8,747 சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!
கடந்த 24 மணிநேரத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்தியமை உள்ளிட்ட வீதி விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 8,747 வாகன சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, குறித்த காலப்பகுதியில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 251 சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
அதேநேரம், கடந்த 24 மணித்தியாலங்களில் வாகன விபத்துகள் எதுவும் பதிவாகவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, எதிர்வரும் காலங்களில் மிகவும் அவதானத்துடன் வாகனத்தைச் செலுத்தி, வீதி விபத்துக்களைத் தவிர்க்குமாறு பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சாரதிகளைக் கோரியுள்ளார்.
பிரதி பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கமைய, விபத்துகளைத் தவிர்க்கும் நோக்கில் அமுல்படுத்தப்படும் விசேட வாகன சோதனை நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்