7 வயது சிறுமியை கிணற்றில் தள்ளி கொன்ற தாய்
இந்தியாவில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே சிறுமி ஒருவர் அங்குள்ள விவசாயக் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பூட்டை கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
விளையாடச் சென்ற சிறுமியைக் காணவில்லை என தந்தை புகார் கொடுத்த நிலையில், அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை பொலிஸார் ஆய்வு செய்தனர்.
அப்போது, தாயுடன் குறித்த சிறுமி சென்றது தெரிந்து விசாரித்தபோது, மகளை கிணற்றில் தள்ளிக் கொலை செய்ததை தாய் ஒப்புக்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் அவர் எதற்காக கொலை செய்தார், கொலையில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்