
3 மணி நேர தாமதம் : அமுலுக்கு வந்தது இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம்!
பலரும் எதிர்பார்த்த இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலுக்கு வந்துள்ளது.
15 மாதங்களாக நடைபெற்ற போர் முடிவுக்கு வந்துள்ளது.
நிபந்தனைகள் இருந்தாலும் இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தம் பல தரப்பிலும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
முன்னதாக இஸ்ரேல் நேரப்படி இன்று காலை 8.15 க்கு அமுலுக்கு வர வேண்டிய போர் நிறுத்தம் சில மணி நேரம் தாமதமானது.
எவ்வாறாயினும் தற்போது போர் நிறுத்தம் அமுலுக்கு வந்துள்ளது.
இதேநேரம் போர் நிறுத்தத்தின் பின்னர் காசாவில் தாக்குதல்கள் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.
ஹமாஸால் விடுவிக்கப்பட வேண்டிய பணயக் கைதிகளின் பெயர் பட்டியலை அவர்கள் வெளியிடாததால், போர் நிறுத்த ஒப்பந்த அமுலை நிறுத்தி வைத்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்திருந்தது.
தொடர்ந்து தாக்குதல் நடத்துவதாகவும் கூறியிருந்தது.
இதனால் பதற்றநிலை ஏற்பட்டது.
இந்நிலையில், விடுவிக்கத் தயாராக உள்ள மூன்று பெண் பணயக் கைதிகளின் பெயர்களை ஹமாஸ் வெளிட்டதைத் தொடர்ந்து காசா போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலுக்கு வந்துள்ளது.
மூன்று மணி நேர தாமதத்துக்குப் பின்பு இந்த போர் நிறுத்தம் உள்ளூர் நேரப்படி முற்பகல் 11.15க்கு அமுலுக்கு வந்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்