2024ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை விண்ணப்பதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

2024ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால எல்லை நீடிக்கப்பட மாட்டாது என்பதால் அதற்கு முன்னதாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு பரீட்சைத் திணைக்களம் கோரியுள்ளது.

ஜூன் 10ஆம் திகதி வரை இணையம் மூலமான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதுடன் அரசாங்க மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மாணவர்கள் தங்கள் பாடசாலை அதிபர் மூலமாக விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் எனவும் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஊடாகவும், கைத்தொலைபேசி மூலமாகவும் விண்ணப்பங்களை அனுப்ப முடியும் எனவும், இது தொடர்பான மேலதிக தகவல்களை திணைக்களத்தின் நேரடி தொலைபேசி இலக்கமான 1911 அல்லது பொது தொலைபேசி இலக்கங்களில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்