93 பெண்களினால் கல்மடு குளத்தில் இருந்து நீர் எடுத்துவரப்பட்டு நெல் முத்து விநாயகப் பெருமாளுக்கு அபிஷேக பூஜை

-யாழ் நிருபர்-

கிளிநொச்சி மாவட்டத்தின் கல்மடு குளத்தின் 93 வது ஆண்டு விழாவும்,  அப்பகுதியில் அமர்ந்து அடியார்களை காத்தருளும் நெல் முத்து விநாயகப் பெருமானுக்கு 93 வருடங்களின் பின்னர் புதிதாக அமைக்கப்பட்ட ஆலயத்தின் மகா கும்பாபிஷேக பெருவிழாவும் இடம்பெற்றது.

93 பெண்களினால் கல்மடு குளத்தில் இருந்து நீர் எடுத்துவரப்பட்டு, நெல் முத்து விநாயகப் பெருமாளுக்கு அபிஷேக பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.

இன்று திங்கட்கிழமை 93 பானையில் பொங்கல் பெருவிழாவும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்