Sri Lanka Tamil News Site

349 பட்டதாரிகள் கடந்த வருடம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்

- Advertisement -

இலங்கையில் உள்ள சிறைச்சாலைகளில் 349 பட்டதாரிகளும் , 14,547 கைதிகளும்  , 62,426 சந்தேக நபர்களும் பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் அடைக்கப்பட்டுள்ளனர் என, சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில், பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நீதிமன்றங்களால் தண்டனை விதிக்கப்பட்ட அல்லது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலை புள்ளிவிவரங்களின்படி, மொத்தம் 349 பட்டதாரிகள் (0.5சதவீதம்) , மற்றும் 5,395 கைதிகள் (7சதவீதம்) உயர்தர பரீட்சையில் தேர்ச்சி பெற்றவர்கள்; அதேவேளை, சாதாரண தரத்தில் சித்தி பெற்ற சிறைக்கைதிகளின் எண்ணிக்கை 17,616 (22.9சதவீதம்) ஆகும்.

சிறையில் அடைக்கப்பட்டவர்களில் குறைந்தது 2.2 சதவீதம் பேர் பாடசாலை செல்லவில்லை என்று புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

- Advertisement -

மேலும் புள்ளிவிவரங்களின்படி, கடந்த ஆண்டு 16 வயதுக்குட்பட்ட 87 பேரும், 16 முதல் 22 வயதுக்குட்பட்ட 5,983 பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை 22-30 வயதுக்குட்பட்ட 18,377 பேரும், 30-40 வயதுக்குட்பட்ட 26,134 பேரும் பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

30-40 வயதுக்குட்பட்டவர்களில் பெரும்பாலோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

70 வயதுக்கு மேற்பட்ட சிறைக் கைதிகளின் எண்ணிக்கை 436 ஆகும்.

- Advertisement -