மார்வன் அத்தபத்து முன்வைத்துள்ள முக்கிய கோரிக்கை

 

இலங்கை தேசிய கிரிக்கெட் வீரர்கள் வலைத்தளங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட வேண்டும் என இலங்கை அணியின் முன்னாள் வீரரான மார்வன் அத்தபத்து கோரிக்கை விடுத்துள்ளார்.

ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியின்போது அவர் இதனை குறிப்பிட்டார்.

வீரர்கள் சமூக வலைத்தளங்களில் செலவிடும் நேரம், வீரர்களின் கவனத்தையும் தொழில்முறை ஒழுங்கையும் பாதிக்கும் என அவர் கூறியுள்ளார்.

அத்துடன் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கிரிக்கெட் வீரர்கள் தங்கள் முழு கவனத்தையும் பயிற்சி மற்றும் செயற்திறனில் செலுத்த வேண்டும் என்றும் அத்தபத்து குறிப்பிட்டுள்ளார்.