந்துள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் சர்வதேச விவகாரங்களுக்கான மேலதிக பொது முகாமையாளர் மங்கள ரந்தெனிய இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு பணம் அனுப்பும் தொகையை துரிதமாக அதிகரிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு செய்ய வேண்டிய பொறுப்பு இலங்கை தொழிலாளர்களுக்கு இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், வங்கிகள் ஊடாக இலங்கைக்கு டொலரை அனுப்பும் இலங்கைப் பணியாளர்கள் பல நன்மைகளை அனுபவிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். - [மீன், இறைச்சி, முட்டையின் விலைகள் அதிகரிப்பு](https://minnal24.com/%e0%ae%ae%e0%af%80%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b1%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d/): எரிபொருள் விலை  உயர்ந்துள்ளதால் மீன், இறைச்சி, முட்டை ஆகியவற்றின் விலை மேலும் உயர்வடையும் நிலை ஏற்பட்டுள்ளது. எதிர்வரும் நாட்களில் முட்டை ஒன்றின் விலை 38 அல்லது 40 ரூபாவாக அதிகரிக்கப்படுமென அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் அத்தநாயக்க தெரிவித்துள்ளார். எரிபொருள் விலை அதிகரிப்பு, கோழி  தீவனத்தின் விலை அதிகரிப்பு காரணமாக ஒரு முட்டையின் உற்பத்தி செலவு மாத்திரம் 31 ரூபாயாக அதிகரித்துள்ளது. கோழித் தீவன விலை உயர்வால் சிறு கோழி வியாபாரிகள் பலர் தொழிலை விட்டு வெளியேறியுள்ளனர். 65 முதல் 70 ரூபாய் வரை விற்கப்பட்ட ஒரு கிலோ கோழித் தீவன உணவுப் பொதியின் விலை 220 ரூபாயாக அதிகரித்துள்ளது. எரிபொருள் விலை உயரும்போது இது மேலும் அதிகரிக்கும். பண்ணையாளர்கள் இந்தத் தொழிலில் நிலைத்திருக்க வேண்டுமானால், ஒரு முட்டையை குறைந்தபட்சம் 38 அல்லது 40 ரூபாவுக்கு விற்பனை செய்ய வேண்டிய நிலைமை ஏற்படுமென அகில இலங்கை முட்டை […] - [அதிவேக நெடுஞ்சாலைகளின் கட்டணமும் அதிகரிப்பு](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b5%e0%af%87%e0%ae%95-%e0%ae%a8%e0%af%86%e0%ae%9f%e0%af%81%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95/): எரிபொருளின் விலை அதிகரிப்பை அடுத்து நெடுஞ்சாலைகளில் இயங்கும் சொகுசு பஸ்களின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) இன்று அறிவித்துள்ளது. சொகுசு நெடுஞ்சாலை பேருந்துகளின் கட்டணம் 19.49% அதிகரித்துள்ளது என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த விலை உயர்வு இன்று பிற்பகல் 01.00 மணி முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது. கொழும்பு – மாத்தறை: ரூ. 1,210, கடவத்தை – காலி : ரூ. 1,000, கொழும்பு – எம்பிலிப்பிட்டிய: ரூ. 1,680, கொழும்பு – வீரகெட்டிய : ரூ. 1,550, கொழும்பு – மொனராகலை : ரூ. 2, 420, மகும்புர – அக்கரைப்பற்று : ரூ. 3,100 என்றவாறு அதிகரிக்கப்பட்டுள்ளது - [நாசா விண்வெளி ஆய்வு மையம் வெளியிட்டுள்ள புகைப்படம்](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9a%e0%ae%be-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a3%e0%af%8d%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%af%81-%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%ae/): விண்வெளியில் தொடர்ந்து ஆய்வுகளைச் செய்து வரும் நாசா கடந்த சில வாரங்களுக்கு முன் சூரியனிலிருந்து அதிகப்படியாக கதிர்கள் வெளியாவதாகவும் அதில் வெளிப்படும் வெப்பத்தின் அளவும் அதிகரித்திருப்பதாகத் தெரிவித்து சூரியனின் புதிய புகைப்படத்தை வெளியிட்டது. அதில் சூரியனிலிருந்து வெளியாகும் நெருப்புப் பிளம்புகளின் அளவு அதிகரித்துக் காணப்படும் படம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில், அண்டத்தின் (whirlpool galaxy) புதிய தோற்றப் புகைப்படத்தை நாசா விண்வெளி ஆய்வு மையம் பகிர்ந்துள்ளது. நீரில் உருவாகும் வளையங்களைப்போல செந்நிறத்தில் காட்சியளிக்கும் கேலக்ஸியின் படம் வைரலாகி வருகிறது. - [மீள்திருத்த பெறுபேறுகள் வெளியாகின](https://minnal24.com/%e0%ae%ae%e0%af%80%e0%ae%b3%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%81%e0%ae%aa%e0%af%87%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/): கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை மீள் திருத்தப் பெறுபேறுகள் இன்று புதன்கிழமை வெளியாகியுள்ளன. 2020ஆம் ஆண்டுக்கான பெறுபேறுகளே இவ்வாறு வெளியாகியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, www.donets.lk என்ற இணையத்தள பக்கத்தின் ஊடாகவும், www.results.exams.gov.lk என்ற இணையத்தள பக்கத்தின் ஊடாகவும் மீள் திருத்தப் பெறுபேறுகளை பார்வையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 2020ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை மீள் திருத்தப் பெறுபேறுகளுக்காக 32,528 பரீட்சார்த்திகள் விண்ணப்பித்துள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார். - [படியில் அமர்ந்திருந்தபடியே உயிரிழந்த ஆணொருவரின் சடலம் மீட்பு](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%aa%e0%ae%9f/): -பதுளை நிருபர்- ஹப்புத்தளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பெரகலை பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் அமைந்துள்ள பொது மலசலகூடம் செல்லும் வழியில் கீழே அமர்ந்தவாறு இறந்த நிலையில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த நபர் இரத்தினபுரி கரப்பிஞ்ச பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. மேலதிக விசாரணைகளை ஹப்புத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். - [ஜூன் முதல் கோழி இறைச்சி ஏற்றுமதியை நிறுத்த திட்டம்](https://minnal24.com/%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%87%e0%ae%b1%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%8f/): கோழி இறைச்சி ஏற்றுமதியை எதிர்வரும் ஜூன் மாதம் முதல் நிறுத்துவதாக மலேசியா அறிவித்துள்ளது. மலேஷியாவில் கோழி இறைச்சிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாலேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மலேஷியா மாதாந்தம் 3.6 மில்லியன் கோழிகளை ஏற்றுமதி செய்கிறது. இந்நிலையில் உள்நாட்டு விலை மற்றும் உற்பத்தி ஸ்திரம் அடையும் வரை வெளிநாட்டு ஏற்றுமதியை நிறுவத்துவதாக மலேஷியா அறிவித்துள்ளது. மலேஷியாவில் கோழி இறைச்சியின் விலை அண்மைய மாதங்களில் அதிகரித்து வரும் நிலையில், வாடிக்கையாளர்கள் இறைச்சி வாங்குவதில் விற்பனையாளர்கள் கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.   - [2 மில்லியனை நன்கொடையாக வழங்கும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம்](https://minnal24.com/2-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%af%88-%e0%ae%a8%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%b4/): நாட்டின் சுகாதார துறைக்கு உதவும் வகையில், அத்தியாவசிய மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது. இன்றைய நாணய மாற்று விகிதத்தின்படி இது 718 மில்லியன்  ருபாவை வழங்கியுள்ளது.  அதற்கமைய, புற்றுநோயாளிகளின் சிகிச்சைக்கான அத்தியாவசிய மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக தேசிய புற்றுநோய் வைத்தியசாலைக்கு 1 மில்லியன் அமெரிக்க டொலர்களையும்   குழந்தைகளுக்கான சிறுவர் பராமரிப்புக்கு தேவையான அத்தியாவசிய மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு 1 மில்லியன் அமெரிக்க டொலர்களையும்  நன்கொடையாக வழங்கப்படவுள்ளது. நாட்டிற்கு அவசியமான இந்த தருணத்தில் இந்த நன்கொடையை வழங்குவதில் இலங்கை கிரிக்கட் நிறுவனம் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும், மேலும் இந்த சவாலான காலகட்டத்தை முறியடிக்க எமது தேசத்திற்கு எமது பூரண ஆதரவை வழங்குவோம் எனவும் இலங்கை கிரிக்கெட்டின் தலைவர் ஷம்மி சில்வா தெரிவித்துள்ளார். - [நாளைய மின்வெட்டு விபரம்](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%88%e0%ae%af-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b5%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/): நாடளாவிய ரீதியில் நாளை வியாழக்கிழமை அமுல்ப்படுத்தப்படவுள்ள மின்வெட்டு விபரம் தொடர்பாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிடப்பட்டுள்ளது. கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை பரீட்சைக்கு வசதியாக   ஜூன் 01 வரை ஏனைய நாட்களில் மாலை 6.30 மணிக்கு மேல் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது எனவும், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. குறித்த தினங்களில் நண்பகல் 12.00 மணி முதல் மாலை 6.30 மணி வரை பரீட்சை நடைபெறாத அந்நாட்களில் கைத்தொழில் வலயம் மற்றும் கொழும்பு வர்த்தக நகர வலயம் தவிர்ந்த அனைத்து வலயங்களிலும் 1 மணித்தியாலம் 45 நிமிடம் முதல் 2 மணித்தியாலம் 10 நிமிடம் வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. கைத்தொழில் வலயங்களுக்கு காலை 5.00 மணி முதல் மு.ப. 8.00 மணி வரையிலும், கொழும்பு வர்த்தக நகர வலயத்திற்கு காலை 6.00 மணி முதல் மு.ப. 9 மணி வரையிலும் 3 மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும். - [பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவருக்கு விளக்கமறியல்](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%89%e0%ae%b1%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95-5/): கைது செய்யப்பட்ட  பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரை எதிர்வரும் 1ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காலிமுகத்திடல் மற்றும் கொள்ளுபிட்டிய பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட எம்.பிக்களான சனத் நிஷாந்த மற்றும் மிலிந்த ஜயதிலக ஆகியோருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.   - [நாளை சிலிண்டர்கள் விநியோகிக்கப்படமாட்டாது](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%88-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%af%e0%af%8b/): லிட்ரோ சமையல் எரிவாயு நாளை வியாழக்கிழமை  சிலிண்டர்கள் விநியோகிக்கப்படமாட்டாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வௌியிட்டு அந்த நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் வரிசையில் நிற்பதை தவிர்க்குமாறு லிட்ரோ நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது. இன்றைய தினமும் எரிவாயு விநியோகம் இடம்பெறாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் நேற்று செவ்வாய்க்கிழமை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது - [225 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஏன் ஒரு ரூபாய் கூட வாக்களித்த மக்களுக்காக தானம் செய்யவில்லை](https://minnal24.com/225-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%89%e0%ae%b1%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95/): -மன்னார் நிருபர்- இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிதி நெருக்கடி காரணமாக இலங்கை மக்கள் அன்றாட உணவுத் தேவையை பூர்த்தி செய்து கொள்வதற்கு பாரிய சிரமங்களை எதிர்நோக்கி உள்ளார்கள். ஆனால் இலங்கையில் உள்ள 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் கோடீஸ்வரர்களாக இருக்கின்றார்கள். அவர்களால் ஏன் ஒரு ரூபாய் கூட தங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு தானமாக வழங்க அவர்கள் முன்வரவில்லை என மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்க சமாசத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் தெரிவித்தார். மன்னாரில் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், பொருளாதார நிதி நெருக்கடியால் இலங்கை மக்கள் படும் துன்ப துயரங்களை பார்த்து தமிழக உறவுகளால் எங்களுக்கு வழங்கிய அந்த உதவி நிச்சயமாக நினைத்து பார்க்க முடியாத இதுவரை எந்த நாடுகளும் அமைப்புகளும் எமக்கு அள்ளி தராத பெரிய தொகையை தமிழக மக்கள் ஒன்று சேர்த்து வந்திருக்கிறார்கள். அதற்கு முதற்கண் நாங்கள் […] - [அத்தியாவசிய அரச பணியாளர்களை மாத்திரம் சேவைக்கு அழைப்பதற்கான சுற்றுநிருபம்](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a-%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d/): அத்தியாவசிய அரச பணியாளர்களை மாத்திரம் சேவைக்கு அழைப்பதற்கான சுற்றுநிருபம் இன்று புதன்கிழமை வெளியாகியுள்ளது. நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய அரச ஊழியர்களை மாத்திரம் சேவைக்கு அழைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. தொடர்புடைய செய்தி:- https://www.minnal24.com/?p=76492&fbclid=IwAR2b3PCvjBsjJXeX0w61Tq1vQSkxLgHFfpl3_Vv5XDQ3xpAiMjwm0hj5RWY   - [அனைத்து விமான நிலையங்களும் மூடப்படும்?](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%a9%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81/): கட்டுநாயக்க விமான நிலையம் உட்பட அனைத்து விமான நிலையங்களும் இம்மாதம் 31ஆம் திகதிக்கு பின்னர் மூடப்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது எரிபொருள் பற்றாக்குறையே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. கட்டுநாயக்க விமான நிலையத்தில் இம்மாதம் 31ஆம் திகதி வரை மட்டுமே விமானங்களுக்கு தேவையான எரிபொருள் இருப்பதாக விமான நிலைய மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். எனினும் இத்தகவலை அதிகாரிகள் இதுவரை உறுதிப்படுத்தவில்லை. - [ஈஸ்டர் தாக்குதல் சந்தேக நபர் இப்ராஹிம் பிணையில் விடுதலை](https://minnal24.com/%e0%ae%88%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%95-2/): உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வர்த்தகர் ஒருவர், இன்று புதன்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது. 2019 ஈஸ்டர் தாக்குதலின் போது கொழும்பில் உள்ள இரண்டு பிரபல ஹோட்டல்களில் பயங்கரவாத தாக்குதலை நடத்திய, மொஹமட் இல்ஹாம் மற்றும் மொஹமட் இன்ஷாப் ஆகியோரின் தந்தை மற்றும் சகோதரர் ஆகியோரே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். - [பதுக்கி வைக்கப்பட்டிருந்த 59,000 லீற்றர் எரிபொருள் மீட்பு : 137 பேர் கைது](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%b5%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81-3/): பொலிஸாரினால் கடந்த சில நாட்களாக மேற்கொள்ளப்பட்ட 429 சுற்றிவளைப்புகளின் போது சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 59,000 லீற்றர் எரிபொருள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 27,000 லீற்றர் பெற்றோலும், 22,000 லீற்றர் டீசலும், 10,000 லீற்றர் மண்ணெண்ணெயும் மீட்கப்பட்டுள்ளது. அத்துடன், இவ்வாறான பதுக்கல் சம்பவங்கள் தொடர்பில் நாடளாவிய ரீதியில் 137 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தெரிவிக்கப்படுகின்றது. - [6 இளைஞர்கள் இணைந்து கூட்டு வன்முறை : மீனவ பெண்ணை கொன்று தீ வைத்து எரிப்பு](https://minnal24.com/6-%e0%ae%87%e0%ae%b3%e0%af%88%e0%ae%9e%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a3%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f/): ராமேஸ்வரம் வடகாடு பகுதியில் இளைஞர்கள் 6 பேர் மீனவப் பெண் ஒருவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்து தீ வைத்து எரித்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக, இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், ராமேஸ்வரம் வடகாடு இறால் பண்ணையில் பணியாற்றிய வடமாநில இளைஞர்கள் 6 பேர் மீனவப் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து தீ வைத்து எரித்துள்ளனர். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் ஒன்று திரண்டு இறால் பண்ணையை தீ வைத்து எரித்துள்ளனர். இதனால் அங்கு பெரும் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் வடகாடு பகுதியை சேர்ந்த பாலு, இவரது மனைவி சந்திரா(வயது 40) கடல் பாசி எடுக்கும் தொழில் செய்து வருகிறார். இதே பகுதியில் தனியாருக்கு சொந்தமான இறால் பண்ணை உள்ளது. இந்த பண்ணையில் ஒரிசா மாநிலத்தை சேர்ந்த 6 […] - [இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய டொலர் பெறுமதி](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf-5/): இலங்கை மத்திய வங்கி இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் இன்றைய விற்பனைப் பெறுமதி 364 ரூபா 35 சதமாகவும், கொள்முதல் பெறுமதி 354 ரூபா 40 சதமாகவும் பதிவாகியுள்ளது.   - [இந்திய சிறையில் ஆறாவது நாளாக தொடரும் உணவு தவிர்ப்பு போராட்டம்](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a8/): இலங்கையில் இருந்து இந்தியா சென்று அங்கு சிறையில் உள்ள ஈழத்தமிழர்கள் தங்களை விடுதலை செய்யுமாறு கோரி, ஆறாவது நாளாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களை விடுதலை செய்யுமாறு பல தரப்புக்களாலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.கஸ்டாலினிடம் உருக்கமான கோரிக்கையை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த கோரிக்கையில், மதிப்பிற்குரிய முதலமைச்சர் ஐயா அவர்களே, இன்று 6வது நாளாக உண்ணாநிலைப் போராட்டத்தில் எங்கள் சகோதரர்கள் 10 பேர் விடுதலைக்காக காத்திருக்கிறார்கள். ஒரு சொட்டு உணவு கூட எடுத்துக் கொள்ளாமல் முழுமையாக பட்டினியாக இருந்து தங்கள் குடும்பங்களோடு சேர்ந்து வாழ முடியாதா? என்ற எண்ணத்தோடு இந்த உண்ணாநிலை போராட்டத்தில் காத்திருக்கிறார்கள். எத்தனை முறை எங்கள் குழந்தைகளை அள்ளிக் கொஞ்சம் முடியாத தவித்து இருப்போம், எங்கள் உறவுகள் உடல்நலம் முடியாமல் இறுதிக்கட்டங்களில் வைத்தியசாலைகளில் இருக்கும் பொழுது எத்தனை முறை ஒரு முறையாவது அவர்களை சந்தித்து விட்டு உதவ முடியாது என ஏங்கி இருப்போம். எங்கள் குடும்பங்கள் மிகவும் […] - [140 லீற்றர் பெற்றோல் கொண்டு சென்ற ஒருவர் கைது](https://minnal24.com/140-%e0%ae%b2%e0%af%80%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%8b%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81/): -பதுளை நிருபர்- 140 லீற்றர் பெற்றோல் கொண்டு சென்ற 45 வயதுடைய நபர் ஒருவர் ஹாலிஎல பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பதுளை-ஹாலிஎல நகரிலிருந்து முச்சக்கர வண்டி ஒன்றில் மரக்கறிகளுடன் மறைத்து 140 லீற்றர் பெற்றோலை ஏற்றிக்கொண்டு ஊவா கெட்டவெளப் பகுதிக்கு சென்ற முச்சக்கர வண்டியை பின்தொடர்ந்தது, இடைமறித்து சோதனைக்குட்படுத்திய போது 140 லீற்றர் பெற்றோல் கைப்பற்றப்பட்டது. கடந்த சில மாதங்களாக இவர் எரிபொருள் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. குறித்த நபரை இன்று புதன்கிழமை பதுளை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஹாலிஎல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். - [தேங்கி கிடக்கும் சாரதி அனுமதி பத்திர விண்ணப்பங்கள்](https://minnal24.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85/): மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான சாரதி அனுமதிப்பத்திர விண்ணப்பங்கள் குவிந்து கிடப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடுவதற்கான அட்டைகள் இல்லாமையே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. அவுஸ்ரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட  ஸ்மார்ட் அட்டைகளுக்கு 6 இலட்சம் யூரோக்கள் செலுத்த வேண்டும். எனினும் இலங்கை மத்திய வங்கியிடம் இந்த தொகையை செலுத்துவதற்கான பணம் இல்லாத நிலை காணப்படுகின்றது.. இந்நிலையில், தற்பொழுது தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படுவதாகவும், சாரதி அனுமதிப்பத்திரங்களை புதுப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. - [இலங்கையின் புதிய நிதியமைச்சர் பதவியேற்றார்](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%88/): பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிதி அமைச்சராக, இன்று புதன்கிழமை பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர் சற்றுமுன்னர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். - [திருகோணமலையில் விபத்து : 6 பேர் படுகாயம்](https://minnal24.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8b%e0%ae%a3%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-6/): திருகோணமலை-தம்பலகாமம் பகுதியில் இன்று புதன்கிழமை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியது. இவ்விபத்தில் 6 பேர் படுகாயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நிறுத்தப்பட்டிருந்த பேருந்துக்கு பின்னால் பாரவூர்தி மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். - [பெண்ணொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை](https://minnal24.com/%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%86%e0%ae%af%e0%af%81%e0%ae%a4%e0%ae%a4%e0%af%8d/): தனிப்பட்ட உறவு குறித்து ஏற்பட்ட முரண்பாடு காரணமாக பெண்ணொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வனாத்தவில்லு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மங்களப்புர பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை இக் கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர் குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடையவர் என பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்நிலையில், சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். - [கல்முனை றோயல் வித்தியாலயத்தில் வித்தியாரம்ப விழா](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%88-%e0%ae%b1%e0%af%8b%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b2%e0%ae%af/): -கல்முனை நிருபர்- சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அரசினால் நிர்மாணிக்கப்பட்ட கல்முனை கிரீன்பீல்ட் பிரதேசத்தில் அமைந்துள்ள கல்முனை கிரீன்பீல்ட் கமு/கமு/றோயல் வித்தியாலயத்தில் தரம்-1 மாணவர்களை வரவேற்கும் ‘வித்தியாரம்ப’ நிகழ்வு பாடசாலையின் அதிபர் எம்.எச்.எம். அன்ஸார் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கல்முனை வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்று பொறியியலாளர் இஸட்.ஏ.எம். அஸ்மீர் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் மேலும் சிறப்பு அதிதியாக கல்முனை கோட்டக்கல்வி அதிகாரி வீ.எம்.ஸம்ஸம், அதிதிகளாக ஆசிரிய ஆலோசகர்களான எம்.கே.எம்.தாஸிம், ஏ.ராஸிக், பாடசாலை பிரதியதிபர் எம்.எம்.எம்.இப்றாஹிம், ஆகியோருடன் ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பாடசாலை அபிவிருத்தி சபை உறுப்பினர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.   - [40 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பூட்டு](https://minnal24.com/40-%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%af/): நாட்டில் ஏற்பட்ட குழப்ப நிலைகள் காரணமாக நாடளாவிய ரீதியில் 40 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த நாட்களில் வாடிக்கையாளர்கள் உள்ளிட்ட வெவ்வேறு தரப்பினர் எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக மேற்கொண்ட தகாத நடவடிக்கைகள் காரணமாகவே எரிபொருள் நிரப்பு நிலையங்கள் இவ்வாறு மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. - [அம்பாறை-நாவிதன்வெளியில் மினி சூறாவளி](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b1%e0%af%88-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/): -கல்முனை நிருபர்- அம்பாறை மாவட்டம் மத்தியமுகாம் பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை வீசிய சிறிய சூறாவளி போன்ற பலத்த காற்று மற்றும் மழை காரணமாக பொதுமக்களின் வீடுகள், வர்த்தக நிலையங்கள், வணக்கஸ்தலங்கள் உட்பட பல்வேறு கட்டிடங்களின் கூரைகள் பறந்துள்ளதுடன் மரங்களும் சரிந்து விழுந்துள்ளது. மாலை 03 மணியளவில் இடம்பெற இந்த அனர்த்தம் காரணமாக கடுமையான சேதங்களை மக்கள் சந்தித்துள்ளனர். மத்தியமுகாம், இரண்டாம் வட்டாரம், மூன்றாம் வட்டாரம், சவளக்கடை, நான்காம் காலனி, ஆகிய இடங்களிலையே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. வீடுகளுக்கு முன்னால் நின்ற மரங்கள் காற்றுக்கு ஈடுகொடுக்க முடியாமல் சரிந்து விழுந்தமையினால் வீடுகளுக்கும் வீட்டின் கூரைகளுக்கும் பலத்த சேதம் உருவாகியுள்ளது. இதனால் அங்கிருந்து வெளியான மக்கள் வேறிடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். இதனால் பலத்த பொருளாதார சேதம் ஏற்பட்டுள்ளது. அரிசி ஆலைகளும், மேலும் பல வர்த்தக நிலையங்களும் இந்த அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டுள்ளமையினால் நிறைய நெல் மற்றும் அரிசி மூட்டைகள் மழையில் நனைந்து பாவனைக்கு உதவாத […] - [ஆரம்ப பாடசாலை ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 18 சிறுவர்கள் பலி](https://minnal24.com/%e0%ae%86%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%af%88-%e0%ae%92%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9f/): அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தின் யுவால்டே பகுதியில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 21 பேர் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளது. அவர்களில் 18 சிறார்கள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. 18 வயதான ஒருவரினால் நேற்று செவ்வாய்க்கிழமை இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது, 2ஆம், 3ஆம் மற்றும் 4ஆம் தரங்களில் கல்வி கற்ற 7 முதல் 10 வயதுக்கு இடைப்பட்ட மாணவர்களே பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பொலிஸ் அதிகாரிகள் நடத்திய பதில் தாக்குதலில், சந்தேகநபர் கொல்லப்பட்டார். அவர், குறித்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டமைக்கான நோக்கம் இதுவரையில் கண்டறியப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. - [ஐ.நா. முழுமையான ஆதரவை வழங்கும்](https://minnal24.com/%e0%ae%90-%e0%ae%a8%e0%ae%be-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b4%e0%af%81%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%86%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%b5%e0%af%88-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%99%e0%af%8d/): சர்வதேச உதவிகளைப் பெறுவதற்கும், அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கும், வேலையின்மை மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு போன்ற பிரச்சினைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு ஐ.நா. முழுமையான ஆதரவை வழங்குமென ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர்-, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் பீரிஸிடம் உறுதியளித்தார். அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரம் தொடர்பான கவலைகள் போன்ற நாட்டின் தற்போதைய பொருளாதாரச் சூழ்நிலையில் ஏற்படும் பல பாதிப்புக்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் கொழும்பில் உள்ள ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர்- ஹம்டியை சந்தித்தபோதே அவர் உறுதிவழங்கியுள்ளார். எதிர்வரும் காலங்களில் ஏற்படக்கூடிய சிரமங்களை அரசாங்கம் முன்னறிவித்துள்ளதாகவும், பாதிப்புக்களைக் குறைக்கும் முகமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் சுட்டிக் காட்டினார். சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியுடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள் உட்பட, நாட்டில் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காக அரசாங்கம் […] - [எரிபொருள் பிரச்சினைக்கு என்னால் தீர்வு காண முடியும் - அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்](https://minnal24.com/%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/): எரிபொருள் பிரச்சினைக்கு என்னால் தீர்வு காண முடியும், என சுற்றாடல்துறை அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை சுற்றாடல் அமைச்சில் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நான், சவூதி அரேபியாவிலுள்ள பெற்றோலியம் கனியவள பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்றவன். எங்கள் பல்கலைக்கழகத்தில் கல்விகற்றவரே. இன்று சவூதி அரேபியாவில் எரிபொருள் அமைச்சராக உள்ளார். எனவே, இதுகுறித்த எனது நிபுணத்துவத்தை பகிர்ந்துகொண்டு இப்பிரச்சினைக்கு தீர்வுகாண முயற்சிக்கப்படும், என அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார். - [இன்றும் சமையல் எரிவாயு விநியோகம் இடம்பெறாது](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%af%81-%e0%ae%b5/): இன்நு புதன்கிழமையும் சமையல் எரிவாயு விநியோகம் இடம்பெறாது, என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. ஆகவே, சமையல் எரிவாயு விநியோக நிலையங்களுக்கு முன்னால் வரிசையில் காத்திருக்க வேண்டாம் எனவும் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. நாளை வியாழக்கிழமை 3500 மெற்றிக்தொன் LP Gas கப்பல் ஒன்று நாட்டை வந்தடையவுள்ளது. அதன் பின்னர் சமையல் எரிவாயு விநியோகம் இடம்பெறும் எனவும், இரண்டு கப்பல்களுக்கான டொலர் வழங்கப்பட்டுள்ளது எனவும், லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. - [கொரிய மொழி பரீட்சை தொடர்பில் புதிய அறிவிப்பு](https://minnal24.com/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%b0%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%af%88-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d/): தென் கொரிய தொழிலுக்காக இளைஞர் யுவதிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான 2022 ஆண்டுக்கான கொரிய மொழி பரீட்சை மே 23 திகதியன்று ஆரம்பமானது. இலங்கையில் நடத்தப்படும் ஐந்தாவது கொரிய மொழித் தேர்ச்சிப் பரீட்சை இதுவாகும். 2022ஆம் ஆண்டுக்கான கொரிய மொழி பரீட்சைக்குத் 31,378 விண்ணப்பதாரர்கள் தகுதி பெற்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. அதன்படி தினமும் 4 குழுக்கள் கணினி அடிப்படையிலான பரீட்சைக்கு தோற்றவுள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பன்னிபிட்டிய கணினி நிலையத்தில் பரீட்சை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பரீட்சை முடிவுகள் இரண்டு கட்டங்களாக வெளியிடப்படும் மற்றும் முதல் 7,000 விண்ணப்பதாரர்களின் முடிவுகள் ஜூலை 5 ஆம் திகதியன்று வெளியிடப்படவுள்ளது. கொரியா மனித வள மேம்பாட்டு நிறுவனத்தினால் தென் கொரியாவில் வேலை வாய்ப்புக்காக இலங்கையர்களை தேர்வு செய்யும் பணி முன்னெடுக்கப்படுகிறது. இது தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் எவ்வித செல்வாக்கையும் செலுத்த முடியாது என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் […] - [சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் இராஜினாமா](https://minnal24.com/%e0%ae%9a%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%85%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf/): இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் கிமர்லி பெனாண்டோ, தனது இராஜினாமா கடிதத்தை சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சர் ஹரீன் பெனாண்டோவிடம் கையளித்துள்ளார். புதிதாக குறித்த அமைச்சுப் பதவிக்கு கடந்த மே 20ஆம் திகதி முதல் நியமிக்கப்பட்டுள்ள தங்களுக்கு, புதிய தலைவர் உள்ளிட்ட சபையை நியமிக்கும் வகையில் தாம் குறித்த பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். குறித்த பதவியில் 30 மாதங்களாக (2 1/2 வருடங்கள்) பதவி வகித்தமை தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், தாம் இக்காலப் பகுதியில் தமக்குரித்தான சம்பளத்தையோ, வாகனத்தையோ பெறவில்லையென தெரிவித்துள்ள அவர், தமது வெளிநாட்டு பயணங்கள் மற்றும் தங்குமிட தேவைகளுக்கான செலவுகளை தமது சொந்த செலவில் மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார். தாம் நாட்டுக்காக உதவ முன்வந்த இக்காலப் பகுதியில், வரி செலுத்துபவர்களின் பணத்தில் எந்தவகையிலும் பயன்பெறவில்லையென என சுட்டிக்காட்டியுள்ளார். தற்போது நாட்டுக்கு அவசியமாகவுள்ள இச்சந்தர்ப்பத்தில் ஏனையோரும் இந்நடைமுறையை பின்பற்ற ஊக்குவிப்பது சிறந்தது கிமலி பெனாண்டோ தெரிவித்துள்ளார். அது மாத்திரதமன்றி […] - [5 நாட்களுக்கு நாய்களின் உணவை சாப்பிடும்  நபருக்கு 23 இலட்சம்](https://minnal24.com/5-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89/): நாய்களுக்கான உணவுகளைத் தயாரித்து வரும் நிறுவனமொன்று தாம் தயாரிக்கும் உணவினை  5 நாட்கள் சாப்பிடும் நபருக்கு இலங்கை மதிப்பில் சுமார் 23 லட்சம் ரூபாய் சம்பளமாக வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. லண்டனின் செயற்பட்டு வரும் ஆம்னி என்ற  தாவரங்களைப் பயன்படுத்தி  நாய்களுக்காக உணவுகளைத் தயாரித்து வரும் நிறுவனமே குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது குறித்து அந்நிறுவனம் மேலும் தெரிவிக்கையில்” நாம் தயாரிக்கும்  உணவுப் பொருட்களில் இனிப்பு உருளை கிழங்குகள், பருப்புகள், பூசணிக்காய் போன்ற காய்களும், புளூபெர்ரி, கிரான்பெர்ரி போன்ற கனிகளும் மற்றும் பட்டாணி, பழுப்பு அரிசி போன்றவையும் கலந்திருக்கும்.இவ் வேலைக்குத் தெரிவு செய்யப்படும் நபருக்கு என்று தனித்தகுதிகள் எதுவும் தேவையில்லை. எனினும், இவ் உணவை உட்கொண்டால்  ஒவ்வாமை எதுவும் ஏற்படவில்லை என இந்த வேலைக்கு வருவோர் உறுதி செய்ய வேண்டும். ஒருவேளை ஒவ்வாமை ஏற்பட்டால் அதுபற்றிய விவரங்களையும் தெரிவிக்க வேண்டும். மேலும் பிரித்தானியராகவும்  18 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருப்பது அவசியம் எனவும் தெரிவித்துள்ளது. - [மத்திய வங்கியின் விஷேட அறிவிப்பு](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b7%e0%af%87%e0%ae%9f-%e0%ae%85/): பண வரம்பு எல்லைக்கு அப்பால் (cash margins) கடன் வசதிகளை வழங்குவதைத்தவிர்க்குமாறும் வங்கிகளுக்கு மத்திய வங்கி அறிவித்துள்ளது. இது தொடர்பாக அறிவித்தலையும் வெளியிட்டுள்ளது. சில அத்தியாவசியமற்ற மற்றும் அவசமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதில் கடைபிடிக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறிப்பிட்டு இலங்கை மத்திய வங்கியினால் அனைத்து உரிமம் பெற்ற வணிக வங்கிகளுக்கும் தேசிய சேமிப்பு வங்கிக்கும் இவ்வாறு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. வங்கி கட்டமைப்புக்கள் செலாவணி விகித ஸ்திரத்தன்மை மற்றும் செலவாணியை எளிதில் பணமாக்கக்கூடிய நோக்கத்துடன் இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபையின் சிபாரிசுக்கு அமைவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டிற்கு பொருட்களை இறக்குமதி செய்யும் முறைகளின் போது கடன் சான்று பத்திரத்தை (Letter of Credit) மேற்கொள்ளும் சந்தர்ப்பத்தில் 100% பண வரம்புடன் வழங்கப்பட வேண்டும் என்று மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ளது. - [குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்](https://minnal24.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%ae%a9%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%af%81-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a3%e0%af%88%e0%ae%95-3/): காலி முகத்திடல் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோர், இன்று செவ்வாய்க்கிழமை குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை உடனடியாக கைது செய்யுமாறு கோரியே, இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த மே 09ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் குறித்து வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று செவ்வாய்க்கிழமை காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார். இந்நிலையில், மே 09 தாக்குதலுக்கும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கும் தொடர்பு இருப்பதாகவும், அவரை உடனடியாக கைது செய்ய கோரியும் இவ்வாறு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. - [தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற பூச்சிக்கொல்லி மருந்துகள் பறிமுதல்](https://minnal24.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d-2/): தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற பூச்சிக்கொல்லி மருந்துகளை தமிழக கடலோரப் பாதுகாப்பு பிரிவு பொலிஸார் பறிமுதல் செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தமிழகம் – தூத்துக்குடியில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற 3 இலட்சம் இந்திய ரூபா பெறுமதியான பூச்சிக்கொல்லி மருந்துகளே நேற்று திங்கட்கிழமை மீட்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பின்போது, போத்தல்களில் அடைக்கப்பட்டிருந்த 375 லீட்டர் பூச்சிக்கொல்லி மருந்துகள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இக் கடத்தலுடன் தொடர்புடையவர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். - [வெளிநாட்டிலிருந்து அனுப்பப்பட்ட பொதிகளிலிருந்து போதைப்பொருள் மீட்பு](https://minnal24.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%85%e0%ae%a9%e0%af%81%e0%ae%aa/): வெளிநாடுகளில் இருந்து நாட்டிற்கு கடத்தி வரப்பட்ட குஷ் என்ற சட்டவிரோத போதைப்பொருளை இலங்கை சுங்கப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். இதன் பெறுமதி 258 மில்லியன் ரூபாவாகும். போதைப்பொருள் குறித்து இலங்கை தபால் வெளிநாட்டு பொதிகள் பிரிவினரால் இன்று செவ்வாய்க்கிழமை காலை சுங்க பிரிவிற்கு அறிவிக்கப்பட்டது. கனடா மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட 03 பொதிகளில் இருந்தே இவ்வாறு போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. - [சீனாவின் பொலிஸ் பிரிவு கணினி மையத்தில் ஊடுருவல்](https://minnal24.com/%e0%ae%9a%e0%af%80%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81-%e0%ae%95/): சீனாவின் பொலிஸ் பிரிவு கணினி மையத்தில் ஊடுருவல் இடம்பெற்று சில தரவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தப்பி சென்றால் சுட்டுக் கொல்ல உத்தரவிடப்பட்டுள்ள சிலரது படங்கள் அடங்கலாக சிறையில் உள்ள ஆயிரக்கணக்கானோரின் படங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. குறித்த தகவல்கள் முன்னதாக வெளியிடப்பட்டிருந்த போதிலும் தற்போதே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மீள்கல்வி முகாம்கள் என்று சீன அரசாங்கம் அழைக்கின்ற முகாம்களில் உய்கர் முஸ்லிம்கள் மற்றும் பிற சிறுபான்மையினர் சுமார் 10 லட்சம் பேர் தங்கவைத்திருப்பதற்காக சீனா மீது பல விமர்சனங்கள் கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்டது. எனினும், இந்த விமர்சனங்களை சீனா மறுத்தது. அதன்பின், ஜின்ஜியாங்கில் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் இடம்பெற்றபோது பயங்கரவாதத்தை ஒழிக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள முகாம்களை அமைத்ததாக சீனா பின்னர் ஏற்றுக் கொண்டது. இந்நிலையில், தற்போது இவ் ஊடுருவல் மூலம் வெளியாகியுள்ள படங்களில் உய்கர் இன மக்களின் படங்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. - [பேக்கரி பொருட்களின் விலை அதிகரிப்பு?](https://minnal24.com/%e0%ae%aa%e0%af%87%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2-3/): பேக்கரி பொருட்கள் மற்றும் ஏனைய உணவுப் பொருட்களின் விலைகளை 10 விகிதத்தால் அதிகரிப்பதற்கு, அகில இலங்கை சிற்றூண்டி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. - [அமைச்சு பதவியை ஏற்பது தொடர்பில் இன்னும் தீர்மானிக்கவில்லை - பிள்ளையான்](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%8f%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%af%8a/): பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கும் நிலைப்பாட்டிலேயே தாம் இருப்பதாக, நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவனேசத்துறை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தேசிய ஊடகமொன்றிற்கு தெரிவித்துள்ளார். எனினும், தாம் அமைச்சு பதவியை ஏற்பதா? இல்லையா? என்பது தொடர்பில் இதுவரை எந்தவொரு தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லை எனவும், அவர் தெரிவித்துள்ளார். - [பதில் நிதி அமைச்சராக ஜனாதிபதி](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%be/): பதில் நிதி அமைச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார். நிதி அமைச்சர் ஒருவர் நியமிக்கப்படும் வரையில் ஜனாதிபதி செயற்படுவாரென அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் ஜனாதிபதி, கலந்துரையாடி விரைவில் நிதி அமைச்சர் ஒருவரை நியமிப்பார் எனவும் கூறினார். - [இன்றைய டொலர் பெறுமதி](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%88%e0%ae%af-%e0%ae%9f%e0%af%8a%e0%ae%b2%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf/): இலங்கை மத்திய வங்கி இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி ரூபா 354.40 சதமாகவும், விற்பனைப் பெறுமதி ரூபா 364.35 சதமாகவும்  பதிவாகியுள்ளது. - [ஐந்து மாதங்களில் மாத்திரம் 282,506 கடவுச்சீட்டுக்கள் விநியோகம்](https://minnal24.com/%e0%ae%90%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0/): இந்த வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில் மாத்திரம் 282,506 கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த வருடம் 382,506 வெளிநாட்டு கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.. கடவுச்சீட்டை பெற்றுக் கொள்வதற்காக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு அருகில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கினர். அதன்படி, நாள் ஒன்றுக்கு ஆயிரத்து 500க்கும் அதிகமானவர்களுக்கு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதான காரியாலயம் ஊடாக சேவை வழங்கப்படுகின்றது. பொருளாதார நெருக்கடி காரணமாக பெரும்பாலானோர் வெளிநாட்டு வேலையை நாடுகின்றமையே, இதற்கான காரணம் என குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் பியும் பண்டார தெரிவித்துள்ளார் - [உள்ளூராட்சி சபை ஊழியர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு கற்கைநெறிகள்](https://minnal24.com/%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%82%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%aa%e0%af%88-%e0%ae%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3/): -கல்முனை நிருபர்- இலங்கை உள்ளுராட்சி மன்ற நிறுவனமும், இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகமும் இணைந்து அம்பாறை மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளின் ஊழியர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு, அத்தியாவசியமான சான்றிதழ் கற்கைநெறிகளை எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்கப்பட வேண்டும் என தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் தெரிவித்தார். இலங்கை உள்ளுராட்சி மன்ற நிறுவனத்தின் நிறைவேற்று குழு உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் நேற்று புதன்கிழமை  இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்து, உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் மற்றும் அபிவிருத்தி நிலையத்தின் பணிப்பாளர் பேராசிரியர் ஜாஃபர் ஆதம்பாவா ஆகியோருடன் இது தொடர்பாக கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். உபவேந்தர் மேலும் இங்கு கருத்து தெரிவிக்கையில், சமூக மாற்றத்தை எதிர்கொள்ளும் புத்திஜீவிகளை கல்வியினூடாக உருவாக்க வேண்டுமென்றும், தற்கால நவீன சவால்களை எதிர்நோக்க கூடிய வினைத்திறன் மிக்க வேலைகளை வழங்க வேண்டுமென்றும், பல்கலைக்கழகத்தை சமூகங்களில் தொடர்புபடுத்தல் வேலைத்திட்டத்தின் கீழ் துறைசார்ந்த இவ்வாறான பயிற்சி பட்டறைகள், கருத்தரங்குகள், […] - [நாடாளுமன்றத்தில் பிரதமரின் விசேட உரை](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b0/): பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜூன் 07ஆம் திகதி அன்று நாடாளுமன்றில் விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார். ஜூன் 07 முதல் 10 வரையான திகதிகளில் நாடாளுமன்றம் கூடவுள்ளது. அதன்படி, ஜூன் 07ஆம் திகதி அன்று பிரதமர் நாடாளுமன்றில் விசேட உரையொன்றை ஆற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.   - [இலங்கைக்கான இந்திய துணை தூதருக்கு செல்வம் அடைக்கலநாதன் அவசர கடிதம்](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a4%e0%af%81%e0%ae%a3%e0%af%88/): -மன்னார் நிருபர்- மன்னார் மற்றும் முல்லைத்தீவு ஆகிய இரு மாவட்டங்களிலும் வாழும் பெரும்பான்மையான மக்கள் தங்கள் வாழ்வாதார தொழிலாக மீன்பிடி மற்றும் விவசாயம் ஆகிய இரு தொழில்களிலும் ஈடுபட்டு அதனூடாக தங்களது வாழ்வாதாரத்திற்கு தேவையான வருமானத்தினை பெற்று தமது வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். எனினும், குறித்த இரு மாவட்டங்களிலும் குறித்த தொழிலை மேற்கொண்டு வருகிறவர்களுக்கு தமது தொழில் நடவடிக்கைகளுக்கு தேவையான மண்ணெண்ணையை உரிய முறையில் பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக இலங்கைக்கான இந்திய துணை தூதருக்கு இன்று வியாழக்கிழமை  காலை அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். குறித்த கடிதத்தில், மன்னார் மற்றும் முல்லைத்தீவு ஆகிய இரு மாவட்டங்களிலும் வாழும் பெரும்பான்மையான மக்கள் தங்கள் வாழ்வாதார தொழிலாக மீன்பிடி மற்றும் விவசாயம் ஆகிய இரு தொழில்களையும் மேற்கொண்டு வருகின்றனர். மன்னார் மாவட்டத்தை சேர்ந்த கடற்தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு மட்டும் 78 […] - [மகிந்த ராஜபக்ஷவை இந்தியாவிற்கு அழைக்கிறார் சுப்ரமணியம் சுவாமி](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%aa%e0%ae%95%e0%af%8d%e0%ae%b7%e0%ae%b5%e0%af%88-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be/): இலங்கையின் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இந்தியாவிற்கு அழைக்கவுள்ளதாக இந்தியாவின் முன்னாள் அமைச்சர் சுப்ரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் நேற்று புதன்கிழமை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். “எனது நண்பரும் இலங்கை தலைவருமான மஹிந்த ராஜபக்ஷவை புதுடில்லியில் பொது நிகழ்வு ஒன்றில் உரையாற்றுவதற்காகவும், இந்து பௌத்த ஆலயங்களிற்கு விஜயம் மேற்கொள்வதற்காகவும் அழைக்கவுள்ளேன். அவர் மழைக்காலத்திற்கு முன்னர் ஜூன் மாதத்தில் இந்தியாவிற்கு வர முடியும் என நான் எதிர்பார்க்கின்றேன்”, என அந்த பதிவில் மேலும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, மே 9 ஆம் திகதி வன்முறை சம்பவம் இடம்பெற்ற போது, இலங்கைக்கு இந்திய இராணுவத்தை அனுப்பி அரசியல் அமைப்பின் சுயாதீனத்தன்மையை உறுதி செய்ய வேண்டுமென, அவர் டுவிட்டர் பதிவொன்றை இட்டிருந்தமையும், அந்த பதிவிற்கு இந்திய அரசு மறுப்பு தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. - [தொலைபேசி மற்றும் இணைய சேவைக் கட்டணங்கள் அதிகரிப்பு?](https://minnal24.com/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b2%e0%af%88%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a3%e0%af%88%e0%ae%af-%e0%ae%9a%e0%af%87/): நாட்டில் தொலைபேசி மற்றும் இணைய சேவைக் கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது. உடன் நடைமுறைக்கு வரும் வகையில் பெறுமதி சேர் வரி 12% ஆக நேற்று முன் தினம் முதல் அதிகரிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையிலேயே வரி அதிகரிப்பு காரணமாக தொலைபேசி மற்றும் இணைய சேவைக் கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது   - [மீண்டும் இரவுநேர மின்வெட்டு](https://minnal24.com/%e0%ae%ae%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%b5%e0%af%81%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b5%e0%af%86%e0%ae%9f/): இன்று வியாழக்கிழமை முதல் மீண்டும்  நாடளாவிய ரீதியில் இரவுநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும், என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. க.பொ.த சாதாரண தரப் பரீட்சை காரணமாக மே 23 ஆம் திகதி முதல் இரவு வேளைகளில் மின்வெட்டு அமுல்படுத்துவது தடை செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று புதன்கிழமையுடன் க.பொ.த.சாதாரண தரப்பரீட்சைகள் நிறைவடைந்துள்ள நிலையில், இன்று முதல் எதிர்வரும் 4 ஆம் திகதி வரை இரவு வேளையில் ஒரு மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படும், என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று வியாழக்கிழமை மற்றும் நாளை வெள்ளிக்கிழமை ஆகிய இரு தினங்களும், பகல் வேளையில் ஒரு மணி நேரமும், இரவில் ஒரு மணி நேரமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. ஜூன் 4 ஆம் திகதி சனிக்கிழமை இரவு வேளையில் மட்டும் ஒரு மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படும், எனவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை, ஜூன் 5 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது, […] - [அமெரிக்காவில் வைத்தியசாலை ஒன்றில் துப்பாக்கி பிரயோகம் : 4 பேர் உயிரிழப்பு](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%ae%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%9a%e0%ae%be/): அமெரிக்காவின் ஒக்லோமாவில் உள்ள வைத்தியசாலையில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. உயிரிழந்தவர்களில் துப்பாக்கி பிரயோகத்தை நடத்திய நபரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், இச்சம்பவத்தில் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. வைத்தியசாலைக்குள் திடிரென பிரவேசித்த நபர் ஒருவரால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, குறித்த வைத்தியசாலையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், துப்பாக்கி பிரயோகத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. - ["சார ஸ்ரீ லங்கா" உணவுப் பாதுகாப்பு செயற்திட்டம்](https://minnal24.com/%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af%80-%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be-%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b5%e0%af%81%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4/): உலகளாவிய ரீதியில் இன்று ஏற்பட்டுள்ள உணவுப் பஞ்சம், மற்றும் எமது நாட்டில் ஏற்பட்டுள்ள மிக மோசமான பொருளாதார நெருக்கடி என்பவற்றின் காரணமாக எமக்கான உணவை எமது மண்ணிலேயே உற்பத்தி செய்ய வேண்டிய நிலை எமக்கு ஏற்பட்டுள்ளது நாம் அறிந்ததே, என மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இளைஞர் யுவதிகளுக்கான தொழில்வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதில் முக்கிய பங்காற்றி வரும் மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களம் தேசிய ரீதியில் ஏற்பட்டுள்ள இவ் உணவு நெருக்கடிக்கு தீர்வு காணும் நோக்கில் பல திணைக்களங்களின் கூட்டிணைவில் வீடுகள், மற்றும் பிரதேச ரீதியாக சிறு பயிர்செய்கையை ஊக்குவிக்கும் ‘சார ஸ்ரீ லங்கா’ உணவுப் பாதுகாப்பு செயற்திட்டத்தில் இறங்கியுள்ளது. சிறு பயிர்ச்செய்கையை தனிப்பட்ட முறையிலோ, கூட்டு முயற்சியாகவோ செய்யும், அல்லது புதிதாக ஆரம்பிக்கவோ விரும்புவோர் உங்கள் பிரதேச மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் ஆதரவையும் வழிகாட்டலையும் பெற்றுக்கொள்ள முடியும், என அத்திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. - [நாடாளுமன்ற விவகாரங்கள் பற்றிய குழுவின் விஷேட கூட்டம் இன்று](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa/): நாடாளுமன்ற விவகாரங்கள் பற்றியக்குழுவின் விஷேட கூட்டம் ஒன்று இன்று வியாழக்கிழமை முற்பகல் இடம்பெறவுள்ளது. இதன்போது, நாடாளுமன்றத்தின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதுடன், நாடாளுமன்ற உறுப்பினர்களின் உணவு வேளை தொடர்பிலும் இதன்போது தீர்மானம் ஒன்று எட்டப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, நாடாளுமன்ற அமர்வை எதிர்வரும் 7 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. - [சுவிட்சர்லாந்தில் இன்று இடம்பெற்ற முக்கிய சம்பவங்கள்](https://minnal24.com/%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-7/): சுவிட்சர்லாந்தில் மாநிலங்கள் தோறும் இன்று புதன்கிழமை இடம்பெறும் முக்கிய சம்பவங்களின் தொகுப்பு. சுக்- லின்டன்சம் ஏ4 அதிவேக நெடுஞ்சாலையில் இன்று பிற்பகல் 4.30 மணியளவில் மூன்று கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் எவ்வித உயிர்சேதங்களும் ஏற்பாடவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து காரணமாக சுமார் ஒரு இலட்சம் சுவிஸ் பிரங்குகள் வரை சேதம் ஏற்பட்டுள்ளதாக ஆரம்ப மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. சோலத்தூன்- டுலிக்கன் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் இன்று நண்பகல் 2 மணியளவில் இடம்பெற்ற தீவிபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த வீட்டின் சமையலறையில் ஏற்பட்ட தீ பரவல்தான் விபத்திற்கான காரணம் என பொலிசார் தெரிவித்துள்னர். பெர்ன்- சுலூஸ் வீதியில் இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் 61 வயதான ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வீதியால் நடந்து சென்றிருந்தவர் மீது கார் மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்து […] - [தொழில் திணைக்களத்தின் அலுவலகங்கள் மூடப்படும்](https://minnal24.com/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a3%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b2/): தொழில் திணைக்களத்தின் அனைத்து வலய அலுவலகங்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை மூடப்படும், என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, தொழில் திணைக்களத்தின் கொழும்பு பிரதான அலுவலகம் மற்றும் ஏனைய வலய அலுவலகங்கள் வெள்ளிக்கிழமைகளில் மூடப்படும், எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. - [சிகரெட்டுகளின் விலை அதிகரிப்பு](https://minnal24.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95/): சிகரெட்டுகளின் விலைகள் 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று புதன்கிழமை முதல் அமுலாகும் வகையில் இவ்விலை அதிகரிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. பெறுமதி சேர் வரி அதிகரிப்பு காரணமாக இவ்வாறு சிகரெட்டுகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. - [அட்டுலுகம சிறுமி ஆய்ஷா படுகொலை : சந்தேக நபருக்கு 9ஆம் திகதி வரை விளக்கமறியல்](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%b2%e0%af%81%e0%ae%95%e0%ae%ae-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b7%e0%ae%be-%e0%ae%aa/): பண்டாரகமை – அட்டுலுகம சிறுமி ஆய்ஷா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 9ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு, பாணந்துறை நீதிவான் உத்தரவிட்டுள்ளார். சந்தேக நபரை இன்று புதன்கிழமை பாணந்துறை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. - [இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்கள்](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf-6/): இன்று புதன்கிழமை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 355 ரூபா 12 சதமாகவும், விற்பனை பெறுமதி 365 ரூபா 09 சதமாகவும், பதிவாகியுள்ளது. இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 4 ரூபா 64 சதமாக பதிவாகியுள்ளது. மேலும், ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 445 ரூபா 60 சதம், விற்பனை பெறுமதி 461 ரூபா 11 சதம். யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 381 ரூபா 42 சதம், விற்பனை பெறுமதி 392 ரூபா 25 சதம். சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 367 ரூபா 91 சதம், விற்பனை பெறுமதி 381 ரூபா 84 சதம். கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 279 ரூபா 14 சதம், விற்பனை பெறுமதி 290 ரூபா 38 சதம். அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் […] - [மதுபோதையில் தனது 5 வயது மகளை காட்டுமிராண்டிதனமாக தாக்கிய தந்தை](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%a4%e0%af%81-5-%e0%ae%b5%e0%ae%af%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%ae%95/): மதுபோதையில் தந்தையொருவர் தனது மகளை காட்டுமிராண்டிதனமாக தாக்கிய சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. யாழ்.கெற்பேலி மேற்கு மிருசுவிலில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீட்டில் தாய் இல்லாத போது, தந்தை மதுபோதையில் வீட்டிற்கு வந்து தனது 5 வயது மகள் மீது காட்டுமிராண்டி தனமாக தாக்கியதில், கை முறிந்து காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். - [மதுபானங்களின் விலை சடுதியாக அதிகரிப்பு](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a9%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%9a%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf/): இன்று புதன்கிழமை முதல் அமுலாகும் வகையில் 750 மில்லிலீற்றர் மதுபான போத்தல் ஒன்றின் விலை 520 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், பியர் போத்தல் ஒன்றின் விலை 30 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெறுமதி சேர் வரி அதிகரிப்பு காரணமாக இவ்வாறு மதுபான போத்தலின் விலை அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   - [கட்டுப்பாடு விதிக்கப்பட்ட 369 பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதி](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f/): மார்ச் மாதம் 9ஆம் திகதி இறக்குமதி கட்டுப்பாடு விதிக்கப்பட்ட 369 பொருட்களை, புதிய வரி உள்ளிட்ட சட்டங்களுக்கு அமைய இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. தொடர்புடைய செய்திகள்:- https://www.minnal24.com/?p=66313 - [நாட்டிற்கே முன்னுதாரணமாக செயற்பட்ட மட்டக்களப்பு மாவட்ட செயலகம்](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%87-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%ae%e0%ae%be/): நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக எரிபொருளை மீதப்படுத்தும் நோக்கில் இன்று  புதன்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலக அரச உத்தியோகத்தர்கள் அனைவரும் மாவட்ட செயலகத்திற்கு பொது போக்குவரத்து மற்றும் துவிச்சக்கர வண்டி மூலமாகவும் அலுவலகத்திற்கு சமூகமளித்தனர். தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையில் அனைத்துப் பொருட்களினதும் விலைகள் அதிகரித்துள்ளன. எரிபொருள் விலை உச்சத்தைத் தொட்டுவிட்டது, அத்தியாவசியப் பொருட்களைக் கூட இறக்குமதி செய்வதற்கு டொலர் இல்லாமல் நாட்டின் கடன் சுமை அதிகரித்துவிட்டது. இந்நிலைமைகளுக்கு மத்தியில் இலங்கையர்கள் என்ற அடிப்படையில் எரிபொருளை மீதப்படுத்தி நாட்டிற்கு நம்மாலான பொருளாதார பங்களிப்பை வழங்க வேண்டியுள்ளதன் அடிப்படையில், பொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் மூலம் அரச திணைக்களங்களுக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் ஆலோசனையின் பிரகாரம், எரிபொருளை மீதப்படுத்தும் நோக்கில் வாராந்தம் ஒவ்வொரு புதன்கிழமையும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களை துவிச்சக்கரவண்டி மற்றும் பொதுப்போக்குவரத்தில் அலுவலகத்திற்கு சமூகமளிக்குமாறு  பணிப்புரை […] - [முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள அறிவிப்பு](https://minnal24.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-2/): தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை ஏற்கின்ற தமது கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில், முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன அறிவிப்பொன்றை விடுத்துள்ளார். அதன்படி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து அமைச்சுப்பதவிகளை ஏற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கப்படுவார்கள், என அவர் தெரிவித்துள்ளார். - [வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு ஒருவர் உயிரிழப்பு](https://minnal24.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86/): சீரற்ற வானிலை காரணமாக, இரத்தினபுரி – கிரியெல்ல பகுதியில் நிவாரணப் பணியில் ஈடுபட்ட ஒருவர் உயிரிழந்துள்ளார். கடமைகளை நிறைவுசெய்து வீடு திரும்பிக்கொண்டிருந்த குறித்த நிவாரண சேவை அதிகாரி  இரத்தினபுரி – குருவிட்ட பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டு  உயிரிழந்ததாக, அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது. சீரற்ற வானிலை காரணமாக, 6 மாவட்டங்களுக்கு உட்பட்ட 144 குடும்பங்களைச் சேர்ந்த 576 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 236 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மையத்தின் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.   - [யாழ்.பொதுநூலகம் எரிக்கப்பட்டு 41 ஆண்டுகள் நிறைவு நினைவேந்தல்](https://minnal24.com/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a4%e0%af%81%e0%ae%a8%e0%af%82%e0%ae%b2%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d/): யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்டு 41 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை முன்னிட்டு, இன்று புதன்கிழமை முற்பகல் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. யாழ்ப்பாண நூலகத்தில் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. 1981 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி நள்ளிரவு, யாழ்.நூலகம் தீயூட்டப்பட்டது. யாழ்ப்பாணப் பொதுநூலகம் எரிக்கப்பட்ட காலத்தில், அங்கு சுமார் 97,000 அரிய நூல்கள் இருந்ததுடன், தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகவும் திகழ்ந்தது. அதன்போது அங்கிருந்த பல பாரம்பரிய நூல்கள் தீயினால் அழிவடைந்தன யாழ்ப்பாண நூலகம் 1933 ஆம் ஆண்டில் இருந்து கட்டியெழுப்பப்பட்டு வந்துள்ளது. யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் இருந்து கிடைக்கப்பெற்ற நூல்கள், நூற்றாண்டுகள் பழமையான ஓலைச்சுவடிகள், யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்ட பல பழமையான பத்திரிகைகளின் மூலப் பிரதிகள் போன்றவை நூலகத்தில் வைக்கப்பட்டிருந்தன .1981 ஆம் ஆண்டு தீயூட்டி எரிக்கப்பட்டதன் பின்னர், 2004ஆம் ஆண்டில் நூலகம் புனரமைக்கப்பட்டு மீளத் திறக்கப்பட்டது. தற்போது யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் 125,000 […] - [இலங்கையில் குழந்தைகள் எதிர்நோக்கியுள்ள ஆபத்து](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a4/): கடந்த சில நாட்களாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 53 குழந்தைகளில் 11 பேர் ஊட்டச்சத்து குறைபாடுடையவர்கள், என கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தைகள் நல வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். அதன்படி, இலங்கையில் உணவுத் தட்டுப்பாடு காரணமாக சிறுவர்கள் மத்தியில் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளில் நால்வருக்கு கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாடு நோய்க்கான அறிகுறிகள் காட்டியதாகவும், அந்த குழந்தைகளுக்கு விசேட ஊட்டச்சத்து உணவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இதேவேளை, நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், அண்மைய நாட்களில் 100க்கும் அதிகமான நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் பதிவாகியுள்ளதாகவும், கொவிட் நோயின் போது மன அழுத்தம் மற்றும் உடல் உழைப்பின்மை ஆகியவை பிள்ளைகளின் நீரிழிவு நோய் தாக்கத்திற்கு ஒரு முக்கிய காரணியாக இருக்கலாம் என நம்பப்படுவதாகவும், அவர் சுட்டிக்காட்டினார். இந்த நிலையில் இருந்து தத்தமது குழந்தைகளை […] - [வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க பிரதமர் நடவடிக்கை](https://minnal24.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa-2/): நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க, பிரதமர் ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார். வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக திறைசேரி நடவடிக்கை திணைக்களம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார். அதன்படி, பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் களுத்துறை, கம்பஹா மற்றும் காலி ஆகிய மாவட்ட செயலாளர்களுக்கு இடையில் ஆரம்ப கட்ட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. மேலும், மாவட்ட செயலாளர்கள் ஊடாக நிவாரண நிதியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, திறைசேரிக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். - [அட்டுலுகம சிறுமி கொலை : சந்தேகநபர் இன்று நீதிமன்றில் வாக்குமூலம்](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%b2%e0%af%81%e0%ae%95%e0%ae%ae-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%ae%bf-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%88-%e0%ae%9a%e0%ae%a8/): பண்டாரகம – அட்டுலுகம பகுதியில் 9 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர், இன்று புதன்கிழமை நீதிமன்றில் வாக்குமூலம் வழங்கவுள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை சந்தேக நபரை பாணந்துறை பிரதான நீதவான் ஜயருவன் திஸாநாயக்க முன்னிலையில் ஆஜர்படுத்திய பொலிஸார், விசாரணைகளுக்காக அவரை எதிர்வரும் 9ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கோரிக்கை விடுத்தனர். அதற்கமைய, சந்தேகநபரை இன்று புதன்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க பாணந்துறை பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார். வழக்குப் பொருளாக, குறித்த சிறுமி கொலை செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் அணிந்திருந்த ஆடை பொலிஸாரால் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், சந்தேகநபர் சார்பில், சட்டத்தரணிகள் எவரும் மன்றில் முன்னிலையாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. - [மிருகக்காட்சிசாலையில் உள்ள மிருகங்களுக்கு உணவு வழங்குவதில் சிக்கல்](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89/): நிதி நெருக்கடி காரணமாக, தெஹிவலை மிருகக்காட்சிசாலையில் உள்ள மிருகங்களுக்கு உணவுகளை வழங்குவதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதாக, வனஜீவிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் வனஜீவிகள் திணைக்கள அதிகாரிகளினால், விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வனஜீவிகள் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே, அதிகாரிகள் இவ்வாறு தெரிவித்தனர். மேலும், மிருகங்களுக்கு உணவுகளை வழங்குவதில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவு, எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்வு போன்றவையும்’ காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. - [குரங்கு அம்மை நோய் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களை வேகமாகத் தாக்கும்](https://minnal24.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%85%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%a8%e0%af%8b%e0%ae%af%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d/): -யாழ் நிருபர்- உலக நாடுகளில் தற்போது பரவி வரும் அம்மை நோயானது கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் வேகமாகத் தாக்கும், என யாழ் போதனா வைத்தியசாலையின் நோயியல் மகப்பேற்று வைத்திய நிபுணர் அப்பாத்துரை சிறீதரன் தெரிவித்தார். நேற்று செவ்வாய்க்கிழமை யாழ் போதனா வைத்தியசாலையின் மருத்துவ சங்கம் ஏற்பாடு செய்த, குரங்கு அம்மை நோய் தொடர்பில் விழிப்பூட்டும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 1958ஆம் ஆண்டு ஆபிரிக்க ஆய்வு கூடம் ஒன்றில் ஆய்வு பணிக்காக வைத்திருந்த குரங்கு ஒன்றில் முதன் முதலில் குரங்கு அம்மை நோய் இனம் காணப்பட்டது. இலங்கையில் குரங்கு அம்மை நோயின் தாக்கம் உணரப்படாமல் விட்டாலும் இலங்கை குறித்த நோய் தாக்காது என கூற முடியாது. ஏனெனில் சுற்றுலாப்பயணிகளின் வருகை பொருட்கள் பண்டங்கள் பரிமாற்றம் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற நிலையில் குறித்த நோயானது வீடுகளுக்கே செல்லக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது. கொரோனா […] - [மர்மமான முறையில் உயிரிழந்த இளம் குடும்பஸ்தர்கள் : மரணத்திற்கான காரணம் வெளியானது](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d%e0%ae%ae%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%a8/): -மன்னார் நிருபர்- மன்னாரில் கடந்த திங்கட்கிழமை  இரவு வாகனத்திற்குள் மர்மமான முறையில் உயிரிழந்த இரண்டு இளம் குடும்பஸ்தர்களும், மதுபானம் மற்றும் போதைப்பொருள் பயன்படுத்திய நிலையில் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாகவே உயிரிழந்துள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 30 ஆம் திகதி இரவு மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கி காரில் பயணித்த போது உயிரிழந்த, இரண்டு இளம் குடும்பஸ்தர்களின் பிரேதப் பரிசோதனை யாழ் வைத்தியசாலையில் இடம் பெற்றுள்ளது. இதன் போதே மதுபானம் மற்றும் போதைப்பொருள் பயன்படுத்தியமையினால் ஏற்பட்ட ஒவ்வாமை உயிரிழந்தமைக்கான காரணம் என தெரிய வந்துள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 30 ஆம் திகதி இரவு மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கி காரில் நான்கு பேர் பயணித்துக் கொண்டிருந்த போது மன்னார் உயிலங்குளம் பகுதியில் ஒரே நேரத்தில் இருவர் திடீரென சுகவீனமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த இருவரும் அதே வாகனத்தில் மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர்கள் பேசாலை […] - [இலங்கையிலிருந்து மேலும் 3 பேர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம்](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%af%87%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae-3/): -மன்னார் நிருபர்- இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து, மேலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் அகதிகளாக தனுஷ்கோடி அடுத்த கோதண்டராமர் கடற்கரையை இன்று புதன்கிழமை சென்றடைந்துள்ளனர். அவர்கள் மீட்ட மெரைன் பொலிஸார், ராமேஸ்வரம் மெரைன் காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இலங்கையில் இருந்து இது வரை தமிழகத்திற்கு 83 இலங்கை தமிழர்கள் அகதிகளாக சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. - [வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை](https://minnal24.com/%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a3%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3-5/): எதிர்வரும் 36 மணித்தியாலங்களில் நாட்டின் பல பாகங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதற்கமைய, மேல், சப்ரகமுவ,  வடக்கு,  வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் சில பாகங்களிலும்,  கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பாகங்களிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிகளவில் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும், என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் வீசும் காற்றின் வேகம் 40 – 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடும், எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. - [சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்](https://minnal24.com/%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a3-%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b0%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/): நாட்டில் நிலவும் அசாதாரண காலநிலையால் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக, பரீட்சை நிலையங்களுக்கு செல்ல முடியாத சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் அருகில் உள்ள பரீட்சை நிலையத்தில் பரீட்சை எழுத முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இதேவேளை, டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மாணவர்களுக்காக ஐ.டி.எச் வைத்தியசாலையில் பரீட்சை நிலையமொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. - [வாகனத்தில் திடீரென உயிரிழந்த இரு இளம் குடும்பஸ்தர்கள்](https://minnal24.com/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f%e0%af%80%e0%ae%b0%e0%af%86%e0%ae%a9-%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf/): -மன்னார் நிருபர்- மன்னாரில் திடீரென உயிரிழந்ததாக கருதப்படும் இரு இளம் குடும்பஸ்தர்களின் சடலங்கள் நேற்று திங்கட்கிழமை மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில் குறித்த இரு குடும்பஸ்தர்களின் மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளது. மன்னாரில் இருந்து வாகனம் ஒன்றில் நேற்று திங்கட்கிழமை இரவு நான்கு நபர்கள் கொழும்பு நோக்கி பயணித்த போது மன்னார் உயிலங்குளம் பகுதியில் வைத்து குறித்த பயணம் செய்த இரண்டு இளம் குடும்பஸ்தர் களுக்கும் திடீர் சுகயீனம் ஏற்பட்டது. இதன் போது உடனடியாக குறித்த வாகனம் மீண்டும்  மன்னார் வைத்தியசாலைக்கு வந்த போது குறித்த இரு குடும்பஸ்தரும் வாகனத்தினுள்ளேயே உயிரிழந்தனர்.  மேலும் குறித்த  வாகனத்தில் வந்த இருவரும் சுகவீனமடைந்த நிலையில்  வைத்தியசாலையில் அமைக்கப்பட்டனர். பேசாலையைச் சேர்ந்த எம்.பிரதீப் (வயது-26) மற்றும் காட்டாஸ் பத்திரியை சேர்ந்த எம்.மசூர் (வயது-35) ஆகிய இரு இளம் குடும்பத்திலே இவ்வாறு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர்.  திடீர் சுகயீனமடைந்து மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கும் முன் உயிரிழந்து […] - [உடன் அமுலாகும் வகையில் வரிகள் அதிகரிப்பு](https://minnal24.com/%e0%ae%89%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%ae%e0%af%81%e0%ae%b2%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5/): உடன் அமுலுக்கு வரும் வகையில் வட் வரி 8% லிருந்து 12% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது தொலைத்தொடர்பு வரி 11.25% லிருந்து 15% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. - [தனது 6 குழந்தைகளை அடுத்தடுத்து கிணற்றில் வீசி கொலை செய்த தாய்](https://minnal24.com/%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%a4%e0%af%81-6-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%85%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%9f/): பெண்ணொருவர் தனது 6 குழந்தைகளை கிணற்றில் வீசி கொலை செய்துள்ளார். இச்சம்பவம் மகாராஷ்டிரா மாநிலம், ராய்காட் மாவட்டம், மஹாத் தாலுகாவில் உள்ள காரவலி கிராமம் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியை சேர்ந்த 30 வயதான பெண் ஒருவர், அங்குள்ள கிணற்றுக்குள் தனது 6 குழந்தைகளை அடுத்தடுத்து வீசி எறிந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்ட அயலவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். உடனடியாக விரைந்து சென்ற பொலிஸார் கிணற்றுக்குள் கிடந்த குழந்தைகளை மீட்ட போது, குழந்தைகள் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. நீரில் மூழ்கியவர்களில் 18 மாதமே ஆன பச்சிளம் குழந்தை உட்பட 10 வயதுக்கு உட்பட்ட ஐந்து பெண் குழந்தைகளும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனைத் தொடர்ந்து, குறித்த பெண்ணை கைது செய்த பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர். குடும்ப தகராறு காரணமாக அந்த பெண்ணை அவரது கணவர் வீட்டை சேர்ந்தவர்கள் தாக்கியுள்ளனர் இதனால் வெறுப்படைந்த அவர், பெற்ற தனது குழந்தைகளை கிணற்றில் […] - [ஹப்புத்தலையில் 10 நாட்களுக்கு பின் இன்று மண்ணெண்ணை வழங்கப்பட்டது](https://minnal24.com/%e0%ae%b9%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-10-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81-2/): -பதுளை நிருபர்- நாட்டில் நிலவும் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடால் மக்கள் தமது அன்றாட வாழ்வை முன்னெடுத்துச் செல்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். இந்நிலையில், பதுளை மாவட்டம் ஹப்புத்தலையில் 10 நாட்களுக்கு பிறகு இன்று செவ்வாய்க்கிழமை மண்ணெண்ணை விநியோகிக்கப்பட்டது. 1 கிலோ மீற்றர் வரையில் நீண்ட வரிசையில் நின்று மக்கள் மண்ணெண்ணையை பெற்றுச் சென்றனர். ராணுவ பாதுகாப்பிற்கு மத்தியில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணை வழங்கப்பட்டது; மேலும், ஒவ்வொருவருக்கும் 1000 ரூபாவிற்கு மாத்திரம் மண்ணெண்ணை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. - [மின் வெட்டு தொடர்பான அறிவித்தல்](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf/): எதிர்வரும் ஜூன் 2ஆம் திகதியும், 3ஆம் திகதியும், 2 மணித்தியாலங்கள் மின்வெட்டு இடம்பெறும், என பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதேவேளை, ஜூன் 4ஆம் திகதி ஒரு மணித்தியாலம் மின் வெட்டு இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜூன் 5ஆம் திகதி மின்வெட்டு இடம்பெறாது, என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். - [உலக சாதனைப் புத்தகத்தில் தனது பெயரை பதிவு செய்துள்ள அம்பாறை சிறுமி](https://minnal24.com/%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/): அம்பாறை மாவட்டத்தின் மின்ஹத் லமி என்ற சிறுமி உலக சாதனைப் புத்தகத்தில் (international book of world record) தனது பெயரை பதிவு செய்துள்ளார். அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை அல் மினன் வீதியில் வசிக்கும், ஸர்ஜுன் அக்மல் – பாத்திமா நுஸ்ஹா தம்பதிகளின் மகளான மின்ஹத் லமி, தனது இரண்டரை வயதில் 120 உலக நாடுகளின் தலைநகரங்களை இரண்டு நிமிடத்தில் மிக வேகமாகக் கூறி உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். உலக சாதனை புத்தக நிறுவனம் இச்சிறுமியின் திறமையையும், அதீத நினைவாற்றலையும் பரிசீலனை செய்து உலக சாதனைப் புத்தகத்தில் பதிவு செய்து சாதனைச் சிறுமியாக தமது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளது. இவருக்கான இலச்சினை, பதக்கம், மற்றும் சான்றிதழ் என்பவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   - [நாட்டில் நிலவும் காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88/): நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்திருப்பதாக, நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே, அத்தனகலு, கிங், களனி, நில்வளா, களு ஆகிய கங்கைகளின் அருகில் வசிப்பவர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. இதேவேளை, கொழும்பு, களுத்துறை, கண்டி, கேகாலை, நுவரெலியா, இரத்தினபுரி, காலி மற்றும மாத்தறை ஆகிய 8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகளில் தங்கியிருப்பவர்கள் அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், நாட்டின் பல பகுதிகளில் இன்று 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அத்துடன் நாட்டில் தற்போது நிலவும் காற்று மற்றும் மழையுடனான வானிலை இன்று முதல் அதிகரிக்ககூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, […] - [கல்முனையில் மண்ணெண்ணெய் பெற மக்கள் நீண்ட வரிசை](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%86%e0%ae%af%e0%af%8d/): -எம்.எஸ்.எம்.ஸாகிர்- கல்முனையில் உள்ள எரிபொருள் விநியோகிக்கும் நிலையத்தில் மக்கள் மண்ணெண்ணெய்யைப் பெற்றுக்கொள்வதற்காக இன்று செவ்வாய்க்கிழமை நீண்ட வரிசையில் காத்திருந்து பெற்றுச் செல்லும் அவலத்தை தொடர்ந்தும் அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது. அதன்படி, தமது அடிப்படைத்தேவைகளைப் பெறுவதற்கு மக்கள் பல அசௌகரியங்களை தொடர்ந்தும் எதிர்நோக்குகின்றனர். இன்று செவ்வாய்க்கிழமைக்கிழமையும் கல்முனையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால், மக்கள் கொள்கலன்களுடன் மண்ணெண்ணெய்யை பெற்றுக் கொள்வதற்காக நீண்ட வரிசையில், அதிகாலை 5 மணி முதல் நள்ளிரவு தாண்டியும் வரிசையில் காத்திருந்து மண்ணெண்ணெய் பெற்றுச் சென்றனர். - [பசறையில் இடம்பெற்ற விஷேட சுற்றிவளைப்பின் போது 13 பேர் கைது](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%9a%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b7%e0%af%87%e0%ae%9f/): -பதுளை நிருபர்- பசறை பகுதியில் இடம்பெற்ற விஷேட சுற்றிவளைப்பின் போது 13 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று திங்கட்கிழமை மாலை 6 மணி தொடக்கம் இரவு 8 மணி வரையான காலப்பகுதியில், ஹெரோயின் போதைப்பொருளுடன் மூவரும், போதை மாத்திரைகளுடன் மூவரும், நீதிமன்றத்தினால் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட நால்வரும், பொது இடத்தில் குடிபோதையுடன் அநாகரிகமான முறையில் நடந்துகொண்ட இருவரும், பொது இடத்தில் புகைப்பிடித்தலில் ஈடுபட்ட ஒருவருமாக, 13 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பசறை பொலிஸ் நிலைய உதவி பொலிஸ் அத்தியட்சகர் திலிப் த சில்வாவின் ஆலோசனையின் பேரில், பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி E.M.