
மாணவர்களுக்கான சின்னம் சூட்டும் விழா
-மஸ்கெலியா நிருபர்-
நாவலப்பிட்டி கதிரேசன் மாதிரி ஆரம்ப பாடசாலையில் மாணவர்களுக்கான சின்னம் சூட்டும் விழா கடந்த வெள்ளிக்கிழமை இடம் பெற்றது.
இதன் போது கம்பளை கல்வி வலயத்தின் பிரதி கல்வி பணிப்பாளர் திரு ஆர்.விஜேயந்திரன் மற்றும் கதிரேசன் மத்திய கல்லூரி அதிபர் திரு ஆர்.ரகு ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
பாடசாலை ஒழுங்காற்று குழுவின் முழு ஒத்துழைப்புடன் 2025 ஆம் ஆண்டில் தரம் நான்கில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு இவை வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் பாடசாலை அதிபர் பெ.லோகேஸ்வரன், பாடசாலை ஆசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


