19 மூட்டை உலர்ந்த இஞ்சி மீட்பு

கற்பிட்டி கடற்கரைப் பகுதியில் இன்று வியாழக்கிழமை சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட இஞ்சி மூட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

19 மூட்டைகளில் இருந்து 3 மில்லியனுக்கும் அதிக பெறுமதியைக்கொண்ட 570 கிலோகிராம் இஞ்சி கைப்பற்றப்பட்டுள்ளது.

கற்பிட்டி பொலிஸ் பொறுப்பதிகாரியான தலைமை ஆய்வாளர் லக்ஷ்மன் ரன்வாலா ஆராச்சி தலைமையிலான ஆய்வாளர் மில் ராய் உள்ளிட்ட அதிகாரிகள் குழு மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது இந்தியாவில் இருந்து கடல் வழியாக சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட குறித்த இஞ்சி மூட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும் இதன் போது படகில் இருந்த இரண்டு சந்தேக நபர்கள் தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.