28 மில்லியன் ரூபாவுக்கும் அதிக மதிப்புள்ள தங்க ஆபரணங்களுடன் 2 பெண்கள் கைது!

சவுதி அரேபியாவில் இருந்து நாட்டிற்கு வந்த பெண்கள் இருவர் 28 மில்லியன் ரூபாவுக்கும் அதிக மதிப்புள்ள தங்க ஆபரணங்களுடன் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும் நேற்று வெள்ளிக்கிழமை இரவு விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குருநாகல் பகுதியைச் சேர்ந்த 29 மற்றும் 35 வயதுடைய பெண்கள் இருவரே இவ்வாறு கைதாகியுள்ளனர்.

இவர்கள் இருவரும் சவுதி அரேபியாவில் பணிபுரிபவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க