காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு

இந்தியாவில் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே காட்டு யானை தாக்கி ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சொக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த மூக்கையா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் குடியிருப்பு பகுதியை ஒட்டியுள்ள தோட்டத்திற்கு சென்ற போது, அங்கு சுற்றித்திரிந்து கொண்டிருந்த யானை மிதித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்