6 இலட்சம் டொலருக்கு ஏலம் போன தொப்பி
1984 ஆம் ஆண்டு வெளியான “இண்டியானா ஜோன்ஸ் அண்ட தி டெம்பிள் ஆஃப் டூம்” திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட தொப்பி சுமார் 630,000 டொலருக்கு ஏலம் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
லண்டனில் உள்ள ஹெர்பர்ட் ஜோன்சன் நிறுவனத்தால் இத்தொப்பி வடிவமைக்கப்பட்டது.
மேலும் இந்த தொப்பி, முயல்களின் மென்மையான ரோமங்களைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்