15 இலட்சம் பெறுமதியான மரங்கள் மீட்பு: ஒருவர் கைது

-வவுனியா நிருபர்-

வவுனியாவில் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட மரங்கள் மீட்கப்பட்டதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மகாறம்பைக்குளம் 2ஆம் ஒழுங்கை பகுதியில் சட்டவிரோதமாக வெட்டப்பட்டிருந்த ஒரு தொகை மரங்கள் இருப்பதாக வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப்பிரிவு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மகாறம்பைக்குளம் பகுதியில் உள்ள மரக்காலை ஒன்றை சோதனை செய்த போதே குறித்த சட்ட விரோத மரங்கள் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சுற்றிவளைப்பின்போது 15 இலட்சம் பெறுமதியான மரங்களே மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.

இதன்போது மரக்காலை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.