21ஆவது திருத்தம் இன்று அமைச்சரவைக்கு சமர்ப்பிப்பு

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் இன்று அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட உள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.

இன்று திங்கட்கிழமை பிற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தின்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டவுள்ளதாகதெரியவருகின்றது.

அதேவேளை ஜனாதிபதியினால் புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்ட பின்னர் நடைபெறும் முதலாவது அமைச்சரவைக் கூட்டமாக இன்றைய அமைச்சரவை கூட்டம் அமையவுள்ளது.

இன்றைய தினம் பிரதமரினால் 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் சமர்ப்பிக்கப்படவுள்ள அதேவேளை,ஏற்கனவே நடைமுறையில் உள்ள 20ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் காணப்படும் நிறைவேற்று அதிகாரங்கள் அதன் மூலம் இல்லாதொழிக்கப்படவுள்ளது.

அதற்கிணங்க பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகள் அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் தொடர்பாக முன்வைத்துள்ள யோசனைகள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.