20 ஆண்டுகளாக கோமாவில் இருந்த “தூங்கும் இளவரசர்” உயிரிழப்பு!

சவுதி அரேபியாவின் இளவரசர் அல் வாலீத் பின் காலித் பின் தலால் அல் சவுத் (Al Waleed bin Khaled bin Talal Al Saud) தனது 36ஆவது வயதில் நேற்று காலமானார்.

தூங்கும் இளவரசர் என அழைக்கப்படும் இவர், 20 ஆண்டுகளாக கோமாவில் இருந்தார்.

2005ஆம் ஆண்டு இங்கிலாந்தின் லண்டன் நகரில் ஏற்பட்ட சிற்றூந்து விபத்தில் சிக்கி, அவர் கோமாவிற்கு சென்றார்.

இதன்படி, கடந்த 20 ஆண்டுகளாக கோமாவில் இருந்த இளவரசர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அவருடைய மறைவை, அல் வாலீத்தின் தந்தையான இளவரசர் காலித் பின் தலால் அல் சவுத் உறுதி செய்துள்ளார்.