ஆடி மாத சிறப்புகள்
💥இன்றையதினம் 17 ஆம் திகதி ஆடிப்பிறப்பு தினமாகும் . தமிழ் நாட்காட்டியின் ஆடி மாத முதலாம் நாள் ஆடிப்பிறப்பு கொண்டாடப்படுகின்றது. ஆடிப்பிறப்பினை பண்டிகை ஈழத் தமிழர்களின் விமரிசையாக கொண்டாடும் பண்டிகைகளில் ஒன்றாகும்.
💥அத்துடன் ஆடிப்பிறப்பு என்றதுமே முதலில் ஞாபகத்திற்கு வருபவர் நவாலியூர் சோமசுந்த புலவரும் அவர் பாடிய பாடலும் தான்.
💥அந்தவகையில், ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்த மானந்தம் தோழர்களே … கூடிப்பனங்கட்டி கூழும் குடிக்கலாம் கொழுகட்டை தின்னலாம் தோழர்களே… இது யாழ்ப்பாணம் நவாலியூர் சோமசுந்த புலவர் ஆடிப்பிறப்பு பற்றி பாடிவைத்துள்ளார்.
💥இந்த நாளில் வீடுகளில் கொழுகட்டை , ஆடிக்கூழ் என்பன சமைத்து உறவுகளுடன் உண்டு மகிழ்வார்கள்.
💥பனங்கட்டி, தேங்காய் துண்டுகள் கலந்த மாவின் சுவை சொட்டும் கூழ், சர்க்கரையின் (வெல்லம்) தித்திப்புடன் கொழுக்கட்டை இவையிரண்டும் ஈழத்தமிழர்களின் (சைவமக்களின்) வீடுகளில் ஆடிப்பிறப்பன்று தவறாது இடம்பிடிக்கும் உணவுகள் ஆகும்.
💥முன்னோர்கள் சூரியனின் வட திசை மற்றும் தென் திசை நோக்கிய வருடத்தின் இருகாலப் பகுதியின் தொடர்புபடும் நாளை கணித்து ஆடிப் பிறப்பு நாளாகக் கொண்டாடி வருகின்றார்கள் – இந்து சமயத்தில் இந்த நாள் தேவர்களுடன் தொடர்புபடுத்தி வழிபடப்படுகின்றது.
💥அதாவது தட்சணாயண காலத்தின் தொடக்க தினம் (இன்று) ஆடிமாத முதலாம் நாள் ஆகும். இக்காலத்தில் கோடைகால வெப்பம், காண்டாவனம் உட்பட, வெப்பம் தணிந்து குளிர்மை படிப்படியாகப் வளர்கின்றது.
💥இக் காலத்திலேயே விதை விதைத்தல், மரங்கள் நடுதல் போன்றவை மேற்கொள்ளப்படுகின்றன. ஆடி மாதத்தை பொறுத்தவரை மாதப்பிறப்பு துவங்கி அனைத்து நாட்களுமே முக்கியமான நாட்கள் தான்.
💥திதி, கிழமை, நட்சத்திரம் என அனைத்தும் சிறப்பு பெறுவது ஆடி மாதத்தில் தான். ஆடி மாதத்தில் ஆடி மாத பிறப்பு, ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடி ஞாயிறு, ஆடிப் பெருக்கு, ஆடி கிருத்திகை, ஆடி 18, ஆடிப்பூரம், ஆடி அமாவாசை, ஆடி பெளர்ணமி என அனைத்தும் சிறப்புக்குரிய நாட்களாகும்.
💥ஆடி மாதத்தை சக்தி மாதம் என்றும் பண்டைய ஜோதிட நூல்கள் குறிப்பிட்டுள்ளன. எனவே இந்த மாதத்தில் விதை விதைப்பதை முன்னோர்கள் மேற்கொண்டனர். ஆடிப் பட்டம் தேடி விதை என்ற பழமொழி உருவானதற்கும் இதுவே காரணம். உத்ராயண காலத்தில் சூரியனில் இருந்து வெளிப்படும் கதிர்களை விட, தஷ்ணாயண காலத்தில் (ஆடி) சூரியனின் ஒளிக் கதிர்கள் விவசாயத்திற்கு உகந்ததாக இருக்கும். சுற்றுப்புறத்தை தூய்மையாக்கி, தெய்வங்களை (அம்மன்) வழிபட்டு உள்ளுணர்வை மேம்படுத்திக் கொள்ளவும் ஆடி மாதம் பயன்படுகிறது. வேப்பிலையை அம்மனுக்கு சாத்தி வணங்குவதும், கூழ் ஊற்றும் விழா நடத்துவதும் ஆடி மாதத்தில் நடக்கிறது.
💥இதற்கு காரணம், ஆடி மாதத்தில் கிடைக்கும் வேப்பிலைக் கொழுந்துகளுக்கு அபார மருத்துவ, தெய்வீக குணம் உண்டு. ஆடி மாதத்தில் பொதுவாகவே காற்று அதிகமாக வீசும். அந்தக் காலத்தில் எளிதில் ஜீரணிக்கக் கூடிய வகையிலான உணவுகள் (கூழ்) சாப்பிடுவது நல்லது. இதனால் ஆரோக்கியம் மேம்படும்.
💥துர்க்கை, காளி உள்ளிட்ட பெண் தெய்வ வழிபாட்டுக்கு உரியதாகவும் ஆடி மாதம் கருதப்படுகிறது. இதேபோல் 18ஆம் பெருக்கு எனப்படும் ஆடி-18 விழா மிகவும் உன்னதமானது. அன்றைய தினம் எந்த நட்சத்திரம், திதியில் வந்தாலும், புதிய முயற்சிகளை அனைத்து தரப்பினரும் மேற்கொள்ளலாம்.
💥ஆடிப்பெருக்கு தினத்தில் நதியோரம் உள்ள கோயில்களில் கன்னிப் பெண்கள் வழிபாடு செய்தால் சிறப்பான கணவர் அமைவர். சுமங்கலிப் பெண்கள் இதுபோன்று வழிபாடு நடத்தினால் அவர்களின் துணைவருக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும். சப்த கன்னிகளை உருவாக்கி ஆடிப் பெருக்கு வழிபாடு மேற்கொள்வதும் நல்ல பலனைத் தரும்.
ஆடி மாத சிறப்புகள்
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
