Sri Lanka Tamil News Site

முன்பள்ளியில் கத்திக்குத்து : மூவர் பலி, ஆறு பேர் படுகாயம்

- Advertisement -

சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் உள்ள முன்பள்ளியில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், ஆறு பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

நேற்று புதன்கிழமை காலை 10 மணி­ய­ள­வில் முக­மூடி, தொப்பி அணிந்த நபர் ஒரு­வர் பள்­ளிக்­குள் நுழைந்து தாக்கு­த­லில் ஈடு­பட்­ட­தா­கக் கூறப்­படு­கிறது.

கத்திக்குத்துச் சம்பவத்தை மேற்கொண்ட லியு மௌஹுய் என்ற 48 வயதுடைய நபர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.

அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

- Advertisement -

‘காயமடைந்த சிறுவர்களில் பலர் பாலர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் அவர்கள் ஆறு வயதுடையவர்கள், நான் அருகில் வசிப்பதால், காலை 8.30 அளவில் பள்ளியில் இருந்து உரத்த அலறல் மற்றும் அழுகை சத்தம் கேட்டது, நான் பள்ளிக்கு விரைந்தேன், சில மாணவர்கள் வெளியே ஓடுவதைக் கண்டேன்’, என தனது பிள்ளைக்காக முன்பள்ளி வாயிலில் காத்திருந்த பெற்றோர் ஒருவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களின் வயது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

கத்திக்குத்துச் சம்பவத்தை மேற்கொண்ட சந்தேகநபர் (CCTV காட்சி)

- Advertisement -