4,300 யாசகர்களை மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வெளியேறுமாறு உத்தரவு

பாகிஸ்தான் அரசாங்கம் 4,300 யாசகர்களை வெளியேறும் கட்டுப்பாட்டு பட்டியலில் சேர்த்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சவுதி அரேபியா உள்ளிட்ட பல மத்திய கிழக்கு நாடுகள், பாகிஸ்தானிய பிச்சைக்காரர்களின் அதிகரிக்கும் எண்ணிக்கையின் மீது கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

உம்ரா மற்றும் ஹஜ் விசாக்களில் நாட்டிற்குள் நுழையும் பாகிஸ்தானிய குடிமக்களின் எண்ணிக்கை அதிர்ச்சியூட்டும் வகையில் அதிகரித்ததோடு, அவர்கள் மக்கா மற்றும் மதீனா போன்ற புனித நகரங்களில் பிச்சை எடுப்பதில் ஈடுபடுவதை சவுதி அரேபியா கடுமையாக எச்சரித்தது.

ரியாத், இஸ்லாமாபாத் அரசாங்கத்தை இந்த பிரச்சனையை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி, அத்தகைய நபர்களுக்கு விசா விதிப்பதை தடை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியது.

இதையடுத்து, இந்த 4,300 நபர்களின் பெயர்கள் கொண்ட பட்டியல், சவுதி அரேபியாவின் துணை உள்துறை அமைச்சர் நாசர் பின் அப்துல் அஜிஸ் அல் தாவூத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்