
8,500 தானசாலைகள் பதிவு
இந்த ஆண்டு வெசாக் போயா பண்டிகைக்காக நாடு முழுவதும் 8,581 தானசாலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.
சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலக மட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட இந்த தானசாலைகளை சுகாதாரப் பாதுகாப்பான முறையில் நடத்துமாறு ஏற்பாட்டாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுச் சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் செயலாளர் சமில் முத்துக்குடா தெரிவித்தார்.