பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது லொரி மோதி விபத்து: 3 பேர் பலி

இந்தியாவில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்று கொண்டிருந்த பக்தர்கள் மீது லொரி மோதியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தென்காசி மாவட்டம், மேலநீலிந்தநல்லூர் கிராமத்தை சேர்ந்த பக்தர்கள் நல்லி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது இன்று வெள்ளிக்கிழமை காலை நெல்லையில் இருந்து சிவகங்கைக்கு சிமெண்ட் லோடு ஏற்றிச் சென்ற லொரி அவர்கள் மீது மோதியுள்ளது.

தூக்க கலக்கத்தில் லொரியை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய சாரதியை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்