முச்சக்கரவண்டி கவிழ்ந்து விபத்து: 5 வயது சிறுவன் பலி
இந்தியாவில் சென்னை மெரினா காமராஜர் சாலையில், முதல்வரின் கான்வாய் செல்லும் பாதையில் சென்ற முச்சக்கரவண்டி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த 5 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.
மெரினா மாட்டாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதி சேகர், தனது 5 வயது பேரன் அலோக்நாத் தக்சீன் மற்றும் குடும்பத்தினரை நேற்று மாலை முச்சக்கரவண்டியில் அழைத்துச் சென்றுள்ளார். இதன்போது மெரினா காமராஜர் சாலையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் மகேந்திரேன் என்பவர், திடீரென முச்சக்கரவண்டியைத் தடுத்ததாக கூறப்படுகிறது.
இதில் சடன் பிரேக் பிடித்து நிறுத்த முயன்ற முச்சக்கரவண்டி, காவலர் மீது மோதி கவிழ்ந்ததாக சொல்லப்படுகிறது. இந்த விபத்தில், முச்சக்கரவண்டி சாரதி, 5 வயது சிறுவன், காவலர் என்போர் படுகாயமடைந்தனர்.
படுகாயம் அடைந்த சிறுவன், கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
