Sri Lanka Tamil News Site

13 தொழிலாளர்கள் குளவிக்கொட்டிற்கு ஆளாகி வைத்தியசாலையில் அனுமதி

- Advertisement -

-நுவரெலியா நிருபர்-

கொழுந்து பறித்துக் கொண்டிருந்த 13 தொழிலாளர்கள் குளவிக்கொட்டிற்கு ஆளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

- Advertisement -

நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் உள்ள லக்சபான தோட்ட முள்ளுகாமம் கீழ் பிரிவில், கொழுந்து பறித்து கொண்டிருந்த 10 பெண்களும் 3 ஆண்களும் குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுபட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குளவி கொட்டுக்கு இலக்கான தொழிலாளர்களை, தோட்ட நிர்வாகம் தோட்ட அம்பியூலன்ஸ் ஊடாக மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாக தோட்ட முகாமைத்துவம் தெரிவித்துள்ளது.

- Advertisement -