7200 மெற்றிக் தொன் கேஸ் இவ்வாரம் நாட்டை வந்தடையும்

நாட்டிற்கு மேலும் 7200 மெற்றிக் தொன் கேஸ் கொண்டுவரும் இரண்டு கப்பல்கள் இந்தவாரத்திற்குள் நாட்டை வந்தடையுமென லிற்றோ எரிவாயு நிறுவனம்  தெரிவித்துள்ளது.

அதுதொடர்பில் அந்த நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் தெரிவிக்கையில்,

இன்றைய தினம் மேலும் 3600 மெற்றிக் தொன் கேஸ் தாங்கிய கப்பல் நாட்டை வந்தடையவுள்ளது. அதனை நாளை முதல் சந்தைக்கு விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகும்.