வல்லிபுர ஆழ்வார் ஆலய சப்பர உற்சவம்

-கிளிநொச்சி நிருபர்-

வரலாற்றுச் சிறப்புமிக்க துன்னாலை வல்லிபுர ஆழ்வார் ஆலயம் வருடாந்த உற்சவத்தின் சப்பர உற்சவம் இன்றைய தினம் நூற்றுக் கணக்கான பக்தர்கள் புடைசூழ எம்பெருமான் வசந்த மண்டப பூசை நடைபெற்று சப்பரத்தில் வெளிவீதி வந்தார்.

வல்லிபு ஆழ்வார் ஆலய பிரதம குரு கணபதீஸ்வரக் குருக்கள் தலமையில் சிவாச்சாரியார்கள் வேதமோத வசந்த மண்டப பூசைகள் இடம் பெற்று வல்லிபுரத்து ஆழ்வார் சப்பறத்தில் வெளிவீதி வந்தார்.

இதேவேளை நாளை நாளை காலை 5 மணியளவில் தேர் உற்சவ பூசைகள் இடம் பெற்று கிரிகைகள் ஆரம்பமாகி 8:45 மணியளவில் தேர் திருவிழாவும் இடம் பெறவுள்ளது.

நாளை மறுதினம் பிற்பகல் வல்லிபுரத்து ஆழ்வார் சமுத்திரத் தீர்த்தமும் இடம் பெறவுள்ளது.

 

செய்திகள் மற்றும் வேலைவாய்ப்பு தகவல்களை அறிய தினமும் Minnal24.com பார்க்கவும்

எமது குழுவில் இணைய கீழே உள்ள Join Whatsapp Group ஐ அழுத்தவும்

JOIN WHATSAPP GROUP