295 ஓட்டங்களால் வெற்றி பெற்ற இந்திய அணி

இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 295 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

போட்டியின் நான்காம் நாள் ஆட்டமான இன்று தனது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 238 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்தநிலையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1 க்கு 0 எனும் அடிப்படையில் இந்திய அணி முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.