3 கோடி பெறுமதியான மதுபான போத்தல்களுடன் சிக்கிய அறுவர்
3 கோடி ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு மதுபானம் மற்றும் ஆடைகள் உள்ளிட்ட பொருட்களை கடத்திவந்த 6 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு, ஹட்டன் மற்றும் வத்தளை ஆகிய பகுதிகளை சேர்ந்த ஐந்து இலங்கையர்களும் இந்திய பிரஜை ஒருவருமே இவ்வாறு விமான நிலைய குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் பெங்களூரில் இருந்து 2 விமானங்களில் வருகைத்தந்த அவர்களிடமிருந்து பல்வேறு வகையான 159 வெளிநாட்டு மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.