72 பயணிகளுடன் விபத்துக்குள்ளான விமானம்

கசக்ஸ்தானின் அக்டாவ் நகருக்கு அருகே 72 பயணிகளுடன் புறப்பட்ட ரஷ்யாவுக்கு செல்லும் அசர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

அசர்பைஜானின் பாகுவிலிருந்து ரஷ்யாவின் க்ரோஸ்னி நகரை நோக்கி இன்று புதன் கிழமை புறப்பட்ட இந்த விமானம் அடர் பனிமூட்டம் காரணமாக திசைமாற்றி கசகஸ்தானின் அக்டாவ் விமான நிலையத்துக்குச் செலுத்தப்பட்டது.

இதேவேளை விமானம் அக்டாவ் விமான நிலையத்தை அடையும் முன்பு, கீழே விழுந்து வெடித்துள்ளதாக
கசக்ஸ்தான் அவசரக்கால அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.