79 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது

தலைமன்னார் கடற்பகுதியில் கடற்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போது ஐஸ் ரக போதைப் பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 79 இலட்சம் ரூபா பெறுமதியான 965 கிராம் ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.

தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த 37 மற்றும் 45 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.