விஜயரட்ணவின் வழிகாட்டலின் பேரிலேயே இச்சுற்றிவளைப்பு  மேற்கொள்ளப்பட்டது. கைது செய்யப்பட்ட அனைவரும் இன்று செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட  உள்ளனர். - [உண்பதற்கே வழியில்லாமல் இருக்கும் எங்களை தொடர்ந்தும் அச்சுறுத்தாதீர்கள் - இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் விசனம்](https://minnal24.com/%e0%ae%89%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%87-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87/): -யாழ் நிருபர்- ஜனநாயக வழிமுறைப் போராட்டங்களை நசுக்குவதை விட்டுவிட்டு அப்போராட்டங்களுக்கான தீர்வை வழங்க முயற்சி செய்யுங்கள்இ உண்பதற்கே வழியில்லாமல் இருக்கும் எங்களை தொடர்ந்தும் அச்சுறுத்தாதீர்கள் என இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் விசனம் வெளியிட்டுள்ளனர். அச்சங்கம் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி விலைவாசி உயர்வு போன்ற அத்தியாவசிய நெருக்கடிகள் என்பவற்றைக் கண்டித்து அரசிற்கு எதிராக இளையோர் போராடிவரும் நிலையில் அத்தகைய போராட்டம் வடக்கிலும் நடக்குமா? நடக்கிறதா? என்ற தோரணையில் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்க பிரதிநிதிகளிடம் விசாரணை நடைபெறுகின்றது. இது ஒருவகை அச்சுறுத்தல் என்றே தோன்றுகின்றது. காலம் காலமாக உரிமைக்காக உயிருக்காக உறவுகளுக்காகப் போராடி நொந்துபோய் ஏதோ நடப்பது நடக்கட்டும் என்ற பெருமூச்சோடு ‘அரசன் அன்றறுப்பான் தெய்வம் நின்றறுக்கும்’ என்ற நம்பிக்கையோடு, தெற்கில் இன்று மக்கள் கொதித்தெழுந்ததை ஏளனம் செய்யாமல் இன்னும் எமக்குத்தான் துன்பங்கள் இழப்புகள் வந்துவிடுமோ என்ற அச்சத்தில் […] - [பெஸ்டியன் மாவத்தை துப்பாக்கிச்சூட்டு சம்பவத்திற்கான காரணம் வெளியானது](https://minnal24.com/%e0%ae%aa%e0%af%86%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be/): புறக்கோட்டை – பெஸ்டியன் மாவத்தை பேருந்து நிலையத்திற்கு முன்பாக நேற்று திங்கட்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கான காரணம் வெளியாகியுள்ளது. சம்பள ஊதியம் பிரச்சினை காரணமாகவே இவ்வாறு துப்பாக்கி சூடு இடம்பெற்றுள்ளதாக அதில் உயிரிழந்தவரின் உறவினர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். மேலும், கொலை செய்யப்பட்டவர், கெலேதிவுல்வெவ பிரதேசத்தை சேர்ந்த விராஜ் லியனகே (30 வயது) எனப்படும்  இளைஞர் என தெரியவந்துள்ளது. மூன்று பேர் கொண்ட குடும்பத்தில் இளையவரான விராஜ், இராணுவ சேவையில் இருந்து ஓய்வு பெற்று கொழும்பில் உள்ள சொகுசு உணவகம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். விராஜ் மற்றும் குறித்த துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த அவருடைய நண்பர் ஆகிய இருவரும் பணியாற்றிய உணவகம் 3 மாதங்களுக்கான சம்பளம் வழங்காமல் பணியிலிருந்து நிறுத்திய நிலையில், அதற்கு எதிராக அவர்கள் நட்டஈடு கோரியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் பணியாற்றிய நிறுவனத்தினால் அவர்களுக்கு எதிராக கருவாத் தோட்டம் பெரிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளதோடு, விருந்தகத்தின் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தியதாக நீதிமன்றில் வழக்கு […] - [உலக புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு நடைபவணி](https://minnal24.com/%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95-%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%a4/): -மன்னார் நிருபர் உலக புகையிலை எதிர்ப்பு தினமான இன்று செவ்வாய்க்கிழமை முசலி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் விழிப்புணர்வு நடைபவணி இடம் பெற்றது. முசலி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம். ஒஸ்மன் சாள்ஸ் தலைமையில் இடம்பெற்ற குறித்த விழிப்புணர்வு நடை பவனியில், மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன், சிலாவத்துறை வைத்தியசாலை வைத்தியர் உட்பட்ட ஊழியர்கள், பிரதேச சபை, பிரதேச செயலக ஊழியர்கள், முச்சக்கர வண்டி சங்க உறுப்பினர்கள், சிலாவத்துறை மதரஸா மாணவர்கள், பிராந்திய தொற்றா நோய் வைத்திய அதிகாரிகள் மற்றும் முசலி வைத்திய அதிகாரி அலுவலக பொது சுகாதார பரிசோதகர்கள், குடும்ப நல உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.   - [சிறுமி ஆயிஷாவின் மரணத்திற்கு நீதி கோரி மன்னாரில் போராட்டம் முன்னெடுப்பு](https://minnal24.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b7%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-2/): -மன்னார் நிருபர்- சிறுமி ஆயிஷா வின் மரணத்திற்கு நீதி கோரி இன்று செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வடக்கு கிழக்கு பெண்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நீதிக்கான போராட்டம் வடக்கு கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களில் இன்று இடம் பெற்றது. குறித்த போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் இடம் பெற்றது. குறித்த போராட்டத்தில் பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளடங்களாக பல நூற்றுக்கணக்கான பெண்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் பெண்கள் வலையமைப்பினர் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றினைந்து குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர். சிறுமி ஆயிஷா வின் மரணத்திற்கு நீதி கோரியும், தொடர்ச்சியாக நாட்டில் இடம் பெறும் சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கவும், அவ்வாறான செயற்பாடுகளால் பாதிக்கப்படும் பெண்கள் சிறுவர்களுக்கு விரைவில் நீதி நிலை நாட்ட படவேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை […] - [ரஷ்யாவின் எண்ணெய் இறக்குமதியை தடுக்க ஐரோப்பிய ஒன்றியம் இணக்கம்](https://minnal24.com/%e0%ae%b0%e0%ae%b7%e0%af%8d%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%86%e0%ae%af%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/): ரஷ்யாவின் மூன்றில் இரண்டு பங்கு கொண்ட எண்ணெய் இறக்குமதியை தடுக்கும் திட்டத்திற்கு ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் இணங்கியுள்ளதாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதானி சார்ல்ஸ் மிச்செல் அறிவித்துள்ளார். பிரஸ்ஸல்ஸில் இடம்பெற்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் உச்சிமாநாட்டில் குறித்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த இணக்கப்பாடு ரஷ்ய போருக்கான பாரிய நிதி ஆதாரத்தை தடுக்கும். அத்துடன், போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு ரஷ்யா மீதான அதிகபட்ச அழுத்தத்தை ஏற்படுத்தும், எனவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதானி சார்ல்ஸ் மிச்செல் தெரிவித்துள்ளார். எனினும், இதற்கு ஹங்கேரி எதிர்ப்பை வெளியிட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது இதேவேளை, ரஷ்யாவின் ஆக்கிரமிப்பால் உக்ரைனின் பொருளாதாரம் பின்னடைந்துள்ளதுள்மையினால், உக்ரைனின் பொருளாதாரத்தை சீரமைக்க ஐரோப்பிய ஒன்றியத்தினால் 9 பில்லியன் யூரோவை உதவியாக வழங்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளதாகவும், தெரிவிக்கப்படுகின்றது. - [விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்ச பிணையில் விடுவிப்பு](https://minnal24.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%ae%bf/): சிறை தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்ச பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவரது பிணை கோரிக்கை மனு கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. போலி ஆவணங்களை கொண்டு, கடவுச்சீட்டை தயாரித்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்த வழக்கில்  அவருக்கு 2 வருட சிறைத்தண்டனையும், ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதித்து கடந்த வாரம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, சஷி வீரவன்ச மேன்முறையீடு செய்திருந்தார். குறித்த மேன்முறையீடு மனு தொடர்பான பரிசீலனை ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், சஷி வீரவன்சவை பிணையில் விடுவிப்பதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தொடர்புடைய செய்திகள் :- https://www.minnal24.com/?p=76906 https://www.minnal24.com/?p=76953 - [அம்பாறை-இறக்காமத்தில் பொருளாதார நெருக்கடியில் அவதியுறும் மக்களுக்கு அரசாங்க மானியங்கள் வழங்கி வைப்பு](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b1%e0%af%88-%e0%ae%87%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a/): -கல்முனை நிருபர்- தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக,  மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், தற்போது அமுலிலுள்ள நலனோம்பு நிகழ்ச்சித்திட்டங்களின் கீழ் சமுர்த்தி நலுனுதவி பெற்றுவரும் குடும்பங்கள் மற்றும் சமுர்த்தி காத்திருப்பு பட்டியலிலுள்ள குடும்பங்களுக்கு உலக வங்கியின் நிதியுதவியின் கீழ் மூன்று மாதங்களுக்கு மானியம் வழங்குவதற்கான நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. இத்திட்டத்திற்கமைய, அம்பாறை மாவட்ட இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட இறக்காமம் சமுர்த்தி வங்கியினால் சமுர்த்தி நன்மை பெற்றுவரும் குடும்பங்களுக்கான குறித்த மானியத் தொகை வழங்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதில் இறக்காமம் சமுர்த்தி வங்கியில் மாதாந்தம் மானியம் பெற்றும் வரும் சுமார் 1800 குடும்பங்களும், சமுர்த்தி காத்திருப்புப் பட்டியலிலுள்ள 849 குடும்பங்களும் இதன் மூலம் நன்மையடையவுள்ளன. சமுர்த்தி வங்கியின் முகாமையாளரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான ரீ.கே.றஹ்மத்துல்லா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம்.றஸ்ஸான் (நளீமி) விஷேட அதிதியாக கலந்து கொண்டதுடன், உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.அகமட் […] - [சம்மாந்துறை நைனாகாடு கிராமோதயா சுகாதார நிலையத்திற்கான காணி உரித்தாவணம் கையளிப்பு](https://minnal24.com/%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b1%e0%af%88-%e0%ae%a8%e0%af%88%e0%ae%a9%e0%ae%be%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0/): -கல்முனை நிருபர்- சம்மாந்துறை நைனாகாடு கிராமோதயா சுகாதார நிலையத்திற்கான காணி உரித்தாவணம் கையளிக்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. இதன் போது, சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ் எல் எம் .ஹனிபா, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஐ எல் எம் றிபாஸிடம் காணி உறுதிப் பத்திரத்தை உத்தியோகபூர்வமாக வழங்கி வைத்தார். இந்த நிகழ்வில், கல்முனை பிராந்திய பிரதிப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எம்பி அப்துல் வாஜித், சம்மாந்துறை பிரதேச செயலக காணி உத்தியோகத்தர் ரீ கே எம் சவாஹிர் ஆகியோர் கலந்து கொண்டனர். - [உலக புகைப்பொருள் எதிர்ப்பு தின நிகழ்வும், ஊர்வலமும்](https://minnal24.com/%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95-%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d/): -கல்முனை நிருபர்- உலக புகைப்பொருள் எதிர்ப்பு தினத்தை நினைவு கூறும் வகையில் கல்முனை பிராந்தியத்திற்கான பிரதான நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் இன்று  செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எச்.கே.சனூஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஐ எல் எம் றிபாஸ்.பிரதம அதிதியாக கலந்து கொண்டார். ‘புகைப் பொருள் பாவனை அற்ற தேசம்’ எனும் தொனிப்பொருளில் அமையப்பெற்ற இந்த நிகழ்வின் போது புகைத்தலை தடுக்கும் வகையிலான வாசகங்களை கொண்ட பதாகைகளை ஏந்திய வண்ணம் சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அதிகாரிகள், தாதிய உத்தியோகத்தர்கள், துணை மருத்துவ சேவையாளர்கள் மற்றும் ஊழியர்கள், பொதுமக்கள் என பெருந்தொகையானோர் கலந்து கொண்டனர். இதன் போது சாய்ந்தமருதில் இருந்து மாளிகைக்காடு வரை விழிப்புணர்வு ஊர்வலமும் இடம் பெற்றன. இந்த நிகழ்வுகளில், கல்முனை பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எம் […] - [உருக்குலைந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு](https://minnal24.com/%e0%ae%89%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b2%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86/): தலவாக்கலை-மேல் கொத்மலை நீர்தேக்கத்திலிருந்து இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் உருக்குலைந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நீர்த்தேக்கத்தில் சடலமொன்று மிதப்பதைக்கண்டு பிரதேசவாசிகள் தலவாக்கலை பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, குறித்த சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட சடலம் யாருடையது என இதுவரை அடையாளம் காணப்படவில்லை. இதனை தொடர்ந்து, சடலம் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதுடன், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். - [இலங்கை விமானிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f/): விமானங்களுக்கான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், கடைசியாக திரும்பும் பயணங்களுக்கு போதுமான ஜெட் எரிபொருளை வேறு இடங்களில் நிரப்புமாறு, இலங்கை விமானங்களின் விமானிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக, சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபையின் இயக்குனர் ரெய்ஹான் வன்னியப்பா தெரிவித்துள்ளார். துபாயின் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் உட்பட இலங்கைக்கு பறக்கும் விமான நிறுவனங்கள் தேவைக்கு அதிகமாக எரிபொருளை ஏற்றிச் செல்கின்றன. அதே சமயம் இலங்கை விமானங்கள் தென்னிந்திய நகரமான சென்னை மற்றும் டுபாயில் நீண்ட தூர விமானங்களுக்கு எரிபொருள் நிரப்ப பயன்படுத்துகிறது. இந்தியன் ஓயில் நிறுவன அதிகாரியின் கூற்றுப்படி, தென்னிந்திய விமான நிலையங்களில் இலங்கையின் சர்வதேச விமானங்கள் எரிபொருள் நிரப்புதல் அதிகரித்துள்ளது, என தெரிவித்துள்ளார். விமான நிலையம் மற்றும் விமான சேவைகளின் தலைவர் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவிக்கையில், இதனால் விமான நிலையம் மற்றும் விமான சேவை நடவடிக்கைகளில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை, என தெரிவித்துள்ளார். - [உறங்கிக் கொண்டிருந்த பெண் கொலை](https://minnal24.com/%e0%ae%89%e0%ae%b1%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3/): தெமட்டகொடை ரயில் பாதையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் பணி புரியும் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும், உயிரிழந்த பெண் வைத்திருந்த 3 தங்க நகைகள், 3 தங்க மோதிரங்கள் மற்றும் 2 கையடக்கத் தொலைபேசிகள் என்பனவும் திருடப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் கடந்த 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய குறித்த பெண் தெமட்டகொடை ரயில் பாதையில் உணவகம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். அவர் தனது 10 வயது மகனுடன் உறங்கிக் கொண்டிருந்த போதே கொலை செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதேவேளை, சம்பவத்தின் பின்னர் உணவகத்தின் ஊழியர்கள் மூவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தெமட்டகொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். - [குடும்பத் தகராறு காரணமாக அண்ணன் தங்கை அடித்துக் கொலை](https://minnal24.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%95%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b1%e0%af%81-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95/): கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். நவகத்தேகம-முல்லேகம பிரதேசத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், குறித்த பிரதேசத்தில் வசிக்கும் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது இதன்போது, மனைவி மற்றும் அவரின் சகோதரர் ஆகியோர் கொலை செய்யப்பட்டுள்ளனர். 32 வயதுடைய நபர் மற்றும் அவரது 25 வயது சகோதரி ஆகியோரே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். சம்பவத்தில் சந்தேக நபரான கணவன். காயமடைந்த நிலையில் புத்தளம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். - [நாட்டை வந்தடைந்துள்ள 40,000 மெட்ரிக் டன் டீசல் தாங்கிய கப்பல்](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%9f%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3-40000-%e0%ae%ae%e0%af%86/): இந்திய கடன் வசதியின் கீழ் 40,000 மெட்ரிக் டன் டீசல் தாங்கிய கப்பல் ஒன்று நேற்று திங்கட்கிழமை மாலை நாட்டை வந்தடைந்துள்ளதாக, இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. - [சர்வதேச புகைத்தல் எதிர்ப்புத் தினம் இன்று](https://minnal24.com/%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a-%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa/): ‘புகைத்தல் சுற்று சூழலுக்கு அச்சுறுத்தல்’ எனும் தொனிப்பொருளில் இந்த வருடம் சர்வதேச புகைத்தல் எதிர்ப்புத் தினம் கடைபிடிக்கப்படுவதாக, மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் அறிவித்துள்ளது. இலங்கையில் புகைத்தல் பாவனையின் காரணமாக நாளாந்தம் 55 பேர் உயிரிழப்பதாக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது. அதன்படி வருடாந்தம் சுமார் 20,000 இலங்கையர்கள் மரணிக்கின்றனர். உலக சுகாதார ஸ்தாபனத்தால் ஒவ்வொரு வருடமும் மே மாதம் 31ம் திகதி சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டு இருப்பதுடன் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. புகைப் பொருள் பாவனையானது சூழலை மாசடையச்செய்யும் பிரதான காரணிகளில் ஒன்றாகும். குறிப்பாக, சிகரட் தயாரிப்பதற்கு உலகளாவிய ரீதியில் சுமார் 600 பில்லியன் மரங்கள் வருடாந்தம் வெட்டப்படுகின்றன. சுமார் 84 பில்லியன் தொன் காபன் டயொக்சைட் துணிக்கைகள் சூழலில் சேர்வதனால் புவியின் வெப்பநிலை அதிகரிக்கப்படுகின்றது. மேலும், வருடாந்தம் சிகரெட் தயாரிக்க சுமார் 22,000 பில்லியன் லீற்றர் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. புகையிலை […] - [நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை வீழ்ச்சி](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b2-%e0%ae%aa%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa-6/): நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை வீழ்ச்சி பதிவாகும், என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. அதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. அனுராதபுரம் மாவட்டத்தில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது, என வளிமண்டலவியல் திணைக்களம் […] - [பாரிய அளவில் அதிகரித்துள்ள மரக்கறிகளின் விலை](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%85%e0%ae%b3%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b3/): சந்தையில் சகல மரக்கறிகளினதும் ஒரு கிலோகிராம்  400 ரூபாவிற்கும் அதிகமாக பாரிய அளவில் அதிகரித்துள்ளது. ஒரு கிலோகிராம் போஞ்சியின் விலை 600 ரூபாவை கடந்துள்ளது. அதன்படி, கரட், பீட்ரூட், போஞ்சி, உருளை கிழக்கு, கோவா மற்றும் தக்காளி உள்ளிட்டவற்றின் விலை இவ்வாறு அதிகரித்துள்ளது. எதிர்வரும் சில மாதங்களில் மரக்கறிகளுக்கான தட்டுப்பாடு ஏற்படக் கூடும், என அகில இலங்கை விசேட பொருளாதார மத்திய நிலையம் மற்றும் மெனிங் வர்த்தக சங்கத்தின் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். - [“சிறுமி எந்தவொரு பாலியல் துஷ்பிரயோகத்திற்கும் உள்ளாகவில்லை” கொலை விசாரணையின் சமீபத்திய தகவல்கள்](https://minnal24.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b5%e0%af%8a%e0%ae%b0%e0%af%81-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d/): பண்டாரகம – அட்டாலுகம பிரதேசத்தைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேக நபரை இரண்டு நாட்கள் தடுத்து வைத்து விசாரணை நடத்துவதற்கு நீதிமன்றம் பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைய மூன்று நீதித்துறை அதிகாரிகள் பிரேத பரிசோதனையை மேற்கொண்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி , சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார். களுத்துறை மற்றும் பாணந்துறை குற்றத்தடுப்புப் பிரிவினரால் ஞாயிற்றுக்கிழமை இரவு சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாகவும் “மூக்கு மற்றும் வாய் வழியாக நீர் மற்றும் சேறு  உடல் மற்றும் நுரையீரலுக்குள் உள்நுழைந்ததால் உயிரிழந்துள்ளதாக” பிரேத பரிசோதனைகள் மூலம் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 29 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையாவர். இவர் உயிரிழந்தவரின் வீட்டிற்கு அருகில் வசித்து வருவதாகவும், உயிரிழந்தவரின் உறவினர் , சிறுமியின் தந்தையுடன் மிகவும் நட்பாக பழகி வந்தவர் எனவும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. பாத்திமா ஆயிஷா […] - [இலங்கைக்கு உதவுவதாக பிரித்தானிய பிரதமர் உறுதி](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%89%e0%ae%a4%e0%ae%b5%e0%af%81%e0%ae%b5%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf/): பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கிடையில் தொலைபேசி மூலம் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடலின் போது, இலங்கையின் தற்போயை நிலைமை குறித்து போரிஸ் ஜோன்சனுக்கு விளக்கமளித்ததாக பிரதமர் தனது ட்விட்டர் பதிவு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கும், நாட்டின் ஏற்றுமதி சார்ந்த பொருளாதார நடவடிக்கைகளை கட்டியெழுப்புவதற்கும் இலங்கைக்கு உதவுவதாக, பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் உறுதியளித்ததாகவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறித்த பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார். - [ரனிந்து சேனாரத்ன பிணையில் விடுதலை](https://minnal24.com/%e0%ae%b0%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%87%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a9-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a3%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2/): ‘ரெட்டா’ என அழைக்கப்படும் ரதிந்து சேனாரத்ன பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். கடந்த 25ஆம் திகதி கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்திற்கு முன்பாகவுள்ள வீதியில் சட்டவிரோத ஒன்றுக் கூடல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் அவர் இன்று திங்கட்கிழமை பிற்பகல் கைது செய்யப்பட்டிருந்தார். தொடர்புடைய செய்தி:- https://www.minnal24.com/?p=77209 - [உயிரூட்டிய பாடசாலைக்கு உரமூட்டும் வேலை திட்டம்](https://minnal24.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%89/): -கல்முனை நிருபர்- ‘உயிரூட்டிய பாடசாலைக்கு உரமூட்டும் வேலை திட்டத்தின்’ கீழ் அம்பாறை மாவட்டம் கல்முனை கல்வி வலய கமு/கமு/அஸ்- ஸுஹரா வித்தியாலயத்துக்கு முதலாம் கட்டமாக ஒரு தொகுதி பாடசாலைக்கு தேவையான உபகரணங்கள் கையளிக்கப்பட்டது. உயிரூட்டிய பாடசாலைக்கு உரமூட்டும் வேலை திட்டத்தின் கீழ் முதலாம் கட்டமாக ஒரு தொகுதி புதிய கதிரைகள் மற்றும் மேசைகள் திருத்தியமைக்கப்பட்ட மாணவர்களுக்கான கதிரைகள், மேசைகள், ஆசிரியர்களுக்கான கதிரைகள், வைட் வோர்ட் (White Board) மற்றும் Indicate Board (சுட்டிகாட்டி பெயர் பலகை) தளபாடங்கள் என்பன கமு/கமு/அஸ்-ஸுஹரா வித்தியாலயத்தின் அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜீதியாவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு பாடசாலையின் பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் பாடசாலையில் இடம்பெற்றது இதன் போது பாடசாலை அபிவிருத்தி குழுவினரும் கலந்து கொண்டனர். இத்திட்டத்திற்க்கு பாடசாலையின் பழைய மாணவர்கள், நலன் விரும்பிகளின் பங்களிப்பில் சுமார் 7 லட்சம் ரூபாய் செலவில் குறித்த வேலைத்திட்டம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டத்தில், கல்முனை […] - [பொரலஸ்கமுவ நகர சபை தவிசாளர் கைது](https://minnal24.com/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%b8%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%81%e0%ae%b5-%e0%ae%a8%e0%ae%95%e0%ae%b0-%e0%ae%9a%e0%ae%aa%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%be/): பொரலஸ்கமுவ நகர சபை தவிசாளர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. கடந்த 9ஆம் திகதி காலி முகத்திடல் மற்றும் அலரி மாளிகை பகுதிகளில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பிலேயே, குறித்த தவிசாளர் இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. - [நூலக திறப்புவிழாவும், மர்ஹும்களான உலமாக்களை நினைவு கூறல் நிகழ்வும்](https://minnal24.com/%e0%ae%a8%e0%af%82%e0%ae%b2%e0%ae%95-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%be%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b0/): -கல்முனை நிருபர்- கல்முனை சமூக மேம்பாட்டுக்கான பழைய மாணவர்கள் செயல் வலையமைப்பின் ஏற்பாட்டில் அமைப்பின் தலைவர் மெளலவி எஸ்.எம்.நிம்ஸாத் மன்பயி தலைமையில்  நூலக திறப்பு விழாவும் மர்ஹும்களான உலமாக்களை நினைவு கூறல் நிகழ்வும் கல்முனை மஸ்ஜிதுல் பலாஹ் பள்ளிவாசலில் மிக சிறப்பாக அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்வில், நூலகத்திற்குரிய கிதாபுகளை சங்கைக்குரிய மெளலான மெளலவி அஷ்ஷெய்யிது எஸ்.எம். மஸ்ஹூர் தங்கள் ( அஸ்ஸகாபி அர்ரிபாயி) கரத்தினால் கிதாபுகள் அடுக்கிவைத்து ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, உலமாக்கள், நூல்கள் அன்பளிப்பாளர்கள் மற்றும் நிகழ்வில் கலந்து கொண்டவர்களினால் நூல்கள் அடுக்கி வைக்கப்பட்டதுடன் மேலும் சங்கைக்குரிய மெளலானாவினால் நூலக பதிவேட்டில் நினைவு குறிப்பும் பதிவு செய்யப்பட்டது. அமைப்பின் தலைவரினால் அமைப்பின் வளர்ச்சி பற்றியும், எதிர்கால திட்டங்களை செயல்படுத்துவது பற்றியும் உரை நிகழ்த்தப்பட்டது. இந்நிகழ்வில் உலமாக்கள் புத்தீஜீவிகள், பள்ளிவாசல் நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர். - [உதிரிபாகங்களுக்கான வரியை நீக்கினால் விலை குறையும்](https://minnal24.com/%e0%ae%89%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af/): டொலர் பிரச்சினை காரணமாக துவிச்சக்கர வண்டிகளின் விலை 100 வீதத்தால் அதிகரித்துள்ளதாக, மிதிவண்டி உற்பத்தியாளர்கள் மற்றும் கூட்டமைப்பு சங்கத்தின் செயலாளர் ரிஸ்னி இஸ்மத் தெரிவித்துள்ளார். அதன்படி, மவுன்டைன் (mountain) துவிச்சக்கரவண்டியின் விலை 18 ஆயிரத்தில் இருந்து சுமார் 36 ஆயிரம் ரூபாவாக உயர்ந்துள்ளது. பெரும்பாலான துவிச்சக்கர வண்டி பாகங்கள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு நீண்ட காலமாக இலங்கையில் அசெம்பிள் செய்யப்படுகின்றது. துவிச்சக்கரவண்டி உதிரிபாகங்களுக்கான வரியை நீக்கி, பூஜ்ஜியமாகக் குறைக்கப்பட்டால் ஒரு துவிச்சக்கரவண்டி நிச்சயம் சுமார் 19,000 ரூபாய்க்கு கிடைக்கும், என அவர் மேலும் தெரிவித்துள்ளார். - [நாளை முதல் லிட்ரோ சமையல் எரிவாயு விநியோகிக்கப்படும்](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b0%e0%af%8b-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-2/): 50,000 சமையல் எரிவாயு கொள்கலன்கள் நாளை முதல் சந்தைக்கு விநியோகிக்கப்படும், என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் இலங்கையை வந்தடையவிருந்த 3,500 மெற்றிக் டன் எரிவாயு தாங்கிய கப்பல்  நாட்டுக்கு வருவதற்கு மேலும் தாமதமானதால் சமையல் எரிவாயு விநியோகம் முன்னெடுக்கப்படாமல் இருந்தது. குறித்த 3,500 மெட்ரிக் டன் எரிவாயு தாங்கிய கப்பல், இன்று திங்கட்கிழமை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. - [ரெட்டா என அழைக்கப்படும் ரனிந்து சேனாரத்ன கைது](https://minnal24.com/%e0%ae%b0%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be-%e0%ae%8e%e0%ae%a9-%e0%ae%85%e0%ae%b4%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/): ரெட்டா என அழைக்கப்படும் ரனிந்து சேனாரத்ன கைது செய்யப்பட்டுள்ளார். பிரபல சமூக ஊடக செயற்பாட்டாளரும், அமைதியான போராட்ட இயக்கத்தின் முன்னணி செயற்பாட்டாளருமான இவர், கொம்பனித்தெரு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் கோட்டை நீதிவான் நீதிமன்றத்திற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, பொலிஸாருக்கும், நீதித்துறைக்கும் இடையூறு ஏற்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் இன்று அழைக்கப்பட்டிருந்தார். எனினும், சுமார் 2 மணிநேரம் வரை வாக்குமூலம் வழங்கிய அவர், இவ்வாறு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். - ["பொலித்தீன் பாவனையற்ற பிரதேசமாக மாற்ற ஓன்றினைவோம்" எனும் தொனிப்பொருளில் பாரிய வேலைத்திட்டம்](https://minnal24.com/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%80%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%aa%e0%ae%bf/): -வாழைச்சேனை நிருபர்- கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை பிரிவிற்குட்பட்ட பகுதியை பொலித்தீன் பாவனையற்ற பிரதேச மாக மாற்ற ஓன்றினைவோம் எனும் தொனிப்பொருளில் பாரிய வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. பொலித்தீன் பாவனையால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளில் இருந்து விடுபடுதல் தொடர்பான விழிப்புணர்வு மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ.மற்றும் சீ.பீ.எம்.நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையுடன் இணைந்து ஓட்டமாவடி சிகரம் மாற்றுத்திறனாளிகள் அமைப்பு இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளது. அந்தவகையில், ஓட்டமாவடி பிரதேசத்தில் பொலித்தீன் பாவனை தொடர்பான விழிப்பூட்டல் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதுடன், ஒலிபெருக்கி மூலம் பொதுமக்கள், வியாபாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டன. சிகரம் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் தலைவர் என்.எம்.இஸ்மாயில் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர் மற்றும் சனசமூக அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர் ஏ.காருன் மற்றும் மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ.நிறுவனத்தின் இணைப்பாளர் அன்பழகன் மற்றும் நிறுவனங்களின் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். - [நாட்டில் கையிருப்பில் உள்ள எரிபொருள் நிலவரம்: அமைச்சர் தகவல்](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89-2/): இலங்கையில் தற்போது உள்ள எரிபொருள் இருப்பு தொடர்பாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று திங்கட்கிழமை விபரங்களை வெளியிட்டுள்ளார். மே 30, 2022 மதியம் 12.10 மணி நிலவரப்படி பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகளின் கையிருப்புக்கள் பின்வருமாறு. டீசல் – 14,433 மெற்றிக்தொன் சூப்பர் டீசல் – 58 மெற்றிக்தொன் 92 ஆக்டேன் பெட்ரோல் – 41,978 மெற்றிக்தொன் 95 ஆக்டேன் பெட்ரோல் – 14, 041 மெற்றிக்தொன் ஜெட் ஏ1 – 1, 621 மெற்றிக்தொன் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் சிறிய தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருந்ததாகவும் இன்று முதல் இதன் செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் எரிசக்தி அமைச்சர் தெரிவித்தார். இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ஊழியர்கள் சுத்திகரிப்பு நிலையத்தை மீள ஆரம்பிப்பதற்கான திருத்தப்பணிகளில் ஈடுபட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். கடந்த 03 மாதங்களாக சுத்திகரிப்பு நிலையம் இயங்கவில்லை எனவும் அமைச்சர் விஜேசேகர சுட்டிக்காட்டியுள்ளார். - [மாபெரும் உதைபந்தாட்ட போட்டியில் மன்னார் கழகம் வெற்றிக் கேடயத்தை தனதாக்கியது](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a4%e0%af%88%e0%ae%aa%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f/): -மன்னார் நிருபர்- மறைந்த மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் முதலாம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு மன்னார் மாவட்ட சிரேஷ்ட உதைபந்தாட்ட சம்மேளனம் நடாத்திய உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் மன்னார் விளையாட்டு கழகம் 2-0 என்ற கோல் அடிப்படையில் யாழ்ப்பாணம் விளையாட்டு கழகத்தை வெற்றியீட்டியுள்ளது. மன்னார் மாவட்ட சிரேஷ்ட உதை பந்தாட்ட சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த சுற்றுபோட்டியானது கடந்த சனிக்கிழமை காலை ஆரம்பமாகி நேற்று  ஞாயிற்றுக்கிழமை மாலை இறுதி சுற்றுடன் நிறைவடைந்தது. வட மாகாண ரீதியாக 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இடையே நடைபெற்ற இப்போட்டியில் வட மாகாணத்தில் இருந்து 10 கழகங்கள் போட்டிகளில் கலந்து கொண்டனர். இறுதி நாள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இவ் சுற்றும் போட்டியானது, மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் மாலை 5 மணியளவில் நடைபெற்ற போது, இறுதி போட்டியில் மன்னார் மாவட்ட ‘A’ அணியினருக்கும் யாழ் மாவட்ட விளையாட்டு கழகத்தினருக்கும் இடையே […] - [சிறுமி ஆயிஷாவின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியது : கொலையாளி சிறுமியின் உறவினர்](https://minnal24.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b7%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%af%87%e0%ae%a4-%e0%ae%aa/): சடலமாக மீட்கப்பட்ட பண்டாரகமை – அட்டுலுகம பகுதியைச் சேர்ந்த சிறுமி ஆயிஷாவின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. இந் நிலையில், குறித்த சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படவில்லை என பிரேத பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சிறுமியின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 29 வயதுடைய இளைஞர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாகவும், குறித்த நபர் உயிரிழந்த சிறுமியின் உறவினர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.   - [சிறுமி ஆயிஷாவின் மரணம் தொடர்பில் மேலும் ஒருவர் கைது](https://minnal24.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b7%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4/): பண்டாரகம, அட்டாளுகம பிரதேசத்தைச் சேர்ந்த 09 வயது சிறுமி ஆயிஷாவின் மரணம் தொடர்பில் அதே பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்புடைய செய்திகள்:- https://www.minnal24.com/?p=77043 https://www.minnal24.com/?p=77128 https://www.minnal24.com/?p=77133 - [21 ஆம் திருத்த சட்டமூலத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதில் சிக்கல் இல்லை](https://minnal24.com/21-%e0%ae%86%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%82%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/): 21 ஆம் திருத்த சட்டமூலத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதில் சிக்கல் இல்லை, என ஜே.வீ.பி தெரிவித்துள்ளது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் இரட்டை குடியுரிமை தொடர்பில் உறுதியான நிலைப்பாடு முன்வைக்கப்படும் பட்சத்தில், தமக்கு 21 ஆம் திருத்த சட்டமூலத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதில் சிக்கல் இல்லை என ஜே.வீ.பியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஒத்துழைப்புடன் நிறைவேற்றப்படும் அரசியலமைப்பு சீர்த்திருத்தம் மீது நம்பிக்கை வைப்பது பிரச்சினைக்குரிய விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். - [உலக வங்கியிடமிருந்து இலங்கைக்கு 700 மில்லியன் அமெரிக்க டொலர்கள்](https://minnal24.com/%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99/): உலக வங்கி இலங்கைக்கு 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, அடுத்த சில மாதங்களுக்குள் உலக வங்கி சுமார் 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்கும், என உலக வங்கியின் இலங்கை முகாமையாளர் சியோ கண்டா தெரிவித்துள்ளார். - [டொலரின் இன்றைய பெறுமதி](https://minnal24.com/%e0%ae%9f%e0%af%8a%e0%ae%b2%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%88%e0%ae%af-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf-2/): நாட்டில் இன்று திங்கட்கிழமை பதிவாகியுள்ள டொலரொன்றின் பெறுமதியை இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் இன்றைய விற்பனைப் பெறுமதி 365 ரூபா 77 சதமாகவும், கொள்முதல் பெறுமதி 355 ரூபா 77 சாமாகவும் பதிவாகியுள்ளது. - [10 மாவட்டங்களில் பலத்த மழை:அபாய எச்சரிக்கை](https://minnal24.com/10-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%ae%e0%ae%b4%e0%af%88/): இலங்கையில் 10 மாவட்டங்களில் பலத்த மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் இன்று திங்கட்கிழமை அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்குப் பகுதியில் நிலவும் மழையுடனான வானிலை இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் மற்றும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அபாய எச்சரிக்கை நாளை செவ்வாய்க்கிழமை காலை 09.30 மணி வரை அமுலில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. - [புதிய‌ காதிக‌ளை நிய‌மிக்கும்படி நீதியமைச்சரிடம் முபாரக் அப்துல் மஜீத் கோரிக்கை](https://minnal24.com/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d/): -கல்முனை நிருபர்- முஸ்லிம் திரும‌ண‌ ச‌ட்ட‌ம் என்ப‌து இந்த‌ நாட்டு முஸ்லிம்க‌ள் பிரித்தானிய‌ர் ஆட்சிக்கால‌ம் முத‌ல் அனுப‌விக்கும் த‌னியார் ச‌ட்ட‌மாகும். இச்ச‌ட்ட‌த்தை நீக்க‌ வேண்டும் அல்ல‌து திருத்த‌ வேண்டுமென்ற‌ கோரிக்கை இன‌வாதிக‌ளாலும், ஐரோப்பாவுக்கு அடிமைப்ப‌ட்ட‌ சில‌ பெண்க‌ளாலும் முன்னெடுக்க‌ப்ப‌ட்டு வ‌ந்த‌து, என ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் கலாபூஷணம் மௌலவி முபாரக் அப்துல் மஜீத், நீதியமைச்சர் விஜேதாச‌ ராஜ‌ப‌க்ச‌வுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். அந்த கடிதத்தில் மேலும் தெரிவித்திருப்பதாவது, எம்மை பொறுத்த‌வ‌ரை த‌ற்போதுள்ள‌ முஸ்லிம் திரும‌ண‌ ச‌ட்ட‌த்தில் எத்த‌கைய‌ திருத்த‌த்துக்கும் கை வைக்க‌ வேண்டாம் என்றும் அகில இலங்கை ஜ‌ம்மிய‌துல் உல‌மா ம‌ற்றும் உல‌மா க‌ட்சியின் அனும‌தியுட‌ன் சில‌ ச‌ர‌த்துக‌ள் புதிதாக‌ சேர்க்க‌ப்ப‌ட‌ வேண்டும் என்ப‌தை ர‌வூப் ஹ‌க்கீம் நீதி அமைச்ச‌ராக‌ இருந்த‌ கால‌ம் முத‌ல் வலியுறுத்தி வ‌ருகிறோம். இது விட‌ய‌ம் ஓர் இன‌வாத‌ பிர‌ச்சார‌மாக‌வே முஸ்லிம் ச‌மூக‌ம் பார்ப்ப‌தால் இது விட‌ய‌த்தை அப்ப‌டியே இருப்ப‌து போல் விட்டு விடும்ப‌டி […] - [வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுக்கான விவசாய ஊக்குவிப்பு திட்டம் ஆரம்பித்து வைப்பு](https://minnal24.com/%e0%ae%b5%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d/): -வாழைச்சேனை நிருபர்- ‘சமகால பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வோம் தற்சார்பு வாழ்வை நோக்கிப் பயணிப்போம்’ என்னும் கருத்திட்டத்திற்கமைய வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கான விவசாய ஊக்குவிப்பு திட்டம் கிண்ணையடி சுங்காங்கேணி பிரதேசத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன் அடிப்படையில் கொண்டையன்கேணி, சுங்காங்கேணி மற்றும் கிண்ணையடி போன்ற கிராமங்களைச் சேர்ந்த 100 பயனாளிகள் தெரிவு செய்யயப்பட்டு அவர்களுக்கான 10 வகையான விதைப் பருப்புக்கள் வழங்கி வைக்கப்பட்டது. உற்பத்தி செய்யப்படும் பயிர் தோட்டங்களை நேரடியாக கண்கானித்து அதற்கான ஊக்குவிப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என இதன்போது தெரிவிக்கப்பட்டது. குறித்த திட்டமானது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னப்பலம் மற்றும் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர்களது ஆலோசனையின்படி முன்னெடுக்கப்பட்டுள்ளது. மேற்படி நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் கு.குணசேகரம், தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் க.குககுமாரராஜா ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.   - [துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி](https://minnal24.com/%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-3/): கொழும்பு புறக்கோட்டை பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் இருவர் படுகயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பஸ்தியான் மாவத்தை பகுதியில்  மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாதவர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 30 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மற்றும் காயமடைந்த மூவரும் அனுராதபுரத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புறக்கோட்டை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். - [சிறுமி ஆயிஷாவின் மரணத்திற்கு நீதி கோரி 8 மாவட்டங்களில் நாளை போராட்டம்](https://minnal24.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b7%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/): -மன்னார் நிருபர்- சிறுமி ஆயிஷா வின் மரணத்திற்கு நீதி கோரி நாளை செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு வடக்கு கிழக்கு பெண்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நீதிக்கான போராட்டம் இடம்பெறவுள்ளது. மன்னார் பஜார் பகுதியில் நாளை காலை 10 மணிக்கு குறித்த போராட்டம் இடம் பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது. வடக்கு -கிழக்கு மாகாணங்களில் உள்ள பெண்கள் வலையமைப்பினர், சமூக ஆர்வலர் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றினைந்து, தொடர்ச்சியாக நாட்டில் இடம் பெறும் சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கவும் அவ்வாறான செயற்பாடுகளால் பாதிக்கப்படும் பெண்கள் சிறுவர்களுக்கு விரைவில் நீதி நிலை நாட்ட படவேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி 8 மாவட்டங்களில் நாளை போராட்டம் இடம்பெறவுள்ளது எனவே, பொதுமக்கள் குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டு சிறுவர்கள் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிக்க ஒன்றிணையுமாறு பெண்கள் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளனர். - [அட்டுலுகம சிறுமியின் மரணம் தொடர்பில் இருவர் கைது](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%b2%e0%af%81%e0%ae%95%e0%ae%ae-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%a3/): பண்டாரகம – அட்டுலுகம பிரதேசத்தில் 9 வயது சிறுமியின் மரணம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிறுமியின் மரணம் கொலை என்ற சந்தேககத்தின் பேரில்  அந்த பகுதியில் மரக்கறி விற்பனை நிலையமொன்றை நடத்தி வந்த ஒருவரையும், பிறிதொரு நபரையும் பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சந்தேக நபர்களில் ஒருவர் கீரை தோட்ட தொழிலாளர் என்பது தெரிய வந்துள்ளது. அவரது வீட்டில் உள்ள கட்டிலுக்கு அடியில் இருந்து சேறு படிந்திருந்த நிலையில் சாரம் ஒன்றை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். கீரை தோட்டத்தை அண்டிய காணியொன்றில் உள்ள சதுப்பு நிலத்தில் இருந்தே, உயிரிழந்த நிலையில் சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. தொடர்புடைய செய்திகள்:- https://www.minnal24.com/?p=77128 https://www.minnal24.com/?p=77043 - [எரிவாயுவிற்காக வரிசையில் காத்திருக்க வேண்டாம்](https://minnal24.com/%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2/): நாளை வரையில் சமையல் எரிவாயு விநியோகம் இடம்பெறாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இன்று திங்கட்கிழமை 3,500 மெட்ரிக் டன் எரிவாயு அடங்கிய கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுதினம் புதன்கிழமை முதல் எரிவாயுவை விநியோகிக்க முடியும் என லிட்ரோ நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். அதனால், இன்றும் நாளையும் எரிவாயுவிற்காக வரிசையில் காத்திருக்க வேண்டாம் பொது மக்களிடம் கோரப்பட்டுள்ளது.   - [கொலை செய்யப்பட்ட அட்டுலுகம சிறுமியின் மரண பரிசோதனைகள் இன்று](https://minnal24.com/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%88-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%af%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%85%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%b2%e0%af%81/): கொலை செய்யப்பட்ட பண்டாரகம – அட்டுலுகம சிறுமி பாத்திமா ஆய்ஷாவின் மரண பரிசோதனைகள் பண்டாரகம ஆதார வைத்தியசாலையில் இன்று திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது. குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் 5 பொலிஸ் குழுக்கள் என்பன விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கமைய, குறித்த பகுதியில் உள்ள சி.சி.ரி.வி காணொளி காட்சிகள் பரிசோதிக்கப்படுவதோடு போதைப் பழக்கத்திற்கு உள்ளானவர்கள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் தொடர்பில் தற்போது குடும்ப உறுப்பினர்கள் உட்பட 30 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்புடைய செய்தி:- https://www.minnal24.com/?p=77043 - [இலங்கை மக்களுக்காக தமிழக அரசினால் மேலும் 30,000 டன் அரிசி](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%95-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95/): இலங்கை மக்களுக்காக தமிழக அரசினால், மேலும் 30,000 டன் அரிசி அனுப்பப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அதன்படி புதுக்கோட்டை, திருச்சி,மதுரை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ள 70 அரிசி ஆலைகளில் இருந்து, 30,000 டன் அரிசி தூத்துகுடி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது அந்த அரிசியை தமிழக அரசின் முத்திரையுடன் கூடிய 10 கிலோகிராம் பைகளில் பொதியிடும் பணிகள், தூத்துக்குடி துறைமுகத்தில் இடம்பெற்று வருகின்றன. குறித்த பணிகளை ஆய்வு செய்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், அரிசியைப் பொதியிடும் பணிகள் நிறைவடைந்ததும், தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து கப்பல் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும். அத்துடன், பால்மா மற்றும் மருந்துகளும் சேகரித்து அனுப்பப்படும் என தெரிவித்தார்.   - [மருத்துவ நெருக்கடிகளை நிவர்த்தி செய்ய உலக சுகாதார நிறுவனம் நடவடிக்கை](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5-%e0%ae%a8%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%a8%e0%ae%bf/): இலங்கையின் ஆரம்ப சுகாதார சேவைகள் தொடர்ந்து நடத்துவதற்கான வசதிகள் மற்றும் பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்டுள்ள மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை பெற்றுக்கொள்வதில் உள்ள நெருக்கடிகளை நிவர்த்தி செய்வதற்கு, உலக சுகாதார நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தனவை சந்தித்து கலந்துரையாடினார். சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெற்ற உலக சுகாதார மாநாட்டின் போது இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. - [முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை அதிகரிப்பு?](https://minnal24.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%87%e0%ae%b1%e0%af%88%e0%ae%9a/): முட்டை ஒன்றின் விலை 50 ரூபா வரையில் அதிகரிக்கக்கூடும், என அகில இலங்கை கோழிப் பண்ணை சம்மேளனம் தெரிவித்துள்ளது. மேலும், கோழி இறைச்சி கிலோ ஒன்றின் விலை 1,200 ரூபா வரையில் அதிகரிக்கக்கூடும் எனவும், கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அந்த சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார். - [2022 ஆண்டுக்கான ஐ.பி.எல் சாம்பியனானது குஜராத் டைடன்ஸ்](https://minnal24.com/2022-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%90-%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa/): 2022 ஆண்டுக்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரை குஜராத் டைடன்ஸ் அணி வென்றுள்ளது. ராஜஸ்தான் அணியுடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இறுதிப் போட்டியில் 7 விக்கெட்டுக்களால் குஜராத் டைடன்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கட்டுக்களை இழந்து 130 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி சார்பாக அதிகபடியாக ஜோஸ் பட்லர் 39 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். இதேவேளை, 131 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுபெடுத்தாடிய குஜராத் டைடன்ஸ் அணி 18.1 ஓவர்கள் நிறைவில் 3 விக்கட்டுகளை இழந்து 133 ஓட்டங்களை பெற்று வெற்றியிலக்கை அடைந்தது. - [என்னையும் என் குடும்பத்தையும் இந்தியாவுக்கு அழைத்துச் செல்லுங்கள்](https://minnal24.com/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/): தன்னையும், தனது குடும்ப உறுப்பினர்களையும் இந்தியாவுக்கு அழைத்துச் செல்லுமாறு, முன்னாள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க இந்தியப் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இதுவரை உரிய பாதுகாப்பு வழங்கப்படாததால், பாதுகாப்புக் காரணங்களுக்காக தம்மையும் தனது குடும்ப உறுப்பினர்களையும் இந்தியாவுக்கு அழைத்துச் செல்லுமாறு, அவர் இந்தியப் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், “நான் அரசியலில் இருந்து ஒரு ரூபா கூட சம்பாதிக்கவில்லை, நான் உழைத்து சம்பாதித்த சொத்துக்கள் அனைத்தும் முற்றாக தீயிட்டு எரித்து நாசம் செய்ததால், நான் இன்று இந்த நாட்டில் வீடற்றவனாக மாறியுள்ளேன்” என தெரிவித்துள்ளார். - ["ஊடகர் ஜீ.நடேசன் நினைவலைகள்" கட்டுரைத் தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வு](https://minnal24.com/%e0%ae%8a%e0%ae%9f%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9c%e0%af%80-%e0%ae%a8%e0%ae%9f%e0%af%87%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%ae%b2%e0%af%88%e0%ae%95/): கடந்த 2004 ஆண்டு மட்டக்களப்பில் வைத்து சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 18 வது ஞாபகார்த்த தினத்தை முன்னிட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை “ஊடகர் ஜீ.நடேசன் நினைவலைகள்” கட்டுரைத் தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வு இடம்பெற்றது. காலை 9.30 மணியளவில் இடம்பெற்ற இந்நிகழ்வில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து, நினைவுச் சுடரேற்றப்பட்டதனைத் தொடர்ந்து, மலரஞ்சலி செலுத்தப்பட்டு, மௌன அஞ்சலியும் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து, ‘ஊடகர் ஜீ.நடேசன் நினைவலைகள்’ கட்டுரைத் தொகுப்பு நூல் வெளியிடப்பட்டது. கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஆலோசகரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான ஏ.எல்.எம்.சலீமினால் குறித்த நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது. இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிரேஷ்ட ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர். - [பொலிஸ் அதிகாரிகள் மூவர் இடமாற்றம்](https://minnal24.com/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%82%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d/): பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் அரசாங்க சேவை ஆணைக்குழுவின் அனுமதியுடன் பொலிஸ் மா அதிபரினால் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண உள்ளிட்ட 3 பொலிஸ் உயர் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சிரேஷ்ட பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் பொது சேவை ஆணைக்குழுவின் அனுமதியுடன் பொலிஸ் மா அதிபரினால் இந்த இடமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.டி.ஆர்.எஸ்.தமிந்த – தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பதவிக்கும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கே. அஜித் ரோஹண – குற்றவியல் மற்றும் போக்குவரத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து, தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா […] - [ஆளுநர் நந்தலாலை பாராட்டினார் ஜனாதிபதி](https://minnal24.com/%e0%ae%86%e0%ae%b3%e0%af%81%e0%ae%a8%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b2%e0%af%88-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf/): மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க எடுத்த நடவடிக்கைகளுக்கு ஜனாதிபதி பாராட்டு தெரிவித்துள்ளார். பதவியேற்ற குறுகிய காலத்திற்குள் நாட்டின் நிதி நெருக்கடியைக் கட்டுப்படுத்தவும், அவற்றைத் தணிக்கவும் எடுத்த நடவடிக்கைகள் சிறப்பானதே. எந்தவொரு அரசியல் தலையீடும் இன்றி தொடர்ந்தும் மத்திய வங்கியின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் ஆதரவளிக்கும் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். - [இந்தியாவின் ஒத்துழைப்பை மேலும் கோரும் இலங்கை](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%92%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b4%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%88/): நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியை தீர்க்க, இந்தியாவின் ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்குமாறு இந்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த, இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வேலைத்திட்டம் இறுதி செய்யப்படும் வரையில், இலங்கை எதிர்நோக்கும் நிதி நெருக்கடியை சமாளிக்க உதவுமாறு, உயர்ஸ்தானிகர் இந்திய நிதி அமைச்சரிடம் கோரியுள்ளார்.   - [கொலை செய்த சந்தேக நபர்களுக்கு தண்டனை கிடைக்கும்](https://minnal24.com/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%88-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%95-%e0%ae%a8%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3/): ஈவிரக்கமற்ற விதத்தில் கொல்லப்பட்ட சிறுமி பாத்திமா ஆயிஷாவின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கல்கள் மற்றும் ஆழ்ந்த அனுதாபங்களையும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அட்டுலுகம பிரதேசத்தை சேர்ந்த அப்பாவி சிறுமியை கொலை செய்த சந்தேக நபர்களை கைது செய்ய துரித நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார். டு விட்டர் பதிவொன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த கொடூர குற்றத்தை புரிந்த அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, நீதியை செயற்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார். 9 வயதுடைய ஆயிஷா நேற்று காலை முதல் காணாமல் போயிருந்த நிலையில், இன்று பிற்பகல் அவரது வீட்டிற்கு அருகிலுள்ள சதுப்பு நிலத்தில் சடலமாக மீட்கப்பட்டார். சிறுமி வேறு இடத்தில் கொலை செய்யப்பட்டு சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு கொண்டுவந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். - [200 பேருக்கு குரங்கம்மை நோய் உறுதி](https://minnal24.com/200-%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%a8%e0%af%8b%e0%ae%af/): உலகளவில்  20 நாடுகளைச் சேர்ந்த 200 பேருக்கு குரங்கம்மை நோய் உறுதியாகியுள்ளதாகவும் 100 பேருக்கு தொற்றுக்கான சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்  உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மே மாதத்தின் ஆரம்பத்தில் இருந்து, வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் 12க்கும் மேற்பட்டோருக்கு குரங்கம்மை நோய் பரவியிருந்த நிலையில் பிற நாடுகளுக்கும் இந்நோய் பரவி வருகிறது. அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின், போர்த்துக்கல் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளிலும் இந்த நோயினால் சிலர் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. அதிகபட்சமாக கனடாவில் இந்த நோயிற்கான அறிகுறி உள்ளவர்களை சோதனை செய்ததில் அவர்களில் 18 பேருக்கு குரங்கம்மை நோய் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்படுபவர்கள் பல வாரங்கள் கழித்தே இதிலிருந்து குணமடைகின்றனர். அரிதிலும் அரிதாகவே உயிரிழப்பு நிகழ்கிறது என்றும் தெரிவித்துள்ளது. - [நாளை மின்வெட்டு இல்லை](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b5%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88-2/): நாடளாவிய ரீதியில் நாளை ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் துண்டிக்கப்படமாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. கல்விப்பொதுத்தராதரப் பத்திர சாதாரண தர மாணவர்களின் நலன் கருதி கடந்த 23ஆம் திகதி முதல் மின்வெட்டு காலை நேரங்களில் மாத்திரம் 2 மணித்தியாலங்கள் அமுல்படுத்தப்பட்டிருந்தது. இரவு நேரங்களில் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவில்லை. இந்நிலையில் பரீட்சை முடியும் வரை விஷேட நடைமுறை அமுல்படுத்தப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்ததற்கமைவாக நாளை ஞாயிற்றுக்கிழமையும் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படமாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார். - [பாராளுமன்ற  உறுப்பினர் கொலை ; முச்சக்கர வண்டி சாரதி கைது](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%89%e0%ae%b1%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95/): பாராளுமன்ற  உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையதாக   மேலும் ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். நிட்டம்புவ பகுதியைச் சேர்ந்த 37 வயதான முச்சக்கர வண்டி சாரதி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் இதுவரையில் 2,027 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 898 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. - [மனைவி, பிள்ளைகளை கொன்று தற்கொலை செய்துக்கொண்ட தந்தை](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%95%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%a4/): கடன் தொல்லை காரணமாக கடிதம் எழுதி வைத்துவிட்டு தன் மனைவி, மகன், மகளை மரம் அறுக்கும் இயந்திரம் மூலம் கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு குடும்பஸ்தர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பமொன்று இடம்பெற்றுள்ளது. சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூரிலேயே இச்சம்ம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிய வருகிறது. குறித்த நபர், கணினி பொறியியல் துறையில் பணியாற்றி வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து சங்கர்நகர் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். சம்பவதினத்தன்று உயிரிழந்த தம்பதிகளுக்கு திருமணநாள் என்பதும் குறிப்பிடத்தக்கது.   - [காணாமல் போன 9 வயது சிறுமி சடலமாக மீட்பு](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a9-9-%e0%ae%b5%e0%ae%af%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%ae%bf-%e0%ae%9a/): பண்டாரகம – அட்டலுகம பகுதியில் காணாமல்போன 9 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இந்த சிறுமியின் சடலம் அவரது வீட்டுக்கு அருகில் உள்ள சதுப்பு நிலம் ஒன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. பண்டாரகம, அட்டுலுகம பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த சிறுமி நேற்று வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் தனது வீட்டிலிருந்து சுமார் 200 மீற்றர் தொலைவிலுள்ள கடையொன்றுக்கு கோழி இறைச்சி வாங்குவதற்காக சென்ற நிலையில், மீண்டும் வீடு திரும்பவில்லை. சிறுமி காணாமல் போன சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளையடுத்தே இவ்வாறு குறித்த சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். - [கொள்ளுப்பிட்டியில் ஆர்ப்பாட்டம் காரணமாக கடும் வாகன நெரிசல்](https://minnal24.com/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa/): எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கொள்ளுப்பிட்டி பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது. காலிமுகத்திடல் போராட்டத்தின் 50ஆவது நாளை முன்னிட்டு இவ்வாறு எதிர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டு வருவதால், கொள்ளுப்பிட்டியை சுற்றியுள்ள வீதிகளின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   - [முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்களுக்கு பெற்றோல் வழங்கப்பட மாட்டாது](https://minnal24.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d/): முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு ஒக்டேன் 95 பெற்றோல் வழங்கப்படமாட்டாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. குறைந்த அளவில் ஒக்டேன் 95 எரிபொருள் இருப்புக்களை கருத்தில் கொண்டு இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. - [இன்றோடு 50 வது நாளை எட்டியுள்ள காலி முகத்திடல் போராட்டம்](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-50-%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%88-%e0%ae%8e%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%81/): கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி காலிமுகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று சனிக்கிழமையுடன் 50 ஆவது நாளை எட்டியுள்ளது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக காலி முகத்திடலில் அமைதிப் போராட்டம் கடந்த ஏப்ரல் 50 ஆந் திகதி ஆரம்பிக்கப்பட்டது. ஜனாதிபதி மற்றும் பிரதமரை பதவி விலக கோரி ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தை தொடர்ந்து, கடந்த 9 ஆந் திகதி இடம்பெற்ற கலவர சம்பவங்களை தொடர்ந்து, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இன்று சனிக்கிழமை கொழும்பில் முன்னெடுக்கப்படவுள்ள ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்த கோட்டை பொலிஸார்,  நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றுக்கொண்டுள்ளனர். மேலும், இன்று ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்துள்ளவர்கள், கொள்ளுபிட்டி சந்தி முதல் கோட்டை நீதிவான் நீதிமன்ற அதிகார எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் எவ்வித சேதத்தையும் விளைவிக்க கூடாது, என கோட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. - [லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள அறிவித்தல்](https://minnal24.com/%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b0%e0%af%8b-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-3/): நாளை புதன்கிழமை எரிவாயு விநியோகம் இடம்பெறமாட்டாது, என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. முன்னதாக, எதிர்வரும் நாட்களில் மீண்டும் எரிவாயு விநியோகம் மீள ஆரம்பிக்கப்படும் என்று லிட்ரோ நிறுவனம் தெரிவித்திருந்தது. எனினும், இன்று செவ்வாய்க்கிழமை மேல் மாகாணத்திற்கு மாத்திரம் லிட்ரோ எரிவாயு விநியோகிக்கும் விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நாளை எரிவாயு விநியோகம் இடம்பெறாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. - [உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான வேலைத்திட்டம்](https://minnal24.com/%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b5%e0%af%81%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%88-%e0%ae%89%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa/): -கல்முனை நிருபர்- எமது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து எதிர்வருகின்ற காலங்களில் நாடும் நாமும் எதிர்கொள்ளவிருக்கும் உணவு தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் முகமாக நாடளாவிய ரீதியில் உணவு பாதுகாப்பு தொடர்பான தேசிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் ஏற்படவிருக்கின்ற உக்கிரமான உணவுப் பற்றாக்குறைக்கு தீர்வாக எதிர்காலத்தில் மாவட்டத்தின் சகல பிரதேச செயலாளர் பிரிவுகளையும் தழுவியதாக இதுவரையிலும் பல வேலைத்திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில், மாவட்டத்தின் சகல அரச நிறுவனங்களுக்கும் சொந்தமான இடங்களில் உள்ள வெற்று நிலங்களில் துரித உணவு உற்பத்தி செயற்றிட்டத்தை அமுல்படுத்தவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சகல அரச நிறுவனங்களுக்கும் சொந்தமான வெற்று இடங்களில் பயிர்ச்செய்கை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், அந்நிறுவனங்களால் பயிர் செய்கை செய்ய முடியாத நிலைமை இருப்பின் அந்த இடங்களை வேறு நிறுவனங்களுக்கு (படையினர், சிவில் பாதுகாப்பு திணைக்களம், இலங்கை பொலிஸ் போன்றன) அல்லது விவசாய சங்கங்களுக்கு ஒதுக்கி பயிர்ச்செய்கை மேற்கொள்ள […] - [கல்முனையில் விலங்கு கழிவுகள் கொட்டப்பட்ட நீரோடையை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம்](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%95%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b5/): -கல்முனை நிருபர்- குப்பைகள், விலங்குகழிவுகள் கொட்டப்பட்ட மற்றும் சல்பீனியாக்கள் நிறைந்த கல்முனை சாய்ந்தமருது வண்ட் வீதியில் அமைந்துள்ள நீரோடையை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம் இன்று நீர்ப்பாசன திணைக்களம் மற்றும் கல்முனை மாநகர சபை என்பன இணைந்து முன்னெடுத்து வருகின்றனர். இன்று காலை ஆரம்பித்துள்ள இந்த வேலைத்திட்டமானது மக்களின் வேண்டுகோளின் பிரகாரம் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் கல்முனை அஸ்ரப் ஞாபாகர்த்த வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எப். ரஹ்மான் ஆகியோர் கல்முனை மாநகர சபைக்கு முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாகவும், மற்றும் கள விஜயத்தினூடாக கண்டுபிடிக்கப்பட்ட விலங்கு கழிவுகளை அகற்றும் நோக்கிலும், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாகவும் இந்த வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக, கல்முனை மாநகர பிரதம சுகாதார வைத்தியதிகாரி வைத்தியர் எம்.ஜே.கே.எம். அர்சத் காரியப்பர் இதன் போது தெரிவித்தார். மேலும், இவ்வாறான சட்டவிரோத மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளை தொடர்ந்தும் செய்து சுற்றாடலுக்கு […] - [இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு புதிய தலைவர் நியமனம்](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%8b%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-3/): இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கமைய, புதிய தலைவராக உவைஸ் மொஹமட் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவராக பணியாற்றி வந்த சுமித் விஜேசிங்க, தனிப்பட்ட விடயம் காரணமாக தமது பதவி விலகல் கடிதத்தை அமைச்சருக்கு அனுப்பி வைத்திருந்த நிலையில்  குறித்த பதவி வெற்றிடத்திற்கு உவைஸ் மொஹமட் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து, உவைஸ் தனது கடமைகளை இன்று செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். உவைஸ் மொஹமட் இதற்கு முன்னர் இலங்கை பெற்றோலிய மொத்த களஞ்சிய முனையத்தின் தலைவராக பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது. - [குளவி கொட்டி 25 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி](https://minnal24.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf-25-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5/): -கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் இன்று செவ்வாய்க்கிழமை பாடசாலை நிறைவுபெறும் நேரத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகி 25 மாணவர்கள் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில  11 பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று பகல் 1.30 மணியளவில் குரங்குகளின் நடவடிக்கையால் குளவி கூடு கலைந்துள்ளது. இதன் காரணமாக பாடசாலை விட்டு வெளியேறுகின்ற நேரத்தில் பல மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். குறித்த நேரத்தில் மாணவர்கள் பதற்றத்துக்குள்ளாகியதோடு, சில மாணவிகள் குளவி கொட்டுக்கு உள்ளாகி மயக்கமடைந்தும் காணப்பட்டனர். . இவர்கள் உடனடியாக சமூர்த்தி திணைக்களப் பணிப்பாளரின் வாகனத்தில் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட மாணவர்களில் 11 பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனையவர்கள் விடுதிகளுக்கு அனுப்பப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. பாடசாலையில் குளவி கூடு கலைந்த போது பாடசாலையின் அபாய சமிஞ்சை ஒலி எழுப்பட்டது, இதன் காரணமாக மாணவர்கள் பதற்றத்துக்குள்ளாகினர். ஆனாலும், […] - [பேக்கரி பொருட்களின் விலை அதிகரிப்பு?](https://minnal24.com/%e0%ae%aa%e0%af%87%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2-4/): பாண் தவிர்ந்த ஏனைய அனைத்து பேக்கரி பொருட்களின் விலைகளும் 12 முதல் 15 ரூபா வரை அதிகரிக்குமென, அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். அதன்படி, ஒரு சீனி பணிசின் விலை ரூ.100 ஆக அதிகரிக்க கூடும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும், பேக்கரி பொருட்களுக்கு வற் (VAT) வரியில் இருந்து விலக்கு அளிக்குமாறு கோரி பிரதமருக்கு நேற்று கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. பேக்கரி தொழிலில் பயன்படுத்தப்படும் அனைத்து பொருட்களையும் கொள்வனவு செய்யும் போது வற் (VAT) வரி செலுத்தப்படும். பேக்கரி உரிமையாளர்கள் பேக்கரி பொருட்களுக்கு வற் (VAT) வரி செலுத்துவது அநீதியானது. நாட்டில் நிலவும் பொருளாதாரப் பிரச்சினைகளால்  8,000 பேக்கரிகளில் சுமார் 2000 பேக்கரிகள் ஏற்கனவே மூடப்பட்டுள்ளது. பேக்கரிகளின் உற்பத்தி மற்றும் விற்பனையும் சுமார் 50 சதவீதம் குறைந்துள்ளது என அவர் மேலும் தெரிவித்தார். - [பளையில் வாள்வெட்டு குழு அட்டகாசம்](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%b3%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b5%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%af%81/): பளை பொலிஸ் பிரிவிற்க்குட்பட்ட முல்லையடி கிராமத்தில் வாள் வெட்டு குழுவினரின் அட்டகாசம் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்திற்குட்பட்ட பளை பிரதேச முல்லையடி கிராமத்தில் நேற்று திங்கட்கிழமை அதிகாலை 2.10 மணியளவில் இரு மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேரை கொண்ட குழுவொன்று வீடு ஒன்றை சேதப்படுத்தியதுடன் பெற்றோல் குண்டும் வீசி விட்டு சென்றுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக பளை பொலிஸாரிடம் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. - [பரிசுப்பொருட்கள் வழங்கி அனுப்பி வைக்கப்பட்டது ரஷ்ய ஏரோஃப்ளொட் விமானம்](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf/): கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ரஷ்யாவின் ஏரோஃப்ளொட் நேற்று திங்கட்கிழமை மாலை மொஸ்கோவிற்கு பறந்து சென்றது. குறித்த விமானம் இலங்கையிலிருந்து வெளியேறுவதற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை உத்தரவு கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றத்தினால் இடைநிறுத்தப்பட்டது. சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவையடுத்து நீதிமன்றம் குறித்த இடைக்கால உத்தரவை இடைநிறுத்தி உத்தரவிட்டது. இந்நிலையில் விமான நிலையம் மற்றும் விமான போக்குவரத்து தலைவர் ஜி.ஏ.சந்திரசிறி மற்றும் அவரது குழுவினர், ரஷ்ய ஏரோஃப்ளொட் விமானிகள் உட்பட்ட குழுவினரிடம் தடுத்து வைக்கப்பட்டது தொடர்பில் மன்னிப்பு கோரி அவர்களுக்கு அன்பளிப்பாக தேயிலை, கஜு வழங்கி சந்தோஷமாக அனுப்பி வைத்தனர். - [நாளை முதல் சந்தைக்கு எரிபொருள் விநியோகிக்கப்படும் - வலுசக்தி அமைச்சர்](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf/): கடந்த சில நாட்களாக எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையில், நாளை புதன்கிழமை முதல் எரிபொருள் விநியோகம் வழமைக்கு திரும்பும், என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். 5,000 மெட்ரிக் டன் டீசல் மற்றும் 3,500 மெட்ரிக் டன் பெட்ரோல் நாளை முதல் சந்தைக்கு விநியோகிக்கப்படும் என்று அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவத்துள்ளார். - [விவசாயிகளின் சிறியளவிலான கடன்களை முழுமையாக தள்ளுபடிசெய்ய தீர்மானம்](https://minnal24.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b3%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be/): சிறியளவிலான நெற்செய்கையாளர்கள் பெற்ற கடனை முழுமையாக தள்ளுபடிசெய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். விவசாயிகளின் நலன் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இரண்டு ஹெக்டேயருக்கு குறைவான நிலப்பரப்பை கொண்ட நெற்செய்கையாளர்கள் பெற்றுள்ள கடன் தொகையை இவ்வாறு தள்ளுபடி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. - [சீமெந்தின் விலை மீண்டும் அதிகரிப்பு](https://minnal24.com/%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/): சீமெந்து மூடையின் விலையை மீண்டும் அதிகரிக்க சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய, 2,850 ரூபாவாக இருந்த 50 கிலோகிராம்  சீமெந்து மூடை ஒன்றின் விலை 150 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மற்றும் இறக்குமதி செய்யப்படும் அனைத்து 50 கிலோகிராம் சீமெந்து மூடை ஒன்றின் புதிய விலை ரூபா 3,000 என தெரிவிக்கப்பட்டுள்ளது. - [மன்னாரில் விழிப்புணர்வு நடவடிக்கை முன்னெடுப்பு](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%a3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%81/): -மன்னார் நிருபர்- பொது போக்குவரத்தில் மாற்றாற்றல் உடையவர்களுக்கான ஆசன ஒதுக்கீட்டை உறுதிபடுத்த கோரி விழுது அமைப்பின் அனுசரணையில் தேனீ மாற்றாற்றல் அமைப்பினரால் விசேட விழிப்புணர்வு நிகழ்வு மன்னார் பிரதான பேருந்து நிலையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை  காலை இடம்பெற்றது. இதன் போது, அரச மற்றும் தனியார் போக்குவரத்து பேருந்துகளில் மாற்றாற்றல் உடையவர்களுக்கு ஒதுக்கப்பட்ட ஆசனங்கள் பிரத்தியோக ஸ்ரிக்கர்கள் ஒட்டப்பட்டது மாற்றாற்றல் உடையவர்களுக்காக ஒதுக்கப்பட்ட ஆசனங்கள் அடையாளப்படுத்தப்பட்டது. குறித்த நிகழ்வில், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஸ்ரான்லி டிமேல், விழுது அமைப்பின் மாவட்ட இணைப்பாளர், தேனீ அமைப்பின் உறுப்பினர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டு விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபட்டதுடன் ஸ்ரிக்கர்களையும் காட்சிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது. - [ஏற்கனவே பயிரிட்டவைகளுக்கே உரமில்லை என விவசாயிகள் விசனம்](https://minnal24.com/%e0%ae%8f%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%ae%b5%e0%af%87-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b5%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d/): -கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி மாவட்டத்தில் கல்மடு குளத்தின் கீழ் சிறுபோக பயிர்செய்கை மேற்கொண்டு வரும் விவசாயிகள் பலர் கிருமி நாசினி மற்றும் களைநாசினி இரசாயன உரம் இன்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அந்த வகையில் கல்மடு குளத்தின் கீழ் சிறுபோக பயிர்செய்கை மேற் கொள்ளப்பட்டு தற்பொழுது 50 நாட்கள் கடந்த நிலையிலும், கமநல சேவை நிலையத்தின் ஊடாக வழங்கப்படும் சேதனப் பசளை இதுவரையில் பலருக்கு கிடைக்கப் பெறவில்லை. அத்துடன், பயிர்களுக்கான களைநாசினி பெறமுடியாத நிலையில் பயிர்கள் முழுதாக கொறைபுட்கள் நிறைந்து காணப்படுவதுடன், கிருமி நாசினிகள் இல்லாத காரணத்தினால் பல விதமான பங்கஸ் நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், இப்பகுதியில் பயிர்செய்கையை மேற்கொண்டு வரும் பல விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை காரணமாக தரிசு நிலமாக உள்ள அனைத்து இடங்களிலும் பயிற்செய்கை மேற்கொள்ள வேண்டும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், பயிர்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள பயிர்களை அறுவடை செய்வதற்கான கிருமி நாசினி, […] - [கல்முனை கல்வி வலயமட்ட பெருவிளையாட்டு போட்டி](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%88-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%af%e0%ae%ae%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%aa%e0%af%86/): -கல்முனை நிருபர்- கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட நிந்தவூர் கமு/கமு/இமாம் கஸ்ஸாலி மகா வித்தியாலயம் வலயமட்ட பெருவிளையாட்டு வொலிபோல் போட்டியில் சாம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. சுமார் 72 வருடகால பாடசாலையின் வரலாற்றில் வலய மட்டத்தில் பெரு விளையாட்டு நிகழ்வு ஒன்றில் இப்பாடசாலை முதன் முறையாக 16 வயது பிரிவு ஆண்களுக்கான வொலிபோல் விளையாட்டில் சாம்பியனாக தெரிவு செய்யப்பட்டு பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர். கல்முனை கல்வி வலயத்தில் இவ் விளையாட்டில் பெரும் தூண்களான நிந்தவூர் அல் அஷ்றக் தேசிய பாடசாலை, கல்முனை உவெஸ்லி உயர் தர பாடசாலை மற்றும் அல் பஹ்ரியா தேசிய பாடசாலை ஆகிய பாடசாலைகளின் அணிகளை வீழ்த்தி இவ் வெற்றியை பதிவு செய்தமை குறிப்பிடத்தக்கது. - [ரஞ்சன் ராமநாயக்கவிற்கு 2 வருட கடூழிய சிறை தண்டனை](https://minnal24.com/%e0%ae%b0%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a8%e0%ae%be%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81-2/): முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தை அவமதித்ததாக தொடரப்பட்ட இரண்டாவது வழக்கிற்காக இன்று செவ்வாய்க்கிழமை அவர் உயர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது, ரஞ்சன் ராமநாயக்க குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2021 ஜனவரி 12 ஆம் திகதி, நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்தின் பேரில் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அதன்படி, அவர் தற்போது அத்தண்டனையை அனுபவித்து வருகின்றார். இந்நிலையில், இன்று ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. - [மின்சாரக்கட்டணங்கள் அதிகரிப்பு](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a3%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf/): மின்கட்டணங்களை அதிகரிக்க வேண்டிய தேவை உள்ளதாக என இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சீ.பெர்டினண்டோ தெரிவித்துள்ளார். மின்கட்டணம் 250 சதவீதத்தால் அதிகரிக்கப்பட வேண்டிய தேவை காணப்படுகின்றது. எனினும் சாதாரண அளவில் என்றாலும் தற்போது கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான யோசனைகள் மின்சக்தி அமைச்சுக்கு முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார். தற்போது 277 பில்லியன் ரூபா வருவாய் கிடைக்கிறது, எனினும் மின்னுற்பத்திக்கான செலவு 755 பில்லியன் ரூபாவாக உள்ளது. இதனை ஈடு செய்வதானால் மின் கட்டணம் 250 சதவீதத்தால் அதிகரிக்கப்பட வேண்டும். எனினும் மின்கட்டணத்தை அதிகரிப்பதற்கான இறுதி தீர்மானம் இதுவரையில் எட்டப்படவில்லை. கட்டணம் அதிகரிக்கப்படாமையால் இலங்கை மின்சார சபையின் பணியாளர்களுக்கு கடந்த மாதம் வேதனத்தை செலுத்துவதிலும் சிக்கல் ஏற்பட்டது. எனவே, சாதாரண அளவில் மின்கட்டணம் தற்போது அதிகரிக்கப்பட வேண்டும், என இலங்கை மின்சார சபையின் தலைவர் […] - [மட்டக்களப்பு-களுவாஞ்சிக்குடி கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம்](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95/): மட்டக்களப்பு-களுவாஞ்சிக்குடி கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் நேற்று திங்கட்கிழமை ஊர்காவல் பண்ணல் திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகியது. எதிர்வரும் சனிக்கிழமை கன்னிக்கால் வெட்டுச்சடங்கும், திங்கட்கிழமை நெல்குற்றும் பூஜை, அதனைத்தொடர்ந்து செவ்வாய்க்கிழமை திருக்குளிர்த்தியும் இடம்பெறும். அடியார்கள் அனைவரும் இவ் உற்சவத்தில் கலந்து கொண்டு அன்னையின் அருள்பெறுமாறு ஆலய நிர்வாகத்தினர் அழைக்கின்றனர். - [மீன்களின் விலை பாரிய அளவில் அதிகரிப்பு](https://minnal24.com/%e0%ae%ae%e0%af%80%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%85%e0%ae%b3%e0%ae%b5/): சந்தைகளில் மரக்கறிகள் மற்றும் மீன்களின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பேலியகொடை மீன் சந்தை கட்டடத்தொகுதியில், ஒரு கிலோ கிராம் கெலவல்லா மீன் 2,000 ரூபா ஒரு கிலோகிராம் தலபத் மீன் 1,700 ரூபா ஒரு கிலோகிராம் பலயா மீன் 1,000 ரூபா ஒரு கிலோகிராம் சாலை மற்றும் லின்னா 800 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது. - [ஆலயத்தில் திருட்டு : சந்தேக நபர் ஒருவர் கைது](https://minnal24.com/%e0%ae%86%e0%ae%b2%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4/): ஹப்புத்தளையிலிருந்து தம்பேதன்ன செல்லும் வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ குறிஞ்சி முத்துமாரியம்மன் ஆலயத்தை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதானவர் ஹப்புத்துளை, சர்வட்டி பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு குறித்த ஆலயத்தினுள் இருந்து தங்க ஆபரணங்கள் மற்றும் உண்டியல்களில் இருந்த பணம் என்பவை களவாடப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து, குறித்த ஆலயத்தில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி காணொளி உதவியுடன் சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தொடர்புடைய செய்தி : https://www.minnal24.com/?p=77777 - [கண்டம் விட்டு கண்டம் தாண்டி அணிவகுக்கும் வெளிநாட்டு பறவைகள்](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a3/): -மன்னார் நிருபர்- நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலமை காரணமாக நாட்டுக்கு அண்ணிய செலாவனியை பெற்றுத்தரும் சுற்றுலாதுறையானது மிகவும் நலிவடைந்துள்ளது. இந்த நிலையில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் நூற்றுக்கணக்கான பிளமிங்கோ என சொல்லப்பட்டும் வெளிநாட்டுப்பறவைகள் மன்னார் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளதுடன் சுற்றுலா பயணிகளுக்கும் சிறந்த அனுபவத்தை வழங்கி வருகின்றது. தமிழில் இப்பறவை பெரும் பூநாரை என அழைக்கப்படுகின்றது. இந்த பறவைகள் ஆழமற்ற ஏரிகள், சதுப்பு நிலங்கள் மற்றும் ஆப்பிரிக்கா, ஆசியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் மணல் தீவுகளில் வாழ்கின்றன. ஃபிளமிங்கோக்களில் 6 இனங்கள் உள்ளன அவைகள் இறால், ஆல்கா, ஓட்டுமீன்களை சாப்பிடுகின்றன. இடம்பெயர்வின் போது, பிளமிங்கோக்கள் ஒரு மணி நேரத்திற்கு 37 மைல்கள் வரை பறக்கின்றன மற்றும் 300 மைல்களுக்கு மேல் பயணம் செய்து தங்கள் புதிய வாழ்விடத்திற்கு செல்லக்கூடியவை. பிளமிங்கோக்கள் என்பது நாரைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவையாகும் இதன் அறிவியல் பெயர் பீனிகாப்டெரசு ரோசசு என்பதாகும். நம் […] - [நிதி மோசடி செய்துவிட்டு தமிழகத்தில் தஞ்சமடைந்த தம்பதி : தமிழக முதலமைச்சரிடம் உதவி கோரும் பாதிக்கப்பட்டவர்கள்](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%8b%e0%ae%9a%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81/): -கல்முனை நிருபர்- இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் தமிழ் பேசும் மக்களிடமிருந்து 2000 மில்லியன் ரூபாய் அளவில் மோசடி செய்துவிட்டு கடல் வழியாக சட்டவிரோதமாக தமிழகத்தில் நுழைந்து சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரிவேல்த் குளோபல் நிதி நிறுவன பிரதானி ஷிஹாப் ஷரீப் அவரது பாரியார் பர்ஸானா மாக்கர் ஆகியோரை, இந்திய தமிழகத்திலும் தமிழகத்திற்கு வெளியேயும் தமிழ் பேசும் மக்களுக்காக குரல் கொடுத்துவரும் தமிழக முதலமைச்சர் மு.