
15 ஆம் திகதி வெப்பநிலை 39 தொடக்கம் 45 காணப்படும் என எச்சரிக்கை !
இலங்கையின் பல மாவட்டங்களில் நாளை செவ்வாய்க்கிழமை அதிஉயர் வெப்பநிலையாக 39 பாகை செல்சியஸ் முதல் 45 பாகை செல்சியஸ் வரை காணப்படும் என , வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வடக்கு ,கிழக்கு , வடமத்திய, வடமேற்கு, மேற்கு, தெற்கு மாகானங்களிலும் மற்றும், இரத்தினபுரி , மொனராகலை மாவட்டங்களிலும் சில இடங்களில் வெப்பக் குறியீடு, மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை ‘எச்சரிக்கை நிலை’ வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.