சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நாட்டின் சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது.

பதுளை மாவட்டத்தின் எல்ல, பசறை, ஹாலிஎல மற்றும் ஹப்புத்தளை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கண்டி மாவட்டத்தின் மெததும்பர பிரதேச செயலகப் பிரிவுக்கும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் குறிப்பிட்டுள்ளது.