கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதி விபத்து: 3 பேர் பலி

இந்தியாவில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று குடும்பத்தினருடன் ஈரோடு செல்வதற்காக மதுரை – கரூர் தேசிய நெடுஞ்சாலை ஆண்டிப்பட்டி கோட்டை அருகே சென்று கொண்டிருந்த பொழுது, கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓர மரத்தின் மீது வேகமாக மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

சாரதியின் தூக்க கலக்கமே விபத்திற்கான காரணம் என தெரியவந்துள்ளது. மேலும் விபத்தில் 02 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்