70 வயது நபர் பாரவூர்தியில் நசியுண்டு உயிரிழப்பு

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டீசலை பெறுவதற்கு வரிசையில் நின்றுகொண்டிருந்த 70 வயது நபர் உயிரிழந்துள்ளார்.

அச்சுவேலி பத்தமேனி பகுதியைச் சேர்ந்த தம்பிப்பிள்ளை கனகரத்தினம் என்பவரே முன்னோக்கி நகர்ந்த பாரவூர்தியில் நசியுண்டு உயிரிழந்துள்ளார்.

சிறு வீதியிலிருந்து பிரதான வீதிக்குள் நுழைய இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் முதியவர் முற்பட்ட வேளையில், டீசலுக்காக காத்திருந்த பாரவூர்தி நகர்ந்ததால் சில்லுக்குள் நசியுண்டு முதியவர் உயிரிழந்துள்ளார்.

அச்சுவேலி போக்குவது பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

Minnal24 FM