கா.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து இலங்கைக்கு நாடு கடத்த வேண்டும் என பிரிவேல்த் குளோபல் பாதிக்கப்பட்ட அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். பிரிவேல்த் குளோபல் பாதிக்கப்பட்ட அமைப்பினர் சார்பில் தலைவர், செயலாளர், பிரதித்தலைவர் ஆகியோர் இன்று திங்கட்கிழமை மாலை கல்முனை தனியார் மண்டபத்தில் ஊடகங்களிடம் இது தொடர்பாக கருத்து வெளியிட்டனர். மேலும் அங்கு கருத்து தெரிவித்த அவர்கள், பிரிவேல்த் குளோபல் நிதி நிறுவனத்தினால் பாதிக்கப்பட்ட 1400 குடும்பங்கள் பொருளாதார நெருக்கடியினால் நிர்கதியாகியுள்ளது. குருவி சேர்ப்பது போன்று சேமித்த பணம், வீடுகட்ட […] - [துப்பாக்கிச்சூட்டில் இளைஞரொருவர் உயிரிழப்பு](https://minnal24.com/%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b3/): கொழும்பு – முகத்துவாரம் ரெட்பானா வத்த பகுதியில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 23 வயதான இளைஞரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவரின் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். ஜீன் மாதம் தொடங்கியதிலிருந்து நாட்டில் பதிவான 5வது துப்பாக்கிச்சூடு சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 03.06.2022- பானந்துறை துப்பாக்கிச்சூடு – 31 வயதான நபர் பலி 03.06.2022- அளுத்கம துப்பாக்கிச்சூடு – 42 வயதானவர் பலி 05.06.2022- தங்காளை துப்பாக்கிச் சூடு – 37 வயதான நபர் பலி 05.06.2022- அஹங்கம துப்பாக்கிச் சூடு – 27 வயதான நபர் பலி   - [தேர்தல்கள் உரிய காலத்தில் நடத்தப்பட வேண்டும்](https://minnal24.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2/): ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள மக்களின் எதிர்பார்ப்புக்களை காப்பாற்ற வேண்டுமாக இருந்தால் உரிய காலத்தில் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும், என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் தெரிவித்துள்ளார். இன்று திங்கட்கிழமை தேர்தல் செயலகத்தில் நடைபெற்ற அரசியல் கட்சி செயலாளர்களுடனான கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படாமல் இழுத்தடிப்பு செய்யப்படுவதன் காரணமாக மாகாணங்களை அதிகாரிகள் நிருவகிக்க வேண்டிய பொறுப்பு ஏற்பட்டிருக்கின்றது. மக்கள் இதனால் வாழ்வாதாரம், வேலைவாய்ப்பு, இடமாற்றம், உள்ளிட்ட அடிப்படை சேவைகளை பெறுவதில் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றார்கள் நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடிக்கு அகக்காரணங்களும், புறக்காரணங்களும் இருக்கலாம். அதேவேளையில் முறையான வளங்கள் முகாமை செய்யப்பட வேண்டிய தேவைப்பாடும் இருக்கின்றது. பல தரப்பினர் மீண்டும் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்து வருகின்றனர். அதே வேளையில் மாகாண சபைத் […] - [ஐ.ம.சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக பிரான்சிஸ் மகேந்திரன் நியமனம்](https://minnal24.com/%e0%ae%90-%e0%ae%ae-%e0%ae%9a%e0%ae%95%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%aa%e0%af%8d/): ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக தாழங்குடாவைச் சேர்ந்த பிரபல ஆசிரியரும், முன்னாள் அதிபருமான பிரான்சிஸ் மகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் முகாமைத்துவ குழுவின் பரிந்துரையின் பேரில் கட்சியின் செயற்குழுவின் அங்கீகாரத்துடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை எதிர்கட்சி அலுவலகத்தில் வைத்து இவருக்கான நியமனக்கடிதம் எதிர் கட்சி தலைவரும் கட்சியின் தலைவருமான சஜித் பிரேமதாசவினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இதன்போது கட்சியின் பொதுச் செயலாளர் மத்தும பண்டார உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டிருந்தனர். கடந்த காலங்களில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்காக மட்டக்களப்பில் சிறந்த முறையில் செயற்பட்டமையினால் குறித்த நியமனம் இவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக கட்சியின் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்தோடு கடந்த பாராளுமன்ற தேர்தலில் இவர் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு அதிகளவிலான வாக்குகளை பெற்றுக்கொடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.   - [பிரசன்ன ரணதுங்கவிற்கு இரண்டு வருட சிறை](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%a4%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%87%e0%ae%b0/): அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிற்கு 5 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன இன்று திங்கட்கிழமை தீர்ப்பளித்தார். அமைச்சர் பிரசன்ன ரணதுங்க,வர்த்தகர் ஒருவரிடம் இருந்து 64 மில்லியன் ரூபா கப்பம் பெற்றதாக கூறப்படும் வழங்கிலேயே நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்துள்ளது. 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 2ஆம் திகதி வரையான காலப்பகுதியினுள், கொலன்னாவை மீதொட்டமுல்ல பிரதேசத்தில் உள்ள காணியில் வசித்துவந்த அனுமதியற்ற குடியிருப்பாளர்களை வெளியேற்றி, அதனை சீரமைத்துதரும் பணிகளை நிறைவேற்றி கொடுப்பதற்காக  ஜெராட் மென்டிஸ் என்ற வர்த்தகரிடம் 64 மில்லியன் ரூபா கப்பமாக கோரிய குற்றச்சாட்டில் மேல் மாகாண முன்னாள் முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க, அவரது மனைவி மொரீன் ரணதுங்க மற்றும் நரேஷ் பாரிக் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரினால் கொழும்பு மேல் நீதிமன்றில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் வாதி மற்றும் […] - [சில பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களை சூடாக்கி அதில் குளிர்காய முற்படுகின்றனர்](https://minnal24.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%89%e0%ae%b1%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%b0/): உணவுத் தேவைக்காக மக்கள் வரிசையில் நிற்கும் நிலைமை ஏற்படாமல் தடுத்து அவர்களை பாதுகாப்பதுவே உடனடித் தேவையாக உள்ளது, என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன் தெரிவித்தார். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடனான மாதாந்த விஷேட கலந்துரையாடல் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதன்போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடியினால் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றார்கள் எரிவாயு, எரிபொருள், அடிப்படை பாவனைப் பொருட்கள் என அனைத்து விதமான பொருட்களுக்கும் அத்தியாவசியப் பொருட்களுக்கும் மக்கள் வரிசையில் நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கின்றது. இந்நிலையினை சாதகமாகப் பயன்படுத்தி அரசியல் செய்வதை விடுத்து மக்களுக்கான சேவைகளை வழங்க அனைவரும் முன்வர வேண்டும். குறிப்பாக மக்கள் அரசியல் தலைவர்களை தெரிவு செய்வது தங்களது […] - [நாளை பேருந்து சேவை இடம்பெறுமா?](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%88-%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%87%e0%ae%b5%e0%af%88-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa/): நாளை செவ்வாய்க்கிழமை பஸ் போக்குவரத்து இடம்பெறுவதில் நிச்சயமற்ற தன்மை நிலவுவதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். டீசல் தட்டுப்பாடு காரணமாக நாடளாவிய ரீதியாக இன்று திங்கட்கிழமை மூன்றில் ஒரு பங்கு பேருந்துகளே சேவையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, இன்று மீண்டும் பாடசாலைகள் ஆரம்பமாகியுள்ள நிலையில், மட்டுப்படுத்தப்பட்ட பேருந்து சேவை காரணமாக நாட்டின் பல பிரதேசங்களில் பாடசாலை மாணவர்கள் அசௌகரியத்திற்கு முகங்கொடுத்துள்ளனர். இந்நிலையில், டீசல் தட்டுப்பாட்டுக்கு உடனடி தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும், என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன கோரிக்கை விடுத்துள்ளார். - [அமெரிக்க டொலரின் இன்றைய பெறுமதி](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%ae%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%9f%e0%af%8a%e0%ae%b2%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%88%e0%ae%af-2/): இன்று திங்கட்கிழமை இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின்படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 365 ரூபா 26 சதமாகவும்இ கொள்முதல் பெறுமதி 355 ரூபா 29 சதமாகவும் பதிவாகியுள்ளது. - [கோயில் கதவை உடைத்து பணம், நகை திருட்டு](https://minnal24.com/%e0%ae%95%e0%af%8b%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a4%e0%ae%b5%e0%af%88-%e0%ae%89%e0%ae%9f%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d/): -பதுளை நிருபர்- ஹப்புத்தளையிலிருந்து தம்பேதன்ன செல்லும் வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ குறிஞ்சி முத்துமாரியம்மன் ஆலயத்தை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது இன்று திங்கட்கிழமை அதிகாலை பூஜை செய்வதற்காக ஆலயத்துக்கு வந்த பூசகர், ஆலய கதவு உடைக்கப்பட்டு இருப்பதை அவதானித்து ஊர் மக்களிடம் கூறியதை தொடர்ந்து, ஊர் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து அப்புத்தளை பொலிஸ் நிலையத்தில் புகார் செய்ததை தொடர்ந்து, பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு, ஆலயத்தில் உள்ள இரண்டு உண்டிகளிலும் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது மேலும், அம்மனுக்கு அணிவிக்கப்பட்டு இருந்த தங்க நகையும் களவாடப்பட்டு உள்ளதாகவும், ஊர்மக்கள் தெரிவித்ததோடு விசாரணைகளை அப்புத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் - [லிட்ரோ எரிவாயு விலை அதிகரிப்பு?](https://minnal24.com/%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b0%e0%af%8b-%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95/): லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை அதிகரிப்பதற்கு இன்னும் தீர்மானிக்கவில்லை என நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை, 12.5 கிலோ, 5 கிலோ மற்றும் 2.3 கிலோ எடையுள்ள வீட்டு எரிவாயு சிலிண்டர்கள் எதிர்வரும் புதன்கிழமை வரை விநியோகிக்கப்பட மாட்டாது எனவும் அவர் தெரிவித்தார். - [பாடசாலை போக்குவரத்து சேவை கட்டணம் அதிகரிப்பு](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%af%88-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%87-3/): அரச மற்றும் அரச அனுசரனையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைகள் இன்று முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக பாடசாலை போக்குவரத்து சேவை கட்டணத்தை 40 சதவீதத்தினால் அதிகரிக்கவுள்ளதாக, பாடசாலை போக்குவரத்து சேவை சங்கம் தெரிவித்துள்ளது. மேலும், டீசல் தட்டுப்பாடு மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக பாடசாலை போக்குவரத்து சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. . - [நாட்டில் பல இடங்களில் மழையுடனான வானிலை](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b2-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b4-4/): நாட்டில் பல பிரதேசங்களில் பலத்த மழைவீழ்ச்சி பதிவாக கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மாவட்டத்திலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மன்னாரிலிருந்து புத்தளம் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை […] - [அமைச்சரவைக் கூட்டம் இன்று : பல விசேட பிரேரணைகள் முன்வைக்கப்படவுள்ளன](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%b5%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1/): ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இந்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டம் இன்று திங்கட்கிழமை பிற்பகல் நடைபெறவுள்ளது. இன்று அமைச்சரவையில் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவினால் அரசியலமைப்பின் 21வது திருத்த பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது. அத்துடன் பல விசேட பிரேரணைகள் முன்வைக்கப்படவுள்ளன அதன்படி, மின்சாரக் கட்டணத்தை திருத்துவதற்கான முன்மொழிவு மற்றும் விவசாயம் செய்யாமல் விடப்பட்டுள்ள தனியார் காணிகளை விவசாயிகளுக்கு கையளிப்பது தொடர்பான அமைச்சரவைப் பத்திரமும் இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. - [சுவிஸ் - வலே மாநிலத்தில் வீசிய புயலில் 40 திற்கும் அதிகமானோர் காயம்](https://minnal24.com/%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b2%e0%af%87-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5/): சுவிட்சர்லாந்தின் வலே மாநிலத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12.30 மணியளவில் வீசிய புயல் காற்றின் பாதிப்புகள் தொடர்பாக பொலிஸ் கட்டுப்பாட்டு மையத்திற்கு சுமார் 400 அழைப்புகள் வந்துள்ள நிலையில்,  40 திற்கும் அதிகமானவர்கள் சிறுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர் என வலே மாநில பொலிசார் தெரிவித்துள்ளனர். பலத்த காற்றின் தாக்கம் காரணமாக அதிகளவிலான விழுந்த மரங்கள் தொடர்பாக பதிவாகியுள்ளன, அவற்றில் சில வீதி போக்குவரத்தை சில மணித்தியாளங்கள் தடை செய்துள்ளன. மேலும் சில குடியிருப்பு பகுதிகளின் கூரைகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. இதேவேளை துர்த்மன் (Turtmann ) பகுதியில் இன்று இடம்பெற்ற பெரியளவிலான கால்பந்து போட்டி ரத்து செய்யப்பட்டது. இப்பகுதியில் காற்றினால் பறந்த பாகங்கள் காரணமாக இருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் பிரிகர்பாட்  (Brigerbad) பகுதியில் இடியுடன் கூடிய மழை மற்றும் காற்று வலுவாக வீசியதன் காரணமாக இப்பகுதியில் தற்காலிக கூடாரங்களில் வார இறுதி நாட்களை கழிக்க தங்கியிருந்த சுமார் 40 பேர் வரை […] - [தங்காலையில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி](https://minnal24.com/%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%9a/): தங்காலை – மொரகெடியர பகுதியில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். - [மே 9 சம்பவம் தொடர்பில் அம்பாறையில் 33 பேர் கைது](https://minnal24.com/%e0%ae%ae%e0%af%87-9-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%ae%e0%af%8d/): மே 9 சம்பவம் தொடர்பில் அம்பாறையில் இதுவரையில் 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த மே மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் போது, நாடாளுமன்ற மற்றும் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு தீவைத்தமை மற்றும் சேதப்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் அம்பாறையில் இதுவரையில் 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. - [இரு இளைஞர்களுக்கு பார்வை கொடுத்த சிறுவன்](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%b0%e0%af%81-%e0%ae%87%e0%ae%b3%e0%af%88%e0%ae%9e%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%88/): அனுராதபுரம் கலென்பிந்துனுவெவ பிரதேசத்தில் உயிரிழந்த 16 வயது சிறுவனின் கண்களால் இரு இளைஞர்கள் பார்வையை பெற்றுள்ளனர். தக்ஸித இமேஷ் தனபால (16 வயது) என்ற  சிறுவன் கலென்பிந்துனுவெவ, கெட்டலாவ பகுதியைச் சேர்ந்த அளுத்தியுல்வேவ மகா வித்தியாலயத்தில் கல்வி கற்று வந்தார். இந்நிலையில், குறித்த சிறுவன் கடந்த மே 31ஆம் திகதி விபத்து ஒன்றில் மூளைச்சாவு அடைந்து உயிரிழந்தார். இறந்த மாணவனின் பெற்றோர்களின் சம்மதத்துடன் அவரின் கண்கள் தானம் செய்யப்பட்டது. அவரது கண்களில் இருந்து அகற்றப்பட்ட விழிவெண்படலத்தை உடனடியாக கொழும்பில் உள்ள கண் தான தலைமையகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், இறந்த மாணவனின் இறுதி சடங்கிற்கு முன் கொழும்பில் இரண்டு இளைஞர்களுக்கு விழிவெண்படல மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு  பார்வையை பெற்றனர். மருத்துவமனைகளில் நூற்றுக்கணக்கான நோயாளிகள் விழிவெண்படல ஒட்டுதலுக்காக காத்திருப்பதாகவும்,  கண் தானம் செய்வது ஒரு உன்னத செயல் என்றும், அநுராதபுரம் கிளை கண் தான சங்கத்தின் பொறுப்பதிகாரி டபிள்யூ.எம்.எஸ்.சந்தன தெரிவித்துள்ளார். - [வீதி விபத்துக்களில் 5 பலி 11 பேர் படுகாயம்](https://minnal24.com/%e0%ae%b5%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-5-%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%bf-11/): நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் , மேலும் 11 பேர் படுகாயமடைந்துள்ளனர். வவுனியா, யாழ்ப்பாணம், கவரக்குளம், இரத்தினபுரி மற்றும் குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவுகளில் இந்த விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. வவுனியா – யாழ்ப்பாணம் வீதியில் தாண்டிக்குளம் பகுதியில் எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மீது லொறி மோதியதில் 26 வயதுடைய மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார். மேலும், குளியாப்பிட்டிய தண்டகமுவ பகுதியில் லொறியை முந்திச் சென்ற மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் மீது வேன் மோதியதில் அவர் குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். வவுனியா கவரக்குளம் கல்குளம் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த பஸ்ஸ{டன் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் வேன் மோதி விபத்துக்குள்ளானதில் வேனில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 9 பேர் காயமடைந்துள்ளனர். இரத்தினபுரி மற்றும் குளியாப்பிட்டிய பிரதேசங்களிலும் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளனர். - [காருக்குள் விளையாடிக் கொண்டிருந்த மூன்று குழந்தைகள் மூச்சு திணறி உயிரிழப்பு](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b3%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a/): சென்னை-  நெல்லை மாவட்டத்தில் 3 நாட்களுக்கு மேலாக இயக்கப்படாமல் இருந்த காருக்குள் விளையாடிக் கொண்டிருந்த மூன்று குழந்தைகள் மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், பணகுடி அருகே லெப்பைக் குடியிருப்பை சேர்ந்த நித்திஷ்(வயது-7) , நிதிஷா(வயது-5) மற்றும் உறவினரான ஒருவரின் மகன் கபிலன் (வயது-4) ஆகியோர் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காரில் ஏறி விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். மூன்று நாட்களாக கார் குறித்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், அதிக உஷ்ணம் காருக்குள் இருந்துள்ளதோடு ஆக்சிஜன் குறைவாகவும் இருந்துள்ளது. காரின் கதவைத் திறந்து உள்ளே சென்று காருக்குள் விளையாடி கொண்டிருந்தபோது, அவர்கள் சுவாசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வெளியில் வர முயற்சித்த நிலையில் கதவுகளின் இறப்பர் பகுதிகள் இறுகிய நிலையில் வர முடியாமல் போயுள்ளது. வெகு நேரமாக குழந்தைகளை காணாமல் தேடிய பெற்றோர் குழந்தைகள் காருக்குள் மயங்கிய நிலையில் இருப்பதை கண்டு அவர்களை மீட்டு பணகுடி அரசு […] - [மட்டக்களப்பு - ஈச்சந்தீவு அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவ சடங்கு பெருவிழா](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%80%e0%ae%b5/): மட்டக்களப்பு – ஈச்சந்தீவு அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவ சடங்கு பெருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமானது. அதன்படி இன்று பால்குட பவனியும் அபிஷேகமும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகிய இவ் உற்சவ பெருவிழாவானது எதிர்வரும் 14 ஆம் திகதி செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடையும் என்பதனையும் அடியார்களை இவ்வருடாந்த உற்சவத்தில் கலந்து கொண்டு கண்ணகி அம்மனின் அருள் பெறுமாறும் ஆலய நிர்வாக சபையினர் கேட்டுக்கொள்கின்றனர். - [கிளிநொச்சியில் சடலம் மீட்பு](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8a%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%9f%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%9f/): -கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பரந்தன்  பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு 10 மணியளவில் இரத்தகாயங்களுடன் ஒருவர் சடலமாக மீடகப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்டவர் பரந்தன் ஒன்பதாம் வீதியை சேர்ந்த இதயராஜ் (வயது-45) என இனங்காணப்பட்டுள்ளார். சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது ,இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். - [வெளிநாடு செல்ல விரும்பும் அரசு ஊழியர்களை ஊக்குவிக்க: அரசின் புதிய திட்டம்](https://minnal24.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%ae/): வெளிநாடு செல்ல விரும்பும் அரச உத்தியோகத்தர்களுக்கு ஐந்தாண்டு கால சம்பளமில்லாத விடுமுறை திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆங்கில நாளேடு ஒன்று வழங்கியுள்ள செவ்வியில் தெரிவித்துள்ளார். வேலை அல்லது வேறு எந்த நோக்கங்களுக்காக வெளிநாடு செல்லும் அரச ஊழியர்கள் ஐந்தாண்டுகளின் முடிவில் சம்பளம் இல்லாத விடுமுறை காலத்தை பூர்த்தி செய்ததன் பின்னர் சகல சலுகைகளுடனும் அவர்களின் மூப்பு மற்றும் தரங்களை மீளப் பெறுவார்கள். இதன் மூலம் அரசு ஊழியர்கள் வெளிநாட்டிற்கு வேலை வாய்ப்புக்காக செல்வதற்கு ஊக்கம் கிடைக்கும். எனவே, இத்திட்டம் அரச ஊழியர்களுக்கு பல நன்மைகளை வழங்கும் என தி சண்டே ஒப்சர்வர் செய்தித்தாளுக்கு வழங்கியுள்ள செவ்வியில் அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். - [ஏரோஃப்ளோட் விமான பிரச்சினை இரு நாடுகளுக்கும் இடையிலான பிரச்சினையல்ல](https://minnal24.com/%e0%ae%8f%e0%ae%b0%e0%af%8b%e0%ae%83%e0%ae%aa%e0%af%8d%e0%ae%b3%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf/): ஏரோஃப்ளோட் விமானம் தொடர்பான பிரச்சினை இரு நாடுகளுக்கும் இடையிலான பிரச்சினையல்ல, என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இதுவொரு தனிப்பட்ட சட்டப் பிரச்சினை என்பதால், சட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு நீதியமைச்சருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக, பிரதமர், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஊடாக ரஷ்யாவுக்கு அறிவித்துள்ளார். தொடர்புடைய செய்தி:- https://www.minnal24.com/?p=77657 - [தென்னிந்திய திருசச்சபையின் மீள்பிரதிஷ்டை நிகழ்வு](https://minnal24.com/%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%9a%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%aa%e0%af%88%e0%ae%af/): -யாழ் நிருபர்- தென்னிந்தியத் திருச்சபையின் யாழ் ஆதீனத்தின் வட்டுக்கோட்டை பேராலயம் இன்று காலை 9.00 மணியளவில் தென்னிந்திய திருசச்சபையின் மீள்பிரதிஷ்டை பேராயர் டானியல் தியாகராஜா தலைமையில் இடம்பெற்றது.. 400 வருட பழமையை கொண்ட குறித்த பேராலயமானது மீளப் புனரமைக்கபட்ட நிலையில் திருச்சபையின் பேராயரால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து விசேட ஆராதனை வழிபாடுகள் இடம்பெற்றதோடு உடுவில் மகளிர் கல்லூரி மாணவர்களாலும், ஆசிரியர்களாலும் விசேட பாடல்களும் இடம்பெற்றன. மேலும் திடப்படுத்தல், ஞானஸ்நானம், உதவி குருநிலைப்படுத்தல் என்பன பேராயர் டானியல் தியாகராஜாவின் வழிப்படுத்தலோடு இடம்பெற்றது இந்த ஆராதனை வழிபாடுகளின் போது தென்னிந்திய திருச்சபை பேராயர் வணக்கத்துக்குரிய கலாநிதி டானியல் தியாகராஜா, தென்னிந்தியத் திருச்சபையின் மதகுருமார், உடுவில் மகளிர் கல்லூரி ஆசிரியர்கள் மாணவர்கள், வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின், திருச்சபையினர், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. - [நீர் கட்டணங்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்](https://minnal24.com/%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a3%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2/): தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைப்பு சபை பொதுமக்களுக்கான அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. பொதுமக்கள் தமது நீர் கட்டணங்களை மின்னஞ்சல் மூலம் பெற்றுக்கொள்வதற்கு தங்களை பதிவு செய்யுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, நீர் கணக்கு எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை 07193 99999 என்ற எண்ணுக்கு அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டுள்ளது. நீர் கட்டணங்களை அச்சிடுவதற்கான கடதாசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளமை  காரணமாக  இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.   - [டெங்கு நுளம்பை கட்டுப்படுத்த வீட்டுக்கு வீடு பரிசோதனை ஆரம்பம்](https://minnal24.com/%e0%ae%9f%e0%af%86%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a8%e0%af%81%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f/): -கல்முனை நிருபர்- கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர்ஐ.எல்.எம். றிபாஸின் வழிகாட்டலிலும், கல்முனை பிராந்திய தொற்றுநோய்த் தடுப்புப்பிரிவுப் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.ஏ சி.எம் பஸாலின் அறிவுறுத்தலிலும் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யூ.எல்.எம்.நியாஸ் தலைமையில் நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட நுளம்புகள் ஆய்வின் போது நுளம்புகளின் செறிவு அதிகமாகக் காணப்படுவதால், தங்களது வீட்டைச்சுற்றிலும் சூழவுள்ள இடங்களையும் சுத்தமாக வைத்துக்கொள்ளுமாறு சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர். வீடு வீடாகச்சென்று பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தலைமையிலான குழுவினர் பரிசோதனையில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர். இதன் போது நுளம்பு பெருகுவதற்கு ஏதுவான இடங்கள் கண்டுபிடிக்கப்படுமாயின், சம்பந்தப்பட்டவர்களுக்கெதிரான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென சுகாதாரத்துறை அறிவித்துள்ளதுடன் தங்களது வீட்டையும் அதனைச்சூழவுள்ள இடங்களையும் பாதுகாப்பாக வைத்திருக்குமாறு மக்களை பணித்துள்ளனர். மேலும், எதிர்வரும் மழைக்காலங்களில் நுளம்புகளின் பெருக்கம் அதிகரிக்கும் என்பதுடன், நுளம்புகளின் பெருக்கத்தைக் […] - [அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை?](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a-%e0%ae%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf/): அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் வேலையிலிருந்து விலகி வீட்டுத் தோட்டம் மற்றும் பிற நிலங்களில் பயிர்கள் பயிரிடுவதற்கான விருப்பத்தை வழங்குவதற்கான முன்மொழிவை அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. வெள்ளிக்கிழமை வேலையில் இருந்து விடுபட விரும்பும் பொது ஊழியர்கள் தங்கள் வீட்டுத் தோட்டத்திலோ அல்லது பிற நிலங்களிலோ உணவுப் பயிரிடுவதற்கு விடுமுறை நாள் பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்ய விவசாயத் துறையிடம் பதிவு செய்யும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பிரேரணை விவசாய திணைக்களத்துடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும், விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. வெள்ளிக்கிழமை சில அலுவலகங்கள் குறைந்தபட்ச ஊழியர்களுடன் செயல்படலாம் என்ற அடிப்படையில் இந்த முன்மொழிவு பரிசீலிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சில அலுவலகங்கள் வெள்ளிக்கிழமை சேவைகளுக்காக மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. - [நாட்டின் பல பிரதேசங்களில் மழையுடனான வானிலை](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b2-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf-3/): நாட்டில் இன்று பல இடங்களில் மழையுடனான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும் என்பதுடன், ஊவா மாகாணத்திலும் மற்றும் அம்பாறை மாவட்டத்தின் சில இடங்களிலும் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகிறது. தற்காலிகமாக பலத்த காற்று வீசும் சந்தர்ப்பங்களிலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளிலும் அபாயத்தைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. - [தூப்பாக்கி சூட்டில் இளைஞன் பலி](https://minnal24.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b3%e0%af%88%e0%ae%9e/): அஹங்கம பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை மாலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் 27 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அஹங்கம, பஞ்சாலயவில் இன்று மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார். சுட்டுக் கொள்ளப்பட்ட நபர் திக்வெல்ல பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் ,இவர் தற்போது ஒரு வழக்கு தொடர்பாக பிணையில் விடுதலை செய்யப்பட்டவர் எனவும், பொலிஸார் தெரிவித்துள்ளனர். தென் மகாணத்தில் கடந்த 48 மணி நேரத்தில் பதிவான 3வது துப்பாக்கிச்சூடு சம்பவம் இதுவாகும். பாணந்துறை நிர்மலா மாவத்தை பகுதியில் வைத்து 31 வயதுடைய நபர் நேற்று வெள்ளிக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டார். நேற்று முன்தினம் வியாழக்கிழமை அளுத்கம மொரகல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தின் போது படுகாயமடைந்த 42 வயதுடைய நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அளுத்கமவில் சுட்டுக்கொல்லப்பட்ட நபர், சோதனையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளை மீண்டும் விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் போதைப்பொருள் தடுப்புப் […] - [மட்டக்களப்பில் 200 கோடி முதலீட்டில் அலுமினிய உற்பத்தி தொழிற்சாலை](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-200-%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4/): மட்டக்களப்பில் சுமார் 200 கோடி முதலீட்டில் அலுமினிய உற்பத்திச்சாலை ஒன்று திறந்து வைக்கப்படவுள்ளது. கட்டங்களுக்கான பொருத்து வேலைகளுக்குப் பயன்படுத்தும் மூலப்பொருட்கள் இங்கு உற்பத்தி செய்யப்பட்டு உள்நாட்டு தேவைகளுக்கு விநியோகிக்கப்படவுள்ளதுடன் ஏற்றுமதியும் செய்யப்படவுள்ளது. இத் தொழிற்சாலையினை மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நாளை ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கவுள்ளார். மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் இத்தொழிற்சாலை திறந்து வைக்கப்படுவதனூடாக மாவட்டத்திலுள்ள வேலையற்ற இளைஞர் யுவதிகள் 200 பேர் நேரடியாகவும், சுமார் 350 பேர் நேரில் தொழில்வாய்ப்பினையும் பெற்றுக் கொள்கின்றனர். நாடு தற்போது எதிர் கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமையில் பொதுமக்கள் தொழில் ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இத்தொழிற்சாலையானது ஆரம்பிக்கப்படுவதனால் இம்மாவட்ட மக்களுக்கு தொழில் வாய்ப்பினைப் பெற்றுக் கொடுப்பதுடன், நாட்டினுடைய மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு கனிசமான பங்களிப்பை வழங்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. இத்தொழிற்சாலையானது ஜேர்மன், ஜப்பான், வியட்நாம் போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளின் நவீன தொழிநுட்பங்களைப் பயன்படுத்தி மீள் சுழற்சி முறையிலான […] - [மின்துண்டிப்பு தொடர்பிலான அறிவித்தல்](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf-2/): எதிர்வரும் வாரத்தில் மின்துண்டிப்பை மேற்கொள்வது தொடர்பில் மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, எதிர்வரும் 6ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் 2 மணித்தியாலமும் 15 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது. அத்துடன், 11 மற்றும் 12ஆம் திகதிகளில் ஒரு மணித்தியாலம் மாத்திரம் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. - [பயன்படுத்தப்படாத நிலங்களை கண்டறிந்து உணவுப் பயிர்களைப் பயிரிடுமாறு ஜனாதிபதி பணிப்புரை](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95/): பெருந்தோட்ட நிறுவனங்களுக்குச் சொந்தமான 9,000 ஹெக்டேர்களுக்கும் அதிகமான நிலங்கள் பயன்படுத்தாமல் இருப்பதாகவும், 23 நிறுவனங்களுக்கு சொந்தமான அந்த காணிகளில் பயிர்ச்செய்கைக்கு ஏற்ற பயிர்களை இனங்கண்டு, அவற்றை பயிரிடுபவர்களுக்கு வழங்குமாறும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். பெருந்தோட்டத்துறை எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, ஜனாதிபதி அதிகாரிகளுக்கு இந்த பணிப்புரையை விடுத்துள்ளார். மேலும், தேயிலை ஏற்றுமதியினால் நாட்டிற்குக் கிடைக்கும் அந்நியச் செலாவணி வெளிப்படைத் தன்மையுடன் பேணப்பட வேண்டும் எனவும், அதற்காக தேயிலை ஏலத்தை டொலர்களில் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து உடனடியாக ஆராயுமாறும், ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.   - [எமது பிரச்சினையுடன் உக்ரைன் பிரச்சினைகளை தொடர்புபடுத்தக்கூடாது - பிரதமர் ரணில் விக்ரமசிங்க](https://minnal24.com/%e0%ae%8e%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%95%e0%af%8d%e0%ae%b0/): எமது பிரச்சினையுடன் உக்ரைன் பிரச்சினைகளை தொடர்புபடுத்தக்கூடாது, எப்படியிருப்பினும் இலங்கையின் பிரச்சினை உக்ரைன் பிரச்சினையினால் மேலும் பல மடங்காக அதிகரித்துள்ளது என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில்  இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், அமெரிக்க டொலர் மற்றும் இலங்கை ரூபா பற்றாக்குறை காரணமாக இலங்கையின் முழு அரசியல் முறைமைகள் பாதிப்படைந்துள்ளன. இந்த பற்றாக்குறைகள் காரணமாக சாதாரண மக்கள் மற்றுமல்லாது நாடாளுமன்றம் உட்பட அரசாங்கம் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளது. இந்தநிலையில் எதிர்வரும் காலங்களில் பாரிய உணவுப்பற்றாக்குறையினை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்படும். உக்ரைன் – ரஷ்ய போர் காரணமாக உலகளாவிய ரீதியாக பாரிய உணவு விநியோகப் பிரச்சினைகள் ஏற்படவுள்ளன. உலகிலேயே அதிக தானிய வகைகளை உற்பத்தி செய்யும் நாடுகளான ரஷ்யாவும் உக்ரைனும் தமது உற்பத்தியினை ஏற்றுமதி செய்ய முடியாத நிலை ஏற்படும். குறிப்பாக ரஷ்யாவில் உற்பத்தி செய்யப்படும் கோதுமை மா […] - [லாப்ஸ் எரிவாயு கொள்கலன் 6,000 ரூபாவிற்கு விற்பனை?](https://minnal24.com/%e0%ae%b2%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%af%81-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d-6000/): லாப்ஸ் (laugfs gas) 12.5kg எரிவாயு சிலிண்டர் 6,000 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட உள்ளதாக அந் நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. Laugfs எரிவாயு நிறுவனத்தின் 3,000 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிச் வரும் கப்பல் இன்று சனிக்கிழமை இரவு கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் என தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, அடுத்த வாரம் முதல் எரிவாயு விநியோகிக்க அந்நிறுவனம் தயாராவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. - [பல வீடுகளில் திருடிய மூவர் கைது](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%b2-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%ae%e0%af%82%e0%ae%a9/): பல வீடுகளில் பல்வேறு பொருட்களை திருடிய குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மதவுவைத்தகுளம் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவர், தேக்கவத்தை பகுதியை சேர்ந்த 30 வயதுடைய ஒருவரும், 4ம் கட்டை பகுதியை சேர்ந்த 35 வயதுடைய ஒருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து, 03 மோட்டர்கள், 08 சிலிண்டர்கள், ஜெனரேற்றர், தொலைக்காட்சி, கிறண்டர், சைக்கிள், மோட்டர் சைக்கிள் மற்றும்  2 பவுண் நகைகள் என்பன மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணைகளின் பின் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். - [மின் கட்டணம் அதிகரிப்பு?](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/): மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனை எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது இலங்கை மின்சார சபையின் வருடாந்த வருமானம் 276 பில்லியனாக இருக்கும் அதேவேளை செலவு 750 பில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளது. இந்நிலையில், இலங்கை மின்சார சபை அடையும் நஷ்டத்தை குறைக்கும் நோக்கில் இந்த அதிகரிப்பு மேற்கொள்ளப்படும் என இலங்கை மின்சார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார். - [இலங்கை மீது அதிருப்தி : ரஷ்ய விமானங்கள் இடைநிறுத்தம்](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a4%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%b0%e0%ae%b7/): ரஷ்யாவின் ஏரோஃப்ளோட் எயார்பஸ் ஏ330 (Aeroflot Airbus A330) விமானத்தை இலங்கை அதிகாரிகள் தடுத்து வைத்ததையடுத்து, ரஷ்யாவின் ஏரோஃப்ளோட் விமான நிறுவனம் இலங்கைக்கான தனது விமானங்களை இடைநிறுத்துவதாக ரஷ்ய செய்தி நிறுவனமான TASS தெரிவித்துள்ளது. ஏரோஃப்ளோட்   ஏ330 விமானம் ஜூன் 2 ஆம் திகதி கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மொஸ்கோவிற்கு புறப்படத் தயாரான போது, விமானத்தை குத்தகைக்கு எடுக்கும் நிறுவனத்துடன் ஏற்பட்ட வர்த்தக தகராறு காரணமாக அயர்லாந்தில் உள்ள Celestial Aviation Trading Limited நிறுவனம் தாக்கல் செய்த முறைப்பாட்டினை விசாரித்த கொழும்பு வணிக உயர் நீதிமன்றம், ரஷ்ய ஏரோஃப்ளோட் விமானம் இலங்கையை விட்டு ஜூன் 16ம் திகதி வரை வெளியேற தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது. இதேவேளை விமானத்தை பறிமுதல் செய்வதற்கான நீதிமன்ற விசாரணை ஜூன் 8 அன்று திட்டமிடப்பட்டுள்ளது என ரஷ்ய செய்தி நிறுவனமான TASS தெரிவித்துள்ளது. இதேவேளை, ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் ஜனிதா […] - [பாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பான அறிவித்தல்](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4/): அரச மற்றும் அரச அனுசரனையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைகள் நாளை மறுதினம் திங்கட்கிழமை முதல் மீள ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கடந்த மாதம் 19 ஆம் திகதி முதலாம் தவணையின் முதலாம் கட்டத்தை நிறைவுறுத்தி பாடசாலைகளுக்கான விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகளுக்காக இவ்வாறு பாடசாலைகள் மீள திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   - [சுமந்திரனின் வீட்டு பாதுகாப்பு பணியில் இருந்த இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழப்பு](https://minnal24.com/%e0%ae%9a%e0%af%81%e0%ae%ae%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%81/): தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் இல்லத்தின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த இராணுவ சிப்பாய் தனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வெள்ளவத்தையில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் இல்லத்தில் இன்று சனிக்கிழமை காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 22 வயதான குறித்த இராணுவ சிப்பாய் தமது கடமை நேர துப்பாக்கியை பிரயோகித்து தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர், கொழும்பு வெள்ளவத்தையில் அமைந்துள்ள, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரனின் இல்லத்திற்கு செல்லும் ஒழுங்கையில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது. - [சமுர்த்தி உற்பத்தி கிராமத்தில் இடம் பெற்ற அறுவடை விழா](https://minnal24.com/%e0%ae%9a%e0%ae%ae%e0%af%81%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%89%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae/): -மன்னார் நிருபர்- மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பெரியமடு கிராமத்தில் சமுர்த்தி உதவி திட்டத்தின் மூலமும் சுய உழைப்பின் மூலமாகவும் மேற்கொள்ளப்பட்டு வந்த பழ வகைகள் மற்றும் மரக்கறி வகைகள் நேற்று வெள்ளிக்கிழமை அறுவடை செய்யப்பட்டது. மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல், பழ வகைகளான பப்பாசி, பலாப்பழம் மற்றும் மரக்கறி வகைகளான கத்திரி, மிளகாய் போன்றவற்றின் அறுவடைகளை ஆரம்பித்து வைத்தார். இதன் போது ஆறு மாதத்தில் பலன் தரக்கூடிய மரவள்ளி செடிகளும் நாட்டி வைக்கப்பட்டது. மேலும், இந்த நிகழ்வில் மாவட்ட செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர், சமுர்த்தி உதவி ஆணையாளர், பிரதேச செயலாளர், கிராம சேவையாளர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்களும் கலந்து கொண்டனர். - [சூழல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு கடற்கரை தூய்மையாக்கல் நடவடிக்கை](https://minnal24.com/%e0%ae%9a%e0%af%82%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88/): -மன்னார் நிருபர்- சூழல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு மன்னார் கறிற்றாஸ் வாழ்வுதயத்தின் ஏற்பாட்டில் மன்னார் கீரி கடற்கரை பகுதியில் கரையோர தூய்மையாக்கல் நடவடிக்கை மற்றும் நிழல் தரும் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் இடம் பெற்றது. மன்னார் கறிற்றாஸ் வாழ்வுதய இயக்குனர் அருட்தந்தை எஸ்.அன்ரன் அடிகளார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் விருந்தினர்களாக மன்னார் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திருமதி சிவசம்பு கனகாம்பிகை, மன்னார் நகர சபையின் தவிசாளர் எஸ்.ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன், நகர சபையின் செயலாளர் பிரிட்டோ லெம்பேட் ஆகியோர் கலந்து கொண்டனர். இதன் போது கிராம அலுவலர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளடங்களாக மாதர், கிராம அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள், கிராம மக்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு கரையோர தூய்மையாக்கல் நடவடிக்கையை மேற்கொண்டனர். பின்னர் மன்னார் நகர சபையின் உதவியுடன் கழிவுப் பொருட்கள் அகற்றிச் செல்லப்பட்டது. அதனை தொடர்ந்து குறித்த […] - [சீனா வழங்கிய மருந்து பொருட்கள் நாட்டை வந்தடைந்தன](https://minnal24.com/%e0%ae%9a%e0%af%80%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0/): சீனாவின் அன்பளிப்பிலான அத்தியாவசிய மருந்து பொருட்கள் தாங்கிய விமானம் நாட்டை வந்தடைந்துள்ளது. ஹொங்கொங்கில் இருந்து பி – 747 என்ற விமானத்தினூடாக இந்த மருந்து பொருட்கள் நேற்று வெள்ளிக்கிழமை இரவு நாட்டை வந்தடைந்துள்ளது. 14 அத்தியாவசிய மருந்துகள் உள்ளிட்ட 28 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மருந்து பொருட்களும், மருத்துவ உபகரணங்களும் அதில் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. அவற்றை இலங்கைக்கான சீன தூதுவர், சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் கையளித்துள்ளார். - [100 நாட்களை கடந்துள்ள உக்ரைன்-ரஷ்யா போர் : நாளாந்தம் 2 சிறுவர்கள் உயிரிழப்பு](https://minnal24.com/100-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3-%e0%ae%89%e0%ae%95%e0%af%8d%e0%ae%b0%e0%af%88/): உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கிடையிலான போர் ஆரம்பிக்கப்பட்டு நேற்று வெள்ளிக்கிழமையுடன் 100 நாட்களை கடந்துள்ளது. நேட்டோ அமைப்பில் இணைந்துக் கொள்ள உக்ரைன் முடிவு செய்ததால்  ரஷ்யா கடந்த பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி உக்ரைனுக்கு எதிராக தாக்குல் நடத்த ஆரம்பித்தது. தற்போது உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்கள் சில ரஷ்யாவினால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு அந்த நகரங்கள் முழுமையாக ரஷ்ய படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்த ஆரம்பித்ததில் இருந்து இதுவரையில் உக்ரைனிலிருந்து 68 இலட்சம் பேர் வரை அகதிகளாக வெளியேறியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் போலந்து நாட்டில் தஞ்சம் அடைந்துள்ளனர். அதன்படி போலந்து நாட்டில் மட்டும் 36 இலட்சம் பேர் வரையில் குடியேறியுள்ளதாக அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், ருமேனியா, ஹங்கேரி, மால்டோவா மற்றும் ஸ்லோவாகியா ஆகிய நாடுகளுக்கும் உக்ரைனின் பொதுமக்கள் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். இதேவேளை, இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான சிறுவர்களை ரஷ்யா வலுக்கட்டாயமாக நாடு […] - [ரயிலுடன் மோதி இரண்டு யானைகள் உயிரிழப்பு](https://minnal24.com/%e0%ae%b0%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8b%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9/): ஹபரனை பொலிஸ் பிரிவின் 120 ஆம் கட்டை – தல்பந்தகந்தை பகுதியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் இரண்டு காட்டுயானைகள் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை இரவு கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கி பொருட்களை ஏற்றிச்சென்ற ரயில் ஒன்றுடன் காட்டுயானைகள் மோதுண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்து காரணமாக கொழும்பு – ஹபரனைக்கு இடையிலான ரயில் போக்குவரத்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த விபத்தில் மற்றுமொரு யானை காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் ஹபரனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் - [ஒன்பது இராணுவ புலனாய்வு அதிகாரிகளுக்கு விளக்கமறியல்](https://minnal24.com/%e0%ae%92%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%81-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a3%e0%af%81%e0%ae%b5-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%ae%a9%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%af%81/): ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட இராணுவ புலனாய்வு அதிகாரிகள் 9 பேரை எதிர்வரும் ஜூன் மாதம் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். சஞ்சீவ மொராயஸ் , தமித் தொடவத்த , மஹேன் வீரமன் உள்ளிட்ட மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. விசாரணைக்கு பாதகம் விளைவிக்கும் வகையில் இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் அவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கில் சாட்சிகளிடம் தலையிடக் கூடாது என்ற நிபந்தனையுடன் 9 குற்றவாளிகளுக்கு விசாரணையின் தொடக்கத்திலேயே பிணை வழங்கப்பட்டது. ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் கிரித்தலை இராணுவ முகாமில் கடமையாற்றிய ஒன்பது இராணுவ புலனாய்வு அதிகாரிகளுக்கு எதிராக 17 குற்றச்சாட்டுக்கள் அடங்கிய குற்றப்பத்திரிகையை […] - [மீனவர்கள் மீது கடற்படையினர் தாக்குதல் : 7 பேர் வைத்தியசாலையில் அனுமதி](https://minnal24.com/%e0%ae%ae%e0%af%80%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%ae%bf/): -மன்னார் நிருபர்- மன்னார் பேசாலையில் இருந்து கடல் தொழிலிற்குச் சென்ற மீனவர்கள்மீது கடற்படையினர் கடலில் வைத்து தாக்கியுள்ள நிலையில் தாக்குதலில் பாதிக்கப்பட்ட 7 மீனவர்கள் பேசாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில், பேசாலையில் இருந்து நேற்று வியாழக்கிழமை மாலை 3 மணியளவில் மீன் பிடிக்க கடலிற்கு புறப்படத் தயரான போது மீனவர்களின் படகுகளை கடற்படையினர் தீவிர சோதனைக்கு உட்படுத்தினர். இதன் போது கடற்படையினருக்கும் மீனவர்களிற்கும் இடையே கடும் வாய்த்தர்க்கம் ஏறபட்டுள்ளது. இதன்போது கடற்படையினர் மீனவர் ஒருவர் மீது கடும் தாக்குதல் மேற்கொண்டதனால் பாதிப்படைந்த மீனவர் பேசாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதன் பின்பு மீனவர்கள் கடற்படையினரிடம் மன்னிப்புக் கோரி சமரசத்தின் அடிப்படையில் தொழிலிற்குச் சென்றனர். இவ்வாறு தொழிலிற்குச் சென்ற மீனவர்களை நேற்று மாலை 5.30 மணியளவில் தலை மன்னார் கடற்பரப்பில் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சமயம் அவ்விடத்திறகு படகில் வந்த கடற்படையினர் மீனவர்களை மீண்டும் சோதனைக்கு உட்படுத்தியதோடு […] - [நாளை ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%88-%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95/): கொழும்பு – கோட்டை பகுதியில் நாளை சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளவர்கள், அந்த பகுதிகளில் உள்ள சில வீதிகளுக்கு நுழைய நீதிமன்றம் தடை விதித்துள்ளதாக, பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. - [கொழும்பு துறைமுகம் தரவரிசையில் மூன்றாம் இடத்தில்](https://minnal24.com/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%a4%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf/): உலகளாவிய கொள்கலன் துறைமுக செயல்திறன் குறியீட்டின் சமீபத்திய தரவரிசையின்படி, கொழும்பு துறைமுகம் தெற்காசியாவிலும் இந்திய துணைக்கண்டத்திலும் மிகவும் திறமையான செயற்பாடுகளுடைய துறைமுகமாக மாறியுள்ளது. உலக வங்கி மற்றும் S&P குளோபல் சந்தை நுண்ணறிவு மற்றும் நிதி சேவைகள் நிறுவனம் இந்த தரவரிசையை வெளியிட்டுள்ளது அதன்படி, கொழும்பு துறைமுகமானது இந்தியப் பெருங்கடலை ஒட்டிய 23 நாடுகளில் மூன்றாவது இடத்தையும், உலகில் உள்ள 370 துறைமுகங்களில் 22ஆவது இடத்தையும் பெற்றுள்ளது.   - [தண்ணீர் தொட்டியில் விழுந்து சிறுமி உயிரிழப்பு](https://minnal24.com/%e0%ae%a4%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%af%81%e0%ae%a8/): வவுனியா-பூவரசன்குளம் பகுதியில் தண்ணீர் தொட்டியில் விழுந்து சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா சுந்தரபுரம் பகுதியைச் சேர்ந்த கிருசாந்தன் தட்சாயினி (3 வயது) என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இன்று வெள்ளிக்கிழமை மதியம் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வவுனியா, சுந்தரபுரம் பகுதியில் இருந்து தாய் ஒருவர் தனது பிள்ளையுடன் பூவரசன்குளம் நித்தியநகர் பகுதியில் உள்ள உறவினர் வீடு ஒன்றிற்கு சென்றுள்ளார். அங்கு சிறுமியை நிறுத்திவிட்டு தாய் கச்சான் அறுவடை செய்து கொண்டிருந்த போது விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமி அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் விழுந்து நீரில் மூழ்கியுள்ளார். கச்சான் அறுவடை செய்து கொண்டிருந்த தாயார் சிறுமியை காணவில்லை என தேடிய போது சிறுமி தண்ணீர் தொட்டியில் விழுந்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. சிறுமியை மீட்டு பூவசரன்குளம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது, முன்னரே சிறுமி உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். - [அத்தியாவசிய மருந்துகள் இறக்குமதிக்காக கொவிட் 19 நிதியை பெற நடவடிக்கை](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%87/): அத்தியாவசிய மருந்துகள் இறக்குமதிக்காக கொவிட் 19 நிதியிலிருந்து 1.8 பில்லியன் ரூபாவை பெற்றுக்கொள்ளுமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சுகாதார அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். - [இன்று நள்ளிரவு முதல் தொலைத்தொடர்பு வரி அதிகரிப்பு](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%a8%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%b5%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%ae%e0%af%81/): இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் தொலைத்தொடர்பு வரி அதிகரிக்கப்படவுள்ளது. அதற்கமைய, குறித்த வரியானது 11.25 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. - [மட்டக்களப்பு-நாவற்காடு ஸ்ரீ சிவமுத்துமாரியம்மன் ஆலய மகா கும்பாஷிசேகம்](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81/): மட்டக்களப்பு-நாவற்காடு-இறக்கத்துமுனை ஸ்ரீ சிவமுத்துமாரியம்மன் ஆலய மகா கும்பாஷிசேகம் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. நேற்று வியாழக்கிழமை எண்ணைக்காப்பு இடம்பெற்றதனைத் தொடர்ந்து, இன்று கும்பாபிஷேக பெருவிழா இடம்பெற்றது. எதிர்வரும் 28 ஆந் திகதி பாலாபிஷேகம் இடம்பெறும். ஆகவே அடியார்கள் அனைவரும் வந்து அன்னையின் அருள் பெற்றுச் செல்லுமாறு ஆலய நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர். - [டீசல் பதுக்கி வைத்திருந்த ஒருவர் மட்டக்களப்பு பொலிஸாரால் கைது](https://minnal24.com/%e0%ae%9f%e0%af%80%e0%ae%9a%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%b5%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d/): அம்பாறையில் சட்டவிரோதமாக டீசல் பதுக்கி வைத்திருந்த ஒருவர் நேற்று வியாழக்கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது, அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று – பள்ளிக்குடியிருப்பு பகுதியில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3,000 லீற்றர் டீசல் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   - [20 வருடங்களாக ஏழை சிறுவர்களின் எதிர்காலத்திற்காக பணியாற்றும் "அன்பு சகோதரர் இல்லம்"](https://minnal24.com/20-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%be%e0%ae%95-%e0%ae%8f%e0%ae%b4%e0%af%88-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95/): -மன்னார் நிருபர்- நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பல்வேறு சிக்கல்களை மக்கள் தொடர்சியாக சந்தித்த வண்ணம் உள்ளனர். பொருட்களின் விலைவாசி உணவு தட்டுப்பாடும் நாட்டில் மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது. இவ்வாறான நிலையிலும் மன்னார் மாவட்டத்தில் கீரி கிராம சேவகர் பிரிவில் உள்ள அன்பு சகோதரர் இல்லமானது ஏழை பிள்ளைகள் மற்றும் தாய் தந்தையை இழந்த அல்லது அவர்களில் ஒருவரை இழந்து வறுமையில் வாடும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கான கல்வி மற்றும் உணவு, உடை, உறைவிடம், போன்ற தேவைகளை நிறைவேற்றி வருகின்றனர். அதே நேரம் நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் கல்விக்கும் கைகொடுத்து வருகின்றது இந்த அன்பு சகோதரர் இல்லம். மன்னாரை சேர்ந்த தருமன், வீமன் எனும் இரு சகோதரர்களால், ஏழைகளின் நல்வாழ்வுக்காக உதவ எண்ணிய சில நல் உள்ளங்களுடன் இணைந்து 2001 ஆண்டு இந்த இல்லம் ஆரம்பிக்கப்பட்டது. இவ் இல்லமானது வடமாகாண சிறுவர் நன்னடத்தை திணைக்களத்திலும், மன்னார் பிரதேச […] - [பாணந்துறையில் துப்பாக்கி பிரயோகம் : ஒருவர் உயிரிழப்பு](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a3%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%af%8d-2/): பாணந்துறை – நிர்மலா மாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வருகை தந்த நபரொருவர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி  ஒருவர் உயிரிழந்துள்ளார். துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட நபர் மற்றும் உயிரிழந்த நபர் குறித்தும் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். - [பசில் ராஜபக்ஷ மற்றும் திருக்குமார் நடேசன் இருவரும் விடுதலை](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%aa%e0%ae%95%e0%af%8d%e0%ae%b7-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf/): மல்வானை சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து பசில் ராஜபக்ஷ மற்றும் திருக்குமார் நடேசன் ஆகிய இருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு விசாரணைகள் இன்று வெள்ளிக்கிழமை கம்பஹா மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, இவர்கள் இருவரையும் விடுதலை செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. - [தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் வங்காளப் புலிக்குட்டிகளுக்கு பெயரிட பொதுமக்களுக்கு வாய்ப்பு](https://minnal24.com/%e0%ae%a4%e0%af%86%e0%ae%b9%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%9a-2/): மூன்று மாதங்களுக்கு முன்னர் பிறந்த மூன்று வங்காளப் புலிக்குட்டிகள் நேற்று வியாழக்கிழமை முதல் தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு சீன மிருகக்காட்சிசாலையில் இருந்து தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு கொண்டுவரப்பட்ட ரொபின் என்ற வங்காளப் புலிக்கும் பெண் புலிக்கும் மார்ச் 5 ஆம் திகதி குட்டிகள் பிறந்தன இவை மூவரும் ஆண் குட்டிகளாகும். இந்த மூன்று குட்டிகளும் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக பணிப்பாளர் நாயகம் திலக் பிரேமகாந்த தெரிவித்துள்ளார். தெஹிவளை மிருகக்காட்சசாலைக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள், இன்று முதல் அந்த 3 புலிக் குட்டிகளையும் பார்வையிட முடியும் என மிருகக்காட்சிசாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேநேரம், குறித்த 3 புலிக் குட்டிகளுக்கும் பெயர்களைப் பரிந்துரைப்பதற்கான வாய்ப்பும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. பெயர்களை பரிந்துரைப்பவர்கள், தங்களது தகவல்களுடன், எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னர் தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு வந்து கையளிக்க வேண்டும் என மிருகக்காட்சிhலை திணைக்களம் அறிவித்துள்ளது. மிருகக்கட்சிசாலையின் இணையத்தளத்தையோ அல்லது மின்னஞ்சல் முகவரியையோ […] - [100 ரூபாய் பணத்திற்காக பல முறை கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட பெண்](https://minnal24.com/100-%e0%ae%b0%e0%af%82%e0%ae%aa%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%95-%e0%ae%aa%e0%ae%b2-%e0%ae%ae%e0%af%81/): இரத்தினபுரி, எலபாத்த பிரதேசத்தில் மஹிரகல பிரதேசத்தில் 100 ரூபாய் பணத்திற்காக பெண் ஒருவர் கொடூரமான முறையில் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் தொடர்பில் கெஹலோவிடகம பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் இரண்டு பிள்ளைகளின் தந்தையான 21 வயதுடைய நபர் ஆவார். கொலை செய்யப்பட்ட குறித்த பெண் வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருக்கையில், குறித்த சந்தேக நபர் குறித்த பெண்ணின் வீட்டில் இருந்து 500 மீற்றர் தொலைவில் உள்ள வெறிச்சோடிய இடத்தில் வீதியில் தங்கியிருந்து அவரிடம் 100 ரூபா பணம் கேட்டுள்ளார். அப்பெண் கொடுக்க மறுத்ததையடுத்து கத்தியால் மூன்று இடங்களில் குத்தியுள்ளார். பின்னர் சந்தேக நபர் அந்த பெண்ணின் கையில் இருந்த பொருட்களை எடுத்துக்கொண்டு தப்பியோடியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. எனினும், கத்திக்குத்திற்கு இலக்கான குறித்த பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார். போதைக்கு அடிமையான குறித்த சந்தேகநபர், […] - [அனைத்துக் கட்சித் தலைவர்கள் - பிரதமர் இடையில் சந்திப்பு](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%a9%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d/): பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும், அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.30 நடைபெறவுள்ளது. அதற்கமைய, அரசியலமைப்பின் 21வது திருத்தம் மற்றும் அது தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணைகள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளது. இந்த வரைவு எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், அதற்கு முன்னர் இந்தக் கூட்டத்தில் இறுதி இணக்கப்பாடு எட்டப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. - [சடலமாக மீட்கப்பட்ட இரண்டு பிள்ளைகளின் தாய்](https://minnal24.com/%e0%ae%9a%e0%ae%9f%e0%ae%b2%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95-%e0%ae%ae%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f/): -கல்முனை நிருபர்- மருதமுனையில் காணாமல் போன இரண்டு பிள்ளைகளின் தாய் நேற்று வியாழக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அம்பாறை – பெரியநீலாவணை- மருதமுனை பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான எம்.ஆர். பஸீரா ( 54 வயது) என்ற பெண் கடந்த இரண்டு தினங்களாக காணாமல் போயிருந்தார். பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் பிரதேச பள்ளிவாசல்களிலும் பொதுமக்கள் உதவி செய்யுமாறு அறிவித்தல் வழங்கப்பட்டிருந்தன. இதனை அடுத்து பிரதேச மக்களும் பொலிஸாரும் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், நேற்று வியாழக்கிழமை மாலை 4.00 மணி அளவில் மருதமுனை 65 மீட்டர் வீட்டுத்திட்ட குடியிருப்பு பகுதியின் பின்பக்கமாக உள்ள குளத்துக்குள் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை பெரியநீலாவணை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். - [லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள அறிவித்தல்](https://minnal24.com/%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b0%e0%af%8b-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-2/): இன்று வெள்ளிக்கிழமையுடன் கையிருப்பில் உள்ள சமையல் எரிவாயு கொள்கலன்களின் விநியோகம் முடிவடைவதாக, லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, இன்று நாடளாவிய ரீதியில் 16,000 வீட்டு சமையல் எரிவாயு கொள்கலன்கள் மாத்திரம் விநியோகிக்கப்பட உள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. எனவே, நாளை முதல் மீண்டும் எரிவாயு விநியோகம் இடம்பெறும் வரையில், பொதுமக்கள் எரிவாயுவைப் பெற்றுக்கொள்வதற்காக  வரிசைகளில் காத்திருக்க வேண்டாம், என லிட்ரோ நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது. மேலும், 2,500 மெட்ரிக் டன் எரிவாயு தாங்கிய கப்பல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நாட்டை வந்தடைய உள்ளது. அதன்பின்னர், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் மீண்டும் சமையல் எரிவாயு விநியோகம் இடம்பெறும். இன்றைய எரிவாயு விநியோகம் தொடர்பில் எரிவாயு கொள்கலன் விற்பனை முகவர்கள் தொடர்பான விபரங்களை தமது இணையத்தளத்தில் பார்வையிட முடியும், என்றும் லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. - [வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை](https://minnal24.com/%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a3%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3-6/): நாட்டின் பல பிரதேசங்களில் இன்று வெள்ளிக்கிழமை மழையுடனான வானிலை நிலவும், என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும், என எதிர்பார்க்கப்படுகிறது. சில இடங்களிலும் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகும். வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என்பதுடன், மணித்தியாலத்துக்கு 40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும், எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. - [ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது](https://minnal24.com/%e0%ae%b9%e0%af%86%e0%ae%b0%e0%af%8b%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%81%e0%ae%9f-5/): சட்டவிரோதமான முறையில் போதைப்பொருளை வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். கொழும்பு – கிராண்ட்பாஸ் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபரிடம் இருந்து 3 கிலோ 500 கிராம் அளவிலான ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து கிரவுண்ட்பாஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். - [மசகு எண்ணெய் விலை கணிசமான அளவு வீழ்ச்சி](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%9a%e0%ae%95%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%86%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%be/): உலக சந்தையில், மசகு எண்ணெய் விலை நேற்று வியாழக்கிழமை சற்று குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 31 ஆம் திகதி, ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 124.24 டொலர் வரையில் அதிகரித்து இருந்தது இந்நிலையில், நேற்று மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 117 டொலராக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. - [பைகளின் விலை அதிகரிப்பு](https://minnal24.com/%e0%ae%aa%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/): அனைத்து வகையான பைகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பாடசாலை பைகள், தொழிலுக்கு கொண்டுசெல்லும் பைகள், வெளிநாட்டு பயணப் பைகள் உள்ளிட்ட அனைத்து பைகளின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. உள்நாட்டு பைகள் உற்பத்திக்கான மூலப்பொருட்கள் பற்றாக்குறை மற்றும் அவற்றின் விலைகள் அதிகரித்தமையும், இந்த விலை அதிகரிப்புக்கு காரணமாகும், என உள்ளளூர் பைகள் உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன், இறக்குமதிப் பொருட்களுக்கான வரியை அதிகரிக்க அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்துடன், தற்போது அதிக விலையில் காணப்படும் பைகளின் விலைகள் மேலும் அதிகரிக்கும் என பைகள் விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். முன்னர் 450 ரூபாவாக காணப்பட்ட சிறிய பைகள் தற்போது 950 ரூபாவாகவும், 700 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட பைகள் தற்போது, 1,400 ரூபாவாக அதிகரித்துள்ளன.   - [ஆதார வைத்தியசாலையில் நிதி மோசடி : கணக்காய்வு அறிக்கையில் அம்பலம்](https://minnal24.com/%e0%ae%86%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0-%e0%ae%b5%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a4/): -யாழ் நிருபர்- பருத்தித்துறை மந்திகை ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற நிர்வாக மற்றும் நிதி மோசடி தொடர்பில் மாகாண உள்ளகக் கணக்காய்வு அறிக்கையில் பல திடுக்கிடும் சம்பவங்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு ஏப்ரல் 20 ஆம் திகதியிலிருந்து கணக்காய்வு மேற்கொள்ளப்பட்ட திகதி வரையான காலப்பகுதியில் குறித்த வைத்தியசாலையில் 22 வேலைத் திட்டங்கள் நிறைவேற்றப் பட்ட போதும் 10 வேலைத் திட்டங்களுக்கு மட்டுமே வடக்கு மாகாண பிரதம செயலாளரினால் அனுமதி வழங்கப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பான ஒப்பந்த கோவைகள் மற்றும் தொழில்நுட்பத்தினால் சான்று படுத்தப்பட்ட வேலை நிறைவேற்று அறிக்கை கணக்காய்வு குழுவினால் கோரப்பட்ட போதும் சமர்ப்பிக்கப்படாமையினால் குறித்த வேலை தொடர்பான கணக்காய்வினை மேற்கொள்ள முடியாது போனதாக கணக்காய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் 20 ஆம் திகதி பிரதம செயலாளரினால் அனுமதிக்கப்பட்ட கருத்தின் பிரகாரம் குறித்த வைத்தியசாலையில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் மாகாண சுகாதார அமைச்சின் கீழ் பணியாற்றும் […] - [கொழும்பு நகரில் செப்டெம்பர் மாதத்திற்குள் உணவு இல்லாமல் போகும் ? : மாநகர முதல்வர் தெரிவிப்பு](https://minnal24.com/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%a8%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%aa%e0%af%8d%e0%ae%9f%e0%af%86%e0%ae%ae%e0%af%8d/): கொழும்பு நகரில் இந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்திற்குள் உணவு இல்லாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது என, கொழும்பு மாநகர சபையின் முதல்வர்; ரோசி சேனாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பு மாநகர சபையினால் 600 ஏக்கர் நிலத்தில் அத்தியாவசிய உணவுப் பயிர்களை பயிரிடும் பணிகளை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக மாநகர முதல்வர் தெரிவித்துள்ள நிலையில், நகரவாசிகள் தங்கள் வீட்டுத் தோட்டங்களில் அத்தியாவசிய உணவுப் பயிர்களை பயிரிட ஊக்குவிக்கப்படுவார்கள் என திருமதி சேனாநாயக்க ஊடகவியலாளர் சந்திப்பின் போது இன்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். குறைந்த வருமானம் பெறும் கொழும்பு நகர சனத்தொகையில் சுமார் 60 வீதமானவர்கள் உணவுப் பற்றாக்குறையினால் பாதிக்கப்படுவார்கள். “நான் யாரையும் பயமுறுத்த விரும்பவில்லை, ஆனால் வரவிருக்கும் நெருக்கடிக்கு மக்களுக்கு தெரிவிக்கவும் தயார்படுத்தவும் மட்டுமே விரும்புகிறேன், ”என்று அவர் இந்த சந்திப்பின் போது தெரிவித்துள்ளார். நகரவாசிகளின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உலக உணவுத் திட்டம், உலகளாவிய உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு மற்றும் பிற நன்கொடை […] - [ரஷ்ய பயணிகள் விமானம் கட்டுநாயக்கவில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது ?](https://minnal24.com/%e0%ae%b0%e0%ae%b7%e0%af%8d%e0%ae%af-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d/): ரஷ்யாவுக்குத் திரும்ப இருந்த விமானத்தை கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் இடைநிறுத்தி பிறப்பித்த உத்தரவை அடுத்து இன்று வியாழக்கிழமை நண்பகல் முதல் ரஷ்ய ஏரோஃப்ளோட் விமானம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. ரஷ்ய விமானம் ளுரு-288 இன்று காலை 10.10 மணியளவில் ரஷ்யாவின் மொஸ்கோவில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. இந்த விமானம் மீண்டும் இன்று மதியம் 12.50 மணிக்கு மீண்டும் மாஸ்கோவிற்கு புறப்பட இருந்தது. இந்த விமானத்தில் புறப்பட்டுச் செல்வதற்காக 200க்கும் மேற்பட்ட பயணிகள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர். இதேவேளை, கட்டுநாயக்க விமான நிலைய பிரிவின் தலைவருக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து குறித்த விமானம் புறப்படுவதற்கு தடை விதித்து கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், விமானத்திற்கு வரும் பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தை சுற்றியுள்ள சுற்றுலா விடுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அயர்லாந்தில் […] - [இறக்குமதி செய்யப்படும் சகல மதுபானங்களின் விலைகளும் அதிகரிப்பு](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%af%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a/): இறக்குமதி செய்யப்படும் சகல மதுபானங்களின் விலைகளும் இன்று வியாழக்கிழமை முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதன்படி, வைன், விஸ்கி, ரம், ஜின், வொட்கா ஆகிய இறக்குமதி மதுபானங்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. வற் வரி அதிகரிப்பு காரணமாக நேற்று முதல் அமுலாகும் வகையில் உள்ளூர் மதுபான போத்தல் ஒன்றின் விலை 520 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், பியர் போத்தல் ஒன்றின் விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. - [சர்வதேச போட்டியில் இலங்கைக்கு நான்கு தங்கப்பதக்கங்களை பெற்றுக்கொடுத்த மட்டக்களப்பு வீரர்கள்](https://minnal24.com/%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95/): சர்வதேச சிலம்ப சம்மேளத்தினால் வருடாந்தம் நடாத்தப்பட்டு வரும் மெய்வல்லுனர் போட்டியில், சிலம்பக்கலையின் பேராசான் கணபதிப்பிள்ளையின் மாணவரும் அகத்தியம் பாரம்பரிய கலைச் சங்கத்தின் தலைவரும், சர்வதேச சிலம்ப சம்மேளத்தின் இலங்கைகுரிய தலைவருமான அமரசிங்கம் குமணன் இரண்டு தங்கப்பதக்கங்களையும், அவரது மாணவர்கள் இரண்டு தங்கப்பதக்கங்களையும் வென்று மொத்தமாக இலங்கைக்கு நான்கு தங்கப்பதக்கங்களை பெற்றுக்கொடுத்து மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்கள். சர்வதேச சிலம்ப சம்மேளத்தினால் வருடாந்தம் நடத்தப்பட்டு வரும் சர்வதேச சிலம்ப மெய்வல்லுனர் போட்டியின் 2021ம் ஆண்டிற்குரிய போட்டியானது கனடா நாட்டின் ஏற்பாட்டில் 2021 நவம்பர் 14 முதல் 28 வரை நடைபெற இருந்த போதிலும் உலக நாடுகளின் அசாதாரண நிலைமையால் பிற்போடப்பட்டு 17 டிசம்பர் இணையவழி மூலம் இடம்பெற்றிருந்தது. இந்தியா, இலங்கை, கனடா, மலேசியா, சிங்கப்பூர், வட அமெரிக்கா, டுபாய் மற்றும் கட்டார் ஆகிய 8 நாடுகளை சேர்ந்த சுமார் 400 வீரர்களும், 200 வீராங்கனைகளும், பங்குபற்றியிருந்த இப்போட்டியின் முடிவுகள் அண்மையில் வெளியாகிய நிலையில், […] - [நீரில் மூழ்கிய நான்கு மாணவர்கள் : இருவர் சடலமாக மீட்பு](https://minnal24.com/%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%82%e0%ae%b4%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%ae%be/): வவுனியா ஈரட்டைபெரியகுளத்தில் இன்று வியாழக்கிழமை மதியம் நான்கு மாணவர்கள் நீரில் முழ்கிய நிலையில் இருவர் சடலமாகவும் இருவர் ஆபத்தான நிலையிலும் மீட்கப்பட்டுள்ளனர். சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் வவுனியா – தேக்கவத்தை பகுதியைச் சேர்ந்த 15 மற்றும் 16 வயது மதிக்கத்தக்கவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளது. இருவர் ஆபத்தான நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.   - [வருட இறுதிக்குள் 6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவை](https://minnal24.com/%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f-%e0%ae%87%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-6-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf/): நாட்டிற்கு இவ்வருட இறுதிக்குள் 6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவை, என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வெளிநாட்டு கையிருப்பினை வலுப்படுத்த 1 பில்லியன் அமெரிக்க டொலர்களும், இலங்கையின் கடனை செலுத்த 5 பில்லியன் அமெரிக்க டொலர்களும்,  தேவைப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். - [வீடொன்றில் வெடிப்பு சம்பவம் : பல வீடுகள் சேதம்](https://minnal24.com/%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa/): எல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட , கஜு கஸ்வத்த பிரதேசத்தில் வீடொன்றின் பின்புறம் இன்று வியாழக்கிழமை காலை வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்து சிதறியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். மேலும், இந்த குண்டுவெடிப்பில் அருகில் உள்ள பல வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், வீட்டின் உரிமையாளர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எல்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக எல்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். - [அமெரிக்க டொலரின் இன்றைய விற்பனை விலை](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%ae%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%9f%e0%af%8a%e0%ae%b2%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%88%e0%ae%af/): இலங்கை மத்திய வங்கி இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள வெளிநாட்டு நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்விலை 355.61 ரூபாவாகவும், விற்பனை விலை 365.58 ரூபாவாகவும் பதவாகியுள்ளது - [பாடசாலைகளில் கூரை இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது - நாமல் ராஜபக்ஷ](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%82%e0%ae%b0%e0%af%88-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88/): நாட்டின் பல பாடசாலைகளில் குறைந்த வசதிகள் உள்ளன, ஆனால் முழுமையான கூரை இல்லாதது ஏற்றுக்கொள்ள முடியாதது, என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பல பாடசாலைகளில் குறைந்த வசதிகள் உள்ளன. ஆனால் முழுமையான கூரை இல்லாதது ஏற்றுக்கொள்ள முடியாதது, ஒரு தேசமாக நமது முன்னுரிமைகளை மறு மதிப்பீடு செய்து, நம் குழந்தைகளுக்கு சிறந்த எதிர்காலத்தை உறுதி செய்ய வேண்டும். கல்வி மட்டுமல்ல, அரசியல் மற்றும் சமூக சீர்திருத்தமும் நமக்குத் தேவை, என அவர் மேலும் தெரிவித்துள்ளார். - [சீனாவிடமிருந்து 500 மில்லியன் மதிப்புள்ள உயிர்காக்கும் மருந்துகள்](https://minnal24.com/%e0%ae%9a%e0%af%80%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-10-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf/): சீனாவிலிருந்து 500 மில்லியன் நிதியுதவியின் கீழ், முதல் தொகுதி மருந்து பொருட்கள் நாளை வெள்ளிக்கிழமை CX3119 விமானத்தில் நாட்டிற்கு வந்து சேரும் என கொழும்பில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, 10 மில்லியன்  மதிப்புள்ள உயிர்காக்கும் உபகரணங்கள் மற்றும் 256,320 சிரிஞ்சுகள் அதில் உள்ளடங்குகின்றன. அத்துடன், 256,320 சிரிஞ்சுகளின் இரண்டாவது தொகுதி இம்மாத நடுப்பகுதியில் வரவுள்ளன. இந்த இரண்டு தொகுதி மருந்துப்பொருட்களும் 6 மாதங்களுக்குப் பயன்பாட்டிற்கு போதுமானதாக இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது முதல் தொகுதியில் 10 மில்லியன் மதிப்புள்ள 512, 640 உயிர்காக்கும் எனோக்ஸாபரின் சோடியம்  (Enoxaparin Sodium Injection) கிடைக்கவுள்ளன. எனோக்ஸாபரின் சோடியம் என்பது இரத்த உறைவு எதிர்ப்பு மருந்து ஆகும். இது பொதுவாக கர்ப்ப காலத்தில் மற்றும் சில வகையான அறுவை சிகிச்சைகள் உட்பட ஆழமான நரம்பு இரத்த உறைவு (DVT) மற்றும் நுரையீரல் embolism (PE) சிகிச்சை மற்றும் கடுமையான acute coronary syndrome (ACS) […] - [குறைந்தபட்சம் 3 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக பெற பேச்சுவார்த்தை](https://minnal24.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-3-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9/): சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து குறைந்தபட்சம் 3 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகப் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த கடன் ஒரு விரிவான நிதி வசதியின் கீழ் திட்டமிடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இம்மாதம் முதல் வாரத்தில் மற்றொரு சுற்று தொழில்நுட்ப விவாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும்இ ஜூன் மாத இறுதிக்குள் சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை அரசாங்கம் உடன்படிக்கைக்கு வருமென நம்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. - [வைத்தியசாலையின் மருந்து களஞ்சியசாலையில் தீ](https://minnal24.com/%e0%ae%b5%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81/): வெல்லவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹிரிபிட்டிய பிராந்திய வைத்தியசாலையின் மருந்து களஞ்சியசாலையில் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மருந்துகள் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த அலுமாரிக்கு அருகில் மின் ஒழுக்கு ஏற்பட்டதன் காரணமாக தீப்பிடித்ததுள்ளமை தெரியவந்தது. இதன்படி களஞ்சியசாலையில் இருந்த மருந்துகளில் ஒரு சிறிய பகுதி தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. - [வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர வெளியிட்டுள்ள தகவல்](https://minnal24.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%af%81%e0%ae%9a%e0%ae%95%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a9-2/): கொலன்னாவை மற்றும் முத்துராஜவளை எரிபொருள் முனையங்களில் கையிருப்பில் உள்ள எரிபொருள் தொகை தொடர்பான தகவல்களை, வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர வெளியிட்டுள்ளார். அதன்படி, 18,825 மெட்ரிக் டன் டீசல் 42 மெட்ரிக் டன் சுப்பர் டீசல் ஒக்டேன் 92 ரக பெற்றோல் 33,498 மெட்ரிக் டன் ஒக்டேன் 95 ரக பெற்றோல் 13,067 மெட்ரிக் டன் 386 மெட்ரிக் டன் ஜெட் ஏ1 ரக எரிபொருள், ஆகியவை கையிருப்பில் உள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நாட்டை வந்தடைந்துள்ள கப்பல் ஒன்றிலிருந்து டீசலை தரையிறக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர  தமது ட்விட்டர் பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளார். - [உயர்தர மற்றும் தரம் ஐந்து பரீட்சைகள் தொடர்பான அறிவித்தல்](https://minnal24.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%90%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4/): கல்வி பொதுத் தராதர உயர்தர மற்றும் 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சை ஆகியனவற்றை எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைத் தெரிவித்துளார். முன்னதாக ஒகஸ்ட் மாதத்தில் குறித்த பரீட்சைகளை நடாத்துவதாக திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. - [பிரமதரின் செயலால் எனது உயிருக்கு அச்சுறுத்தல் - சாணக்கியன்](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%a4%e0%af%81-%e0%ae%89/): தனது நாடாளுமன்ற உரை தொடர்பான பிழையான புரிதல் காரணமாக தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கடந்த மே மாதம் 20ஆம் திகதி நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்தை மீளப்பெற வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடந்த வெள்ளிக்கிழமை குறிப்பிட்டிருந்தார். 