முனைமுருகன் வீதியினை புனரமைக்குமாறு மக்கள் கோரிக்கை

கல்குடா பாசிக்குடா சந்தியில் இருந்து முனைமுருகன் ஆலயத்திற்கு செல்லும் வீதியானது கடல் அரிப்பினாலும் நிர்மா புயலினாலும் சேதமைடைந்து காணப்படுகின்றது. தேசிய அனர்த்தமாக கருதி குறித்த வீதியை புரமைத்து தருமாறு மக்கள் கோருகின்றார்கள்.

பாசிக்குடா சந்தியில் இருந்து முனைமுருகன் ஆலயத்திற்கு செல்லும் வீதியானது கடந்த ஆண்டு புனரமைக்கப்பட்டிருந்தது கடலரிப்பினால் வீதி சேதமடைவதினை கண்டு கோறளைப்பற்று தவிசாளரிடம் சமூக மட்ட அமைப்பினால் எழுத்துமூலம் அறிவித்தது.

இதுவைரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கரையோரம் பேணல் திணைக்கள உத்தியோகஸ்தர் வந்து பார்வையிட்டு மேலதிகாரியை அழைத்து வந்து காட்டி இதனை செப்பனிட்டு தருவதாக கூறியிருந்தும் “டிட்வா புயல் ” முந்தி விட்டதாகவும் பொதுமக்கள் கூறுகின்றார்கள்.

குறித்த வீதியில் பிரசித்தி பெற்ற முனை முருகன் ஆலயம் அமையப்பெற்றுள்ளதுடன் சுற்றுலா பயணிகளும் பயன் படுத்தும் வீதியாகும். இவ் வீதியினை அலசியல்வாதிகள் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கவனமெடுத்து திருத்தி தருமாறு பொது மக்கள் கோரிக்கை விடுகின்றார்கள்.