மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்து பெண் பலி
இந்தியாவில் மும்பை அருகே அடுக்குமாடி கட்டிடத்தின் 3வது மாடியில் இருந்து பெண் தவறி விழுந்து உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டோம்பிவலி பகுதியைச் சேர்ந்த குடியா தேவி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலும் இச்சம்பவம் குறித்து தெரியவருகையில்,
குறித்த பெண் குடியிருப்பின் 3வது மாடியில் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். இதன்போது பணியின் இடையே மூன்றாவது மாடியின் பால்கனி சுவற்றில் அமர்ந்துள்ளார். இந்நிலையில் உடன் பணிபுரியும் மற்றுமொரு பெண் விளையாட்டாக அவரது தோளில் கை வைத்து அழுத்தினார்.
இதனால் சமநிலை இழந்த குறித்த பெண் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் உயிரிழந்த பெண்ணுக்கு 2 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