20ஆவது அரசியல் அமைப்பு திருத்தம் உட்பட நாட்டுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு ஆதரவளித்தமை காரணமாகவே பலரின் வீடுகள் எரியூட்டப்பட்டதாக சாணக்கியன் வெளியிட்ட கருத்து ஏற்புடையதல்ல. இந்த கருத்தின் மூலம் சாணக்கியன் நடந்த வன்முறைகளை ஏற்றுக்கொள்கிறாரா? மரணத்தை ஏற்றுக்கொள்கிறாரா? எனவும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார். இந்த நிலையில் இதுகுறித்து தெளிவுபடுத்தும் வகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், கடந்த மே மாதம் 20ஆம் திகதி, […] - [பாவனையாளர் அதிகார சபையால் அரிசி ஆலைகளில் திடீர் சோதனை](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0-%e0%ae%9a%e0%ae%aa%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%b2/): -கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை உத்தியோகத்தர்கள் கிளிநொச்சி மாவட்டத்தில் அரிசி ஆலைகள் மற்றும் அரிசி விற்பனை நிலையங்களில் தொடர்பில் திடீர் சோதனை நடவடிக்கைகளை நேற்று ஞாயிற்றுக்கிழமை முன்னெடுத்திருந்தனர். இச் சோதனை நடவடிக்கையின் போது கட்டுப்பாட்டு விலையிலும் பார்க்க கூடிய விலையினை பொறித்த அல்லது காட்சிப்படுத்திய அரிசி ஆலை உரிமையாளர் மற்றும் கூடிய விலையில் அரிசியை விற்பனை செய்த விற்பனையாளர்களுக்கெதிராகவும், விலை காட்சிப்படுத்தாது அரிசி விற்பனையில் ஈடுபட்ட வர்த்தகர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்தோடு, எதிர்வரும் நாட்களிலும் அரிசி விற்பனை விலை தொடர்பான திடீர் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டு, முறைகேடுகளில் ஈடுபடும் வியாபாரிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினர் தெரிவித்துள்ளனர். அதேவேளை, அதிகளவான நெல்லினை இருப்பில் வைத்துள்ள போதிலும் அதனை அரிசியாக்கி சந்தைக்கு விநியோகம் செய்ய மறுக்கும் பதுக்கல் நடவடிக்கைகளுக்கு எதிராக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது எனவும், பொதுமக்கள் […] - [காடுகளில் பதுங்கியுள்ள சந்தேக நபர்கள் : விசேட பொலிஸ் குழு களத்தில்](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a4%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3-%e0%ae%9a/): -மன்னார் நிருபர்- மன்னார்-நொச்சிக்குளம் கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில் குடும்பஸ்தர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் அனைவரும் தலைமறைவாகி காடுகளில் பதுங்கியுள்ள நிலையில், அவர்களை கைது செய்வதற்கான தீவிர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக உயிலங்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார். குறித்த படுகொலை சம்பவத்தில் நொச்சி குளத்தைச் சேர்ந்த 16 ஆண்கள் நேரடியாக தொடர்புபட்ட நிலையில் அவர்கள் தொடர்பான முழுமையான தகவல்கள் தமக்கு கிடைக்க பெற்றுள்ளதாகவும், அவர்களை விரைவில் கைது செய்து உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள விசேட பொலிஸ் குழுவொன்று களமிறக்கப்பட்டுள்ளதாக உயிலங்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்துள்ளார். மேலும், குறித்த படுகொலையில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த மூவர் பங்கேற்றுள்ளமை குறித்து பொலிஸ் புலன் விசாரணையில் தெரியவந்துள்ளதுடன், குறித்த மூவரும் மேற்படி கொலைகளை மேற்கொள்வதற்காகவே வேறு மாவட்டத்தில் இருந்து நொச்சிக்குளத்திற்கு அழைத்துவரப்பட்டு இருக்கலாம், என புலன் விசாரணையில் தெரிய […] - [திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரி அதிபருக்கு நீதிமன்ற அழைப்பாணை](https://minnal24.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8b%e0%ae%a3%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88-%e0%ae%b7%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%be-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81/): -கல்முனை நிருபர்- திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரி ஆசிரியை பஹ்மிதா ரமீஸ் பாடசாலையின் அதிபர் லிங்கேஸ்வரி ரவிராஜனுக்கு எதிராக திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கில் அதிபர் லிங்கேஸ்வரிக்கு நீதிமன்றத்தால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் எழுத்து மூலக் கட்டளைக்கிணங்க சென்ற பெப்ரவரி மாதம் 2ம் திகதி திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரிக்கு கடமையேற்பதற்காக ஆசிரியை பஹ்மிதா றமீஸ் சென்றிருந்த வேளை அங்கு குழப்பநிலை உருவாகியிருந்தது. அதனைத் தொடர்ந்து , குறித்த ஆசிரியை தனது சட்டரீதியான கடமையை செய்யத் தடுத்தமை என்ற குற்றச்சாட்டின் பெயரின் திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரி அதிபர் லிங்கேஸ்வரி ரவிராஜனுக்கு எதிராக திருகோணமலை நீதவான் நீதிமன்றில் சென்ற மார்ச் மாதம் வழக்குத் தாக்கல் செய்திருந்தார். குறிப்பிட்ட வழக்கில் ஆசிரியை பஹ்மிதாவுக்கு ஆதரவாக குரல்கள் இயக்கத்தின் சட்டத்தரணிகளான் றதீப் அஹமட், ஹஸன் றுஷ்தி, முஹைமின் காலித் மற்று ஸாதிர் அஹமட் ஆகியோர் ஆஜராகி சமர்ப்பணம் […] - [குருந்தூர் மலையில் புத்தர் சிலை பிரதிஷ்டை செய்யும் பணி இடைநிறுத்தம்](https://minnal24.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/): முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு  குருந்தூர் மலையில், அமைக்கப்பட்ட விகாரையில் புத்தர் சிலை ஒன்றை பிரதிஷ்டை செய்யும் பணிகள்  ஆர்ப்பாட்டம் காரணமாக நேற்று ஞாயிற்றுக்கிழமை இடைநிறுத்தப்பட்டுள்ளது. குருந்தூர் மலைப்பகுதியில் மதம் சார்ந்த எவ்வித கட்டுமானங்களையும் மேற்கொள்வதற்கு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்நிலையில், குறித்த தடையையும் மீறி அங்கு அமைக்கப்பட்டுள்ள விகாரை ஒன்றில் புத்தர் சிலையினை நேற்று பிரதிஷ்டை செய்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன், வினோநோகராதலிங்கம், ஆகியோரின் பங்களிப்புடன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் அங்கு இடம்பெற்றது. அதனைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வருகைத்தந்த தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் அனுரமானதுங்க, நிலைமையை ஆராய்ந்ததுடன், புத்தர்சிலையை பிரதிஷ்டை செய்வதற்கான பணிகளை தொல்பொருள் திணைக்களம் முன்னெடுக்கவில்லை என  தெரிவித்தார். இதனையடுத்து, குறித்த வழிபாடுகள் இடைநிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. - [உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு](https://minnal24.com/%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9-3/): உலக சந்தையில் தங்கம் விலை  பணவீக்கத்திற்கு எதிராக மீண்டும் உயர்வடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. டொலரின் மதிப்பானது வரலாறு காணாத அளவு உச்சத்தினை எட்டியுள்ள நிலையில், இது தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என கணிக்கப்பட்டுள்ளது. திரவத் தங்கம் என்று அழைக்கப்படும் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வரும் நிலையில், சர்வதேச அளவில் தங்கம் விலை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. - [லிட்ரோ நிறுவனத்தின் அறிவித்தல்](https://minnal24.com/%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b0%e0%af%8b-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf-2/): லிட்ரோ சமையல் எரிவாயு விநியோகம் இன்று திங்கட்கிழமையும் மற்றும்  நாளையும் இடம்பெறாது , என லிட்ரோ நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த 8 ஆம் திகதி நாட்டை வந்தடைந்த எரிவாயு கப்பலுக்கு 2.5 மில்லியன் டொலர் இதுவரை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். - [குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பணிகள் இடம்பெறும்](https://minnal24.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b5%e0%af%81-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%95-2/): இன்று திங்கட்கிழமை அரச அலுவலகங்களுக்கு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது எனினும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பணிகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிரதான காரியலயமும் ஏனைய பிராந்திய அலுவலகங்களும் வழமை போன்று இன்று திறக்கப்படும் என குடிவரவுஇ குடியகல்வு கட்டுப்பாட்டு நாயகம் சரத் ரூபசிங்க தெரிவித்துள்ளார். அரச பணியாளர்களுக்கு இன்று விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும், அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற தனியார் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. - [அனைத்து மதுபான சாலைகள், இறைச்சி விற்பனை நிலையங்களுக்கு பூட்டு](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%a9%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%87/): நாளை செவ்வாய்க்கிழமை பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு, நாட்டிலுள்ள அனைத்து மதுபான சாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு அறிவித்துள்ளது. சூதாட்ட நிலையங்கள், கேளிக்கை விடுதிகள், இறைச்சி விற்பனை நிலையங்கள் என்பனவும், பொசன் பூரணை தினத்தில் மூடப்பட வேண்டும் எனவும், சிறப்பு அங்காடிகளில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. - [வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிவித்தல்](https://minnal24.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf-2/): வெளிவிவகார அமைச்சின் தூதரக அலுவலகம் இன்று திங்கட்கிழமை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தமது சேவையை வழங்கவுள்ளது. வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், நாளை செவ்வாய்க்கிழமை பூரணை விடுமுறை தினம் என்பதால் அன்றைய தினம் வெளிவிவகார அமைச்சின் தூதரக அலுவலகம் மூடப்படும் எனவும், அதன்பின் நாளை மறுதினம் புதன்கிழமை முதல் வெளிவிவகார அமைச்சின் தூதரக அலுவலகத்தின் வழமையான சேவைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. - [இளம் குடும்பஸ்தர் வெட்டி படுகொலை](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf/): -முல்லைத்தீவு நிருபர்- முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி பாலிநகர் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று சனிக்கிழமை இரவு இனந்தெரியாத நபர்களினால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது நேற்று பாலிநகர் பகுதியில் இடம்பெற்ற பிறந்தநாள் நிகழ்வொன்றில் கலந்து கொண்டுவிட்டு திரும்பிய வேளையே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மல்லாவி பொலிஸார் தெரிவித்துள்ளனர் கொலை செய்யப்பட்ட நபர் பாலிநகர் பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான அழகப்பன் அமிர்தலிங்கம் (வயது 40) என தெரியவந்துள்ளது சடலம் மல்லாவி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் உடற்கூற்று பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாஞ்சோலை மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. மேலதிக விசாரணைகளை மல்லாவி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் - [வீடொன்று தீயில் எரிந்து முற்றாக சேதம்](https://minnal24.com/%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%a4%e0%af%80%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81/): -பதுளை நிருபர்- பதுளை கைலகொட பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வீடொன்று தீப்பிடித்து எரிந்து முற்றாக சேதமாகியுள்ளது. தீப்பிடித்த நேரத்தில் குறித்த வீட்டில் 9 பேர் இருந்துள்ளதோடு, எவருக்கும் உயிர் சேதம் ஏற்படாத போதிலும், வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளன. தீப்பிடித்தமைக்கான காரணத்தை இதுவரையிலும் கண்டறியாத போதிலும், பதுளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். - [தென்கிழக்கு பல்கலைக்கழக இதழியல் டிப்ளோமா பயிற்சி நெறி சான்றிதழ் வழங்கும் நிகழ்வு](https://minnal24.com/%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b4-7/): -அம்பாறை நிருபர்- இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் கடந்த 2017/18 ஆம் ஆண்டிற்கான இதழியல் டிப்ளோமா கற்கை நெறிக்கான டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் தலைமையில் பட்டமளிப்பு மண்டபத்தில் இடம்பெற்றது. கடந்த 2018 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட குறித்த பயிற்சிநெறியானது, ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் மற்றும் கொரோனா நோய்த் தொற்று காரணமாக சில வருடங்கள் காலதாமதமானதுடன், கடந்த வருடம் இதற்கான இறுதிப் பரீட்சை இடம்பெற்றிருந்தது. இதில் 41 மாணவர்கள் இந்தப் பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர். இந்த சான்றிதழ் வழங்கும் நிகழ்வில், பல்கலைக்கழகத்தின் பதிவாளர் ஏ.எச். சத்தார், பீடாதிபதிகள், மொழித்துறைத் தலைவரும், இப்பயிற்சி நெறியின் இணைப்பாளருமான பேராசிரியர் ரமீஸ் அப்துல்லாஹ், வெளிவாரி கற்கை நிலையத்தின் பணிப்பாளரும், பேராசிரியருமான எம்.எச். தௌபீக் , இ.ரூ.கூட்டுத்தாபன நிகழ்ச்சி தயாரிப்பு பிரிவின் பணிப்பாளர் யூ. எல். யாகூப், சாய்ந்தமருது- மாளிகைக்காடு வர்த்தக சங்க தலைவர் கலாநிதி எம்.எஸ்.எம். முபாரக், சிலோன் […] - [அனுமதியற்ற விறகுகளுடன் 6 சாரதிகள் கைது](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%95%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-6/): -கிளிநொச்சி நிருபர்- பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆணையிறவு பகுதியில் அனுமதியின்றி ஏற்றிச்செல்லப்பட்ட கொத்து விறகுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி மாவட்ட மது ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளது. குறித்த சம்பவமானது இன்று அதிகாலை 06 கனரக வாகனங்களில் வீர விறகு, பாலை, பூவரசு போன்ற கொத்து விறகுகள் அனுமதியின்றி ஏற்றி செல்லப்படுவதாக, கிளிநொச்சி மது ஒழிப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து ஆணையிறவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட வாகனங்கள் மற்றும் சாரதிகள் பளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மேலும், கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் முற்படுத்தபடவுள்ளதாகவும் பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். - [இ.போ.ச பேருந்திலிருந்து டீசல் திருடிய நடத்துனர் கைது](https://minnal24.com/%e0%ae%87-%e0%ae%aa%e0%af%8b-%e0%ae%9a-%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9f/): -பதுளை நிருபர்- இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பசறையிலிருந்து மாத்தறைக்கு செல்லும் பேருந்தின் டீசல் கொள்கலன் மூடியை உடைத்து டீசல் திருட முற்பட்ட வேளை நபர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பசறை பேருந்து தரிப்பிடத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணிக்கு மாத்தறைக்கு செல்வதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றில், பதுளை பசறை நகர்களுக்கிடையில் சேவை புரியும் தனியார் பேருந்து ஒன்றில் நடத்துனராக கடமை புரியும் 35 வயதுடைய நபர் ஒருவர் டீசல் கொள்கலனின் மூடியை உடைத்து டீசலை திருட முற்பட்ட வேளை, பேருந்து தரிப்பிடத்தின் காவலாளியினால் பிடிக்கப்பட்டு காவல் கடமைகளில் ஈடுபட்டிருந்த பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரை இன்று நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்காக நடவடிக்கைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். - ["கல்வி ஒவ்வொரு குழந்தையினதும் கட்டாய உரிமையாகும்"](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%92%e0%ae%b5%e0%af%8d%e0%ae%b5%e0%af%8a%e0%ae%b0%e0%af%81-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%ae%bf/): “சிறுவர்கள் களத்தில் வேலை செய்யக் கூடாது கனவுகளுடன் வாழ வேண்டும்” என்ற தொனிப்பொருளில் இந்த வருடம் சர்வதேச சிறுவர் தொழிலாளர் எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அனைத்துப் பிள்ளைகளுக்கும் கல்வியைப் பெறும் உரிமை உள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவிக்கின்றது. சிறுவர் தொழிலாளர்கள் என்பது  சிறுவர்களுக்கெதிராக பிரயோகிக்கப்படும் வன்முறைகளில் ஒன்றாகவே கருதப்படுகின்றது. வேலையில் ஈடுபடுத்தப்படும் 5 தொடக்கம் 17 வயதிற்குட்பட்டர்களையே சர்வதேச தொழிலாளர் அமைப்பு சிறுவர் தொழிலாளர் என வரையறுத்துள்ளது. சிறுவர்களுக்கு முறையான கல்வியை வழங்குவதன் மூலமாகவே ஒரு நாட்டின் எதிர்காலத்தை கட்டியெழுப்ப முடியும். கல்வி கற்க வேண்டும் என கனவுகளொடு இருக்கும் பல சிறுவர்கள் குடும்ப பொருளாதார நிலை காரணமாக வேலை செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள். கல்வி கற்க வேண்டிய வயதில் தொழிலில் ஈடுபடுத்தப்படும் சிறுவர்கள் உடல் ரீதியாக, உள அல்லது மனரீதியாக, உணர்வு ரீதியாக மற்றும் சமூகரீதியாக பாதிக்கப்படுகின்றனர். சிறு வயதில் கல்வி அறிவை பெறாமல் வறுமை காரணமாக தொழில் […] - [நாட்டில் பல பிரதேசங்களில் மழையுடனான வானிலை](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b2-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf-4/): நாட்டில், மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும், என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும். மணிக்கு 40 கி.மீ வேகத்தில் மிதமானது முதல் பலத்த காற்று வீசக்கூடும். தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழையினால் ஏற்படக்கூடிய அபாயங்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. - [60 லீற்றர் டீசலுடன் பெண் ஒருவர் கைது](https://minnal24.com/60-%e0%ae%b2%e0%af%80%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9f%e0%af%80%e0%ae%9a%e0%ae%b2%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0/): -பதுளை நிருபர்- லுணுகலை ஹொப்டன் பகுதியில் 60 லீற்றர் டீசலை தன் கைவசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் 33 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பதுளை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து, பதுளை பிராந்திய குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் தலைமை அதிகாரி C.I சாமிந்த தலைமையிலான குழுவினர் டீசல் வைக்கப்பட்டுள்ளதாக சந்தேகப்படும் இடத்தில் தேடுதலை மேற்கொண்ட போது டீசல் நிரப்பப்பட்ட 20 லீற்றர் நிரப்பிய கொள்கலன்கள் மூன்று கைப்பற்றப்பட்டுள்ளது. இச்சம்பவம் இன்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளதோடு, குறித்த சந்தேக நபரை பொலிஸ் பிணையில் விடுவித்ததோடு சந்தேக நபருக்கு எதிராக எதிர்வரும் 16 ம் திகதி பசறை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பதுளை பிராந்திய குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர். - [எரிவாயு சிலிண்டர்களை தூக்கி எறிந்த விற்பனை நிலைய முகவர்](https://minnal24.com/%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%af%81-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%a4%e0%af%82%e0%ae%95/): -மன்னார் நிருபர்- மன்னார் உப்புக்குளம் பகுதியில் உள்ள லிட்ரோ எரிவாயு விற்பனை நிலையத்திற்கு முன்பாக பதற்றமான சூழல் இன்று சனிக்கிழமை மாலை உருவாகியுள்ளதுடன், முகவர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது குறித்த லிட்ரோ எரிவாயு விற்பனை நிலையத்திற்கு முன் கடந்த 10 நாட்களுக்கு மேலாக பலர் எரிவாயு சிலிண்டர்களை எரிவாயு பெறுவதற்காக அடுக்கி வைத்த நிலையில் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட சிலர் சிலிண்டருக்கு காவல் நின்றுள்ளனர். 10 நாட்கள் கடந்தும் எரிவாயு குறித்த முகவர் நிலையத்திற்கு கிடைக்க பெறாத நிலையில் அவ் எரிவாயு சிலிண்டர்களும் அடுக்கப்பட்டு விற்பனை நிலையத்திற்கு முன்பாக வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று சனிக்கிழமை குறித்த எரிவாயு விற்பனை நிலைய முகவர் அப்பகுதியில் அடுக்கி வைத்திருந்த எரிவாயு சிலிண்டர்களை தூக்கி எறிந்ததுடன், வரிசையில் வைக்கப்பட்ட சிலிண்டர் உரிமையாளர்களுக்கு எரிவாயு வழங்க முடியாது என வாய் தர்க்கத்தில் ஈடுபட்ட நிலையில், அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் […] - [மின்துண்டிப்பு தொடர்பான அறிவித்தல்](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a9/): 13 ஆம் திகதி மற்றும் 15 முதல் 18 வரையான திகதிகளில் 2 மணி 15 நிமிடங்கள் மின்சாரம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதேவேளை ஜூன் 14 மற்றும் 19 ஆம் திகதிகளில் 1 மணி நேரம் மின்சாரம் தடைப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. - [மன்னார் – நொச்சிக்குளம் இரட்டை கொலை : சந்தேக நபர்கள் தலைமறைவு](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8%e0%af%8a%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/): -மன்னார் நிருபர்- மன்னார் – நொச்சிக்குளம் பகுதியில் சகோதரர்கள் இருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 16 சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். எனினும், சந்தேக நபர்கள் அனைவரும் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலை செய்யப்பட்ட இருவரின் சடலங்கள் இன்று சனிக்கிழமை காலை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். யாழ்.போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை நடத்தப்படவுள்ளது. இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு வலு பெற்றதையடுத்து, நேற்று சனிக்கிழமை காலை கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். 33 மற்றும் 42 வயதான சகோதரர்கள் இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர். உயிலங்குளம் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் - [மட்டக்களப்பு-களுவாஞ்சிக்குடி கண்ணகி அம்மன் ஆலயத்தின் கன்னிக்கால் வெட்டுச்சடங்கு](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-2/): மட்டக்களப்பு-களுவாஞ்சிக்குடி கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் கன்னிக்கால் வெட்டுச்சடங்கு பூசை இன்று சனிக்கிழமை இடம்பெறுகின்றது. இது விசேட பூசைகளில் ஒன்றாகும், இன்று காலை இதன் ஆரம்பகட்ட நடவடிக்கையாக கோயிலை நோக்கி பக்தர்கள் கூட்டமாக சென்றனர். மடிப்பிச்சை எடுத்தல் இவ்விழாவில் சிறப்பம்சமாகும். இன்று மாலை கன்னிக்கால் வெட்டும் சடங்கு நடைபெறுகின்றது. - [கோழி இறைச்சி மற்றும் முடடையின் விலை மேலும் அதிகரிக்கும்](https://minnal24.com/%e0%ae%95%e0%af%8b%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%87%e0%ae%b1%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f/): முட்டை மற்றும் கோழி இறைச்சி என்பனவற்றின் விலைகள் மேலும் அதிகரிக்கக்கூடும், என அகில இலங்கை கோழிப்பண்ணை வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார். விலங்குணவுகளின் விலைகள் அதிகரித்துள்ளமையால், தமது தொழில்துறையில் பல பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டியுள்ளதால், தமது தொழில்துறையை முன்னெடுப்பதற்கு நிவாரணம் வழங்குமாறு, அவர் கோரிக்கை விடுத்துள்ளார். தற்போது சந்தையில் முட்டை ஒன்றின் விலை 50 ரூபாவாக உள்ளது. நகர்ப்புறங்களில் உள்ள சிறு குழந்தைகளில் சுமார் 30 சதவீதமானோர் புரதச் சத்து குறைப்பாட்டுடன் உள்ளனர். இந் நிலையில், பொதுமக்களுக்கு முட்டை மற்றும் கோழி இறைச்சி என்பனவற்றைப் பெற்றுக் கொள்ள முடியாவிட்டால், புரதச் சத்து குறைப்பாடு ஏற்படும் நிலை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது   - [அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஜஸ்டின் பைபர்](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%95%e0%af%88-%e0%ae%a8%e0%af%8b%e0%ae%af%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa/): உலக புகழ் பெற்ற பிரபல பொப் பாடகர் ஜஸ்டின் பைபர் தமது முகத்தின் ஒரு பக்கம் செயலிழந்துள்ளதாக, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காணொளியொன்றை பதிவிட்டுள்ளார். ராம்சே ஹண்ட் சிண்ட்ரோம் என்ற அரிய வகை நரம்பியல் நோயால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் காது உள்ளிட்ட முகத்தின் ஒரு பக்க உறுப்புகள் செயலிழந்துள்ளதாகவும், அவர் தெரிவித்துள்ளார். தான் எவ்வளவு முயற்சித்தும் முகத்தில் வலதுபக்க கண், காது உள்ளிட்ட உறுப்புகளை இயக்க முடியவில்லை எனவும், இதனால், தான் ஏற்பாடு செய்த இசைக் கச்சேரிகளையும் ரத்து செய்துள்ளதாகவும், அந்த காணொளியில் ஜஸ்டின் பைபர் தெரிவித்துள்ளார்.   - [மட்டக்களப்பு-வாழைச்சேனையில் பொலிஸாருக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம்](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%87%e0%ae%a9-5/): -வாழைச்சேனை நிருபர்- மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பிறைந்துறைச்சேனையில் தங்களது தாய் தாக்கப்பட்டமையை கண்டித்தும், பொலிஸார் சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்து இன்று சனிக்கிழமை காலை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக உறவினர்கள் நீதி வேண்டி பொலிஸாருக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று காலை வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக தந்தையுடன் வந்த பிள்ளைகள் மூவர் வாசகங்கள் எழுதிய பதாதைகளை கையில் ஏந்தி தமது எதிர்ப்பினை தெரிவித்தனர். ‘வீடு புகுந்து தாக்கியவர்களை இன்னும் ஏன் கைது செய்யவில்லை’ ‘வாழைச்சேனை பொலிஸார் ஒரு பக்கச் சார்பாக நடப்பது ஏன்’ ‘எமக்கு ஏற்பட்ட அநீதிக்கு நீதி வேண்டும்’ என தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த புதன் கிழமையன்று பதுரியா வீதி பிறைந்துறைச்சேனையில் வசிக்கும் இரண்டு குடும்பத்தினருக்கிடையில் இடம்பெற்ற பிணக்கானது கைகலப்பாக மாறியதினால் உதுமாலெப்வை றிசானா வயது (36) என்ற குடும்பப் பெண் தலையில் பலத்த தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டு மட்டக்களப்பு […] - [மருந்து தட்டுப்பாடுகள் அதி உச்சத்தில் உள்ளது : வாள் வெட்டுக்கள், வீதி விபத்துக்களை தவிர்த்துக் கொள்ளுங்கள்](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%85/): -மன்னார் நிருபர்- நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிதி நெருக்கடி காரணமாக மருத்துவத்துறையில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன் பல முக்கியமான மருந்து வகைகள் கையிருப்பில் இல்லை. இதனால், தேவையில்லாமல் வாள்வெட்டு சம்பவங்கள், வீதி விபத்தில் காயமடைதல் குளங்களில் மூழ்குதல் போன்ற அவசியமற்ற விடயங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு, மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் தர்மராஜா வினோதன் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், தேவையில்லாமல் வாள்வெட்டு சம்பவங்கள், வீதி விபத்தில் காயமடைதல் குளங்களில் மூழ்குதல் போன்ற அவசியமற்ற விடயங்களில் தேவையில்லாமல் காயமடைந்து வருபவர்களுக்கு சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளும் போது உண்மையான தேவையுடைய நோயாளிகளுக்கு மருத்துவச் சேவை செய்ய முடியாமல் போகிறது. அத்துடன் சுப்பர் பெட்ரோல் இல்லாத காரணத்தால் மன்னார் மாவட்டத்தில் 5 ஆம்புலன்சுக்கு மேல் இயங்காமல் இருக்கிறது. வீதி விபத்துக்கள், வாள்வெட்டு காயங்கள் போன்ற பலவிதமான அவசர மருத்துவ சேவைக்கு வருபவர்கள் காத்திருக்க வேண்டியுள்ளதுடன் உயிரிழப்புகள் ஏற்படவும் வாய்ப்பு […] - [போக்குவரத்து வைத்திய நிறுவகத்தின் மட்டக்களப்பு கிளை இடமாற்றம்](https://minnal24.com/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1/): போக்குவரத்து அமைச்சின் கீழ் இயங்கிவரும் தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவகத்தின் மட்டக்களப்பு கிளை தற்போது மட்டக்களப்பு நகர் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, மட்டக்களப்பு மாவட்ட தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவக பொறுப்பதிகாரி தர்மலிங்கம் ஹரிதேவா தெரிவித்துள்ளார். கடந்த 6 வருட காலமாக மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் கல்லடி பகுதியில் சாரதிகளுக்கான மருத்துவ சான்றிதழ்களை வழங்கும் சேவையினை வழங்கி வந்த தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவகம் தற்போது மட்டக்களப்பு பார் வீதியில் திறந்த பல்கலைக்கழகத்திற்கு முன்னாள் அதிநவீன வசதியுடனான கட்டடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. குறித்த கட்டிடத்தில் சாரதி மருத்துவ சான்றிதழ் வழங்கும் சேவையினை பொது மக்கள் பெற்றுக்கொள்ள முடியும் என தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவக பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். தற்போதைய அசாதாரண சூழ்நிலையில் மருத்துவ சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளும் சாரதிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை இலகுபடுத்தும் வகையிலும், இடப்பற்றாக்குறை காரணமாக ஏற்படுகின்ற அசௌகரியங்களை குறைக்கும் வகையிலும் குறித்த இடமாற்றம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. - [அரிசிகளின் விலை அறிவிப்பு : அதிக விலைக்கு விற்றால் அபராதமும் தண்டனையும்](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa/): வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையினை மீறி யாழ்.மாவட்டத்தில் அரிசி விற்பனை செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்.மாவட்ட அரச அதிபர் தெரிவித்துள்ளார். யாழில் உள்ள பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் ஊடாக விசேட கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவிருப்பதாகவும், இதன்போது கட்டுப்பாட்டு விலையினை மீறி அரிசி விற்பனை செய்வோருக்கு எதிராக சட்ட நவடிக்கை எடுக்கப்படும், பொது மக்களுக்கு கஷ்டம் ஏற்படுத்தாதவாறு அத்தியவசியப் பொருட்களை அதிக விலைக்கு விற்க வேண்டாம் என யாழ்ப்பாண வர்த்தக சமூகத்தினரிடம் கேட்டுக்கொள்வதாக அவர் மேலும் தெரிவித்தார். ஒரு கிலோ நாடு அரிசி 220 ரூபா ஒரு கிலோ சம்பா அரிசி 230 ரூபா ஒரு கிலோ கீரி சம்பா அரிசி 260 ரூபா ஒரு கிலோ வெள்ளை மற்றும் சிவப்பு பச்சை அரிசி 210 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட வேண்டுமென அரசால் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. தனியொரு வர்த்தகர் இவ்வாறு கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் ஐந்து […] - [தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு வழங்கப்பட்ட ஒரு இலட்சம் அப்பிள்கள்](https://minnal24.com/%e0%ae%a4%e0%af%86%e0%ae%b9%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%9a-3/): வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு இறக்குமதிச் செய்யப்பட்ட அப்பிள்கள், தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு கையளிக்கப்பட்டுள்ளது. கொழும்பு சர்வதேச கொள்கலன் முனையத்தில் (CICT) யாரும் பொறுப்பேற்காமல் சுங்க பிரிவில் இருந்த ஒரு இலட்சம் அப்பிள்கள் (மொத்தம் 24,000 கிலோ) இவ்வாறு தெஹிவளைமிருகக் காட்சி சாலை விலங்குகளின் உணவுக்காக வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, இறக்குமதிச் செய்த உரிமையாளர்கள், அதனை பெற்றுக் கொள்ளாமையால், துறைமுக அபிவிருத்தி விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி.சில்வாவின் தீர்மானத்துக்கு அமைய மிருகக்காட்சிசாலையின் அதிகாரிகளிடம் அவை நேற்று வெள்ளிக்கிழமை கையளிக்கப்பட்டன. - [வௌ்ளை மற்றும் சிவப்பு பச்சரிசியின் அதிகபட்ச சில்லறை விலை](https://minnal24.com/%e0%ae%b5%e0%af%8c%e0%af%8d%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%aa%e0%ae%9a/): நுகர்வோர் விவகார அதிகார சபை நேற்று வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒரு கிலோகிராம் வௌ்ளை பச்சரிசி மற்றும் சிவப்பு பச்சரிசியின் அதிகபட்ச சில்லறை விலை 210 ரூபா ஆகும். அத்துடன், இந்த விலைகளை விட அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   - [இன்றைய மின்துண்டிப்பு தொடர்பான அறிவித்தல்](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%88%e0%ae%af-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%a4%e0%af%8a/): இன்று சனிக்கிழமை நாடு முழுவதும் 1 மணித்தியால மின்துண்டிப்பு அழுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.     - [எரிபொருள் வழங்கப்படுவது தொடர்பாக அறிந்து கொள்ளும் இணையத்தளம்](https://minnal24.com/%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81/): இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவரகம் (ICTA) மற்றம் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இணைந்து, நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இருப்பை சரிபார்க்க ஓன்லைன் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. தினசரி காலை 9.00 மணிக்கு எரிபொருள் இருப்பு மற்றும் பிற தொடர்புடைய தகவல்கள் இணையதளத்தில் பதிவேற்றப்படும். அதன் பிறகு ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் தகவல்கள் புதுப்பிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இணையதளம் : https://fuel.gov.lk/ - [மன்னார்-நொச்சிக்குளம் இரட்டை கொலைக்கான காரணம் வெளியானது](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8%e0%af%8a%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0/): -மன்னார் நிருபர்- நொச்சிக்குளத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் தொடர்பாக மேலும் சில தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த வாரம் மன்னார் உயிலங்குளம் பகுதியில் நடைபெற்ற மாட்டு வண்டி சவாரி போட்டியின் போது நொச்சிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த மாட்டு வண்டி உரிமையாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அதனைத் தொடர்ந்தே இரு தரப்பினருக்கும் இடையில் தொடர்ச்சியாக தர்க்க நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், நொச்சிக் குளத்தை சேர்ந்தவர்கள் மீது வாள்வெட்டு சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் சகோதரர்கள் தொடர்ச்சியாக தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவ தினமான நேற்று வெள்ளிக்கிழமை உயிரிழந்தவர்களின் மூத்த சகோதரர் ஒருவரும், மேலும் ஒருவரும் நொச்சிக்குளத்தில் உள்ள மாட்டு வண்டி சவாரியில் வெற்றி பெற்ற ஒருவருடைய வீட்டிற்குச் சென்று தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வருகின்றது. குறித்த தர்க்கம் கைகலப்பாக மாறிய நிலையில் குறித்த இருவர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு வாள்வெட்டு இடம் பெற்றுள்ளது. இந்த நிலையில் குறித்த இருவரும் மீட்கப்பட்டு மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.. […] - [மொட்டுக்கு வாக்களித்த சிங்கள மக்களுக்கு சாட்டையடி கொடுத்தார் பசில் - சபா குகதாஸ்](https://minnal24.com/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%9a%e0%ae%bf/): -யாழ் நிருபர்- பாராளுமன்ற உறுப்பினர் பஸில் ராஐபக்ச தனது பாராளுமன்ற உறுப்புரிமையை இராஐனாமா செய்த பின்னர் ஊடகவியலாளர் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் வழங்கும் போது, நாட்டின் தற்போதைய நிலைக்கு பொதுஐன பெரமுன கட்சிக்கு வாக்களித்த மக்களும் பொறுப்புக் கூற வேண்டும் என மொட்டுக்கு வாக்களித்த மக்களுக்கு சாட்டையடி கொடுத்துள்ளார், என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார். சிங்கள மக்கள் மத்தியில் 49 லட்சம் மக்கள் கடந்த ஐனாதிபதித் தேர்தலில் சஐித் பிறேமதாஸவிற்கு வாக்களித்தனர். இவர்கள் இனவாத கோசத்தை முன்நிலைப்படுத்த விரும்பவில்லை, ஆனால் கோத்தாவிற்கு 69 லட்சம் மக்கள் வாக்களித்தனர் அவர்கள் அனைவரும் பௌத்த சிங்கள கோசத்தை முன்னநிலைப்படுத்தினர். இதன் விளைவை தற்போது முழு நாட்டு மக்களும் அனுபவிக்க வழி ஏற்படுத்தியுள்ளனர் . எதிர் காலத்தில் இனவாத சிந்தனையில் இருந்து விலகி சகல இனங்களையும் ஏற்றுக் கொள்கின்ற ஆட்சியாளர்களை தெரிவு செய்வதுடன் வாக்களித்த மக்கள் மீது பழிபோடும் […] - [மட்டக்களப்பில் மத சுதந்திரத்திற்கான அருங்காட்சியகம் அங்குரார்ப்பணம்](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a4-%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4/): மத சுதந்திரத்திரத்திற்கான நடமாடும் மெய்நிகர் அருங்காட்சியகம் நேற்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பில் முதல் முதலாக அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கும் அரச சார்பற்ற சமூக தொண்டு நிறுவனங்களில் ஒன்றான LIFT நிறுவனத்தின் அனுசரனையில் குறித்த மத சுதந்திரத்திரத்திற்கான மெய்நிகர் அருங்காட்சியகம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. LIFT நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திருமதி.ஜானு முரளிதரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்விற்கு, பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட தேசிய இளைஞர்கள் சேவை மன்றத்தின் உதவிப் பணிப்பாளர் திருமதி.கலாராணி ஜேசுதாசன் கலந்துகொண்டதுடன், குறித்த நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக சட்ட ஆலோசகர் யாமினி ரவீந்திரன், SLCDF நிறுவனத்தின் சிரேஷ்ட நிகழ்ச்சித்திட்ட பொறுப்பாளர் ஆறுமுகம் சொர்ணலிங்கம், ADT நிறுவனத்தின் பிரதம நிருவாக உத்தியோகத்தர் கொட்பிறி யோகராஜா,  ADT நிறுவனத்தின் இளைஞர் சுவிசேஷக் கூட்டணியின் தலைவர் மைக் கேப்ரியல், Amcor நிறுவனத்தின் சிரேஷ்ட நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் யோ.சிவயோகராஜன் உள்ளிட்டோர் கலந்து நிகழ்வை சிறப்பித்திருந்தனர். இலங்கையில் நிலவும் மத சுதந்திரம், வன்முறைகள், சமூக […] - [லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள அறிவித்தல்](https://minnal24.com/%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b0%e0%af%8b-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-4/): லிட்ரோ நிறுவனத்திடம் எரிவாயு கையிருப்பு இல்லாததால், சமையல் எரிவாயு இன்று சனிக்கிழமை விநியோகிக்கப்படாது, என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. எனவே, பொதுமக்கள் வரிசையில் காத்திருக்க வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. - [நாட்டை வந்தடையவுள்ள எரிபொருள் ஏற்றிய 5 கப்பல்கள்](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%ae%b5%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3-%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa/): இம்மாதம் 11 ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரையான 12 நாட்களுக்குள் 5 எரிபொருள் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்துக்கு வரும், என எதிர்பார்ப்பதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அதன்படி, 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் இரண்டு பெற்றோல் மற்றும் டீசல் கப்பல்களும், 16 ஆம் திகதி இந்திய அரசின் கடன் திட்டத்தின் இறுதி டீசல் கப்பலும், 22 ஆம் திகதி மற்றுமொரு பெற்றோல் கப்பலும், 20 ஆம் திகதிக்கு முன்னர் ரஷ்யாவில் இருந்து இரண்டாவது கச்சா எண்ணெய் கப்பலும் வரும் என எதிர்பார்க்கப்படுவதாக, அமைச்சர் தெரிவித்துள்ளார். - [வர்த்தக நிலையம் ஒன்றை உடைத்து நகை பணம் என்பன கொள்ளை](https://minnal24.com/%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%95-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%92%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%88-%e0%ae%89%e0%ae%9f/): -பதுளை நிருபர்- பசறை நகரில் அமைந்துள்ள ஏ&டி பெமிலி மார்ட் எனும் வர்த்தக நிலையம் ஒன்றில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை திருடர்களினால் பணம் மற்றும் நகைகள் என்பன கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. பசறை நகரில் அமைந்துள்ள குறித்த வர்த்தக நிலையத்தின் கூரைப்பகுதியை உடைத்து உள்ளே இறங்கிய திருடர்கள், சுமார் மூன்றரை லட்சம் ரூபாய் பணமும், மூன்றரை பவுன் தங்க சங்கிலி ஒன்றும், பதின்மூவாயிரம் ரூபாய் பெறுமதியான மோதிரம் ஒன்றும், 25000 ரூபாய் பெறுமதியான தொலைபேசி கட்டண அட்டைகளும், 5300 ரூபாய் பெறுமதியான சிகரட் பக்கட்டுகளும், 30000 ரூபாய் பெறுமதியான பீடி பண்டல்களும் களவாடப்பட்டுள்ளதாக, பசறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த வர்த்தக நிலையத்தின் செயற்பாடுகள் முடிவடைந்து வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் வர்த்தக நிலையத்தை நேற்று இரவு 11மணியளவில் மூடிவிட்டு வீடு சென்றுள்ளார். இதன்போது, இன்று அதிகாலை சுமார் 8.00 மணியளவில் மீண்டும் வர்த்தக நிலையத்தை திறந்து பார்க்கும் போது, கூரை […] - [பாடசாலைகளுக்கு விடுமுறை](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1-3/): எதிர்வரும் திங்கட்கிழமை அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை விசேட அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே, இவ்வாறு அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. - [லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் பதவி விலகுகிறார்](https://minnal24.com/%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b0%e0%af%8b-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5/): லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். முன்னதாக இலங்கை மின்சார சபையின் தலைவராக செயற்பட்ட விஜித ஹேரத், லிட்ரோ நிறுவனத்தின் தலைவராக கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி பதவியேற்றார். - [குளவி கொட்டுக்கு இலக்காகி 18 பேர் வைத்தியசாலையில் அனுமதி](https://minnal24.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be-4/): -கிளிநொச்சி நிருபர்- குளவிக் கொட்டுக்கு இலக்காகிய 18 பேர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது குளவிக் கூடு கலைந்து குளவிகள் கொட்டியதில் 18 பேர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. - [இந்தியாவிடமிருந்து 55 மில்லியன் டொலரை கடனாக பெறும் ஒப்பந்தம் கைச்சாத்து](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-55-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b2/): யூரியா இறக்குமதி செய்வதற்காக இந்திய எக்ஸிம் வங்கியிடமிருந்து அமெரிக்க டொலரை கடனாக பெறுவதற்கான ஒப்பந்தம் இன்று வெள்ளிக்கிழமை கைச்சாதிடப்பட்டது. சிறுபோக பருவத்தில் யூரியா உரத்துக்கான உடனடி தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு, 65,000 மெட்ரிக் டன் யூரியா உரத்தை இறக்குமதி செய்வதற்கு இந்திய அரசாங்கத்திடம் இந்த கடன் வசதி கோரப்பட்டுள்ளது. இந்த கோரிக்கைக்கு அமைவாக யூரியா உரம் கொள்வனவு செய்வதற்கு 55 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனுதவியாக வழங்க இந்திய அரசு இணக்கம் தெரிவித்ததை தொடர்ந்து, உடன்படிக்கையில் கைச்சாத்திடும் நிகழ்வு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் எச்.இ.கோபால் பாக்லே தலைமையில் இடம்பெற்றது.   - [ஜூன் 13 ஆம் திகதி விசேட அரச விடுமுறை](https://minnal24.com/%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%af%8d-13-%e0%ae%86%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9a%e0%af%87%e0%ae%9f-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a-%e0%ae%b5/): ஜூன் 13 ஆம் திகதி திங்கட்கிழமை விசேட அரசாங்க விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தி சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. - [உயிரை பாதுகாக்க ஓடிய போது துரத்தி துரத்தி வெட்டி கொலை செய்த பயங்கரம் (Update)](https://minnal24.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%93%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4/): மன்னார் நொச்சிக்குளம் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் உயிரிழந்த இருவரும் மன்னார் உயிலங்குளம் பகுதியை சேர்ந்த சகோதரர்கள் என தெரிய வந்துள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில், கடந்த வாரம் மன்னார் உயிலங்குளம் பகுதியில் மாட்டுவண்டிச் சவாரி போட்டி இடம் பெற்றுள்ளது. இதன் போது தர்க்க நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டவர்களின் உறவினர் ஒருவர் நொச்சிக்குளத்தில் வசித்து வருகிறார். அவருடனும் மாட்டு வண்டி சவாரியின் போது நொச்சி குளத்தைச் சேர்ந்த சிலர் தர்க்கத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று வெள்ளிக்கிழமை காலை குறித்த நபர் நொச்சிக்குளத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து மாடு கட்டச் சென்றுள்ளார். இதன் போது மாட்டு வண்டி சவாரியின் போது தர்க்கத்தில் ஈடுபட்டவர்கள் குறித்த நபர் மீது வாள் வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் போது காயமடைந்த குறித்த நபர் காயமடைந்து பிரதான வீதிக்கு ஓடி […] - [பளை பொலிஸாருக்கும் மக்களுக்குமிடையே கலந்துரையாடல்](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%b3%e0%af%88-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b8%e0%ae%be%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3/): -கிளிநொச்சி நிருபர்- பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச 18 கிராம அலுவலகர் பிரிவிலுள்ள கிராம அலுவலர்களுக்கும் பளை பொலிஸ் பதில் பொறுப்பதிகாரிக்கும் விஷேட கலந்துரையாடல் கடந்த செவ்வாய்க்கிழமை பளை பொலிஸ் நிலைய வளாகத்தில் இடம்பெற்றிருந்தது. பளை பிரதேசத்தில் இடம்பெறுகின்ற‌ சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பாகவே குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது. இதன்போது சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் கிராம அலுவலர்களால் பல கேள்விகள் முன்வைக்கப்பட்டது. இதில் பளை பிரதேசத்தில் பல வருடங்களாகவே அதிகம் இடம்பெற்று வரும் மணல் கொள்ளையால் எமது பிரதேசம் பாரிய ஆபத்தை நோக்கி செல்வதாகவும், இது தொடர்பாக பொலிஸார் கூடிய கவனம் செலுத்துமாறும் கேட்டுகொண்டிருந்தனர். மற்றும் சட்டவிரோத சம்பவங்கள் இடம்பெறும் பட்சத்தில் பொலிஸாருக்கு தகவல் வழங்கினால் சம்பவ இடத்திற்கு பொலிஸார் வருவதற்கு தாமதமாவதாகவும் இதனால் பல பாரிய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்திருந்தனர். மற்றும் கிளாலி, கோவில் வயல், முகமாலை போன்ற இடங்களில் அதிகளவிலான மண்கொள்ளை […] - [சுதந்திரபுரம்-உடையார்கட்டு இனப்படுகொலையின் 24 வது ஆண்டு நினைவேந்தல்](https://minnal24.com/%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f/): -கிளிநொச்சி நிருபர்- சுதந்திரபுரம் உடையார்கட்டு, இனப்படுகொலையின் 24வது ஆண்டு நினைவு அஞ்சலி இன்று வெள்ளிக்கிழமை சுதந்திரபுர சந்தியில் இடம்பெற்றது. நிகழ்வின் பொது சுடர் சுதந்திரபுரத்தில் நிகழ்ந்த வான்படை தாக்குதலில் பிள்ளைகளை பறிகொடுத்த தந்தையினால் ஏற்றப்பட்டது. இலங்கையில் பாதுகாப்பு அமைச்சின் வேண்டுகோளுக்கிணங்க, உக்ரைன் நாட்டு விமான ஓட்டுனரால் வான் தாக்குதல் 1996.06.10 ஆந் திகதி நடாத்தப்பட்டது. இதில் பொதுமக்கள் பலர் கொடூரமாக உயிரிழந்தனர். சிலர் அங்கவீனமாகியும் உள்ளனர். குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூறும் முகமாக இன்று அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றிருந்தது. நிகழ்வில் பொதுமக்களும்‌, சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டிருந்தனர். - [நாடாளுமன்ற உறுப்பினர் ஆகின்றார் இலங்கையில் முன்னணி வர்த்தகர் தம்மிக்க பெரேரா?](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%89%e0%ae%b1%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%86%e0%ae%95/): இலங்கையில் முன்னணி வர்த்தகரான தம்மிக்க பெரேராவின் பெயர் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்காக, தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசமினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நாட்டில் வர்த்தக வலையமைப்பு ஒன்றின் தலைவராக செயற்படும் தம்மிக்க பெரேரா  அப்பதவியில் இருந்து விலக உள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று வியாழக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார். இதனையடுத்து, ஏற்பட்ட வெற்றிடத்துக்காக தம்மிக்க பெரேரா தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றதன் பின்னர், அவருக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இதுவரை அது தொடர்பான இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. - ['இது சிரிக்கும் விடயமல்ல' - பசிலை கடுமையாக சாடிய சனத் ஜயசூரிய](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%af%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2/): இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் சனத் ஜயசூரிய, நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவின் விசேட செய்தியாளர் சந்திப்பு தொடர்பில் அவரை கடுமையாக சாடியுள்ளார். நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பசில் ராஜபக்ச, தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக அறிவித்தார் அரசியலமைப்பின் 21வது திருத்தம், தற்போதைய பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட செய்தியாளர்கள் எழுப்பிய பல கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். மேலும், குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் பல விடயங்கள் நகைச்சுவையாக பேசியிருந்தார். இந்நிகழ்வு, குறித்து கருத்து தெரிவித்த சனத் ஜயசூரிய, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரின் ஊடகவியலாளர் மாநாட்டில் தாம் அதிருப்தியடைந்துள்ளதாக தெரிவித்தார். ‘முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பால் நான் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளேன். இது சிரிக்கும் விடயம் அல்ல, நமது நாட்டின் எதிர்காலம் பாழாகிவிட்டது, நீங்கள் பொறுப்பேற்கவில்லை, இந்த அரசியல் நாடகங்களை நிறுத்துங்கள்”, என சனத் ஜயசூரிய […] - [மட்டு.கல்லடியில் டெங்கு நுளம்பு ஒழிப்பு நடவடிக்கை](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9f%e0%af%86%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81/): மட்டக்களப்பு தெய்வநெறி கழகத்தின் அனுசரணையில் கல்லடி பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பிரிவிலுள்ள திருச்செந்தூர் கிராம உத்தியோகத்தர் பிரிவில், டெங்கு நுளம்பு பெருகக்கூடிய இடங்களாக அடையாளங் காணப்பட்ட கிணறுகளுக்கு நுளம்பு குடம்பிகளை உண்ணக்கூடிய மீன் குஞ்சுகள் இடும் நிகழ்வானது இன்று வெள்ளிக்கிழமை திருச்செந்தூர் முருகன் ஆலயத்திற்கு முன்பாக இடம் பெற்றது. இந் நிகழ்வில், தெய்வநெறி கழகத்தின் தலைவர் ரவீந்திரன், பொதுச் சுகாதார பரிசோதர் S.அமிதாப், ஏனைய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகர்கள் மற்றும் டெங்கு களத்தடுப்பு பணியாளர்களும் கலந்து கொண்டிருந்தனர். - [சாணக்கியனுக்கு எதிராக விசாரணை கோருகிறார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க](https://minnal24.com/%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%bf/): தமிழ்  தேசிய  கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனிற்கு எதிராக விசாரணை நடத்தப்பட வேண்டுமென, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று வெள்ளிக்கிழமை, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவின் படுகொலை தொடர்பான அனுதாப வாக்கெடுப்பின் போது, நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். மே 09 அன்று கொழும்பில் ஏற்பட்ட அமைதியின்மை குறித்து பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் உரையை மேற்கோள் காட்டிய பிரதமர், கட்டுக்கடங்காத கும்பல்களால் பாராளுமன்ற உறுப்பினர்களின் சொத்துக்கள் மீதான தாக்குதல்களுக்கு சாணக்கியன் ஒப்புதல் அளித்துள்ளார் என தெரிவித்தார். “20வது திருத்தச் சட்டம் மற்றும் நாட்டுக்கு எதிரான ஏனைய கொள்கைகளுக்கு ஆதரவாக பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தமையினால் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டதாக சாணக்கியன் கூறினார். மக்களுக்குத் துரோகம் இழைத்ததற்காகத் தங்கள் வீடுகள் தாக்கப்பட்டன என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்”, என சாணக்கியனின் அன்றைய உரையின் சில பகுதிகளை பிரதமர் இன்று சுட்டிக் காட்டினார். […] - [கிளிநொச்சி இளைஞன் செய்த நேர்மையான செயல்](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8a%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%87%e0%ae%b3%e0%af%88%e0%ae%9e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4/): -கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி திருவையாறு பகுதியில் 4 இலட்சம் ரூபா பெறுமதியான கையடக்க தொலைபேசியினை, புலம்பெயர் நாடு ஒன்றிலிருந்து வருகை தந்தவர் தவறவிட்டுள்ள நிலையில், அதனை கண்டெடுத்த கிளிநொச்சி புதுமுறிப்பு இளைஞன் தொலைபேசி உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளார். குறித்த இளைஞனின் செயலை பலரும் பாராட்டியுள்ளனர். புலம் பெயர் நாடு ஒன்றிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஒருவர், கிளிநொச்சியில் உள்ள கிராம பாடசாலை ஒன்றுக்கும், முள்ளம் தண்டு வடம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவருக்கும் உதவி செய்யும் பொருட்டு கிளிநொச்சிக்கு விஜயம் செய்து, பாடசாலையினையும், முள்ளம் தண்டு வடம் பாதிக்கப்பட்டவரை நேரடியாக பார்வையிட்டு திரும்பிக்கொண்டிருந்த போது, அவரது 4 இலட்சம் ரூபா பெறுமதியான கையடக்க தொலைபேசியினை வீதியில் நேற்று முன்தினம் புதன்கிழமை தவறவிட்டுள்ளார். இந்த நிலையில், குறித்த தொலைபேசியினை கண்டெடுத்த கிளிநொச்சி புதுமுறிப்பு கிராமத்தைச் சேர்ந்த செல்லத்துரை தவக்குமார் என்ற இளைஞன், அதனை உரிமையாளரிடம் கையளித்துள்ளார். இச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. இவ்விளைஞனின் இச் […] - [அத்தியாவசிய பொருட்களையும் எரிபொருளையும் பதுக்கி வைத்துள்ளவர்களே சமுர்த்தி பயனாளிகளாக உள்ளனர்](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88%e0%ae%af%e0%af%81/): -யாழ் நிருபர்- யாழ். மாவட்டத்தில் சமுர்த்திப் பயனாளிகள் பட்டியலை உடனடியாக மீளாய்விற்கு உட்படுத்தி அதிக வறுமைக்கோட்டிற்குள், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ள குடும்பங்களை சமுர்த்திப் பயனாளிகளாக உள்ளீர்க்குமாறு யாழ்.அரச அதிபரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வலி.மேற்கு பிரதேச சபை உறுப்பினர் ந.பொன்ராசா இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். இது தொடர்பான கோரிக்கை கடிதத்தை இன்று வெள்ளிக்கிழமை காலை யாழ்.அரச அதிபருக்கு மின்னஞ்சல் மூலம் அவர் அனுப்பி வைத்துள்ளார். தமது வாகனங்களுக்கான எரிபொருட்களையும், அத்தியாவசியப் பொருட்களையும் வீடுகளில் பதுக்கிவைத்துள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்கள் சமுர்த்திப் பயனாளிகளாக உள்ள நிலையில், ஒரு றாத்தல் பாண் வாங்க முடியாத ஆயிரக்கணக்கான குடும்பங்கள் சமுர்த்திப் பயனாளிகாக உள்வாங்கப்படாமல் உள்ளனர் என்ற வேறுபாட்டையும் அவர் விவரித்துள்ளார். யாழ். மாவட்டத்தில் சமுர்த்தி பெறும் குடும்பங்களில் 70 வீதமானவர்கள் உயர் வருமானம் பெறும் தகுதியற்ற குடும்பங்கள் என, மாவட்ட சமுர்த்தி ஆணையாளர் பொது வெளியில் குறிப்பிட்டுள்ள கருத்தையும் அவர் தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். யாழ். அரச அதிபருக்கு […] - [மட்டக்களப்பில் அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அவர்களின் 34வது ஆண்டு நினைவேந்தல்](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d/): -வாழைச்சேனை நிருபர்- மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அவர்களின் 34வது ஆண்டு நினைவு இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. 1988ஆம் ஆண்டு ஜுன் மாதம் 06ஆம் திகதி இந்திய இராணுவத்துடன் இணைந்து செயற்பட்ட ஆயுதக்குழு ஒன்றினால் மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் வைத்து அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ சுட்டுக் கொல்லப்பட்டார். அவருடைய சமாதியானது புனித மரியாள் பேராலயத்தில் அமைக்கப்பட்டுள்ளதுடன், அதில் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு, மட்டக்களப்பு மாவட்ட பல்சமயங்களின் ஒன்றியத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மட்டக்களப்பு மாவட்ட பல்சமய ஒன்றியத்தின் தலைவர் அருட்தந்தை ஜெகதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், அருட்தந்தை எ.தேவதாசன் அடிகளார், எகட் ஹரித்தாசின் இயக்குனர் அருட்தந்தை ஏ.ஜேசுதாசன், அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோவின் சகோதரர்கள், உறவினர்கள், பல்சமய ஒன்றிய பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டுள்ளனர். இதன்போது சமாதியில் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், அன்னாரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு, […] - [கட்டுப்பாட்டு விலையினை மீறி அரிசி விற்பனை செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88-%e0%ae%ae/): -யாழ் நிருபர்- யாழ். மாவட்டத்தில், அரசினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையினை மீறி அரிசி விற்பனை செய்வோருக்கு எதிராக விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார். இன்று வெள்ளிக்கிழமை யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையில் பொருட்களுக்கான விலை அதிகரித்துள்ள நிலை காணப்படுகின்றது. பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை தவிர்க்கும் வகையில் வியாபாரிகள் அத்தியாவசிய பொருட்களை மிகவும் நியாயமான விலையில் பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். அதே நேரத்தில் தற்போது அரசாங்கம் அரிசிக்குரிய கட்டுப்பாட்டு விலையினை நிர்ணயித்துள்ளது. அந்த நிர்ணயவிலைக்கு உட்பட்ட வகையில் பொருட்களினை விற்கவேண்டும். சில்லறை விற்பனையாளர்களும் இந்த விடயத்தில் அதிக கவனம் எடுக்க வேண்டும், அரிசியை அதிக விலைக்கு விற்று பாவனையாளர்களை அதிக கஷ்டத்துக்கு உள்ளாக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கின்றோம். அதே நேரத்தில் அரசாங்கம் நிர்ணயித்த விலையானது […] - [வீடு உடைத்து பணம், நகை திருட்டு](https://minnal24.com/%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%81-%e0%ae%89%e0%ae%9f%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%95%e0%af%88-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0/): -யாழ் நிருபர்- மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலி வடக்கில் 8 பவுண் நகை மற்றும் 2 இலட்சம் ரூபா பணம் என்பன திருடப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த வீட்டில் இருந்தவர்கள் அயலில் புதிதாக வீடு கட்டி அங்கு குடியேறியுள்ளனர். இந்நிலையில் நேற்று வியாழக்கிழமை இரவு அங்கு வந்த திருடர்கள் வீட்டின் கதவினை உடைத்து மேற்குறிப்பிட்டவற்றை திருடிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். - [ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு தடை](https://minnal24.com/%e0%ae%b0%e0%ae%b7%e0%af%8d%e0%ae%af-%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d/): ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு எதிராக உக்ரைன் தடை விதித்துள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளதன. புட்டினுக்கு எதிராக தனிப்பட்ட தடைகளை விதிப்பதற்கான ஆணையில், உக்ரைன் ஜனாதிபதி வொளொடிமிர் ஸெலென்ஸ்கி கைச்சாத்திட்டுள்ளார். உக்ரைனின் தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு சபையின் முடிவை இயற்றும் இதற்கான ஆணையில் அவர் கையொப்பமிட்டுள்ளது. சொத்துக்களை முடக்குதல் மற்றும் ஏற்றுமதி, இறக்குமதி நடவடிக்கைகளுக்குத் தடைவிதித்தல் என்பன இந்த ஆணையில் உள்ளடங்குகின்றது. மேலும், இந்தத் தடையானது, க்ரெம்ளின் மாளிகை பேச்சாளர், ரஷ்ய பிரதமர், வெளிவிவகார மற்றும் பாதுகாப்பு அமைச்சர்கள், உப பிரதமர், அமைச்சர்கள் மற்றும் ஏனைய அதிகாரிகளுக்கும் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. - [மண்ணெண்ணெய் விநியோகத்தில் வினைத்திறனற்ற செயற்பாடு : விவசாயிகள் குற்றச்சாட்டு](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%86%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%af%e0%af%8b%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/): -கிளிநொச்சி நிருபர்- யாழ் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் விநியோகத்தில் பிரதேச மட்ட கமநல அதிகாரிகளின் செயற்பாடுகள் தொடர்பில் பாதிக்கப்பட்ட கோப்பாய் பகுதி விவசாயிகள் குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கடந்த செவ்வாய்க்கிழமை விவசாயிகளுக்கான மண்ணெண்ணெய் விநியோகம் கமநல சேவைத் திணைக்களம் ஊடாக விநியோக அட்டை மூலம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது . மண்ணெண்ணெய் விநியோகம் ஒரு பரப்புக்கு ஒரு தடவை இறைப்பதற்கு அரை லீற்றர் என்ற வகையில் கணிப்பிடு செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. கோப்பாய் பிரதேசத்தில் உள்ள உரும்பிராய் கமநல சேவைத் திணைக்களத்தில் விவசாயிகளின் உற்பத்தி செய்யப்படும் நிலப்பரப்பின் பரப்புக்களை கவனத்தில் கொள்ளாது, தமது பிரதேசத்தில் பதிவு செய்யப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் 5 லீற்றர் என்ற வகையில் பங்கீடு செய்யப்பட்டது. இதன் காரணமாக குழப்பமடைந்த விவசாயிகள் வேறு இடங்களில் பரப்பின் அடிப்படையில் மண்ணெண்ணெய் வழங்கப்படுகிற போதும் தாம் அதிக பரப்புகளில் வெங்காயச் செய்கை மற்றும் […] - [பாரவூர்தி-மோட்டார் சைக்கிள் மோதி விபத்து : இளைஞர் ஒருவர் உயிரிழப்பு](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%b5%e0%af%82%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/): -நுவரெலியா நிருபர்- இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புரூக்சைட் சந்தி – ஹைபொரஸ்ட் பிரதான வீதியின் சில்வர்கண்டி தோட்ட பகுதியில் நேற்று வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் ஒருவருக்குக் காலில் முறிவு ஏற்பட்டு நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார், என இராகலை பொலிஸார் தெரிவித்தனர். ஹைபொரஸ்ட் மாகுடுகலை தோட்டத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் மோட்டார் சைக்கிள் ஒன்றில் இராகலையிலிருந்து புரூக்சைட் சந்தி ஊடாக மாகுடுகலை தோட்டத்தை நோக்கிப் பயணித்துள்ளனர். இந்தநிலையில், இவர்கள் சில்வர்கண்டி தோட்டத்துக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் பயணித்த வேளையில், ஹைபொரஸ்ட் பகுதியிலிருந்து இராகலையை நோக்கிப் பயணித்த பார ஊர்தி ஒன்றில் மோட்டார் சைக்கிள் மோதுண்டுள்ளது. இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் பார ஊர்தியில் மோதுண்ட நிலையில் வீசி எறியப்பட்டு பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இவ்வாறு காயமடைந்த இளைஞர்களை சில்வர்கண்டி தோட்ட மக்கள் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்று […] - [நாட்டில் கையிருப்பில் உள்ள அரிசி குறித்து விவசாய அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89-3/): இந்த வருடம் டிசம்பர் மாதம் வரை நாட்டில் போதியளவு அரிசி கையிருப்பில் இருப்பதாகவும், பற்றாக்குறையாக உள்ள அரிசியின் அளவு ஏற்கனவே வர்த்தக அமைச்சினால் கோரப்பட்டுள்ளதாகவும், விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே, விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், நாட்டில் அரிசியின் வருடாந்த நுகர்வு 2.4 மில்லியன் மெட்ரிக் டன் மற்றும் வருடாந்த அரிசி உற்பத்தி 1.6 மில்லியன் மெட்ரிக் டன் ஆகும். இதன்படி, அறுவடையானது 8 மாதங்களுக்கு மாத்திரமே போதுமானதாக இருக்கும். மேலும் 04 மாத காலத்திற்கு அரிசி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் காணப்பட்டது. எவ்வாறாயினும், மக்கள் தற்போதைய போகத்தில் திட்டமிடப்பட்ட நிலப்பரப்பை விட அதிகளவில் விவசாயிகள் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ளனர். 2020 ஆம் ஆண்டு முதல் பருவத்தில் 403,362 ஹெக்டேயர் பயிர்ச்செய்கை செய்யப்பட்டுள்ளதாகவும், 2021 ஆம் ஆண்டு […] - [ரயிலுடன் கார் மோதி விபத்து : இருவர் உயிரிழப்பு](https://minnal24.com/%e0%ae%b0%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8b%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d-2/): யாழ்ப்பாணம் – அரியாலையில் சற்று நேரத்திற்கு முன் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ரயிலுடன் கார் மோதியதால் குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து காரணமாக சில மணி நேரம் புகையிரத தடைப்பட்ட நிலையில், அப்பகுதிக்கு விரைந்த பொலிஸார் சடலங்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், விபத்தில் உயிரிழந்தவர்கள் தென்னிலங்கை சேர்ந்தவர்கள் என தெரியவருகின்றது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். - [மூன்றாவது நாளாகவும் கல்முனையில் தொடரும் கழிவகற்றும் நடவடிக்கை](https://minnal24.com/%e0%ae%ae%e0%af%82%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%ae%be%e0%ae%95%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%ae/): -கல்முனை நிருபர்- குப்பைகள், விலங்கு கழிவுகள் கொட்டப்பட்ட மற்றும் சல்பீனியாக்கள் நிறைந்த கல்முனை சாய்ந்தமருது வண்ட் வீதியில் அமைந்துள்ள நீரோடையை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் நீர்ப்பாசன திணைக்களம் மற்றும் கல்முனை மாநகர சபை என்பன இணைந்து முன்னெடுத்து வருகின்றனர். இந்த பணியில் கல்முனை பிரதேச நீர்ப்பாசன காரியாலய பொறியியலாளர் என்.புவிரஞ்சினி, கல்முனை மாநகர பிரதம சுகாதார வைத்தியதிகாரி வைத்தியர் எம்.ஜே.கே.எம்.அர்சத் காரியப்பர், நீர்ப்பாசன திணைக்கள பொறியியல் உதவியாளர் எம்.ஐ.எம்.அமீன், நீர்ப்பாசன திணைக்கள தொழிநுட்ப உதவியாளர் ஈ.எம்.ஜெயபோசன், மாநகர சுகாதாரப் பிரிவின் நிலைய பொறுப்பதிகாரி யூ.எம்.இசாக், சுகாதார மேற்பார்வையாளர் அதுஹம், சுகாதார ஊழியர்கள், வாகன சாரதிகள் எனப்பலரும் கலந்து கொண்டு நீரோடையை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். சட்டவிரோத மனிதாபிமானமற்ற கழிவகற்றல் நடவடிக்கை மூலம் சுற்றாடலுக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் நிறைய விலங்குக்கழிவுகள், குப்பைகள் இந்த நீரோடையில் கொட்டப்பட்டிருந்த நிலையில் இந்த நீரோடையிலிருந்து நிறைய விலங்கு கழிவுகளும், குப்பைகளும் இன்று […] - [நாட்டில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%b5/): நாட்டில் எந்தவொரு பகுதிகளிலும் பிரவேசிக்கும் போது முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நாளை முதல் அமுலாகும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் விசேட சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. இது அனைத்து மருத்துவ கல்லூரிகள் மற்றும் சுகாதார அமைச்சின் கூட்டு முடிவாகும், என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். எனினும், முகக்கவசம் அணிய விரும்புபவர்கள் எந்த தடையும் இன்றி அதனை அணிந்து கொள்ள முடியும் எனவும், சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்கள் முகக்கவசம் அணிவது பொருத்தமானது எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.   - [மண்ணெண்ணெய் வழங்குமாறு கோரி ஆர்ப்பாட்டம்](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%86%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%81-%e0%ae%95/): -நுவரெலியா நிருபர்- மண்ணெண்ணெய் வழங்குமாறு கோரி மஸ்கெலியா எரிபொருள் நிலையத்திற்கு முன்பாக மஸ்கெலியா பிரதேச மக்கள் பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு கடந்த மூன்று கிழமையாக மண்ணெண்ணெய் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இதனால் இன்று வியாழக்கிழமைமண்ணெண்ணெய் கிடைக்கும் என மக்கள் எதிர்பார்ப்புடன் வருகை தந்த நிலையில், இன்றைய தினமும் மண்ணெண்ணெய் வரவில்லை என எரிபொருள் நிலைய ஊழியர்களால் தெரிவிக்கப்பட்டதையடுத்து, ஆவேசமடைந்த மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மண்ணெண்ணெய் விநியோகம் செய்வதற்கு முறையான முறைமை ஏற்படுத்தக் கோரி இன்று காலை முதல் மண்ணெண்ணெய்க்காக வரிசையில் நின்ற சுமார் 500ற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் காரணமாக போக்குவரத்தும் ஸ்தம்பிதமாகியிருந்தது. குறிப்பாக மஸ்கெலியா – அட்டன், மஸ்கெலியா – நல்லதண்ணி போன்ற பிரதான வீதியினூடான போக்குவரத்து பல மணி நேரம் ஸ்தம்பிதமாகியிருந்தது. இதனால் பயணிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகியிருந்தனர். இதனையடுத்து, நாளை அல்லது எதிர்வரும் நாட்களில் […] - [தலைமன்னாரில் இருந்து இந்தியாவிற்கு கடத்த முற்பட்ட ஆடுகள் மீட்பு](https://minnal24.com/%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%87%e0%ae%a8-2/): -மன்னார் நிருபர்- தலைமன்னார் ஊர்மனை கடற்கரை பற்றைக்காட்டு பகுதியில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் உயர்ந்த ரக 5 ஆடுகள் தலைமன்னார் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு தலைமன்னார் கிராமம் கடற்கரை பகுதியில் உள்ள பற்றைக் காட்டில் உயர்ந்த ரக ஆடுகள் கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடப்பதை அவதானித்த தலைமன்னார் கடற்படையினர் குறித்த ஆடுகளை மீட்டு தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். குறித்த உயர் ரக 5 ஆடுகளில் நான்கு ஆண் ஆடுகளும், ஒரு பெண் ஆடும் உள்ளடங்குகின்றன. குறித்த உயர் ரக ஆடுகள் இந்தியாவுக்கு கடத்தி செல்லப்படும் நோக்கில் கால்கள் கட்டப்பட்டு கிடந்ததன் அடிப்படையில் சந்தேகத்தின் பேரில் தலைமன்னார் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர். இதன் போது தலைமன்னார் கிராமத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது ஆடுகளை காணவில்லை என்றும், குறித்த ஆடுகள் தலை மன்னார் பொலிஸ் நிலையத்தில் இருப்பதை அறிந்து உரிமை கோரியுள்ளார். இதனையடுத்து நேற்று புதன்கிழமை மன்னார் நீதி மன்றில் […] - [உலக சந்தையில் மசகு எண்ணையின் விலை சடுதியாக உயர்வு](https://minnal24.com/%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%9a%e0%ae%95%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%88/): உலக சந்தையில் மசகு எண்ணையின் விலை இன்று வியாழக்கிழமை மீண்டும் சடுதியாக உயர்ந்துள்ளது. அதன்படி, பிரண்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 123.7 டொலராகவும், டெக்சாஸ் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 122. 17 டொலராகவும் உள்ளது. இது கடந்த 13 வாரங்களில் பதிவான உச்சபட்ட விலை அதிகரிப்பாகும். - [ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை இன்று இரவு நீதிமன்றில் சரணடையுமாறு உத்தரவு](https://minnal24.com/%e0%ae%9c%e0%af%8b%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%8b%e0%ae%b5%e0%af%88-%e0%ae%87/): ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை இன்று இரவு 08 மணிக்கு முன்னதாக நீதிமன்றத்தில் சரணடையுமாறு உத்தரவிட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தம்மைக் கைது செய்வதைத் தடுக்கும் ரிட் மனுவை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், அவரை இன்று வியாழக்கிழமை இரவு 08 மணிக்கு முன்னதாக நீதிமன்றத்தில் சரணடையுமாறு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அதுவரை ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட பிடியாணை செல்லுபடியாகாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. - [ஆங்கிலத்தில் பதிலளிக்க பயமாக இருக்கிறது என சிங்களத்தில் பதிலளித்த பசில்](https://minnal24.com/%e0%ae%86%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%aa/): நான் தற்போது சாதாரண பொது மகன், எனினும் நான் பதவி விலகிய போதிலும் எனது அரசியல் நடவடிக்கைகள் தொடரும், என பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பசில் ராஜபக்ஷ தனது இராஜினாமா கடிதத்தை பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்கவிடம் இன்று வியாழக்கிழமை கைளித்தார். இதனை தொடர்ந்து இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும், நான் தற்போது சாதாரண பொது மகன் நான் பதவி விலகிய போதிலும் எனது அரசியல் நடவடிக்கைகள் தொடரும். நான் இனிமேல் அரச நிர்வாகத்தில் ஈடுபடமாட்டேன், அரசாங்க பதவிகளில் பதவி வகிக்கமாட்டேன் என தெரிவித்தார். இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் சர்வதேச நாணய நிதியத்தின் உதவி ( IMF) தொடர்பில் ஆங்கிலத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதுஇ நான் மீண்டும் கபுடாஸ் என்று பிழையாக ஏதாவது சொல்லி விடுவேன் என பயமாக உள்ளது என சிரித்துகொண்டே கூறிவிட்டு, சிங்களத்திலேயே அதற்கு பதில் வழங்கியிருந்தார். - [தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் பட்டியலில் இருந்து கஞ்சா நீக்கம்](https://minnal24.com/%e0%ae%a4%e0%ae%9f%e0%af%88%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%af%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8a/): தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் பட்டியலில் இருந்து கஞ்சாவை, தாய்லாந்து நீக்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அதன்படி தாய்லாந்தில் கஞ்சா செடிகளை வீடுகளிலும் வளர்த்து விற்பனை செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் பாவணை மற்றும் வர்த்தகத்திற்கு கடுமையான சட்டங்கள் உள்ள தென்கிழக்கு ஆசியாவின் முதலாவது நாடாக தாய்லாந்து விளங்குகின்றது. எனினும், நாட்டின் வருமானத்தை அதிகரித்தல், சுற்றுலாத்துறை மற்றும் விவசாயம் என்பனவற்றை மேம்படுத்துவதற்காக இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. ஆயினும், கேளிக்கை மற்றும் பொழுது போக்கு நிகழ்வுகளில் கஞ்சா பாவனைக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. - [லிட்ரோ நிறுவனத்தின் அறிவித்தல் : நாளை எரிவாயு விநியோகம்](https://minnal24.com/%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b0%e0%af%8b-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5/): நேற்று புதன்கிழமை நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 3,900 டன் எரிவாயுவை இறக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளதால், நாளை எரிவாயு வழங்குவதற்கான சாத்தியம் உள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. நாளை முதல் 50,000 எரிவாயு கொள்கலன்களை எதிர்வரும் 6 நாட்களுக்கு விநியோகிக்க முடியும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், நாடளாவிய ரீதியில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பது குறிப்பிடத்தக்கது. - [பசில் பசில் பசில் என “ரிங்க் டோன்” மாற்றப்பட்டுள்ளது- பசில் ராஜபக்ஷ](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%99/): பசில் பசில் பசில் என்று அழைப்பது போல் இப்போது எனது கையடக்க தொலைபேசி “ரிங்க் டோன்” உள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷ இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது தெரிவித்துள்ளார். - [இ.மி.ச பொறியியலாளர் சங்கத்திற்கு நீதிமன்றம் தடை உத்தரவு](https://minnal24.com/%e0%ae%87-%e0%ae%ae%e0%ae%bf-%e0%ae%9a-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4/): தொழிற்சங்க நடவடிக்கைகளின் மூலம் பொதுமக்களுக்கான தொடர்ச்சியான மின்சார விநியோகத்திற்கு இடையூறு விளைவிக்கும் செயல், இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்க உறுப்பினர்களால் ஏற்படுவதை தடுக்கும் வகையில், கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் அணில் ரஞ்சித் இந்துவர, செயலாளர் தம்மிக்க விமலரத்ன உள்ளிட்ட அச்சங்கத்தின் 14 பேர் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதனை தடுக்கும் வகையில் இத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு முதல் மின்சார விநியோகம் அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டது. எனினும் இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம் பல்வேறு விடயங்களை முன்வைத்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தது. அதனைத்தொடர்ந்து ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையைடுத்துஇ குறித்த பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.   - [நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார் பசில்](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%89%e0%ae%b1%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa-2/): நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தான் விலகியுள்ளதாக, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தனது பதவி விலகல் கடிதத்தை, நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளித்துள்ளதாக, அவர் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் தற்போது இடம் பெற்றுக்கொண்டிருக்கும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் ஊடாக தகுதிவாய்ந்த ஒருவரை நாடாளுமன்றுக்கு தெரிவு செய்வதற்கு வழிவகுக்கும் வகையில் தான் பதவி விலகுவதாகவும், அவசியம் ஏற்படின் தொடர்ந்தும் கட்சியின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு தான் தயாராக இருப்பதாகவும், அவர் மேலும் தெரிவித்துள்ளார். - [பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் உலர் உணவுப்பைகள் வழங்கி வைப்பு](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%95-2/): -கல்முனை நிருபர்- முஸ்லிம் உரிமைக்கான அமைப்பின் ஏற்பாட்டில் தேவையுடைய மற்றும் வாழ்வாதாரத்தை இழந்த பொதுமக்களுக்கு பாகிஸ்தான் தூதரக அனுசரணையுடன் உலர் உணவுப்பைகள் வழங்கும் நிகழ்வு நேற்று புதன்கிழமை கொழும்பு மாளிகாவத்தை பிரதீபா மண்டபத்தில் நடைபெற்றது. பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் உமர் பாரூக் புர்க்கி பிரதம அதிதியாக கலந்துகொண்ட இந்நிகழ்வில், கொழும்பு மாநகர சபை ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் சார்பிலான மாநகர சபை உறுப்பினர் கலீலுர் ரஹ்மான், கொழும்பு மாநகர சபை உறுப்பினர் முஸம்மில், முஸ்லிம் உரிமைக்கான அமைப்பின் சார்பாக செயலாளர் ரூமி அமித் மற்றும் பொருளாளர் ஜவ்பர் ஹாஜி ஆகியோர் உட்பட பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர். இதன்போது, அடையாளம் காணப்பட்ட மக்களுக்கு பொதுமக்களுக்கு பாகிஸ்தான் தூதரக அனுசரணையுடன் உலர் உணவுப்பைகள் வழங்கி வைக்கப்பட்டது. - [அழிந்துவரும் தமிழர்களின் பாரம்பரிய தொழில்](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9/): நாட்டில் நிதி நெருக்கடியால் ஏற்பட்டுள்ள பொருளாதார தட்டுப்பாடுகள் பொருட்களுக்கான விலை ஏற்றம் காரணமாக மன்னார் மாவட்டத்தில் தமிழர்களின் பாரம்பரிய தொழில்களில் ஒன்றாக காணப்படும் மட்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரங்கள் பாரியளவு பாதிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்தார்கள். மன்னார் மாவட்டத்தில் நானாட்டான், மடுக்கரை, செம்மண் தீவு, கருக்காய் குளம் போன்ற பகுதிகளில் வசிக்கும் மட்பாண்ட தொழிலாளர்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்கள். எரிபொருள் தட்டுப்பாடு, எரிபொருளுக்கான விலையேற்றம் காரணமாக சட்டி, பானை, அடுப்பு, சிட்டி விளக்குகள் போன்ற பொருட்களை கொள்வனவு செய்வதற்கு முன்பு போல் வியாபாரிகள் எவரும் அவர்களிடம் வந்து பெற்றுக் கொள்வது இல்லை என மட்பாண்ட தொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அதனால் தூர பிரதேசங்களுக்கு பொருட்களைக் கொண்டு சென்று கொடுத்தால் செலவு இரட்டிப்பாகிறது. உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் யாவும் தேங்கி கிடப்பதாகவும் தெரிவிக்கின்றார்கள். எனவே, இந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுபட்டு எரிபொருட்கள் உட்பட அனைத்து பொருட்களும் தடையில்லாமல் விலை குறைவாக கிடைத்தால் மட்டுமே எமது பாரம்பரிய […] - [நியமனக்கடிதங்கள் வழங்கி வைப்பு](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf/): -கல்முனை நிருபர்- ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் எண்ணத்தில் உருவான, பலநோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்களத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளரின் அறிவுறுத்தலுக்கமைய, காரைதீவு பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜனின் வழிகாட்டலின் கீழ் காரைதீவு பிரதேச பலநோக்கு அபிவிருத்தி உதவியாளர்களுக்கான நியமனக்கடிதங்கள் அண்மையில் காரைதீவு பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது. இதன் போது, பலநோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்களத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர். - [மின்சார விநியோகம் அத்தியாவசிய சேவை : ஜனாதிபதி வர்த்தமானி மூலம் அறிவிப்பு](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%af%e0%af%8b%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af/): மின்சார விநியோகத்தை அத்தியாவசிய சேவையாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று புதன்கிழமை நள்ளிரவு முதல் அறிவித்துள்ளார். இலங்கை மின்சார சபை பொறியிலாளர்கள் சங்கம் நாளை வியாழக்கிழமை அதிகாலை ஒரு மணி முதல் நாடு தழுவிய ரீதியில் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்திருந்த நிலையில் இந்து வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியின் உத்தரவிற்கு அமைவாக, ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத்தினவின் கையெழுத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் வைத்தியசாலைகள் , முதியோர் இல்லங்கள், மருந்தகங்கள் மற்றும் இதை ஒத்த நிறுவனங்களில் உள்ள நோயாளிகளின் பராமரிப்பு ,உணவு மற்றும் சிகிச்சை தொடர்பாக அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவையாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. - [மன்னார் அச்சங்குளத்தில் சுனாமி ஒத்திகை](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%85%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/): -மன்னார் நிருபர்- நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அச்சங்குளம் கிராமத்தில் நாளை வியாழக்கிழமை  காலை சுனாமி ஒத்திகை இடம் பெற உள்ளதால் அயல் கிராம மக்கள் அச்சமடைய தேவையில்லை என நானாட்டான் பிரதேச செயலாளர் மா.