
நாட்டின் பல பகுதிகளில் நேற்று இடம்பெற்ற விபத்துகளில் 4 பேர் உயிரிழப்பு!
நாட்டின் பல பகுதிகளில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற தனித்தனி வீதி விபத்துகளில், 4 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
நிட்டம்புவவில், திஹாரியவில் கொழும்பு-கண்டி வீதியை கடக்கும்போது, மோட்டார் சைக்கிள் மோதியதில் 61 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார்.
மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் காயங்களுடன் வத்துபிட்டிவல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தலாவவில், 419 கிராம வீதியில் நவஹங்குரன்கெத சந்திப்பில் ஒரு மோட்டார் சைக்கிளுடன் மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதியதில் 29 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்தார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒரு குழந்தை உட்பட மேலும் இருவர் காயமடைந்து அனுராதபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஹெட்டிபொலவில், சனிக்கிழமை அதிகாலை தொரகல்லவில் உள்ள ஹலவத-குருணேகல வீதியில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில், பிங்கிரியவைச் சேர்ந்த 23 வயது நபர் ஒருவர் உயிரிழந்தார்.
மன்னார், எருக்கலம்பிட்டியைச் சேர்ந்த 55 வயதுடைய பெண் ஒருவர், புத்தளம்-அனுராதபுரம் வீதியில் இருண்டு லொறிகள் மோதி இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தார்.
விபத்தில் மேலும் மூன்று பெண்கள் படுகாயமடைந்தனர், ஒரு லொறியின் சாரதி கைது செய்யப்பட்டார்.
ஒவ்வொரு சம்பவம் குறித்தும் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
