27 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கத்துடன் விமான நிலையத்தில் ஒருவர் கைது

தாய்லாந்திலிருந்து, இலங்கைக்கு கொண்டுவர முயன்ற 27 மில்லியன் ரூபா பெறுமதியான 14 தங்க பாளங்களுடன், ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தாய்லாந்திலிருந்து, நாட்டுக்கு வந்த குறித்த பயணியிடம் ஒரு கிலோ 314 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட குறித்த நபர் நீர்கொழும்பு நீதவான் முன்லையில் முன்னிலைப்படுத்தப்பட்டதை  தொடர்ந்து விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளார்.

இலங்கையில் தங்கத்தை இறக்குமதி செய்வதற்கு உரிமம் அவசியமாகும்.

அவ்வாறு தங்க இறக்குமதியை இலங்கை மத்திய வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் மாத்திரமே முன்னெடுக்க முடியும்.

இந்தநிலையில், குறித்த பயணி உரிய இறக்குமதி அனுமதிப்பத்திரம் இன்றி தங்கத்தை நாட்டுக்கு கொண்டுவந்ததுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.