ஸ்ரீஸ்கந்த குமார் தெரிவித்தார். மன்னார் மாவட்டத்தில் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் அச்சங்குளம் கிராம சேவையாளர் பிரிவில் உள்ள அச்சங்குளம், அறுகுக்குன்று போன்ற கடற்கரையோர பிரதேசங்களில் எதிர் காலத்தில் சுனாமி சம்பந்தமான அனர்த்த நடவடிக்கைகளில் இருந்து மக்களை விழிப்பூட்டுவதற்கும் அது சம்பந்தமான அறிவைப் பெற்றுக் கொள்வதற்குமான ஒத்திகை நிகழ்வு நாளை காலை 10 மணி தொடக்கம் 12 மணி வரையான காலப்பகுதிக்குள் நடைபெற உள்ளது. சுனாமி நடைபெறும் போது எவ்வாறு தற்காத்துக் கொள்வது போன்ற ஒத்திகை நிகழ்வு மாத்திரம் இடம்பெறும். இது ஒரு உண்மையான சம்பவம் அல்ல. ஏனைய அயல் கிராமத்து மக்கள் இது குறித்த ஒத்திகை குறித்து பதற்றமடைய தேவையில்லை, என நானாட்டான் […] - [வீதியில் வரிசையாக அடுக்கி சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டுள்ள எரிவாயு சிலிண்டர்கள்](https://minnal24.com/%e0%ae%b5%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95-%e0%ae%85%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/): -நுவரெலியா நிருபர்- சமையல் எரிவாயு சிலிண்டர்களை பெற்றுக் கொள்வதற்காக நுவரெலியா பிரதான நகர மக்கள் கடந்த ஐந்து நாட்களாக வெற்று எரிவாயு சிலிண்டர்களை சமையல் எரிவாயு விற்பனை முகவர் நிலையங்களுக்கு முன்பாக நீண்ட வரிசையில் அடுக்கி வைத்து சென்றுள்ளனர். நடைபாதையில் வைக்கப்பட்டுள்ளமையால் பாதசாரிகள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். எரிவாயு விநியோகம் செய்யப்படும் என லிட்ரோ நிறுவனத்தால் அறிவித்தல் விடுத்துள்ள நிலையில், நுவரெலியா பிரதான நகரிலுள்ள ஹோட்டல் உரிமையாளர்கள், பொது மக்கள் என நடைபாதையில் நீண்ட வரிசையில் வைத்து ஒன்றுடன் ஒன்றை இணைத்து கயிறு மற்றும் இரும்பு சங்கிலிகளை பயன்படுத்தி கட்டி வைத்துள்ளனர். இதனால் பாடசாலை மாணவர்கள், முதியோர்கள் என பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சமையல் எரிவாயு தட்டுப்பாட்டினால் நுவரெலியா பிரதான நகருக்கு போதுமானளவு சமையல் எரிவாயு வராததால் இந்த நிலைமை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. - [கந்தளாயில் பாலர் பாடசாலைகளுக்கு குடிநீர் வழங்கும் நிகழ்வு](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b3%e0%ae%be%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%af%88/): -எம்.எஸ்.எம்.ஸாகிர்- அல்-ஹித்மத்துல் உம்மா பௌண்டேஷனினால் கந்தளாயில் அமைந்துள்ள மூன்று பாலர் பாடசாலைகளுக்கு குடிநீர் பெற்றுக் கொடுக்கப்பட்டு மாணவர்களின் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு  நடைபெற்றது. அல்-ஹித்மத்துல் உம்மா பௌண்டேசனின் தலைவரும் சமூகசேவையாளருமான கஸ்ஸாலி முகமட் பாத்திஹ் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன், விசேட அதிதியாக இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் திருகோணமலை மாவட்ட இணைப்பாளரான ஆசிரியர் ஏ.எல்.முகமட் நபீல் கலந்து கொண்டார். பாலர் பாடசாலைகளான பாத்திமா பாலர் பாடசாலை, அஸ்-ஸபா பாலர் பாடசாலை, ஆயிஷா பாலர் பாடசாலை ஆகியவற்றுக்கே இக்குடி நீர் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. - [மண்சரிவு அபாயம் காரணமாக நான்கு குடும்பங்களை சேர்ந்த 22 பேர் வெளியேற்றம்](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%aa%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95/): -நுவரெலியா நிருபர்- பொகவந்தலாவை – கெம்பியன் கீழ் பிரிவு தோட்டத்தில் 03ஆம் இலக்க லயன் குடியிருப்புக்கு அருகாமையில் மண்சரிவு அபாயம் காரணமாக, நான்கு குடும்பங்களை சேர்ந்த 22 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர். 11 வீடுகளைக் கொண்ட லயக் குடியிருப்பு ஒன்றே மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும், இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் தோட்ட உத்தியோகத்தர்களின் விடுதிகளில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுள் 11 சிறுவர்கள், 06ஆண்கள், 05 பெண்களும் உள்ளடங்குவதாகவும், அனர்த்தம் தொடர்பில் கிராம உத்தியோகத்தர் ஊடாக அம்பகமுவ பிரதேச செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக, கிராம உத்தியோகத்தர் தெரிவித்தார். இதேவேளை, குறித்த தோட்டத்தில் இதற்கு முன்பும் மண்சரிவு அபாயம் ஏற்பட்ட போது, மலையக அரசியல்வாதிகள் பார்வையிட்டு மாத்திரமே சென்றதாகவும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையென, பாதிக்கப்பட்ட மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர் . - [வடிவேல் சுரேஷ்-பிரசன்ன ரணதுங்க இடையே நாடாளுமன்ற அமர்வில் முறுகல் நிலை](https://minnal24.com/%e0%ae%b5%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b0%e0%af%87%e0%ae%b7%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9-%e0%ae%b0/): -பதுறை நிருபர்- பதுளையில் நிர்மாணிக்கப்படவிருந்த 16 கலாச்சார மண்டபம் தொடர்பில் இன்று புதன்கிழமை நாடாளுமன்ற அமர்வில் வடிவேல் சுரேஷ் கேள்வி எழுப்பிய சந்தர்ப்பத்தில் சபையில் முறுகல் நிலை ஏற்பட்டது. 2019 ஆம் ஆண்டு பதுளையில் நிர்மாணிக்கப்படவிருந்த 16 கலாச்சார மண்டபங்கள் அடிக்கல் நாட்டப்பட்டு இடைநடுவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நேற்று நாடாளுமன்ற அமர்வில் இவ்விடயம் தொடர்பில் பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்கவிடம் வடிவேல் சுரேஷ் கேள்வி ஒன்றை எழுப்பியிருந்தார். இக் கேள்விக்கு பதிலளித்த பிரசன்ன ரணதுங்க அமைச்சர் இவ் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் கூட உரிய இட ஒதுக்கீடு இல்லாமையினாலேயே இவ் வேலைத்திட்டம் இடைநடுவில் நிறுத்தப்பட்டது என தெரிவித்தார் இதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதத்தில் சபையில் வடிவேல் சுரேஷ் கீழ்க்கண்டவாறு கருத்து தெரிவித்தார். 2019 ஆம் ஆண்டு பிரதம மந்திரியாக இருந்த ரணில் விக்கிரமசிங்கவின் காலப்பகுதியில் பதுளையில் 16 கலாசார மண்டபங்கள் அமைப்பதற்கு 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்து அவ்வேளை திட்டத்திற்க்குறிய […] - [நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுகிறார் பசில் ராஜபக்ஷ](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%89%e0%ae%b1%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a4/): முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலக தீர்மானித்துள்ளதாக, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நிதியமைச்சராக பதவியேற்றிருந்த பசில் ராஜபக்,ஷ நாட்டில் ஏற்பட்ட பல்வேறு பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி காரணமாக நிதியமைச்சு பதவியிலிருந்து விலகியிருந்தார். இந்நிலையில், தற்போது அவர் தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் விலக தீர்மானித்துள்ளதாகவும், நாளை வியாழக்கிழமை செய்தியாளர் சந்திப்பொன்றில் இதனை அறிவிக்கவுள்ளார் என்றும் தெரிவிக்கப்படடுள்ளது. - [ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்ய பிடியாணை உத்தரவு](https://minnal24.com/%e0%ae%9c%e0%af%8b%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%8b%e0%ae%b5%e0%af%88-%e0%ae%95/): நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்வதற்கு பகிரங்க பிடியாணையை பிறப்பிக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. கடந்த மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற கலவரம் தொடர்பில் தம்மை கைது செய்வதை தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மேன்முறையீட்டு நீதிமன்றில் நீதிப்பேராணையை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. - [வெளிநாட்டு கையிருப்பு உயர்வு - இலங்கை மத்திய வங்கி](https://minnal24.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%89%e0%ae%af/): கடந்த ஏப்ரல் மாதம் 1,812 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த இலங்கையின் மொத்த வெளிநாட்டு கையிருப்பு, மே மாதத்தில் 1,920 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளதாக, இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.   - [கிழக்கில் தியாகி அறக்கொடை நிறுவனத்தின் மனிதாபிமான பணி](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f/): -வாழைச்சேனை நிருபர்- திருகோணமலை – மூதூர் பிரதேச செயலாளர் பிரிவின் ஜாயா நகர் -224 ஜீ கிராம சேவையாளர் பிரிவில் வசித்து வந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான கபீர் முஹம்மட் இப்றாஹீம் என்பவர் அண்மையில் மூதூரில் சமையல் எரிவாயுவை பெற்றுக் கொள்ளும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்ட நிலையில் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். மூன்று சிறு பிள்ளைகளின் தந்தையான இப்ராஹிமின் இழப்பு, அவரின்  குடும்ப நிலைமைகளைக் கருத்திற்கொண்டு, இனமத வேறுபாடுகளுக்கு அப்பால் பல்வேறு மனிதாபிமான உதவிகளையும் வழங்கி வரும் தியாகி அறக்கொடை நிறுவனம் இப்ராஹிமின் குடும்பத்திற்கும் உதவ முன்வந்தது. இதற்கமைவாக இன ஐக்கியத்திற்கும் சமூக நலனுக்குமான அமைப்பின் ஏற்பாட்டில் இன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கபீர் முஹம்மட் இப்றாஹீம் அவர்களின் குடும்ப மற்றும் பிள்ளைகளின் பராமரிப்பு செலவிற்காக ஐந்து லட்சம் ரூபாய் உதவித்தொகை அந் நிறுவனத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் எம்.எல்.எம்.என். நைறூஸ் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் […] - [ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகுவதாக பாட்டலி சம்பிக்க ரணவக்க அறிவிப்பு](https://minnal24.com/%e0%ae%90%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%95%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf-2/): ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகி,  சுயாதீனமாக செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். எந்தவொரு காரணத்திற்காகவும் தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொள்ளப் போவதில்லை, எனவும் அவர் தெரிவித்துள்ளார் - [உக்ரைனுக்கு மேலும் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் உதவி](https://minnal24.com/%e0%ae%89%e0%ae%95%e0%af%8d%e0%ae%b0%e0%af%88%e0%ae%a9%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%af%87%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-1-5-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/): உக்ரைனுக்கு மேலும் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் உதவியை வழங்கவுள்ளதாக உலக வங்கி அறிவித்துள்ளது. இதற்கமைய, உக்ரைனுக்கு உலக வங்கி இதுவரை 4 பில்லியனுக்கும் அதிகமாக உதவியுள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது. கடந்த பெப்ரவரி மாதம் ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்ததன் காரணமாக உக்ரைனில் மனிதாபிமான நெருக்கடியை உருவாக்கியதோடு, அந்த நாட்டு பொருளாதாரத்தையும் பாதித்துள்ளது. உட்கட்டமைப்புகள் சேதமாக்கப்பட்டுள்ளதோடு தானிய ஏற்றுமதிகள் தடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், போரை எதிர்கொள்ளும் உக்ரைன் மக்களுக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்கப்படும், என உலக வங்கியின் தலைவர் தெரிவித்துள்ளார். - [கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையில் விஞ்ஞான, தொழில்நுட்ப கண்காட்சி](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%88-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%ae%e0%af%87%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%be/): -கல்முனை நிருபர்- கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியில் கல்வி பயிலும் தரம் – 6 தொடக்கம் தரம் – 11 வரையிலான மாணவர்களினால் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப பிரயோக கண்காட்சி இன்று கல்லூரியின் முதல்வர் அருட்சகோதரர் எஸ்.சந்தியாகு  தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன் கலந்து கொண்டதுடன், மேலும் கௌரவ அதிதிகளாக பிரதிக்கல்விப் பணிப்பாளர் வீ.ஹிகானா அலீப், உதவிக்கல்விப் பணிப்பாளர் ( விஞ்ஞானம் ) எம்.எஸ் சாதுல் அமீன், கோட்டக்கல்விப் பணிப்பாளர் எஸ் சரவணமுத்து, இளம் கண்டுபிடிப்பாளர் சோ.வினோஜ்குமார் உட்பட விஞ்ஞான பாட ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். இக்கண்காட்சியில் சுமார் 250க்கு மேற்பட்ட மாணவர்களின் படைப்புக்கள் பிரயோக ரீதியாக கண்காட்சிக்கு வைக்கப்பட்டன. மேலும் கல்லூரி முதல்வர் அருட்சகோதரர் அருட்சகோதரர் எஸ்.சந்தியாகு கருத்து தெரிவிக்கையில், பாடசாலை விடுமுறைக்கு முன்னரே மாணவர்களுக்கு இக்கண்காட்சிக்கான படைப்புக்களை உருவாக்குவது பற்றிய விழிப்புணர்வுகளை நடாத்தியிருந்தோம். அதனால் மாணவர்களும் தங்களது விடுமுறைக்காலத்தை […] - [விறகு பயன்படுத்தும் இலங்கை பெண்களுக்கு ஆயுட்காலம் அதிகம்](https://minnal24.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%95%e0%af%81-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d/): விறகுகளை பயன்படுத்தும் இலங்கை பெண்களின் ஆயுட்காலம் சராசரியாக 80.1 ஆண்டுகளாகும், என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். தனது நாடாளுமன்ற உரையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நவீன சுத்தமான எரிசக்தியை பயன்படுத்தும் செல்வந்த நாடுகளில்,  தனிமனித ஆயுட்காலம் சராசரியாக 80 மற்றும் 85 ஆண்டுகள். எரிவாயு கொள்வனவு செய்ய சிரமப்படும், விறகுகளை பயன்படுத்தும் இலங்கை பெண்களின் ஆயுட்காலம் சராசரியாக 80.1 ஆண்டுகளாகும். அதன்படி, நவீன மற்றும் சுத்தமான வலுசக்தியை பயன்படுத்தும் வளர்முக நாடுகளில் உள்ள ஆண்களின் ஆயுட்காலத்தை காட்டிலும் விறகு பயன்படுத்தும் இந்நாட்டு பெண்களின் ஆயுட்காலம் அதிகம், என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.   - [சட்டவிரோதமாக நாட்டைவிட்டு வெளியேற முயன்ற 91 பேர் கடற்படையினரால் மீட்பு](https://minnal24.com/%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8b%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d/): கடல் மார்க்கமாக இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக வெளிநாடு தப்பிச் செல்ல முயன்ற 91 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர். நேற்று செவ்வாய்க்கிழமை புத்தளம் – மாரவில பிரதேசத்திலும், மேற்கு கடற்பரப்பிலும் கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. மாரவில பகுதியில் விசேட தேடுதல் நடவடிக்கையொன்றை மேற்கொண்ட போது, கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக தப்பிச்செல்ல முயன்றவர்கள் என சந்தேகிக்கப்படும் 13 ஆண்கள், 1 சிறுவன் மற்றும் ஆட்கடத்தலுடன் தொடர்புடைய நபர் என 9 முதல் 58 வயதுக்குட்பட்ட 15 ஆண்கள், குறித்த பகுதியிலுள்ள விடுதியொன்றில் தங்கியிருந்து நிலையில் கடற்படையினர் அவர்களை மீட்டுள்ளனர். அத்துடன், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வான் மற்றும் கார் ஒன்றையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். மற்றும் சிலாபம் கடற்கரையில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, 58 ஆண்கள், 5 பெண்கள், 6 குழந்தைகள் மற்றும் கடத்தலில் ஈடுபட்ட 6 பேர் என ஒன்று முதல் 62 வயதுக்குட்பட்ட 76 பேர் […] - [16 ஆடுகளுடன் ஒருவர் கைது](https://minnal24.com/16-%e0%ae%86%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%af%88%e0%ae%a4%e0%af%81/): -பதுளை நிருபர்- லுணுகலை பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி 16 ஆடுகளை கொண்டு சென்ற ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். லுணுகலை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து லுணுகலை பகுதியில் இருந்து பிபிலை நோக்கி சென்று கொண்டிருந்த மகிந்திரா ரக லொறி ஒன்றை இடைமறித்து சோதனைக்கு உட்படுத்திய போது லொறியினுள் 16 ஆடுகள் இருப்பதனை அவதானித்துள்ளனர் இதன்போது மிருக வதை சட்டத்தின் கீழ் 32 வயதுடைய லொறியின் சாரதியை கைது செய்த லுணுகலை பொலிஸார், மகிந்திரா ரக வாகனத்தையும், ஆடுகளையும் கைப்பற்றியுள்ளனர் குறி்த்த நபர் லுணுகலை ஜனதா புற பகுதியிலிருந்து பிபிலை நோக்கி ஆடுகளை கொண்டு சென்றதாவும், அவரிடம் ஆடுகளை கொண்டு செல்வதற்கான அனுமதி பத்திரம் இருந்த போதிலும், அனுமதி பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆடுகளை விடவும் அளவுக்கு அதிகமான ஆடுகளை கொண்டு சென்றமையாலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார் சந்தேக நபரை இன்று புதன்கிழமை பதுளை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக லுணுகலை பொலிஸார் […] - [தனது உயிருக்கு அச்சுறுத்தல் என கல்முனை மாநகர சபை உறுப்பினர் ராஜன் முறைப்பாடு](https://minnal24.com/%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%a4%e0%af%81-%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%85%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%af%8d/): -கல்முனை நிருபர்- மின்தடை நேரத்தில் ஆயுதத்துடன் வந்த பாதுகாப்பு படையின் சீருடை அணிந்தவர்கள், தன்னை விசாரிப்பதாக கூறி விரட்டி உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்தனர், என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிடம் கல்முனை மாநகர சபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் சாமுவேல் சந்திரசேகரம் ராஜன் முறைப்பாடு தெரிவித்துள்ளார். கல்முனை மனித உரிமை ஆணைக்குழுவின் இணைப்பாளர் ஏ.சி.அப்துல் அசீஸ் இடம் அவரது முறைப்பாட்டை திங்கட்கிழமை கையளித்தார். மனித உரிமை ஆணைக்குழுவில் சமர்ப்பித்துள்ள அவரது முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த 2 ஆம் திகதி இரவு மின்தடை நேரம் பெரிய நீலாவணையிலுள்ள எனது வீட்டுக்கு வந்த ஆயுதம் தரித்த நான்கு இராணுவத்தினரும் தங்களை கொழும்பு புலனாய்வுப் பிரிவினர் என்று அடையாளப்படுத்திய இருவரும் விசாரிக்க வந்ததாக கூறினர் . கொழும்பிலிருந்து வந்த புலனாய்வுப் பிரிவினர் என்பதால் அவர்களிடம் அடையாள அட்டையை கேட்டேன் . ஆனால் அவர்கள் தர மறுத்தனர். நான் கல்முனையில் உண்ணாவிரதமிருந்தமை தொடக்கம் கடந்த மாதம் […] - [காத்தான்குடி பிரதேச செயலக பிரிவில் 5000 ரூபா கொடுப்பனவு வழங்கி வைப்பு](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af-2/): காத்தான்குடி – 165 கிராம உத்தியோகத்தர் பிரிவில் சமுர்த்தி பயனாளிகளுக்கும், சமுர்த்தி காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்குமான 5000 ரூபா கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எச்.எம்.தாஹிர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு, பிரதம அதிதியாக காத்தான்குடி பிரதேச செயலாளர் யூ.உதயசிறீதர் கலந்து கொண்டு உரையாற்றுகையில், நாட்டின் தற்போதய நெருக்கடி மற்றும் உணவுத்தட்டுபாடு போன்றன மேலும் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆகவே இந்த சவாலை எதிர்கொள்ள தங்களால் இயன்ற பயிர்களை பயிரிட்டு வர இருக்கின்ற பஞ்சத்தை அனைவரும் இணைந்து வெற்றிகொள்ள செயற்பட வேண்டும் என கேட்டுகொண்டதுடன் பயனாளிகளுக்கான கொடுப்பனவினையும் வழங்கியிருந்தார். இந்நிகழ்வில், கிராம உத்தியோகத்தர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் எம்.எம்.எம்.ஜரூப், சமுர்த்தி முகாமையாளர் எஸ்.எச்.முஸம்மில், கிராம உத்தியோகத்தர் சாதினா, பொருளாதார உத்தியோகத்தர் சத்யா மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். - [156 கிமீ வேகத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் கைது](https://minnal24.com/%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d-156-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%ae%e0%af%80-%e0%ae%b5%e0%af%87%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8b/): சுவிட்சர்லாந்து – வலே மாநில பொலிஸார் கிரிம்செல் பாஸ்  (Grimsel Pass ) மலைப் பகுதியில் அதிக வேகத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற ஒருவரை கைது செய்துள்ளனர். 80 கிலோமீற்றர் வேகத்தில் செல்ல வேண்டிய மட்டுப்படுத்தப்பட்ட பாதையில் இவர் , மணிக்கு 156 கிமீ வேகத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். சுக் மாநிலத்தைச் சேர்ந்த 55 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கடந்த 4 ஆம் திகதி சனிக்கிழமை மோட்டார் சைக்கிளை அனுமதிக்கப்பட்ட 80 கிமீ வேகத்திற்கு பதிலாக 156 கிமீ வேகத்தில் ஓட்டிச் சென்ற நிலையில் வேக கட்டுப்பாட்டு கமராவில் பாதிவாகி , இவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள இவருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஓட்டுநர் உரிமம் இடைநீக்கம் செய்யப்பட்டு , குறைந்தபட்சம் ஒரு வருட சிறைத்தண்டனையுடன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.   - [தாத்தா, மாமா, சகோதரரால் பாலியல் வன்புணர்விற்குள்ளான 13 வயது சிறுமி கர்ப்பம்](https://minnal24.com/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%9a%e0%ae%95%e0%af%8b%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a9/): 13 வயது பாடசாலை மாணவியை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தி வந்த தாத்தா, மாமா மற்றும் அவரது மூத்த சகோதரர் உட்பட மூவரை எதிமலே பொலிசார் கைது செய்துள்ளனர். மொனராகலை, எதிமலே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்,   பாடசாலை மாணவியான சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டதையடுத்து இவரை பரிசோதித்த வைத்தியர்கள் கருத்தரித்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக வைத்தியசாலை அதிகாரிகள் எத்திமலே பொலிசாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து , பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டனர் இதில் , சிறுமி தனது தாத்தா, மாமா (தாயின் சகோதரர்) மற்றும் சிறுமியின் மூத்த சகோதரரால் தொடர்ந்து வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது. சிறுமியின் சகோதரனை முதலில் கைது செய்த பொலிசார், இதையடுத்து தாத்தா மற்றும் மாமாவை கைது செய்ய விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமி மேலதிக சட்ட வைத்திய மருத்துவ பரிசோதனைக்காக மொனராகலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். - [சமூக வலைத்தள காதலனை தேடி வீட்டை விட்டு சென்ற 12 வயது சிறுமி](https://minnal24.com/%e0%ae%9a%e0%ae%ae%e0%af%82%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%b2%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b3-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%a9%e0%af%88-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%bf/): 12 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர், சமூக வலைத்தளம் மூலம் அறிமுகமாகி காதலித்த இளைஞனைத் தேடி வீட்டை விட்டு காணாமல் போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் முல்லைத்தீவு, மூங்கிலாறு பகுதியைச் சேர்ந்த 12 வயதுடைய பாடசாலை மாணவி சமூக வலைத்தளம் மூலம் அறிமுகமாகி காதலித்த இளைஞனைத் தேடி வீட்டை விட்டு சென்று விட்டதாக குறித்த சிறுமியின் தந்தை புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வீட்டில் இருந்த பணம் மற்றும் கைத்தொலைபேசியையும் எடுத்துக்கொண்டு, தான் வீட்டை விட்டுச் செல்வதாக கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துவிட்டுச் சென்று விட்டதாகவும், குறித்த கடிதத்தில் அவளைத் தேட வேண்டாம் என பெற்றோரிடம் தெரிவித்துள்ளதாகவும், சிறுமியின் தந்தை பொலிஸாரிடம் தெரிவித்தார். சமூக ஊடகம் ஒன்றின் ஊடாக தனக்கு அறிமுகமான இளைஞன் ஒருவரை சந்திப்பதற்காக குறித்த சிறுமி ஹட்டனுக்கு சென்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சிறுமியைத் தேடி அவரது தந்தை […] - [தமது நடவடிக்கைகள் வெற்றியளித்துள்ளதாக மத்திய வங்கி அறிவிப்பு](https://minnal24.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%b5%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf/): ரூபாவின் வீழ்ச்சியை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் வெற்றியளித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. நாணய மாற்று விகிதங்களை மாற்றியமைக்கும் தீர்மானத்தை தொடர்ந்து, சர்வதேச நாணய நிதியத்துடன் பணியாளர் மட்ட உடன்படிக்கையை எட்டுவதற்கான முன்னேற்றத்திற்கும் வழிவகுத்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மார்ச் முதல் வாரத்தில், ரூபாவின் நெகிழ்வுத்தன்மை  நெகிழ்வான மாற்று விகிதத்தை கடுமையாக வீழ்ச்சியடையச் செய்ததாக, மத்திய வங்கி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. - [மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%95%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%88%e0%ae%9f/): -பதுளை நிருபர்- லுணுகலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹொப்டன் 19 ம் கட்டைப் பகுதியில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் விஷேட அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. விஷேட அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து ஹொப்டன் 19 ம் கட்டை கீழ் பிரிவில் மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபடுவதாக சந்தேகிக்கப்படும் இடத்தை விஷேட அதிரடி படையினர் சுற்றி வளைத்தனர். இதன்போது, மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 41,35 வயதுடைய அதே பகுதியை சேர்ந்த இருவரை கைது செய்ததோடு, மாணிக்கக் கல் அகழ்விற்கு பயன்படுத்தப்படும் சில உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது. விஷேட அதிரடி படையினர், கைது செய்யப்பட்ட இருவரையும் லுணுகலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இவர்கள் இருவருக்கு எதிராகவும் வழக்கு தொடர உள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர். - [மன்னார்-முருங்கன் ஆதார வைத்தியசாலையில் கண் சிகிச்சை கிளினிக் ஆரம்பித்து வைப்பு](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0-%e0%ae%b5/): -மன்னார் நிருபர்- மன்னார் முருங்கன் ஆதார வைத்தியசாலையில் இன்று செவ்வாய்க்கிழமை கண் சிகிச்சை கிளினிக் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார். மன்னார் பெருநிலப்பரப்பில் வாழும் மக்கள் கண் பரிசோதனை மற்றும் சிகிச்சைகளுக்காக தற்போதைய சூழ்நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வருகை தர பல்வேறு இடர்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். குறிப்பாக போக்குவரத்து, பொருளாதார சுமைகளையும், ஏனைய சிரமங்களையும் குறைக்கும் நோக்குடன் முருங்கன் ஆதார வைத்தியசாலையில் கண் சிகிச்சை கிளினிக் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முதனிலை, இரண்டாம் நிலை வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்யும் (P.S.S.P) பீ.எஸ்.எஸ்.பீ செயற்திட்டத்தின் மூலம் கொள்வனவு செய்யப்பட்ட கண் சிகிச்சை உபகரணங்கள் முருங்கன் ஆதார வைத்தியசாலையில் நிறுவப்பட்டு குறித்த கிளினிக் இன்று ஆரம்பிக்கப்பட்டது. குறித்த கிளினிக் ஒவ்வொரு வாரமும் செவ்வாய், வியாழன் மற்றும் வெள்ளி கிழமைகளில் முருங்கன் ஆதார வைத்தியசாலையில் இடம்பெறும், என அவர் மேலும் தெரிவித்தார். - [அமைச்சரவையில் எரிபொருள் விலையேற்றம் தொடர்பில் தீர்மானிக்கப்படவில்லை - அமைச்சர் டக்ளஸ்](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d/): -கிளிநொச்சி நிருபர்- அமைச்சரவையில் எரிபொருள் விலையேற்றம் தொடர்பில் தீர்மானிக்கப்பட்டதாக, உண்மைக்கு புறம்பான செய்திகள் பரப்பப்படுவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழில் எரிபொருள் விலையேற்றம் தொடர்பில் செய்திகள் பரப்பப்படும் நிலையில் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, அமைச்சரவையில் பெற்றோல் விலையேற்றம் தொடர்பில் தீர்மானங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. மேலும் நேற்று திங்கட்கிழமை யாழ் மாவட்டத்தில் 10இற்கும் மேற்பட்ட எரிபொருள் நிலையங்களுக்கு பெற்றோல் விநியோகம் இடம்பெற்றதாக, அவர் தெரிவித்தார். - [எரிபொருளிற்காய் இரவிரவாக வீதியில் படுத்திருந்து ஏமாற்றமடைந்த இளைஞர்கள்](https://minnal24.com/%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%be/): -வாழைச்சேனை நிருபர்- மட்டக்களப்பு வாழைச்சேனை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளுக்காக காத்திருந்த மக்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். இதேவேளை, கல்விப் பொதுத்தர சாதாரண தர பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீட்டிற்கு செல்லும் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் வழங்கப்பட்டது. நேற்று சனிக்கிழமை மாலை தொடக்கம் இன்று காலை 11.30 மணி வரை மேற்படி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் கிடைக்கும் என சுமார் 3 கிலோ மீற்றர் துராத்திற்கு அப்பால் வரை நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதன்போது இன்று பெற்றோல் வராது டீசல் மட்டும்தான் கிடைக்கும் என வாழைச்சேனை பொலிசாரினால் அறிவித்தல் விடுக்கப்பட்டதனை தொடர்ந்து அமைதியின்மை ஏற்பட்டது. சிலர் ஆவேசம் கொண்டு மாவட்டத்தின் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கெதிராக தமது எதிர்ப்பினை தெரிவித்தனர். பின்னர் பொலிசார் மற்றும் எரிபொருள் நிலைய முகாமைத்துவத்தினால் எரிபொருள் வழங்குவதற்கான டோக்கன் எனப்படும் எரிபொருள் பகிர்வு அட்டை வழங்கப்பட்டு எரிபொருள் வந்ததும் பெற்றுக்கொள்ளுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டமையினையடுத்து சுமூகமானநிலை ஏற்பட்டது. […] - [ராமநாதபுரம் அருகே கடற்கரையில் கரை ஒதுங்கிய இலங்கை மீன் பிடி படகு](https://minnal24.com/%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a4%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%87-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0/): -மன்னார் நிருபர்- ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி கடற்கரைப் பகுதியில் இலங்கை மீனவர்கள் பயன்படுத்தும் மீன்பிடி படகு ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமை கரை ஒதுங்கி உள்ளதாக மரைன் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, அப்பகுதிக்கு விரைந்து சென்ற மரைன் பொலிஸார் படகில் கடத்தல்காரர் யாரும் கடத்தல் பொருள்களை கொண்டு வந்தார்களா? அல்லது கடல் சீற்றம் காரணமாக நங்கூரம் அறுந்து படகு கடலில் மிதந்து வந்து கரை ஒதுங்கியதா? என பல்வேறு கோணங்களில் மரைன், கியூ பிரான்ஞ் பொலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். - [50,000க்கும் அதிகமானோர் ஒரு வருடத்திற்கும் அதிகமான காலம் நீர்கட்டணம் செலுத்தவில்லை](https://minnal24.com/50000%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%b5%e0%ae%b0/): 50,000க்கும் அதிகமான நுகர்வோர் ஒரு வருடத்திற்கும் அதிகமான காலம் நீர்கட்டணத்தை செலுத்தாமல் உள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. அவர்களிடம் இருந்து 532 மில்லியன் ரூபா கிடைக்கப்பெற வேண்டும். தற்போது குறித்த நுகர்வோருக்கு அறிவித்தல் விடுத்து நீர் விநியோகத்தை துண்டிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையிடம் இருந்து 2.8 மில்லியன் நுகர்வோர் நீரை பெறுகின்றனர். இந் நிலையில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு 7,500 மில்லியன் ரூபா கிடைக்கப்பெற வேண்டியுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிரதி வணிக பொது முகாமையாளர் பியல் பத்மனாத தெரிவித்தார். - [நாட்டில் எரிபொருள் நிலவரம் தொடர்பில் எரிசக்தி அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%b0/): அத்தியாவசியமற்ற பயணங்களுக்கு பெற்றோலை பெற வேண்டாம் என்று எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் அவர் இதனை தெரிவித்தார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், அடுத்த பெற்றோல் கப்பல் எதிர்வரும் ஜூன் 23 ஆம் திகதி நாட்டை வந்தடையும். எதிர்வரும் 3 நாட்களுக்கு எரிபொருள் பெறுவதற்கு வரிசையில் நிற்க வேண்டாம் முச்சக்கர வண்டி சாரதிகள் போன்ற எரிபொருளை நம்பி வாழ்வாதாரத்தை கொண்டு நடத்துபவர்கள் உட்பட அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் வைத்தியர்கள் மற்றும் ஏனைய அத்தியாவசிய ஊழியர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் வழங்கப்படும். எவ்வாறாயினும், நாட்டில் போதியளவு டீசல் கையிருப்பு இருப்பதனால் தற்போது அதற்கு அதிக தேவை ஏற்படாது. இதேவேளை, தனியார் பேருந்துகள், பாடசாலை போக்குவரத்து வாகனங்கள் மற்றும் சுற்றுலா வாகனங்களுக்கு தேவையான எரிபொருளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேற்படி, வாகனங்கள் எரிபொருளை பெற்றுக்கொள்ள அருகில் உள்ள இலங்கை போக்குவரத்து சபை டிப்போக்களுக்கு செல்லுமாறு கோரப்பட்டுள்ளது, […] - [நாளை முதல் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f/): மக்களை தொடர்ந்தும் ஒடுக்கும் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு எதிராக அடுத்த வாரம் முதல் பாரிய தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என, ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. கூடிய விரைவில் சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு பாராளுமன்றத்தில் உள்ள கட்சிகள் மற்றும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள குழுக்களுடன் ஏற்கனவே கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக , ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உப தலைவர் டாக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு எதிர்க்கட்சிகளின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் நாளை திங்கட்கிழமை விசேட அறிக்கையொன்றை வெளியிட உள்ளதாகவும்,  சேனாரத்ன மேலும் தெரிவித்துள்ளார். - [அரசியல்வாதிகளை விட அதிகாரிகளே பல தவறுகளுக்கு காரணம்](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%be/): -கல்முனை நிருபர்- இப்போதைய நாட்டின் நிலையில் மருந்துத்தட்டுப்பாடு அரச வைத்தியசாலைகளுக்கு மட்டுமல்ல பாமசிகளுக்கும் இருக்கிறது. பாமசிகளில் இல்லாத நிறைய மருந்துகள் அரச வைத்தியசாலைகளிலும், களஞ்சியசாலைகளிலும் இருக்கிறது, எல்லா விடயங்களுக்கும் நாம் அரசியல்வாதிகளை குற்றம் சாட்டுகிறோம். ஆனால் அரச அதிகாரிகளே இந்த விடயங்களுக்கு பெரும்பாலும் பொறுப்பானவர்கள் என்பது எனது கருத்து. அண்மையில் வெளியான அறிக்கையின் படி 6692 மில்லியன் ரூபாய் பெறுமதியான மருந்துகள் களஞ்சியங்களில் பாவனைக்கு தகுதியற்றதாக அடையாளம் கண்டு எப்படி அவற்றை அழித்துவிடுவது என்பது பற்றி தெரியாமல் இருக்கிறது. எமது பகுதியில் (கல்முனை பிராந்தியத்தில்) மட்டும் தகுதி இழந்த 12.8 மில்லியன் பெறுமதியான மருந்துகள் இருப்பதுடன் காலாவதியான மருந்துகளும் 40 மில்லியன் ரூபாய் அளவில் இருக்கிறது. யார் இதற்கு பொறுப்பு கூறுவது. அரசாங்கத்தை மட்டும் குறை கூறிக்கொண்டிருந்தால் இதற்கு வகை சொல்வது யார்? இது யாரின் வரிப்பணம்? இந்த வீண்விரயத்திற்கு யார் பொறுப்பு கூறுவது, என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் […] - [26 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் பெண் ஒருவர் கைது](https://minnal24.com/26-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b0%e0%af%82%e0%ae%aa%e0%ae%be-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9/): மன்னார் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாந்திபுரம் பகுதியில் சுமார் 26 இலட்சம் ரூபா பெறுமதியான கேரளா கஞ்சாவை வைத்திருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்  இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட பெண் மன்னாரை சேர்ந்த 35 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்நிலையில், மேலதிக விசாரணைகளுக்காக அவர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. - [அரச உத்தியோகத்தர்களை மக்கள் தாக்குவார்கள் - விவசாய அமைச்சின் செயலாளர்](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a-%e0%ae%89%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%af%8b%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d/): அரச அதிகாரிகள் திறமையாகவும், பொறுப்புடனும் செயற்படாவிட்டால் அரச உத்தியோகத்தர்களை மக்கள் தாக்குவார்கள், என விவசாய அமைச்சின் செயலாளர் ரோஹண புஸ்பகுமார தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 99% விவசாயிகள் நெல் அறுவடை செய்ய இயந்திரங்களைப் பயன்படுத்துகின்றனர். எதிர்காலத்தில் இதற்கு அதிக அளவு எரிபொருள் தேவைப்படும், அது எப்போது என்று பேசப்படுகிறது. தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக இன்னும் சில நாட்களில் தனியார் வாகனங்கள் அல்லது பொதுப் போக்குவரத்தில் இருந்து விலகி அல்லது பழைய மரபுகளை பின்பற்ற வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. எனவே தற்போதைய நெருக்கடி நிலையைப் புரிந்து கொண்டு அதனைச் சமாளிப்பதற்கான திட்டங்களை வகுப்பதில் அரச அதிகாரிகள் முன்னின்று செயற்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். - [நாட்டில் மழையுடனான வானிலை தொடரும்](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b4%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf-4/): நாட்டில், மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் அபாயத்தைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை எச்சரித்துள்ளது. - [எரிபொருளை வழங்கும் நேரம் : அரச இணையதளத்தின் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்](https://minnal24.com/%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%88-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/): இலங்கையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருளை வழங்கும் நேரங்கள் தொடர்பிலான தகவல்களை வழங்கி வந்த அரச இணையத்தளத்தின் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. அதிகாரிகளால் வழங்கப்பட்ட ஆலோசனைக்கமைவாக, இணையத்தள செயற்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் ஐசீரிஏ நிறுவனம் இணைந்து குறித்த இணையத்தள செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. - [முல்லைத்தீவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் துப்பாக்கி பிரயோகம் : ஒருவர் படுகாயம்](https://minnal24.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%80%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3/): -முல்லைத்தீவு நிருபர்- முல்லைத்தீவு விசுவமடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் சற்றுமுன் இராணுவத்தினரால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளது சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். முல்லைத்தீவு விசுவமடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடமையில் நின்ற இராணுவத்தினருடன் ஒருவர் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்ட நிலையில் அது கைகலப்பாக மாறிய வேளை துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. - [தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட 26 வயது குடும்பஸ்தர்](https://minnal24.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d-2/): -கிளிநொச்சி நிருபர்- தர்மபுர பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் இன்று சனிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். குறித்த பகுதியில் பகுதியில் வசிக்கும் இளவரசன் கலையரசன் (26 வயது) என்னும் ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். - [மன்னார் நொச்சிக்குளம் இரட்டைக் கொலை : ஐவருக்கு விளக்கமறியல்](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8%e0%af%8a%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87-2/): -மன்னார் நிருபர்- மன்னார் நொச்சிக்குளம் கிராமத்தில் கடந்த 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில் குடும்பஸ்தர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களில் 5 பேர் இன்று சனிக்கிழமை காலை மன்னார் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். சரணடைந்த குறித்த 5 சந்தேக நபர் களையும் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் இன்று  உத்தரவிட்டார். கடந்த வெள்ளிக்கிழமை 10 ஆம் திகதி காலை மன்னார் நொச்சிக்குளம் கிராமத்தில் நிகழ்ந்த வாள்வெட்டு சம்பவத்தில் இரண்டு குடும்பஸ்தர்கள் கொல்லப்பட்டதுடன் இருவர் படுகாயமடைந்தனர். குறித்த சம்பவத்தில்  யேசுதாசன் ரோமியோ (40 வயது) மற்றும்  யேசுதாசன் தேவதாஸ் (33 வயது) எனும் உடன் பிறந்த சகோதரர்கள் இருவரே படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும், குறித்த சம்பவத்தை அடுத்து கடந்த வெள்ளி நண்பகல் கொலையுண்ட சகோதரர்கள் இருவரின் சடலங்களும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டதுடன் […] - [எரிபொருள் பவுஸர்களின் அனுமதிப்பத்திரங்கள் உடனடியாக இடைநிறுத்தம்](https://minnal24.com/78801/): CEYPETCO மற்றும் LIOC ஆகிய 3 எரிபொருள் பவுஸர்களின் அனுமதிப்பத்திரங்கள் உடனடியாக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளன. 3 எரிபொருள் தாங்கி ஊர்திகளில் இருந்து சட்டவிரோதமான முறையில் எரிபொருள் விநியோகிக்கப்பட்ட விதம் குறித்து சமூக வலைத்தளங்களில் வைரலாக்கப்பட்ட காணொளிகள் தொடர்பில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் குறித்த  காணொளிகள் தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படும், என அமைச்சர் கஞ்சன விஜேசேகர ட்விட்டர் பதிவொன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.   - [தனியாக இருந்த வயோதிப பெண்ணிடம் நகை மற்றும் பணம்‌ கொள்ளை](https://minnal24.com/%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%95-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%b5%e0%ae%af%e0%af%8b%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3/): -கிளிநொச்சி நிருபர்- பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முல்லையடி பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு முல்லையடி பகுதியில் தனியாக வசித்து வந்த வயோதிப பெண் ஒருவரின் வீடொன்றினுள்‌ நள்ளிரவு வீட்டிற்குள் புகுந்த திருடர்கள் அந்த பெண்ணிடம் அச்சுறுத்தி நகை மற்றும் பணம்‌ கொள்ளையிட்டு‌ சென்றுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக பளை பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு‌ செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். - [பளை பொலிஸ் புலனாய்வு பிரிவினரின் அதிரடி : ஒரே நாளில் கைதான திருடர்கள்](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%b3%e0%af%88-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%ae%a9%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%af%81-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0/): பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் கடந்த புதன்கிழமை அன்று ஹாட்வெயார் ஒன்றினுள் இரு நபர்கள் புகுந்து இரண்டு லட்சத்து எண்பதாயிரத்து நூற்றி ஐம்பது ரூபா பெறுமதியான வீட்டு மின் பாவணைக்கு பொருத்து பொருட்கள் பொருட்களை திருடிய சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்தது. குறித்த சம்பவம் தொடர்பாக பளை பொலிஸாரிடம் முறைப்பாடு ஒன்றும்‌ பதிவு‌ செய்யப்பட்டிருந்தது. குறித்த சம்பவம் தொடர்பில் அதிக கவனம் எடுத்து பளை பொலிஸ் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.அதனடிப்படையில் வவுனியா சாந்தசோலை பகுதியில் ஒருவரும் கிளிநொச்சியில் ஒருவருமாக இருவர் புதன்கிழமை மாலை கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து திருடிச்சென்ற பொருட்களும் மீட்கப்பட்டன. கைதான இருவரையும் கிளிநொச்சி நீதவான் முன்னிலைபடுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். - [மின்தடை பற்றி கல்வி அமைச்சின் கோரிக்கை](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a4%e0%ae%9f%e0%af%88-%e0%ae%aa%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%9a/): எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு பாடசாலைகளில் ஒன்லைனில் கற்கை நடவடிக்கை இடம்பெற தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காலை 8.00 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை மின்சாரத்தை துண்டிக்க வேண்டாம் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். - [தடுப்பூசிக்கு பதில் அரிசி](https://minnal24.com/%e0%ae%a4%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a/): இலங்கையில் எஞ்சியுள்ள 600,000 Pfizer தடுப்பூசிகளை மியன்மாருக்கு வழங்கி அங்கிருந்து அரிசி இருப்பை பெற்றுக்கொள்வதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இந்தச் சரக்குகளை ஏற்க மியன்மார் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ளது. தடுப்பூசிகளின் இருப்பு இன்னும் சில மாதங்களில் காலாவதியாக உள்ளது. - [இரு தினங்களில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இலங்கை வருகை](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%b0%e0%af%81-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a-%e0%ae%a8/): சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும் ஜூன் மாதம் 20ஆம் திகதி திங்கட்கிழமை இலங்கை வரவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெறப்படவுள்ள பிணைமுறி தொடர்பான கலந்துரையாடல்களை முன்னெடுத்துச் செல்லும் நோக்கிலேயே குறித்த குழு இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி, பிரதமர், நிதியமைச்சின் அதிகாரிகள் மற்றும் மத்திய வங்கி அதிகாரிகளை இவர்கள் சந்திக்கவுள்ளதாக நிதியமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. - [கரை ஒதுங்கிய நிலையில் குழந்தையின் சடலம் மீட்பு](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%b0%e0%af%88-%e0%ae%92%e0%ae%a4%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%81/): வென்னப்புவ, வைக்கலா கடற்கரையில் பகுதியிலிருந்து கரை ஒதுங்கிய நிலையில் குழந்தையின் சடலம் இன்று சனிக்கிழமை மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட சடலம் சுமார் 4 அடி உயரம் கொண்ட 5 வயது சிறுவனுடையது என பொலிஸார் தெரிவித்தனர். கடந்த ஜூன் மாதம் 15ஆம் திகதி வத்தளை கதிரான பாலத்திற்கு அருகில் பெண்ணொருவரால் களனி ஆற்றில் வீசப்பட்ட குழந்தையின் சடலமா என்பது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். - [பேராதனை பல்கலைக்கழகம் மூடப்படுகின்றது](https://minnal24.com/%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88-%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b4%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%82/): தற்போதைய நெருக்கடி நிலை காரணமாக பேராதனை பல்கலைக்கழகம் இன்று சனிக்கிழமை முதல் மூடப்படவுள்ளது. கல்வி நடவடிக்கைகள் ஒன்லைனில் மேற்கொள்ளப்படும் என துணைவேந்தர் தெரிவித்துள்ளார். - [கனரக வாகனம் 500 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%a9%e0%ae%b0%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-500-%e0%ae%85%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/): -பதுளை நிருபர்- அப்புத்தளை பெரகல பிரதான வீதியில் மேல் வியரகல பகுதியில் இன்று சனிக்கிழமை அதிகாலை 1:30 மணி அளவில் கனரக வாகனம் வீதியை விட்டு விலகி சுமார் 500அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் வாகன சாரதி காயங்களுடன் 1990 வண்டி மூலம் தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இன்று அதிகாலை மேல் வியரகல பகுதியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த இடத்தில் இரண்டு வாகனம் மோதியதாகவும் மற்ற வாகனம் நிறுத்தாமல் சென்று விட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேலதிக விசாரணைகளை ஹப்புத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகிறார்கள். - [நாட்டில் மழையுடனான வானிலை தொடரும்](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b4%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf-3/): நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை மேலும் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.   - [கரடி தாக்கி படுகாயமடைந்த குடும்பஸ்தர் வைத்தியசாலையில் அனுமதி](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%b0%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%ae%9f%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4/): -கிளிநொச்சி நிருபர்- முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்காவில் காட்டுப் பகுதியில் விறகுவெட்ட சென்றவர் கரடி தாக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விறகு வெட்ட சென்றவரை இவ்வாறு இரண்டு கரடிகள் தாக்கியுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் முறிகண்டி பகுதியைச் சேர்த்த சிவபாலகிருஸ்ணன் (38 வயது) என்ற 4 பிள்ளைகளின் தந்தையே படுகாயமடைந்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணியளவில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த நபரின் முகத்தில் பலத்த காலங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் அவசர சிகிச்சையின் பின்னர் யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். சம்பவம், கொக்காவில் பகுதியில் உள்ள பெண் இராணுவ முகாமிற்கு பின் பகுதியில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. - [உள்ளுராட்சி மன்றங்களின் சேவைகளை நவீன மயமாக்கும் செயற்றிட்டத்தின் ஆரம்ப நிகழ்வு](https://minnal24.com/%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%81%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d/): -வாழைச்சேனை நிருபர்- கனேடிய உதவியின் கீழ் அமுல்படுத்தப்படுகின்ற உள்ளுர் பெண் தலைமைத்துவத்தை வலுவூட்டுவதின் ஊடாக உள்ளுராட்சி மன்றங்களின் சேவைகளை நவீன மயமாக்கும் செயற்றிட்டத்தின் ஆரம்ப வைபவம் கோறளைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் திருமதி சோபா ஜெயரஞ்சித் தலைமையில் பேத்தாழை குகநேசன் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது. மேற்படி நிகழ்சித்திட்டத்தின் கீழ் நாட்டிலுள்ள 327 உள்ளுராட்சி மன்றங்களிலிருந்து 5 உள்ளுராட்சி மன்றங்கள் தெரிவு செய்யப்பட்டன. அதில் கோறளைப்பற்று பிரதேச சபை வாழைச்சேனையும் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இந் நிகழ்வில் உள்ளுராட்சி மன்றங்களின் சம்மேளத்தின் நிறைவேற்றுப் சபையின் உதவிப்பணிப்பாளர் ஏ.எம்.முகமட் நௌஸாட், இலங்கை உள்ளுராட்சி மன்றங்களின் சம்மேளத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஹேமசிறி கேமந்தி குணசேகர், இலங்கை உள்ளுராட்சி மன்றங்களின் சம்மேளனத் சிரேஸ்ட நிகழ்ச்சி திட்ட முகாமையாளர் பிரதீப், நிகழ்ச்சி திட்ட உத்தியோகஸ்த்தர் நிதர்சினி ஆகியோர்களுடன், பிரதேச சபை உறுப்பினர்கள், சனசமூக நிலையங்களின் உறுப்பினர்கள், மகளிர் சங்கங்கள், விசேட தேவையுடையோர் சங்கத்தின் உறுப்பினர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர். […] - [நகர்புற மற்றும் கிராமங்களை அண்டிய பாடசாலைகளுக்கு வெவ்வேறு சுற்றுநிருபங்கள்](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b1-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%99%e0%af%8d%e0%ae%95/): அடுத்த இரண்டு வாரங்களுக்கு பாடசாலைகளை இணைய வழியில் நடத்துவது தொடர்பாக அரசாங்கம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இது தொடர்பான சுற்றுநிருபம் கல்வியமைச்சினால் வெளியிடப்படும் என தெரிவிக்கப்படும் நிலையில், இதுவரை பாடசாலை குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. அதன்படி, நகர்புற பாடசாலைகளுக்கும் கிராமங்களை அண்டிய பாடசாலைகளுக்கும் வெவ்வேறான சுற்றுநிருபங்களை வெளியிடுவது குறித்து கல்வியமைச்சு அவதானம் செலுத்தியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், இவ்விதமாக பாடசாலை நடவடிக்கைகளும் மாற்றங்களுக்கு உட்படுமா என்பது தொடர்பாக இதுவரை கல்வியமைச்சினால் அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. - [இந்த வருடத்திற்கான பாடசாலை விடுமுறை இல்லை](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%9a%e0%ae%be/): இவ்வருடத்திற்கான ஆகஸ்ட் மற்றும் டிசம்பர் மாதங்களில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படாமல் பாடசாலை கல்வி நடவடிக்கைகளை தொடர தீர்மானிக்கப்பட்டுள்ளது. பரீட்சை காலத்தில் மாத்திரம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அரச அலுவலக பணிகள் மற்றும் பாடசாலை கற்றல் நடவடிக்கைகளை 2 வாரங்களுக்கு இணையம் மூலம் மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. - [நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானின் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மோசடி](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%89%e0%ae%b1%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be/): -மன்னார் நிருபர்- மன்னார்- தலைமன்னார் பியர் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு கிடைக்கப்பெற்ற மண்ணெண்ணெய் மக்களுக்கு வழங்கப்படுவதற்கு முன்பு இரவோடு இரவாக சில வசதி படைத்தவர்களுக்கு, நூற்றுக்கணக்கான லீற்றர் மண்ணெண்ணெய் அனுமதியின்றி வழங்கப்பட்ட நிலையில் மண்ணெண்ணெய்க்காக காத்திருந்த மக்கள் ஏமாற்றம் அடைந்த நிலையில் எரிபொருள் நிரப்பு நிலையத்தை முற்றுகையிட்டு உள்ளனர். குறித்த விடயம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில், தலைமன்னார் பியர் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு நேற்று வியாழக்கிழமை மற்றும் இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு இரு தடவைகள் 6500 லீற்றர் மண்ணெண்ணெய் என சுமார் 13000 லீற்றர் மண்ணெண்ணெய் அதிகாலை மக்களுக்கு விநியோகிப்பதற்கான வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அதிகாலை நூற்றுக்கணக்கான மக்கள் மண்ணெண்ணெய் பெறுவதற்காக வரிசையில் நின்ற நிலையில் 400 ரூபா வீதம் 500 பேருக்கு மாத்திரமே எரிபொருள் விநியோகிக்கப்படும் என எரிபொருள் நிரப்பு நிலையத்தினரால் தெரிவிக்கப்பட்ட நிலையில், அப்பகுதி மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் 1000 […] - [பதவி விலகுகிறார் நுகர்வோர் விவகார அதிகார சபை தலைவர்](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8%e0%af%81%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%8b/): நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் சாந்த திஸாநாயக்க பதவி விலகுகிறார். அவர் தமது பதவி விலகல் கடிதத்தை வர்த்தக அமைச்சரிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. - [பிரகீத் எக்னலிகொட வழக்கில் 9 இராணுவ அதிகாரிகளும் பிணையில் விடுதலை](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%95%e0%af%80%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%95%e0%af%8d%e0%ae%a9%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf/): ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்ட வழக்கின் பிரதிவாதிகளான 9 இராணுவ புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கும், கொழும்பு விசேட மேல் நீதிமன்றில் பிணை வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கானது மூவரடங்கிய கொழும்பு விசேட மேல் நீதிமன்றில் இன்று வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், குறித்த வழக்கின் சாட்சியாளரை எதிர்வரும் 23ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. - [இலவச குடிநீர் விநியோகத்திற்கான நடமாடும் சேவை](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%9a-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%af%e0%af%8b%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/): -கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலக பிரிவில், கிராஞ்சி மற்றும் பொன்னாவெளி கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் வீட்டுப் பாவனையாளர்களுக்கான இலவச குடிநீர் விநியோகத்திற்கான நடமாடும் சேவையானது, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணிவரை பொன்னாவெளி கிராம அலுவலர் அலுவலகத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது. எனவே, பொது மக்கள் கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட நடமாடும் சேவை மூலம் தாங்கள் பெற்றுக்கொண்ட விண்ணப்படிவங்களை வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு அமைவாக, பூர்த்தி செய்து ஆயிரம் ரூபா வைப்பு பணத்துடன் பொன்னாவெளி கிராம அலுவலர் அலுவலகத்தில் செவ்வாய் கிழமை இடம்பெறும் நடமாடும் சேவையில் ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, இதுவரை விண்ணப்படிவங்களை பெற்றுக்கொள்ளாத பொது மக்கள் நடமாடும் சேவை தினத்தில் பெற்றுக்கொண்டு பூரணப்படுத்தி வழங்க முடியும், என கிளிநொச்சி தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினர் தெரிவித்துள்ளனர். - [சுவிஸ் வங்கிகளிலுள்ள இந்தியர்களின் சேமிப்பு அதிகரிப்பு](https://minnal24.com/78756/): சுவிட்ஸர்லாந்து வங்கிகளில் உள்ள இந்தியர்களின் சேமிப்பு பணம் ஒரே ஆண்டில் 50 சதவீதம் அதிகரித்துள்ளதாக, இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. சுவிஸ் வங்கிகளில் உள்ள இந்தியர்களின் சேமிப்புகள் தொடர்பான விபரங்களை சுவிட்ஸர்லாந்து அரசு ஆண்டுதோறும் வெளியிடுவது வழமை. அந்த வகையில், கடந்த ஆண்டு நிலவரம் தொடர்பான தகவல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக, அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த ஆண்டு மொத்தமாக 30,500 கோடி இந்திய ரூபாவிற்கும் அதிக பணத்தை சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் சேமித்துள்ளனர். 2020ஆம் ஆண்டில் இந்தத் தொகை 20,700 கோடி இந்திய ரூபாவாக காணப்பட்ட நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு, சுமார் 10 ஆயிரம் கோடி இந்திய ரூபாவினால் அது அதிகரித்துள்ளது. கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இத்தொகை அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. - [பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு உயிரிழப்பு](https://minnal24.com/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9c%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d/): பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர், தன்னை தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. தங்காலை பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுப்பட்டிருந்த குறித்த பொலிஸ் நிலைய சார்ஜன்ட் ஒருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த அலுவலகத்துக்கு முன்பாக இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் அவர் துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார் சம்பவத்திற்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.   - [பிரதமருக்கு நன்றி தெரிவித்த பாராளும‌ன்ற‌த்தை பிர‌திநிதித்துவ‌ப்ப‌டுத்தாத‌ க‌ட்சிக‌ளின் கூட்ட‌ணி](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a8%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%a4%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf/): -கல்முனை நிருபர்- திற‌ந்த‌ க‌ண‌க்கில் தேவையான பொருட்க‌ளை நாட்டுக்கு கொண்டு வ‌ர‌ அனும‌திக்க‌ வேண்டும் என்ற‌ பாராளும‌ன்ற‌த்தை பிர‌திநிதித்துவ‌ப்ப‌டுத்தாத‌ க‌ட்சிக‌ளின் கூட்ட‌ணி விடுத்த‌ வேண்டுகோளை ஏற்று, திற‌ந்த‌ க‌ண‌க்கின் மூல‌ம் நாட்டுக்கு எவ‌ரும் பொருட்க‌ளை கொண்டு வ‌ர‌ அனும‌தித்த‌மைக்காக‌ மேற்ப‌டி கூட்ட‌ணி சார்பில் ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் மௌல‌வி  பிர‌த‌ம‌ர் ர‌ணில் விக்ர‌ம‌சிங்க‌விற்கு ந‌ன்றி தெரிவித்துள்ளார். இது ப‌ற்றி அவ‌ர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கையில், அண்மையில் இல‌ங்கை ம‌க்க‌ள் தேசிய‌ க‌ட்சியின் த‌லைவ‌ர் என்.விஷ்ணுகாந்த‌னின் ஏற்பாட்டில் பாராளும‌ன்ற‌த்தை பிர‌திநிதித்துவ‌ப்ப‌டுத்தாத‌ க‌ட்சிக‌ளுக்கும் ஐ.தே.க‌ பொதுச்செய‌லாள‌ர் பாலித‌ ர‌ங்கே ப‌ண்டார‌வுக்குமிடையில்  ச‌ந்திப்பு ந‌டை பெற்ற‌து. இத‌ன் போது, நாட்டில் டொல‌ருக்கான‌ த‌ட்டுப்பாடு நில‌வுவ‌தால் வ‌ங்கிக‌ள் டொல‌ர் த‌ர‌ ம‌றுப்ப‌தால் உண‌வுப்பொருட்க‌ளை இற‌க்கும‌தி செய்ய‌ இற‌க்கும‌தியாள‌ர்க‌ளால் முடிய‌வில்லை. இத‌ன் கார‌ண‌மாக‌ உண‌வுப்பொருட்க‌ளுக்கு பெரும் ப‌ஞ்சம் நில‌வுகிற‌து. இத‌னை தீர்க்கும் முக‌மாக‌ வெளிநாட்டில் இருக்கும் ஒருவ‌ர் வெளிநாட்டில் இருந்தே ப‌ண‌ம் செலுத்துவ‌த‌ன் மூல‌ம் உள் நாட்டிலிருக்கும் […] - [இந்த வருடம் இதுவரையான காலப்பகுதியில் 20,939 டெங்கு நோயாளர்கள் அடையாளம்](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%95%e0%ae%be/): ஜூன் மாதத்தில் இதுவரை 549 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது. இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், 20,939 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதோடு, மேல் மாகாணத்திலேயே அதிகூடிய எண்ணிக்கையானோர் பதிவாகியுள்ளனர். அதன்படி, மேல் மாகாணத்தில் 7,963 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு பரவும் இடங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தி அவற்றை முற்றாக ஒழிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார பிரிவினர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கின்றனர். - [நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் தங்களை விடுவிக்க கோரிய மனுக்கள் தள்ளுபடி](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%86%e0%ae%95%e0%ae%bf/): ராஜிவ் காந்தி கொலை குற்றவாளிகளான நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் தங்களை விடுதலை செய்யக்கோரிய மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை பெற்று வரும் நளினி, ரவிச்சந்திரன் ஆகிய இருவரும் தங்களை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். ஆளுநரின் ஒப்புதலுக்கு காத்திருக்காமல், ராஜிவ் கொலைக் குற்றவாளிகளை விடுவிக்கும் தமிழக அரசு தீர்மானத்தின் அடிப்படையில் தங்களை விடுவிக்க வேண்டும் என்று கோரியிருந்தனர். இந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி தலைமையில் விசாரணைக்கு வந்தது. இதன்போது, உச்சநீதிமன்றத்தைப் போல அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுவிக்க சென்னை உயர்நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்று கூறி, நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் அளித்த மனுக்களை தலைமை நீதிபதி அமர்வு தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது.   - [கணவதிப்பிள்ளை மோகனுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%af%8b%e0%ae%95%e0%ae%a9%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/): பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணவதிப்பிள்ளை மோகனை எதிர்வரும் 29 ஆம் திகதிவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த வழக்கு நேற்று வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் இவ் உத்தரவை பிறப்பித்துள்ளார். இணையத்தளங்களில் தடைசெய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் படங்களைப் பதிவேற்றியமை தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் கணவதிப்பிள்ளை மோகனை, கடந்த 2021 மே  3ஆம் திகதி ஏறாவூர் பொலிஸார் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து, ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், நேற்று வியாழக்கிழமை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதவான் முன்னிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சிறைச்சாலையிலிருந்து அழைத்துவரப்பட்ட மோகன் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது, அவரை தொடர்ந்து எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.   - [எதிர்வரும் காலங்களில் மின்வெட்டு நேரம் இன்னும் அதிகமாகும்](https://minnal24.com/%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%bf/): எதிர்வரும் காலங்களில் மின்வெட்டு நேரம் இன்னும் அதிகமாகும், என இலங்கை மின்சார பொறியியலாளர் சங்கத்தின் இணைச் செயலாளர் எரங்க குடஹேவா தெரிவித்துள்ளார். நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் ஒரு பகுதி இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் மூடப்படும் என்றும், நிலையத்தை 75 நாட்களுக்கு மூட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனால், நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளால் மின்வெட்டு நீடிக்கலாம் என இலங்கை மின் பொறியியலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மின் உற்பத்தி நிலையங்களுக்கான உதிரி பாகங்களை இறக்குமதி செய்வதற்கு இலங்கை மின்சார சபையிடம் நிதி இல்லை. அடுத்த வருடம் தேவையான நிலக்கரியை இறக்குமதி செய்வதற்கும் லக்விஜய நிலக்கரி மின் நிலையத்திற்கு மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கும் சுமார் 640 மில்லியன் டொலர்கள் தேவைப்படும். பணம் தேடுவதற்கு வழி தெரியாததால், முழுமையாக டீசல் மின் உற்பத்தி நிலையங்களையே நம்பியிருக்க வேண்டியுள்ளது, என அவர் மேலும் தெரிவித்துள்ளார். - [வலி மிகுந்த அகதி வாழ்வின் 32 ஆண்டு நிறைவை இறை வழிபாட்டுடன் நினைவுகூர்ந்த மக்கள்](https://minnal24.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%95%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%85%e0%ae%95%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9/): -கிளிநொச்சி நிருபர்- யாழ்.வலிகாமம் வடக்கு மக்களின் துயர் நிறைந்த 32 வருடகால அகதி வாழ்க்கை நிறைவை ஒட்டி நேற்று வியாழக்கிழமை தெல்லிப்பழை துர்க்கையம்மன் ஆலயத்தில் விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றது. இதன்போது, வலிவடக்கு பகுதிகள் முழுவதும் விடுவிக்ககோரி வழிபாடுகள் இடம்பெற்றதுடன், வழிபாட்டின் நிறைவில் சிதறுதேங்காய் அடிக்கப்பட்டது. இந்த வழிபாடுகளில் வலி. வடக்கு மீள்குடியேற்ற புனர்வாழ்வுச் சங்கத்தின் தலைவர் அ.குணபாலசிங்கம், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா உட்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர். 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி வலிகாமம் வடக்கிலிருந்து அங்கிருந்த பொதுமக்கள் வெளியேற்றப்பட்டதன் 32 வருடங்கள் நேற்று நிறைவு செய்தமை குறிப்பிடத்தக்கது.   - [வவுனியா மற்றும் திருகோணமலையை சேர்ந்த 7 பேர் தமிழகத்தில் தஞ்சம்](https://minnal24.com/%e0%ae%b5%e0%ae%b5%e0%af%81%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8b%e0%ae%a3%e0%ae%ae/): -மன்னார் நிருபர்- இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ள நிலையில், மக்கள் இலங்கையில் இருந்து சட்ட விரோதமான முறையில், தமிழகத்திற்கு செல்லும் நடவடிக்கை தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையில், தனுஷ்கோடி அடுத்த ஒன்றாம் தீடை பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை  இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த ஒரு ஆண், இரண்டு பெண், 4 குழந்தை உட்பட 7 பேர் தஞ்சம் அடைந்துள்ளனர். தீடை பகுதியில் இலங்கை தமிழர்கள் அகதிகளாக வந்து தஞ்சம் அடைந்துள்ளதாக மரைன் பொலிஸார் கிடைத்த தகவல் அடிப்படையில் விரைந்து சென்ற பொலிஸார் அவர்களை மீட்டு விசாரணைக்காக மண்டபம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இதையடுத்து, விசாரணை முடிந்த பின்னர் மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் அவரது தங்க வைக்கப்பட உள்ளனர். இவ்வாறு, தஞ்சமடைந்துள்ளவர்கள் வவுனியா மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 2 குடும்பங்களை சேர்ந்த 7 பேர் என தெரிய வந்துள்ளது. - [அதிரடி சோதனையில் பதுக்கி வைத்திருந்த எரிபொருள் கண்டுபிடிப்பு](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%9a%e0%af%8b%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf/): -மன்னார் நிருபர்- மன்னார்-மதவாச்சி பிரதான வீதிஇதிருக்கேதீஸ்வரம் சந்தியில் அமைந்துள்ள லங்கா எரிபொருள் விற்பனை நிலையத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய எரிபொருட்கள் மன்னார் மாவட்டச் செயலக பாவனையாளர் அதிகார சபை அதிகாரிகளினால் கண்டு பிடிக்கப்பட்டு நேற்று வியாழக்கிழமை இரவு மக்களுக்கு வினியோகிக்கப்பட்டு உள்ளது. மன்னார்-மதவாச்சி பிரதான வீதி, திருக்கேதீஸ்வரம் சந்தியில் அமைந்துள்ள லங்கா எரிபொருள் விற்பனை நிலையத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய எரிபொருட்களை கையிருப்பில் வைத்துக் கொண்டு மக்களுக்கு வழங்காது பதுக்கி வைத்திருப்பதாக மக்கள் மன்னார் மாவட்ட பாவனையாளர் அதிகார சபையிடம் முறைப்பாடு செய்துள்ளனர். மக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைவாக மன்னார் மாவட்டச் செயலக பாவனையாளர் அதிகார சபை அதிகாரிகள் இணைந்து, நேற்று வியாழக்கிழமை  இரவு குறித்த எரிபொருள் விற்பனை நிலையத்தில் திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு சோதனைகளை மேற்கொண்டனர். இதன் போது குறித்த எரிபொருள் நிலையத்தில் பெட்ரோல், டீசல் மற்றும் சுப்பர் பெட்ரோல் பதுக்கி […] - [கையிருப்பில் உள்ள பெற்றோலை அடுத்த வாரம் வரை முகாமை செய்ய முடியாது](https://minnal24.com/%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%8b/): நாளாந்த கேள்விக்கு அவசியமான அளவு பெற்றோல் மற்றும் டீசலை நாடளாவிய ரீதியில் விநியோகிக்க முடியாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நேற்று வியாழக்கிழமை கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், நாளொன்றுக்கு 3,000 மெட்ரிக் டன் டீசல், 2,600 மெற்றிக் டன் பெற்றோல் என்ற வரையறையில் விநியோகிக்கப்படுகிறது. நாட்டை வந்தடைந்துள்ள டீசல் கப்பலுடன் தற்போது கையிருப்பில் உள்ள டீசல் தொகையை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை முகாமை செய்ய முடியும், எனவே டீசல் விநியோகத்தை அவ்வாறே தொடர்ச்சியாக முன்னெடுக்க எதிர்பார்க்கிறோம். கையிருப்பில் உள்ள பெற்றோலை 21 ஆம் திகதிவரை முகாமை செய்ய முடியாது. நேற்று முன்தினம் கூடிய அமைச்சரவை உபகுழு நாட்டுக்கு அவசியமான பெற்றோல் மற்றும் டீசலை இறக்குமதி செய்ய மேலும் 2 நிறுவங்களுடன் ஒப்பந்தங்களை செய்ய அனுமதி வழங்கியது. அந்த நிறுவனங்களுக்கு நாணயக் கடிதங்களை விடுவிப்பது […] - [நாட்டில் நிலவும் மழை நிலைமை மேலும் அதிகரிக்கும்](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b4%e0%af%88-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2/): நாட்டில் தற்போது காணப்படும் மழையுடனான நிலைமை மேலும் அதிகரிக்கும், என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தாழ் வளிமண்டலத்தின் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலைமை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேலும், நாட்டின் பல பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மாலை அல்லது இரவு வேளையில் நாட்டின் ஏனைய பகுதிகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும், என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.   - [திங்கள் முதல் இரு வாரங்களுக்கு பாடசாலைகள் மற்றும் பொது சேவைகளுக்கான ஆன்லைன் முறை ?](https://minnal24.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95/): இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாடு முழுவதுமாக பூட்டப்பட வேண்டிய அவசியமில்லை என, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இன்று வியாழக்கிழமை அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சில அமைச்சர்களும் அதிகாரிகளும் நாட்டை சிலவாரங்கள் பூட்டுதல் அல்லது ஊரடங்கு உத்தரவு தேவையா என ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் விசாரித்துள்ள நிலையில் இதற்கான தேவையில்லை என பதிலளித்துள்ளனர். இந்தநிலையில் திங்கள்கிழமை முதல் இரண்டு வாரங்களுக்கு பாடசாலைகள் மற்றும் பொது சேவைகளுக்கான ஆன்லைன் முறையை அறிமுகப்படுத்த அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. எவ்வாறாயினும், இது தொடர்பான இறுதி முடிவு எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை என அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. - [தேசிய அணிக்கு தெரிவான சதாசிவம் கலையரசியை கெளரவிக்கும் நிகழ்வு](https://minnal24.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%85%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a4%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%9a%e0%ae%a4/): -கிளிநொச்சி நிருபர்- 19 வயதிற்குட்பட்டோருக்கான 30 பேர் கொண்ட தேசிய அணியில்​ தெரிவு செய்யப்பட்ட, கிளிநொச்சி புனித சென்திரேசா பெண்கள் கல்லூரி மாணவி சதாசிவம் கலையரசியை கெளரவிக்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை காலை பாடசாலை சமூகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது. கரடிப்போக்கு சந்தியிலிருந்து​ பாடசாலை முதல்வரால் குறித்த மாணவிக்கு மாலை அணிவித்து கெளரவிக்கப்பட்டு, வாகனத்தில் பாடசாலை மாணவர்களின் பாண்ட் வாத்திய அணிவகுப்புடன் அழைத்து செல்லப்பட்டு பாடசாலை மண்டபத்தில் மாணவி கெளரவிக்கப்பட்டார். குறித்த நிகழ்விற்கு, பிரதம விருந்தினராக தெற்கு வலயக்கல்விப்பணிப்பாளர், கிளிநொச்சி மாவட்ட செயலக உதவிப்பிரதேச செயலாளர், மாவட்ட துடுப்பாட்ட சங்க தலைவர், மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர், பயிற்றுவிப்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.   - [ஆபத்தான பாலத்தில் பயணங்களை மேற்கொள்ளும் மக்களும், கனரக வாகனங்களும்](https://minnal24.com/%e0%ae%86%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%a3%e0%ae%99%e0%af%8d%e0%ae%95/): -கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி திருவையாறு பகுதியில் ஆபத்தான பயணங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் பாலம் அபாயகரமாக மாறியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இரணைமடு நீர்பாசன வாய்க்கால் பகுதியில் அமைந்துள்ள குறித்த பாலம் அமைக்கப்பட்டு நீண்ட ஆண்டுகள் கடந்துள்ளன. இந்த நிலையில் குறித்த பாலம் இன்று உடைந்து அபாயகரமான பாலமாக தோற்றம் பெற்றுள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியில், இபாட் திட்டத்தின் கீழ் இரணைமடு குளத்தின் அபிவிருத்தி பணியின் போது அப்பகுதியில் உள்ள பாலங்கள் புதிதாக அமைக்கப்பட்டதுடன், குறித்த பாலம் புனருத்தானம் செய்யப்பட்டது. ஆயினும் பாலங்களின் பாதுகாப்பான நிலை தொடர்பில் ஆராயப்படாது மேலெழுந்த வகையில் புனரமைப்பு செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. குறித்த பாலம் ஆரம்பத்தில் சுண்ணாம்புக்கல்லினைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. நீண்ட காலத்திற்கு முன்னர் குறித்த பாலம் அமைக்கப்பட்டுள்ளமையால் அது படிப்படியாக சேதமடைய ஆரம்பித்து இன்று போக்குவரத்து செய்வதற்கு அச்ச நிலையை தோற்றுவித்துள்ளது. குறித்த பாலத்தின் ஊடாக ஆயிரக்கணக்கானோர் பயணம் செய்வதாகவும், கனரக வாகனங்கள் […] - [சமுர்த்தி பயனாளிகளுக்கு 3000 ரூபா கொடுப்பனவு](https://minnal24.com/%e0%ae%9a%e0%ae%ae%e0%af%81%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-2/): குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் மற்றும் சமுர்த்தி பயனாளிகளுக்கு அரசாங்கத்தினால் ரூபா 5000 வழங்கப்படும் என அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட போதிலும், தற்போது சமூர்த்தி பயனாளிகளுக்கு மாத்திரம் ஒரு மாத சமூர்த்தி கொடுப்பனவுடன் 3000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில், இன்று வியாழக்கிழமை கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட, சமூர்த்தி பயனாளிகளூக்கு 3000 ரூபா வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. - [அந்நிய செலாவணி 34 சதவீதத்தினால் அதிகரிப்பு](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b5%e0%ae%a3%e0%ae%bf-34-%e0%ae%9a%e0%ae%a4%e0%ae%b5%e0%af%80%e0%ae%a4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/): கடந்த ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில், மே மாதம் அந்நிய செலாவணி அதிகரித்துள்ளதாக, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை பணியாளர்களினால் அனுப்பப்படும் அந்நிய செலாவணி 34 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது. அதன்படி, ஏப்ரல் மாதம் பதிவான 249 மில்லியன் அமெரிக்க டொலர் அந்நிய செலாவணி மே மாதத்தில் 304 மில்லியன் டொலராக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், 1 இலட்சத்து 33,242 பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக சென்றுள்ளனர். அதில், முகவர் நிலையங்கள் ஊடாக 47,692 பேரும், சுயமாக 85,550 பேரும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக சென்றுள்ளனர். அதேநேரம், இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், 1,640 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. - [தரம் ஒன்றிற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பப்படிவம் வெளியானது](https://minnal24.com/%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%92%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3-2/): 2023ஆம் ஆண்டுக்கான முதலாம் வகுப்பிற்கு பிள்ளைகளை அனுமதிப்பதற்கான விண்ணப்பப்படிவம் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த விண்ணப்பங்களை எதிர்வரும் ஜுலை 16ஆம் திகதிக்கு முன்னர் பதிவு தபாலில் அனுப்புமாறு கோரப்பட்டுள்ளது. விண்ணப்ப படிவம் :- https://docs.google.com/document/d/1980RrkvvxjmQdVMoltAmfdq6u1hU4-4I/edit - [மட்டு.ஏறாவூரில் நான்கு பிள்ளைகளின் தந்தையொருவர் சடலமாக மீட்பு](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%8f%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b5%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%aa/): மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆறுமுகத்தான்குடியிருப்பு பகுதியில் இன்று வியாழக்கிழமை ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நான்கு பிள்ளைகளின் தந்தையான சின்னத்துரை ஸ்ரீதரன் (51) என்ற மீனவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் உள்ள வாவியில் தனியாக தோணியில் மீன் பிடிக்க சென்ற குறித்த மீனவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக, ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். - [அரபுநாடுகளின் தூதுவர்களை சந்திக்கும் ஏற்பாடுகள் ஆரம்பம்](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%aa%e0%af%81%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%82%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3/): -வாழைச்சேனை நிருபர்- அரபு நாடுகளின் தூதுவர்களை சந்திக்கும் முன்னோடி ஏற்பாடுகளில், சுற்றாடல்துறை அமைச்சர் நஸீர் அஹமட் நேற்று புதன்கிழமை இலங்கைக்கான சவூதி அரேபிய பதில் தூதுவர் அப்துல்லா A.A.ஒர்கோபியை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இருதரப்பு உறவுகளை பலப்படுத்தும் சந்தர்ப்பமாக இப்பேச்சு க்கள் அமைந்திருந்தன. அமைச்சரின் சிரேஷ்ட ஆலோசகரும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளருமான கருணாசேனா ஹெட்டியாராய்ச்சி மற்றும் சிரேஷ்ட இராஜதந்திரியான T.Z.A.சம்சுடீன் ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர். அமைச்சில் நடைபெற்ற இச்சந்திப்பில் சுற்றாடல் துறையின் மேம்பாடுகளால் அடையக்கூடிய அதிகளவான நன்மைகளை அடையாளங்காணல் மற்றும் அவற்றை நடைமுறைபடுத்துவதில் இருநாடுகளும் ஒத்துழைத்துச் செயற்படல் என்பது பற்றி பிரதானமாக கலந்துரையாடப்பட்டது. அத்துடன், இலங்கை எதிர்கொண்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு, சவூதி ஒத்துழைக்க வேண்டியதன் அவசியம் எடுத்துரைக்கப்பட்டது. முறையான எரிபொருள் விநியோகம், இலங்கை ஹஜ் யாத்திரிகர்களுக்கு விஷேட வசதிகளை ஏற்படுத்தல் உள்ளிட்ட விவகாரங்களையும் அமைச்சர் நஸீர் அஹமட் சவூதிஅரேபிய தூதுவரிடம் எடுத்துரைத்தார். சவூதியில் பணிபுரியும் இலங்கை தொழிலாளர்களின் விடயங்களிலும் இச்சந்திப்பில் […] - [நாளை அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%88-%e0%ae%85%e0%ae%a9%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%81/): நாளை வெள்ளிக்கிழமை நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். - [வெள்ளிக்கிழமை விடுமுறை தொடர்பான சுற்றறிக்கை வெளியானது](https://minnal24.