4 வயதுச் சிறுவனுக்கு எமனான சவர்க்காரம்

-யாழ் நிருபர்-

சவர்க்காரத்தில் கால் வழுக்கியதில் சிறுவன் ஒருவன் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்

யாழ்ப்பாணம் இருபாலை கிழக்கு பகுதியைச் சேர்ந்த நிரோசன் விமாத் (வயது 04) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

கடந்த 23ஆம் திகதி குறித்த சிறுவன் அயல்வீட்டு சிறுவனுடன் விளையாடிவிட்டு வாளியைக் கொண்டு கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து கை கழுவியுள்ளார்.

இதன்போது சவர்க்காரம் கீழே விழுந்த நிலையில் சவர்க்காரத்தின் மீது கால் மிதிபட்டதில் வழுக்கி கிணற்றினுள் விழுந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த சிறுவனை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்தனர்.

இருப்பினும் குறித்த சிறுவன் சிகிச்சை பலனின்றி இன்று வியாழக்கிழமை காலை உயிரிழந்துள்ளார்.

சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்