Last updated on January 9th, 2025 at 03:21 pm

12 ரோஹிங்கியா அகதிகளும் நீதிமன்றினால் விடுதலை! | Minnal 24 News %

12 ரோஹிங்கியா அகதிகளும் நீதிமன்றினால் விடுதலை!

விளக்கமறியறில் வைக்கப்பட்டிருந்த 12 ரோஹிங்கியா அகதிகளும் செவ்வாய்க்கிழமை திருகோணமலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

குடிவரவு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் குறித்த அகதிகள் 12 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்தநிலையில், அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பொலிஸாரால் மீளப்பெறப்பட்ட நிலையில், அவர்கள் விடுவிக்கப்பட்டு ஏனைய அகதிகளுடன் தங்க வைப்பதற்காக முல்லைத்தீவு இடைத்தங்கல் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்