
2 கோடி ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது
கொழும்பு – அவிசாவளை, ஹங்வெல்ல பகுதியில் 2 கோடி ரூபாய் பெறுமதியுள்ள ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபரிடமிருந்து 2 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபர் ஹங்வெல்ல – நீரிபொல பகுதியில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.
இதேவேளை சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்