280 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு 289 கைதிகள் ஜனாதிபதி விசேட பொது மன்னிப்பின் கீழ் இன்று வெள்ளிக்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, 283 ஆண் கைதிகளும் ஆறு பெண் கைதிகளும் ஜனாதிபதியின் மன்னிப்பைப் பெற்றுள்ளனர்.

வெலிக்கடை சிறைச்சாலையில் 19 கைதிகளும், மஹர சிறைச்சாலையில் 30 கைதிகளும், வாரியபொல சிறைச்சாலையில் 30 கைதிகளும், களுத்துறை சிறைச்சாலையில் இருந்து 28 கைதிகளும் உள்ளடங்களாக நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் உள்ள 289 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அரசியலமைப்பின் 34ஆவது பிரிவிற்கு அமைய, ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இவ்விசேட பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்