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%ae%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88-%e0%ae%a4/): அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை வழங்குவது தொடர்பான சுற்றறிக்கை இன்று வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, அரச நிறுவனங்களின் ஊழியர்களுக்கான அழைப்பை மட்டுப்படுத்தும் திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட பொது நிர்வாக சுற்றறிக்கை உடன் அமுலுக்கு வகையில் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை வழங்கும் நடைமுறை எதிர்வரும் 24ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளதாக குறித்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   - [மின்துண்டிப்பு நேரம் அதிகரிப்பு](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf/): எதிர்வரும் திங்கட்கிழமை முதல் தற்போது அமுலில் உள்ள மின்வெட்டு நேரம் மேலும் அதிகரிக் கூடும் என மின் பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, மேலும் ஒன்றரை மணிநேரத்தினால் மின்துண்டிப்பு நீடிக்க வேண்டியேற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய திருத்தப்பணிகளால் நுரைச்சோலை அனல்மின்நிலையத்தின் இரண்டாம் மின்பிறப்பாக்கியின் தொழிற்பாடுகள் நிறுத்தப்படவுள்ளமையால், நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் 300 மெகாவோட் மின்சாரம் நாளை மறுதினம் சனிக்கிழமை முதல் தேசிய மின்கட்டமைப்பிற்கு கிடைக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திருத்தப்பணிகள் இரண்டு மாதங்கள் இடம்பெறும், என இலங்கை மின்சார சபையின் ஊடக பேச்சாளர் அன்ரூ நவமணி தெரிவித்துள்ளார். - [மீனவர்களுக்கு மீன்களை வாரிக்கொடுத்த கடல்](https://minnal24.com/%e0%ae%ae%e0%af%80%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%b5%e0%ae%be/): -மன்னார் நிருபர்- மீன்பிடி தடை காலம் முடிந்து தமிழகம்-பாம்பன் தெற்குவாடி துறைமுக பகுதியில் இருந்து நேற்று 90 க்கும் அதிகமான மீன்பிடி விசைப் படகுகளில் ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் தென் கடலான மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்றிருந்தனர். மீனவர்கள் அனைவரும் மீன் பிடித்து விட்டு இன்று வியாழக்கிழமை அதிகாலை மீன்களுடன் கரை திரும்பினார்கள். இவ்வாறு மீன் பிடித்து கரை திரும்பிய மீனவர்களின் உள்ளூர் சந்தையில் விற்பனை செய்யப்படும் நகரை, பரை, நெத்திலி உள்ளிட்ட மீன்களும், அதே போல் கிளாத்தி, சீலா, மாவுலா, கிளி, பாறை, முண்டகண்ணி பாறை, கட்டா, சூவாரை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மீன்கள் வரத்து எதிர்பார்த்த அளவு கிடைத்துள்ளதால் மீனவர்கள் மகிழ்ச்சியுடன் கரை திரும்பினர். மீன்பிடி தடையால் கடந்த 60 நாட்களாக வெறிச்சோடி காணப்பட்ட தெற்குவாடி துறைமுகம் மற்றும் கடற்கரை பகுதியில் மீனவர்கள் பிடித்து வந்த மீன்களை இறக்கி எடைபோட்டு வியாபாரிகளிடம் வழங்குவதில் […] - [மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனை](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81/): -பதுளை நிருபர்- பதுளையில் பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து மாவா போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது. பதுளை நகரில் கடந்த சில நாள்களாக பாடசாலை மாணவர்களுக்கு (மாவா) என அழைக்கப்படும் ஒருவகை போதைப்பொருளை விற்பனைச் செய்த ஹாலி எல பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய நபர் பதுளை பிரதான பஸ் நிலையத்தில் வைத்து இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். பதுளை விசேட பொலிஸ் பிரிவிற்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, பதுளையில் குற்றப்புலனாய்வு பிரிவினருடன் இணைந்து நடத்திய சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைதுச்செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரிடமிருந்து 20 மாவா போதைப்பொருள் பக்கட்டுகள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபரை இன்று பதுளை நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இவ்விடயம் தொடர்பான மேலதிக விசாரணையை முன்னெடுத்துள்ளதாகவும் பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். - [300 ரூபாய் மண்ணெண்ணெய் பெறுவதற்கு மக்கள் நள்ளிரவில் இருந்து காத்திருப்பு](https://minnal24.com/300-%e0%ae%b0%e0%af%82%e0%ae%aa%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%86%e0%ae%af%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%81/): -மன்னார் நிருபர்- மன்னார் நகர மத்தியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நீண்ட நாட்களுக்கு பின்னர் இன்று வியாழக்கிழமை  மண்ணெண்ணெய் விநியோகிக்கப்பட்டு வரும் நிலையில் நேற்று நள்ளிரவு முதல் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மண்ணெண்ணையை பெற்று வருகின்றனர். குறிப்பாக ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கு 300 ரூபாய்க்கான மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், மண்ணெண்ணெய் விநியோகத்தில் முரண்பாடுகள் தோற்றம் பெறாத வகையில் செயற்பாடுகளை மேற்கொள்ள மன்னார் பிரதேச செயலாளரால் அப்பகுதியில் கடமையாற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம சேவகர்கள் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு கடமைக்கு அழைக்கப்பட்டு, அவர்களால் எரிபொருள் விநியோகம் மேற்பார்வை செய்யப்படுவதுடன் பொலிஸாரும், இராணுவத்தினரும் மேலதிக பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். நீண்ட நாட்களுக்கு பின்னர் மன்னாரில் மண்ணெண்ணெய் விநியோகம் இடம் பெற்று வருகின்ற நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மண்ணெண்ணெய் பெற்று வருகின்றனர். - [அம்பாறை மாவட்டத்திலே விழிப்பூட்டல் வேலை திட்டங்கள் தீவிரம்](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b1%e0%af%88-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4/): -கல்முனை நிருபர் பண்டாரகம பிரதேசத்தில் அட்டுலுகம பகுதியை சேர்ந்த 09 வயது சிறுமி பாத்திமா ஆயிஷா படுகொலையை தொடர்ந்து பிள்ளைகளை பாதுகாப்போம் என்கிற விழிப்பூட்டல் வேலை திட்டம் சமூக சேவைக்கான நட்புறவு ஒன்றியத்தால் ஆரம்பித்து வைக்கப்பட்டு உள்ளது. இதற்கு அமைய, அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் பிள்ளைகளுக்கு விழிப்பூட்டல் செயலமர்வுகளை ஒன்றியம் மேற்கொள்ள தொடங்கி உள்ளது. கல்முனையில் தரம் 07, 08 மாணவர்களுக்கு ஒன்றியத்தால் நடத்தப்பட்ட சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான சிறப்பு விழிப்பூட்டல் கருத்தரங்கு வரவேற்பை பெற்று உள்ளது. இதில் ஒன்றியத்தின் தலைவர் ஏ. றோஸான் முஹம்மத் வளவாளராக கலந்து கொண்டு பேசியபோது, தற்போது நாடு பூராவும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் கூடுதலாக இடம்பெற்று வருகின்றன, படுகொலைகள்கூட இடம்பெற்று உள்ளன, தற்கொலைகளும் நடக்கின்றன, சிறுவர் சமுதாயம் பாதுகாக்கப்பட வேண்டும், அதே போல சிறுவர்கள் மிகுந்த சுய விழிப்புடன் செயற்பட வேண்டும் என்றார். - [மகனை ஆற்றில் தள்ளிவிட்டு தானும் உயிரை மாய்க்க முயன்ற தாய் கைது](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%95%e0%ae%a9%e0%af%88-%e0%ae%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81/): ஆற்றில் தனது ஐந்து வயது மகனை தள்ளிவிட்டு, தானும் ஆற்றில் குதித்து உயிரை மாய்க்க முயன்ற பெண்ணொருவரை வத்தளை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் நேற்று புதன்கிழமை இரவு வத்தளை -ஹெந்தல – கதிரான பாலத்துக்கு அருகில் களனி ஆற்று பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த பெண் நேற்று இரவு 7.30 அளவில் தனது மகனை தள்ளிவிட்டு, ஆற்றில் குதிக்க முற்பட்டபோது, வீதியால் பயணித்த நபரொருவர் அவரை தடுத்து நிறுத்தியுள்ளார். இதனையடுத்து, அவர் ஹெந்தலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், ஆற்றில் தள்ளிவிடப்பட்ட சிறுவனை கண்டுபிடிக்க கடற்படையினர் மற்றும் பொலிஸார் தேடுதல் பணிகளை முன்னெடுத்துள்ளனர். - [எரிபொருள் வரிசையில் நின்ற சாரதி ஒருவர் உயிரிழப்பு](https://minnal24.com/%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d/): எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்த சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாணந்துறை – வேகட பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாகவே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. முச்சக்கரவண்டி சாரதியான 55 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. அவர், எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்துள்ளார், எனினும் குறித்த சாரதி உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். - [நாடு முழுவதும் மழையுடனான வானிலை](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b4%e0%af%81%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b4%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%ae%be-3/): நாட்டின் தென்மேற்கு பகுதிகளான மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் அடுத்த சில நாட்களில் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில், தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படும் அபாயத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. - [வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை கடிதங்களுடன் தபால் ஊழியர் கைது](https://minnal24.com/%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%b5%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d/): -நுவரெலியா நிருபர்- பொகவந்தலாவை தபால் நிலையத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவரது வீட்டில் இருந்து ஒரு தொகை கடிதங்கள் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளதோடு குறித்த சம்பத்துடன் தொடர்புடைய ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொகவந்தலாவை கொட்டியாக்கலை கீழ்ப்பிரிவு தோட்டத்தில் உள்ள வீடு ஒன்றில் புகையிலை தூள் இருப்பதாக கிடைத்த தகவலுக்கு அமைய குறித்த உத்தியோகத்தரின் வீட்டை சோதனை இட்ட போதே ஒரு தொகை கடிதங்கள் மீட்கப்பட்டதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சாந்தபண்டார தெரிவித்தார். பொகவந்தலாவ கொட்டியாகலை பகுதியில் உள்ள மக்களுக்கு பெப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களில் மக்களுக்கு வந்த கடிதங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொகவந்தலாவ கொட்டியாக்கலை கீழ்ப்பிரிவு தோட்டத்தை சேர்ந்தவர் என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது. சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தொடர்பில் பொகவந்தலாவ தபால் நிலைய முகாமையாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதோடு, சந்தேக நபரை ஹட்டன் நீதிவான் நீதிமன்றில் […] - [அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95-3/): எதிர்வரும் நாட்களில் சந்தைகளில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும், என அத்தியாவசிய உணவுப்பொருள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, அரிசி, பருப்பு, சீனி, உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், செத்தல் மிளகாய், கடலை மற்றும் நெத்தலி ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்படக் கூடும் என அச்சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த மே மாதம் 6 ஆம் திகதி முதல் அத்தியாவசிய பொருள் இறக்குமதியின் போது இதுவரை பயன்படுத்தப்பட்ட திறந்த கணக்கு அடிப்படையிலான முறையை நிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. அந்த முறைமை நிறுத்தப்பட்டதன் மூலம் அத்தியாவசிய பொருள் இறக்குமதியின் போது டொலர் பெற்றுக் கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அத்தியாவசிய பொருள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.   - [ஓய்வு பெறுகின்றது 27 வயதான இன்டர்நெட் எக்ஸ்புளோரர்](https://minnal24.com/%e0%ae%93%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%af%81-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%a4%e0%af%81-27-%e0%ae%b5%e0%ae%af%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9/): ஜீன் 15 இன்று புதன்கிழமையோடு இன்டர்நெட் எக்ஸ்புளோரர் (Internet Explorer) ஓய்வுபெறுவதாக மைக்ரோசொப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. இன்றோடு அதன் பழமையான உலாவி முற்றிலும் நிறுத்தப்படும் என மைக்ரோசொப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. 27 வயதான இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 1995 ஆம் ஆண்டு விண்டோஸ் 95 இற்கான அறிமுகப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.   - [சீனா-பீஜிங்கில் வேகமாக பரவும் கொவிட் 19 தொற்று : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை](https://minnal24.com/%e0%ae%9a%e0%af%80%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%aa%e0%af%80%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%87%e0%ae%95%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95-%e0%ae%aa/): சீனா-பீஜிங் நகரில் கொவிட்-19 தொற்று மிக வேகமாக பரவுவதாக அந்த நாட்டு அதிகாரிகள் எச்சரித்துள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அங்கு கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது அதன்படி, முதற்கட்டமாக பீஜிங்கில் உள்ள 22 மில்லியன் பேரும் கொவிட்-19 பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக அந்த நாட்டு சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த நான்கு நாட்களில் பீஜிங்கில் 287 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. - [பொது அமைப்புகள் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை](https://minnal24.com/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a4%e0%af%81-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d/): -கிளிநொச்சி நிருபர்- காணி கொள்ளையை நிறுத்துவோம் இனம் மற்றும் மதங்களுக்கிடையிலான முரண்பாடுகளை தடுப்போம், என வட மாகாண பெண்கள் குரல் உட்பட பல்வேறு அமைப்புக்களை உள்ளடக்கிய அமைப்பு ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கையானது தற்பொழுது பொருளாதார ரீதியாக பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளது. நாட்டு மக்களின் வருமானம் இழக்கப்பட்டு அந்நிய செலாவணி குறைந்து பொருளாதார நெருக்கடி தீவிரமாக்கப்பட்டுள்ளது. நாட்டுக்கு உணவை வழங்கும் விவசாய, மீனவ, தொழிலாளர் மற்றும் தோட்டப்புற மக்களுக்கு மட்டுமல்லாது அனைத்து மக்களும் மிகவும் துன்பப்படுகின்றார்கள். மக்களுக்கு மிக முக்கியமான எரிவாயு, எரிபொருட்கள் மற்றும் மருந்து வகைகள் இல்லாமல் வரிசைகளில் நின்று பல்வேறு வகையிலான துன்பங்களுக்கு முகங்கொடுக்கின்ற இந்நிலைமையில், நாட்டின் அதிகாரத்திலுள்ளவர்கள் மேற்கூறப்பட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்க வேண்டிய சூழ்நிலையில் அதனை நடைமுறைப்படுத்தாமல் பாதகமான கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்றனர். இந்நிலைமையில் நாடு என்ற ரீதியில் ஒன்றிணைந்து போராட்டத்தை வெற்றிகொள்ள வேண்டிய சூழ்நிலைமையில் மக்களை பல்வேறு விதமான […] - [அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 64 பேர் கிழக்கு கடற்பரப்பில் கைது](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%b5%e0%af%81%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%87%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1-2/): இலங்கையிலிருந்து கடல் மார்க்கமாக சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயற்சித்த குற்றச்சாட்டில் 64 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கிழக்கு கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட கண்காணிப்பு நடவடிக்கையின்போதே குறித்த 64 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ​ அதன்படி, கிழக்கு கடற்படை கட்டளைப் பிரிவு அதிகாரிகள் இன்று புதன்கிழமை திருகோணமலை கடற்பரப்பில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோது, சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த பல நாள் மீன்பிடி படகொன்றை அவதானித்துள்ளனர். அதன்போது, இலங்கையில் இருந்து கடல் வழியாக சட்டவிரோதமாக பல நாள் மீன்பிடி படகில் பயணித்த, 7 பேர் உட்பட 50 ஆண்கள், 11 பெண்கள் மற்றும் 3 சிறுவர்கள் என 64 பேர் கடற்படையினரின் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் திருகோணமலை, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.   - [கிழக்கு மாகாண பாடசாலை அதிபர்கள் சிலர் நாட்டு நிலைமையை கருத்திற் கொள்ளவில்லை என குற்றச்சாட்டு](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%af%88-%e0%ae%85%e0%ae%a4/): -கல்முனை நிருபர்- நாட்டின் சூழ்நிலையினைக் கருத்திற் கொண்டு பாடசாலைகளில் நடைமுறையிலுள்ள கைவிரல் அடையாள இயந்திர நடைமுறையினை ரத்துச் செய்யுமாறு, இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் கல்வியமைச்சுக்கு கோரிக்கையொன்றை விடுத்துள்ளது கல்வியமைச்சுக்கு சங்கம் அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, எரிபொருள் சிக்கல் காரணமாக தூர இடங்களில் உள்ள ஆசிரியர்கள் பாடசாலைக்களுக்குச் செல்வதில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். பொதுப் போக்குவரத்துக்காகப் பயன்பாட்டிலுள்ள வாகனங்களின் குறைவு மற்றும் தாமதம் காரணமாக உரிய நேரத்திற்கு பாடசாலைக்கு செல்ல முடியாத நிலை தோன்றியுள்ளது. பாடசாலை சென்று பதிவிடும் நேரத்தை கைவிரல் அடையாள இயந்திரங்கள் கணக்கிடுவதனால் தேவையற்ற கட்டாய விடுமுறையினை ஆசிரியர்கள் அனுவிக்க வேண்டி வருகின்றது. மலையிலிருந்து விழுந்தவனை மாடேறி மிதத்தது போன்ற நிலைக்கு ஆசிரியர்கள் ஆளாகி வருகின்றனர். இந்நிலை தொடருமானால் நல்லதொரு மனநிலையில் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடமுடியாத சூழ்நிலையேற்படுகிறது. இந்நிலையிலிருந்து விடுவிப்பதற்காக பாடசாலைகளில் நடைமுறைகளில் உள்ள குறிப்பாக வடக்கு, கிழக்கு பாடசாலைகளில் […] - [அகில இலங்கை சைவ மகாசபை விடுத்துள்ள வேண்டுகோள்](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%9a%e0%af%88%e0%ae%b5-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%be%e0%ae%9a%e0%ae%aa%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf/): -கிளிநொச்சி நிருபர்- இத்துணை பொருளாதார நெருக்கடியிலும் வல்லாதிக்க பெளத்த மேலாண்மையை கைவிடாத மோசமான மனநிலையை, இத்தீவிலிருந்து ஒழிக்கப்பட முற்போக்கு சக்திகள் முன்வர வேண்டும், என அகில இலங்கை சைவ மகா சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பில் அகில இலங்கை சைவ மகாசபை வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கிழக்கு திருகோணமலை மண்ணில் அரங்கேற்றப்பட்ட விடயங்கள் இன்று வன்னி முல்லைத்தீவு மண்ணில் தொடர்கிறது . குருந்தூர் மலை ஆதி சிவபூமி, திருமலையும் முல்லையும் சந்திக்கின்ற மணலாறு இதயபூமிக்கு அண்மித்ததாக உள்ளதே குருந்தூர் மலை. பண்டார வன்னியன் ஆண்ட வன்னி அரசினதும், கூழங்கை சக்கரவர்த்தி எனும் மாகனது ஆட்சிக் காலத்திலும் முன்னைய குளக்கோட்டன் உட்பட்ட பண்டை தமிழ் மன்னர் ஆட்சி காலத்திலும் இந்த பெருநிலப்பரப்பு மிகவும் உன்னதமான சைவத் தமிழ் பண்பாட்டு செழுமையுடன் காணப்பட்டத்திற்கு இலக்கிய, தொல்லியல் வரலாற்று ஆதாரங்கள் பல உள்ளன. இவற்றை எல்லாம் மறுதலித்து […] - [அவசர கூட்டத்தை கூட்டுமாறு பாராளுமன்ற உறுப்பினர் ஜனா மட்டு.அரச அதிபரிடம் கோரிக்கை](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%b0-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%ae%be/): மட்டக்களப்பு மாவட்டத்தில் அவசரமாகத் தீர்க்கப்படவேண்டிய மக்களது பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கான அவசரக் கூட்டத்தினை ஏற்பாடு செய்யுமாறு பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) மாவட்ட அரசாங்க அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று புதன்கிழமை அரசாங்க அதிபரிடம் கடிதம் மூலமாக விடுக்கப்பட்டுள்ள இக் கோரிக்கையில், நாட்டின் இன்றைய பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பெரும் சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். உணவு, அன்றாடத் தேவைகள், எரிபொருள், எரிவாயு என அனைத்துக்கும் பெரும் இறுக்கமான பிரச்சினைகளுக்கு உள்ளாகியிருக்கும் மக்களுக்கு நிம்மதியைக் கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். முக்கியமாக விவசாயிகளைப் பொறுத்தவரையில் இரசாயன உரப்பினைச்சினை அவர்களது வாழ்வாதாரமான வேளாண்மை மற்றும் பயிர்ச்செய்கையின் விளைச்சலை வீழ்ச்சியடையச் செய்திருக்கிறது. ஆரம்பித்திருக்கும் இப் போகத்திலும் உரம் சரியான முறையில் விநியோகிக்கப்படுமா என்பது புரியாமலிருக்கிறது. இதற்கு நம்முடைய மட்டக்களப்பு மாவட்டம் மாத்திரம் விதிவிலக்கானதல்ல. இந்த நிலையில் மக்களுக்கான நிவாரணங்கள், உதவிகள் சரியான முறையில் அவர்களைச் சென்றடைவதற்கான வழிவகைகள் மேற்கொள்ளப்படவேண்டும். மக்களுக்குத் தேவையான பொருட்கள் […] - [உள்வாங்கிய மீன்பிடி துறைமுகம் கடல் : அச்சத்தில் மீனவர்கள்](https://minnal24.com/%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%a4%e0%af%81%e0%ae%b1%e0%af%88/): -மன்னார் நிருபர்- ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுக கடல் பகுதி வழக்கத்தை விட இன்று புதன்கிழமை காலை உள்வாங்கி உள்ளதால் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாட்டுப்படகுகள் தரைதட்டி உள்ளதோடு, அடிக்கடி கடல் உள்வாங்கியதால் மீனவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசால் அறிவித்துள்ள மீன்பிடி தடை காலம் நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்த நிலையில் ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். மீன் பிடிக்க சென்ற ஒரு சில மீன்பிடி விசைப் படகுகள் மீன் பிடித்து விட்டு இன்று புதன்கிழமை காலை மீன்களை ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திற்கு எடுத்து வந்தனர். இந்நிலையில், மீன் பிடித்து வந்த மீன்பிடி படகுகள் கடல் உள்வாங்கியதால் தரை தட்டி படகு சேதமடையும் என்ற அச்சத்தில் படகை மீனவர்கள் துறைமுகம் கொண்டு வந்தனர். எனவே, தமிழக அரசு பழமையான ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தை உடனடியாக தூர்வாரி பேரிடர் காலங்களில் படகுகளை பாதுகாப்பாக நிறுத்துவதற்கு வழி வகை […] - [வகுப்பறை மீது முறிந்து விழுந்த தென்னை மரம் : 10 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி](https://minnal24.com/%e0%ae%b5%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b1%e0%af%88-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5/): -பதுளை நிருபர்- தென்னை மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் காயமடைந்த 10 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெலிமட இந்துக் கல்லூரில் இன்று புதன்கிழமை காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பாடசாலைக்கு பக்கத்து காணியில் இருந்த மிகப்பழமையான தென்னை மரம் ஒன்று முறிந்து வகுப்பறையின் மீது விழுந்ததில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இதில் வெலிமட இந்துக்கல்லூரியில் தரம் 6 இல் கல்வி கற்கும் 10 மாணவர்கள் காயமடைந்து வெலிமட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பில் வெலிமட பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். - [எரிபொருள் விநியோகம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்](https://minnal24.com/%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%af%e0%af%8b%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0/): எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் மாபா பத்திரண தெரிவித்துள்ளார். அதன்படி, இன்று புதன்கிழமை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன இணையத்தளம் மற்றும் செயலி என்பனவற்றின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மாத்திரம் எரிபொருள் விநியோகிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. எனவே, ஏனைய எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளுக்காக வரிசைகளில் காத்திருப்பதைத் தவிர்க்குமாறும், அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். - [கச்சா எண்ணையின் விலை பாரியளவில் அதிகரிப்பு](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be-%e0%ae%8e%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0/): உலக சந்தையில் கச்சா எண்ணெய் பரல் ஒன்றின் விலை மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி, நேற்று செவ்வாய்க்கிழமை கச்சா எண்ணெய் பரல் ஒன்றின் விலை 124 அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது. உலக சந்தையில் மார்ச் மாதத்துக்குப் பின்னரான காலப்பகுதியில் பதிவான அதிகபட்ச கச்சா எண்ணெய் விலை இதுவாகும். - [எரிபொருள் விலையை குறைக்க கோரி பழங்குடியின மக்கள் ஆர்ப்பாட்டம்](https://minnal24.com/%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%af%88-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/): தென் அமெரிக்காவின் வடமேற்கு முனையில் அமைந்துள்ள நாடான எக்குவடோரில் உள்ள பழங்குடியின மக்களும், விவசாயிகளும் இன்று செவ்வாய்க்கிழமை கோடோபாக்ஸி மாகாணத்தில் உள்ள சான் ஜுவான் டி பாஸ்டோகால்லேயில் சாலையை மறித்து ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர். எக்குவடோரின் முக்கிய பூர்வீக இயக்கம், ஜனாதிபதி கில்லர்மோ லாஸ்ஸோவின் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களின் சுழற்சியைத் தொடங்கியுள்ளது. எரிபொருள் விலையை குறைக்கக் கோரி பல மாகாணங்களில் சாலைகளை மறித்து ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுவதாக, உள்ளூர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். - [மட்டு.ஏறாவூர் பொலிஸாரினால் பொசன் பண்டிகை கொண்டாடப்பட்டது](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%8f%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b5%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b8%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%be/): -வாழைச்சேனை நிருபர்- மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸாரினால் பொசன் பண்டிகை சிறப்பாக இன்று செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஹர்ச ஜெயசில்வா இதனை ஏற்பாடு செய்திருந்தார். வீதியால் சென்றோர் வந்தோர்கள் அழைக்கப்பட்டு சகலருக்கும் இனிப்பு பண்டங்கள் பரிமாறப்பட்டதுடன், குளிர்பானமும் வழங்கப்பட்டது. புரிந்துணர்வு நல்லிணக்கம் ஆகியவற்றை அடிப்டையாக கொண்டு புத்தபெருமானின் நற்சிந்தனையின்படி இவ் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. - [12 மாவட்டங்களுக்கு வானிலை எச்சரிக்கை](https://minnal24.com/12-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88/): வளிமண்டலவியல் திணைக்களம் 12 மாவட்டங்களுக்கு வானிலை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, ஊவா, கிழக்கு, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பல இடங்களில் கடுமையான மின்னலுடன், இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இந்த பகுதிகளில் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும், அதே நேரத்தில் இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு, வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. - [நிறைவடைகிறது மீன்பிடித் தடைக்காலம் : கடலுக்குச் செல்ல மீனவர்கள் ஆயத்தம்](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%b5%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d/): இன்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவுடன் மீன்பிடித் தடைக்காலம் நிறைவடைவதையொட்டி, கடலுக்குச் செல்ல ராமேஸ்வரம் மீனவர்கள் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. மீன் பிடி தடை காலத்தின் போது கிடப்பில் போடப்பட்ட இருநாட்டு மீனவர் பேச்சுவார்த்தை நடைபெறும் என, மீனவர்கள் எதிபார்த்து இருந்த நிலையில் பேச்சுவார்த்தை நடைபெறாததால் மீனவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். ஆண்டுதோறும் ஏப்ரல், மே மற்றும் ஜுன் மாதங்களில் வங்கக் கடல் பகுதியில் மீன்களின் இனப்பெருக்கம் அதிகளவில் இருப்பதாக கடல்சார் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்தது. இதையடுத்து, கடந்த 2017-ம் ஆண்டு முதல் இத்தடைக்காலம் 60 நாட்கள் மீன் பிடி தடைகாலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான தடைக்காலம் கடந்த ஏப்ரல் 15-ம் தேதி தொடங்கியது. மீன்பிடி தடைக்காலத்தில், திருவள்ளூர் மாவட்டம் தொடங்கி, கன்னியாகுமரி வரையுள்ள கடற்பகுதிகளில், விசைப் படகு மீனவர்கள் ஆழ்கடலுக்குச் சென்று மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தடைக்காலம் இன்று நள்ளிரவுடன் முடிவடைகிறது. தடைக்காலம் முடிவதை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், பாம்பன், […] - [வைத்தியரொருவரின் வீடு உடைக்கப்பட்டு நகைகள் திருட்டு](https://minnal24.com/%e0%ae%b5%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%81-%e0%ae%89%e0%ae%9f/): யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில் உள்ள வைத்தியரொருவரின் வீடு உடைக்கப்பட்டு 8 பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளன. இச்சம்பவம் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. தெல்லிப்பழை மருத்துவமனையில் சேவையாற்றும் வைத்தியரொருவரின் வீட்டிலேயே இந்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். - [மரவள்ளி கிழங்கு துவையல் தானத்திற்காக 1500 கிலோ மரவள்ளி கிழங்கு கொள்வனவு](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d/): -கல்முனை நிருபர்- இராணுவத்தின் அம்பாறை மாவட்ட கட்டளை தளபதி பிரிகேடியர் சந்திரா அபேகோனின் அறிவுறுத்தலுக்கு அமைய விஜயபாகு காலாட்படை படை பிரிவு கட்டளை தளபதி லெப்டினண்ட் கேணல் தர்ஷன சிறிசேனவின் ஒழுங்கமைப்பில் காரைதீவு பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை பொசன் பண்டிகை வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டது. இதன் முக்கிய அம்சமாக காரைதீவு முகாம் பொறுப்பதிகாரி மேஜர் சமில் நிசான், நிந்தவூர் முகாம் பொறுப்பதிகாரி கப்டன் கசுன் சில்வா ஆகியோரின் பகீரத முயற்சியில் இம்மாவட்டத்தை சேர்ந்த பொதுநல செயற்பாட்டாளர்களின் பங்களிப்பில் பல நூற்று கணக்கான பொதுமக்களுக்கு மரவள்ளி கிழங்கு துவையல் தானம் செய்யப்பட்டது. முகாமை அண்டி பிரதான வீதி ஓரமாக பந்தல் அமைத்து வீதியால் வந்தவர்கள், சென்றவர்கள் ஆகியோரை அழைத்து தாமரை இலையில் மரவள்ளி கிழங்கு துவையலை பரிமாறினார்கள். இவ்வைபவத்தில் கல்முனை ஸ்ரீ சுபத்திராராம விகாராதிபதி ரன்முத்துக்கல சங்கரரட்ண தேரர், நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எம். ஏ. எம். தாஹீர் ஆகியோருடன் பங்களிப்புகள் வழங்கிய […] - [துப்பாக்கிச்சூட்டில் இளைஞன் பலி](https://minnal24.com/%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0/): வத்தளை – எலக்கந்த பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் , ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மட்டக்குளி அலி-வத்தே பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக, பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். - [அரச ஊடக நிறுவன பதவிகளில் முஸ்லிம்கள் முற்றாக புறக்கணிப்பு](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a-%e0%ae%8a%e0%ae%9f%e0%ae%95-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%a9-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/): -கல்முனை நிருபர்- அரசாங்க ஊடக நிறுவனங்களுக்கு புதிய தலைவர்கள் மற்றும் பணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர், ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன மேற்படி நியமனங்களை ஒருசில தினங்களுக்கு முன்னர் வழங்கி வைத்தார். இந்த நியமனங்களில் முஸ்லிம் தரப்பு முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. ஊடகத்துறையிலும் கல்வித் துறையிலும் ஏனைய கலை, இலக்கிய துறைகளிலும் எத்தனையோ தகுதியான சிரேஷ்டத்துவம் கொண்டவர்களும் கல்வியியலாளர்களும் முஸ்லிம் சமுகத்துக்குள் இருக்கத்தக்கதாக இந்த புறக்கணிப்பு இடம்பெற்றுள்ளமை திட்டமிட்ட சதியாகவே முஸ்லிம் சமுகத்தினரால் பார்க்கப்படுகின்றது, என அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்கா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் கடந்த பல வருட காலமாக இலங்கை சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினராக இருந்து வந்த புரவலர் ஹாசிம் ஒமரும் இந்த முறை எவ்வித பதவிகளிலும் நியமிக்கப்படவில்லை. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தை பொறுத்தவரை முஸ்லிம் சேவையில்  ஒலிபரப்புக்கு பெருந்தொகை பணத்தை வழங்கி அனுசரனை வழங்கும் பிரபல ஆடை நிறுவனம் தனது வர்த்தக நாமத்தை […] - [தாயை கடத்தி வைத்து மகளிடம் பணம் கேட்ட நால்வர் கைது](https://minnal24.com/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%b5%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%9f/): வவுனியா-பூவரசங்குளம் பகுதியில் பெண்ணொருவரை கடத்திச் சென்று பணம் கேட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில், குறித்த நபர்கள் பெண் ஒருவரை கடத்திச் சென்று வீடொன்றில் மறைத்து வைத்து விட்டு, குறித்த பெண்ணின் மகளுக்கு அழைப்பை ஏறபடுத்தி அவரது தாயாரை விடுவிக்க வேண்டுமென்றால் ஐந்து இலட்சம் தர வேண்டும் என கேட்டுள்ளனர். மேலும் தாம் கேட்ட ஐந்து இலட்சத்தை தராவிட்டால் கடத்தப்பட்டுள்ள பெண் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்படும் எனவும் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். அதனைத்தொடர்ந்து, கடத்தப்பட்ட பெண்ணின் மகள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். அதன்படி, பணத்தை பெற வருமாறு குறித்த சந்தேக நபர்கள் கடத்தப்பட்ட பெண்ணின் மகள் மூலமாக அழைக்கப்பட்டனர். பின்னர் பணத்தை பெற குறித்த சந்தேக நபர்கள் வந்த வேளை சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகநபர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கடத்தப்பட்ட பெண்ணையும் பொலிஸார் மீட்டுள்ளனர். சந்தேக நபர்கள் வவுனியா, கிளிநொச்சி […] - [தரம் ஒன்றிற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய திருத்தப்பட்ட சுற்றறிக்கை](https://minnal24.com/%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%92%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88/): 2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளில் தரம் ஒன்றிற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய திருத்தப்பட்ட சுற்றறிக்கையை கல்வி அமைச்சு தயாரித்துள்ளது. அதிபர்கள், சுற்றறிக்கை திருத்தக் குழு, அமைச்சின் புலனாய்வுப் பிரிவு, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு, தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளிட்ட பல்வேறு தரப்பினரால் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை கருத்திற்கொண்டு இந்த சுற்றறிக்கை திருத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு முதல் தரம் ஒன்றிற்கு மாணவர்களை அனுமதிப்பதற்காக அமைச்சின் திருத்தப்பட்ட சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளை கடைபிடிக்குமாறு இந்த முன்மொழிவில் கோரப்பட்டுள்ளது. - [மட்டு.வந்தாறுமூலை ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய திருக்குளிர்த்தி திருச்சடங்கு உற்சவம்](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%82%e0%ae%b2%e0%af%88-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af%80-%e0%ae%95/): -வாழைச்சேனை நிருபர்- மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான வந்தாறுமூலை ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தின் திருக்குளிர்த்தி திருச்சடங்கு உற்சவம், நேற்று திங்கட்கிழமை மாலை பக்தர்களின் ஆரோகரா கோசத்துடனும், சிலம்பு ஒலியுடன் திருக்குளிர்த்தி ஆடல் வைபவத்துடன் நிறைவுபெற்றது. கடந்த மாதம் 9 ஆம் திகதி அன்று திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி வந்தாறு மூலை 7 குடி மக்களின் பங்களிப்புடன் தொடர்ந்து 5 நாட்கள் திருச்சடங்கு நடைபெற்று நேற்று மாலை வைகாசி திங்கள் கிழமையன்று திருக்குளிர்த்தி வைபவத்துடன் திருச்சடங்கு இனிது நிறைவு பெற்றது. சாடிப்பானை எடுத்து பக்கப்பானைகள் வைத்தலுடன் பொங்கல் வைபவம் இடம்பெற்றது. அத்தோடு, உடுக்கு காவியம் பாடப்பட்டு தொடர்ந்து அம்பாளுக்கு விசேட பூசை இடம்பெற்று, அம்பாள் உள் வீதி வலம் வந்து பக்தர்கள் புடை சூழ வெளியில் உள்ள திருக்குளிர்த்தி பாடும் இடத்திற்கு சென்று, திருக்குளிர்த்தி பாடல் பாடப்பெற்று திருக்குளிர்த்தி வைபவம் நடைபெற்று அம்பாள் பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்கி, […] - [அரச துறையினருக்கு வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a-%e0%ae%a4%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf/): அரச துறையினருக்கு வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை தினமாக அறிவிக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக, அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். இந்நடைமுறை இந்த வாரம் முதல் அமுலாகும். எனினும், இதில் சுகாதாரம், மின்சாரம் மற்றும் எரிசக்தி, கல்வி, பாதுகாப்பு துறைகள் மற்றும் பிற அத்தியாவசிய சேவைகள் அடங்காது, எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். - [நாட்டின் பல பாகங்களில் மழையுடனான வானிலை](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b2-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae-3/): நாட்டின் பல பாகங்களில் இன்று மழையுடனான வானிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யும். ஊவா, கிழக்கு, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். சில பிரதேசங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. இதேவேளை, பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் அபாயத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை எச்சரித்துள்ளது. - [எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டீசல் பதுக்கல் : அரச அதிபரின் தலையீட்டால் விநியோகம்](https://minnal24.com/%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%af-7/): -கிளிநொச்சி நிருபர்- யாழ்.கொக்குவிலில் உள்ள தனியார் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை இரவு டீசல் இருந்தும் விநியோகிக்க மறுத்ததால் முறுகல் நிலை ஏற்பட்டது. குறித்த எரிபொருள் நிலையத்தில் டீசல் இருந்த நிலையில் தமக்கு இசைவான வாகனங்களுக்கு விநியோகம் செய்துவிட்டு டீசல் முடிவடைந்து விட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. குழப்பமடைந்த ஏனைய வாகன சாரதிகள் டீசல் இருக்கின்ற நிலையில் தமக்கு விநியோகம் செய்யுமாறு கேட்டனர். குறித்த விடயம் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசனின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் டீசல் இருப்பதாக தெரிவித்து வாகன சாரதிகளுக்கு டீசல் விநியோகம் செய்யப்பட்டது. இந்நிலையில், அங்கு நின்ற வாகன சாரதிகள் கருத்து தெரிவிக்கையில், குறித்த எரிபொருள் நிலைய உரிமையாளர் தமக்கு வேண்டிய வர்த்தக நிலைய வாகனங்களுக்கும் முகவர்களுக்கும் இரவு நேரங்களில் எரிபொருள் விநியோகம் செய்வதாகத் தெரிவித்தனர். - [யாழ்ப்பாணம் - பாண்டிச்சேரி இடையில் போக்குவரத்து சேவை](https://minnal24.com/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%87/): யாழ்ப்பாணத்திற்கும் பாண்டிச்சேரிக்கும் இடையில் பயணிகள் மற்றும் சரக்கு படகுகளை போக்குவரத்தில் ஈடுபடுத்துவதற்கும், பலாலி – திருச்சி விமான நிலையங்களுக்கு இடையிலான விமான சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்குமான, சாதகமான முடிவுகள் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவையில் எடுக்கப்பட்டுள்ளதாக, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அதனடிப்படையில், விரைவில் குறித்த போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இதனூடாக மண்ணெண்ணை, டீசல் போன்ற எரிபொருட்களையும், உரம், பால்மா, மருந்துப் பொருட்கள் உட்பட்ட அத்தியாவசியப் பொருட்களையும், தேவையானளவு பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும் என தெரிவித்துள்ளார். மேலும், இதுதொடர்பான முயற்சிகளுக்கு பூரணமான ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் துறைசார் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா ஆகியோருக்கு நாட்டு மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.   - [வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு பதிவு : அரிசி விற்பனை செய்வதற்கு தடை](https://minnal24.com/%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%95-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%8e/): -பதுளை நிருபர்- இன்று திங்கட்கிழமை காலை பதுளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் வர்த்தக நிலையங்கள் நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகளினால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்தமை, விலைப்பட்டியல் காட்சி படுத்தப்படாமை தொடர்பான குற்றச்சாட்டில் நான்கு வர்த்தக நிலையங்களுக்கு எதிராக எதிர்வரும் 27 ம் திகதி வழக்கு தொடரப்பட்டுள்ளதோடு, மறு அறிவித்தல் வரை நான்கு விற்பனை நிலையங்களுக்கும் அரிசி விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. - [தொடரும் எரிபொருள் தட்டுப்பாடு : நீண்டு கொண்டே போகும் வரிசை](https://minnal24.com/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa/): -கிளிநொச்சி நிருபர்- வடமராட்சி பிரதேசத்திற்க்கு உட்பட்ட நெல்லியடி, கிராம கோடு ஆகிய எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல் நிரப்புவதற்காக மக்கள் இன்றும் மிக நீண்ட வரிசையில் காத்திருப்பதை அவதானிக்க முடிந்தது. கடந்த இரு நாட்களாக வடமராட்சியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல் இல்லாத நிலையில், இன்று திங்கட்கிழமை பெற்றோல் விநியோகம் இடம் பெற்ற நிலையிலேயே, இவ்வாறு நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்து பெற்றோல் நிரப்பி சென்றதை அவதானிக்க முடிந்தது. நெல்லியடி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பிரதேச செயலகம் ஊடாக பதிவு செய்யப்பட்ட பெற்றோல் வாகனங்களுக்குரிய அட்டைக்கு ரூபாய் 2500 இற்கு பெற்றோல் வழங்கப்பட்டதுடன், அவ்வாறு பிரதேசத்திற்கு வெளியே இருந்து செல்கின்ற அல்லது பிரதேச செயலகத்தில் பதிவு செய்யப்படாத வாகனங்களுக்கு ரூபாய் 500க்கு மட்டுமே பெற்றோல் விநியோகம் இடம் பெற்றது. இங்கும் மிக நீண்ட வரிசையில் காத்திருந்தே பெற்றோல் நிரப்பி சென்றமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, பபுலோலி பலநோக்கு கூட்டுறவு சங்கத்துக்கு உட்பட்ட […] - [மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞன் : போதை ஊசி ஏற்றி உயிரிழந்தாரா என சந்தேகம்](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d%e0%ae%ae%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b4-2/): -கிளிநொச்சி நிருபர்- உரும்பிராய் பகுதியில் உள்ள வீடென்றில் இணுவிலைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில், குறித்த இளைஞன் உரும்பிராய் பகுதியில் உள்ள வீடொன்றுக்கு அடிக்கடி சென்று வரும் நிலையில் நேற்று இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபரின் மரணம் தொடர்பில் பிரதேசவாசிகள் கருத்து தெரிவிக்கும் போது, குறித்த நபர் போதைவஸ்துப் பழக்கத்திற்கு அடிமையாகியவர் என அறியக் கிடைக்கும் நிலையில், அளவுக்கு அதிகமாக போதை ஊசி ஏற்றிய நிலையில் உயிர் இழந்தாரா? என்ற சந்தேகம் உள்ளதாக தெரிவித்தனர். எனினும், குறித்த நபரின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளிவராத நிலையில் சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. - [அதிக விலையில் அரிசி விற்ற விற்பனையாளர்கள் மீது வழக்குப்பதிவு](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d/): -மன்னார் நிருபர்- அரசாங்கத்தினால் அரிசிக்கு அதி உச்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்ட நிலையில் மன்னார் நகர் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களில் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிகமாக அரிசி விற்பனை மேற்கொண்ட வியாபாரிகள் மீது இன்று திங்கட்கிழமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மன்னார் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் பொலிஸார் இணைந்து முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, அரிசியின் நிர்ணய விலை காட்சிப்படுத்தாது, அரிசி விற்பனையில் ஈடுபட்டமை, நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிகமாக அரிசி விற்பனை செய்தவர்கள் மற்றும் அரிசியை பதுக்கி வைத்த சில வர்த்தகர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக வெள்ளை நாடு 220 ரூபாவிற்கும், சிவப்புபச்சை 210 ரூபாவிற்கும், சம்பா 230 ரூபாவிற்கும், வெள்ளப்பச்சை 220 ரூபாவிற்கும், விற்பனை செய்யும்படி அரசாங்கத்தினால் விலை நிர்ணயிக்கபட்டுள்ள நிலையில் குறித்த விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் மீது ஒரு லட்சம் தொடக்கம் ஐந்து […] - [நாளை மறுதினம் முதல் புதிய ரயில் சேவை](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf/): எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாளை மறுதினம் புதன்கிழமை முதல் புதிய ரயில் மற்றும் பாடசாலைகளுக்கான பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார். கொழும்பில் இருந்து கண்டி வரையான சொகுசுரக கடுகதி புதிய ரயில் சேவை ஒன்று நாளை மறுதினம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. நாளாந்தம் அதிகாலை 5.20 அளவில் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும். இந்த ரயில் காலை 8.14 அளவில் கண்டியை சென்றைடையும். மீண்டும் மாலை 4.50 அளவில் கண்டி ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு இரவு 7.40 அளவில் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை வந்தடையும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். களனி வெளிரயில் மார்க்கத்தில் புதிய ரயில் சேவை ஒன்றும் ஆரம்பிக்கப்படவுள்ளது. அவிசாவளை – வக ரயில் நிலையத்தில் இருந்து காலை 6.20 […] - [தீ வைத்து உயிரை மாய்த்துக்கொண்ட மனநலம் பாதிக்கப்பட்ட பெண்](https://minnal24.com/%e0%ae%a4%e0%af%80-%e0%ae%b5%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81/): -யாழ் நிருபர்- மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாசியப்பிட்டியில் வயோதிப பெண்ணொருவர் தீயிட்டு தற்கொலை செய்துள்ளார். சம்பவம் குறித்து தெரியவருகையில், 72 வயதுடைய குறித்த பெண் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தீயிட்டு தற்கொலை செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சடலம் மேலதிக விசாரணைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. - [சேலையில் கழுத்து இறுகி சிறுமி ஒருவர் உயிரிழப்பு](https://minnal24.com/%e0%ae%9a%e0%af%87%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%87%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%9a/): கந்தப்பளை – ஹைபொரஸ்ட் தோட்டத்தின் தனி குடியிருப்பு தொகுதியிலிருந்து உயிரிழந்த நிலையில் சிறுமியொருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்ட சிறுமி குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த, மூன்றாம் தரத்தில் கல்வி பயிலும் இராஜமாணிக்கம் விசாந்தினி (காவியா)  என அடையாளம் காணப்பட்டுள்ளார். வீட்டின் வாசல் பகுதியில் உள்ள கூரை கம்பத்தில் சேலை பட்டியில் கழுத்து இறுகியவாறு சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தினத்தன்று, சிறுமி தனது வீட்டுக்கு முன்பாக உள்ள முற்றத்தில் விளையாடி கொண்டிருந்ததாகவும், அதன்போது தாய் மலசலகூடத்துக்கு சென்றிருந்ததாகவும், பின்னர் மலசலகூடத்திலிருந்து வெளியே வந்து பார்த்த போது, சிறுமியின் கழுத்து சேலையில் இறுகி  உள்ளதை அவதானித்து, கூக்குரலிட்டு அயலவர்களை அழைத்ததாக சிறுமியின் தாயார் தெரிவித்துள்ளார். இதையடுத்து, சிறுமியின் கழுத்தில் இறுகியிருந்த பட்டி அகற்றப்பட்டு, சிறுமி ஹைபொரஸ்ட் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். எனினும், சிறுமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். - [இலங்கை மின்சார சபையின் தலைவர் பதவி விலகினார்](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0-%e0%ae%9a%e0%ae%aa%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4/): இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சீ. பெர்டினண்டோ பதவி விலகியுள்ளார். இலங்கையில் இரண்டு காற்றாலை மின்னுற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை இந்தியாவின் அதானி குழுமத்துக்கு வழங்குவதற்கு தமக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக எம்.எம்.சீ. பெர்டினண்டோ, கோப் குழுவில் தெரிவித்திருந்தார். இந்திய பிரதமர் நரேந்திரமோடியால், ஜனாதிபதி ஊடாக இந்த அழுத்தம் கொடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டிருந்தார். எனினும் இது உண்மையில்லை என்று ஜனாதிபதி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனை அடுத்து, தாம் மன உளைச்சல் காரணமாக அந்த கருத்தை வெளியிட்டதாகவும், அதில் உண்மையில்லை என்றும், அதற்கான மன்னிப்பு கோருவதாகவும் எம்.எம்.சீ. பெர்டினண்டோ அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இந்நிலையிலேயே அவர் தற்போது பதவி விலகியுள்ளார். அவரது பதவி விலகல் கடிதத்தை தான் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், இலங்கை மின்சார சபையின் புதிய தலைவராக முன்னாள் உப தலைவர் நளிந்த இளங்ககோன் நியமிக்கப்படவுள்ளதாகவும், மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ட்விட்டர் பதிவொன்றினூடாக அறிவித்துள்ளார்.     - [நலன் விரும்பிகளிடமிருந்து 50,000 அமெரிக்க டொலருக்கு அதிகமான நன்கொடை](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d/): அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக நலன் விரும்பிகளிடமிருந்து சுமார் 50,000 அமெரிக்க டொலர்களை பெற்றுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. எரிபொருள், உணவு மற்றும் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக வெளிநாடுகளில் உள்ள நலன் விரும்பிகளிடமிருந்து அந்நிய செலாவணியைப் பெறுவதற்காக அண்மையில் இலங்கை மத்திய வங்கி கணக்குகளை ஆரம்பித்தது. அதன்படி, 51,988 அமெரிக்க டொலர்கள், 14,508 ஸ்டெர்லிங் பவுண்ட்கள், 4253 யூரோக்கள் மற்றும் 11,646 அவுஸ்திரேலிய டொலர்களை நலன் விரும்பிகளிடமிருந்து பெற்றுள்ளது. அதற்கமைய, இவ்வாறு வழங்கப்படும் அனைத்து வெளிநாட்டு நாணய நன்கொடைகளும் மருந்து, எரிபொருள் மற்றும் உணவு போன்ற அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என மத்திய வங்கி உறுதியளித்துள்ளது.   - [மருமகளை காப்பாற்ற முயன்ற தந்தையை அடித்து கொன்ற மகன்](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%95%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%ae%e0%af%81%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1/): குருவிட்ட-பொஹரபாவ பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு மரக்கம்பினால் தாக்கி மகனொருவர் தனது தந்தையை கொலை செய்துள்ளார். சம்பவத்தின் போது உயிரிழந்தவரின் மகன் மதுபோதையில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில், குறித்த சந்தேக நபர் தனது மனைவியைத் தாக்க முற்பட்டுள்ளார், அவ்வேளை அவரின் தந்தை குறுக்கிட்டு மருமகளை காப்பாற்றியுள்ளார். எனினும், மதுபோதையில் இருந்த சந்தேக நபர் தனது தந்தையை பலமாக தாக்கியுள்ளார். தாக்குதலுக்குள்ளான 66 வயதுடைய குறித்த தந்தை இரத்தினபுரி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளர். கொலைச் சம்பவம் தொடர்பில் 34 வயதுடைய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், குருவிட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். - [இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படுகிறது ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட வழக்கு](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a3%e0%af%88%e0%ae%95%e0%af%8d/): ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னரான ஜனவரி 24 ஆம் திகதி காணாமல் போயிருந்தார். சம்பவம் தொடர்பில் ஒன்பது இராணுவ புலனாய்வு அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். நீதிபதிகள் சஞ்சீவ மொராயஸ், மஹேன் வீரமன் மற்றும் தமித் தொட்டவத்த ஆகியோர் அடங்கிய குழு, கைது செய்யப்பட்ட ஒன்பது இராணுவ புலனாய்வு அதிகாரிகளையும் விளக்கமறியலில் வைக்கும்படி உத்தரவிட்டது. பிரகீத் எக்னெலிகொட காணாமல் போன சம்பவம் குறித்து ஒன்பது இராணுவ புலனாய்வு அதிகாரிகளுக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் 17 குற்றச்சாட்டுகள் அடங்கிய குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தார். - [துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி](https://minnal24.com/%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%92-2/): எம்பிலிப்பிட்டிய – மித்தெனிய வீதியின் தோரகொலயாயபகுதியில் உள்ள மலர்சாலை உரிமையாளர் ஒருவர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் 52 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.30 மணியளவில் மலர்சாலையை திறப்பதற்காகச் சென்ற வேளையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளை முன்னெடுத்துவரும் பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில், பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். - [கல்முனை சாஹிராவின் "சாகரம்" நூல் வெளியீடும், பிரியாவிடை நிகழ்வும்](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%88-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b9%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%95%e0%ae%b0/): -எம்.எஸ்.எம்.ஸாகிர்- கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் 2021ஆம் ஆண்டு சாதாரண தர மாணவர்களின் ஓ.எல். தின விழாவும் ‘சாகரம்’ நூல் வெளியீடும் கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையின் எம்.எஸ். காரியப்பர் மண்டபத்தில் வெகு சிறப்பாக இடம்பெற்றது. கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் அதிபர் எம்.ஐ. ஜாபிர் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வுக்கு அம்பாறை மாவட்ட பிரதம பொறியியலாளர் ஏ.எம்.சாஹிர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுடன், கௌரவ அதிதியாக சாய்ந்தமருது கோட்டக்கல்விப் பணிப்பாளர் என்.எம்.ஏ.மலிக் மற்றும் விசேட அதிதிகளாக பிரதி அதிபர்களான எம்.எச்.எம். அபூபக்கர், ஏ.எச்.எம்.அமீன், திருமதி றிப்கா அன்ஸார் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் டாக்டர் ஸனூஸ் காரியப்பர் உட்பட மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர். நிகழ்வில் ‘சாகரம்’ எனும் தலைப்பில் நினைவு மலர் ஒன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டது. நூலாசிரியர் ஏ.பி.சம்சுனா தலைமையில் தரம் 11 இன் பகுதித் தலைவர் ஏ.எச்.எம்.றிசான் ஆசிரியர் உட்பட மலர் குழுவினரோடு அதிதிகள் புடைசூழ இந்நூல் […] - [கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தாக்கப்பட்டமைக்கு அங்கஜன் கண்டனம்](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8a%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%9a%e0%af%81%e0%ae%95/): தனது உத்தியோகத்தர்களுக்கான எரிபொருள் வழங்கும் செயற்பாட்டை கவனித்துக் கொண்டிருந்த கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ந.சரவணபவன், கடந்த வெள்ளிக்கிழமை கிளிநொச்சியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் வைத்து தாக்கப்பட்டுள்ளமைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். அவர் மேலும், நாம் கொரோனாவின் கோரப் பிடியில் சிக்கித் தவித்ததனை எவரும் அவ்வளவு சுலபமாக மறந்துவிட முடியாது. கடந்த வருடம் எம் கண்களுக்கு தெய்வத்தை விட மேலாகத் தெரிந்த சுகாதாரப் பணியாளர்கள் இன்று தாக்கப்பட்டும், அவமானப்படுத்தப்பட்டும் வருகின்றனர். உயிர் காக்கும் உன்னத பணியில் ஈடுபடுபவர்கள் சுகாதாரப் பணியாளர்கள். வெறுமனே எரிபொருளுக்காக அவர்களை எதிர்ப்பது மனசாட்சிக்கு விரோதமான செயற்பாடு. கடந்த சில நாட்களாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இடம்பெறுகின்ற வன்முறைச் சம்பவங்களை ஊடகங்கள் வாயிலாக அறிந்திருந்தேன். உன்னத பணியில் ஈடுபடும் உத்தியோகத்தர்கள் மனம் நோகும்படியான செயற்பாடுகள் பல இடம்பெறுகின்றன. பொலிஸ் பாதுகாப்புத் தரப்பினர் இவ்வாறான வன்முறைகளுக்கு ஒருபோதும் இடமளிக்கக்கூடாது. […] - [மீண்டும் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf/): இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலை அதிகரிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. அதன்படி, 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 50 ரூபாவினால் அதிகரித்து, புதிய விலை 470 ரூபா. 95 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 100 ரூபாவினால் அதிகரித்து, புதிய விலை 550 ரூபா. ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 60 ரூபாவினால் அதிகரித்து. புதிய விலை 460 ரூபா. லங்கா சுப்பர் டீசலின் விலை 75 ரூபாவினால் அதிகரித்து. புதிய விலை 520 ரூபாவாக விலைகள் அதிகரித்துள்ளது. இதேவேளை. லங்கா ஐ.ஓ.சியும் சிபெட்கோ விலை அதிகரிப்புக்கு நிகராக எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளது.   - [எட்டு மணித்தியாலங்கள் காத்திருந்து எரிபொருள் பெற்றுக்கொண்ட பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர்](https://minnal24.com/%e0%ae%8e%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be/): -கிளிநொச்சி நிருபர்- பருத்தித்துறையை கிராமக்கோடு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்க்கு காலை 8.00 மணியளவில் எரிபொருள் நிரப்புவதற்கு வருகை தந்திருந்த பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் பதில் அத்தியட்சகர் வேலுப்பிள்ளை கமலநாதன் எட்டு மணி நேரம் காத்திருந்து மாலை வேளை எரிபொருள் பெற்றுச் சென்றார். அத்தியாவசிய தேவைகளுக்காக தனியொரு நாளில் குறிப்பாக சுகாதார துறையினருக்கு வெள்ளிக்கிழமைகளில் எரிபொருள் வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருந்த நிலையில் நேற்று வழங்கப்படாதிருந்தது. இதனால் இன்று சனிக்கிழமை பருத்தித்துறை கிராமகோடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோல் நிரப்பப்படும் என்று அறிவித்திருந்த நிலையில், காலை 8.00 மணியளவில் வருகை தந்திருந்த பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் பதில் அத்தியட்சகர் நீண்ட நேரம் காத்திருந்து, சற்றுமுன்னர் எரிபொருள் நிரப்பியதுடன், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் தாதியர்கள் உட்பட அனைத்து ஊழியர்களும் வரிசையில் காத்திருந்து பெற்றோல் நிரப்பி வரும் அதே வேளை ஏனைய அரச உத்தியோகத்தர்களும் பெற்றோலை பெற்றுக் கொள்வதற்காக மிக நீண்ட […] - [கப்பல்கள் எப்போது வரும் என தெரியாது : வரிசையில் நிற்க வேண்டாம்](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/): அடுத்த வாரம் முழுவதும் வரையறுக்கப்பட்டு டீசல் மற்றும் பெற்றோல் எரிபொருள் நிலையங்களுக்கு விநியோகிக்கப்படும்,  எரிபொருளுக்காக வரிசையில் நிற்க வேண்டாம் என அமைச்சர் காஞ்சனா விஜசேகர தெரிவித்துள்ளார். பெற்றோல், டீசல் மற்றும் மசகு எண்ணெய் கப்பல்கள் இந்த வார ஆரம்பத்திலும் அடுத்த வாரமும் வருவதை உறுதி செய்த எரிபொருள் வழங்குநர்கள், வங்கி மற்றும் பிற காரணங்களுக்காக சரியான நேரத்தில் எரிபொருள் விநியோகிக்க முடியாது. இது குறித்து இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தனக்கு அறிவித்துள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், அடுத்த எரிபொருள் தொகுதி துறைமுகத்தில் இருந்து இறக்கப்படும் வரை  பொது போக்குவரத்து  மின் உற்பத்தி மற்றும் தொழிற்சாலைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இந்த நேரத்தில், புதிய முன்னேற்றங்களுடன் கப்பலின் வருகை திகதிகளை உறுதிப்படுத்த முடியவில்லை. அடுத்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி வரும் வரை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் தற்காலிகமாக மூடப்படும். சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன், என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். - [முழு நாடும் அகதிகளாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது](https://minnal24.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b4%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%95%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%ae%be%e0%ae%95-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1/): அரசாங்கத்தின் தொலைநோக்கற்ற திட்டங்கள் மூலம் முழு நாடும் அகதிகளாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நடப்பு அரசாங்கம் நாட்டை தற்போது ஒரு சோகமான நிலைக்கு கொண்டு வந்துள்ளது. இந்நிலையில் இருந்து மீண்டு வருவதற்கு ஜனநாயக  சுதந்திர மற்றும் வெளிப்படையான மக்கள் போராட்டமே சிறந்த வழி. தற்போதைய ஆட்சியாளர்கள் நாட்டின் உண்மை நிலவரத்தை உணர்ந்து மக்களுக்குச் சாதகமான வகையில் தமது வேலைத்திட்டங்களை மாற்றியமைக்க நினைத்தாலும் அது போல எதுவும் நடக்கவில்லை எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். - [இன்று இரவு எரிபொருள் விலை அதிகரிக்கின்றது?](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%b5%e0%af%81-%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2/): எரிபொருட்களின் விலைகளை இன்று சனிக்கிழமை நள்ளிரவு முதல் மீண்டும் அதிகரிக்கும் நிலை  காணப்படுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ஒரு லீற்றர் எரிபொருளின் விலை 500 ரூபாவை தாண்ட கூடும். நாட்டு மக்கள் மத்தியில் அரசாங்கத்தின் மீதும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் மீதும் கடும் கோபம் இருக்கின்றது. குறிப்பாக புதிய பிரதமர் மீது மக்களுக்கு கடும் கோபம் உள்ளது. நாட்டு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு தீர்வு காணாமல் அதனை அதிகரித்து வருகின்றார். ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்ற பின்னரே நீண்ட எரிபொருள் வரிசைகள் அதிகரித்தன. புதிய பிரதமரே எரிபொருள் விலையை 400 ரூபா என்ற மட்டத்திற்கு கொண்டு சென்றார். மீண்டும் இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிக்கப்படுகிறது. எரிபொருள் வரிசைகளில் இறப்போரின் […] - [பொம்மையுடன் திருமணம் : பொம்மை கணவருடன் குழந்தை பெற்ற பெண்](https://minnal24.com/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a/): பிரேசிலை சேர்ந்த பெண் ஒருவர் பொம்மையை திருமணம் செய்து தற்போது குழந்தை ஒன்றையும் பெற்றுள்ளார். அவரது வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட மார்செலோ ரோச்சா மோரேஸ் என்ற பொம்மையை அப்பெண் திருமணம் செய்துக் கொண்டார். தனது கணவரின் வருகை தான் வாழ்க்கையை முழுமையடையச் செய்ததாக அவர் தெரிவிக்கிறார். தன் திருமண வாழ்க்கை சிறப்பானதாக இருப்பதாகவும், காதல் என்பது மிக அழகான உணர்வு என்றும் இந்த 37 வயது பெண், பொம்மையை காதலித்து திருமணம் செய்து கொண்டாராம். இந்த ஜோடிக்கு இப்போது ஒரு குழந்தை பிறந்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது. மார்செலோ என்ற பொம்மையை அவரது தாயார் அறிமுகப்படுத்தினார், அந்தப் பெண்ணுக்கு நடனமாடுவதற்கு ஜோடி இல்லை என்பதற்காக உருவாக்கப்பட்ட ஆண்  பொம்மை அது. அந்த பொம்மையை திருமணம் செய்து கொண்ட மோரேஸ் தனது கணவர் ஒருபோதும் சண்டையிடுவதில்லை என்றும், தன்னை புரிந்துகொள்வதால் தான் எப்போதும் விரும்பும் மனிதனாக தனது கணவர் இருப்பதாக மோரேஸ் தெரிவிக்கிறார். மார்செலோ ஒரு […] - [மன்னார்-நொச்சிக்குளம் இரட்டைக் கொலை : சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8%e0%af%8a%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87-4/): -மன்னார்நிருபர்- மன்னார் – நொச்சிக்குளம் பகுதியில் இடம் பெற்ற இரட்டைக் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மன்னார் நீதிமன்றத்தில் குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, நேற்று முன்தினம் வியாழக்கிழமை கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் மாத்திரம் மன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். ஏனைய 18 சந்தேக நபர்களும் நேற்று வெள்ளிக்கிழமை மன்னார் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்படவில்லை. தற்போதைய நெருக்கடி நிலை காரணமாக சந்தேகநபர்களை மன்றில் ஆஜர்படுத்த முடியாது போனதாக பொலிஸார் மன்றில் அறிவித்துள்ளனர். மேலும், சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபரை கைது செய்தவற்கான தேவை உள்ளதாக பொலிஸார் மன்றில் தெரிவித்துள்ளனர். விடயங்களை ஆராய்ந்த மன்னார் நீதவான்இ சந்தேக நபர்கள் 20 பேரையும் எதிர்வரும் ஜூலை மாதம் 08 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். கடந்த 10 ஆம் திகதி மன்னார் நொச்சிக்குளத்தில் […] - [10 அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை](https://minnal24.com/10-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%87/): அமைச்சரவை தீர்மானத்துக்கு அமைய, 10 அத்தியாவசிய பொருட்களை  ஜுலை 01 முதல் திறந்த கணக்கு முறைமை மூலம் இறக்குமதி செய்வதாக, சந்தை வணிக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதன்படி, அரிசி, சீனி, பருப்பு, கிழங்கு, பால்மா, நெத்தலி உள்ளிட்ட 10 அத்தியாவசிய பொருட்களை திறந்த கணக்குள் மூலம் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். - [வாழைச்சேனையில் மண்ணெண்ணை விநியோகத்தின் போது குழப்ப நிலை](https://minnal24.com/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%87%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3/): -வாழைச்சேனை நிருபர்- மட்டக்களப்பு வாழைச்சேனை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணை விநியோகத்தின்போது ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அமைதியின்மை ஏற்பட்டது. மண்ணெண்ணை கிடைக்கும் என இன்று  சனிக்கிழமை அதிகாலை முதல் நீண்ட வரிசையில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என பலரும் காத்திருந்தனர். இதேபோன்று மீனவர்களும் பிரிதொரு வரிசையில் காத்திருந்தனர். காலை 9.30 மணியளவில் காத்திருந்த மக்களுக்கு 1 லீற்றர் அளவே வழங்கப்படும் என அறிவித்தல் வழங்கி விநியோகம் செய்ய ஆரம்பிக்கப்பட்ட வேளை காத்திருந்த மக்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். தங்களது தேவையை பூர்த்தி செய்ய வழங்கப்படும் மண்ணெண்ணையின் அளவு போதாது, 5 லீற்றர் அளவே தேவையென்று தெரிவித்து பெற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்து தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினார்கள். இதன்போது எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அமைதியின்மை ஏற்பட்டு குழப்ப நிலை காணப்பட்டது. பின்னர் குறித்த விடயத்திற்கு நியாயம் வேண்டி அருகிலுள்ள வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திற்கு சென்று நிலையப் பொறுப்பதிகாரி வசந்த பண்டாரவிடம் தங்களது நிலைப்பாட்டினை தெரிவித்தனர். நிலைமைகளை […] - [பாடசாலைகள் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவித்தல்](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d/): எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஜுலை மாதம் முதலாம் திகதி வரையான காலப்பகுதியில் பாடசாலை கற்பித்தல் பணிகளை முன்னெடுப்பது குறித்த அறிவித்தலை கல்வி வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த வாரம் கிராமிய பகுதிகளில் பாடசாலைகள் முன்னெடுக்கப்பட்டமை போன்றுஇ மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு போக்குவரத்து அசௌகரியமற்ற பாடசாலைகளை வழமைபோன்று முன்னெடுக்க வேண்டும். குறித்த பாடசாலைகளில்  போக்குவரத்து பிரச்சினை உள்ள ஆசிரியர்கள், அதிபர்கள் ஊடாகஅந்த ஆசிரியர்களின் பிரத்தியேக விடுமுறையில் விடுவித்து பொருத்தமான நேர அட்டவணையை தயாரிக்க வேண்டும். அதேநேரம்இ கடந்த வாரம் பாடசாலைகள் இயங்காத நகரப் பகுதிகளில் உள்ள பாடசாலைகளை 3 நாட்களுக்கு இயக்க கல்வி அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. செவ்வாய், புதன் மற்றும் வியாழக் கிழமைகளில் காலை 7.30 முதல் பிற்பகல் 1.30 வரையில் குறித்த பாடசாலைகள் இயங்க வேண்டும். அந்தப் பாடசாலைகளில் ஆரம்பப் பிரிவு கற்பித்தல் பணிகளை முன்னெடுக்கும் நாட்கள் குறித்து தீர்மானிக்கும் அதிகாரம் அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் வராத நாட்களில் இணையவழி முறைமையில் […] - [மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-5/): -மன்னார் நிருபர்- சுகாதார ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி படுத்தக் கோரியும், கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணியாளர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும் இன்று சனிக்கிழமை  காலை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். குறித்த போராட்டம் இன்று காலை 10.30 மணி அளவில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாக இடம்பெற்றது. அண்மைக் காலமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சுகாதார துறையினர் எதிர்நோக்கும் பிரச்சனைகளை கண்டித்தும், கிளிநொச்சியில் எரிபொருள் நிலையத்தில் கிளிநொச்சி வைத்திய அதிகாரியை தாக்கியதை கண்டித்தும், மன்னார் மாவட்ட சுகாதார ஊழியர்கள் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன் பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது. - [இந்தியாவில் இருந்து 3 இலட்சம் கொள்கலன்களில் மண்ணெண்ணெய் எடுத்துவர நடவடிக்கை](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-3-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%9f/): இந்தியாவில் இருந்து 3 இலட்சம் கொள்கலன்களில் மண்ணெண்ணெய் எடுத்துவர அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதனை விவசாயிகள்இ மீன்பிடி தொழில் செய்வோருக்கு வழங்கப்படவுள்ளது. சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்புக்கு நிலையத்தில் மசகு எண்ணெய் போதியளவு இன்மையால், மண்ணெண்ணெயை தொடர்ச்சியாக பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் 210 லீற்றர் அடங்கிய 3 இலட்சம் கொள்கலன்களில் மண்ணெண்ணெய் எடுத்துவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. - [எரிபொருள் நிலையத்தில் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு முன்னுரிமை](https://minnal24.com/%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81/): தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டினை கருத்தில்கொண்டு பசறை பிரதேசத்தில் உள்ள தமது பிரதான தொழிலான முச்சக்கர வண்டிகளை செலுத்தும் சாரதிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு கூப்பன் அடிப்படையில் கிராமிய கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான (IOC) எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் எரிபொருள் முதல் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த புதிய திட்டத்தில் பசறை பொலிஸாரின் உதவியுடன் சுமார் 100 முச்சக்கர வண்டிகளுக்கு எரிபொருள் வழங்கப்பட்டு வருகின்றது. இவ்வேலைத் திட்டம் கிராமிய கூட்டுறவு சங்கத்தின் தலைவரின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக முச்சக்கரவண்டி சங்கத்தின் தலைவருக்கும் பசறை பொலிஸ் நிலைய பொருப்பதிகாரிக்கும் தமது வாழ்த்துக்களையும் நன்றிகளையும் முச்சக்கர வண்டி சாரதிகள் தெரிவிக்கின்றனர் . - [அமெரிக்காவின் திறைசேரி திணைக்க பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம்](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%ae%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%9a%e0%af%87%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%a4/): அமெரிக்காவின் திறைசேரி திணைக்களம் மற்றும் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும் 26 முதல் 29 வரை இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் சர்வதேச நாணய நிதிய குழுவினர் வருகை தந்து ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். சர்வதேச நாணய நிதிய கொள்கைகளுக்கு அமைய இலங்கைக்கு உதவ தயார் என இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதிய பணிக்குழாம் நேற்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. அதன்படி, ஊழியர்கள் உடன்படிக்கை உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அடுத்த கட்டமாக அமெரிக்கா திறைசேரி நிதி குழுவினர் வரவுள்ளனர். - [பெற்றோல் தாங்கிய கப்பல் நாட்டை வந்தடைய மேலும் தாமதமாகும்](https://minnal24.com/%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%8b%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d/): 40,000 மெட்ரிக் டன் பெற்றோலுடன் நேற்று வெள்ளிக்கிழமை நாட்டை வந்தடையவிருந்த கப்பல்  மேலும் தாமதமடையும், என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தமது ட்விட்டர் பதிவில் நேற்று மாலை தெரிவித்திருந்தார். குறித்த விநியோக நிறுவனம் இது தொடர்பில் பெற்றோலிய கூட்டுதாபனத்திற்கு அறிவித்துள்ளது, எனவும் அமைச்சர் தெரிவித்தார். ஒக்டேன் 95 ரக பெற்றோல் தாங்கிய குறித்த கப்பல், நேற்று முன்தினம் வியாழக்கிழமை நாட்டை வந்தடைய இருந்தது. எனினும், குறித்த கப்பல் நேற்று வெள்ளிக்கிழமை நாட்டை வந்தடையும் என பின்னர் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், குறித்த கப்பல் இலங்கையை வந்தடையும் தினம் பின்னர் அறிவிக்கப்படும், என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.   - [இந்தியா-திருச்சி சிறப்பு முகாமில் இலங்கை தமிழர் ஒருவர் தீக்குளிக்க முயற்சி](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/): இந்தியா-திருச்சி சிறப்பு முகாமில் ஈழத் தமிழர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை தீக்குளித்து தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார் திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு முகாமில் இலங்கை, நைஜீரியா, இந்தோனேஷியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த குற்ற செயலில் ஈடுபட்ட மற்றும் கடவுச்சீட்டு வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்கள் உள்ளனர். இதில் இலங்கையைச் சேர்ந்த 108 பேர் உள்ளனர். இவர்கள் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கடந்த மாதம் 20ம் திகதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதில் 8க்கும் மேற்பட்டோர் உடல்நிலை பாதிப்பு காரணமாக திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு மீண்டும் முகாமுக்கு வரவழைக்கப்பட்டனர். தொடர்ந்து அவர்கள் உண்ணாவிரதத்தை கைவிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்து ஈழத் தமிழர்களில் ஒருவரான உமாரமணன் என்பவர் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தீ குளித்துள்ளார். - [மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியரும் மாணவர்களும் கைது](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%b7%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0/): முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் மாணவிகள் பலர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆசிரியர் ஒருவரும் அவர் கற்பித்த பாடசாலையின் பழைய மாணவர் ஒருவரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் அபிவிருத்தி உத்தியோகத்தராக இணைக்கப்பட்டு ஆசிரியராக பணியாற்றும் ஒருவரும், சில மாணவர்களும் இணைந்து அங்கு கல்வி கற்கும் இம்முறை சாதராண தரப்பரீட்சை எழுதிய வகுப்பைச் சேர்ந்த ஐந்திற்கும் மேற்பட்ட மாணவிகளை பாலியல் வல்லுறவிற்கு வேறு வேறு சந்தர்ப்பங்களில் உட்படுத்தியிருக்கின்றனர். முதலில் மாணவர்களுடன் இணைந்து அங்குள்ள மாணவிகளைக் காதலிக்க வைத்து அவர்கள் அனுப்பிய நிர்வாண ஒளிப்படங்கள் மற்றும் பாலியல் உறவில் ஈடுபடும் போது எடுக்கப்பட்ட வீடியோக்களை வைத்து குறித்த ஆசிரியர் மாணவிகளை அச்சுறுத்தி வல்லுறவுக்கு உட்படுத்தியிருக்கிறார். அதனையும் வீடியோவாக எடுத்திருக்கிறார். ஒரே நேரத்தில் இரண்டு மாணவிகள் என்றெல்லாம் வல்லுறவில் ஈடுபட்டிருக்கிறார். சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய சந்தேக நபரான ஆசிரியரது தொலைபேசியை பரிசோதனைக்கு […] - [அமைச்சராக பதவியேற்றார் தம்மிக பெரேரா](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%af%87%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4/): முதலீட்டு விரிவாக்கல் அமைச்சராக தம்மிக பெரேரா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று வெள்ளிக்கிழமை பதவியேற்றுள்ளார். முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியதையடுத்து  அவ்வெற்றிடத்துக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேசியப் பட்டியல் மூலம் பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேரா நியமிக்கப்பட்டார். இந்நிலையில், கடந்த 22 ஆம் திகதி அவர் சபாநாயகர் முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றிருந்தார். இதேவேளை தம்மிக்க பெரேரா நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படுவது, அரசியலமைப்பிற்கு முரணானது என தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் ஐந்து அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. தாம் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரணைக்கு எடுப்பதா? இல்லையா என்பதை உயர்நீதிமன்றம் முடிவு செய்யும்வரை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ஏற்கபோவதில்லை என தம்மிக பெரேரா கடந்த திங்கட்கிழமை உயர்நீதிமன்றிற்கு அறியப்படுத்தியிருந்தார். குறித்த மனுக்கள் கடந்த 21 ஆம் திகதி அழைக்கப்பட்டபோது, அவற்றை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாதிருப்பதற்கு நீதியரசர் ஆயத்தின் […] - [தாக்குதலை கண்டித்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்](https://minnal24.com/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%af/): இலங்கை ஆசிரியர் சங்கம் இன்று வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளரும், மட்டக்களப்பு மாவட்ட செயலாளருமான பொன்னுத்துரை உதய ரூபன் மீதான தாக்குதலை கண்டித்து குறித்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாகவும் கல்வி அமைச்சுக்கு முன்பாகவும் இக் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. கடந்த திங்கட்கிழமை, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளரும்இ மட்டக்களப்பு மாவட்ட செயலாளருமான பொன்னுத்துரை உதய ரூபன், மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளரின் கணவரினால் தாக்குதலுக்குள்ளாகியதாக தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவத்திற்கு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்திருந்தார்.     - [பனைசார் உற்பத்தியாளர்களுக்கு தொழிற்கருவிகளும், துவிச்சக்கர வண்டிகளும் வழங்கி வைப்பு](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%a9%e0%af%88%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3/): -யாழ் நிருபர்- இளவாலை பனைசார் உற்பத்தியாளர்களுக்கு தொழிற்கருவிகளும், துவிச்சக்கர வண்டிகளும் வழங்கி வைக்கப்பட்டன. வரவு செலவு வேலைத்திட்டம் 2022ன் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராமத்துக்கான 3 மில்லியன் ரூபாய் நிதியில் ஒரு கட்டமாக, இளவாலை சௌபாக்கியா உற்பத்தி கிராமத்தில் தொழில்புரியும் பனைசார் உற்பத்தியாளர்களுக்கான தொழிற்கருவிகளும், துவிச்சக்கர வண்டிகளும் இன்று வெள்ளிக்கிழமை வழங்கி வைக்கப்பட்டன. யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதனின் பிரத்தியேக செயலாளர் சதாசிவம் இராமநாதன் இவற்றை வழங்கி வைத்தார். - [மக்கள் எதிர்நோக்கும் அழுத்தங்களினால் நாட்டில் உள்நாட்டு போர் வெடிக்கும்](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%af%8b%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b4%e0%af%81/): தற்போது மக்கள் எதிர்நோக்கும் அழுத்தங்களினால் நாட்டில் உள்நாட்டு யுத்தம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தற்போதைய நிலைமை மோசமடைந்தால், மக்கள் தங்களைக் கடத்திச் செல்லத் தூண்டப்படுவார்கள் என்றும், அதைக் கட்டுப்படுத்த அரசாங்கம் முயற்சிப்பதால் உள்நாட்டுப் போர் வெடிக்கும், என மேலும் அவர் தெரிவித்தார்.   - [வெட்டுக்காயங்களுடன் சடலம் மீட்பு](https://minnal24.com/%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%9f%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d/): யாழ்.காங்கேசன்துறை கொல்லங்கலட்டியில் உள்ள வீடொன்றிலிருந்து வெட்டுக்காயங்களுடன் மூதாட்டி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை காலை குறித்த மூதாட்டியின் தோட்டத்தில் தண்ணீர் இறைப்பதற்காக சென்ற ஒருவர், மூதாட்டி இரத்த காயங்களுடன் கிடப்பதை கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். குறித்த வீட்டில் தனிமையில் வசித்து வந்த, சாணை தவமணி (வயது 78) என்ற மூதாட்டியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்துள்ள மூதாட்டி அணிந்திருந்த நகைகள் அப்படியே இருக்கும் நிலையில், கொலைக்கான காரணத்தை கண்டறிய காங்கேசன்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.   - [சொந்த பாவனைக்காக எரிவாயுவை பதுக்கும் வர்த்தகர்கள் : மக்கள் தொடர்ந்தும் வீதியில்](https://minnal24.com/%e0%ae%9a%e0%af%8a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%a9%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%95-%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%af%81/): -மன்னார் நிருபர்- மன்னார் மாவட்டம் முழுவதும் இன்று வெள்ளிக்கிழமை  மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மற்றும் எரிவாயு விற்பனை முகவர் நிலையங்களுக்கு முன் நீண்ட வரிசையில் எரிபொருள் மற்றும் எரிவாயு களை பெற்று கொள்வதற்கு வரிசையில் காத்திருக்கின்றனர். இந்த நிலையில், மன்னார் முகவர் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற ஒரு தொகுதி லாப் எரிவாயுக்கள் மக்களுக்கு வழங்காமல் உரிமையாளர் பதுக்கி வைத்துள்ளதாக மக்கள் குறித்த விற்பனை முகவர் நிலையத்திற்கு முன்பாக வீதிகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வருகை தந்த மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஸ்ரான்லி டிமேல் மற்றும் பிரதேச செயலாளர் ம.பிரதீப் தலையீட்டின் காரணமாக சொந்த பாவனைக்கு என்ற பெயரில் வழங்கப்படாமல் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 21 எரிவாயு சிலிண்டர்கள் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. அதே நேரம், மன்னாரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிவாயு இன்மையால் எரிவாயு வழங்கும் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ள போதிலும் மக்கள் நீண்ட வரிசையில் மண்ணெண்ணெய் மற்றும் பெற்றோல் […] - [கிளிநொச்சி இளைஞனின் பிரித்தானியா நோக்கிய சாதனைப்பயணம்](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8a%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%87%e0%ae%b3%e0%af%88%e0%ae%9e%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf/): -கிளிநொச்சி நிருபர்- பிரித்தானியா – பர்மிங்ஹாமில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் 2022 குத்துச்சண்டைபோட்டியில் முதன்முதலாக கிளிநொச்சி வீரரொருவர் தெரிவாகியுள்ளார். கிளிநொச்சி – தருமபுரம், நாதன் குடியிருப்பை வதிவிடமாகக்கொண்ட விட்டாலிஸ் நிக்லஸ் என்னும் வீரரே இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் தேசிய போட்டிகளில் வட மாகாணத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி பல பதக்கங்களை வடமாகாணத்திற்காக பெற்றுக் கொடுத்துள்ளார். இவரது திறமை காரணமாக இலங்கை தேசிய குத்துச்சண்டை அணிக்குள் உள்வாங்கப்பட்டு பல தகுதிகாண் போட்டிகளில் வெற்றியீட்டி இந்த கொமன்வெல்த் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். இப்போட்டி நிகழ்வுகள் எதிர்வரும் ஜூலை மாதம் 28ம் திகதி தொடக்கம் ஆகஸ்ட் 08 ஆம் திகதி வரை லண்டனில் நடைபெறவுள்ளது. இந்த போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப்பெறும் வீரர்கள் ஒலிம்பிக் தகுதிகாண் போட்டிகளில் பங்குபெறும் வாய்ப்புக்களை பெறவுள்ளனர். - [கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளருக்கு இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் அவசரக் கடிதம்](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d/): -கல்முனை நிருபர்- ஆசிரியர் விடுமுறை மற்றும் கைவிரல் அடையாள இயந்திரத்தின் பயன்பாடு தொடர்பில் சுற்று நிரூபம் ஒன்றினை நடைமுறைப்படுத்தி அதிபர்களுக்கு அறிவுறுத்துமாறு, கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளருக்கு இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜெஸ்மி எம்.