Sri Lanka Tamil News Site

75% மின்சாரக் கட்டணத்தை உயர்த்தினாலும் வருடாந்தம் 45 பில்லியன் ரூபா நட்டம்

- Advertisement -

புதிய மின்சார கட்டண முறையின் கீழ் மின்சார வாகனங்களை சார்ஜ் செய்வதற்கு அறிமுகப்படுத்தப்பட்ட விசேட முறைமை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவினால் நீக்கப்பட்டுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

- Advertisement -

அத்துடன், சராசரியாக 75% மின்சாரக் கட்டணத்தை உயர்த்தினாலும், மின்சார சபைக்கு வருடாந்தம் 45 பில்லியன் ரூபா நட்டம் ஏற்படுவதாக, மின்சார சபையின் கூட்டாண்மை மூலோபாயம் மற்றும் ஒழுங்குமுறை விவகாரங்களுக்கான பிரதிப் பொது முகாமையாளர் நிஹால் வீரரத்ன தெரிவித்துள்ளார்.

புதிய முறைமையில் உள்ள பிரச்சினைகள் குறித்து எழுத்து மூலம் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

- Advertisement -