6 வயது மகளை வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்த தந்தை கைது

-பதுளை நிருபர்-

பதுளையில் மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்த குற்றச்சாட்டில் தந்தை நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மடுல்சீமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலக்கம் 106 பட்டாவத்தை மடுல்சீமை பகுதியை சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

குறித்த சிறுமியின் தாய் கடந்த 2023 .05.10 திகதி அன்று வெளிநாட்டுக்கு வீட்டு பணிப்பெண்ணாக சென்றுள்ளதாகவும் குறித்த சிறுமி (வயது – 6) பாட்டியின் அரவணைப்பில் வாழ்ந்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை தான் இரவு நேரங்களில் தந்தையிடமே படுத்து உறங்குவதாகவும் அவ் வேளையில் குறித்த நபர் இவ்வாறான செயலில் ஈடுபட்டதாகவும் சிறுமி பொலிஸாரிடம் கூறியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் எவ்வித தொழிலும் இன்றி மனைவி அனுப்பும் பணத்தில் தினமும் மது அருந்துவதுடன் சந்தேக நபரின் கையடக்க தொலைபேசியை சோதனைக்கு உட்படுத்திய போது கையடக்க தொலைபேசியில் ஆபாச வீடியோக்கள் படங்கள் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுமி மெட்டிக்காத்தன்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனைகளுக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் நேற்றைய தினம் சனிக்கிழமை பசறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போது எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்