மூஸா பக்ஸ் (fax) மூலம் அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் ஆசிரியர் தொடர்பாகப் பல்வேறு பிரச்சினைகள் முன்வைக்கப்படுகின்ற போதிலும், மாணவர் கல்வி நலனுக்குப் பாதிப்பில்லாத வகையில் தங்களால் முன்னெடுக்கப்படும் விடயங்களை நாம் பாராட்டுகின்றோம். எரிபொருள் பிரச்சினை ஏற்பட்டுள்ள இக்காலப்பகுதியில் கல்வியமைச்சு விடுத்துள்ள பொதுவான அறிவுறுத்தல்களுக்கமைய, பாடசாலைகளை முன்னெடுத்துச் செல்லல் தொடர்பில் தங்களால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளுக்கமைய சில அதிபர்கள் செயல்படுகின்ற விதம் பாராட்டுக்குரியதாக அமைந்துள்ள போதிலும், பல அதிபர்கள் ஆசிரியர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாதவர்களாகத் தான்தோன்றி தனமாகச் செயற்படுகின்றனர். இதற்கு வலயக் கல்விப்பணிமனை உயர் அதிகாரிகள் சிலரும் […] - [தனியார் பேருந்து சேவை சங்கம் நாளை கவனயீர்ப்பு போராட்டம்](https://minnal24.com/%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%87%e0%ae%b5%e0%af%88-%e0%ae%9a%e0%ae%99/): வடமராட்சி தனியார் பேருந்து சேவைச் சங்கம் நாளை வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது. பருத்தித்துறை சாலையூடாக வழங்கப்படுகின்ற டீசலில் பல்வேறு முறைகேடுகள், அவமதிப்புகள் காரணமாக உடையவர்கள் நடவடிக்கை எடுகக வேண்டும் என கோரியே போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இது தொடர்பில் இன்று வியாழக்கிழமை அவர்கள் பருத்தித்துறை அலுவலகத்தில் நடாத்திய செய்தியாளர் மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவித்தனர். - [இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ கடலட்டை மீட்பு](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%a4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%be/): -மன்னார் நிருபர்- மண்டபம் அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ கடலட்டை இன்று வியாழக்கிழமை  மாலை வனத்துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர். மண்டபம் அடுத்த வேதாளை கடற்கரை பகுதியில் இலங்கைக்கு கடத்துவதற்காக கடலட்டை பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, அப்பகுதிக்கு விரைந்து சென்ற வனத்துறையினர் இலங்கைக்கு கடத்துவதற்காக பதப்படுத்தப்பட்ட 700 கிலோ எடை கொண்ட கடல் அட்டையை கைப்பற்றியுள்ளனர். மேலும், கைப்பற்றப்பட்ட கடல் அட்டையின் மதிப்பு சர்வதேச அளவில் 35 லட்ச ரூபாய் இருக்கும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணைகளை வனத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். - [எரிபொருள் விலை அதிகரிப்பு?](https://minnal24.com/%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d-2/): நாளை வெள்ளிக்கிழமை நள்ளிரவு எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைவாக எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது என எரிசக்தி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அதன்படி, 92 ஒக்டெய்ன் பெற்றோல் லீற்றருக்கு 74 ரூபாவாலும் 95 ஒக்டெய்ன் பெற்றோல் லீற்றருக்கு 78 ரூபாவாலும் டீசல் லீற்றருக்கு 56 ரூபாவாலும் சுப்பர் டீசல் லீற்றருக்கு 65 ரூபாவாலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது மண்ணெண்ணெய் 200 ரூபாவாகவும் விற்பனை செய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார். - [புளியம்பழம் பொறுக்கி உடைத்து விற்று பேரப்பிள்ளைகளை வளர்க்கும் வயோதிப பெண்](https://minnal24.com/%e0%ae%aa%e0%af%81%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%89%e0%ae%9f%e0%af%88/): -கிளிநொச்சி நிருபர்- கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட தர்மபுரம் பகுதியில், 75 வயதிற்கும் அதிகமான வயதுடைய வயோதிப பெண்ணொருவர், இருப்பதற்கு  நிரந்தர வீடும் இன்றி எந்தவித பாதுகாப்பும் இல்லாத ஒரு தற்காலிக கொட்டகையில் வசிக்கிறார். ஒரு வேளை உணவுக்குக் கூட வழியில்லாத நிலையில் தற்போது புளியம் பழத்தினை பொறுக்கி, அதை உடைத்து விற்று, அதில் வரும் பணத்தில் தனது இரண்டு 18 வயதிற்கும் மேற்பட்ட வயதுடைய பேரப்பிள்ளைகளை வளர்த்து வருகின்றார். அவரது இரண்டு பேரப்பிள்ளைகளின் பெற்றோர்களும் யுத்தத்தில் இறந்துவிட்டனர். அவருக்கு கடந்த ஜந்து வருட காலமாக இரண்டு கண்பார்வையும் இழந்த நிலையில், பெரும் கஸ்ட நிலையில் வாழ்ந்து வரவதாகவும் கவலை தெரிவித்துள்ளார். தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக ஒரு வேளை உணவை உண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். - [மட்டு.வாழைச்சேனை மீன் பிடி துறைமுகத்திற்கு கடற்றொழில் அமைச்சர் விஜயம்](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%87%e0%ae%a9%e0%af%88-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf/): வாழைச்சேனை நிருபர் மட்டக்களப்பு வாழைச்சேனை மீன் பிடி துறைமுகத்திற்கு கடற்றொழில் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று புதன்கிழமை மாலை விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார். மீனவர்கள் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி அதனுடன் கூடிய எரிபொருள் தட்டுப்பாட்டால் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும், அதற்கான தீர்வு காணும் கலந்துரையாடலை மீனவ சங்க அமைப்புக்கள் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தார். இதன்போது மீனவர்கள் நாளாந்தம் எதிர்நோக்கும் கடற்றொழில் சார்ந்த பிரச்சினைகள் முன்வைக்கப்பட்டு கலந்துரையாடப்பட்டது. அதிலும் குறிப்பாக எரிபொருள் விடயம் தொடர்பாக துறைமுக முகாமையாளர் மற்றும் மீனவ சங்க பிரதிநிதிகளால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. துறைமுகத்திற்கு நாளாந்தம் மூன்று லோட் 19800 லீற்றர் டீசல் மற்றும் ஒரு கிழமைக்கு மூன்று லோட் 19800 லீற்றர் மண்ணெண்ணையும் கையிருப்பு இருந்தால் மட்டுமே பிரதேச மீனவர்களின் எரிபொருள் தேவையினை நிவர்த்தி செய்ய முடியும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. குறித்த விடயத்தை கேட்டறிந்து கொண்ட அமைச்சர், மண்ணெண்ணை விடயம் தொடர்பாக யாழ்பாணத்தில் […] - [15 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் டிஜிட்டல் அடையாள அட்டை](https://minnal24.com/15-%e0%ae%b5%e0%ae%af%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%af%87%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%85%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%ae%b0/): 15 வயதிற்கு மேற்பட்ட அனைவரையும் பதிவு செய்து புதிய டிஜிட்டல் அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்பதிவு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் வியானி குணதிலக தெரிவித்துள்ளார். Sri Lanka Unique Digital ID என அழைக்கப்படும் இந்த புதிய அடையாள அட்டையில் கைரேகை,  இரத்த வகை உள்ளிட்ட மேலதிகமாக உயிரியல் விஞ்ஞான தரவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. சைபர் தளத்தில் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தவும் இந்த நடைமுறையில் முன்னெடுக்கப்படவுள்ளது இது இந்திய அரசின் கடன் உதவியுடன் தயாரிக்கப்பட்டு வழங்கப்படவுள்ளது. இந்த நடைமுறை, ஒன்றரை வருடத்திற்குள் 17 மில்லியன் மக்களை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. - [கல்முனை பொதுமக்கள் விடுத்துள்ள கோரிக்கை](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%88-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4/): -கல்முனை நிருபர்- கல்முனை மாநகர பொதுச் சந்தைக்கு அருகில் உள்ள வடிகான் துப்புரவு இன்றியும், வடிகானின் ஒரு பகுதி உடைந்தும், வடிகானின் இடைநடுவே பாரியளவிலான சுவர் துண்டு உள்ளதுடன் நீண்ட நாட்களாக நீர் ஓடாமல் தேங்கி காணப்படுகின்றமையினால் இடைக்கிடையே துர்நாற்றம் வீசுவதுடன் இதனால் வீதியினால் பயணிப்போர், அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து சந்தைக்கு வருகின்ற பொதுமக்கள் இதனால் சிரமத்தை எதிர்நோக்குவதாக தெரிவிக்கின்றனர் . நாளாந்தம் ஆயிரக்கணக்கான பொது மக்கள், பாடசாலை மாணவர்கள், குறித்த வீதியை பயன்படுத்தும் நிலையில் வடிகானுக்கு முறையாக மூடியின்றியும் வடிகானுக்கு அருகில் புற்கள் வளர்ந்து பற்றையாக காட்சியளிப்பதுடன், வடிகானுக்கு அருகில் உள்ள சாந்தாங்கேணி விளையாட்டு மைதானத்தின் எல்லை சுவரின் ஒரு பகுதி பல மாதங்களுக்கு முன்னர் உடைந்து வடிகானின் கீழே விழுந்து இருப்பதுடன், வடிகானின் நடுவே பாரிய தடையாக, நீர் ஓடாமல் தேங்கி நிற்பதுடன், நீண்ட நாட்களாக கவனிப்பாரற்று உள்ளதை அவதானிக்க முடிகின்றது அத்துடன், இதனுள் […] - [பிரதேச செயலக ஊழியருக்கு அதிக பெற்றோல் வழங்கியதால் கை கலப்பு](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%ae%b2%e0%ae%95-%e0%ae%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/): பிரதேச செயலக ஊழியர் ஒருவருக்கு அதிகமாக பெற்றோல் வழங்கியதால் கை கலப்பு ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை முற்பகல் காரைநகர் வலந்தலை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பிரதேச செயலக ஊழியர் ஒருவருக்கு அதிகமாக 3000 ரூபாவிற்கு பெற்றோல் நிரப்பியதையடுத்து அங்கு கூடியவர்களுக்கும் பிரதேச செயலக பணியாளருக்கும் இடையே கை கலப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பொலிஸார் வருகை தந்து எரிபொருள் விநியோகத்தை நிறுத்தியுள்ளனர். - [5 நாட்களாக எரிபொருள் வரிசையில் காத்திருந்தவர் தனது வாகனத்திலேயே உயிரிழப்பு](https://minnal24.com/5-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%be%e0%ae%95-%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a/): எரிபொருள் வரிசையில் காத்திருந்த மற்றுமொரு நபர் இன்று வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார். களுத்துறை மாவட்டம் அங்குருவாதோட்டை, படகொடவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் வரிசையில் காத்திருந்த டிப்பர் சாரதியான 63 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் கடந்த 5 நாட்களாக குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் காத்திருந்துள்ளார். இந்நிலையில் இன்று தனது வாகனத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது - [பெற்றோல் மாபியா : கறுப்ப சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படும் எரிபொருள்](https://minnal24.com/%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%8b%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-%e0%ae%95%e0%ae%b1%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa-%e0%ae%9a/): மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட நாட்டின் சில பகுதிகளில் கறுப்பு சந்தையில் அதிக விலைக்கு எரிபொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தெரிய வந்துள்ளது. பல நாட்களாக இரவு பகலாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் காத்திருந்தும் எரிபொருளை பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் இருக்கும் மக்கள் அதிக விலை கொடுத்து என்றாலும் எரிபொருளை பெற்றுக் கொள்ளலாம் என்ற மனநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறான ஒரு நிலையை பயன்படுத்தி பெற்றோல் மாபியாக்கள் உருவாகியுள்ளதாக தெரிய வருகின்றது. அதன்படி பல்வேறு இடங்களில் ரகசியமாக ஒரு லீற்றர் டீசல் மற்றும் பெட்ரோல் 1,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது. விவசாயம் செய்பவர்கள் மற்றும் அத்தியாவசிய பயணங்கள் செல்பவர்கள் இவ்வாறான கறுப்பு சந்தையில் அதிக விலை கொடுத்து எரிபொருளை கொள்வனவு செய்வதாக தெரிவிக்கப்படுகிறது. அதிக விலைக்கு எரிபொருளை விற்பனை செய்பவர்கள் மோசடியான முறையில் பெற்றுக் கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை அம்பாறை மாவட்டத்திலும் எரிபொருளை இரவு நேரங்களில் ரகசியமாக தமக்கு வேண்டியர்களுக்கு அதிக […] - [இலங்கையில் அதிகரிக்கும் எச்.ஐ.வீ எயிட்ஸ் தொற்றாளர்கள்](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae-5/): இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் 20 எச்.ஐ.வீ தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர், இதில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் 20 முதல் 49 வயது வரையிலானவர்கள், என தேசிய எயிட்ஸ் தடுப்பு திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் ரசாஞ்சலி ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டில் 439 எயிட்ஸ் நோயாளிகள் பதிவாகியுள்ளனர். கடந்த காலங்களை விடவும் இளம் வயதினர் எயிட்ஸ் நோய்த் தொற்றுக்கு உள்ளாகும் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் அதிகரித்துள்ளது. இது ஓர் ஆபத்தான நிலை எனவும், கூடுதல் எண்ணிக்கையிலான தொற்றாளிகள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதாகவும், அறிமுகம் இல்லாதவர்களுடன் பாலுறவு கொள்ளும் போது பாதுகாப்பான வழிமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியமானது, எனவும் அவர் தெரிவித்துள்ளார். - [பெற்றோல் கப்பல் நாட்டை வந்தடைவதில் தாமதம்](https://minnal24.com/%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%8b%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%b5/): பெற்றோல் தாங்கிய கப்பல் ஒன்று நாளை வெள்ளிக்கிழமை நாட்டை வந்தடையவுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. முன்னதாக, இன்று வியாழக்கிழமை குறித்த கப்பல் நாட்டை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில்  தற்போது நாளையே குறித்த கப்பல் நாட்டை வந்தடையுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை மறுதினம் முதல் வழமைப் போல பெற்றோலை விநியோகிக்க முடியும் என இலங்கை கனிய எண்ணெய் தனியார் ஊர்தி தாங்கி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. டீசல் தாங்கிய கப்பல் ஒன்று நாளை மறுதினம் நாட்டை வந்தடையவுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அண்மையில் தெரிவித்திருந்தார்.   - [மீண்டும் அடுத்த மாதம் முதல் 5,000 ரூபா கொடுப்பனவு](https://minnal24.com/%e0%ae%ae%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81/): அடுத்த மாதம் முதல் 33 இலட்சம் குடும்பங்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக, மகளிர், சிறுவர் விவகாரம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சின் செயலாளர் நீல் ஹப்புதந்திரி தெரிவித்துள்ளார். அதன்படி, சமுர்த்தி பயனாளிகள், விசேட தேவையுடையோர், வயோதிப கொடுப்பனவு பெறுபவர்கள், சமுர்த்தி கொடுப்பனவை பெற்றுக் கொள்வதற்கான காத்திருப்பு பட்டியலில் இருப்பவர்கள் மற்றும் வறிய குடும்பங்களுக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. குறித்த கொடுப்பனவை வழங்குவதற்தகான முதற்கட்ட திட்டத்தை தயாரிக்கும் பணிகள் தற்சமயம் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. - [இன்றைய வானிலை முன்னறிவித்தல்](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%88%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf-12/): இன்று வியாழக்கிழமை நாட்டின் சில பிரதேசங்களில் மழையுடனான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிரவு கூறியுள்ளது. அதன்படி, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுக்கூடும். இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளையில் அபாயத்தைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை எச்சரித்துள்ளது. - [தீ விபத்தில் நான்கு வீடுகள் சேதம்](https://minnal24.com/%e0%ae%a4%e0%af%80-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%81/): -நுவரெலியா நிருபர்- ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட டிக்கோயா தரவளை கீழ்பிரிவு தோட்டத்தில் இன்று புதன்கிழமை காலை ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் 12 வீடுகள் கொண்ட தொடர் குடியிருப்பில் நான்கு வீடுகள் தீயினால் பகுதி அளவில் எரிந்து நாசமாகியுள்ளது. இந்த நான்கு வீ்டுகளிலும் இருந்த 20 பேர் தற்காலிகமாக உறவினர்கள் வீட்டில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த தீ விபத்தின் போது, எவருக்கும் தீ காயங்கள் ஏற்படவில்லை என்பதோடு, சில பொருட்களே தீக்கிரையாகியுள்ளது. தீ ஏற்பட்ட போது வீட்டில் இருந்தவர்கள் எரிவதை கண்டு கூச்சலிட்டதாகவும், அதன் பிறகு அயலவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சிகளை மேற்கொண்டு தீயை அணைத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதேவேளை, இது தொடர்பாக ஹட்டன் பொலிஸ் நிலையத்திற்கு பிரதேசவாசிகளால் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பின் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் தீ பரவலுக்கான காரணங்களை கண்டறிய மேலதிக விசாரணகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுக்கான நிவாரண உதவிகளை நோர்வூட் […] - [கடலுக்கு சென்ற 4 மீனவர்களை காணவில்லை : அச்சத்தில் பிரதேச மக்கள்](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-4-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3/): -கிளிநொச்சி நிருபர்- யாழ்ப்பாணம் வடமராட்சி சக்கோட்டையிலிருந்து நேற்று செவ்வாய்க்கிழமை கடற்றொழிலிற்கு சென்ற 4 மீனவர்கள் இதுவரை கரை திரும்பாததால் அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நேற்று பிற்பகல் கடலுக்குச் சென்று இன்று காலை 10.00மணியளவில் கரை திரும்ப வேண்டியவர்கள், இதுவரை கரை திரும்பாததால் உறவினர்கள் மற்றும் பிரதேச மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. கடற்படைக்கு அறிவிக்கப்பட்டு, அவர்கள் ஊடாக தேடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதேச கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவிக்கும் அதே வேளை, எரிபொருள் இல்லாமையால் தேடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். - [உள்ளுராட்சி மன்றங்களுக்கு ஆளுநர் விடுத்துள்ள வேண்டுகோள்](https://minnal24.com/%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%81%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d/): -கிளிநொச்சி நிருபர்- எரிபொருளிற்காய் நீண்ட வரிசையில் மணிக்கணக்காக காத்திருக்கும் மக்களுக்கு உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் பொது அமைப்புக்கள் இயன்ற வரை நீராகாரத்தை வழங்குமாறு வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா கோரிக்கை விடுத்துள்ளார். நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் நிலையில் வடமாகாணத்திலும் மக்கள் மணிக்கணக்கில் வெயிலில் நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள். மட்டுப்படுத்தப்பட்ட அளவில் எரிபொருள் விநியோகம் இடம்பெற்று வருவதால், அதனைப் பெறுவதற்காக நோய் நிலமை உள்ளவர்களும் எரிபொருளிற்காய் மணிக்கணக்காக காத்திருக்கிறார்கள். ஆகவே, இயன்ற வரை எரிபொருளிற்காய் வரிசையில் காத்திருக்கும் மக்களுக்கு சமூக மட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், கொடை வள்ளல்கள் தற்போதைய தருணத்தில் நீராகாரத்தை வழங்கி உதவுமாறு வடமாகாண பிரதம செயலாளர் ஊடாக, வடமாகாண உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் உள்ளூராட்சி ஆணையாளர் மாற்றம் பிரதேச செயலகங்களுக்கும் ஆளுநர் கோரிக்கை விடுத்துள்ளார். - [போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் செய்த மனிதாபிமான செயல்](https://minnal24.com/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/): -யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு அருகாமையில் 96ஆயிரம் ரூபாய் பணத்தை பேருந்தில் தொலைத்த தாயொருவரின் பணத்தொகையை யாழ்.மாவட்ட பிராந்திய போக்குவரத்து பொலிஸார் மீட்டு குறித்த தாயிடம் கொடுத்த சம்பவம் இன்று புதன்கிழமை பிற்பகல் 4.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது, யாழ்ப்பாணத்திலிருந்து சுன்னாகம் நோக்கி பயணித்த பேருந்து ஒன்றில் பயணித்த ராஜலட்சுமி சௌந்தர்ராஜன் (வயது 62) என்பவர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இறங்கி நடந்து வந்துள்ளார். இந்நிலையில் வங்கியிலிருந்து மீளப்பெற்ற 96ஆயிரம் ரூபாய் பணத் தொகையை பணப் பையினுள் பார்த்த பொழுது குறித்த பணத்தொகையை காணவில்லை . அவ்விடத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த யாழ் மாவட்ட பிராந்திய போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரிடம் சம்பவம் தொடர்பாக அழுதவண்ணம் விடயத்தை தெரிவித்துள்ளார். இதனையடுத்து, குறித்த இரு போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்களும் குறித்த தாயாரின் தேசிய அடையாள அட்டையை வாங்கி குறித்த பேருந்தை கொக்குவில் பகுதியில் […] - [மன்னார் நொச்சிக்குளம் இரட்டை கொலை : மேலும் 6 சந்தேக நபர்கள் கைது](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8%e0%af%8a%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87-3/): -மன்னார்  நிருபர்- மன்னார்   நொச்சிக்குளம் பகுதியில் கடந்த 10 திகதி நடைபெற்ற இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்பு பட்டதாக சந்தேகிக்கப்படும் மேலும் ஆறு சந்தேக நபர்கள் மன்னார் பொலிஸார் கைது செய்யப்பட்டு இன்று புதன்கிழமை காலை மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளனர். கடந்த  10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை  காலை  மன்னார் நொச்சிக்குளம் கிராமத்தில் இடம் பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர் களான இரண்டு குடும்பஸ்தர்கள் கொல்லப்பட்டதுடன்  இருவர் படுகாயமடைந்தனர்.  குறித்த சம்பவத்தில் 40 வயதுடைய  யேசுதாசன் ரோமியோ மற்றும் 33 வயதுடைய யேசுதாசன் தேவதாஸ் எனும் உடன் பிறந்த  சகோதரர்கள்  இருவரே படுகொலை செய்யப்பட்டனர். இவ் கொலையுடன் சம்பந்தப்பட்டதாக கைது செய்யப்பட்ட 6 சந்தேக நபர்ளையும் இன்று புதன்கிழமை காலை  மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். கைது செய்யப்பட்ட 6 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 24 ஆம் திகதி வரைவிளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான்  இன்று உத்தரவிட்டார். […] - [ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம் : உயிரிழந்தோர் எண்ணிக்கை 1000ஐ நெருங்கியது](https://minnal24.com/%e0%ae%86%e0%ae%aa%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%a8%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d-2/): ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நில அதிர்வின் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 950 பேர் பலியாகியுள்ளதோடு, 600க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள கோஸ்ட் நகரிலிருந்து சுமார் 44 கிலோமீற்றர் தொலைவில் 51 கிலோமீற்றர் ஆழத்தில் 6.1 மெக்னிடீயூடாக நில அதிர்வு பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. தொடர்புடைய செய்தி https://www.minnal24.com/?p=79082 - [வீதியை கடக்க முற்பட்ட வயோதிபர் முச்சக்கர வண்டியில் மோதுண்டு படுகாயம்](https://minnal24.com/%e0%ae%b5%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%b5%e0%ae%af/): -பதுளை நிருபர்- பண்டாரவளையில் இருந்து லுணுகலை நோக்கி சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்றில், பசறை பஸ் தரிப்பிடத்திற்கு முன்பாக வீதியை கடக்க முற்பட்ட வயோதிபர் ஒருவர்,  மோதுண்டு விபத்துக்குள்ளானார். எக்கிரிய பகுதியைச் சேர்ந்த 82 வயதுடைய வயோதிபர் ஒருவரே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளார். பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த முதியவர், பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வைத்தியர் ஒருவர் தெரிவித்தார். குறித்த முச்சக்கரவண்டி சாரதி பசறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். - [எரிவாயு பிரச்சினைக்கு விரைவில் தீர்வு - பிரதமர் ரணில் விக்ரமசிங்க](https://minnal24.com/%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%af%81-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf/): நாட்டிற்கு 100,000 மெட்ரிக் டன் எரிவாயுவை இறக்குமதி செய்ய உலக வங்கியின் 70 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் இலங்கை அரசாங்கத்தின் 20 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியையும் வழங்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று புதன்கிழமை நாடாளுமன்றில் ஆற்றிய விசேட உரையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்தார். இதனூடாக, எரிவாயு பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண முடியும் எனவும், இடைக்கால பாதீட்டில் பொது மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 200 பில்லியன் ரூபா ஒதுக்கப்படும் என்றும், பிரதமர் மேலும் தெரிவித்தார். - [மன்னார் வளைகுடாவில் மீனவர் வலையில் சிக்கிய அரிய வகை சூரிய மீன்](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b3%e0%af%88%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a9%e0%ae%b5/): -மன்னார் நிருபர்- மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த பாம்பன் விசைப்படகு மீனவர்கள் வலையில் அரிய வகை சூரிய மீன் ஒன்று இன்று புதன்கிழமை காலை சிக்கியது. மத்திய கடல் மீன் ஆராய்ச்சி விஞ்ஞானிகள் சூரிய மீனை ஆய்வு செய்தனர். மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 104 வகை பவளத் திட்டுகள், 147 வகை கடல் பாசிகள், கடல் புற்கள், கடல் சங்குகள், கடல் ஆமை, கடல் குதிரை, கடல் அட்டை, டால்பின், அணில் மீன், புள்ளி திருக்கை, சூரிய மீன் போன்ற அரிய வகை உயிரினங்கள் உள்ளன. அரிய வகை மீனான சூரிய மீன் பெரும்பாலும் மீனவர்கள் வலையில் சிக்குவது இல்லை. இந்நிலையில், பாம்பன் தெற்கு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன் பிடிக்கச் சென்ற விசைப்படகு மீனவர்கள் வலையில் சூரிய மீன் சிக்கியது. இந்த சூரிய மீன் சிறிய வாய், துடுப்பு […] - [அரச ஊழியர்களுக்கு வெளிநாடு செல்ல சம்பளமற்ற விடுமுறை](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a-%e0%ae%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%be/): அரச ஊழியர்கள் சம்பளமில்லாத விடுமுறையில் தொழில்வாய்ப்புகளுக்காக வெளிநாடு செல்வதற்கு அனுமதியளிக்கும் வகையில் சுற்றறிக்கையொன்று வெளியாகியுள்ளது. பொதுநிருவாக உள்நாட்டலுவல்கள் மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சினால் இந்த விசேட சுற்றறிக்கை இன்று புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. சேவை மூப்பு மற்றும் ஓய்வூதியத்திற்கு பாதிப்பில்லாத வகையில் அரச ஊழியர்கள் தமது சேவைக்காலத்தில் 5 வருடங்களுக்கு உட்பட்டு  வெளிநாடு செல்வதற்கு சம்பளமில்லாத விடுமுறையினை பெற்றுக்கொள்ள முடியுமென அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   - [ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் 250 பேர் உயிரிழப்பு](https://minnal24.com/%e0%ae%86%e0%ae%aa%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%a8%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/): ஆப்கானிஸ்தானில் ரிக்டர் அளவுக்கோலில் 6.1 மெக்னிடீயூடாக பதிவாகியுள்ள  சக்திவாய்ந்த நில அதிர்வின் காரணமாக, சுமார் 250 பேர் வரை உயிரிழந்துள்ளதுடன் 150 பேருக்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள கோஸ்ட் நகரிலிருந்து சுமார் 44 கிலோமீற்றர் தொலைவில் 51 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நில அதிர்வு ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அத்துடன், இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடுமென தெரிவிக்கப்படுகிறது.   - [பரீட்சையில் தோல்வியடைந்ததால் ஒரே நாளில் உயிரை மாய்த்துக்கொண்ட 11 மாணவர்கள்](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%b0%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%9f%e0%af%88%e0%ae%a8%e0%af%8d/): தமிழகத்தில் பொதுத்தேர்வில் தோல்வியடைந்ததால் 11 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், 28 மாணவர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதும் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் 12ஆம் வகுப்பில் 93.76 சதவீதமும், 10ஆம் வகுப்பில் 90.07 சதவீதமும் மாணவ,மாணவியர்கள் தேர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் 10 மட்டும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தோல்வியடைந்த விரக்தியில், ஒரே நாளில் தமிழகத்தில் 11 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மேலும் 28 மாணவர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் தெரிய வந்துள்ளது.   - [நாளை மறுதினம் பெற்றோல் விநியோகம் வழமைக்கு திரும்பும்](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%8b%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5/): பெற்றோல் கப்பல் ஒன்று நாளை வியாழக்கிழமை நாட்டை வந்தடையவுள்ளது. அதனைத் தொடர்ந்து பெற்றோல் விநியோகம் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை வழமைக்கு திரும்பும் என இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. டீசல் கப்பல் ஒன்று எதிர்வரும் சனிக்கிழமை நாட்டை வந்தடைய உள்ளதாக, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர அண்மையில் தெரிவித்திருந்தார். இதேவேளை, கச்சா எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை மீண்டும் மூட வேண்டிய நிலை ஏற்படும், என பெற்றோலிய பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் அசோக ரன்வல தெரிவித்துள்ளார். - [உலக சந்தையில் கச்சா எண்ணையின் விலை சற்று வீழ்ச்சி](https://minnal24.com/%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be-%e0%ae%8e%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3/): உலக சந்தையில் கச்சா எண்ணையின் விலை சற்று வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த வாரம் உலக சந்தையில் கச்சா எண்ணெய் பரல் ஒன்றின் விலை 120 அமெரிக்க டொலர்களாக இருந்தது. இது இந்த வாரம் சற்று குறைந்து நேற்று செவ்வாய்க்கிழமை 115 டொலராக உள்ளது. உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த மாதங்களில் 110 டொலருக்கு குறைவாக இருந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. - [பைசர் தடுப்பூசிகளை மியன்மாருக்கு நன்கொடையாக வழங்குவது தொடர்பில் கலந்துரையாடல்](https://minnal24.com/%e0%ae%aa%e0%af%88%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d/): நாட்டில் கையிருப்பில் உள்ள சுமார் 7 மில்லியன் பைசர் தடுப்பூசிகளை மியன்மார் அரசாங்கத்திற்கு நன்கொடையாக வழங்குவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருவதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். முன்னதாக இலங்கையில் எஞ்சியுள்ள 600,000 Pfizer தடுப்பூசிகளை மியன்மாருக்கு வழங்கி, அங்கிருந்து அரிசி இருப்பை பெற்றுக்கொள்வதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும், இந்தச் சரக்குகளை ஏற்க மியன்மார் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.   - [இன்றைய வானிலை முன்னறிவித்தல்](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%88%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf-11/): இரத்தினபுரி, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இன்று அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடமேல் மாகாணத்திலும் கம்பஹா, கொழும்பு, கண்டி, நுவரெலியா மற்றும் கேகாலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். யாழ்ப்பாண மாவட்டத்திலும் மழை பெய்யும். ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.   - [நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனின் சகோதரர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%89%e0%ae%b1%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf/): மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரனின் சகோதரர், இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு பிரிவினரால் இன்று செவ்வாய்க்கிழமை அவர் கைது செய்யப்பட்டுள்ளார். காணி ஒன்று தொடர்பில் 15 இலட்சம் ரூபாவை இலஞ்சமாக பெற முயற்சித்த குற்றச்சாட்டில்  மட்டக்களப்பில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனின் சகோதரருடன் மற்றுமொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. - [மண்ணெண்ணெய் லீற்றருக்கு 370 ரூபாவாக அதிகரிக்கப்படும்](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%86%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b2%e0%af%80%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/): மண்ணெண்ணெய் லீற்றருக்கு 370.00 ரூபாவாக அதிகரிக்கப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது ஒரு லிற்றர் மண்ணெண்ணெய் 87.00 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஒரு லீற்றர் மண்ணெண்ணெக்கு 283.00 ரூபா நட்டத்தைச் சந்தித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் மண்ணெண்ணெய் லீற்றருக்கு 370.00 ரூபாவாக அதிகரிக்கப்படும் என கூட்டுத்தாபன அதிகாரி ஒருவர் தெரிவித்தார். குறைந்த வருமானம் பெறுவோருக்கு தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக சலுகை விலையில் மண்ணெண்ணெய் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். - [வெடி பொருட்களுடன் இருவர் கைது](https://minnal24.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d/): -கிளிநொச்சி நிருபர்- மருதங்கேனி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதங்கேனிப்பகுதியில் பொலிஸ் சிறப்பு பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய, வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. அத்துடன், இருவர் சிறப்பு அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் கைது செய்யப்பட்ட இருவரும் கடல் தொழிலுக்காக வெடிபொருட்களை சேகரித்து மீன் பிடி தொழிலாளர்களுக்கு வழங்குவது தொழிலாக கொண்டவர்கள் என விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக மருதங்கேணி பொலிஸார் தெரிவித்துள்ளனர் குறித்த இருவரையும் நாளை புதன்கிழமை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். - [மின்வெட்டு தொடர்பான அறிவித்தல்](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b5%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5/): நாளை புதன்கிழமை மற்றும் நாளை மறுதினம் ஆகிய இரு தினங்களில் மின்வெட்டை மேற்கொள்வதற்கு இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதற்கமைய,  A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு பிற்பகல் 12 முதல் இரவு 10 மணிக்கு வரையான காலப்பகுதியினுள்  2 மணித்தியாலங்களும்  30 நிமிடங்களும், MNOXYZ ஆகிய வலயங்களில் அதிகாலை 5 மணிமுதல் காலை 8.20 வரையான காலப்பகுதியில் 3 மணித்தியாலங்கள் மின்வெட்டு சுழற்சி முறையில் மேற்கொள்ளப்படவுள்ளது. அத்துடன், கொழும்பு வர்த்தக  முன்னுரிமை வலயங்களில் காலை 6 மணிமுதல் காலை 8 மணிவரை 2 மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுலாக்கப்படவுள்ளது. - [தன்னை கடித்த பாம்பை சாப்பிட்ட நபர்](https://minnal24.com/%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%88-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d/): இந்தியாவில் தன்னை பாம்பு கடித்ததால் பாம்பின் மீது ஆத்திரமடைந்து குறித்த பாம்பை சாப்பிட்ட நபர் உயிர் பிழைத்த ஆச்சரிய சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்தியா-உத்தரபிரதேச மாநிலத்தின் சோகத் கிராமத்தை சேர்ந்தவர் மத்தபால் சிங் மத்தபால் தனது விளைநிலத்தில் இருந்து வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்த போது அவரை பாம்பு கடித்தது. இதனால் பாம்பின் மீது கோபம் கொண்ட அவர் பாம்பை சாப்பிட்டுள்ளார். இது குறித்து வீட்டில் வந்து சொன்ன போது குடும்பத்தார் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் சிகிச்சையளிக்கப்பட்டது. தற்போது மத்தபால் உயிருக்கு எந்தவொரு ஆபத்துக்கும் இல்லை எனவும், அவர் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். விஷப்பாம்பு கடித்தும், அந்த பாம்பை அவர் சாப்பிட்டும் அவர் உயிருக்கு எந்தவொரு ஆபத்தும் ஏற்படாமல் இருந்த கிராம மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. - [மெனிங் சந்தையில் சற்றுமுன் துப்பாக்கிச் சூடு : ஒருவர் உயிரிழப்பு](https://minnal24.com/%e0%ae%ae%e0%af%86%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%81/): பேலியகொடை-மெனிங் சந்தையில் சற்று முன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் இடம்பெற்ற இச்சம்பவத்தில், 42 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். - [ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தாக்கல் செய்த மனு நீதிமன்றினால் நிராகரிப்பு](https://minnal24.com/%e0%ae%9c%e0%af%8b%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%8b-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95/): தாம் கைது செய்யப்படுவதை தடுக்கும் வகையிலான உத்தரவைப் பிறப்பிக்கக் கோரி, முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணாண்டோ தாக்கல் செய்திருந்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மே 9ஆம் திகதி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களால்  காலி முகத்திடல் மற்றும் அலரிமாளிகைக்கு முன்னால் அமைதி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தின் சந்தேக நபராக ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ பெயரிடப்பட்டு, அவரை கைது செய்வதற்கான உத்தரவை, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்திருந்தது. அதனையடுத்து, அவர் தாம் கைது செய்யப்படுவதை தடுக்க கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்திருந்தார். குறித்த மனுவின் அடிப்படையில் அவரை நீதிமன்றில் சரணடைய மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் சரணடைந்த அவருக்கு அன்றைய தினமே பிணை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. - [எரிபொருள் தொடர்பில் அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ள தகவல்](https://minnal24.com/%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%9a/): எதிர்வரும் வியாழக்கிழமை பெற்றோல் அடங்கிய கப்பல் ஒன்று நாட்டை வந்தடையவுள்ளதாக, அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அத்துடன், எதிர்வரும் 25ஆம் திகதி டீசல் அடங்கிய கப்பல் ஒன்றும் நாட்டை வந்தடையவுள்ளதாக, அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடுகளுக்கு மத்தியில்  தெரிவு செய்யப்பட்ட 74 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் சுகாதார சேவையாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி, எதிர்வரும் 24ஆம் திகதி முதல் வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில்  வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் சுகாதார சேவையில் ஈடுபடும் ஏனைய பணிக்குழாமினர் எரிபொருளை பெற்றுக் கொள்ள முடியும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.   - [வெளிநாட்டு நாணயம் செலுத்தும் எரிபொருள் நிரப்பு நிலையங்களை திறக்க கோரிக்கை](https://minnal24.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a3%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%81%e0%ae%a4%e0%af%8d/): அனைத்து மாவட்டங்களிலும் டொலர் உட்பட வெளிநாட்டு நாணயம் செலுத்தும் எரிபொருள் நிரப்பு நிலையங்களை திறக்குமாறு, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் பியதிஸ்ஸ கோரிக்கை விடுத்துள்ளார். இந்த எரிபொருள் நிரப்பு நிலைய வேலைத்திட்டம் வெற்றியடையும் பட்சத்தில் அதில் கணிசமான அளவு வெளிநாட்டு நாணயங்கள் காணப்படும் எனவும் அவர் அமைச்சருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார். வெளிநாட்டு நாணயங்கள் பல்வேறு நபர்களின் வசம் மறைத்து வைக்கப்பட்டிருப்பதால் அதனை வெளியில் எடுப்பதற்கு இந்த பிரேரணையை பரிசீலிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்   - [எரிபொருள் இல்லை : சுகாதார சேவைகள் முடங்கும் அபாயம்](https://minnal24.com/%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88-%e0%ae%9a%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0/): -கிளிநொச்சி நிருபர்- எரிபொருள் இன்மை காரணமாக பொது சுகாதார பரிசோதகர்களது பணி ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. பருத்தித்துறை, மருதங்கேணி, கரவெட்டி, ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு பொது சுகாதார பரிசோதகர்கள் நேற்று திங்கட்கிழமை தாம் பணிக்கு செல்வதற்காக, குஞ்சர்கடை, நெல்லியடி, மந்திகை, கிராமக்கோடு ஆகிய எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் பெற்றுக்கொள்ள சென்ற போது, பெற்றோல் இல்லை என சகல எரிபொருள் நிரப்பு நிலையங்களும் கைவிரித்த நிலையில், அனைத்து பொது சுகாதார பரிசோதகர்களும் திரும்பி சென்றுள்ளனர். பொது சுகாதார பரிசோதகர்கள் கருத்து தெரிவிக்கும் போது, தற்போது டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது, இந்நிலையில் அதனை கட்டுப்படுத்த வேண்டிய கட்டாய நிலையில் உள்ளதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படக்கூடிய அபாயம் உள்ளதாகவும், தெரிவித்தார்கள். - [புதைத்து வைக்கப்பட்டிருந்த 715 லீற்றர் மண்ணெண்ணெய் மீட்பு](https://minnal24.com/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81/): முல்லைத்தீவு – உடையார் கட்டுப்பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 715 லீற்றர் மண்ணெண்ணெய் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பிரதேசத்தில் தனியார் காணி ஒன்றில் கடந்த மே 31 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட துப்பரவு பணிகளின்போது, புதைக்கப்பட்டிருந்த 7 மண்ணெண்ணெய் பீப்பாய்கள் கண்டுப்பிடிக்கப்பட்டன. இந்த விடயம் தொடர்பில்  பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு, அதன்பின் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜாவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனை ஆராய்ந்த நீதிபதி  அந்த பகுதியில் தோண்டுதல் பணிகளை முன்னெடுக்குமாறு உத்தரவிட்டார். இதனையடுத்து, அதிகாரிகள், கிராமசேவையாளர் முன்னிலையில் நேற்று திங்கட்கிழமை குறித்த மண்ணெண்ணெய் பீப்பாய்கள் தோண்டி எடுக்கப்பட்டன. மேற்படி 7 பீப்பாய்களில் இருந்து 715 லீற்றர் மண்ணெண்னை மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் இன்று செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த, நடவடிக்கை எடுத்துள்ளதாக, புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். - [உக்ரைன் இராணுவத்திலிருந்து "கோ ஹோம் கோட்டா"](https://minnal24.com/%e0%ae%89%e0%ae%95%e0%af%8d%e0%ae%b0%e0%af%88%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a3%e0%af%81%e0%ae%b5%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8/): உக்ரைன் இராணுவத்தில் போரிடுவதாகக் தெரிவிக்கப்படும் இலங்கையின் முன்னாள் இராணுவ வீரர் ஒருவர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிரான பதாகையை ஏந்தியவாறு காணப்படும் புகைப்படத்தை டெய்லி மிரர் ஊடகம் வெளியிட்டுள்ளது. இப்புகைப்படம் கடந்த மாதம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. - [இரவு நேரங்களில் முறைகேடாக எரிபொருள் விநியோகம் : படையினர் துணைபோவதாக குற்றச்சாட்டு](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%b5%e0%af%81-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%95%e0%af%87%e0%ae%9f%e0%ae%be/): -கல்முனை நிருபர்- சாய்ந்தமருது எரிபொருள் நிரப்பு நிலையங்களில் முறைகேடாக எரிபொருள் விநியோகம் நடைபெறுவதாகவும், இவ்விடயங்களில் பிரதேச செயலகம் பாராமுகமாக இருப்பதாகவும் தெரிவித்து, சாய்ந்தமருது இளைஞர்கள் தலைமையிலான எரிபொருளுக்கு காத்திருந்தோர்கள் இன்று செவ்வாய்க்கிழமை காலை சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆஷிக்கை அலுவலகத்தில் சந்தித்து எரிபொருள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்தனர். இரவு நேரங்களில் முறைகேடாக எரிபொருள் வழங்கப்படுவதாகவும், பாதுகாப்புக்கு நிற்கும் பாதுகாப்புப் படையினர் இந்த செயலுக்கு துணைபோவதாகவும் தெரிவித்த பொதுமக்கள் எரிபொருள் வழங்குவதற்கு ஒரு முறையான பொறிமுறையை உருவாக்குமாறும் தொண்டரணியாக இந்த விடயத்தை கையாள முடியுமான உதவிகளை வழங்க நாங்கள் தயாராக இருப்பதாகவும், நேற்று நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை எரிபொருள் கேட்டும் எரிபொருள் வழங்கப்படாமையினால் நீர் விநியோகம் தடைப்பட்டிருந்ததாகவும், பிரதேச செயலாளருக்கு தெரிவித்தனர். இதுதொடர்பில் கலந்துரையாடிய சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக் முறையான தீர்வொன்றை பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாகவும், முறைகேடுகள் இடம்பெறுவதை ஆதாரத்துடன் சமர்பிக்குமாறும் பொதுமக்களை கேட்டுக்கொண்டார். ஏற்கனவே […] - [ஒரு வீட்டிலிருந்து 9 சடலங்கள் மீட்பு](https://minnal24.com/%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-9-%e0%ae%9a%e0%ae%9f%e0%ae%b2%e0%ae%99/): இந்திய-மகாராஷ்டிராவில் ஒரு வீட்டில் குடும்ப உறுப்பினர்கள் 9 பேர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் சங்கிலி மாவட்டத்தில் உள்ள ஹைசால் பகுதியில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் அனைவரது உடல்களும் ஒரு வீட்டில் இருப்பதாக தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இறந்து கிடந்தவர்கள் உடல்களை மீட்ட பொலிஸார்  பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக பொலிஸார் தரப்பில் தெரிவிக்கையில், அந்த வீட்டில் இருந்து 9 சடலங்களை நாங்கள் கைப்பற்றினோம். மூன்று பேரின் சடலங்கள் ஒரு பகுதியிலும், ஆறு பேரின் சடலங்கள் வீட்டின் மற்றோரு பகுதியிலும் கண்டுபிடித்தோம். உயிரிழந்தவர்கள் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம். எனினும் பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியான பிறகே உண்மை தெரிய வரும் என தெரிவித்துள்ளனர். - [நாட்டில் பல இடங்களில் மழையுடனான வானிலை](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b2-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b4-5/): நாட்டில், மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், முல்லைத்தீவு மாவட்டத்திலும் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். - [சீனியின் விலை அதிகரிக்க கூடும்](https://minnal24.com/%e0%ae%9a%e0%af%80%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/): சீனி கிலோ ஒன்றின் விலை 50 ரூபாவால் அதிகரிக்கக் கூடும் என சீனி இறக்குமதியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். தாய்லாந்தில் இருந்து சீனி இறக்குமதி செய்ய நேரிட்டால் சந்தையில் இவ்வாறு சீனியின் விலை அதிகரிக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். சீனி கிலோகிராம் ஒன்று தற்போது சந்தையில் 265 ரூபா முதல் 300 ரூபாவிற்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகின்றது. இந்தியாவினால் சர்வதேச சந்தைக்கு சீனி உள்ளிட்ட மேலும் சில அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதி நிறுத்தப்பட்டமையால் சந்தையில் சீனியின் விலை அதிகரித்துள்ளது. உக்ரேன் உள்ளிட்ட மேலும் சில நெருக்கடிகள் காரணமாக இந்தியாவினால் சீனி  தானியங்கள் உள்ளிட்ட சில பொருட்களின் இறக்குமதி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன. எவ்வாறாயினும், பங்களாதேஷ், மியன்மார், மாலைத்தீவு உள்ளிட்ட நாடுகள் ராஜதந்திர ரீதியாக மேற்கொண்ட தலையீட்டு காரணமாக இறக்குமதி தடை நீக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக  அரசாங்கம் ராஜதந்திர ரீதியாக தலையீடு செய்து சீனிக்கான இறக்குமதி தடையை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என சீனி […] - [சமையல் எரிவாயு பிரச்சினைக்கு அமைச்சர் தெரிவித்துள்ள தீர்வு](https://minnal24.com/%e0%ae%9a%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%af%81-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88/): சமையல் எரிவாயு பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் புதிய அடுப்பு வகைகளை அரசாங்கம் அறிமுகம் செய்ய உள்ளதாக கைத்தொழில் அமைச்சர்  ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதோ அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில், நாட்டில் சமையல் எரிவாயு பெற்றுக்கொள்வதில் கடுமையான நெருக்கடி நிலைமை உருவாகியுள்ளது. விறகு பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்கும் நகர மக்கள் மற்றும் அடுக்கு மாடி வீடுகளில் தங்கியிருக்கும் மக்களுக்கு பயன்படுத்தக் கூடிய வகையில் புதிய அடுப்பு அறிமுகம் செய்யப்பட உள்ளது. சிரட்டைக் கரியை பயன்படுத்தக் கூடிய சில புதிய அடுப்பு மாதிரிகள் பரீட்சார்த்த அடிப்படையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் தரமான ஓர் அடுப்பினை தெரிவு செய்து வணிக ரீதியில் உற்பத்தி செய்து சந்தையில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டு வாரங்களில் இந்த புதிய அடுப்பு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்கான சிரட்டைக் கரி உற்பத்தியும் மேற்கொள்ளப்படவுள்ளது, என அவர் மேலும் […] - [ஜனாதிபதியை பதவி விலகுமாறு கூறி பதுளையில் பாரிய ஆர்ப்பாட்டம்](https://minnal24.com/%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1/): -பதுளை நிருபர்- ஜனாதிபதியை பதவி விலகுமாறு கூறி இன்று திங்கட்கிழமை பதுளை நகரில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. பதுளை வைத்தியசாலைக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட இவ்வார்ப்பாட்டமானது, பதாதைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பியவாறு நடைபவணியாக வந்து பதுளை பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இவ்வார்ப்பாட்டத்தில் இளைஞர்கள் பலரும் கலந்து கொண்டனர். பதுளை-கொழும்பு பிரதான வீதியிலும், பதுளை-பசறை வீதியிலும் பாரிய வாகன நெரிசல் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. - [கொங்கிறிட் கலவை இயந்திர லொறி விபத்து](https://minnal24.com/%e0%ae%95%e0%af%8a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%ae%b5%e0%af%88-%e0%ae%87%e0%ae%af%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0/): -பதுளை நிருபர்- பதுளை-பசறை பிரதான வீதி, ஐந்தாம் கட்டை பகுதியில் கொங்கிறிட் கலவை இயந்திர லொறி ஒன்று விபத்துக்குள்ளாகியது. இன்று திங்கட்கிழமை பிற்பகல் இடம்பெற்ற இவ்விபத்தில், எவருக்கும் காயங்கள் ஏற்படாத போதிலும், வாகனம் பாரிய சேதமடைந்துள்ளது. - [காலில் முள் தைத்த இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%b3%e0%af%88%e0%ae%9e%e0%ae%a9%e0%af%8d/): -யாழ் நிருபர்- காலில் முள் தைத்த இளைஞன் ஒருவர் இன்று திங்கட்கிழமை காலை பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கையில், குறித்த இளைஞனுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் காலில் முள் தைத்துள்ளது. இருப்பினும் காலில் தைத்த முள்ளினை காணவில்லை, முள் தைத்த இடத்தில் வலி மாத்திரம் காணப்பட்டது. இந்நிலையில் அவரால் நடக்க முடியாத நிலை ஏற்பட்டதையடுத்து, அவர் கடந்த 09ஆந் திகதி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலை உயிரிழந்துள்ளார். அராலி மேற்கு, வட்டுக்கோட்டையை சேர்ந்த தருமராசா மதிகரன் (வயது 28) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். - [21 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு அமைச்சரவை அனுமதி](https://minnal24.com/21-%e0%ae%86%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%82%e0%ae%b2%e0%ae%a4/): அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக, அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை சந்திப்பில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டதாகவும், குறித்த திருத்தச் சட்டமூலம் விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும், அவர் தெரிவித்தார். - [மிளகாய் தூள் வீசி தாக்குதல் : 5 சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதி](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%a4%e0%af%82%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/): திருகோணமலை – ரொட்டவெவ, மிரிஸ்வெவ பகுதியில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட கைகலப்பில் 5 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 3 நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட கை கலப்புடன் தொடர்புடைய குறித்த இரு குழுக்களுக்கிடையே தொடர்ந்தும் முறுகல் நீடித்து வந்துள்ளது. இந்நிலையில் கடைக்குச் சென்ற சிறுவன் ஒருவனை தாக்கியுள்ளதுடன், மிளகாய் தூள் வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், இதனால் 3 சிறுவர்கள் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. இதேவேளை மற்றைய குழுவில் உள்ள 2 சிறுவர்களும் தாம் தாக்கப்பட்டதாக தெரிவித்ததை தொடர்ந்து, நோயாளர் காவு வண்டி மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அத்துடன், குறித்த 5 சிறுவர்களில் மூவர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இந்த சிறுவர்கள் அனைவரும் 16 வயதிற்கு உட்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மொரவெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். - [சுகாதார உத்தியோகத்தர்களுக்கு எரிபொருள் வழங்குவது தொடர்பான அறிவித்தல்](https://minnal24.com/%e0%ae%9a%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0-%e0%ae%89%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%af%8b%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3/): ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சுகாதார உத்தியோகத்தர்களுக்கு எரிபொருள் நிரப்புவது தொடர்பில் அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. கார்கள் மற்றும் வான்களுக்கு 40 லீற்றர், முச்சக்கர வண்டிகளுக்கு 15 லீற்றர் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு 10 லீற்றர் வழங்கப்படும். கீழே உள்ள அட்டவணையில் வடக்கு, கிழக்கு மாகாணத்தில் இதற்கான எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் தொடர்பில் அறிந்து கொள்ளலாம். - [ரஷ்ய பிரஜையால் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அமைதியின்மை](https://minnal24.com/%e0%ae%b0%e0%ae%b7%e0%af%8d%e0%ae%af-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9c%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d/): -பதுளை நிருபர்- இலங்கைக்கு சுற்றுலாப்பயணம் மேற்கொண்டிருந்த ரஷ்ய பிரஜை ஒருவர் வாகன நெரிசல் காரணமாக, கொள்கலனில் எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு முயற்சித்தமையால் ஹப்புத்தளை எரிபொருள் நிலையத்தில் அமைதியின்மை ஏற்பட்டது. வெளிநாட்டு சுற்றுலாப்பிரயாணிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் வழங்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ள போதிலும், குறித்த சுற்றுலாப்பயணி எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு அங்கு கூடியிருந்தவர்களால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, குறித்த எரிபொருள் நிலையத்தின் ஊடாக இடம்பெறும் எரிபொருள் விநியோகம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. ஹப்புத்தளை எரிபொருள் நிரப்பு  நிலையத்துக்கு ஒரு வாரத்திற்கு பின்னர் இன்று திங்கட்கிழமை எரிபொருள் விநியோகிக்கப்பட்டதால் காலை முதல் வாகனங்கள் நீண்ட வரிசையில் தரித்து வைக்கப்பட்டிருந்தமை காரணமாக கொழும்பு-ஹப்புத்தளை பிரதான வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. - [தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள கோரிக்கை](https://minnal24.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a3%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f/): 2022 ஆம் ஆண்டின் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்கள் இடம் பெற்றுள்ளதா என்பதை சரிபார்க்குமாறு, வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது. இவ்விடயம் தொடர்பாக மக்கள் தத்தமது பிரதேச கிராம உத்தியோகத்தர்களிடம் சென்று அல்லது தேர்தல் ஆணைக்குழுவின் www.elections.gov.lk என்ற இணையத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலம் உறுதிப்படுத்த முடியும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஏதேனும் முறைப்பாடுகள் இருப்பின், ஜூலை 12ஆம் திகதிக்கு முன்னதாக 011 2 860 034 என்ற எண்ணுக்குத் அறியத் தருமாறு தேர்தல் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது. - [தம்மிக்க பெரேரா நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொள்கிறார்?](https://minnal24.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%87%e0%ae%b0%e0%ae%be-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%ae%a9/): தேசிய பட்டியலினூடாக தெரிவாகியுள்ள பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேரா நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் நாளை செவ்வாய்க்கிழமை காலை அவர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தம்மிக்க பெரேராவுக்கு முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் பதவி வழங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து அந்த இடத்திற்கு வர்த்தகர் தம்மிக்க பெரேரா தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. - [உணவு பஞ்சம் ஏற்படும் போது உதவி செய்ய புலம்பெயர் தமிழர்கள் தயாராக இருக்க வேண்டும்](https://minnal24.com/%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b5%e0%af%81-%e0%ae%aa%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8f%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4/): இலங்கையில் எதிர்வரும் எட்டாம் மாதமளவில் உணவு பஞ்சம் ஏற்படும் போது எம் மக்களுக்கு உதவி செய்வதற்கு புலம்பெயர் தமிழ் மக்கள் தயாராக இருக்க வேண்டும், என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். சுவிஸில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், நாங்கள் ஜனாதிபதியினை சந்தித்த போது அவரிடம் மிக முக்கியமாக சொன்ன விடயம், வடக்கு, கிழக்கில் பொருளாதார அபிவிருத்தியினை செய்வதற்காக எங்களது புலம் தமிழர்கள் உதவி செய்வார்கள். ஆனால் அதற்கு நீங்கள் எங்களுக்கு அரசியல் தீர்வினை தர வேண்டும் என கூறியிருக்கின்றோம். ஆனாலும் இந்த விடயத்தில் அரசாங்கம் மௌனம் காக்கின்றது. எனினும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள அரசாங்கத்தினை காப்பாற்ற நாம் முயற்சிப்பதாக சிலர் சமூக வலைத்தளங்களில் விமர்சித்தனர். இன்று எங்களுடைய அரசியலை பொறுத்தவரையில், தமிழர்களுக்கு இரண்டு வகையான அரசியல் பிரச்சனைகள் காணப்படுகின்றன. முதலாவது எங்களது கடந்த […] - [சாய்ந்தமருதில் வரலாறு காணாத எரிபொருள் வரிசை : போக்குவரத்தும் ஸ்தம்பிதம்](https://minnal24.com/%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1%e0%af%81-%e0%ae%95%e0%ae%be/): -கல்முனை நிருபர்- அம்பாறை மாவட்ட சாய்ந்தமருது எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று திங்கட்கிழமை காலை முதல் பல்வேறு குழப்ப நிலைக்கு மத்தியில் எரிபொருள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் நீண்டவரிசையில் வாகனங்கள் காத்திருப்பதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சாய்ந்தமருது ஆரம்பிக்கும் ஸாஹிரா கல்லூரி சந்தி முதல் முடிவடையும் மாளிகா சந்திவரை, மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகள், கார்கள் போன்ற வாகனங்களில் வரிசையில் இன்று அதிகாலை முதல் எரிபொருளை பெற நீண்ட வரிசையில் பொதுமக்கள், சுகாதாரத்துறை உத்தியோகத்தர்கள், முன்கள பணியாளர்கள் என பலரும் வாகனங்களுடன் காத்திருந்தனர். இதனால், அவசர சிகிச்சைக்காக செல்லும் அம்புலன்ஸ் வண்டிகள் உட்பட அவசர முன்களப்பணி செய்யும் அரச திணைக்கள வாகனங்கள், பொதுமக்கள் எனப்பலரும் போக்குவரத்து நெரிசலில் சிக்கியிருந்ததுடன் வாகன நெரிசலை கட்டுப்படுத்தி போக்குவரத்தை சீரமைக்கும் பணியை பொலிஸார் மேற்கொண்டிருந்தனர். - [இலங்கைக்கு அவுஸ்திரேலியாவிடமிருந்து 50 மில்லியன் அமெரிக்க டொலர் உதவி](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%85%e0%ae%b5%e0%af%81%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%87%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af/): இலங்கையின் அவசர உணவு மற்றும் சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய அவுஸ்திரேலியா 50 மில்லியன் டொலர் உத்தியோகபூர்வ அபிவிருத்தி உதவிகளை வழங்கவுள்ளதாக, இலங்கையில் உள்ள அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகரகம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள  3 மில்லியன் மக்களின் அன்றாட ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்ய அவசர உணவு உதவிக்காக உலக உணவு திட்டத்திற்கு  அவுஸ்திரேலியா உடனடியாக 22 மில்லியன் டொலர்களை வழங்குவதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியா 2022-2023 ஆம் ஆண்டில் இலங்கைக்கு 23 மில்லியன் டொலர்களை அபிவிருத்தி உதவியாக வழங்கவுள்ளது. இது சுகாதார சேவைகள் மற்றும் பொருளாதார மீட்சிக்கு ஆதரவளிக்கும் என்றும் மேலும் தெரிவித்துள்ளது. இந்த நன்கொடைகள் இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் நிறுவனங்களுக்கு அண்மையில் வழங்கப்பட்ட 5 மில்லியன் டொலர்களுக்கு மேலதிகமாக வழங்கப்படுவதாக உயர்ஸ்தானிகரத்தின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. - [மனித எச்சம் கண்டுபிடிப்பு : அருகில் நஞ்சுப் போத்தல் ஒன்றும் மீட்பு](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4-%e0%ae%8e%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa/): வவுனியா மாமடு காட்டுப் பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மனித எச்சமொன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மாமடு பிரதேசத்தில் வசித்து வந்த தனுஸ்க அமரதாச (வயது 29) என்பவரின் எச்சமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. குறித்த நபர் கடந்த முதலாம் திகதி முதல் காணாமல் போயிருந்த நிலையில், மாமடு பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு பிரதேசவாசிகளால் தேடுதல் நடத்தப்பட்டு வந்த நிலையிலேயே குறித்த மனித எச்சம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மனித எச்சம் காணப்பட்ட இடத்திற்கு அருகில் நஞ்சுப்போத்தல் ஒன்றும் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் குறித்த மரணம் எவ்வாறு சம்பவித்தது என்பது தொடர்பில் மாமடு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். - [பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் IMF குழுவினருக்கிடையிலான கலந்துரையாடல்](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%9a-2/): சர்வதேச நாணய நிதியத்தின் 10 பேர் அடங்கிய குழுவினர் இலங்கைக்கு இன்று திங்கட்கிழமை விஜயம் செய்துள்ளனர். தற்போது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் குழுவினருக்கிடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றுக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. ஊழியர்கள் மட்ட உடன்படிக்கை மற்றும் தற்போதைய நிலைமைகள் குறித்து இக்கலந்துரையாடலில் பேசப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. - [மின்தடை மற்றும் மின்சார கட்டணம் தொடர்பான அறிவித்தல்](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a4%e0%ae%9f%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0/): இன்று திங்கட்கிழமை முதல் சுழற்சி முறையில் இரண்டரை மணிநேர மின்தடை அமுலாக்கப்படவுள்ளதாக, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, இன்று முதல் மதியம் 12 மணிமுதல் இரவு 10.30 வரையான காலப்பகுதியில், இரண்டரை மணிநேர மின்தடை அமுலாக்கப்பட உள்ளதாக அதன் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மேலும், அடுத்த இரண்டு மூன்று நாட்களில், மின்சாரக் கட்டணம் அதிகரிப்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் எனவும், மின் கட்டணம் அதிகரிக்கப்படும் முறைமை குறித்து இரண்டு தினங்களுக்குள் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் எனவும், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். - [இன்றைய வானிலை முன்னறிவித்தல்](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%88%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf-10/): இன்று திங்கட்கிழமை, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்  மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் அபாயத்தைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை எச்சரித்துள்ளது. - [ஜனாதிபதி செயலக பிரதான நுழைவாயில்களை மறித்து ஆர்ப்பாட்டம்](https://minnal24.com/%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%ae%b2%e0%ae%95-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%a8%e0%af%81/): ஜனாதிபதி செயலகத்தின் லோட்டஸ் மார்க்கத்தின் அனைத்து பிரதான நுழைவாயில்களையும் மறித்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோரி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களே இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர். அதன்படி, ஜனாதிபதி செயலகத்தின் லோட்டஸ் மார்க்கத்தின் இரண்டு நுழைவாயில்களையும் மறித்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் மேடைகளை அமைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. - [பிரதான நகர பாடசாலைகளுக்கு விடுமுறை](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%a8%e0%ae%95%e0%ae%b0-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/): மேல் மாகாணத்தின் கொழும்பு வலயம் மற்றும் அதனை அண்டிய நகரங்களின் பாடசாலைகளுக்கும், ஏனைய மாகாணங்களின் பிரதான நகர பாடசாலைகளுக்கும் இன்று திங்கட்கிழமை முதல் எதிர்வரும் 24ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. பிரதான நகரங்கள் இல்லாத பகுதிகளில் உள்ள பாடசாலைகள் தொடர்பில் பொருத்தமான தீர்மானங்களை மேற்கொள்வதற்கு மேல் மாகாணம் உட்பட சகல மாகாணங்களிலும் உள்ள கல்வி அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் ஆகியோருக்கு போக்குவரத்துக்கு சிரமங்கள் ஏற்படாத வகையில் பிரதேச மட்டத்தில் குறைந்த மாணவர் எண்ணிக்கையை கொண்ட பாடசாலைகளை நடத்துவதற்கு மாகாண கல்வி அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பாடசாலை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும் சில மாணவர்களுக்கு பாடசாலைகளுக்கு சமூகமளிக்க முடியாவிட்டால் அவர்களுக்கு இணையவழி ஊடாக கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் கல்வி அறிவுறுத்தியுள்ளது. சில பாடசாலைகளில் சமூகமளிக்க முடியாத மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கையை […] - [வழிப்பறியில் ஈடுபட்ட இரு இளைஞர்களை மடக்கி பிடித்த வியாபாரி](https://minnal24.com/%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%88%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81/): -யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதான வீதியில் வல்லைப் பகுதியில், வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்கள், பொது மக்களினால் மடக்கி பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். வல்லை பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, புத்தூர் பகுதியில் இறைச்சி வியாபாரம் செய்யும் வியாபாரி, வல்லை பகுதியூடாக வீட்டுக்கு சென்றுள்ளார். இதன் போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 இளைஞர்கள் கத்தி முனையில் வியாபாரியை அச்சுறுத்தி அவரிடமிருந்த 3 லட்சம் ரூபா பணத்தினை கொள்ளை அடித்துள்ளனர். சாமர்த்தியமாக செயல்பட்ட இறைச்சி வியாபாரி ஒரு இளைஞனை துரத்திப் பிடித்தார். மற்றையவர் அவ்விடத்தில் இருந்து தப்பி சென்று இருந்தார். தப்பி சென்ற இளைஞன் நாவல் காட்டு பகுதியில் உள்ள கோயில் கேணியில் கால் கழுவிக் கொண்டிருந்த போது பிடிபட்டார். வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட இளைஞர்கள் இருவரும் யாழ்ப்பாணம் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டது. குறித்த இரு இளைஞர்களின் […] - [கிழக்கு மாகாண பாடசாலைகள் வழமை போன்று நடைபெறும்](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%ae%b3-2/): இன்று திங்கட்கிழமை கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல பாடசாலைகளும் வழமைபோல நடைபெறும் என்று கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் நகுலேஸ்வரி புள்ளநாயகம் தெரிவித்துள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை கிழக்கு மாகாண கல்விச் செயலாளர் திசாநாயக்க மற்றும் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் புள்ள நாயகம் ஆகியோர் கிழக்கிலுள்ள 17 வலயக்கல்விப் பணிப்பாளர்களோடும் “சூம்” (Zoom) முறையிலான தொழில்நுட்பத்துடன் இணைந்து கூட்டத்தை நடத்தி மேற்படி தீர்மானத்தை எடுத்துள்ளனர். தூர பிரதேச பாடசாலைகளுக்கு செல்ல முடியாத ஆசிரியர்கள் வீட்டிலிருந்து இணையவழி முறைமூலம் மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் எனவும், அதனை அதிபர்கள் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அறிவித்தபடி அருகிலுள்ள பாடசாலைகளுக்கு யாரையும் இணைப்பு செய்ய அனுமதிப்பதில்லை என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய சகல ஆசிரியர்களும் பாடசாலைக்கு செல்ல வேண்டும். செல்லமுடியாத எரிபொருள் பிரச்சினை உள்ள ஆசிரியர்கள் வீட்டிலிருந்து இணையவழி மூலம் கற்பிக்கலாம். இதேவேளை, தூரத்துக்கு செல்லும் மாணவர்கள் எரிபொருள் பிரச்சினை காரணமாக செல்ல முடியாவிட்டால் […] - [களுத்துறையில் பதற்ற நிலை : படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88/): களுத்துறை – மீகஹதன்ன – பெலவத்தை, எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் எரிபொருளுக்கு கூடியவர்களுக்கிடையில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. நிலைமையைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு. - [விடைத்தாள் திருத்தும் பணியிலிருந்து ஆசிரியர்கள் விலக தீர்மானம்](https://minnal24.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a3/): நாளை திங்கட்கிழமை முதல்  கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை விடைத்தாள் திருத்தப் பணிகளில் இருந்து விலக ஆசிரியர்கள் தீர்மானித்துள்ளதாக, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுகின்ற மதிப்பீட்டாளர்களுக்கான எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக விசேடமாக கல்வி அமைச்சினால் வழங்கப்பட்ட படிவத்தினை பயன்படுத்தி எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை விடைத்தாள் திருத்தப் பணிகளில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள்  எரிபொருளை பெற்றுத்தரக்கோரி நாட்டின் பல பாகங்களிலும் இன்று ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், பதுளை உள்ளிட்ட பல பகுதிகளில் ஆசிரியர்கள் இந்தப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. - [சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு நாளை இலங்கை வருகிறது](https://minnal24.com/%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a3%e0%ae%af-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9-2/): சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு  நாளை திங்கட்கிழமை இலங்கைக்கு வரவுள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை அதிகாரிகள் குழுவினர்  அமெரிக்காவுக்கு சென்று  சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர். அதனைத்தொடர்ந்து, இலங்கை மற்றும் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளுக்கான கலந்துரையாடல்  இணையவழியில் அண்மையில் இடம்பெற்றிருந்தது. தற்போது அதன் தொடர்ச்சியாக சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் நாளை நாட்டிற்கு வந்து முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது - [தனியார் ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய கோரிக்கை?](https://minnal24.com/%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf/): தனியார் துறை ஊழியர்களை கடமைகளுக்கு அழைப்பதை மட்டுப்படுத்தி, முடிந்தவரை வீட்டிலிருந்தே கடமைகளை இணைவழியில் முன்னெடுக்குமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர நிறுவன தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், எதிர்வரும் 23ஆம் திகதி பெற்றோல் கப்பலொன்றையும், 24ஆம் திகதி டீசல் கப்பலொன்றையும் நாட்டுக்கு வரவழைப்பதற்கு நாணயக் கடிதங்கள் திறக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அத்தியாவசிய சேவைகளுக்காக தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களிலிருந்து எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும், எனவும் அவர் தெரிவித்துள்ளார்.   - [நாளை முதல் 50 வீதமான பேருந்து சேவைகள் இடம்பெறும்](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-50-%e0%ae%b5%e0%af%80%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d/): இலங்கை போக்குவரத்து சபை டிப்போ டீசல் வழங்குவதற்கு மேற்கொண்ட இணக்கப்பாட்டின் காரணமாக, நாளை திங்கட்கிழமை முதல் அனைத்து பஸ்களில் 50 வீதமான சேவைகள் இடம்பெறும், என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். அதன்படி, இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் நாடளாவிய ரீதியில் 10,000 இற்கும் மேற்பட்ட பஸ்கள் சேவையில் ஈடுபடுவதுடன் இந்த வாரம் 70இற்கும் அதிகமான தனியார் பேருந்துகள் இயக்கப்படும். இலங்கை போக்குவரத்து சபை டிப்போ மூலம் நாளாந்தம் 800,000 லீற்றர் டீசல் வழங்க மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவினால் மேற்கொள்ளப்பட்ட இணக்கப்பாடு காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கெமுனு விஜேரத்ன தெரிவித்தார். - [நாட்டில் தொடங்கியுள்ள மற்றுமொரு வரிசை](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3-%e0%ae%ae%e0%ae%b1/): நாட்டில் சைக்கிள் மற்றும் உதிரிப்பாகங்கள் வாங்க மக்கள் வரிசையில் நிற்கின்றனர். நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடியால் மக்களிடையே சைக்கிள் பாவனை அதிகரித்துள்ளது. இந்நிலையில், சந்தையில் சைக்கிள் விற்பனை அதிகரித்துள்ளதுடன் சைக்கிளின் விலையும் பாரியளவில் அதிகரித்துள்ளது. அதன்படி, சைக்கிளின் விலை 50 ஆயிரம் ரூபாய் முதல் 1 இலட்சம் வரை ஏறியுள்ளது. இதேவேளை, சைக்கிள் பழுதுபார்க்கும் கடைகள் கூட பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றன.   - [முதலையை திருமணம் செய்த மேயர்](https://minnal24.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%af%88-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%ae/): மெக்சிகோ நாட்டின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள சான் பெட்ரோ ஹவுமெலுலா என்ற நகரின் மேயர், முதலை ஒன்றை திருமணம் செய்து கொண்டுள்ளார். கிறிஸ்துவ முறைபடி முதலைக்கு வெள்ளை நிற ஆடை அணிவிக்கப்பட்டு, ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு, பாரம்பரிய இசை முழங்க வண்ணமயமாக இத்திருமண விழா நடைபெற்றது. பாதுகாப்பு காரணங்களுக்காக பெண் முதலையின் வாய் கட்டப்பட்டிருந்ததுடன், திருமணம் முடிந்ததை குறிக்கும் விதமாக மேயர் விக்டர் முதலையின் உதட்டில் முத்தமிட்டார். இவர் தனது நகரம் இயற்கை வளத்துடன் செழிப்பாக இருக்க வேண்டி பழங்கால சடங்கின்படி பெண் முதலை ஒன்றை திருமணம் செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. - [நான்கு கோடி ரூபாய் பெறுமதியான தங்கத்துடன் விமான நிலையத்தில் ஒருவர் கைது](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b0%e0%af%82%e0%ae%aa%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae/): நான்கு கோடி ரூபாய் பெறுமதியான தங்கத்துடன் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. டுபாயில் இருந்து வந்த இலங்கையர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரிடமிருந்து நான்கு கோடி ரூபாய் பெறுமதியான தங்கம் மீட்கப்பட்டுள்ளதாக சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். - [கந்தக்காடு முகாம் சம்பவம் தொடர்பில் விமானப்படை மற்றும் இராணுவ அதிகாரிகள் கைது](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%ae/): பொலநறுவை-கந்தக்காடு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில், இராணுவப்படையினர் இருவரும், விமானப்படை அலுவலர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கந்தக்காடு முகாமில் கடந்தவாரம் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்ததுடன், சுமார் 600க்கும் மேற்பட்டோர் தப்பியோடியிருந்தனர். இந்நிலையில், 667 பேர் தேடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், 57 பேர் தொடர்ந்தும் தேடப்பட்டு வருகின்றனர். - [விபத்தில் ஆறு பேர் படுகாயம்](https://minnal24.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b1%e0%af%81-%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%be/): பலாங்கொடையில் இருந்து மடூல்சீமை நோக்கி பயணித்த லொறி ஒன்று விபத்திற்குள்ளானதில் ஆறு பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்து இன்று சனிக்கிழமை அதிகாலை 4.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மடூல்சீமை பட்டவத்தை தோட்டத்தில் உத்தியோகத்தர்களாக கடமை புரிபவர்கள், பலாங்கொடையிலுள்ள மரண வீடொன்றுக்கு சிறிய ரக லொறி ஒன்றில் சென்று, மீண்டும் மடூல்சீமை பட்டவத்தைக்கு திரும்பிக் கொண்டிருந்த வேளை, குறித்த லொறி பதுளை பசறை பிரதான வீதியில் பால்சபைக்கு அருகாமையில் பாலம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியது. இதன்போது, அறுவர் படுகாயமடைந்த நிலையில் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். குறித்த லொறியில் 10 பேர் பயணித்துள்ளனர். விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். - [தாய் கண்டித்ததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட இளைஞன்](https://minnal24.com/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%af%88/): -மன்னார் நிருபர்- ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் கடந்த 2006 ஆம் ஆண்டு ராணி என்ற பெண், ஒரு மகன், மூன்று பெண் பிள்ளைகளுடன் இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகத்திற்கு சென்று மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்கி வசித்து வருகின்றார். இந்த நிலையில் இலங்கை அகதியான ராணி என்ற பெண்ணின் மகனான 22 வயதுடைய இளைஞர் நிரோஷன் பெயிண்டிங் வேலை செய்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல், மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் உள்ள நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு கைபேசியில் கேம் விளையாடி சுற்றித் தெரிந்து வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது இதையடுத்து ஆத்திரமடைந்த ராணி தனது மகனை கேம் விளையாடுவதை விட்டுவிட்டு வேலைக்கு செல்லுமாறு கண்டித்துள்ளார் தாயின் கண்டிப்பால் மனம் உடைந்த இலங்கை தமிழர் இளைஞர் நிரோஷன், தனது வீட்டில் இருந்த எலி பேஸ்ட்டை தண்ணீரில் கலந்து வீட்டிற்கு பின்புறம் வைத்து கடந்த […] - [லாப் எரிவாயு நிறுவனம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்](https://minnal24.com/%e0%ae%b2%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%af%81-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf/): லாப் எரிவாயு நிறுவனம் நுகர்வோருக்கு எரிவாயு கொள்கலன்களை விரைவாக வழங்குவதற்காக அதன் விநியோக நடவடிக்கைகளை விரிவுபடுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட எரிவாயுவை தமது முனையங்களில் மீண்டும் நிரப்பும் பணியில் ஈடுபட்டுள்ளதாக லாப் நிறுவனம் அறிவித்துள்ளது. எனினும், மோசடியான வர்த்தகர்கள் அதிகபட்ச சில்லறை விலைக்கு அதிகமாக எரிவாயுவை விற்பனை செய்வதாகவும், இவ்வாறான வர்த்தகர்கள் தொடர்பில் 1345 என்ற வாடிக்கையாளர் சேவையை தொடர்பு கொள்ளுமாறு நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது. - [தமிழ்தேசிய கூட்டமைப்பினர் வெளியிட்ட தகவலுக்கு ஜப்பான் தூதரகம் மறுப்பு தெரிவித்துள்ளது](https://minnal24.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9/): இலங்கைக்கான நிதியுதவி தவறாக நிர்வகிக்கப்படும் அபாயம் இருப்பதால், தற்போது இருக்கும் சூழலில் ஜப்பானால் உதவ முடியாது என கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நேற்று வியாழக்கிழமை சந்தித்தபோது தெரிவித்தாக இன்று வெள்ளிக்கிழமை டெய்லி மிரர் செய்தி வெளியிட்டிருந்தது. எனினும் குறித்த செய்தி தொடர்பாக ஜப்பான் தூதரகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இத்தகைய கூற்றுக்கள் ஆதாரமற்றவை என எழுத்து மூலம் ஜப்பான் தூதரகம் பிரதமர்  அலுவலகத்திற்கு தெரிவித்துள்ளது. இன்று வெள்ளிக்கிழமை ஜப்பான் தூதுவர், ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவை சந்தித்ததாகவும், அந்த சந்திப்பில் ஜப்பான் தூதுவர் இலங்கைக்கான உதவிகளை வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்ததாகவும் ஜனாபதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது. இதேவேளை, இவ்வாறு வெளியான செய்திகளில் உண்மையில்லை என தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், ஊடகத்தில் வெளியான செய்தியினை இலங்கைக்கான ஜப்பான் தூதரகம் மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. - [மதுபானம் வாங்கி கொடுத்து பெற்றோல் வாங்கிய சம்பவம் : கறுப்பு சந்தையில் பெற்றோல் விற்பனை](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81/): .