சீன விமான நிறுவனத்தின் “எயார் ஆன்டீஸ்” விளம்பரத்தால் சர்ச்சை!

சீனாவின் பட்ஜெட் விமான நிறுவனமான ஸ்பிரிங் ஏர்லைன்ஸ், திருமணமான பெண்களையும் தாய்மார்களையும் விமானப் பணிப்பெண்களாகப் பணியமர்த்துவதற்கான விளம்பரமொன்றை வெளியிட்டுள்ளது.

இதில் அவர்களை “Air Aunties” என்று குறிப்பிட்டதால், இந்த அறிவிப்பு இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

“வாழ்க்கை அனுபவம் மற்றும் சிறந்த பரிவுணர்வு” கொண்ட பெண்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கிலேயே 25 முதல் 40 வயதுக்குட்பட்ட, திருமணமான அல்லது குழந்தை உள்ளவர்களைப் பணியமர்த்த விரும்புவதாக இந்த நிறுவனம் கூறியுள்ளது.

1990-களில் வேலையை இழந்த ஆடை தொழிலாளர்கள் சிலர் விமானத் துறையில் விமானப் பணிப்பெண்களாக இணைந்தபோது அவர்களைக் குறிக்கவே முதலில் இந்தப் பெயர் பயன்படுத்தப்பட்டது.

இந்த பெயரை தற்போது, விளம்பரத்துக்கு பயன்படுத்துவது பாலின பழமை வாதப் பிம்பத்தை வலுப்படுத்துவதாகவும், மரியாதைக் குறைவாக இருப்பதாகவும் பலர் விமர்சித்தனர்.

இதற்குப் பதிலளித்த விமான நிறுவனம், யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் தாங்கள் இதனை பயன்படுத்தவில்லை என்றும், வயதில் மூத்தவர்களை வேறுபடுத்திக் காட்டுவதற்காக மட்டுமே அந்தப் பெயரைக் குறிப்பிட்டதாகவும் விளக்கமளித்துள்ளது.