கடன் பிரச்சினை: 2 மகள்களுக்கு விஷம் கொடுத்து கொன்று தாய் தற்கொலை
இந்தியாவில் ஈரோடு கருங்கல்பாளையத்தில், கடன் தொல்லையால் இரண்டு மகள்களுக்கு விஷம் கொடுத்துவிட்டு, பின் தாயும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த தாய் தனது கணவரின் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தை சமாளிக்க பல்வேறு மகளிர் குழுக்களிடம் இருந்து கடன் வாங்கி உள்ளதாகவும், கடன் பிரச்சினையால் கணவன், மனைவி இடையே அடிக்கடி சண்டை நடந்துவந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை காலை தாயுடன் சண்டையிட்டுவிட்டு தந்தை வேலைக்கு சென்றதும், தாய், தனது இரு மகள்களுக்கும் விஷம் கொடுத்துவிட்டு, தானும் தூக்கிட்டுகொண்டதாக சொல்லப்படுகிறது.
மேலும் தந்தையை நன்றாக பார்த்து கொள்ளுங்கள், அவரை குடிக்க வேண்டாம் என சொல்லுங்கள் என உருது மொழியில் எழுதப்பட்டிருந்த ஒரு உருக்கமான கடிதம் கிடைத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