இரத்தினபுரி – இரக்குவானையில் இரத்தினகல் வியாபாரிக்கு 5 லீற்றர் பெற்றோல் கொடுக்க அவரிடம் 5 போத்தல் மதுபானம் வாங்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சிறு இரத்தினகல் வியாபாரியான குறித்த நபர் தனது காரில் இரக்குவானை நகருக்கு சென்றிருந்தார். பின்னர், தனது காருக்கு ஐந்து லீற்றர் பெற்றோலுக்கு அலைந்து திரிந்து பெற முடியவில்லை. இந்நிலையில் ​​சில இளைஞர்களைச் சந்தித்த குறித்த வர்த்தகர் அவர்களிடம் எங்கேயும் பெற்றோல் எடுக்கலாமா என விசாரித்துள்ளார். அதன்போது அந்த இளைஞர்கள் மதுபானம் வாங்கி தந்தால் பெற்றோல் வாங்க உதவலாம் என தெரிவித்துள்ளனர். அதனைத்தொடர்ந்து, அந்த இளைஞர்கள் கேட்டதற்கிணங்க குறித்த வர்த்தகர் மதுபானக்கடை ஒன்றிற்குச் சென்று ஐந்து மதுபான போத்தல்களை வாங்கி அவர்களிடம் கொடுத்துள்ளார். இதையடுத்து, குறித்த வர்த்தகரை அந்த இளைஞர்கள் கூட்டி சென்று சட்டவிரோதமாக எரிபொருள் விற்பனை செய்யும் நபரை சந்தித்து ஐந்து லீற்றர் பெற்றோலை வாங்கி கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. - [இரு பிள்ளைகளுடன் வாவியில் குதித்த தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு - Update](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%b0%e0%af%81-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2/): எம்பிலிபிட்டிய – சந்திரிகா வாவியில் தனது இரண்டு பிள்ளைகளுடன் குதித்த தாய் சற்று முன்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தாய், மகள் மற்றும் மகன் ஆகியோர் உயிரை மாய்த்துக்கொள்ள எம்பிலிபிட்டிய – சந்திரிகா வாவியில் குதித்தனர். இச்சம்பவத்தில், 32 வயதான தாயும், 11 வயதான மகனும் எம்பிலிபிட்டிய பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினரால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் 5 வயதான மகள் உயிரிழந்துள்ளார். 11 வயதான மகன் ஆபத்தான நிலையை கடந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் இதேவேளை அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த குறித்த தாய் சற்று முன் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. - [இரண்டு பிள்ளைகளுடன் ஆற்றில் குதித்த தாய் : 5 வயது மகள் உயிரிழப்பு](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1/): எம்பிலிபிட்டிய – சந்திரிகா வாவியில் தனது இரண்டு பிள்ளைகளுடன் தாய் ஒருவர் குதித்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார். தாய், மகள் மற்றும் மகன் ஆகியோர் உயிரை மாய்த்துக்கொள்ள குதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில், 32 வயதான தாயும், 11 வயதான மகனும் எம்பிலிபிட்டிய பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினரால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும் 5 வயதான மகள் உயிரிழந்துள்ளார். குறித்த தாய் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இச்சம்பவத்திற்கான காரணம் தெரியவராத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். - [கடலில் இருந்து குடும்பஸ்தரின் சடலம் மீட்பு](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b8%e0%af%8d/): -யாழ் நிருபர்- ஊர்காவற்துறை கடலில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் இன்று வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டுள்ளது. ஐஸ்பழ வீதி, குருநகரை சேர்ந்த திரகரி நைனாஸ் (வயது 57) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த குடும்பஸ்தர் தனது கடற்றொழில் உபகரணங்களை சரிசெய்த பின்னர் கடலுக்கு செல்ல முற்பட்ட வேளையே உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. குறித்த நபர் மரணித்த பின்னர் இன்னொரு மீனவர் அவ்விடத்திற்கு வந்து அவரது சடலத்தினை கண்டதையடுத்து, ஊர்காவற்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. அதனடிப்படையில், அவரது சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.   - [வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான வீசா காலத்தை நீடிப்பதற்கான வேலைத்திட்டம்](https://minnal24.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d/): இலங்கையிலுள்ள வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான ஒரு வருட வீசா செல்லுபடியாகும் காலத்தை ஐந்து வருடங்களாக நீடிப்பதற்கான வேலைத்திட்டம் இன்று வெள்ளிக்கிழமை, முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்போது, வீசா தொடர்பான முதலாவது சான்றிதழ் லங்கா ஐஓசி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மனோஜ் குப்தாவுக்கு வழங்கி வைக்கப்பட்டது. - [சுகாதார உத்தியோகத்தர்கள் மற்றும் பணியாளர்கள் பணிப் பகிஷ்கரிப்பு போராட்டம்](https://minnal24.com/%e0%ae%9a%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0-%e0%ae%89%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%af%8b%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95-2/): -மன்னார் நிருபர்- மன்னார் மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளில் கடமையாற்றும் சுகாதார உத்தியோகத்தர்கள் மற்றும் பணியாளர்கள் இணைந்து இன்று வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் 11.30 மணி வரை பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். நாட்டில் உள்ள சுகாதார சேவையாளர்களுக்கான பிரத்தியேக எரிபொருள் விநியோகம் வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் வழங்கப்படுகின்ற போதும் மன்னார் மாவட்டத்தில் உள்ள சுகாதார உத்தியோகத்தர்கள் மற்றும் பணியாளர்களுக்கு உரிய முறையில் எரிபொருள் வழங்கப்படாமையினை கண்டித்தே குறித்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த பணிப்பகிஸ்பு போராட்டம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இடம் பெற்றது. மன்னார் மாவட்ட சுகாதார திணைக்களத்தில் சுமார் 1200 வரையிலான பணியாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கடமையாற்றி வருகின்றனர். இவர்களில் அதிகமானவர்கள் தூர இடங்களில் இருந்து வந்து தமது நிலையங்களில் கடமையாற்றி வருகின்றனர். தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி அதனை தொடர்ந்து ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அரச பணியாளர்களை சுழற்சி முறையில் கடமையாற்றுவதற்கும், வீடுகளில் இருந்து […] - [மட்டக்களப்பில் முன்னெடுக்கப்படவுள்ள முச்சக்கரவண்டி சாரதிகளின் கவனயீர்ப்பு போராட்டம்](https://minnal24.com/%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%aa/): மட்டக்களப்பு முச்சக்கரவண்டி சாரதிகள் இணைந்து எதிர்வரும் திங்கட்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில், நாம் தற்பொழுது எரிபொருல் இல்லாமல் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றோம். ஆனால் அத்தியாவசிய சேவை என சில துறைகள் உள்ளீர்க்கப்பட்டு எரிபொருள் வழங்குகின்றனர் ஆனால், எமது தொழிலும் அதியாவசிய சேவையில் ஒரு பகுதியாக விளங்குவததோடு, எமது வாழ்வாதாரம் இதிலேயே காணப்படுகிறது, இது அனைவருக்கும் புரியும் இதை சம்மந்தப்பட்டவர்களுக்கு கோரிக்கையாக தெரிவிக்கவேண்டும். எனவே, வரும் திங்கட் கிழமை காலை 9.00 மணிக்கு மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இருந்து கவனஈர்ப்பு ஊர்வலமும், மகஜர் கையளித்தலும் ஏற்பாடு செய்கிறோம் தயவுசெய்து சங்கமோ சங்கத்தில் இல்லையே என வேறுபாடு பார்க்காமல் முச்சக்கரவண்டி தொழிலாளியாக ஒன்றுபடுவோம், என தெரிவித்துள்ளனர். - [எரிபொருள் வழங்க கட்டார் அரசு முன்வைத்துள்ள நிபந்தனை?](https://minnal24.com/%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d/): ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவியிலிருந்து விலகினால் தான் எரிபொருள் மற்றும் ஏனைய அத்தியாவசிய உதவிகள் வழங்குவது தொடர்பான விடயங்களை முன்னெடுக்கலாம் என கட்டார் அரச தலைவர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எரிபொருள் பெற்றுக்கொள்ளும் நோக்கில் கலந்துரையாடலை மேற்கொள்வதற்காக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர மற்றும் அமைச்சர் நஸீர் அஹமட் ஆகியோர் கட்டார் நாட்டிற்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர். இதன் போதே கட்டார் நாட்டு தலைவர் இவ்வாறான ஒரு நிபந்தனையை அமைச்சர் குழுவிடம் மறைமுகமாக முன்வைத்ததாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த கொவிட்-19 தொற்றுக் காலங்களின் போது உலக சுகாதார அமைப்பின் விதிமுறைகளுக்கமைய, கொவிட் தொற்றால் உயிரிழந்த இஸ்லாமிய மக்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்குமாறு உலகின் 57 இஸ்லாமிய நாடுகளின் பங்களிப்புடன் இஸ்லாமிய அமைப்பு கோரிக்கை விடுத்தது. எனினும், இலங்கை அரசு அதற்கு செவிசாய்க்காமல் ஜனாஸாக்களை தகனம் செய்தமை இலங்கை முஸ்லிம் சமூகத்தின் மீது கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்தியிருந்தது. அத்துடன், கட்டார் தொண்டு நிறுவனத்தை […] - [அராலி மேற்கு-நீளத்திக்காடு அருள்மிகு ஸ்ரீ பேச்சியம்பாள் ஆலய வருடாந்த வேள்வி உற்சவம்](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%87%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be/): -யாழ் நிருபர்- அராலி மேற்கு, நீளத்திக்காடு அருள்மிகு ஸ்ரீ பேச்சியம்பாள் ஆலயத்தின் வருடாந்த வேள்வி உற்சவமானது நேற்று வியாழக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வேள்வி உற்சவத்தின் போது அம்பாள் சிங்க வாகனத்தில் எழுந்தருளியாக ஆலய வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வேள்வி உற்சவத்தின் போது பலகார படையல்கள் மற்றும் சேவகர் மடை போட்டு வழிபாடு நடைபெற்றது. ஆலயத்தின் திருவிழாவானது கடந்த 21ம் திகதி ஆரம்பமாகி நேற்று வேள்வி உற்சவம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து எதிர்வரும் செவ்வாய்க்கிழமை எட்டாம்மடை வைரவர் வழிபாடு இடம்பெறும். - [கட்டார் சேரிட்டியின் தடையை நீக்கும் போது, தமிழ் டயஸ்போறா மீது இனவாதமா?](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%87%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%9f%e0%af%88/): -யாழ் நிருபர்- கட்டார் சேரிட்டியின் தடையை நீக்கும் போது, தமிழ் டயஸ்போறா மீது இனவாதமா? என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் மேலும், எரிபொருள் பிரச்சினை ஏற்பட்டதால் அமைச்சர் கஞ்சன விஐயவர்த்தன கட்டார் நாட்டிற்கு சென்று உதவி கோர முற்பட்ட போது கட்டார் அரசாங்கம் 2019 ஆண்டு கட்டார் சேரிட்டி அமைப்பை இலங்கை அரசாங்கம் பயங்கரவாதப் பட்டியலில் தடைசெய்தமையை நீக்க வேண்டும் என கோரியதன் வெளிப்பாடாக தடையை நீக்குவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாக அமைச்சர் கஞ்சன தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். கட்டார் சேரிட்டி அமைப்பின் தடையை நீக்கி நல்லெண்ண அடிப்படையில் எரிபொருளைப் பெற முற்படுவது போல, ஏன் புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் மீதான தடைகளை நீக்கி தமிழ் முதலீட்டாளர்களை அழைக்கும் நல்லெண்ண வெளிப்பாட்டை கோட்டா அரசாங்கம் மேற் கொள்ளவில்லை இனவாதமா? பிரிவினைவாதமா? புலம்பெயர் தமிழர் அமைப்புக்களின் முதலீட்டாளர்கள் என்பது இலங்கைக்கு மிகப் பெரும் பலம். ஆனால் […] - [இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த கடல் அட்டைகள் மீட்பு](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%a4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95-2/): -மன்னார் நிருபர்- இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 லட்சம் மதிப்பிலான 480 கிலோ கடல் அட்டைகள் மண்டபம் அருகே நேற்று வெள்ளிக்கிழமை மாலை வனத்துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர். மண்டபம் அருகே வேதாளை கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, அப்பகுதிக்கு விரைந்து சென்ற வனத்துறையினர் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 480 கிலோ எடை கொண்ட கடல் அட்டையை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டையில் சர்வதேச மதிப்பு 50 லட்சம் இருக்கும் என வனத்துறை தெரிவித்துள்ளனர். - [வடக்கு-கிழக்கை இணைக்கும் பாலம்](https://minnal24.com/%e0%ae%b5%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%87%e0%ae%a3%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/): -கிளிநொச்சி நிருபர்- முல்லைத்தீவு திருகோணமலை மாவட்டங்களை இணைக்கும் பிரதான வீதியினை துண்டிக்கும் கொக்கிளாய் கடல்நீரேரிக்கான பாலம் அமைப்பதற்கான பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால், இரண்டு மாவட்டங்களிலும் உள்ள எல்லைக்கிராம மக்கள், பாடசாலை மாணவர்கள் எனப்பலரும் தினமும் பல்வேறு சிரமங்களை எதிர் கொண்டு வருகின்றனர் வுடக்கு மாகாணத்தையும் – கிழக்கு மாகாணத்தையும் பிரித்து நிற்கும் கொக்கிளாய் கடல்நீரேரி ஊடாக பாலம் நிர்மாணிக்கும் செயல் திட்டம் பல ஆண்டுகளாக பேச்சளவிலேயே உள்ளது. அதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் எதுவுமே மேலாக முன்னெடுக்கப்படாத நிலைமை காணப்படுகிறது. முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் பகுதியையும், திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டை பகுதியையும் ஊடறுத்துள்ள கொக்கிளாய் கடல்நீரேரியை இணைத்து பாலம் ஒன்றினை அமைப்பதற்கான கோரிக்கைகள் தொடர்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்றன. முல்லைத்தீவு மாவட்டத்தையும், திருகோணமலை மாவட்டத்தையும் இணைக்கும் முகமாக முல்லைத்தீவு – கொக்கிளாய் வீதியையும், புல்மோட்டை – திருகோணமலை வீதியையும்  இணைத்து கொக்கிளாய் கடல்நீரேரி ஊடாக சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரத்திற்கு பாலம் […] - [உயிர்காப்பு நீச்சல் பயிற்சி நிறைவு செய்த மாணவர்களிற்கு சான்றிதழ் வழங்கி வைக்கும் நிகழ்வு](https://minnal24.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%a8%e0%af%80%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b1/): -கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி நீர்விளையாட்டு சங்கத்தின் ஏற்பாட்டில் உயிர் காப்பு நீச்சல் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. கிளிநொச்சியில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்தில் இடம்பெற்ற பயிற்சிகளின் பின்னர் அவர்களிற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் நீச்சல் தடாக அரங்கில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சான்றிதழ்களை, வெற்றி கிண்ணங்களை வழங்கி வைத்தார். குறித்த நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன், தேசிய உயிர் காப்பு சம்மேளனம் தலைவர் அசங்க நாணயக்கார, விளையாட்டுத்துறை அமைச்சின் மாகாண இணைப்பாளர் கொஸ்ரா, மாவட்ட சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதன்போது, தேசிய உயிர் காப்பு சம்மேளனம் சார்பில் அரசாங்க அதிபருக்கு நினைவு சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது. இதேவேளை, உயிர்காப்பு பயிற்சிகளில் ஒன்றான கராத்தே பயிற்சி பெற்றுவரும் மாணவர்களிற்கு பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது. - [3 கோடி 15 இலட்சம் பெறுமதியுடைய தங்கத்துடன் நால்வர் கைது](https://minnal24.com/3-%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf-15-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%9f/): -நுவரெலியா நிருபர்- நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெஞ்சர் தோட்ட மேற்பிரிவில், சுமார் 3 கோடி 15 இலட்சம் பெறுமதியுடைய ஒன்றரை கிலோ மதிப்புடைய தங்கத்தை நேற்று வியாழக்கிழமை பொலிஸார் மீட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடையதாக பெண் உட்பட நால்வரை கைது செய்துள்ளனர். நோர்வூட் பொலிஸாரும், குற்றத்தடுப்பு பிரிவினரும் இணைந்து நடத்திய தேடுதலின் போதே இத்தொகை தங்கம் மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நோர்வூட் நகரில் உள்ள நகைக்கடையொன்றில் 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 9 ஆம் திகதியளவில் ஒரு தொகை நகைக் திருடப்பட்டதாக நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் உரிமையாளர்களால் முறைப்பாடு செய்யப்பட்டது. இதனையடுத்து, குறித்த கடையில் சுமார் 10 வருடங்களாக வேலை செய்த பெண்னொருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதுடன் அவரது கைரேகை அடையாளங்களும் பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, கடந்த ஆறுமாத காலப்பகுதியில் தொடர்ச்சியாக விசாரணைகளையும் தேடுதல்களையும் மேற்கொண்டு வந்த நோர்வூட் பொலிஸார் மற்றும் குற்றத்தடுப்பு பிரிவினர் குறித்த […] - [தொலைபேசிகளை திருடிய வவுனியா திருடன் வட்டுக்கோட்டையில் கைது](https://minnal24.com/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b2%e0%af%88%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%b5%e0%af%81%e0%ae%a9/): -யாழ் நிருபர்- வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வழக்கம்பரை பகுதியில் 3 தொலைபேசிகளை திருடிய சந்தேகத்தில் 20 வயதுடைய இளைஞன் ஒருவரை நேற்று வியாழக்கிழமை வட்டுக்கோட்டை பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இளைஞன் வவுனியாவை சேர்ந்தவர். அவர் சுழிபுரத்தில் உள்ள தனது நண்பர் வீட்டிற்கு வந்திருந்தபோதே இவ்வாறு தொலைபேசி திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது மூன்று தொலைபேசிகள் அவரிடமிருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது. குறித்த சந்தேகநபர் இரண்டு தடவைகள் சிறைத்தண்டனைக்கு உட்பட்டவர் என்பதுடன், மூன்றாவது தடவை இரண்டு வருடகால சிறைத்தண்டனை பெற்று வந்தநிலையில் ஐந்து மாதங்களின் பின்னர் சிறையில் இருந்து தப்பித்து சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. பொலிஸார் மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை இன்று வெள்ளிக்கிழமை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். - [வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை](https://minnal24.com/%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a3%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3-7/): தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், மேற்கு மற்றும் தெற்கு கடற்பரப்புகளிலும், தீவின் தென்பகுதியிலும் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும்.வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும். ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மத்திய மலைப்பகுதிகளின் மேற்கு சரிவுகளில், மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களில். மிதமான முதல் பலத்த காற்று  வீசக்கூடும்  என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. - [இந்திய அண்ணாமலைக்கு இலங்கை அண்ணாமலை சவால்](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%85%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d/): -கிளிநொச்சி நிருபர்- அண்மை நாட்களாக எல்லை தாண்டி இந்திய இழுவைமடு படகுகள் வருகை அதிகரித்துள்ளதாக, வடமாகாண கடற்றொழிலாளர் இணைய தலைவர் கா.அண்ணாமலை தெரிவித்துள்ளார். இன்று வியாழக்கிழமை அவர் தனது அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதேவேளை, தாம் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கி வருகின்ற நிலையில் எல்லை தாண்டிய இந்தியா இழுவை மடி படகுகள் மூலம் இருக்கின்ற கடல் வளங்களை அழித்துச் செல்லுகின்றனர் எனவும், தமக்கு தொழில் செய்வதற்கு மண்ணெண்ணை இல்லாத நிலையில் கடலட்டை தொழிலாளர்கள் தென்பகுதியிலிருந்து வருகை தந்து அதிகளவில் கடலட்டை தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் அது எவ்வாறு சாத்தியம் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதே வேளை, இந்திய தமிழ்நாடு பா.ஜ.க.தலைவர் அண்ணாமலை கடல் ஏல்லைகள் தெரியாமல் பேசுவதாகவும், கச்சதீவு எங்கு உள்ளது? முல்லைத்தீவு எங்கு உள்ளது? சுண்டிக்குளம் எங்கே உள்ளது? என்றும் கேள்வி ஏழுப்பினார். - [பல் துலக்காமல் முத்தம் கொடுத்ததால் வந்த வினை : மனைவியை சரமாரியாக குத்தி கொன்ற கணவன்](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95/): பல் தேய்க்காமல் குழந்தைக்கு முத்தம் கொடுத்த கணவனுடன் சண்டையிட்ட மனைவியை, கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்தவர் அவினாஷ். இவருக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு கோவையைச் சேர்ந்த தீபிகா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் ஒன்றரை வயதில் குழந்தை உள்ளது. பெங்களூரில் வேலை பார்த்து வந்த அவினாஷ் இரண்டு மாதங்களுக்கு முன் ஊர் திரும்பிய நிலையில், வீட்டிலிருந்த பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், அவினாஷ் காலையில் எழுந்ததும் பல் துலக்காமலேயே தன் குழந்தைக்கு முத்தம் கொடுப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். இதனால், குழந்தைக்கு நோய் தொற்று பரவக்கூடும் என எண்ணிய தீபிகா பல் துலக்காமல் குழந்தைக்கு முத்தம் கொடுக்க கூடாது என அவினாஷை கண்டித்துள்ளார். ஆனாலும், மனைவியின் பேச்சைக் கேட்காத அவினாஷ் குழந்தைக்கு முத்தம் கொடுத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அவினாஷ் கத்தியை எடுத்து […] - [கட்டார் நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குகிறது இலங்கை](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5/): கட்டார் தொண்டு நிறுவனத்திற்கு (Qatar Charity) விதிக்கப்பட்ட தடையை நீக்குவதற்கு இலங்கை தீர்மானித்துள்ளதாக, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் அவர் இவ்வாறு தெரிவித்து ஒரு பதிவை இட்டுள்ளார் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கட்டாருக்கு சென்றுள்ள, அமைச்சர் காஞ்சன விஜயசேகர கத்தார் தொண்டு நிறுவன அதிகாரிகளை நேற்று புதன்கிழமை சந்தித்தார். “2019 ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட குறித்த தடையை நீக்குவதற்கான முடிவை பாதுகாப்பு அமைச்சு சட்டமா அதிபருக்கு தெரிவித்துள்ளதான செய்தியை தெரிவித்தேன். இலங்கையிலும் உலகளவிலும் தொண்டு நிறுவனத்தின் பணிகள் குறித்து விவாதித்தேன்” என்று அவர் டுவிட் செய்துள்ளார். . முன்னதாக, வழக்கறிஞர் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு எதிரான வழக்கின் போது, ‘கட்டார் தொண்டு’ நிறுவனம் ஒரு பயங்கரவாத நிதி அமைப்பு என்றும், பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பது தொடர்பான குற்றங்கள் தங்களால் விசாரிக்கப்படுவதாகவும் குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.   - [நாடாளுமன்ற உறுப்பினர்களின் முகவரிகள் மற்றும் தொலைபேசி இலக்கங்கள் நீக்கம்](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%89%e0%ae%b1%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95-10/): நாடாளுமன்ற இணையத்தளத்தில் இருந்து அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் முகவரிகள் மற்றும் தொலைபேசி இலக்கங்கள் நீக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, அவர்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அண்மைக்காலமாக நாடாளுமன்ற இணையத்தளத்தில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொலைபேசி இலக்கங்களினை பயன்படுத்தி, பல்வேறு நபர்களினால் அவதூறு ஏற்படுத்தப்பட்ட சம்பவங்கள் தொடர்பிலும் தகவல்கள் கிடைத்துள்ளதாக, நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன. - [விசேட அதிரடிப்படையின் உதவி அத்தியட்சகர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை](https://minnal24.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9a%e0%af%87%e0%ae%9f-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a4/): விசேட அதிரடிப்படையின் உதவி அத்தியட்சகர் ஒருவர் இன்று வியாழக்கிழமை காலை தற்கொலை செய்துள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது. கொழும்பு கடவத்த, கொனஹேன விசேட ஆயுதப்படை முகாமின் ஆயுதங்களுக்கு பொறுப்பான அதிகாரியாக செயற்பட்ட, 59 வயதான அதிகாரி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தனக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ ஆயுதத்தினால் தன்னை தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. - [ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு இலங்கை தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடியில் தஞ்சம்](https://minnal24.com/%e0%ae%92%e0%ae%b0%e0%af%87-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%9a%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4/): -மன்னார் நிருபர்- இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை வவுனியா மாவட்டத்தில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் இன்று வியாழக்கிழமை  காலை அகதிகளாக தனுஷ்கோடியை சென்றடைந்துள்ளனர். இலங்கை தமிழர்களை மீட்ட மரைன் பொலிஸார் ராமேஸ்வரம் மரைன் காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைக்கு பின்னர் 4 பேரையும் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்படுவார்கள். வவுனியாவில் இருந்து மன்னாரிற்கு வந்து மன்னாரில் இருந்தே படகு மூலம் தனுஷ்கோடியை வந்தடைந்ததாக அவர்கள் தெரிவித்தனர். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தமது உறவுகள் இந்தியாவில் வசித்து வருகின்றமையினால் அவர்களுடன்  சேர்ந்து வாழ்வதற்காக தாம் படகு மூலம் வந்ததாக அவர்கள் மேலும் தெரிவித்தனர். தற்போது வரை இலங்கை தமிழர்கள் 96 பேர் அகதிகளாக தமிழகம் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. - [இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்படுகிறது](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%86%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0-2/): -கல்முனை நிருபர்- அம்பாறை மாவட்ட ஆசிரியர்களின் கோரிக்கைக்கிணங்க எரிபொருள் பெற்றுக் கொள்ளல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுக்கப்பட்ட பாடசாலை பகிஷ்கரிப்பினைத் தற்காலிகமாகக் கைவிடுவதாக இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது தங்களது உரிமையின் நிமித்தம் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இப் போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய ஆசிரியர்களுக்கு சங்கம் தமது நன்றியினைத் தெரிவித்துள்ளது பாடசாலை பகிஷ்கரிப்புத் தொடர்பான எமது அறிவிப்பினைத் தொடர்ந்து வலயக் கல்விப் பணிப்பாளர்களுடன் ஆளுநர் நடத்திய கலந்துரையாடலில் கிழக்கு மாகாண ஆசிரியர்களுக்கு எரிபொருள்களை வழங்குவதற்கு வழிசெய்வதுடன் பாடசாலை நாட்களை மூன்றாகக் குறைப்பதெனவும் அறிவித்துள்ளார். இதனை வலயக் கல்விப்பணிப்பாளர்கள் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளனர். வலயக் கல்விப் பணிமனை உயர் அதிகாரிகளும் இதற்கான உறுதி மொழிகளை எழுத்து மூலம் வழங்கியுள்ளனர். இவ்வாறான சாதகமான சூழ்நிலையொன்று ஏற்படும் போது பகிஷ்கரிப்பினைக் கைவிடுவதன் அவசியத்தை வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மட்டத்திலும் கோரிக்கை விடுக்கப்பட்டதன் நிமித்தம் நாளை முதல் பாடசாலைக்குச் செல்வதற்கான அழைப்பினை விடுப்பதென […] - [தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகத்தின் அறிவித்தல்](https://minnal24.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d/): தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகத்தின் ஊடாக, மருத்துவ சான்றிதழ் வழங்கும் செயற்பாடு எதிர்வரும் இரண்டு நாட்களுக்கு முன்னெடுக்கப்படமாட்டாது என இந்நிறுவகம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாளை வெள்ளிக்கிழமை மற்றும் நாளை மறுதினம் சனிக்கிழமை ஆகிய இரண்டு நாட்களும் குறித்த சேவைகள் முன்னெடுக்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை மறு அறிவித்தல் வரை இந்நடைமுறை அமுலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், கைப்பேசியிலிருந்து 225 என்ற இலக்கத்திற்கும், நிலையான தொலைபேசியிலிருந்து 1225 என்ற இலக்கத்திற்கும் தொடர்பு கொள்வதனூடாகவோ அல்லது www.ntmi.lk என்ற இணையத்தளத்துக்கு பிரவேசிப்பதன் மூலமோ வெள்ளி, சனிக்கிழமைகளை தவிர்ந்த ஏனைய நாட்களில் நேரத்தை முன்பதிவு செய்து, நேரில் வருகை தருவதன் மூலம் துரித சேவையை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், e-channeling செயலி மூலமும் இச்சேவைi பெற்றுக்கொள்ள முடியும் என தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகம் தெரிவித்துள்ளது. - [வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் அமெரிக்கா பயணம்](https://minnal24.com/%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1/): -மன்னார் நிருபர்- வட அமெரிக்க தமிழ்ச் சங்க பேரவை 35 வது ஆண்டாக நடாத்தும் ‘மாபெரும் பேரவை தமிழ் விழாவில்’ பங்கேற்பதற்காக வட அமெரிக்க தமிழ்ச் சங்கத்தின் அழைப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இன்று வியாழக்கிழமை அமெரிக்கா பயணமானார். நாளை 1ஆம் திகதி தொடக்கம் 4 ஆம் திகதி வரை நியூயோர்க்கில் இந்நிகழ்வு நடை பெறவுள்ளது. இந்த பயணத்தில் அமெரிக்க அரசின் இராஜாங்க திணைக்களங்களின் உயர் அதிகாரிகளுடனும் ‘தமிழர் தரப்பு நிலைப்பாடு’ தொடர்பாக கலந்துரையாட சந்திப்புக்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்தோடு அமெரிக்க வாழ் தமிழ் அமைப்புகள் பலரோடும் சந்திப்புக்களை மேற்கொள்ளவுள்ளார். நேற்று முன் தினம் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குறித்த நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. - [கிழக்கில் புலமைப்பரிசிலுக்கு தகுதியானோர்களை இனங்காணும் தேர்வு](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%ae%ae%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2/): -கல்முனை நிருபர்- பாகிஸ்தான் அரசினால் வழங்கப்படும் அல்லமா இக்பால் புலமைப்பரிசில் பெற தகுதியானவர்களை தெரிவுசெய்ய நடத்தப்படும் எழுத்துப்பரீட்சை புதன்கிழமை  மட்டக்களப்பு மாவட்ட ஏறாவூர் முனீரா பாலிஹா மஹா வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது. பாகிஸ்தான் பல்கலைக்கழகத்தில் மருத்துவம், பொறியியல், தொழிநுட்பம் போன்ற துறைகளில் கல்விபயில இதன் மூலம் வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாவும், இதற்கான முழு செலவுகளும் பாகிஸ்தான் அரசினால் வழங்கப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்த புலமைப்பரிசில் திட்டத்தின் மூலம் இலங்கையின் பல்லினங்களையும் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கடந்த காலங்களில் பயன் பெற்றுள்ளனர் என பாகிஸ்தான் தூதரக உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். கொழும்பு, குருநாகல், கண்டி போன்ற நகரங்களில் மட்டுமே இடம்பெற்றுவந்த இந்த தேர்வானது வழமைக்கு மாறாக கடந்த ஆண்டு முதல் கிழக்கில் பாகிஸ்தான் உயர்கல்வி ஆணைய உயரதிகாரிகள் மற்றும் தூதரக அதிகாரிகளினால் நேரடியாக நடத்தப்படுகிறது. இந்த பரிட்சையில் கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த 150 பேரளவில் கலந்துகொண்டனர். இதனை தொடர்ந்து மாணவர்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வில் பாகிஸ்தான் […] - [இன்று நள்ளிரவு முதல் பேருந்து கட்டணங்கள் அதிகரிப்பு](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%a8%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%b5%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0-2/): இன்று வியாழக்கிழமை நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, ஆகக்குறைந்து பேருந்து கட்டணம் 32 ரூபாவிலிருந்து 40 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏனைய கட்டணங்கள் 22 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பேருந்து தொழிற்சங்கங்கள் கோரிய  40 ரூபா ஆகக்குறைந்த கட்டணம் மற்றும் 30 சதவீத பேருந்து கட்டண அதிகரிப்பு உள்ளிட்ட பேருந்து கட்டண திருத்தம் தொடர்பான பரிந்துரை நேற்று புதன்கிழமை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் போக்குவரத்து அமைச்சிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இந்நிலையில் போக்குவரத்து அமைச்சின் முன்மொழிவுக்கமைய, 22 சதவீதத்தினால் பேருந்து கட்டணங்களை அதிகரிக்கவும் குறைந்த கட்டணத்தை 40 ரூபாவாக அதிகரிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. - [வர்த்தக நிலையங்களில் தீப்பரவல்‌ : 6 வர்த்தக நிலையங்கள் முற்றாக எரிந்து நாசம்](https://minnal24.com/%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%95-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%aa/): -பதுளை நிருபர்- பதுளை சேனாநாயக்க மாவத்தையில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீயினால் 6 வர்த்தக நிலையங்கள் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளன. இச்சம்பவம் நேற்று புதன்கிழமை இரவு 9:30 மணி அளவில் இடம்பெற்றுள்ளது தீ ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியாத போதிலும் பொலிஸார் பொதுமக்கள் மற்றும் படையினர் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். - [நுகர்வோர் விவகார அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி](https://minnal24.com/%e0%ae%a8%e0%af%81%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0/): நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் தலைவர் தவிசாளர் சாந்த நிரிஎல்லவின் கையொப்பத்துடன், நுகர்வோர் விவகார அதிகார சபையினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று இன்று வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. சகல உற்பத்தி பொருட்கள் உள்ளடங்கும் பொதி உறை அல்லது கொள்கலன் மீது அதன் அதிகபட்ச சில்லறை விலை உள்ளிட்ட விபரங்கள் உள்ளடக்கப்பட வேண்டும் என குறித்த வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜூலை 28 ஆம் திகதி முதல் இந்த நடைமுறை அமுலுக்கு வரும் வகையில் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. அதன்படி, சகல பொருட்களினதும் பொதிகளுக்கு வெளியே, அதிகபட்ச சில்லறை விலை, நிறை, தொகை, உற்பத்தி  திகதி, காலாவதி திகதி, குறியீட்டு இலக்கம், உற்பத்தியாளரின் பெயர், பதிவு செய்யப்பட்ட முகவரி, தொலைபேசி இலக்கம் என்பன காட்சிப்படுத்தப்பட வேண்டும் என அந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இணையத்தளம் மூலம்  விற்பனையில் ஈடுபடும் வர்த்தகர்களும் இந்த நடைமுறையை பின்பற்ற வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர். - [முஸ்லிம் மாணவிகளிடம் மத நம்பிக்கைகளை அவமதித்து பேசியதாக குற்றச்சாட்டு](https://minnal24.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a4/): -யாழ் நிருபர்- முஸ்லிம் மாணவிகளின் கலாச்சாரம் தொடர்பில் யாழ் பல்கலைக்கழக ஒழுக்காற்று பிரிவுக்குப் பொறுப்பான மாசல் விஜேந்திரன் தம்மை தனது அலுவலகத்துக்கு அழைத்து மத நம்பிக்கைகளை அவமதிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்ட மாணவிகள் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கு முறைப்பாடு வழங்கியுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ் பல்கலைக்கழக புதுமுக இரு முஸ்லிம் மாணவிகளை அதே பல்கலைக்கழகத்தின் இரண்டாம் வருடத்தில் கல்வி கற்கும் முஸ்லிம் மாணவிகள் பல்கலைக்கழக வளாகத்துக்குள் கலந்துரையாடி யுள்ளனர். அவர்கள் அவ்வாறு பேசிக்கொண்டிருக்கும்போது ‘ராக்கிங்’ செய்ததாக விரிவுரையாளர் ஒருவரால் ஒழுக்காற்றுக்குப் பொறுப்பாக இருக்கிற விஜேந்திரனிடம் தெரிவிக்கப்பட்டது. மாணவிகளை அழைத்த விஜேந்திரன் ராக்கிங் செய்கிறீர்களா என அதட்டியதுடன் தமது மத நம்பிக்கைகளை இழிவுபடுத்தும் நோக்கில் கருத்து பரிமாறியதாக குற்றச்சாட்டியுள்ளனர். தாம் ராக்கிங்கில் ஈடுபடவில்லை எனவும் எமது ஊரைச் சேர்ந்த மாணவிகள் என்றபடியால் அவர்களுடன் சினேக பூர்வமாக கலந்துரையாடியதாகவும், பல்கலைக்கழகத்துக்கு வரும்போது எவ்வாறு தமது மத நம்பிக்கை கடைப்பிடிக்க வேண்டும் என […] - [வர்த்தமானியில் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் வெளியீடு](https://minnal24.com/%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-22-%e0%ae%86%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0/): அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. 22 ஆவது திருத்தச் சட்டமூலம் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவினால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இதன்போது, சட்டமூலம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. வர்த்தமானியை பார்வையிட:- https://drive.google.com/file/d/1iRca8SZ-gj-X2Qw6TtALXcGGI8SZHraZ/view   - [சமையல் எரிவாயு விநியோகம் தொடர்பில் லிட்ரோ நிறுவனத்தின் அறிவித்தல்](https://minnal24.com/%e0%ae%9a%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%af%e0%af%8b%e0%ae%95%e0%ae%ae-2/): எதிர்வரும் ஜூலை மாதம் 33,000 மெட்ரிக் டன் எரிவாயுயை நாட்டிற்கு இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளதாக, லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார். ஆகவே, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் தொடக்கத்திலிருந்து நாட்டின் சமையல் எரிவாயு கொள்கலன்களுக்கான வரிசை குறைவடையக் கூடும் என அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, எதிர்வரும் ஜூலை 6,10,15,22,24 ஆகிய திகதிகளில் தலா 3,500 மெட்ரிக் டன் வீதம் ஐந்து எரிவாயு கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளன. மேலும், எதிர்வரும் ஆறாம் திகதியின் பின்னர், 120,000 சமையல் எரிவாயு கொள்கலன்களை சந்தைக்கு விநியோகிக்க உள்ளதாகவும், அதற்கமைய நாள் ஒன்றுக்கு 12.5 கிலோ கிராம் நிறைக் கொண்ட 80,000 சமையல் எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.   - [எரிபொருள் தட்டுப்பாட்டால் கழிவு அகற்றும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டிய நிலை](https://minnal24.com/%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-2/): -மன்னார் நிருபர்- நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, மன்னார் நகர சபையினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற கழிவு அகற்றும் நடவடிக்கையும் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னார் மாவட்டத்தில் எரி பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மன்னார் நகர சபையின் கழிவு அகற்றும் வாகனங்களுக்கான எரிபொருட்கள் உரிய முறையில் கிடைப்பதில்லை. இதனால் மன்னார் நகர பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் கழிவு அகற்றும் நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கழிவு அகற்றும் வாகனங்களுக்கான எரி பொருட்கள் முழுமையாக கிடைக்கவில்லை. இதன் காரணமாக கழிவு அகற்றும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்க பாரிய சவாலுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்தும் இவ்வாரான நிலை தொடருமாக இருந்தால் மன்னார் நகர பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் சகல விதமான கழிவு அகற்றும் நடவடிக்கைகள் இடை நிறுத்தப்படும். மக்களும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும். […] - [நாட்டி;ன் சில பகுதிகளில் மழையுடனான வானிலை](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%aa%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-7/): நாட்டில் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. ஊவா மாகாணத்தில் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மத்திய மலைப்பகுதியின் மேற்கு சரிவுகளிலும், மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களிலும், அவ்வப்போது கி.மீ. 50 வரை பலத்த காற்று வீச கூடும் என வானிலை அறிக்கை தெரிவிக்கிறது. - [பல தபால் நிலையங்களுக்கு பூட்டு](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%b2-%e0%ae%a4%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/): -நுவரெலியா நிருபர்- நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டினை தொடர்ந்து கடந்த சில நாட்களாக மலையகத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. குறித்த எரிபொருள் நிரப்பு நிலையங்கள் பூட்டுப்பட்டுள்ளதனை தொடர்ந்து தபால் சேவைகள் நாளை வியாழக்கிழமை மற்றும் நாளைமறுதினம் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளன. இதனால் மலையகத்தில் உள்ள பல தபால் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதே நேரம் மலையகத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எரிபொருள் இல்லாததன் காரணமாக மூடப்பட்டிருந்த போதிலும் வாகனங்கள் தொடர்ந்து எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் நிறுத்தப்பட்டு பலர் பல நாட்களாக காத்திருக்கின்றனர். எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மலையகத்தில் பொது போக்குவரத்தும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இடம்பெற்றன. இதனால் இன்று புதன்கிழமை காலை வேலைக்கு செல்லும் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அரச ஊழியர்கள் என பலரும் பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்தனர். பஸ் போக்குவரத்து குறைவடைந்ததனை தொடர்ந்த பெரும்பாலான பொது மக்கள் புகையிரதங்களை தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக பயன்படுத்தி […] - [கிழக்கு மாகாண பாடசாலைகளை வாரத்தில் மூன்று நாட்கள் நடாத்த தீர்மானம்](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%88/): இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பலமான அழுத்தின் காரணமாக, கிழக்கு மாகாணத்திலும் பாடசாலைகள் வாரத்தில் மூன்று நாட்கள் நடாத்துவதாக ஆளுநர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது . பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் கிழக்கு மாகாணத்திலுள்ள பிள்ளைகளின் கல்வியைத் தொடரும் நோக்கில் வாரத்தில் ஐந்து நாட்களும் பாடசாலைகளை நடாத்துமாறு கிழக்கு மாகாண ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார். இதற்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் உட்பட அனைவரும் பூரண ஆதரவை வழங்கி வருகின்றனர். எமது பிள்ளைகளின் எதிர்காலத்திக்காக கடினமாக உழைக்க வேண்டிய தருணம் இது. இன்று புதன்கிழமை கிழக்கு மாகாண கல்வி அதிகாரிகளுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது, கிழக்கு மாகாணத்தில் பாடசாலைகளை வாரத்தில் மூன்று நாட்கள் நடத்துவதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் தீர்மானித்துள்ளார். - [பனை மரத்திலிருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த குடும்பஸ்தர்](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%a9%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b1%e0%ae%bf/): -கிளிநொச்சி நிருபர்- பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புலோப்பளை கிழக்கு பகுதியில் பனை மரத்தில் ஏறிய குடும்பஸ்தரொருவர் மரத்திலிருந்து தவறி நிலத்தில் விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கின்றனர். இச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது. நான்கு பிள்ளைகளின் தந்தையான ஞானபிரகாசம் அமலதாஸ் (வயது-56) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மேற்படி சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, பனை தென்னை வள தொழிலைத் தனது வாழ்வாதாரத் தொழிலாக கொண்ட குறித்த குடும்பஸ்தர் பனை மரத்தின் கீழ் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார். நீண்ட நேரமாக தொழிலுக்கு சென்ற கணவரை காணவில்லை என மனைவி தேடி சென்ற வேளை பனை மரத்தின் கீழ் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார். இந்நிலையில் குறித்த குடும்பஸ்தர் உடனடியாக மீட்கப்பட்டு பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.   - [துப்பாக்கிசூட்டில் இருவர் பலி](https://minnal24.com/%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5/): மொரட்டுவை கட்டுபெத்தை சந்திக்கு அருகில் இன்று புதன்கிழமை முற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். பிங்வத்தகே உக்குவா என அழைக்கப்படும் நிலந்த குமார சில்வா மற்றும் மொஹமட் அர்பத் சம்சான் ஆகியோரே துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளனர். அவர்களது வாகனத்திற்கு எரிபொருள் தருவதாக ஒருவர் தெரிவித்ததையடுத்து குறித்த பிரதேசத்திற்கு குறித்த இருவரும் வருகை தந்துள்ளதாகவும், இதன்போது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் குறித்த இருவரும் உயிரிழந்துள்ளனர் பலியான பிங்வத்தே உக்குவா என்பவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் பிணையில் விடுக்கப்பட்டவர் என பொலிஸார் தெரிவித்துள்ளது.   - [பேருந்திற்காக பலமணி நேரம் பேருந்து தரிப்பிடத்தில் காத்திருக்கும் ஆசிரியர்கள்](https://minnal24.com/%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%95-%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%ae/): -கிளிநொச்சி நிருபர்- யாழ்ப்பாணத்திலிருந்து இரண்டு பஸ்களை பிடித்து கிளிநொச்சி வருகை தந்ததும் கிளிநொச்சியிலிருந்து தங்களது கிராம பாடசாலைகளுக்கு செல்வதற்கு பஸ்கள் இன்றி நீண்ட நேரம் டிப்போ சந்தியில் ஆசிரியர்கள் காத்திருக்கின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது, என பாதிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் கவலை தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் அதிகாலை மூன்று மணிக்கு எழுந்து வீட்டுப் பணிகளை முடித்துவிட்டு அங்கிருந்து பிரதான வீதிக்கோ அல்லது யாழ் நகருக்கோ ஒரு பஸ்ஸில் பயணம் செய்து அங்கிருந்து கிளி நொச்சிக்கு பிரிதொரு பஸ்ஸில் பயணத்தை மேற்கொண்டு வருகை தந்த போதும் கிளிநொச்சியின் கிராமங்களில் உள்ள தங்களது பாடசாலைகளுக்குச் உரிய நேரத்திற்குச் செல்வதற்கு பஸ் இன்மையால் காலை ஒன்பது மணிவரை வீதியில் காத்திருப்பதாக தெரிவிக்கும் ஆசிரியர்கள், இலங்கை போக்குவரத்துச் சபையின் கிளிநொச்சி சாலையினர் தங்கள் பணியாளர்களுக்கான எரிபொருள் கோரி பணி பகிஸ்கரிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதேவேளை, தனியார் பேரூந்துகள் போதிய எரிபொருள் இன்றி தங்களது சேவையினை மட்டுப்படுத்தியுள்ளனர். இதன் காரணமாக தாம் உரிய […] - [நாளையும், நாளை மறுதினமும் ஆசிரியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம்](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae/): -கல்முனை நிருபர்- எரிபொருள்களைப் பெற்றுக் கொள்ள வழி செய்தல் மற்றும் கிழக்கு மாகாணத்திற்கென தனியான பாடசாலை அறிவிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அம்பாறை மாவட்ட ஆசிரியர்களால் முன்னெடுக்கப்படும் பாடசாலை பகிஷ்கரிப்பு போராட்டம் நாளையும், நாளை மறுதினமும் (வியாழன் மற்றும் வெள்ளி) இடம்பெறும் என இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தினர் இன்று புதன்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தனர். இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தலைவர் ஜெஸ்மி மூஸா தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், இந்த பாடசாலை பகிஷ்கரிப்பு தொடர்பான அறிவிப்பை கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளருக்கு சங்கம் அறிவித்திருப்பதாகவும், அவர்களின் அறிவித்தல் கடிதத்தில் எரிபொருள் பிரச்சினையினை மையமாகக் கொண்டு ஜுலை 10 ஆம் திகதி வரை பாடசாலைகளை மூடுமாறு கல்வியமைச்சு அறிவித்துள்ளதனைத் சுட்டிக்காட்டியுள்ளதாவும் தெரிவித்தார். மேலும், இக்காலப்பகுதிக்குள் ஆசிரியர்களுக்கான சொந்த விடுமுறை தொடர்பிலும் தெளிவான அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கிழக்கு […] - [மரக்கறிகளின் மொத்த விற்பனை விலையில் வீழ்ச்சி](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa/): -நுவரெலியா நிருபர்- எரிபொருள் நெருக்கடி காரணமாக வெளியிடங்களில் இருந்து வியாபாரிகள் வராததால் காய்கறிகளின் மொத்த விலை குறைந்துள்ளதாக பொருளாதார மத்திய நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கையிருப்பில் உள்ள காய்கறிகளை பொருளாதார மையங்களுக்கு கொண்டு வருவதற்கான வழிமுறைகள் இல்லாததால், சில சமயங்களில் விளை நிலங்களில் காய்கறிகள் அழிக்கப்படுவதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். கடந்த வாரம் ஒரு கிலோ போஞ்சி மொத்த விற்பனை விலை 500 முதல் 600 ரூபாவாக இருந்த நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை ஒரு கிலோ போஞ்சி மொத்த விற்பனை விலை 280 முதல் 300 ரூபாய் வரை குறைந்துள்ளது பல காய்கறிகளின் மொத்த விலை குறைந்துள்ளது. கரட் 130-150 ரூபா, பீட்ரூட் 200 ரூபா, முட்டைகோஸ் 150 ரூபா, வெண்டைக்காய் 140-160 ரூபா, தக்காளி 100-120 ரூபா, முள்ளங்கி 70-90 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. எனினும், காய்கறிகள் மொத்த விலையில் இருந்தும் சில்லரை விலை குறையவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. சில்லறையில் ஒரு […] - [நாட்டில் 10 முதல் 15 மணித்தியாலங்கள் மின் வெட்டு](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-10-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-15-%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af/): நாட்டில் எதிர்வரும் நாட்களில் மின்வெட்டு நேரம் அதிகரிக்கும், என மின் பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் அனில் ரஞ்சித் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதன்படி ஒரு நாளில் 10 முதல் 15 மணித்தியாலங்கள் மின் வெட்டு அமுல்படுத்தப்படக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார். நாட்டில் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகிறது, நீர் மின் உற்பத்தி நிலையங்களில் உரிய முறையில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படாவிட்டால் இந்த நிலை உருவாகும். நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் ஒரு பகுதி திருத்தப் பணிகளுக்காக மூடப்பட்டுள்ளது. இதனால் 270 மெகாவோட் மின்சார உற்பத்தி தடைப்பட்டுள்ளது,எரிபொருள் பிரச்சினையால் மேலும் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. உரிய முகாமைத்துவம் இன்றி நீர் மின் உற்பத்தி செய்தால், நீர் மட்டம் குறைந்து தற்பொழுது உற்பத்தி செய்யும் அளவில் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாமல் போகும். மின்சார உற்பத்தி தொடர்பில் நெருக்கடி நிலைமை உருவாகியுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார். - [வெலிகந்த கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்திலிருந்து 600 கைதிகள் தப்பியோட்டம்](https://minnal24.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a9%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5/): -வாழைச்சேனை நிருபர்- வெலிகந்த கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை கைதி ஒருவர் உயிரிழந்ததையடுத்து அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பொலநறுவை மாவட்டம் வெலிகந்த பிரதேசத்தின் கந்தக்காடு கொரோனா தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற கைகலப்பு காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், ஐவர் காயமடைந்துள்ளதாகவும் வெலிகந்த பொலிஸார் தெரிவித்தனர். இன்று அதிகாலை இவ் நிலையத்தில் அனுமதிக்கப்பட்டவர்களே மோதலில் ஈடுபட்டவர்கள் என்றும் இவர்கள் கந்தகாடு சேனபுர ஆகிய மத்திய நிலையங்களில் போதை புனர்வாழ்வு கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. இவ் சிகிச்சை முகாமில் சுமார் 600 வரையிலான வெளிமாவட்டத்தைச் சேர்ந்தோர்கள் சிகிச்சை பெற்று வந்தனர். சிகிச்சை பெற்று வந்தவர்கள் தப்பியோடியுள்ளதாகவும், அவர்களை தேடும் பணியில் சுகாதார பிரிவினர்,பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் ஈடுபட்டு வருவதாக பொலிஸார் தொவித்தனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். - [சேமித்து வைத்திருந்த எரிபொருளால் பரிதாபமாக உயிரிழந்த பெண்](https://minnal24.com/%e0%ae%9a%e0%af%87%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf/): திருகோணமலை-அன்புவெளிபுரத்தில் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்ற தீ விபத்தில் 47 வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். சுவாமிக்கு விளக்கேற்றிவிட்டு வீசிய தீக்குச்சி, சேமித்து வைக்கப்பட்டிருந்த பெற்றோல் கொள்கலனில் மீது விழுந்ததால் இத்தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர். - [இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%86%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d/): -கல்முனை நிருபர்- சுகாதாரத்துறையினர் எரிபொருளைப் பெற்றுக் கொள்ள வழிமுறையொன்றைப் பின்பற்றியது போல் ஆசிரியர்களது விடயத்தில் பாராமுகமாகத் தொழிற்படும் கல்வியமைச்சின் ஆலோசனைகளை கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் அதிகாரிகள் கண்மூடித்தனமாகப் பின்பற்றுவதாக இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் குற்றச் சாட்டியுள்ளது இது தொடர்பில் சங்கம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் பரீட்சைத் திணைக்கள ஆணையாளரால் மதிப்பீட்டுப் பணிகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு எரிபொருள் பெற்றுக் கொள்வதற்கான அனுமதிக் கடிதம் வழங்கியும், எதுவும் நடைபெறவில்லை. தூர இடங்களில் கற்பிக்கின்ற ஆசிரியர்கள் மாத்திரமன்றி ஆசிரியர் சமூகத்தின் எரிபொருளைப் பெற்றுக் கொள்ளும் உரிமை முழுமைாக மறுக்கப்பட்டுள்ளது. இவைகளுக்கான எந்த முயற்சிகளையும மேற்கொள்ளாத அதிகாரிகள் ஆசிரிய சமூகத்தை வதைக்கும் வகையிலான அறிவுறுத்தல்களை மாத்திரம் வெளிவிடுவது சங்கடத்திற்குரியதாகும். பொதுப் பரீட்சைகள் மற்றும் பருவகால விடுமுறைகள் என்பவைகளுக்கு ஒரே நாட்காட்டி நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும் போது கிழக்கு மாகாண ஆசிரியர்களுக்கென தனியான முன்னெடுப்புக்களை மேற்கொள்வதனால் எவ்விதமான பிரயோசனங்களும் கிடைக்கப் போவதில்லை எரிபொருளை மையமாகக் கொண்டு குறிப்பிட்ட […] - [தூர பகுதிகளுக்கும் முறையாக சமையல் எரிவாயுவை விநியோகிக்குமாறு கோரிக்கை](https://minnal24.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0-%e0%ae%aa%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%af/): -நுவரெலியா நிருபர்- நுவரெலியா மாவட்டத்தில் தூர பகுதிகளுக்கும் முறையாக சமையல் எரிவாயுவை விநியோகிக்குமாறு, மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வீ.இராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்தார். கொட்டகலை நகர பகுதிக்கு நேற்று செவ்வாய்க்கிழமை பயணம் மேற்கொண்டிருந்த ராதாகிருஷ்ணன், அங்குள்ள ‘லாப் கேஸ்’ முகவருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். சமையல் எரிவாயுவை முறையாக விநியோகிப்பதில் உள்ள நெருக்கடி நிலை குறித்து கேட்டறிந்த அவர், மக்கள் தரப்பில் முன்வைக்கப்படும் முறைப்பாடுகள் குறித்தும் சுட்டிக்காட்டினார். நகர் பகுதிகளுக்கு நெருக்கடிக்கு மத்தியில் எரிவாயு விநியோகிக்கப்பட்டாலும், தூர இடங்களில் உள்ள தோட்ட பகுதிகளுக்கு வருவதில்லை, எனவே, இதற்கான நடவடிக்கையை எடுக்குமாறும் கேட்டுக்கொண்டார். இதன் போது, மலையக தொழிலாளர் முன்னணியின் நிதி செயலாளர் புஷ்பா விஸ்வநாதன் மற்றும் உறுப்பினர்களும், அதிகாரிகளும் உடனிருந்தனர்.   - [தமக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்தவர்களுக்கு குளிர்பானம் வழங்கிய கடற்படையினர்](https://minnal24.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%a4%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4/): -யாழ் நிருபர்- கடற்படையினருக்கு காணி சுவீகரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்தவர்களுக்கு கடற்படையினர் குளிர்பானம் வழங்கினர். நேற்று செவ்வாய்க்கிழமை காரைநகர் ஜே/45 கிராம சேவகர் பிரிவில் தனியாருக்கு சொந்தமான 40 ஏக்கர் காணியை கடற்படையினருக்கு அளப்பதற்கு நில அளவை திணைக்களத்தினர் வருகை தந்திருந்தனர். இதன்போது, அங்கு குழுமியிருந்த அரசியல் பிரமுகர்கள், சமூக மட்ட அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் அங்கு குழுமி இந்த காணி அளவீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதன்போது, அங்கிருந்த கடற்படை வீரர்கள் அனைவருக்கும் குளிர்பானங்கள் வழங்கினர். எனினும் நில அளவை திணைக்களத்தினர் மாத்திரமே குளிர்பானங்களை பெற்றுக்கொண்டனர், ஏனைய எவரும் குளிர்பானங்களை பெற்றுக்கொள்ளவில்லை. - [தமிழ் பொலிஸாருக்கு சிங்கள வகுப்பு](https://minnal24.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b8%e0%ae%be%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d%e0%ae%95/): -யாழ் நிருபர்- இலங்கையில் முதன் முறையாக தமிழ் பொலிஸாருக்கு சிங்கள மொழி வகுப்புகளை கடந்த ஞாயிற்றுக்கிழமை நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச ஆரம்பித்து வைத்துள்ளார். வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா இந்து பெளத்த கலாச்சார பேரவையின் பொதுச் செயலாளர் எம்.டி.எஸ் இராமச்சந்திரனிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக பொலிஸ் மா அதிபரின் அனுமதியுடன் குறித்த வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வடமாகாணத்தில் கடமையாற்றும் தமிழ் பொலிஸாருக்கு முதற்கட்டமாக சிங்கள மொழியை கற்பிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இனிவரும் காலங்களில் சிங்கள பொலிஸாருக்கு தமிழ் மொழியை கற்பிப்பதற்கான நடவடிக்கையை இந்து பௌத்த கலாசார பேரவை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. - [கிரான் பிரதேச செயலகப்பிரிவில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கி வைப்பு](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%ae%b2%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0/): -வாழைச்சேனை நிருபர்- மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலகப்பிரிவிலுள்ள வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட விவசாய கிராம மக்களுக்கு ‘பாம்’ நிறுவனத்தினால் ஒரு தொகுதி நிவாரணப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், அனர்த்த முகாமைத்துவ பிரிவிற்கான அதிகாரி எஸ்.சிற்றம்பலம், பாம் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சுனில் டொம்பேபொல, அதன் வெளிக்கள உத்தியோகஸ்த்தர்களான திருமதி.பிரியதர்சினி சந்திரலிங்கம். ரஞ்சித்குமார், சர்மிலா ஆகியோர்களுடன் கிராமசேவகர்களும் கலந்து கொண்டு மக்களுக்கான நிவாரணப் பொதிகளை வழங்கி வைத்தனர். குறித்த நிவாரணப் பொதிகளானது கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பொண்டுகள்சேனை, கோராவெளி, குடும்பிமலை, முறுத்தானை ஆகிய 4 கிராம சேவகர் பிரிவுகளில் 6 கிராமங்களைச் சேர்ந்த 100 குடும்பங்களுக்கு 5000 ரூபா பெறுமதியில் வழங்கப்பட்டது. தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியினால் மக்கள் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் வாழ்கின்றனர். அந்த வகையில் மேற்படி கிராம மக்களுக்கு உதவிடும் வகையில் இவ் மனிதநேய […] - [மூக்குக் கண்ணாடிகள் மற்றும் சக்கர நாற்காலிகள் வழங்கும் நிகழ்வு](https://minnal24.com/%e0%ae%ae%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1/): பிரன்லி சிப் அமைப்பும் நியூ சன் ஸ்டார் கழகமும் இணைந்து ஏற்பாடு செய்த, பிரித்தானியா சைவ முன்னேற்றச் சங்கத்தின் அறிவொளி வலையத்தினால் பதுளையிலுள்ள பின்தங்கிய பாடசாலை மாணவர்களுக்கு மூக்குக் கண்ணாடிகள் மற்றும் சக்கர நாற்காலிகள் வழங்கும் நிகழ்வு பதுளை பொது நூலக கேட்போர் கூடத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு மூக்குக் கண்ணாடிகளும், சக்கர நாற்காலிகளும் வழங்கி வைக்கப்பட்டது. பதுளை சுகாதார வைத்திய அதிகாரி சுரேஸ் கண்ணண் இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில், சிறு வயதிலிருந்தே கண்களை கண் மருத்துவர் மூலம் பரிசோதித்துக்கொள்ள வேண்டும். கண்களில் ஏதேனும் குறைபாடு இருப்பது தெரியவந்தால் ஆரம்ப கட்டத்திலேயே உரிய சிகிச்சையை மேற்கொள்ளலாம், ஆரம்பகட்ட சிகிச்சையை மேற்கொள்வது கண்களை பாதுகாக்கும் வழியாகும். வளர்ந்த குழந்தைகளையும் ஆண்டுக்கு ஒரு முறை கண் மருத்துவரிடம் காட்டி பரிசோதிப்பது அவசியம், புத்தகம் படிக்கும் போது எழுத்து வேளையில் ஈடுபடும் போது சரியான கோணம் போதிய அளவு […] - [வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர வெளியிட்டுள்ள தகவல்](https://minnal24.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%af%81%e0%ae%9a%e0%ae%95%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a9/): வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர, கட்டார் நாட்டின் வலுசக்தி அமைச்சரும், கட்டார் பெற்றோலிய நிறுவனத்தின் தலைவருமான ஷெரிடால் அல் காபியை சந்தித்ததாக தெரிவித்துள்ளார். எரிபொருள் விநியோகம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமைச்சர் காஞ்சன விஜயசேகர மற்றும் அமைச்சர் நஸீட் அகமட் ஆகியோர் நேற்று திங்கட்கிழமை கட்டாருக்கு பயணம் மேற்கொண்டிருந்தனர் இந்நிலையில், இலங்கைக்கு எரிபொருள் மற்றும் பெற்றோலிய பொருட்களை விநியோகம் செய்வது தொடர்பிலும், சமையல் எரிவாயு விநியோகம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக, அமைச்சர் காஞ்சன விஜயசேகர தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். - [மட்டக்களப்பு-நாவற்காடு இறக்கத்துமுனை ஸ்ரீ சிவமுத்துமாரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%87/): மட்டக்களப்பு-நாவற்காடு இறக்கத்துமுனை ஸ்ரீ சிவமுத்துமாரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழாவானது கடந்த 3 ஆம் திகதி ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது. தொடர்ச்சியாக 24 நாட்கள் இடம்பெற்ற மண்டலாபிஷேகத்தை தொடர்ந்து, இன்று செவ்வாய்க்கிழமை 1008 சங்குகளுடனான சரஷ்டநாம சங்காபிஷேகம் இடம்பெற்றது. அதனை முன்னிட்டு, நாவற்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்திலிருந்து மாபெரும் பால்குட பவனி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. - [எரிபொருள் உற்பத்தி செய்யும் நாடுகளின் நிறுவனங்களுக்கு அனுமதி](https://minnal24.com/%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%af/): எரிபொருள் உற்பத்தி செய்யும் நாடுகளின் நிறுவனங்கள் இலங்கைக்கு எரிபொருள் இறக்குமதி செய்யவும், சில்லறை விற்பனையில் ஈடுபடவும் வாய்ப்பளிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக, வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இலங்கையின் மொத்த எரிபொருள் தேவையில் 90 சதவீதத்தினை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும், மிகுதி 10 சதவீதத்தினை லங்கா ஐஓசி நிறுவனமும் பூர்த்திசெய்கின்றது. தற்போது, நாடு எதிர்நோக்கியுள்ளது அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக தொடர்ச்சியாக எரிபொருள் தேவையினை பூர்த்திசெய்வது சவாலுக்குரிய செயற்பாடாகியுள்ளது. இந்நிலையில் எரிபொருள் உற்பத்திசெய்யும் நாடுகளில் உள்ள பெற்றோலிய வள நிறுவனங்களுடன் நீண்ட கால ஒப்பந்தங்களை மேற்கொண்டு, இலங்கையின் அந்நிய செலாவணி தொடர்பான சிக்கல்கள் ஏற்படாதவாறு  எரிபொருள் இறக்குமதி செய்து விற்பனை செய்வதற்கு அந்நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களை மேற்கொள்வது பொருத்தமானது என கண்டறியப்பட்டது. அதற்கமைய, முறைசார் பொறிமுறையின் கீழ் எரிபொருள் நிறுவனங்களுடன் நீண்ட கால ஒப்பந்தங்களை மேற்கொண்டு இலங்கைக்கு எரிபொருள் இறக்குமதி பங்கீடு மற்றும் விநியோகம் செய்வதற்கு குறித்த நிறுவனங்களுக்கு வாய்ப்பளிக்க மின்சக்தி […] - [ஒரு அமர்வில் கலந்துகொள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு 62000 ரூபா செலவு](https://minnal24.com/%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%85%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8a%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3/): தற்போதைய எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்வதில் உறுப்பினர்கள் சிரமப்படுகின்றனர் என சபாநாயகர் மகிந்தயாபா அபேவர்தன தெரிவித்துள்ளார் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஒரு அமர்வில் கலந்துகொள்வதற்கு யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு 62000 ரூபாவும் மாத்தறை நாடாளுமன்ற உறுப்பினருக்கு ஒரு நாளைக்கு 42000 ரூபாவும் செலவாகின்றது தற்போதைய சூழ்நிலை காரணமாக நாடாளுமன்ற ஜனநாயகத்தை பேணுவது கடினமாக உள்ளது என அவர் மேலும் தெரிவித்தார். - [கடற்படையினரின் தேவைகளுக்கு தனியார் காணியை அபகரிக்கும் முயற்சி](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95/): -யாழ் நிருபர்- காரைநகர் ஜே/45 கிராம சேவகர் பிரிவில் உள்ள தனியாருக்கு சொந்தமான 40 ஏக்கர் காணியினை கடற்படையினரின் தேவைகளுக்கு அளவிடுவதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இன்று செவ்வாய்க்கிழமை  நில அளவை திணைக்களம் குறித்த பகுதிக்கு வருகை தந்தவேளை, அங்கு ஒன்றுகூடிய அரசியல் பிரமுகர்கள், சமூக மட்ட அமைப்புக்கள், பொதுமக்கள் ஆகியோர் இணைந்து நில அளவை முயற்சியை முறியடித்தனர். இதன்போது, கடற்படையினருக்கு காணி வழங்க முடியாது என தெரிவித்து நில அளவை திணைக்களத்திற்கு எழுத்து மூலமான ஆவணம் வழங்கப்பட்டது. இதனையடுத்து, நில அளவை திணைக்களம் அங்கிருந்து அகன்றது. மக்கள் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்குகின்ற இந்த இக்கட்டான சூழ்நிலையில், நில அளவை திணைக்களத்தின் காணி அபகரிப்பு நடவடிக்கைகளானது அனைவர் மத்தியிலும் விசனத்தை ஏற்படுத்துகின்றது. - [நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப் உச்ச நீதிமன்றில் வழக்கு தாக்கல்](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%89%e0%ae%b1%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81/): -கல்முனை நிருபர்- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ். எஸ். எம். முஷாரப் தன்னை கட்சியிலிருந்து நீக்கியமை இயற்கை நீதிக்கு முரணானது என்ற அடிப்படையில் அக்கட்சியின் தீர்மானத்திற்கு எதிராக திங்கட்கிழமை  உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் சார்பாக சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா ஆஜராகியிருந்தார். கடந்த மே மாதம் 31ம் தேதி நடைபெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீட கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக நடாத்தப்பட்ட ஒழுக்காற்று விசாரணையின் அடிப்படையில் கட்சியின் யாப்புக்கு எதிராகவும், அதன் தீர்மானங்களுக்கு எதிராகவும் பாராளுமன்ற உறுப்பினர் செயற்பட்டார் என்று தெரிவித்து கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருந்தார். மக்கள் காங்கிரஸ் கட்சியானது குறித்த பாராளுமன்ற உறுப்பினரினை கட்சியிலிருந்து நீக்கியமை தொடர்பாக இம் மாதம் முதலாம் திகதி பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கும் தேர்தல் ஆணையாளருக்கும் அறிவித்திருந்தது. மேற்குறித்த ஒழுக்காற்று விசாரணை கட்சியின் பிரதித் தலைவர் சட்டத்தரணி […] - [நாட்டில் இருந்திருந்தால் டொலராவது மிஞ்சியிருக்கும் - விமல் வீரவன்ச](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2/): எரிபொருள் தேடி அமைச்சர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர், ஆனால் வெளிநாடுகளுக்கு சென்றும் பயனில்லை, வெளிநாடுகளிலிருத்து எரிபொருளை பெறுவது சாத்தியமல்ல, என தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். வெளிநாடுகளுக்கு செல்லாமல் இருந்திருந்தால், அந்த டொலர்களாவது மிச்சமாக இருக்கும் அதுமட்டுமன்றி, இங்கிலாந்து சென்ற அமைச்சர் ஒருவர் உயர் வசதிகளுடைய விடுதியில் தங்கியிருக்கிறார் நாட்டின் இவ்வாறான சூழ்நிலையில் குறைந்த செலவிலான விடுதி ஒன்றில் அல்லது தூதுவரின் இல்லத்தில் தங்கியிருக்கலாம், என அவர் மேலும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை காலை கல்வியமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த ரஷ்யாவிற்கும், வலுசகதி அமைச்சர் காஞ்சன விஜயசேகர மற்றும் சுற்று சூழல் அமைச்சர் நசீர் அஹமட் ஆகியோர் காட்டருக்கும் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. - [அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட மேலும் 47 பேர் கைது](https://minnal24.com/%e0%ae%85%e0%ae%b5%e0%af%81%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%87%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1-3/): சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முற்பட்ட மேலும் 47 பேரை நேற்று திங்கட்கிழமை இரவு கடற்படையினர் கைது செய்துள்ளனர். நீர்கொழும்புக்கு மேற்கு கடற்பரப்பில் பல நாள் மீன்பிடி இழுவை படகில் பயணித்த, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வென்னப்புவ மற்றும் சிலாபம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 47 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஆட்கடத்தலுடன் தொடர்புடைய 5 பேர் உட்பட 34 ஆண்களும், 6 பெண்களும், 7 சிறுவர்களும் அடங்குவதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.   - [இணுவையூர் கந்தசாமி ஆலய முத்தேர் இரதோற்சவம்](https://minnal24.com/%e0%ae%87%e0%ae%a3%e0%af%81%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%9a%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%b2%e0%ae%af-%e0%ae%ae/): -யாழ் நிருபர்- வரலாற்று சிறப்பு மிக்க இணுவையூர் கந்தசாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் முத்தேர் இரதோற்சவம் நேற்று திங்கட்கிழமை மிக விமர்சையாக இடம்பெற்றது. இவ்வாலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கடந்த 04 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய திருவிழா 24 வது திருவிழா இரதோற்சவம் இடம்பெற்றது. கருவரையில் வீற்றிருக்கும் இணுவையூர் கந்தன், வள்ளி, தெய்வானை விநாயகர், மற்றும் சிவன், பார்வதிக்கு ஆகிய தெய்வங்களுக்கு அபிசேக ஆராதணைகள் என்ப இடம்பெற்றும், எம்பெருமான் சமேதரக பீடத்தில் உள்வீதியுடாக வலம் வந்து முத்தேர் இரதோற்சவத்தில் வீற்று பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். மஹோற்சவ கிரியைகளை ஆலயபிரதம குரு சிவஸ்ரீ வைத்தீஸ்வரக் குருக்கள் தலைமையிலான சிவாச்சரியர்கள் நடாத்தி வைத்தனர். இங்கு பக்தர்கள் தமது நேர்த்திகடனை தூக்கு காவடி எடுத்தும், கற்பூரச்சட்டி எடுத்து நிறைவேற்றிக் கொண்டனர். இன்று செவ்வாய்க்கிழமை தீர்த்தோற்சவத்துடன் மாலை கொடியிறக்கத்துடன் இனிதே மஹாற்சவத்துடன் நிறைவடையும். பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டு இணுவையூர் கந்தசாமியின் அருட்கடாச்சத்தினை பெற்றுச் சென்றனர். - [வடக்கை இந்தியாவிற்கு விற்கப் போகிறார்கள்](https://minnal24.com/%e0%ae%b5%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b1/): தற்போதுள்ள பொருளாதார நெருக்கடி நிலையில் வட பகுதியை இந்திய அரசாங்கம் அபிவிருத்தி செய்வதாக கூறி வடபகுதியை இந்திய அரசாங்கத்திற்கு விற்கப் போகிறார்கள், என மன்னார் மாவட்ட மீனவ சங்க தலைவர் மொகமட் ஆலம் தெரிவித்துள்ளார் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று நாட்டில் காணப்படுகின்ற அரசியல் நிலை இதற்கு அப்பால் எரிபொருள் தட்டுப்பாடு கடற்தொழிலாளர்களுக்ககு கிடைக்காமை தொடர்பான பிரச்சினை, மன்னார் மாவட்டத்தில் அமைக்கப்படவுள்ள காற்றாலை மின்சாரம், அதானி குழு எடுத்துள்ள காற்றாலை மின்சாரத் திட்டம், கனியவள மண் அகழ்வு, மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், சமகாலத்தில் சட்டவிரோதமாக செய்யப்படுகின்ற மீன்பிடி முறைகள் மற்றும் வடக்கில் உள்ள கடற்தொழிலாளர் அமைப்புகளை புதுப்பித்தல் போன்ற பல விடயங்களை நாங்கள் பேசியிருக்கிறோம். கடந்த வியாழக்கிழமை ஒரு இந்தியன் குழு ஒன்று மன்னார் மாவட்டத்தில் அதானி குழு முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆராய்ந்து சென்றிருக்கின்றது. தற்போது இலங்கைக்கு இந்தியாவின் எரிபொருள் விநியோகம் […] - [படகு மூலம் தனுஷ்கோடி சென்ற வயோதிப தம்பதியின் நிலை கவலைக்கிடம்](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%af%82%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%a9%e0%af%81%e0%ae%b7%e0%af%8d%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9/): -மன்னார் நிருபர்- இலங்கையில் இருந்து படகு மூலம் நேற்று திங்கட்கிழமை அதிகாலை தனுஷ்கோடி சென்ற வயதான தம்பதியர் கடற்கரையில் மயங்கிக் கிடந்த நிலையில் மீட்கப்பட்டு ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனினும், குறித்த இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிய வருகிறது. மன்னார் முருங்கன் பிட்டி பகுதியை சேர்ந்த பரமேஸ்வரி மற்றும் சிவன், ஆகிய வயோதிப தம்பதிகளான இருவருமே இலங்கையிலிருந்து படகு மூலம் தனுஷ்கோடிக்கு சென்றனர். இந்த நிலையில், குறித்த இருவரும் மயக்க நிலையில் கடற்கரையில் மீட்கப்பட்ட நிலையில் ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவ சிகிச்சையில் உள்ள இருவரை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜான் டாம் வர்கீஸ் நேரில் சென்று பார்வையிட்டதோடு, அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சையை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். மேலும், இருவரின் உடல்நிலை மிக மோசமாக இருப்பதால் மதுரை அரசு ராஜாஜி […] - [நாட்டு நிலமை தொடர்பில் கலந்துரையாட வெளிநாடுகளுக்கு விரைந்துள்ள அமைச்சர்கள்](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%ae%e0%af%88-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95/): எரிபொருள் பிரச்சினை தொடர்பில் கட்டார் நாட்டு அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்காக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மற்றும் சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் ஆகியோர் கட்டார் நோக்கி பயணமாகியுள்ளனர். இவர்கள் நேற்று திங்கட்கிழமை இரவு டோகா நோக்கி பயணித்ததாக கட்டுநாயக்க விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ரஷ்யாவிற்கு விஜயம் செய்யும் நோக்கில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை டுபாய் நோக்கி பயணித்துள்ளார்.   - [ஜூலை 10 ஆம் திகதிக்கு பின்னர் நாடு வழமைக்கு திரும்பும்](https://minnal24.com/%e0%ae%9c%e0%af%82%e0%ae%b2%e0%af%88-10-%e0%ae%86%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9/): சமையல் எரிவாயு மற்றும் எரிபொருளை நெருக்கடி இன்றி தொடர்ச்சியாக வழங்குவதற்கான பொறிமுறையானது, ஜூலை 10 ஆம் திகதிக்குப் பின்னர் நடைமுறைப்படுத்தப்படும், என அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். இன்று நள்ளிரவு முதல் அத்தியாவசிய சேவைகள் மாத்திமே இயங்கும் என தெரிவித்துள்ள நிலையில், இது ஒரு முடக்கல் சூழ்நிலை அல்ல, ஜூலை 10 ஆம் திகதிக்குப் பின் எரிபொருள் மற்றும் எரிவாயு கிடைக்கும் என்றும், நாடு இயல்பு நிலைக்குத் திரும்பும் ஆகவே இந்த காலகட்டத்தில் மக்களின் ஆதரவு தேவை என்றும், அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதேவேளை, டீசல் பற்றாக்குறையால்,எரிபொருள் நிலைமை சீராகும் வரை மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவைகள் மட்டுப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. - [தொடரை கைப்பற்றியது இந்திய மகளிர் அணி](https://minnal24.com/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%88-%e0%ae%95%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a4%e0%af%81-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/): தம்புள்ளையில் இடம்பெற்ற சுற்றுலா இந்திய மகளிர் அணிக்கு எதிரான 3 ஆவது இருபதுக்கு 20 போட்டியில்  இலங்கை அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது. நாணய சுழற்சி பெற்ற இந்திய மகளிர் அணி முதலில் துடுப்பாட தீர்மானித்து, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 138 ஓட்டங்களை பெற்றது. அதனைத்தொடர்ந்து, 139 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி, 17 ஓவர் நிறைவில் 3 விக்கெட்டுகளை இழந்து 141 ஓட்டங்களைப் பெற்றது. எனினும், 3 போட்டிகளை கொண்ட இந்த இருபதுக்கு 20 போட்டி தொடரில், 2 போட்டிகளில் வெற்றி பெற்று இந்திய மகளிர் அணி 2 -1 என்ற அடிப்படையில்  தொடரை கைப்பற்றியுள்ளது. - [நாட்டில் இன்று பெரும்பாலான பாடசாலைகளில் வரவின்மை](https://minnal24.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2/): -யாழ் நிருபர்- அரசாங்கத்தின் தெளிவில்லாத அறிவித்தல் காரணமாக இன்று திங்கட்கிழமை நாட்டில் உள்ள பெருமளவான பாடசாலைகளில் ஆசிரியர், மாணவர் வரவு நிலை குறைவாகக் காணப்பட்டதோடு, பெரும்பாலான பாடசாலைகள் இயங்கவில்லை. 01. மூன்று நாட்கள், ஐந்து நாட்கள் பாசாலைகளை இயக்குதல் என்ற அரசாங்கத்தின் குழப்பமான அறிவித்தல். 02. வருகை தரமுடியாத ஆசிரியர்களுக்கு தனிப்பட்ட விடுமுறையாக கணிக்க முடியாது, என்ற ஆசிரியர்களுக்குச் சாதகமான அறிவித்தல். 03. அதிபர், ஆசிரியர்களுக்கான போக்குவரத்து வசதியின்மை. 04. சீரற்ற எரிபொருள் விநியோகம். 05. இ.போ.ச ஊழியர்களின் பணிப்பகஸ்கரிப்பு. 06. எரிசக்தி அமைச்சரின் எரிபொருள் இல்லையென்ற அபாயகரமான அறிவித்தல். இத்தகைய நிலைகளைக் கருத்தில் கொண்டு போக்குவரத்து மார்க்கங்கள் சீராகும்வரை பாடசாலை செல்வதைத் தவிப்போம் என நாம் அனைவரிடமும் வேண்டுகோள் விடுத்திருந்தோம். அதன்படி, நாட்டில் உள்ள பெருமளவான பாடசாலைகளில் போக்குவரத்து மார்க்கங்கள் இல்லாத பலர் எமது வேண்டுகோளை ஏற்று பாடசாலைக்குச் செல்லவில்லை. ஒரு சில பாடசாலை அதிபர்கள் ஆசியர்களைக் கட்டாயப்படுத்தி அழைத்த […] - [மனைவியை கொன்று 70 துண்டுகளாக வெட்டி பல இடங்களில் வீசிய பொறியியலாளர்](https://minnal24.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%95%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-70-%e0%ae%a4%e0%af%81%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3/): மனைவியை கொன்று 70 துண்டுகளாக வெட்டி பல இடங்களில் வீசிய பொறியியலாளர் ஒருவருக்கு டெல்லி-டேராடூன் நீதிமன்றம் கடந்த சனிக்கிழமை ஆயுள் தண்டனையும், 150,000 ரூபா அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது. டெல்லியை சேர்ந்தவர் ராஜேஷ். ஐ.டி பொறியியலாளரான இவர், 1999ல் தனது காதலியான அனுபமா குலாட்டியை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார். ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, அனுபமா இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தார். அப்போது கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. எனவே, அவர்கள் அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பினர். நாடு திரும்பியது ராஜேஷ் கொல்கத்தாவில் வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்தியுள்ளார். இதனால், கணவன் மனைவியிடையே தொடர்ந்து தகராறு நீடித்து வந்தது. இந்நிலையில், அனுபமாவுக்கு அமெரிக்காவில் வசிக்கும் ஒருவருடன் தொடர்பு இருப்பதாக அவரது கணவர் சந்தேகம் தெரிவித்தார். இதனால் குடும்பச் சண்டை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இதையடுத்து, தன்னை ராஜேஷ் ஏமாற்றி வேறு திருமணம் செய்து கொண்டதாக அனுபமா பொலிஸில் […] - [தலை துண்டிக்கப்பட்ட நிலையில் மாந்திரீகர் ஒருவரின் சடலம் மீட்பு](https://minnal24.com/%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88-%e0%ae%a4%e0%af%81%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88/): அக்குரஸ்ஸ-திப்பட்டுவாவ பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை காலை தலைத்துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் 70 வயதுடைய மாந்திரீகர் எனவும், குறித்த நபரை கொலை செய்தவர் அந்நபரின் தலையை துண்டித்து, அவரது வீட்டிற்கு அருகில் ஓடும் நில்வளா கங்கையில் வீசியுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. உயிரிழந்துள்ள மாந்திரீகரின் வீட்டிற்கு அண்மையில் வசித்து வருபவரான கொலையாளி தற்போது அப்பிரதேசத்திலிருந்து தலைமறைவாகியுள்ளார். கொலைக்கான சந்தேசக நபரை கைது செய்யும் நடவடிக்கையை அக்குரஸ்ஸ பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். - [பன்னீர்செல்வம் அ.தி.மு.க பொருளாளர் பதவியிலிருந்து நீக்கம்?](https://minnal24.com/%e0%ae%aa%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%80%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85-%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%81-%e0%ae%95-%e0%ae%aa/): அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொருளாளர் பதவியிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்படவுள்ளதாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒற்றைத் தலைமை விவகாரத்தினால் ஓ.பன்னீர்செல்வம்  மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பினடைக்கிடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சி உறுப்பினர்களுக்கிடையிலான கூட்டமொன்று இன்று திங்கட்கிழமை நடைபெறுகின்றது. குறித்த கூட்டத்தின் போது, ஓ.பன்னீர்செல்வத்தை அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொருளாளர் பதவியிலிருந்து நீக்குவதற்கான தீர்மானமொன்று நிறைவேற்றப்படவுள்ளதாகவும், அதேநேரம் புதிய பொருளாளராக கே.பி.முனுசாமி தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாகவும், தகவல் வெளியாகியுள்ளது. - [களனிப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நெதலகமுவே தம்மதின்ன தேரர் கைது](https://minnal24.com/%e0%ae%95%e0%ae%b3%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b4%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9/): களனிப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் வண.நெதலகமுவே தம்மதின்ன தேரர் இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். கம்பஹா பொலிஸ் நிலையத்தில் அவர் சரணடைந்ததையடுத்து கைது செய்யப்பட்டுள்ளார். அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் வீட்டிற்கு தீவைத்து தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். தேரரிடம் வாக்குமூலம் பெற்றதன் பின்னர் அவரை கம்பஹா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். - [பெற்றோல் வழங்குவதில் புறக்கணிப்பு : கிராம சேவகர்கள் பணி புறக்கணிப்பு](https://minnal24.com/%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%8b%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b1/): -கிளிநொச்சி நிருபர்- பெற்றோல்ல் வழங்குவதில் தாம் புறக்கணிக்கப்படுவதாக தெரிவித்து, வடமராட்சி வடக்கு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட 35 கிராம் சேவர்களும் இன்று திங்கட்கிழமை சுகயீன விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். யாழ்.மாவட்டத்திலுள்ள அனைத்து பகுதிகளிலும் கிராமசேவையாளர்களுக்கு அத்தியாவசிய சேவை அடிப்படையில் எரிபொருள் வழங்கப்பட்ட கொண்டிருக்கின்ற நிலையிலும், வடமராட்சி வடக்கு பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கிராம சேவகர்களுக்க