குளிரூட்டியில் கைப்பற்றப்பட்ட பழைய பொருட்கள் அழிப்பு

பிரபலமான உணவகத்தின் குளிரூட்டியில் இருந்து பழுதடைந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டு நேற்று சனிக்கிழமை நீதிமன்ற உத்தரவின் பேரில் அழிக்கப்பட்டது.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பிரபலமான ஒரு உணவகத்தின் குளிரூட்டியில் இருந்து சுகாதார அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்ட பழுதடைந்த 144 சம்சா, 4 kg பிசைந்த மாவு, 8 kg சோறு உட்பட பல பழைய பொருட்கள் நீதிமன்ற உத்தரவின் பேரில் அழிக்கப்பட்டன.

குறித்த உணவகத்தில் உணவைப் பெற்றுக் கொண்ட தாய் மற்றும் மகள் ஆகியோர் உணவு நஞ்சாதலால் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் பிரபலமான குறித்த உணவகம் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.