7 கோடி ரூபா பெறுமதியான அம்பருடன் ஆறு பேர் கைது

திஸ்ஸமஹராமை, மஹசேன்புர பிரதேசத்தில் 14 கிலோ கிராம் அம்பருடன் 6 சந்தேக நபர்கள் இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக திஸ்ஸமஹராமை பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டி, கேகாலை மற்றும் குருணாகல் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 22 முதல் 27 வயதுக்குட்பட்டவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து 7 கோடி ரூபா பெறுமதியான அம்பர் மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் திஸ்ஸமஹராமை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவித்த பொலிஸார்இ மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.